Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2161
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31940
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. வாதவூரான்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2507
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/05/24 in all areas

  1. 1987 ஒப்பந்தம் தொடர்பாக தேசியத் தலைவரின் உரையின் சாராம்சம் ... தமிழர்கள் இந்த தீர்வை குழம்பினார்கள் என்று நீங்கள் "நம்புவதற்கு" ஏதுவான காரணங்களை பற்றி பேசுங்களேன். ஏனென்றால் 1987 காலப்பகுதியில் ஈழத்தில் வாழ்ந்த மக்களுக்கு யதார்த்த புரிதல் ஒன்று இருக்கின்றது.
  2. மிஸ்ரர் ஐலான்ட், இது எல்லாம் எப்பநடந்தது.நேரே பக்கத்திலைநின்றது போல் கதை விடுகிறீர்கள். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உங்களிட்டை என்ன தீர்வு கிடக்கோ சட்டுப்புட்டென்று அமுல் படுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானே. என்ன சுணக்கம். சும்மா காமடி பண்ணிக்கொண்டு (சிங்களவரிட்டை எந்தத் தீர்வும் எந்தக்காலத்திலையும் இருக்கவில்லை என்பது தான் உண்மை. சும்மா தமிழர்கள் சந்தர்ப்பத்தைப் பாவிக்கவில்லை என்பதெல்லாம் சாட்டு மட்டும் தான்)
  3. 1987 காலப்பகுதியில் அண்ணர் அங்கு இருந்தவரே இல்லையென்றால் காத்து வாக்கில கதை கேட்டு அரசியல் கருத்து எழுதுபவரா? இலங்கை இந்திய ஒப்பந்தம் JR ருக்கும் ராஜீவுக்கு இடையில் ஒருதலை பட்சமாக நடந்து, எம்மீது திணிக்கப்பட்டது. சரி அதையும் தாண்டி, எழுதிய ஒப்பந்தத்தைகூட அன்றே சரியாக நடைமுறைபடுத்த வக்கு இல்லாத அரசியல் வறட்சிதான் அந்த ஒப்பந்தம் இன்று வரையிலும் கிடப்பில் இருக்கிறது. இன்றுவரைக்கும் 37 வருஷங்கள் "நொ(இ)ந்தியா" என்ன மசிரை புடுங்கி இருக்கிறது.
  4. இலங்கை - இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்புமுனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம், சுமார் ஒரு வார காலமாக நாட்டின் பல பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்கள் அதில் ஒன்றாகும். 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் எனப் பரவலாக அழைக்கப்படும் ஒப்பந்தம் மற்றையதாகும். மூன்று நாள்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ஒப்பந்தத்துக்கு 31 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இவற்றை, இலங்கையின் இனப்பிரச்சினையின் வரலாற்றில் மட்டுமல்லாது, முழு நாட்டினது வரலாற்றிலும் திருப்பு முனைகளாகவே கருத வேண்டியுள்ளது. அவை அன்று இடம்பெறாவிட்டால், இன்று நாட்டின் நிலைமை என்னவாக இருக்கும் என்று ஊகித்துப் பார்த்தால், அவை உண்மையாகவே திருப்புமுனைகள் என்பது புலனாகும். கறுப்பு ஜூலை என்றழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரமானது, இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை வரவழைத்தது. இந்தச் சம்பவம் இடம்பெறாவிட்டாலும், அன்றைய இலங்கை அரசாங்கத்தின் சில கொள்கைகளால் இந்தியத் தலையீடு ஏற்படும் அபாயம் இருந்து வந்துள்ளது. ஏனெனில், அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்தன, அமெரிக்க, பாகிஸ்தான் சார்பான கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தார். அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டிருந்த சோவியத் ஒன்றியத்துடன் அப்போது, இந்தியா இணைந்து செயற்பட்டு வந்தது. இந்த நிலையில்,ஜெயவர்தனவின் கொள்கை, பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. இதனால் இந்தியா, ஜெயவர்தனவுக்கு பாடமொன்றைக் கற்பிக்கத் தருணம் பார்த்துக் கொண்டு இருந்தது. ஜூலை இனக் கலவரம், இந்தியாவுக்கு அதற்கான வாய்ப்பை வெகுவாக ஏற்படுத்திக் கொடுத்தது. அன்று அந்தக் கலவரம் இடம்பெறாதிருந்தால், இந்தியத் தலையீடு சிலவேளை வேறு விதமாகத் தான் அமைந்திருக்கும். அது நாட்டின் வரலாற்றுப் பயணத்தை வேறு திசையில் திருப்பியிருக்கும். இரண்டாவது, திருப்புமுனைச் சம்பவமான இலங்கை - இந்திய ஒப்பந்தம், நேரடியாகவே இந்தியாவுடன் தொடர்புடையது என்பது, அதன் பெயரிலேயே தெளிவாகிறது. ஒருவகையில், இதுவும் அமெரிக்கா - சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளிடையே, நிலவி வந்த பனிப்போரின் விளைவு என்றும் கூறலாம். அதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை, இந்தியாவுக்கும் ஒரு பிரச்சினையாக மாறி வந்ததன் விளைவு என்றும் கூறலாம். தமிழ்த் தலைவர்கள், குறிப்பாக தமிழ் ஆயுதக் குழுக்கள், அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளால் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், நழுவவிடப்பட்ட ஒரு முக்கியமான சந்தர்ப்பம் என்றும் கூறலாம். இலங்கை - இந்திய ஒப்பந்தமானது, பல தமிழ்த் தலைவர்கள் அன்று நினைத்ததைப் போல் இந்தியா, இலங்கைத் தமிழ் மக்கள் மீது கொண்ட பரிவின் காரணமாக, மேற்கொண்ட ஒரு நடவடிக்கையல்ல. அது, இந்தியா, தமது நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கையாகும். மேலே கூறப்பட்டதைப் போல், ஒரு புறம் இந்தியாவுக்குத் தமது அணியான சோவியத் அணியின் சார்பில், இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் அவசியம் ஏற்பட்டு இருந்தது. மறுபுறத்தில் வடக்கு, கிழக்கில் அரச படைகளுக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே இடம்பெற்று வந்த மோதல்கள் காரணமாக, சுமார் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள், இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். இதன் காரணமாகத் தமிழ்நாடு, இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கொதித்துக் கொண்டிருந்தது. இதனால், தமிழ்நாட்டின் தமிழ் உணர்வுகள், இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பும் அபாயமும் அப்போது ஏற்பட்டு இருந்தது. இந்த இரண்டும்தான், இந்திய அரசாங்கம் அன்று, இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கான காரணங்களாக அமைந்தன. அதற்கு, இலங்கை அரசாங்கமும் துணை போனதாகவே கூற வேண்டும். இலங்கை மீதான தமது கட்டுப்பாட்டை, இந்தியா வைத்துக் கொண்டு, இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே, ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும் முயற்சி