Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20014
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    14676
    Posts
  4. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1487
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/20/24 in Posts

  1. "விடியலுக்கு காத்திருக்கிறேன்" இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால், 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை! சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்று, ஆனால் இன்னும் விடியல் கிடைக்காமல், முன்னையதைவிட கேவலமாக இன்று இருக்கும் இந்த சூழ்நிலையில் தான், நானும் ஒரு தமிழனாக, இலங்கையின் பழம் குடிகளின் ஒருவனாக, தலை நிமிர்ந்து, என் சொந்த மண்ணில் வாழ, விடியலுக்காக காத்திருக்கிறேன்! இந்த சூழலில் தான் 21 செப்டம்பர் 2024 ஜனாதிபதி தேர்தல் நடை பெறவுள்ளது. ஆனால் இன்னும் தமிழ் தலைமைகள் விளைத்ததாக தெரியவில்லை. ஒற்றுமை உடைந்து உடைந்து சுக்கு நூறாக உடைந்து பறக்கிறது? ஏன் ஒன்றைப் பேசி வேறு ஒன்றை செய்வது தம்மை தலைவர்கள் என்று கூறுபவர்களிடம் சாதாரணம் ஆகிவிட்டது?? எங்கே ஒற்றுமை ? எங்கே புரிந்துணர்வு?? எங்கே நீதி??? பத்தாம் வகுப்பில் நான் படித்த, எமிலி டிக்கின்ஸன் [Emily Dickinson] என்ற கவிஞரின் பாடல் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. "I many times thought Peace had come When Peace was far away — As Wrecked Men — deem they sight the Land — At Centre of the Sea — And struggle slacker — but to prove As hopelessly as I — How many the fictitious Shores — Before the Harbour be" "தூரத்தில் விடியல் [சமாதானம்] இருக்கும் பொழுது பலதடவை விடியல் வருமென்று எண்ணினேன்! கடலின் மையத்தில், குழம்பிய மனிதனாக நிலத்தை, கரையை பார்ப்பதாக நினைத்தேன்! ஆனால், அவை எல்லாம் பொய் நம்பிக்கை அற்றது, ஏமாற்று வித்தை! உண்மையான விடியலுக்கு, [துறைமுகத்திற்கு] முன், எத்தனை கற்பனைக்கரைகள் இன்னும் காண்பேன்!" ஆமாம், தூரத்தில் விடியல் தெரிவது போல, வானில் 4 ஜூன் 1987 இல் பூமாலை என்ற ஒரு செயல் திட்டத்தின் கீழ், இந்தியா விமானப் படை, யாழ்ப்பாணத்தின் மேல் பறந்து, அங்கு உணவுக்காக வாடிக்கொண்டு இருந்த மக்களுக்கு, என்னையும் உட்பட, 25 தொன் [tons] எடையளவு உணவு பொதிகளை போட்டது. அதை தொடர்ந்து, இலங்கை - இந்தியா ஒப்பந்தம் 29 ஜூலை 1987 கைச்சாத்திடப்பட்டது, ஒரு உண்மையான கரையை காட்டுவது போல அன்று எனக்கு இருந்தது. என்றாலும் எமிலி டிக்கின்ஸனின் பாடலை நான் மறக்கவில்லை. அதை இன்றும் இப்பொழுதும் 20 september 2024 யிலும் மறக்கவில்லை! உச்சத்தில் கிட்ட தட்ட 80,000 ஆட்பலம் கொண்ட இந்திய அமைதி காக்கும் படை 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அப்பொழுது நான் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்துகொண்டு இருந்த காலம். எனவே நானும் என் குடும்பமும், அமைதி பிறந்து விட்டது என்ற நம்பிக்கையில், 270 கிலோ மீட்டர் பயணமாக யாழ் புறப்பட்டோம். இருண்ட குகைக்குள் வெளிச்சம் வந்ததுபோல, ஒரு விடியல் அண்மையில் தெரிவது போன்ற மகிழ்வுடன், நாம் பேருந்தில் சென்றுகொண்டு இருந்தோம். நாம் 221 கிலோ மீட்டர் கடந்து, ஆனையிறவு பாலம் வரும் வரை அமைதியாக இருந்த எம் பயணம், திடீரென ஒரு குழப்பத்தில் முடிந்தது. அங்கு முகாமிட்டு காவலுக்கு நின்ற அமைதி படை, எம் பேருந்தை சூழ்ந்து சோதனை செய்ததுடன், ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருகுது என்றும், உடனடியாக கெதியாக யாழ் சென்று, வீடு செல்லும் படியும் எச்சரித்து அனுப்பினர். எமக்கு ஒரே திகைப்பும் பெரும் ஆச்சரியமும். என்ன நடந்தது? எமக்கு ஒன்றுமே புரியவில்லை?. நாம் எதிர்பார்த்தது அமைதியும், சம உரிமையுடன் ஒரு மனிதனாக தலை நிமிர்ந்து தமிழனாக, தமிழ் பண்பாட்டுடன் வாழ்வது மட்டுமே? ஆனால், மீண்டும் ஓட்டமும், பதுங்கு குழியும், தமிழன் என்று தலை குனிந்து ஒழிந்து திரியவல்ல? என்றாலும், இப்ப யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் வந்துவிட்டதால், இனி திரும்பவும் முடியாது. ஆகவே, நடப்பது நடக்கட்டும் என்று சில நம்பிக்கைகளுடன் மிகுதி பயணத்தை தொடர்ந்தோம்! அதும் இன்றும் தொடர்கிறது!! நாம் யாழ் நகரை அண்மிக்கும் முன்பே சண்டை ஆரம்பித்துவிட்டது. எம்முடன் எம் குழந்தைகளும் பயணிப்பதால், நாம் கலங்கி, எமிலி டிக்கின்ஸன் [As Wrecked Men] கூறியது போல சிதைத்த மனிதனாக இருந்தாலும், எம்முடைய முன்னைய அனுபவங்கள் எமக்கு தைரியம் தந்தன. ஒருவாறு அவசரம் அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக, குழந்தை ஒன்றை தூக்கிக் கொண்டும் சென்றோம். அப்பொழுது யாழ் கோட்டையில் இருந்து ஷெல் அடிக்க தொடங்கிவிட்டார்கள். அதில் சில எமது தலைக்கு மேலாக போவதையும், வெடித்து சிதறும் சத்தமும் ஒரு பீதியை உண்டாக்கினாலும், ஒருவாறு சமாளித்துக்கொண்டு வீடு சேர்ந்தோம். என்றாலும் குழந்தைகளின் அழுகையும் பயமும் எமக்கு மேலும் கவலை அளித்தது. அன்று இரவு ஏறக்குறைய முழுநேரமும் நாம் பதுங்கு குழிக்குள் தான் இருக்கவேண்டி இருந்தது. பயண களைப்போ , நித்திரையோ எம்மிடம் இருந்து தூர விலகிவிட்டது. அது மட்டும் அல்ல, எந்த விடியலை எதிர்பார்த்தமோ, அது இப்ப பின்னோக்கி நகருவதைத் தான் நாம் உணர்ந்தோம். ஆமாம் இருண்ட கற்பனை கரையாக எம் விடியல் மறைந்து கொண்டு இருந்தது! பிரித்தானியாவிடம் இருந்து கிடைக்காதது, இலங்கை அரசிடம் இருந்ததும் கிடைக்காதது, இப்ப இந்தியா அமைதி படையிடம் இருந்தும் கிடைக்காமல் விலகுவது நன்கு தெரிந்தது. இருண்ட கற்பனை கரையாக எம் விடியல் மறைந்ததுதான் எனோ ? "மனிதனே உனக்கேன் அலட்சியம்; விதையுங்கள் மனதில் நல்லெண்ணம் என்னும் விதையை; தூவுங்கள் இரக்கம் என்னும் கருணையை; பிறக்கட்டும் மனிதம் மீது கண்ணியம்; பொழியட்டும் அன்பென்னும் பெருமழை; வளரட்டும் மனித நேயம், அங்கே விடியட்டும் விடியல்; பிறக்கட்டும் உதயம்; வடியட்டும் சோகங்கள்; முடியட்டும் குரோதங்கள்; தொடரட்டும் உறவுகள்; தொழுவட்டும் விடியலை எம் கரங்களும்; மரம் செடி கொடிகள் போன்று மணக்கட்டும் மண்ணில் சமதருமம்!" என் மனம், பதுங்கு குழிக்குள் இருந்து கொண்டும் தன் பாட்டில் இப்படி முழங்கிக் கொண்டு இருந்தது. அந்த நேரம் அது ஒரு ஆறுதலாகவும் இருந்தது உண்மையே! இந்தியா இலங்கை பேச்சு வார்த்தையின் பொழுது, கைக்கு எட்டுவது போல இருந்த விடியல், விடியாமலே, மேலும் கடும் இருட்டாக மாறி, இன்றுவரை எம்மை, எம் இருப்பை குழப்பத்தில் மூழ்கடித்துக்கொண்டு தான் இருக்கிறது. என்றாலும் என் நம்பிக்கை குறையவில்லை! ஏறத்தாழ முப்பத்தி ஐந்து அல்லது முப்பத்தி நாலு ஆண்டுகள் கழித்து, மார்ச்சு மாதம் 31 திகதி, 2022 ஆண்டு சிங்கள இளைஞர்கள் சனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு தமது வரலாறு காணாத போராட்டத்தை தொடங்கினர். அவர்கள், இன, மத வேறுபாட்டை தாண்டி, தமிழர்களின் புரையோடி இருக்கும் சில பிரச்சனைகளையும் உள்வாங்கி, கடந்த 74 ஆண்டுகளாக, இனத்துவேசத்தை வளர்த்து, தமது இருப்பையும், அதே நேரத்தில் சரியான பொருளாதார திட்டம் இல்லாமல், நாட்டை குட்டிச் சுவராக்கி, தம் வளத்தை பெருக்கியவர்களை இனம் காட்டி துரத்தும் தமது போராட்டத்தை அரசுக்கு எதிராக செய்து வெற்றியும் கண்டார்கள்! ஆனால் அது வெற்றியா ? சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்திக்கவும் !! அதன் உண்மையான நிலை இன்று என்ன ?? மாற்றம் உண்மையில் ஏற்பட்டதா?? மகிழ்வதா அழுவதா எனக்குப் புரியவில்லை ??? அது உண்மையில் நல்ல ஒரு அடையாளமாக, ஆனால் உறங்கிவிட்டது!! ஏனென்றால் இன்றும் கூட குருந்தூர் மலை பிரச்சனை தமிழர்களை வேதனை படுத்திக்கொண்டு இருக்கிறது. இனவாதம் பேசும் சில புத்த பிக்குகள் மற்றும் கும்பல்கள் ராணுவ உதவியுடன் வடக்கு கிழக்கில் புத்தர் சிலை நிறுவவும், அதை சாட்டாக