Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  2. வாலி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5063
    Posts
  3. MEERA

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5418
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2951
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/14/24 in all areas

  1. அடுத்த அதிபர் அநுரகுமார தான். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கை வாழ் மக்களனைவரும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த இடைக்கால அமைச்சரவையில் வடக்கைச் சேர்ந்தவர்களும் அமைச்சராவார்கள். அதன்படி திரு சிறீதரன் அவர்கள் திருக்குறள், திருக்குறள் அபிவிருத்தி மற்றும் பேச்சுப்போட்டி அமைச்சராக வரவாய்ப்பு உள்ளது!
  2. எனக்கு இப்படியான இடங்களில் எழுதுவதற்கு அறவே பிடிப்பதில்லை..ஆனாலும் நீங்களும் ஒரு தந்தையாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் எழுதுவதை நினைக்கும் போது வெறுப்பாக இருக்கிறது.கருத்துக்களத்தில் இது எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மட்டும் யாரும் சொல்லாதீர்கள்.
  3. ஸ்ரெபான் ராப் ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளராக யேர்மனியில் அறியப்பட்டவர். பாடல்கள் இயற்றுவது இசை அல்பங்களைத் தயாரித்து வெளியிடுவது, பாடுவது, நகைச்சுவை நிகழ்ச்சிகள் செய்வது என மேலும் பல விடயங்களில் தன்னை வெளிக்காட்டியவர். பெண்களுக்கான குத்துச் சண்டையில் யேர்மனியில் முன்னணியில் இருந்த ரெஜினா ஹால்மிஸ்ஸை இவர் நகைச்சுவையாக விமர்சிக்கப் போய், அது இருவரையும் குத்துச் சண்டை வளையத்துக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. ரெஜினா ஹால்மிஸ், தனது வாழ்நாளில் சந்தித்த 56 குத்துச் சண்டைப் போட்டிகளில் 54 தடவைகள் வெற்றியையும் ஒரே ஒரு தடவை தோல்வியையும் ஒரு தடவை சமநிலையையும் தழுவிக் கொண்டவர். “பெண்ணோடு மோதுவது என்ன பெரிய வேலையா?” என்று நினைத்து ரெஜினா ஹால்மிஸ்ஸுடன் 2001ஆம் ஆண்டு குத்துச் சண்டைக்குப் போன ஸ்ரெபான் ராப், தோற்றுப் போனார். மூக்குடைபட்டு இரத்தம் வழிய அவர் இருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் அடுத்த நாள் ஊடகங்களில் வெளிவந்ததில் அவர் பெருத்த அவமானங்களுக்கு ஆளானார். ‘ஒரு பெண்ணிடம் தோற்பது எவ்வளவு அவமானம்? அவளை வென்றே தீருவேன்’ என்ற அவரது வீராப்பு மீண்டும் ரெஜினா ஹால்மிஸ்ஸை 2007இல் மோத அழைத்தது. இம்முறை நடந்த குத்துச் சண்டையில் ஸ்ரெபான் ராப்புக்கு மூக்கு உடைபடவில்லை ஆனாலும் தோற்றுப் போனார். ஸ்ரெபான் ராப் ஊடகங்களுடான தனது தொழிலை 2015 இல் நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர் பொது வெளியில் வந்ததில்லை. திடீரென இப்பொழுது ஊடகங்களில் அடிபடத் தொடங்கியிருக்கிறார். “நான் ரெஜினா ஹால்மிஸ்ஸுடன் மோதத் தயார்” என அறிவித்திருக்கிறார். ஸ்ரெபான் ராப்புக்கு இப்பொழுது வயது 57. ரெஜினா ஹால்மிஸ்ஸுக்கு 47 வயது. ரெஜினா ஹால்மிஸ்ஸும் குத்துச் சண்டைப் போட்டியில் இருந்து 17 வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்று விட்டவர். ஆனாலும் ஸ்ரெபான் ராப்பின் சவாலை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இருவரும் நாளை இரவு (14.09.2024) டுசுல்டோர்ப் நகரத்தில் மோதப் போகிறார்கள். ரெஜினா ஹால்மிஸின் எடை 50கிலோ, ஸ்ரெபான் ராப்பின் எடை 80கிலோ. ரெஜினா ஹால்மிஸ் எடையில் மட்டுமல்ல உயரத்திலும் ஸ்ரெபான் ராப்பைவிடக் குறைவானவர். “ஒரு பெண்ணிடம் பொது வெளியில் தோற்றுப் போன ஸ்ரெபான் ராப்பின் மனதில் உள்ள வலி அவரை சும்மா இருக்கவிடவில்லைப் போலும். கடந்த ஒன்பது வருடங்களாக நல்ல பயிற்சிகள் எடுத்துவிட்டு இப்பொழுது மீண்டும் வந்திருக்கிறார். குத்துச் சண்டைகளில் 25 வருட அனுபவங்கள் எனக்கிருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்” என ரெஜினா ஹால்மிஸ் தெரிவித்திருக்கிறார். இந்தப் போட்டி நாளை யேர்மன் தொலைக்காட்சி( RTL)இல் 20.15க்கு நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. பார்க்கலாம்.
  4. ஆப்பிழு குரங்குகள் மற்றும் அப்பம் பிரிப்பு, பராமரிப்பு அமைச்சுப் பதவி ஏற்கனவே ரெடியாகிவிட்டதே!
