Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3054
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    31968
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/12/24 in all areas

  1. காட்டுத்தீயை மறந்து விட்டீர்கள்............ ஆனாலும் பூமியில் வாழத்தகுந்த அருமையான ஒரு தேசங்களில் இதுவும் ஒன்று. உண்மையிலேயே சொல்லுகின்றேன். 🤣........... சில நாட்களாக ஊண் உறக்கம் குறைத்து வேலையில் பிசியாக இருக்கின்றேன், அண்ணை. பூமித்தாயே அதைப் பொறுக்காமல் ஒரு குலுங்கு குலுங்கிவிட்டார்..................😜.
  2. மரியானா அகழி ------------------------- அவன் அந்த ஒழுங்கையால் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வந்து கொண்டிருந்தான். போகும் போது என்னையும் வா என்று வலியவே துணைக்கு கூட்டிக் கொண்டு போனான். அந்த ஒழுங்கையின் முடிவில் ஒரு கோயில் இருந்தது. ஆனால் இருவரும் கோயில் போய் சாமி கும்பிடுகிற ஆட்கள் இல்லை. ஏன் இந்த ஒழுங்கையில் தினமும் வருகின்றோம் என்று பல நாட்கள் நான் நச்சரித்த பின், அவன் உண்மையைச் சொன்னான். அந்த ஒழுங்கையில் இருந்த பெண் பிள்ளை ஒன்றின் பின்னால் அவன் சுத்துகின்றானாம் என்று அவன் சொன்னான். அந்தப் பிள்ளையும் எங்களின் வகுப்பு தான். அந்தப் பிள்ளையின் குடும்பம் 83ம் ஆண்டுக் கலவரத்தில் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்து ஊருக்கு வந்தவர்கள். என்னை ஏன் கூட்டிக் கொண்டு போனான் என்பதற்கான காரணத்தை இலகுவாகவே ஊகித்துக் கொள்ளலாம். இப்படியான ரோமியோக்களுக்கு ஒரு நண்பன் கட்டாயமாக துணையாக வேண்டும். அங்கே தனியாக எந்த ஒழுங்கையில் போனாலும், தேமே என்று அரைக்கண் மூடி படுத்துக் கிடக்கும் நாய் கூட சந்தேகத்தில் எழும்பி வந்து கலைக்கும். எங்களின் கூட்டத்தில் ஆபத்தில்லாத, அப்பிராணியான, பெயர்கள் எதுவுமற்றவர்களில் நானும் ஒருவன் என்பது தான் என்னைத் தெரிந்தெடுத்த அந்தக் காரணம். 'முடியாது என்று சொல்லி விட்டா.......' என்று வந்து நின்றான் ஒரு நாள். 'முடியாது என்றா சொன்னா..........' என்று திருப்பிக் கேட்டேன் நான். அதற்கு முதல் நாள் நண்பன் தனியே போய், என்னைக் கூட்டிக் கொண்டு போகாமல், எங்கேயோ வைத்துக் கேட்டிருக்கின்றார். ஆளைத் தெரியாது என்று தான் சொன்னா, நீங்கள் யார் அண்ணா என்றும் அவனைக் கேட்டதாகவும் நன்றாக ஞாபகப்படுத்திச் சொன்னான் நண்பன். என்னைக் கண்டதே இல்லை என்றும் சொல்லி விட்டா என்று கண் கலங்கி நின்றான் நண்பன். நல்ல வேளை, அந்த சம்பவம் நடந்த பொழுது நான் அவனுடன் கூடச் சேர்ந்து போயிருக்கவில்லை. போயிருந்தால், 'இந்தத் தம்பி யாரு.........' என்று அவர் என்னைப் பார்த்தும் கேட்டிருப்பார். நண்பன் மினுக்கி மினுக்கி வகுப்புக்கு வந்து போனது எல்லாவற்றையும் எந்தக் கணக்கில் சேர்க்கின்றது. எவருமே இவனைப் பார்க்கவில்லையோ. பின்னர் நண்பன் ஒரு இயக்கத்தில் போய் சேர்ந்துவிட்டான். சில மாதங்களில் திரும்பி வந்தான். சில புத்தகங்களை எனக்குக் கொடுத்தான். எல்லாமே சிவப்பு பிரகடனங்கள். முன் அட்டையில் மார்க்ஸ், இங்கர்சால் என்ற பெயர்களும், பின் அட்டையில் அந்த இயக்கத்தின் ஸ்தாபகரின் பெயரும் இருந்தன. நண்பன் 'தோடுடைய செவியன்........' பொழிப்பு எழுதச் சொன்னாலே அக்கம்பக்கம் எட்டிப் பார்க்கின்றவன். முழு இலங்கையிலும் தனியார் கல்வி நிலையத்தில் சமய பாடத்திற்கே அடி வாங்கியவர்கள் வெகு சிலரே, அதில் இவனும் ஒருவன். காதல் தோல்வி அவனை எங்கேயோ கொண்டு போய் சேர்த்திருந்தது. இன்னும் பலரும் ஏக காலத்தில் அந்தப் பிள்ளையின் பின் சுற்றித் திரிந்தனர். துணிவை வரவழைத்துக் கொண்டு, அந்தப் பிள்ளையிடம் போய்க் கேட்டவர்கள் எல்லோருக்கும், 'அண்ணா, நீங்க யாரண்ணா...........' என்பதே பதிலாக வந்து கொண்டிருந்தது. மற்ற எல்லாக் கதைகளும் வெளியில் வந்தாலும், நான் கூடப் போன என் நண்பனின் கதை மட்டும் வெளியில் வரவில்லை. எத்தனையோ இயக்கங்கள் இருக்க, அந்த இயக்கத்தில் இவன் ஏன் போய்ச் சேர்ந்தான் என்பது மட்டும் தான் ஊரில் பலருக்கும் ஆச்சரியமாகவும், பேசுபொருளாகவும் இருந்தது. பின்னர் நண்பன் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, வெளிநாடு போய், எங்கள் இருவருக்கும் நன்கு தெரிந்த வேறு ஒரு பிள்ளையை கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றான். கிட்டப் போனவர்கள் எல்லோரையும் ' அண்ணா, நீங்கள் யாரண்ணா.........' என்று கேட்டு ஓட விட்ட அந்தப் பிள்ளையும் எங்களுக்கு தெரிந்த ஒருவரைக் கட்டிக் கொண்டு இன்னொரு நாட்டில் வாழ்ந்து வருகின்றார். நீண்ட காலத்தின் பின், ஒரு ஊடகத்தில் சிறு வயது நண்பர்கள் என்று ஒரு குழுமம் உண்டாக்கி, பலரும் இணைந்து கொண்டோம். அறிமுகங்கள், கதைகள், பகிடிகள், ஞாபகங்கள் என்று எல்லோரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் அந்தப் பெண்ணை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. 'உங்களுக்கு என்னை முந்தி தெரிந்திருக்காது...........' என்று நான் ஆரம்பித்தேன். ' இல்லை, இல்லை, எனக்கு அப்பவே உங்களைத் தெரியும்........... நீங்களும், இன்னொருவரும் அடிக்கடி எங்கள் வீட்டுப் பக்கமாக சைக்கிளில் அந்த நாளில் வந்து போவீர்களே...........' என்றார் அவர். எவரெஸ்ட்டையே தாட்டு விடும் மரியான அகழி தான் உலகிலேயே ஆழமானது என்பார்கள். என்ன பெரிய ஆழம் அது.
  3. 👍........ உலகம் பூராவும் தங்கங்களின் வரிசைப்படியே நிரல் படுத்துகின்றார்கள், ஏராளன். ஆனால், அமெரிக்கா மட்டும் விதிவிலக்கு. இங்கு இறாத்தலில் மாவும் சீனியும் வாங்கிக் கொண்டு, அடியில் அளந்து கொண்டு, கலனில் பால் வாங்கிக் கொண்டு...............' எலே, நாங்கள் வித்தியாசம் எல்லே........' என்று எல்லாவற்றிலும் போய்க் கொண்டிருக்கின்றார்கள். நேற்று இந்தியச் செய்திகளில் பாகிஸ்தான் பதக்க வரிசையில் முன்னுக்கு வந்தது பெரிய செய்தி. இந்தியா எப்படி பாகிஸ்தானுக்கு பின்னுக்கு போனது என்று ஆராய்ந்தார்கள். உகண்டா கூட ஒரு தங்கம் எடுத்திருக்கின்றது, நீங்கள் உகண்டாவிற்கும் பின்னால் தான் நிற்கிறீர்கள், ஆனால் அது உங்களின் கண்ணுக்கு தெரியவில்லையா என்று அவர்களை எவரும் கேட்பாரில்லை.........🫣
  4. சர்வதேச விளையாட்டுகளுக்கு ஒரு சிறிய ஓய்வு காலம், பையன் சார். ஆனால் இங்கு விளையாட்டுகள் இனித்தான் களைகட்டும். College Football, NFL, Baseball Playoffs என்று ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப் போகின்றன. அப்படியே பின்னர் NHL, NBA என்பனவும் தொடங்கிவிடும். உதிர் காலமும், குளிர் காலமும் விளையாட்டுகளின் சீசன் இங்கே........😃.
  5. தமிழ்ப்பொது வேட்பாளர் அறிவிப்பின் பின்னர் அப்படியே தலைகீழாகத் திரும்பிய சும் வட-கிழக்கு இணைந்த சமஸ்டியைத் தருவோருக்கே ஆதரவு என்று ஏன் கூறுகின்றார். இந்த அறிவிப்பு ஏதோவொரு தாக்கத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளிடையே செய்திருப்பதாலா?
  6. தெரிந்த நண்பி ஒருவரை உயர் தர வகுப்பு அண்ணா ஒருவர் சுற்றி வருவது கல்லூரியில் யாவரும் அறிந்ததே.ஒரு நாள் பல மாணவர்களுக்கு முன் காதில் ஈயம் ஊற்றியது போல் கிழித்து தொங்க விட்டிருந்தார் நண்பி. இப்படி பல தடவைகள் நடந்தது என நண்பர்கள் சொல்ல கேட்டிருந்தேன். காலங்கள் பல ஓடின. கல்லூரி ஒன்று கூடல் ஒன்று நடைபெற்றது. எதிர்பாராத விதமாக நண்பியும் கலந்து கொண்டிருந்தார்.அவரின் வாழ்க்கை, படிப்பு எல்லாம் கேட்ட பின் திருமண வாழ்க்கை பற்றியும் கேட்ட போது அதே பையனை திருமணம் செய்து 3 பிள்ளைகள் சொன்ன போது அதிர்ச்சியில் இருந்து மீள முன் “ எங்களை எப்போ புரிய போகிறீர்கள்” என்று ஒரு நக்கலாக கேட்டது இப்போதும் நினைவில் உள்ளது.
