Leaderboard
-
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்10Points8907Posts -
பாலபத்ர ஓணாண்டி
கருத்துக்கள உறவுகள்7Points1836Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்6Points87990Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்6Points2954Posts
Popular Content
Showing content with the highest reputation on 09/15/24 in Posts
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
5 pointsஅதுசரி, கொள்கையளவில் இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத் தீர்ப்பொன்றின் ஊடாக பிரித்துப்போட்டது இவரது கட்சிதான். இலங்கையில் இருக்கும் அனைத்து இன மக்களுக்கும் இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினையே தமிழர்களுக்கும் இருக்கின்றது, அவர்களுக்கென்று இனரீதியாகப் பிரச்சிகள் இல்லை என்று கூறுவதும் இவரது கட்சிதான். இதுகுறித்த தமிழ் மக்களின் பதில் என்ன? இவரை ஆதரிப்பதால் 1. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கத் தேவையில்லை 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான பிரச்சினைகள் இல்லை என்கிற முடிவிற்குத் தமிழர்கள் வந்துவிட்டோமா? இங்கே எழுதப்படும் கருத்துக்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. வாழ்த்துக்கள்.5 points
-
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
4 pointsஅண்ணை நீங்க ஒரு லட்சத்தை ஆட்டையை போட்டிட்டீங்களே!4 points -
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
3 pointsவடக்கில் அனேகமான தொகுதிகளில் நாலாவதாக தான் வருவார். கிழக்கில் பல இடங்களில் மூன்றாவதாகவும், சில இடங்களில் நான்காவதாகவும் வருவார் என நினைக்கிறேன். சமூக நீதி எனும் முகமூடியை போட்டு கொண்டு வரும் இனவாத ஜேவிபி யின் சனாதிபதி கனவு வடக்கு கிழக்கு மக்களால் முறியடிக்கப்படும் சாத்தியமே அதிகம்.3 points
-
கருத்து படங்கள்
3 pointsஇலங்கை ஜனாதிபதி தேர்தல் நடக்க இன்னும் ஒரு கிழமை உள்ள நிலையில்.... ஸ்ரீலங்காவின் ஆணழகன் யார்.... என நடக்கும் போட்டி. 😂3 points
-
என்கிட்ட மோதாதே
3 pointsஇறுதிப் போட்டி என்று மோத வந்து மூன்றாவது தடவையும் தோற்றுப் போனார். உண்மைதான். வாரம் தோறும் நடைபெறப் போகும் நிகழ்ச்சி ஒன்றைத் தொலைக்காட்சியில்தொகுத்து வழங்கப் போகிறார். ஏறக்குறைய பத்து வருடங்கள் ஊடகங்களில் இல்லாமல் இருந்தவரை திரும்பக் கொண்டு வந்து நிகழ்ச்சியை நடத்துவதுக்கு இந்தக் குத்துச் சண்டை ஒரு விளம்பரம்தான். ஆனாலும் சண்டை உண்மையானது.3 points
-
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
3 pointsஎழுதியபோது 85 என கை போனதாகவே நினைவு 😁 போலிஸ் வேலையை செய்கின்றார்கள். ஆனால் துரித கதியில் வேலையை செய்ய வைக்க கைக்குள் லட்சுமிதேவியை காட்டவேண்டி உள்ளது. உண்டியல் சட்டவிரோதமானது அல்லவே? கனடாக்காரர் காணி வாங்குவதற்கு கையில் 85 இலட்சம் கொண்டுவந்தது ஒரு பிரச்சனையாக வராது என எண்ணுகின்றேன். செய்தியில் விபரிக்கப்பட்ட தரகன் முன் பின் அறியப்பட்ட ஆளோ/சொந்தக்காரனோ/நண்பனோ/ஊர்க்காரனோ யார் அறிவார்!3 points -
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
3 pointsஇணக்க அரசியலில் சங்கமமாகி விட்டார்கள். அடக்கு முறைக்குள் இருந்து சுதந்திரமாக உலாவ முடிகிறது. நீண்ட வரிசையில் நின்று களைத்துப் போனோம். இப்போ பாணும் பருப்பும் சுலபமாக கிடைக்கிறது. இதுக்கு அப்பால் என்ன தான் வேண்டும்.3 points
-
யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
தமிழரசுக் கட்சியின் காலைச் சுற்றிய பாம்பு போன்றவர்தான் சுமந்திரன், கடித்துக் குதறாமல் விடாது. அதற்குப் பாலூற்ற யாழ்களத்திலும் ஆள் உண்டு.😳2 points
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
கட்டுரை எழுதி சாவடிக்கபோகுது மனுசன்.. இதுக்காகவாவது அரியம் ஜனாதிபதி ஆகிடணும்..2 points
-
நமச்சிவாய வாழ்க
2 pointsநமச்சிவாய என சிவபெருமானை வழிபடுவதால் நாம் நிறைவான பயனைப் பெற முடியும் . ந என்பது நிலம் ம என்றால் நீர் சி என்றால் அக்கினி வா என்றால் காற்று ய என்றால் ஆகாயம் . சிவபெருமான் பஞ்ச பூதங்களுக்கு அதிபதி எனவே தான் நமச்சிவாய வாழ்க என வழிபாடுகிறோம். படித்ததில் பிடித்தது திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ........( thodarum)2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம்: மேலும் இரு வருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யப்படுமா? - ஒக்டோபர் 7 ஆம் திகதி தீர்மானம் எட்டப்படும்
சங்கூதற வயசுல சங்கீதா..😢2 points- வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
2 pointsஉங்கள் புரிதலில் தவறு உள்ளது. விபு க்கள் கூட பேச்சுவார்த்தை என்று வரும்போது முதலில் வாழ்வாதார, நடைமுறைப் பிரச்சனைகளைப் பற்றியே பேசினர். எங்கள் அரசியல்வாதிகளுக்கு முள்ளந்தண்டும் மூளையும் இருந்திருப்பின் கடந்த 15 வருடங்களில் அங்குள்ள மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை எவ்வளவோ தீர்த்திருக்க முடியும். நாங்கள் முஸ்லிம் தலைமைகளைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த 10 / 15 வருடங்களில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். அப்போது எம்மைப்பற்றிக் கதைக்க ஒருவரும் இலர். ஆகாயத்தில் கோட்டை கட்ட முடியாது.2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsதர்மலிங்கத்தையும், ஆளாளசுந்தரத்தையும் நாம் கொல்லவில்லை. ஆனால், ஆனந்தராஜாவை நாமே கொன்றோம், அதற்கான அவசியம் எமக்கு இருந்தது - தலைவர் பிரபாகரன் இந்தியாவில் பிரபாகரன் தங்கியிருந்த நாட்களில் "சண்டே" பத்திரிக்கை அவரைப் பேட்டி கண்டிருந்தது. கேள்வி : தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு முன்னாள் உறுப்பினர்களை புலிகள் இயக்கம் கொலை செய்ததா? இந்திய உளவுத்துறையினர் அவர்களை நீங்களே கொலை செய்ததாக நம்புகிறார்களே? பிரபாகரன் : நாம் அவர்களைக் கொல்லவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறையினர் அப்படியான முடிவிற்கு வந்தால் நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் கொல்லப்பட்டவுடனேயே நாமே அவர்களைக் கொன்றதாக இலங்கையரசாங்கம் எம்மீது குற்றஞ்சாட்டியவேளை நாம் உடனடியாகவே அதனை மறுத்திருந்தோம். ஈழத்தேசிய விடுதலை முன்னணியும் இப்படுகொலைகளில் தமக்குப் பங்கில்லை என்று அறிவித்திருந்தது. இந்திய உளவுத்துறை இக்கொலைகளை நாமே புரிந்ததாகக் கூறினாலும்கூட யாழ்ப்பாணத்து மக்களுக்கு இதனைச் செய்தது யாரென்பது நன்றாகவே தெரியும். சாட்சிகள் எதனையும் தேடாது, கண்மூடித்தனமாக இந்திய உளவுத்துறை இக்கொலைகளை நாமே செய்ததாக நம்புகின்றது என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், இக்காலப்பகுதியில் நான் தலைமறைவாகியிருந்தேன், அதனை மனதிற்கொண்டே இக்கொலைகளை எனது இயக்கம் செய்ததாக இந்திய உளவுத்துறை நினைக்கிறது போலும். இதனை நாங்கள் செய்திருந்தால், அதனை உடனடியாகவே உரிமை கோரியிருப்போம். எமது செயலுக்கான காரணங்களையும் நாம் தெளிவாகக் குறிப்பிட்டிருப்போம். எமது விசாரணைகளின் ஊடாக ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவிடத்தே அவருக்கான தண்டனையினை நாம் நிறைவேற்றுவோம். ஆகவே, நாம் இக்கொலைகளைப் புரிந்திருந்தால் நிச்சயம் அதற்கான காரணமும் எம்மால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு பேச்சிற்கு ஆளாளசுந்தரத்தை நாமே கொன்றிருந்தால், அதற்கான காரணத்தை நிச்சயமாக வெளிப்படுத்தியிருப்போம். ஆனால், அவரைக் கொல்லவேண்டும் என்கிற எந்தத் தேவையும் எமக்கு இருக்கவில்லை. யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக அவர் இருந்த நாட்களில் பெருமளவு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டு வந்ததனால் அவருக்குச் சில தண்டனைகளை நாம் முன்னர் வழங்கியிருந்தோம். அவரது முறைகேடுகளை நாம் ஆதாரத்துடன் நிரூபித்திருந்தோம். அவரது முறைகேடுகள் தொடர்பான பல ஆவணங்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் எரியூட்டப்பட்டபோது சேர்ந்தே எரிக்கப்பட்டு விட்டன. யாழ் பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை நாம் தண்டித்தோம். ஆனந்தராஜாவைக் கொன்றவர்களைப் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு ரூபாய் ஐந்துலட்சங்களைத் தருவதாக இலங்கையரசாங்கம் அறிவித்தபோதே அவருக்கும் இலங்கையரசாங்கத்திற்கும் இடையே இருந்த நட்பினை யாழ்ப்பாண மக்கள் அறிந்துகொண்டனர். அவரை நாம் கொன்றதற்கான காரணத்தைத் தமிழ் மக்கள் முற்றாக உணர்ந்துகொண்டதனால் அக்கொலை குறித்து அவர்கள் பேசவில்லை. இலங்கை இராணுவம் எமது மக்களை தினமும் கொன்று குவித்துக்கொண்டும், இளைஞர்களைச் சகட்டுமேனிக்குக் கைதுசெய்து சித்திரவதை செய்துகொண்டும், எமது பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிக்கொண்டும், எமது சொத்துக்களை எரித்து நாசம் செய்துகொண்டும் இருந்த நாட்களில் அதே இராணுவத்துடன் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை நடத்த ஆனந்தராஜா திட்டமிட்டு வந்தார். அவரால் திட்டமிடப்பட்டு வந்த கிரிக்கெட் போட்டியினை ஒரு பிரச்சாரப் பொருளாக முன்வைத்து, "தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்துடன் மிகவும் தோழமையுடன் பழகுகிறார்கள், அவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுகிறார்கள், ஆனால் தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்று பொய்யான பிரச்சாரத்தோடு தமிழ்ப் பயங்கரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று உலகிற்குக் காட்ட இலங்கையரசாங்கம் முயன்று வந்ததை நாம் அறிவோம். ஆகவேதான் அவரை அகற்றவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. கேள்வி : அவர்கள் இருவரையும் உங்கள் இயக்கத்தில் உங்களின் சொல்லிற்குக் கட்டுப்படாத ஒரு பிரிவினர் கொன்றிருக்கச் சந்தர்ப்பம் இருக்கின்றதா? பிரபாகரன் : நிச்சயமாக இல்லை. எனது அனுமதியின்றி புலிகள் இயக்கத்தில் எதுவுமே நடப்பதில்லை. சண்டே பத்திரிகைக்குப் பேட்டியளிக்கு முன்னர் பிரபாகரன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு உறுப்பினர்களான யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் சந்தித்தார். ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் புலிகள் இயக்கம் கொல்லவில்லை என்பதை அவர்களிடம் உறுதிப்படுத்தினார். குறிப்பாக, தர்மலிங்கம் மீது தான் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தவன் என்றும், அவரது கொலை தன்னை கவலைப்படச் செய்துள்ளதாகவும் பிரபாகரன் அவர்களிடம் கூறினார். யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் தான் சந்தித்தது குறித்தும் சண்டே பத்திரிக்கையுடனான பேட்டியின்போது பிரபாகரன் பகிர்ந்துகொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை நான் சந்தித்துப் பேசினேன். இவ்விரு கொலைகளையும் நாம் செய்யவில்லை என்பதை அவர்களிடம் உறுதிப்படுத்தினேன். எம்மிடமிருந்து அவ்வாறான தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்படாது என்றும் அவர்களிடம் நான் கூறினேன். ஆளாளசுந்தரத்திற்கு நான் அச்சுருத்தும் தண்டனையொன்றினை முன்னர் வழங்கியிருந்தோம் என்பதற்காக நாம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு எதிரானவர்கள் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது என்று அவர்களிடம் தெரிவித்தேன். ஆனாலும், அவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி அச்சமூட்டும் வகையில் வளர்ந்துவருவதை அவர்களிடம் தெரிவித்தேன். தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தை அவர்கள் கைவிட்டு வேறு வழியில் சென்றுகொண்டிருப்பதனை தமிழினத்திற்கெதிரான துரோகம் என்று இளைய தலைமுறையினர் கருதுகிறார்கள். மேலும், தமிழ் மக்களுடன் இருந்து, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காது, வெளியிலிருந்து அவர்கள் தமது அரசியலைச் செய்துவருவதால் அவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி இன்னும் இன்னும் அதிகரித்துச் செல்கிறது. தமிழ் ஈழத்திற்கான நியாயத்தன்மையில் இருந்தும், அவசியத்திலிருந்தும், தவிர்க்கவியலாத் தன்மையிலிருந்தும் தம்மை அவர்கள் அந்நியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடமிருந்து தம்மை மேலும் மேலும் அவர்கள் அந்நியப்படுத்தும் இடத்து, இளைய தலைமுறையினரிடமிருந்து அதற்கான எதிர்வினையினை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்படுகிறது. யதார்த்தம் என்னவென்றால், நான் ஈழத்தைக் கைவிட்டாலும் அவர்களைப்போன்றே தண்டனைக்கு உட்படுத்தப்படுவேன் என்பதுதான். சண்டே பத்திரிக்கையின் நிருபரான அனீத்தா பிரதாப் தொடர்ந்தும் பிரபாகரனிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவற்றில் ஒன்றுதான் பாலசிங்கத்தை நாடுகடத்தும் தனது தீர்மானத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்ய ரஜீவ் எண்ணியிருந்தார் என்றும், ஆனால் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் புலிகளே கொன்றதாக இந்திய உளவுத்துறை ரஜீவிடம் தெரிவித்தபோது, நாடுகடத்தும் தீர்மானத்தை இரத்துச் செய்வதை ரஜீவ் கைவிட்டார் என்றும் கூறி இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று பிரபாகரனைக் கேட்டார். இக்கேள்விக்கான பதிலை, இந்திய உளவுத்துறையின் தவறான ஆய்வினைச் சுட்டிக்காட்ட பிரபாகரன் பாவித்தார். "எமக்கும் இப்படுகொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், நாமே அவர்களைக் கொன்றதாகக் கற்பனை செய்துகொண்டு, பாலசிங்கத்தை நாடுகடத்தும் முயற்சியில் இந்திய அரசாங்கம் தீர்மானமாக இருந்திருந்தால், அது அவர்களின் பாரிய தவறேன்றே நான் நம்புகிறேன். இக்கொலைகளுக்காக எம்மைத் தண்டிக்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இவ்வாறான தவறான தகவல்களை ரஜீவிற்கு வழங்கிய இந்திய உளவுத்துறையினைத்தான் அவர் தண்டித்திருக்கவேண்டும். குறைந்தது இவ்வாறான தவறுகளை ரோ எதிர்காலத்தில் செய்வதில் இருந்தாவது அவர்களைத் தடுக்க முடியும்" என்று பிரபாகரன் பதிலளித்தார்.2 points- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் கோரிக்கையாக தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு என்கிறார் ஸ்ரீநேசன் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும்.அதன் அடிப்படையில் தாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருக்கின்றது இந்த தேர்தல் ஆனது கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலை விடவும் முக்கியமான ஒரு தேர்தலாக கருதப்படுகின்றது காரணம் இந்த தேர்தலில் மாத்திரமே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருக்கின்றார்கள். இந்த பொது வேட்பாளரை 83 சமூக கட்டமைப்புகளும் 10 தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து இவரை நிறுத்தி இருக்கின்றது என்றால் இந்த பொது வேட்பாளர் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் சார்பாக இவர் நிறுத்தப்பட்டிருக்கின்றார். தமிழர்கள் ஒற்றுமையாக இந்த இடத்தில் பயணிக்க வேண்டும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் ஒரே குரலில் தங்களது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் உள்நாட்டிற்கும் செல்ல வேண்டும் எங்களுடைய தீர்வுகளையும் சொல்ல வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த தமிழ் பொது வேட்பாளர் சங்கு சின்னத்தில் அரியநேந்திரன் அவர்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த விடயத்தை கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும் எனவே நாங்கள் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுடைய அருள் வாக்கு கூறுகின்ற அருட்தந்தை யோசப் மேரி அடிகளார் அவர்கள் அருமையாக கூறினார் தந்தை செல்வா அவர்களின் காலத்தில் இருந்து பயணித்தவர் தளராத வயதிலும் கூட தமிழ் தேசியப் பற்றோடு தமிழ் உணர்வோடு இந்த தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினால் நாங்கள் கேட்டு தான் ஆக வேண்டும் ஏனென்றால் அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் தடம் புரளாமல் ஆன்மீகப் பணிகளும் சரி அரசியல் பணியிலும் சரி மிகவும் அருமையாக பணியாற்றியவர். அவர் கூறுகின்றார் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர்களை அவர்களது பிரச்சனைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என அவர் எடுத்துரைக்கின்றார். எனவே ஒரு மூத்த அருட்தந்தை அவர்களுடைய அருள்வாக்கு நாங்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் திட சந்தர்ப்பம் எடுத்து இருக்கின்றோம் எனவே நடைபெறுகின்ற 21 ஆம் தேதி நடைபெறுகின்ற இந்த தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் தமிழ் சமூகம் ஒற்றுமையாக இருக்கின்றோம் ஒரே குரலில் எங்களுடைய பிரச்சனைகளை கூறப்போகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டோம் உள்நாட்டு பொறிமுறை ஊடாக இந்த பிரச்சினைகளை தீர்க்கிறோம் எனக் கூறினார்கள் ஒன்றுமே நடைபெறவில்லை 15 ஆண்டுகளாக. அடுத்ததாக தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்துகின்றோம் எனக் கூறிக்கொண்டு எங்களுடைய கலாசார நிலையங்கள் அளிக்கப்படுகின்றது அந்த இடங்களில் விகாரங்கள் கட்டப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றது அந்த இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் இருந்தது என்று கூறிவிட்டு அந்த இடங்களை ஆக்கிரமிக்கின்ற செயல்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இன்றும் கூட பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமல் தமிழ் மக்களை யுத்தத்தின் பின்னரும் ஒடுக்குகின்ற அந்த சட்டத்தை அவர்கள் வைத்திருக்கின்றார்கள் எங்களுடைய தமிழ் கைதிகள் முழுமையாக இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை இது மாத்திரம் அல்லாமல் வடக்கு கிழக்கில் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு என்பது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மாதவனை இந்த மேச்சல் தரை இப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள் 365 நாட்களுக்கும் மேலாக அகிம்சை ரீதியாக வீதியில் இருந்து போராடிய அந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எந்த ஒரு தீர்வும் இந்த ஜனாதிபதியால் கொடுக்கப்படவில்லை. 100 நாட்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாகி தரவேண்டும் என போராடினார்கள் அதுவும் கேட்கப்படவில்லை. எட்டு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கு வாக்களித்து இருந்தும் கூட அவர்கள் எங்களை தாராளமாக ஏமாற்றி இருக்கின்றார்கள் இந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிலும் கூட சில வேளைகளில் பொது வேட்பாளர் திறக்கப்படாமல் இருந்திருந்தால் நாங்கள் யாரோ ஒரு சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்து இருப்போம் ஆனால் முதல் தடவையாக இந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கின்ற போது அதே போன்று தமிழர்களின் பிரச்சினைகளை கோரிக்கைகளை வைத்து இறக்கப்பட்டிருக்கின்றார் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாங்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கின்றது அதனை விடுத்து மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் வழி கூறக்கூடாது. கேட்கின்றார்கள் இந்த வேட்பாளர் வெல்லப் போகின்றாரா என்று இவருக்கு வாக்களிப்பதால் என்ன கிடைக்கப் போகின்றது எனக்கு கேட்கின்றார்கள் நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன் எட்டு ஜனாதிபதிகளுக்கு நாங்கள் வாக்களித்தோம் எதைப் பெற்றிருக்கின்றோம் ஒன்றையுமே அவர்கள் தரவில்லை அவர்களை வெற்றி பெற செய்திருக்கின்றோம் கடந்த நல்லாட்சி காலத்தில் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்களை வெற்றி பெறச் செய்தோம் மஹிந்த ராஜபக்சே அவர்களை தோற்கடித்தோம் பின்னர் மைத்திரிபாலு என்ன செய்தார் 2018 ஆம் ஆண்டு நாங்கள் யாரை தோற்கடிக்க வேண்டும் என்று மைத்திரிக்கு வாக்களித்தோமோ அவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதம மந்திரியாக வைத்துக்கொண்டு அவர் அழகு பார்க்கின்றார் பேச்சுவார்த்தை இடம்பெற்றது அரசியல் யாப்பு தருவோம் என கூறினார்கள் ஏமாற்றி விட்டார்கள். சந்திரிகா அம்மையார் சமாதான தேவதையாக வந்தார் என்ன செய்தார் கடைசியாக அவரும் ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார். எனவே எங்களுடைய அரசியல் வரலாறு என்பது ஏமாற்றப்படுகின்ற வரலாறாக இருக்கின்றது அவர்கள் ஏமாற்றுகின்ற வரலாறாக காணப்படுகின்றது எனவே தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழ் சமூகங்களுக்கும் நாங்கள் கூறக்கூடிய விடயம் என்னவென்றால் வடக்கு கிழக்கு மாத்திரம் அல்ல அனைத்து மக்களும் எமக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் கூறுகின்றார்கள் நாங்களும் இவருக்கு ஆதரவு வழங்குவதற்கு சித்தமாக இருக்கின்றோம் என்று. எனவே நியாயத்தின் பேரில் உரிமையின் பேரில் நாங்கள் பதிக்கப்பட்ட சமூகம் என்பதன் பெயரில் நாங்கள் நீதியை நிலை நிறுத்துவதற்காக ஏமாற்றப்பட மாட்டோம் என்பதை எடுத்துக் கூறுவதற்காக எமக்கு ராயப்பு ஜோசப் ஆண்டகை கூறியது போன்று இறுதி யுத்தத்தின் போது ஒரு லட்சத்து 46 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்ற செய்தியை கூறி இருக்கின்றார் அவர் கூட அந்த இழப்புக்குரிய நீதியை பெற வேண்டும் என முயற்சித்தார் அவரும் கண்ணை மூடிவிட்டார் ஆனால் நீதி எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அழகாக கூறியது உண்மையை கண்டறிய வேண்டும் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அடுத்ததாக மீண்டும் இவ்வாறான அவலங்கள் ஏற்படாமல் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தரமான தீர்வை பெற வேண்டும் என கூறுகின்றார்கள் எதுவுமே இடம்பெறவில்லை 15 வருடங்களாக யுத்தத்தின் பின்னர் எங்களை ஏமாற்றி இருக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை இப்போது ஒரு கதை பேசப்படுகின்றது மீளபெற முடியாத அதிகாரத்தை தந்திருக்கின்றார் என்கின்ற ஒரு கதை அழகாக கூறப்படுகின்றது. மீளப்பெற முடியாத அதிகாரம் என்றால் எந்த விடயத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரம் தரப்பட்டு இருக்கின்றது என கூற வேண்டும் சமஸ்டி ஆட்சி முறையில் மீளப்பெற முடியாத இந்த இந்த அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றது என கூற வேண்டும் இது மொட்டை கடிதம் எழுதுவது போன்று மீளப்பெற முடியாத அதிகாரம் தந்ததனால் அதற்குள் சமஷ்டி இருக்கின்றது என்று எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கு எம்மவர்கள் பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/3094161 point- மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