செய்தது. அதற்காகத் தான் இந்திய அரசாங்கம் 1985 ஆம் ஆண்டு, இரு சாராருக்கும் இடையே முதல் முதலில், பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தது. ஆனால், பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமோ தமிழ்க் குழுக்களோ நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அப்போது பெரும்பாலான தமிழ் ஆயுதக் குழுக்கள், மாக்ஸியத்தை ஏற்றுக் கொண்டு இருந்தமையால், மாக்ஸியத்தின்படி, தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்பதையும் அந்த இனத்துக்குப் பிரிந்து செல்லும் உரிமை இருக்கிறது என்பதையும் நிரூபிப்பதே தமிழ்க் குழுக்களின் நோக்கமாக இருந்தது. அதனால், இலங்கை அரசாங்கத்தோடு எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ள, அவை விரும்பவில்லை. ஜெயவர்தனவின் தலைமையிலான இலங்கை அரசாங்கமும், இந்திய நெருக்குவாரத்தின் காரணமாகப் பேச்சுவார்த்தைக்கு சென்றதேயல்லாமல், பேச்சுவார்த்தையின்போது, எவ்வித இணக்கப்பாட்டையும் அடைய வேண்டும் என்ற நோக்கம் அதற்கு இருக்கவில்லை. எனவே, ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்பதிலேயே, அரசாங்கப் பிரதிநிதிகள் உறுதியாக இருந்தனர். இந்த நிலைமை காரணமாகத் திம்புப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை. ஆனால், இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தின் மீது செலுத்திய நெருக்குவாரத்தின் காரணமாக, 1986 ஆம் ஆண்டு அரசாங்கம், அரசியல் கட்சி மாநாடு என்ற பெயரில் சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டியது. அதன்போதுதான், முதன்முதலில் இலங்கை அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் என்ற எண்ணக்கருவைக் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டது. ஆனால், வடபகுதியில் போரும் தொடர்ந்தது. இதனால் தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டே இருந்தது. எனவே, போரை நிறுத்த அல்லது தணிக்க, இந்தியா ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதன்படி, போரை நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில், 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி, இந்தியா, இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றியே தமது கடற்படையினர் முலம், வடபகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்பியது. இது இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக அமைந்தது. முதலாவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கையாகும். மறுபுறத்தில், தமிழ்நாட்டைத் திருப்திப்படுத்தும் வகையிலான அச்சுறுத்தலாகவும் இருந்தது. எனினும், இலங்கைக் கடற்படையினர் அந்தக் கப்பல்களை, இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் நுழைய இடமளிக்கவிலைலை. அவை திரும்பிச் சென்றன. ஆனால், ஓரிரு நாள்களில் இந்திய விமானங்கள், திடீரென யாழ்ப்பாண வான்பரப்பில்த் தோன்றி, உணவுப் பொட்டலங்களை ஆங்காங்கே போட்டுவிட்டுத் திரும்பிச் சென்றன. இது, தமிழ் மக்களுக்கு உணவு வழங்கும் தேவைக்காக செய்த காரியமல்ல; இலங்கை அரசாங்கத்துக்குச் சவால் விடுப்பதும், இலங்கை அரசாங்கத்தை மிரட்டுவதுமே அதன் நோக்கமாகியது. அது பலன் தந்தது. மாகாண சபைகளை உருவாக்கவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் ‘தற்காலிகமாக’ இணைக்கவும் அந்த விடயங்கள் அடங்கிய ஓர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடவும் இலங்கை அரசாங்கம் இணங்கியது. 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம் தான் இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஆகும். சுமார் 40 நாள்களுக்கு முன்னர், இந்திய உணவுக் கப்பல்கள் வடபகுதிக்கு வந்த போது, தமது கட்டுப்பாட்டில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்டு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்த, அப்போதைய அமைச்சர் காமினி திஸாநாயக்கவே, இந்த ஒப்பந்தத்தை நியாயப்படுத்துவதில் முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வேலுபிள்ளை பிரபாகரனின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்வதாகக் கூறினாலும், ஓரிரு வாரங்களிலேயே அவ்வமைப்பு அதற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கியது. ஆனால், அதுவரை தனித் தமிழ் நாடொன்றுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஏனைய தமிழ்க் குழுக்கள், இந்திய அதிகாரிகளின் முன்னிலையில் ஆயுதங்களை இலங்கை அரச அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, தனி நாட்டுக்கான போராட்டத்தையும் கைவிட்டன. அதன்படி, தமிழீழத்துக்கான போராட்டமும் ஆயுதப் போராட்டமும் புலிகளின் ஏகபோக உரிமையாக மாறியது. இந்த ஒப்பந்தத்தோடு, இலங்கையில் தனித்தமிழ் நாட்டுக்கான, இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் நின்றுவிட்டது. உண்மையிலேயே, அதற்கு முன்னரும் இந்தியா, இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்தவும் கட்டுப்படுத்தவும் தமிழ் ஆயுதக் குழுக்களை பாவித்ததேயல்லாமல், இலங்கையில் பிரிவினையை ஆதரிக்கவில்லை. தாம் தொடர்ந்தும் இலங்கையில் தனித் தமிழ் நாட்டுக்கான போராட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்பதை இந்தியா, அதற்கு அடுத்த ஆண்டில் வெளிப்படையாகவும் மிகத் தெளிவாகவும் கூறியது. அப்போதைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.கே. சிங், இதை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார். 1988 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டுக்காக சென்றிருந்த எஸ்.