Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்13Points87990Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்8Points2951Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்6Points31968Posts
Popular Content
Showing content with the highest reputation on 09/13/24 in Posts
-
என்கிட்ட மோதாதே
5 pointsஸ்ரெபான் ராப் ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளராக யேர்மனியில் அறியப்பட்டவர். பாடல்கள் இயற்றுவது இசை அல்பங்களைத் தயாரித்து வெளியிடுவது, பாடுவது, நகைச்சுவை நிகழ்ச்சிகள் செய்வது என மேலும் பல விடயங்களில் தன்னை வெளிக்காட்டியவர். பெண்களுக்கான குத்துச் சண்டையில் யேர்மனியில் முன்னணியில் இருந்த ரெஜினா ஹால்மிஸ்ஸை இவர் நகைச்சுவையாக விமர்சிக்கப் போய், அது இருவரையும் குத்துச் சண்டை வளையத்துக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. ரெஜினா ஹால்மிஸ், தனது வாழ்நாளில் சந்தித்த 56 குத்துச் சண்டைப் போட்டிகளில் 54 தடவைகள் வெற்றியையும் ஒரே ஒரு தடவை தோல்வியையும் ஒரு தடவை சமநிலையையும் தழுவிக் கொண்டவர். “பெண்ணோடு மோதுவது என்ன பெரிய வேலையா?” என்று நினைத்து ரெஜினா ஹால்மிஸ்ஸுடன் 2001ஆம் ஆண்டு குத்துச் சண்டைக்குப் போன ஸ்ரெபான் ராப், தோற்றுப் போனார். மூக்குடைபட்டு இரத்தம் வழிய அவர் இருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் அடுத்த நாள் ஊடகங்களில் வெளிவந்ததில் அவர் பெருத்த அவமானங்களுக்கு ஆளானார். ‘ஒரு பெண்ணிடம் தோற்பது எவ்வளவு அவமானம்? அவளை வென்றே தீருவேன்’ என்ற அவரது வீராப்பு மீண்டும் ரெஜினா ஹால்மிஸ்ஸை 2007இல் மோத அழைத்தது. இம்முறை நடந்த குத்துச் சண்டையில் ஸ்ரெபான் ராப்புக்கு மூக்கு உடைபடவில்லை ஆனாலும் தோற்றுப் போனார். ஸ்ரெபான் ராப் ஊடகங்களுடான தனது தொழிலை 2015 இல் நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர் பொது வெளியில் வந்ததில்லை. திடீரென இப்பொழுது ஊடகங்களில் அடிபடத் தொடங்கியிருக்கிறார். “நான் ரெஜினா ஹால்மிஸ்ஸுடன் மோதத் தயார்” என அறிவித்திருக்கிறார். ஸ்ரெபான் ராப்புக்கு இப்பொழுது வயது 57. ரெஜினா ஹால்மிஸ்ஸுக்கு 47 வயது. ரெஜினா ஹால்மிஸ்ஸும் குத்துச் சண்டைப் போட்டியில் இருந்து 17 வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்று விட்டவர். ஆனாலும் ஸ்ரெபான் ராப்பின் சவாலை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இருவரும் நாளை இரவு (14.09.2024) டுசுல்டோர்ப் நகரத்தில் மோதப் போகிறார்கள். ரெஜினா ஹால்மிஸின் எடை 50கிலோ, ஸ்ரெபான் ராப்பின் எடை 80கிலோ. ரெஜினா ஹால்மிஸ் எடையில் மட்டுமல்ல உயரத்திலும் ஸ்ரெபான் ராப்பைவிடக் குறைவானவர். “ஒரு பெண்ணிடம் பொது வெளியில் தோற்றுப் போன ஸ்ரெபான் ராப்பின் மனதில் உள்ள வலி அவரை சும்மா இருக்கவிடவில்லைப் போலும். கடந்த ஒன்பது வருடங்களாக நல்ல பயிற்சிகள் எடுத்துவிட்டு இப்பொழுது மீண்டும் வந்திருக்கிறார். குத்துச் சண்டைகளில் 25 வருட அனுபவங்கள் எனக்கிருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்” என ரெஜினா ஹால்மிஸ் தெரிவித்திருக்கிறார். இந்தப் போட்டி நாளை யேர்மன் தொலைக்காட்சி( RTL)இல் 20.15க்கு நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. பார்க்கலாம்.5 points
-
கருத்து படங்கள்
5 pointsபாராட்டுக்கள் .......... உங்களுக்கென்று தனியாக அதுவும் மிகவும் பிரயோசனமான கருத்துக் படங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்ரீர்கள் . ........பத்து செய்திகளை வாசிப்பதைவிட ஒரு படம் போதும் அன்றன்றைய அரசியலை அவதானிக்க ..........மென்மேலும் உங்கள் பணி தொடரட்டும் . ........அதில் அணில்போல் நானும் உங்களை ஊக்குவித்து வந்திருக்கின்றேன் என நினைத்து மகிழ்கின்றேன் .......யாழுக்கும் நன்றி . ..........! 💐5 points
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
இல்லை கொலை இவருக்கு விடுதலை. வைச்சு செய்ய வேண்டும். 😡 ஒரு பெண் பிள்ளைக்கு அப்பன் தான் முதல் பாதுகாப்பு, நண்பன், தோழன் எல்லாமே. நல்ல தொடுகைக்கும் தப்பான தொடுகைக்குமான வித்தியாசத்தை பெண் பிள்ளைகள் பெறுவது அப்பனிடமிருந்தே.4 points
-
ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில் - கோவையில் நடந்தது என்ன?
மிகத்தரமான இந்திய அரசியல்வாதி😁3 points
-
கருத்து படங்கள்
3 points3 points
- வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
3 pointsநல்ல ஒரு பகிர்வுக்கு நன்றி கவி…! ஒரு மான்குட்டியை ஒரு சிங்கமோ அல்லது புலியோ பிடித்து வைத்து விளையாடுவதைக் கண்டிருக்கிறீர்களா? கடலின் வெளியே துடித்துக் கொண்டிருக்கும் மீனை,ஒரு கொக்கு ஒன்று தூக்கித் தண்ணீரில் போடுவதைக் கண்டுள்ளீர்களா? வலையில் பிடி படும் குஞ்சு மீன்கள் மற்றும் பாம்பு, பேத்தை போன்றவற்றைத் திரும்பவும் கடலில் விடுவதற்கான காரணம் என்ன? இந்திய மீனவர் விதி விலக்கு. இயற்கையில் ஒரு விதி இருக்கின்றது. அது எம்மை அறியாமலே உயிர்களை இயக்குகின்றது. அவ்வாறான ஒரு நிகழ்வே இந்த இளைஞனின் கதை. பிரம்மஹத்தி என்று சைவம் கூறிவது இதைத் தான். எம்மை இயக்கும் இயற்கையின் சூத்திரங்களில் இதுவும் ஒன்றே ….!3 points- ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில் - கோவையில் நடந்தது என்ன?
நான் சும்மா பகிடிக்கு சொன்னேன் நீங்கள் வீட்டில் உதவியாக இருங்கள்’ 😂3 points- பெண்ணாய் பிறந்து விடடால்....
2 pointsபிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்னம்பிக்கையை கொடுங்கள் விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள் இசை பயில நடனம் பயில தற்காப்பு கலைகள் பழக ஆர்வமாயிருந்தால் அதற்கான வழிகளை செய்து கொடுங்கள் இன்னொரு வீடு இல்லத்தரசியாய் வாழப் போறவள் என்று சமையல் பழக்குவதை விடவும் சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும் தையல் பழக்குவதை விடவும் பிரச்சனைகளின் போது எப்படி மீள வேண்டும் பிரிவுகளின் போது தனித்து எப்படி வாழ வேண்டுமென்று தையிரியத்தை சொல்லிக் கொடுங்கள் அதட்ட வேண்டிய நேரம் அதட்டி வளருங்கள் தட்டிக் கொடுக்க வேண்டிய நேரம் தட்டிக் கொடுங்கள் பெண்ணுக்கு அறிவை விடவும் தங்கமோ நிலமோ பெரியதில்லை படிப்பிருந்தால் தங்கமும் நிலமும் பணமும் தானாய் வந்து கதவு தட்டும் உங்கள் வளர்ச்சியைக் கண்டு உலகம் கைகள் தட்டும் சிறப்புடன் வாழ சிரிப்புடன் வாழ வைப்போம் படித்ததில் பிடித்தது .2 points- மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
எனக்கு இப்படியான இடங்களில் எழுதுவதற்கு அறவே பிடிப்பதில்லை..ஆனாலும் நீங்களும் ஒரு தந்தையாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் எழுதுவதை நினைக்கும் போது வெறுப்பாக இருக்கிறது.கருத்துக்களத்தில் இது எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மட்டும் யாரும் சொல்லாதீர்கள்.2 points- சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற உபாயம், தமிழ் தேசிய மக்களை ஒன்று திரட்ட பயன்படப்போகும் ஒரு அடையாளம், தமிழ் மக்களின் பிரச்சனைகளை சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல ஒரு வாய்ப்பாக கொள்ளவேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் இந்த தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற விடயம், தமிழ் தேசியத்தின் பெயரில் அரசியல் செய்ய நினைக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரித்து ஒரு புள்ளியில் நின்று, மக்களிடம் சென்று ஆதரவு திரட்டிவதென்பது மிக நல்ல விடயம். மிக மிக நல்ல விடயம். தமிழ் தேசிய அரசியலில் ஒரு தீர்மானமிக்க புள்ளி! இதன் மூலம் இத் தேர்தல் முடிவில், நீண்டகாலமாக தமிழ் மக்களுடம் கோரிக்கை அளவில் மட்டும் இழுபட்டு வந்த பல விடயங்களுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி போட்டுவிடமுடியும். 1. வடக்கில் (யாழ்/வன்னி) மட்டும் ஓரளவு வாக்குகளைப் பெற்று- கிழக்கில் பெருத்த அடி வாங்குவதன் மூலம், வடக்கு கிழக்கு இணைப்பென்பது வெறும் மடையர்களின் கோரிக்கை மட்டுமே- கிழக்கு தமிழ் மக்கள் ஆணை கிடைக்காத அதை மொத்தமாக இனி உதாசீனப்படுத்திவிடலாம் என்கின்ற செய்தியையும், 2. ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தமிழ் வாக்குகளில் 50% வீதத்தையேனும் பெறாத தமிழ் தேசிய வேட்பாளர் என்பது- வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரித்து- தமிழ் தேசிய அரசியல்வாதிகளை நிராகரித்து, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள் என்கின்ற செய்தியையும், 3. தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை பெரும்பான்மை தமிழ் மக்கள் புறக்கணித்திருப்பதானது தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்வதுபோல் உண்மையில் பிரச்சனைகள் இல்லை- அரசியல்வாதிகள் தான் தமிழ் தேசியத்தினை அரசியல் -பொருளாதார லாப நோக்கிற்காக பயன்படுத்துகிறார்கள் என்கின்ற செய்தியையும், 4. பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்த தமிழ் பொதுவேட்பாளர் தரப்பை நாங்களும் நிராகரிப்பதே சரி- இவர்களுக்கு தீர்வென்பது இனி தேவையே இல்லாத ஒன்று என்கின்ற செய்தியை சிங்களத்துக்கும் உலகிற்கும் சொல்லத் துணிந்து, தமிழ் மக்களின் இத்தனைகால உரிமைப் போராட்டத்தை முட்டாள்தனமான சுயலாப அரசியல் முடிவினால் விற்கத் துணிந்திருக்கும் ஶ்ரீதரன்- மாவை- செல்வம்- விக்கி- சித்தார்த்தன்- சுரேஷ் போன்ற தமிழ்தேசியத் தூண்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக! தமிழ் வேட்பாளர் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை 50% க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறத்தவறும் பட்சத்தில், மக்களின் ஆணைக்கிணங்க, இத்தேர்தலில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள்/ கொள்கைகள் எவற்றையும் எதிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பதுதான் உங்கள் அரசியலுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பதன் பொருள்! செய்வீர்களா? ( முகநூலில் வாசித்தது)2 points- கருத்து படங்கள்
2 pointsஉடனுக்குடன் அன்றைய அரசியல் கண்ணோடட கருத்துப்படங்களை தரும் சிறீ ...பாராடட படத்தக்கவர் . நானும் சில சமயங்களில் தென்பட்டால் புள்ளடி ( விருப்பு குறி )போடுவதுண்டு .உண்மைதான் ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை விட படங்கள் உடனே மனதில் பதிந்து விடும். மேலும் தொடர வாழ்த்துக்கள்.2 points- முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
ஒரே ஒருவருக்கு எனில் புள்ளடியும் விருப்பு வாக்கு எனில் 1 2 3 என விருப்பமானவர்களுக்கு போடலாம். 1 போட்டு 2 3 போடாதுவிடின் எண்ணுமிடத்தில் அரசியல் கட்சி சார்ந்தோர் குழுவாகப் பணி செய்தால் 2ஆவது 3ஆவது வாக்கை தமது விருப்புக்கு போடலாம்!2 points- வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
2 pointsஅவனுக்கு வயது 44. ஜனவரி 26 மாலை 6:15 மணியளவில் Ulm நகரத்தில் Muensterplatz இல் உள்ள ஸ்டார்பக்ஸ் கோப்பிக் (Starbucks Coffee) கடைக்குள் நுளைந்த போது அவனிடம் துப்பாக்கி ( HK416) ஒன்றும், கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு கத்திகளும் இருந்தன. கோப்பியை ருசித்தவனுக்கு இப்பொழுது சிகரெட் தேவைப்பட்டது. கோப்பிக் கடைக்குள் புகைக்க அனுமதி இல்லை. கடைக்கு வெளியே போனால்தான் சிகரெட் பிடிக்க முடியும். எழுந்து கொண்டான். தனது மேசைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு தம்பதியிடம், “நான் புகைக்க விரும்புகிறேன். எனது பையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கனிவுடன் கேட்டுக் கொண்டான். வாயில் இருந்து புகை தானாகவே வரும் அளவுக்கு வெளியே குளிர் இருந்தது. சிகரெட் புகையையும் அதனுடன் கலந்து விட்டான். கோப்பியில் கிடைத்த கொபைன் தந்த உற்சாகம், புகைபிடித்ததால் கிடைத்த நிக்கோட்டின் தந்த இன்பம் இரண்டும் கலந்த நிலையில் கடைக்குள் திரும்பி வந்தான். தனது பையைப் பாதுகாத்த தம்பதிகளுக்கு நன்றி சொன்னான். கூடவே ஒரு காகிதத் துண்டை அவர்களிடம் கொடுத்தான். “வெளியே போய் விடுங்கள். பொலிஸைக் கூப்பிடுங்கள். மிக்க நன்றி” காகிதத்தில் இருந்த வாசகத்தைப் பார்த்ததும், தம்பதிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. “நாங்கள் எதற்காகப் போக வேண்டும்?” அவர்கள் தங்கள் ஆட்சேபணையை வெளிப்படுத்தினார்கள். அவன் தன்னிடம் இருந்த 185 யூரோக்களை எடுத்து அவர்களிடம் நீட்டினான். “பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். காகிதத்தில் எழுதி இருப்பதைச் செய்யுங்கள்” என்றான். மீண்டும் தம்பதிகள் அவன் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. “நாங்கள், எங்கள் பணத்தில் ஆறுதலாக இருந்து கோப்பி குடிக்கவே இங்கே வந்திருக்கிறோம். இவன் யார் எங்கள் இனிய மாலைப் பொழுதைக் கலைக்க?” தம்பதிகளின் பார்வைகளிலேயே அவர்கள் நினைப்பதை அவன் விளங்கிக் கொண்டான். பதட்டமே இல்லாமல் தனது ஜாக்கெட்டைத் திறந்து துப்பாக்கியைக் காண்பித்தான். இப்பொழுது தம்பதிகள் நிலைமையைப் புரிந்து கொண்டார்கள். இருக்கையில் இருந்து எழுந்து வேகமாகக் கோப்பிக் கடையை விட்டு வெளியேறினார்கள். இப்படித்தான் 26.01.2024 அன்று பணயக் கைதிகள் விவகாரம் Ulm நகரத்தில் ஆரம்பமானது. நீதிபதிக்கு முன்னால் நின்ற சிறிய உருவம் கொண்ட அவனுக்கு இடது முன்கையில் பச்சை குத்தி இருந்தது. முகத்தின் வலது பக்கத்தில், கீழ்த் தாடையில் ஒரு பகுதி இல்லை. வாய் திறந்திருந்தது. வாயில் இருந்து வழியும் உமிழ்நீரை அடிக்கடி துடைத்துக் கொள்ள அவன் கையில் ஒரு துணி இருந்தது. “நான் இறந்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்க வேண்டியவன். ஆனால் உங்கள் முன்னால் நிற்கிறேன்” நீதிபதியைப் பார்த்து அவன் சொன்னான்.அவனது தாடையில் ஏற்பட்டிருந்த காயங்களால் அவனது உரையாடலைப் புரிந்து கொள்வது நீதிபதிக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. “நான் Iserlohn என்ற நகரத்தில் பிறந்தேன். எலக்ட்ரிக்கல் மெக்கானிக் படிப்பை முடித்து ஒரு வருடம் வேலை செய்தேன். பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்டேன். எனது 12 வருட இராணுவச் சேவையில், இரண்டு தடவைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பணிபுரிந்திருக்கிறேன். ஆப்கானிஸ்தானில் இருந்த சூழ்நிலைகள் எனக்கு மிகுந்த அழுத்தங்களைத் தந்தன. இடைவிடாத ரொக்கெட் தாக்குதல்கள், என் கண்களுக்கு முன்னால் தலையில் சுடப்பட்ட ஒரு ஆப்கானிஸ்தானியரின் மரணம், காயமடைந்தவர்கள், இறந்தவர்கள்... என்று எல்லாவற்றையும் பார்க்கும் போது, இரவில் தூக்கம் இல்லாது போனது. மனதில் எப்போதும் ஏதோ ஒன்று அழுத்துவது போன்றிருந்தது. உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லை. ஒவ்வொரு நாளையும் எங்கிருந்து தொடங்குவது என்ன செய்வது என்று எதுவுமே எனக்குத் தெரியாதிருந்தது. 2021இல் ஆப்கானிஸ்தானில் இருந்து எங்கள் படைகள் முற்றாக வெளியேறிய போது நானும் இங்கே வந்து விட்டேன். எங்கேயாவது பலமான சத்தங்கள் கேட்டால் எனது உடல் நடுங்க ஆரம்பிக்கும். ஆப்பானிஸ்தானில் இருந்து இங்கே வந்து அகதிகளாகத் தஞ்சம் அடைந்தவர்களைக் காணும் போதெல்லாம் இனம் புரியாத பயம் என்னை ஆட்கொள்ளும். எனது மனநிலைக் குழப்பத்துக்காக இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிகிச்சை எனது நிலைக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றும் தகுதியையும் நான் இழந்தேன். இராணுவத் துறையால் எனக்குத் தரப்படும் சிறு உதவித் தொகையும் எனது வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இவைகளிலிருந்து எனது கவனத்தை வேறெங்காவது திசை திருப்ப எண்ணிய போது, சூதாட்டமும், போதை மருந்துகளும், மதுவும் இலகுவாக என்னைப் பற்றிக் கொண்டன. எனது மனைவி 2020இல் கர்ப்பமான பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மது, போதை, சூதாட்டம் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு, ஒரு இனிமையான வாழ்வைத் தொடங்க முடிவு செய்தேன். ஆனால் இன்று, நாளை அல்லது மறுநாள் எல்லாவற்றையும் விட்டு விடலாம் என்ற எண்ணத்துடன் நாட்கள் தள்ளிப் போனதே தவிர, எனது பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் இன்னும் இன்னும் அவற்றுக்கு நான் அடிமையாகப் போய்க் கொண்டிருந்தேன். மகனும் பிறந்து விட்டான். அவன் அழும் போதெல்லாம் என்னால் அமைதியாக இருக்க முடியாதிருந்தது. எனது காதுகளுக்குள் இருந்து யாரோ அலறும் சத்தமாக அவனின் அழுகை எனக்கு இருந்தது. ஏதோ ஒன்று எனது ஆழ் மனதில் இருந்து என்னைக் குழப்பிக் கொண்டேயிருந்தது. இதை எவ்வளவு காலங்களுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியாதிருந்தது. செப்ரெம்பர் 2023 என் மனைவியுடனான திருமண ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். மனைவி, மகன் உறவும் போய்விட்டது. டிசம்பரில் எனது பிறந்தநாள். வாழ்த்த யாரும் வரவில்லை. கிறிஸ்மஸ் வந்தது. அதை என்னுடன் கொண்டாட எவரும் இல்லை. என்னை விட்டு எல்லோரும் போய்விட்டார்கள். என்னை ஒதுக்கி விட்டார்கள். இனி வாழ்ந்துதான் என்ன? செத்துவிடலாமா? எனது நகரத்தில்(Iserlohn) இருந்து தெற்கு நோக்கி நெடுஞ்சாலையில் எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். Ulm