  5. பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி - கடந்த ஆண்டு 656 அடி உயர மெகா அலைகள் எங்கே எழுந்தன? பட மூலாதாரம்,JEFF KERBY படக்குறிப்பு, கிரீன்லாந்தில் உள்ள ஃப்யோர்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஓர் அலையை தூண்டியது. கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, பிபிசி செய்திகள் - அறிவியல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரீன்லாந்தில் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் (Fjord) ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு, ஒன்பது நாட்களுக்கு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஒரு பேரலை உருவாக வழிவகுத்தது. இந்த நிகழ்வினால் ஏற்பட்ட நில அதிர்வு சிக்னல்கள், உலகம் முழுவதும் உள்ள சென்சார்களில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பதிவாயின. இந்த சிக்னல்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலச்சரிவின் போது ஒரு பனிப்பாறை உருகி அதன்மேலிருந்த மலை சரிந்து விழுந்தால், 200 மீட்டர் அளவிற்கு பேரலை எழுந்தது. குறுகலாக உள்ள ஃப்யோர்டு பகுதியில் இந்த அலை சிக்கிக்கொண்டு, ஒன்பது நாட்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தியது. காலநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்தில் உள்ள மலைகளை தாங்கிப் பிடிக்கும் பனிப்பாறைகள் உருகுகின்றன. இதனால் இது போன்ற நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மெகா சுனாமியின் தோற்றம் சர்வதேச விஞ்ஞானிகள் குழு மற்றும் டேனிஷ் கடற்படை இணைந்து இந்த நிகழ்வைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டன. அந்த ஆராய்ச்சி முடிவுகள் "சயின்ஸ்" இதழில் வெளியிடப்பட்டன. "கடந்த ஆண்டு இந்த சிக்னல்களை எனது சக பணியாளர்கள் கண்டறிந்த போது, அது பூகம்பம் போல் தெரியவில்லை. அந்த நேரத்தில், நாங்கள் அதை 'அடையாளம் தெரியாத நில அதிர்வு போல ஒன்று' என்று குறிப்பிட்டோம்", என்று இந்த விஞ்ஞானிகள் குழுவை சேர்ந்த ஒருவரும் லண்டன் பல்கலைக் கழக கல்லூரியை சேர்ந்தவருமான முனைவர் ஸ்டீபன் ஹிக்ஸ் நினைவு கூர்ந்தார். "ஒன்பது நாட்களுக்கு, ஒவ்வொரு 90 விநாடிகளுக்கு ஒருமுறை இது நிகழ்ந்தது". இந்த குழப்பமான சிக்னல் குறித்து விஞ்ஞானிகள் குழு இணைய தளத்தில் விவாதங்களை தொடங்கியது. "அதே நேரத்தில், கிரீன்லாந்தில் களப்பணி செய்து கொண்டிருக்கும் டென்மார்க்கை சேர்ந்த எனது சக பணியாளர்கள், ஃப்யோர்டு பகுதியில் தொலைதூரத்தில் சுனாமி ஏற்பட்டு இருப்பது குறித்த அறிக்கைகளை பெற்றனர். அதற்கு பிறகு தான் அவர்களுடன் நாங்களும் அப்பணியில் இணைந்தோம்", என்று முனைவர் ஹிக்ஸ் விளக்கினார். படக்குறிப்பு, டேனிஷ் ராணுவம் பகிர்ந்த டிக்சன் ஃப்யோர்டு பகுதியின் நிலச் சரிவு குறித்த புகைப்படம் இந்த குழு நில அதிர்வு குறித்த தரவுகளை பயன்படுத்தி இந்த சிக்னல்கள் கிழக்கு கிரீன்லாந்தில் உள்ள டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் இருந்து தான் வருகின்றன என்று கண்டறிந்தனர். இந்த சிக்னல்கள் தோன்றுவதற்கு முன்பு டேனிஷ் கடற்படையால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இந்த பகுதியின் செயற்கைக்கோள் படங்கள் போன்றவற்றை இந்த ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். ஃப்யோர்டு பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு மேல் தூசியாலான மேகம் சூழ்ந்திருப்பதை செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று காட்டியது. இந்த நிகழ்விற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்ததில், ஒரு மலை சரிந்து பனிப்பாறையின் ஒரு பகுதி தண்ணீருக்குள் அடித்துச் சென்றது தெரியவந்தது. 