கே. சிங், அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இதைத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மற்றொரு தமிழ் ஈழத்தைக் காண விரும்பாததால், தமது அரசாங்கம் இலங்கையில் தனித் தமிழ்நாடு உருவாவதை ஏற்றுக் கொள்வதில்லை என அவர் கூறினார். புலிகளும் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இருந்த நிலையில், இந்தியாவுக்கு மிக எளிதில் இந்த முடிவை அறிவிக்க முடியுமாக இருந்தது. இப்போது இந்தியா, அந்த ஒப்பந்தத்தைத் தொடர்நதும் வலியுறுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒப்பந்தத்துக்கு 30 வருடங்கள் பூர்த்தியாகிய கடந்த வருடம், “தொடர்ந்தும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை வலியுறுத்தவில்லை” என இந்தியா அறிவித்தமை அதையே சுட்டிக் காட்டுகிறது. கடந்த வருடம் பெப்ரவரி 18 ஆம் திகதி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெயசங்கர், அம்மாதம் 20 ஆம் திகதி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே, இக்கருத்தைத் தெரிவித்து இருந்தார். ‘இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டு இருந்தது. இந்தியாவின் அதிகாரப் படிநிலைகளின் பிரகாரம், வெளியுறவுச் செயலாளரே வெளிநாட்டுக் கொள்கைக்குப் பொறுப்பான மிகவும் உயர்ந்த அதிகாரியாவார். அவர் ஒரு விடயத்தைப் பற்றிக் கொள்கை ரீதியான கருத்தொன்றை வெளியிடுவதாக இருந்தால், அதுவே இந்திய அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும். உண்மையிலேயே, ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினராகிய, இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் தமிழ் ஆயுதக் குழுக்களும் ஒப்பந்தத்தில் அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றவில்லை. இந்தியா, தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையத் தவறிவிட்டது. தமிழ் ஆயுதக் குழுக்களில் புலிகளும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இலங்கை அரசாங்கம், சட்டத்தில் உள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவில்லை. எனவே, எவரும் எவரையும் எந்த விடயம் தொடர்பிலும் தார்மீக ரீதியில் வற்புறுத்த முடியாதநிலைமை பிற்காலத்தில் உருவாகியது. இலங்கையின் தலையெழுத்தை மாற்றிய போதிலும் உலக வல்லரசுகளிடையே பனிப்போர் மறைந்துள்ள நிலையில், இலங்கை - இந்திய ஒப்பந்தம் இப்போது ஏறத்தாழ செல்லுபடியற்றதாகி உள்ளது. https://www.tamilmirror.lk/சறபப-கடடரகள/இலஙக-இநதய-ஒபபநதம-இலஙகயன-தலயழதத-மறறயத/91-219782
  5. கொடுக்க முடியாதல்லவா,.? பிறகேன் உள்ளே வருகிறீர்கள்? உள்ளே வராதீர்கள். பிரச்சனை முடிந்தது.
  6. முழு நாடும் தமது என நினைப்பவர்களிடம் எமக்கு தீர்வு இருக்குமா?! ஆயுதப்போராட்டம் பேரழிவில் முடிந்தாலும் நில ஆக்கிரமிப்பை 30 ஆண்டுகள் தடுத்திருந்தது என்பதையும் மறக்கக்கூடாது.
  7. என்ன செய்வது நாட்டில் மக்கள் உழைக்காமல் விரைவில் பணம் தேடவேண்டும் என்னும் பேராசையில் அலைகின்றார்கள் ........ அவர்களின் இலக்கு வெளிநாட்டினர் ....... இவர்களில் பலர் பணத்தை வைத்துக் கொண்டு சுகம் தேடி அலைப்பவர்களாக இருக்கின்றார்கள் . ........இதுதான் துரதிஷ்டம்......! 😢
  8. இஸ்ரேல் விவகாரம் சம்மந்தமாக சர்வதேச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எப்படி செல்கின்றது?
  9. தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா? September 3, 2024 — கருணாகரன் — பல அணிகளாகச் சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் தத்ததளிக்கும் மக்களையும் பலவீனப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தையும் பலப்படுத்துவதற்கே தமிழ்ப்பொது வேட்பாளர் என்று சொல்லப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்புமாகும். இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அதற்கான பரப்புரைகளும் அங்கங்கே நடக்கின்றன. பொதுவேட்பாளருக்காக இன்னும் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடக்கவில்லை. என்றாலும் பரப்புரைகள் தொடர்கின்றன. பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்கள், பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் கலந்து கொண்டாலும் பரப்புரைகளில் ஆழமான, புதிய சேதிகள் எதையும் பொதுக்கட்டமைப்போ, பொதுவேட்பாளரோ சொல்லவில்லை. நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் கூடப் பேசப்படவில்லை. ஆனால், சொல்லப்பட்டதற்கு மாறாகத் தமிழ்ப்பொது வேட்பாளர், தமிழ்ச்சமூகத்தை ஆழமாகவே பிளவு படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. தமிழ்ச்சமூகத்தை மட்டுமல்ல, தமிழ்க்கட்சிகளையும்தான். (பொதுவேட்பாளரை நிறுத்தினால் இதெல்லாம் நடக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது). பல இழுபறிகள், தடுமாற்றங்களுக்குப் பிறகு, பொது வேட்பாளரைக் கட்சி ரீதியாக ரெலோ ஆதரிக்கிறது. ஆனால், கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் அந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் பகிரங்கமாகவே அதை எதிர்க்கிறார். வினோநோகராதலிங்கத்தோடு ஒரு அணியும் இதை எதிர்க்கிறது. ஆக, ரெலோவுக்குள் இரண்டு நிலைப்பாடுகள். இதைப்பற்றிக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்ட போது சொன்னார், “ரெலோ ஒரு ஜனநாயகக் கட்சி என்ற அடிப்படையில், எவரும் எந்த முடிவையும் எடுக்கலாம். ஆகவே தன்னுடைய நிலைப்பாட்டைச் சொல்வதற்கு வினோவுக்கு உரித்துண்டு” என. இது அவருடைய தலைமைத்துவத் தோல்வியின் வெளிப்பாடாகும். மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த கட்சிகளில் ஓரளவுக்கு மக்கள் செல்வாக்கைக் கொண்டிருக்கும் ரெலோவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நிலை உருவாகியுள்ளது என்று அனைவருக்கும் தெரியும். அதாவது, தன்னுடைய கட்சியையே பொதுவேட்பாளருக்கான முழுமையான ஆதரவு நிலைப்பாட்டுடன் நிறுத்த முடியவில்லை – செல்வம் அடைக்கலநாதனால். இந்தச் சீரில் எப்படிப்பொது வேட்பாளருக்கான ஆதரவை வெளியே மக்களிடத்திலும் பிற அரசியற் சக்திகளிடத்திலும் ஒன்று திரட்டுவது? அதற்கான தகுதியையை இழந்து நிற்கிறது ரெலோ. ஆனால், இதை ஒத்த நிலைமைகள் வேறு கட்சிகளுக்குள் நடந்தால், அதைப் பெரும் பிளவாகக் காட்டுவதற்குப் பலர் உள்ளனர். குறிப்பாக இந்த மாதிரிப் பிரச்சினை தமிழரசுக் கட்சிக்குள் நடக்கிறது என்றால், அதை மேடை போட்டுச் சொல்வதற்கும் அதற்கு எண்ணெய் ஊற்றி தீயைப் பற்ற வைப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறார்கள். என்பதால்தான், தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மீறி அந்தக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை எடுத்த பொதுவேட்பாளருக்கான ஆதரவைப் பாராட்டிக் கொண்டாடுவதற்காக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அங்கே