  7. முதலில் சிரிப்பு பட்டனை அமத்தவா எண்டு யோசிச்சன், ஆனால் குமாரசாமியண்ணை எழுதியது வெளிநாட்டுக்கு அகதியாய் வந்தவர்கள் அனைவரும் எதிர்கொள்ளூம் ஒன்று என்பதால் யாதர்த்தத்தைபதிவு செய்கிறார் அதனால் இது சிரிப்பல்ல சீரியஸ் ம் சீரியசுக்கு எப்படி சிரிப்பது என்றாச்சு. மேலே உள்ள வரிகளை சுட்டி காட்டியதன் நோக்கம் வெளிநாட்டுக்கு அகதியா வருபவர்களில் எம்மவர்தான் நீண்டகாலம் ஒரு நாட்டிலிருந்தும் ஒரு மொழியை 60% வீதமாவது கற்றுக்கொள்ளாமல் இன்றும் ஒரு அலுவலுக்கு அடுத்தவர் உதவியை நாடுவதும் , வெள்ளைக்காரனுடன் பேசும்போது தகிட தகிட ததிமி தகிட ததிமி தந்தானா என்று பக்கத்தில நிக்கும் வேற்று நாட்டுக்காரன் எம்மை பார்த்து பரிதாபபடும் நிலையில் உள்ளவர்கள் , எனது அலுவல்களுக்கு மொழி விஷயத்தில் அடுத்தவர் உதவியை பெரிதாக நாடாவிடிலும் நானும் பூரண மொழி ஆற்றலில் மேற்குறிப்பிட்டவர்களின் அதே ரகம்தான். எமக்கு முதல் நிலையில் உள்ளவர்கள் சீனர்கள். எம்மவர்கள் பிற இனங்களுடன் ஒப்பிடும்போது மொழி ஆற்றலில் பின் தங்கியதற்கு இரண்டு காரணங்கள் ,,,வந்த காசு கட்டவேணுமென்று வந்து அடுத்தவாரமே ஓயாமல் வேலை வேலை என்று காலம் முழுக்க ஓடுவது இரண்டு தாயகத்தில் தாய் மொழியை தவிர பிறமொழியை அறியும் ஆற்றல் இல்லாதது, தாயகத்தில் சுத்த தமிழ் பேசுவதற்கு மொழி பற்று முதலாவது காரணமில்லை, இங்கிலீசு தெரியாததும் ஒரு காரணம், உண்மைய சொல்வதானால் தமிழக தமிழ் பேட்டிகள் , டிவி நிகழ்ச்சிகள், உரையாடல்களை நம்மவர்கள் முழுதா புரிவதென்றாலே ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது தாயகத்திலும் , கைஸ், வாவ், வேற லெவல், அதைவிட பல ஆங்கில கலப்பு சொற்கள் யாழ்ப்பாண தமிழில் கலந்துவிட்டன. குமாரசாமியண்ணை கருத்தை பதிவிடுகிறேன் என்று கண்ணாடியை பதிவேற்றிவிட்டார் ஒவ்வொரு அகதியின் முகமும் அதில் தெரியுது.
  8. சிங்களம் பலமிழந்து தமக்குள் பிரிந்து நிற்கும் இன்றைய சூழலில் தமிழர் ஒற்றுமையாக தமது பலத்தை காட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று அங்குள்ளவர்கள் ஒன்று கூடி முடிவு செய்திருக்கிறார்கள். அதனை தமிழர்கள் ஒற்றுமையாக வழி மொழிதல் நடைபெற்றால் மட்டுமே அதன் பயனை அடைய முடியும். ஆனால் எம்மவர் எந்த பொறுப்பும் அற்று எடுத்தவுடன் கவுட்டுப்போடுவது எமது சாபக்கேடே.
  9. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது . இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395448
  10. இலங்கையின் ஒரு பகுதியில் தொடருந்து சாரதி ஒருவர் தொடருந்து தண்டவாளத்திலே தொடருந்தை நிறுத்தி விட்டு கடையில் உணவு வாங்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களிலே வெளியாகி வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில் புகையிரத்தை கடவையில் நிறுத்தி வைத்து விட்டு பொது மக்கள் காத்திருக்க தொடருந்து செலுத்துபவர் உணவை வாங்கிச் செல்வதாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த செயலானது பொது மக்களிடையே தொடருந்து திணைக்கள உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. https://tamilwin.com/article/stopping-train-like-a-bus-buying-food-at-the-shop-1723446092
  11. ஜேர்மனியில் இருந்தனெல்லாம் லண்டன் கனடா என்று ஓடிட்டாங்களே? இப்ப ஆட்கள் பத்தாதோ? அப்ப என்ன சாப்பிட்டுவிட்டு போடும் குட்டி தூக்கத்தைக் கெடுத்துப் போட்டுதோ?
  12. 1978ம் ஆண்டே சிரிபி றைவர்மார் பஸ் புஃல் சனத்தோட குச்சொழுங்கைக்க விட்டு கள்ளுதவறணையில கள்ளு அடிச்ச சம்பவங்கள் எக்கச்சக்கம் கண்டியளோ... 😂
  13. அண்ணை நீங்கள் அப்ப தப்பி பிறகு சிக்கிவிட்டீர்கள்! பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு காலம் தான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும். பெண்களை முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்றாகும். நீங்கள் விரும்பும் பெண்ணை மதிப்பிடுவதற்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவைப்படலாம். பெண்களை முழுவதும் புரிந்து கொண்டு. நமது உறவை வலுப்படுத்த பல வழிகள் உள்ளன. Read more at: https://tamil.boldsky.com/relationship/2013/11/10-tips-for-understanding-women-004379.html
  14. இப்ப‌ NFL தொட‌ங்க‌ முத‌ல் ம‌ற்ற‌ அணிக‌ளுட‌ன் சும்மா ந‌ட‌க்கும் போட்டிக‌ள் ந‌ட‌க்குது............................அடுத்த‌ மாத‌ம் தொட‌க்க‌த்தில் NFL தொட‌ங்குது ....................ஒலிம்பிக்குக்காக‌ WNBA போட்டி நிறுத்தி வைக்க‌ ப‌ட்ட‌து அதுவும் இந்த‌ கிழ‌மையில் இருந்து தொட‌ரும் NBA.......NHL இந்த‌ இர‌ண்டு விளையாட்டும் தொட‌ங்க‌ கிட்ட‌ த‌ட்ட‌ இர‌ண்ட‌ர‌ மாத‌ம் இருக்கு அண்ணா.......................
  15. ஆகஸ்ட் இரண்டு -------------------------- சந்தியில் நண்பன் ஒருவன் பலசரக்கு கடை வைத்திருந்தான். அந்த நாட்களில் ஒரு நாளின் சில பகுதிகளை அங்கே செலவிடுவதும் எங்களின் வழக்கமாக இருந்தது. பல சமயங்களில் நண்பனின் இரு சகோதர்களும் கூட அங்கே வியாபாரத்தில் நிற்பார்கள். எங்களுக்குள் ஒரு சில வயதுகளே இடைவெளி. கடை ஒரு அமைவான இடத்தில் இருந்தது. புதிய சந்தைக் கட்டிடத்தில் சந்தியை நோக்கிய திசையில் கடை இருந்தது. கடையில் இருந்து பார்த்தால் சந்தி முழுவதும் தெரியும். அப்பொழுது நான் சில தனியார் கல்வி நிலையங்களில் படிப்பித்துக் கொண்டிருந்தேன். மிகுதி நேரங்களில் இந்தக் கடை, பந்தடி, கடற்கரை, கோவில் வீதி, சந்தியில் மற்றும் ஊரில் இருக்கும் திண்ணைகள், கல்யாண வீட்டுச் சோடனைகள் என்று காலம் கஷ்டம் அறியாமல் போய்க் கொண்டிருந்தது. நண்பர்கள் ஒவ்வொருவராகச் கொழும்பு சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லவும் ஆரம்பித்திருந்தனர். சிலர் இந்தியா போய் அங்கேயே தங்க ஆரம்பித்திருந்தனர். ஊர் எல்லோரிடமும் அடிவாங்கிக் கொண்டிருந்தது காலம் அது. இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, அதை விட இலங்கை இராணுவத்தின் ஆபரேசன்கள் என்று விடாமல் எரிந்து கொண்டிருந்தது ஊர். 87 ஆம் ஆண்டில் நடந்த லிபரேஷன் ஆபரேஷன் தான் ஊரின் முதுகை முறித்த கடைசித் துரும்பானது. அந்த நிகழ்வுடன் கிளம்ப வழி இருந்தவர்கள் பலரும் ஊரிலிருந்து வெளியேற வழி தேடினர். சிலர் எப்பாடு பட்டாவது ஏ லெவல் பரீட்சையை எடுத்து முடித்து விட்டு பின்னர் வெளியே போகலாம் என்று 87 ஆம் ஆண்டைத் தாண்டியும் ஊரில் நின்றனர். பின்னர் வந்த இந்திய இராணுவம் முதலில் முழுக் குழப்பத்தில் இருந்தது. சமாதானமா, சண்டையா, யாருடன் சண்டை, யாருடன் சமாதானம் என்று அவர்களுக்கு பெரும் குழப்பமாகவே இருந்திருக்கும். எங்களுக்கும் அப்படியே இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் அவர்களை எந்த விதமான பயத்துடனும் அணுகவில்லை. ஊரைச் சுற்றி அவர்களின் பல முகாம்கள், ஆனாலும் நாங்கள் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. பின்னர் தகராறாகி, நண்பர்கள் எதிரிகள் என்று உருவாகினர், தலையாட்டிகள் வந்தனர். அடிக்கடி சுற்றி வளத்து, கூட்டிக்கொண்டு போவார்கள். ஒரு பாடசாலையில் வைத்திருப்பார்கள். அம்மாக்கள் பாடசாலைக்கு வெளியே காத்திருப்பார்கள். தலையாட்டி தலையாட்டாமல் விட்டால், உடனேயே விட்டு விடுவார்கள். தலையாட்டி தலையை ஆட்டி விட்டால், அது வேற கணக்கு, ஆனாலும் வெளியில் வந்துவிடலாம். எங்கள் பகுதியில் தலையாட்டியாக இருந்தவரை எங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அவருக்கும் எங்கள் எல்லோரையும் நன்றாகவே தெரியும். அவர் சிலரை வேண்டும் என்றே 'போட்டுக்' கொடுத்தார். அவர் உண்மையான ஆபத்துள்ள எவரையும் போட்டுக் கொடுத்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆனாலும் இவர் ஏன் அவர்களுடன், தலையாட்டியாக, போய்ச் சேர்ந்தார் என்று தெரியவில்லை. ஆகஸ்ட் இரண்டு, 1989ம் ஆண்டு. காலையில் கடையில் நின்று கொண்டிருந்தேன். நண்பனும், அவனின் தம்பியும் கூட நின்றனர். அருகில் சிவபுர வீதியில் இருக்கும் தனியார் கல்வி நிலையத்தில் எனக்கு ஒரு வகுப்பு இருந்தது. வகுப்பை முடித்து விட்டு வருவதாக நண்பனிடம் சொல்லி விட்டு சென்றேன். அந்த நேரத்தில் அங்கு ஒரே ஒரு வகுப்பு மட்டுமே, என்னுடைய வகுப்பு மட்டும், நடந்து கொண்டிருந்தது. திடும்மென்று முன்கதவால் இந்திய இராணுவத்தினர் சிலர் உள்ளே வந்தனர். என்ன, ஏது என்று கேட்டு விட்டு, முன் கதவாலேயே வெளியில் போனார்கள். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. எங்கும் துப்பாக்கிச் சத்தம். தலைக்கு மேலால் சன்னங்கள் பறந்தன போல் இருந்தன. மாணவர்களும், நானும் பின்பக்கம் இரண்டு சுவர்கள் ஏறி குதித்தோம். அப்படியே தீருவில் வயல்கள் கடந்து, பனங்கூடல்களுக்குள்ளால் ஓடிக் கொண்டே இருந்தோம். பனங்கூடல்கள் தாண்டி கொம்மந்தறை பகுதியை அடையும் போது, எதிரே இந்திய இராணுவத்தினர் அவசரம் அவசரமாக வாகனங்களில் ஊரை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். ஊருக்கு திரும்பிப் போக இரண்டு நாட்கள் எடுத்தது. ஊரையே இரண்டு நாட்கள் மூடி வைத்திருந்தனர் இந்தியா இராணுவத்தினர். ஊருக்குள் வந்தவுடன், ஓடிப் போனேன் கடைக்கு. கடை முழுவதுமாக எரிக்கப்பட்டிருந்தது. நண்பனும், அவனின் தம்பியும் காணாமல் போய்விட்டனர்.