25 எம்பயர் ஸ்டேட் கட்டடங்களுக்கு சமமான அளவிலான 25 மில்லியன் கன மீட்டர் பாறையானது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதனால் தான் 200 மீட்டர் உயரத்தில் "மெகா சுனாமி" ஏற்பட்டது. இந்த நிகழ்விற்கு பின் எடுக்கப்பட்ட இப்பகுதியின் புகைப்படங்களில், எவ்வளவு உயரத்திற்கு அலை மேல் நோக்கி எழுந்துள்ளது என்பது குறித்து பனிப்பாறையில் ஏற்பட்ட குறியீடு மூலம் அறியலாம். பட மூலாதாரம்,COPERNICUS SENTINEL DATA, 2023/ESA படக்குறிப்பு, ஃப்யோர்டு பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு மேல் தூசியாலான மேகம் சூழ்ந்திருப்பதை செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று காட்டியது. 'அலையால் அதன் ஆற்றலைச் சிதறடிக்க முடியவில்லை' பொதுவாக நிலத்தடியில் ஏற்படும் நிலநடுக்கங்களால் பரந்த கடலில், அலை மேல் எழுந்து சுனாமி நிகழ்கின்றது. ஆனால் இப்பகுதி ஒரு குறுகிய நிலப்பரப்பு என்பதால் அந்த அலை சிக்கிக்கொண்டது. "இந்த நிலச்சரிவு பரந்த கடலில் இருந்து 200 கிலோமீட்டர் உள்ளே நடந்தது. மேலும் ஃப்யோர்டு நில அமைப்பு மிகவும் சிக்கலானது. எனவே அலையால் அதன் ஆற்றலைச் சிதறடிக்க முடியவில்லை", என்று முனைவர் ஹிக்ஸ் விளக்கினார். அலைகள் சிதறடிக்கப்படுவதற்கு பதிலாக, ஒன்பது நாட்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்தது என்பதை விளக்க இந்த குழு ஒரு மாதிரியை உருவாக்கியது. "நீண்ட காலமாக, இவ்வளவு பெரிய அளவில் நீர் எழுவதை நாங்கள் பார்த்ததில்லை" என்று முனைவர் ஹிக்ஸ் கூறினார். கிரீன்லாந்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், மலையின் அடிவாரத்தில் உள்ள பனிப்பாறை உருகியதால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,WIETER BOONE படக்குறிப்பு, அதிர்ஷ்டவசமாக நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் யாரும் இல்லை. "அந்த பனிப்பாறை தான் இந்த மலையைத் தாங்கிக் கொண்டிருந்தது. அது உருகி மெல்லியதாக மாறிய போது மலையை தாங்குவதை நிறுத்தியது. காலநிலை மாற்றம் இப்போது இந்த பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகின்றது", என்று முனைவர் ஹிக்ஸ் கூறினார். இந்த நிகழ்வு ஒரு தொலைதூர பகுதியில் நடந்தது. ஃப்யோர்டு பகுதியைக் காண சில ஆர்க்டிக் பயணக் கப்பல்கள் வருவதுண்டு. அதிர்ஷ்டவசமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்ட போது இந்த பகுதியில் யாரும் இல்லை. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் ஆர்க்டிக் பகுதியில் அதிகரித்து வருவதாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திற்கான தேசிய புவியியல் ஆய்வுகளின் (GEUS) முன்னணி ஆராய்ச்சியாளரான முனைவர் கிறிஸ்டியன் ஸ்வென்னெவிக் கூறினார். "ராட்சத, சுனாமியை உண்டாக்கும் நிலச்சரிவுகள், குறிப்பாக கிரீன்லாந்தில் அதிகரிப்பதை நாம் பார்க்க முடிகின்றது", என்று அவர் பிபிசி செய்திகளிடம் கூறினார். "இது போன்ற பாதிப்புகள் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் மட்டும் நிகழவில்லை. இந்த நிகழ்வு இது போல முன் நடந்திடாத அளவில் ஏற்பட்டு இருப்பதால் இது குறித்து மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது", என்றார். உலகெங்கிலும் புவியின் மேலோட்டை, காலநிலை மாற்றம் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை உணர்த்தும் முதல் நிகழ்வாக இந்த டிக்சன் ஃப்யோர்டு பகுதியின் நிலச் சரிவு இருக்கும் என்று முனைவர் ஹிக்ஸ் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cwylxn34qr0o
  6. நாவலர் மண்டபம் சைவம் சார்ந்த மண்டபம் சாதி சார்ந்தது அல்ல… தேர்தல் வேலைகளில் பணியாற்றுபவர்கள் அசைவ உணவை உள்ளே கொண்டு செல்வதை தவிர்ப்பதற்காகவே இந்த வேண்டுகோள். இங்கு கருத்து எழுதியவர்களுக்கோ அல்லது விருப்புக் குறி இட்டவருக்கோ காரணம் தெரியாது.
  7. நன்றி சுவியர். 🙂 நன்றி நிலாமதி அக்கா. 🙂 நன்றி கவி அருணாசலம். 🙂 Top Posters In This Topic தமிழரசு1276 posts தமிழ் சிறி1004 posts நவீனன்510 posts nunavilan 366 posts நன்றி குமாரசாமி அண்ணை. பல கருத்துக்கள் பதியப்பட்ட அனைத்து பிரபலமான திரிகளினதும் பக்கத்தின் ஆரம்பத்தில் வலப் பக்கத்தில் காட்டுகின்றது.