15 SEP, 2024 | 10:20 AM ராமேசுவரம்: விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறை தண்டனைக்குப்பின் இவர்களின் வழக்கு கடந்த 5-ம் தேதி மன்னார் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் இன்னாசி, ராஜா, சசிக்குமார், மாரி கிங்ஸ்டன், மெக்கான்ஷ் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்ததுடன், தலா ரூ.50 ஆயிரம் அபதாரம் செலுத்தவும் உத்தரவிட்டார். மேலும் கணேசன, சேசு, அடைக்கலம் ஆகிய 3 மீனவர்கள் இரண்டாவது முறையாக எல்லைதாண்டி வந்ததாக கூறி ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், அவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபதாரமும் கட்ட உத்தரவிட்டார். இதனையடுத்து 3 மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு உறவினர்கள் கடன் வாங்கி 7-ம் தேதி பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் 6-ம் தேதி அபராததொகை செலுத்த வில்லை என சிறைத் துறையினர் அவர்களை கைவிலங்கிட்டு மொட்டை அடித்தும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து, வளாகத்திலுள்ள கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப் படுத்தியதாகவும், சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பின்னர் 5 மீனவர்களும் (செப்.13) காலை மெர்ஹானா முகாமில் இருந்து விமான மூலம் இரவு சென்னை வந்தடைந்ததாக கூறினர். மீனவர்கள் இன்று பகல் 1 மணியளவில் சொந்த ஊரான தங்கச்சிமடத்துக்கு வந்து சேர்ந்தனர். மீனவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு வந்ததை கண்ட அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் தொடர் அத்துமீறல் மற்றும் மனித நேயமற்ற செயலை கண்டித்தும், மத்திய அரசு மீனவர்கள் பிரச்சனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவ சங்க நிர்வாகிகள் ஜேசுராஜா, எமரிட் மற்றும் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மீனவர் சங்க தலைவர் எமரிட் கூறும்போது, “மொட்டை அடிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள் தான் என எண்ண வேண்டாம், எங்களுடைய வரிப்பணத்தில் வாழும் இலங்கை அரசு எங்கள் மீனவர்களை மொட்டை அடித்து மனித நேயமற்ற அரக்கர்களாக கொடுமைப்படுத்தி உள்ளனர். மத்திய அரசு இதையும் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. இது இந்தியாவை அவமானப்படுத்தியதாகத் தான் நாங்கள் கருதுகிறோம். ஆகவே, இதுவரை இலங்கை கடற்படை எங்களை அடித்து கொடுமைப்படுத்தியது, படகுகளை சிறை பிடித்தது, அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இனிமேலும் இவ்வாறான மனிதநேயமற்ற செயலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஆகவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கும் எதிராகவும் நடத்துவோம்” என்றார். https://www.virakesari.lk/article/1937191 point- தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
ஆரு வில்லங்கப்பட்டது இவர்தான் சுமக்கோனும் எண்டு.. ஓராமா இறக்கிவச்சிட்டு கிளம்புறது.. ஆனா செய்யமாட்டார்.. பச்சைக்கிளிக்கு புல்லட்டும், தொப்பியும் வாங்கிதரவும் எண்டு தமிழ்தேசியத்தை வாசித்து காட்டியே வாழ்ந்திடும்..1 point- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
அரிய நேந்திரனுக்கு வாக்குப்போடாதவன் தமிழன் இல்லையாம் சிங்களவனுக்கு பிறந்தவனாம்.. இப்ப புதிசா ஆரம்பிச்சிருக்கிறாங்கள்.. இதை சங்கே முழங்கு என்டு கொஞ்சம் செயார் பண்ணீட்டு திரியுதுகள்.. வெளிநாட்டு துரோகிப்பட்ட நீட்சிதான் இது.. தீவிர தமிழ் இனவாதம் இது.. எதிர்காலத்தில் நாமல் தரப்பு ஆட்சிக்கு வரணும் என்று உள்ளூர மனசுக்குள் ஆசைப்படுபவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.. ஞானதாசதேரர் ,உதயன்கம்மன்பல, விஜயசேகர போன்றவர்களின் தமிழ் வெர்சன் இவர்கள்.. மோடையனுகளை ஒன்றுதிரட்ட சிங்கலே அப்டீனு வரணும் இல்ல தமிழண்டானு வரணும்... மாஸ் மோடையன்ஸுக்கான தெரிவுகள்…1 point- தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
அது சரி.. சிறியரின் நான் அறிஞ்ச இன்னுமொரு வீரப்பிரதாபம்.. புலோப்பளை, கேரதீவு காற்றாலை மின்சார திட்டத்திற்கு எதிராக ஆள்களை ஆர்ப்பாட்டம் செய்வித்தார்… பின்பு 8% வாங்கி திட்டம் நிறைவேற விட்டார்… இப்படி நிறைய டீல்கள் மூலமாக கோடான கோடி உழைத்து விட்டார்... இப்படி சிறிதரனின் டீல் அரசியல் மற்றைய தமிழ் அரசியல் திருடர்களைவிட பலமடங்கு திறமையானது.. தந்திரமானது.. ஊரில் சொல்லுவார்கள் நசுக்கிடாக்கள்ளன் எண்டு.. அந்த வார்த்தைக்கு பத்து பொருத்தமும் சரியானவர் சிறியர்..1 point- தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
சரி எண்டு யார் சொன்னது. நீங்கள் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு சொல்லும் போது, மற்றையவர்களையும் அம்பலப் படுத்த வேண்டிய தேவை உள்ளது.1 point- தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
சலங்கை யை காலில் கட்டியதும் அவர்தான். சலங்கையாட்டம் முடிந்த பின் சனத்தை திட்டப் போவதும் அவர் தான்.1 point- நமச்சிவாய வாழ்க
1 pointநான் அறிந்தது இப்படி, ‘நம’ என்றால் வணங்குதல் (நமஸ்தே) ‘சிவாய’ என்றால் சிவனுக்கு ஆக கூட்டிப் பார்த்தால் ‘சிவனுக்கு வணக்கம்’ ஒவ்வொருவரது விளக்கங்களும் வேறு வேறாக இருக்கலாம். ஏராளன் குறிப்பிட்டது போல் ‘ச்’ இல்லை1 point- தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
பார் லைசென்ஸ், தரணி சுப்பர் மார்க்கெற், கிளிநொச்சி உட்பட நாட்டின் பலபாகங்களில் சொத்து பத்து என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு டப்பு குடுக்குமளவுக்கு வளர்ந்து விருட்சமாகி நிக்கிற மனுசனுக்கு இந்த நடிப்பெல்லாம் யுயுப்பி..1 point- யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
தோற்கின்ற கூட்டம் தானே. எதோ கொடுத்த அளவுக்கு கூவி விட்டு போகட்டும்.1 point- தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
இவர் நடிகர் சிவாஜியை வென்று விட்டார் இவர் லண்டனுக்கு வரும்போதே ஏதோ நடக்க போகுது என்று சாதாரண யுடுப் அரசியல் ஆய்வாளரே புட்டு புட்டு வைத்து விட்டார்1 point- தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
1 point- யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
சுமத்திரன் அரசியலில் பணம் கண்ட பிணம் லேசிலை அந்த பேய் போகாது ஜோம்பிஸ் பேய் போல தமிழருக்கு தீங்கு விளைவித்தபடி இருக்கும் .1 point- உழைக்கும் கைகள்
1 pointஉழைக்கும் கைகள் அவர்கள் கஸ்ரப்பட்டு உழைக்கும் தொழிலாளிகள். வெயில், மழை, பனி, காற்று... என்று பாரமல் திறந்த வெளியில் நின்று வேலை செய்பவர்கள். அவர்களது கடுமையான உழைப்புக்கு ஏற்ற பணம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் யேர்மனியில், கொக்கைம் நகரில் கடந்த ஜூலை மாதம் முதல் பைபர் ஒப்ரிக் கேபிள்களை (Fiber optic cables) நிலத்தினுள் தாட்பதற்காக ஒரு வீதி பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. அவ்வீதி கேபிள்கள் தாட்கப்பட்டு, செப்பனிடப் பட்டு மக்களின் பாவனைக்காக மீண்டும் ஓகஸ்ட் மாத இறுதியில் திறந்து விடப்பட்டது. 13.09.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை திடீரென இருவர் அதே வீதியில் வேலை செய்ய ஆரம்பித்திருந்தார்கள். ஒருவர் இயந்திரம் (Mini excavator) கொண்டு வீதியை உடைத்துக் கொண்டிருந்தார். மற்றுமொருவர் குடியிருப்புகளுக்கு கேபிள்கள் செல்லும் இடத்தில் பிக்கான் கொண்டு கிளறிக் கொண்டிருந்தார். இருவருமே வேலைக்கான உடைகளை அணியாமல் சாதாரண உடைகளிலேயே வேலை செய்து கொண்டிருந்தார்கள். நான்கு கிழமைகளாக, வீதி வேலைகளால் ஏற்பட்டுக் கொண்டிருந்த சத்தங்களினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த ஒரு குடியிருப்பாளர், ‘வேலை முடிந்து விட்டது தானே. இப்போது ஏன் திடீரென வந்து மீண்டும் வேலை செய்கிறார்கள்? அதுவும் வெள்ளிக்கிழமை மாலை நேரம்! வெள்ளி என்றால் எல்லோரும் வெள்ளனவே ஓடிவிடுவார்களே!’ என்று நினைத்துக் கொண்டவர், என்னதான் நடக்கிறது என்று வெளியில் வந்து பார்த்தால், வீதிகளுக்கான தடுப்புகளைப் போடாமல் அவ்விருவரும் தங்கள் பாட்டில் வேலை செய்து கொண்டிருப்பதை அவதானித்தார். ஏதோ ஒன்று அவருக்குத் தவறாகப் பட நிலத்தைக் கிண்டிக் கொண்டிருப்பவரிடம் பேச்சைக் கொடுத்தார். “எங்களுடைய முதலாளி மூன்று மாதங்களாக எங்களுக்கான சம்பளத்தைத் தரவில்லை. எனக்கு மனைவி, மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். பணத்துக்கு நான் என்ன செய்வது? அந்தக் கோவத்தில்தான் இதைச் செய்கிறோம்” என்றார். பொலிஸுக்குத் தகவல் போனது. பொலீஸ் வந்து அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். இப்பொழுது அந்த இருவரும் கிரிமினல் வழக்கை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. சேதாரம் எவ்வளவு என்று இன்னும் கணிக்கப்படவில்லை. ஆனாலும் வீதியைப் புனரமைக்க கொக்கைம் நகரசபை ஒப்புக் கொண்டுள்ளது. கொக்கைம் நகரசபை எந்த நிறுவனத்திடம் இந்த வேலைக்கான அனுமதியை வழங்கினார்களோ அந்த நிறுவனத்துக்கும் சிக்கல் வந்திருக்கிறது. யேர்மனியிலும் இப்படி நடக்கிறதா? என ஆச்சரியப்படுகிறீர்களா? முதலாளிகள் உலகமே எப்பொழுதும் தனி. பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. “மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே - பசி வந்திடக்காரணம் என்ன மச்சான் அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே சேர்வதினால் வரும் தொல்லையடி” https://www.tagesschau.de/inland/regional/hessen/hr-nach-streit-mit-bauleitung-bauarbeiter-verwuestet-gehweg-in-hochheim-100.html1 point- தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
தேர்தல் வருதென்று தெரிந்தும் நாசூக்காக நழுவிவிட்டு இப்போ மூக்கால் அழலாமா?1 point- யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
வடக்கில் 25 வீதத்திற்கு மேல் சஜித்திற்கு கிடைக்கவிருந்த வாக்குகளை குறைத்து ரணிலுக்கு மடைமாற்றும் முயற்சியில் தீயாய் வேலை செய்கின்றவரை இப்படி சொல்லக் கூடாது.1 point- கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
1 point13 SEP, 2024 | 12:16 PM கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார். அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். அவருக்கு குறித்த காணியை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த காணி தரகர் ஒருவரே அடையாளம் காட்டி, காணி உரிமையாளருடன் பேச்சுக்களையும் நடத்தியுள்ளார். அதனை அடுத்து காணியை கொள்வனவு செய்வதற்கு 85 இலட்ச ரூபாய் பணத்தினை ரொக்கமாக தயார் செய்திருந்தார். அந்த பணத்தினை கனடா வாசி தன்னுடன் வைத்திருந்தார். அவர் அசந்த நேரம் பார்த்து, காணி தரகர் 85 இலட்ச ரூபாய் பணத்தினை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/193566 5000 ரூபாய்த்தாள் வந்ததும் வந்தது 85 லட்சத்தையும் சுலபமா சுருட்ட முடிந்தது.1 point- கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
1 pointஇல்லை கவி. இப்போ நிலமை தலை கீழ்.வெளிநாட்டுக்காறர் தான் இங்குள்ள காணிகளை வாங்குறார்கள்.ஏற்க்கனவே விற்றவர்கள் கூட அதே காணியை அதிக விலை கொடுத்த கதையும் உண்டு.1 point- கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
1 pointஇதைத் தான் ஆட்டையை போட்டவரும் சொல்லப்போறார்.????1 point- கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
1 pointஅப்பிடியே உரிச்சு படைச்சு ஊரிலை ஆட்டைய போடுற சனங்களின்ர வாசனை வருது. 😂1 point- வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
1 pointஇருப்பும் அடிப்படை வாழ்க்கை பிரச்சனைகளும் மிகவும் முக்கியானது. ஆனால்ஜேவிபி வந்தால் முழு இலங்கைக்கும் தீமை.1 point- தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது -நிலாந்தன்
தமிழ் மக்களை திரட்டி இவர்கள் பதவிக்கு வருவதுடன் தமிழ் மக்களை திரட்சியாக துன்பத்தில் இவர்கள் வைத்திருக்கலாம்1 point- தெற்கின் அரசியற்களமும் வடக்கின் அரசியல் முகமும்