ஓடோடிச் சென்றார். தன்னுடைய கட்சியின் உறுப்பினர். அதுவும் பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவர் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாமல், மறுதலித்து வெளியே நிற்கிறார். அதைப் பேசித்தீர்த்து ஒரு ஒழுங்குக்கொண்டு வராமல், அடுத்த வீட்டுப் பிரச்சினையைப் பார்க்கப்போயிருக்கிறார் செல்வம். இதைத்தான் சந்தி சிரிக்கும் சங்கதி என்பது. கடைசியில் செல்வத்தினால் (தலைவரினால்) வினோநோகராதலிங்கத்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் முடிவை முழுமையாகக் கொண்டாடவும் முடியவில்லை. காரணம், தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டக்கிளைகள் தன்னிச்சையாக எடுத்த – கட்சியின் தீர்மானத்துக்கு மாறான முடிவுகள் செல்லுபடியற்றனவாகி விட்டன. இப்பொழுது தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன், அதே பகிரங்கத் தன்மையோடு பொதுவேட்பாளரை மறுதலித்துள்ளது. போதாக்குறைக்கு பொதுவேட்பாளராக நிற்கும் அரியநேத்திரன் அதிலிருந்து விலக வேண்டும். அல்லது கட்சிக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று காலக் கெடுவையும் விதித்துள்ளது. இதை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சஜித் பிரேமதாசாவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வில் உரையாற்றும்போது மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனால் ஓடோடிச் சென்று வாழ்த்துச் சொன்ன செல்வம், மூக்குடைபட்டுப் போயிருக்கிறார். இதுதான் பொது வேட்பாளரை ஆதரித்து நிற்கும் தலைமைத்துவங்களின் நிலையாக உள்ளது. ஆனால் தமிழரசுக் கட்சியையும் பொது வேட்பாளர் விடயம் இரண்டாகப் பிளந்துள்ளது. ஏற்கனவே அந்தக் கட்சி உள்முரண்பாடுகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக நீதிமன்றப்படியேறி வழக்காடிக் கொண்டிருக்கிறது. அதை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் இப்போதுள்ளது. பொதுவேட்பாளரை அந்தக் கட்சியைச் சேர்ந்த சிறிதரனின் அணியினர் ஆதரிக்கின்றனர். அவருக்கு வெளியே உள்ளவர்கள் அதை எதிர்க்கின்றனர். இது கட்சியை மேலும் ஆழமாகப் பிளவு படுத்துகிறது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தப் பிளவுகள் மேலும் வலுப்பெறும் என்றே தெரிகிறது. ரெலோ, தமிழரசுக் கட்சிக்குள் மட்டுமல்ல, புளொட்டுக்குள்ளும் மோதல்கள் உருவாகக் கூடிய சூழலே உள்ளது. பொதுவேட்பாளர் தொடர்பாக புளொட்டுக்குள் ஏற்கனவே இருவேறு நிலைப்பாடுகளுண்டு. புளொட்டின் தலைவர் சித்தார்த்தனுக்கு இதில் உடன்பாடில்லை. இதை அவர் பல தடவை நேர்ப்பேச்சுகளில் சொல்லியிருக்கிறார். கட்சியின் அடுத்த நிலையில் உள்ள சிலரின் விருப்பத்துக்கு இடமளிக்கும் வகையிலும், தாம் இணைந்து நிற்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காகவுமே பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டியுள்ளது என. எனவே ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கட்சிகளுக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவெடுக்கக் கூடிய சூழலே காணப்படுகிறது. இதற்கொரு சிறிய எடுத்துக் காட்டு, பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகும். ஆனால், பொது வேட்பாளருக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழரசுக் கட்சி உள்ளது. வேட்பாளராகப் போட்டியிடும் அரியநேத்திரனிடம் அது விளக்கம் கோரியிருப்பதுடன், போட்டியிலிருந்து விலகுமாறும் அது பணித்துள்ளது. ஆக பொதுவேட்பாளரை நிராகரிக்கின்ற கட்சியிலிருந்து கொண்டே, அதனுடைய மத்திய குழு உறுப்பினராக இருந்து கொண்டே, கட்சியின் நிலைப்பாட்டுக்கும் விதிமுறைகளுக்கும் மாறான முறையில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் அரியநேத்திரன் என்றால், அவருடைய கண்ணியம், ஒழுங்கு, மதிப்புப் பற்றியெல்லாம் என்னவென்று சொல்வது? குறைந்த பட்சம் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவர் விலகிக் கொண்டு தமிழ்ப்பொது வேட்பாளராக நின்றிருக்க வேண்டும். அல்லது இப்பொழுது விலக வேண்டும். மட்டுமல்ல, “மட்டக்களப்பு ரகசியங்கள்” என்ற அநாமதேய முகப்புத்தகத்தை இயக்கியோரில் ஒருவராகவும் அரியநேத்திரன் இருந்துள்ளார். அதற்குள்ளிருந்து கொண்டே தமக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களை அந்த அநாமதேய முகப்புத்தகத்தில் அவர் வசைகளைப் பாடிப் பழிதீர்த்திருக்கிறார். பொதுவேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்கியபோதுதான் இந்த விடயங்கள் எல்லாம் வெளியே தெரியவந்தன. பொதுவேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்கியதை விரும்பாத “மட்டக்களப்பு ரகசியங்களின்” ஏனைய பங்காளர்கள் இந்த உண்மையைப் போட்டுடைத்துள்ளனர். இதை மறுத்துரைக்க முடியாத நிலையில் உள்ளார் திரு. அரியநேத்திரன். அரியநேத்திரனின் வயது, தகுதி, பொறுப்பு என எதற்கும் தகுதியில்லாத வேலை அதுவாகும். அப்படியான ஒருவரை தமிழரசுக் கட்சி மத்திய குழுவில் வைத்திருந்ததற்காக வெட்கப்பட வேண்டும். அதையும் விட அவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்கிய பொதுக்கட்டமைப்பினரும் அதற்குள்ளிருக்கும் மூத்த கட்சிகளும் கூடத் தலைகுனிய வேண்டும். மொத்தத்தில் சிறுபிள்ளை விளையாட்டாகத் தொடங்கிய தமிழ்ப்பொது வேட்பாளர், பெருந்தீமைகளை உருவாக்கப்போகிறது. 1980 களில் விடுதலை இயக்கங்கள், மக்களுடைய நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக பொறுப்பற்ற தனமாகச் செயற்பட்டன. இதைக்குறித்து அப்போது எழுத்தாளர் செங்கை ஆழியான், “இந்த நாடு உருப்படாது” என்றொரு நாவலையும் “சிறுபிள்ளை வேணாண்மை”, “குளவிக்கூட்டைக் கலைக்காதீர்கள்” என இரண்டு சிறுகதைகளையும் எழுதினார். அந்தக் கதைகள் மிகச்சரியான கணிப்பீட்டையும் மிகக் கூடிய உண்மையையும் எடுத்துரைத்திருந்தன. ஆனால், அதை அன்று பலரும் ஏற்கவில்லை. எள்ளி நகைத்தனர். இறுதியில் செங்கை ஆழியான் சொன்னதே நடந்தது. அதையொத்த காட்சிகளே இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் வரலாறு நகரவில்லை. தேங்கிக் கிடக்கிறது. https://arangamnews.com/?p=11189
