Leaderboard
-
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்12Points20014Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46783Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 07/17/24 in all areas
-
குறுங்கதை 17 -- நளபாகம்
5 pointsநளபாகம் --------------- நல்ல கைப்பக்குவம் உள்ளவர் வாழ்வில் துணையாக கிடைத்தால் அது பெரும் அதிர்ஷ்டமே. மூன்று வேளைச் சாப்பாட்டிற்காகத் தான் வாழ்க்கையில் இந்த ஆட்டம் எல்லாம் என்று நடிகர் சிவாஜி கணேசன் சொன்னதாகச் சொல்லுவார்கள். அவரையும், அவருடைய மகன்களையும் பார்த்தால், அவர்கள் மூன்று வேளைகள் தான் சாப்பிட்டிருக்கின்றார்கள் என்று சொல்ல முடியவில்லை. 'எந்தக் கடையில் நீ அரிசி வாங்கினாய்.......' என்ற பாடல் வரிகள் அவர்களுக்காகவே எழுதப்பட்டும் இருக்கின்றது. இதில் இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால், கைப்பக்குவம் உள்ளவர் அவசரமாக சில வாரங்களுக்கு வேறெங்கும் போக வேண்டி வந்தால், வீட்டில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்ன என்பது தான். அக்கம்பக்கத்தில் நண்பர்கள், உறவுகள் இருப்பார்கள். அவர்கள் கொடுப்பார்கள் கூட. ஆனால் அந்தப் 'பக்குவம்' அங்கே இருக்காது. கொண்டு வந்து கொடுப்பவர்களிடம் வேண்டாம் என்று சொல்ல முடியாது, ஆனால் கொடுப்பது எல்லாவற்றையும் வாங்கி வீட்டில் வைத்தாலும், அவற்றை சாப்பிடவும் முடியாது. சில நேரங்களில் எதையுமே சாப்பிடமுடியாது. பல வருடங்களின் முன் வீட்டில் வந்து நின்ற ஒருவர் அன்று இரவுச் சாப்பாட்டிற்கு சம்பல் செய்ய தயாரானார். அவர் ஏற்கனவே ஒரு தடவை சில நாட்களின் முன் சம்பல் செய்திருந்தார். அப்போது மகன் சிறுவன். மகன் நேரே அவரிடம் போய் இன்று நீங்கள் சம்பல் செய்ய வேண்டாம், அம்மாவே செய்யட்டும் என்று சொன்னான். கொஞ்சம் வயதானவர். சத்தம் ஓய சில நிமிடங்கள் எடுத்தது. சில நாடுகளில் நல்ல உணவகங்கள் இருக்கின்றன போல. இங்கு அப்படி இல்லை. இந்திய உணவகங்கள் இருக்கின்றன. ஆனாலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் அவற்றுடன் தாக்குப் பிடிக்க முடியாது. நள மகாராஜா தான் சமையலில் மிகச் சிறந்தவர் என்பார்கள். இன்றும் உலகில் மிகப் பிரபலமான, மிகச் சிறந்த சமையல் வல்லுநர்கள் என்று சில ஆண்களையே சொல்கின்றனர். அன்னதான மடங்கள், விழாக்கள் என்று பெரிய சமையல்களையும் பொதுவாக ஆண்களே செய்து வருகின்றனர். எனக்குத் தெரிந்த வரையில் என் நண்பன் ஒருவன் போல உலகில் எவரும் வட்டம் வட்டமாக தோசை சுட மாட்டார்கள். வட்டாரி வைத்துக் கீறியது போல இருக்கும் அவன் சுடும் தோசைகள். பலவிதமான சமையல்களும் திறமாகவே செய்வான். சந்தேகம் இல்லாமல் அவன் நளனின் வழித் தோன்றல் தான். ஆனாலும் நளனின் வழித் தோன்றல்கள் மிகக் குறைவு என்பதே என் அனுபவம். இந்த வழித் தோன்றல்களுக்கு சரியான உதவி, ஒத்தாசை செய்யக் கூடிய நிலையில் கூட பெரும்பாலான ஆண்கள் இல்லை என்பது தான் நிஜம். 'நீட்டாக வெட்ட வேண்டிய வெங்காயத்தை நீ ஏன் குறுக்காக வெட்டினாய்....' என்று புலம்பி, என்னால் ஒருவர் ஒரு தடவை அமைதி இழந்தார். வெங்காயம் வதங்கி சுருங்கிய பின் நீட்டென்ன குறுக்கென்ன என்ன உள்ளுக்குள் நினைத்தேன், ஆனால் வெளியால் சொல்லவில்லை. இறைச்சி துண்டுகளை முக்கோணங்களாக வெட்ட வேண்டும் என்று சொன்னார்கள். வெளிப்பரப்பளவு கூடுமாம். நாங்கள் சட்டிக்குள் போட்டு அவி அவி என்று அவிக்கின்ற அளவிற்கு இறைச்சி துண்டின் பரப்பளவு ஒரு அரைப் பரப்பாக இருந்தால் கூட நன்றாக அவியுமே என்றும் தோன்றியது. ஆனாலும் மகாராஜாக்களை அமைதியிழக்க செய்யக் கூடாது என்று சத்தமில்லாமல் செங்கோண முக்கோணிகள் செய்வதில் கவனம் செலுத்தினேன். திருமணத்தின் முன் சில பேர்கள் சேர்ந்து ஒரு வீட்டிலோ அல்லது அறைகளிலோ இருக்கும் காலங்களில் எல்லாவற்றுக்குமே அட்டவணை இருக்கும், ஒவ்வொருவரும் சமைக்கும் நாட்கள் உட்பட. இப்படி இருக்கும் போது நாள் கிழமை நட்சத்திரம் எதுவும் பார்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் அசைவம் தான். அசைவ சமையல் அப்படி இப்படி இருந்தாலும் ஒரு மாதிரி, தக்காளிச் சாறு மற்றும் வேறு சில வஸ்துக்களையும் மேலால் ஊற்றி, சாப்பிட்டு விடலாம். நாலு பேர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் இருந்தார்கள். அன்று இரவு சமையல் பொறுப்பு இருக்கும் ஒருவர் தவிர மற்ற மூவரும் விளையாடப் போக ஆயத்தமானார்கள். சமையல் செய்ய வேண்டியவர் தொலைக்காட்சி பார்த்தபடியே இருந்தார். இவர்கள் மூவரும் நாலாவது நபருக்கு நீ தான் இன்று சமையல் என்று மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டுப்போனார்கள். விளையாடி விட்டு வந்து, குளித்து விட்டு, மூவரும் சட்டியைத் திறந்தனர். நல்ல பசி. சட்டி முட்ட முட்ட சிவப்பு நிறத்தில் குழம்பு. கோழிக் குழம்பு தான் என்று கரண்டியை விட்டு விட்டு எடுத்தனர். எதுவுமே கரண்டியில் வரவில்லை. சில இலைகள் மட்டுமே கரண்டியில் வந்து கொண்டிருந்தது. என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது.5 points
-
உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
வேறுபாடு தேசியத் தலைமைக்கு உலகத் தமிழர்கள் ஒருபோதும் சிலை வைக்கப் போவதில்லை. ஆனால் வரலாறு முழுவதும் தமிழினம் பிரபாகரனையும் அவன் பிள்ளைகளையும் நெஞ்சில் வைத்துப் பூசிக்கும். ஆனால், மறக்கப்படும், மறக்கப்பட்ட மனிதர்களுக்கு சிலை வைத்து நினைவுபடுத்த வேண்டிய தேவை சித்தார்த்தன் வகையறாக்களுக்கு இருக்கிறது. இந்த மறக்கப்பட்ட மனிதர்களை தமிழினம் வரலாறு முழுவதும் இழிவாகத்தான் பார்க்கும்’ என்பதற்கு நாமே சாட்சி. அதெல்லாம் சரிதான், அயோக்கியர்களுக்காக சிலை வைக்கும் அயோக்கியர்களை என்ன சொல்வது? 😏 தலைவருக்குரி ஒரு பண்பும் இவரிடம் இல்லை என்பது என் கருத்து.4 points
-
"பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]"
"பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]" "திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று திரு விழாவா பெரு விழாவாவென திகைத்து இவன் வியந்து பார்க்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "தில்லைக் கூத்தனின் பேரன் இவன் திசைமுகனை குட்டிய முருகன் இவன் திருந்தலரை கலக்கும் வீரன் இவன் திருமகள் அருள்பெற்ற குழந்தை இவன் !" "தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம் திசை நான்கும் பேரிசை முழங்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "திங்கள் மறைந்து ஞாயிறு மலர திலகம் இட்டு மங்கையர் வாழ்த்த திருநாள் இது இவனின் பொன்நாள் திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "தின் பண்டம் வந்தோரை மகிழ்விக்க திறமையான அலங்காரம் காற்றில் ஆட திருப்தி கொண்டு இவனும் மகிழ திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "திங்கட்குடையோன் இவனோ என மயங்க தினகரனும் முகிலில் மறைந்து நிழல்தர தீந்தமிழில் வாழ்த்துக்கள் எங்கும் ஒலிக்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "அச்சம் தவிர்த்து துணிந்து நின்று அழகு வார்த்தைகள் நாவில் தவழ அன்பு ஒன்றால் உலகை ஆள அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!" "ஆராய்ந்து உண்மை கண்டு விளங்கி ஆக்கமான செயலில் ஈடு பட்டு ஆலமரம் போல் நிழல் கொடுத்து ஆனந்தமாக வாழ தாத்தாவின் ஆசிகள்!" "ஆகாயத்தில் அம்மம்மாவின் வாழ்த்து கேட்குது ஆகாரம் பலபல சுவையில் இருக்குது