  8. வடமாகாண அபிவிருத்தி அமைச்சர் என சொன்னால் குறைந்தா போய்விடியல்😅...மலையக தமிழ் பிரதிநிதிகள் ஏறகனவே அமைச்சரா இருக்கின்றனர் ..அன்றைய தொன்டமானிலிருந்து இன்றைய தொண்டமான் வரை..... அதாவது இன்று இந்தியாவுக்கு தேவை முழு சிறிலங்காவும் தனது ஆட்சியின் கீழ் இருக்க் வேணுமென நினைக்கின்றனர் ...தமிழர்கள் ,தமிழ் மொழி பேசும் மாகாணங்கள் இலங்கையில் இல்லைஎன்பதை உலகறி செய்ய முழு மூச்சாக செயல் படுகின்றனர்
  9. நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் அய்யாவுக்கு என்ன அமைச்சர் பதவி என்று கேட்கலாமா அவர் தான் துணை ஜனாதிபதி
  10. நெஞ்சார்ந்த நன்றிகள். விழிப்பாக இருக்கிறீர்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
  11. பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு, தலைவெட்டி முனியப்பனாக மாற்றப்பட்ட புத்தர் சிலை கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 59 நிமிடங்களுக்கு முன்னர் 2022-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக தமிழ் பௌத்தர்கள் கருதுகின்றனர். சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் வழிபடப்படும் முனியப்பன் சிலை, உண்மையில் புத்தர் சிலை என்பது தான் அந்த தீர்ப்பு. ஆனாலும், தீர்ப்பு வந்த 2 வருடங்கள் கழித்து, தற்போது தான் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் பௌர்ணமி நாளன்று மட்டும் பௌத்த முறைபடி வழிபாடு தமிழ் பௌத்தர்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். பௌத்த வழிபாடு தொடங்கினாலும், மற்றொரு தரப்பினர் அந்தச் சிலை தலைவெட்டி முனியப்பன்தான் என்று தொடர்ந்து வாதிடுகின்றனர். புத்தர் சிலை என்று வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை மட்டுமே பௌத்த வழிபாடு உயர் நீதிமன்றம் தீர்ப்புக்குப் பிறகு, மாதம் ஒருமுறையாவது வழிபாடு நடத்த உரிமை வழங்க வேண்டும் என்று மாவட்ட சிறுபான்மை நல அலுவலகத்தில் சேலம் புத்தர் அறக்கட்டளை அறங்காவலர் எம்.ராம்ஜி வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில், ஜூலை மாதம் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலைவெட்டி முனியப்பனாக அலங்கரிக்கப்பட்டிருந்த சிலையின் அலங்காரம் அனைத்தும் நீக்கப்பட்டு புத்த மத வழிபாடு முதன்முறையாக ஜூலை 21ம் தேதி நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி அன்று புத்த பிக்குகளுடன் இந்த வழிபாடு நடத்தப்பட்டது. “பல்வேறு அலுவலகங்களுக்கு கடிதம் எழுதிவிட்டோம். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு எங்களுக்கான நியாயத்தைப் பெற்று தரவேண்டும் என்று எவ்வளவோ போராடிவிட்டோம். 2011ம் ஆண்டு ஆரம்பித்த சட்டப் போராட்டத்தில் ஓரடி எடுத்து வைக்கவே எங்களுக்கு 13 ஆண்டுகள் ஆகிவிட்டன,” என்கிறார் ராம்ஜி. முதலில் நீதிமன்ற உத்தரவின்படி அங்குள்ள இந்து அறநிலையத்துறையின் பலகை நீக்கப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பௌத்தர்களின் உரிமைகளை நிலைநாட்ட இந்து அறநிலையத்துறை உதவவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைக்கிறார். வருகின்ற நாட்களில் இந்தக் கோவிலில் திருவிழாக்கள் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் மத்தியில் நன்கொடை பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு, ஜூலை மாதம் பௌர்ணமி நாளன்று முனியப்பன் அலங்காரம் கலைக்கப்பட்டு புத்தராக வழிபடப்பட்ட சிலை இந்து சமயத்தவர் கூறுவது என்ன? கோவிலில் பௌத்த மதத்தினர் வழிபாடு நடத்தியது குறித்துப் பேசிய அந்தக் கோவில் அர்ச்சகர் முனுசாமியின் மனைவி சாந்தி, தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். "என்னுடைய மாமனார், அவரின் அப்பா என்று கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாக நாங்கள் தான் இந்தக் கோவிலில் பூஜைகள் நடத்தி வருகிறோம். தற்போது அந்தச் சிலையின் தலையில் இருக்கும் சில வடிவங்களை பார்த்துவிட்டு அவர்கள் புத்தர் சிலை என்று கூறுகின்றனர். ஆனால் இங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இது முனியப்பன் கோவில் தான். இது இந்துக் கோவில் தான் என்று மேல்முறையீடு செய்திருப்பதாக இந்து அறநிலையத் துறையினர் குறிப்பிடுகின்றனர். என்ன நடக்கிறது என்று பொறுமையாக தான் பார்க்க வேண்டும்," என்று சாந்தி கூறினார். இந்து சமய அறநிலையத்துறை பதில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணைய அலுவலகம் அனுப்பிய எழுத்துப்பூர்வமான பதிலில், "தலைவெட்டி முனியப்பன் திருக்கோயில் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆணையர் மற்றும் திருக்கோயில் தக்கார் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, எண்ணிடப்படாமல் நிலுவையில் உள்ளது. மேற்படி வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் முடிவுக்கு பின்னரே மேல் நடவடிக்கைகள் தொடரக்கூடிய நிலை உள்ளது," என்று தெரிவித்துள்ளது. பிபிசியிடம் பேசிய சேலம் மாவட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், "பல ஆண்டுகளாக இந்த சிலை முனியப்பனாகவே மக்கள் மத்தியில் வழிபட்டு வருகிறது என்பதாலும் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு அளித்துள்ளோம்" என்று தெரிவித்தனர். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, தொல்லியல் துறையின் அறிவிப்பு பலகை தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் தெரிவித்தது என்ன? 2011-ஆம் ஆண்டு, அந்தப் பகுதியில் பணியாற்றி வந்த பி.ரங்கநாதன் என்பவரும், சேலத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் புத்தர் அறக்கட்டளையும், தலைவெட்டி முனியப்பனாக வணங்கப்பட்டு வரும் சிலை புத்தர் சிலை என்று கூறி வழக்கு தொடுத்தனர். நீண்ட நாட்கள் நடைபெற்று வந்த வழக்கில் திருப்பமாக அமைந்தது 2017-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. 2017-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி, உயர் நீதிமன்றம், மாநிலத் தொல்லியல் துறையினர் இந்தச் சிலையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி அன்று ஆய்வுகளை நடத்தி முடிவுகளை உயர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது மாநிலத் தொல்லியல் துறை. "அந்த புத்தர் சிலை தாமரை மலர் மீது புத்தர் இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் எந்தவித அலங்காரமும் இல்லை. கால் மீது கால் போட்டு, அர்த்த பத்மாசன நிலையில் உள்ளது. 108 செ.மீ உயரம் உள்ள சிலையின் அகலம் 58 செ.