Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20012
    Posts
  3. வாதவூரான்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2507
    Posts
  4. island

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1747
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/19/24 in all areas

  1. என்னைப்பொறுத்தவரை ரணிலின் மத்திய வங்கி ஊழல், ராஜபக்ச வம்சத்தின் ஊழல் அதைத்தொடர்ந்த பொருளாதார பிரச்சினை இதனை விட எதுவும் பெரிதாக நடக்க சந்தர்ப்பம் இல்லை. ஒரு மாற்றத்துக்காக அவர்களும் வந்துதான் பார்க்கட்டுமே. வந்தால் மலை போனால் ஒன்டுமில்லை.
  2. இது வெறும் கானல்நீரே. மக்களுக்கு போதிய வருமானமில்லாமல் வரிகள் மக்கள் மீது சுமத்தப்படுகிறது. ஏறிய விலைகள் பெரிதாக இறங்கவில்லை. ஏற்றும் போது நுhற்றுக் கணக்கிலும் இறக்கும் போது ரூபா கணக்கிலும் இறக்குகின்றார்கள். உங்கள் வருமானம் குறைவாக இருக்கும் போது எந்தவித கட்டணமும் இல்லாமல் இருக்க விட்டமாதிரி அரசை விட்டுவைத்திருக்கிறார்கள். இலங்கையில் தடை செய்யப்பட்ட இறக்குமதி இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. ஏற்றுமதியில் முன்னேற்றம் இல்லை. டாலர் உள்ளே வருகுதே தவிர வெளியே போகும் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனாலேயே நெருக்குவாரம் குறைந்த மாதிரி இருக்கிறது. இறக்குமதி தடையை திறந்துவிடும் போது பிரச்சனைகள் வரலாம். மீண்டும் ரணில் வந்தால் வைத்தியம் பல்கலைகளை பணமாக்கலாம்.
  3. தமிழர் சார்பில் தலைமை தாங்குபவர்கள் அன்றில் இருந்து இன்றுவரை பேசும் ஒற்றுமை என்பது ஆட்டு மந்தைகள் போன்ற ஒற்றுமை. எந்த பிரயோசனமும் அற்ற சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஒற்றுமை. உண்மையில் ஒற்றுமை என்பது அதுவல்ல.
  4. முதலில் இந்தப் படத்தைப் பார்த்தபோது இதன் அர்த்தம் புரியவில்லை... ஒரு சிறிய துவாரத்தில் பாம்பின் வால் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை ஒரு பூனை பார்ப்பதாகவும், அது எலியின் வால் என்று நினைத்துக்கொண்டு வெளியே வரும் வரை அந்த வாலை இழுக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது... . பிறகுதான் புரிந்தது... இந்த புகைப்படம் இத்தாலியின் பிரபல ஓவியர் மார்கோ மெல்கிராட்டியின் படைப்பு, அவரது ஓவியத்தின் பொருள்: "யாருடன் விளையாடுகிறீர்கள் என்று தெரியாமல், அபாயத்தை தொடுகிறீர்கள், ஏனென்றால் அறியாமை, பணத்தை நோக்கிய தேடல், விரைவான தீர்வுகளை நாடுதல், பொறுமையின்மை போன்ற குணங்களால் இன்று நாம் சூழப்பட்டுள்ளோம்." இன்றைய வேகமான மற்றும் பிஸியான வாழ்க்கையில், நாம் காண்பது உண்மையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே.... நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ?? சுகாதார நிலைமைகளை, நமது ஆரோக்கியத்தை எலியின் வால் என்று நாம் கருதுகிறோம் & சுவருக்குப் பின்னால் இருப்பது உண்மையான நாகப்பாம்பு என்று ஒருபோதும் யூகிக்க மாட்டோம். எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் உடல்நிலையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். நாகப்பாம்பின் வாலை எலி வாலாகக் கருதி விளையாட்டாக இருக்காதீர்கள். எப்போதுமே, வாழ்க்கை முக்கியமானது, ஆரோக்கியம் அதைவிட முக்கியமானது. இந்தப் படத்தை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் முழு படத்தையும் பார்க்க முடியாது. முழுப் படத்தையும் பார்க்க முடிந்தால், நாம் சிறியது என்று நினைப்பது உண்மையில் நம்மை விடப் பெரியது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். எனவே உங்கள் உடல்நிலையை கவனித்து ஆரோக்கியமாக இருங்கள். Usha Ravikumar
  5. ஐயா சம்பந்தரின் இறுதி அஞ்சலியின் போதுகூட இவ்வளவு மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்க.
  6. கூட்டத்துக்கு வாறாக்களுக்கு வீட்டுத்திட்டம்,சமுர்த்தி,வெள்ள அழிவுக்கு காசு எல்லாம் உள்ளுக்கால கதச்சு எடுத்து தருவம்.. பிள்ளையளுக்கு சமுர்த்தி வேலை எல்க்ற்றி சிற்றி போர்ட்டில வேலை, ஜீஎஸ் வேலை உள்ளுக்கால எடுத்து தருவம்..
  7. முட்டாள்தனமான ஒப்பீடு. அன்று, ஈரோஸ் வென்றதன் காரணம், இந்திய இராணுவம் புலிகளை அழித்தொழிக்க போரை ஆரம்பித்து அவர்களை நகர்புறங்களில் இருந்து பின்வாங்க செய்து காடுகளுக்குள் அனுப்பிய பின்னும், தமக்கான மக்களின் பேராதரவை நிரூபிக்க ஈரோஸ் இன் பின்னால் இருந்து அவர்களை புலிகள் இயக்கியமையே. ஈரோஸின் வெற்றி= புலிகளுக்கான மக்கள் ஆதரவு எனும் சமன்பாட்டில் விளைந்த வெற்றி. வெறும் 14 வயதில் இருந்த என்னைப் போன்றவர்களையே, இந்திய இராணுவத்தின் அழுத்தங்களுக்கும் மத்தியில் கையெழுத்தில் எழுதி சுவரொட்டி களை ஒட்ட வைக்கும் அளவுக்கு அன்று கூட்டுணர்வு இருந்தது. ஆனால் இந்த பொது வேட்பாளர் தெரிவு அவ்வாறு இல்லை. எமக்குள் இருக்கும் ஒற்றுமையின்மையை உலகுக்கு ஓங்கிச் சொல்லும் ஒரு நடைமுறை. தமிழ் கூட்டுணர்வு என்பது இந்த விடயத்தில் இல்லை என்பதைக் காட்டும் முயற்சி இது.
  8. அனுதாப ஓட்டு எடுக்க முயற்சி பண்ணுகின்றார். அவர் மறியலில்… கையில் தட்டும், அரைக் கால்சாட்டையுடன் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்ற போது வராத அனுதாபம் இதுக்கா வரப் போகுது. 😂
  9. வெடிகுண்டே கொண்டு வந்தாலும் சரத் வெல்ல சாத்தியமே இல்லை.
  10. தமிழ் பொது வேட்பாளராக ஒரு பென் வேட்பாளர் போட்டியிட்டிருந்திருக்கலாம், 90 களில் சந்திரிக்கா கணவனை இழந்த குடும்பத்தலைவி என வாக்கு கேட்ட நேரம் வட கிழக்கில் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயமாக எனது வாக்கு சந்திரிக்காக இருந்திருக்கும், தமிழ் வேட்பாளரை விட அந்த நேரம் அவர் மக்களிடம் அனுதாப அலையினைக்கொண்டிருந்தார், ஆனால் வெற்றி பெற்ற பிறகு ஏதோ சொல்வார்கள் அது போல் அவரும் மாறிவிடார், ஆனால் அவர் சொன்ன குழந்தைகளை இழந்த பெற்றோரின் வலி தனக்கு தெரியும் என்றது பொய்யில்லை என இப்பவும் நம்புகிறேன். இந்த பொது வேட்பாளர் விடயத்தில் ஒற்றுமையாக செயற்பட்டிருக்கலாம், ஆனால் எமது பிரச்சினையே அதுதான்.