ஆசி பெற்று அறிஞனாய் வளர்ந்து ஆதிரனாக என்றும் ஒளிர வேண்டும்! "இளமை கல்வி மனதில் நிற்கும் இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து இதயம் சேர வாழ வேண்டும்!" "ஈன்ற பெற்றோரை நன்கு மதித்து ஈரக் கண்ணீர் சிந்த விடாதே ஈவு இரக்கம் காட்ட வேண்டும் ஈனப் புத்தி என்றும் வேண்டாம்!" "உலகம் போற்றும் வாழ்வு எட்ட உள்ளம் வைத்து ஆற்ற வேண்டும் உரிமை உள்ள ஒரு மனிதனாக உயர்ந்து நின்று வாழ வேண்டும்!" "ஊக்கம் வேண்டும் பற்று வேண்டும் ஊரார் எண்ணம் அறிய வேண்டும் ஊமையாய் என்றும் காலத்தை கழிக்காமல் ஊன்றுகோலாய் அறிவைப் பயன்படுத்த வேண்டும் !" "ஒன்பதுஆண்டு மகிழ்ச்சியின் மகுடம் இன்று ஆச்சரியமானவரே பாலகனே கனவுகள் சிறகடிக்கட்டும்! உயர்ந்து வாழ்வதைப்பார்க்க அம்மம்மா இல்லையென்றாலும் அவளுடையகருணை உனக்கு என்றும் பாதுகாப்புகவசமே!" "காற்றின் கிசுகிசுக்களில் அம்மம்மாவின் குரல் உன்னை வழிநடத்தும் கலங்கரை விளக்கமே! விண்மீன்கள் சிமிட்டும் அம்மம்மாவின் ஆசீர்வாதம் இரவும் பகலும் உன்னை அடையுமே!" "பொன்னான இந்நாளில் வானிலிருந்து ஒருவாழ்த்து அன்பான அம்மம்மாவின் கருணை மழையே! பட்டாம்பூச்சி பறப்பதைப்போன்ற இலகுவான இதயமே காலைக்கதிரவனாய் உந்தன் நாள் பிரகாசிக்கட்டுமே!" "குட்ட குட்ட குனியக் கூடாது குடை பிடித்து வாழக் கூடாது குறை இல்லாத வாழ்வு இல்லை குரோதம் வேண்டாம் அமைதி ஓங்கட்டும்!" "பதினெட்டு ஏழில் பிறந்த அழகனே பகலோன் போல உலகில் பிரகாசித்து பகைவர்கள் அற்று கவலைகள் அற்று பல்லாண்டு நீ வாழ வாழ்த்துகிறேன்!" "ஒழுக்கம் கொண்ட அழகுப் பேரனே ஒன்பது அகவை இன்று உனக்கு ஒல்லாரையும் மதித்து நடக்கும் பேரனே ஒற்றுமை கொண்ட பண்பாடு மலரட்டும்!" தாத்தா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]3 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பயித்தம் பணியாரம் பயறு வறுத்து உருட்டிச் செய்வது. அந்தப் பயறு வயிற்றுக்குள் சென்று கெட்ட நாற்றமுள்ள காற்றை உற்பத்தி செய்து வெளியேற்றுவதும் நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எங்கள் அன்புக்கும், அபிமானத்திற்கும் உரிய தமிழ் சிறித் தம்பி பயித்தம் பணியாரம் உண்டு கெட்ட காற்றும் உற்பத்தியாகி வெளியேறினால்….. அந்த நாற்றம்…. கட்டையோ, குட்டையோ, நெட்டையோ அழகிகளையும் அவர் அருகேகூட நிற்கவிடாமல் துரத்தியடித்து அவருக்கு மன நோயை ஏற்படுத்திவிடும் என்று எண்ணியதால்…. பயித்தம் பணியாரத்தைப் பார்சலில் இருந்து எடுத்துவிட்டேன்.............. இதை வாசித்து நான் சிரி சிரி ....என்று சிரிக்க வீட்டுக் காரன் கேட்க்கிறார் என்னப்பா கனவு கண்டு சிரிக்கிறாயா என ? கண்ணூறுபடப்போகுது...கொஞ்ச நாளாக இந்த பென்சனியர்களின் சேட்டை சொல்லி வேலையில்லை ...யாழ்கள ஜாம்பவான்களின் பகிடிகளில், இருக்கு மட்டும் சிரித்து சந்தோஷமாயிருப்போம். ( யாரும் யாரையும் கோவிக்காமல் பகிடியாய் எடுத்து நடபு பாராட்டுவது யாழ்களம் தந்த சிறப்பு )3 points
-
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறப்பு
அரசு செய்ய வேண்டியதை எம்மவர்கள் செலவு செய்து உபகரணங்களை வாங்கியும் கட்டடங்களை கட்டியும் கொடுக்க வெட்கமே இல்லாமல் அரசிலிருந்து போய் நாடாவெட்டி திறக்கிறார்கள். அவர்களது பெயரும் காலாகாலத்துக்கும் பொறிக்கப்பட்டிருக்கும். இதை அன்பளிப்பு செய்தவர்கள் மூலமாக ஏன் திறக்கக் கூடாது.3 points
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
3 pointsஅர்ச்சுனா கதையின் நீதி: பத்துப் பேர் சுற்றி நின்று கரகோஷம் செய்கிறார்கள் என்பதற்காக பப்பா மரத்தில் ஏறக்கூடாது.3 points
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
இந்த றம்போ அல்லது பைடனோ தமிழினத்தை ஒரு கருத்தாக எடுத்ததாகவே தெரியவில்லை. இருவரும் ஆட்சியில் இருந்தவரும் இருப்பவருமாக உள்ளனர். அவர்களுக்கு தத்தமது கவலை. அமெரிக்காவில் தீர்மானங்களை அரசுத்தலைவர்கள் எடுப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் வெறும் அம்புகள். கொள்கைவகுப்பாளர்களால் தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் வில்லிலே வென்றுவருபரை ஏற்றிவிடுவர். பாவம் தமிழினம் யே.ஆர் காலம்முதல் இன்றைய ரணில் காலம்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படிச் சிங்கள அரசுகளுக்கு முட்டுக்கொடுத்துவருகிறது என்பதை உற்றுநோக்கினால் இவர்களுக்காகவா என்று தோன்றும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points
- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
2 pointsஏற்கனவே தின்று கொழுத்த பன்றிகள் நடுவே தனியாக ஒரு பசு சமாளிப்பது கஷ்டம். பண பலமும் பதவி பலமும் அதிகம்.2 points- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
துணிஞ்ச கட்டையள்.😎 ஹோலுக்குள் வந்தது மட்டுமில்லாமல் போற வாற ஆக்களிட்டை குமாரசாமி எண்டவரை சந்திக்க வந்திருக்கிறம் எண்டு வேற விலாசம் குடுத்திருக்கினம். 😂 யாழ்கள குமாரசாமி எண்டால் என்ர மனிசி பிள்ளையளுக்கே தெரியாது எண்டது வேறை விசயம்.... குமாரசாமி எண்டவுடனை மண்டைக்குள்ள ஒண்டுமில்லாதவன் எண்டு நினைச்சால் நியாயம் இருக்கு...ஆனால் குத்தியன் குமாரசாமிக்கு மண்டைக்கு வெளியிலையும் ஒண்டுமிருக்காது எண்டு நினைச்சு இரண்டு பேரும் ஜாம் ஜாம் வந்திருக்கினம். 🤣2 points- குறுங்கதை 17 -- நளபாகம்
2 pointsநீங்கள் சொல்வது தப்பு ஏராளன் ......... உருளைக்கிழங்குக்குள் கோவா கொஞ்சம் பருப்பும் சேர்த்து வைக்கலாம் ஆனால் கோவாவுக்குள் கிழங்கு போட்டால் கோவம்தான் வரும் .......! 😂2 points- குறுங்கதை 17 -- நளபாகம்
2 pointsஎன்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது.😄 எனக்கும் தான் புரியவில்லை கோவாவில் குழம்பா ? என் நண்பி ஒருவர், இரண்டு ஆண்மக்கள் தோளுக்கு மேலே வளர்ந்து விடடார்கள் . நான் பெட்டிக்குள் போனாலும் " அப்பனும் மக்களும் சமைத்து வைத்துவிட்டு போ " என்று தான் சொல்வார்கள் என்று சலித்து கொள்வார்2 points- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
2 points2 points- கோப்பா அமெரிக்கா சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது ஆர்ஜன்டீனா
கோப்பாய் அமெரிக்கா....😂2 points- கருத்து படங்கள்
2 points2 points- 33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்
இங்கு மட்டுமா யாழ் ஆஸ்பத்திரியை சுற்றி உள்ள தனியார் மருத்துவ மனை பங்குதாரர்கள் யார் சிங்களவனா ? எல்லாம் இங்கு உழைத்தது காணாது என்று அங்கு போய் கொட்டமடிக்கும் தமிழ் பண பேய்கள் . சாவகசேரியில் வெடித்த வெடி அங்குள்ள தனியார் மருத்துவ மனை பங்குதாரர்களை அடையாளம் காட்டி உள்ளது .2 points- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
2 pointsஇது மிகவும் சிக்கலான பிரச்சனை. மருத்துவர் அர்ச்சனா தவறானவர் என கூறுவதற்கில்லை. இங்கு சம்மந்தப்பட்டுள்ள பல்வேறு விடயங்களை அணுகுவதில், கையாள்வதில் பலருக்கும் அனுபவம் இல்லை. சமூக ஊடகம் சம்மந்தமாக தெளிவான வரையறைகள் சட்டத்தில் உள்ளதா தெரியவில்லை. சமூகத்தில் ஏற்கனவே புரையோடிப்போயுள்ள காயத்திற்கு அர்ச்சனா ஒரு தனி ஆளாக மருந்து கட்ட முடியாது. இன்று அர்ச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன என செய்தி பார்த்தேன். பொதுநலன் கருதி மக்கள் நலனுக்காக குரல் கொடுத்த ஒருவர் தண்டிக்கப்பட்டால் எதிர்காலத்திலும் அர்ச்சுனா போன்று மற்றையவர்கள் குரல் கொடுக்க முன்வரமாட்டார்கள். எல்லோரும் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்ந்தால் ஊழல்களை ஒழிக்க முடியாது.2 points- அக்குட்டியும் பிச்சுமணியும்
