Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20018
    Posts
  3. Kavallur Kanmani

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1061
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/03/24 in all areas

  1. ஒரு ஆண் வேண்டுமானால் எத்தனை பெண்களையும் போய் சந்தித்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் தனது மனைவி மட்டும் கட்டுப்பாடுடன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு இயல்பான விடயம்தான். இதைத்தான் ஆண் உலகம் என்பார்கள். இப்படியான விடயங்களை ஆண் செய்தால் சம்பவம். பெண் செய்தால் சரித்திரம் என்று ஊரில் சொல்வார்கள். பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆண் செய்த சம்பவம் ஒன்று இப்பொழுது பேசு பொருளாகி இருக்கிறது.. பிரான்ஸில் ஒருஆண், பல ஆண்டுகளாக (2011-2020) பிற ஆண்களை தனது மனைவியை வன்புணர்வு செய்ய அனுமதித்திருக்கிறான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இந்த விடயம் நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்திருக்கிறது. காரணம், அந்த ஆண், போதை மருந்துகளைக் கொடுத்துத் தனது மனைவியை நினைவிழக்க வைத்து விட்டு அதன் பிறகே சம்பவங்களை அரங்கேற்றியிருக்கிறான். இப்பொழுது அவளது கணவனும் இன்னும் ஐம்பது ஆண்களும் நீதிமன்றத்தில், தீர்ப்பை எதிர்பார்த்து வரிசையில் நிற்கின்றார்கள். அந்த ஆணின் பெயர் டொமினிக்(71). அவரது மனைவியின் பெயர் கீசெலா (72). இருவருக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றைய ஆண்கள் 18க்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். தீயணைப்பு வீரர், செவிலியர், சிறைக் காவலர், பத்திரிகையாளர் என வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் எல்லாம் வரிசை கட்டி வந்திருக்கிறார்கள் என்பது சமூகத்தின் புருவத்தை உயர்த்த வைக்கிறது. இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஆண்களிடம் இருந்து டொமினிக் பணமாக ஒரு ‘சென்ற்’ கூடப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே. பிறகெதற்கு இந்த விளையாட்டு? நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து, தனது பாலியல் கற்பனைகளை திருப்திப்படுத்துவதே டொமினிக்கின் நோக்கமாக இருந்திருக்கிறது. தானும் சளைத்தவன் இல்லை என்று டொமினிக்கும் அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்கெடுத்து அவற்றையும் வீடியோ எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இப்பொழுது மொத்தமாக 92 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. டொமினிக் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை பார்வையிட்டதில், சிலர் ஒரு முறையே போதும் என்று ஒதுங்கி விட்டிருந்தனர். சிலர் சும்மாதானே என ஆறு முறை கூட வந்திருந்தனர். வைத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, டொமினக்குக்கோ, வந்து போன ஆண்களுக்கோ உளவியல் பிரச்சினைகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக முழுமையான தண்டனை அவர்களுக்குக் கிடைக்கும் என்பது ஒரு ஆறுதலான விடயம். ஆனாலும் வீடியோவில் உள்ள 72 ஆண்களில் சிலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி டொமினிக் மாட்டிக் கொண்டார் என இப்பொழுது ஒரு கேள்வி எழலாம். எல்லாம் ஆர்வக் கோளாறுதான். டொமினிக் பல் பொருள் அங்காடி ஒன்றில், பெண் வாடிக்கையாளரின் பாவாடையின் கீழ் கமாராவைப் பிடித்து வாடிக்கையாளருக்குத் தெரியாமல் வீடியா எடுக்கப்போய் மாட்டிக் கொண்டதில், சகலதையும் தோண்டி எடுத்திருக்கிறார்கள். டொமினிக்கின் கீசலாவுடனான ஐம்பது வருடக் குடும்ப வாழ்க்கை இப்போ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கும் டிசம்பர் 20ந் திகதி வரை நடக்க இருக்கிறது. அதன் பிறகு டொமினிக்குக்கு இன்னுமொரு வாழ்க்கை இருக்கும். அவர் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த வீடியோக்களைப் பார்ப்பதற்குத்தான் முடியாமல் போகும். அநேகமாக இந்தச் செய்தி பல மொழிகளில் வந்திருக்கும். நான் வாசித்தது இங்கே, https://www.n-tv.de/panorama/Mann-liess-Ehefrau-von-72-Maennern-vergewaltigen-article25199233.html
  2. பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸில் தங்கம் வென்றார், மறக்க முடியாத இரவில் அவர் வெற்றிக்கான பாதையில் மூன்று முறை F52 வட்டு எறிதலுக்கான உலக சாதனையை முறியடித்தார். ஸ்டேட் டி பிரான்ஸில் போட்டியிட்ட அவர், தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். கூட்டம் பரவசமடைந்தது, ஆனால் கணேசமூர்த்தி இன்னும் முடியவில்லை. அவர் 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இந்த நிகழ்வில் தனது மூன்றாவது உலக சாதனையை அடைந்து இத்தாலிக்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். கணேசமூர்த்தி, ஈழத் தமிழ் பெற்றோருக்கு 1999 இல் ரோமில் பிறந்தார். பதினெட்டு வயதில், அவருக்கு குய்லின்-பாரே நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டது, இது தசை பலவீனம் மற்றும் கால்கள் மற்றும் கைகளில் உள்ள உணர்ச்சி மாற்றங்களால் வகைப்படுத்தப்படுகிறது. வீழ்ச்சிக்குப் பிறகு 2019 இல் அவரது உடல்நிலை மோசமடைந்தது, ரோமில் உள்ள சாண்டா லூசியா மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவர் சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார், அதற்கு முன் கள நிகழ்வுகளுக்குச் சென்றார். 2023 இல், அவர் ஷாட் புட் F55 மற்றும் வட்டு எறிதல் F54-55 பிரிவுகளில் இத்தாலிய பாராலிம்பிக் சாம்பியனானார். ஒரு வருடம் கழித்து, கணேசமூர்த்தி பாராலிம்பிக் விளையாட்டுகளில் அறிமுகமானார் - அவரது மூன்றாவது சர்வதேசப் போட்டி மட்டுமே - மற்றும் சிறந்த செயல்திறனுடன் தங்கத்தை கைப்பற்றினார். வரும் நாட்களில் ஈட்டி எறிதலிலும் கலந்து கொண்டு தனது சாதனைகளுக்கு மேலும் ஒரு பதக்கம் சேர்க்கும் நம்பிக்கையில் உள்ளார். இத்தாலிய நிருபர்களுடனான அவரது வெற்றிக்குப் பிந்தைய நேர்காணல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது, கணேஷமூர்த்தி அவரது குடும்பத்தினருக்கும் "வீட்டில் இருக்கும் மற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்" அஞ்சலி செலுத்தினார். https://www.tamilguardian.com/content/italian-tamil-smashes-world-record-three-times-take-gold-paralympics
  3. இந்தா பிடியுங்கோ 👇 Upcoming Presidential Election: How second and third preferences will matter 11 Aug 2024 | By Pamodi Waravita With the next crucial Presidential Election slated to be held on 21 September, Sri Lanka is gearing up to a number of election outcomes. Traditionally, the country has seen two main frontrunners dominating the polls, making the final count relatively straightforward. However, this year’s election may present a different scenario, with some analysts suggesting that it could be a three-way race. This potential scenario raises questions of whether any one candidate would get the required 50% to win the election. To understand the legal framework in place for a potential second count of votes, The Sunday Morning spoke with election monitors and the Election Commission. 50% + 1 vote Speaking to The Sunday Morning, Commissioner General of Elections Saman Sri Ratnayake said that according to the Presidential Elections Act No.15 of 1981, in order for one candidate to win, they must obtain 50% and one vote. “If nobody receives 50% and one vote in the first count, then the two leading candidates – that is, those two who have received the highest number of votes – are considered for the second count. Votes for these two leading candidates are temporarily set aside and everyone who voted for the other candidates are considered – that is, the votes for the other candidates. From these, the second and third preferences are counted towards the first two candidates,” said Ratnayake. He noted that some voters may not have the leading candidates as their second or third preference, resulting in their votes being set aside. “Some may not have either one of the first two candidates as their second preference but would have them as their third preference. That will be counted,” said Ratnayake. The highest number wins in second round Institute for Democratic Reforms and Electoral Studies (IRES) Executive Director Manjula Gajanayake clarified the process, noting that if no candidate was able to collect the required 50% and one vote to win the election, the first and second candidates would be kept aside and the preferential votes cast by those who voted for the remaining candidates counted. “For example, if there are ten candidates, the first and second ones will be kept aside and the preferential votes of those who voted for the other eight candidates will be counted. These will be gradually added to the first or the second candidate. Both of these two votes can be counted in one round. “Once one of those two candidates gets the highest votes, the Election Commission will reveal the winner. Importantly, the 50% law will not be considered in the second round – whoever gets the highest number of votes will win.” Casting your vote said that the least number of candidates in an election historically has been six. As of Thursday (8), the Election Commission said that 22 candidates had officially placed bond deposits, marking their intention to run this time. “When there are more than three candidates, voters can cast their vote by marking ‘1’ and show their next preferences using the numbers ‘2’ and ‘3’,” said Ratnayake. “However, our voters have become accustomed to drawing the cross so if someone draws a cross, we equalise it to ‘1’ or their vote. There is less understanding about the second and third preference votes.” Elections researcher and analyst, Attorney-at-Law D.M. Dissanayake further warned that marking three crosses on the ballot paper or one cross and the numbers ‘2’ and ‘3’ would make the vote invalid. Coin toss Commenting on whether the second count should be done within a specific timeframe, Dissanayake said that there was no such rule. “Usually the first count is sent to the main tabulation centre, which will then announce whether a candidate has obtained the 50% requirement to win the election. The general practice of the staff is to count the second preferences as well, immediately after they count the vote, as they’re waiting for the main centre to dismiss them. Therefore, the whole process won’t take a long time.” However, both Dissanayake and Gajanayake said that the chance of such a situation arising – where a second count would be needed – was unlikely. “This hasn’t happened before. We have always voted for two main candidates. That is the trend – even though this time there are many candidates, two will rise to the top,” said Dissanayake. Gajanayake said that this was an inherent feature of Sri Lanka’s electoral system which promotes an executive-level individual. “If the race is tied even after the second count, the Election Commission can toss a coin to determine the winner.” Modest contingency electoral system pointed out that Sri Lanka had adopted the practice of counting the second and third preferential votes in case of no clear winner as we had no money to conduct a run-off election. “In France and the Maldives, if someone is unable to collect the required votes to win, run-off elections will be held. This happened in the Maldives a few months back because none of the candidates was able to collect 50%, so there was another election between the first two candidates. “The US President is chosen according to the electoral college. However, in Sri Lanka we have a ‘modest contingency electoral system’ where we have enough alternatives to elect our President in one election,” said Gajanayake
  4. பொதுக்கட்டமைப்பு தனியே பொதுவேட்பாளருடன் நிற்காமல் அடுத்தடுத்த தேர்தல்களில் எல்லோரையும் இணைத்து களம்காண வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும்.