  16. அண்ணை பிளாட்போர்ம் தாண்டித்தான் என்ஜின் பகுதி நிற்குமாம், வழமையாகவே வீதிக்கு வந்துவிடுமாம் என்ஜின் பகுதி! முகப்புத்தகத்தில் வாசித்தேன். என்றாலும் புகையிரதச் சாரதிகள் இடையில் தனிப்பட்ட தேவைகளுக்கு இறங்கி ஏற முடியாது.
  17. தங்க வரிசைப்படி தான் உத்தியோகபூர்வ தளத்தில் போட்டிருக்கு அண்ணை! https://olympics.com/en/paris-2024/medals அதனால் தான் ஒரு தங்கம் வென்ற பாகிஸ்தான் 62ஆம் இடத்திலும் ஒரு வெள்ளி 5 வெண்கலம் வென்ற இந்தியா 71ஆம் இடத்திலும் இருக்கிறது.
  18. “பசி வந்திட, பத்தும் பறந்து போகும்.” இது எத்தினை நாளாக நடக்குது என்று தெரியவில்லையே. இண்டைக்கென்று… இதனை ஒருத்தன் படம் பிடிப்பான் என்று அவருக்கு தெரியாமல் போச்சுது. 😂 இதோடை… வேலைக்கு ஆப்போ தெரியவில்லை. 😁 சிங்களவன் என்றால் தப்பி விடுவான். 🤣
  19. ஏற்கனவே செத்து சுண்ணாம்பாகிக் கிடக்கும் இலங்கையின் 'நீதி' த்துறைக்கு, பாடை கட்ட இவரை நியமித்து இருக்கின்றார்கள்.
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனிதர்களைப் போல யானைகளும் குறிப்பிட்ட யானையைப் பெயர் சொல்லி அழைத்து செய்தியைக் கூறுகின்றன என பகுப்பாய்வு முடிவுகள் உணர்த்தின கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இன்று உலக யானைகள் தினம். 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.) சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. உலகில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவைதான். ஒன்று ஆசிய யானைகள், மற்றொன்று ஆப்பிரிக்க யானைகள். சமீபத்தில் ஆப்பிரிக்க யானைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மனிதர்களைப் போலேவே யானைகளும் ஒன்றுக்கொன்று பெயர் வைத்து அழைத்துக் கொள்கின்றன என கண்டறியப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மைக்கேல் பார்டோ தலைமையிலான குழு, கென்யாவில் வாழும் ஆப்பிரிக்க காட்டு யானைகளை ஆய்வு செய்து இதனை கண்டுபிடித்தனர். இந்த ஆய்வு முடிவுகள் ஆசிய யானைகளுக்கும் பொருந்துமா? யானைகள் தங்களுக்குள் எப்படி தொடர்புகொள்கின்றன மற்றும் அவற்றின் சமூக கட்டமைப்பு எவ்வாறு உள்ளது? ‘பிறருக்கு தீங்கு நினைக்காத உயிரினம்’ பட மூலாதாரம்,SANGITA IYER படக்குறிப்பு, அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில், சங்கீதாவின் குழுவை வழிமறித்த ஆண் யானை ‘யானைகள், இயற்கையின் தலைச்சிறந்த படைப்பு. பிறருக்கு தீங்கு நினைக்காத ஒரே உயிரினம்’- என 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர் எழுதியுள்ளார். “மேலே இருக்கும் வரிகளைப் படித்தால், சிலர் யோசிக்கலாம், யானைகள் மனிதர்களைத் தாக்குவதை, விரட்டுவதை, பார்த்திருக்கிறோமே என்று. ஆனால் என் பல வருட அனுபவத்தில் சொல்கிறேன், மனிதர்கள் மீதான முந்தைய அனுபவமே யானைகளின் நடவடிக்கையைத் தீர்மானிப்பவை” என்கிறார் எழுத்தாளர், வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் மற்றும் உயிரியலாளர் சங்கீதா ஐயர். ஆசிய யானைகளைப் பாதுகாக்கும் நோக்கில் 2016இல் உருவாக்கப்பட்ட ‘வாய்சஸ் ஃபார் ஏசியன் எலிபன்ட்ஸ்’ (Voices for Asian Elephants) என்ற அமைப்பின் நிறுவனரான சங்கீதா, பல வருடங்களாக யானைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். “ஆண் யானைகளுக்கு இனப்பெருக்க காலத்தில் மஸ்த் எனும் மதனநீர் வெளியேறும். அப்போது யானைகள் மிகவும் மூர்க்கமாக இருக்கும். தங்களது பாதையில் எது வந்தாலும், யோசிக்காமல் அழித்துவிட்டு முன்னேறும். மிகவும் எளிதாக மதம் பிடிக்கும். அப்படி மதனநீர் வெளியேறும் பருவத்தில் இருந்த ஒரு ஆண் காட்டு யானையை, ஆய்வின் போது நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டது” என்கிறார் சங்கீதா. பட மூலாதாரம்,@SANGITA4ELES/X படக்குறிப்பு,சங்கீதா பல வருடங்களாக யானைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார் அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு, வனவிலங்குகள் குறித்த தனது ஆவணப்படத்திற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்றிருந்தார் சங்கீதா. “எங்கள் குழு சென்ற வாகனத்திற்கு சில நூறு மீட்டர்கள் தொலைவில் அது நின்றிருந்தது. அதன் காதுகளுக்கு பக்கத்தில் மதனநீர் வழிந்துக் கொண்டிருந்தது. மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை எங்களை நோக்கி முன்னேறியது. நாங்கள் வாகனத்தின் இன்ஜினை அணைத்துவிட்டு காத்திருந்தோம்” “பாதையில் இருந்த மூங்கில் மரங்களை உடைத்து சாப்பிட்டவாறே, அது எங்களை நோக்கி வந்தது. நாங்கள் பதற்றப்படவில்லை, கத்தவில்லை, அதை பயமுறுத்தவில்லை.” என்று அன்று நடந்ததை விவரித்தார் சங்கீதா. அவ்வப்போது யானை தங்களைத் தாக்க வருவது போல பாவனைகள் செய்ததையும், சுமார் 18 நிமிடங்கள் வரை பாதையை மறித்தவாறு நின்றதையும் அவர் நினைவு கூர்ந்தார். “பின்னர் அந்த யானை அமைதியாக திரும்பிச் சென்றது. எப்படி மதனநீர் வழியும் ஒரு யானை தாக்காமல், திரும்பிச் சென்றது என அந்தக் காணொளியை பார்த்த விலங்கு ஆய்வாளர்கள் பலர் ஆச்சரியப்பட்டனர். அதனால்தான் சொல்கிறேன், மனிதர்களுடனான அனுபவங்கள்தான் அவற்றின் நடவடிக்கையைத் தீர்மானிக்கின்றன.” என்கிறார் சங்கீதா. இந்திய காகங்களை கொடிய பறவையாக கருதும் கென்யா - 10 லட்சம் காகங்களை கொல்லும் முடிவு ஏன்?7 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருந்தாலும் அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவைதான் யானைகள் தொடர்பு கொள்ளும் முறை மைக்கேல் பார்டோ தலைமையிலான குழுவினர், கென்யாவின் தேசிய பூங்காக்கள், வன காப்பகங்கள் மற்றும் சவானாக் காடுகளில், 1986 முதல் 2022 காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட யானைகளின் 625 பிளிறல் ஒலிகளை ஆய்வு செய்தனர். செயற்கை நுண்ணறிவின் உதவியோடு இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. மனிதர்களைப் போல யானைகளும் குறிப்பிட்ட யானையைப் பெயர் சொல்லி அழைத்து, அதற்கு செய்தியைக் கூறுகின்றன என பகுப்பாய்வு முடிவுகள் உணர்த்தின. இதற்கு முன்பாக இக்குழு செய்த ஆய்வில், ‘டால்பின்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள ஒரு குறிப்பிட்ட டால்பினின் விசில் ஒலியைப் பாசங்கு செய்கின்றன, கிளிகள் ஒரு குறிப்பிட்ட கிளியின் குரலைக் மிமிக்ரி செய்து அழைக்கின்றன’ போன்ற ஆச்சரியமான முடிவுகள் கிடைத்தன. ஆனால், இந்த யானைகள் தொடர்பான ஆய்வில் அவை பாசாங்கோ, மிமிக்ரியோ செய்யாமல், தனித்துவமான ஒரு பிளிறலை வெளிப்படுத்தி அழைக்கின்றன எனக் கண்டறியப்பட்டது. யானைகள் ஒவ்வொரு யானைக்கும் குறிப்பிட்ட ஒலிகளைப் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, தமக்காக எழுப்பப்படும் ஒலிகளை அடையாளம் கண்டு எதிர்வினையாற்றுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இதை உறுதிப்படுத்த, பார்டோவும் அவரது குழுவினரும், பதிவு செய்யப்பட்ட பிளிறல்களை, 17 யானைகள் முன்பு ஒலிக்கச் செய்தனர். அப்போது யானைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும் கண்காணித்தனர். தமது 'பெயர்' ஒலிக்கும்போது அந்த யானை சத்தம்வரும் திசையை நோக்கித் உற்சாகமாக ஓடிச் சென்றுள்ளது. அந்தக் குறிப்பிட்ட யானை மட்டும் அந்தப் பிளிறல் ஒலியை உன்னிப்பாகக் கவனித்தது, ஆனால் பிற யானைகள் அது தனக்கானது அல்ல என உணர்ந்து புறக்கணித்து விட்டன என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ஆசிய யானைகளுக்கும் இந்த ஆய்வு பொருந்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES “பிளிறல்கள், எக்காளம் போன்ற