வைத்து, காணிகள் பறிக்கவும், குடியேறவும் வரிசையில் நிற்பதும் வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத ஒன்றே !! இதை காலிமுக இளைஞர்கள் அல்லது சமதர்மம் பேசுபவர்கள் கட்டாயம் கவனத்தில் எடுக்கவேண்டும்!! எடுப்பார்களா ? ஆனால் நடப்பதோ வேறுவிதம். தமிழ் தலைமைகள் ஒற்றுமை அறுத்து எங்கெங்கோ பாய்கிறார்கள் ? ஒருவரை ஒருவர் திட்டுகிறார்கள் ?? தான் என்ன கூறினோம் என்பதையே அடுத்த கணமே மறந்து பித்தர்களாக , வெறியர்களாக எதோ எதை எதிர்பார்த்து புலம்புகிறார்கள்! கத்துகிறார்கள் !! சந்திரனை பார்த்து குறைக்கும் நாய்கள் கூட தோற்றிடும் !!! என்றாலும் பரிபாடல் 19 கூறியது போல, பசும்பிடி மலர் இளந் தளிர்களுடனும், ஆம்பல் மலர் விரிந்த வாயுடனும், காந்தள் மலர் கைவிரல் போலவும், எருவை மலர் மணக்கும் மடலுடனும், வேங்கை மலர் எரியும் தீ போலவும், தோன்றி மலர் உருவ அழகுடனும், நறவம் மலர் நீண்ட காம்புகளுடனும், கோங்கம் மலர் பருவம் தோன்றா நிலையிலும், இலவம் மலர் பகைவர் போல் சிவந்த நிலையிலும், தனித்தனியேயும், கோத்துக்கொண்டும், பின்னிக்கொண்டும் மலை எங்கிலும் மீன் பூத்த வானம் போல், இலங்கை வாழ் மக்கள் அனைவரும் பூத்துக் கிடந்தன என விரைவில் வரலாறு கூறட்டும்! இதைவிட என்னால் எதை எதிர்பார்க்க முடியும்!! "பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல், கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள், எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை, உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம், பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்; நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க மணந்தவை, போல, வரை மலை எல்லாம் நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்; விடியல் வியல் வானம் போலப் பொலியும் நெடியாய்! நின் குன்றின்மிசை." [பரிபாடல்19] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. அதிலென்ன சந்தேகம்? நல்லாட்சி அமைந்தபோது ஒளிந்திருந்த மஹிந்த குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பியது ரணில், தன்னுடைய பதவிக்காலத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தண்டிக்காது பாதுகாத்தது ரணில், அநுர வந்தால்; ரணிலுக்கும் ஆப்பு இருக்கு. இன்னும் ஒரு நாளில் தெரிந்து விடும். யார் வந்தாலும் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பது மட்டும் உண்மை.
  3. மிகவும் நல்ல பயனுள்ள கருத்துக்கள் நொச்சி .........நாம் உள்ளத்தையும் இழந்து நிற்கும் இனமாக இருக்கின்றோம் . ......... சும்மா உணர்ச்சி வசப்பட்டு பகையை வளர்ப்பது மென்மேலும் இன அழிவுக்குத்தான் வழிவகுக்கும் . ......!
  4. தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்றையதினம்(20) திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள(nallur) தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (20) மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இந்த ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று ஆவணக் காட்சியகம் தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பமாகியதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகம் மாவீரர்களின் பெற்றோரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://ibctamil.com/article/thiyaka-theepam-thileepan-nallur-1726848928
  5. எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்? September 19, 2024 தேர்தல் பரப்புரைகள் நிறைவுறுகின்றன. இன்னும் மூன்று தினங்களில் நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். தேர்தல் முடிவுகள் ஒன்றில் சாதாரணமான ஒன்றாக இருக்கலாம் அல்லது ஒரு வரலாற்று மாற்றமாக இருக்கலாம். எது நடப்பினும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பில் எந்தவோர் அதிசயமும் நடந்துவிடப் போவதில்லை. எப்போதும் போல, தமிழரின் வாழ்வு வழமைபோல் உப்புச்சப்பு இல்லாத நிலைமை என்று சொல்லக்கூடிய நிலையிலேயே தொடரப்போகின்றது. இந்த இடத்தில் எழும் கேள்வி – தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கும் வாக்களித்தால் என்ன அதிசயம் நிகழ்ந்தவிடப் போகின்றது – அதேபோல், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதால் என்ன அதிசயம் நடந்துவிடப் போகின்றது? தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் தென்னிலங்கை வேட்பாளர்களில் சிலர் வெற்றி பெற்றிருக்கின்றனர் – சிலர் தோல்வியடைந்திருக்கின்றனர். வெற்றி பெற்றவர்கள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு மாறாக, அதனை கூர்மைப்படுத்தும் வேலைகளையே செய்திருக்கின்றனர். இது எதனை உணர்த்துகின்றது, நீங்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அவர்கள் எதைச் செய்ய நினைக்கின்றார்களோ, அதனையே செய்வார்கள். அவ்வாறாயின் தமிழ் மக்கள் வழங்கும் வாக்கின் பெறுமதி என்ன? கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் இதனைத் தெளிவாக நோக்கலாம் – தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றவர்களில் மைத்திரிபால ஒருவரே அதிகாரத்துக்கு வந்தார் ஆனால், அவரும் எதனையும் தமிழ் மக்களுக்காகச் செய்யவில்லை. இந்த ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தவரையில் யார் வெற்றி பெறுவார் என்பதைக் கணிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. அநுரகுமார சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகிறாரென கணிப்புகள் கூறுகின்றன. கோட்டபாயவின் ஆதரவுத் தளம் முழுவதும் அநுரவுக்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் அநுரகுமார வெற்றிபெற்றால் தோல்வி யடையப் போகும் ஒருவருக்கு அளிக்கப்படும் தமிழ் வாக்குகளின் பெறுமதி என்ன? கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சஜித் பிரேமதாஸவுக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். ஆனால், அவர் வெற்றிபெறவில்லை. அப்போதும் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் அரசியல்வாதிகள் கோரியிருந்தனர். இப்போதும் தமிழ் அரசு கட்சியின் ஓர்அணி, சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றது. சுமந்திரன் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார். சஜித் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் கணிப்புகள் உண்டு. ஏனெனில், சஜித் வெற்றிபெற வேண்டுமாயின் அவருக்கு தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் முழுமையான வாக்குகள் கிடைக்க வேண்டும் அதற்கான வாய்ப்பு தற்போதில்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய உணர்வுள்ள மக்களுக்கு முன்னால் தமிழ் பொது வேட்பாளர் ஒரு தெரிவாக இருக்கின்றார். இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் அரசியல் வாதிகளும் இருக்கின்றனர். அவர்களும் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் மூன்றாக பிரிகின்றது? இது தமிழ் மக்களின் ஜனநாயக பலத்தை காண்பிப்பதற்கு உகந்த ஒன்றல்ல. ஆனால், இதனை இலகுவாக சரி செய்ய முடியும் – எப்படி? வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊhடாக தமிழ் மக்களின் ஒற்றுமையை காண்பிக்க முடியும். இதன்மூலம் தென்னிலங்கை அதிகார போட்டியிலிருந்து நாங்கள் விலகி நிற்க முடியும். அதிகாரத்துக்கு வருபவருடன் தமிழ் மக்களின் தலைவர்கள் பேச முடியும். இது ஒன்றுதான் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடிய புத்திசாலித்தனமானமுடிவாகும். ஏனைய முடிவுகள் எவையுமே புத்திசாதுர்யமான முடிவுகளாக இருக்க முடியாது. அவைகளை முட்டாள்த்தனமான தீர்மானங்கள் என்று கூறுவதைத் தவிர, வேறு சொற்களை கண்டுபிடிப்பது கடினமானது. https://eelanadu.lk/எது-புத்திசாலித்தனம்-எத/