நகரத்துக்குத் திரும்புவதற்கான அறிவித்தல் தெரிந்தது. அந்த நகரத்துக்கு நான் இதுவரை சென்றதில்லை. Ulm இல் இராணுவ மருத்துவமனை ஒன்று இருப்பதை முன்னரே அறிந்திருந்தேன். அங்கே எனக்கு மருத்துவ உதவி கிடைக்கலாம் என்ற எண்ணம் வந்தது. காரை Ulm நகரத்துக்கான பாதையில் திருப்பினேன். வழியில் கோப்பி குடிப்பதற்காக ஸ்டார்பக்ஸ் கோப்பிக் கடைக்கு வந்தேன். அங்கே மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைப் பார்த்த போது, எனது மனைவியுடன் மகிழ்வாக இருந்த நாட்கள் மனதுக்குள் ஓடின. அப்பொழுதுதான் முடிவெடுத்தேன். ‘இன்று இல்லாவிட்டால் இனி இல்லை’ என்ற முடிவுதான் அது” அவன் சொல்ல வேண்டியதை அவனிடம் இருந்து உள்வாங்கி ஒரு மனநல மருத்துவர் நீதிபதிக்குச் சொல்லி முடித்தார். அனைத்தையும் கேட்ட நீதிபதி, ஒக்ரோபர் 10ம் திகதி வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாகச் சொல்லி எழுந்து கொண்டார். அவன் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளில் 14 வயதுச் சிறுமியும் சிறுவனும் இருந்தார்கள். அங்கிருந்த சூழ்நிலை, அவர்களைப் பயத்தின் உச்சத்துக்கு கொண்டு போயிருந்தது. இருவரும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். அவன் அந்தச் சிறுவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான். அவர்கள் இரண்டுபேரையும் முதலில் வெளியே போக அனுமதித்தான். சிறுவர்கள் இருவரும் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பி தான் பிடித்து வைத்திருந்த மற்றவர்களைப் பார்த்தான். அவர்களும் பயத்தில் இருந்தார்கள். என்ன நினைத்தானோ, கடையின் சொந்தக்காரியைத் தவிர மற்ற எல்லோரையும் வெளியே போக அனுமதித்தான். ஆக அவன் பிடித்து வைத்திருந்த 12 பணயக் கைதிகளும் ஆபத்தின்றி வெளியேறி விட்டார்கள். கடைக்கு வெளியே சிறப்புப் பயிற்சி பெற்ற பொலிஸார் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். உள்ளே கடை உரிமையாளருடன் இவன் நின்றான். பணயக் கைதிகள் விவகாரம் எதற்காக என்பது யாருக்கும் தெரியவில்லை. அவன் அறிவிக்கவுமில்லை. “இப்பொழுது நாங்கள் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே போகப் போகிறோம். உன் கழுத்தில் என் துப்பாக்கி இருக்கும். வெளியில் இருந்து பொலிஸார் சுட்டால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவற்றைச் செய்துகொள்” என்று சில வழிமுறைகளைக் கடை உரிமையாளருக்குச் சொல்லிக் கொடுத்தான். அவளுக்கு அங்கே என்ன நடக்கிறது என்பதில் குழப்பமாக இருந்தது. இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? இவனுக்கு என்னதான் தேவைப்படுகிறது? என்ற கேள்விகள் மனதுக்குள் எழுந்தாலும், அதையும் தாண்டி கழுத்தில் அவனது கைத்துப்பாக்கி அழுத்தி நின்ற பயம் மேலோங்கி நின்றது. கடையின் வாசலில் உரிமையாளரின் கழுத்தில் கைத்துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு அவன் நின்றான். பத்து மீற்றர் தூரத்தில் சுவருக்குப் பின்னால் நின்ற ஒரு பொலிஸின் இலக்கில் தான் நிற்பதை அவன் அறிந்தே வைத்திருந்தான். இரண்டு துப்பாக்கிச் சூடுகள். ஒன்று அவனது கையிலும் மற்றையது அவனது தாடையிலும் பாய்ந்தன. நிலத்தில் இரத்தத்தில் தோய்ந்திருந்தான். இராணுவத்தில் அவன் பங்காற்றிய சண்டைகள், அதனால் வந்த விளைவுகள் எல்லாமே அவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்தன. அதற்கான தண்டனையாக தான் துப்பாக்கிக் குண்டுகளால் இறக்க வேண்டும் என்று நினைத்தவனைக் காப்பாற்ற, அவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அவனது துப்பாக்கிகளை ஆரய்ந்த சிறப்பு பொலீஸ் அதிகாரி, “இது என்ன? அவனது கைத்துப்பாக்கி விளையாட்டுத் துப்பாக்கியாக இருக்கிறதே” என்று சொல்லிக் கொண்டார். ஒக்ரோபர் 10ம் திகதி, நீதிபதி என்ன தீர்ப்பைச் சொல்லிவிடப் போகிறார்? அவனைப் பார்கக விரும்பினால் https://www.swp.de/lokales/ulm/geiselnahme-im-ulmer-starbucks-22-jaehrige-geisel-ich-habe-die-augen-geschlossen-und-gebetet-77514017.html2 points- முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
தமிழ் வேட்பாளர் முதல்தெரிவு. அனுர இரண்டாவது தெரிவு என்பதன் ஊடாக சிங்களத்தலைமையை ஏற்கின்ற வேளையில் முதல் தெரிவான பொதுவேட்பாளர் என்ற சிந்தனை வீழ்த்தப்படவே வாய்ப்புள்ளது. தமிழருக்கு எந்த உரிமையையும் தரமாட்டேன், கோத்தா கேட்டதுபோல் சிங்கள வாக்குகளில் வெல்வேன் என்று கூறி வென்றதுபோல் நாமல் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ள அதேவேளை ஏனைய ரணில், அனுர, சஜித் போன்றோர் எந்தத் தெளிவான நிலைப்பாட்டையும் தெரிவிக்காது கடந்து செல்கின்றனர். தமிழரது உரிமைகள் தொடர்பாக உறுதியளிக்கப்போய் இருப்பதையும் இழந்துவிடக்கூடாதென்பதில் தெளிவாக இருக்கின்றார்கள். அனுர, சஜித், ரணில் மற்றும் நாமல் ஆகியோரில் எவருமே ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்கள் இல்லையென்பதே தெளிவாகத் தெரிகிறது. அனுர வட- கிழக்கைப் பிரித்த ம.வி.முன்னணியின் பாசறையில் வளர்ந்தவர். சஜித்தின் தந்தையின் ஆட்சிக்காலத்தில் தமிழர் தாயகத்திலே மேற்கொள்ளப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலைகள் உட்பட்ட படுகொலைகள் குறித்து மன்னிப்புக் கோரக்கூடியவரா? ரணில் தமிழரை தந்திரமாக ஏமாற்றிப் புன்னகைத்தவாறு அழித்துவரும் யே.ஆரால் வளர்க்கப்பட்ட பழுத்த இனவாதி நாமல் கூறிவிட்டார் தனது நிலையை... தமிழர் தேசமானது காலத்துக்கேற்ப மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்தபோதும் சிங்களத் தலைமைகளிடம் மாற்றம் நிகழ்ந்துள்ளதா? எனவே மாறாத சிங்களத் தலைமைகளை வாக்களிப்பின் ஊடாகவும் அல்லது வாக்களிக்காமலும் நிராகரித்துவிடுவதன் ஊடாகத் தமிழர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்வதே அவதானிப்பிற்குரியதாகும். 2ஆம், 3ஆம் வாக்கை யாராவது சிங்களத் தலைமைக்கு என்ற கருத்தானது மீண்டும் தம்தலையில் தாமே மண்ணள்ளிப் போடுவதற்கு ஒப்பானது. கடந்த பல ஆண்டுகளாக 13 அமுல்படுத்துங்கள்... ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழருக்குச் சுயாட்சியைத் தாருங்கள்... என்று கோரியபோதும் எதையுமே சிங்களம் வழங்கத் தயாரில்லை. நாமல் போன்றோரின் அறிக்கையானது சிங்கள இளம் தலைவர்களையும் நம்பத் தேவையில்லை என்பதை பறைசாற்றி நிற்கிறது. சனநாயகம் என்ற போர்வையுள் தமிழருக்கு எதிரான சட்டங்களை இயற்றி நிறைவேற்றிவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எந்த ஒரு அதிபரும் தமிழருக்குத் தீர்வைத் தரமாட்டார்கள் என்பது நிதர்சமானபோது தமிழர் வாக்களித்துத்தான் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டுமா? வாக்களிக்காமலும் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கலாம் என்ற சிந்தனை சரியாகவே தோன்றுகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி2 points- முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
X என்று புள்ளடி போட்டால் அவர்தான் முதலாவது தெரிவு! குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும். இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும்.2 points- இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து. தெற்காசியாவில் முதன் முறையாக இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று ஆளுநர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள நிலாவெளி,மட்டக்களப்பில் உள்ள பாசிக்குடா, அம்பாறையில் உள்ள அருகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும், பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் பறக்கும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வேலைத்திட்டமானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச், இலங்கையில் உள்ள பல மாகாணங்களை ஒப்பிடும் போது,கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடமாக ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதை அவதானிக்க முடிந்தது. ஆளுநர் Air- Ship சேவையை ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அமைய கடந்த ஒரு மாத காலமாக எமது நிறுவனத்தின் அதிகாரிகள் இங்கு இருந்து இவ்வேலைத்திட்டம் குறித்து ஆராய்ந்தனர். எங்களுடைய ஆய்வு அறிக்கை படி இவ்வேலைதிட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து air ship வேலைத்த்திட்டத்திட்காக முழு முதலீடு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/13991912 points- வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
2 points- ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில் - கோவையில் நடந்தது என்ன?