  10. (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யார் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்குகின்றாரோ, அவரையே ஆதரிப்பது என ஏற்கனவே நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட நிலையில், தற்போது தமிழரசுக்கட்சி ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருக்கும் சஜித் பிரேமதாஸ சமஷ்டி தீர்வு குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமாத்திரமன்றி தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித்தை ஆதரிப்பதென கட்சி பிழையான முடிவை எடுத்து அதன்வழி செயற்படுமேயானால், தானும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தில் எவ்வித மாற்றமுமின்றி அதன்வழி பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தாம் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை எனவும், மாறாக தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்கக்கூடிய ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஒருவரையே ஆதரிப்போம் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். ஆனால் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து கட்சி ரீதியாகத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாகவே கடந்த மாத இறுதி வாரத்தில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அவருக்குத் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் குறித்து கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அதற்கு மறுதினம் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தார். இது இவ்வாறிருக்க கடந்த மாதம் 29 ஆம் திகதி லண்டன் பயணமான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்ற தினத்தன்று நாட்டில் இல்லாததன் காரணமாக அதில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பியதன் பின்னர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வாரா? அல்லது கட்சியின் தீர்மானத்துக்குப் புறம்பாக தொடர்ந்து தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவாரா? என வினவியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அவர், கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறும் திகதி தொடர்பில் 7 நாட்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டதாகவும், அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது பற்றி உரியவாறு கலந்துரையாடித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அதேவேளை கட்சியின் கடந்த மத்திய குழுக்கூட்டங்களில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யார் தமிழ் மக்களுக்கான சமஷ்டி தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்குகின்றாரோ, அவரையே ஆதரிப்பது எனக் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்ட சிறிதரன், அவ்வாறிருக்கையில் சமஷ்டி தீர்வு குறித்து சஜித் பிரேமதாஸ வழங்கியிருக்கும் உத்தரவாதம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார். எனவே இவை பற்றிய எந்தவொரு தெளிவுபடுத்தல்களும் இல்லாத நிலையில், தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்துத் தான் மேற்கொண்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிறிதரன் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென தமிழரசுக்கட்சி பிழையான முடிவை எடுத்துச் செயற்படும் பின்னணியில், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தின் வழியில் பயணிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? - தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி | Virakesari.lk
  11. தற்போதும் பெரும்பான்மை இனம் போரினால் தமிழர்களை வென்று விட்டோம் இனி தீர்வு கொடுக்கத்தேவையில்லை எனும் மனப்பான்மையில் உள்ளார்கள் என்பதனை உங்கள் கருத்தின் மூலம் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளீர்கள், இலனக்யின் பொருளாதார நிலை தற்போது பிரச்சினை இல்லை எனும் எண்ணப்பாடே பெரும்பான்மையான இலங்கையர்களிடையே நிலவுகிறது, ஆனால் அது உண்மையல்ல. அண்மையில் எங்கோ வாசித்தாகநினைவுள்லது இந்தியா இலங்கையினை தரைப்பாதையினூடகவோ அல்லது வேறு வகையிலோ (சரியாகநினைவில்லை) இதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியினை 3 விகிதமாக அதிகரிக்க முடியுமென இந்தியா அறிவித்திருந்தது. இது இலங்கைக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும் இவ்வாறு இந்தியா இலங்கையில் எப்போதும் கரிசனையாக இருப்பது எதனால். இந்த தரைப்பாதை மட்டும் திறந்தால் இந்தியா இலங்கையினை காவு கொண்டுவிடும். இந்திய எல்லை நாடுகளான பாகிஸ்தான், சீனா(தரைப்பகுதி இணைப்பு கொண்ட) ஆகிய நாடுகளைத்தவிர்த்து மற்ற நாடுகளில் தனக்கு சாதகமான பொம்மை அரசுகளை உருவாக்கி விடுவதிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறது, இலங்கையில் இனி வரும் காலங்களில் முழுமையான தனது பிடியினை இந்தியா இறுக்கவுள்ளது. குரங்கு அப்பம் பிரித்தனை போல இந்தியா இனவாதம் கண்ணை மூடி நிக்கின்ற ஒரு நாட்டினை ஆரம்பத்தில் சிறுபான்மையினருக்கு ஆயுதம் வழ்ங்கி உள்நாட்டு போரை தீவிரப்படுத்தி பின்னர் அதனை அழித்து பெரும்பான்மையினரது இன வெறியினை இந்தியா காப்பாற்றி விட்டது என எண்ணத்தில் தற் போது படிப்படியாக தமது இறைமையினை இழக்கின்றனர். யார் ஆட்சி கட்டிலேறினாலும் முதலில் போய் எயமானனின் காலில் விழும் நிலைக்கு பேரினைவாதம் உள்ளது, இறுதியில் எனக்கு மூக்குப்போனாலும் எதிர்க்கு சகுனப்பிழையாக வேணும் (தமிழருக்கு சம உரிமை கொடுக்கவில்லை என்ற சந்தோசம்) எனும் நிலையில் தமிழர்களின் நிலைக்கு தமது உரிமைகளை இந்தியாவிடம் அடகு வைக்கும் நிலைக்கு வரும் நிலை வந்து கொண்டிருக்கிறது. சகல சமூகங்களும் சம அந்தஸ்துடன் வாழ்ந்தால் நாடு அபிவிருத்தி பாதையில் பயணிக்கமுடியும் அதை விடுத்து தொடர்ந்தும் பிற்போக்குவாத சிந்தனைகளோடு மற்ற சமூகங்களை அடக்கமுற்பட்டால் வேறு யாருக்கல்லாமோ அடிமையாகலாம் ( நாடுகள் மட்டுமல்ல நிதி நிறுவனங்களிடமும்). இந்தியா பல் முதலீடுகளில் ஆர்வம் காட்டுவது பின்னர் அதற்கான பாதுகாப்பு என இலங்கையில் நுழைவதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என கருதுகிறேன். இதில் இந்தியா உடன் சீனா ஆதிக்கப்போட்டியில் ஈடுபட்டால் நாடு இரண்டுபட்டுவிடும்.
