Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3054
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31968
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/13/24 in Posts

  1. புதிதாக வந்தவர்கள் -------------------------------- அந்த வீட்டின் முன்னால் அவ்வளவு ஆட்கள் இதுவரை கூடினதே இல்லை. இருபது வருடங்களுக்கு மேலாக இதே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே நான் இருக்கின்றேன். அந்த வீடும், அங்கு இருப்பவர்களும் அதைவிட இன்னும் அதிக காலமாக அங்கே இருக்கின்றார்கள். அங்கு இருப்பவர்கள் இருவரும் வயதான கணவன் மனைவி. நாங்கள் இங்கு குடிவரும் போதே அவர்கள் வயதானவர்களாக இருந்தார்கள். சில வருடங்களில், வருடம் முழுவதும் கூட, அவர்களின் வீட்டிற்கு எவரும் வருவதில்லை. ஆட்கள் வந்த வருடங்களில் கூட ஓரிருவரே இதுவரை வந்து போயிருக்கின்றனர். ஆரம்பத்தில் அவர் என்னுடன் அவ்வளவாகப் பழகவில்லை. பிள்ளைகளும், நானும் ஒருநாள் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். பந்து அவர்களின் வீட்டு யன்னலில் பட்டால் என்ன நடக்கும் என்று கேட்டார். யன்னல் உடைந்து போய்விடும் என்று சொன்னேன். போலீஸைக் கூப்பிடப் போகின்றேன் என்று போனார். ஆனால் போலீஸ் வரவில்லை. அவரின் மனைவி அவரை அன்று தடுத்திருக்கக்கூடும். ஆனாலும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்தார். அவசரங்களுக்கு என்னை அழைப்பதை விட, அவருக்கு வேறு தெரிவுகளும் இருக்கவில்லை. வயதானால் பல அவசரங்கள் திடீர் திடீரென்று வந்து சேர்ந்தும் விடுகின்றன. இரண்டு பிள்ளைகள் என்றார். இந்த ஊரில் இருக்கும் மிகவும் நல்ல பாடசாலை ஒன்றில் படித்து, மிகவும் சிறந்த பல்கலைகளுக்கு போய், இப்பொழுது மிகப்பெரிய உத்தியோகங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் குடும்பங்களாக இருக்கின்றார்கள் என்றார். பல படங்களையும் காட்டினார். பிள்ளைகள் வாங்கிய விருதுகளையும் பார்க்கக் கொடுத்தார். என்னுடைய பிள்ளைகளையும் நான் அப்படியே ஆக்க வேண்டும் என்றும் சொன்னார். அவரின் வீட்டின் யன்னல் இன்னும் ஒரு தடவை கூட உடைக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க. அவரின் வீட்டின் முன் கூட்டம் கூடிய நாளுக்கு முதல் நாள் எங்களிடம் சொல்லி விட்டே போயிருந்தார். சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு இடத்தில் ஒரு வாரம் தங்கப் போகின்றோம் என்று சொல்லியிருந்தார். தினமும் மருத்துவமனைக்கு போய் வருவதில் இருக்கும் சிரமங்களைச் சொன்னார். தாங்கள் திரும்பி வரும் வரை அவர்களின் வீட்டைக் கவனித்துக் கொள்ள சொல்லியிருந்தார். கூட்டத்தில் போய் என்னவென்று விசாரித்தேன். அந்த வீட்டை விற்கப் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்களை நான் அதன் பின்னர் காணவேயில்லை. மகன்களில் ஒருவர் அந்த வீட்டை விற்றார் என்றார்கள். தாயையும், தந்தையையும் மருத்துவமனையில் இருந்து தன்னுடனேயே கூட்டிச் சென்று விட்டதாகவும் சொன்னார்கள். வீட்டில் இருந்த பொருட்களை சிலர் வந்து தங்களிடையே பிரித்து எடுத்துக் கொண்டு போனார்கள். மூன்று நாட்களில் அந்த வீடு விற்கப்பட்டது என்றனர். பலத்த போட்டிகளுக்கு இடையில் ஒரு இளம் தம்பதிகள் வாங்கியிருந்தனர். என் பிள்ளைகள் இருவரும் பல்கலை, பின்னர் வேலை என்று வெளியில் போய்விட்டனர். நாங்கள் இருவர் ஆகினோம். புதிதாக வந்த முன் வீட்டில் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கடகடவென்று வளர்ந்து, இரண்டு வயதிலேயே 'குட் மார்னிங்' என்று சொல்ல ஆரம்பித்தது அந்தக் குழந்தை. அப்படியே அந்த வருடமே ஒரு தம்பி பாப்பாவும் அங்கே புதிதாக வந்தார். ஒரு நாள் வீட்டின் முன் வேலை செய்து கொண்டிருந்த போது, அந்த இளம் தம்பதிகள் வந்தனர். இந்தப் பகுதியில் எந்த முன்பள்ளி நல்லது, என்னுடைய பிள்ளைகள் எந்த முன்பள்ளிக்கு போனார்கள் என்று விசாரித்தனர். அவ்வளவு தான் வாழ்க்கை.
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி முண்டோ பதவி, பிபிசி நியூஸ் 12 ஆகஸ்ட் 2024 1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் முன்னணி பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான அலெக்சாண்டர் சாக்ஸ் (Alexander Sachs), அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார். ஓவல் அலுவலகத்திற்கோ, அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கோ சாக்ஸ் புதியவர் அல்ல. ஆனால் அன்று அவர் பேச வந்த தலைப்பு புதிது. பொதுவாக பொருளாதாரத்தைப் பற்றி அதிபரிடம் பேசும் அவர், அன்றைய தினம், அவர் அதிபரிடம் பேச இன்னொரு விஷயமும் இருந்தது. அன்று, வரலாற்றின் போக்கை மாற்றியமைத்ததாக நம்பப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதத்தை அவர் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் விற்பனைக்கு வரும் இந்தக் கடிதத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை (4 முதல் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்று மதிப்பிடுகிறது கிறிஸ்டியின் ஏல நிறுவனம். இது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலனுக்கு சொந்தமான கலைப்பொருட்கள் ஏலத்தின் ஒரு பகுதியாகும். அவர் 2018-இல் 65 வயதில் இறந்தார். கணினி இயலில் அவரது ஆர்வத்தையும் செல்வாக்கையும் பிரதிபலிக்கும் பல்வேறு பொருட்கள் இருந்தாலும், இந்தக் கடிதம் அவற்றின் மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கையொப்பமிட்டவர் மிக முக்கியமானவராக இருந்த போதிலும், ரூஸ்வெல்ட் ஆரம்பத்தில் அதன்மீது அதிக கவனம் செலுத்தவில்லை. மற்ற விஷயங்கள் அவரது மனதை ஆக்கிரமித்திருந்தன. அந்தச் சந்திப்பிற்கு 15 நாட்களுக்கு முன்பு, ஜெர்மனி போலந்தின் மீது படையெடுத்திருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழிவு கொண்ட ஒரு போர் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்தது. லியோ சிலார்ட் என்ற அதிகம் அறியப்படாத ஹங்கேரிய புலம்பெயர்ந்த இயற்பியலாளர் எழுதிய கடிதத்தை ரூஸ்வெல்டுக்கு சாக்ஸ் படித்துக் காட்டினார். உண்மையைச் சொல்வதானால், அணுசக்தி, சங்கிலி விளைவுகள், மற்றும் நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றல் ஆகியவை அவர்கள் இருவருக்கும் மிகச் சிக்கலானதாக இருந்தன. அக்கடிதத்தில் இதுபோன்ற பத்திகள் இருந்தன: "கடந்த நான்கு மாதங்களில், யுரேனியத்தின் ஒரு பெரிய திரளில் இருந்து சங்கிலி விளைவை நிறுவுவது சாத்தியமாகியிருக்கிறது (...), இதன் மூலம் அதிக அளவு ஆற்றல் மற்றும் ரேடியம் போன்ற புதிய தனிமங்கள் பெரிய எண்ணிக்கையில் உருவாகும்." ஆனால் இதனை அதிபர் ரூஸ்வெல்ட் சட்டை செய்யவில்லை. அதிபர் தனது பழைய நண்பரை மறுநாள் காலை காபி சாப்பிட அழைத்தார். நிகழும் போது பெரிதாகத் தோன்றாத சில சம்பவங்கள் உலகையே மாற்றிவிடும். இதுவும் அதுபோன்ற ஒன்றுதான். சில மாதங்களுக்கு முன்… அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்த செய்திகள் சில மாதங்களாக சிலார்ட்டை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. 1939-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாஜி ஜெர்மனியில், அவரது சக ஊழியர்களாக இருந்த விஞ்ஞானிகள் அணுவைப் பிரிப்பதில் வெற்றியடைந்திருந்தனர். இது அணுப்பிளவு என்று அழைக்கப்படுகிறது. சிலார்ட் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அதை முன்னறிவித்திருந்தார். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அணு யுத்தம் இனியும் ஒரு கற்பனை மட்டுமே அல்ல. நாஜிக்கள் மற்ற எல்லோரையும் விட அணு ஆராய்ச்சியில் மேலும் முன்னேறலாம் என்று அவர் அஞ்சினார். ஆனால் யாரும் தன் பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதற்கு முன் சில ஆண்டுகளாக, அவர் விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் ஆகியோர் தனது பேச்சை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போராடி வந்தார். அணுப்பிளவு சாத்தியமா என்று அவர்கள் சந்தேகித்தனர். ஆனால் அவர் சொன்னது சரி என்று நிரூபிக்கப்பட்டது. இருப்பினும், அணுப்பிளவு பற்றிய செய்தி வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் அவரது நண்பரும் சக ஊழியருமான என்ரிகோ ஃபெர்மி இந்தப் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பற்றிய கவலைகளை நிராகரித்திருந்தார். குறைந்தது 25 ஆண்டுகளுக்கு, ஒருவேளை 50 ஆண்டுகளுக்கு வணிக அல்லது ராணுவ நோக்கங்களுக்காக யாரும் அணுப்பிளவுகளைப் பயன்படுத்த முடியாது, என்று அவர் கணித்திருந்தார். இது நம்ப முடியாத, அறிவியல் புனைகதை என்று கருதப்பட்டது. அணுப்பிளவில், ஓரு அணு பிளக்கப்படுகிறது. அது ஆற்றலை வெளியிடுகிறது, அவ்வளவுதான். இருப்பினும், ஒரு நிலையற்ற அணுவை பிளக்க முடிந்தால், அது அதிக எண்ணிக்கையிலான நியூட்ரான்களை வெளியிடும். அவை மற்ற நிலையற்ற அணுக்களைப் பிளவுபடுத்தி, மேலும் நியூட்ரான்களை வெளியிடும். இப்படி நடக்கும் ஒரு சங்கிலி எதிர்வினை ஒரு அசாதாரண அளவிலான ஆற்றலை வெளியிடும். இயற்பியலாளர் சிலார்ட்டுக்கு பதில்கள் தேவைப்பட்டன. அவற்றை அவர் 1939-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது சக ஊழியர் வால்டர் ஜின்னுடன் கண்டடைந்தார். அவர் புதிய மற்றும் சாத்தியமற்ற அறிவியல் சோதனைகளைச் செய்வதில் நிபுணர். சிலார்ட் சொன்னது சரிதான் என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள். "உலகம் வலிமையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது," என்று அவர் பின்னர் எழுதினார். அதிர்ஷ்டவசமாக, அணுப்பிளவு சங்கிலி எதிர்வினையை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு தடை இருந்தது. அணுப்பிளவு வெளியிடும் நியூட்ரான்கள் அதிவேகமாகப் பயணித்தன. மற்ற அணுக்களால் அவற்றை உறிஞ்சுவது கடினமான இருந்தது. ஆனால் அந்த விவரம் நாஜிகளை நிறுத்தப் போவதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நார்வேயில் கன நீர் தயாரிக்கப்பட்டு வந்த இடம். இதனை 1943-இல் நாஜிக்கள் தகர்த்தனர் ஜெர்மனி-பிரான்ஸ் இடையே நீருக்கான போட்டி நியூட்ரான்களை மெதுவாகச் செல்லவைப்பது எப்படி? இதற்கு தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் அது