காத்திருக்கிறேன் கந்தையா.2 points- "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில் சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் சென்று " எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ" என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர் "அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே" "கி.. கி.. .ஒம் அண்ணே" "நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே " "சீ சீ டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை" "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் " "ஒம் " "அடே விசரா! நானும் அதை தான் எடுத்துக் கொண்டு வந்தனான் இப்ப இரண்டு வருசமா சாப்பாட்டில கவனமாக இருக்கிறன், நீ காய்கறிகளை,பழங்களை சாப்பிடு எல்லாம் பறந்து விடும்" "அப்ப நீங்கள் சோறு சாப்பிடுவதில்லையே " "ஏன் இல்லை! சனி ஞாயிறுகளில் நல்லா சாப்பிட்டு விட்டு இரண்டு குளிசையை போட்டுவிட்டு படுத்திடுவேன்" "என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல" "வயசு போகவில்லை , உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்" "அட கடவுளே பிறகு " "பிறகு மகளும், பேரப்பிள்ளைகளும் முதலுதவி செய்து கொண்டு அம்புலண்சுக்கு கொல்பண்ணி,அவன்களும் வர நானும் முழிச்சிட்டேன் ,அன்றைக்கு பூசாமல் விட்ட 'டையை'இன்னும் தொடவில்லை" "வழமையா பாவிக்கிற பிரான்ட் தானே பாவிச்சனீங்கள்" "இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை" "சன் இன் லோவும் 'டை' பூசுறவறே" "ஒம் இரண்டு பேரும் ஒரே பிராண்ட் தான் பாவிச்சனாங்கள் " "புது பிராண்டுக்கு 'ஹினி பிக்' நீங்கள் போல ,இப்ப சன் இன் லோ பழைய பிரான்ட் பாவிக்கிறாரோ புது பிராண்டோ" "புதுசெல்லாம் இப்ப குப்பைக்குள்ள போய்விட்டது,அவர் பழைய பிராண்ட் தான் பாவிக்கிறார்" "அண்ணே உது 'சண் இன் லோ' வின் திட்டமிட்ட பிளான் போல இருக்கு ஹி ஹி" அவரும் சிரித்தபடி எழுந்தார் , "இருக்குமடா இருக்கும் ஹி ஹீ...சில அண்ரிமார் நக்கலடிக்கிறவையல் மாமனையும் மருமகனையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கு எண்டு,ஹி ஹி" "உங்களுக்கு இந்த வயசிலயும் அண்ரிமாரின் நினைப்பு" " சும்மா கதைக்கிறதுக்கு கதைக்கிறன் ,எதோ அண்ரிமாரின் பின்னால போன மாதிரி கோவிக்கிறாய்! டாக்குத்தர்மார் சொல்லுயினம் இளமையாக இருக்க இளமை நினைவுகளை மீட்க சொல்லி" "எந்த டாக்குத்தர்" "யூ டியுப் டாக்குத்தர்மார்,சரி அதை விடு வா சுற்றி கூம்பிடுவோம் ,பிறகு பின் மண்டபத்தில அந்தியேட்டி நடக்குதுபோக வேணும்" "வாங்கோ போவம் நானும் அந்த அந்தியேட்டிக்கு தான் வந்தனான் " இருவருமாக சுற்றி கும்பிட்டு கொண்டு வரும் பொழுது "டேய் இதில இருந்த நாயன்மாரின் சிலைகள் எங்கே " “அவையளுக்கும் நடேசருக்கும் அட்டாஜ் கிரனி கட்டி அதில குடியேற்றியிருக்கினம்" "ஏன்டா?," "நான் நினைக்கிறன் நீங்கள் எல்லாம் தொட்டு கும்பிடுறதால நாயன்மாரின் புனித தன்மை இல்லாமல் போய்விடுகிறது என மாத்திரியிருப்பினம்" " குரு பூஜை நாட்களில் நாங்கள் தானே நாயன்மாரின் படங்களை தூக்கி கொண்டு போய் அலங்கரிச்சு பூஜை செய்யிறம் அப்ப புனித தன்மை கெடாதோ? எப்ப மாத்தினவங்கள் ,இப்ப எங்கே வைச்சிருக்கிறாங்கள்" "போன கும்பாபிசேகத்துக்கு பிறகு நடேசருக்கு வசந்த மணடபம் கட்டி அவருடன் இவையளையும் வைச்சிருக்கினம் அந்த பக்கம் வாங்கோ காட்டுறன்" அப்படியே நடந்து வந்தவர் மூலஸ்தான பின் சுவரை பார்த்து "இவையள் எப்ப இங்க குடி வந்தவையல்," "விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு" "இப்படியான விசர் கேள்விகளை கேட்டு என்னையும் குழப்பி, சனத்தையும் குழப்பாதே...எல்லாம் அவன் செயல் எண்டு கும்பிட்டு கொண்டு போ ,நானும் அந்த காலத்தில் இப்படி இடக்குமடக்கா சிந்திச்சனான் இப்ப தெளிந்திட்டன்" "வயசு போக போக தெளிவடையலாம் எண்டு சொல்லுறீயலோ" "நீ தெளிவடைய தேவையில்லை ஏதோ ஒர் சக்தி தெளிவடைய வைக்கும்" "இறைசக்தியோ" "அப்படி சொல்ல வில்லை உன் அடையாளங்களை இழக்க பண்ண பல சக்திகள் செயல் படும் ,அந்த சக்தி நீயாகவோ அல்லது உனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம்...." "என்ன அண்ணே சொல்லுறீயல்" "நான் இங்க வந்து 40 வருடமாகிறது ,நீ வந்தும் 25 வருசத்திற்கு மேலாகிறது என நினைக்கிறேன்.. ஆறுமுகத்தான் என் பெருமன் சிட்னி முருகன் மேற்கு குன்றில் குடியேறியும் 25 வருசத்திற்கு மேலாகிறது.. இந்த முருகனை இங்க கொண்டு வந்து குடியேற்றி சைவத்தையும் தமிழையும் நிலை நாட்டலாம் என நினைத்தோம்" "அது நடக்குது தானே" "அது நடக்குதோ!! வெளியில போய் பார் எப்படி போர்ட் போட்டிருக்கிறாங்கள் எண்டு" " இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு" "உனக்கு இது சின்ன விசயமா தான் இருக்கும் காரணம் நீ யாழ்ப்பாணத்தில் உள்ள ஒர் இந்து பாடசாலையில் தான் படிச்சிருப்பாய் " "அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு" "இருக்குதடா இருக்கு ,என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது “ என கூறி ஒர் பெருமூச்சு விட்டார் கந்தர். "என்ன இன்றைக்கு சனம் அதிகமாக இருக்கு விசேமான நாளே அண்ண?" "உவன்கள் பக்கத்து நாட்டுக்காரனுக்கு கண்டபடி விசாவை கொடுத்து அவன்கள் வந்து குமிச்சிட்டாங்கள் அவங்களுக்கு வருசம் முழுவதும் விசே நாள் தான்" "யார் நியுசிலாந்துக்காரன்களே" "உந்த நக்கல் தானே கூடாது" "ஓ நீங்கள் தாயத்து பக்கத்து நாட்டுகாரர்களை சொல்லுறீயல்.. ஹி ...சும்மா சொல்லக்கூடாது அவங்களால கோவிலுக்கு நல்ல வருமானம்" "ஒம் நல்ல வருமானம்...அந்த வருமானத்திற்காகவும் .... நாம் எமது அடையாளங்களை இழக்கின்றோம் ... அங்கு எத்தனை மாநிலம், ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவர்களுக்காக அவர்களின் கடவுள்களை உள்வாங்குகின்றோம் காலப்போக்கில் அந்த மாநில கடவுளும் நம்ம ஆளாகி எமது அடையாளத்தை இழக்கின்றோம்" "இப்படி கதைச்சு கொண்டிந்தோம் இன்றைக்கு அந்தியெட்டி போனமாதிரி தான்" "ஒமடா வா வா நானும் மறந்து போனேன். அங்க வா அடையாள இழப்புக்கள் எப்படி எங்கன்ட அடுத்த சந்ததிக்கு புகுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறேன்" "சரி சரி வாங்கோ" "உங்க ஒரு இலைட் குறூப் நிற்கும் அங்க கொஞ்சம் அடக்கி வாசி என்னோட கதைக்கிறமாதிரி கதைச்சுபோடாத" "யார் அந்த இலைட் குறூப் அண்ண" "அறுபது வயசுக்கு பிறகு ஆத்மீகம் ,அரசியல் பேசுகிற கோஸ்டிகள் இவ்வளவு காலமும் நித்திரை கொண்டிருந்தவங்கள் இப்ப முழிச்சிட்டாங்களாம்" ...1 point- என்கிட்ட மோதாதே
1 point57 வயசிலயும் அதெல்லாம் ஒத்துக்க முடியாது கோட்ட அழிங்கே மொதல்ல இருந்து ஆடுவம் எண்டு மனுசன் ஒத்தைக்காலில நிக்குரத பாத்தா பரோட்டா சூரி காமெடிதான் ஞாபகம் வருது..1 point- தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி நிற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - மணிவண்ணன்
1 point1 point- மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
இதெற்கெல்லாம் அடி நுனி தேடுவீர்களா? 🥺1 point- உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு
ஒரு நாளைக்கு.. ஏழு முறை சாப்பிடுகின்றார். அத்துடன் 2.5 கிலோ இறைச்சியும், 108 சுஷியும் சாப்பிட்டால் மாரடைப்பு வராமல் என்ன செய்யும்.😂 கொஞ்சம் வாயை கட்டியிருந்தால்... நீண்ட நாள் வாழ்ந்திருக்கலாம்.1 point- மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
உதயன் செய்தியை நம்பி கருத்து போடலாமா? குற்றவாளியை குற்றம் செய்ய தூண்டியது எது? ஆள் குடிகார சாமியோ?1 point- மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி?