தெற்கின் அரசியற்களமும் வடக்கின் அரசியல் முகமும் September 15, 2024 — கருணாகரன் — சிங்களத் தரப்பிலிருந்து இந்தத் தடவை இனவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தற்பரப்புரைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதற்காக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களெல்லாம் இனவாதத்தைத் துறந்து விட்டார்கள், கடந்து விட்டார்கள் என்றில்லை. அதற்கான சூழல் இல்லை என்பதே முக்கியமான காரணமாகும். அரசியல் வரலாறு என்பதே அப்படித்தான். எப்போதும் ஒரே மாதிரி இருப்பதுமில்லை. எல்லாம் கனிந்துதான் நிகழ்வது என்றுமில்லை. சூழ்நிலைகளே பல சந்தர்ப்பங்களிலும் மாற்றங்களை நிகழ்த்துவன. அப்படியானதொரு நிர்ப்பந்தச் சூழல் சிங்களத்தரப்புக்கு இப்பொழுது உருவாகியுள்ளது. ஏனென்றால் வழமையை விட இந்தத் தேர்தற் களமானது வித்தியாசமான – பலமுனைப் போட்டிக்குரியதாகி விட்டது. அதனால் தனியே சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்ற யதார்த்தத்தை பிரதான போட்டியாளர்கள் உட்பட எல்லோருக்கும் உணர்த்தியுள்ளது. இதனால் வெற்றியைப் பெறுவதாக இருந்தால் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெற்றே தீர வேண்டும். அப்படித் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெறுவதாக இருந்தால் இனவாதத்தை – சிங்கள பௌத்தத் தீவிரவாதத்தை முன்னிறுத்த முடியாது. மட்டுமல்ல, முடிந்த அளவுக்குத் தமிழ் பேசும் மக்களிடம் இறங்கிச் செல்ல வேண்டும். தமிழ்பேசும் சமூகத்தினருடன் எப்படியாவது சில சமரசங்களைச் செய்ய வேண்டும் என்ற தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தனியே ஜனாதிபதித் தேர்தலுக்கு மட்டுமல்ல, பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதையொட்டியதாக நிகழப்போகும் ஆட்சிக்கும் பொருந்தும். இதனால்தான் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படும் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசநாயக்க ஆகிய மூவரும் இனவாதத்தை அடக்கி வாசிக்கிறார்கள். வடக்குக் கிழக்கில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். சஜித் இன்னும் நான்கு படிகள் கீழிறங்கி வந்து தமிழ்பேசும் தரப்புகளோடு அரசியற் கூட்டையே உருவாக்கியிருக்கிறார். இது ஒரு மாற்றம் என்பதைப் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். கூடவே இது தமிழ்பேசும் தரப்பினருக்குச் சாத்தியமான ஒரு நிலை என்பதை விளங்குவதும் நல்லது. இனவாதத்தைப் பேசாமல் தென்பகுதி வாக்காளரிடம் (சிங்கள மக்களிடம்) வாக்கைச் சேகரிக்க வேண்டிய நிலை பிரதான போட்டியாளர்களுக்கு ஏற்படுவதென்பது சாதாரணமானதல்ல. சிங்கள மக்களுக்கும் இது புதிதாகவே இருக்கும். மட்டுமல்ல, பிரதான போட்டியாளர்கள் அனைவரும் தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என ஒரு முகமாகச் சொல்வதும் – ஏற்றுக் கொண்டிருப்பதும் நிகழ்ந்திருக்கிறது. இதுவும் சிங்கள மக்களிடம் ஒரு அடிப்படைப் புரிதலை, புதிய போக்கின் தேவையை உணர்த்தும். இதனால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு அமையவுள்ள புதிய அரசாங்கமும் ஆட்சியும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை மேற்கொள்வதற்கு ஒரு அடித்தளம் ஏற்பட்டுள்ளது எனலாம். என்பதால் தமிழ்த்தரப்பு இதை, இந்தச் சூழலைப் பொறுப்புடனும் விவேகத்தோடும் கையாள வேண்டும். எந்த நிலையிலும் எதிர்நிலை எடுத்து இதைப் பாழாக்கக் கூடாது. ஆனால், கெடுகுடி சொற்கேளாது என்ற மாதிரி, தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தி, நிலைமையைப் பாதமாக்குவதற்கே தீவிரத் தமிழ்த்தேசியத் தரப்புகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன. சிங்களத் தரப்பு இனவாதத்தைக் கைவிட்டாலும் அதை நாம் கைவிட மாட்டோம் என்ற கணக்கில் துயரத்தை – வில்லங்கத்தை விலை கொடுத்துத் தோளில் தூக்கிச் சுமப்பதற்குப் பாடாய்படுகிறது. இந்தத் தரப்பின் தவறான முடிவுக்கு முழுத் தமிழ்ச்சமூகமும் (சிலவேளை தமிழ்பேசும் மக்கள் அனைவரும்) விலை கொடுக்க வேண்டியிருக்கும். என்பதால்தான் தமிழ்ப்பொது வேட்பாளரை நாம் தீவிரமாக மறுக்க வேண்டியுள்ளது. அதாவது ஒட்டு மொத்தத் தமிழ்ச்சமூகத்தையும் பாதுகாப்பதற்காக தமிழ்ப்பொது வேட்பாளரை நிராகரிக்க வேண்டும். இதொரு வரலாற்றுக் கடமையாகும். ஆனால், இதை அவர்கள் (தீவிரத் தேசியவாதிகள்) மறுத்து, நியாயத்தை உரைப்போரையும் சரிகளை வலியுறுத்துவோரையும் துரோகிகளாகச் சித்திரிக்கவே முற்படுவர். அல்லது பிற சக்திகளின் கைக்கூலிகள், இனத்தின் சகுனிகள் என்றெல்லாம் வியாக்கியானப்படுத்துவர். அப்படி இவர்கள் சொல்லும்போது நாம் சரியாகவும் நியாயமாகவும் சிந்திக்கிறோம் என்று விளங்கிக் கொள்ளலாம். ஏனென்றால், உண்மையும் நியாயமும் சரியும் இவர்களுக்கு எதிரானதாகவும் துரோகத்தனமானதாகவுமே தோன்றும். பிழையாகச் சிந்திப்பவர்களால் சரிகளை ஒருபோதுமே விளங்கிக் கொள்ள முடியாது. மட்டுமல்ல, சரிகளை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் “கடவுள் என்பது துரோகியாக இருத்தல்” தான். பழம் நழுவிப் பாலில் விழுந்தாலும் அந்தப் பழம் சரியில்லாதது, சந்தேகத்திடமானது என்றே சொல்வார்கள். ஆனால், இப்பொழுது தமிழ்ச்சமூகத்துக்கு வாய்ப்பான சூழல் (பழம்) கனிந்துள்ளது. இதை மேலும் விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் தற்போதைய சூழல் எப்படியுள்ளது? எவ்வாறு தமிழ் பேசும் சமூகங்களுக்கிசைவாகக் கனிந்து வந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். வழமையாக இரண்டு பிரதான வேட்பாளருக்கிடையில்தான் போட்டி நடப்பதுண்டு. இதற்காக ஒவ்வொருவரும் உச்சமாக இனவாதத்தை முன்னிறுத்துவர். அல்லது ஒருவர் தீவிர நிலையில் இனவாதத்தைப் பேசிச் சிங்கள வாக்குகளை இலக்கு வைக்க, மற்றவர் சற்றுக் கீழிறங்கித் தமிழ்பேசும் மக்களின் வாக்குகளையும் சேர்த்துக் கொள்ள முயற்சிப்பார். கடந்த கால் நூற்றாண்டுகால அரசியல் ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது. இந்த அடிப்படையில்தான் வெற்றி – தோல்விகளும் அமைந்தன. 2010 இல் பெரும்பான்மைச் சிங்கள வாக்குகளால் மகிந்த ராஜபக்ஸ வெற்றியைப் பெற்றார். 2015 இல் தமிழ்பேசும் மக்களின் ஆதரவோடு மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்தார். 2020 இல் தனிச் சிங்கள மக்களின் ஆதரவோடு கோட்டபாய ராஜபக்ஸ வெற்றியீட்டினார். இப்போதைய தேர்தற்களம் இதிலிருந்து மாற்றமடைந்து, இந்த நிலையை – இந்த யதார்த்ததை – மறுதலித்துள்ளது. இது நான்குமுனைப் பிரதான வேட்பாளர்களைக் கொண்டதாக உருவாகியுள்ளது. சிங்கள அரசியற் தரப்பில் ஏற்பட்டிருக்கும் முரண்களும் பிளவுமே இதற்குக் காரணமாகும். இது சிங்களத் தரப்பில் தவிர்க்க முடியாதவொரு பலவீனத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தப் பலவீனமான தருணத்தைப் பலமாக்குவதற்கு தமிழ் பேசும் சமூகங்கள் முன்வர வேண்டும். சிங்களத் தரப்பில் இந்த மாதிரிப் பலமுனைப் போட்டியாளர்கள் (அது எந்தத் தேர்தலாக இருந்தாலும்) களமிறங்கும்போதெல்லாம் தமிழ்பேசும் தரப்பினருடைய பலத்தைப் பெருக்கலாம். அதைப் பேரபலமாக்கலாம். சமநேரத்தில் இனவாதத்தை முன்னிறுத்தும் சிங்கள அரசியற் போக்கிலும் மாற்றம் நிகழும் என்பதை இது காட்டுகிறது. ஆகவே தமிழ்பேசும் சமூகத்தினருக்கு இதொரு வாய்ப்பான சூழலாகும். இதுபோன்ற வாய்ப்பான சூழல் எப்போதும் அமையாது. அப்படி அமையும்போது அதைக் கெட்டித்தனமாகப் பற்றிப் பிடித்துச் செய்யக் கூடிய காரியங்களைச் செய்து விட வேண்டும். அதுவே புத்திசாலித்தனமான அரசியற் செயற்பாடாகும். ஒடுக்கப்படும் மக்கள் எப்போதும் உச்ச விழிப்பிலிருக்க வேண்டியது அவசியமாகும். அவர்களுக்கு அபூர்வமாகவே இந்த மாதிரி வாய்ப்பான சந்தர்ப்பங்கள் அமையும். அதிலும் சிறுபான்மையினராகவும் ஒடுக்குப்படும் மக்களாகவும் இருக்கும் சமூகத்தினருக்கு வாய்ப்புகள் மிகமிகக் குறைவாகும். அல்லது மிகக் கடினமான – உறுதியான போராட்டங்களின் மூலம் தமக்கான வாய்ப்புச் சூழலை உருவாக்க வேண்டியிருக்கும். அப்படி உருவாக்கக் கூடிய நிலையும் தலைமைகளும் தமிழ் மக்களிடம் இன்றில்லை. ஓரளவுக்கு இதைப் புரிந்து கொள்ளும் தலைமைகளை மக்களும் புத்திஜீவிகளும் ஊடகங்களும் இனங்கண்டு வளர்த்துக் கொள்வதுமில்லை. எனவே அபூர்வமாகக் கிடைக்கின்ற வாய்ப்புகளை அலட்சியமாகவும் பொறுப்பற்றும் விடாமல் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அலட்சியாகக் கைவிடக் கூடாது. அல்லது தவறான விளக்கத்தின் அடிப்படையில் பிழையான முடிவுகளை எடுத்துப் பாழாக்கக் கூடாது. அப்படிப் பாழாக்கினால் அது மேலும் பெரும் பின்னடைவுகளையும் பேரிழப்பையுமே தரும். அதாவது மீண்டுமொரு முள்ளிவாய்க்காலை ஒத்த “கஞ்சிப் பாட்டு” ப்பாடும் வாழ்க்கையையே பரிசளிக்கும். தமிழ்க் கூட்டு மனநிலையானது எப்போதும் தாழ்வுணர்ச்சிக்குட்பட்டே உள்ளது. தன்னிலும் தன்னுடைய திறன்களிலும் நம்பிக்கையற்ற தன்மையோடிருக்கிறது. தன்னைத் தவிர்ந்த ஏனைய சமூகத்தினர் எப்போதும் தன்னை வீழ்த்த முற்படுகின்றனர், எதிர்க்கின்றனர் என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பிற சமூகங்களை எப்போதும் எதிர்நிலையில் தள்ளி வைத்தே பார்க்க விளைகிறது. இதைப்பற்றி எழும் அச்ச உணர்வினால் உச்ச எதிர்ப்பு நிலையை எடுக்கிறது. அப்படி எடுக்கப்படும் உச்ச எதிர்ப்பு நிலை மேலும் இடைவெளிகளையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று அனுபவ ரீதியாகத் தெரிந்து கொண்டாலும் அதிலிருந்து விடுபட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இதற்காக அது தன்னையும் சூழலையும் மாற்றங்களையும் திறந்த மனதோடு புரிந்து கொள்ள முற்பட்டாலே இந்தத் தாழ்வுணர்ச்சியிலிருந்து விட முடியும். அதற்கான பணிகளை – ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது, தமிழ்ச் சமூகத்திற்குள்ளிருக்கும் புத்திஜீவிகளும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் சிந்திக்கக் கூடியோருமாகும். துரதிருஸ்டமான நிலை என்னவென்றால் தமிழ்ப் புத்திஜீவிகள் புதிய வழிகளையும் மாற்றத்துக்கான திசைகளையும் காட்டுவதற்குப் பதிலாக சூழலில் என்ன நிலைமை உள்ளதோ அதற்குப் பின்னால் போய் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அல்லது அந்தச் சூழலோடு சேர்ந்து இழுபடுகிறார்கள். கட்சிகளின் தலைவர்கள் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் மாற்றத்துக்கான வழிகளைக் காண்பதற்கும் காட்டுவதற்கும் பதிலாக அவர்களும் சேர்ந்து கும்மியடிக்கிறார்கள். இதற்கொரு எளிய உதாரணம், தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பாக மாற்றுக் கருத்துள்ள ஒரு தலைவர் சித்தார்த்தனாகும். தமிழ்ப் பொதுவேட்பாளரைப் பற்றிய கதை தொடங்கியபோதிருந்து தனக்கு நெருக்கமான அனைவரிடத்திலும் “இதொரு வெங்காய வேலை” என்ற கணக்கில் பேசிக் கொண்டிருந்தவர் சித்தார்த்தன். ஆனால், இப்பொழுது தமிழ்ப்பொது வேட்பாளருக்காகத் தெருவிலிறங்கி நோட்டீஸ் கொடுக்கிறார். இது எவ்வளவு முரணும் பலவீனமான நிலையுமாகும்? சித்தார்த்தனைப்போலவே, பல்கலைக்கழக சமூகத்தினர், பேராசிரியர்கள், ஊடகங்களில் ஒரு தொகுதியானவை, மதபீடங்கள் எல்லாத் தரப்பும் கூடிக் கும்மியடிக்கின்றன. இந்தத் தவறுக்கு வடக்கே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். வடக்கிலுள்ள ஊடகங்கள், அரசியல் தலைமைகள், தமிழ்ச்சிவில் சமூகத்தினர் என்ற லேபிள்களை தம்மீது ஒட்டிக் கொண்டோர், தமிழ்த்தேசியப் பத்தியாளர்கள் என அனைவரும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும். வடக்கிலிருந்து எடுக்கப்பட்ட தவறான முடிவுக்கு கிழக்கையும் விலை கொடுக்க வைப்பதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர். கிழக்கின் அரசியற் சூழல், அங்கே தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அது எதிர்கொள்கின்ற பல்வேறு சவால்கள், அங்குள்ள யதார்த்த நிலை என எதைப்பற்றிய புரிதலும் இல்லாமல் அங்கே மேலும் நெருக்கடியை உருவாக்கும் விதமாகவே வடக்குச் செயற்படுகிறது. கடந்த காலத்திலும் வடக்கு அப்படித்தான் செயற்பட்டிருக்கிறது. கிழக்கின் துயரங்களை வடக்குப் பகிர்ந்த வரலாற்றுத் தருணம் இரண்டு தடவை மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. ஒன்று 1978 இல் வீசிய சூறாவளி அர்த்தத்தின்போது. அடுத்தது. 2002 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்ததின்போது. மற்றக் காலம் முழுவதும் அது கிழக்கைப் பயன்படுத்தவே விளைந்திருக்கிறது. குறிப்பாக அரசியல் ரீதியாக. இப்படிச் சொல்வதை மறுதலித்து, இதொரு பிரதேசவாதம் என்ற அடிப்படையில் சிலர் குற்றச்சாட்டை முன்வைக்கலாம். அவர்கள் கிழக்கிற்கு வந்து நிலைமைகளைப் பார்க்க வேண்டும். கிழக்கில் சமூக வேலை செய்ய வேண்டும். அவர்களை வாகரையிலும் படுவான்கரையிலும் சந்திக்கத் தயார். முடிவாக, காலம் கனியாகிக் கைகளில் விளைந்திருக்கும் இந்த ஜனாதிபதித் தேர்தலையும் அடுத்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலையும் புத்திபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்வோம். வெற்றியை எமக்காக்கிக் கொள்வோம். ஆம், வெற்றி என்பது தேர்தலில் போட்டியிடுவோருக்கு அல்ல. தேர்தலைக் கையாள்வோருக்கும் வாக்களிக்கும் மக்களுக்குமாக மாற்றப்பட வேண்டும். https://arangamnews.com/?p=112431 point- சோழர், பல்லவர் காலத்திலேயே செயல்பட்ட நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்தின் வரலாறு