  11. கடந்த சில வருடங்களாக ஸிம்பாப்வே அணியின் ரேஞ்சுக்கு தரம் இறங்கிய இலங்கை அணிகள், ஆண்களுக்கான ஒருநாள் தொடரிலும், பெண்களுக்கான ஆசியகோப்பை போட்டியிலும் ஆனானப்பட்ட இந்திய அணியையே ஊதி தள்ளி படிப்படியாக பழைய பலமான நிலைக்கு திரும்பி வருவதுபோல் ஒரு உணர்வு. அதுநிற்க, பாரம்பரியமிக்க வீரகேசரி நாளிதழ் ஒரு கிரிக்கெட் வீராங்கனையை வர்ணிக்கும் விதம் வடிவேலு ஸ்டைல்ல சொல்லணும் எண்டால் ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு . ஒருவேளை இந்த எபெக்ட்டா இருக்கலாம் >>>
  12. மெய்ப்பொருள் காண்பது அ(ரிது)றிவு. “தம்பி ஊரில என்ன நடக்குது ஒவ்வொரு நாளும் வெட்டுக்குத்து ,ஆவா குறூப்பின் அடாவடி எண்டு ஊர்ப்புதினத் தலையங்கத்தில அடிக்கடி வருது , கோயில் திருவிழாவுக்கு வேற வரோணும் இப்ப எப்பிடி நிலமை அங்க“ எண்டு தொடங்கின கனடாக் கோல் இடையிலயே cut ஆகீட்டுது. காலமை கோல் கதைச்சு முடியாமல்ல வேலைக்கு வெளிக்கிட வீட்டில மாமி வேற, “இப்ப பேப்பரைப் பாக்கவே ஏலாது முன் பக்கம் வெட்டும் கொத்தும், சண்டை எண்டுதான் இருக்கு” எண்டு புறுபுறுத்தபடி தேத்தண்ணிக் கோப்பையை கழுவப் போனா. இதை நம்பி வாட்டுக்குள்ள போய் வந்த newsன்டை எடுப்புக்கு ஏத்த மாதிரி நாலு “பீமன்கள்” இருப்பாங்கள், கை கால் எண்டு வெட்டுப்பட்டு தொங்கிக்கொண்டு இருக்கும், எப்பிடிப் பொருத்தப்போறம் எண்டு பாத்தா, வாளைத் தூக்கினது எண்டு சொல்லி ரெண்டு நோஞ்சான் , வெட்டு வாங்கினது எண்டு காயங்களோட மூண்டு அதை விட சொத்தல். அப்பதான் விளங்கிச்சுது பேப்பரில தலைப்பில வந்த அளவுக்கு weight ஆக்களுக்கும் இல்லை news க்கும் இல்லை எண்டு. எண்பதுகளில பேப்பரை வாங்கி வாசிக்க கொஞ்சம் நேரம் எடுக்கும் ஆனாலும் வாச்சு முடிய உலகத்தையே சுத்தி வந்த மாதிரி இருக்கும். என்ன தான் ஆராவது ஒரு கதையை முழுக்கச் சொல்லி இருந்தாலும் முழுப் பேப்பரா இருந்தாலும் இல்லாட்டி special edition ஒரு பக்கப் பேப்பரா இருந்தாலும் அதை வாங்கி வாசிச்சாத்தான் ஒரு தெளிவு இருக்கும். இலங்கை முழுக்க ஆறு தமிழ்ப்பேப்பர் வரேக்க, யாழ்ப்பாணத்தில மட்டும் 3 பேப்பர் வாறது. ஈழநாடு, முரசொலி அதோட கனகாலமா தனித்து உதயன் வந்தது. வீரகேசரியும், தினபதி, தினகரனும் கொழும்புப் பேப்பர். வார வெளியீடா ஞாயிற்றுக்கிழமை வாற பேப்பரை முதலே book பண்ணி வாங்காட்டி காலமை போகக் கிடைக்காது . அதிலேம் சிந்தாமணி எண்டு வாற தினமதியின்ட ஞாயிறுப் பேப்பருக்கு demand கூட. அதோட எண்பதுகளில Hot Spring , Saturday review எண்டு English paperகளும் ஊரில இருந்து வாறது. English paper வாங்கவெண்டு ஒரு தனிக் கூட்டம் இருந்தது. வீட்டை வாங்கிற இங்கிலிஸ் பேப்பரை வாசி எண்டு வற்புறுத்த அதுகும் daily news எண்டா lifco dictionaryயோட தான் போகவேணும் வாசிக்க. Dailynews காரன் “லங்கா புவத்” ஆ மாறினாப் பிறகு Sunday times ஐ சனம் கூட வாசிக்கத் தொடங்கிச்சுது. இக்பால் அத்தாசும் fifth column உம் ஆங்கிலத்தோட அரசியல் அறிவையும் தந்திச்சுது. வெள்ளைகாரன் மாதிரி நாங்களும் பேப்பரோட தான் toiletக்குப் போறனாங்கள் , என்ன அவங்கள் கொண்டு போறது துடைக்கிறதுக்கு நாங்கள் வாசிக்கிறதுக்கு. யாழ்ப்பாணத்தானுக்கு காலமை கட்டாயம் ஒரு கையில பேப்பரும் மற்றக்கையில பால்க்கோப்பியோ தேத்தண்ணியோ இருக்கோணும். இப்ப what’s app ஐப் பாக்க phone ஓட போற மாதிரி கக்கூசுக்கு கையில பேப்பர், கோப்பி, சுருட்டு எண்டு ஒவ்வொருத்தரும் ஏதோ ஒண்டையோ ரெண்டையோ கொண்டு போவினம். அப்ப பேப்பர் மட்டுமே விக்கிற கடை இருந்தது சில கடைக்காரர் காலமை வந்து பேப்பரை வித்திட்டுப் போய் திருப்பி வந்து ஒம்பது மணி போல கடைதுறந்து மிச்ச வியாபாரத்தைச் செய்வினம். பால், பாண் எல்லாம் வீடு தேடி வந்து வியாபாரம் செய்தாலும் பேப்பரை வீடுவீடா விக்கறதோ இல்லாட்டிப் பேப்பரை வீட்டில போய் போடிற ஆக்களோ இருக்கேல்லை. கடைக்குப் போய் வாங்கின பேப்பரை கடை வாசலிலயே வைச்சு விரிச்ச மேலால மேஞ்சிட்டுத்தான் வீட்டை பேப்பரைக் கொண்டு வாறது. காலமை வாங்கிற பேப்பரை முதல்ல ஆர் வாசிக்கிறது எண்டதிலேயே சண்டை வரும் . கடைசீல சமாதானாமா உள்பக்கம் வெளிப்பக்கம் எண்டு பக்கமா பிரிச்சு ஆளுக்கு ஒண்டொண்டா வாசிக்கிறது. ஆம்பிளைகள் எல்லாம் காலமை வாசிச்சு முடிய அம்மாமார் எல்லாம் மத்தியானம் சமைச்சிட்டு படுத்திருந்து வாசிப்பினம் . அதோட பின்னேரம் ரோட்டில நடக்கிற அரட்டை அரங்கத்தில அதைப்பத்தி கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். ஊரில ரெண்டு மூண்டு பேப்பர் வாற காலத்தில பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிற பேப்பரை நாங்கள் வாங்கிறதில்லை பேப்பரை வாங்கி பின்னேரம் மாத்தி வாசிக்கிறது. இப்பத்த Breaking newsக்கு முன்னோடி எங்கடை ஊர் special edition தான். முதல் முதலா எப்ப இந்த special edition பேப்பர் வந்தது எண்டு தெரியேல்லை. திடீரண்டு வந்து பிளேன் நிவாரணம் போட இந்திய ராணுவம் வரப்போது எண்ட செய்திதான் முதல் வந்த special edition எண்டு நெக்கிறன். இது Print பண்ண முதலே வரப்போதாம் எண்டு சனம் எப்பிடியாவது கேள்விப்பட்டிடும். எனக்குத் தெரிஞ்சு அச்சகத்தில இருந்து வாற special பேப்பரை கடைக்குள்ள கொண்டு போய் வித்ததா சரித்திரம் இல்லை. எல்லாமே வாசலில வைச்சே சனம் வாங்கி முடிச்சிடும். ஊடகம் எண்டதுக்கு அப்ப ஊர்ப் பேப்பர்கள் தான் சரியான உதாரணம். அது ஊரெல்லாம் சனத்தோட ஊடுருவி