மனிதர்கள் கேட்கக்கூடிய ஒலிகள் தவிர்த்து நம்மால் கேட்கமுடியாத இன்ஃப்ராசோனிக் ஒலிகள் மூலமாகவும் யானைகள் தொடர்புகொள்ளும். எனவே இந்த ஆய்வு முடிவுகள் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை” என்கிறார் வனவிலங்கு ஆய்வாளர், டாக்டர் லக்ஷ்மிநாராயணன். மத்திய அரசின் வனஉயிர் நிறுவனத்தில் (Wildlife Institute of India) பணிபுரிந்து வரும் லக்ஷ்மிநாராயணன், “யானைகள் பொதுவாக தன் குழுவில் இருக்கும் பிற யானைகளைப் பார்த்துதான் அனைத்தையும் கற்றுக்கொள்ளும். ஒலி மூலம் மட்டுமல்லாது, சிறுநீர், மதநீர், சாணம் மூலமாகவும் அவை தகவல்கள் பரிமாறிக் கொள்ளும்” என்று கூறினார். ஆப்பிரிக்க யானைகள் குறித்தான மைக்கேல் பார்டோ தலைமையிலான ஆய்வு, பெரும்பாலான ஆசிய யானைகளுக்கும் பொருந்தும் என்று கூறியவர், இந்தியாவில் ஆசிய யானைகளின் தொடர்பாடல் குறித்து ஆய்வுகள் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்றும் தெரிவித்தார். “ஒரு இடத்தில் மனிதர்கள் இருந்தால், முன்னால் செல்லும் யானை அதைக் குறித்து தகவல் தெரிவித்துவிடும். யானைகள் முடிந்தவரை மனிதர்களைத் தவிர்க்கவே முயற்சி செய்யும்” என்று கூறுகிறார் லக்ஷ்மிநாராயணன். உயரத்தை அதிகரிக்க கால் நீட்டிப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் கதை11 ஆகஸ்ட் 2024 தாய் மட்டுமல்ல, தந்தை மது குடித்தாலும் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் - எச்சரிக்கும் புதிய ஆய்வு11 ஆகஸ்ட் 2024 யானைகளின் சமூக கட்டமைப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2010ஆம் ஆண்டில் மத்திய அரசு, யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்தது “யானை ஒரு நாளைக்கு 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். அப்படியிருக்க ஒரு நாளில் இவ்வளவு உணவையும், நீரையும் ஒரே இடத்தில் பெற முடியாது, அவை 40 முதல் 50 கி.மீ வரை பயணிக்கும். ஒரு யானைக் கூட்டத்தை பெண் யானைதான் வழிநடத்தும்” என்கிறார் பி.ராமகிருஷ்ணன். ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 12 ஆண்டுகளாக, காட்டுயிர் உயிரியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் பி.ராமகிருஷ்ணன், 23 ஆண்டுகளாக யானைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். யானைகளின் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். “அப்படி வழிநடத்தும் ஒரு பெண் யானைக்கு அந்தப் பகுதியில், தனது கூட்டம் தவிர்த்து வேறு எத்தனை யானைகள் உள்ளன என்பது துல்லியமாகத் தெரியும். புதிதாக ஒரு யானை அந்தப் பகுதிக்குள் நுழைந்தாலும் அது கண்டறிந்துவிடும். எனவே ‘பெயர் வைத்து அழைப்பது’ என்பதைக் கடந்து, அதை விட பல வித்தியாசமான தகவல் தொடர்பு முறைகளை அவை பயன்படுத்துகின்றன” என்று கூறுகிறார் ராமகிருஷ்ணன். தமிழ்நாடு வனத்துறை அறிக்கையின் படி, 2023இல் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் 20 வனக் கோட்டங்களில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை மற்றும் மசினகுடி வனக் கோட்டங்களில் 790 யானைகள் (26.7%), சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஹாசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக் கோட்டங்களில் 668 யானைகள் (22.6%), ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக் கோட்டங்களில் 337 யானைகள் (11.4%), தமிழ்நாட்டின் மீதமுள்ள வனக் கோட்டங்களில் 1,166 (39.3%) யானைகள் உள்ளன. படக்குறிப்பு, பி.ராமகிருஷ்ணன் 23 ஆண்டுகளாக யானைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். தொடர்ந்து பேசிய பி.ராமகிருஷ்ணன், “ஒரு சிறு குழுவில், தாய் யானை, அதன் மூத்த குட்டிகள், சிறு குட்டிகள் என பயணிக்கும். ஆண் யானைகள் சற்று தனிமையை விரும்புவை. ஆனால் பயணிக்கும்போது மீண்டும் குழுவுடன் சேர்ந்துவிடும். 3, 4 சிறு குழுக்கள் சேர்ந்தும் பயணிக்கும்” “ஒரு யானை கர்ப்பமாக அதை பிற யானைகள் சூழ்ந்து, பாதுகாப்பு அரண் அமைத்துச் செல்லும். ஒருவேளை ஏதேனும் ஒரு யானை பிரிந்துவிட்டால், தலைவி பிரத்யேக ஒலி எழுப்புவதை நாங்கள் பலமுறை கவனித்தது உண்டு” என்று கூறினார். யானைகள் தொடர்பான மேலும் பல்வேறு ஆய்வுகள் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், “2010ஆம் ஆண்டில் மத்திய அரசு, யானையை 'தேசிய பாரம்பரிய விலங்காக' அறிவித்த பிறகுதான் யானைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எனவேதான் கடந்த சில வருடங்களாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யானைகளைப் பாதுகாப்பதும் இயற்கையைப் பாதுகாப்பதும் வேறில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது” என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/c33nd2gjlgzo
  21. திருக்கோணேஸ்வரத்தில் திருட்டு போன தாலி : ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்பந்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஏற்பாடு செய்த உத்தியோக பூர்வமற்ற கூட்டத்தில் ஆளுநருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் (11) செந்தில் தொண்டமானால் யாப்புக்கு முரணான திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது. அங்கு கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ராஜ கோபுரம் கட்டுவதற்கான ஏற்பாடு தன்னால் செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ளார். பெறுமதியான தாலி இதையடுத்து, சோழர் காலத்து பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான தாலி ஒன்று களவு போய் உள்ளது என தெருவித்ததோடு தொடர்ந்து கூட்டத்தை முடித்து பொது மக்களுக்கு கேள்வி கேக்க வாய்ப்பு வழங்காமல் செல்ல முயன்றுள்ளார். இந்தநிலையில், கூட்டத்துக்கு வருகை தந்த திருகோணமலை (Trincomalee) சேர்ந்த ஆயுள் கால உறுபினர்கள் தமது கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த காரணத்தால் பின்வரும் கேள்விகள் மற்றும் விளக்கங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சோழர் காலத்து நகை தொடர்ந்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, “2009 ஆம் ஆண்டு நீதிமன்றதால் நிர்வாக சபையிடம் கோவிலை ஒப்படைக்கும் போது இப்படியான சோழர் காலத்து நகை என்ற ஒன்று இருக்கவில்லை, கடந்த சிவராத்திரி நிகழ்வில் ஆலயத்துக்கு சொந்தமான அனைத்து அசையும் அசையா சொத்து விபரங்களும் பெரிய திரையில் மக்கள் பார்வைக்கு காண்பிக்கபட்டது அதில் எங்குமே சோழர் காலத்து நகை என்ற ஒன்று எங்குமே இருக்கவில்லை அவ்வாறு இருக்க இப்படி சோழர் காலத்து நகை திருட்டு என்று செய்தி வெளியிட பின்னணி என்ன ? திருகோணமலையில் தீர்க்கபட வேண்டிய கன்னியா மற்றும் கோணேசர் ஆலய சட்டவிரோத கடைகள் என்று எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது அதை பார்க்காமல் இந்த மூன்று பவுண் தாலி விடயத்தை தூக்கி பிடித்த யாப்புக்கு முரணான கூட்டத்தின் நோக்கம் என்ன ? குடியியல் நீதிமன்றில் ஆலயம் தொடர்பான ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது எழுத்து மூலம் எந்த அறிவித்தலும் இல்லாமல் இப்படி ஒரு சட்டத்துக்கு முரணான அவசர கூட்டம் கூட்ட வேண்டிய தேவை என்ன ?” என மக்கள் கேள்வியெழுப்ப பதில் கூற முடியாத செந்தில் தொண்டமான் வெளியே சென்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/thirukoneswara-temple-theft-of-gold-thali-1723451360
  22. நேற்று ம‌க‌ளிர் கூடை ப‌ந்து பின‌லில் பிரான்ஸ் வெல்லும் நிலையில் இருந்த‌து ஆனால் அமெரிக்கா ம‌க‌ளிர் அணி க‌ட‌சியில் வென்று விட்டின‌ம்............................