தாவரம் மூலம் சுய மருத்துவம் செய்யும் கொரில்லா - புதிய மருந்து கண்டுபிடிப்புக்கு இந்த குரங்குகள் உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் 150,000-க்கும் சற்று குறைவான `வெஸ்டர்ன் லோ லேண்ட்’ கொரில்லாக்கள் காடுகளில் வாழ்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ் பதவி, பிபிசி சுற்றுச்சூழல் நிருபர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கொரில்லா இனங்களிடம் காணப்படும் சுய மருத்துவம் செய்துகொள்ளும் போக்கு, எதிர்கால மருந்துவக் கண்டுபிடிப்புகளுக்கு உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கபோன் (Gabon) நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், காட்டு கொரில்லா இனம் உட்கொள்ளும் வெப்பமண்டல தாவரங்களை ஆய்வு செய்தனர். இந்தத் தாவரங்கள் உள்ளூர் மூலிகை மருத்துவர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வு முடிவில், அவற்றில் நான்கு தாவரங்களில் மருத்துவ குணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தாவரங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidants) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதாக ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு தாவரம், சூப்பர்பக்ஸை (உடல்நல பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு வகை பாக்டீரியா. ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் இந்த பாதிப்பை குணப்படுத்த முடியாது) எதிர்த்துப் போராடும் திறன் பெற்றிருந்தது. பெரிய குரங்கு இனங்கள், குணப்படுத்தும் பண்புகளைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் சுய மருத்துவம் செய்துக்கொள்கின்றன. சமீபத்தில், காயம்பட்ட ஒராங்குட்டான் குரங்கு ஒன்று தன் காயத்தை குணப்படுத்த, தாவரத்தை பயன்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெஸ்டர்ன் லோலேண்ட் கொரில்லாக்கள் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றன. மூங்கில் தண்டுகள், தளிர்கள் மற்றும் பழங்களை உண்கின்றன. சமீபத்திய ஆய்வில், கபோன் நாட்டில் உள்ள முகாலாபா டூடூ (Moukalaba-Doudou) தேசியப் பூங்காவில் 'வெஸ்டர்ன் லோலேண்ட்' (western lowland) கொரில்லாக்கள் உட்கொள்ளும் தாவரங்களை தாவரவியலாளர்கள் ஆய்வு செய்தனர். உள்ளூர் மூலிகை மருத்துவர்கள் உடனான நேர்காணல்களின் அடிப்படையில் மருத்துவ குணமுள்ள நான்கு தாவரங்களை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். கபோக் மரம் (Kapok tree), ராட்சத மஞ்சள் மல்பெரி (giant yellow mulberry), ஆப்ரிக்கத் தேக்கு, மற்றும் அத்தி மரங்கள் ஆகியவை அந்தத் தாரவங்களாகும். பாரம்பரிய மருத்துவத்தில் வயிற்றுப் பிரச்னைகள் முதல் கருவுறுதல் தொடர்பான பிரச்னைகள் வரை அனைத்திற்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் இந்த தாவரங்களின் மரப்பட்டையில், பீனால்கள் முதல் ஃபிளாவனாய்டுகள் வரையிலான ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை. ஆய்வு செய்யப்பட்ட நான்கு தாவரங்களும் ஒரு வகை 'ஈ. கோலி' பாக்டீரியாவுக்கு எதிராக பாக்டீரியா எதிர்ப்புச் செயல்பாட்டைக் கொண்டிருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கபோக் மரம் உள்ளூர் மூலிகை மருத்துவர்களால் மனிதர்களின் நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது "இந்த ஆய்வு மத்திய ஆப்பிரிக்க மழைக்காடுகள் பற்றிய நமது அறிவில் உள்ள மிகப்பெரிய இடைவெளிகளை அம்பலப்படுத்துகிறது. மேலும் கொரில்லாக்கள் தங்களுக்கு நன்மை செய்யும் தாவரங்களை உண்ணும் வகையில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளதை காட்டுகிறது" என்று கபோன் விஞ்ஞானிகளுடன் இந்த ஆய்வில் பங்கேற்ற பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் அறிஞர் ஜோனா செட்செல் கூறினார். கபோன் மிகப்பெரிய, ஆராயப்படாத காடுகளை கொண்டுள்ளது. இது வன யானைகள், சிம்பன்சிகள், கொரில்லாக்கள் மற்றும் அறிவியலுக்கு புலப்படாத பல தாவரங்களின் தாயகமாகும். வேட்டையாடுதல் மற்றும் நோய் தொற்றுகளால் அதிக எண்ணிக்கையிலான வெஸ்டர்ன் லோலேண்ட் கொரில்லாக்கள் காடுகளில் இருந்து காணாமல் போயுள்ளன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் (IUCN Red List) கொரில்லா இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி 'PLOS ONE’ என்னும் அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/czxlxnd0jqdo1 point- ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில் - கோவையில் நடந்தது என்ன?
Annapoorna: "அதிகாரம் பணிய வைக்கிறது" - அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் சீமான் கண்டனம் கோவையில் நேற்று முன்தினம், பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் தொழில்துறை பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் பேசிய பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜி.எஸ்.டி வரியில் உள்ள சட்டச் சிக்கல் குறித்து நிர்மலா சீதாராமனிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர், நிர்மலா சீதாராமன் சந்திப்பு இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்துக்குப் பின்னர், வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று வைரலானது. இதனால், கேள்விகேட்டதற்காக அதிகாரத்திலிருந்து கொண்டு மன்னிப்புக் கேட்க வைப்பதா எனப் பல தரப்பிலிருந்தும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகக் கண்டனங்கள் வந்தன. இருப்பினும், தான் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டதாக சீனிவாசன் விளக்கமளித்தார். மறுபக்கம், அந்த வீடியோவை பகிர்ந்த தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். இந்நிலையில், அன்னப்பூர்ணா சீனிவாசனின் கேள்வியில் உண்மை இருப்பதாகவும், அதிகாரம் அதைப் பணியவைப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். சீமான் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த சீமான், "அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரின் கேள்வியிலிருந்த உண்மை அனைவருக்கும் தெரியும். ஜி.எஸ்.டி வரியால் வர்த்தகர்களும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர். அனைத்திலும் வரி. ஒருவன் வீடு கட்ட போனாலும், அவரால் வரிதான் கட்ட முடியும். வாழவே முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவரின் கேள்வி நியாயமானது என்று இப்போது நாடெங்கிலும் பரவிடுச்சு. அதை அதிகாரம் பணியவைக்கிறது. அவர் எவ்வளவு வருத்தம் தெரிவித்தாலும், அவர் கேட்ட கேள்வியில் இருக்கும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது" என்று கூறினார். Seeman: "அதிகாரம் பணிய வைக்கிறது" - அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் சீமான் கண்டனம் | NTK Chief Seeman slams BJP in kovai Annapoorna hotel CEO issue - Vikatan1 point- நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
அப்படியானால் இவ்வளவு நாளும் நேட்டோ தான் போரை இயக்குகிறது என்று சொன்னதெல்லாம் பகிடிக்கா கோபாலு???1 point- முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
இருக்கவே இருக்கிறது பாதுகாப்புப் படைகள். அவர்கள் பாதுகாப்பில் எதுவும் செய்யலாம். ஏற்கெனவே எங்கள் தமிழரசுக் கட்சிக்குள் புகுந்த சனி பகவான் செய்தும் காட்டியுள்ளார். பழையபடி வேதாளங்கள் எல்லாம் அரசு(ச)மரத்தில் ஏறி அமரும்.🤔1 point- ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