யாழ்ப்பாணத்தில செய்தியாய் இல்லாமல் வாழ்வாய் இருந்திச்சுது. அறிவிக்கப்பட வேண்டிய மரணங்கள் கூட அறிவித்தலா இல்லாமல் செய்தியாய்த் வரும் அவசரம் உணர்ந்து. சோதினைக்கு Apply பண்ணிற ஒரு பள்ளிக்கூடத்தில பிறகு இடம்பெயர்ந்து வந்து படிக்கிறது வேறொரு பள்ளிக்கூடத்தில, கடைசியாச் சோதினை எழுதிறது இன்னொண்டா இருக்கும். முதலாவது சோதினை ஒரு பள்ளிக்கூடத்திலேம் செல்லடிச்சு ஓடிப்போய் ரெண்டாவது சோதினை எந்தப் பள்ளிக்கூடத்தில எண்டு பாக்கிறதுக்கும் Index number ஐ விடியவில தேடிக் கண்டு பிடிக்கிறதும் Paper இல தான். சோதினை index number மட்டும் இல்லை கிளாலிப்பயணத்துக்கு இண்டைக்கு எந்த token காரர் போகலாம் எண்டைதையும் பேப்பரில பாத்துத்தான் ஆக்கள் பயணம் போறது. சனங்கள் பேப்பர் இரவல் வாங்கிறது குறைவு , சந்தையில மரக்கறி விக்கறவரில இருந்து சைக்கிள் கடைக்காரர், சலூன் காரர் எண்டு எல்லாரும் பேப்பர் வாங்கி வேலைக்கு நடுவில கொஞ்சம் கொஞ்சமா வாசிச்சு முடிப்பினம். அப்ப எல்லாரும் பேப்பர் வாங்கி வாச்சாலும் ஊரெல்லாம் சந்திக்குச் சந்தி வாசிக சாலை இருக்கும் . சரிச்ச அடிச்ச மேசையில பேப்பருக்கு நடுவில குறுக்கால ஆரும் களவெடுக்காம இருக்க கம்பி வைச்சு பூட்டுப் போட்டிருக்கும் . அங்க போய் நிண்ட படி தான் வாசிக்க வேணும் . பழைய பேப்பர் எண்டால் இருந்து வாசிக்கலாம். அனேமா அண்டைக்கு வாற எல்லாப் பேப்பரோட weekend பேப்பரும் இருக்கும். வீட்டில இருக்கிற வேலை வெட்டி இல்லாத (retired ) ஆன ஆம்பிளைகளும் அதோட வெளீல இருந்து லீவில வந்திருக்கிறவை எல்லாரும் வருவினம் . என்னதான் வீட்டை பேப்பர் வாங்கினாலும் வந்து மிச்ச எல்லாப் பேப்பரையும் வாசிச்சு முடிச்சிட்டு வெளீல இருக்கிற வாங்கில இருந்து ஊர்ப்புதினம் அரசியல் நிலை எல்லாம் கதைச்சிட்டுத்தான் திருப்பி வீட்டை போவினம். இது எல்லாம் ஒரு வகை pocket political meeting மாதிரித்தான். வாசிகசாலை கொஞ்சம் பெரிசாக வாசிப்பைத் தாண்டி அது சனசமூக நிலையமாக மாறும். வாசிப்போட நிக்காம அறிவோட அரசியல், விளையட்டு, சமயம் எண்டு எல்லாத்தையும் வளக்கத் தான் இது. இப்ப ஊரில இருக்கிற கோயில், குளம் ,காணி, கட்டிடம் எல்லாம் ஏனெண்டு காரணம் இல்லாமல் courtஇல நிக்க அந்தக் காலத்தில எழுதப்படாத சட்டங்களால தான் இந்த சனசமூக நிலையங்கள் நடந்திச்சுது. பேப்பர் வாசிக்க எண்டு தொடங்கி வாசிச்சதோட நிக்காம கடைசீல சனத்துக்கும் சமூகத்துக்கும் சேவை எண்டு மாறினதெண்டால் அதுக்குப் பேப்பர் தான் காரணம். அந்த நாட்களில பட்டறிவை பகுத்தறிய பேப்பரும் அதைப் பகுத்துப் பாக்கிற ஆக்களும் இருந்திச்சினம். இப்ப எல்லாச் செய்தியையும் வாச்சிட்டு இவர் வந்தால் ஏதாவது தீர்வு கிடைக்குமா கிடைக்காதா, அவர் சொன்ன மாதிரிப் போராட்டம் வெடிக்குமா வெடிக்காதா எண்டு தேடத் தொடங்கி, குழம்பிப் போய் தொடந்து வாசிக்க accidentம் , வெட்டுக் கொத்தும் எண்ட செய்தி தான் இருக்கும். முன்பக்கத்தில வாற news முக்கியத்துவம் பெற நடக்கிற சில நல்ல விசியங்கள் வாசிக்கப்படாமலே போக ஏதோ இப்ப ஊரில எப்பவுமே பிரச்சினைதான் எண்ட மாதிரி negative thoughts மனதில வந்திடும். பேப்பரில இடம் நிரப்பக் குறை நிரப்புப் பேரணையாக வாழ்த்துகளும் அஞ்சலிகளும் போட்டு நிரப்பத் தொடங்கி கடைசீல அது பத்துப் பக்கமா மாறத் தொடங்க இடைவெளியை நிரப்பிறது news ஆ மாறீட்டுது. ஐஞ்சாம் வகுப்பில இருந்து ஆடியபாதப் பள்ளிக்கூடம் வரை pass பண்ணினதைப் பாராட்டி வாழ்த்திற பத்துப் பேரும் , இவை எல்லாருக்கும் நான் தான் படிப்பிச்சனான் எண்டு சுய விளம்பரம் போடிற ரியூசன் வாத்திமார் கொஞ்சப் பேரும், இருக்கேக்க பாக்க வராம இப்ப பக்கம் முழுக்க பாட்டி ஒண்டுக்குப் பத்தாவது வருசஅஞ்சலியும் , ஒண்டிலிரந்து நூறு வயது வரை பிறந்த நாள் வாழ்த்துகளும் தான் முக்கியத்துவம் பெறத்தொடங்கீட்டுது. வீட்டு விசேசத்தை நேர வாழ்த்தி, what’s app இல வாழ்த்தி, face book இல வாழ்த்தி அது எல்லாம் பழசாப் போக பேப்பரில படம் போட்டு வாழ்த்தீட்டு வாழ்த்துவோர் எண்டு அன்பு அப்பா , ஆசை அம்மா எண்டு அந்தக்காலத்தில ரேடியோ சிலோன் பிறந்த நாள் வாழ்த்து மாதிரி அடைமொழியோட ஊருக்கெல்லாம் தெரியப் போடிறது தான் அன்பின் வெளிப்பாடா போட்டுது. இதுக்கு மேலால கலர் படத்தோட கோயில் கும்பாபிசேகம் எண்டு வழக்கமா வாற ஐஞ்சு பேரோட இன்னும் கொஞ்சப் பேரின்டை வாழ்த்துச் செய்தியோடேம் படத்தோடேம் வாற விசேட மலர் வெளியிட்டிக் கொஞ்ச நாளிலியே சில நேரம் கோயில் நிர்வாகம் கோட்டில நிக்குதாம் எண்டு செய்தியிலேம் வரும். வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் எண்டதுக்குப் புத்தகம் தேவேல்லை பேப்பர் வாசிப்பதால் எண்டு போட்டாலே சரி எண்ட அளவுக்கு அப்பத்தக் காலத்தில பேப்பரும் வந்திச்சுது சனங்களும் அதை வாசிச்சுது. ஆனா இப்ப முன்பக்கம் கனக்க கவர் பண்ணிறம் எண்டு எல்லா newsஐயும் போட்டிட்டு மூண்டு பக்கத்துக்கு தொடர்ச்சி எண்டு போட மூண்டாவது தொடர்ச்சீல முதல் பக்க news மறந்தே போடும். அப்ப தங்கடை பேப்பருக்கு எண்டு தனித்துவமா reporters, editors எண்டிருந்த காலம் மாறி இப்ப ஒரே ஆள் தான் ஊரில இருக்கிற எல்லாருக்கும் news குடுப்பார் போல இருக்கு. ஏனெண்டால் முதல் நாள் இரவு web இல இருக்கிறது தான் அடுத்த நாள் print இலயும் வரும். அதோட ஆற்றேம் ஒராளின்டை கருத்து Facebook இல கூட likes வந்தா அது கூடக் கொஞ்ச நாளில செய்தியாக்கூட வரும். இன்னும் காலமை பால்த்தேத்ண்ணியோட பேப்பரை வாங்கிப் பாத்திட்டு பின்னேரம் பட்டறிவோட போய்க் கதைச்சு பகுத்தறிவோட வாற ஆக்களும், ஆராஞ்சு எழுதிற ஆசிரியர்களும் , சில பேப்பரும் ஊர் உலகத்தில இன்னும் இருக்குது எண்டது சந்தோசம். மெய்ப்பொருள் காண்பது அறிவாய் இருந்தது அரிதாய் போக்கூடாது , போகாது எண்ட நம்பிக்கையுடன்……. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