  6. சிந்திக்க வேண்டிய விடயம். சுற்றிவனைப்புகள் அப்படியானதொரு நிலையை நோக்கி இருப்பதுபோலவும், காலம் கனிவதற்காகச் சிங்களம் காத்திருப்பதுபோலவுமே தோன்றுகிறது. சிங்களத்தின் இறுதி இலக்கு அப்படியானதொரு திட்டத்தோடும் இருக்கலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. இது தான் ஜதார்த்தம்.... இதில் கடற்றொழில் அமைச்சர் பதவியை தமிழ்மகனுக்கு கொடுத்து அவர் ஊடாக இந்தியா,சிறிலங்கா அதிகார மையங்கள் ஆடும் ஆட்டம் .....வடக்கு கிழககு மாகாணங்களுக்கு அதிகாரம் கொடுப்பது உந்த அதிகார மையங்களுக்கு பெரிய விடயம் அல்ல ஆனால் அதை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டிய நிலையில் இந்தியாவும் இலங்கையும் இருக்கின்றது... இறையாண்மை உள்ள சிறிலங்காவில் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என தீர்மானிக்கும் சக்தியாக வெளிநாடுகள் இருக்கின்றன ....இந்த நிலை 40 வருடங்களுக்கு முன்பு இருக்கவில்லை.... சவுதி அரேபியா,ஈரான் போன்ற நாடுகளும் சிறிலங்காவின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்திகளாக் மாறிவருகின்றன ...இந்த இலட்சணத்தில சிங்களவ்ர்கள் வடக்கு கிழக்கு உரிமை கொடுக்க கூடாது பிரச்சாரம்....
  8. இப்படி ஒரு கட்டுரையை ஈழநாடு எழுதாமல் இருந்திருந்தால் அது புத்திசாலித்தனம். எழுதியது முட்டாள்தனம்
  9. நல்லதொரு கட்டுரை. எனது எண்ணத்திலுள்ளதை எழுதியிருக்கிறார்கள். காலாகாலமாக வாக்குகளைப் போட்டுப் போட்டு அவர்களிடம் அடி வாங்கியது தான் மிச்சம். அவர்களுக்கு வாக்கைப் போடுவானேன்,கவலைப்படுவானேன்.
  10. இந்த தற்போதைய ஈழநாடு பத்திரிகை 87 இற்கு முன்பு இருந்த ஈழநாடு பத்திரிகையைப் போன்றதல்ல அதன் டபொறுப்பாளரும் ஆசிரியரும் தீவிர இந்திய விசுவாசிகள்.அவர்கள் ஏமோ ஒரு காரணத்திற்காக பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்.அதே போல் பொது வேட்பாளரின் பின்னால் உள்ள அரசியல்தலைவர்களும் கட்சிகளும் உறுதியான தமிழ்த்தேசிய வாதிகள் அல்ல.22 ஆம் திகதிக்குப் பின் பல தமிழ்த்தேசியவாதிகள் காணாமல் போவரர்கள்.இந்த வேளையில் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நிறுத்திய பொது வேட்பாளரை தமிழ்மக்கள் ஆதரிப்பது தமிழ்த்தேசியத்தை விட்டு விலகினால் எல்லோரும் செல்லாக்காசுகளே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கும்.தமிழ்மக்களை தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒரணியில் திரள வைக்கும் முயற்சியில் பல அரசியல்வாதிகளிளின் சுயரூபங்கள் வெளிவந்து சந்தி சிரிக்கின்றது. அவர்களது முகத்திரையைக் கிழிக்க உதவியதற்காகவேனும் இந்தப் பொது வேட்பாளரை தமிழ்மக்கள் ஆதரித்து வாக்களிப்பது நாம் சர்வதேசத்துக்கு ஒரு செய்தியைச் சொல்லவிடினும் தமிழ்மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ்அரசியல்வாதிகளுக்கு ஒரு தெளிவான செய்தியைக் கொடுக்க முடியும்.
  11. "தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?" தமிழர் அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி: "தமிழர்களின் குரல் முக்கியமான விடயங்களில் கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?" என்னையும் கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவை; உலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால் விடக் கூடியவை. அப்படியிருந்தும், ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை? தமிழர்களாகிய நாம், குறிப்பாக கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள், படித்தவர்கள், ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ், ஒரு பொது நோக்கத்தின் கீழ் பணியாற்றும் பண்பை இன்னும் ஏனோ கற்றுக் கொள்ள வில்லை. தமிழர்களில் பெரும் பான்மையினரிடத்தில் - அதாவது, அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகள், ஆளுமைகள், சாதனையாளர்களாக இருந்தாலும் சரி - இந்தப் பலவீனத்தை அதிகமாக இன்னும் கொண்டு உள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால், இந்த விடயத்தில், சாமானியர்களைக் காட்டிலும் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தவர்களே மிக மோசமாக இருக்கிறார்கள். ஒற்றுமையாக வாழத் தெரியாமல், இருப்பதையும் போட்டு உடைக்கிறார்கள்! அவர்களிடம் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!" ஆனால் தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது கி மு 300 அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை. இனி இதை எங்கு காண்போம்? இத்தனை அழிவு கண்ட பின்பாவது திரிந்தினோமா ? வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப் பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற் கடித்துச் சிறைப் பிடித்தவன் . அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது . என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை . இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது . இதனால் 313 B.C,யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி , 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது . அது, அந்த ஒற்றுமை , வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது. சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55] யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார். “பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் முரசு முழங்கு தானை மூவருங்கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடைய எழாஅல் கோடியர் தலைவ கொண்டது அறிந அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது ஆற்று எதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே போற்றிக் கேண்மதி புகழ் மேம் படுந (53 – 60) "you play the lute with benefits of songs – like wealth with pride, great fame, strong effort, and the three great kings owning armies with roaring drums giving combined audience in an assembly. O leader of musicians! You know what others think, and do not lose your way in ignorance. It is the benefit of your penance that we met on this path. Listen with respect to what I have to say," you with a great reputation!” {(பொரு. ஆற். படை: 53-60) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம்.} மேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாக பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை. இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ? ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார். "நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் ...................................................... ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; .......................................................... நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே." [புறநானூறு 58] "You are the ruler of Kāviri River with cool waters! He is born of great lineage of an ancient Pāndiyan ..................................................................... If you help each other and if this unity is not ruined, you will win this beneficial world that is surrounded by oceans. So, be good and kind to each other. .................................................................... In the lands of others, where mountains rise high, may the peaks be incised with the signs of the tiger with curved stripes and of the carp from the deep waters!" [Purananuru 58] நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு.இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும். பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. இலங்கையில் வட கடலில் இது தாராளமாகவே நடைபெறுகிறது. பிழை எப்போதும் பிழையே. அது யார் செதாகினும்.