எம்.எல்.எம்.மன்சூர் சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு சொல் ‘தீரணாத்மக’ என்பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடிவாகப் போகும் தருணம்’ என்று சொல்லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட 76 வருட கால வரலாற்றில் மிக மிக நிர்ணயமான ஒரு கட்டத்தில் வந்து நின்றிருக்கிறது என்ற அபிப்பிராயம் பொதுவாக அனைத்துத் தரப்புக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது. முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது இந்தத் தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஓர் இயல்பை கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதி தேர்தல்களில் இதுவரையில் இருந்து வந்த இரு முனைப் போட்டி இந்தத் தடவை ஒரு நான்கு முனைப் போட்டியாக மாற்றமடைந்திருப்பது முதலாவது விசேஷம். பலர் நாமல் ராஜபக்சவின் பெயரை தவிர்த்து ‘இது ஒரு மும்முனைப் போட்டி’ என்று சொல்லி வந்தாலும் கூட, நாமலும் ஒரு குறிப்பிடத்தக்க போட்டியாளராக இருந்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல்களில் இதுவரையில் 5% க்கு குறைவான வாக்குகளை மட்டுமே பெற்று வந்த ஒரு விளிம்பு நிலைக் கட்சி ஒரு முதன்மை போட்டியாளராக எழுச்சியடைந்திருப்பது இரண்டாவது சிறப்பம்சம். 1990கள் தொடக்கம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது சிங்கள சமூகத்தின் கொடிய எதிரிகளாக கட்டமைக்கப்பட்டு வந்த தமிழ் பிரிவினைவாதம், டயஸ்போரா சமூகம் மற்றும் 2019 இல் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் போன்ற கோஷங்கள் பிரச்சார மேடைகளிலிருந்து தலைமறைவாகியிருப்பது. அடுத்த விசேஷம். அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் வெளிப்படையாக இனவாதம் பேசப்படாமல் நடத்தப்படும் முதலாவது தேர்தல் இது. சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் (Sinhala Heartland) தெளிவாகவே ஒரு ஜேவிபி / என்பிபி ஆதரவு அலை நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வெவ்வேறு தரப்புக்களால் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் மீண்டும் மீண்டும் இதனை ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் அரசியல் ஆய்வாளர்களும் கூட ‘ஆம் அவர்களுக்கு ஒரு ஆதரவு அலை இருந்து வருகிறது; அதை மறுக்க முடியாது’ என்ற பீடிகையுடனேயே தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அதே வேளையில், சஜித் மற்றும் ரணில் ஆகியோர் இந்தத் தடவை முன்வைத்திருக்கும் பிரச்சார சுலோகங்கள் பெரிதாக வாக்காளர்களை கவரக்கூடியவையாக இருந்து வரவில்லை. சார்புரீதியில், ஜேவிபி / என்பிபி அணிக்குக் கிடைத்திருக்கும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அனுகூலம் – ‘எதிரி யார்’ என்பதை தெளிவாக அடையாளம் காட்டக் கூடிய ஆற்றல். சஜித் அணியை பொறுத்தவரையில் அவர்கள் ‘வீழ்த்த விரும்பும் முதன்மை எதிரி’ யார் என்பது அவர்களுக்கே தெளிவில்லாமல் இருப்பது முக்கியமான ஒரு பலவீனம். ராஜபக்சகளின் அரவணைப்பில் இருந்த பலரை தனது அணிக்குள் உள்ளீர்த்துக் கொண்ட பின்னர் ‘திருடர்களை களை எடுப்போம்’ போன்ற ஜனரஞ்சக சுலோகங்களை முன்வைக்கும் தார்மீக உரிமையை இழந்திருக்கிறார் சஜித். அவருடைய மற்றொரு பலவீனம் இன்றைய இலங்கையின் பொருளாதார யதார்த்தங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத விதத்தில் கோமாளித்தனமான வாக்குறுதிகளை வழங்குவது. சொல்லப்போனால் ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன போன்ற நாட்டு நடப்புக்களை நன்கு அறிந்து வைத்திருக்கும் SJB முக்கியஸ்தர்களை பெரும் சங்கடத்தில் நெளிய வைக்கும் வாக்குறுதிகள் அவை. ‘அநுர குமாரவே எங்கள் தெரிவு’ என்று சொல்லும் பலர் அதற்கு முன்வைக்கும் காரணம் ‘ஒரு தடவை அவர்களுக்கும் கொடுத்துப் பார்ப்போமே’ என்பது. அதாவது, ‘இவ்வளவு காலமும் எத்தனையோ பேருக்கு வாக்களித்து ஏமாந்திருக்கிறோம். கடைசியில் இன்றைய வங்குரோத்து நிலைதான் எமக்கு எஞ்சியிருக்கின்றது’ என்ற ஆதங்கமே இந்தப் பேச்சுக்களில் தொனிக்கிறது. அதனையே அதாவது – ‘ இந்தத் தடவை திசைகாட்டிக்கு’ என்று மக்கள் சொல்வதையே – ஜேவிபி/ என்பிபி அணி தனது பிரச்சார சுலோகமாக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, 2022 அறகலய மக்கள் எழுச்சிக்குப் பின்னர் நாட்டில் உருவாக்கியிருக்கும் ஜேவிபி/ என்பிபி ஆதரவு அலையின் குடிசனவியல் பண்புகள் (Demographic Features) எவை, புதிதாக ஜேவிபி ஆதரவாளர்களாக சேர்ந்திருக்கும் பல இலட்சக் கணக்கானவர்கள் எங்கிருந்து வந்தார்கள், இந்த முடிவை நோக்கி அவர்களைத் தள்ளிய சமூக, உளவியல் காரணிகள் எவை போன்ற கேள்விகளுக்கு விடைகளை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் 2004 வரைக்கும் பின்நோக்கிச் செல்ல வேண்டும். 2004 பாராளுமன்றத் தேர்தலில் ஜாதிக ஹெல உருமய (JHU) கட்சி சார்பில் மேல் மாகாணத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 9 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் புத்த பிக்குகள். விடுதலைப் புலிகளுடனான போரை சந்திரிகா – மங்கள அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து கடும் விரக்தி நிலையில் இருந்து வந்த தீவிர சிங்கள -பௌத்த உணர்வாளர்களின் ஒரு பிரிவினரே இவ்விதம் திடீர் JHU ஆதரவாளர்களாக மாறியிருந்தார்கள். அவர்களை அவ்விதம் அணி திரட்டுவதில் பாட்டலி சம்பிக்க ரணவக்க முதன்மையான ஒரு பாத்திரத்தை வகித்திருந்தார். கங்கொடவில சோம தேரர் உருவாக்கிய பௌத்த எழுச்சி அலையினால் தூண்டப்பட்டிருந்த ஒரு பிரிவினரின் இன உணர்வுகளை அச்சந்தர்ப்பத்தில் ரணவக்க மிகவும் சாதுர்யமாக தனக்கு சாதகமான விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இந்தச் சமூகப் பிரிவினர் மேல் மாகாணத்தில் – குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் – செறிந்து வாழ்ந்து வருகிறார்கள். 1980 களில் உருவாகிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்று, வெளி மாகாணங்களிலிருந்து வந்து கொழும்பு புற நகர் பகுதிகளில் குடியேறியவர்கள். ஜே.ஆர். அறிமுகம் செய்து வைத்த திறந்த பொருளாதார கொள்கையின் மூலம் பயனடைந்த முதல் தலைமுறையினர் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்கும் கெஸ்பாவ, கடுவெல, கோட்டே, மகரகம, ஹோமாகம போன்ற கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகுதிகளில் இந்த வகுப்பினரின் பிரசன்னம் அதிகம். சிங்கள மத்திய தர வரக்கத்தின் ஒரு புதிய பிரிவினரின் எழுச்சியாக (Sociological Phenomenon) அப்பொழுது அது பார்க்கப்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் கெஸ்பாவ மற்றும் மகரகம போன்ற தொகுதிகளில் வாக்குகளின் அடிப்படையில் யூஎன்பியை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு, JHU இரண்டாவது இடத்தை பிடித்துக் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு அப்போதைய சிங்கள பௌத்த அலை வலுவானதாக இருந்து வந்தது. இதேபோல கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் JHU கணிசமான அளவிலான வாக்குகளை பெற்றுக் கொண்டிருந்தது. அதன் பின்னர் இந்தப் பிரிவினர் 21 ஆம் நூற்றாண்டு சிங்கள பெருந் தேசியவாதத்தின் ‘Trendsetter’ களாக உருவாகியதுடன், அவர்கள் தூண்டிவிட்ட அந்த உணர்வு சிங்கள சமூகம் நெடுகிலும் மிக வேகமாக பரவியது. 2010, 2019 ஜனாதிபதி தேர்தல்களில் முறையே மஹிந்தவுக்கும், கோட்டாபயவுக்கும் இப்பிரிவினரே அமோக ஆதரவை வழங்கியிருந்தார்கள். 2022 பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் போன்ற பிரச்சினைகள் அவர்கள் இதுவரையில் அனுபவித்து வந்த ‘Comfort Zone’ இலிருந்து அவர்களை வெளியில் எடுத்து வந்தன. அந்த நிலையில், ராஜபக்சகளை ஆதரித்த அதே அளவு தீவிரத்துடன் அவர்களை எதிர்க்கவும் தொடங்கினார்கள். சுருக்கமாகச் சொன்னால் 2019 இல் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய படித்த சிங்கள நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பல இலட்சக்கணக்கில் இப்பொழுது திசைகாட்டியின் பக்கம் வந்திருக்கிறார்கள். இந்த அலை ‘கம்யூனிஸ்ட் / சோஷலிச ஆதரவு அலை அல்ல’. என்பதை முதலில் சொல்ல வேண்டும். அநுர குமாரவும், அந்த அணியின் ஏனைய தலைவர்களும் (குறிப்பாக லால் காந்த போன்றவர்கள்) அதனை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஜேவிபி / என்பிபி மேடையில் கழுத்துப்பட்டி அணிந்த கனவான்கள் ஏராளம் பேர் உட்கார்ந்திருக்கும் காட்சி மற்றொரு சுவாரஸ்யம். யுஎன்பி மற்றும் லங்கா சுதந்திர கட்சி போன்ற பாரம்பரிய கட்சிகளின் பிரச்சார மேடைகளில் கூட முன்னர் அந்த மாதிரியான காட்சிகள் தென்படவில்லை. கட்சிக்கு ஒரு கண்ணியமான, மத்திய தர வர்க்க முகத்தோற்றத்தை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தின் குறியீடு அது. ஒரு பெரும்போக்கு அரசியல் கட்சியாக (Mainstream Political Party) மாற்றமடைவதற்கு ஜேவிபி செலுத்தியிருக்கும் விலையே என்பிபி அணியின் இணைப்பு. 