  12. அதுக்கு தானே அண்ணா வகுப்புத் தோழியர் என்று எழுதினேன். ஒரு திருமணம் தான் செய்யலாம் என்றதால் கொஞ்ச ஏக்கங்கள் தள்ளி போடுதல்கள் பாக்கி இருக்கிறது. இனி டேஞ்சர் இல்லை 😜தானே.??
  13. https://trendsnapnews.com/ai-fuels-surge-in-tech-company-earnings-in-europe-and-the-us/ எனக்கு சரியாக போடத்தெரியவில்லை தேடிச்சென்று பாருங்கள்
  14. உங்கள் ஆசை தான் என்ன ??? நாலு பிள்ளைகள் உண்டு பேரப்பிள்ளைகளுமுண்டு இன்னும் என்ன ஆசை?? 🤣😂
  15. என்ர காதில விழுந்ததால் உங்கள் ஆசையில் மண்ணைப் போட வாய்ப்புள்ளதாக நான் கனவிலும் எண்ணவில்லை அண்ணை. ஆனால் யாழைப் பார்த்தால் பாஸ்போட்டை பறித்து வீட்டுக் காவலில் வைக்க சந்தர்ப்பம் உள்ளதாகப் பட்சி சொல்லுது!
  16. ஆடு அநியாயமா மழைக்குள்ள நனையுதெண்டு ஓநாய் கண்ணீர்விட்டுத் தேம்பித்தேம்பி அழுதிச்சாம்!
  17. சீ சீ அவ்வளவு சம்பவங்கள் இல்லை அண்ணை, ஆனால் காதில விழுந்தால் பகிர்கிறேன்!
  18. என்ன தண்டனை கொடுத்தார்கள். 😂
  19. இதே மாதிரி படம் பிடிப்பதை ஒரு வயது போன தமிழர் சிட்னியில் செய்து பிடிபட்டவர்🤣
  20. பெண்களையும் சிறுவர்களையும் தாக்கிய வன்முறை கும்பல்; வட்டுக்கோட்டை பொலிஸார் அதிரடி நடவடிக்கை! Published By: DIGITAL DESK 3 05 SEP, 2024 | 01:50 PM வன்முறை கும்பல் ஒன்று நேற்று புதன்கிழமை (04) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன்போது சிறுவர்கள், பெண்கள் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர். அந்தவகையில் விரைந்து செயற்பட்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டினை பார்வையிட்டனர். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் ஏனைய ஐவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/192919
  21. 8 வது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார் அமெரிக்க வீராங்கனையான ஒக்ஸானா பாரா சைக்கிளிங்கில் அமெரிக்க வீராங்கனையான ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 8 ஆவது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பல விளையாட்டுகளில் புகழ்பெற்றவரான ஒக்ஸானா மாஸ்டர்ஸ் புதன்கிழமை 23 நிமிடங்கள் 45.20 வினாடிகளில் இலக்கை கடந்து நெதர்லாந்தின் சாண்டல் ஹெனெனைவிட 6.24 வினாடிகள் முன்னதாகவும், சீனாவின் சன் பியான்பியனைவிட 1 நிமிடம் 27.87 வினாடிகள் முன்னதாகவும் முடித்து சாதனைப் படைத்தார். ஒக்ஸானா மாஸ்டர்ஸ் இதுவரை கோடை மற்றும் குளிர்கால பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்கள் உள்பட 18 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார். ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 1989 ஆம் ஆண்டில் உக்ரைனில் உள்ள செர்னோபில் அருகே பிறந்தார். செர்னோபில் உலகின் மிக மோசமான அணுசக்தி விபத்து ஏற்பட்ட இடமாகும். அணுசக்தி விபத்துக்குப் பிறகு இங்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒக்ஸானா மாஸ்டர்ஸ் குழந்தையாக இருந்தபோது அமெரிக்க பெண் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டார். ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 9 வயதாக இருந்தபோது கதிர்வீச்சு பாதிப்பால் அவரது இடது முழங்காலுக்கு அருகில் துண்டிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 14 வயதில் வலது காலும் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/309010
  22. பிஸ்ரல் குழுக்களையும் மின்கம்ப தண்டனையையும் வெறுத்த பலர் இன்று இப்படி தண்டனை கொடுக்க யாராவது வரமாட்டார்களா என ஏங்குகிறார்கள்.
  23. "சூர்ப்பனகை அழகை பாட்டா பாடுவேன்!” எனும் இன்று வெளியான ஆனந்த விகடனில் இருந்து பகிரப்பட்ட கட்டுரை காப்புரிமை தொடர்பான விடயத்தால் நீக்கப்பட்டது. சந்தா கட்டி மட்டுமே வாசிக்கப்படக் கூடிய கட்டுரைகளை யாழில் இணைப்பதை தவிர்க்கவும்.
  24. நல்லது அப்ப என்ன தான் செய்யலாம்? அதையாவது சொல்லித் தொலையுங்க.
  25. ஒம் சூப்பரான தெரிவு! 2005 தேர்தல மனசுல வச்சு சொல்லியிருக்காப்பில!