  23. நாமலுடன்.. படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா. 😂
  24. @Kapithan, @alvayan, @பெருமாள், @Kandiah57, @புலவர், @satan நாமலுடன்.. படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா. 😂
  25. தூறல் நின்னு போச்சு திரைப்படத்தில் பாக்கியராஜ், நகைச்சுவை நடிகர் சிவராமன் கையில் எண்ணையை ஊத்தி முகத்தில் பூசிக் கொள்ளச் சொல்லும் காட்சி நினைவில் வந்தது. எனக்குப் பின்னாலே எத்தனை பேர் வந்தார்கள் என்பதை கணக்கிடுவது அவர்களுக்கு பெருமையாக இருந்திருக்கும். பார்க்காத மாதிரியே போவாளுகள்.எல்லாவற்றையும் உள்வாங்கி வைத்திருப்பார்கள். நீண்ட காலத்துக்குப் பின்னும் உங்களை நினைவில் வைத்திருப்பதால், ஒருவேளை உங்களை அவள் விரும்பியும் இருந்திருக்கலாம். எத்தனை மன்மத அம்புகள் வந்து மேனியில்விழுந்தாலும் நம்மாளுக்கு காதல் என்றால் நடுக்கம் வந்து விடும் என்பதால் என்னத்தைச் சொல்ல இருக்கு? மாடி வீடு கன்னி பொண்ணு மனசுக்குள்ள ரெண்டு கண்ணு ஏழை கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்னு தேடுதம்மா கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
  26. அப்போ, நீங்கள் எதற்காக ஏ லெவல் எடுத்துவிட்டு tuition கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்? வித்தியாசமான ஆளா இருக்கிறீங்கள் தலையாட்டிக்கு கடன் தர மறுத்திருக்கலாம் ஓகஸ்ட் 2 வலி நிறைந்த நாள்
  27. ஒலிம்பிக்ஸ் 2024 இறுதிப் பதக்க வரிசை: வரிசை தங்கங்களின் எண்ணிகைப்படியா அல்லது மொத்த எண்ணிக்கைப்படியா என்ற குழப்பத்தை உலக மக்களிடையே ஏற்படுத்தி, அந்தக் குழப்பத்தாலேயே ஒரு மூன்றாம் உலகப் போர் வருமோ என்ற ஊகத்திற்கு இடமில்லாமல் செய்த அமெரிக்க மற்றும் சீன அணிகளுக்கு மிக்க நன்றிகள்.........🤣. Rank Country Gold Silver Bronze Total 1 United States 40 44 42 126 2 China 40 27 24 91 3 Great Britain 14 22 29 65 4 France 16 26 22 64 5 Australia 18 19 16 53 6 Japan 20 12 13 45 7 Italy 12 13 15 40 8 Netherlands 15 7 12 34 9 Germany 12 13 8 33 10 Republic of Korea 13 9 10 32 11 Canada 9 7 11 27 12 New Zealand 10 7 3 20 13 Brazil 3 7 10 20 14 Hungary 6 7 6 19 15 Spain 5 4 9 18 16 Uzbekistan 8 2 3 13 17 Iran 3 6 3 12 18 Ukraine 3 5 4 12 19 Sweden 4 4 3 11 20 Kenya 4 2 5 11 21 Belgium 3 1 6 10 22 Poland 1 4 5 10 23 Romania 3 4 2 9 24 Denmark 2 2 5 9 25 Cuba 2 1 6 9 26 Norway 4 1 3 8 27 Switzerland 1 2 5 8 28 Greece 1 1 6 8 29 Turkey 0 3 5 8 30 Ireland 4 0 3 7 31 Georgia 3 3 1 7 32 Bulgaria 3 1 3 7 33 Azerbaijan 2 2 3 7 33 Croatia 2 2 3 7 35 Chinese Taipei 2 0 5 7 36 Israel 1 5 1 7 37 Kazakhstan 1 3 3 7 38 Jamaica 1 3 2 6 38 South Africa 1 3 2 6 38 Thailand 1 3 2 6 41 Kyrgyzstan 0 2 4 6 41 DPR Korea 0 2 4 6 43 India 0 1 5 6 44 Serbia 3 1 1 5 45 Czech Republic 3 0 2 5 46 Austria 2 0 3 5 47 Ecuador 1 2 2 5 48 Mexico 0 3 2 5 49 Bahrain 2 1 1 4 50 Hong Kong 2 0 2 4 50 Philippines 2 0 2 4 52 Ethiopia 1 3 0 4 53 Portugal 1 2 1 4 54 Armenia 0 3 1 4 54 Colombia 0 3 1 4 56 Lithuania 0 2 2 4 57 Moldova 0 1 3 4 58 Slovenia 2 1 0 3 59 Algeria 2 0 1 3 59 Indonesia 2 0 1 3 61 Argentina 1 1 1 3 61 Egypt 1 1 1 3 61 Tunisia 1 1 1 3 64 Dominican Republic 1 0 2 3 65 Tajikistan 0 0 3 3 66 Botswana 1 1 0 2 66 Chile 1 1 0 2 66 Saint Lucia 1 1 0 2 66 Uganda 1 1 0 2 70 Guatemala 1 0 1 2 70 Morocco 1 0 1 2 72 Kosovo 0 1 1 2 73 Albania 0 0 2 2 73 Grenada 0 0 2 2 73 Malaysia 0 0 2 2 73 Puerto Rico 0 0 2 2 77 Dominica 1 0 0 1 77 Pakistan 1 0 0 1 79 Cyprus 0 1 0 1 79 Fiji 0 1 0 1 79 Jordan 0 1 0 1 79 Mongolia 0 1 0 1 79 Panama 0 1 0 1 84 Cape Verde 0 0 1 1 84 Cote d'Ivoire 0 0 1 1 84 Peru 0 0 1 1 84 Qatar 0 0 1 1 84 Singapore 0 0 1 1 84 Slovakia 0 0 1 1
  28. விளங்க நினைப்பவன் சொல்வதும் சரிதான் நைஸ் என்பதும் பூந்து விளையாடுது அதே நேரம் கீழே நுணா சொன்னமாதிரி இந்த கைஸ் விளையாட்டை 16:22 லிருந்து இந்த வீடியோவில் பாருங்க எத்தன கைஸ் போடுறாரெண்டு, அப்படியே தளபாட கடையையும் பார்த்ததாச்சு ஆனால் அது தவறில்லை நாங்கள் நினைச்சமாதிரிதான் அவர்கள் வாழோணும் எண்டில்லை அதொண்டுமில்லை இங்கிலீஷில் உள்ள Another Level என்ற வார்த்தையை அப்படியே பொளந்து பாதி தமிழை சேர்த்து வேற லெவல் என்று உருவாக்கி விட்டார்கள், இந்தியாவில் See you later என்பதை அப்புறமா பார்க்கலாம் என்று தமிழில்மொழிமாற்றி சொல்வதுபோல்.
  29. கைஸ் - guys வேற லெவல். - இன்னுமொரு படி என எடுக்கலாம் என நினைக்கிறேன்.
  30. உங்களுக்கு விளங்கிறதில் குழப்பம் அவர் என்ன சொன்னார் என்று .
  31. எவ்ஜினி பிரிகோஜினுக்கு பயந்து ஒளிந்துகொண்ட ரஷ்ய படைகள் பதிலடிகொடுக்கும் என்பது நல்லதொரு வேடிக்கை. முன்னைய சோவியத் ஒன்றியத்தின் பலமிக்க இராணுவ படையணியாக உக்ரேன் தான் இருந்திருக்கின்றது என இப்போதுதான் புரிகின்றது. ரஷ்யாவின் மாய விம்பம் உடைந்து வெகுநாளாயிற்று!
  32. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரின் இந்தச் செயற்பாடு உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு மாற்றீடாக தங்களை பரீட்சித்துப்பார்க்கும் ஒரு செயற்பாடே இந்த சனாதிபதித் தேர்தலில் அரியநேந்திரன் தமிழர்களின் கணிசமான வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் தமிழ்த் தேசிய பொதுக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக அடுத்தடுத்த தேர்தலில் TNA க்கு பதிலீடாக போட்யியிடும் வாய்ப்புகள் அதிகம். அதற்கான ஒரு Test drive ஆகத்தான் இந்த சனாதிபதித் தேர்தலை இவர்களின் பின்னின்று இயக்குபவர்கள் பார்க்கிறார்கள். அதற்கான ஆளம் பார்க்கும் முயற்சிதான் இந்த சனாதிபதித் தேர்தல்.
  33. பாவம் தமிழ் மக்கள்! August 8, 2024 — கருணாகரன் — “தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைச் சற்றுக் கிண்டலாக நீங்கள் எழுதி வருகிறீர்கள். அதைப் படிக்கும்போது மனதுக்குக் கொஞ்சம் கஸ்ரமாக உள்ளது. அதுவும் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் எனும்போது இன்னும் வருத்தமாக இருக்கிறது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு தரப்பினரின் அரசியல் நிலைப்பாடல்லவா! அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு. அது தொடர்பாக உங்களுக்கு மறு பார்வைகள் இருந்தால், அதை அதற்குரிய ஜனநாயகப் பண்போடு முன்வைக்கலாம். விவாதிக்கலாம். அதுதானே நியாயம். அவ்வாறான விவாதத்துக்குரிய கருத்துகளையும் நியாயங்களையும் எதிர்பார்க்கிறேன். அதை விடுத்து, பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டையும் அதை முன்னெடுப்போரையும் கிண்டலடித்து எழுதுகிறீர்கள். அது கவலையளிக்கிறது. பொதுவாக நீங்கள் எதையும், எவரையும் மதிப்பிறக்கம் செய்யும் உள்நோக்கத்தோடு செயற்படுகின்றவரில்லை. ஆனால், இந்த விடயத்தில் உங்களுடைய எழுத்தும் தொனியும் மாறியிருப்பது ஏன்?… இதைப்பற்றிச் சொல்ல முடியுமா?” என்று வாட்ஸப்பில் ஒரு நண்பர் தகவல் அனுப்பிக் கேட்டிருந்தார். என்மீது அப்படியொரு (நல்ல) அபிப்பிராயம் அவரிடமிருப்பதையிட்டு அவருக்கு நன்றி சொன்னேன். கூடவே அவர் சுட்டிக்காட்ட விரும்பிய முறைமைக்காகவும். மிகச் சிறந்த முறையில் தன்னுடைய அபிப்பிராயத்தை உரியவாறு – பொறுப்போடும் நட்புக்குரிய பண்போடும் தெரிவித்திருந்தமைக்கு அவருக்கு மீண்டும் நன்றி. இந்தப் பண்பை நாம் முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் என்பதால் அவருடைய ஒப்புதலோடு பின்வரும் விடயங்களைப் பொது வெளியின் (அவருடைய பெயரை மட்டும் குறிப்பிடாமல்) கவனத்திற்காக எழுதுகிறேன். அரசியல் கொள்கைகளும் நிலைப்பாடுகளும் பலவகையானவை. ஜனநாயகச் சூழலில் இது இயல்பானதும் அங்கீகரிக்கப்பட வேண்டிதுமாகும். அதற்கப்பால் மனித வாழ்க்கையில், மானுட இருப்பில், விருப்பில் இப்படிப் பல்விருப்பங்களும் பல்நிலைச் சிந்தனைகளும் நிலைப்பாடுகளும் இருக்கும். அது இயல்பும் வழமையுமாகும். அதுதான் நியாமும் அழகும் கூட. இதை அங்கீகரிக்க வேண்டும் என்பதே நமது நியாயமும். ஆகவே தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை ஒரு தரப்பின் அரசியல் நிலைப்பாடு, உபாய முயற்சி என ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், “அதுதான் சரியானது. அற்புதமானது. அதைத்தான் தமிழ்ச்சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது தமிழ்ச்சமூகத்தை அதை நோக்கிக் குவிக்க வேண்டும். அதற்கு மாற்றான அபிப்பிராயத்தை – நிலைப்பாட்டைக் கொண்டோரெல்லாம் சூதானவர்கள், இனவிரோதிகள், தமிழர்களின் ஐக்கியத்துக்கும் விடுதலைக்கும் எதிரானோர், விடுதலை மறுப்பாளர்கள் எனச் சித்திரிக்க முற்படுவதுதான் பிரச்சினைக்குரியதாகிறது. அதாவது இனத்துரோகிகள் என்றவாறாக. இது வழமையைப் போல கறுப்பு வெள்ளை அரசியற் சிந்தனைக்குள்ளிருந்து சிந்திக்கும் – செயற்படும் போக்காகும். ஜனநாயகத்தைப்பற்றிப் போதிப்போரும் நவீன அரசியலைப்பற்றிப் பேசுவோரும் அதற்கு மாறாக இப்படி கறுப்பு – வெள்ளை என குறுகிக் கிடப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் சில முற்போக்காளர்களும் பன்மைத்துவத்தைப் பற்றிப் பேசுவோரும் அடக்கம். அவர்களுடைய தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறது. கறுப்பு – வெள்ளைச் சிந்தனையினால் பாதிக்கப்பட்ட – அதற்குப் பெரிய விலைகளைக் கொடுத்த E.P.R.L.F, PLOT, T.E.L.O போன்றவையே இந்தச்சிந்தனைக்கு அடிமைப்பட்டிருப்பதுதான் இங்கே துயரத்துக்குரியது என்பதால்தான் சில முறைகளில் சில விடயங்களைச் சொல்ல முற்பட்டேன். அது சூழலின் தன்மை, அதன் அவசியம் கருதியது. ஒரு கேலிச்சித்திரத்துக்கு (Caricature) அல்லது காட்டூனுக்கு (Cartoon) உள்ள பண்பையும் வலிமையையும் ஒத்தது. இன்னும் சொல்லப்போனால் அங்கத எழுத்து அல்லது அதொரு satiriar column எனலாம். அதை அந்த அடிப்படையில்தான் புரிந்து கொள்வது முக்கியம். அதாவது காட்டூனை ரசிப்பது, ஏற்பது என்ற மாதிரி. எனவே இதில் ஜனநாயக மாண்பை மீறாமல், அந்தப் பண்பைக் கடைப்பிடிக்க முயன்றுள்ளேன். என்னுடய பார்வைகளையும் நியாயங்கள், நிலைப்பாட்டையும் தெளிவாகக் கூறி வந்திருக்கிறேன். இனி – 1. தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் நியாயங்கள் மிகப் பலவீனமானவை. 40 ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் பழைய, தோற்றுப்போன கருத்துகள். புதிதாகச் சிந்திக்க முடியாத, புதிய அரசியற் சூழலை விளங்கிக் கொள்ள முடியாத, புதிதாக அரசியலை முன்னெடுக்க இயலாத, தோல்வியிலிருந்து விடுபட முடியாததன் வெளிப்பாடு. அந்த இயலாமையை மறைப்பதற்குப் பூசப்படும் சலிப்பான வார்த்தைகள். இதைப்பற்றி விரிவாக – விளக்கமாக எழுதியுள்ளேன். பிறரும் எழுதியுள்ளனர். 2. அதற்கான முயற்சிகள். தமிழ்ப்பொதுவேட்பாளர் (இப்படி எழுதும்போதே ஏனோ சிரிப்பும் சலிப்பும்தான் வருகிறது – மன்னித்துக் கொள்ளுங்கள்) ஒருவரை நிறுத்துவதற்கு அரசியல் ரீதியாகவும் ஆளுமை ரீதியாகவும் (ஆள் ஒருவரைத் தேடிப் பிடிப்பதற்கே படுகின்ற அல்லற்பாடுகள்) எடுக்கப்படும் முயற்சிகள் கூட சிறுபிள்ளைத் தனமானவை. இத்தனை ஆண்டுகால போராட்ட அரசியல், அதற்கான உழைப்பு, தியாகம், கற்றுக் கொண்ட படிப்பினைகள் போன்றவற்றிலிருந்து நாம் பெற்றதென்ன? எத்தனை அரசியல் ஆளுமைகளையும் தளபதிகளையும் செயற்பாட்டாளர்களையும் கண்டிருந்தோம். இன்று? மெய்யானோரும் சரியாகச் சிந்திப்போரும் உண்மையாகவே மாற்றத்துக்காக உழைப்போரும் ஓரங்கட்டப்பட்டு, நடிகர்கள் அரங்கேற்றப்பட்டுள்ளனர். அப்படியென்றால், இப்படித்தான் கிலிசை கேடாக நிலைமை இருக்கும். இப்படி நாறிப்போயிருக்கும் பலவீனத்தை மக்களுக்கும் (மேலும் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளே நடக்கின்றன) அரசுக்கும் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் காட்ட வேண்டுமா? நாம் பலவீனப்பட்ட நிலையில் இருக்கலாம். அதற்காக நம்முடைய வறுமையை வெளியே சொல்லித்தான் ஆக வேண்டுமா? உங்கள் வீட்டிலிருக்கும் அல்லது உங்கள் குடும்பத்துக்குள்ளிருக்கும் பலவீனமான விடயங்களைப் பகிரங்கப்படுத்துவதை விரும்புவீர்களா? அதையெல்லாம் குடும்பக் கௌரவம், சுயமரியாதை எனக் கவனமாக மறைத்துக் கொள்வீர்கள். சமூகப் பலவீனத்தைத் தக்கமின்றிப் பறை சாற்றுவீர்கள். உண்மையில் இந்தக் குறைபாட்டை உணர்ந்து நாம் அதிலிருந்து மீண்டெழ வேண்டுமே தவிர, அதை எதிர்த்தரப்புப் பயன்படுத்துமளவுக்கு வாய்ப்பளிக்கவோ அனுமதிக்கவோ கூடாதல்லவா! செயற்பாட்டு அனுபவமில்லாதவர்களின் வேலை அல்லது முயற்சிகள் இப்படித்தானிருக்கும். கள அனுபவமற்றவையாக. 3. தமிழ்ப்பொது வேட்பாளரரை நிறுத்த வேண்டும் என நிற்போர். இவர்கள் ஒரு முகப்பட்ட சிந்தனைக் குழாத்தினரல்ல. ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டோரும் அல்ல. தவிர்க்க முடியாமல் நெல்லிக்காய்களை ஒன்றாகச் சேர்த்ததைப்போல இவர்களை ஓரணியில் சேர்த்தது யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடக நிறுவனமொன்றின் இயக்குநர். இன்னொருவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன். இதற்கு இணை நின்றவர்கள் பத்தியெழுத்தாளர்கள் இருவர். ஏனையோர் இதில் விரும்பியும் விரும்பாமலும் உள்ளடக்கப்பட்டவர்கள். ‘உள்ளடக்கப்பட்டவர்கள்’ என்று அழுத்தம் கொடுப்பதற்குக் காரணம், அவர்கள் தனிப்பட்ட உரையாடல்களில் தமது விருப்பம் வேறு. தவிர்க்க முடியாமல் நாம் இந்த நிலைப்பாட்டுக்கு சம்மதித்திருக்கிறோம் என்று தொடர்ந்து கூறுவதாகும். அப்படிக் கூறுவது அவர்களுக்கும் அவர்களுடைய அரசியலுக்கும் அழகல்ல. அது அரசியல் செயற்பாட்டுக்கு நல்லதுமல்ல. இருந்தும் அப்படித்தான் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு தரப்பினரோ இந்தப் பொது வேட்பாளருக்கு மக்களிடம் ஆதரவு கிட்டவில்லை என்றால்…? தம்முடைய அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் உண்டு. குறிப்பாக ரெலோ, புளொட் ஆகியவற்றுக்கு. ஏனைய சில்லறைத்தரப்புகளுக்கு எல்லாம் ஒன்றுதான். வென்றாலென்ன? தோற்றாலென்ன? ஏதோ நமக்கும் வடையும் தேநீரும் கிடைக்கிறது. அந்தளவே போதும் என்ற நிலைப்பாட்டோடிருக்கிறார்கள். ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு இந்தப்பிரச்சினை இல்லை. அது ஏற்கனவே மிகச் சிக்கலான நிலையில்தான் உள்ளது. அது முன்னிலை பெறுவதற்கான ஆயிரம் கதவுகளையும் தானாகவே அடைத்துச் சாத்திக் கொண்டு பிடிவாதமாக இருட்டறைக்குள் தியானம் செய்கிறது. ஆகவே அதற்கு வாழ்வும் சாவும் ஒன்றுதான். வென்றால் இன்னொரு சுற்று ஓடலாம். இல்லையென்றாலும் ஏதோ அவ்வப்போது அரங்கில் நாமும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ளலாம். அவ்வளவுதான். சிவில் குழுவினர் (Civil society representatives) என்று தம்மை அடையாளப்படுத்துவோர் ஏனைய தரப்புகளை மறைமுகமாக ஆயுததாரிகள் (Armed parties) அல்லது துணை ஆயுதக்குழுவினர் (paramilitaries) என்ற பழைய மனப்பதிவோடு அல்லது அத்தகைய ஒரு உள்ளுணர்வோடு – விலக்கத்தோடுதான் காரியங்களைச்செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குள் தாம் கலந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையை அவர்களிடம் அவதானிக்க முடிகிறது. இதனால் சற்று விலகி நின்று கொண்டே, “தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்துக்காக சேர்ந்து வேலை செய்கிறோம். கலந்து கொள்ளவும் கரைந்து போகவும் மாட்டோம்” என்று செயற்பாடுகளால் காட்டுகின்றனர். சிவில் தரப்பும் கட்சிகளும் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை கூட அந்த அடிப்படையிலானதுதான். (பாவம் விக்னேஸ்வரன்). ஆக இப்படியான சூழலில் எப்படி இவற்றைக் குறித்துப் பேசாமலிருக்க முடியும்? அந்தளவுக்குத் தமிழ்ச் சமூகம் மொண்ணையில்லைத்தானே! பொய்களையும் மாயைகளையும் களைய வேண்டியது, இனங்காட்ட வேண்டியது, அதை உணர்ந்தறிந்தவரின் கடமை. அதைச் செய்ய முயற்சிக்கிறேன். அவ்வளவுதான். பாவம் தமிழ் மக்கள். https://arangamnews.com/?p=11078
  34. காணுற... மின் கம்பங்கள் எல்லாம், காலைத் தூக்குகின்ற பிராணி மாதிரி, சுமந்திரன் ஐயா கடுமையாக உழைக்கின்றார் எல்லாமே நமக்காக.
  35. அங்கே ஏன் இந்தப் பார்வை அய்யய்யய்ய ...........! 😍
  36. ஆமாம் ஆமாம்.. ஆனையிறவை விட்டு ஓடினது.. மாங்குளத்தில் அடி விழ ஆரம்பிச்சதும் சீனாவில் போய் பதுங்கிக் கிடந்தவர் எல்லாம்.. ஊழலை அல்ல.. சொறீலங்காவில் உள்ள எலிகளைக் கூட ஒழிக்க முடியாது. சும்மா வெறுவாய் சப்பிட்டு சிங்கக் கொடி கூட்டாளி.. சம்பந்தன் பாதையில் போய் சேர வேண்டியான். புலிகளை.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை.. ஹிந்திய- அமெரிக்க - மேற்குலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் சூழ்ச்சிக்குள் கொண்டு வந்த கதிர்காமர் போன்றவர்கள் தான் அழித்தார்கள் என்றால் மிகையல்ல. இதில் சர்வதேச சதியே அதிக பங்களித்தது. கோத்தாவோ.. மகிந்தவோ.. சரத்தோ.. உரிமை கோருவதில் அர்த்தமில்லை.