  5. உறவுகள் தொடர்கதை “அது உன்டை அப்பாவுக்கு முறைக்கு அக்காவும் அத்தானும் கீழ போய் ஆசீர்வாதம் வாங்கு” எண்டு மேடையில சொல்லி மாமி அனுப்ப சிவாவும் மேடையால கீழ இறங்கிப் போய் குனிய, சிவான்டை மனிசி குனியேலாமக் குனிய, “நல்லா இரு அப்பு, நல்லா இரு மோனை“ எண்டு ஆசீர்வதிச்சிட்டு, பொம்பிளையின்டை கையில envelope ஐ திணிச்சிட்டு, இனி எப்பிடி ஏறி சாப்பிடப் போறது எண்டு ரெண்டு பேரும் யோசிக்கத் தொடங்கிச்சினம். ஒரு காலம் இவை இல்லாம நல்லது கெட்டது ஒண்டும் நடக்காது ஆனா இப்ப அவை ரெண்டுபேரும் வேற ஆற்றையும் உதவி இல்லாம வீட்டை விட்டு வெளீல போய் வரக்கூட ஏலாது . “வாருமன் சாப்பிடுவம்” எண்டு அவர் சொல்ல, “கொஞ்சம் பொறுங்கோ என்ன இளந்தாரியே ஏறிப்போக” எண்டு சொல்லி அவ உதவிக்கு ஆரும் இருக்கினமா எண்டு பாக்கத்தொடங்கினா. வயசு போகப் போக அப்பாக்கள் அமைதியாவதும் அம்மாக்களின் புறுபுறுப்பது கூடுவதும் இயற்கை. ஒரு வயதுக்கு (முதிர்ச்சிக்கு) அப்பால் ஆண்களின் தேவைகள் குறைவடையத் தொடங்கி விடும் . அவன் ஞானத்திற்கு முன்னைய பற்றற்ற நிலைக்கு வந்து விடுவான். மனைவிக்கு இன்னும் கூடப் பணிந்து போவான், எங்கயாவது எருமைக் கடா வந்தால் எமனுடன் ஏறிப் போக யோசிக்க மாட்டான் . ஆனால் பெண்கள் அப்படி இல்லை. பெண்கள் சந்தர்ப்பம் பாத்து சாதிப்பதில் வல்லவர்கள் . அப்பாமார் அடங்கத் தொடங்க அம்மாமார் ஆட்சியை கைப்பற்றி அந்தாள் தனக்கு முந்தி செய்த பழி பாவங்களை மறக்காமல் இப்பிறப்பிலேயே தண்டனை வழங்குவார்கள் .அரசன் அன்றும் ,தெய்வம் நின்றும் , மனிசி இருந்தும் செய்வார்கள். “ அவருக்கு இப்ப மறதி வந்திட்டு , மருந்து போட்டது கூட ஞாபகம் இருக்காது“ எண்டுதான் ஆரும் வந்தால் அவரைப்பபத்தி அறிமுகம் தொடங்கும் . பிறந்த நாளில இருந்து அடக்கப்பட்டதன் தாக்கமும் , விரும்பினதை செய்ய முடியாமப் போன ஏக்கமும், வந்த இடத்தில இருக்கிற அடக்குமுறையும் சேந்து பொம்பிளைகளில அப்பப்ப வெளிப்படும். பொம்பிளைகளுக்கு அதிலேம் அம்மாக்களிற்கு அதிகாரம் செய்ய விருப்பம் . பெண்கள் நல்ல நிர்வாகிகள் ஆனால் என்ன தங்களுக்கு தேவையான எல்லாத்தையும் மட்டுமே ,அதுவும் , அதிகார நிர்வாகமே செய்வார்கள். இது எல்லாம் வீட்டுக்குள்ள தான், வெளீல வந்தால் அந்தாளை கவனமாக் கையை பிடிச்சி கூட்டிக்கொண்டு போவினம். என்ன அடிக்கடி தாங்கள் தான் சரி நீர் பிழை எண்ட நச்சரிப்பும் இருக்கும். கடைசிக் காலத்தில பெத்தவைக்கு பெரிய பிரச்சினை சொத்துப் பிரச்சினை. சரி வயசு போட்டுது பிள்ளைகளுக்கு இருக்கிறதை குடுப்பம் எண்டா, சொத்தைப் பிரிச்சுக்குடுக்கிறதுக்கு அம்மாமருக்கு விருப்பம் இருக்காது. கடைசிவரை அதைத் தாங்கள் தான் ஆளோணும் எண்ட ஆசை இருக்கும். அதோட சிலவேளை ஒரு வியாக்கியானம் வைச்சு ஏற்றத்தாழ்வோட பிரிச்சுக் குடுப்பினம், “ஏனப்பா எல்லாத்துக்கும் சமனா இப்பவே குடுமன்” எண்டு அப்பாமார் சொன்னாலும்,“உங்களுக்கு ஒண்டும் விளங்காது சும்மா இருங்கோ” எண்டு அதட்ட அவையும் அடங்கீடுவினம். இன்றி அமையாத எங்கடை கூட்டு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா இல்லாமல் போக, இப்ப என்னெண்டால் மகள் கலியாணம் கட்டி மாப்பிளையோட வீட்ட வந்து இருக்க , தனிக்குடித்ததனம் போக விரும்புவது அநேகம் பெற்றோர் ஆகத் தான் இருக்கும் . சீதனம் குடுத்திட்டம் எண்டதால , கொஞ்சம் உரிமையில்லாத் தன்மையை உணருவது தான் காரணமோ தெரியேல்லை . எங்கடை சனத்தில கட்டினாப் பிறகு வாற சண்டையில அடிக்கடி வாறது மகள் மாருக்கு அம்மாமாரோட வாற சண்டை தான். மாமி-மருமகள் இப்படித்தான் எண்டு முதலே முடிவெடுக்கிறதால அது பெரிய சண்டையா இருக்காது. அதோட எல்லாரும் வீட்டோட மாப்பிளை எண்டதால மாமியார்-மருமோள் நேரடிச் சண்டை இருக்காது. மாமியார் மருமோள் சண்டை நேர நடக்காட்டியும் நாசூக்கா சொல்லிற கதைகளில மாட்டுப்படிறது மனிசன்மார் தான். கண்டோன்ன ரெண்டு பேரும் கதைக்கிறதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனாலும் அடுத்த மாசம் கோல் ஒண்டு வரும்; “ என்ன மாதிரி அரிசி மா அனுப்பவே” “ வேணாம் மாமி” “ஏன் போன கிழமை ரெண்டு கிலோ தானே அனுப்பினான், எங்களுக்கு ரெண்டு பேருக்கே கிழமைக்கு 4 கிலோ வேணும்” “அதே அப்பிடியே கிடக்கு” ஆஆஆஆஆஆ….. “அவன் சரியா மெலிஞ்சு போனான் வடிவாச் சமைச்சுக்குடும்” எண்ட இழுவையோட கோல் முடியும். உடன மகனுக்கு கோல்; “என்னடா வடிவாச் சாப்பிடிறியோ, உடம்பு கவனம், கண்டபடி வெளீல சாப்பிடாத” எல்லாத்துக்கும் ஓமெண்டப் பழகின மகன் இதுக்கும் ஓம் எண்டு போனை வைக்க; மனிசீன்டை கோல்; “என்ன உங்கடை அம்மா உளவு பாக்கிறாவே, நான் எவ்வளவு சமைக்கிறன் எண்டு”, நான் ரெண்டையும் class க்கு ஏத்தி இறக்கவே நேரம் இல்லை இதுக்குள்ள அரிசி மா ஏன் முடியேல்லை, மிளகாய்த்தூள் எவ்வளவு இருக்கு எண்ட கேள்வி வேற, டொக்டர் உம்மை உடம்பைக் குறைக்கச் சொல்லிறார் ஆனா உம்மடை அம்மா என்னெண்டால் நான் சாப்பாடு தராம் நீர் மெலிஞ்சுட்டீராம்”எண்டு சொல்லீட்டு விடை எதிர்பார்க்காமலே கோல் cut ஆகீடும். இதை எல்லாம் கேட்டும் கேக்காத மாதிரி இருக்கிறது தான் அப்பாக்களின் சா(சோ)தனை. வீட்டை பொம்பிளை பிள்ளைகள் இருக்கும் வரை அப்பாக்கள் அதிகாரம் செய்வதே மகள் எண்ட ஐ.நா சபையை நம்பித்தான் . சண்டை வரேக்க அப்பாவின்டை பக்கம் கொஞ்சம் கூட support இருக்கும். மகள்மாரைக் கட்டிக்குடுத்த உடனயே அம்மா மார் மீண்டும் இழந்த ஆட்சியை பிடிச்சிடிவினம் . இதுவரை எல்லாம் தெரிந்திருந்த அப்பா இப்ப அம்மான்டை கணக்குப்படி ஒண்டும் தெரியாதவர். கட்ட முதல் பொம்பிளைப்பிள்ளைகள் அப்பாமாரோடேம் ஆம்பிளைப்பிள்ளைகள் அம்மாமாரோடேம் ஒட்டி இருந்தாலும். கட்டிப் போனாப்பிறகு அப்பாமாருக்கு மகனோட இருக்கிறது தான் comfortable. மகன் மார் கேக்காமலே பாத்துச் செய்வாங்கள், அதோட மருமோள்மாருக்கு மாமாமாரோட ஒத்துப் போகும். மனிசனிட்டைப் போய் ”உங்கடை அப்பா பாவம், அம்மா என்ன சொன்னாலும் பேசாமக் கேப்பார், அம்மா தான் அவரைப் போட்டு பாடுபடுத்திறா” எண்டு சொல்லித் தன்ரை புருசனுக்கு பாடம் எடுப்பினம். மகனோடயோ இல்லாட்டி மகளோடயோ இருக்கப் போகேக்கேம் சம்மந்திமார் இருக்கினமா எண்டு பாத்துத்தான் போறது. சம்மந்திமாரை சபைசந்தீல சந்திக்கேக்க சந்தோசமாக் கதைச்சாலும் ஆனால் ஓரே வீட்டை இருந்தால் சண்டை தான். வளக்கும் வரை மூத்த ஆம்பிளைப் பிள்ளையும் கட்டிக் குடுத்தாப்பிறகு “ அவன் பாவம்” எண்டு கடைசி ஆம்பிளைப்பிள்ளையிலேம் தான் அம்மாமாருக்கு விருப்பம். ஆனாலும் மனிசன் மார் இருக்கும் வரைதான் அம்மாமார் மகனுடன் இருப்பினம் அவருக்கு ஏதும்மெண்டால் அதுக்குப்பிறகு கூப்பிடாமலே மகளிட்டைப் போயிடுவினம். ஊர் தாண்டி, கடல் தாண்டிக் கட்டிக்குடுத்திட்டு “ அய்யோ நான் பிள்ளையோட போய் இருக்கப்போறன்” எண்டு அம்மா தொடங்கி அந்தாள் ஏதும் சொல்லமுதல் ஓடிப்போய் அங்க இருந்து பாத்திட்டு கடைசீல சுடலை ஞானம் வர “கோம்பையன்மணலில தான் வேகவேணும்” எண்டு ஊரோட வந்திடிவினம். பெத்ததெல்லாம் கட்டிப் போய் தாங்கள் பெத்ததைப் பாக்கத் தொடங்க, வீடு வெளிச்சிப் போய் தனிச்சு இருக்கிறாக்களுக்கு வரும் ஒரு பயம் ஏதும் ஆருக்கும் நடந்தா எண்டு. இப்பவும் புறுபுறுக்கிற அம்மா “ எனக்கு ஏதும் நடந்தால் இந்தாள் பாவம் தனிய இருக்காது, என்னை மாதிரி ஒருத்தரும் பாக்க மாட்டினம்” எண்டு கவலை வர திருப்பி ஒருக்காப் பிள்ளைகளிட்டைத் திருப்பிப் போவமோ எண்டு யோசிக்கத் தொடங்குவா ஆனாலும் போமாட்டினம். ஏனெண்டால் இவை இப்பதான் தங்களுக்கு எண்டு வாழுவினம், பிள்ளைகளோட போய் இருந்தா அது இருக்காது. அப்பாவும் அம்மாவும் சண்டை பிடிக்கிறது பெரிசா பிள்ளைகளுக்கு தெரியாது, தெரிஞ்சாலும் கணக்கெடுக்காதுகள். தனிய இருக்கேக்க சண்டைதான் பொழுதுபோக்கா மாறீடும்.ஆனால் அம்மாமாருக்கு மாத்திரம் அந்தக்காலத்தில இருந்து நடந்தது எல்லாம் பொருள், இடம், காலத்தோட ஞாபகம் இருக்கும் . தேவை வரேக்க deep memoryஐ கிண்டி எடுப்பினம். தேவேல்லாத ஒண்டுக்குச் சண்டை பிடிச்சு காகம் இருக்கத்தான் பனம்பழம் விழுந்ததெண்டு தொடங்கி, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டுக் கதைசொல்ல அந்தாள் அதுக்கு ஒண்டும் சொல்லாமல் இருக்கும். அதுக்கும் “ உங்கடை ஆக்கள் எண்டால் ஒண்டும் சொல்லாதேங்கோ” எண்டு பேசீட்டுக் கொஞ்சம் மூக்கைச் சிந்த , ஆனாலும் மாட்டிறது வீட்டுக்கு எப்போதாவது வாற ஒரு சொந்தம். வந்தவரை இருத்தி வைச்சு “கொஞ்சம் பொறு கோப்பி தாறன்” எண்டு சொல்லிப்போட்டு ,” எனக்கு பொன்னம்பலத்தார்டை மகனை பேசினது நான் தெரியாம இந்தாளைக்கட்டினது” எண்டு தொடங்குவா , இதுவரை சும்மா இருந்த அந்தாள் “நீதான் எண்டு தெரிஞ்சிருந்தா நானும் கட்டி இருக்க மாட்டன், லீவில வந்து நிக்கேக்க குஞ்சிஆச்சி சொன்னதுக்கு ஆரெண்டு பாக்காமல் நான் கட்டீட்டன்” எண்டு விட மாட்டார். வந்த ஆள் தான் பாவம் தலைப்பில்லா விவாதத்தை தனி ஆளா நிண்டு கேக்கவேணும். வந்த ஆள் ஏன் வந்தனான் எண்டதை மறந்து, கடைசீல தீர்ப்பில்லாச் சண்டையின்டை கதையைக்கேட்டுக் கொண்டிருந்திட்டு தாங்கேலாமல் ஒரு போன் கோல் வந்தமாதிரி எழும்பித் தப்பி ஓட வெளிக்கிட “இந்தா” எண்டு ஒரு வாழைப்பழச் சீப்பைக் குடுத்திட்டு, “ சரி போட்டு வா, அடுத்த முறை வரேக்க நாங்கள் இருப்பமோ தெரியாது” எண்டு ஒரு sentiment வசனமும் சொல்லி விடுவினம். அந்தாள் இருக்கேக்க ராங்கியா தனக்கெண்டு ஒண்டும் பிள்ளைகளின்டை இதுவரை கேக்காத அம்மா கடைசிக்காலங்களில “ எனக்கு ஏதும் நடந்தா அப்பாவைக் கவனமாப் பாக்கோணும்”எண்டதை மட்டும் சொல்லுவா. தான் இருக்கும் வரை தனக்கு மட்டும் தான் உரிமை எண்ட அகங்காரம், இல்லாத நேரத்தில தன்னை மாதிரி அவரைப் பாப்பினமோ, அவர் தனியச் சமாளிக்கமாட்டார் பாவம் எண்டு மனிசி கவலைப்படுறதெல்லாம் எல்லாருக்கும் விளங்கத் தொடங்கும். மனிசன்மாருக்கு தங்கடை மனிசிமார் வருத்தம் எண்டு சொன்னால் பயம் அதால வருத்தம் சொல்லாமலே, அடிக்கடி டொக்டிரட்டை கொண்டேக்காட்டுவினம். ரெண்டு பேருக்கும் பிறப்பால் வராமல் பிணைந்ததால் வாழ்க்கையில் வந்த இந்த உறவு தொடரும் கதையாக இருக்கவேண்டும் எண்டதுதான் எல்லாரின்டை ஆசையும். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  6. 03 SEP, 2024 | 11:49 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கலைப்பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி, சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. ஶ்ரீகணேசனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் அன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின்ஆடிப்படையில், ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. ஶ்ரீகணேசன் ஆங்கில மொழி கற்பித்தலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/192715