  13. ”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் . . “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. . ஜட்ஜூக்கு சுருக்கென்றது. . பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ். . ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார், . “இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு” . பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான். . ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார். . “பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார். . அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள். . முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள். . அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே! . எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார். . “சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார். . “ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி. . “பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும். . ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார். . தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து . குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான். Benitto Kumar
  14. ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார் தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ . ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார். ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று. இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார். ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி, "..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”. “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார். பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே. கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன? பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை. கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா? பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும். கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா? பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்...... கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா? பிரபாகரன் : ஆம், ஒருவகையில் 1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.
  15. வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம். வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது, ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம். இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம். பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது. இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள். எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,
  16. அடுத்த சிங்களத்தின் திட்டம் இதுவாக இருக்குமோ ? வடக்குகிழக்கு பகுதியில் இனக்கலவரத்தை ஏற்படுத்துவார்கள் அங்கிருந்து சிங்கள பகுதிக்கு அடித்து துரத்துவார்கள் "அப்பே ஒக்கம எக்க ஜாதிய,எக்கரட்ட மினுசு"என ஒருசில புத்திஜீவிகள்(இனவாத )சொல்லுவார்கள் நீங்கள் எமது பகுதியில் சிங்கள மக்களுடன் இரண்டர கலந்து வாழுங்கள் ...வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை (காடையர்கள்,இராணுவம்) குடியேற்றி அந்த நிலத்தை ,கடல் வளத்தையும் இந்தியாவிடமிருந்து பாதுகாப்போம் எண்டு... அதை சிறந்த தீர்ப்பு என நம்ம அரசியல் வாதிகளும் சொல்லுவார்கள் ...
  17. காந்தியம் இந்தியாவிலயே தோல்வி கண்ட விடயம் ... அம்பேத்காரின் வாரிசுகள் ,(ரஞ்சித் போன்றவர்கள்) தளித் அடையாளத்துடன் பெளத்த மத்ததை பரப்பும் செயல்களில் இடுபடுகிறார் என நான் பார்க்கிரேன் ..இலங்கையிலும் இதை ஒரு சில தமிழ் மற்றும் சிங்கள அரசியல் வாதிகள் செய்ய தொடங்கியுள்ளார்கள்.... கருத்துக்களை,கொள்கைகளை உருவாக்கியவர்கள் நல்லெண்ண்த்துடன் செய்திருக்கலாம் ஆனால் அதை காவிசெல்பவர்கள் வெறித்தனத்துடன் சமுகத்திற்கு எடுத்து செல்கின்றனர் ....பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் பழைய கருத்துக்களையும் ,கொள்கைகளையும் காவிச்செல்கின்றனர் .... இது எனது பார்வை ...உங்களது நேரத்திற்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி
  18. என்ன சமந்தற்ற ஆவியும் போகுது...?
  19. என் சிங்கள நண்பர் சிலர் நீங்கள் சொன்ன மாதிரித் தான் சொல்கின்றனர். அனுரவுக்கு முதல் விருப்பை போடுகின்றவர்களின் இரண்டாம் விருப்பாக சஜித் தான் உள்ளார் என. அதே நேரம் சஜித்தை முதலாவதாக தெரிவு செய்கின்றவர்கள், அனுரவை இரண்டாவதாக தெரிவு செய்ய தயங்குவர் என்று. படித்த, மேட்டுக் குடி சிங்களவர்கள் அதிகம் வாழும் கண்டி மாவட்டத்தில் ஜேவிபி இற்கு கடும் எதிர்ப்பும் உள்ளது. பார்ப்பம், நாளைக்கு இன்னேரம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகளாவது வெளியாகத் தொடங்கியிருக்கும்.
  20. அமெரிக்க நோக்கிப் பறந்தார் பஸ்ஸில் .............என்று வாசிச்சுபோடாதேங்கோ .... 😄😆😄
  21. நாட்டில் நின்ற காலம் தொடர்-2 பஸ் பயணம்! ************* பஸ்.. நிக்கமுன்னே ஏறச்சொல்லி நடத்துனரோ கத்திறார் நாங்கள் ஓடி ஏறமுன்னே சாரதியோ இழுக்கிறார் யன்னல் சீற்று அத்தனையும் தண்ணிப்போத்தல் கிடக்குது நாம் இருக்க போனாலே-அருகில் ஆள் இருக்கு என்கிறார் அத்தனைக்கும் காசு வாங்கி ஆளைப் பின்பு ஏற்றுறார் ஆரம்பத்தில் ஏறியவர் அவலப்பட்டுத் தொங்கிறார். ஏறிவரும் அனைவர் முதுகிலும் சாக்கு பைகள் தொங்குது என்னொருவர் இடத்தை கூட அந்தபைகள் பிடிக்குது இறங்கிப் போகும் போதுகூட கையில் எடுப்பதில்லை இழுத்திழுத்து அனைவருக்கும் இடஞ்சல் கொடுத்து போகுறார். குடி போதையில் சிலபேரோ அருகில் வந்து அமருறார் கொஞ்சநேரம் போன பின்பு குரங்குப் புத்தியை காட்டுறார். கைபேசி பேசிக்கொண்டு-சில சாரதியோ ஓடுறார். சடும் பிறேக்கு போட்டுப் போட்டு சனத்தை சாவடிக்கிறார். ஐம்பதற்கு மேற்பட்டோர் இருந்த பஸ்சில் ஒருநாள் ஏந்தம்பி மெதுவாயோடு-என எழுந்ந்து நானும் சொன்னேன் என்கருத்தை ஏற்றுக்கொண்டு இருவர் மட்டும் எழுந்தார் ஏன் சோலி என்றதுபோல் மற்றவர்கள் உறைந்தார். விபத்தொன்று நடந்தபின்பு விம்மி அழுதென்ன விளிப்போடு நாமிருந்தால் விடியும் எங்கள் நாடு. தொடரும்… அன்புடன் -பசுவூர்க்கோபி.
  22. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமான பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ??????
  23. எல்லாத்துக்கும் அரசியல் சாணக்கியர் நிலாந்தன் மாஸ்டர் பதில் கொடுப்பார் இருபத்திரெண்டாந்தேதி!