படக்குறிப்பு, இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கடல் போக்குவரத்து சேவை தமிழகத்தில் மீண்டும் துவக்கம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் விமானத்தின் மூலமே சென்றடைகிறார்கள் என்றாலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில், கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான இடம் இருந்தது. தமிழக கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம், மரக்காணம், பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. நூற்றாண்டு கால கப்பல் போக்குவரத்து வரலாற்றை கொண்ட நாகை இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துறைத் தலைவரும் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சு. இராசவேலு, இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான போக்குவரத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறினார். "பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்கள் 2,500 ஆண்டுகளாக தமிழகத்தின் துறைமுகங்களில் நங்கூரம் இட்டன. தமிழகத்தின் வணிகர்கள், வணிகக் குழுக்களாக இணைந்து பல்வேறு நாடுகளோடு வர்த்தகம் செய்ததாகக் கூறும் சு.இராசவேலு, "அவ்வகையில் நாகப்பட்டினம் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக துறைமுக நகராக விளங்கி வந்திருக்கிறது," என்றார். அவரது கூற்றுப்படி, நாகப்பட்டினம் அயல் நாட்டு ஆய்வாளர்களால் நிகமா என அழைக்கப்பட்டது. கிரேக்கப் பயணியான தாலமி தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள நிகமா என்னும் துறைமுக நகரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். "நிகமா என்று அவர் குறிப்பிடும் துறைமுக நகரம் நாகப்பட்டினம்தான் என ஸ்காட்லாந்தை சார்ந்த நிலவியல் அறிஞரும் கடலோடியுமான கர்னல் யூல் கி.பி.1873ஆம் ஆண்டு அடையாளம் கண்டார். சங்க காலத்தில் காவேரிப்பூம்பட்டினம் ஒரு சிறந்த துறைமுகமாக விளங்கி வந்ததால், சங்க கால இலக்கியங்களில் நாகப்பட்டினம் துறைமுகம் தொடர்பான செய்திகள் அதிகம் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் நிகமா என்னும் பெயர் நாகப்பட்டினத்தைக் குறிக்கலாம் என்ற குறிப்பிலிருந்து இக்கடற்கரை நகரம் கடல் வாணிகம் செய்து வந்த பெருவணிகர்களைக் கொண்டு விளங்கி வந்துள்ளதை அறிய முடிவதாக" கூறுகிறார் பேராசிரியர் சு.இராசவேலு. வர்த்தக தலைநகரமாகத் திகழ்ந்த பண்டைய நாகை பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சு. இராசவேலு நிகமா என்னும் சொல் தமிழிக் கல்வெட்டுகளிலும், மட்கல ஓடுகளிலும் குறிக்கப்பட்டுள்ள வணிகக் குழுவோடு தொடர்புடையது. நிகமம் என்றால் பெருவணிகர்கள் வாழ்கின்ற ஊர் எனப் பொருள்படும். எனவே நாகப்பட்டினம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மிகச் சிறந்த வணிக நகரமாக விளங்கியிருக்கலாம் என்கிறார் பேராசிரியர் இராசவேலு. கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவராப் பாடல்களில் இந்நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. மாட மாளிகைகளையும் மணிமண்டபங்களையும் நெடிய மாடங்களையும் நீண்ட வீதிகளையும் கொண்டு, அலை தழுவும் நகரமாகவும் கோட்டை மதிலுடன் கூடிய நகரமாகவும் இந்நகரைப் பற்றி தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது. இந்நகரில் பல வணிகர்கள் வாழ்ந்ததையும் பல நாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதையும் குதிரைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதையும் தேவாரப் பாடல்கள் குறிக்கின்றன. தொடக்க கால கல்வெட்டுகளிலும் தேவாரப் பாடல்களிலும் நாகப்பட்டினம் நாகை எனும் பெயரில்தான் வழங்கப்பட்டுள்ளது. நாகையில் சீனக் காசுககளும் சீனர்கள் பயன்படுத்திய பானை ஓட்டுச் சில்லுகளும் கிடைத்துள்ளன. இதனால், சீனாவிலிருந்து கப்பல்கள் இத்துறைமுகத்தில் நங்கூரம் இட்டு பின்னர் இலங்கைத் தீவிற்கும் பிற நாடுகளுக்கும் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நாகப்பட்டினத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் உள்ள தனிக்கல் ஒன்றில் "நாகைப் பெருந்தட்டான்" என்ற பெயர் காணப்படுகிறது. கிபி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டே இவ்வூரில் கிடைக்கும் பழமையான கல்வெட்டாகும். இக்கல்வெட்டு பல்லவர் கால எழுத்து வடிவில் இருக்கிறது. எனவே பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக நாகை விளங்கியிருக்கலாம் எனக் கூறுகிறார் சு.இராசவேலு. "தட்டான் என்பது உலோக வேலைப்பாடுகள் செய்கின்ற மக்களைக் குறிக்கும். சோழர் காலத்தில் நாகையில் தயாரிக்கப்பட்ட பல பௌத்த படிமங்கள் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் சென்றுள்ளன." சோழர்களின் கப்பற்படை தளமாக செயல்பட்ட நாகை படக்குறிப்பு, நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து 2000 ஆண்டுகால வரலாற்றை கொண்டது சிற்பிகளும் வணிகர்களும் வாழ்ந்த பகுதியாக இந்நகரம் இருந்திருக்கிறது என்பதை வரலாற்று, இலக்கிய, மற்றும் தொல்லியல் தரவுகள் மூலம் புரிந்துகொள்ளலாம். இந்நகரம் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான குடவையாறு மற்றும் உப்பனாறு ஆகிய ஆறுகளின் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்ததால், தேவாரத்தில் இந்நகர் "கழி சூழ் கடல் நாகை" எனக் குறிப்பிடப்படுகிறது. அப்பரும், சம்பந்தரும் நாகை துறைமுகத்தில் பல்வகை கலங்கள் நின்றிருந்ததைக் குறிப்பிடுவதுடன் இத்துறைமுகத்தில் கற்பூரமும் யானைகளும் கப்பல்களில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்ததையும் துறைமுக கண்காணிப்பாளர்கள் இவற்றுக்குச் சுங்கவரி வசூலித்ததையும் குறிப்பிடுகின்றனர். ஆரம்பத்தில் நாகை எனக் குறிப்பிடப்பட்ட இந்நகரம், சோழர் காலத்தில்தான் பட்டினம் என்னும் வார்த்தையுடன் சேர்ந்து நாகப்பட்டினம் என்ற பெயருடன் அழைக்கப்படலாயிற்று. நாகை என்னும் பெயர் கடல் சங்கைக் குறிக்கும் நாகு என்னும் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார் சு.ராசவேலு. பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சோழர்கள் தொன்மைத் துறைமுகமான காவேரிப்பூம்பட்டினத்தைத் தவிர்த்து நாகப்பட்டினத் துறைமுகத்திற்குச் சிறப்பிடம் அளித்தனர். இவர்கள் காலத்தில் இந்நகரம் மிகச் சிறந்த வணிக நகரமாகவும் சோழர்களின் கப்பற்படை இருந்த நகரமாகவும் விளங்கியது. படக்குறிப்பு, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் முதலாம் பராந்தக சோழர் தனது மூன்றாவது ஆட்சியாண்டில் ஈழத்தைக் கைப்பற்றி 'மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்னும் பட்டத்தை வைத்துக் கொள்கின்றார். எனவே இந்த மன்னரின் ஆட்சிக் காலத்திலேயே சோழர்கள் சிறந்ததொரு கப்பற்படையை வைத்திருந்துள்ளனர் என அறியலாம். அதன்மூலம் இலங்கையைக் கைப்பற்றியதுடன் இலங்கை அரசர்களுடன் நட்புறவு பாராட்டிய பாண்டியர்களையும் முதலாம் பராந்தக சோழர் வெற்றி பெற்றார். தொடர்ந்து சோழ மன்னன் ராஜராஜன் காலத்தில் அவரது மகன் ராஜேந்திர சோழன் நாகப்பட்டினத்தை சோழர்களின் சிறந்த துறைமுக நகரமாக மாற்றியதோடு பல கப்பல்களை அங்கிருந்து செலுத்தும் வகையில் நாகை துறைமுகத்தை விரிவுபடுத்தினார். கேரளப் பகுதியிலிருந்து வந்த வணிகர்களும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் செல்ல நாகைப்பட்டினத் துறைமுகத்தையே பயன்படுத்தியுள்ளனர். நாகை அருகேயுள்ள கீழையூர் சிவன் கோவிலில் யவனர்கள் குறித்த முதல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்கு உட்பட்ட கீழையூர் கைலாசநாதர் கோவிலில் கி.பி.1287ஆம் ஆண்டைச் சார்ந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டில் "யவனர் திடர்" என்ற சொற்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் யவனர்கள் பற்றிய சொல் பயன்பாட்டுடன் கூடிய முதல் கல்வெட்டு இதுதான். 'யவனர் திடர்' என்பது 'யவனர் திடல்' எனப் பொருள்படும். இது, யவனர்கள், அதாவது மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்த வணிகர்கள் குடியிருந்த பகுதியாகக் கருதப்படுகிறது. படக்குறிப்பு, சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இருந்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது சோழர்களுக்குப் பின் தஞ்சாவூர் நாயக்கர் காலத்திலும் இத்துறைமுக நகரம் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இருந்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. போதிய பயணிகள் இன்மையால், அந்தச் சேவை நிறுத்தப்பட்டு, இந்த ஆண்டு மறுபடியும் தொடங்கப்பட்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2ylzmlndjo1 point- வாளேந்தும் எதிரியை விட உடனிருக்கும் வேடதாரியை முதலில் வீழ்த்திடு
நடைமுறை அரசியல் மிகக் கடினமான பாடங்களை கற்றுத் தந்திருக்கின்றது. பலம் வாய்ந்த சக்தியை அழிக்க மென்மையான இராஜதந்திரத்தை ஒரு கூரிய ஆயுதமாக பயன்படுத்தும் வித்தை அரசியலில் உண்டு. முள்ளிவாய்க்காலின் பின் இத்தகைய ஒரு தந்திரத்தை எதிரி மிகச் சாதுரியமாக அரங்கேற்றி வருகின்றார். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பின்தள்ள காலனிய ஆதிக்க எஜமான் ஒரு இலகுவான தந்திரத்தை பிரயோகித்தார். அதே தந்திரத்தைத்தான் இப்பொழுது தமிழ் மண்ணில் சிங்கள பேரினவாத சக்திகள் அரங்கேற்றி வருகின்றன. சுதந்திரத்திற்கு முன் பிரித்தானியாவை விடவும் சுமாராக 21 மடங்கு பெரிய நிலப்பரப்பை கொண்ட இந்தியாவை 7,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள பிரித்தானியாவால் இலகுவாக கட்டுப்படுத்தவும் ஆளவும் முடியாது. கோடாலி காம்புகள் அதற்கு வெறும் புயபல பராக்கிரமம் மட்டும் போதுமானதல்ல. சதிகளும், சூழ்ச்சிகளும், இராஜதந்திர வியூகங்களும் அவசியமானவை. அந்த வகையில் இந்திய மக்கள் பெரும் கிளர்ச்சிகளிலோ, ஆயுதம் தாங்கிய போராட்டங்களிலோ ஈடுபடாமல் தடுப்பதற்காக பிரித்தானியரே இந்திய தேசிய விடுதலை அமைப்பை மிதவாத தலைமைகளுக்கு ஊடாக முன்னெடுக்க வேண்டுமென பிரித்தானிய ஆட்சியாளர்கள் தீர்மானித்தனர். இதற்கமைய, A. O. ஹியூம் ( A.O. Hume ) என்ற பிரித்தானிய உளவாளியினால் 1885ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய அதிர்ச்சியூட்டும் செய்திகள் பிற்காலத்திற்தான் தெரியவந்தன. இலங்கை அரசியலில் தமிழரை தோற்கடிப்பதற்கு தமக்கான நேரடி கையாட்களாக டி.எஸ். சேனநாயக்க அ.மகாதேவாவையும், சிறிமாவோ பண்டாரநாயக்கா குமாரசூரியர், ஆல்பிரட் துரையப்பா போன்றோரையும், ஜே.ஆர்.ஜெயவர்த்தன கலாநிதி ஆ.தியாகராஜாவையும் தத்தமது கட்சிகளின் சார்பில் நேரடியாக பயன்படுத்தினர். அவ்வாறு பயன்படுத்தியமை பெரிதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தின. இத்தகைய அனுபவங்களில் இருந்து சிங்கள இனவாதம் புதிய பாடங்களை கற்றுக்கொண்டது. அதன்படி முள்ளிவாய்க்காலின் பின்பு இராணுவ ரீதியான இனப்படுகொலையின் வாயிலாக தமிழரின் விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டாலும் அதனை வேரோடு அழிப்பதற்கு அரசியல், இராஜதந்திர ரீதியான வழிகள் முக்கியம் என்பதை உணர்ந்தனர். தமிழருக்கான தலைமைத்துவத்தை சிதைப்பதை அவர்கள் முக்கிய இலக்காகக் கொண்டனர். இதன்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு வாய்ப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழ் தலைவர்களை உருவாக்க முற்பட்டனர். குறிப்பாக தமிழரசு கட்சிக்குள் அத்தகைய கோடாலிக் காம்புகளை தமது கையாட்களாக வெளியில் இருந்து புகுத்துவதை நீண்ட கால நோக்கினான முதலாவது தெரிவாகவும் கூடவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கக்கூடிய புல்லுருவிகளை தமது கையாட்களாக மாற்றுவதை இன்னொரு வழிமுறையாகவும் கொண்டனர். 