  7. தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை பற்றி தெளிவாக பேசப்பட்டுள்ளது. சில இடங்களில் சொற்பதங்கள் தெளிவு இல்லை. மலையக மக்கள் தேசிய இனம் என்று கூறியிருந்தால் சிறப்பு.
  8. Paah..வேற Level Rap Song Live Compose🔥இலங்கை Rapper Vaaheesan & DJ Sivaji 1st Exclusive Interview
  9. நன்றி இதைச் சொல்லவாவது இவ்வாறு ஒன்றும் அதற்கு முன் வரக் கூடிய ஒருவரும் தேவை.
  10. தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது; முழுமையான விபரம் உள்ளே தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடும் நிலையில், தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் வெளியிடப்படது. இந்நிகழ்வில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பொதுக்கட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முழுமையான தேர்தல் விஞ்ஞாபனம் இதோ… ”தமிழ்த் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைக்காகப் பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகிறது. இப்போராட்டத்தின் ஒரு வழிமுறையாகத், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆகிய நாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பா. அரியநேத்திரன் அவர்கள் சங்குச் சின்னத்தின் கீழ் தமிழ்ப்பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்பது , தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பாகும். தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் தமிழர்தாயகத்தைச் சேர்ந்த அரசியற் செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், சிவில் சமூகங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கிராமமட்ட அமைப்புகள்;, தொழில்சார் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மக்கள் அமைப்பாகிய தமிழ்மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பே தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகும். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள மிகச்சிறு பகுதியினர் தவிர ஏனைய அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் இந்தக் கூட்டணி கடந்த 15 ஆண்டுகளில், உருவாக்கப்பட்ட கூட்டணிகளில் ஒப்பீட்டளவில் பெரிய அணியாகும். இது தமிழ் ஒற்றுமையின் புதிய நம்பிக்கையாகவும் எதிர்காலத் தமிழ் அரசியலுக்கான பலமான அடித்தளமாகவும் எழுச்சி பெறும். ஈழத் தமிழர்களாகிய நாம் இலங்கைத் தீவில் தனித்துவம் மிக்க ஒரு தேசிய இனமாகவும், தேசமாகவும் வாழ்ந்து வருகிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, தனித்துவமிக்க பண்பாட்டைக் கொண்ட ஒரு தேசம் ஆவோம் இலங்கைத் தீவு பல்லின, பலமத, பல மொழி, பல் கலாசாரத்தைக் கொண்ட ஒரு தீவாகும். இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவே இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கும் கூர்மை அடைவதற்கும் இறுதியில் விஸ்வரூபம் எடுப்பதற்குமான மூல காரணமாகும். தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்கும் செயற்பாடுகளே இன அழிப்பாகும். தமிழர் தேசத்தின் இருப்பையும் தனித்துவத்தையும் அழித்து பெரும்பான்மை இனத்துடன் அதனைக் கரைக்கும் உள்நோக்கத்தோடு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது திட்டமிட்டு முன்னெடுத்த இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராடினார்கள். அப்போராட்டங்களை நிர்மூலமாக்கும் குறிக்கோளோடு ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் மிகக் கொடிய விளைவே இறுதிப் போரில் நிகழ்ந்த உச்சமான இன அழிப்பாகும். இந்தப் பின்னணியில் உலகின் மிகப்பெரிய தமிழ் சட்டமன்றமாகிய தமிழக சட்டமன்றம் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றது. இன அழிப்பு என்று ஏகமனதாகத் தீர்மானமாக நிறைவேற்றியது. வடமாகாண சபை அதை இன அழிப்பு என்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனடாவில் பிரம்டன் நகர சபை அதை இன அழிப்பென்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனேடிய நாடாளுமன்றம் மே பதினெட்டினைத் தமிழ் இனப்படுகொலை நினைவுகூரல் நாளாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது. பிரான்சில் உள்ள நான்கு மாநகர சபைகளான Bobigny,Sevran,Choisy-Le-Roi,Vitry-Sur-Seine என்பன அது இன அழிப்பு என்று தீர்மானமாக நிறைவேற்றின. ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதிகள் சட்டசபையில்(Congress) இந்த ஆண்டு மே15 அறிமுகப்படுத்தப்பட்ட 1230 தீர்மானமானது ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நடத்தப்பட்டது இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் பொருட்டு சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு பொது வாக்கெடுப்பு அவசியம் என்பதை அத்தீர்மானம் வலியுறுத்துகின்றது. எனினும், இன்றுவரை இன அழிப்புக்கு பரிகார நீதியும் கிடைக்கவில்லை; இன அழிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்படவுமில்லை. மாறாக, 1-திருகோணமலையில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால்; ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன. மேலும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 26க்கும் அதிகமான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சில பாரம்பரிய தமிழ்க் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைத்து வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுபவை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட ஒரு மாவட்டம் இது. 2-மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு புறம் சிங்கள பௌத்த மயமாக்கல் நடந்து வருகிறது. இன்னொரு புறம் நிலப்பறிப்பு தொடர்கிறது. உதாரணமாக 3000 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் மேய்ச்சல் தரைகளை அரச அனுசரணையோடும் பாதுகாப்போடும் சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். இங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. வாகரை. கதிரவெளியில் கனிமவள அகழ்வு மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றது. வாகரையில் இறால் பண்ணைகள் மக்களுடைய எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விரண்டு விடயங்களும் மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிப்பவை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு எதிரானவை. 4-அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவை முழுமையான ஒரு பிரதேச செயலர் பிரிவாகத் தரம் உயர்த்துமாறு தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்த ஓர் அரசாங்கமும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட மற்றொரு மாவட்டம் இது. 5-வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் குருந்தூர் மலை, வெடுக்கு நாறிமலை, நீராவியடி ஆகிய இடங்களில் தமிழ் மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும் சிறுமலைகளில் அரச திணைக்களங்களும் பிக்குகளும் அரச படையினரும் பௌத்த கட்டுமானங்களை உருவாக்கி வருகிறார்கள். அங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. இக்கட்டளைகளை வழங்கிய ஒரு நீதிபதி நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்காக வெட்கப்படவேண்டிய அரசாங்கம் அவரைத் தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தியது. முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்படும் மனிதப் புதைகுழி அகழ்வானது பன்னாட்டு நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான விகிதம் 2:1 ஆக இன்னமும் இருக்கின்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட படையினர் முகாம்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. 6-வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் குடியிருப்பு இராணுவப் பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு ‘கலாபோபஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு மிகக்குறுகிய காலத்துக்குள் அந்த கிராமத்துக்குத் தேவையான சகல உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, அம்பாந்தோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களை அரசின் அனுசரணையோடு குடியமர்த்தி ‘நாமல்கம’ என்ற ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. 7-மன்னார் மாவட்டத்தில், கனிம வளம் பறிக்கப்படுகின்றது. அங்குள்ள முள்ளிக்குளம் கிராமத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையானது அக்கிராமத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்களை அங்கு முழுமையாக மீளக் குடியமர விடாமல் தடுத்து வருகின்றது. மன்னார் புதைகுழி தொடர்பான உண்மைகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை 8-கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழர் மரபுரிமைச் சொத்துகளை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்து வருகின்றது. 9-யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு முகாம்களை அமைத்திருக்கும் பெரும்பாலான காணிகள் தனியாருக்குரியவை. இவற்றுள் மிகச்சிறிய நிலப்பரப்புத்தான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திலும் தமிழர் மரபுரிமைச் சொத்துக்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டுள்ளன. நாவற்குழியில் அரசின் அனுசரணையோடு ஒரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக ஒரு புதிய விகாரை படையினரால் கட்டப்பட்டுவிட்டது. 10-தமிழர் தாயகம் எங்கும் தனியார் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அபகரிக்கப்பட்ட தனியார் காணிகள் பல இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டு விட்டதாக அரச புள்ளி விபரங்கள் பொய் கூறுகின்றன. தமிழர் தாயகமெங்கும் வனவளத் திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும் காடுகளின் பாதுகாப்பு, வனஉயிரினங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் காணிகள், பயிர்ச்செய்கை நிலங்கள், வணக்கத்தலங்கள் உள்ளடங்கிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவு நிலத்தை அபகரித்து வைத்திருக்கின்றன. மேற்குறிப்பிடப்பட்டவை சில உதாரணங்கள் மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளாக நிலப்பறிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் அரசுக் கொள்கையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன 11-புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் 15 ஆண்டுகளின் பின்னரும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். 