  26. 71 வயது டொமினிக்... பாவாடைக்குள் படம் பிடிக்கப் போய், அம்பிட்டதை நினைக்க சிரிப்பாக இருக்கு. 😂 "ஆனைக்கும் அடி சறுக்கும்." 🤣
  27. சுனாமி நேரம் வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட உதவிப்பணத்தை தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் (புலிகளுக்கு கிடைத்து விடுமாம்) வழக்கு போட்டவர்களும் இவர்கள் தானே. அப்போ விமல் வீரவன்ச இவர்களுடன் இருந்தார். வடக்கு கிழக்கு பிரிப்புக்கு உடந்தையாக இருந்தவர்களும் இவர்களே.
  28. என் வீட்டில் இருந்து தள்ளி மூன்றாவது வீட்டில் வசிப்பர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். தன் முகனூல் எங்கும் இக் கொலை தொடபான விவரங்களை பகிர்ந்து வருகின்றார். அவருடன் இக் கொலை தொடர்பாக கதைத்ததில், இது ஒரு திட்டமிடப்பட்ட கூட்டு பாலியல் வல்லுறவு கொலை என்கின்றார். அப் பெண்ணின் முதுகில் பலரது சப்பாத்துக் கால்களின் அடையாளங்கள் இருந்தன என்றும், நெஞ்சில் பலர் ஏறி மிதித்து அணுவணுகாக சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்கின்றார். எல்லாவற்றையும் விட, இப் பெண்ணை வேறு இடத்திற்கு கொண்டு சென்று இக் கொடூரத்தை நிகழ்த்திய பின் மீண்டும் கொண்டு வந்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறை ஒனறில் போட்டுள்ளனர் என்கின்றார். மம்தாவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்தின் படியே இது நிகழ்ந்துள்ளது என்றும், இந்த கொலையை மூடி மறைக்க அனைத்து விதமான சாட்சியங்களையும் சான்றுகளையும் அழித்து விட்டனர் என்றும் சொன்னார்.
  29. ஒரு ஆண் வேண்டுமானால் எத்தனை பெண்களையும் போய் சந்தித்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் தனது மனைவி மட்டும் கட்டுப்பாடுடன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு இயல்பான விடயம்தான். இதைத்தான் ஆண் உலகம் என்பார்கள். இப்படியான விடயங்களை ஆண் செய்தால் சம்பவம். பெண் செய்தால் சரித்திரம் என்று ஊரில் சொல்வார்கள். பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆண் செய்த சம்பவம் ஒன்று இப்பொழுது பேசு பொருளாகி இருக்கிறது.. பிரான்ஸில் ஒருஆண், பல ஆண்டுகளாக (2011-2020) பிற ஆண்களை தனது மனைவியை வன்புணர்வு செய்ய அனுமதித்திருக்கிறான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இந்த விடயம் நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்திருக்கிறது. காரணம், அந்த ஆண், போதை மருந்துகளைக் கொடுத்துத் தனது மனைவியை நினைவிழக்க வைத்து விட்டு அதன் பிறகே சம்பவங்களை அரங்கேற்றியிருக்கிறான். இப்பொழுது அவளது கணவனும் இன்னும் ஐம்பது ஆண்களும் நீதிமன்றத்தில், தீர்ப்பை எதிர்பார்த்து வரிசையில் நிற்கின்றார்கள். அந்த ஆணின் பெயர் டொமினிக்(71). அவரது மனைவியின் பெயர் கீசெலா (72). இருவருக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றைய ஆண்கள் 18க்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். தீயணைப்பு வீரர், செவிலியர், சிறைக் காவலர், பத்திரிகையாளர் என வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் எல்லாம் வரிசை கட்டி வந்திருக்கிறார்கள் என்பது சமூகத்தின் புருவத்தை உயர்த்த வைக்கிறது. இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஆண்களிடம் இருந்து டொமினிக் பணமாக ஒரு ‘சென்ற்’ கூடப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே. பிறகெதற்கு இந்த விளையாட்டு? நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து, தனது பாலியல் கற்பனைகளை திருப்திப்படுத்துவதே டொமினிக்கின் நோக்கமாக இருந்திருக்கிறது. தானும் சளைத்தவன் இல்லை என்று டொமினிக்கும் அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்கெடுத்து அவற்றையும் வீடியோ எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இப்பொழுது மொத்தமாக 92 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. டொமினிக் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை பார்வையிட்டதில், சிலர் ஒரு முறையே போதும் என்று ஒதுங்கி விட்டிருந்தனர். சிலர் சும்மாதானே என ஆறு முறை கூட வந்திருந்தனர். வைத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, டொமினக்குக்கோ, வந்து போன ஆண்களுக்கோ உளவியல் பிரச்சினைகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக முழுமையான தண்டனை அவர்களுக்குக் கிடைக்கும் என்பது ஒரு ஆறுதலான விடயம். ஆனாலும் வீடியோவில் உள்ள 72 ஆண்களில் சிலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி டொமினிக் மாட்டிக் கொண்டார் என இப்பொழுது ஒரு கேள்வி எழலாம். எல்லாம் ஆர்வக் கோளாறுதான். டொமினிக் பல் பொருள் அங்காடி ஒன்றில், பெண் வாடிக்கையாளரின் பாவாடையின் கீழ் கமாராவைப் பிடித்து வாடிக்கையாளருக்குத் தெரியாமல் வீடியா எடுக்கப்போய் மாட்டிக் கொண்டதில், சகலதையும் தோண்டி எடுத்திருக்கிறார்கள். டொமினிக்கின் கீசலாவுடனான ஐம்பது வருடக் குடும்ப வாழ்க்கை இப்போ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கும் டிசம்பர் 20ந் திகதி வரை நடக்க இருக்கிறது. அதன் பிறகு டொமினிக்குக்கு இன்னுமொரு வாழ்க்கை இருக்கும். அவர் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த வீடியோக்களைப் பார்ப்பதற்குத்தான் முடியாமல் போகும். அநேகமாக இந்தச் செய்தி பல மொழிகளில் வந்திருக்கும். நான் வாசித்தது இங்கே, https://www.n-tv.de/panorama/Mann-liess-Ehefrau-von-72-Maennern-vergewaltigen-article25199233.html