1977 - பொது தேர்தல் முதல் கட்டமாக அத்தகைய கோடாலிக் காம்புகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதில் வெற்றி கண்டன. அடுத்த கட்டமாக தமிழரசுக் கட்சியை உடைப்பதில் திறமையாக செயற்பட்டனர். அதுவும் இப்போது துண்டுபட்டு போய் உள்ளது. பொருத்தமான தருணங்களில் அந்தத் தமிழரசு கட்சியை முடக்குவதிலும் வெற்றி பெற்றனர். குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழரசு கட்சியை முடக்கும் வகையில் அதனை நீதிமன்றம் வரை இழுத்து தமது சதிகார அரசியலை வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளனர். இப்போது இந்தத் தமிழரசுக் கட்சிக்குள் புகுந்துள்ள இத்தகைய உளவாளிகளை கட்சிக்குளிருந்து அம்பாந்தோட்டைக் கடல் வரை துரத்தி அடிக்காமல் தமிழரசு கட்சியை மீட்கவோ, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கவே முடியாது. தமிழர் விடுதலை கூட்டணி 1980ஆம் ஆண்டு ஜே.ஆர் இன் மாவட்ட அபிவிருத்திச் சபைக்குள் சரணடைந்த காலத்தில் "கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான் ஜீப்" , "அமீர் அண்ணாச்சி தமிழீழம் என்னாச்சு?" என்ற கோஷங்களுடன் இளைஞர், யுவதிகளும் மக்களும் எழுந்தனர். தமிழ் மக்களின் தன்னிகரில்லா தலைவனாய் 70களின் பிற்பகுதியில் எழுந்த அமிர்தலிங்கத்திற்கு, 1977 பொது தேர்தலின் மூலம் மக்களின் பேராதரவுடன் பெரும் தலைவனாய் அமிர்தலிங்கம் மணிமுடி சூடிக்கொண்டார். அவ்வாறு ஒரு பெரும் தலைவனாய் திகழ்ந்த அமிர்தலிங்கத்திற்கு 1981ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் கொடும்பாவி கட்டி எரிக்கப்பட்டது. அன்றிலிருந்து அமிதலிங்கத்தாலும் அவரது ஒத்தூதிச் சகாக்களினாலும் தமிழ் மண்ணில் தங்கள் சொந்த கிராமங்களுக்குக்கூட போக முடியாத நிலை இருந்தது. கிராமங்களிலுள்ள கோவில்களுக்குக்கூட அமிர்தலிங்கத்தால் போகமுடியவில்லை. முள்ளிவாய்க்கால் சம்பவம் அப்படி என்றால் முள்ளிவாய்க்காலின் பின்பு ஹாயூம்ங்களாய், கோடாலிக்காம்புகளாய் வலம் வருபவர்களின் கதி என்ன? 69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாய் மணிமுடி தரித்துக்கொண்ட கோட்டாபயவையும், ராஜபக்சக்களையும் வாக்களித்த அதே மக்களே நிற்க, இருக்க இடம் இல்லாமல் நாடுவிட்டு நாடு துரத்தினர். சிம்மாசனத்திலிருந்து இழுத்து வீழ்த்தினர் என்ற கண்கண்ட வரலாற்றை மறந்திட முடியாது. கொள்கையும், இலட்சியமும், தமிழ் பற்றும்மிக்க தமிழரசு கட்சி தொண்டர்களே நீங்கள் யாரும் கட்சியை விட்டு வெளியேற வேண்டாம். மாறாக எதிரியால் கட்சிக்குள் புகுத்தப்பட்டிருக்கும் சதிகார ஹியூம்ங்களையும், கோடாலிக் காம்புகளையும், வேடதாரிகளையும் கட்சியைவிட்டு ஓட ஓட துரத்தி அடியுங்கள். அதுதான் உண்மையான ஜனநாயகம். மைத்திரிபால - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஒரு வருடத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு காணப்படும் என்றும் அப்படி இல்லையேல் தான் பதவி விலகுவேன் என்றும் மேடைக்கு மேடை முழங்கிய அ.சுமந்திரன் ஜனநாயகத்தின் பெயரால் தான் வாக்குறுதி அளித்தபடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தமிழரசு கட்சி தொண்டர்களே ஜனநாயக ரீதியாக குரல் எழுப்புங்கள். தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டியது அவரது ஜனநாயக பூர்வமான கடமை. அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது அவரது பொறுப்பு. அதை நடைமுறையாக்க வேண்டியது தமிழரசு கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரினதும் கடமையும், பொறுப்பும், பணியுமாகும். இதுவரை எதிரியால் கொன்றொழிக்கப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களின் பேரால், முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் சிறுவர்கள் கற்பிணித் தாய்மார், பெண்கள் வயோதிபர்கள் என கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் பேரால், இதுவரை காலமும் ஏற்பட்ட அளப்பெரும் இழப்புக்கள், ஒப்பற்ற தியாகங்கள் என்பனவற்றின் பேரால் இத்தகைய ஹியூம்களையும், கோடாலி காம்புகளையும் முதலில் அகற்றி போராட்டத்தை சுத்திகரிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையும் பொறுப்புமாகும். https://tamilwin.com/article/political-article-tamilwin-lamkasri-17260512781 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointரஜீவைச் சந்தித்த தலைவர் பிரபாகரன் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் புரட்டாதி 18 ஆம் திகதி தில்லியை வந்தடைந்தனர். அங்கு ஐந்து சுற்றுப் பேச்சுக்களை அவர்கள் நடத்தினர். இரு சுற்றுப் பேச்சுக்கள் ரொமேஷ் பண்டாரியுடனும், ரஜீவ் காந்தியுடன் 90 நிமிட பேச்சுவார்த்தையும், இந்திய வெள்யுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இரு சுற்றுப் பேச்சுக்களும் அவர்களால் நடத்தப்பட்டன. ரஜீவ் காந்தியுடனான ஈழத்தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களின் பேச்சுக்கள், ரஜீவின், தன்னை வந்து உடனடியாகச் சந்திப்பதற்கான கோரிக்கைக்கு தம்மால் ஏன் உடனடியாகப் பதிலளிக்க முடியாது போனது என்பதற்கான பிரபாகரனின் விளக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. ரஜீவின் கோரிக்கை விடுக்கப்பட்ட நாட்களில் தான் வட இலங்கையில் இருந்ததாகவும், பாலசிங்கத்தை இந்தியா நாடுகடத்தியிருந்ததாகவும் பிரபாகரன் ரஜீவிடம் தெரிவித்தார். அத்துடன் ரஜீவ் தன்னை வந்து சந்திக்குமாறு கோரிக்கை விடுத்த நாட்களின்போதும் பிரபாகரன் வட இலங்கையிலேயே தொடர்ச்சியாகத் தங்கியிருந்தார். பாலசிங்கத்தை இந்தியா நடுகடத்தியமையினை தான்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றும், அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவே தான் ரஜீவின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். "நான் உங்களை வந்து சந்திப்பதை தவிர்க்க விரும்பவில்லை. உண்மையைச் சொல்வதானால் உங்களைச் சந்திக்கவே நான் விரும்பியிருந்தேன். அதனாலேயே இன்று நான் வந்திருக்கிறேன்" என்று தன்னைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு நின்ற ரஜீவிடம் பிரபாகரன் தெரிவித்தார். பின்னர், பாலசிங்கத்தை நாடுகடத்தும் இந்தியாவின் முடிவினை அவர் தவறென்று சுட்டிக் காட்டினார். திம்புப் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்வதாக தானும், ஏனைய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுமே முடிவெடுத்ததாகவும், பாலசிங்கம் செய்தது அம்முடிவினை பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த தமிழர் தரப்பினருக்கு அறியத் தந்தது மட்டும்தான் என்றும் பிரபாகரன் கூறினார். "அது எம்மால் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு. பாலசிங்கம் அம்முடிவினை பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த எமது பிரதிநிதிகளுக்கு அறியத் தந்தார்" என்று பிரபாகரன் கூறினார். "தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனைகளையும் திட்டமிடல்களையும் செய்வது நானே. ஆங்கில மொழியில் எனக்கிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலால், பாலசிங்கமே எனது சிந்தனைகளை வெளியே கொண்டுவருவார். எனது முடிவுகளில் அவர் தலையிடுவதில்லை" என்று பிரபாகரன் ரஜீவைப் பார்த்துக் கூறினார். எம்.ஜி.ஆர் உடனனான பேச்சுக்களின்போது தாம் தெரிவித்த அதே கருத்துக்களையே ரஜீவுடனான சந்திப்பின்போதும் போராளிகளின் தலைவர்கள் வெளிப்படுத்தினர். குறிப்பாக இராணுவ அடக்குமுறைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருந்த உப்புச் சப்பற்ற தீர்வு என்பன குறித்து அவர்கள் ரஜீவிடம் தமது ஆட்சேபணையினைத் தெரிவித்தனர். தமிழர்களின் தாயகக் கோரிக்கையினை நிராகரிக்கும் நோக்குடன் தமிழரின் தாயகத்தின் ஒரு பகுதியான கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர்களை நிரந்தரமாகவே அடித்து விரட்டிவிட்டு, தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலினை முற்றாக மாற்றியமைக்க இலங்கையரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையொன்றினையும் அவர்கள் ரஜீவிடம் சமர்ப்பித்தனர். போராளிகளின் தலைவர்களுடன் பேசிய ரஜீவும் பண்டாரியும், இலங்கையரசாங்கத்துடன் தாம் தொடர்ந்து பேசப்போவதாகவும், போராளிகளும் தமது பக்க தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். "ஆரம்ப ஆவணத்துடன் மீண்டும் வந்து சந்தியுங்கள்" என்று போராளிகளிடம் ரஜீவ் கூறினார். ரஜீவிடம் பேசிய பிரபாகரன், கடந்த கால அனுபவங்களூடாகவும், சரித்திரத்தினைப் பார்ப்பதூடாகவும் ஜெயவர்த்தன நேர்மையான தீர்வொன்றிற்கு ஒருபோதும் வரப்போவதில்லை என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும் என்று கூறினார். தான் அமைதியை விரும்பும் ஒரு மனிதர் என்று உலகிற்குக் காட்டவே நாடகமொன்றினை அவர் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று பிரபாகரன் மேலும் தெரிவித்தார். ஜெயாரை நம்பவேண்டாம் என்று ரஜீவை எச்சரித்த பிரபாகரன், அவர்குறித்து மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழரின் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு ஒன்றினை அடைவது குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்திய அரசாங்கத்தைப் பாராட்டிய பிரபாகரன், தமிழர் விரும்பும் தீர்வினை அடைய இந்தியா இன்னும் அதிகமாக உழைக்கவேண்டியிருக்கும் என்றும் கூறினார். தமிழர்களின் பிரச்சினைக்கான உண்மையானதும், தர்க்கரீதியானதுமான தீர்வு தமிழ் ஈழம் என்று தான் உறுதியாக நம்புவதாக ரஜீவிடமும் அங்கிருந்த ஏனைய இந்திய அதிகாரிகளிடமும் பிரபாகரன் கூறினார். இந்தியா மீது தான் வைத்திருக்கும் மரியாதையின் நிமித்தமே ஈழத்திற்கு மாற்றீடான தீர்வு குறித்து ஆராய ஏற்றுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ஈழத்திற்கு மாற்றீடான தீர்வாக் தான் எதிர்பார்ப்பது பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் முற்றான அதிகாரத்தைக் கொண்டதாக அமைதல் வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால், தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் அதிகாரத்தினை சிங்கள தேசம் ஒருபோதும் வழங்கப்போவதில்லை என்பது தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறினார். சென்னையிலும், தில்லியிலும் தான் தங்கியிருந்த நாட்களை தர்மலிங்கம் மற்றும் ஆளாளசுந்தரம் ஆகியோரின் படுகொலைகளில் புலிகள் இயக்கத்திற்கு பங்கேதும் இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லும் செயற்பாடுகளுக்காகவும் பிரபாகரன் பயன்படுத்திக்கொண்டார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇலங்கை இராணுவம் சிங்கள இராணுவமாகவே இருக்கும். வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது, விரும்பினால் மட்டக்களப்பு மாவட்டம் வட மாகாணத்துடன் இணையலாம் - ஜெயார் ஜெயவர்த்தன யுத்த நிறுத்தம் தோல்வியடைந்து வரும் நிலையிலும் கூட, பிரச்சினைக்கான தீர்வு குறித்து செயற்படுவதில் தில்லி ஈடுபட்டு வந்தது. தில்லி ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதில் ரஜீவும் பண்டாரியும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்ட ஆறு போராளிகள் அமைப்புக்களின் தலைவர்களை தில்லி ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக தன்னை வந்து சந்திக்குமாறு ரஜீவ் கோரியிருந்தார். தில்லி ஒப்பந்தம் குறித்த அவர்களின் கருத்தினை அறிந்துகொண்டு பின்னர் கொழும்புடன் பேசுவதே அவரது எண்ணம். பேச்சுவார்த்தைகளின் அணுசரணையாளர் என்கிற ரீதியில் இரு தரப்புக்களையும் பேரம்பேசலில் ஈடுபட வைப்பதென்பது இயலாத காரியம் என்பதை திம்புப் பேச்சுக்களின் அனுபவத்திலிருந்து இந்தியா கற்றுக்கொண்டிருந்தது. விட்டுக்கொடுப்புக்களுக்குப் பதிலாக முரண்பாட்டுப் போக்கினையே அனுசரணையாளர் எனும் இந்தியாவின் பங்கு திம்புப் பேச்சுக்களில் ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, அணுசரணையாளர் எனும் அதுவரை தான் கடைப்பிடித்த போக்கினைக் கைவிட்டு பேச்சுக்களின் நடுவர் எனும் நிலையினைக் கைக்கொண்டு இரு தரப்புடனும் நேரடியாகப் பேசி, அழுத்தங்களைப் பிரயோகித்து இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை கண்டறிந்து, இரு தரப்பையும் இணங்கவைக்கும் சக்தி எனும் நிலைக்கு இந்தியா தன்னை உயர்த்திக்கொண்டது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், புளொட் அமைப்பும் ரஜீவின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நிலையில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைமைகள் தலைமறைவாகியிருந்தனர். ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும் டெலோ அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்ட புரட்டாதி 2 ஆம் நாளன்று இரவு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு தலைவர்களான அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் தில்லிக்குப் பயணமாகினர். தில்லியில் ரஜீவுடனும், பண்டாரியுடனும் அவர்கள் தில்லி ஒப்பந்தம் குறித்த ஆழமான பேச்சுக்களில் ஈடுபட்டனர். தில்லி ஒப்பந்தம் குறித்த அமிரினதும், சிவசிதம்பரத்தினதும் கருத்துக்களை ரஜீவ் அறிந்துகொள்ள விரும்பினார். அதற்குப் பதிலளித்த அவர்கள் இருவரும் தில்லி ஒப்பந்தம் மூன்று முக்கிய விடயங்களில் திருப்திகரமானதாக இருக்கவில்லை என்று கூறினர். தமிழரின் தாயகம், காணி தொடர்பான அதிகாரப் பகிர்வு, சட்டம் ஒழுங்கு தொடர்பான அதிகாரப் பகிர்வே அவை மூன்றும் என்று அமிரும், சிவசிதம்பரமும் ரஜீவ்டம் தெரிவித்தபோது, தமது ஆட்சேபணைகளை எழுத்தில் தன்னிடம் வழங்குமாறு ரஜீவ் அவர்களிடம் தெரிவித்தார். சென்னை திரும்பிய அமிரும், சிவசிதம்பரமும் ரஜீவிற்கு எழுதிய கடிதத்தில் தாம் குறிப்பிட்ட மூன்று விடயங்கள் குறித்து தமிழர்கள் விட்டுக்கொடுப்பிற்குத் தயார் இல்லை என்று கூறியிருந்ததோடு தில்லி ஒப்பந்தம் குறித்த ஆட்சேபணைகளையும் வெளிப்படுத்தியிருந்தனர். அவர்கள் குறிப்பிட்ட ஆட்சேபணைகள் வருமாறு, ஆடி 26 ஆம் திகதி ரஜீவிற்கு தாம் அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டதற்கு அமைய தமிழர்களின் தாயகம் தொடர்பாக கூட்டணியின் தலைவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர், 1. தமிழரின் பிரச்சினைக்குரிய எந்தத் தீர்வும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை ஏற்றுக்கொண்டதாக அமைந்திருத்தல் வேண்டும். சுதந்திரத்திற்குப் பின்னர் பதவியில் இருந்த அனைத்துச் சிங்கள அரசாங்கங்களும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களூடாக தமிழரின் தாயகத்தைச் சிதைத்து, அதன் எல்லைகளை மாற்றியமைப்பதில் முன்னெடுப்புடன் செயற்பட்டே வருகின்றன. பலஸ்த்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் செய்துவரும் குடியேற்றங்களுக்குச் சற்றும் சளைக்காத வகையிலும், தமிழ் மக்களினது தொடர்ச்சியான எதிர்ப்பிற்கு மத்தியிலும், ஒவ்வொரு பிரதமரும் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பின்னரும் தமிழரின் தாயகச் சிதைப்பென்பது நீண்டுகொண்டே செல்கிறது. இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், காணியதிகாரம் என்பது நிச்சயம் தமிழருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த காணியதிகாரம் தமிழரிடம் இருப்பது இன்றியமையாதது என்றும் தெரிவித்தனர். 2. சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் குறித்து பேசும்போது, தில்லி ஒப்பந்தத்தின்படி மாநிலங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் பொலீஸ் அதிகாரம் எந்தவிதத்திலும் போதுமானதல்ல என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஒரு மாநிலத்தின் பொலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து காவல்த்துறையினரும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர். 3. தமிழ் மக்களின் பாதுகாப்பும், நலனும் முக்கிய விடயங்களாக மாறியிருப்பதாகச் சுட்டிக் காட்டிய அவர்கள், தமிழரின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு மூன்று விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கோரினர். அவையாவன, வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்வது. ஐந்து வருடங்களுக்கொருமுறை மாநிலங்களின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஜனாதிபதியும், மாநில முதலமைச்சரும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுப்பது. இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பின்பொழுது நாட்டின் இனவிகிதாசாரத்தின் அடிப்படையிலேயே ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதுடன், தமிழ் இராணுவத்தினருக்கான ரெஜிமெண்ட் ஒன்றும், முஸ்லீம் இராணுவத்திற்கான ரெஜிமெண்ட் ஒன்றும் தனித்தனியாக இராணுவத்தினுள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடமிருந்து தில்லி ஒப்பந்தம் குறித்த கருத்துக்களை எப்படியாவது பெற்றுக்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் பொதுவான கோரிக்கையினை சிங்களத் தலைவர்களின் பார்வைக்கு முன்வைக்க ரஜீவ் முயன்று வந்தார். தொண்டைமான் தனது பூர்வீக வாசஸ்த்தலம் அமைந்திருக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தின் மூனா புதூரிற்கு அடிக்கடி வந்துபோவதை வழமையாகக் கொண்டிருந்தார். அவரது வருகையினை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் தொண்டைமானைப் பேசவைத்து, தன்னை வந்து சந்திக்க அவர்களை இணங்கச் செய்வதே ரஜீவின் நோக்கம். இதனை செயற்படுத்தும் பணி ரொமேஷ் பண்டாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், போராளிகளின் தலைவர்களைச் சந்திக்க தொண்டைமான் எடுத்த முயற்சி தோல்வியடையவே அவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஐயும், மின்வளத்துறை அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனையும் புரட்டாதி 6 ஆம் திகதி சந்தித்துவிட்டுச் சென்றார். இதற்கு முன்னர், புரட்டாதி 5 ஆம் திகதி ஜெயாரைச் சந்தித்த தொண்டைமான் மறுநாளான புரட்டாதி 6 ஆம் திகதி முதலமைச்சர் ராமச்சந்திரனைத் தான் சந்திக்கவிருப்பதாக அறிவித்தார். "தில்லி ஒப்பந்தம் குறித்து எம்.ஜி.ஆரி இடம் நான் என்ன கூறட்டும்?" என்று ஜெயாரிடம் வினவினார் தொண்டைமான். அதற்குப் பதிலளித்த ஜெயார், தில்லி ஒப்பந்தம் இறுதியானது என்று தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், ஆனால் அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்களில் ஈடுபட முடியும் என்று தான் கருதுவதாக எம்.ஜி.ஆர் இடம் சொல்லுங்கள் என்றும் கூறினார். ஜெயாரின் செய்தியை எம்.ஜி.ஆர் இடம் அப்படியே தெரிவித்துவிட்டு பண்ருட்டியைச் சந்தித்த தொண்டைமான், தமிழ்நாட்டில் தலைமறைவாகியிருந்த ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் ரஜீவைச் சென்று சந்திக்குமாறு கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துவிட்டு இந்துப் பத்திரிக்கைக்குப் பேட்டிகொடுத்த தொண்டைமான், "தில்லி ஒப்பந்தமே இறுதியானது அல்ல. பேச்சுவார்த்தைக்கான அடிப்படை ஆவணமே அது. இருதரப்பும் இணங்கும்பட்சத்தில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து மாற்றங்களைச் செய்து இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையினை அடைய முடியும்" என்று கூறினார். இதேவேளை, இலங்கை ராணுவத்தினரின் அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்தி வைக்குமாறு இலங்கையரசாங்கத்தினை இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தனர். அதேவேளை போராளிகளிடம் தமது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு கோரிய இந்திய அதிகாரிகள், குறிப்பாக புலிகளிடம் பேசும்போது இராணுவத்தினர் மீதான கண்ணிவெடித்தாக்குதல்கள், தொடரணி மீதான பதுங்கித் தாக்குதல்களையும் நிறுத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டனர். தமிழர்களின் பிரச்சினையில் மிகவும் காத்திரமான முறையில் பங்களிக்கும் எண்ணத்துடன் தில்லி அந்நாட்களில் இயங்கிக்கொண்டிருந்தது. புரட்டாதி 7 ஆம் திகதியிலிருந்து 14 வரையான காலப்பகுதியில் டிக்ஷிட் தில்லிக்கு அழைக்கப்பட்டு ஆலோசனைகளில் ஈடுபடுத்தப்பட்டார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தில்லி ஒப்பந்தம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஆராய ஜெயாரின் சகோதரர் ஹெக்டர் ஜயவர்த்தனவும் தில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். புரட்டாதி 10 இலிருந்து 13 வரை அவர் தில்லியில் தங்கியிருந்தார். தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தில்லி ஒப்பந்தம் குறித்து மேலதிகப் பேச்சுக்களை நடத்தவே ஹெக்டர் வரவழைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தனர். தில்லியில் பண்டாரியுடனும், இந்திய அரசியலமைப்பு நிபுணர் பாலகிருஷ்ணனுடனும் பேச்சுக்களில் ஈடுபட்ட ஹெக்டர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட மூன்று முக்கிய விடயங்களான தமிழரின் தாயகம், அதனை நிர்வகிக்கும் அதிகாரம் மற்றும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியன குறித்து கலந்துரையாடினார். தமிழரின் தாயகம் குறித்த கேள்வியொன்றின்போது, வடக்கையும் கிழக்கையும் இணைத்துக்கொள்ளும் வழிமுறை ஒன்று பற்றி ஆராய்வது குறித்து ஹெக்டரிடம் வினவினார் பண்டாரி. ஆரம்பத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது குறித்த எந்தப் பேச்சுக்களுக்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்த ஹெக்டர் பின்னர் ஜெயாருடன் தொலைபேசியில் கலந்துரையாடிவிட்டு, மாவட்ட அபிவிருத்திச் சபைகளே அடிப்படை அதிகாரப் பகிர்வு அலகுகளாக இருக்கும் என்றும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் விரும்பினால் வட மாகாண சபையுடன் இணைந்து இயங்க முடியும் என்றும் கூறினார். காணியதிகாரம் குறித்த கலந்துரையாடல்களின்போது, இதுகுறித்த பேச்சுவார்த்தையில் தமது அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையினைக் கடைப்பிடிக்கும் என்று ஹெக்டர் கூறினார். ஆனால், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டபோது, இலங்கையரசாங்கம் எந்த விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ளாது என்று கடுமையான தொனியில் அவர் பேசினார். இலங்கை இராணுவத்தில் இனவிகிதாசார அடிப்படையில் ஆட்களை இணைத்துக்கொள்வதை திட்டவட்டமாக மறுத்த ஹெக்டர், தமிழ் மற்றும் முஸ்லீம் ரெஜிமெண்டுக்கள் என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று பிடிவாதமாக நின்றார்.1 point- கிரீன்லாந்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு, பூமியையே உலுக்கும் அளவிற்கு ஒரு பேரலை