மீ. ஆக உள்ளது. கைகள் தியான முத்திரையில் உள்ளன. சுருள்முடியுடன் கூடிய லக்‌ஷண முத்திரையும், தலையில் உஷ்னிஷா எனப்படும் முப்பரிமாண கலசமும் இடம் பெற்றுள்ளது." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தொல்லியல்துறை அறிக்கையை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம், தலைவெட்டி முனியப்பனாக இந்தச் சிலையை வழிபடுவது தவறானது என்று தீர்ப்பு வழங்கியது. இந்து அறநிலையத்துறை அந்தக் கோயிலில் இந்து சமய வழிபாடு நடத்துவது தவறு என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. படக்குறிப்பு, சேலம் பெரியேரியில் தலைவெட்டி முனியப்பனாக வழிபடப்படும் சிலை பௌத்த மத வழிபாட்டு தலங்களை மீட்ட பின்பு என்ன செய்வது? "இங்கு பௌத்த மத வழிபாட்டுத் தலங்களை மீட்க வேண்டும் என்று பல பௌத்தர்கள் குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் மீட்கப்பட்ட பிறகு அந்த தலங்களை என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒரு தெளிவான முடிவு இல்லை. அது தான் தற்போது தலைவெட்டி முனியப்பன் கோவிலிலும் ஏற்பட்டுள்ளது," என்கிறார் துணைப் பேராசிரியரும், தமிழ் ஆராய்ச்சியாளருமான ஸ்டாலின் ராஜாங்கம். வேறொரு மத வழிபாட்டு முறையில் இருந்து சிலையை மீட்டு, அதனை என்ன செய்வது என்று தெரியாமல் விடும் பட்சத்தில் அந்தச் சிலை மீண்டும் கைவிடப்படும் சூழல் தான் ஏற்படும் என்கிறார் அவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் அவர், "இந்தச் சிலைக்குப் பின்னால் இருக்கும் வரலாறோ, பௌத்த மதம் இந்த மண்ணில் இருந்து எவ்வாறு நீங்கியது என்பது தொடர்பான வரலாறோ, பொதுமக்களுக்குத் தெரியாது. அவர்களைப் பொருத்தவரை இது அவர்களது குறைகளைப் போக்கும் ஒரு நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு தலம்," என்கிறார். "எடுத்தவுடன் அவர்களிடம் 'இது புத்தர் சிலை, எனவே நீங்கள் இங்கு இனி வரக்கூடாது' என்று கூறுவது சிக்கலை தான் உருவாக்கும். இரு பிரிவினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, எந்த வகையில் வழிபாடு நடத்தினாலும் அது நம்முடைய கடவுள் தான் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டும்," என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். "தொல்லியல் துறை, இந்து அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் போன்றவை புத்த பிக்குகளை அழைத்து வந்து இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசித்திருக்க வேண்டும்,” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பட மூலாதாரம்,MAHATHMA SELVAPANDIAN / FACEBOOK படக்குறிப்பு, சமண பௌத்தவியல் ஆய்வாளர் செல்வபாண்டியன் புத்தர் சிலைகள் என்ன ஆயின? சேலம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தர் மற்றும் ஜைன தீர்த்தங்கரர்களின் சிலைகள் சிறு தெய்வங்களின் சிலைகளாகவும், எல்லைக் காவல் தெய்வச் சிலைகளாகவும் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பல சிலைகள் கவனிப்பாரின்றி ஆங்காங்கே கைவிடப்பட்ட நிலையில் உள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலை பல்லவர்களின் காலமான கி.பி. 6 முதல் 9 வரை நடந்திருக்கலாம் என்று சமண-பௌத்தவியல் ஆராய்ச்சியாளர் செல்வபாண்டியன் கூறுகிறார். பக்தி இயக்கத்தின் காலமான இந்த காலத்தில் தான் பௌத்தம் தமிழ் மண்ணில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனது என்று அவர் தெரிவிக்கிறார். "மதங்களுக்குள் இருக்கும் பகைமை ஒரு காரணமாக இருந்தாலும், ஆட்சியாளார்கள் பின்பற்றும் சமயங்களும், அந்த சமயப் பணிகளுக்காக வழங்கப்பட்ட நன்கொடைகளும் இதர சமயத்தை பின்பற்றும் நபர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களும் இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது," என்கிறார் செல்வபாண்டியன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், "மக்களிடம் வரலாறு குறித்த விழிப்புணர்வும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் குறைந்து வருவது ஒரு காரணம். சமய காழ்ப்புணர்வு இருப்பது மற்றொரு காரணம்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce38lvewz4wo
  12. ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது . வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !! முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !! கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !! இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !! பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !! கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !! காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது! ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்.... சிறிது நேரத்தில்.... பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது !! அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !! இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !! அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !! நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !! நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !! ‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ... அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது . வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !! ‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி . அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க... ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன். ‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, . மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது..... தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !! இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்... அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !! இது தான் உலகநியதி !! நாம் எதைத் தருகிறோமோ அதுதான் நமக்குத் திரும்ப வரும் .... நல்லதை தந்தால் நல்லது வரும்,... தீமையை தந்தால் தீமை வரும் !! வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் , ஆனா.... நிச்சயம் வரும் !! ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !! மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும். Shalini Charles
  13. இணைப்புக்கு நன்றி சிறி. கதை தொடக்கத்தில் கடைக்காரரை ஏமாற்றிப் போட்டாரோ என்ற சந்தேகத்திலேயே வாசித்தேன். போகப் போகத்தான் உண்மை புரிந்தது.