  30. நான் வெறும் மாரியப்பன்.. தந்தை பெயரை சேர்த்து அழைக்காதீர்கள்.. ட்ரெண்டாகும் தமிழக வீரரின் பேட்டி! 2016 ரியோ பாராலிம்பிக்ஸ், 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் மற்றும் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் என்று 3 தொடர்களிலும் மூன்று பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார். இந்த நிலையில் 2016ல் மாரியப்பன் அளித்துள்ள பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் T63 பிரிவில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் அசத்தலாக செயல்பட்டுள்ளனர். 1.94 மீட்டர் தாண்டிய அமெரிக்காவின் ஏல்ரா தங்கப் பதக்கத்தையும், 1.88 மீட்டர் தாண்டிய இந்தியாவின் சரத் குமாருக்கு வெள்ளிப் பதக்கமும், 1.85 மீட்டர் தாண்டிய இந்தியாவின் மாரியப்பனுக்கு வெண்கலப் பதக்கமும் அளிக்கப்பட்டது. இதன் மூலமாக 3 பாராலிம்பிக்ஸ் தொடர்களில் பங்கேற்று மூன்றிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றை தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார். இதன் காரணமாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ரசிகர்களும், நட்சத்திரங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாரியப்பன் தங்கவேலு 2016ஆம் ஆண்டு கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவருக்கு 5 வயது இருக்கும் போது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற பேருந்து மோதியதால், காலின் கட்டை விரல் தவிர்த்து மற்ற பகுதிகள் சிதைந்துள்ளது. இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். பள்ளிப் பருவத்திலேயே உயரம் தாண்டுதலில் அசத்தி வரும் மாரியப்பன் தங்கவேலு, உடற்கல்வி ஆசிரியரின் வழிகாட்டுதலை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி சென்றுள்ளார். 2015ஆம் ஆண்டு சர்வதேச பாரா போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய அவர், 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வென்றார். இதன்பின் மாரியப்பன் தங்கவேலு அளித்த பேட்டியில், எனது வெற்றிக்கு காரணம் சத்யநாராயணா சார் தான். இந்த வெற்றிக்கு பின் எனது தாயார் சொல்லும் தகவல்கள் என்னை சோகமாக்குகிறது. ஏனென்றால் கடந்த காலங்களில் எங்களை மதிக்காத பலரும், தாயாரை தேடி வந்து நெருக்குகிறார்கள் என்று கூறி கண்கலங்குகிறார். எனது தாயையும், 4 குழந்தைகளையும் தவிக்கவிட்டு சென்ற தந்தை, திடீரென உரிமை கோருவதாக கூறி அழுகிறார். சிறு வயதில் எனது தாயை எரித்து கொலை செய்ய முயற்சித்தவர் அவர். எனது அம்மாவுக்கு கொஞ்சம் கூட கருணையே காட்டியவில்லை. அவருக்கு என்றுமே என் மனதில் இடம் கிடையாது. என்னை அனைவரும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை கூட விரும்பவில்லை. என்னை மாரியப்பன் என்று மட்டும் அழைத்தாலே போதும் என்று தெரிவித்துள்ளார். Live Tamil News - தமிழ் செய்திகள்
  31. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் நேற்றிரவு வீடு புகுந்த வன்முறை கும்பல் ஒன்று சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில், அறுவர் கொண்ட கும்பல் வன்முறைக்காக வந்து, இருவர் வெளியே நின்ற நிலையில் நால்வர் கொண்ட கும்பல் உள்ளே வந்து எனது 5 வயது மகளின் வயிற்றில் தாக்கினர். எனது சகோதரி பிள்ளைக்கு பாலூட்டிக் கொண்டு இருந்தவேளை அவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அத்துடன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாதிக்கப்பட்ட எனது சகோதரன் மீதும் தாக்குதல் நடத்தினர். எனது மகனான சிறுவனது தொண்டையை பிடித்து திருகினர். இவ்வாறு அட்டகாசம் செய்ததுடன் வேலியின் தகரம் மற்றும் கதிரை என்பவற்றை உடைத்தனர். எமது மோட்டார் சைக்கிளையும் கீழே தள்ளி விழுத்தினர். பிள்ளைக்கு பால் கொடுக்கும் போது தாக்குதலுக்கு உள்ளான எனது சகோதரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எமக்கு இந்த அநீதி இழைத்தவர்களை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் எமக்கான நீதிக்கு மேல் அதிகாரிகளை நாட வேண்டி ஏற்படும் என்றார். https://thinakkural.lk/article/309005
  32. Published By: DIGITAL DESK 3 05 SEP, 2024 | 12:53 PM மாதகலில் இருந்து நேற்று புதன்கிழமை (05) அதிகாலை கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு இளைஞர்கள் நேற்று அதிகாலை இவ்வாறு கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது. இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மற்றைய இளைஞர் காணாமல் போனார். இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று கரையொதுங்கியது. மாதகல் பகுதியை சேர்ந்த நாகராஜா பகீரதன் என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/192911
  33. யாழ். வட்டுக்கோட்டையில் வன்முறைக்கும்பல் அட்டகாசம் - பயத்தில் பொலிஸ் நிலையத்தில் இரவை கழித்த மக்கள்! 05 SEP, 2024 | 10:46 AM யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை ( 4) இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்ய வேண்டும் என கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன், அயலவர்களும் இணைந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக இரவு கூடி இருந்தனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவிக்கையில், ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று இரவு வீட்டுக்கு வந்து, இருவர் வெளியில் காவல் நிற்க ஏனைய நால்வரும் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த 05 வயதான என் மகனை தாக்கினார்கள். பின்னர் எனது சகோதரி குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த வேளை அவர் மீதும் தாக்குதல் நடத்தினர். அதனை தடுக்க சென்ற சகோதரனையும் தாக்கினார்கள். அங்கிருந்த எனது மற்றைய மகனையும் தாக்கினார்கள். நாங்கள் அவலக்குரல் எழுப்ப, வீட்டில் நின்ற எனது மோட்டார் சைக்கிளை தள்ளி விழுத்தி, கதிரைகளை அடித்து உடைத்து, வெளித் தகரங்களை பிடுங்கி அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர். வன்முறை கும்பலின் தாக்குலில் காயமடைந்த எனது சகோதரியை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். இரவில் வீட்டில் இருக்க பயமாக இருக்கிறது. மீண்டும் அவர்கள் வந்து தாக்குதல் நடத்துவார்களோ என்ற அச்சத்தில், தாக்குதலாளிகளை கைது செய்யுமாறுகோரி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாக கூடியுள்ளோம் என தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/192888

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.