  13. ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்! August 17, 2024 இலங்கையில் 9-ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்ப் பொதுவேட்பாளர் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் நாளை காலை 9 மணிக்கு தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்துவார். அதன் பின் ஊடகச் சந்திப்பு இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ilakku.org/ஜனாதிபதித்-தேர்தல்-2024-தமிழ/
  14. https://timesofindia.indiatimes.com/videos/toi-original/kolkata-doctors-last-words-before-horrific-rape-murder-revealed-i-want-to-be-watch/videoshow/112552183.cms?fbclid=IwY2xjawEv0CZleHRuA2FlbQIxMAABHbKHKGXNSWu7n7YWPY1GNOELchx1Bs1iz558QA-bMuJm0VQbs4taiGEesw_aem_lcxvXznR72fMYKeYy-gYXw கிழித்தெறியப்படும் கவிதைகள் இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம் புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட நெறி தவறாமல் நாம் எம் கவிதைகள் படித்தோம் காலம் உருண்டோடி இச்சைக் கருவிக்குச் சண்டை போட்டபோது கசக்கி எறியப்பட்டன பல கவிதைத் தாள்கள் சாத்தான்களின் இவ்வுலகில் இங்கு யார்மீதும் புகார்களுக்கு இடமில்லை ஆதலால் எங்கள் கவிதைத் தாள்களை அடிக்கடி இங்கே பேய்கள் கூடிக் கிழித்தெறிகின்றன அந்தர வெளியில் மிதந்து காட்சிகள் மட்டுமே வாழ்வென நம்பும் தலைகீழ் பட்சிகளாய் எக்கணமும் அவிழ்க்கத் துடிக்கும் வன்மத்துடன் ஒவ்வொரு தெருவின் ஓரத்தையும் முகர்ந்து பார்த்தபடி நகரும் நிர்வாண நாய்கள் களியாட்டச் சுகம் தேடும் வேட்கையில் புணர்வதை மட்டுமே குறியாகக் கொண்டு குறிகள் நிமிர்த்தி நகக் குறிகள் பதித்து குரல்வளை நசுக்கும் கொடூர ஓநாய்கள் இரண்டகப் பிண்டங்கள் உலவும் பெருநகரில் கவிதைகள் பற்றிய தேடலில் பிசாசுகள் பேதங்கள் பார்ப்பதில்லை பிண்டம் ஒன்றே குறியெனக் கொண்டு எங்கள் கவிதைகளை அவை எப்போது வேண்டுமானாலும் நொடிப் பொழுதில் கிழித்தெறிகின்றன. தியா - காண்டீபன் #நீ_கொன்ற_எதிரி_நான்தான்_தோழா
  15. நல்லூர் கோயில் ஆண்களுக்கு மேற்சட்டையை அகற்றும் படி பணித்ததின் பின் ஒரு சுவாரசிய கதை இருக்கிறது. அது சித்தார்த் (போன்றவர்களின் ) முன்னைய சந்ததி நல்லூர் கோயிலுக்குள் வருவதை சாதி அடிப்படையில் ஒரு பகுதியினர் எதிர்த்தனர் (இதில் வேறு பல சாதிகளும் உள்ளடக்கம், இந்த ஒவ்வொரு சாதியும் அவர்களுக்கு இடையில் வேறுபாடு பார்ப்பது வேறு விடயம் - ஒவ்வொரு சாதிக்குள்ளும் 9 ஆக பிரித்து வேறுபாடு. இதில் வேடிக்கை, சித்தார்த் போன்றவர்களின் சாதிக்குள்ளும் அந்த பிரிவுகள் - தமிழினத்துக்கு எப்படி அவர்களே அவர்களை பிரிப்பது என்பதில் புதுமை சிந்தனை பட்டம் வழங்கலாம்). பொதுவாக சித்தார்த் போன்றவர்களின் முனைய சந்ததிக்கு வசதி இல்லை, அதனால் அவர்கள் மேல் சட்டை அணியாமலேயே நாளாந்த வாழ்க்கை எங்கு சென்றாலும். (ஆனால், பொதுவாக, நல்ல உழைப்பு என்று அந்த நேரம் இருந்தவர்கள் கூட வசதியாக இருந்ததாக உணரவில்லை. எனது அம்மா, அப்பா முப்பாட்டன் சந்ததி வயல்களை கொண்டிருந்தது பூநகரியில், புகையிலை வியாபாரம் என்று இலக்கைத் தீவு முற்றாக சுற்றி திரிந்தது. நன்றான வருமானம் ஒப்பீட்டளவில், ஆனாலும் வசதி என்று உணரவில்லை, எனது அப்பா, அம்மா சொன்னவற்றில் இருந்து, அவர்கள் எதிர்நோக்கிய வாழ்க்கை கடினங்களை பற்றி). அதனால் மேல்சட்டை அணியாது வருபவர்கள் தடுக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் பொதுவாக இதனால் பாதிக்கப்பட்டது சித்தார்த் (போன்றவர்களின் ) முன்னைய சந்ததி. இதை பார்த்த மாப்பாண முதலியார், விதியாக எல்லா ஆண்களும் மேல்ச்சட்டை அகற்றும் படி விதி கொண்டுவந்தார், சித்தார்த் போன்றவர்களின் முனைய சந்ததியை மேல்சட்டை இல்லாததை கொண்டு அடையாளம் பார்த்து நல்லூர் கோயிலுக்குள் வருவது தடுக்கப்படுவதை தவிர்க்க. ஆனால், புதிய வேடிக்கை சித்தார்த் மேல்ச்சட்டையுடன் நல்லூரை வெளிவீதி வலம் வந்தது, அதிகார சிங்கள இனத்தினர் மேல்ச்சட்டை இல்லாமல் வெளிவீதி வலம் வந்தது. மிகவும் வினோதமான உலகமும், காலமும்.
  16. ஒரு இரவு, எங்களின் அறைக் கதவுகளில் படபடவென்று அடித்தார்கள். நாங்கள் திறந்தோம். வந்திருந்தவர்களில் சிலர் எங்களுக்கு ஏலவே தெரிந்த ஜேவிபி ஆதரவு மாணவர்கள். சிலர் எங்களின் பீடம், வகுப்பு, சிலர் வேறு பீடங்களைச் சேர்ந்தவர்கள். எங்களை வெளியில் நிற்க விட்டு விட்டு அறைகள் முழுவதும் தேடினர். சில 'புலிகள்' எங்களுடன் வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார்கள். போலீஸோ அல்லதோ இராணுவமோ வரவில்லை. இவர்கள் மட்டும் தான் வந்திருந்தனர். இடதுசாரிகள் என்னும் நிலையிலிருந்து சிங்கள தேசியத்திற்கு இவர்களின் தலைமை அன்று மாறிக் கொண்டிருந்தது. விமல் வீரவன்ச போன்றவர்களால் இந்த மாற்றம் பொதுவெளியிலேயே நடந்து கொண்டிருந்தது. அன்று வந்த எல்லா தீர்வுப் பேச்சுவார்த்தைகளையும் எதிர்த்தனர். இன்றும் தான்.