பல நியூட்ரான்களை உறிஞ்சி, அவற்றை ஒரு சங்கிலி எதிர்வினையில் பயனற்றதாக ஆக்கி விடுகிறது. இருப்பினும், H₂O இன் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுக்குப் பதிலாக ஒரு கூடுதல் நியூட்ரான் (D₂O) கொண்ட ஹைட்ரஜன் ஐசோடோப் பயன்படுத்தப்பட்டால், இந்தச் சிக்கல் தீர்ந்துவிடும். இது ‘கன நீர்’ (heavy water) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதனை உற்பத்தி செய்வது கடினம். எனவே நாஜி அரசாங்கம் நார்வேயில் உள்ள வேமோர்க் என்ற நீர்மின் நிலையத்திற்குத் தனது பிரதிநிதிகளை அனுப்பியது. அங்கு அவர்கள் தங்கள் தினசரி வேலையின் துணை விளைபொருளாக கனரக நீரை உற்பத்தி செய்தனர். ஜெர்மனியர்கள், அங்கு உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து கன நீரையும் மிக அதிக விலைகொடுத்து வாங்க முன்வந்தனர். அந்த ஆலையை மேலும் அதிகமாக கன நீர் உற்பத்தி செய்யவும் வலியுறுத்தினர். ஆனால் நார்வேஜியர்கள் இதனை நிராகரித்தனர். ஹிட்லரின் திட்டங்கள் என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றாலும், அவற்றின் ஒரு பகுதியாக இருப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை. பிரெஞ்சு ரகசிய போலீஸ் குழு ஒன்று அதன் பின்னர் அந்த ஆலையை அணுகி, அவர்களது ரசாயன துணைத் தயாரிப்புகளின் சாத்தியமான ராணுவ நோக்கம் குறித்து நார்வேஜியர்களை எச்சரித்தது. நார்வேஜியர்கள் கன நீரை இலவசமாக பிரெஞ்சு அதிகாரிகளுக்குத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் ஜெர்மனியர்கள் இதனைக் கண்டுபிடித்தனர். இரவோடு இரவாக 26 கனரக நீர் கேன்கள் கடத்தப்பட்டன. இது ஒரு பதற்றமான நடவடிக்கை. நாஜி போர் விமானங்கள் தயாராகக் காத்திருந்தன. அவர்கள் பிரெஞ்சு அதிகாரிகள் ஏறிய விமானத்தைக் குறிவைத்து அதனைத் தரையிறக்கக் கட்டாயப்படுத்தினர். ஆனால், நாஜிக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. விமானத்தில் கன நீர் கேன்கள் இல்லை. அவை ரயில் மூலம் பாரிஸுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன. அங்கு ஒரு விஞ்ஞானிகள் குழு அவசரமாகப் பரிசோதனையைத் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிபருக்கு அனுப்பப்பட்ட அசல் கடிதம் நியூயார்க்கில் உள்ள ஹைட் பார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஏலம் விடப்படும் இரண்டாவது பதிப்பு, கையொப்பமிடப்பட்ட சிறிய பதிப்பு ஐன்ஸ்டீனின் கையொப்பம் அணுஆயுதப் போட்டி உச்சத்தில் இருந்தது. ஒரு அணுகுண்டு இருக்குமோ என்று சிலார்ட் அஞ்சினாலும், அவர் நாஜி வெடிகுண்டு பற்றி அதிகம் பயந்தார். இதுவரை நினைத்துப் பார்க்க முடியாத இந்த ஆயுதம் உண்மையில் இருக்கிறது என அவர் நம்பினார். அதனால் நிகழப்போகும் அழிவுகள், அடக்குமுறைகளைக் கற்பனை செய்து பார்த்தார். அவர் ஒரு எளிய முடிவுக்கு வந்தார்: அமெரிக்கர்கள் அதை ஜெர்மனியர்களுக்கு முன்பாக உருவாக்க வேண்டும். அதைச் செய்ய அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் அவர்களுக்கு உச்ச அதிகாரத்தை வழங்க வேண்டியிருந்தது. அவருக்கு ஒரு கூட்டாளி மற்றும் சிந்தனை தேவை: உலகில் மிகவும் சக்தி வாய்ந்தவர் கூட புறக்கணிக்காத விஞ்ஞானி யார்? ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் தெரியும். பெர்லினில் உள்ள ஒரு மாநாட்டு அறையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை சிலார்ட் சந்தித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. மேலும் 15 வருடங்களாக அவர்கள் ஒவ்வொரு நாளின் முடிவிலும் ஒன்றாக வீட்டிற்கு நடந்து செல்கையில், இயற்பியல், தத்துவம், மற்றும் அரசியல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இப்போது இருவரும் அமெரிக்காவில் குடியேறி, சில கிலோமீட்டர்கள் இடைவெளியில் வசித்து வந்தனர். ஆனால் 1939-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி, உலகின் மிகவும் பிரபலமான விஞ்ஞானியான் ஐன்ஸ்டீன் அமெரிக்காவின் லாங் தீவில் ஒரு நண்பரின் அறையில் இருந்தார். அங்கு அவரைக் காண, சிலார்ட், தனது நண்பரும், சக ஊழியரும், சக ஹங்கேரியருமான யூஜின் விக்னருடன் சென்றார். ஐன்ஸ்டீனுக்கு அணுசக்திச் சங்கிலி எதிர்வினை பற்றி சிலார்ட் விளக்கி, அவரும் ஃபெர்மியும் சோதனைகளை நடத்தி வருவதாகக் கூறியபோது, ஐன்ஸ்டீன் அதிர்ச்சியடைந்தார். "இதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை," என்பதுதான் அவரது முதல் பதிலாக இருந்தது. இது சுவாரஸ்யமானது. ஐன்ஸ்டீனின் E=mc² சமன்பாடு செயல்பாட்டில் இருந்தது. ஆனால் நாஜி ஜெர்மனியில் இருந்து அகதியாக வந்து, உறுதியான சமாதானவாதியாகவும், அரசியல் உணர்வுள்ள நபராகவும் இருந்த ஐன்ஸ்டீன், ஜெர்மனியர்களின் கைகளில் அணு ஆயுதங்கள் இருந்தால் என்ன ஆகும் என்ற ஆபத்தை உடனடியாகப் புரிந்துகொண்டார். ஜெர்மனி போருக்குத் தயாராக இருந்த நிலையில், நிலைமை அவசரமானது என்று ஐன்ஸ்டீன் ஒப்புக்கொண்டார். பின்னாட்களில், அவர் தனது வாழ்க்கையின் பெரும் தவறு என்று அழைத்த ஒரு செயலைச் செய்தார். ரூஸ்வெல்ட்டுக்கு அனுப்ப சிலார்ட் தயாரித்திருந்த கடிதத்தில் கையெழுத்திட அவர் ஒப்புக்கொண்டார். ஐன்ஸ்டீனின் கடிதத்துடன் சிலார்ட் நியூயார்க் திரும்பினார். கடிதத்தை அதிபருக்கு அனுப்புவது மட்டுமே மிச்சம். இது நம்மை மீண்டும் அலெக்சாண்டர் சாக்ஸிடம் கொண்டு செல்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லாங் ஐலேண்டில் அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கான கடிதத்துடன் ஐன்ஸ்டீன் மற்றும் சிலார்ட் அணுகுண்டுடன் காலை உணவு ரூஸ்வெல்ட்டுடனான சாக்ஸின் முதல் சந்திப்பில் அவரிடம் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதம் இருந்தபோதிலும், அச்சந்திப்பு சரியாகச் செல்லவில்லை. "மிக விரைவில் யுரேனியம் ஒரு முக்கியமான புதிய எரிசக்தி ஆதாரமாக மாறக்கூடும்," என்று அக்கடிதம் துவங்கியது. "சூழ்நிலை குறித்து வெளிவந்துள்ள சில அம்சங்கள் விழிப்புடன் இருக்கக் கோருகின்றன. தேவைப்பட்டால், அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று அக்கடிதம் எச்சரித்தது. அணுசக்தி சங்கிலி எதிர்வினை "வெடிகுண்டுகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும். இது சாத்தியமானது. உறுதியாக இல்லாவிட்டாலும், இந்த வழியில் மிகவும் சக்திவாய்ந்த புதிய வகை குண்டுகளை ஆயுதமாக்க முடியும்," ஐன்ஸ்டீன் எச்சரித்திருந்தார். நாஜிக் கட்டுப்பாட்டில் இருந்த செக்கோஸ்லோவாகிய சுரங்கங்களில் இருந்து யுரேனியம் தொடர்பான தகவல்களை அவர் குறிப்பிடுகிறார் என்றாலும், அதிகமான அறிவியல் தகவல்களால் அதிபர் குழம்பிவிட்டார் என்பதை சாக்ஸ் அறிந்திருந்தார். இருப்பினும், அடுத்த நாள் காலை உணவுக்கான அழைப்பு, உலகின் மிக சக்திவாய்ந்த மனிதனுக்கு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி புரிய வைப்பதற்கான இரண்டாவது வாய்ப்பாகும். சாக்ஸ் ஒரு திட்டத்தை வகுத்தார். அதிபரை விஞ்ஞானத்தால் வெல்ல வழி இல்லை என்றால், அவர் அவருக்கு ஒரு கதை சொல்ல முடிவெடுத்தார். போர்களுக்கு மத்தியில், ஒரு இளம் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் பிரஞ்சு அரசர் நெப்போலியனுக்கு நீராவிக் கப்பல்களை உருவாக்கிக் கொடுக்க முன்வந்தார். அது காற்றைப் பொருட்படுத்தாமல் இங்கிலாந்தில் தரையிறங்க உதவும் என்று அவர் விளக்கினார். பாய்மரம் இல்லாத கப்பல்களைப் பற்றிய யோசனை நெப்போலியனுக்கு மிகவும் அபத்தமாகத் தோன்றியது. அவர் கண்டுபிடிப்பாளரான ராபர்ட் ஃபுல்டனை வேலையிலிருந்து நீக்கினார். ராபர்ட் ஃபுல்டன் நீராவிப் படகை மட்டுமல்ல, முதல் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் முதல் நீர்மூழ்கி ஏவுகணைகளை உருவாக்கினார். ரூஸ்வெல்ட் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். பின்னர், "அலெக்ஸ், நாஜிக்கள் நம்மைத் தாக்கித் தகர்க்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?" என்றார். "ஆம்," என்று சாக்ஸ் பதிலளித்தார். ஃபுல்டன் மற்றும் நெப்போலியன் கதை ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்திருக்கலாம். ஆனால் லியோ சிலார்ட் எழுதிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதம் அவரை அதை நம்ப வைத்தது. அக்கடிதத்தைப் பெற்ற அதே மாதம், ரூஸ்வெல்ட் யுரேனியம் ஆலோசனைக் குழுவை உருவாக்கினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ‘மன்ஹாட்டன் திட்டத்தை’ துவங்கியது. இது 1945-இல் ஜப்பானுக்கு எதிராக முதல் அணுகுண்டுகளைப் பயன்படுத்த வழிவகுத்தது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளுக்கும் ஐன்ஸ்டீனின் கடிதத்திற்கும் இடையே நேரடித் தொடர்பை வரைந்த வரலாற்றாசிரியர்கள் உள்ளனர். மற்றவர்கள் அத்தகைய நேரடி உறவு இருப்பதாக நம்பவில்லை. அக்கடிதம் இல்லாவிடினும் அமெரிக்கர்கள் எப்படியும் அணுகுண்டுகளைத் தயாரித்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள். ஐன்ஸ்டீன், தனது பங்கிற்கு, பல சந்தர்ப்பங்களில் அக்கடிதத்தில் கையெழுத்திட்டதற்காகப் பெரிதும் வருந்தினார். 1947-ஆம் ஆண்டு ‘நியூஸ் வீக்’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில் ‘அனைத்தையும் ஆரம்பித்து வைத்தவர்’ என்ற தலைப்பில் அவர் கூறியது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது: "ஜெர்மானியர்களால் அணுகுண்டு தயாரிக்க முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் ஒரு விரலைக் கூட உயர்த்தியிருக்க மாட்டேன்." https://www.bbc.com/tamil/articles/cr40r1e5zg5o
  3. சமஸ்டி முறையில் தீர்வு என்பது ரணிலால் முடியாத காரியம் என்பது தெரிந்தது. மீண்டும் ஏமாறாமல் அவர் கட்சியின் அனுமதியோடு எழுத்து மூலம் தான் ஜனாதிபதியானால் என்ன தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்று எழுதி வாங்கலாம். உதாரணமாக அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவித்தல் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற சாத்தியமாகக் கூடியவற்றைக் கேட்கலாம். எழுத்த்து மூலம் தந்தால் அதைப் பார்த்து சிங்களவர்கள் ரணிலை எதிர்க்கலாம். ஆகவே ரணில் எழுத்து மூலம் தர மறுத்தால் ஆதரவு கிடையாது என்று பேரம் பேசலாம் அல்லவா ?