  37. படக்குறிப்பு,நாய்களுக்கு ட்ரோன் மூலம் உணவு கொண்டு செல்லப்படும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், சுதாகர் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பை படம் பிடிக்க சேலத்தை சேர்ந்த ஒருவர் பறக்கவிட்ட டிரோன் கேமராவில், வெள்ளத்தின் நடுவே சிக்கி தவித்த கருப்பு நாய் ஒன்றின் படம் பதிவானது. இது பலரின் கவனத்தை மேட்டூரை நோக்கி திருப்பியுள்ளது. சேலம் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை, விலங்கு நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என ஒரு பெரிய பட்டாளமே மேட்டூர் அணையின் 16 ம் கண் மதகு பகுதியை நோக்கி முகாமிட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஜூன் 30ம் தேதி மாலை மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியது. இதையடுத்து வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சேலத்தை சேர்ந்த சாய் என்பவர் கடந்த 1ம் தேதி டிரோன் கேமரா மூலம் இதை படம் பிடித்தார். அப்போது 16 கண் மதகு பகுதி அருகே 50 மீட்டர் தொலைவில் உள்ள பாறைகளுக்கு நடுவே கருப்பு நாய் ஒன்று சிக்கி தவித்தது தெரிய வந்தது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டதால் நாயை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் டிரோன் மூலம் நாய்க்கு உணவளிக்கும் பணியை தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டனர். வெள்ளத்திற்கு நடுவே பரிதவிக்கும் நாய்கள் இந்தநிலையில் பாறைக்கு நடுவே சிக்கியிருந்த நாய் ஆற்றில் குதித்து நீந்தி அருகேயிருந்த மணல் திட்டிற்கு சென்றது. அங்கு இதேபோல் மேலும் பல நாய்கள் சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றிற்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதியில் சிக்கியுள்ள நாய்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும், தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் உத்தரவிடக் கோரி 'விலங்குகளின் சொர்க்கம்' என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரகாஷ் காந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆம் தேதி பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு, அவசர வழக்காக விசாரித்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும், வருவாய் துறையினர், டிரோன் மூலம் நாய்களுக்கு உணவளித்து, அவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நாய்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர். படக்குறிப்பு,மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கும் போது வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நாய்கள் அணைக்கு வரும் நீர்வரத்து தற்போது குறைந்துள்ளதால் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வெளியேற்றப்படும் அளவு குறைந்திருப்பதால் நாய்களை மீட்கும் பணியை துவங்க உள்ளதாக தீயணைப்பு துறையினர் நேற்று (ஆகஸ்ட் 5) கூறினர். ''16 கண் மதகு பாலம் அருகே 50 மீட்டர் தொலைவில் உள்ள மணல் திட்டில் நாய்கள் சிக்கியுள்ளன. அந்த திட்டு 20 முதல் 25 அடி நீள அகலமுடைய திட்டாகும். மணல் திட்டில் மரங்களும், பாறைகளும் உள்ளன. இதனால் நாய்கள் பாதுகாப்பாகவே உள்ளன.'' ''கடந்த 4 நாட்களாக அவற்றிற்கு உணவு அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்திருப்பதால் அவற்றை நீரில் இறங்கி மீட்கும் பணியை துவங்க இருக்கறோம். தீயணைப்பு துறை இணை இயக்குநர் கல்யாண்குமார் ஷெட்டி தலைமையில் மீட்பு பணிகள் நடைபெற உள்ளது'' என சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மகாலிங்க மூர்த்தி தெரிவித்தார். டிரோன் மூலம் உணவு நாய்களுக்கு உணவளிக்க டிரோன் இயக்கி வரும் தன்னார்வலரான ஜியோ டெக்னோவேலி இயக்குநர் சர்வேஸ்வரன் கூறும்போது, ''1 கிலோ வரை எடுத்து செல்லும் டிரோன்களை பயன்படுத்தவே எங்களுக்கு அனுமதி உள்ளது. 30 கிலோ டிரோன்களை பயன்படுத்த அனுமதி அளித்தால் அதன் மூலம் நாய்களை மீட்கலாம். இதற்கான அனுமதியை கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை அரசு தரப்பில் அனுமதி வழங்கவில்லை.'' ''நாய்கள் மீட்கப்படும் வரை, மூன்று வேளையும் டிரோன் மூலம் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள உள்ளோம். தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த பணிகளை செய்து வருகிறேன்'' என்றார். ''தண்ணீர் குறையும் போது நாய்கள் தானாக நீந்தி வெளியே வந்துவிடும். நாய்களுக்கு நன்றாக நீச்சல் தெரியும். தண்ணீர் அதிகமாக சென்றதால் பயந்து அங்கேயே நின்றுள்ளன. நாய்களுக்கு ஸ்டாமினா அதிகமாக உள்ளது. அவை பசியை தாங்க கூடியவை. நாய்களின் உயிருக்கு பாதிப்பில்லை. நாய்கள் கூட்டமாக இருப்பதால் அவை மனரீதியான நம்பிக்கையோடே இருக்கும்'' என்றார் வனத்துறையில் பணியாற்றிய முன்னாள் கால்நடை மருத்துவர் கே.அசோகன். மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவர் வெங்கடேசன் கூறும்போது, ''நாய்களுக்கு கடந்த 4 நாட்களாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. சிக்கன் பிரியாணி, ரொட்டி போன்ற உணவுகள் வழங்கப்பட்டது. நாய்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட உள்ளது. 40 தீயணைப்புதுறை அலுவலர்கள், வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார். கருப்பு நாய் எங்கே போனது? ''அணையில் நீர் திறக்கப்பட்டபோது கருப்பு நாய் ஒன்று சிக்கி கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். அதற்கு உணவு அளிப்பதற்காக கேமரா டிரோன் அனுப்பிய போதுதான் மேலும் 6 நாய்கள் அங்கே இருப்பது தெரிய வந்தது'' என்கிறார் ஹெவன் பார் அனிமல்ஸ் அமைப்பின் அறங்காவலர் செந்தமிழ் கிருஷ்ணன். படக்குறிப்பு,நாய்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் குழுவினர் ''இதற்கிடையே எங்கள் அமைப்பின் நிறுவனர் பிரகாஷ் காந்த் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரச வழக்கை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாய்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்'' என்கிறார் அவர். ''நீர் குறைந்தவுடன் நாய்கள் வந்துவிடும் என்று கூறுகின்றனர். அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஹெலிகாப்டர் மூலம் மீட்பதே சிறந்த வழியாக இருக்கும்'' என்றார். ''இன்று அல்லது நாளை 16 கண் மதகு பகுதியில் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட உள்ளது. நாய்கள் உள்ள பகுதியில் நீர் செல்ல வாய்ப்பில்லை. நீர் நிறுதப்படும் போது அவையே நடந்து வந்துவிட வாய்ப்புள்ளது. கருப்பு நிற நாய் ஒன்று தானாகவே நீந்தி வெளியே வந்துவிட்டது. மற்ற நாய்கள் மீட்கப்படும் வரை 3 வேளையும் உணவு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும்'' என்றார் சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சாமிநாதன். https://www.bbc.com/tamil/articles/cx2xxqw5x0xo
  38. ரணீலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.ஆனால் அவருக்கு ஆதவளிப்பவர்களில் பெரும்பாலானோர் கடும் இனவாதம் கொண்ட பெரமுனகட்சியின் அமைப்பாளர்கள்.அவர்களுக்கு நாமலை முன்னிறுத்துவது ஒவ்வாமை மட்டுமல்ல. ரணிலே தங்களை சிங்கள அரகலய போராட்டத்தில் இருந்து காப்பற்றக் கூடியவர் என்று நினைக்கிறார்கள. ரணிலோ 5 தடைவைகளுக்கு மேல் பிதமராக இருந்தவரும் தற்போதைய ஜனாதிபதி அதிகாரத்தை கையில் வைத்திருந்தும் தமிழர்களிற்கு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. அவருக்குத் தெரியும் மற்றைய வேட்பாளர்களை விட தான் ஒரு அமைதியான முகத்தைக்காட்டி நடிப்பதை தமிழர்கள் உண்மை என்று ஏற்றுக் கொண்டு தனக்கு வாக்களிப்பார்கள் என்று கணக்குப் போடுகிறார். பூனையின் அமைதியான சுபாவத்தைக்கண்டு விபரம் அறியாத எலிக்குஞ்சொன்று அதனோடு நட்புப் கொள்ள நினைத்த சோமசுந்தரப்புலவரின் கவிதை நாடகம்தான் நினவுக்கு வருகின்றது.
  39. இதுவரையில் சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்யதற்காக சர்வதேசம் எந்தவகையில் உதவிசெய்திருக்கிறது? அவ்வாறு நடந்தாலும் தமிழர் கள் மேலதிகமாமாக என்ன நட்டம் வரப் போகிறது/ பரீட்சித்துப்பார்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது?சிறிலங்காவில் தமிழர்களின் வாக்குகள் இல்லாமல் தனிச்சிங்களமக்களினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியும் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தமிழர்கள் ஒன்று திரண்டு ஒரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்தும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த வரலாறுகள் பல இருக்கின்றன.தமிழ்மக்கள் அதிக அளவு வாகக்களித்து தெரிவு செய்த சந்திரிகாவும் மைத்திரியும தமிழர்களுக்கு செய்த நன்மைகள் என்னவென்று பட்டியலிட முடியுமா?யார் வரக்கூடாது என்று மைத்திரிக்கு வாக்களித்தார்களோ அவரைப் பிரதமராக்கியவர் மைத்திரி.யார் வேண்டாமென்று சிங்களமக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சேக்களுடன் சேர்ந்து குறுக்கு வழியில் ஜனாதிபதியானவர் ரணில். தமிழர்களின் குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏறெடுத்தும் பார்க்காத சிங்க ளவேட்பாளர்கள்தான் களத்தில் நிற்கிறார்கள்.இவர்களில் யாரோ ஒருவர் ஜனாதிபதியாக வரப்போகிறார். இவர்களை நம்புவதை விட ஒரு பரிசோதனை செய்வதில் என்ன கேடுவரப் போகிறது.ஆனால் இந்தப் பொது வேட்பாளர் விடயத்தில் கரிசனையாகவுள்ள அரசியல்கட்சிகளும் பத்தி எழுத்தாளர்களும் இந்தியாவின் நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்களால் 13 மேலே போக முடியாது தவறானவர்களால் ஒரு சரியான விடயம் முன்வைக்கப்படும் பொழுது அதனைச் சாதகமாகப் பயன்படுத்தாமல் விடுவது தமிழர்களுக்குத்தான் இழப்பாகும்.
  40. மிக நீண்ட நாட்களாகவே கவாய் போக வேண்டும் எரிமலைகள் எப்படி எரிகின்றன என்று நேரடியாகவே பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது.இருந்தாலும் நியூயோர்க்கில் இருந்து போவதானால் 10-11 மணிநேரம் எடுக்கும்.அதே ஒரு பெரிய தண்டனை மாதிரி.கலிபோர்ணியாவில் இருந்து போவதானால் 5-5 1/2 மணிநேரமெடுக்கும். பிள்ளைகள் 3-4 தடவை போய் வந்துவிட்டார்கள்.பல தீவுகள் இருப்பதனால் ஒவ்வொரு தீவாக போய்வருவார்கள்.இந்த தடவை எரிமலை எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் பெரிய தீவுக்கு போகபோவதா சொன்னார்கள். விபரங்களைக் கேட்டு நாங்களும் போய்வர கவாய் விமான சேவையில் ரிக்கட் வாங்கினோம்.இது தான் முதல்தடவையாக கவாய் விமான நிறுவனத்தில் பிரயாணம் செய்தோம்.நானும் இங்குள்ள எனேக விமான சேவைகளைப் பயன்படுத்தியுள்ளேன்.எல்லாவற்றையும் விட கவாய் விமான நிறுவனமே எல்லாவற்றிலும் மேலாக தெரிந்தது. நாங்கள் ஓக்லண்ட் கலிபோர்ணியாவில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9;30 போல இறங்கினோம்.அங்கு போய் இறங்கியதும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. விமான நிலையத்துக்கு அருகிலேயே விமானம் போய் நின்றது.படிகளில் இறங்கி போனால் ஏதோ சந்தைக்குள் போவது போல இருந்தது.ஒரு இடம் தனும் பெரிய கட்டடங்களாக இல்லை.குளிரூட்டப்பட்ட அறைகளோ தங்குமிடமோ இல்லை.எல்லாமே திறந்த கட்டடங்கள்.ஒருமாதிரியாக வெளியே போனால் பொதிகள் எடுக்குமிடம் வீதிக் கரையில் இருக்கிறது.இதுவே கலிபோர்ணியா அல்லது நியூயோர்க்காக இருந்தால் பெரிய வாகனத்தைக் கொண்டுவந்து அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விடுவார்கள். விமான நிலையத்தில் பொதிகள் எடுக்கும் இடம். எரிமலை வெடித்து ஒரு மைல் நீளத்திற்கு குகையாக இருக்கிறது. இந்த குகையைப் பார்க்க போக மேலே சொல்லப்பட்டவைகளைப் பின் பற்ற வேண்டும்.கட்டாயம் என்றில்லை எமது பாதுகாப்புக்காக போட்டிருக்கிறார்கள்.கீழே இறங்கி 5 யார் உள்ளே போனால் எதுவுமே தெரியாது.கும்மிருட்டாக இருக்கும். அதே மாதிரி சாதாரண சப்பாத்துடன் போனால் அடிக்கடி சறுக்கி விழலாம்.வெளிச்சம் தெரியத்தக்க ஏதாவது கொண்டு போக வேண்டும்.குகைக்குள் சில இடங்கள் உயரமாகவும் சில இடங்கள் குனிந்து போக வேண்டியும் வரும்.எகன்கொரு தடவை மண்டையில் பலமான அடி.துணியிலானான தொப்பி போட்டிருந்ததால் தப்பினேன்.அப்பவும் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.என்னப்பா என்ன என்று எல்லோர் சத்தமும்.இப்போ வாயைத் திறந்தால் மண்டையில் வாங்கியதை விட பலமாக வாங்க வேண்டுமென்று பல்லைக் கடித்துக் கொண்டு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை.சும்மா மேலால தட்டினது என்று போய்விட்டேன். குகைக்குள் நெருப்பு தணலாக இருந்தபோதும் ஒரு கரையால் உள்ளே போய் சீமெந்து போட்ட இடத்தில் எப்படி அதில் பெயரெழுதுவார்களோ அதே மாதிரி நிறைய பேர் பெயர்களை எழுதுயுள்ளார்கள். குகைக்கு போகும் பாதை. தொடரும்.