  17. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இவர்கள் எல்லோரும், நீங்கள் சொல்வது போலவே, நல்லவர்கள் இல்லை, குத்துபவர்கள் போன்றே தெரியும். அதுவும் சரி தான், ஏனென்றால் வெளிநாட்டில் வாழ்வோர் எதிர்பார்ப்பது தனிநாடு அல்லது சமஷ்டி அல்லது ஆகக் குறைந்தது காணி, போலீஸ் அதிகாரங்களுடன் கூடிய வட கிழக்கு இணைந்த மாகாணசபை. இது எதுவுமே ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் அங்கே வாழும், தொடர்ந்து வாழப் போகும் தமிழ் மக்களின் தெரிவோ எவர் குறைவாக அவர்களின் வயிற்றில் அடிப்பவர் என்றே இருக்கும். எவரால் வேலை வாய்ப்புகள், வசதிகள் கிடைக்கும் என்று தேடியே வாக்களிக்கப் போகின்றனர். இந்த வகையில் அநுர குமார நல்ல ஒரு தெரிவில்லை. கோத்தா நாட்டைக் கெடுத்த பின், ஓடினார். அவர் ஓடியது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது. ஜேவிபியினருக்கு அதிகாரம் கிடைத்து, இதே நிலைமை மீண்டும் வந்தால், அவர்கள் ஓடமாட்டார்கள். இருந்து முடிவு வரை தொடர்வார்கள். இன்றைய பலஸ்தீனத்தையே திரும்பிப் பார்க்காத மேற்குலகம் எங்களை என்றும், எது நடந்தாலும் திரும்பிப் பார்க்கப் போவதும் இல்லை. தொடர்ந்து ஆயிரத்தில் ஒன்றாக எங்களின் கதை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்.
  18. வெளிநாட்டிலை இருக்கிறவை அங்கையிருந்து வெளிநாட்டுக்கு வாறவைய பற்றி கதைக்க /விமர்சனம் செய்யக்கூடாதாம். அருகதை இல்லையாம். 😀
  19. எப்ப விசிட்டர் விசா வருமென்று பார்த்துக்கொண்டிருக்கிறவை ..ஏன் அதைப்பற்றி கவலைப்படப் போகினம்..
  20. ஓணாண்டி இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலை. இங்கே வாக்குரிமை இல்லாத நாஙடகதான் பொதுவேட்பாளருக்கு எதிராக குத்தி முறிகிறோம்.
  21. இப்போது எவர் நல்லவர்? நெஞ்சிலே குத்துபவரா? முதுகிலே குத்துபவரா? எப்படியும் குத்து வாங்கத்தானே போறம்.எங்க வாங்கினால் என்ன இப்படிணும் யோசிக்கலாம். இரண்டு வருடத்துக்கு முன் வெனிசூலா ஆக்கியது ஜேவிபியா சார்?
  22. ஜேவிபியின் கொள்கைப் படி இலங்கையில் வெவ்வேறு அடையாளங்கள் கொண்ட மக்களே கிடையாது. எல்லோரும் இலங்கையர்களே. அது தான் அவர்களின் தீர்வு. தமிழர்களுக்கு என்றோ அல்லது வேறு எந்தப் பிரிவினருக்கு என்றோ அங்கு தனிப்பட்ட பிரச்சனை என்று ஒன்றே கிடையாது என்பது தான் அவர்களின் நிலைப்பாடு. மற்ற அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு பிரச்சனை இருக்கின்றது, நாங்கள் தீர்த்து வைக்கின்றோம் என்று சொல்வார்கள், ஆனால் ஒருபோதும் அவர்களில் ஒருவரும் இது சம்பந்தமாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடப் போவதில்லை. ஜேவிபி அப்படி ஒரு பிரச்சனையையே கிடையாது என்று ஆரம்பத்திலேயே அடித்து மூடிவிடுவார்கள். இவர்கள் பொறுப்புக்கு வந்தால் இலங்கை வெனிசுவேலா ஆவது துரிதகதியில் நடக்கும். இவர்களின் தேசியமயம் என்ற ஒரு கொள்கையே போதும் நாட்டை இருப்பதை விட இன்னும் சில தசாப்தங்கள் பின்னுக்கு கொண்டு போக. அசாமில் ஒரு தடவை மாணவர் புரட்சி வென்று, ஆட்சிக்கும் வந்தார்கள். புரட்சியில் வென்ற அவர்கள், ஆட்சியில் அந்த மாநிலத்தை அழித்தார்கள். அதே வரலாறு இங்கே மீண்டும் திரும்பும். கட்டப் பஞ்சாயத்தை நேரில் பார்க்கலாம். அது தான் அவர்களின் சட்டம் ஒழுங்கு.
  23. ஜனாதியாகவே வரமாட்டார். எப்படி இந்த உறுதி மொழிகளை அளித்திருக்க முடியும்??
  24. அன்னக்கிளி.....அன்னக்கிளி சாய்ஞ்சாடுறா.🥰
  25. நேற்றையான் போட்டிய‌ கைபேசியில் இருந்து பார்த்தேன் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி சிம்பிலா வெல்ல‌ வாய்ப்பு இருந்த‌து என்ன‌த்துக்கு தேவை இல்லாம‌ ர‌ன் அவுட் ஆகிச்சின‌ம் என்று என‌க்கு புரிய‌ வில்லை க‌ட‌சி 10ஓவ‌ரில் 5 விக்கேட்டை ப‌றி கொடுத்த‌வை அது தான் தோல்விக்கு கார‌ண‌ம் தொட‌ரை அய‌ர்லாந் ம‌க‌ளிர் அணி வென்று விட்ட‌து வாழ்த்துக்க‌ள் இந்த‌ தொட‌ரில் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன் அட்ட‌ப‌ட்டு சிற‌ப்பாக‌ விளையாட‌ வில்லை.....................அதிக‌ம் சாப்பிட்டு சாப்பிட்டு உட‌ம்பை கூட்டுகிறா ஆனால் கிரிக்கிட்டில் உட‌ம்மை எப்ப‌வும் க‌ட்டுப்பாட‌ வைச்சு இருக்க‌னும் அப்ப‌ தான் ப‌ந்தை தூக்கி அடிக்க‌ சுக‌மாய் இருக்கும்.............................
  26. அதே. நாம் நமது குறைகளை நமது பலவீனங்களை களையாமல் மீட்சி இல்லை இல்லை இல்லை.
  27. அடுத்த வருடத்தில் இருந்து கார்கள் இறக்குமதி செய்ய முடியாது என (புதிய)கூறப்படுகிறது.
  28. சொல்லிவச்சமாதிரி எல்லாம் பெண்களாக இருக்கு. சொந்த பந்தங்களை ஏத்தி வந்து இறக்கி விட்டிருக்கினம்ப்போல..
  29. கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு வந்த மக்களை விட அதிக மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
  30. ஏன் ஜேவிபி வந்தால் என்ன பிரச்சினை வரும் என்றுநினைக்கிறியள்?