  4. சிலரை மட்டும் இயற்கை தேர்ந்தெடுத்து தனது ரகசியங்களில் சிலதை மனிதர்களுக்கு சொல்ல படைக்கிறது.. அதில் ஜன்ஸ்டீனும் ஒருவர்..
  5. நீங்கள் சொல்வது போல் எழுத்து மூலம் கிடைத்தால் ஓரளவுக்கேனும் கெளரவத்துடன் விலகலாம். இன்றிருக்கும் நிலையில் இவ்வாறு எழுத்து மூலம் கொடுத்தால் "ஐயோ தமிழர்களுக்கு நாட்டை பிரித்து கொடுக்க போகிறார்" என்று இனவாதம் பேசி வாக்கு கேட்கும் நிலையில் எந்த முன்னணி வேட்பாளர்களும் இல்லை. இந்த தேர்தலில் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம், இனவாதம் பேசி வாக்கு கேட்கும் நிலையில் முன்னணி வேட்பாளர்கள் இல்லை என்பது தான். இதன் அர்த்தம் இவர்கள் இனவாதிகள் அல்ல என்பது அல்ல. இன்றைய வங்குரோத்து நிலையில் பொருளாதாரம், வாழ்க்கை செலவு என்பனதான் முக்கிய விடயங்களாக உள்ளன.
  6. 👆 முன்னர் ரஸ்ய தரப்புச் செய்திகளை வதந்திகளாகவும் பொய்யான செய்திகளாகவும் வியாக்கியானம் க்செய்தவர்கள், தற்போது ""ரஸ்யா செய்திகள் ஆதாரத்துடன் வெளியிடும்"" என்று கூறும் நிலைக்கு வந்திருப்பது நல்ல முன்னேற்றம் அல்லவா? 🤣 ரஸ்யப் பிராந்தியத்திற்குள் புகுந்தது ஒரு திசை திருப்பும் நடவடிக்கையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ரஸ்ய படைகளின் கவனத்தை இங்கே திருப்பிவிட்டு இன்னொரு முனையில் Offensive operation ஒன்றை ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை. உக்ரேனிய (மனித) வளத்தை அடியோடு அழிப்பதென்று முடிவெடுத்த பின்னர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அரசியல் என்பது அயோக்கியர்களின் கூடாரம் என்று சும்மாவா கூறினார்கள்? உக்ரேன் தனது இறுதி மூச்சை சுவாசிக்கத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை.
  7. உங்கள் "மனதில்" இருப்பதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு உங்களை அவமானம் செய்ய விரும்பவில்லை😎. ஆனால், இது போன்ற விடயங்களை பொது இடங்களில் எழுத முதல் லொஜிக்கை யோசியுங்கள்: ரஷ்ய நிலப்பரப்பினுள் நேட்டோவின் உறுப்பு நாடுகள் படைகளை அனுப்புவது எவ்வளவு சீரியசான விடயம்? நேட்டோ படைகளை ரஷ்ய நிலப்பரப்பினுள் அனுப்ப, அது ரஷ்யாவிற்கு தெரியாமல் இருக்கிறது. அல்லது தெரிந்தும் தொண்டையில் முள்ளு சிக்கி சொல்லாமல் தவிர்க்கிறது என்று நம்புகிறீர்களா? ஏற்கனவே "-நேட்டோ வருகிறது" என்று பூதம் காட்டித் தான் புரின் பதவியில் இருக்கிறார். இப்ப நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆட்கள் நுழைந்திருந்தால் ஆதாரத்தை எடுத்து உள்ளூர் செய்தியிலாவது கட்டி விட மாட்டார்களா ஐயா😂?
  8. அதிர்ஷ்டம் அரைவாசித் தூரம், எங்களை நோக்கி, வரும்; நாங்கள் தான் மிகுதி அரைவாசித் தூரத்தை ஓடிப் போய் அதைப் பிடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அமெரிக்காவிற்கு மீண்டும் மீண்டும் இதுவே நடந்து கொண்டிருக்கின்றது. அதிர்ஷ்டம் உள்ளவர்கள். முதலாவது தாக்குதலின் பின்னர் மிகவும் மனமுடைந்து போனார் என்று சொல்லப்படுகின்றது......... Paul Allen இன் சொத்தை நிர்வகிப்பவர்கள் இவற்றை ஏன் விற்க வேண்டும் என்று புரியவில்லை. அவர்களிடம் ஏற்கனவே இல்லாத பணமா..... இவரின் கூட்டாளிகளான Bill Gates அல்லது Steve Balmer இவற்றை வாங்கி, ஏதாவது அருங்காட்சியங்களுக்கு இவற்றைக் கொடுத்தால், பலருக்கும் பிரயோசனமாக இருக்கும்.
  9. இதில் உக்கிரைன் படைகள் அல்ல என்றும் . மேற்கு, UK இல் பயிற்சி கொடுத்த, பலவேறு (nato) நாடுகளை சேர்ந்தவர்கள் கொண்ட (உக்கிரைன் பெயரில் உள்ள) படை. (உக்கிரைன் இடம் ருசியாவுக்குள் உல் நுழைந்து இடத்தை தக்க வைக்கும் அளவு படைகள் இல்லை என்பததையும் முதலில் எனது மனதில் வந்தது) # உக்கிரைன் படைகளும் ஒரு பங்குக்கு அல்லது பெயருக்கு இருக்கலாம். நேட்டோ, கிட்டத்தட்ட உக்கிரைன் பெயரில், ருசியாவுக்குள் புகுந்து உள்ளது
  10. ஏறக்குறைய உங்கள் அனுபவம் போல் எனக்கும் கிடைத்திருக்கிறது. எனது அயல் வீட்டீல் தனியாக வசித்து வந்த பேராசிரியர் ஸ்ராபிள் இறந்து போக அடுத்த நாளே “வீடு என்ன விலைக்கு விற்கப் போகிறார்கள்?” என்ற கேள்வியுடன் பலர் வந்தார்கள். எனது மகனின் மனைவியின் தாயாருக்கு குடலில் கான்ஸர். இன்னும் சில மாதங்கள்தான் என காலத்தை குறித்துக் கொடுத்து விட்டார்கள். வீட்டில் வைத்து அவரைப் பராமரிப்பது என முடிவு செய்து கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்து அழைத்து வந்தால், ‘வீட்டை வாங்க நாங்கள் ரெடி’ என வாசலில் நாலைந்து பேர் நிற்கிறார்கள். ஆக பூமி விட்டுப் போகும் போது, நாம் இருந்த இடம் வேறு யாருக்கோ சொந்தமாகி விடுகிறது. உங்களுக்கென்ன, இப்பொழுதுதானே பிள்ளைகள் பலகலைக் கழகம் போகிறார்கள். இன்னும் காலம் இருக்கிறது. நான் எல்லாவற்றையும் முடித்து விட்டு ‘விசா’வுக்காக காத்திருக்கிறேன். அறுபதுகளுக்குப் பிறகு, பொழுது விடிகிறது தெரிகிறது. வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து விட்டுப் பார்ததால் மேற்கே சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. காலம் வேகமாகப் பறக்கிறது. இதற்குள் ரசோதரன் புளியைக் கரைத்து வயிற்றுக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறார்😄
  11. 'துயிலும் இல்லப்பாடல்' என பொதுவாக அழைக்கப்படும் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களுள் நின்று நிலைக்கும் ஒரு பாடலாகும். எப்பாடலை தவிர்த்துப் போனாலும் இப்பாடலை தவிர்க்கமுடியாத அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது. காரணம் ஆண்டுதோறும் நினைவுகொள்ளப்படும் மாவீரர் நாள் அப்பாடலை ஒலிக்கச் செய்கிறது அல்லது நினைக்க வைக்கிறது. ஈழப்போராட்ட காலத்தில் எழுந்த பாடல்களில் துயிலுமில்லப் பாடல் கொண்டுள்ள சில முக்கியத்துவ நோக்குகளை இவ்விடத்தே நோக்கலாம். துயிலும் இல்லப்பாடல் இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஒலிக்க விடப்பட்டது, ஒலிக்கவிடப்படுகிறது. ஒன்று போர்க்காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒருவரின் வித்துடலினை புதைகுழியில் இடுவதற்கு முன்பாக வித்துடற் பீடத்திலே இடம்பெறும் உறுதியுரையினைத் தொடர்ந்து, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் மூன்று ஒலித்த பின்னே இப்பாடல் ஒலிக்கும். அத்துடன் உடல் கிடைக்கப்பெறாத மாவீரர்களுக்கான நினைவுக்கல் திரைநீக்கத்தின் போதும் துயிலுமில்லத்தில் இப்பாடல் ஒலிக்கும். மலரிடுதல், மண் போடுதல் என்பனவற்றிற்கு வேறு பாடல்களை புலிகள் கொண்டிருந்தனர். இரண்டாவது மாவீரர் நாளின்போது சுடர்கள் ஏற்றப்பட்ட பின்னர் இப்பாடல் ஒலிக்கவிடப்படும். இவையிரண்டுமே பிரதானமானவை. ●துயிலும் இல்லப்பாடல் மாற்றத்துக்குள்ளாகி மீளவும் ஒலிப்பதிவாக்கப்பட்டது ஏன்? தமிழீழ விடுதலைப் புலிகளினால் அறிமுகம் செய்யப்பட்ட பாவனையிலுள்ள துயிலும் இல்லப் பாடலானது தொகையறா, பல்லவி, அனுபல்லவி, இரு சரணங்களைக் கொண்டது. 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை' எனத்தொடங்கும் தொகையறாவும், 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' எனத்தொடங்கும் பல்லவியும் உண்டு. 'எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்' என்பது அனுபல்லவி. முதலாவது சரணம் ஆரம்பத்தில் இப்படி அமைந்திருந்தது. நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகின்றோம். உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம். சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. (எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்) இப்படி அமையப்பெற்றதே சரணம். காரணம் 1989 முதலாக ஆரம்பத்தில் குறிப்பிட்டளவு ஆண்டுகள் மாவீரர் நாளானது நவம்பர் 27ஆம் திகதி நள்ளிரவு வேளையில்தான் அனுட்டிக்கப்பட்டது. பின்னைய நாட்களில் மாலைப்பொழுதில் இடம்பெற்ற அத்தனை அம்சங்களும் முன்பு நள்ளிரவில்தான் நடந்தேறின. நள்ளிரவிலேயே அன்றைய நாட்களில் மக்கள் துயிலும் இல்லத்தில் சேர்ந்தனர். மக்கள் விழித்திருந்தே சுடர் ஏற்றினர். புலிகளின் தலைமையின் உரையும் நள்ளிரவில்தான் ஒலிபரப்பானது. காரணம் முதல் மாவீரன் சங்கர் அவர்கள் 1982இல் நள்ளிரா வேளையில் மரணித்ததான ஒருபதிவே தென்பட்டமை ஆகும். ஆயினும் மிகச்சிறந்த ஆவணவாதியும், புலிகளின் கல்விக்கழகக் பொறுப்பாளருமான வெ.இளங்குமரன் என்கிற பேபி அவர்கள் 1982இன் ஓர் ஆவணத்தை கண்டெடுத்துவிட்டார். அது புலிகளின் தலைமையின் பதிவு. மாவீரர் சங்கர் அவர்களுக்கானது. அதில் மாலை 06.05மணி என்பதே முதல் மாவீரரின் மரணிப்பு என்பதே பதிவாக காணப்பட்டது. உடனடியாகவே புலிகள் மாவீரர் நாளின் நேரத்தை மாற்றினர். நள்ளிரா தீபமேற்றல் மாலை 06.05 மணியானது. 1995இன் பின்னரே இம்மாற்றம் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. இது மட்டுமா? துயிலும் இல்லப் பாடலில் நள்ளிரா வேளை விளக்கேற்றுவதான வரிகள் உள்ளதே. அந்த நாட்களில் புலிகளால் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாவீரர் படங்களில் துயிலும் இல்லப்பாடலும் இடம்பெற்றிருக்கும். உடனடியாகவே பாடலின் சரணத்தினையும் புலிகள் மாற்றத்திற்குள்ளாக்கினர். கவிஞர் புதுவை இரத்தினதுரையே இப்பாடலை எழுதியவர். மேலே சொல்லிய முதற்சரணத்தில் உள்ள 'நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்' எனும் வரியானது கீழ்வருமாறு மாறுதலானது. வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம். என்பதே அவ்வரி. இதுவே இப்போது பாவனையில் உள்ளது. ஏனைய வரிகள் மாற்றம் பெறவில்லை. இவ்விடத்தே துயிலும் இல்லப் பாடலில் உள்ள இன்னுமொரு விடயத்தைச் சொல்ல வேண்டும். துயிலும் இல்லப் பாடலில் எந்த இடத்திலும் புலிகளின் தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. 'தலைவன்' என பொதுமைப்பட ஈரிடங்களில் வந்துள்ளதே தவிர அவரது பெயர் பாடலில் இடம்பெறவில்லை. உலகில் உருவாகிய தமிழ்ப்பாடல்களில் உலகெலாம் ஒரே திகதியில் ஒரே நேரத்தில் ஆண்டில் ஒரே ஒரு தடவை ஒலிக்கும் பாடல் எனும் பதிவும் புலிகளின் துயிலும் இல்லப்பாடலுக்கு உண்டு. இப்பாடலினை கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுத, இசைவாணர் கண்ணன் அவர்களின் இசையில் மாவீரர் சிட்டு, மணிமொழி, அபிராமி, வர்ணராமேஷ்வரன் ஆகியோர் பாடியிருந்தனர். --> புரட்சி
  12. தலைப்பை பார்த்து விட்டு கொஞ்சம் குழம்பி விட்டேன்..காரணம் அண்மைய காலத்தில் புதுசு, புதுசா பாட்டுகள் வருகிறது தானே.... அவர்களில் யாரோ கொப்பி அடித்து விட்டார்கள் என்ற நினைப்பு..🤭
  13. காட்டுத்தீயை மறந்து விட்டீர்கள்............ ஆனாலும் பூமியில் வாழத்தகுந்த அருமையான ஒரு தேசங்களில் இதுவும் ஒன்று. உண்மையிலேயே சொல்லுகின்றேன். 🤣........... சில நாட்களாக ஊண் உறக்கம் குறைத்து வேலையில் பிசியாக இருக்கின்றேன், அண்ணை. பூமித்தாயே அதைப் பொறுக்காமல் ஒரு குலுங்கு குலுங்கிவிட்டார்..................😜.