12-தமிழ் மக்களின் அரசுக்கு எதிரான செயற்பாடுகளைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது 13-அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மாறாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவது முழுமையாக நிறுத்தப்படவும் இல்லை. 14-மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்;, அரசியற் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்கு முறைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. 15-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகிய கடந்த ஓகஸ்ட் முப்பதாம் திகதியன்று திருகோணமலையில் நடந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் அரசியற் செயற்பாட்டாளார்கள் மீது அரச பயங்கரவாதமானது போலீஸ் நடவடிக்கை என்ற வடிவத்தில் ஏவி விடப்பட்டது. நீதிமன்ற கட்டளையின் கீழான இச்சட்ட நடவடிக்கை மூலம் அப்பேரணி குலைக்கப்பட்டது. இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தமிழர் தாயகமெங்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் தாயகத்தின் நிலத் தொடர்ச்சியைத் துண்டாடுவது, இன விகிதாசாரத்தைக் குறைப்பது, நிலத்தைப் பறிப்பது, தமிழ் மரபுரிமைச் சின்னங்களை அழிப்பது, அங்கே சிங்கள பௌத்த மரபுரிமைச் சின்னங்களை ஸ்தாபிப்பது போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வெவ்வேறு வடிவங்களே. இந்த நடவடிக்கைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாத தன்மையைக் கொண்டவை. ஸ்ரீலங்கா அரசு என்ற மையத்திலிருந்து உள்நோக்கத்துடன் திட்டமிடப்படுகின்றவை. தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் ஆக்கிரமிப்பைப் பகலில் சட்டரீதியாகச் செய்கின்றன. பிக்குகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் சட்டத்தையோ நீதிமன்றத்தையோ காவல்துறையையோ மதிப்பதில்லை. படையினர் இரவுகளில் பௌத்த கட்டுமானங்களை இரகசியமாகக் நிர்மாணிக்கின்றார்கள். நிலப்பறிப்பு, சிங்களபௌத்தமயமாக்கல், அரசின் அனுசரணையுடனான குடியேற்ற நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளில் படைத் தரப்பு ஒரு சமாந்தரமான அரசைப்போல செயற்படுகின்றது. அதில் வடக்கு கிழக்கில் மட்டும் 65,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அதேவேளை நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைதான் உண்டு என்று பொய்யான தோற்றத்தைக் கட்டியெழுப்பி பன்னாட்டு சமூகத்தை நம்ப வைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணமறுத்து இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்த காரணத்தாலேயே நாடு கடனாளியாகியது. எனவே, இப்பொழுது நாட்டை பிடித்துலுப்பும் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் யுத்தத்திற்காகப் வாங்கிய கடன் சுமைதான். இப்பொழுது தென்னிலங்கையில் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள அனைவரும் பொருளாதார நெருக்கடி எனப்படுவது இனப்பிரச்சினையின் விளைவுதான் என்பதனை மறைக்கின்றனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கமுடியாது என்ற ஆழமான உண்மையை எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய பரப்புரையின் குவிமையமாக இருப்பது நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து எப்படி மீட்டெடுப்பது என்பதுதான். இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காகத் தமிழ் மக்களால் ஏற்கத்தக்க பொருத்தமான முன்மொழிவு எதனையும் அவர்களில் யாரும் இதுவரை முன்வைக்கவில்லை. யுத்த தளபாடங்களுக்காக முன்பிருந்த அரசாங்கங்கள் 25000 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த ஒரு நிபுணரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைச் செலவழித்து முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட உயிரழிவு, பொருள் அழிவைக் குறித்து இதுவரையிலும் உத்தியோகபூர்வ மதிப்பீடு எதுவும் இலங்கை அரசாங்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை. அந்த அழிவுகளில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கான எந்த ஒரு சிறப்பு செயல்திட்டமும் இன்றுவரையிலும் உருவாக்கப்படவுமில்லை. யுத்தத்துக்காகப் படையினரின் ஆட்தொகை பல இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 40 விகிதம் படையினருக்கே செலவழிக்கப்படுகிறது. இலங்கைத்தீவின் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மொத்தச் சம்பளத்தில் ஏறக்குறையச் சரிபாதி படையினருக்கான சம்பளமாக வழங்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளிலும் படைத்தரப்பின் ஆட்தொகை குறிப்பாக வடக்கு கிழக்கில் குறைக்கப்படவில்லை. அதாவது இராணுவமய நீக்கம் நிகழவில்லை. மாறாக, தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகவே படைத்தரப்பு பெருஞ் செலவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான இராணுவ பொருளாதாரச் சூழலுக்குள் புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்யத் தலைப்பட்டமாடடார்கள். அண்மைக் காலங்களில் அதிகரித்த அளவில் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வருகிறார்கள். தற்போது புலம்பெயர்பவர்கள் படித்தவர்கள், சமூகத்தில் பொறுப்பான பதவிகளை வகித்தவர்களே இப்படிப்பட்ட தலைமை தாங்கும் தகைமையுள்ள படித்தவர்கள் சமூகத்தில் இருந்து வெளியேறுவது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான இராணுவப் பொருளாதார சூழலுக்குள் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வையும் நம்பிக்கையையும் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தையும் அவசரத்தையும் தென்னிலங்கைக்கும் உலக சமூகத்துக்கும் நிராகரிக்கப்பட முடியாத விதத்தில் உணர்த்த வேண்டியதும் அவசியம். தமிழ் மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள்தான் உண்டு என்று தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் கூறிவரும் ஒரு பின்னணியில் இனப் பிரச்சினையைப் பேசுபொருளாக்கி அதன்மீது தென்னிலங்கையின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்தோடு, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினராகிய நாம் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளராக திரு.பாஅரியநேத்திரன் அவர்களை முன் நிறுத்துகிறோம். கடந்த 46 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள்;. 2009க்குப் பின் 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இவர்களில் வென்றவர்களும் சரி தோற்றவர்களும் சரி இன்றுவரையிலும் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வைத் தரவும் இல்லை; இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தவும் இல்லை. கடந்த 46 ஆண்டுகளாக ஜனாதிபதித் தேர்தல்களில் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு பதில் வினையாற்றும் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டு இந்த முறை தமிழ்மக்கள் செயல்முனைப்போடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது என்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஆகும். தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ் மக்களை ஓரணியாகத் திரட்டுவார். அதேசமயம், இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கித் தமிழ் மக்களின் கூட்டு விருப்பத்தை உலக சமூகத்துக்கும் தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்துவார். இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியையும் கோருவார். இந்த அடிப்படையில், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்துகின்றது. 1-இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய இலங்கைத்தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 2-தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பு ஆனது இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசங்களின் ஒன்றிணைவாக அமைய வேண்டும். அதாவது புதிய யாப்பானது இலங்கைத் தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக் (Plurinational State) கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 3-ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு அரசியல் தீர்வாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது. 4-இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள். 5-தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புத் தயாராக உள்ளது. 6-மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது மலையகத் தமிழர்களோடு தோளோடு தோள் நிற்கும். 7-ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும். இதுவரையிலுமான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக ஐநா பொதுச் செயலர் பொறுப்பு கூறலை ஐநா பொதுச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும். 8-அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும் நமது வளங்கள் இன அழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீடுகளையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர் தேசத்துக்கு இருக்க வேண்டும். 9-ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும், தமிழர் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். மேற்கண்ட தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுத் தமிழ் மக்கள் இதுவே தமது பொது நிலைப்பாடு என்று உலகுக்கும் தென்னிலங்கைக்கும் வெளிக்காட்ட பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளராகிய திரு.பா.அரியநேத்திரன் அவர்களுடைய சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம். பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக முன் நிறுத்தப்படவில்லை. அவர் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவுமே முன் நிறுத்தப்படுகிறார். ஒன்று திரண்ட தமிழ் மக்கள் உலகத்தின் முன்னும் தென்னிலங்கையின் முன்னும் பலமாக நிமிர்ந்து நிற்பார்கள். அதாவது அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கும் வாக்குகள்தான். தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கும் வாக்குகள்தான். எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் மக்களின் தேசியக் கடமையாகும். சங்குச் சின்னத்துக்கு ஆகக்கூடிய தமிழ் வாக்குகளை வழங்குவதன் மூலம் அன்பான தமிழ் மக்களே எங்களை நாங்களே வெற்றி பெற வைப்போம். https://thinakkural.lk/article/308918
  11. சிங்களவரின் வாக்குகள் இந்தமுறை பிரியப்போகுது , தமிழ் வாக்குகளுக்கு பாடு படுகின்றார்கள் . சுமாவின் ஆப்பு அந்தமாதிரி ...வாயை மூடி இருந்தாலாவது சிங்கள வாக்குகள் சஜித்துக்கு கிடைத்திருக்கும் ....இப்ப அந்த கழுசறை ரணிலுக்கு வாக்கு வாங்கி கொடுக்க பக்கா திடடம் ...