  31. ஜோ ரூட்டின் சராசரி 50, சச்சினின் சராசரி 53 ஆனாலும் ஜோ ரூட்டினால் சச்சின் சாதனையினை முறியடிக்க முடியும் அடிப்படையில் ஜோ ரூட்டினதும் சச்சினது விளையாட்டு முறைமை (Technic) ஒரே மாதிரியானது, இருவரும் வலது கை ஆட்டக்காரர்கள். பொதுவாக செலுத்தி ஆடும் போது (Drive) முன்னங்காலில் முழு எடையினையும் இருவரும் செலுத்துவதில்லை ஆனால் இவர்களின் சிறப்பான கணிப்பு (Timing) அதனை ஈடு செய்துவிடும். பொதுவாக செலுத்தி ஆடும்போது முன்னங்கால் 90 பாகைக்கு குறைவாக முன்னோக்கி வளைத்து அதே கோணத்தில் மட்டையின் மேல் கை முன்னோக்கி இருந்தால் கணித்தல் குறைவால் பந்தை தூக்கி அடித்து ஆட்டமிழக்கமுடியாது ஆனால் சச்சின் ஜோ ரூட் இவர்களது கணிப்பு சிறப்பாக இருப்பதால் அந்த பிரச்சினை அவர்களுக்கு இருப்பதில்லைன் ஆனாலும் இவர்கலது இந்த பலவீனத்தினை பந்து வீச்சாளர்கள் இலகுவாக குறிவைத்து இவர்களை ஆட்டமிழக்க செய்யலாம். இலங்கை அணி இடது கை துடுப்பாட்டக்காரர் குமார் சங்ககாரா இயல்பாகவே இந்த உத்தி அவருக்கு வருகிறது, இதனால் கணிப்பு தவறு ஏற்பட்டாலும் தூக்கி அடித்து அவுட்டாவதற்கான வாய்ப்பை அது இல்லாமல் செய்கிறது அத்துடன் அவரது சராசரி இந்த இருவரது சராசரியினையும் விட அதிகம் 57, அத்துடன் அவர் ஒரு விக்கட் கீப்பிங் துடுப்பாட்டக்காரர், அடம் கில்கிறிஸ்டின் சராசரி 47. முழுமையான துடுப்பாட்டக்காராக இல்லாமல் விக்கட் கீப்பராக இருந்து இவ்வாறான சிறந்த துடுப்பாட்டக்காரராக இருப்பது கடினம் இவர் 12000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். குமார் சங்ககாரவிற்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்பு முன்வைத்துள்ளேன் சேவாக்கின் 100 நிராகரித்த்மையாலோ அல்லது அவர் ஒரு பெரும்பான்மை இனத்தவராக இருந்ததாலோ என சரியாக தெரியவில்லை ஆனால் இந்த இரு ஆட்டக்காரர்களையும் (ஜோ ரூட், சச்சின்) ஒப்பீட்டளவில் கொண்டாடுபவர்கள் இவரை கண்டு கொள்ளாதது விசித்திரமாக உள்ளது. டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களுள் அதிக சராசரி உடையவர் குமார் சங்ககாரவே, இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கல்லிஸ் கூட ஒரு முழுநேர துடுப்பாட்டக்காராக இல்லாமல் சகலதுறை ஆட்டக்காரர், இவர்கள் இந்தியாவில் இருந்திருந்தால் வேறு விதமாக பார்க்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். https://www.espncricinfo.com/records/most-runs-in-career-223646
  32. மாபெரும் பொதுக்கூட்டத்தை சிறிய வளவில் அமைந்த சிறிய பந்தலுக்குள் மக்களை இருத்தி நடத்தி முடித்த அரியநேந்திரனுக்கு பாராட்டுகள்.
  33. ஹர்ஷித்தாவின் கன்னிச் சதம் வீண்போனது; இலங்கையை 15 ஓட்டங்களால் வென்ற அயர்லாந்து தொடரைக் கைப்பற்றியது 19 AUG, 2024 | 04:03 AM (நெவில் அன்தனி) அயர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் பெல்பாஸ்ட், ஸ்டோமன்ட் சிவில் சேவைகள் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க, இப்போதைக்கு அயர்லாந்து 2 - 0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. துடுப்பாட்டத்தில் அமி ஹன்டர், லீ போல், ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆகியோர் அரைச் சதங்கள் குவித்து அயர்லாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி சார்பாக ஹர்ஷித்தா சமரவிக்ரம கன்னிச் சதம் குவித்தபோதிலும் இறுதியில் அது வீண்போனது. மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக சமரி அத்தபத்து, விஷ்மி குணரட்ன ஆகியோரைத் தொடர்ந்து சதம் குவித்த 3ஆவது வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆவார். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது. 31 ஓவர்கள் நிறைவில் அயர்லாந்து 4 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால் எஞ்சிய 19 ஓவர்களில் அயர்லாந்து ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து மேலும் 121 ஓட்டங்களைக் குவித்தது. அதுவே அயர்லாந்து அணியின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது. முன்வரிசையில் அமி ஹன்டர் 8 பவுண்டறிகளுடன் 66 ஒட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் லீ போல், ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5 ஆவது விக்கெட்டில் 112 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். லீ போல் 6 பவுண்டறிகளுடன் 81 ஓட்டங்களையும் ரெபெக்கா ஸ்டொக்கெல் ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அச்சினி குலசூரிய 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். கடினமான 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. விஷ்மி குணரட்ன (2), சமரி அத்தபத்து (22) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். (46 - 2 விக்.) எனினும், ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் கவிஷா டில்ஹாரியும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். அப்போது இலங்கை 172 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து வலுவான நிலையில் இருந்தது. அப்போது எஞ்சிய 98 பந்துகளில் இலங்கையின் வெற்றிக்கு 84 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், அதன் பின்னர் மோசமான அடி தெரிவுகள் மற்றும் கவனக்குறைவு காரணமாக 97 பந்துகளில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது. ஒற்றைகள், இரட்டைகள் எடுக்க வேண்டிய வேளையில் அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க விளைந்ததால் இலங்கை துடுப்பாட்ட வீராங்கனைகள் விக்கெட்களைத் தாரைவார்த்தனர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹர்ஷித்தா சமரவிக்ரம 11 பவுண்டறிகளுடன் 105 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய கவிஷா டில்ஹாரி 53 ஓட்டங்களைப் பெற்றார். நிலக்ஷிகா சில்வா கடைசிக் கட்டத்தில் இலங்கையின் வெற்றிக்காக போராடிய போதிலும் அவரது முயற்சி பலனளிக்காமல் போனது. அவர் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஆலீன் கெலி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேன் மெகயர் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: லீ போல். https://www.virakesari.lk/article/191397
  34. பின்னால அருண் சித்தார்த் வேற நிக்கிறான் போல இவன் தானே நல்லூரானை இடித்து கக்கூஸ் கட்டுவேன் என்று சொன்னவன் இப்ப எதுக்கு அங்க போனவன் ...?