1971 மற்றும் 1987 – 1989 ஜேவிபி கிளர்ச்சிகளின் போது நிலவிய இலங்கை சமூகம் – குறிப்பாக சிங்கள சமூகம் – இப்பொழுது பெரும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்கின்றது. நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும் புதிய மத்திய தர வர்க்கத்தினர் எழுச்சியடைந்திருக்கிறார்கள். இன்றைய இலங்கையின் நுகர்வு கலாசாரத்தின் பிரமாண்மான வளர்ச்சியின் பின்னணியில் இருந்து வருபவர்கள் அவர்கள். முன்னைய தலைமுறைகளிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்ட அபிலாஷைகளை கொண்டிருப்பவர்கள். இலங்கை பொது சமூகத்தில் 2022 இன் பின்னர் ஓங்கி ஒலித்து வரும் -‘உடனடியாக எமக்கொரு System Change தேவை’, ‘225 பேரையும் துரத்தியடிப்போம்’ போன்ற கோஷங்களை இச்சமூகப் பிரிவினரே கையில் எடுத்திருக்கிறார்கள். காலிமுகத்திடல் அறகலய பூமியில் குமார் குணரத்னத்தின் ‘பெரட்டுகாமி’ கட்சியினால் முன்வைக்கப்பட்ட சுலோகங்கள் அவை. ஒரு விதத்தில், தீவிர கம்யூனிஸ்டுகள் காண விழையும் சமூக மாற்றத்தை வலியுறுத்துபவை. ஆனால், இன்றைய இலங்கையில் அச்சுலோகங்கள் அதே அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இங்கு முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டும். இந்தக் கோஷங்களை முன்வைத்து வருபவர்கள் எதிர்பார்க்கும் உண்மையான ‘System Change’ எது? இன்றைய ஊழல் அரசியல்வாதிகளை பிரதியீடு செய்யும் பொருட்டு எந்த வகையான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? அவர்களுடைய ஆதர்ச புர்ஷர்கள் யார்? தனது முறை வரும் வரையில் பொறுமையுடன் கியூ வரிசையில் காத்திருக்கும் ஒரு ஜனாதிபதி. போக்குவரத்து விதி மீறலொன்றை இழைத்து விட்டு அதற்கு அபராதம் செலுத்தும் ஒரு பிரதம மந்திரி. தனது பிள்ளையை பொறுப்புடன் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தையான ஒரு அரச தலைவர் போன்றவர்களை காட்டும் காணொளிகளை புதிய தலைமுறையினர் பிரமிப்புடன் பார்க்கிறார்கள். தமது ஆதர்சங்களாக அவர்களை கொண்டாடி வருகிறார்கள். ஆனால், மேற்படி உதாரணங்கள் அனைத்தும் லிபரல் ஜனநாயக நாடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது தான் இங்குள்ள சுவாரஸ்யம். ஊழல், முறைகேடுகள் இல்லாத எவருக்கும் பாரபட்சம் காட்டாத அரச நிர்வாக கட்டமைப்புக்களுக்கான ஆதர்சங்களாகவும் இந்த மேலைய லிபரல் ஜனநாயக நாடுகளையே இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். “நான் சுதந்திரத்திற்கு முன்னர் பிறந்தவன். வாழ்நாள் முழுவதும் ஒரு தேசாபிமானியாகவே இருந்திருக்கிறேன். எனது வாழ்க்கையின் முதல் 75 ஆண்டுகளை இந்த மண்ணிலேயே கழித்தேன். ஆனால், இங்கு வாழ முடியாத நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் எனது பிள்ளைகள் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார்கள். அவர்களுடைய வற்புறுத்தலின் பேரில் பின்னர் நானும் அங்கு சென்றேன். இரு நாடுகளையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது தான் நாங்கள் எந்த அளவுக்கு சீரழிந்தவர்களாக இருந்து வருகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்கிறார் 1971 ஜேவிபி கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு முன்னணி சிங்கள நாடகக் கலைஞர். மேற்படி கூற்று இன்று ஜேவிபி / என்பிபி அணியின் பின்னால் திரண்டிருக்கும் சிங்கள மத்திய தர வர்க்கத்தினரின் மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் என்பவற்றின் துல்லியமான ஒரு பிரதிபலிப்பு எனச் சொல்லலாம். சரியாகச் சொன்னால் இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் அவர்கள் ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. இவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் நவ லிபரல் பொருளாதாரத்தின் ஆதரவாளர்கள். ஆகவே, இந்தப் பின்னணியில், அவர்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி வைக்கும் விடயத்திலும், அவர்களை தமது அணிக்குள் தக்க வைத்துக் கொள்ளும் விடயத்திலும் ஒரு எதிர்கால ஜேவிபி / என்பிபி அரசாங்கம் கடும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. (வெற்றியின் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவாக இருந்து வந்த போதிலும்) ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார வெற்றியீட்டினால் அது சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய மாற்றமாக (Paradigm Shift) வரலாற்றில் பதிவு செய்யப்படும். மறுபுறத்தில், ஜேவிபி/என்பிபி வேட்பாளர் தோற்றாலும் கூட, அதனை அந்த அணி எதிர்கொண்ட ஒரு பின்னடைவாக கருத வேண்டியதில்லை. ஏனென்றால், வாக்குகளின் அடிப்படையில் அது நிச்சயமாக நாட்டின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாக எழுச்சியடைந்திருக்கும். அந்த மாற்றமும் இலங்கை அரசியலுக்கு இதுவரையில் இல்லாத ஒரு புதிய இயங்கியலை (Dynamics) எடுத்து வர முடியும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/177051 point- கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு- கண்ணீர் விட்டு கதறும் தாய்
முஸ்லீமுக்கு வந்தால் இரத்தம், தமிழனுக்கு வந்தால்... தக்காளி சட்னி. 😂1 point- வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
1 pointபல நேரங்களில் நாம் சாக நினைத்தாலும் சாக முடியாது. ஏனென்றால் விதி வலியது.1 point- முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
இப்படி வாக்கு அளிக்கும் போது,..... கள்ள வாக்களிக்க வாய்ப்புகள் உண்டு” அதாவது இரண்டாவது மூன்றாவது தெரிவு 🙏1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Santhosh Balaji Rajagopal 2 j · ஏண்டா GOAT படத்துல விஜய்க்கி dual ரோல் அப்ப தாங்க ஹீரோ திறமை உலகத்துக்கு தெரியும் எதுக்குடா திருஷா டான்ஸ் ஆதி காலத்து ஃபேன்ஸ்சையும் பாக்கணும்ல எதுக்குடா சிவகார்த்திகேயன் இப்ப எல்லாம் கேமியோ ரோல் தான் ட்ரெண்ட் , வேணும்ல எதுக்குடா மோகன் பழய ஆள் ரீஎன்ட்ரி கொடுத்தா மார்க்கெட்க்கு உதவும்ல எதுக்குடா விஜயகாந்து ஏத்தி விட்ட ஏணிக்கு ஒரு நன்றி சொல்லணும்ல எதுக்குடா ஸ்னேகா? குடும்பபாங்கான நபர்னு ஹீரோவை நம்பணும்னா, இது ஒரு ஆப்சன் தான் எதுக்குடா இன்ட்ரோல ட்ரைன் பைட்? ரொம்பநாளா ட்ரைன் பைட் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை இருந்துச்சு, என்னோட கனவையும் பார்க்கணும்ல எதுக்குடா குட்டி விஜயை கொன்னாரு தப்பு செய்யிறது மகனா இருந்தாலும் கொன்னிடுவார், அவர் ஒரு ஸ்ட்ரிக்ட் மனுநீதி சோழன்னு சொன்னா தானே, அரசியலுக்கும் உதவும் எதுக்குடா கயிறு கட்டி ஏறிட்டு இருக்கும் போது, மளிகை சாமானம் வாங்குற சீன் காமெடினு ஒண்ணு திருஷ்டிக்கு வேணும்ல எதுக்குடா பிரசாந்து சக ஹீரோவுக்கு வாய்ப்பு கொடுப்பதில் வல்லவர்னு ஊருக்கு தெரியணும்ல எதுக்குடா பிரபுதேவாவை வில்லன் ஆக்குனிங்க படத்துல துரோகி வேணும், கூடவே இருகிறவன் திடீர்னு கெட்டவன் ஆனா தான் , மக்களுக்கு ஒரு டிவிஸ்ட் , இப்படி பேசிட்டு இருந்தோம், மும்பைல எனக்கு சல்மான்கான்க்கு டான்ஸ் சொல்லி ஆட வெச்சு சூட் பண்ணனும், நீங்க வேணா எண்ணெயை துரோகி ஆக்கி, கொன்னுட்டா, நான் நாளைக்கே மும்பை போய்டுவேன்னு , voluntary யா கேட்டாருங்க, இதுகூட நல்லா இருக்கேனு நாங்க வெச்சுட்டோம் எதுக்குடா ஹீரோயினை கொன்னீங்க சும்மாவே சுத்திகிட்டு இருந்துச்சு, கொன்னா சிம்பத்தி வருதானு பார்த்தோம் , ஆனா வரல எதுக்கு டி ஏஜிங்? என்னோட பிரெண்ட்ஸ் vfx பழகிட்டு சும்மா தான் இருக்கேன், வாய்பு கொடுனு சொன்னான், சரி பழகட்டும் புது டெக்னு செஞ்சோம் எதுக்கு குட்டி விஜயை கொஞ்ச நேரம் நல்லவனா காட்டுனீங்க ரெண்டு விஜய்யும் சேர்ந்து, எதிரியை பொளந்து கட்ட போராங்னு ஆடியனுசுக்கு டிவிஸ்ட் எதுக்கு படத்துக்கு GOAT னு டைட்டில் இது ஒரு இண்டெர்நெஷலல் பிலிம் மாறி வரும்னு விஜய்யை நம்ம வெச்சா தான் வாய்பு கிடைக்கும்னு வெச்சது பாம் வெக்கிறதுனு முடிவு செஞ்சிங்க ஓகே, அது எதுக்கு csk மேட்ச் நடக்கிற கிரவுண்டுல வைக்கிறது ஊருல டோனி fans நிரய இருக்காங்க, நீங்க வந்தா மட்டும் போதும்னு ஒரு பெரும் கூட்டம் அலையுது, ஈசியா ஏமாறுறது அந்த மஞ்ச மாக்காணுங்க தான், டோனி வேற உள்ள இருக்கார், வில்லன் வேற பாம் வெச்சுட்டான், டோனிக்கு என்ன ஆகுமோனு பதட்டம் அவங்களுக்கு உருவாகி , கடைசில பாம்மை விஜய் டிப்யூஸ் செஞ்சா, படமும் ஹிட் ஆகும், மாக்கான்ஸ் மனசுல விஜய்க்கு ஒரு இடம் கிடைக்கும்னு வெச்சோம்......! Voir la traduction1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து
நிறைய களப்புக்கள், குடாக்கள், முனைகள் எல்லாம் ஒருங்கமைந்த கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த நல்லதொரு திட்டம் போல் தோன்றுகின்றது. நல்ல பறப்பிற்கும், பயண அனுபவத்திற்கும் காலநிலையும் இடம்கொடுக்க வேண்டும். கட்டண விபரத்தை அறிய ஆவல். வெளிநாட்டு சுற்று பயணிகள் முக்கியமாக எங்கள் வெளிநாட்டவர் நிச்சயம் இந்த சேவையை பெற்றுக்கொள்வார்கள். சாமத்தியவீட்டு, கலியாணவீட்டு சூட்டிங்க் பார்ட்டிகளுக்கு விலைக்கழிவு கொடுக்கலாம். 😁1 point- வாழை விமர்சனம்: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன?