  24. தெருவில் யாராவது குனிந்தால் கல்லெறிய போகிறார்கள் என்ற பயத்தில் பழக்க தோசத்தில் தெரு நாய்கள் ஓடும். பின்னர் சற்று நேரத்தில் பயம் தெளிந்து திரும்பி வரும். அதை போல தான் இவர்களும். ஒவ்வொரு முறையும் நாட்டில் மாற்றம் வரப்போகிறது என்றால் ஓடுவார்கள். பின்னர், பயம் தெளிய இவர்களும் திரும்பி வருவார்கள். அது இவர்கள் வாடிக்கை. 😂
  25. இன்றுவரை தமிழக ஊடகங்களோ அல்லது அரசியல் கட்சிகளோ தமிழக அரசோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்கள் என்றோ அ;ல்லது மீன் பிடித்தார்கள் என்றோ ஒத்துக்கொள்வதும் இல்லை ஒருவரி செய்தி எழுதுவதும் இல்லை. எப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் .. இலங்கை கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, கச்சதீவுக்கு அருகிலே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது..இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டார்கள் என்பதும், அல்லது இந்திய கடற்பரப்பில் அத்துமீறிய இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் என்றும் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். பின்பு அதே வாயால் இலங்கை தமிழர்கள் உரிமையை, அவர்கள் வாழ்வு மேம்பாட்டை வலியுறுத்துகிறோம் என்று நீலிக்கண்ணீர் வடிப்பார்கள். மூன்று தசாப்த காலமாக உயிர் உடமை இழந்து போருக்குள் வாழ்ந்த ஈழ தமிழர்கள் இப்போதுதான் படிப்படியாக மீண்டு வருகிறார்கள்அவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் அது தவறென்று எந்த தரப்புமே தமது மீனவர்களுக்கு சொன்னதும் இல்லை தவறை சுட்டிக்காட்டியதும் இல்லை காலம் காலமாக இலங்கை தமிழர் விவகாரத்தில் எம்ஜிஆரை தவிர்த்து ஏனைய தமிழக கட்சிகளும் ஊடகங்களும் செய்வது வெறும் அரசியல் வியாபாரமும் ஊடக வியாபாரமும் மட்டுமே. உலகின் வலிமையான கடற்படையை கொண்டுள்ள இந்தியாவால் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் பல ஆயிரம் படகுகள் நடுவே கஞ்சா தங்கம் ஆயுதம் கடத்தும் ஒருசில படகுகளையே கண்டறியும் இந்திய கடற்படையால் நூற்றுக்கணக்கில் எல்லை தாண்டும் மீன்பிடி படகுகளை கண்காணிப்பது அத்தனை சிரமம் அல்ல, ஆனாலும் கண்டுக்காமல் இருப்பார்கள், ஒருதடவை கடலுக்கு போய்வர இழுவை படகுகளுக்கு சில லட்சம் வாடகை பணம் செலுத்தும் அன்றாடங்காய்ச்சி மீனவர்கள் பணத்தை செலுத்துவதற்காகவே தமது பகுதியை வெறுமையாக்கிவிட்டு இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைகின்றனர். மத்திய மாநில அரசுகள் எல்லை தாண்டும் மீனவர்களுக்கெதிராய் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தினால் கொஞ்சமாவது பயப்படுவார்கள், ஆனால் அரசுகளே அவர்கள் எல்லை தாண்டினார்கள் என்று ஒருபோதும் சொல்வதில்லையே அப்புறம் எப்படி தண்டனைகள் சாத்தியம்? ஒருதடவை எல்லைமீறும் மீனவர்களை விடுதலை செய்யுங்கள் அவர்கள் வரும் படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்று சுப்பிரமணிய சுவாமி மஹிந்தவுக்கு ஐடியா கொடுத்தார் , அதன்படி இலங்கையும் நடந்து கொண்டது,பறிமுதல் செய்யப்பட்ட வள்ளங்கள் கரையோரங்களின் நிறுத்தப்பட்டு உக்கிபோனது. அப்போது ஓரளவு அத்துமீறுதல் கட்டுக்குள் வந்தது, பின்பு இந்திய அரசின் பேச்சுவார்த்தையால் அது கைவிடப்பட்டது, எனக்கு தெரிந்து சுப்பிரமணிய சுவாமி இலங்கை தமிழருக்கு நன்மையாக செய்த ஒரேயொரு முதலும் கடைசியுமான காரியம் அதுதான். மீனவர்கள் கைது செய்யப்படும்போது இந்திய ஊடகங்களில் பின்னூட்டமிடும் இந்திய தமிழர் பலர் , ஈழத்து அகதிகளுக்கு நாங்கள் இங்கே குடியுரிமை கொடுக்க வலியுறுத்துகிறோம், வீடுகட்டி கொடுக்கிறோம், சோறு போடுகிறோம், ஆனால் அவர்கள் எமது மீனவர்களை தாக்குகிறார்கள் கைது செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஈழத்து அகதிகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதை நன்றியுணர்வுடன் நோக்கத்தான் வேண்டும், அதற்காக இலங்கையில் உள்ள கரையோர மக்களை பட்டினி போடலாம் தப்பில்லை என்பதுபோல் அவர்கள் கொண்டிருக்கும் மனப்பான்மையை எந்த வழியில் புரிந்து கொள்வது? வடபகுதி மீனவர்கள் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை ஆயுதபடைகளின் உதவியை கேட்கும் அளவிற்கு நிலமை இன்றுள்ளது.அவர்களுக்கு வேறு வழியில்லை. எந்த சிங்கள படைகளுக்கு எதிராக போரிட்டோமோ அதே சிங்கள படைகளுடன் ஈழ தமிழர்களை சேர்த்து வைக்கும் வேலையை தமிழகம் செய்கிறது.
  26. "பணம்" "பணம் விளையாடும் அரசியல் இங்கே படித்தவர் கூட விலை போவார்! படுக்கை அறைக்கும் கதவு திறப்பார் பகட்டு வாழ்வில் எதுவும் நடக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "பேதங்கள் ஒழிப்போம்" "தாழ்வு மனப்பான்மையை தள்ளி வைத்து வாழ்வு சிறக்க திமிரோடு நின்றால் ஆழ் கடலிலும் தரை காண்பாய்!" "மதம், சாதி வேறுபாடு தாண்டி இதயசுத்தியுடன் மனிதம் நாம் வளர்த்து வாதங்கள் விட்டு பேதங்கள் ஒழிப்போம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] ........................................................ "அறியாமை விலகட்டும்" "அறியாமை விலகட்டும் நிம்மதி பிறக்கட்டும் அறிவு பெருகட்டும் அன்பு வளரட்டும் சிறிய விடயத்திலும் பெரியது இருக்கும் அறிந்து கொண்டால் வாழ்வு சிறக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  27. நாமல் சொல்வதுபோல் நேர்மையோடு, ஊழல் செய்யாத அரசியல் செய்திருந்தால் ஏன் ஓடவேண்டும். மக்களுக்குத் தொண்டு செய்யக் கட்டாயம் பதவி தேவையா? பதவியில்லாது பொறுப்போடு மக்களுக்குத் தொண்டு செய்பவனே ''தொண்டன்''. இவர்கள் தண்டலுக்கல்லவா பதவியைத் தேடுவோர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  28. நன்றிகள் பல. மிகவும் அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