பகிர்வுக்கு நன்றி ஏராளன் ...........!1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointயுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கலைப்பும், யுத்த நிறுத்தத்தின் தோல்வியும் அரசியல்த் தீர்வு குறித்து பண்டாரியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போராளிகளின் தலைவர்கள் இலங்கையரசின் ஒருதலைப்பட்சமான அறிவிப்புக் குறித்த தமது அதிருப்தியை வெளியிட்டனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை மேலும் சிங்களவர்களை உள்ளடக்கி விஸ்த்தரிப்பதான இலங்கையரசின் தாந்தோன்றித்தனமான முடிவு பண்டாரிக்கும் எரிச்சலை உணடுபண்ணியிருந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசிவந்தனர். ஆனால், பகாமாஸில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ரஜீவிற்கும் ஜெயாரிற்கும் இடையிலான பேச்சுக்களைப் பாதித்துவிடும் என்பதற்காக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை விஸ்த்தரிக்கும் லலித்தின் அறிவிப்புக் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை பண்டாரியும் போராளிகளும் தவிர்த்தனர். மேலும், லலித்தின் இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் அறிந்திருந்தபோதிலும், அரசியல்த் தீர்வு குறித்தே அவர் அதிகம் அக்கறை கொண்டிருந்தமையினால், இந்த அறிவிப்புக் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள அவர் விரும்பியிருக்கவில்லை. யுத்த நிறுத்தக் குழுவின் விஸ்த்தரிப்பினையடுத்து அது சிங்களவரின் நலன் பேணும் கருவியாக மாறிப்போனது. இக்குழுவில் பங்கேற்றிருந்த இரு தமிழ் உறுப்பினர்களும் என்னிடம் பேசும்போது தமது கருத்துக்களை குழுவிலிருந்த ஏனைய சிங்களவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று கூறியிருந்தனர். மேலும், இராணுவத்தினரின் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழ் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது அவர்கள் இராணுவத்தால் அச்சுருத்தப்பட்டிருந்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்பிலிருந்த சில சிங்களவர்கள் தமிழ் உறுப்பினர்களை நேரடியாகவே அச்சுருத்தவும் செய்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவென்பது தமிழர்களைப் பொறுத்தவரை செயற்றிறன் அற்றதாகவும், சிங்களவரின் நலன் காப்பதாகவும் மாறிப்போயிருந்தது. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தோல்வியென்பது மார்கழி மாத நடுப்பகுதியில் உருவானது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்க் கோட்டையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கான கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதியினை போராளிகள் சுற்றிவளைத்து முற்றுகை நிலைக்குள் வைத்திருந்தனர். "எனது நண்பர் ஒருவரின் வாகனத்தில் யாழ் கோட்டை இராணுவ முகாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். நான் கோட்டைப்பகுதியினை அண்மித்தபோது, வானில் திடீரென்று தோன்றிய இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தியொன்று கோட்டைப்பகுதியைச் சுற்றி வட்டமிடத் தொடங்கியது. சில நிமிடங்களில் எமது வாகனம் நோக்கித் தாழப்பறந்த உலங்குவானூர்தி எம்மீது சரமாரியான துப்பாக்கித்தாக்குதலை ஆரம்பித்தது. அப்பகுதியில் யாழ் வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவே அவர் எம் கண்முன்னே இறந்து வீழ்ந்தார். இச்சம்பவம் எனக்குக் கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. இது ஒரு அப்பட்டமான யுத்த நிறுத்த மீறலாகும்". "கூட்டாத்தில் நான் இச்சம்பவம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தேன். அங்கிருந்தோர் இது ஒரு சாதாரண விபத்து, அமைதியாகுங்கள் என்று என்னிடம் கூறினர். ஆனால் என்னால் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அங்கு பரிமாறப்பட்ட மதிய உணவை நான் நிராகரித்தேன். என்னால் இனிமேலும் இங்கு இருக்கமுடியாது. என்னை வெளியேற விடுங்கள் என்று அவர்களைப் பார்த்துக் கோபமாகக் கூறினேன்" என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் உறுப்பினரான பேராசிரியர் சிவத்தம்பி என்னிடம் கூறினார். சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணக் கோட்டை ஆனால், பேராசிரியர் கோட்டையிலிருந்து வெளியேறுவதென்பது அப்போது சாத்தியப்படவில்லை. அப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட உலங்குவானூர்தி மீது கோட்டையைச் சுற்றி நிலையெடுத்து நின்ற போராளிகள் பதில்த்தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். யாழ்நகரப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போராளிகளின் நிலைகளில் இருந்து உலங்குவானூர்தி மீதான பதில்த்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. யாழ்க் கோட்டையினுள் கடமையாற்றிய சிங்களத் தளபதிகளில் ஒருவரான கப்டன் கொத்தலாவல பேராசிரியர் சிவத்தம்பிக்கு ஆதரவாக வந்தார். புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த கிட்டுவுடன் அடிக்கடி தொடர்புகளை மேற்கொண்டு வந்தவர்தான் இந்த கொத்தலாவல. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட கொத்தலாவல, உடனடியாக கிட்டுவுடன் தொடர்புகொண்டு பேராசிரியரை பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியே கொண்டுவர விரும்புவதாகக் கூறினார். இதனையடுத்து உலங்குவானூர்தி மீதான தாக்குதல் புலிகளால் உடனடியாக நிறுத்தப்பட்டது. பேராசிரியர் சிவத்தம்பியும் பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியேறினார். "நான் அக்கணமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை எடுத்தேன்" என்று பேராசிரியர் என்னிடம் பின்னாட்களில் தெரிவித்திருந்தார். கொழும்பு திரும்பிய சிவத்தம்பி, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான அபயசிங்கவிடம் தனது முடிவு குறித்து அறிவித்தார். தனது ராஜினாமாக் கடிதத்தினை ஜனாதிபதி ஜெயாரிடம் கையளிக்க விரும்புவதாக சிவத்தம்பி அபெயசிங்கவிடம் கூறினார். ஆனால், தன்னிடமே ராஜினாமாக் கடிதத்தை சிவத்தம்பி கையளிக்கவேண்டும் என்று அபெயசிங்க வற்புறுத்தியபோதும் சிவத்தம்பி அதனை மறுத்து விட்டார். "என்னை யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழுவில் அமர்த்தியது ஜனாதிபதியே, ஆகவே அவரிடமே எனது இராஜினாமாவைக் கையளிப்பேன்" என்று சிவத்தம்பி கூறினார். "கண்காணிப்புக் குழுவின் செயலாளரும் நானே, ஆகவே கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி என்னைப் பணித்திருக்கிறார்" என்று அபெயசிங்க பதிலளித்தார். ஆனால், ஜெயாருக்கே தனது கடிதத்தை நேரடியாகச் சமர்ப்பித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிவத்தம்பி உறுதிபூண்டிருந்தார். பின்னர் யுத்த நிறுத்தக் குழுவில் அங்கம் வகித்த இரண்டாவது தமிழ் உறுப்பினரான சிவபாலனையும் அழைத்துக்கொண்டு நீதிபதி சி. மாணிக்கவாசகரைச் சந்திக்கச் சென்றார் சிவத்தம்பி. நீதிபதி மாணிக்கவாசகர் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றி வந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து ஜனாதிபதி ஜெயாருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மாணிக்கவாசகர், "பேராசிரியர் சிவத்தம்பி உங்களுடன் பேசவிரும்புகிறார்" என்று கூறி தொலைபேசியை சிவத்தம்பியிடம் கையளித்தார். தொலைபேசியை வாங்கிக்கொண்ட சிவத்தம்பி இவ்வாறு கூறினார், "கெளரவ ஜனாதிபதி அவர்கள் எமது கடமையினை மிகுந்த அவதானத்துடன் கையாள்வது அவசியமானது. எமது கடமையினை சரியாகச் செய்ய எம்மை அனுமதிக்காவிட்டால் இலங்கை இப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் இந்த இறுதிச் சந்தர்ப்பம் இல்லாது போய்விடும்" என்று கூறிவிட்டு தொலைபேசியினைத் துண்டித்துக்கொண்டார். இதேவகையான கருத்துக்களையே அவர் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அனைத்துக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருந்தார். மறுநாள் டிக்ஷிட்டைச் சந்தித்த பேராசிரியர் சிவத்தம்பி தனது இராஜினாமா குறித்து அவரிடம் தெரிவித்தார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும்" என்று டிக்ஷிட் அவரிடம் கூறினார். யுத்த நிறுத்தம் குறித்தே டிக்ஷிட் அவ்வாறு கூறினார். ஆனால், டிக்ஷிட்டின் குரலில் இருந்த கசப்பான தொனியை சட்டென்று சிவத்தம்பி கண்டுகொண்டார். தாம் எவ்வகைப்பட்ட ஆளும்வர்க்கத்துடன் பேரம்பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்தியா மெதுமெதுவாக உணரத் தொடங்கியிருந்தது. இத்துடன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன் எல்லாமே முடிந்துபோனது. இக்குழு அமைக்கப்பட்டிருந்த காலத்திலிருந்து ஜனாதிபதிக்கு அது கையளித்த ஒற்றை அறிக்கையில், தமிழ்ப் பிரதிநிதிகளின் பிரதிநித்துவம் இன்மையினால் கண்காணிப்புக் குழு தொடர்ந்து இயங்குவதில் அர்த்தமில்லை என்று கூறியிருந்தது. கண்காணிப்புக் குழுவின் உடைதலோடு யுத்த நிறுத்தமும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. போராளிகள், இராணுவம் ஆகிய இரு தரப்புமே யுத்த நிறுத்தம் தோல்வியடைய வேண்டும் என்று விரும்பியிருந்தனர். யுத்த நிறுத்த காலத்தில் இருதரப்புமே தம்மைப் பலப்படுத்தி ஆயுதமயமாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். தமிழர் மீதான யுத்தம் மூலம் அவர்களின் பிரச்சினையினைத் தீர்க்க ஜெயார் உறுதிபூண்ட அதேவேளை, அதனை எதிர்கொள்வதற்குத் தமிழ் மக்களைத் தயார்ப்படுத்துவதில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அனீத்தா பிரதாப்புடன் புரட்டாதியில் பேசியிருந்த பிரபாகரன், யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி அரசாங்கம் தம்மைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்வேளை, தாமும் அச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமானது என்று தெரிவித்திருந்தார். இக்காலத்தில் யாழ்க்குடாநாட்டின் அனைத்து இராணுவ முகாம்களையும் சுற்றிவளைத்துக்கொண்ட புலிகளும் ஏனைய போராளிகளும் இராணுவத்தின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி வந்தனர். பகமாசில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய ரஜீவிடம், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கையினை ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் அதிகரித்துக்கொண்டது தொடர்பான தமது கண்டனத்தை போராளிகளின் தலைவர்கள் முன்வைத்தனர். ஜெயவர்த்தன நம்பப்பட முடியாதவர் என்று ரஜீவிடம் அவர்கள் வலியுறுத்தினர். "யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதறடிப்பவர் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வைத் தருவதாகக் கூறும் எந்த ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்துவார் என்று நம்புவீர்கள்?" என்று அவர்கள் ரஜீவிடம் வினவினர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித்து தில்லிப் பத்திரிக்கையாளர் ஒருவர் பிரபாகரனிடம் வினவியபோது எரிச்சலடைந்த அவர் பின்வருமாறு கூறினார், "எந்தக் கண்காணிப்புக் குழு குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்? இதுவரை ஒரு அறிக்கையினைத் தன்னும் இக்குழுவினரால் பிரசுரிக்க முடிந்திருக்கிறதா? ஜெயவர்த்தனவின் காட்டாட்சியில் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் அவரது இராணுவ மிருகங்களின் யுத்த நிறுத்த மீறல்களில் ஒன்றைத்தன்னும் இக்கண்காணிப்புக் குழுவினால் இதுவரை விசாரிக்க முடிந்திருக்கிறதா? உண்மையென்னவென்றால், எமது மீனவர்களைக் கொல்வதற்காக ஜெயவர்த்தன இக்காலப்பகுதியில் பல பீரங்கிப் படகுகளை சிங்கப்பூரிடமிருந்து கொள்வனவு செய்திருக்கிறார். உண்மையென்னவென்றால் பேச்சுக்கள் நடைபெற்றுவரும் அதே காலப்பகுதியில் மேலும் மேலும் தமிழ் மக்களை அவர் கொலைசெய்துவருகிறார். அவரது இராணுவமும், கடற்படையும், விமானப்படையும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தே வருகின்றனர்" என்று கூறினார். போராளிகளின் தலைவர்கள் கார்த்திகையில் ரஜீவிற்கு அனுப்பிய தமது கடிதத்தில், தமிழ் மக்களை ஏமாற்றி அழிக்கும் ஜெயாரின் கைங்கரியத்தின் ஒரு அங்கமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உருவாக்கம் என்றும் விமர்சித்திருந்தனர்.1 point- கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
1 pointபோலிசில் முறைப்பாடு போட்டாயிற்று சரி. ஆட்டையை போட்டது 84 லட்சங்கள். தரகன் ஏனென்சி மூலம் பிளைட்டில் ஏறீட்டான் என்றால் எங்கை தேடி அவனை பிடிப்பது?1 point- கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு- கண்ணீர் விட்டு கதறும் தாய்
முஸ்லீமுக்கு வந்தால் இரத்தம், தமிழனுக்கு வந்தால்... தக்காளி சட்னி. 😂1 point- கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு- கண்ணீர் விட்டு கதறும் தாய்
கிழக்கில் தமிழர்கள் நிலங்கள் முஸ்லிம்களால் அபகரிகப்பட்ட போது கலா பூசணம் பரீட் இக்பால் எங்கு போயிருந்தீர்கள்?1 point- உதவி தேவை: ஜெயசிக்குறு வெற்றிச்சமர் பாடல்கள்
@நன்னிச் சோழன்உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறீர்கள்.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம்: மேலும் இரு வருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யப்படுமா? - ஒக்டோபர் 7 ஆம் திகதி தீர்மானம் எட்டப்படும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.