  14. உதென்ன பிரமாதம்… வக்கல்லையில் புகையிரத நிலையத்தில்தான் புகையிரதம் நின்றது,.. கொய்யால,..நாங்கள் இந்தியாவில் மீன் வாங்குவதற்காக புகையிரதத்தை பயணத்தின் நடுவிலேயே இடைநிறுத்துவோம்ல,..........🤣
  15. போன வாரம் எழுதப்பட்ட இந்த எனது கருத்துக்கு இன்று இருவர் விருப்ப வாக்குகள் இட்டிருக்கிறார்கள். இது தான் நிலை. ஆனால் விதைப்பு தொடரும்.....
  16. இன்று சூரிச் வின்ரர்தூரில் இரண்டாவது நாளாக கொளுத்தும் வெயிலில் நடைபெற்ற விளையாட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பிற நாடுகளைப் போன்றே தாயகச் செயற்பாட்டாளர்கள் எல்லோருக்கும் வயதேறிக்கொண்டு போகின்றது. இளையோர் அரசியலைத் தவிர்த்து தமது விருப்பமான விளையாட்டுக்களில் ஈடுபட்டனர். எனினும் தலைவர் இருக்கின்றார் என்று இப்போதும் நம்பும் அளவிற்கு உலக நடப்பு தெரியாத சிலரும் இருக்கின்றார்கள் என்பதை காதில் விழுந்த கதைகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது! வந்தமா… விளையாட்டைப் பார்த்தமா.. கொத்துரொட்டியை சாப்பிட்டமா.. கூல் ட்றிங்க்ஸைக் குடித்தமா.. என்று வெளியே வந்துவிட்டேன்!
  17. கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல தமிழ் இளைஞனாக இருந்ததாகவும், தற்போது பல கேள்விகளைக் கேட்டுத் தனது தமிழ் அடையாளத்தை அவன் தேடுவதாக அவளது பேதை மனம் துடிக்கிறது. அவனுடைய பேச்சைக் கேட்டு மகள் கருணாவும் ஏதோ கேட்கத் தொடங்கி விட்டாள். கண்ணனின் குடும்பம் தமிழ் அகதிகளாக லண்டனில் காலடி எடுத்து வைத்தவர்கள். “கடவுள் அருளால் இவ்வளவு நன்றாக இருக்கிறோம். நீங்களும் மற்றவர்கள் மதிக்கத் தக்கதாக வாழ, உயர்ந்த எங்கள் தமிழ் கலாச்சாரம் சார்ந்த பண்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். எண்ணங்களை விருத்தி செய்யங்கள். கடவுளை வணங்குங்கள்” என்று தனது இரு குழந்தைகளுக்கும் அடிக்கடி புத்தி சொல்பவள் அவள். ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் பிறந்ததும் பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழர்கள் மாதிரி அவளும் அவர்களின் மூன்றாவது வயதில் குழந்தைகளைத் தமிழ்ப்பாடசாலைக்கு அனுப்பினாள். அவர்கள் மூன்றாவது வயதிலேயே தேவாரங்கள் பாடவும். திருஞான சம்பந்தர் ஞானப் பால் குடித்த புராணக் கதைகளையும கேட்டு மகிழ்ந்தார்கள். வெள்ளிக்கிழமைகளிலும் விசேட நாட்களிலும் தவறாது கோயில்களுக்கு அழைத்துச் சென்றாள். பல விரதங்களைச் செய்து தனது கணவர், குழந்தைகளின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். தனது பிள்ளைகள் வைத்தியர்களாக வருவதற்காகப் பல ட்யூசன்களை அவர்களுக்கு ஏற்படுத்தி கெட்டிக்காரர்களாக்கிளாள். இப்போது மகன் அவனின் இருபத்தி ஓராவது வயதில் வைத்தியக் கல்லூரியில் மூன்றாவது வருடப் படிப்பைத் தொடர்கிறான். அவர்களின் மகள் கருணாவுக்குப் பத்தொன்பது வயது. மெடிகல் சயன்ஸ்சில் பட்டப் படிப்பைத் தொடங்கிருக்கிறாள். இருவரும் பலகலைக்கழக விடுமுறை நாட்களில் வீட்டில் நிற்கும்போது அருந்ததி அவர்களைக் கட்டாயம் கோயிலுக்கு அழைத்துச் செல்வாள். அவளின் கணவர், பரமானந்தன் இருவேலைகள் செய்து அவர்களின் குடும்பத்தையும் பராமரித்து, இலங்கையிலுள்ள உறவினர்களுக்கும் உதவி செய்கிறான். அத்துடன், ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கொருதரம் என்றாலும் ஊருக்குப் போய் வர அவனுக்கு ஏற்படும் செலவுகளுக்காகக் கடன் பட்டும் வாழ வேண்டியிருக்கிறது. அவனுக்கு நாற்பத்தி எட்டு எட்டு வயதாகிறது. நீரிழிவு நோய், உயர்ந்த இரத்த அழுத்தம் என்ற வருத்தங்களுடன் போராடுகிறான். அடிக்கடி வைத்தியரைப் பார்த்துப் பரிசோதனைகளும் மருந்துகளும் எடுக்கிறான். மனைவி மாதிரி அடிக்கடி கோயில்களுக்குப் போகாவிட்டாலும் முடியுமானவரை செல்வான். வீட்டில் மனைவியால் நடத்தும் பூசைகளிலும் முடிந்த நேரங்களில் கலந்து கொள்வான். அருந்ததி, லண்டனுக்கு வந்த காலத்திருந்து ஒரு இலங்கைத் தமிழரின் கடையில் வேலை செய்கிறாள். இலங்கையிலிருந்து வரும்போது ஆங்கிலம் சரியாகப் பேச வராது. கடையில் வேலை செய்யும்போது அங்கு வரும் அன்னிய வாடிக்கையாளரிடம், அவளின் வேலை நிமித்தமாக ஏதோ தட்டுத் தடுமாறி பேசி தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். அந்த வெளியுலகத் தொடர்பைத் தவிர மற்றவர்களுடனான உறவு அருந்தததிக்குத் தெரியாது. பெரும்பாலான தமிழர்கள் மாதிரித் தங்கள் கலாச்சாரத்தைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாகவிருக்கிறாள். இப்போது என்ன பிரச்சினை என்றால் மகன் தாயிடம் தங்கள் சமயம் பற்றிக் கேள்வி கேட்கிறான். முதலாவது வருட, வைத்தியக் கல்லூரிப் படிப்புக் காலத்திலேயே, அம்மா அடிக்கடி விரதம் இருப்பதன் விளக்கத்தைக் கேட்டான். அதைத் தொடர்ந்து அவன் வரும் போது ஏதோ கேள்விகள் கேட்கத் தொடங்கினான். அவன் பல இன இளம் தலைமுறையினருடன் படிப்பதும் அருந்ததிக்குத் தெரியாத புதிய வாழ்க்கையில் பல அறிவுகளைப் பெறுவதும் அதன் எதிரொலியாக அவன் கேள்விகள் கேட்பதையும் அவள் புரிந்து கொள்ளவேண்டும் என்று அவளது கணவன் அன்புடன் அறிவுரைகள் சொன்னான். “அம்மா நாங்கள் இந்துக்களா’’ என்று ஒருநாள் கேட்டான். ‘’ஓமோம், அதைப்பற்றி என்ன கேள்வி.’’ ‘’இந்துக்கள் என்றால் இந்தியாவில் வாழ்பவர்கள். நாங்கள் இப்போது பிரித்தானியர், இங்கு பிரித்தானியாவில் வாழ்கிறோம, அப்படி என்றால் இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் எப்படி இந்துக்களாக வரமுடியும்” என்றான் கண்ணன். “நாங்கள் இந்து சமயத்தைப் பின் பற்றுவதால் இந்துக்கள் என்று கூறிக் கொள்கிறோம” என்றாள். ‘’இந்து சமயம் என்றால் என்ன?” என்ற அவனது கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. “கத்தோலிக்கருக்கு இயேசு கடவுள், இஸ்லாமியர்களுக்கு அல்லா கடவுள். எங்களுக்கு யார் கடவுள்?” கண்ணன் தனது அறிவை விருத்தி செய்யும் தொனியிற் கேட்டான். “மகன். நாங்கள் பல கடவுளரை வணங்குறோம். படைக்கும் கடவுளாகப் பிரம்மா இருக்கிறார். காக்கும் கடவுளாக விஷ்ணு இருக்கிறார். அழிக்கும் கடவளாகச் சிவன் இருக்கிறார்” என்றாள் அவள். இதெல்லாம், அவன் மூன்று நான்கு வயதுகளில் லண்டனிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சொல்லிக் கொடுத்தவைதான் ஆனாலும் அவன் இப்போது பல கடவுள்களின் தொழில்கள் பற்றிக் கேட்பது அருந்ததிக்கு மகிழ்ச்சி. “காக்கும் கடவுள்தானா கண்ணனாக அவதாரம் எடுத்தவர்.’’ என்று கேட்டபோது அருந்ததிக்கு மனிதில் கொஞ்சம் சந்தோசம் அரும்பத் தொடங்கிவிட்டது. மகன் தனது பெயரின் மகிமையை உணரத்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்று தனது மனதுக்குள் பெருமைப் பட்டாள். “அவர்தானே பெண்களின் ஆடைகளைத்திருடி அந்தப் பெண்களின் அவல நிலையைக் கண்டு ஆனந்தப் படுபவர். உலகத்தைப் பாதுகாப்பவர் ஏன் பெண்ணாசை வெறியன் மாதிரி பெண்கள உடைகளைத் திருடிச் சந்தோசப் படவேண்டும்” அவனின் அழகிய தமிழ் குரலில் இருந்த சந்தேகம் அருந்ததியைத் தர்ம சங்கடப் படுத்தியது. அவனின் பெயர் கண்ணன் என்பதால், அவனின் சினேகிதர்கள் குறம்புத்தனமாக, “கண்ணன் வந்தான், கன்னியராடையைக் களவாடி மகிழ்ந்தான்’’ என்றபாடிக் கேலி செய்து மகிழ்வது அவனுக்குப் பிடிக்காது என்று அவளுக்குத் தெரியும். அப்படிச் சேட்டை விட்டால், இங்கிலாந்தில் சிறையில் தள்ளி விடுவார்கள் என்று அவனுக்குத் தெரியும். இளவயதிலிரிருந்தே மற்றவர்களைத் துன்புறத்தக் கூடாது, எல்லோரையும் சாதி. மத, பெண், ஆண், நிறம், மொழி வித்தியாசமின்றி நடத்த வேண்டும் என்று ஆரம்ப பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுப்பார்கள். ‘’அதெல்லாம் சும்மா கதைகள் மகன்’’ என்று சமாளித்து விட்டாள். “அம்மா சமயக்கதைகள் மக்களை நல்வழியில் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டவேண்டும் என்று சொல்வார்கள், ஏன் எங்கள் கதைகள் பல பெண்களை ஆண்களின் மகிழ்வுக்காக வாழ்பவர்களாகக் காட்டுகிறது?” கண்ணன் மேற் கொண்டு தொடராமல் அவனின் கேள்விகளை, “மகன், உனக்காக் நெய்த்தோசை செய்திருக்கிறேன். தோசை சூடு ஆறமுதல் சாப்பிடு மகனே’’ என்று சொல்லி பேச்சை மாற்றி விட்டாள். ஆனாலும் அவனின் கேள்விகள் இதுவரை