  35. https://www.tamilnet.com/art.html?catid=25&artid=39987 விராஜ் மெண்டிஸ் விட்டுச் செல்லும் நிரப்பவியலா இடைவெளி [TamilNet, Saturday, 17 August 2024, 12:15 GMT] ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உற்ற நண்பனாக மிக நீண்டகாலமாக, தனது சாவுப்படுக்கை வரையும், ஜேர்மனி நாட்டின் பிரேமன் நகரிலிருந்து தொடர்ச்சியாக இயங்கிவந்த விராஜ் மெண்டிஸ் ஈழத்தமிழர்களிடமிருந்து வெள்ளிக்கிழமை மாலை தனது 68 ஆவது வயதில் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். அவரது வலிய நெஞ்சுரத்தோடு இளகிய குழந்தை மனது எப்போதும் போட்டியிட்டுக்கொண்டிருக்கும். அதனாலோ என்னவோ மாரடைப்போடும் சாவோடும் பலமுறை போராடியவாறு தனது செயற்பாட்டை முன்னெடுத்துக்கொண்டிருந்தார் அவர். அவரின் இடையறா முயற்சியால் மக்கள் தீர்ப்பாயத்தின் மூன்று அமர்வுகள் உலகத் தளத்தில் நடந்துள்ளன. அவற்றில் இன அழிப்புக் குறித்த மிகத் தெளிவான தீர்ப்பு வெளியானதோடு, அமெரிக்க-பிரித்தானிய மேலாதிக்கம் எவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்குக் காரணமானது என்பதைத் துணிகரமாக வெளிக்கொணரும் தீர்ப்பும் வெளியாகியது. அவரது அடுத்த கட்ட இலக்கு அர்த்தமுள்ள எதிர்ப்பியக்கத்தைக் கட்டுவதில் குறியாக இருந்தது. Viraj Mendis (01 April 1956 - 16 August 2024) ஆண் பெண் சமத்துவத்தில் அருஞ்சாதனைகளைப் படைத்த தமிழீழ விடுதலைப் போராட்ட மரபில் வந்து எஞ்சியிருக்கும் முன்னாட் பெண்போராளிகளிடமும் பெண்தலைமைத்துவத்திடமும் இருந்து அர்த்தமுள்ளதாக ஈழத்தமிழர் போராட்டத்தின் அடுத்தகட்ட எதிர்ப்பாற்றல் (Resistance) எழவேண்டும் என்று சிந்தித்து அதற்கான செயற்பாடுகளைக் கட்டுவதில் அவர் கவனஞ் செலுத்திக்கொண்டிருந்த வேளையில் அவரது மரணம் சம்பவித்துள்ளது. “உண்மையான விடுதலையை நேசித்தவர்கள் எல்லோரும் தமது உயிரைக் கொடுத்துவிட்டனர் அவர்களுக்காகவே நான் செயற்படுகிறேன்,” என்று எமக்கு அடிக்கடி நினைவுபடுத்திய அவர் இப்போதிருக்கும் நிலைகெட்ட புலம்பெயர்ச் செயற்பாட்டுத் தளத்துக்கு அப்பால் ஈழத்தமிழர் விடுதலை அரசியலை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் நகர்த்துவதில் மிகுந்த முயற்சியெடுத்துச் செயற்பட்டுக்கொண்டிருந்தார். ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களிற் பலருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி இருக்கும் அறிவையும் துடிப்பையும் விஞ்சியதாக சிங்களவரான அவருக்கு நேசிப்பும் ஈடுபாடும் அறிவும் துடிப்பும் இருந்தன. ஈழத் தமிழர் மீதான சிங்களப் பேரினவாத அரசின் பௌதிக இன அழிப்பு ஆரம்பிக்கப்பட்ட 1956 ஆண்டில் இருந்தான 68 ஆண்டு வரலாற்றுக்காலம் அவரது வயது. அந்த இன அழிப்பைத் தனது வாழ்நாளில் மாற்றுலகத் தளத்தில் அவர் நிறுவிச் செனறுள்ளார். எந்த இக்கட்டான நெருக்கடியிலும் சுயாதீனமாக இயங்கும் வல்லமைக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. மாமனிதர் சிவராமின் நெருங்கிய நண்பரான விராஜ் தமிழ்நெற்றின் நண்பரானார். அவ்வாறான எமது நண்பர் விராஜுக்கு வீரவணக்கம் செலுத்துவது என்பது தீக்குளிப்பதற்கு ஒப்பானது; நெஞ்சை உருக்குவது; சிவராமை நாம் இழந்தபோது ஏற்பட்ட வலிக்கு ஒப்பான வலியைத் தருவது. முள்ளிவாய்க்காலைத் தரிசித்த ஆழமான வலி அதை எதிர்கொள்ளும் மன வலுவை எமக்குள் விட்டுச்சென்றுள்ளதா என்பதற்கு இது ஒரு சோதனையாகிறது. பிரித்தானியாவில் இருந்து ஒரு காலத்தில் அவர் விரட்டப்பட்டதன் பின்னரும், அவரது பிரித்தானியத் துணைவியாரான காரன் அம்மையார், தனது நாட்டைத் துறந்து அவரோடு ஜேர்மனியில் தானும் சேர்ந்து வாழ்ந்து, தோழர் விராஜின் செயற்பாட்டை ஈழத்தமிழர் விடுதலைக்காகத் தொடர்ந்தும் குவியப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்தமை நெஞ்சை நெகிழவைப்பது. விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாயிருப்பினும் மலைநிகர்த்த செயலாற்றலோடு அவரோடு நெருக்கமான நண்பர்களாகச் செயற்படும் புலம்பெயர் சிங்கள நண்பர்கள் அவரின் பிரிவால் ஆழ்ந்த துயருக்குள்ளாகியுள்ளனர். கோட்பாட்டு ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் ஈழத்தமிழர் தேசக்கட்டலையும் விடுதலை அரசியலையும் அசைக்கவியலாது தாங்கியிருந்த தூண்களில் ஒன்று விராஜ். விராஜ் மரணிக்கலாம், அவர் நாட்டிய அந்தத் தூண் ஒருபோதும் சரியாது. விராஜ் விட்டுச் சென்றிருக்கும் நிரப்பவியலா இடைவெளியை ஈடுசெய்வது அவரது வாழ்வுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமான ஈழத்தமிழர் விடுதலைக்கும் அர்த்தம் தருவதாகும். அவரது நேர்காணற் பதிவுகளும் மக்கள் தீர்ப்பாயம் பற்றிய செய்திகளும் அனைவரின் பார்வைக்காகவும் கீழே இணைக்கப்படுகின்றன.
  36. ஆங்கிலேயர், தமது நாட்டில் , 50 வருட கட்டிடத்தை பாதுகாக்கின்றனர். அனால் ,வேறு நாட்டில் அதை அந்த நேரத்தில் மூழ்கடிக்க கூடியவாறு அணை அமைப்பு. அதுவும் அந்த இடத்தில் ஆட்சி செய்த அரச (வம்சத்தின்) கோட்டை.
  37. அமரர். திரு. விராஜ் மென்டிஸ் அவர்களுக்கு இதயவணக்கம் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி Posted on August 18, 2024 by சமர்வீரன் 38 0 18.8.2024 அமரர். திரு. விராஜ் மென்டிஸ் பிறப்பிடம்: சிறிலங்கா (Srilanka) வதிவிடம்:பிறீமன், யேர்மனி (Bremen, Germany) தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியல்ச் சித்தாந்தங்களையும், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களது வாழ்வுரிமைகளையும், குறிப்பாக புலம்பெயர்ந்த மக்களது அறவழிப் போராட்டக் களங்களையும் மானசீகமாகப் புரிந்து, உணர்வுபூர்வமாக ஏற்று, மொழிவழியிலே ஓர் சிங்கள இனத்தவராகத் தனது பிறப்புரிமைக்கு மட்டும் முதன்மையளித்து, அவ்வினத்தின் அதிகார வர்க்கங்களால் நசுக்கப்பட்டு, நாடற்றவராக்கப்பட்டுத் துன்பியல் வாழ்விலே துவண்டு, தான் பெற்றுக்கொண்ட கசப்பான பட்டறிவிலிருந்து நோக்கிய தெளிந்த பார்வைக்கூடாக, தமிழ்த்தேசிய இனம்மீதும் சிறிலங்காப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளையும், முரண்பாட்டு எடுகோள்களையும் எதிர்த்து, தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற உயர்ந்த பண்புரிமைகளைத் தர்க்க ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும் புரிந்து, அசைக்க முடியாத அந்த உண்மைகளின் பக்கம் நின்றபடி, தன்னாலியன்ற அனைத்து வழிமுறைகளிலும் இதயசுத்தியோடு குரல்கொடுத்து வாழ்ந்த ஓர் அற்புதமான உறவான மரியாதைக்குரிய திரு. விராஜ் மென்டிஸ் அவர்கள், இயற்கையின் அணைப்பிலே விழிமூடிய செய்தியறிந்து துயருற்றோம். தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் வரலாற்றுக் காலங்களில், தமிழினம் தமக்கான விடுதலையை யாரிடமிருந்து கோரியதோ அவ்வினத்திலிருந்தே எமது உரிமைகளை புரிந்து, மதித்துக் குரல்கொடுத்து வாழ்ந்த மிகச் சொற்ப சிங்களக் கல்வியாளர்களிலே விராஜ் மென்டிஸ் அவர்கள் முன்மாதிரியானவராக, தமிழர்களோடு ஒன்றித்தவராக, புலம்பெயர்ந்த தமிழர்களின் அறவழிப் போராட்டத் தளங்களிலே, ஐக்கிய நாடுகள் சபையிலே, மனித உரிமை அமைப்புக்களின் மையத்திலே எமக்கான மனிதராக முழுமையாகத் திகழ்ந்தமையைத் தமிழினம் என்றும் மறவாது, அவரைப் பண்பான மனித உச்சப் புகழிலே தாங்கிக் கொள்ளும். தமிழ்த்தேசிய மக்களது கலாச்சாரத்திலும், சமூக வாழ்விலும், பொருளாதார வழிமுறைகளிலும் தன்னிறைவும், தாராள நிலையும் பெற்றேக வேண்டுமெனும் பெருவிருப்பும், திறன்வாய்ந்த கட்டமைப்புக்களாகப் புலம்பெயர் அமைப்புக்கள் இயங்குநிலை பேணவேண்டும் என்பதிலே பேரவாவும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் காலப்பகுதிகளில் தங்களுடைய தாய்நாட்டுக்காக தமிழர்கள் ஆற்ற வேண்டிய இணையற்ற பங்களிப்புக்கள் தொடர்பாகவும் தெளிந்த