  14. என்ன இது ? இரண்டும் முடிந்சுதோ?
  15. மேற்குலக ஜில்மா ஊடக செய்திகளில் மட்டும் தலையை புதைத்து வைக்காமல் மூன்றாம் உலக நாடுகளில் வரும் உக்ரேன் - ரஷ்ய செய்திகளையும் அவ்வப்போது வாசிக்க சொல்லுங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 🤣
  16. சிரிப்புக்குறி என்பது விடயத்தின் பாரதூரத் தன்மையை அவர் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது. அதுதான் எல்லோருக்கும் இருக்கும் கோபம். அதன் தொடர்ச்சிதான் மேலேயுள்ள கருத்துக்கள். இந்த வல்லுறவுச் சம்பவத்தை ஒரு தந்தையாக, பெற்றோராக, சமூகப் பொறுப்புள்ளவராக பார்க்கும் ஒருவருக்கு கோபம் வருவதில் தவறு இல்லை.
  17. தாழ்ந்த சாதியினரின் வீட்டில் உணவு அருந்த கூடாது, பந்தியில் தாழ்ந்த சாதியினரை அனுமதிக்கக் கூடாது என்று, மக்களிடையே சாதி வெறியை வளர்தத, சாதி வெறியனாக வாழ்ந்த, நாவலர் மண்டபத்தில் வாக்கு சாவடியை அமைத்தால் நாவலரால் தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கிய மக்களும் அங்கு வந்து சமமாக வாக்களிப்பர் என்ற கவலை இந்து மா மன்ற தலைவருக்கு ஏற்பட்டதில் வியப்பு இல்லை.
  18. ம் .... யானை பாத்த குருடரின் கதையாயிற்று! யாரோ செய்த தவறுக்கு கந்தையரை தண்டிக்க வேண்டுமாம். சிரிப்பு குறி போட பயமாக இருக்கிறது.
  19. தவறான புரிதலில்... கந்தையா அண்ணைக்கு பலர் கருத்து எழுதியுள்ளார்கள். அவர் ஆப்கானிஸ்தானுக்கு அந்தத் தந்தையை ஒருவழிப் பயணச்சீட்டுடன் அனுப்பி வைக்க வேண்டு என்று கூறியே... சிரிப்புக் குறியை போட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு ஒருத்தனை திரும்பி வரமுடியாதபடி அனுப்பி வைத்தால்.... தலிபான்களே தகுந்த தணடனையை கொடுப்பார்கள் என்று கருதித்தான் அந்தக் கருத்துக்கு சிரிப்பு குறி போட்டார். தலிபான்களின் தண்டனை எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை. அது உங்களுக்கே நன்கு தெரியும். அத்துடன் அவர் அந்தக் காமுகனின் செயலை அவர் எங்கும் நியாயப் படுத்தவில்லை என்பதை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். நேற்று வெள்ளிக்கிழமை 13´ம் திகதி எல்லோரையும் போட்டு சிப்பிலி ஆட்டிப் போட்டுது. 😲
  20. இது தான் பிரச்சனையான கருத்துகள் மற்றும் சிரிப்பு குறிகள் இதில் எங்கே பாலியல் வல்லுறவு ஆதரிக்கப்பட்டுள்ளது ???????????????????????????????என்பதை மேலே கருத்துகள் எழுதியவர்கள். விளக்குங்கள். பார்ப்போம் ஒழுங்காக வாசிக்கமால். அரைகுறையாக. வாசித்து உங்கள் மனங்களில் உள்ள வக்கிரங்களைக் வைத்து என் மீது குற்றம் சாட்டுவதை தயவுசெய்து தவிர்த்து கொள்ளவும் நன்றி வணக்கம்… இனிமேல் உந்த. குறிகள். பாவிக்க விரும்பவில்லை
  21. உதையெல்லாம் விசுகர் எங்க பார்க்கப்போகிறார். அவருக்கு உசுப்பேத்துறது கைவந்த கலை. ☹️
  22. இந்தக் கதையை வாசிக்கையில் ட்ரம்பும் கமலாவும் நினைவுக்கு வருகிறார்கள். பெண்களிடம் தோற்பதைச் சகிக்க முடியாத ட்ரம்ப், கமலாவிடம் விவாதத்தில் தோற்றதாகத் தான் தெரிகிறது. "இனி விவாதம் இல்லை!" என்று நாண்டு கொண்டு நிண்ட பின்னர், கட்டாயம் மீண்டும் விவாதிக்க வருவார் என்கிறார்கள்! பார்க்கலாம்!