அவனின் அவனிடமிருந்து வராத புதிய தொனியில் வருவது அவளுக்குப் பயத்தைத் தந்தது. கணவர் வந்ததும், “இவன் யூனிவர்சிட்டிக்கப் போகத் தொடங்கியதும் ஏன் இந்த விழல்க் கேள்வி எல்லாம் கேட்கிறான’’; என்று கேட்டாள். ‘’அருந்ததி, பல்கலைக் கழகம் என்பதால் பல கலைகளையும் கற்குமிடம். அங்கு பல தரப் பட்ட மாணவர்களும் வருவார்கள், தங்களின் சமயத்தைப் பற்றிப் பேசும்போது ஒருத்தரின் சமயப் பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் பேசியிருக்கலாம். அதனால் கண்ணனின் மனதில் சில வித்தியாசமான கேள்விகள் வரும் தானே’’ என்று பதில் சொன்னான். அருந்ததி, ஒருநாள் வுழக்கம்போல் தனது மகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது,அவள் தமயன் கேட்ட கேள்விகளைச் சொன்னாள். இப்போதுதான் பல்கலைகப் படிப்பை ஆரம்பித்திருக்கும் மகள் தமயன் மாதிரிக் கேள்விகள் கேட்பதை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையில ஒரு தமிழத் தாய்பாசம் தவித்தது. “எங்களுக்க விளங்காத விடயங்களைப் பற்றித் தாய் தகப்பனிடம் கேள்வி கேட்பது நல்ல விடயம்தானே’’ என்றாள். தனது தாய் தங்களுக்காகவும் தகப்பனுக்காகவும், குடும்ப நலங்காகவும் அடிக்கடி விரதம் இருப்பதும் பட்டினி இருப்பதும் தனக்குத் தர்ம சங்கடத்தைத் தருகிறது என்றும் கருணா தனது தாய்க்குச் சொன்னாள். “அப்படியென்றால் நீ உனது கணவர் குழந்தைகளுக்காகக் கடவுளைக் கும்பிடமாட்டாயோ’’ என்று அருந்ததி சீறினாள். ஓரு நல்ல தமிழ்ப் பெண்ணாக இதுவரை வளர்த்த மகள் இப்படிக் கேட்டது அப்பாவி அருந்ததியைத் திகைக்கப் பண்ணியது. “அம்மா, நான் பட்டினி இருந்துதாற்தான் கடவுள் நன்மை புரிவார் என்பதை நம்புவதில்லை. எங்களைப் படைத்தவனுக்குத் தெரியாதா எங்களின் தேவைகள்? அதாவது, என்னையும் உங்களைப் போல், கந்தஸஸ்டி விரதம், கௌரி விரதம் எல்லாம் இருக்கச் சொல்லாதீர்கள். ஓரு குடும்பத்தின் நன்மைக்கு எல்லோரும்தானே பாடுபடுகிறோம். அப்படியென்றால் பெண்கள் மட்டும்தான் விசேட விடயங்கள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பம்மாத்து” என்று சொல்லி விட்டாள். இந்த விடயங்கள் நடந்த சில நாட்களில், அருந்ததியின் தமயன் ஊரிலிருந்து வந்திருந்தான். அவனின் மனைவியின் சித்தப்பா ஒருத்தரின் மரணத்திற்குப் போயிருந்ததாகவும், அங்கு நடக்கும் மரணச் சடங்குகளுக்கே பெரிய செலவாகிறது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். “இங்கேயும்தானே தம்பி, எல்லாச் சாமான்களும் கண்டபாட்டுக்கு விலையேறுது’’ என்றாள் அருந்ததி. ‘’ஓமோம், சனங்கள் செய்யுற கொடுமையால, ஐம்பெரும் கடவுளரும் கொதித்தெழுந்து இன்டைக்கு மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை வெடிப்பு, கடல் கொந்தளிப்பு, காடுகள் எரிகின்றன. கடவுளரைக் கோபிக்கப் பண்ணினால் அவர்கள் தண்டனை தருவார்கள்தானே’’ கடவுளர்களுக்காக மிகவும் துக்கப் பட்ட பெருமூச்சுடன் சொன்னார் அருந்ததியின் தம்பியார். “மாமா! நீங்க சொன்னதெல்லாம் நடக்கிறது கடவுளுக்கு வந்த கோபத்தால இல்லை. இந்த உலகத்து இயற்கைகளை பேராசை பிடித்தவர்கள் அழிப்பதாற்தான் அதன் எதிரொலியாக இந்த அழிவுகள் நடக்கின்றன.’’ மருமகள் அருணா மாமானாருக்குச் சுற்றாடல் சூழ்நிலை பற்றிய விளக்கத்தைச் சொன்னாள். “என்ன இருந்தாலும் கருணா, அதிவேகமாக மாறிவரும் மனித சிந்தனைகளையும் அதனால் மக்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளையும் முகம் கொடுக்கத்தானே வேணும். உதாரணத்துக்க ஒரு விசயம் சொல்றன், மரணச் சடங்கை நடத்த வந்த ஐயர் தனக்குத்தரவேண்டிய தானங்களுடன் காலணிகளும் கேட்டு வாங்கினார். இதெல்லாம் முன்னோரு காலத்தில நடைமுறையில இருக்கவில்லை, ஆனா இப்ப எல்லாம் புதிய விடயங்களாக, சமய சடங்கு அணுகுமுறையாக வரத்தொடங்கி விட்டது’’ துக்கம் நிறைந்த தொனியுடன் மாமா சொன்னார். “மரணச் சடங்குக்கும் ஐயருக்குக் காலணிக்கும் என்ன சம்பந்தம்” மாமாவிடம் தனது சந்தேகத்தைக் கேட்டான் கண்ணன். “இறந்தவரின் ஆவி சொர்க்கத்திற்குப் போகும்போது காலில் கல் முள் காயப் படுத்தாமல் இருக்க காலணியை அணிந்துகொள்ளச் சொல்லி ஆவியிடம் ஐயர் பிரார்த்தனை செய்வார். அதற்காக அவருக்குக் கொடுக்க வேண்டும” மாமா விளக்கம் சொன்னார். “புதிதாக வந்த மொடலில் வாங்கித் தரச் சொல்லி ஐயரிடம் ஆவி கேட்டிருக்குக்கும் என்று நினைக்கிறேன்’’ கண்ணன் தனது ஆத்திரத்தைக் காட்டாமல் கிண்டலாகச் சொன்னான். அருந்ததிக்குத் தன் குழந்தைகளின் கேள்விகள் பல சந்தேகங்களையுண்டாக்கத் தொடங்கி விட்டன. ஏன் இந்தக் கேள்விகளைக்கேட்கிறார்கள் என்று அவள் கவலை தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு வந்த தமிழர்கள் பலர் தங்கள் சமயத்தை விட்டு வேறு சமயங்களை நாடுவது அவளுக்குத் தெரியும். ஆனாலும். தனது குழந்தைகள, தங்களின் சமயத்தை விட்டு வெளியேறி, தங்கள் தாய் தகப்பனை ஒருநாளும் மனவருத்தப் படுத்தமாட்டார்கள் என்று திடமாக நம்பினாள். தாயும் தகப்பனும் அவர்களின் வாழ்க்கையின் உயர்வுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வது அவர்களுககுத் தெரியும். ஆனாலும் புதுச் சினேகிதங்கள் ஏதும் தேவயைற்ற புத்திமதிகள் சொல்லி அவர்களின் மனத்தைத் திருப்புகிறார்களோ என்ற சந்தேகமும் சாடையாக வந்தது. அன்று பின்னேரம், அருந்ததி வழக்கம் போல் தனது வயது வந்த இரண்டு ‘குழந்தைகளையும்’ அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றாள். அன்று அவர்களின் நலவாழ்வுக்கு அர்ச்சனை செய்ய துண்டு வாங்கிக் கொண்டாள். கோயிலில் ஐயர், அருந்ததி கொடுத்த அர்ச்சனைச் சீட்டை கொண்டு அவர்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். கண்ணன் தாயின் சொற்படி மிகவும் பக்தியுடன் கோயிற்சிலையைப் பார்த்துக் கொண்டு நினறான். ஐயர் கண்ணனின் பெயருடன் ஆரம்பித்து நமஹா,ஸ்வாஹா என்ற சில வார்த்தைகளைப் பாவித்து, தட்டத்தில் வைத்த தீபத்தால் கடவுளை ஆராதித்து, கண்ணனின் தரகராகக் கடவுளிடம் பேசிவிட்டுத் தாயிடம் தட்டத்தை நீட்டியபோது, தாயார் தீபத்தைத் தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிய பின், அவள் அர்ச்சகருக்காகத் தட்டிற் பணம் போட்டாள். அதைத் தொடர்ந்து, தட்டிற்கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு அர்ச்சனைப் பொருட்களாக ஒரு வெற்றிலையில் ஒரு பழமும் திருநிறும் தாயிடம் கொடுத்தார் ஐயர். அதைத் தொடர்ந்து, அங்கு நடந்தவை கண்ணன் மனதில் சில கேள்விகளை எழுப்பியது. வீட்டுக்கு வரும் வழியில், தாயிடம் தயங்கித் தயங்கி ஒரு கேள்வி கேட்டான் அவள் மகன் கண்ணன். “அம்மா, அந்த ஐயர் எனக்காக் கடவுளிடம் என்ன கேட்டார்.’’ “உனது மேன்மைக்கும், உயர்வுக்கும் ஆசி அளிக்கும்படி கடவுளை வேண்டினார் ஐயர்’’ என்றாள் அருந்ததி. “அவர் சொன்னது உங்களுக்குப் புரிந்ததா’’ மகனின் இந்தக் கேள்வி தாயைத் திடுக்கிடப் பண்ணியது. “அவர் எனக்குத் தெரியாத கடவுள் மொழியில், எங்களுக்காகக் கடவுளிடம் கேட்பதை நாங்கள் கேள்வி கேட்கக் கூடாது மகனே” என்றாள். ‘’அப்படி என்றால் வாழ்க்கை பூராகவும் விரதம் படித்துக் காலையில் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே’’ என்று கண்ணீர் மல்கத் தமிழிற் பாடி உருகுகிறாயே அதைப் பற்றிக் கவலைப் படாத கடவுள், அன்னிய மொழியில் நீ தரகர் மூலம் பேசினாற்தான் அருள் புரிவார் என்று ஏன் நினைக்கிறாய்’’ என்று கேட்டான். தங்களின் நன்மைக்காகத் தாய் படும் துயர்கள் அவனால் புரிய முடியாதிருந்தது. “மகனே அப்படி எல்லாம் கடவுளைப் பார்க்காதே. கோயிலில் ஐயர் பேசுவது தெய்வ மொழி. அதன் மகிமை வேறு’’ என்று படபடப்புடன் சொன்னாள். “அம்மா நீ எனக்கு அன்பு தரத் தமிழிற்தான் என்னைத் தாலாட்டினாய். எனது அறிவு வளர, எனது ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் படிப்பித்தார்கள். எனக்கு கடவுள் ஆசிர்வாதம் தருவதாயிருந்தால் எனது மொழியில் அவருடன் தொடர்பு கொள்கிறேன். ஏனென்னால கடவுள்தான உலகத்து உயிரினங்கள் அத்தனையையும் படைத்தவர் என்றால் அவருக்குத் தனது குழந்தைகளின் மொழி தெரிந்திருக்க வேண்டும்.’’ அருந்ததிக்கு மகன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. அவன் தொடர்ந்தான், “அம்மா, இன்று பல கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். கத்தோலிக்க மதத்தின தலைவர் போப் ஆண்டவர் 1968ம் ஆண்டில், உலகக் கத்தோலிக்க மக்கள் அனைவரும் தங்கள் மொழியிற்தான் இயேசுவை வழிபடவேண்டும, பழைய பாரம்பரிய முறைப்படி லத்தின் மொழியில பிரார்த்தனைகளைக் கேட்கத் தேவையில்லை என்று கட்டளையிட்டார். எங்களை மாதிரி ஐயர் சொல்லும் கடவுள் மொழியைத் தெரியாத தமிழர்கள் உலகமெல்லாமிருக்கிறர்கள். இவர்கள் தங்கள் மொழியிற்தான் கடவுளுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்று உங்கள் மதத் தலைவர் யாரும் சொல்லவில்லையா?” “மகன் மற்றவர்கள் சொல்வதெல்லாம் சரியென்று நாங்கள் ஏன் எடுக்கவேண்டும், எங்கள் பாரம்பரியத்தைத் தொடர்வோம், அதில் ஒன்றும் குறை கண்டு பிடிக்காதே” என்றாள். “அம்மா, தயவு செய்து எனக்காக வீணாக உங்கள் நேரத்தையும் பணத்தையம் வீணாக்கவேண்டாம். எனக்கு இப்போது இருபத்தியொரு வயது. இன்னும் சில வருடங்களில் ஒரு உயிரைக் காப்பாற்றும் பொறுப்பை எடுக்கப் போகிறேன். எனக்குத் தேவையானால் கடவுளிடம் எனக்குத் தெரிந்த மொழியில் பேசிக் கொள்கிறேன். தயவு செய்து இனி என்னைக் கோயிலுக்கு வரச் சொல்லிக் கூப்பிடாதீர்கள்’’ என்றான். அருந்ததி என்ற தமிழ்த்தாய் திகைத்துப் போய் நின்றாள். ஆனாலும், அவள் நாளைக்கு இன்னொரு விரதம் இருப்பாள். தனது பிள்ளைகளுக்கு நல்ல புத்தியும் கடவுள் நம்பிக்கையும் தொடரவேண்டும் என்று பிரார்த்திப்பாள். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் https://www.sirukathaigal.com/குடும்பம்/கடவுளும்-கண்ணனும்/
  18. ரஷ்சியா - உக்ரைன் யுத்தத்தின் ஆரம்பத்தில் ரஷ்சியா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி இருந்தது. இப்போது ரஷ்சியா மீதான ஊடுருவலுக்கு பாவிக்கப்பட்ட பகுதியும்.. உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்தது. பின்னர் துருக்கியினூடாக கெஞ்சிமன்றாடி.. ரஷ்சியாவுக்குள் நுழைந்து தாக்கவோ.. ரஷ்சியாவுக்குள் தாக்குதலை நடத்தவோ மாட்டம் என்ற பொய் வாக்குறுதியை வழங்கி தான்.. ரஷ்சியப் படைகளை ரஷ்சியா தானா வெளியேற்றிக் கொள்ள சம்மதிக்கப்பட்டது. இப்போ அமெரிக்காவினதும்.. நேட்டோவினதும் தேவைக்காகவே இந்த ஊருடுவல் தாக்குதல். இதில் நேட்டோ படைகள் நேரடியாக அல்லது மறைமுகமாக செயற்படுவது தெரிந்ததே. மோல்டாவாவுக்கு ரஷ்சியா எச்சரிக்கை வழங்கி இருக்கிறது. இந்த ஊருடுவல் என்பது நேட்டோ வினது நேரடியான ரஷ்சிய ஆக்கிரமிப்புச் செயல். இதன் மூலம் உக்ரைனுக்கு எந்த நலனும் கிடைக்கப் போவதில்லை. உக்ரைன் கோமாளி சனாதிபதி அமெரிக்காவினதும் ஈயுவினதும் நேட்டோவினதும் ஆட்டத்துக்கு ஆடம் பொம்மை. நிச்சயம் ரஷ்சியா இந்த நேட்டோ ஆக்கிரமிப்புக்கு எதிராக நிச்சயம் பதில் அளிக்கும். மேலும் நேட்டோ ரஷ்சியாவுக்குள் ஊருடுவுவது இது முதல் தடவை அல்ல. ஏலவே சி ஐ ஏ ஊடாக வாக்னர் ரஷ்சிய கூலிப்படையை விலைக்கு வாங்கியும் அதன் பின்னர் ரஷ்சியாவுக்கு எதிரான அமைப்புக்கள் என்ற பெயரிலும் ஏலவே பல தடவைகள் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் ஊருடுவல் தாக்குதலை செய்துள்ளன. என்ன வாக்னர் குழுவைப் போல சட சட என்று மொஸ்கோ நோக்கி நகரலாம் என்ற கனவு பலிக்கவில்லை. டான்பாஸ் உட்பட்ட கிழக்குப் பகுதி இராணுவ நடவடிக்கை படுதோல்வியில் முடிந்தமை அமெரிக்க நேட்டோ கூட்டாளிகளுக்கு உக்ரைன் அவமானத்தையே தேடிக் கொடுத்திருந்தது. அதனால் தான் இந்த ஊடுருவலை கொஞ்சம் அகலப்படுத்தி வெற்றி விளம்பரமாக்கிக் கொண்டிருக்கிறது உக்ரைனின் கோமாளி சனாதிபதியும் அதன் கூட்டமும். ஏலவே டான்பாஸ் முழுவதுமாக ரஷ்சியாவிடம் இழக்கப்படும் நிலை தோன்றிவிட்ட நிலையில்.. அதன் கவனத்தை திருப்பமும் நேட்டோ அமெரிக்காவை ஆசுவாசப்படுத்தவும் அவர்களின் இராணுவ வெற்றி வெறித்தனத்தை இனங்காட்டவுமே இந்த தாக்குதல். இதில் இழக்கப்படும் ஒவ்வொரு அப்பாவி ரஷ்சிய உயிருக்கும் இவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும். இதனை ஏலவே பிரிட்டனை சேர்ந்த உயர் ராணுவ அதிகாரியே சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார். இந்த ஊருவலால்.. ரஷ்சிய இராணுவத்தின் தாக்குதல் திறனை குறைக்க முடியுமோ தெரியவில்லை.. ஆனால் ரஷ்சியாவை அதி கோபப்படுத்தி உக்ரைனை நாசமாக்கப் போகிறார்கள் என்று எச்சரித்திருக்கிறார் அந்த அதிகாரி. ஆனால் அமெரிக்காவோ.. கமோன்.. கிமோன் என்று உசுப்பேத்திவிட்டு இப்போ தமக்கும் இந்த ஊடுருவலுக்கும் சம்பந்தமில்லை என்கிறது. அண்மையில் தான் ரஷ்சியாவுக்குள் தாக்குதல் நடத்த பைடன் நிர்வாகம் சம்மதி அளித்ததாகச் சொல்லப்பட்டாலும்.. உக்ரைன் ஏற்கனவே பல ஊடுருவல் தாக்குதலை தானாகவும் புரொக்சியாகவும் செய்தே வந்துள்ளது.
  19. நான் ஒரு தேர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன். அநேகமாக பெரிய கொண்டாட்டங்கள் கோவில்களில் நடந்தால் புலம்பெயர் நாடுகளில் உள்ள கோவில்களுக்கு போவதில்லை. காரணம் அங்கே ஆன்மீகம் இருக்காது. மாறாக ஒருவகை பந்தா கொண்டாட்டமாக இருப்பதால்.... இருந்தாலும் நீண்டகாலம் செல்லவில்லை என்றாலும் விடுமுறையில் இருக்கின்றேன் என்பதால் சென்றேன். அதே பல்லவிதான்.... நகையலங்காரம் உடையலங்காரம் கார் பந்தாங்கள் பழைய காய் என்ற பந்தாக்கள் பண பந்தாக்கள் உபயம் எனும் பேரில் தண்ணீர்பந்தல்களில் அட்டகாசம் அன்னதானம் பெயரில் சண்டித்தனங்கள் அன்னதானத்திற்கு வரிசையிலில் நின்றால் இடையில் புகுந்து விளையாடும் தர்மகர்த்தாக்கள் உபயகாரர்கள். கிட்டத்தட்ட கோவில்களை தங்கள் பந்தா காட்டும் இடமாக மாற்றி விட்டார்கள் புலன் பெயர்ந்த தமிழர்கள்.
  20. செல்லப்பிராணி ------------------------ நான் அங்கு போன போது அது என்னைப் பார்த்து இரவில் வந்த ஒரு திருடனைப் பார்த்து குலைப்பது போல குலைத்தது. பின்னர் அவர்கள் சில வார்த்தைகள் அதட்டிச் சொன்ன பின் தான் அது என்னை உள்ளே விட்டது. என்னை முழுவதுமாக மோப்பம் பிடித்து வைத்துக் கொண்டது. அதை நாய் என்று சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு ஒரு பெயர் இருந்தது. அதன் பெயர் சொல்லியே அதைக் குறிப்பிட வேண்டும் என்பது அங்கு ஒரு விதியாக இருந்தது. நான் அங்கு பத்து நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அங்கு போய் அடுத்த நாளிலிருந்தே அது என்னுடன் மிகவும் நெருங்கி விட்டது. காலையில் கண் விழித்தால் அது கட்டிலின் அருகில் நிற்கும். எங்கு அமர்ந்தாலும் அது அருகே வந்து முதுகால் தேய்த்து விட்டு என் காலுடன் ஒட்டி ஒட்டி நிற்கும். தடவிக் கொடுத்தால் கிறங்கிக் கிடக்கும். இரவிலும் ஒரு தடவை கட்டிலடிக்கு வந்து நான் அங்கு தான் படுத்திருக்கின்றேன் என்று உறுதிப்படுத்தி விட்டுப்போகும். அந்த வீட்டவர்கள் மீதும் அது இதேயளவு பாசத்தை கொட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்து கிளம்பும் நாளன்று அது வீட்டு வாசலில் குறுக்காக படுத்திருந்தது. இந்த வீட்டிலிருந்து எவரையும் போக விடமாட்டேன் என்பது போல. கடும் போராட்டத்தின் பின் நான் காரில் ஏற, அதனால் ஒன்றும் முடியாமல் போக, ஓவென்று அழுதது. பிராணி ஒன்று அழுததை அன்று தான் நேரில் பார்த்தேன். சில மாதங்களில் பின் ஒரு நாள் அவர்கள் என்னை தொலைபேசியில் கூப்பிட்டனர். அதை அன்று கருணைக்கொலை செய்ய வேண்டி இருந்ததாகச் சொன்னர். ஒரு தீரா நோய், வேறு வழி எதுவும் இருக்கவில்லை என்றனர். அழுது தீர்த்தனர். அப்படிக்கூட என்னால் என் நினைவை தீர்க்க முடியவில்லை. 'விட்டுப் போகாதே......' என்று அழுத அதன் கண்கள் என்னை விட்டுப் போகாமல் எல்லா இடமும் கூடவே வந்து கொண்டிருந்தது. அடுத்த வாரம். அங்கேயிருந்துது இன்னொரு அழைப்பு. இந்த தடவை வீடியோ அழைப்பு. புதிதாக ஒரு குட்டி அங்கு நின்றது. குட்டிக்கும் அதே பெயர் தான். 'குட்டி ஓடுது, குட்டி ஒளியுது, குட்டி ஒழுங்காகச் சாப்பிடுதில்லை, குட்டிக்கு பயிற்சி கொடுக்க வேண்டும், ...............' இப்படியே பல விதமாக சொல்லி, அதன் பின்னால் ஓடி ஓடி காட்டிக் கொண்டிருந்தனர். செல்லப்பிராணிகளை மனிதர்கள் எப்படி தொடர்ந்தும் உயிருக்கு உயிராக நேசித்து வளர்க்கின்றார்கள் என்ற கேள்வி அன்றுடன் என்னை விட்டு போனது.