1 point- சீமான் கைது எப்போது?
1 pointசீமான் கைது எப்போது? SelvamJul 13, 2024 09:20AM நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர். நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது… நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து மேடையில் முதல் வரிசையில் சீமான் அமர்ந்திருக்க, கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன மறைந்த கலைஞர் பற்றி ஹனீஃபா பாடிய பிரபலமான பாடலை தழுவி கலைஞரை மிகக் கடுமையாக விமர்சித்து வார்த்தைகளை மாற்றி பாடினார். அது மட்டுமல்ல அமைச்சர் உதயநிதியை புகழ்ந்து தற்போது திமுக மேடைகளில் பாடப்படும் பாடலையும் கேலி செய்து வரிகளை மாற்றி பாடினார். இவற்றை ரசித்து கைதட்டினார் சீமான். இந்த நிலையில், சாட்டை துரைமுருகனின் பேச்சு பதிவுகள் உளவுத்துறை மூலம் மேல் இடத்திற்கு சென்றன. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முடியும் வரை காத்திருந்த போலீஸ், தேர்தல் முடிந்ததும் குற்றாலத்தில் தங்கி இருந்த துரைமுருகனை சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது. ஜூலை 11ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சாட்டை துரைமுருகனை இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என்று கீழமை நீதிபதி விடுவித்துவிட்டார். சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட அதே நேரம் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “கருணாநிதி என்றைக்கும் தமிழின துரோகி தான். உங்க ஆட்சிங்கறதுனால உங்க அப்பாவை புனிதப்படுத்தி விடுவீர்களா? அதே பாட்டை நானும் இப்போது பாடுகிறேன். என் மீது கை வைத்து பார் பார்ப்போம்” என்று சவால் விட்டு பிரச்சார மேடையில் சாட்டை துரைமுருகன் பாடிய அதே பாடலை செய்தியாளர்கள் முன் பாடினார் சீமான். இந்நிலையில், ” திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்த சீமான், தலைவர் கலைஞரையே மிகவும் கொச்சைப்படுத்தி விட்டார். இனியும் நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று திமுகவின் பல மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை வற்புறுத்தி இருக்கிறார்கள். இந்த சூழலில் தான் ஜூலை 12ஆம் தேதி அமைச்சர் கீதாஜீவன் பத்திரிகையாளர்களை சந்தித்து சீமானை கடுமையாக விமர்சித்தார். சீமான் சட்டம் ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும்… ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு உரிய பொறுப்புணர்வு அவருக்கு இல்லை என்றும் அவரது மனநிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார் அமைச்சர் கீதா ஜீவன். சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் சீமான் செயல்படுகிறார் என்று ஒரு அமைச்சரே சொல்லும்போது அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்று திமுகவினரே கேள்வி எழுப்புகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் நாம் பேசிய போது, “2009, 2010 காலகட்டத்தில் தமிழகத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அப்போது இலங்கையின் இறுதிப்போர் நடந்த நிலையில்… திமுகவையும் திமுக அரசையும் எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் இருந்தது. தமிழ் உணர்வாளராக மட்டுமே அறியப்பட்டிருந்தார் சீமான். ஒரு கட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் சீமானை கைது செய்து சிறையில் அடைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அதிகாரிகள், ‘அவரை கைது செய்து சிறையில் அடைத்தால் அவருக்கு அது அரசியல் ஆதாயமாகிவிடும்’ என்று முதலமைச்சர் கலைஞரிடம் தெரிவித்தார்கள். ஆனால் கலைஞரோ அப்போது வீரியமாக போராடிக் கொண்டிருந்த வைகோவின் பலத்தை குறைப்பதற்கு சீமான் பயன்படுவார் என்று கணக்கு போட்டு… ‘சின்ன பையனா இருந்தா என்ன கைது பண்ணுங்க’ என்று சீமானை பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன்படியே சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஆறு மாத காலம் வேலூர் மத்திய சிறையில் இருந்த சீமான் விடுதலையாகி வெளியே வந்த பிறகு தமிழ் தேசிய அரசியலில் வைகோவின் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்தார். அது அன்று கலைஞர் போட்ட அரசியல் கணக்கு. இதேபோல கடந்த 2023 வருட இறுதியில் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து புகார்களை சென்னைக்கு வந்து எழுப்பினார். இதன் அடிப்படையில் வளசரவாக்கம் காவல் நிலையம் சீமானுக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரித்தது. அப்போதும் சீமானை கைது செய்யக்கூடிய ஒரு சூழல் உருவானது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின், ‘என் அப்பா செய்த தப்பை நான் செய்ய மாட்டேன். அவரை அப்போது கைது செய்திருக்காவிட்டால் அரசியலில் இப்படி வந்திருக்க மாட்டார். இப்போது அவரை கைது செய்தால் மீண்டும் அது அவருக்கு அரசியல் ஆதாயம் ஆகிவிடும்’ என கைது நடவடிக்கையை தவிர்த்தார் ஸ்டாலின். ஆனால் இன்று… மறைந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் கலைஞருக்கு எதிராக மிக கடுமையான வார்த்தைகளால் சீமான் அவரை இழிவு படுத்துகிறார். சீமானை கைது செய்து ஆக வேண்டும் என்று முதலமைச்சருக்கு அழுத்தங்கள் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன. தற்போது சீமானை கைது செய்தால் அது எதிர்க்கட்சிகளை ஒருமுகப்படுத்தும் அரசியல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்ததாக ஆகிவிடுமோ என்ற கருத்தும் ஒரு பக்கம் இருக்கிறது. என்றாலும் இறுதி முடிவு முதலமைச்சர் கையில் தான் உள்ளது” என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில். நேற்று அமைச்சர் கீதா ஜீவனின் பேட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், “சண்டாளன் என்ற வார்த்தையை கருணாநிதியே பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். என்னை அச்சுறுத்துவதற்காக இப்படி செய்கிறார்கள். முழுமையான பதிலை நாளை சொல்கிறேன்” என்று தெரிவித்தார். இன்று ஜூலை 13ஆம் தேதி பகல் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் சீமான். இதில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சீமானை கைது செய்வதற்கு பல முகாந்திரங்கள் இருக்கிற நிலையில்… அவரை இன்னமும் பேச விட்டு பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதே திமுக நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது. https://minnambalam.com/political-news/when-will-ntk-seeman-arrest/1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 point🤣......... என்ன பையன் சார்........ இவர் கடைசியில் நியூயோர்க் பிட்ச் மாதிரி ஆகிவிட்டாரா..... தூக்கிப் போட்டிட்டு அடுத்ததிற்கு காத்திருப்போம்........1 point- "பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]"
1 point- குறுங்கதை 17 -- நளபாகம்