  29. தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை நோக்கி தார்மீக உதவியைக் கோரும் சகோதரர்களாக இன்று தமிழீழ தேசவிடுதலை கோரும் இனமொன்றின் சிந்தனைப் போக்கைப் பொதுமையாக நோக்கினால், அறிவின் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய எமது தலைமை இன்று இவற்றை அறிய நேருமாயின் இந்த மக்களுக்காகவா போராடினோம் என்ற எண்ணமே மேலெழும். தமிழீழத்தை இந்தியா பெற்றுக்கொடுக்கப்போவதில்லை என்ற முடிவு தெரிந்தபோதும், அதாவது இந்திராகாந்தி அம்மையாரவர்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டை நாம் பாதுகாப்போம் என்ற முன்மொழிவோடு யே.ஆரைப் பார்த்தசாரதி ஊடாக அணுகியபோதும் தமிழரது உரிமைகளை மறுத்ததோடு பின்வந்த ஆண்டுகளில் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவோடு மிகத்தந்திரமாகத் தமிழரோடு மோதலை ஏற்படுத்தும் களமாக யே.ஆர் சிங்களத்தின் சிறந்த அரசியல் விற்பனனாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக் கையாண்டதோடு, தமிழருக்கும், இந்திய அரசுக்கும் இடையே முரணை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றதோடு, அதன் தொடராக இன்றுவரை மிகக் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட 13ஆவது திருத்தமெனச் சுட்டப்படும் மாகாணசபைகளைக்கூட தொடர்ந்துவரும் அரசுகள் நடைமுறைப்படுத்தாது தட்டிக்கழித்தவருவதை நாம் கண்டுவருகின்றோம். (இந்த லட்சனத்தில் ரணிலுக்கு,சஜித்துக்கு, அனுரவுக்கு வாக்குக் கேட்கும் தமிழ் அரசியல் விற்பன்னர்கள் தமிழரை விற்றுக்கொண்டிருப்பது வேறுகதை) மிகவும் அருகிலே மொழி, கலை,பண்பாடு என்பவற்றோடு ஒன்றுக்குள் ஒன்றான தமிழகத்தையும், தமிழக மக்களையும் நாம் வென்றெடுத்து எம்மோடு இணைத்துப் பயணிக்க முடியாத சூழலில் பகையற்ற நிலையிலாவது வைத்திருக்க வேண்டுமென்ற பொதுவான நோக்குநிலை அவசியமற்றதா? சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கட்டமைத்து அதனை மிகப்பெரும் இராணுவபூதத்தின் மீது நிலைநிறுத்தி வைத்துள்ள நிலையில் எமக்கு ஒரு துன்பமென்றால் குரல்கொடுக்கும் நிலையிலாவது தமிழகத்தைப் பேணுதல் வேண்டாமா? ஒருவேளை புலத்தமிழர் போதுமென்றால் ஏமாற்றமே மிஞ்சும். எங்களுக்குப்பின் தாயகத்துக்காக ஏதாவது எமது அடுத்த தலைமுறை, மூத்த தலைமுறையின் அர்ப்பணிப்போடு பெரிய அளவில் செய்யும் என்று எண்ணினால் ஏமாற்றமே. போராட்டத்தின் பின் தளமாக இருந்த தமிழகத்தையும், தமிழீழத்தையும் உணர்வுரீதியாகப் பிரிப்பதிலேயே இந்திய – சிங்கள அரசுகளின் பாதிவெற்றியை சாத்தியமாக்குகிறார்கள் என்பதை ஈழத்தமிழினம் அறிவுசார் புலமையோடு நோக்கவேண்டும். ஒப்பந்தம் போட்டுக் கொள்ளையிடும் (இந்திய) பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இது ஒரு சிறிய அளவிலான, ஆனால் அன்றாடப் பிழைப்புக்குக் கரையோரங்களை நாடும் எமது மீனவர்களைப் பாதிக்கும் செயற்பாடு. இதனை நிறுவனரீதியாக அணுகுதல் அவசியமானது. அதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் வெற்றியளிக்கவில்லை. வட-கிழக்கின் மீனவர்கள் ஒருங்கிணைந்த நிறுவனங்களை உருவாக்கி, அதனைச் செயல்நெறியோடு இயங்கவைப்பதும், அவற்றின் ஊடாகத் திணைக்களங்கள், அமைச்சுகளை அணுகி அழுத்தங்களைக் கொடுப்பதுமே ஆரோக்கியமானது. நாம் நேரடியாகத் தமிழக மீனவரோடு முரண்படுவதோ, மொட்டையடித்து அனுப்புவதை வரவேற்பதோ பொருத்தமான அணுகுமுறையாகாது. தமிழக மீனவர் (தமிழர்) என்பதற்காகவே மொட்டையடிக்கப்பட்டனர் என்பதையும் நோக்க வேண்டும். இந்த விடயத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளை அணுகிக் காலத்தை விரயாமாக்குவதையும் கைவிடவேண்டும். ஏனெனில் அவர்கள் தமக்கென்ன லாபமெனக் கேட்கும் கூட்டமாகிப் பல்லாண்டுகளாகிவிட்டது. சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில, மத்திய அரசுகள் ஊடாக ஒரு எல்லைதாண்டாத வகையில் கட்டுப்படுத்தும் பொறிமுறையொன்றைக் கண்டடைவதே இருகரையிலும் தொழில் செய்யும் மீனவர்களுக்கு நன்மைபயக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  30. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊhடாக தமிழ் மக்களின் ஒற்றுமையை காண்பிக்க முடியும். இதன்மூலம் தென்னிலங்கை அதிகார போட்டியிலிருந்து நாங்கள் விலகி நிற்க முடியும். அதிகாரத்துக்கு வருபவருடன் தமிழ் மக்களின் தலைவர்கள் பேச முடியும். இது ஒன்றுதான் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடிய புத்திசாலித்தனமானமுடிவாகும். ஏனைய முடிவுகள் எவையுமே புத்திசாதுர்யமான முடிவுகளாக இருக்க முடியாது. அவைகளை முட்டாள்த்தனமான தீர்மானங்கள் என்று கூறுவதைத் தவிர, வேறு சொற்களை கண்டுபிடிப்பது கடினமானது.
  31. அட. எனக்கு இது தெரியாமல் போச்சு” இப்படி சொல்லி தாருங்கள்”
  32. கஸ்ரப்படும் மக்களுக்கு உதவார் என்று அர்ச்சனாவுக்கு ஆதரவாக எழுதப் போய் கடசியில் புலம் பெயர் ஒன்று கள்ள ஐடியில் வந்து எழுது என்று ஊரில் உள்ள அவருக்கு எதிரான தண்ணி பார்ட்டி பப்பிளிக்காகவே எழுதி இருந்தார்கள்..அத்தோடு வேண்டாத வார்த்தைப் பிரயோங்களும் பிரயோகிப்பட்டு இருந்தது..சோ..அவரது பின் பலம் மிக்க குப்பையான உலகம்.ஒருவரைப் பற்றி அறிய வேணும் என்றால் அவர்கள் பேசும் வார்த்தைகளை வைத்து அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.யாருக்கு எப்போ, என்ன பட்டம் (கொடுப்பார்-கள்) என்று தெரியாது.இதற்கு மேலும் எழுத தேவை இல்லை என்று நினைக்கிறன்.✍️🖐️
  33. இது மாமிக்கு தெரியுமா முதல்ல மனைவிக்கு தெரியுமா என்று கேழுங்க. அண்ணை ஏன் கேட்கின்றீர்கள். ?? தனியே இருந்தால் துணைக்குப் போகத் தான்.பாவமல்லோ.
  34. என்னுடைய புரிதல் வேறு விதமாக இருக்கின்றது. அத்துடன் பல பார்வைகள், கோணங்கள் இதில் இருக்கும் என்பதனையும் ஏற்றுக்கொள்கின்றேன். 'எந்த மாற்றம் வேண்டும் என்று விரும்புகின்றாயோ, அந்த மாற்றமாக நீயே இரு..........' என்பது போல காந்தியடிகள் சொல்லி இருக்கின்றார். அவர் வாழ்ந்ததும் அப்படியே. அவரைப் பார்த்து, அவரைப் பின்பற்றியே காந்தியம் உருவாகியது. காந்தியமும், அஹிம்சாவாதமும் பாராபட்சமானவை. தீண்டாமை போன்ற கொடூரமான அடிப்படைப் பிரச்சனையைக் கூட அது தீர்க்கவில்லை என்று சொல்லி அம்பேத்கர் அவர்கள் வேறொரு வழியில் போனார். அவருக்கு புத்த பெருமானே சமூக நீதி, தத்துவ மற்றும் ஆன்மீக வழிகாட்டி. இன்றும் அம்பேத்கரை பின் தொடர்பவர்கள் பலர் புத்த பெருமானையும் தொடருகின்றனர், உதாரணம்: ரஞ்சித். இலங்கையில் இருக்கும் மதத்தையும், அதன் நெறிமுறைகளையும் வெறும் அதிகார அரசியலாகவே பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றேன். பெருமான் சொன்ன தம்மம் அங்கில்லை. சில தனி ஒருவர்கள் நன்மை பயக்கும் வழிகாட்டியாக மாறுவார்கள் என்பதே என் புரிதல். இலக்கியத்தில் கூட பாரதியும், புதுமைப்பித்தனும் அடைந்த தெளிவே நவீன தமிழை எல்லோருக்கும் கொண்டு வந்தது.....🙏.
  35. ஏதாவது விசப்பரிட்சையில் இறங்க போகின்றார் போல ...இனிமேல் இப்படியான் கதைகள் போடும்பொழுது எச்சரிக்கை :இது நகைச்சுவைக்கு மட்டுமே உங்கள் வீடுகளில் முயற்சி செய்யவேண்டாம் என வொர்னிக் கொடுக்க வேண்டும்🤣
  36. கொள்ளை அடிப்பதற்கு எதிரான தண்டனைகளை நீக்கி தமிழ்நாடு கடற்கொள்ளையர்களை சுதந்திரமாக இலங்கை தமிழர்கள் கடற்பரப்பில்கொள்ளையடிக்க விடவேண்டும் என்று ஆசைபடுகின்றார்கள். தண்டணைகள் மேலும் கடுமையாக்கபட வேண்டும்
  37. அப்ப இந்தக் கடற்கொள்ளையர்கள் திருந்த வாய்ப்பே இல்லை! அடுத்தவன் வீட்டில் போய்த் திருடுறதுக்கு பேச்சுவார்த்தை நடத்தட்டாம். கேவலம் கெட்ட பிறவிகள்!