  21. 🤣.......... நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி நிழலி......... களத்தில் வரும் உங்களின் எழுத்துகளை, கருத்துகளை அநேகமாக தவறாமல் வாசித்துவிடுவேன். உங்களின் எழுத்துகளிலிருந்து உங்களின் வாசிப்பு மிக அகலமானது என்றே எனக்குத் தெரிகின்றது........👍 இந்த 'அரைப்பக்க அனுபவங்களை' சும்மா தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் களத்தில் வேறு சிலரும் சேர்ந்து கொண்டு மிக உற்சாகமாக அவற்றின் பின்னால் தங்களின் அனுபவங்களை எழுதுகின்றனர். மிக நன்றாக எழுதுகின்றனர். போகும் வரை போகட்டும் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்..........😃.
  22. @ரசோதரன் நீங்கள் எழுதிய இந்த கதையை / அனுபவத்தை வாசிக்க தொடங்கி, பின் வாசிக்க தேவையான கதைகள் யாழில் கனக்க இல்லை தானே ஆறுதலாக வாசிப்பம் என்று விட்டன். ஆனால் இப்ப நீங்கள் 30 ஆவது கதையில் - ஒன்றரை மாதங்களுக்குள் வந்து நிற்கின்றீர்கள்! ஆனாலும் பாஸ் நீங்கள் ரொம்ப fast. ஒவ்வொன்றாக வாசிக்க ஒரு வருடம் செல்லும் எனக்கு.
  23. உக்ரேனின் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிச்சயம் நேட்டோ நாடுகளின் பயிற்சியும் பின்னணியும் உண்டு.😎 இவ்வளவு காலமும் முக்கிக்கொண்டிருந்த உக்ரேனுக்கு இப்பிடி திடீர் தைரியம் வர சான்ஸ் இல்லை. 😁
  24. எழுபதுக்கு மேலே இருந்தால் கலக்கம் தெரியும். உப்பு, புளி இல்லாவிட்டால் ‘சப்’ என்று இருக்கும். தாராளமாகக் கலந்து தாருங்கள். என்ன, சில நேரங்களில் யதார்த்தமானவை கசக்கத்தான் செய்யும். அதற்காக உங்களை குறை சொல்ல முடியாது. குறுங்கதைகள் நன்றாகவே இருக்கின்றன.
  25. உண்மை. இதோ இன்றைய ரஷ்ய உத்தியோகபூர்வ அறிக்கை. https://fr.mil.ru/fr/news_page/country/more.htm?id=12525036@egNews இதன்படி ஊடுருவிய உக்ரெய்ன் படைகளின் இறுதிக் கணங்கள் எண்ணப்படுகின்றன. 2030 உக்ரெயின் படையினர் 35 தாங்கிகள் உட்பட 300க்கும் அதிகமான கவச வாகனங்கள், ஆட்டிலறிகள் அழிக்கப்பட்டுள்ளன. முதலில் 1000 படையினர் என்று குறிப்பிட்டாலும் பின்னர் இறந்த படையினரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது குறைந்தது 4000 படையினராவது ஊருருவி இருக்க வேண்டும். இத்தனை ஆயிரம் படையினர் ஆயுத உணவு மருத்துவ வழங்கல் மற்றும் நீண்டதொரு ஆயத்தப்படுத்தல் இல்லாமல் நுளைந்திருக்க முடியாது. ரஷ்ய உத்தியோகபூர்வ அறிக்கையின்படி குறைந்தது 50 தாங்கிகளும் 500 கவச வாகனங்களும் உள்ளே நுளைந்துள்ளன எனக் கணிக்கலாம். இத்தனை பாரிய படையணி ஒன்று தனது நாட்டுக்குள் நுளைவதை உலகின் இரண்டாவது இராணுவமும் சக்திவாய்ந்த அதன் உளவுத் துறையும் வேடிக்கை பார்த்தனவா என்று கேட்கக் கூடாது. தந்திரோபாய நடவடிக்கையாக இருக்கலாம். 😎
  26. நேட்டோ நாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள் போகலாம் - போகாதீர்கள் என்று உத்தியோகபூர்வமாக அரச அறிவித்தல் இருந்தாலும் கூட. ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் ஈரூடகப் படையில் இருந்தவர்களும் , பிரிட்டன் முன்னாள் படையினரும் போய் பிடிபட்டு ரஷ்ய ஊடகங்களில் வீடியோ காட்டினார்கள். அதை அந்த நாடுகளும் உறுதி செய்தன. இதற்கு நேட்டோ என்ன செய்ய முடியும்? உக்ரைனின் மொத்தப் படை 2 மில்லியன், இவர்களுள் ஒரு மில்லியனுக்கும் கீழே standing force. மிகுதி reserve. இதில் இருந்து ஆயிரக் கணக்கானோரை அனுப்ப இயலாமல் உக்ரைன் இருப்பதாக நம்பித் தான் உங்கள் ஊகத்திற்கு பலம் சேர்க்க வேண்டியிருக்கிறது😂. (இது முன்னர் பிரிகோஷினின் கூலிப்படை ரஷ்யாவின் உத்தியோகபூர்வ படை என்ற கவிண்ட லொஜிக்கின் தொடர்ச்சியாக இருக்கிறதென நினைக்கிறேன்😎!)
  27. ஆடகாண்பது காவிரி வெள்ளம் .......! 😍
  28. அவர்களே தம் பேட்டிகளில் சாடை மாடையாகச் சொல்கின்றார்கள், தம் உண்மையான நோக்கமே தமிழரசுக் கட்சியை நாசம் செய்வது தான் என்று. அதாவது சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் ஒற்றுமையை காட்டி ஒரு செய்தி சொல்ல போகின்றோம் என்று மக்களுக்கு படம் காட்டி விட்டு, அந்த ஒற்றுமையை கேலிக்குரியதாக்கின்ற வகையில் ஒரு கட்சியை நாசம் செய்வது தான் அவர்களின் உள் நோக்கமாம். எனவே அவர்கள் ரணிலை சந்திக்கின்றது மட்டுமல்ல, இறுதியில் அவரை அல்லது சஜித்தை ஆதரிக்க சொன்னாலும் சொல்லுவினம்.
  29. பலே.. பலே... இரண்டு நாளில்... மனம் மாறி, ஜனாதிபதியை சந்தித்து விட்டார்களா. ஏதாவது அறிக்கை விடும் போது நிச்சயமான, சாத்தியமான அறிக்கைகளை விட வேண்டும். மனுசர் இருக்கிற விசரிலை... நீங்கள் வேறை, காமெடி பண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது. பிறகு உங்களைத்த்தான்.... "லூசு" கூட்டம் என்று சனம் சொல்லும். 😂 🤣
  30. கபிதன்... நீங்கள், "சேம் சைட் கோல்" போடுறீங்கள். 😂 🤣
  31. குர்ஸ்கில் உதவி செய்வதற்காக கார்கிவ் பகுதியில் உள்ள முன் வரிசையில் இருந்து துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி மூலோபாய ரீதியாகப் படைகளை ரஸ்யாவுக்குள் நகர்த்தியதன் ஊடாக உக்ரேன் எல்லைகளில் கவனச்சிதறல் ஏற்பட்டு ரஸ்யப் படைகளைப் பின்னகர்த்த வேண்டியேற்படலாம். அல்லது உக்ரேன் பிடித்த இடங்களில் இழப்புகளைச் சமாளித்து உறுதியாக நிலைகொண்டால் பேச்சவார்த்தையின்போது உக்ரேனின் பேரம்பேசலுக்கான வலுவைத் தக்கவைக்கலாம். இந்த இரண்டில் ஒன்றிற்கன நகர்வாகவே பார்க்கமுடியும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  32. ஒரு தேசமாகத் தமிழினம் நின்ற காலமொன்றை நாம் இனிக்காணமுடியுமா? அதற்கான வலுவான கருத்தூட்டல் மற்றும் அரசியற் செயலாக்கம் போன்றவற்றைச் செய்யும் தகமையைக் களத்திலேயுள்ள எந்தத் தமிழ் அரசியற்கட்சியாவது கொண்டுள்ளதா? ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழினம் காலத்துக்குக் காலம் சிங்களத் தலைமைகளாற் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுவருவதே வரலாறாக உள்ளது. இந்த வரலாற்றுப்போக்கில் தமிழினம் தன்னைத் தனது பூர்வீக நிலத்தில் தக்கவைத்துக்கொள்ளப் பெரும் உயிரீகத்தை செய்து போராடியபோது, அதனைச் சிங்களம் பயங்கரவாதமென்றதும் இந்த உலகு அதனோடு ஒத்தோடி எமது ஆயுதப் போராட்ட வலுவை அழித்தொழித்து எம்மைக் கையறுநிலையில் விட்டுள்ளது. இந்தச் சூழலிற் தமிழினம் ஐநா முதல் அமெரிக்காவரை படியேறிக் கலந்துரையாடல்களைச் செய்தபோதும், எந்த நாடோ நியாயம் பேசும் அனைத்துலக நிறுவனங்களோ தமிழினம் சார்ந்தோ அல்லது இனஅழிப்புச் சார்ந்தோ ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா? இலங்கையராக வாழுங்கள் என்ற உபதேசத்தைத் தவிர வேறெதை இவர்கள் முன்வைக்கிறார்கள். சமஸ்டியைக் கொடுத்துப் பிரச்சினையைத் தீருங்கள் என்று ஏன் இவர்களால் உரத்து கூறமுடியவில்லை. இவர்களுக்கும் தமது நலன்களை அடைய தமிழரது உயிர்கள் தேவைப்படுகிறது. – சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலமாக ஐரோப்பியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி நசிந்துகொண்டிருந்த யூத மக்கள் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் ஹிட்லரால் மேற்கொள்ளப்பட்ட, வரலாறு முன்னெப்போதும் கண்டிராத பாரிய இன அழிப்புக்குள்ளாகினர். அத்தைகைய இன அழிப்பை எதிர்கொண்டு புவிப்பரப்பில் தமக்கென ஒரு சுதந்திர அரசை அமைப்பதில் வெற்றி பெற்றனர். ஆனால் ஐ.நா. வின் பாகப்பிரிவினையை எல்லையை மீறிப் பாலஸ்தீன நிலப்பரப்பை ஆக்கிரமித்ததை ஒருபோதும் ஏற்கமுடியாது. இங்கு அவர்கள் இள அழிப்பை எதிர்கொண்டு அதன் பின் தம்மை விடுதலைக்கு உரியவர்களாக வடிவமைத்த விதத்தில் இருந்து வரலாற்றுப் பாடங்களைக் கற்க வேண்டியது அவசியம். 'இரண்டு யூதன் ஒன்று சேர்ந்தால் மூன்று கட்சி கட்டுவான்' என்று ஒரு யூதப் பழமொழி உண்டு. ஆனால் அப்படிப்பட்ட யூதர்கள் தமக்கு ஏற்பட்ட பாரிய இனப் படுகொலையின் சவாலின் முன்னிலையில் அதிகம் ஐக்கியப்பட்டு அதிகம் புத்திபூர்வமாகச் செயற்பட்டு தம்மிடம் காணப்பட்ட அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி ஒரு புதிய அரசை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர். அவர்கள் தமக்கிடையே நிலவிய பொறாமைகளையும், காழ்ப்புணர்வுகளையும், சிறுமனப்புத்திகளையும் ஒதுக்கித்தள்ளி விடுதலையை இலட்சியமாக்கி வெற்றி பெற்றனர். குறிப்பு: மேலுள்ள இரு பந்திகளும் 'இலங்கை அரசியல் யாப்பு" என்ற நூலில் அதன் ஆசிரியர் திரு. மு. திருநாவுக்கரசு அவர்களின் முன்னுரையில் இருந்து எடுக்கப்பட்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  33. 1983 பின்னர் இனக்கலவரங்கள் நடபெறவில்லை,....30 ஆண்டுகள் தமிழன் திருப்பி அடித்தான். 2009 இருந்து 2024 வரை 15 ஆண்டுகள் இனக்கலவரம். நடக்கவில்லை முக்கிய காரணங்களில் ஒன்று தமிழன் திருப்பி அடிப்பான். என்ற பயம் மலையகம் கூட ஓரளவு பலம்பெற்றுவிட்டார்கள். அவர்கள் கூட திருப்பி அடிக்கலாம்
  34. 28 கிராமங்கள் உக்ரைன் படையினரிடம் விழுந்துள்ளன, 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நிலைமை மிக மோசமானதாக காணப்படுகின்றது என உள்ளுர்ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். பொல்லைக் கொடுத்து அடி வாங்குவது என்பது இதைத் தான். இனி போர் ரசியாவுக்குள் தான்....