1 pointகி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப்படும், இரண்டாவது யேல் சமையல் பலகையில் [YBC 8958], ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு பற்றி பதிவிட்டுள்ளது "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை, பின் இரைப் பையை பிரித்து துப்பரவு செய்,அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" இப்படி போகிறது. அதன் பின், "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அல்லது நறுக்கிய லீக்ஸ், மற்றும் உள்ளி, சமிடு [ரவை?], போதுமான வெங்காயம் சேர்த்து கொள்," என்று சமையயலை முடிகிறது. அப்படி என்றால், இப்ப 4000, ஆண்டுகளுக்கு பின்பும் எதற்கு குழப்பம் ? "கோழிக் குழம்பு தான் என்று கரண்டியை விட்டு விட்டு எடுத்தனர். எதுவுமே கரண்டியில் வரவில்லை. சில இலைகள் மட்டுமே கரண்டியில் வந்து கொண்டிருந்தது. .... ???" ஒருவேளை "பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் .... " அப்படி என்றால் கோழியின் [பறவையின்] சாப்பிட முடியாத பகுதி போக , ஒன்றும் மிஞ்சவில்லை போலும் ?? பாவம் "மாறி சுமேரியன் சமையல் பலகையை பார்த்துவிட்டார் போலும்" "என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது. ... " ஆமாம் வேறு என்ன பதில் சொல்ல முடியும் ?? மன்னித்து விடுங்கள் !!1 point- குறுங்கதை 17 -- நளபாகம்
1 pointவீட்டிலே ரசோதரன்தான் சமைக்கிறார் என்பதை இத்தால் புரிந்து கொண்டேன். சமைக்கும் சதி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். பெண்ணே நீ வாழ்க என்ற படத்தின் பாடல் நினைவுக்கு வந்தது “சமையலுக்கும் மையலுக்கும் ஓரெழுத்து பேதம் நாம் சரசமாகப் பேசி சமைத்திடுவோம் சாதம்….”1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எனக்கு கைத்தொலைபேசியை கையுடன் கொண்டு திரிவது அல்லது இருப்பில் செருகிக்கொண்டு திரிவதெல்லாம் விருப்பமில்லை. தேவையான போது பாவிக்க வேண்டும் அதுதான் என் கொள்கை. ஆனாலும் அவசர நேரங்களில் கையுடன் கொண்டு திரிவதில் தப்பில்லை என நான் நினைக்கின்றேன். சரி...விசயத்துக்கு வருவம். பலகாரம் எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடனும் நான் ரெலிபோனை பார்க்கவேயில்லை. நினையா பிரகாரமாக மண்டப சுற்றாடலை நிமிர்ந்து பார்த்த போது நான் சந்திக்கவிருந்த இருவரும் மண்டபத்திற்குள்ளேயே வந்து நின்றார்கள்!!!!!. எனது மனதில் இவர்கள் வந்ததும் ரெலிபோன் அடிப்பார்கள். காருக்குள்ளேயே இருப்பார்கள் கண்டுபிடிக்க கார் நம்பரை சொல்வார்கள் என நினைத்திருந்தேன்.காரணம் என்னை அவர்களுக்கு தெரியாது அல்லவா?மண்டபத்துக்குள் எப்படி என்னை அடையாளம் காண்பார்கள் என்ற நினைப்பில் இருந்தேன். ஆனால் இருவரின் படங்களையும் ஏற்கனவே ஓரிடத்தில் பார்த்து படங்களை சேகரித்து வைத்திருந்தேன். அதனால் அவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களை சந்தித்த தருணத்தில் என் தொலைபேசியை பார்த்த பின்னர் தான் தெரிந்தது சிறித்தம்பியர் என்னுடன் தொடர்புகொள்ள இரு தடைவைகள் எனக்கு ரெலிபோன் எடுத்துள்ளார் என தெரிய வந்திருந்தது. இவ்வளவு சொல்லியும்,அவதானமாக இருந்தும் அழைப்பை தவற விட்டது அந்த நேரத்திலும் சிறு மன இறுக்கத்தை கொடுத்திருந்தது. இருந்தாலும் பாஞ்ச் ஐயாவும் சிறித்தம்பியும் மண்டபத்திற்கு வந்ததில் எனக்கு அதிரடி மகிழ்சியாக இருந்தது. உடனே எழும்பி ஓடிப்போய் இருவரையும் வணக்கம் வாங்கோ என வரவேற்று கைகுலாவி மேசை கதிரைகளை காட்டி அமர வைத்தேன்.பாஞ்ச் ஐயா எதையுமே கேட்டுக்கொள்ளாமல் நாங்கள் குமாரசாமி என்பவரை தேடி வந்திருக்கின்றோம் என என்னிடமே கேட்டார்.சிறித்தம்பியர் என்னை யாரென்று ஊகித்தாரா என தெரியவில்லை. ஆனாலும் இருவரும் எனக்கு முன்னாலேயே என்னை தேடுகின்றார்கள் என அவர்கள் கண்களிலையே தெரிந்து கொண்டேன். நானோ நான் தான் யாழ்கள குமாரசாமி என பாஞ்ச் ஐயாவிடம் சொல்லி விட்டு சிறித்தம்பியிடம் என் குரல் உங்களுக்கு தெரிந்திருக்கும்...கண்டுபிசிருப்பியள் என தொடர அவர்கள் சுதாகரித்து விட்டார்கள் என தெரிந்தது. என்றாலும் பாஞ்ச் ஐயாவின் கண்களில் பல்லாயிரம் கேள்விக்குறிகள் ஓடியதை கவனிக்க முடிந்தது.சிறித்தம்பியர் என் குரல் மூலம் என்னை யாழ்கள குமாரசாமிதான் என உறுதிப்படுத்தி விட்டாரார் என நினைக்கிறேன். நீங்கள் ரெலிபோன் அடிச்சனீங்களோ என நான் சிறித்தம்பியரை கேட்டபடி தொலைபேசியை நோண்டிய போது சிறித்தம்பியர் இரண்டு தரம் என்னை தேடி ரெலிபோன் அடித்திருந்து பதிலளிக்காமல் விட்டதிற்கு என்னை நானே நொந்து கொண்டிருந்த தருணம்...... பாஞ்ச் ஐயா நான் யாழ்கள் குமாரசாமி எண்டால் உப்புடி இருப்பியள் எண்டு எதிர்பார்க்கேல்லை.....தலை முழுக்க மயிர் எண்டு தொடர்ந்தார்....இளமை..... நான் இப்ப என்ன நினைக்கிறன் எண்டால் யாழ்கள குமாரசாமி எண்டால் ஓமக்குச்சி நாராயணன் கொம்பனி வெவல்லை கற்பனை பண்ணி வைச்சிருக்கிறார் எண்டு....🤣1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointஇனிப்பாருங்க யாழில் அவருக்கு சேரப் போகும் கூட்டத்தை......?1 point- குறுங்கதை 17 -- நளபாகம்
1 pointஇதில் எனக்கு உடன்பாடில்லை. ஊரிலேயே இருந்திருந்தால் நீங்கள் சொல்வது சரி. ஆனால் வெளிநாடு என்று வெளிக்கிட்ட பின்பு ஆண்களும் சமையலில் கைதேர்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள். பெண்களைவிட சுவையாக சுமையல் செய்யும் ஆண்களும் இருப்பார்கள்.1 point- முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]"
1 point- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
அங்கால கமலா ஹாரிஸ் இங்கால உஷா சில்லுக்குரி நடுவால சுந்தர் பிச்சை.....ஒரே இண்டியன் கலக்கல் தான் போங்க...🤣1 point- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
உண்மைதான்... ஜேர்மனியிலும் ட்ரம்பை எவ்வளவு கழுவி ஊத்த முடியுமோ அவ்வளவிற்கு கழுவி ஊத்திய ஊடகங்கள் ஒருசில அரசியல்வாதிகள் எல்லாம் இப்பவே டொனால்ட் ரம்ப் அவர்களை "ஐயா" போட வெளிக்கிட்டு விட்டனர். சிஎன்என் ஊடகமும் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் தான் என்ற பாணியில் ஊத ஆரம்பித்து விட்டனர்.1 point- "இனப்படு கொலை"
1 point"இனப்படு கொலை" [இது எந்தவொரு அரசியலையோ அல்லது நிகழ்வையோ சார்ந்தவையல்ல. இது எனது பார்வையில் , எனக்கு தெரிந்த அளவில், ஒரு பொதுவான சுருக்கமான அலசல் மட்டுமே] இனப்படுகொலை பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட , முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில், பொதுவாக நடை பெறுகிறது. ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது , அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்து விடுகின்றன. இப்ப இனப்படு கொலை என்றால் என்ன என பார்ப்போம். இனப்படு கொலை என்பது ஒரு இனம் மற்ற இனத்தை ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என கொன்று குவிப்பதோ, அழிப்பதோ மட்டும் அல்ல. அதற்கு மேலாக ஒரு இனத்தின் அடையாளமான மொழி, பண்பாடு, பரம்பரை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் , அழிப்பதும் அத்துடன் அதன் வாழ்வை, வளர்ச்சியை, வளத்தை முடக்குவதும் ஒரு இனப்படு கொலையே! இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)] என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். இனத்தை குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து இந்த சொல்லை உருவாக்கினார். ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும் அதாவது கிழே தரப்பட்டவைகளை, முழுமையாகவோ பகுதியாகவோ ஒரு தேசிய குடிமக்களை, இனத்தை, சாதியை அல்லது ஒரு மதம் சார்ந்த குழுவை அழிக்கும் நோக்குடன் ஈடுபடுதலைக் குறிக்கிறது . அதாவது ஒரு குழுவின் உறுப்பினர்களை *கொல்லுதல் *உடலிற்கு அல்லது மனதிற்கு கடும் தீங்கு ஏற்படுத்துதல் / விளைவித்தல். *வேண்டும் என்று பகுதியாகவோ முழுமையாகவோ ஒரு உடல் அழிவை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துதல் *அந்த குழுவிற்குள் இனப்பெருக்கத்தை அல்லது பிறப்புகளை தடுப்பதற்கான வழி முறைகளை சுமத்துதல். *அந்த குழுவின் சீரார்களை கடாயப்படுத்தி மற்ற குழுக்குள் மாற்றுதல் . ஆகியவை இனப்படு கொலையாகும்! இனப்படு கொலை என்ற சொல் 1944 ற்கு பின்பு வந்த படியால் அதற்கு முன் அப்படி ஒன்று நிகழவில்லை என்று பொருள் அல்ல. பல சாட்சிகள் எமது பண்டைய சரித்திரத்திலும் இதிகாசத்திலும் புராணத்திலும் மற்றைய சமய இலக்கியங்களிலும் காணப்படுகின்றது. ஆனால் இனப்படு கொலை என்ற சொல்லை நேரடியாக பாவிக்காமல். அவ்வளவுதான் ! உதாரணமாக கி.மு. 2000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது. அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது! இப்படி ஒன்றையே மாயான்களுக்கு உதவி செய்ய, மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார். இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது. ஏன் என்றால் லட்சக் கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு,டியாகோ டி லாண்டா ஆவார் . அமாம் வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து- அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயான்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான அந்த நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற, மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும். அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ?. இது போலவே இந்து சம வெளி மக்களையும் அவர்களது நாகரிகத்தையும் இந்தியாவிற்குள் 1700 கி மு வந்த ஆரிய இனம் அழித்து துரத்தியது.? சிந்து சம வெளி நாகரிகம் 4,500-5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புற்று விளங்கியது. மேலும் அவர்களுக்கும் திராவிடருக்கும் நெருங்கிய தொடர்புண்டு என வரலாற்றாசிரியர் கூறுவர். ஏறத்தாழ கி மு 2000 ஆண்டு காலப் பகுதியில் அலை அலையாக அதிகமாக கைபர் கணவாய் (Khyber Pass) மூலம் மலைகளை கடந்து இந்தியாவிற்குள் வந்த நாடோடி மக்களான ஆரியரே சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுக்குக் காரணமாயிருந்தனர் என்பது இப்பொழுது ஆராய்ச்சி யாளர்களின் ஒரு முடிவாகும். என்றாலும் வேறு சில முடிவுகளும் உண்டு. ஆரியர்கள், தமது மேம் பட்ட படைக் கலத்தாலும் போரிடும் தேர்ச்சித் திறமையாலும் விவசாயம் சார்ந்த பழங்குடி இனமான [agricultural and tribal peoples] சிந்து சம வெளி மக்களை வென்று அவர்களை தென் இந்தியா நோக்கி தள்ளினார்கள் ஒரு முடிவு. அது உண்மையா இல்லையா என்பது இன்னும் விவாதத்துக்குரியது . சிந்துவெளி நாகரிகம் கி.மு.1700-ம் ஆண்டளவிற்குப் பின்னர் வரலாற்றில் இருந்து மறைந்து விடுகிறது. இதன் வீழ்ச்சிக் காலம் குறித்த தொல்லியல் சான்றுகளும், ஆரியர் உள்வரவு தொடர்பான கணிப்புக்களும் பொருந்தி வந்தது இந்த கருது கோளை மேலும் உறுதிபடுத்துகிறது. 1953 ஆம் ஆண்டு , தொல்லியலாளரான மார்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) மேலே குறிப்பட்ட கோட் பாட்டை முன்மொழிந்து அதற்கு சான்றாக போரில் இறந்த அடையாளங்களுடனான பலரின் புதை குழிகள் அங்கு மேற்படைகளில் காணப்பட்டதை இக் கோட்பாட்டிற்கு மேலும் ஒரு சான்றாக காட்டி அதற்கு வலு சேர்த்தார். உதாரணமாக, புதை குழிக்குள் அவசரம் அவசரமாக எறியப்பட்ட இறந்த மனித உடலின் எலும்புக்கூடுகளின் தொகுதி ஒன்று அங்கு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது அந்த இறந்தவர்களை புதைத்தவர்கள் கால அவகாசம் இல்லாததால் அப்படி செய்திருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. மேலும் ஒரு ஆண், ஒரு பெண், இருவரினதும் எலும்புக்கூடுகள் மாடி படிக்கட்டில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது இந்த இருவரும் அவசரம் அவசரமாக தப்பி ஓடுவதை தெளிவாகக் காட்டுகிறது. அத்துடன் அந்த எலும்புக் கூட்டை பரிசோதித்ததில் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என தெரிய வருகிறது. இது பற்றி மேலும் குறிப்பிட்ட போது, இந்தோ-ஆரிய போர்க் கடவுளான இந்திரனே [Indra, the leader of the Devas], இந்த அழிவுக்காகக் குற்றம் சாட்டப்படுகிறான் என்றார். மேலும் ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் தங்களுடன் போர் தொடுத்த திராவிடர்களை திட்டி, கேவலப் படுத்தி, பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் என "ரோமேஷ் மஜும்தார்" தமது "பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்" என்ற புத்தாகத்தில் 22 ஆம் பக்கத்தில் கூறுகிறார். மேலும் ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள், அசுரர்கள் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளன என Dr. ராதாகுமுத முகர்ஜி Phd "இந்து நாகரிகம்" பக்கம் 69 இல் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு மாதிரி எடுத்துக்காட்டாக ஒரு பாடலை கிழே தருகிறோம் . "இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் [தமிழர்களை] கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்." மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22 மேலும் இதில் ஒருவர் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் , மாயனும் இந்து சம வெளி மக்களும் தமிழர்களின் மூதாதையர் அல்லது அவர்களுடன் தொடர் உடையவர்கள் என அறிஞர்கள் இப்ப சான்றுகளுடன் கூறுவது . ஆகவே இந்த இரு முதன்மை இனப்படு கொலைகளை தாண்டித்தான் நாம் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . அது மட்டும் அல்ல இக் கொலைகளை /அழிவுகளை புரிந்தோர் இருவரும் ஒரே இந்தோ -ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மொழி குடும்பத்திற்குள் உள்ள இந்திய-ஈரானிய மொழி குடும்பத்தில் தான் பல வட இந்தியா மொழியும் உள்ளன என்பதும் கவனிக்கதக்கது. மேலும் ஒரு கடைசி உதாரணமாக எமது பார்வையை மகாபாரதம் அல்லது விஸ்ணு புராணம் பக்கம் திருப்புவோம். விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என கருதப்படும் பரசுராமரை இங்கு சந்திக்கிறோம். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன் [சத்திரியன் / க்ஷத்ரியர்] ஜமதக்கினி முனிவரின் காமதேனு பசுவை கடத்தி சென்று விட்டான், இதை அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார். ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தார்கள். அங்கு பரசுராமர் இல்லாததால் , அவனின் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை பலிக்கு பலி வெட்டினர். தாயின் அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அப்பொழுதே இந்தக் க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார் பரசுராமர். அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். இரத்த ஆறு ஓடியது. குரு - க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. இதை அடுத்து கொடிய கொலைக்காரனாக மாறி பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் இல்லாமல் போகும்படி இருபத் தொரு திக்விஜயம் செய்து, இருபத் தொரு தலை முறையை வேரறுத்தார் என கூறுகிறது. இவர் தனி மனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான் [mongolian king genghis khan], ஹிட்லர் [Adolf Hitler], ஸ்டாலின் [Joseph Stalin], முசோலினி [Benito Amilcare Andrea Mussolini], மாசேதுங் [Mao Zedong ] இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளை விட மிக மிக அதிகம். சத்திரியர் குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர் போலும். என்றாலும் க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பும் அந்த வம்சத்தை தழைக்கச் செய்தான் மூலகன். சூர்ய குலத்தில் பிறந்தவன் இந்த அரசன். இராமாயண ராமன் இவனது எட்டாவது தலை முறையாகும். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது. ஆகவே பொதுவாக விவேகமும் வீரமும் ஆற்றலும் கொண்ட ஒரு இனத்தை முழுமையாக தடை செய்யவோ அழிக்கவோ முடியாது என்பது கண்கூடு எப்படி என்றாலும் ஒரு இனப்படு கொலை நடை பெறும் போது ஒரு தற்காலிக பின்னடைவு நிகழ்கிறது. அதனால் தான் பொதுவாகத் எல்லோரும் அறிய விரும்புவது : *உண்மையில் என்ன நடந்தது ? *இது ஏன் நடந்தது ? *இதற்கு யார் பொறுப்பு ? *இந்த அட்டூழியத்திற்கு யார் யார் உடந்தையாக பின் புறத்தில் இருந்தவர்கள் ? *நாம் யாரை குற்றம் சுமத்த வேண்டும் ? இதனால்த் தான் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவரும், தனது திருக்குறள் 548 இல்: "எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்." என்று கூறுகிறார். அதாவது, நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பல வகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான் என்கிறார். இப்படியான கேள்விகளுக்கான உண்மையான, ஆக்கபூர்வமான, பக்க சார்பு அற்ற, பதில்களையே இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆகவே இந்த நேர்மையான கோரிக்கைகள் சிக்கலான ஒன்று அல்ல. மிக மிக இலகுவான ஒன்றே !! *"உண்மைகளை வெளிபடுத்துவது " *"நேரடியாகவோ மறைமுகமாவோ இதில் ஈடு பட்டவர்களை அல்லது குழுக்களை பகிரங்கமாக தண்டிப்பது" *"இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கும் உணர்த்துவது " அப்படி என்றால் இவை மேலும் தொடராமல் தடுக்கலாம் . அடுத்த பரம்பரைக்கும் இந்து சம வெளி மற்றும் மாயன் ? போல் தொடராமல் இருக்க . அது மட்டும் அல்ல பரசுராமர் போல் பரம்பரை பரம்பரையாக அழிப்பதை நேரத்துடன் தடுக்கலாம் என்பதாலும் . இன்னும் ஒரு மூலகன் வரும்வரை இருபத்தி ஒரு தலை முறைக்கு காத்திருக்க தேவை இல்லை என்பதாலும் ஆகும் . "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்- விசாரணை எடு- உண்மையை நிறுத்து கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள்- படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
நல்லா வாயில வருகுது,......😏1 point- குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
1 pointஇந்தியன் 2 எடுத்த கமல் சங்கர் நிலையைவிட மோசமாகி போச்சுது.......நாங்கள் எடுத்த டிக்கட் அப்படியே இருக்கட்டும் ......... அடுத்தொரு பிரதியெடுக்காத புதிய கதையொன்று .........வெயிட்டிங் .......! 😂1 point- உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
உண்மை தான் இவரது இயக்கத்தில் வடமாகாணத்துக்கு பொருப்பாக். எக்கவுனடன். நல்லையாவின். மகன் தயாபரன். இருந்தான். பொறியியல் இரண்டாவது ஆண்டு மாணவன் படிப்பை விட்டுட்டு இயக்கத்தில் சேர்ந்தவன். இயக்கப்பெயர் சந்திரன் இயக்கத்திலிருந்துமிடையில். விலகி விட்டான். கைதடி சொந்த ஊர் இப்போது கனடா இல் குடும்பமாக வாழ்கிறார்கள் மற்றும் எனது நண்பன் சண்முகம் சாவகச்சேரி பொறுப்பாளர் அவன் தனது நண்பனுக்கு. எனக்கும் நண்பர்கள் தான் கடிதம் எழுதினான். எல்லோரும் பச்சை கள்ளன்கள் ஆயுதம் ஆள்கள் இருந்தும் போரடவில்லை காலம் வீணணாகப். போய்க் கொண்டுருக்கிறது புளட்டை சேர்ந்த இரண்டு பேரை அடைக்கலம் கொடுத்து கைதடியில். வைத்து இருந்ததை கண்டு பிடித்து சண்முகம் மற்றும் தர்மலிங்கம் இருவரையும். சுட்டு விட்டார்கள் இருவரது தாய்மாரும். தெரு தெருவாக. அழுது திரிந்தார்கள் உமா இடம் பேச்சு எற்ப. செயல்கள இல்லை இவர் ஒரு அரசியல் கட்சிக்கு தலைமை வகிக்கலாம். ஆனால் ஆயுதப் போராட்டங்களை செய்யும் அமைப்புக்கு இல்லை அதுக்கு பிரபாகரன் தான் சரியான ஒரே நபர் 🙏1 point- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
சீ. என். என் இப்போது நல்லாய்த்தான் முக்குகின்றது. 😁 கடந்த பல மாதங்களாக அமெரிக்காவில் என்ன நடைபெற்று வருகின்றது என்பது உன்னிப்பாக அவதானிக்கும் அனைவரும் அறிந்ததே. டொனால்ட் ரிரம்ப்பை படு கேவலப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக வழக்குகள் தொடுத்தும் குற்றம் சுமத்தியும் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பை ஓரம் கட்டினார்கள். ஒதுக்கப்படவேண்டிய கீழ்த்தரமான மனுசன் என நிறுவ படாதபாடு பட்டார்கள். அவர் குடும்பமே வியாபாரம் செய்ய முடியாத அளவுக்கு எல்லாவற்றையும் முடியுமான அளவு முடக்கினார்கள். இவ்வளவற்றையும் தாண்டி சிங்கம் கர்ச்சித்து எழுந்தது. இப்போது டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு அமோக ஆதரவு கிடைக்க தொடங்கி உள்ளது. எலான் மாஸ்க் மாதம் 40 மில்லியன் டாலர்கள் தொகையை டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒதுக்கி உள்ளார். டொனால்ட் டிரம்ப் மீது வெறுப்பை தூண்டியதில் சீ. என். என் ஊடகத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அவரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளி சீ. என். என். போன்ற இடது சாரி ஊடகங்களினால் மண்டை கழுவப்பட்ட ஒருவராக விளங்க வாய்ப்பு அதிகம். இப்போது தாம் நல்ல பிள்ளை ஆட்டம் காண்பிக்க ஈரான் கதை அளக்கின்றார்கள். எவ் பி ஐ தாங்கள் ஏன் டிரம்ப் அவர்கள் சுடப்பட்ட, கொலையாளி உட்கார்ந்த கூரையை கண்காணிக்கவில்லை என்பதற்கு தகுந்த பதில் இல்லை. டிரம்ப் அவர்கள் பாதுகாப்பு விடயத்தில் வேண்டுமென்றே உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என்றே கருதவேண்டி உள்ளது. இனி ஈரானை இதற்குள் செருகி அதற்குள் ஒளிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் ஒன்று ஜனாதிபதியாக சிங்கம் மீண்டும் வந்ததும் டிரம்ப் அவர்களுக்கு எதிராக கூடி நின்று கும்மி அடித்தவர்கள் அனைவரும் துண்டை காணோம் துணியை காணோம் என்று கால் பிடரியில் அடிக்க ஓடப்போகின்றார்கள்.1 point- உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
1 point- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
1 pointஎன்னை விட திறமையான (sohot)களை அல்காராஸ் எடுத்துள்ளார் என ஜோகோவிச் தெரிவித்து இருந்தார். அவர் (அல்கராஸ்) வெற்றிக்கு மிக தகுதியானவர் (deserve)என்றும் தெரிவித்திருந்தார்.1 point- உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