  38. இப்ப வேலை செய்யுது புலவர். சிவஞானம், சுமந்திரனை பிசாசு என்று பேசிப் போட்டு… சஜித்தின்ரை பிரச்சாரக் கூட்டத்துக்கு… சுமந்திரனுடன், சிவஞானம் மட்டும் தானே ஒன்றாய் போனவர். 😂
  39. இந்த தங்கையை காப்பாற்ற நினைக்கும் கருணை உள்ளம் கொண்ட நெஞ்சங்கள் அவர்களுடைய Account நம்பருக்கு உங்களுடைய பங்களிப்பை வழங்கலாம். Name _MRS S PUSHPALATHA Address _Parathy puram Eruvil. Kaluwanchikudy _30200 ACCOUNT NO- 93252896 Bank_ BOC ( Bank of ceylon) Branch _Kaluwanchikudy, Batticaloa. மேலதிக தகவல்களுக்கு கீழ்காணும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும் +94779529231 +94770729231
  40. சீமெந்து களிமண், சுண்ணக்கல், ஜிப்சம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுவதாக படித்த ஞாபகம். வெளிநாட்டில் இருந்து மூலப்பொருட்களை எடுப்பிப்பது என்றால் எவற்றை இறக்கப்போகின்றார்கள்? சுண்ணக்கல் கீரிமலை பக்கம் கிண்டி எடுக்கப்பட்டு அங்கே உள்ள குவாரிகள் பெருகி முன்பே அவ்விடம் அதள பாதாளமாகி விட்டது. இலங்கை களிமண் புகையிரதத்தில் கொண்டு வரப்பட்டது. ஆய்வாளர்கள் என்னதான் திட்டம் தீட்டுகின்றார்களோ.
  41. விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் - தேர்தல்கள் ஆணைக்குழு Published By: DIGITAL DESK 7 18 SEP, 2024 | 08:52 PM ( அபி லெட்சுமண் ) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்படுவதுடன் கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது அங்கு கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக வாக்களிக்க, வாக்குச் சீட்டினை தொட்டுணரக்கூடிய வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை, தேர்தலன்று வாக்காளர்களுக்கு ஒரு தரப்பினர் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட விரோதமானது. இயலாமையுடையவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாயின் அதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் “வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ” இன்று புதன்கிழமை (18) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எஸ். அச்சுதன் மற்றும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கே.ஜே.எஸ். மாதவ ஆகியோரின் தலைமையின் கீழ் இடம்பெற்றது. இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் எவ்வாறு தமது வாக்குகளை இடவேண்டும் எனவும் வாக்காளர்களுக்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் குறித்தும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர். எஸ் அச்சுதன் ஆகியோரினால் எடுத்துரைக்கப்பட்டது. அதன்படி,இன்று 18 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைவதுடன் அமைதி காலம் பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். எனவே இதனைக் கருத்திற்கொண்டு அச்சு ஊடகங்களும் சமூக ஊடகங்களும் தேர்தல் தொடர்பான செய்தி வெளியீட்டு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டனர். வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பில் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகச் சுவரொட்டி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இலகுவாக வாக்களிப்பதற்காகவும் இலகுவாக வாக்குச் சாவடிகளை அணுகுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமது வாக்குரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதா ? எனவும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமது வாக்குரிமை தொடர்பில் கிராம சேவகரைச் சந்தித்துத் தேர்தல் தொடர்பிலான தகவலினை பெற்றுக்கொள்ள முடியும். வாக்களிப்பதற்காக அடையாள அட்டை ,சாரதி அனுமதிப் பத்திரம் ,கடவுச்சீட்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கப்பட்ட பத்திரம் , மத குருமார்களுக்கான அடையாள அட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கமுடியும். அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவை அணுகி தற்காலிக அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வசதி வாய்ப்புக்கள் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை கிடைக்காவிடில் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி விநியோகிக்காமல் இருக்கும் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது www.elections.gov.lk என்ற இனையத்தளத்திற்குள் உட்பிரவேசித்து தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்காளர் அட்டை மாதிரியைப் பெற்றுக்கொள்ளமுடியும். இதற்கு மேலதிகமாக இயலாமை கொண்டவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக, கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்கு செல்லும் போது அங்கு கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக வாக்களிப்பதுடன் வாக்குச் சீட்டினை தொட்டுணரக்கூடிய வகையில் ஏற்பாடுகளும் செவிப்புலனற்றவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் போது சைகை மொழி பிரயோகம் போன்ற ஏற்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது முறைமைகள் நாடளாவிய ரீதியில் உள்ள 13423 வாக்குச் சாவடிகளிலும் பின்பற்றப்படும். வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையத்தில் பின்பற்றக்கூடியவை எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கமுடியும். எனவே கால தாமதமின்றி வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். வாக்களிக்கச் செல்லும் போது அயலவர்கள் , நண்பர்கள் என்பவர்களோடு வாக்குச் சாவடிக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும் . வாக்காளர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் தான் வாக்களிக்க முடியும். எனவே நேர்த்தியான முறையில் தனது வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் வாக்குகளை அளித்த பின்னர் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். வாக்களிக்கும் முறைமை தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்கும் போது வேட்பாளரின் பெயருடன் காணப்படும் வாக்குச் சீட்டில் வாக்களிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள கூட்டுக்குள் வாக்கினை அளிக்க வேண்டும். தனது முதல் வாக்கினை அளிக்கும் போது 1 எனவும் விருப்பு வாக்குகளை அளிக்கும் போது 2,3 எனவும் வாக்களிக்க முடியும். அதற்கு மேலதிகமாக தேர்தல் ஆணைக்குழுவின் சட்டதிட்டத்துக்கு அமைய விருப்பத் தெரிவினை இடுவதற்காக புள்ளடி இட முடியும் என்பதுடன் மேலதிக கோடுகள் காணப்படும் போது வாக்கு நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர். எஸ் அச்சுதன் ஆகியோர் குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/194048
  42. நன்றி பகிர்வுக்கு, நாளை பணத்தை அனுப்பிவிட்டு, உங்களுக்கு தனிமடலில் அறிய தருகின்றேன், அந்த பிள்ளை நீடூழி வாழ்த்து🙏, அவர் கனவை அடைய வேண்டும்
  43. எதுக்கும் இனி காற்சட்டை / டிரவுசர் பொக்கட்டுக்குள் கைபேசியை வைப்பதை தவிர்க்க வேண்டும். வெடித்தால் உள்ளதும் போய் விடும்.
  44. கவிதைக்கு பாராட்டுக்கள் நடைமுறையில் உள்ளதை எழுதியிருக்கிறீர்கள்.