  41. மாவைக்கு, என்ன விசரே..... காலம் முழுக்க சுமந்திரன் என்பவர் கட்சி கட்டுப்பாடுகளை மீறி தனித்தவில் வாசித்துக் கொண்டு இருக்கிறார். அவர் மீது, மாவை... என்ன நடவடிக்கை எடுத்தவர் எண்டு ஒருக்கால் சொல்லட்டும் பாப்பம். 😂
  42. கண்டவனை எல்லாம் தமிழன் என்று கொண்டால் அது கொண்டலடிக் கரடிதான்.🤔😩
  43. பல கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து என்ன பயனை தமிழர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு போடும் வாக்கு வீணான வாக்குகள்தானே . இந்த முறை தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் போடுவதால் புதியதாக நாம் எதனையும் இழந்து விடப்போவதில்லை. ஆனால் தமிழ்மக்கள் ஒரு வாக்கை மட்டும்.பொது வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும். 2வது 3வது தெரிவைச் செய்வது பொது வேட்பாளர் நிறுத்தியதற்கு அர்த்தமில்லாமல் செய்து விடும். இதுபற்றி இன்னும் இந்த பொதுவேட்பாளரை நிறுத்திய குழுவினர் இது தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பது நல்லதல்ல.
  44. அடிப்படை அனுபவம் ---------------------------------- பல வருடங்களின் முன் மகனுக்கு எட்டு வயதாக இருந்தது. அன்று ஒரு பிள்ளை எட்டு வயதில் எட்டு வித்தைகளையாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தச் சூழலில் ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. எட்டு வயதில் ஒரு அஷ்டாவதானி போல. இன்று சூழலின் நிர்ப்பந்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு பிள்ளைகளையும் சதாவதானிகளாக மாற்றாமல் இது ஓயாது போல. எனக்கு இதில் துளியளவும் நம்பிக்கையும் இல்லை, கூட்டத்துடன் சேர்ந்து ஓடுவதற்கான பொறுமையும் அன்று இருந்திருக்கவில்லை. ஊரில் நீச்சலை நானாகவே தான் சிறு வயதில் கற்றுக் கொண்டேன். கடலில் தான். சேர்ந்து போயிருக்கின்றோம், ஆனாலும் அவரவரே நீந்திப் பழகினோம். ஒரு நாள் இரண்டு பாகம் கடலில் கீழே மூழ்கிப் போய்க் கொண்டிருக்கும் போது தான் சுழியோடும் வித்தையை கற்றுக் கொண்டேன். அன்று அக்கணத்தில் நான் அதைக் கற்றுக் கொள்ளாதிருந்தால், இன்று இருந்திருக்கமாட்டேன், ஆனாலும், உலகத்தில் ஒரு இம்மியளவு மாற்றம் கூட இருந்திருக்காது. 99.9999999..... வீதமான மனிதர்களின் நிலை இது தான். நாங்கள் இருந்தால் என்ன, போனால் என்ன, பூமி எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாதையில் உருண்டு கொண்டே இருக்கும். பந்தடி என்றால் என்ன, பனையில் ஏறுவது என்றால் என்ன, எல்லாமே அன்று அங்கே நாங்களாகவே கற்றுக் கொண்டது தான். விரும்பியவர்கள் செய்தார்கள், விரும்பாதவர்கள் செய்யாமல் விட்டார்கள். ஆனாலும் இந்த அணுகுமுறை இன்று இங்கு வேலை செய்யவே செய்யாது, ஒழுங்கு மரியாதையாக பிள்ளைகளை சில இடங்களிற்காவது கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று பல முனைகளிலும் இருந்து அழுத்தங்கள் தொடர்ந்தன. முக்கியமாக ஐந்து வயதிலேயே எந்த ஆங்கிலச் சொல்லையும் எழுத்துக் கூட்டத் தெரிந்த ஒரு பிள்ளை மற்றும் அதன் பெற்றோர், கொடியைக் காட்டினால் அந்த நாட்டைச் சொல்லும் பிள்ளை மற்றும் அதன் பெற்றோர், அமெரிக்க ஜனாதிபதிகளை அதே வரிசைகளில் சொல்லும் பிள்ளை மற்றும் அதன் பெற்றோர் என்று பல வித்தைகளும் தெரிந்தோர் சுற்றிவர இருந்தனர். கால்பந்து எங்களுக்கு இரத்த ஓட்டம் மாதிரி. எப்படியும் மகனுக்கு அது அதுவாகவே வரும், வந்திருக்கும் என்று கால்பந்துப் பயிற்சிக்கு கூட்டிப் போனேன். அந்தப் பயிற்சியாளர் இங்கிலாந்தில் விளையாடினவர் என்றார்கள். அந்த வருடம் முழுவதும் பந்துடனோ அல்லது பந்தின் பின்னாலோ மகன் ஓடவில்லை. பயிற்சியாளரின் பயிற்சியின் படி அவன் எதிரணிகளின் ஒரு வீரரின் பின்னாலேயே ஓடிக் கொண்டிந்தான். மகன் நல்லா ஓடுகின்றார் என்றார் அந்தப் பயிற்சியாளர். அடுத்த வருடம், இந்தக் கொடுமைக்கு நானே பயிற்சியாளராகலாம் என்று அதற்கான வகுப்புகளை முடித்து பயிற்சியாளர் ஆகினேன். எல்லோரையும் விட உயரமாகவும், பருமனாகவும் ஒரு சிறுவனும் அணியில் இருந்தார். அந்தச் சிறுவன் தடபுட தடபுட என்று ஓடினாலேயே மற்ற எல்லா சிறுவர்களும், எதிரணி உட்பட, வழிவிட்டு ஒதுங்கினர். இடிபட்டால் சேதம் எங்கே என்று தெரிந்தே எல்லோரும் ஒதுங்கி வழிவிட்டனர். அந்தச் சிறுவன் மூன்றாம் நம்பர் பந்தை கால் பெருவிரலால் குத்தி ஒரு பக்கத்திலிருந்து மற்ற பக்கத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தான். இப்படி விளையாடுவதில்லை, பந்தை குத்தக் கூடாது, அடிக்க வேண்டும் என்று நான் அச் சிறுவனுடன் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், அவனின் பெற்றோர்களோ அல்லது மற்ற சிறுவர்களின் பெற்றோர்களோ அந்தச் சிறுவன் நல்லாகவே விளையாடுவதாக நினைத்தார்கள். சிலர் எனக்கு அதை மறைமுகமாக சொல்லக்கூட முயன்றார்கள். நான் எதையும் மாற்றத் தேவையில்லை, மாறாக அந்த பெருவிரலால் பந்தை குத்துகின்ற சிறுவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்றனர். இங்கு பலருக்கும் கால்பந்து விளையாட்டு தெரியாது. அதன் அடிப்படைகள் தெரியாது. மூன்றாம் நம்பர் பந்தை காலால் குத்தலாம், நாலாம் நம்பர் பந்தைக் கூட குத்தி விடலாம், ஆனால் ஐந்தாம் நம்பர் பந்தை குத்த முடியாது என்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும், ஒவ்வொரு தூரத்திற்கும் பந்தை அடிக்கும் முறைகளே வித்தியாசமானவை என்றேன். வெளிப்பக்கம், உட்பக்கம், நடுப்பக்கம் என்று பந்தை அடிக்கும் முறைகளைத் தெரிந்து கொண்டு, அவற்றை பழக வேண்டும் என்றேன். அது எல்லாம் அனுபவத்தில் வரும் என்றனர். அடிப்படை வேறு, அனுபவம் வேறு. அடிப்படைகளை தெரிந்து கொள்ளாமல் அனுபவத்தில் எதுவும் வராது என்றேன். வெறும் கால ஓட்டம் என்பது அனுபவமே கிடையாது. பதினாலு வயதின் பின் நான் அந்தச் சிறுவனை கால்பந்து விளையாட்டில் காணவேயில்லை. அந்தச் சிறுவனால் இனி இந்த விளையாட்டை விளையாடவும் முடியாது. காலப்போக்கில், அனுபவம் வரவர சரியாவார்கள் என்று நாங்கள் நினைக்கும் சில மனிதர்கள், அவர்களின் அடிப்படையே தவறாக இருப்பதால், பெரும் ஏமாற்றமாகவே இறுதியில் முடிவார்கள்.
  45. அண்மையில் இந்திய இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட ஒருவர் தனது கதையை கூறினார் ..அவருக்கு இப்ப வயது 60 க்கு மேல்... இந்திய இராணுவம் இவரை சுற்றிவளைப்பின் பொழுது கைது செய்து கோவிலுக்கு அழைத்து சென்று விட்டனர் .அணிந்திருந்த அரைகாற்சட்டையுடன் . தமிழ் தெரிந்த ,தமிழ்படங்கள் படங்கள் பார்க்கின்ற மேலதிகாரி போல் இருக்க வேணும் இவரை கண்டவுடன் டேய் இவனை பார்த்தால் கமலஹாசன் போல இருக்கிறது இவனை வீட்டை கொண்டு போய் விடுங்கோடா என கூறி அனுப்பியுள்ளார் இவர் போக பயத்தில் மறுப்பு தெரிவித்து அங்கயே நின்றாராம் .(போக சொல்லி பின்னால் சுட்டு விடுவார்கள் என்ற பயத்தில்) பின்பு அதிகாரி தனது ஜீப்பில் அழைத்து சென்று வீட்டில் இறக்கி விட்டாராம்... கருப்பர்களுக்கு மத்தியில் ஒருவன் சிவலையாகவும் அழகாகவும் இருந்தவுடன் அவன் போராளி அல்ல என இந்திய இராணுவ அதிகாரி முடிவெடுத்துள்ளார்... இந்தியன்2 படத்தில் வரும் கமல் போலத்தான் அவர் இப்ப இருக்கின்றார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.