  23. இதுதான் நல்லவனா இருந்தா பிரச்சினை, இரஸ்சியாவே பயமுறுத்துகின்ற நிலைக்கு நேட்டோவை கீழிற்க்கிய செலன்ஸ்கி, இரஸ்சியாவிற்குள்ளேயே நேட்டோ இராணுவ தளபாடங்களை கொண்டு போய் விட அதனை வைத்து அவர்கள் நேட்டோ ஏதோ ஏப்பை சாப்பை போல படம் காட்டுகிறார்கள். ஆனாலும் நேட்டோவிலும் தவறுள்ளது எந்த ஆயுதங்கொடுத்தாலும் பெரிதாக பில்லடப் கொடுத்து கொடுக்க அந்த தளவாடங்களை சோவியத் கால ஆயுதங்களால் அழித்து அதனை படம் பிடித்து இணையத்தில் போட்டு அவர்களது தொல்லைக்கு இப்ப அளவே இல்லாமல் போகிறது. எனக்கு இப்ப உண்மையிலேயே நேட்டோ பீதியில் உள்ளதா என சந்தேகமாக இருக்கிறது. இந்த அழிவினை வெளியில் இருந்து பார்ப்பதால் அதன் தீவிரம் தெரியவில்லை எங்களுக்கு, கேர்ஸ்க் ஊடுருவலுக்கெதிராக இரஸ்ஸிய படையினர் அண்மையில் ஆரம்பித்த பதில் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட இடங்களில் சில உக்கிரேனிய துருப்புக்களின் இறந்த உடல்கள் 2 அல்லது 3 வாரத்திற்கு மேலான உருக்குலைந்த நிலையில் இருக்கின்றன, அப்பகுதியில் இருந்த உக்கிரேன் சக துருப்பினருக்கு அதனை அடக்கம் செய்ய முடியாத அளவு நெருக்கடி இருந்திருக்க வேண்டும். போரில் ஈடுபடுபவர்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும்தான் இழப்பு, நெருக்கடி, வலிகள் ஆனால் அதனை வைத்து பனம் பார்க்கும் இந்த அரசியல்வாதிகளை பாருங்கள் எந்த வித குற்ற உணர்ச்சியுமில்லாமல் இலாப நட்டக்கணக்கு பார்க்கிறார்கள்.
  24. இல்லை கொலை இவருக்கு விடுதலை. வைச்சு செய்ய வேண்டும். 😡 ஒரு பெண் பிள்ளைக்கு அப்பன் தான் முதல் பாதுகாப்பு, நண்பன், தோழன் எல்லாமே. நல்ல தொடுகைக்கும் தப்பான தொடுகைக்குமான வித்தியாசத்தை பெண் பிள்ளைகள் பெறுவது அப்பனிடமிருந்தே.
  25. உடனுக்குடன் அன்றைய அரசியல் கண்ணோடட கருத்துப்படங்களை தரும் சிறீ ...பாராடட படத்தக்கவர் . நானும் சில சமயங்களில் தென்பட்டால் புள்ளடி ( விருப்பு குறி )போடுவதுண்டு .உண்மைதான் ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை விட படங்கள் உடனே மனதில் பதிந்து விடும். மேலும் தொடர வாழ்த்துக்கள்.
  26. புத்தன், வழமை போல நையாண்டியுடன் கூடிய அனுபவப் பகிர்வு..! எனக்கும் தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனதைக் கலக்குகின்றது. போவதே கொஞ்சம் தமிழ் கதைக்கவும் கேட்கவும் தான். ஆனால் இப்போதெல்லாம் வட இந்தியர் தான் எல்லா இடமும்..! சிக்கின் கறி கேட்டால் சிக்கின் ரிக்கா தான் இருக்காம். பருப்புக்கறி கேட்டால் இந்தியன் ஸ்ரயில் தான் இருக்கு வேணுமோ எண்டு கேக்குதுகள். பாரதி சொன்னது போல, மெல்லத் தமிழ் இனிச் சாகும் போல தான் உள்ளது..! தமிழ் மட்டுமல்ல, சைவமும் தான்.. ஆக்குவதும் நாங்கள் தான்..! அதை அழிப்பதும் நாங்கள் தான்..!
  27. அரியத்துக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இரண்டு விடயத்தை கையாளலாம்.. 1. புலிகளை முடித்துவிட்டு இதோ தீர்வு தருகிறோம் என்ற ஹிந்தியாவிற்கும்.. மேற்குலக வல்லாதிக்க சக்திகளுக்கும்.. உங்கள் வாக்குறுதிக்கு என்னானது.. நாம் தமிழ் மக்கள் இன்னும் சுயநிர்ணய உரிமைக்கான தேவையோடு.. தமிழ் தேசிய இனமாக ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை சொல்லலாம். 2. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அரசியல் போட்டா போட்டிக்குள் சிங்களவர்கள் தமக்கான அரசின் ஆட்சித் தலைமையை தெரிவு செய்வதில் இருந்து தமிழ் மக்கள் விலகி நிற்கலாம். இது உலகிற்கு இன்னொரு செய்தியை சொல்லும்.. இலங்கையில்.. இரு வேறு தேசிய இனங்கள்.. இரு வேறு கொள்கைகளுடன் அரசியல் தேவைகளுடன் உள்ளன என்பதை. அதனை சர்வதேசம் தேசிய நல்லிணக்கம்.. அது இதென்று போலி வார்த்தைகளால் மூடி மொழுகி விட முடியாது. தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் தீர்வை பெற்றுத்தருவதில் கருசணை கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லலாம். சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பின் கீழ்... அரியத்தை இறக்கியது தேவை இல்லாத ஆணி ஆக தோன்றினாலும்.. அதனை தேவையாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம்.