  45. தர்மலிங்கத்தையும், ஆளாளசுந்தரத்தையும் நாம் கொல்லவில்லை. ஆனால், ஆனந்தராஜாவை நாமே கொன்றோம், அதற்கான அவசியம் எமக்கு இருந்தது ‍- தலைவர் பிரபாகரன் இந்தியாவில் பிரபாகரன் தங்கியிருந்த நாட்களில் "சண்டே" பத்திரிக்கை அவரைப் பேட்டி கண்டிருந்தது. கேள்வி : தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு முன்னாள் உறுப்பினர்களை புலிகள் இயக்கம் கொலை செய்ததா? இந்திய உளவுத்துறையினர் அவர்களை நீங்களே கொலை செய்ததாக நம்புகிறார்களே? பிரபாகரன் : நாம் அவர்களைக் கொல்லவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறையினர் அப்படியான முடிவிற்கு வந்தால் நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் கொல்லப்பட்டவுடனேயே நாமே அவர்களைக் கொன்றதாக இலங்கையரசாங்கம் எம்மீது குற்றஞ்சாட்டியவேளை நாம் உடனடியாகவே அதனை மறுத்திருந்தோம். ஈழத்தேசிய விடுதலை முன்னணியும் இப்படுகொலைகளில் தமக்குப் பங்கில்லை என்று அறிவித்திருந்தது. இந்திய உளவுத்துறை இக்கொலைகளை நாமே புரிந்ததாகக் கூறினாலும்கூட யாழ்ப்பாணத்து மக்களுக்கு இதனைச் செய்தது யாரென்பது நன்றாகவே தெரியும். சாட்சிகள் எதனையும் தேடாது, கண்மூடித்தனமாக இந்திய உளவுத்துறை இக்கொலைகளை நாமே செய்ததாக நம்புகின்றது என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், இக்காலப்பகுதியில் நான் தலைமறைவாகியிருந்தேன், அதனை மனதிற்கொண்டே இக்கொலைகளை எனது இயக்கம் செய்ததாக இந்திய உளவுத்துறை நினைக்கிறது போலும். இதனை நாங்கள் செய்திருந்தால், அதனை உடனடியாகவே உரிமை கோரியிருப்போம். எமது செயலுக்கான காரணங்களையும் நாம் தெளிவாகக் குறிப்பிட்டிருப்போம். எமது விசாரணைகளின் ஊடாக ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவிடத்தே அவருக்கான தண்டனையினை நாம் நிறைவேற்றுவோம். ஆகவே, நாம் இக்கொலைகளைப் புரிந்திருந்தால் நிச்சயம் அதற்கான காரணமும் எம்மால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு பேச்சிற்கு ஆளாளசுந்தரத்தை நாமே கொன்றிருந்தால், அதற்கான காரணத்தை நிச்சயமாக வெளிப்படுத்தியிருப்போம். ஆனால், அவரைக் கொல்லவேண்டும் என்கிற எந்தத் தேவையும் எமக்கு இருக்கவில்லை. யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக அவர் இருந்த நாட்களில் பெருமளவு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டு வந்ததனால் அவருக்குச் சில தண்டனைகளை நாம் முன்னர் வழங்கியிருந்தோம். அவரது முறைகேடுகளை நாம் ஆதாரத்துடன் நிரூபித்திருந்தோம். அவரது முறைகேடுகள் தொடர்பான பல ஆவணங்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் எரியூட்டப்பட்டபோது சேர்ந்தே எரிக்கப்பட்டு விட்டன. யாழ் பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை நாம் தண்டித்தோம். ஆனந்தராஜாவைக் கொன்றவர்களைப் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு ரூபாய் ஐந்துலட்சங்களைத் தருவதாக இலங்கையரசாங்கம் அறிவித்தபோதே அவருக்கும் இலங்கையரசாங்கத்திற்கும் இடையே இருந்த நட்பினை யாழ்ப்பாண மக்கள் அறிந்துகொண்டனர். அவரை நாம் கொன்றதற்கான காரணத்தைத் தமிழ் மக்கள் முற்றாக உணர்ந்துகொண்டதனால் அக்கொலை குறித்து அவர்கள் பேசவில்லை. இலங்கை இராணுவம் எமது மக்களை தினமும் கொன்று குவித்துக்கொண்டும், இளைஞர்களைச் சகட்டுமேனிக்குக் கைதுசெய்து சித்திரவதை செய்துகொண்டும், எமது பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிக்கொண்டும், எமது சொத்துக்களை எரித்து நாசம் செய்துகொண்டும் இருந்த நாட்களில் அதே இராணுவத்துடன் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை நடத்த ஆனந்தராஜா திட்டமிட்டு வந்தார். அவரால் திட்டமிடப்பட்டு வந்த கிரிக்கெட் போட்டியினை ஒரு பிரச்சாரப் பொருளாக முன்வைத்து, "தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்துடன் மிகவும் தோழமையுடன் பழகுகிறார்கள், அவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுகிறார்கள், ஆனால் தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்று பொய்யான பிரச்சாரத்தோடு தமிழ்ப் பயங்கரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று உலகிற்குக் காட்ட இலங்கையரசாங்கம் முயன்று வந்ததை நாம் அறிவோம். ஆகவேதான் அவரை அகற்றவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. கேள்வி : அவர்கள் இருவரையும் உங்கள் இயக்கத்தில் உங்களின் சொல்லிற்குக் கட்டுப்படாத ஒரு பிரிவினர் கொன்றிருக்கச் சந்தர்ப்பம் இருக்கின்றதா? பிரபாகரன் : நிச்சயமாக‌ இல்லை. எனது அனுமதியின்றி புலிகள் இயக்கத்தில் எதுவுமே நடப்பதில்லை. சண்டே பத்திரிகைக்குப் பேட்டியளிக்கு முன்னர் பிரபாகரன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு உறுப்பினர்களான யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் சந்தித்தார். ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் புலிகள் இயக்கம் கொல்லவில்லை என்பதை அவர்களிடம் உறுதிப்படுத்தினார். குறிப்பாக, தர்மலிங்கம் மீது தான் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தவன் என்றும், அவரது கொலை தன்னை கவலைப்படச் செய்துள்ளதாகவும் பிரபாகரன் அவர்களிடம் கூறினார். யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் தான் சந்தித்தது குறித்தும் சண்டே பத்திரிக்கையுடனான பேட்டியின்போது பிரபாகரன் பகிர்ந்துகொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை நான் சந்தித்துப் பேசினேன். இவ்விரு கொலைகளையும் நாம் செய்யவில்லை என்பதை அவர்களிடம் உறுதிப்படுத்தினேன். எம்மிடமிருந்து அவ்வாறான தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்படாது என்றும் அவர்களிடம் நான் கூறினேன். ஆளாளசுந்தரத்திற்கு நான் அச்சுருத்தும் தண்டனையொன்றினை முன்னர் வழங்கியிருந்தோம் என்பதற்காக நாம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு எதிரானவர்கள் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது என்று அவர்களிடம் தெரிவித்தேன். ஆனாலும், அவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி அச்சமூட்டும் வகையில் வளர்ந்துவருவதை அவர்களிடம் தெரிவித்தேன். தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தை அவர்கள் கைவிட்டு வேறு வழியில் சென்றுகொண்டிருப்பதனை தமிழினத்திற்கெதிரான துரோகம் என்று இளைய தலைமுறையினர் கருதுகிறார்கள். மேலும், தமிழ் மக்களுடன் இருந்து, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காது, வெளியிலிருந்து அவர்கள் தமது அரசியலைச் செய்துவருவதால் அவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி இன்னும் இன்னும் அதிகரித்துச் செல்கிறது. தமிழ் ஈழத்திற்கான நியாயத்தன்மையில் இருந்தும், அவசியத்திலிருந்தும், தவிர்க்கவியலாத் தன்மையிலிருந்தும் தம்மை அவர்கள் அந்நியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடமிருந்து தம்மை மேலும் மேலும் அவர்கள் அந்நியப்படுத்தும் இடத்து, இளைய தலைமுறையினரிடமிருந்து அதற்கான எதிர்வினையினை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்படுகிறது. யதார்த்தம் என்னவென்றால், நான் ஈழத்தைக் கைவிட்டாலும் அவர்களைப்போன்றே தண்டனைக்கு உட்படுத்தப்படுவேன் என்பதுதான். சண்டே பத்திரிக்கையின் நிருபரான அனீத்தா பிரதாப் தொடர்ந்தும் பிரபாகரனிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவற்றில் ஒன்றுதான் பாலசிங்கத்தை நாடுகடத்தும் தனது தீர்மானத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்ய ரஜீவ் எண்ணியிருந்தார் என்றும், ஆனால் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் புலிகளே கொன்றதாக இந்திய உளவுத்துறை ரஜீவிடம் தெரிவித்தபோது, நாடுகடத்தும் தீர்மானத்தை இரத்துச் செய்வதை ரஜீவ் கைவிட்டார் என்றும் கூறி இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று பிரபாகரனைக் கேட்டார். இக்கேள்விக்கான பதிலை, இந்திய உளவுத்துறையின் தவறான ஆய்வினைச் சுட்டிக்காட்ட பிரபாகரன் பாவித்தார். "எமக்கும் இப்படுகொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், நாமே அவர்களைக் கொன்றதாகக் கற்பனை செய்துகொண்டு, பாலசிங்கத்தை நாடுகடத்தும் முயற்சியில் இந்திய அரசாங்கம் தீர்மானமாக இருந்திருந்தால், அது அவர்களின் பாரிய தவறேன்றே நான் நம்புகிறேன். இக்கொலைகளுக்காக எம்மைத் தண்டிக்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இவ்வாறான தவறான தகவல்களை ரஜீவிற்கு வழங்கிய இந்திய உளவுத்துறையினைத்தான் அவர் தண்டித்திருக்கவேண்டும். குறைந்தது இவ்வாறான தவறுகளை ரோ எதிர்காலத்தில் செய்வதில் இருந்தாவது அவர்களைத் தடுக்க முடியும்" என்று பிரபாகரன் பதிலளித்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.