  35. நம்மினத்தை பொறுத்தவரை...புதிதாக வராது...வாழையடி வாழையாக என்பதுபோல...எது ஊர்...எந்தப் பள்ளிக்கூடம்..எந்த யூனிவர்சிட்டி.. டாக்டரோ , எந்திரியோ...
  36. பாடத்திட்டத்தில் கலந்துகொள்ளும் பிள்ளைகளை பார்த்தால் உதுகளுக்கு இலகுவாக மண்டையை கழுவலாம் போல தெரியவில்லையே. பாடத்திட்டத்தின் முடிவில் எத்தனைபேர் இந்திய புலனாய்வு அமைப்பினுள் உள்வாங்கப்படுவார்கள்?
  37. புடாபெஸ்ட் மெமோராண்டம். என்ற பெயரில் 5-12-94 இல் ரஷ்யா அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகள் உக்கிரேனின் சுதந்திரம் மற்றும் இயையாண்மை மேலும் தற்போதுள்ள எல்லைகளுக்கு மதிப்பளிகிறோம் என்று இந்த குறிப்பானை. உத்தரவுவாதம் அளிக்கிறது இதில் உக்கிரேனுடன். சேரந்து. அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா கையெழுத்திட்டது ஆனால் மேற்படி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது ரஷ்யாவின். ஒரு பகுதி உக்கிரேன் எனில் உக்கிரேன். கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை மேலும் போரிஸ் பில் கிளிடன் பிரித்தானியா பிரதமர் ஜான் மேஐர் உக்கிரேனிய ஐனதிபதி லியோனிட் குச்மா ஆகியோர் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டார்கள் அது உக்கிரேனின் ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரம் மற்றும் அவர்கள்,..உக்கிரேனியர்கள் தற்பாதுகாப்குக்காக தவிர உக்கிரேனுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களை எதனையும் பயன்படுத்தமாட்டார்கள்,......இந்த ஒப்பந்தம் கிரிமியா இணக்கும்போது ரஷ்யா மீறி விட்டது” 1877 இலும் ஒரு ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது எப்போதும் உக்கிரேன். தனிநாடாக எற்றுக்கொண்டு உள்ளார்கள் உக்கிரேன். ரஷ்யாவில் ஒரு பகுதி இல்லை என்பதற்கு ஆதாரம் ஆகும்
  38. உண்மையென்ன! இலங்கையில் புகையிரதைத்தை நிறுத்தி உணவு வாங்கும் வீடியோ வைரலாக பகிரப்படுகிறது. உண்மையில் அவர் உணவு வாங்க புகையிரதத்தை பாதையில் நிறுத்தினாரா?. இல்லை. அந்த வீடியோ பதிவான இடம் கொழும்பு சிலாபம் வீதியில் இருக்கு வாய்க்கால் என்ற ஊரில். பக்கத்தில் வாய்க்கால் புகையிரத தரிப்பிடம் இருக்கிறது. அந்த station இல் நிறுத்தினால் முன் பகுதி இப்படி வாகன போக்குவரத்துப் பாதையில் நிற்கும். இப்படி பயணிகளுக்காக station இல் நிறுத்தப்பட்ட நேரத்தில் அவர் உணவு வாங்கியிருக்கிறார். மாறாக உணவு வாங்க நிறுத்தவில்லை.
  39. 🤣 Putin interrupts, saying "the defence ministry will report the depth and width" and asks him to "tell us about the social and economic situation and how people are being helped". அமெரிக்க powerball lottery ல் 100 மில்லியன் $ கிடைக்கும் என நம்பியிருந்த ஒருவருக்கு ஆறுதல் பரிசாக free ticket கிடைத்தபோன்ற ஆற்றுப்படுத்தல்தான் மேலேயுள்ள விடயம்,...🤣
  40. தமிழ்ப்பொது வேட்பாளர் அறிவிப்பின் பின்னர் அப்படியே தலைகீழாகத் திரும்பிய சும் வட-கிழக்கு இணைந்த சமஸ்டியைத் தருவோருக்கே ஆதரவு என்று ஏன் கூறுகின்றார். இந்த அறிவிப்பு ஏதோவொரு தாக்கத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளிடையே செய்திருப்பதாலா?
  41. நாமலுடன்.. படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா. 😂
  42. முதலில் சிரிப்பு பட்டனை அமத்தவா எண்டு யோசிச்சன், ஆனால் குமாரசாமியண்ணை எழுதியது வெளிநாட்டுக்கு அகதியாய் வந்தவர்கள் அனைவரும் எதிர்கொள்ளூம் ஒன்று என்பதால் யாதர்த்தத்தைபதிவு செய்கிறார் அதனால் இது சிரிப்பல்ல சீரியஸ் ம் சீரியசுக்கு எப்படி சிரிப்பது என்றாச்சு. மேலே உள்ள வரிகளை சுட்டி காட்டியதன் நோக்கம் வெளிநாட்டுக்கு அகதியா வருபவர்களில் எம்மவர்தான் நீண்டகாலம் ஒரு நாட்டிலிருந்தும் ஒரு மொழியை 60% வீதமாவது கற்றுக்கொள்ளாமல் இன்றும் ஒரு அலுவலுக்கு அடுத்தவர் உதவியை நாடுவதும் , வெள்ளைக்காரனுடன் பேசும்போது தகிட தகிட ததிமி தகிட ததிமி தந்தானா என்று பக்கத்தில நிக்கும் வேற்று நாட்டுக்காரன் எம்மை பார்த்து பரிதாபபடும் நிலையில் உள்ளவர்கள் , எனது அலுவல்களுக்கு மொழி விஷயத்தில் அடுத்தவர் உதவியை பெரிதாக நாடாவிடிலும் நானும் பூரண மொழி ஆற்றலில் மேற்குறிப்பிட்டவர்களின் அதே ரகம்தான். எமக்கு முதல் நிலையில் உள்ளவர்கள் சீனர்கள். எம்மவர்கள் பிற இனங்களுடன் ஒப்பிடும்போது மொழி ஆற்றலில் பின் தங்கியதற்கு இரண்டு காரணங்கள் ,,,வந்த காசு கட்டவேணுமென்று வந்து அடுத்தவாரமே ஓயாமல் வேலை வேலை என்று காலம் முழுக்க ஓடுவது இரண்டு தாயகத்தில் தாய் மொழியை தவிர பிறமொழியை அறியும் ஆற்றல் இல்லாதது, தாயகத்தில் சுத்த தமிழ் பேசுவதற்கு மொழி பற்று முதலாவது காரணமில்லை, இங்கிலீசு தெரியாததும் ஒரு காரணம், உண்மைய சொல்வதானால் தமிழக தமிழ் பேட்டிகள் , டிவி நிகழ்ச்சிகள், உரையாடல்களை நம்மவர்கள் முழுதா புரிவதென்றாலே ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது தாயகத்திலும் , கைஸ், வாவ், வேற லெவல், அதைவிட பல ஆங்கில கலப்பு சொற்கள் யாழ்ப்பாண தமிழில் கலந்துவிட்டன. குமாரசாமியண்ணை கருத்தை பதிவிடுகிறேன் என்று கண்ணாடியை பதிவேற்றிவிட்டார் ஒவ்வொரு அகதியின் முகமும் அதில் தெரியுது.
  43. ஊரில கோவம் வந்தா அப்பத்தா அடிக்கடி ஒரு பழமொழி சொல்லும்.. ஒம்பது புள்ளை பெத்தவளுக்கு ஒரு புள்ளை பெத்தவள் முக்கிக்காட்டினாளாம் எண்டு..😂
  44. 1986ம் ஆண்டு கடுமையான குளிர் நேரம். நடுங்கிக் கொண்டு நின்றோம். குளிருக்கு சிகெரெட் இழுக்க இழுக்க இன்பமாக இருந்தது. உடலில் இருந்து வாய் வழியாக வந்த புகையும், சிகரெட் புகையும் சங்கமித்துக் கொண்டிருந்தன. நண்பன் ஒருவன் சேர்ட்டுடன் வந்து நின்றான். நாங்கள் மூடிக் கட்டிக் கொண்டிருந்தோம். ”உனக்கு குளிர இல்லையா?” என்று என்னுடன் கூட இருந்தவன் அவனைப் பார்த்துக் கேட்டான். ”நான் வந்து ஐஞ்சு வருசமாச்சு. குளிர் பழகிட்டுது” என்று பதில் நடுங்கிக் கொண்டு அவனிடம் இருந்து வந்தது ”அப்ப, ஐஞ்சு வருசத்திலையே இப்பிடி எண்டால் இஞ்சை பிறந்த யேர்மன்காரன் வெறும் மேலோடை எல்லோ குளிருக்குள்ளே திரிவான்” என்று இவன் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை
  45. அமிர்தலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் சர்வகட்சி மாநாட்டிற்கு முன்னரே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டனர். 1985 திம்புப் பேச்சுக்களில் அவர்கள் தம்மை மீளவும் அரங்கிற்குக் கொண்டுவரப்பார்த்தனர். ஆனால், அன்றுகூட இலங்கையினதும், இந்தியாவினதும் கைப்பிள்ளைகளாக மாறி, இலங்கையரசு கொடுக்க விரும்பிய மாவட்ட சபைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டு தமிழரின் நிலையினைப் பலவீனப்படுத்தினர். 1987 இல் இந்தியாவில் இருந்துகொண்டே இந்திய ஆக்கிரமிப்புப் படையின் செயல்களை நியாயப்படுத்தினர். அவரது கொலையினை ஆதரிக்கவில்லை. ஆனால், தனது கொலை நடைபெறுவதைத் தடுக்கும் எந்தக் காரியத்திலும் அவரும் ஈடுபட்டிருக்கவில்லை.
  46. அரங்கம் செய்திகள் தளத்தில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் புலி எதிர்ப்புக் காச்சாலால் மீகவும் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் போலுள்ளது. புலிகளி பாசிச வாதிகளாக மீண்டும் மீண்டும் நிறுவ முற்படுகின்றவர்களின் கூடாரமாக இந்த தளம் உள்ளது போல. ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளை கொன்றது மிகவும் தவறான விடயம் என்பதை மறுப்பதற்கில்லை (முப்படைகளின் தளபதியாக இருந்த சனாதிபதிகள் மீதான தாக்குதல் இந்த வகையில் வராது). அதே நேரம், இவ்வாறானவை இடம்பெற்றிராத, புலிகள் களத்தில் நீக்கப்பட்ட இந்த 15 வருடங்களில், தமக்கு (தமிழர்களுக்கு) அரசியல் ரீதியிலான, நியாயமான தீர்வு அவசியமே இல்லை எனும் அளவுக்கு தமிழர்களாலே மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மிழ் தேசிய பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதை இந்த காச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். தமிழர்களுக்கு சிங்கள அரசு கொடுப்பதாக இருந்த அனைத்து தீர்வுகளும் தமிழர் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குபனவையாகவே இருந்தன. அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்தங்களும் சிங்கள அரசு தன்னை பலப்படுத்த எடுத்த கால அவகாசங்களே ஆகும். இதற்கு சமாந்தரமாக புலிகளும் தம்மை பலப்படுத்தவே இவற்றினை பயன்படுத்தி இருந்தனர். எனவே இருதரப்புமே நேர்மையாக இதில் நடந்து கொள்ளாத போது, வெறுமனே தலைவரையும், புலிகளையும் மட்டும் குற்றம் சாட்டி நிற்கின்றது இந்த கட்டுரை. உலகில் புலிகளையும் தலைவரையும் தவிர, சிங்கள அரசின் கபடத்தை முற்றாக புரிந்து வைத்திருந்த ஒரு அமைப்போ தலைமையோ உலகில் இல்லை. இந்திய பார்ப்பனிய அரசு ஒவ்வொரு முறையும் மூக்குடைபடும் இடமும் இதுதான். புலி நீக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல். ஒற்றை அரசை ஏற்று, போடும் பிச்சையை வரமாக நினைத்து வழிபடும் அரசியல். நீண்ட காலத்தில் தமிழர்கள் தம் அனைத்து அடையாளங்களையும் துறக்க வைக்கும் அரசியல். இதை வலியுறுத்தும் எந்த தரப்பும், எந்த கட்டுரையும் தமிழர்களின் நியாயமான இருப்பையும், அவர்களுக்கான தீர்வையும் நிராகரிக்கும் தரப்பை சார்ந்தவை. பி.கு: நான் சிகப்பு புள்ளியை குத்தியது, கிருபன் இதனை இங்கு இணைத்தமைக்கு அல்ல. மாறாக, கட்டுரை சொல்லும் அரசியலுக்கு எதிராக

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.