என்னுடன் படித்த நண்பர்கள் இருவர் ஒருவர் பெயர் சேனதிராசா சண்முகவடிவேல். இவன் என்னுடன் கைதடியில் ஒரே படசாலையில். படிந்தவன். சண்முகம் என்று அழைப்போம். சகோதரங்கள். ஒன்பது பேர் வறுமைப்பட்ட. குடும்பம் உமாவின். இயக்கத்தில் முக்கியமானவன். 1976 ..... 1977 ஆண்டளவில் பலரையும் இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பினவன். என்னையும் கேட்டான் நான் வீட்டைப் பார்க்க வேண்டும் உதவி செய்கிறேன் என்று சொன்னேன்,...அவன் அடிக்கடி காணமால் போய்விடுவன். பத்தாவது வகுப்பில் தூய கணிதம் பிரயோக கணிதம் பௌதிகவியல். மூன்று படங்களிலும். Dஆக 3D. எடுத்து இருந்தேன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அந்த நேரம் 10 பேர் தான் பௌதிகவியலில். D எடுத்தார்கள் அதில் கிராம புறத்தை சேர்ந்த நானும் ஒருவன் சண்முகம் உட்பட பத்து நண்பர்களின் கோரிக்கைக்கு அமைய. கைதடி சந்தியில் ஆரியபாவனில். தேனீர் வடை ரீசியம். வேண்டி கொடுத்தேன்” அவனை அன்று தான் கடைசியாகக் கண்டது மற்றையவன். செல்லத்துரை தர்மலிங்கம். யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் முதலாவது ஆண்டு பௌதிகவியல். பட்டதாரி. மாணவன் இரண்டு பேரும் சிறந்த நண்பர்கள் எனக்கும் தான் 1984 இல் மார்கழியில். இங்கே வந்து விட்டேன் 1986 இல் இரண்டு புளட் இயக்க. நண்பர்களுக்கு அடைக்கலம் வழங்கியவர்கள் ஒருவரின் பெயர் சுரேஷ் மற்றவர். பெயர் தெரியாது இவர்களை இயக்கம் சுட்டதாக அதாவது புளட் சுட்டு. கொன்று விட்டது” இந்த சண்முகம் சாவகச்சேரி பெறுப்பாளர். ஆகும் மிகவும் கவலையளித்தது 🙏1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- கொஞ்சம் ரசிக்க
1 pointதுரு ஏறிய இரும்பும் ஆறுகடக்க மாந்தர்க்கு கரும்பாய் மாறிப் பயன்படுமே .........!1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointLa vie d’autrefois · Suivre 14 h · Vélo militaire avec roues à ressort des années 19001 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointஇந்த யூரியூபர்களின் தகரடப்பா சத்தங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், தலைமைத்துவப் பண்பு என்பதைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள், படிப்பினைகள் இந்தச் சம்பவங்களுள் அடங்கியிருக்கின்றன. மேலே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்: "சுகாதார அமைச்சில் பேசி விட்டு வருகிறேன்" என்று உள்ளே நுழையும் மருத்துவர் அர்ச்சுனாவைக் கண்டதும், மருத்துவர் ராஜிவ் எழுந்து நின்று ஆமிக்காரனிடம் பொலிஸ் பதிவு காட்டுவது போல தன் நியமனக் கடிதங்களைக் காட்டுகிறார்😂. அர்ச்சுனா ஒன்றும் காட்டவோ, அமைச்சு என்ன சொன்னதென்றோ வெளிப்படுத்தாமலே, ராஜிவ் கதிரையை விட்டு அகன்று ஒதுங்கி நிற்கிறார். புரிந்து கொள்ள இயலாத நடைமுறையாக இருக்கிறது. "இங்கே பேச எதுவும் இல்லை, நீங்கள் மாகாணப் பணிப்பாளரைப் பாருங்கள்" என்று இருந்த படியே சொல்லியிருக்கலாம். கூட இருக்கும் பொலிஸ்காரர்களிடம் "இந்த வீடியோக் காரர்களை அகற்றுங்கள்" என்று கூட வேண்டுகோள் விடுக்கும் சந்தர்ப்பம் இருந்தது. என்னைப் பொறுத்தவரை, தலைமைத்துவம் என்பதில் கொஞ்சம் "ரௌத்திரம்" அடங்கியிருக்க வேண்டும். தெளிவாக, வெளியே வரக் கூடிய குரலில் பேசக்கூட இயலாத எதிராளிகளை வைத்துக் கொண்டு அர்ச்சுனா நன்கு எஞ்ஜோய் பண்ணுகிறார் என நினைக்கிறேன்😂.1 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointசெய்திகள் வலைத்தளம்: தினக்கதிர் கொழுவி: http://www.thinakkathir.com/?p=66245 மீளெடுக்கப்பட்டது: யாழ் கருத்துக்களம் - 3 வழியாக திகதி: 5/09/2016 எழுத்தாளர்: இரா.துரைரத்தினம் இராணுவம், புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல்படை இணைந்து நடத்திய கிழக்கு பல்கலைக்கழக படுகொலை கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பொதுமக்கள் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழ் இன உயிர்கொலை நாளாக மட்டக்களப்பு பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் ஆகியன பிரகடனப்படுத்தி இருந்தன. 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்ட புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களும், ஜிகாத் முஸ்லீம் பயங்கரவாத குழுக்களும் வகைதொகை இன்றி படுகொலைகளை நடத்தி வந்தன. கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளின் உச்சக்கட்ட படுகொலையாக கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலை கருதப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் இருந்த 158 இளைஞர்கள் இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158இளைஞர்களும், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டனர். இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்ட இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்ற போதிலும் இவர்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. றிசாட் டயஸ் அல்லது கப்டன் முனாஸ் என்று அழைக்கப்படும் இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் புளொட் மோகன், முஸ்லீம் ஜிகாத் குழுவைச் சேர்ந்த மஜீத் உட்பட இராணுவ குழு ஒன்றே இவர்களை 11 பேருந்தில் கொண்டு சென்றனர். 1990ல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர் நிறுத்தம் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானதை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வாளைச்சேனை வரையான மக்கள் பாதுகாப்பு தேடி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற வேளையில் அம்முகாமில் 55ஆயிரம் பொதுமக்கள் தங்கியிருந்தனர். சம்பவ தினம் காலை 6மணிக்கு முன்னரே அகதி முகமை இராணுவத்தினரும் புளொட் இயக்கத்தினரும் முஸ்லீம் ஜிகாத் குழுக்களும் சுற்றிவளைத்திருந்தன. சம்பவ தினம் கொம்மாதுறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் களுவாராச்சி தலைமையிலான இராணுவத்தினருடன் மட்டக்களப்பு நகரில் இருந்த இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளான கப்டன் முனாஸ் என அழைக்கப்படும் றிச்சட் டயஸ் கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மஜீத், புளொட் மோகன் ஆகியோரும் வந்திருந்தனர். கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு பொறுப்பாக பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ஜெயசிங்கம், கலாநிதி சிவலிங்கம் ஆகியோர் இருந்தனர். அகதி முகாமுக்குள் நுழைந்த இவர்கள் தம்மை யார் என அறிமுப்படுத்தி கொண்டதாக அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான கலாநிதி ஜெயசிங்கம் தெரிவித்திருந்தார். இவர்களுடன் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகள் என கூறப்படும் 5பேர் இராணுவ உடையுடன் கதிரையில் அமர்த்தப்பட்டிருற்தனர். இவர்களுக்கு பின்னல் ஏறாவூரைச்சேர்ந்த 7 முஸ்லீம்கள் நின்றனர். ஆண்கள் அனைவரும் வயது அடிப்படையில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டனர். 12வயதிருந்து 25வயதுடையவர்கள் முதலாவது வரிசையிலும் 26வயதிலிருந்து 40வயதுவரையானவர்கள் இரண்டாவது வரிசையிலும் 40வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்றாவது வரிசையிலும் நிறுத்தப்பட்டனர். இவர்கள் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகளின் முன்னால் நிறுத்தப்பட்ட போது அவர்கள் தலைமை ஆட்டினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று தலையாட்டிகளின் பின்னால் நின்ற முஸ்லீம்களும் சிலரை காட்டினர். இவ்வாறு தலையாட்டிகளால் அல்லது முஸ்லீம்களால் காட்டப்பட்ட 158பேர் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல மட்டங்களில் முறையிட்ட போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த எயர்மார்சல் பெர்னாண்டோ அனுப்பிவைத்த பதிலில் செப்டம்பர் 5ஆம் திகதி 32பேரை மட்டும் விசாரணைக்காக கைது செய்யததாகவும் அவர்கள் அனைவரும் 24மணிநேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என தெரிவித்திருந்தார். இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு அப்போது இராணுவ தளபதியாக இருந்த ஹரி சில்வா சென்றிருந்தார். அப்போது அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்ற 158பேரின் நிலமை பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த இராணுவத்தளபதி 158பேரும் குற்றவாளிகள் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. அவர்கள் பற்றி இனி பேசக்கூடாது என எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார். இதன் பின்னர் செப்டம்பர் 23ஆம் திகதியும் அங்கு வந்த இராணுவத்தினர் மேலும் 16 இளைஞர்களை கைது செய்து கொண்டு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கி.