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான் சிறுவன் சிவனணைந்தான் (பொன்வேல்). அவன் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே விஷயம் வாழைத்தார் சுமப்பது. வறுமையான குடும்பம், அப்பா இல்லை, வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத்தார்களை சுமக்க செல்கிறான். அதனால் இரவில் வலியால் துடிக்கிறான். வாழைத்தார் சுமக்கும் அவனது ‘கனமான’ வாழ்க்கையை இலகுவாக்குவது பூங்கொடி மிஸ் (நிகிலா விமல்). இப்படியாக கறுப்பு பக்கங்களும், நடுவே சில ‘கலர்ஃபுல்’ பக்கங்களும் சிவனணைந்தான் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன. இதனிடையே, அதே ஊரில் வாழைத்தார் சுமக்கும் கனி (கலையரசன்) ஊதிய உயர்வு கேட்டு ஆட்களை திரட்டி போராடுகிறார். ஒருவகையில் அதற்கு ஒப்புக்கொள்ளும் முதலாளி, மற்றொருபுறம் ஆபத்தில் சிக்க வைக்கிறார். அது என்ன? சிவனணைந்தானுக்கு வாழை சுமப்பத்திலிருந்து விடுதலை கிடைத்ததா என்பது திரைக்கதை. தன் வாழ்வின் உச்சபட்ச அழுகையின் தருணங்களையும், மகிழ்ச்சியின் நினைவுகளையும் ஒரு சேர கோத்து ‘உணர்வுபூர்வமான’ படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சொற்ப கூலிக்காக, உயிர்கொடுத்து வாழைத்தாரை சுமந்து செல்லும் அம்மக்களின் வாழ்வியலையும், அது சிறுவனின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சமரசமின்றி அழுத்தமாக பதிவு செய்கிறது படம். அதேசமயம் கண்ணீர் மழையை பொழியும் காட்சிகளை உருக்கி உருக்கி வடிக்காமல், வெகுஜன ரசனையை ஈர்க்கும் படத்தின் திரைமொழி கவனம் பெறுகிறது. சிவனணைந்தான் மற்றும் அவனது நண்பனுக்கு இடையிலான நட்பு, ரஜினி, கமல் ரெஃபரன்ஸ், “நம்மூர்ல ரஜினி படம் தான் ஓடுது. கமல் படம் எங்க ஓடுது” என்ற வசனம், அதையொட்டிய காட்சிகள், ‘பூவே உனக்காக’, ‘பிரியமுடன்’ போஸ்டர்கள், கர்சீஃப் காட்சி என ஜாலியாக நகரும் படத்தின் தொடக்கம் ரசிக்க வைக்கிறது. தனக்கு பிடித்த ஆசிரியை மீது அந்தப் பருவத்தில் விளையும் ஈர்ப்பை எந்த வகையிலும், கொச்சையாகவோ, மிகைப்படுத்தியோ சொல்லாமல் மிக கவனமாக நேர்த்தியாக கையாண்டியிருப்பது பாராட்டுக்குரியது. நிகிலா விமலிடம், மாணவன், “நேத்து எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க டீச்சர். இன்னைக்கு அக்கா மாதிரி” என சொல்லும் வசனம் அழகு! இதற்கு மறுபுறம், மற்றொரு காதலையும், மெல்லிய உணர்வுடன் 2 ரெட்ரோ பாடல்களின் வழியே கடத்தியிருந்தது அட்டகாசமான திரையனுபவம். கொத்தடிமை வாழ்க்கை, ஒரு ரூபாய் கூலி உயர்வு போராட்டம், அதனால் ஏற்படும் இழப்பு, இடைத்தரகர்களின் வஞ்சகம், கம்யூனிஸ்ட், அம்பேத்கர் குறியீடுகள் என உழைக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிய வைக்கிறது படம். எல்லாவற்றையும் தாண்டி கட்டிப்போட்டு உலுக்கும் இறுதிக் காட்சியின் தாக்கத்தை படம் முடிந்தும் உணர முடிகிறது. மாரி செல்வராஜின் ‘உருவக’ காட்சிகளின் டச் இப்படத்தில் நிறைந்திருக்கிறது. தேர்ந்த கலைஞர்கள் கூட தோற்றுப்போகும் அளவுக்கு, வலி, வேதனை, கண்ணீர், தாயிடம் கெஞ்சி மன்றாடுவது, களைப்பினால் சோர்ந்து வீழும் இடம் என உணர்வுகளை நடிப்பில் வரித்து மிரட்டியிருக்கிறார் சிறுவன் பொன்வேல். உற்ற தோழனாக, டைமிங்கிலும், யதார்த்தமான நடிப்பிலும் ஈர்க்கிறார் மற்றொருவர் சிறுவன் ராகுல். பால்ய கால ஆசிரியரை நினைவூட்டும் நிகிலா விமல், க்ளோசப் ஷாட்களில் முகத்தில் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி, இனம்புரியா உணர்வுகளைக் கொண்ட சிறுவனை ‘ஹேண்டில்’ செய்யும் முறையில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆக்ரோஷமான இளைஞனாக கூலிக்காக போராடும் கலையரசன், வாழைத்தாரை தாங்குவது போல கதாபாத்திரத்தை நேர்த்தியாக தாங்கி கிராமத்து பெண்ணாக ஈர்க்கும் திவ்யா துரைசாமி கச்சிதமான தேர்வு. சிறுவனின் தாயாக நடித்துள்ள ஜானகி இறுதிக்காட்சியில் அட்டகாசமான நடிப்பால் பாரத்தை இறக்கிவிடுகிறார். அவருக்கு தனி பாராட்டுகள்! கமல் குறித்து பேசும் காட்சியில், ‘நாயகன்’ பட இசையை மெல்லிதாக ஓட விடுவது, உருக்கமான காட்சிகளுக்கு உயிரூட்டி உணர்வுகளாக்கியிருப்பது, தேவையான இடங்களில் அமைதியின் வழியே அழுத்தம் சேர்ப்பது என சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் மிரட்டுகிறார். ‘தென்கிழக்கு தேன் சிட்டு’, ‘பாதவத்தி’ பாடல்கள் சிறப்பு. கறுப்பு வெள்ளையிலும், ஷில்அவுட்டிலும் காட்சிகளை நனைத்து, மூச்சிறைக்க ஓடும் சிறுவனின் உணர்வுகளை கடத்தி, மாரி செல்வராஜின் நினைவுகளுக்கு உயிரூட்டுகிறது தேனி ஈஸ்வரின் கேமரா. ஒலிக்கலை நேர்த்தி. பொறுமையாக நகரும் கதை தான் என்றாலும் எங்கேயும் அயற்சி ஏற்படுத்தாமல் சுவாரஸ்யமாக கடப்பது பலம். மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் காட்சிகள் சுற்றுவதாக சிலருக்கு தோன்றலாம். வெறும் வலியை மட்டும் திணித்து கடத்தாமல், வெகுஜன ரசனையிலும், திரை அனுபவத்திலும் கவனம் செலுத்தியிருக்கும் உன்னதமான இப்படம் இறுதியில் உங்களை ஆட்கொள்ளும். வாழை Review: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன? | mari selvaraj directorial Vaazhai movie review - hindutamil.in1 point- கருத்து படங்கள்
1 point- வடக்கு கிழக்கு இணைக்கப்படாது;நாமல் உறுதி
1 point- "அமைதியின் கதவு திறக்கட்டும்"
1 pointஇன்றைய ஜெ.வி.பியை நினைக்க வைக்கிறது இந்த வசனம் பகிர்விற்கு நன்றிகள்1 point- ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
நல்லதொரு பகிர்வு கொழும்பான் 👍1 point- ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் இரண்டு பகுதியும் தங்களின் அரசியல் இருப்புக்கு இனம்களின் சந்தேகத்தை நீக்காமல் இனவாதத்தை வளர்த்து விட்டு இன்று இரண்டு பகுதியுமே வெளிநாடு என்று ஓடித்தப்புகின்றனர் .1 point- சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
என்னுடைய பெற்றோர் பொதுவேட்பாளருக்கு போடுவதாக இருக்கிறார்கள். ஏனைய நண்பர்களிடம் விசாரித்து சொல்கிறேன் அண்ணை.1 point- சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
ஆகவே தமிழர் வாக்குகளை சிதறாமல் ஒன்றாக கட்டி……….1 point- கருத்து படங்கள்
1 point- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
1 pointரீவீக்கு…. துவாயை போர்த்து, கமலாவின் முகத்தை மறைத்த ட்ரம்பின் தீவிர ரசிகர். 😂1 point- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
1 point🤣.......... அப்படி இல்லை, அண்ணா. நூறு சண்டைகள் உலகத்தில் இப்ப நடந்து கொண்டிருந்தாலும், இந்த ஒரு சண்டையில் தானே இரு வல்லரசுகள் கிட்டத்தட்ட நேருக்கு நேரே மோதிக் கொண்டிருக்கின்றன. ஆயுதப் பாவனைகளில் ஒவ்வொரு படியாக இருவரும் மேலே மேலே போய்க் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவின் அதி தூர ஏவுகணைகளை பாவிப்பதற்கு அமெரிக்கா உக்ரேனுக்கு அனுமதி கொடுப்பது அடுத்த கட்டம். அப்படி நடந்தால், அழியப் போகின்றார்கள். மேலும் ரஷ்யாவிடமிருந்தும், உக்ரேனிடமிருந்தும் உலகத்திற்கு தேவையானவை அதிகம் - தானியங்கள், எரிபொருள் உட்பட. இவை உலகச் சந்தையில் கட்டுப்படியாகும் விலைக்கு கிடைக்கா விட்டால், இன்னும் எத்தனை நாடுகளில் 'அரகலிய' ஆரம்பித்து அமைதி கெடுமோ............1 point- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
1 pointஅதில ஒராள நான் பாக்கவேயில்லை....1 point- கருத்து படங்கள்
1 point1 point- வாழை விமர்சனம்: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன?
"அப்பா நாங்கள் accidents இல் ஒருவர் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன், அவர் பாவம் என்று கடந்து விடுகின்றோம்... ஆனால் அவருக்கு பின்னால் அவர் அம்மா, அக்கா, அப்பா, பிரெண்ட், என்று எத்தனை பேர் துடிதுடித்து போவினம் என்று நாங்கள் நினைப்பதே இல்லை" என் மகள் இப் படம் முடிந்த பின் காரில் வரும் போது கூறியது. நேற்று மகளையும் கூட்டிக் கொண்டு மாரி செல்வராஜின் வாழை படம் பார்க்க போனோம். உன்னதமான திரைமொழியில், மிகச் சிறந்த உடல் மொழியில், நடப்பவற்றை சினிமா என நம்ப முடியாத காட்சிகளில், உயிரோட்டமான இசையில், பதைக்க வைக்கும் கிளைமாக்ஸில் வாழை எம் முன் விரிகின்றது. சிவனணைந்தான் எனும் சிறுவனின் பார்வை மற்றும் அனுபவத்தின் வாயிலாக வாழை ஒரு கிராமத்தில் கூலிக்காக சுரண்டப்படும், அதனை கேள்வி கேட்கும் சாதாரண மனிதர்களின் நாளாந்த கடின வாழ்வை பேசுகின்றது. குலை குலையாக வாழை குலைகளை சுமந்து வியாபாரிகளுக்காக உழைக்கின்ற ஏழைகளுக்கு கடும் பசியில் கூட ஒரே ஒரு வாழைப்பழத்தை சாப்பிட தானும் கொடுக்க மறுக்கும் உலகை மிக இயல்பாக வாழை காட்டுகின்றது. பதின்ம வயதில் ரீச்சர் மேல் வரும் ஈர்ப்பை கவிதையாக காட்டிய விதமும் அருமை. கொஞ்சம் கூட தனக்கு சம்பந்தம் இல்லாத, கேள்விப்படாத, கற்பனை செய்ய முடியாத, மாந்தர்களின் வாழ்வைஎ என் மகளுக்கு கூட உணர்வு பூர்வமாக புரிய வைக்கிறது மாரி செல்வராஜின் திரைமொழி. பல நாட்களுக்கு சிவனணைந்தான், அவன் காதல், அவனது அக்கா, சுற்றம், நட்பு, கிராமம், மாடு, அந்த கோழி எல்லாம் என் நினைவுகளை விட்டு அகலாது..1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.