  28. சார்! உலகம் முழுக்க புட்டின் தான் சண்டை போட்டுக்கொண்டு திரியுறாரோ? 😄
  29. வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, இளைஞரால் துஷ்பிரயோகம் Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 04:36 PM வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை (14) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக அவர்களுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பொலிஸார் குறித்த சிறுமியிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளின் போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குறித்த சிறுமியை தந்தை துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளதுடன், குறித்த சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவரும் கடந்த மாதம் 28 ஆம் திகதி குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த தந்தை தனது மூத்த மகளை 2020 ஆம் ஆண்டு துஷ்பிரயோகம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193692
  30. குற்றம் நடக்கவில்லை என்று சொல்ல வேண்டி அவசியம் எனக்கு இல்லை நான் சிரிப்பு குறி போட்டது பயணச்சீட்டு கேட்டதற்கு தான் மற்றும்படி தந்தை மகளுடன். உடலுறவு கொண்டதற்க்கு இல்லை சரியா?? உங்கள் வாதப்படி பொலிஸ் அழைக்கவில்லை என்றால் பாலியல் வல்லுறவு என்று மகள் சொல்லவில்லை என்பது புலனகிறது அப்படி என்றால் இருவரது சம்மதத்துடன். நடந்த உடலுறவா?? இங்கே பலரும் கருத்து எழுதி உள்ளார்கள் எவருமே கண்டிக்கவில்லை ஆனால் நான் இரு தடவையாக கண்டித்து உள்ளேன் நான் இந்த உடலுறவை எங்கும் வரவேற்கவில்லை ஆதரித்து கருத்துகள் பதியவில்லை யாழ்ப்பாணத்தில். நடந்த உடலுறவுக்காக ஆப்கானிஸ்தான்க்கு பயணச்சீட்டு கேட்டதற்கு தான் சிரித்தேன் இதை வாசித்து விளங்காதவர்கள். பற்றி என்ன சொல்ல?? நீங்கள் மகள் தந்தை என்ன சொன்னார்கள். என்பதை அறிந்து பதிவிடுங்கள் 🙏
  31. நான் எழுதிய பதில் பயணச்சீட்டு அனுப்பும்படி கேட்டதுக்கு மாறாக உங்கள் இணைப்புக்கு இல்லை மேலும் எவர் செய்தாலும் கண்டிக்கிறேன் .......அதேவேளை இப்படியான செய்திகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து அடிக்கடி கேள்விப்பட்டிருக்கேன் அதில் ஒன்று சொந்த பெரிய தகப்பனின் மகளை அதாவது தங்கச்சி முறையான பெண்ணை பெரிய பெண் தான் பொலிஸ் கன்டபிளாக வேலை செய்யும் அண்ணன் உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கி விட்டான். விசயம் தெரிந்து பெரிய கொந்தளிப்பாக. மாறி விட்டது அவன் சொன்னான்” நான் தான் பிரச்சனை இல்லை காலியணம் செய்து கொள்கிறேன் என்று அவர்கள் உடன்பாடவில்லை பிள்ளையை அளித்து விட்டு வேறு ஒருவனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள் அடுத்த அதிசயம் அந்த பொலிஸ்காரனுக்கு பெண் கொடுக்க. நிறைய பேர் போட்டி போட்டார்கள் அவன் நல்ல வீடு தோட்டம் காணி பணமும் வேண்டி திருமணம் செய்தான் இப்படிச் செயல்களை நான் ஆதரிப்பது இல்லை இப்போது இவற்றை பெரிசாக. எடுப்பதும் இல்லை நன்றி வணக்கம்… 🙏 மீண்டும் சொந்த மகளுடன். உடலுறவு கொண்டவனை கண்டிக்கிறேன
  32. நான் ஒரு தேர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன். அநேகமாக பெரிய கொண்டாட்டங்கள் கோவில்களில் நடந்தால் புலம்பெயர் நாடுகளில் உள்ள கோவில்களுக்கு போவதில்லை. காரணம் அங்கே ஆன்மீகம் இருக்காது. மாறாக ஒருவகை பந்தா கொண்டாட்டமாக இருப்பதால்.... இருந்தாலும் நீண்டகாலம் செல்லவில்லை என்றாலும் விடுமுறையில் இருக்கின்றேன் என்பதால் சென்றேன். அதே பல்லவிதான்.... நகையலங்காரம் உடையலங்காரம் கார் பந்தாங்கள் பழைய காய் என்ற பந்தாக்கள் பண பந்தாக்கள் உபயம் எனும் பேரில் தண்ணீர்பந்தல்களில் அட்டகாசம் அன்னதானம் பெயரில் சண்டித்தனங்கள் அன்னதானத்திற்கு வரிசையிலில் நின்றால் இடையில் புகுந்து விளையாடும் தர்மகர்த்தாக்கள் உபயகாரர்கள். கிட்டத்தட்ட கோவில்களை தங்கள் பந்தா காட்டும் இடமாக மாற்றி விட்டார்கள் புலன் பெயர்ந்த தமிழர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.