  12. நீங்கள் கூறுவதிலும் நியாயம் உண்டு. இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் அங்கே உள்ளவர்கள் மிகப் பெரும்பாலும் இலங்கைக்கே தமது ஆதரவைத் தெரிவித்து வந்திருக்கிறார்கள். யாள் களத்திலும் இந்த வகையான உணர்வோட்டம் ஒன்று இருப்பதை பார்த்திருக்கிறேன. ஆனால் வெளிநாடுவாழ் தமிழர்களும் இலங்கை அரசியல்வாதிகளும் வெறுப்பரசியல் + உணர்ச்சி அரசியலையே செய்கின்றனர். அரசியல்வாதிகளுக்கு தாங்கள் செய்வது என்னவென்று தெரியும். அது அவர்களது வியாபாரம். ஆனால் புலம்பெயர்ஸ் செய்வது முட்டாள்தனத்தால் . உண்மையைக் கூறுங்கள்,.. தமிழர் பகுதிகளில் ஒளவையாருக்குச் சிலை வைப்பதில் ஓர் அர்த்தம் உண்டு. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் இலங்கையில் எதற்குக் காந்தி சிலை? காந்திக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? சரி பெரியவா. நான் வயதிற்கு எப்போதும் மரியாதை கொடுப்பவன். உங்கள் சொற்படியே முற்பள்ளிக்குப் போகிறேன். 😉
  13. “இன்டிகோ” என்ற நிறுவனம், தனது முதலாவது விமான சேவையை சென்னை - யாழ்ப்பாணத்துக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து இருந்தது. முன்பு இயங்கிக் கொண்டு இருந்தது வேறு விமான சேவை என நினைக்கின்றேன். இப்போது… இரண்டு விமான சேவைகள் நடைபெறுகின்றன போலுள்ளது.
  14. வாழையடி வாழை - சுப.சோமசுந்தரம் தமிழ் நிலத்தின் சிறந்த எழுத்தாளராக, திரைப்பட இயக்குனராக பரிமளித்திருக்கும் திரு. மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் தொடர்பாக சிறிது எழுத வந்தேன். நல்ல படங்களைப் பற்றித் தெரிய வரும்போது OTT தளத்தில் வரும் வரை பொறுப்பதில்லை; திரையரங்கிலேயே பார்த்து விட வேண்டும் எனும் முனைப்பு உள்ளவன்தான் நானும். இருப்பினும் படம் வந்து ஐந்தாறு நாட்கள் கழித்து மிதமான கூட்டத்தில் பார்ப்பதிலேயே அலாதி இன்பம் காண்பவன் நான். காரணங்கள் சில உண்டு. ஒரு நல்ல திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் (ஒவ்வொரு frame ஐயும் என்று சொல்வார்களே, அது அதேதான் !) சலனமில்லாமல் ரசித்துப் பார்க்க முடிகிறது. ஒரு சிறுபிள்ளைத்தனமான காரணம் கூட உண்டு. திரையரங்கின் கேன்டீனில், "வள்ளிசா சீனி இல்லாத டீயா ? அரைச் சீனி போட்டுத் தரட்டுமாய்யா ?" என்று வாஞ்சையுடன் தாயினும் சாலப் பரிந்த பரிவு கூட்டத்தில் கிடைப்பதில்லை. கூட்டம் அதிகம் உள்ள எந்த சமூகத்திலும் மானுட மதிப்பீடு குறைவு என்று எங்கோ வாசித்த நினைவு. நிற்க. 'வாழை' திரைப்படம் குறித்த விமர்சனம் செய்ய வரவில்லை. நான் நிதானமாக ஒரு வாரம் கழித்துப் பார்த்ததால், படம் ஏற்கனவே ஊடகங்களில் திரைத்துறையின் துறை போகியவர்களால் ஆய்ந்து அலசிப் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது; மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எனவே அது பற்றிப் புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின் என்னதான் எழுத நினைத்தேன் ? நான் 'வாழை' பார்க்கும் முன்பே எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் ஏதோ சொல்லப் போக, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட சிறிய சலசலப்பின் பின்னணியில் ஏதோ எழுத நினைத்தேன். அவர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே தாம் எழுதிய 'வாழையடி' என்ற சிறுகதையைக் குறிப்பிட்டு அந்த 'வாழையடி'தான் இந்த 'வாழை' என்ற தொனியில் பேசி இருந்தார். எதையும் சாதியக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கும் ஆதிக்க சக்திகள், "கிடைத்ததடா வாய்ப்பு - மாரி செல்வராஜை அடிக்க !" என்ற அளவில் ஆரவாரம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். மறுநாளே மாரி செல்வராஜ், "வாழைக்காய் சுமக்கும் தொழிலாளர்களைப் பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்ற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை. அனைவரும் வாசிக்கவும். எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி" என்று சுருக்கமாக, தெளிவாக, தமக்கே உரிய சான்றாண்மையுடன் தமது 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார். 'வாழையடி' கதையின் இணைப்பையும் தந்திருந்தார். நான் படம் பார்ப்பதற்கு முன் 'வாழையடி' கதையை வாசித்து விட்டேன். படம் பார்க்கும்போது அக்கதையைப் படத்துடன் மனதளவில் ஒப்பிடத் தவறவில்லை. திருவைகுண்டம் பகுதியில் வாழை விவசாயத்தைக் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்ய விழைவோர் யாரும் அந்தக் கங்காணிகளைக் குறிக்காமல், அக்காலத்தில் வாழைத்தார் ஒன்றுக்குச் சுமை கூலி ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாயாக ஏற்ற தொழிலாளர்கள் வைத்த கோரிக்கையைக் குறிக்காமல், தொழிலாளர் ஆடையில் வாழைக் கறையைக் குறிக்காமல், வரப்பில் குத்தும் முள்ளைக் குறிக்காமல், கால் தடுமாறி நீரில் விழுவதைக் குறிக்காமல் எழுத முடியாது. இப்படி எல்லோருக்கும் தோன்றும் துணுக்குகளை ஒரு சிறுகதையாய்ப் பதிவு செய்துவிட்டு, தொழிலாளர்களின் வாழ்வை ஓவியமாய்த் தீட்டிய ஒரு திரைக்காவியத்தை மலினப்படுத்துவதைப் போல அல்லது குறைத்து மதிப்பிடுவதைப் போல சோ.தர்மன் அதன் கதைக்குச் சொந்தம் கொண்டாடியது சரிதானா ? அந்தக் கதைதான் இந்தக் கதை என்று உணர்வதற்கு ஒரு ஞானக்கண் வேண்டுமோ ! "எனக்குத் தெரிந்தவரை வாழைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முதலில் பதிவு செய்தவன் நான்தான்" என்று சொல்வது வரை சோ. தர்மனுக்கு அவரது உரிமையின் எல்லை. ஜெர்மனியில் நாஜிக்கள் நிகழ்த்திய யூத இன அழிப்பு (The Holocaust) பற்றிய பல கதைகளும் புதினங்களும் எழுதப்பட்டன; எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களும் வெளிவந்தன. அவையனைத்திலும் வதை முகாம்கள் (concentration camps), யூதர்களும் அரசியல் எதிரிகளும் முதலில் தங்க வைக்கப்பட்ட 'கெட்டோக்கள்' (ghettos), கொலைவாயு அறைகள் (gas chambers), கொலை செய்யப்பட்ட சிறுவர், சிறுமியர், முதியோர் என அனைத்து விஷயங்களும் உண்டு. இவற்றுள் எல்லி வீஸல் (Elie Wiesel) எனும் எழுத்தாளர் தாம் நேச நாடுகள் படையால் புச்சென்வால்ட் (Buchenwald) வதை