கருத்தாய்வுகளை முன்மொழிந்தார். அவ்வாறான நோக்கானது தமிழ்த்தேசிய இனத்திற்கான விடுதலையென்பதை தன் இதயப்பரப்பிலே ஆணித்தரமாக செதுக்கி நிறுத்தியிருந்ததை, அவரோடு இணைந்து பணியாற்றிய உணர்வுமிக்க தடங்களே சாட்சியாகின்றன. பரந்து விரிந்த உலகப் போராட்டக் களங்களிலே நிலவிய மிதமிஞ்சிய மனித உரிமை அத்துமீறல்களைக் கோடிட்டு, அவற்றிலிருந்து நியாயம் தேடி விடுதலை கோரும் வழிமுறைகளைக் கொண்ட நாடுகளின் எடுத்துக்காட்டுகளுக்கு ஊடாக, தமிழ்த்தேசிய இனத்திற்கான நியாயத் தேடலுக்காக, அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனராகவும் தன்னை உருவகித்துக் கொண்டு பல்வேறுபட்ட துறைசார் கட்டமைப்புக்களுடன் தொடர்பினைப் பேணினார். ஆயினும் தமிழீழம் என்ற உயர்ந்த எண்ணம் தாங்கிய மையம் கரையாதவராகத் திகழ்ந்தார். சிரிலங்காப் பேரினவாதம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருந்த அரசியல் அடக்குமுறைகள், சட்டவிரோதமான சிறைப்புடிப்புக்கள், சித்திரவதைகள் மற்றும், பூர்வீக நிலப்பறிப்புக்கள் போன்ற பாரிய அநீதியான விடயங்களை, அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்ற அந்த இனத்திலே பிறந்துவிட்டேனே என்பதற்காக ஏற்காது, துணிந்து எதிர்த்து நின்ற நேர்மையும், நீதியின் வழிநின்று தமிழினத்தோடு தோழமை பூண்ட மாண்புமே, அடிப்படையான உரிமைகளை மதிக்கின்ற நியாபூர்வமான தோழமையாக உலகத்தமிழர்களின் இதயங்களிலே ஒன்றித்து, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுப் புகழ் கொண்ட தமிழின் நீட்சியில் உயிர் வாழ்வார். சிங்களத் தீவிரவாத சக்திகளும், தேசியவாதிகளும் இணைந்து, தமிழர் நிலவுரிமைகளை மறுத்து, முழு இலங்கைத் தீவையுமே தனிச் சிங்கள பௌத்த தேசிய நாடாக நிறுவி விடுவதற்காகப் பல்வேறுபட்ட பிரயத்தனங்களை புனைவுகளாக முன்னிறுத்தி, அரசியல் சமூக பண்பாட்டு மாற்றங்களைத் தமக்கேற்ற வகையிலே முன்மொழிந்துவரும் தருணங்களிலெல்லாம், அதற்கு எதிராக தமிழர்களின் தொன்மைகளை நிலைகொள்ள வைப்பதற்காக தகைசான்றுகளின் அடிப்படையில், தமிழர் பக்கமாக நின்று வாதப்பிரதிவாதங்களை முன்வைக்கின்ற அற்புதமான தோழமையாளராக விராஜ் மென்டிஸ் அவர்கள் வாழ்ந்தார் என்பதை காலம் மறவாது. அவ்வாறான உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதரது ஆன்மா அமைதிபெற இயற்கையை வேண்டுவதோடு, அவரது பிரிவுத் துயர் சுமந்து வாடும் அனைவரோடும் நாமும் துயரைப் பகிர்ந்து, அவராற்றிய சிறந்த பணிகளை அவர் நினைவோடு தொடர்ந்து முன்னெடுப்போமென, அவரது புகழுடல்மீது உறுதியெடுப்போமாக. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
  38. யாரையும் சாகடிக்காத துப்பாக்கிக்கு எதுக்கய்யா லைசென்ஸ் .........! 😂
  39. கடந்த 15 ஆண்டுகளில் திரு. ரணில் விக்ரமசிங்க 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார். திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களின் அதிகாரத்தின் கீழ் தான்.... நாவற்குழி சிங்கள குடியேற்றம் சட்ட பூர்வமாக்கப்பட்டது. வவுனியா வடக்கு கொக்கச்சான்குளம் (கலாபோகஸ்வெவ 1 & 2) நாமல்புர குடியேற்றங்கள் சட்டபூர்வ சிங்கள குடியேற்றங்களாக்கப்பட்டன. குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மாலனூர் (12ஆம் கட்டை) மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. திருகோணமலை சலப்பையாறு பகுதியில் 650 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றபட்டன. வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை சூழ்ந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. மன்னார் முசலிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது. கொக்கடிவான் குளத்தின் சூழலிருந்த இருநூறு ஏக்கர் வயல் நிலம் 165 சிங்கள குடும்பங்களுக்கு பகிரப்பட்டது. ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் பலவும் கஜபாகுபுர ஆக்கப்பட்டன. குறிப்பாக சிலோன் தியேட்டர்,டொலர்ஸ் பாம், தனிக்கல், நாவலர் பண்ணை போன்ற பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. முல்லைத்தீவின் எல்லையில் சிங்கபுர, 13 ஆம் கொலனி என பல சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கொக்குத்தொடுவாயில் மட்டும் 2,156 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால், வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியில் 825 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது. கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 20 ஏக்கர் நிலம் சிங்கள குடியிருப்புக்காக வழங்கப்பட்டது. நாயாறு கொக்கிளாய் - முகத்துவாரம் பகுதிகளில் சுமார் 794 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமம் வழங்கப்பட்டது. ஆண்டான்குளம், திருக்கோணப்பட்டி, ஆத்தங்கடவை, மருதடிக்குளவெளி, ஆலடிக்குளம், சாமிப்பில கண்டல், ஈரக்கொழுந்தன் வெளி, படலைக்கல்லு, நித்தகைகுளம் போன்ற பகுதிகளில் சுமார் 647 ஏக்கர் நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காக வழங்கப்பட்டது. கொக்குத்தொடுவாய்,புலிபாய்ந்தகல், நாயாறு, கொக்கிளாய் - முகத்துவாரம், சாலை ஆகிய 5 பல இடங்களில் பகுதிகளில் பருவகாலங்களில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் குடியேற்றப்பட்டனர். சூரியனாறு, முந்திரிகைக்குளம் பகுதிகளில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு தமிழ் மக்களின் வயல் நிலங்கள் அபகரிகப்பட்டு வழங்கப்பட்டது மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில் சிங்கள மக்களுக்கான மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு 20-25 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளும் 60 .இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50 இற்கு மேற்பட்ட பொலநறுவை, அம்பாறையை சேர்ந்த பண வசதி படைத்த சிங்கள விவசாயிகள் பண்ணைகள் அமைக்க காணி வழங்கப்பட்டது. மேற்படி திட்டமிட்டட் குடியேற்றங்களுக்கு மேலாக, இக் காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம், தொல்லியல் திணைக்களம் , வன வள திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் பிக்குகளால் மிக பல ஆயிரக்கணக்கான நிலங்கள், விவசாய காணிகள், மேய்ச்சல் தரைகள், நீர் நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இப்போதும் சிலர் மீட்பராக சித்தரிக்கின்றார்கள். இனமொன்றின் குரல்
  40. சுத்துறதும் தான் ஆனால் இன்று இலங்கை தமிழ் அரசியல் என்றால் சுமத்திரன். பெயர் தான் அடிபடுகிறது முன்னுக்கும் அவர் தான் நிற்கிறார். எங்கே எவருடனும் பேசினாலும். தனியாக போகிறார் எவரையும் கூட்டிட்டுப் போவதில்லை கலந்துரையாடல் செய்வதுமில்லை அவர் என்ன செயதலும். பிழையாகவிருந்தாலும். நடவடிக்கைகள் எடுக்கப்படாது தமிழரசு கட்சியையும் தமிழர்களின் அரசியலையும் அழித்து விட்டார்
  41. நோர்வே தூதுக் குழுவினருடன் புலிகளின் சந்திப்பு 06/04/2002 பாலா அங்கிளிற்கு வலது கைப்பக்கம் இருப்பவர் துரோகி கருணா மற்றும் பதுமன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.