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் உட்பட நேரில் கண்ட சாட்சிகள் 40பேர் சாட்சியமளித்தனர். இந்த ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே 5ஆம் திகதி 158பேரையும், 23ஆம் திகதி 16பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் புளொட் மற்றும் முஸ்லீம் ஜிகாத் குழுவும் பதில் கூற வேண்டும் என்றும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை அறியப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமை நிர்வாகித்து வந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி சிவலிங்கம், கலாநிதி ஜெயசிங்கம் ஆகியோரில் இன்று கலாநிதி ஜெயசிங்கம் மட்டுமே வாழும் சாட்சியாக உள்ளார். தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருக்கும் ஜெயசிங்கம் இச்சம்பவம் பற்றி 1996ஆம் ஆண்டு பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் 2004ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சியமளித்தார். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 26வருடங்கள் கடந்து விட்ட போதிலும் காணாமல் போனவர்கள் அங்கிருக்கிறார்கள், இங்கிருக்கிறார்கள் என அலைந்து திரியும் அவலமே தொடர்கிறது. உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என கலாநிதி ஜெயசிங்கம் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக சம்பவம் நடந்து சரியாக நான்கு தினங்களின் பின்னர் 1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவத்திலும் புளொட் இயக்கம், முஸ்லீம் ஊர்காவல் படை என்பனவும் சம்பந்தப்பட்டிருந்ததாக அக்கிராமமக்கள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகள் ஒருவயதிற்கு குறைந்தவர்கள். எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்ட சிவகுமார் தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்;ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர். காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு பிரஜைகள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார். சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் பற்றி அக்கிராமத்தை சேர்ந்த ஆசிரியரான சிவக்கொழுந்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார். இக்கிராமத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்து வீடு வீடாக சென்று அனைவரையும் இராணுவ முகாமுக்கு வருமாறு உத்தரவிட்டனர். இராணுவத்தினருடன் புளொட் மோகன் தலைமையில் புளொட் இயக்கத்தினரும் ஏறாவூரை சேர்ந்த முஸ்லீம் ஊர்காவல் படையினரும் ஆயுதங்களுடன் வந்திருந்தனர். இராணுவ சுற்றிவளைப்பிலிருந்து தப்பி காட்டிற்குள் தான் ஒளித்திருந்ததாகவும் இரவு 7மணிக்கு பின்னர் இராணுவ முகாமிலிருந்து அவலக்குரல்கள் கேட்டதாகவும் ஆசிரியர் சிவக்கொழுந்து தெரிவித்தார். இந்த அவலக்குரல்கள் இரவிரவாக கேட்டன. நள்ளிரவுக்கு பின்னர் இராணுவ முகாமுக்கு பின்பக்கத்தில் தீச்சுவாலை தெரிந்ததாகவும் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் என இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிவக்கொழுந்து தெரிவித்திருந்தார். இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன. சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இக்காலப்பகுதியில் சுமார் 2600பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1990ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் மட்டுமன்றி கைது செய்யப்பட்டு ரயரில் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களும் அதிகமாகும். 1990ஆம் ஆண்டு யூலை மாதத்திற்கு பின்னர் மட்டக்களப்பு புதுப்பாலத்தை அண்டிய வாவிக்கரைகளில் தினமும் ரயரில் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. மட்டக்களப்பு பற்பொடி கொம்பனி என அழைக்கப்பட்ட இராணுவ புலானாய்வு பிரிவினரின் முகாமில் கப்டன் முனாஸ், மற்றும் புளொட் மோகன் இருந்தனர். இவர்களால் கைது செய்யப்படும் அப்பாவி பொதுமக்கள் சித்திரவதையின் பின்னர் உயிருடன் கழுத்தில் ரயரை போட்டு எரிக்கும் சம்பவங்கள் தினசரி நடந்தன. சடலங்கள் எரிந்த நிலையில் அரைகுறை உயிருடனும் காணப்படும். மிகப்பெரிய இனப்படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும் நடந்த அக்காலத்தை மறக்க முடியாது. இக்கொலைகளை இராணுவத்தினருடன் சேர்ந்து புளொட் போன்ற தமிழ் இயக்கங்களும் செய்தன. புளொட் போன்ற தமிழ் இயக்கங்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்றன. கிழக்கில் நடந்த படுகொலைகளில் இந்த தமிழ் இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கிழக்கில் நடந்த இனப்படுகொலைகளுக்கு இராணுவம் மட்டுமன்றி இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் இயக்கங்களும் சம்பந்தப்பட்டிருந்தன என்பதை பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கூறிவலம் வரும் பலரின் கைகளில் இரத்தகறை படிந்திருக்கிறது என்பதை கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள். – இரா.துரைரத்தினம்- *****1 point- சீமான் கைது எப்போது?
1 pointவாலைப் பிடித்ததற்கே மூஞ்சி உடைபட்டுப் போய் இருக்கினம். அப்புறம் எப்படி தலையை?1 point- சீமான் கைது எப்போது?
1 pointமத்தியில் இருக்கும் அரசு தான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிடம் என் ஜ ஏ சோதனை விட்டவை கட்சி சின்னத்தை முடக்கினவை இதை எல்லாம் ஏன் மத்திய அரசு செய்யுது..........................1 point- சீமான் கைது எப்போது?
1 pointகருணாநிதி திட்டாத திட்டுக்களா..?! ஜெயலிலதா.. வை கோ போன்றவர்களை திடாத திட்டா. ஏதோ கருணாநிதி யோக்கியவான் போலவும்.... அண்மையில் ஸ்ராலின் கூட எரிதடி மாலா.. பா(f)னைப் போடு என்று ஒட்டுமொத்த தமிழகப் பெண்களையும் எள்ளி நகையாடியது கூட கைதுக்குரிய அம்சம் தானே. இது குறித்து தி மு க மகளிர் அணி மூச்சும் விடவில்லை. அண்மைய நாடாளுமன்ற.. மற்றும்.. இடைத்தேர்தல் பணநாயக வெற்றிக்கு பின்.. தி மு க கும்பல் கொஞ்சம் ஓவராத்தான் ஆடுது.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எனக்கும் பயிற்றம் பணியாரம் மிகவும் பிடிக்கும். போளி ரொம்ப பிடிக்கும். கனடாவில் சாப்பிட்டேன்.ஊரில் சாப்பிட்டது போல இல்லை. ஆக்களைத் தெரியாவிட்டால் பரவாயில்லை. அட்ரஸ் தெரிந்தா காணும்.1 point- 10 வயது மாயா நீலகாந்தன்!!!
1 point10 வயது மாயா நீலகாந்தன் 10-Year-Old Guitarist Maya Neelakantan Performs "Last Resort" |1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.