முகாமிலிருந்து விடுவிக்கப்படும் வரை உள்ள தமது சோக அனுபவங்களைப் பகிர்ந்த 'Night' எனும் புதினம் இலக்கிய உலகில் பரவலாகப் பேசப்படுவது. அவர் ஒரு எழுத்தாளர், பேராசிரியர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். தமது சமூகச் செயல்பாடுகளால் 1986 இல் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். அவரது புதினம் 'Night' இல் ஹிட்லரின் யூத இன அழிப்பு பற்றிய முந்தைய புதினங்களில் உள்ளவைதாம் இருக்கின்றன என்று யாரேனும் குற்றம் சாட்டினால், இலக்கிய உலகம் அதனை எப்படிப் பார்க்கும் ? இது பற்றிய ஏனைய பெரும்பாலான படைப்புகள் வதை முகாம்களில் இருந்து மீண்டவர்களின் அனுபவங்களைக் கேட்டு எழுதப்பட்டவை; எல்லி வீஸலைப் பொறுத்தவரை அவரே ஒரு எழுத்தாளர், அறிஞர் என்பதால் அவர்தம் சொந்த அனுபவத்தைப் பதிவு செய்தது ஏனைய படைப்புகளில் இருந்து சிறந்து விளங்குதல் இயற்கையே ! அது போலவே கரிசல் காட்டில் இருந்து மருத நிலத்திற்குக் குறுகிய காலத்திற்கு வந்த சோ. தர்மன் வாழை விவசாயிகளின் துயரங்களைப் பதிவு செய்ததை விட வாழையில் வாழ்ந்த மாரி செல்வராஜின் பதிவு நிவந்து நிற்பது இயற்கையே - அது எழுத்து ஊடகம், இது காட்சி ஊடகம் என்று இருந்தாலும் கூட ! மேலும் முன்னரே குறிப்பிட்டது போல் சோ. தர்மன் ஒரு சிறுகதையாக எழுதியவை, எல்லோருக்கும் தெரியும் துணுக்குச் செய்திகள். மாரி செல்வராஜ் பதிவு செய்தவை அவர் வாழ்ந்து காட்டியவை. இவற்றிற்கு அப்பாற்பட்டு, எழுத்து ஊடகத்தில் கூட சோ. தர்மனை விட மாரி செல்வராஜ் ஒரு படி உயர்ந்து நிற்கிறார் என்பது இருவரது எழுத்துக்களையும் வாசித்த என் கருத்து. சோ. தர்மன் எண்ணிக்கையில் அதிகப் படைப்புகளைத் தந்திருக்கிறார், சாகித்ய அகாடமி விருதாளர் என்பதெல்லாம் ஒரு புறம். இத்தகைய ஒப்பீடு பொதுவாகத் தேவையில்லைதான். சோ.தர்மன் நம்மை சந்திக்கு இழுத்தால் வேறு என்ன செய்வது ? "படம் பார்த்தீர்களே, எப்படி இருக்கிறது ?" என்று நிருபர் கேட்டதற்கு, பெரும் பாராட்டைப் பெற்ற படத்தின் தரத்தைப் பற்றி எதுவும் பேசாமல், "நான் அச்சு ஊடகத்தில் பதிவு செய்தேன்; அவர் (மாரி செல்வராஜ்) காட்சி ஊடகமாக மாற்றி இருக்கிறார்; அவ்வளவுதான். வேறெதுவும் இல்லை" என்று சாதாரணமாக சோ. தர்மன் சொல்லிச் செல்வது முதிர்ச்சியின்மையா அல்லது அடாவடித்தனமா என்பது நமக்குப் புரியவில்லை. 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' எனும் அடிப்படைப் பண்பே சோ. தர்மனுக்குத் தெரியாதோ என்று எண்ண வைக்கிறார். "கதைக்காக மாரி செல்வராஜ் என்னிடம் உரிமை கோரவும் இல்லை; அதை நான் பெரிதாக்கவும் இல்லை" என்று சோ. தர்மன் சொல்வது வேடிக்கை. "அது நம்ம கதைதான் என்று சொல்ல முடியாது" என்றும் பேட்டியின் ஊடாகச் சொல்லிக் கொள்கிறார் சோ. தர்மன். அவ்வாறெனில் மாரி செல்வராஜ் அவரிடம் ஏன் உரிமை கோர வேண்டும் ? ஒரு இலக்கியவாதி இவ்வளவு குழப்பவாதியாகவா இருப்பது ? ஊடகங்களில் இவ்வளவு சொல்லிவிட்டு, "அதை நான் பெரிதாக்கவில்லை" என்ற பம்மாத்துப் பெருந்தன்மை எதற்கு ? வாசகர்களில் சிலர் அல்லது பலர் அரைகுறை வாசிப்பு அல்லது மேம்போக்கான வாசிப்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அப்படியானவர்கள், "உங்கள் கதைதான் வந்திருக்கிறது" என்று உளறினால் அந்த உளறல்களையெல்லாம் பொதுவெளிக்குக் கொண்டு வருவது சான்றாண்மைக்கு அழகா ? சமூகத்தில் சில சாதி வெறியர்கள் மாரி செல்வராஜ் மீது கொண்ட வன்மத்தால் சமூக வலைத்தளங்களில் ஓரிரு நாட்கள் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆடினார்களே தவிர, அறிவுலகம் சோ. தர்மனின் வெற்றுரையைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளியது அவ்வுலகின் சான்றாண்மைக்கான சான்று. பின் ஏன் இது பற்றி நான் இத்துணை எழுத வேண்டும் ? ஒருவர் தாம் கற்றுணர்ந்தார் என்ற போர்வையில் இளையோரின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதைக் கண்டுகொள்ளாமல் விடுவதையும் தாண்டி, கண்டனக் குரலைப் பதிவு செய்வது ஓரளவு கற்றலும் கற்ற வழி நிற்றலும் உடையோர் தம் கடமை. மகாபாரதக் கதையில் கர்ணன் தோற்று தருமன் வென்றிருக்கலாம். 'வாழையடி'யை வாசித்து 'வாழை'யைப் பார்த்தால் தெரியும் - அந்த 'தர்மன்' தோற்று இந்த 'கர்ணன்' வெல்வது. https://www.facebook.com/share/p/2shRFgGaBPcoGhvN/?mibextid=oFDknk
  15. காட்டி கூட்டி கொடுக்கும் காவாலிகள் பற்றி பேசியதும் ஏன் உங்களுக்கு எரியுது?? உண்மை கசப்பானது. ஆனால் எதிர் கொண்டவர் நாம். எனவே நீங்கள் தூரமாக நின்று உங்கள் கரசேவையை தொடருங்கள்.
  16. 2009 க்கு பின்னர் எந்த ஒரு அசைவும் அற்ற இனமாக எம் இனம் இருப்பதற்கு காரணம் புலிகள் இல்லாத இந்த இடைவெளியை அவர்கள் எப்பொழுது தொலைவார்கள் என்று காத்திருந்து அதற்காக அல்லும் பகலும் உழைத்து காத்திருந்த காவாலிகள் அந்த இடங்களில் புகுந்து விட்டது தான். 😡 தாயகத்தில் மட்டும் அல்ல புலம்பெயர் தேசங்களிலும் அதே நிலை தான்.
  17. சரி சம்பளத்துடன் இந்த வருடம் ஒரு இனிப்பு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இனிப்பாக கூட்டிக் கொண்டே போகலாம். 50 இனிப்பு சேர்ந்த பின் 100 ரூபாவாக கொடுக்கலாம்.
  18. இந்த மீம்ஸை தயாரிப்பவர்கள்... முஸ்லீம்கள். நான் பார்த்த அளவில், அவர்களில் பெரும்பாலானோர்... ரணிலையும், அனுரவையும் ஆதரிக்கின்றார்கள். சஜித்தை ஆதரித்து வந்த மீம்ஸ் ஒன்றையும் இதுவரை காணவில்லை. நம்ம @தனிக்காட்டு ராஜாவும் (முனிவர்) மீம்ஸ் தயாரிக்கின்றார். மேலுள்ளது தனிக்காட்டு ராஜா தயாரித்தது.
  19. தமிழ் அரசியல் பரப்பின் சித்து விளையாட்டின் கனவான்கள், மிதவாதிகள் , சந்தர்ப்பவாதிகள், குழப்பவாதிகள் யாரென்று அடையாளப்படுத்தி ஆணிகளை இறுக்கி கொஞ்சமாவது ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்தால் சிறப்பு.
  20. அரியத்தாருக்கு போதிய வாக்குகள் விழாவிடின் நட்டம் அவருக்கல்ல!!
  21. பெருமாள் எனக்கும் இந்தியா போய்போக ஆசை தான். ஆனாலும் இரண்டு பிரச்சனை. நேரடியாக விமானசீட்டு வாங்கணும். 2 பொதிகளையும் கொண்டுபோக விடணும்.
  22. இந்த பதில். கேட்ட கேள்விக்கு உரியது இல்லை கேள்வி இது தான் ஆமா கந்தையா விடக்கூடாது.
  23. முன்னாளில் எனது ஆசான், வாழ்த்துகள்
  24. தெரியாத பேயை விட… தெரிஞ்ச பேய் நல்லது என நினைத்துள்ளார் போலுள்ளது. 😂
  25. இந்தாளுக்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியவில்லை. எவ்வளவு பேர் ஏங்கி தவிக்கிறார்கள் இந்த தவத்திற்காக....😜
  26. வாழ்த்துக்கள் ரிஜிவன். 2024 லும் தனது தோலின் நிறம் பற்றி சமூக ஊடகங்களில் சிலரின் கருத்துக்கள் மன வருதத்தை தந்ததாக குறிப்பிட்டுள்ளார். 2015ல் வாகன விபத்தில் தனது ஒரு காலையும் , மனைவியையும் இழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
  27. நாங்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள சகலரும் ] புத்தன் அண்ணாவுக்கு மிகவும் இரக்க குணம். எமது ஆட்கள் சிலர் நைஸ் மானுக்கு செய்யும் பேய்காட்டல்களை உலகத்தில் உள்ள சகலரும் அப்படி செய்வதாக எமது ஆட்கள் மீது இரக்கம் காட்டுகின்றார்
  28. இல்லை இது பிழை. இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடுகள் தான் அண்மையில் இலங்கை மிகவும் கஸ்ரப்பட்டபோது இந்தியா உடனே பல பில்லியன் நன்கொடையும் கடனும். வழங்கியுள்ளது 2009 இல் வன்னி யுத்தத்தின்போது தகவல்கள் வழங்குதல் ஆயுதங்கள். வழங்குதல் நிதியுதவி வழங்குதல் ஆளாணி,..உயர்மட்ட. படையணிகளின். ஆலோசனை வழங்குதல் இப்படி நிறையவே உதவியாக இருந்து உள்ளது” இந்தியா ஒரு எதிரி. நாடு இப்படி செய்யுமா ??? இலங்கை ஒருபோதும் இந்தியாவுடன் போரில் ஈடுபட்டதில்லை படப்போவதுமில்லை அதே மாதிரி தான் இந்தியாவும் ஒரு சில விடயத்தில் உடன்பாடில்லை அவ்வளவு தான் இது ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் சண்டைப்போட்டுக்கொள்வது போன்றது’ மட்டுமே
  29. மெல்பேர்ன் அப்பிடீன்னு சொல்லி ஒரு ஷேஸ்திரம் இருக்கு கண்டியளோ , அம்சமா இருக்கு .. 20 வரியம் பிரிஸ்பேன் எனப்படும் யாழ் சூழ்நிலை உள்ள இடத்தில் இருந்து விட்டு , என்ன தான் இங்கே இருக்கு என்று பார்த்து விடலாமே என்று மாறியிருக்கிறேன் . மாறின கையோட , இளவேனிலில் பிரிஸ்பேன் தேசம் 35 பாகை செல்ஷியஸில் வரு வரு எண்டு வறுபட மெல்பேர்ன் 10 - 20 பாகை இளமையில் தழுவிச் செல்கிறது ...😊
  30. " நோகாமல் அடிக்கிறன் ஓயாமல் அழு"......! 😁
  31. சம்பந்தருக்கு இப்படி சொல்லி சொல்லியே அவரை அனுப்பி போட்டியல்...இப்ப தமிழ் மக்களுக்கு சொல்ல வெளிக்கிட்டியல்....தேர்தலில் உங்கன்ட ஆளுக்கு வொட் போட உற்சாக படுத்திரியல்...போல
  32. பராலிம்பிக் ஈட்டி எறிதலில் இலங்கையின் சமித்த துலான் உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார் Published By: VISHNU 03 SEP, 2024 | 02:12 AM (நெவில் அன்தனி) பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையுடன் வென்றெடுத்து தனது தாய் நாட்டிற்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொடுத்தார். போட்டியின் ஆறாம் நாளான திங்கட்கிழமை (02) இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாற்றுத்திறனாளி சமித்த துலான் கொடிதுவக்கு ஈட்டியை 67.03 மீற்றர் தூரத்திற்கு எறிந்து F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். தனது ஐந்தாவது முயற்சியிலேயே சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையை நிலைநாட்டினார். ஜப்பானின் கோபி விளையாட்டரங்கில் கடந்த மே மாதம் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் F64 வகைப்படுத்தில் பிரிவு ஈட்டி எறிதலில் 66.49 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான உலக சாதனை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு பராலிம்பிக்கில் தனது சொந்த உலக சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார். டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் சமித்த துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். சமித்த துலான் கொடிதுவக்கு தனது முதல் நான்கு முயற்சிகளில் முறையே 63.14 மீற்றர், 63.61 மீற்றர், 55.01 மீற்றர், 63.73 மீற்றர் ஆகிய தூரங்களைப் பதிவுசெய்திருந்தார். ஐந்தாவது முயற்சியில் உலக சாதனை நிலைநாட்டிய அவர், கடைசி முயற்சியில் 64.38 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இப் போட்டியில் இந்தியாவின் மாற்றுத்திறனாளி சுமித் 70.59 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து புதிய பராலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அவுஸ்திரேலியாவின் மாற்றுத்திறனாளி மைக்கல் பியூரியன் (F44 வகைப்படுத்தல் பிரிவு) 64.89 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/192686
  33. மற்றையது Alliance. Indigo & Alliance தினமும் இயக்கப் படுகின்றது என்று இணையம் வாயிலாக அறிய முடிகின்றது. @ஈழப்பிரியன், @பெருமாள்
  34. கேட்ட கேள்விக்கு பதில் உங்கள் பதில் அல்ல நேசரியில் இருந்து மறுபடியும் படித்து விட்டு வந்து எனக்கு பதில் எழுதவு ம் .
  35. "1" என குறிப்பிடப்பட்டிருக்கும் நீர் நீல நிறத்தில் உள்ள பெட்டி கடந்த வார ஆசிய சந்தை (டோக்கியோ) நேரம் ஆகும் மறுநாள் இரு தடவையும் புதன் கிழமை இரண்டு தடவையும் திங்கள்கிழமை ஆசிய சந்தையின் உயர் விலை பகுதிக்கு விலை வரும் போது விலை மீண்டும் உயர்கிறது இறுதியாக வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் விலை தொடர்ந்து விலை உயர்வடைந்து செல்கிறது, இது ஒரு வகையான அமைப்பு, இவ்வாறு நிகழ்வதற்குக்காரணம் திங்கள் ஆசிய சந்தை விலை கடந்தவாரம் Accumulation விலை வடிவில் உள்ளதே காரணம், குறித்த வாரத்திற்கான சந்தை போக்கினை தீர்மானிக்கும் சக்தியாக இந்த விலைப்பகுதி இருக்கும். நீர் நீல நிறத்தில் உள்ள பெட்டி ஆசிய சந்தை நேரம், சிகப்பு நிற பெட்டி அமெரிக்க சந்தை நேரம் அதற்கு இடைப்பட்ட இடம் லண்டன் சந்தை நேரம். மெல்லிய சாம்பல் நிற பெட்டி இலண்டன் நேரப்பகுதிக்குள் வருகிறது ஆனால் இது வேறு ஒரு விடயத்தினை குறிப்பதற்கானது அதனை பின்னர் கூறுகிறேன்.
  36. இல்லை, தனிநாடோ அல்லது சமஸ்டியோ பற்றி நான் கூறவில்லை, ஒரு நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் இருக்கும் உரிமைகளுடன் அனைத்து மக்களும் வாழ வேன்டும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் ஜனநாயக விழுமியங்களை பேண வேண்டும். ஒருவர் மீது அடக்குமுறையினை சாதி, மத, இன என்ற அடிப்படையில் அடக்குமுறைகள் கூடாது (Discrimination). எனது கருத்தினை ஐலன்ட் தவறாகவே புரிந்து கொள்வதனால் அதனடிப்படையான கருத்தினடிப்படையில் உள்ளது உங்கள் கருத்து.
  37. 'வாழையடி' சிறுகதைக்கான இணைப்பு கட்டுரையின் இறுதியில் உள்ள முகநூல் இணைப்பில் உள்ளது.
  38. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஒனூர் எரெம் பதவி, பிபிசி உலக சேவை 5 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களது குடல் ஆரோக்கியம், உங்களது கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநோய் வரை அனைத்துடனும் சம்பந்தப்பட்டது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நமது உடல்நலத்தில் குடலின் பங்கு என்ன என்பது பற்றிய நமது அறிவு விரிவடைந்து வருவதால், குடல் ஆரோக்கியத்தின் மீது நமது கவனமும் அதிகரித்து வருகிறது. 2021-இல் உலகளாவிய புரோபயாடிக்ஸ் சந்தை ஆண்டுக்கு 60 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இது 2030-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 7%-க்கும் அதிகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான போலரிஸ்-இன் தரவுகள் கூறுகின்றன. ஆனால், குடல் ஆரோக்கியம் ஏன் முக்கியமானது? குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளையில் காணப்படும் செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகளை குடலும் உற்பத்தி செய்கிறது ஆரோக்கியமான குடல் என்றால் என்ன? குடலின் கட்டமைப்பு சிக்கலானது. அதனால், மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தை அடையாளம் காண்பதைப் போல, ஆரோக்கியமான குடலை அடையாளம் காண்பது எளிதானது அல்ல. மேலும், குடல் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கு எந்த ஒரு தனிப்பட்டக் கருவியும் இல்லை. நமது குடல் நுண்ணுயிரிகளால் நிறைந்துள்ளது. அவற்றின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமானது என்றால், அவற்றை ஒன்றாக இணைக்க முடிந்தால், அவற்றின் எடை 1.8 கிலோவுக்கு மேல் இருக்கும். ஒவ்வொரு கிராம் குடலிலும் 100 பில்லியன் (10,000 கோடி) பாக்டீரியாக்கள் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் குடலுக்கும் மூளைக்கும் இடையிலான உறவை ஆராய்ச்சி செய்யும் டாக்டர் கேடரினா ஜான்சன் கூறுகையில், ஆரோக்கியமான குடல் பலதரப்பட்ட நுண்ணுயிரிகள் வளர்வதை ஊக்குவிக்கிறது. நுண்ணுயிர் அறிவியல் ஒப்பீட்டளவில் ஒரு இளம் துறை, என்கிறார் கேடரினா ஜான்சன். அதாவது ஆரோக்கியமான குடல் எப்படி இருக்கும் என்று நமக்கு விரிவாகத் தெரியாது. "நமது நுண்ணுயிரிகள் மிகவும் தனிப்பட்டவை, பலதரப்பட்டவை. ஆயிரக்கணக்கான வெவ்வேறு நுண்ணுயிரி இனங்கள் (இந்த இனங்களுக்குள் வெவ்வேறு திரிபுகள்) உள்ளன. அவற்றில் பலவற்றின் செயல்பாடு எங்களுக்குத் தெரியாது," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குடல் ‘இரண்டாவது மூளை’ என்று அழைக்கப்படுகிறது ஆரோக்கியமான குடல் ஏன் முக்கியம்? குடல் ‘நமது உடலின் அனைத்து உறுப்புகளையும்’ பாதிக்கலாம், என்கிறார் டாக்டர் ஜான்சன். மூளைக்கும் குடலுக்கும் இடையே ‘குடல்-மூளை அச்சு’ (gut–brain axis) எனப்படும் வலுவான தொடர்பு அமைப்பு உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு இன்றியமையாதவை. குடல் நுண்ணுயிரிகள் இல்லாத நிலையில் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக நடக்கவில்லை என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. குடல் ‘இரண்டாவது மூளை’ என்று அழைக்கப்படுகிறது. நியூரான்கள் நமது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படும் செல்கள் ஆகும். அவை நம் உடல் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அதற்குச் சொல்கின்றன. மூளையில் காணப்படும் செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகளை குடலும் உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் நமது மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் குடலும் ஒரு பங்கு வகிக்கிறது. நமக்கு நன்கு தெரிந்த குடலின் செயல்பாடு உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதாகும். "நீர் மற்றும் தாதுக்களை நாம் மலம் வழியே இழக்க முடியாது," என்று இந்தியாவின் இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் வெங்கட்ராமன் கிருஷ்ணா விளக்குகிறார். இங்கிலாந்தில் உள்ள ‘கட் ஹெல்த் டாக்டர்’ என்றும் அழைக்கப்படும் டாக்டர் மேகன் ராஸ்ஸி, குடல் நுண்ணுயிரிகளில் ஏற்படும் சமநிலைக் குலைவுகள் 70-க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாட்பட்ட நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன, என்கிறார். இவற்றில் இதயம் மற்றும் சுவாச நோய்கள் முதல் முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரை அடங்கும். நமது நோயெதிர்ப்பு உயிரணுக்களில் சுமார் 70% நமது குடலில் வாழ்கின்றன. இது நோயெதிர்ப்பு அமைப்புடன் ஒரு ‘தொடர்ச்சியான செய்திப் பரிமாற்றத்தில்’ இருக்கிறது என்று டாக்டர் ராஸ்ஸி கூறுகிறார். அதனால்தான், “சிறந்த குடல் ஆரோக்கியம் கொண்டவர்கள் அதிக மீள்திறன் கொண்ட நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளனர்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது? 2018-ஆம் ஆண்டில் ‘அமெரிக்க குடல் திட்டத்தின்’ (American Gut Project) ஆராய்ச்சியைத் தொடர்ந்து, மக்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 30 வெவ்வேறு தாவரங்களைச் சாப்பிட வல்லுநர்கள் பரிந்துரைக்கத் துவங்கினர். பழங்கள், மற்றும் காய்கறிகள் மட்டுமல்ல, விதைகள், மசாலா, மற்றும் கொட்டைகள் போன்றவையும் அடங்கும். சமையல் குறிப்புகளில் சிறிய மாற்றங்களைச் செய்து, பல்பொருள் அங்காடியில் பலவகையான பழங்களைத் தேடுவது போன்ற எளிய முறைகளை டாக்டர் ராஸ்ஸி பரிந்துரைக்கிறார். நார்ச்சத்து நிறைந்த உணவு, வயிறு நிறைந்தது போன்ற உணர்வை வழங்குகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது, என பிரிட்டனின் தேசியச் சுகாதார சேவை தெரிவிக்கிறது. இந்த அமைப்பு பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து சாப்பிட பரிந்துரைக்கிறது. நார்ச்சத்துடன் கூடிய மாவு, அல்லது தானிய ரொட்டிகளை உட்கொள்வது, பழுப்பு அரிசி, அல்லது முழு கோதுமை ஆகியவற்றை உட்கொள்வது உங்கள் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கலாம். நார்ச்சத்துக்கான பிற உணவுகளில், உருளைக்கிழங்குகள் தோலுடன் (வேகவைத்த உருளைக்கிழங்கு) மற்றும் பீன்ஸ், பருப்பு அல்லது கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள், ஆகியவற்றை குழம்பு, கூட்டு, மற்றும் சாலட்களில் சேர்க்கலாம். ப்ரீபயாடிக் உணவுகள் (சில வகையான நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்) குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நார்ச்சத்துடன் கூடிய மாவு, அல்லது தானிய ரொட்டிகளை உட்கொள்வது, பழுப்பு அரிசி, அல்லது முழு கோதுமை ஆகியவற்றை நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கலாம் வாழைப்பழம், வெங்காயம், பூண்டு, முட்டைக்கோஸ், ஓட்ஸ், அஸ்பாரகஸ், சிட்ரஸ் பழங்கள் ஆகியவை நார்ச்சத்துக்கான மேலும் சில எடுத்துக்காட்டுகள். பாகிஸ்தானில் உள்ள இரைப்பைக் குடலியல் நிபுணரான டாக்டர் ஹனிஷா கெமானி, நமது இருபதுகளில் ‘சமச்சீரான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறையை’ நிறுவுவது ‘நீண்ட கால ஆரோக்கியத்திற்கு முக்கியமானது’ என்கிறார். "இந்த முக்கியமான காலகட்டத்தில் செய்யப்படும் உணவுத் தேர்வுகள் நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைத் தீர்மானிக்கும். இது மன மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், பிற்கால தசாப்தங்களில் ஒட்டுமொத்த உடல் நலனை வடிவமைக்கும்," என்று அவர் கூறுகிறார். இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையில் குறைந்தது 12 மணிநேர இடைவெளி விடுவது குடல் நுண்ணுயிரிகளுக்கு நன்மை பயக்கும், என லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தனது ‘ஸ்பூன்-ஃபெட்: உணவைப் பற்றி நமக்குக் கூறப்பட்ட அனைத்தும் தவறு’ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து சாப்பிட வேண்டும் குடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் எவை? அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது, மற்றும் புகையிலை பயன்பாடு உங்கள் குடலுக்கு நல்லதல்ல என்று டாக்டர் கிருஷ்ணா விளக்குகிறார். மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவில் 'நல்ல' பாக்டீரியாவை அடக்கும், அல்லது 'கெட்ட' பாக்டீரியாவை அதிகரிக்கும் பொருட்கள் உள்ளன. உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும், சுகாதாரமற்ற தெருவோர உணவுகளைத் தவிர்க்கவும், ஆபத்தான வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களைத் தவிர்க்க, பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி உண்ண வேண்டும் என டாக்டர் கிருஷ்ணா மேலும் கூறுகிறார். மன அழுத்தம் நம் குடலையும் பாதிக்கிறது. இது அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் குடல் புண்களை அதிகரிக்கலாம். டாக்டர் ஜான்சன் கூறுகையில், அதிக மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை குறைந்துவிடும் என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடலுக்கு நல்லதல்ல புரோபயோட்டிக் உணவுகள் பலனளிக்குமா? ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் போது புரோபயோட்டிக்குகள் வேலை செய்யும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். டாக்டர் மேகன் ராஸ்ஸி, "சரியான நிலையில், சரியான கால அளவுக்கு, நீங்கள் சரியான புரொபயோட்டிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்கிறார். "இன்று நீங்கள் பல்பொருள் அங்காடிகளில் பார்க்கும் ஒரு புரோபயாடிக் தயாரிப்பு, குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. விளம்பரங்கள் சொல்வதுபோல அவற்றை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை," என்கிறார் அவர். ''சில நாடுகளில், நிறுவனங்கள் குடல் சுகாதார சோதனைகளை வழங்குகின்றன, அங்கு நீங்கள் ஆய்வகத்தில் ஆய்வுக்காக உங்கள் மலத்தைக் கொடுப்பீர்கள்.'' ''இந்த நிறுவனங்கள் சொல்வதைப்போன்ற பலன்களை இந்தப் பரிசோதனைகள் வழங்குவதில்லை, ஆனால் உங்கள் குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை பற்றிய புரிதலை இவை வழங்க முடியும்'' என்று டாக்டர் ராஸ்ஸி கூறுகிறார். பிரிட்டிஷ் மருத்துவரும் டிவி தொகுப்பாளருமான டாக்டர் சாண்ட் (Xand) இவை முற்றிலும் பலனளிக்குமா என்பது சந்தேகம்தான் என்று ஒப்புக்கொள்கிறார். "அவர்கள் உங்களுக்குப் பொதுவான ஆலோசனையை வழங்குவார்கள். ஆனால், அது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல," என்று அவர் கூறுகிறார். "உங்கள் பணத்தைச் சேமிக்கவும், உங்களுக்குக் குடல் பிரச்னைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் பேசவும், என்று நான் கூறுவேன்," என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c75nkpzxr1qo
  39. தமிழர் வரலாற்றில் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக உலக ஜதார்த்தத்தை புறந்தள்ளி தனி ஆவர்தன வீர அரசியல் செய்து, உள்ளதும் போச்சையா நொள்ளைக்கண்ணா என்ற கதையாய் தமிழர் அரசியல் தொடர்கிறது. படிப்படியாக அங்குலம் அங்குலமாக தமது அரசியல் தந்திரோயபம் மூலம் பெரிய கட்சிகளுக்குள் ஊடுருவி தமது சமுதாயத்தை ஶ்ரீலங்காவில் பலப்படுத்திய முஸலீம் அரசியல்வாதிகளின் தந்திரோபங்களைக் கூட தமிழ் அரசியலில் ஈடுபடும் தாயக/ புலம் பெயர் தமிழ் தேசிய அரசியல்வாதிகளால் செய்ய முடியவில்லை. இன்றைய நிலையில் தமிழரின் பொருளாதார சமூக கட்டமைப்புகளை வட கிழக்கில் பலப்படுத்த தேவையான கோரிக்கைகளை வைத்து பேரம் பேசி அதை நிறைவேற்றி தமது அரசியலைத் தொடர்ந்திருக்கலாம். அதை விடுத்து பொது வேட்பாளர் என று ஒரு கோமாளிக்கூட்டம் கூத்தாட இப்போது எந்த பயனும் அற்ற முடிவையே தமிழரசுக் கட்சியும் எடுத்துள்ளது என்றே நினைக்கிறேன். தமது வெற்று கோஷங்களை வைத்து தமிழ் தேசிய வெறித்தன அரசியலை செய்து மிக விரைவில் இரண்டாவது பெரும்பான்மை என்ற நிலையில் இருந்து மூன் றாவது சிறுபான்மை இனம் என்ற நிலைக்கு தமிழரை கொண்டுவந்துவிட்டே புலம் பெயர் / தாயக தமிழ் தேசிய வெறியர்கள் தமது கண்களை மூடுவார்கள்.
  40. சுமந்திரனே.... செல்லாக் காசு. அவரே... திருமதி ரவிராஜின் வெற்றியை தட்டிப் பறித்து பாராளுமன்றம் போனவர். இதுக்குள்ளை... அவர் சஜித்துக்கு போடச் சொல்லி சிபாரிசு பண்ணுகிறாராம். 😂 இவங்களின் அலப்பறை தாங்க முடியவில்லை. 🤣
  41. இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை. இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு தில்லாலங்கடி வேலை. 😎 கட்சியை நடுத் தெருவில் வைத்து, நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறாங்கள். 😂 எல்லாம்.. அந்த சம்பந்தனுக்கு, சமர்ப்பணம். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.