Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    20012
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    2951
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46783
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/30/24 in all areas

  1. ரஞ்சித், உங்கள் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைத்தால் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் நீங்கள் ஆதரவு தந்தால் புளகாங்கிதம் அடைகிறீர்கள். இதில் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இது ஒரு சாதாரண மனித இயல்புதான். “யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன்” என்கிறீர்கள். உங்கள் கருத்திலும், அவை சொல்லப்படும் தன்மையிலும், கண்ணியம் காப்பதிலும் நீங்கள் கவனம் வைத்தால்,அவர்கள் ஏன் உங்களைத் தடை செய்யப் போகிறார்கள்? நீங்கள் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது என்று புரியவில்லை. இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள் என்கிறீர்கள். இனவாதியை இனவாதி என்றுதானே சொல்ல வேண்டும். உங்களுக்கு அது தெரியாததால் சொல்லியிருக்கிறோம். தமிழில் சொல்வார்களே,‘அவனவன் வியர்வை நாற்றம் அவனவனுக்குத் தெரியாது’ என்று. அதே நிலைதான் இங்கும். சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் சரித்திரத்தில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட அந்தப் புரிதலில்தான் நாங்கள் வித்தியாசப் படுகின்றோம். சுதந்திரம் பெற்றதன் பின்னர் எல்லாத்துறையிலும் நாங்கள்தான் கோலோச்சிக் கொண்டு இருந்தோம். ‘மாத்தையா’ என்ற தகுதியோடு வாழ்ந்தோம். பண்டா, சில்வாக்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டோம். ஒரு கட்டத்தில் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். அவர்களது அந்தச் சிந்தனை, எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. அப்பொழுதுதான் நாங்கள் சிறுபான்மையினர் என்பது எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. பிறகு சுதாகரித்துக் கொண்டு, சகோதரர்களாக இருப்போம் என்று முயற்சி செய்தோம். அவர்கள் நம்பத் தயாரக இல்லை. பேசிப் பார்த்தோம் எதுவுமே நடக்கவில்லை. சாத்வீகத்தில் நின்றோம், ஆயுதங்களைக் கையில் எடுத்தோம். எல்லாவற்றிலும் எங்களால் அவர்களை வெல்ல முடியவில்லை. எங்களின் போராட்டம் 75 வருடங்களாகத் தொடர்கிறது என்று சொல்கிறார்கள். அந்தப் போராட்டத்தின் வடிவங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. அத்தனை வடிவங்களையும் உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகள்தான். மக்கள் அல்ல. அந்த அரசியல்வாதிகள் சொல்வதை ஏற்று மக்களும் அந்த வழியில் நின்றார்கள். ஆங்காங்கே சில அரசியல்வாதிகள் கொல்லப்பட்டாலும், மக்கள்தான் பெரும் இழப்புகளுக்கு எப்பொழுதும் ஆளானார்கள். இறுதியான போராட்ட வடிவத்தில் பலர் நாட்டை விட்டே ஓடி விட்டார்கள். பாதி இளைஞர்கள் போரில் இறந்து விட்டார்கள். பலர் ஊனமாகிப் போனார்கள். இன்னும் சிலர் காணாமல் போய்விட்டார்கள். இன்றும் தாய்மார்கள் அவர்களைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக கடந்த 75 வருடங்களாக பல இழப்புகளைக் கண்ட மக்களுக்கு ஆசுவாசமாக மூச்சை விடுவதற்கு இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை விடுத்து அவர்கள் ஒரு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது சிறிது மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும். அதற்கான வழி வகைகள் என்ன என்பதுதான் இன்றைய கேள்வி. ‘நாங்கள் மீண்டும் ஏமாறப் போகிறோம். அவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், நாங்கள் யாரிடம் இருந்து எங்களுக்கான தீர்வைப் பெறப் போகிறோம் என்ற கேள்வி இருக்கிறது. சர்வதேசம் தீர்க்கப் போகிறதா? இல்லை இந்தியாதான் உதவுமா? ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் தமிழகத்தில் ஒரு ஆளுனர்தான் இருக்கிறார். எங்களுக்கு மாகாணத்துக்கான அதிகாரம் வந்தாலும் கூட அப்பொழுது ஒரு ஆளுனர் மட்டுமல்ல ஏற்கனவே வந்து பாய் போட்டு படுத்திருக்கும் இந்தியத் துணைத் தூதுவரும் ஆளுனர் போலவே நடந்துகொள்வார். ஜேவிபியின் போராட்டத்திலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்தால் மகிழ்ச்சி. பொருளாதாரப் பிரச்சினையில் இலங்கை அமிழ்ந்து போய் இருக்கிறது. பாதிக்கப் படுவது ஓட்டு மொத்தமான மக்களும்தான். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் பயன் படுத்துவதும் சாதுரியமாகச் செயல்படுவதும்தான் சிறப்பு. பதறிய காரியங்கள் எல்லாம் சிதறிப் போகும். பிரபாகரன் கூடச் சொன்னார் ‘போராடுவதற்கு முதலில் ஒரு தளம் இருக்க வேண்டும்’ என்று பேசுவதற்கும் அது பொருந்தும். இப்பொழுது அது கிடைத்திருக்கிறது. அதைக் குழப்பாமல் பயன்படுத்துவோம். மேற்கு நாடுகள் கூட, ‘இலங்கையில் முதன் முதலாக இடதுசாரி ஆட்சி’ என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது, ஆட்சியின் அணுகுமுறை எப்படி இருக்கப் போகிறது என்று அமைதியாக இருந்து அவதானிக்கிறார்கள். ‘ஒருநாளிலேயே மாற்றம் கொண்டுவர நானொன்றும் மந்திரவாதி இல்லை’ என்று அனுராவே சொல்லியும் இருக்கிறார். நாங்களும் அமைதி காப்போம். எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. என்று எழுதியிருந்தீர்கள் கோயிலில் பக்தர்கள் பக்தியில் மூழ்கி இருக்கிறார்கள். அந்த இடத்தில் போய் நின்று கொண்டு, “கோயில் பிழை. கடவுள் இல்லை. கோயிலை இடி” என்று நான் கத்தினால், இடி கோயிலுக்கு விழாது. எனக்குத்தான் விழும். அதுதானே உண்மை. இறுதியாக, புதிய ஜனாதிபதிக்கு மேல் ‘இனவாதி’ என்று உமிழ்ந்து விடாமல் அவருக்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்க்கலாம். எதற்குமே சந்தர்ப்பம் கொடுக்காமல் பழசையே கிண்டிக் கொண்டிருப்பதால் எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் இப்பொழுது அவசரமாக ஓடிவந்து, அனுராவை கரித்துக் கொட்டுவதெல்லாம் பலரது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காகத்தானோ என்ற எண்ணம் கூட எனக்கு வருகிறது. கஜினி பலமுறை (17) தோற்றும் இறுதியில் வென்றான் என்பதும் சரித்திரத்தில் இருந்து கற்றதுதான்.
  2. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில சிங்கள அரசியல்வாதிகள் சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே இனவாதம் செய்வர். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில் அனுர இனவாதம் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என நினைக்கின்றேன்.நாட்டின் சுபீட்சம்,ஊழல் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. அதை ஓரிரு நாட்களில் செய்கின்றார் என செய்திகளில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது. இனவாதி என்று பார்த்தால் நானும் தமிழ் இனவாதிதான்.அது போல் அனுரவும் ஒரு இனவாதியே. மாற்றுக்கருத்தில்லை. அது எந்த நேரத்தில் எங்கு பேசப்படுகின்றது என்பதுதான் முக்கியம். இப்போது நான் அனுரவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. ஒருவரின் ஆட்சியைப்பற்றி நல்லது கெட்டது கூற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்படி இருக்க இங்கே ஆடு அறுக்க முதல் ஏதோ அறுத்த கதையாக போகின்றது. இன்று இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் கட்சிகளின்/அரசியல் தலைவர்களின் கைகளிலிருந்து ஆட்சி கைமாறி வேறொரு கட்சிக்கும் புதிய முகத்திற்கும் போய் இருக்கின்றது. என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் முன்னேறவில்லை என்பதற்காக சிங்கள அரசியலும் முன்னேறவில்லை என கட்டியம் கூறுவது எந்த நியாயமில்லை. அவன் இனவெறியன் இவன் இனவெறியன் என கூறுபவர்களே! குண்டு சட்டிக்குள் தேர் இழுக்காமல்........☝ ஏனென்றால் அந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு வாக்கிடும் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர்.புலத்திலிருந்து எதையும் எழுத முடியும். ஆனால் சாதிப்பதில்.....? இனவெறியன் என தூபமிடுபவர்கள் இன்றுவரைக்கும் தம் மண்ணில் உறைந்திருக்கும் சாதிப்பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை எழுதினார்களா? எம் மண்ணில் முதலில் சாதி பிரச்சனையை அகற்ற வழி செய்ய வேண்டும். அதன் பின்னர் தமிழர் ஒற்றுமைக்கு முயற்சி செய்ய வேண்டும். விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு சாதி வேற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம்.
  3. மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர் September 29, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இரு வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவு செய்தபோது இலங்கை வரலாறு கண்டிராத மக்கள் கிளர்ச்சியினால் இறுதியில் பயனடைந்தவர் அவரே என்று கூறப்பட்டதுண்டு. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் அந்த கிளர்ச்சியின் உண்மையான பயனாளி யார் என்பதை உலகிற்கு காட்டியது. இடதுசாரி அரசியல் கட்சிகளினதும் அவற்றின் தொழிற் சங்கங்களினதும் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 1953 ஆகஸ்ட் ஹர்த்தால் போராட்டத்துக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வை பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க மூன்று வருடங்களுக்கு பிறகு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவிக்கு வந்ததைப் போன்று, ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு இரு வருடங்கள் கடந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கின்றன. பண்டாரநாயக்க ஹர்த்தாலை ஆதரிக்காமலேயே அதன் விளைவாக மாற்றமடைந்த அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தினார். ஹர்த்தாலை நடத்திய இடதுசாரி தலைவர்களினால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அந்த போராட்டத்தின் வெற்றியினால் தடுமாறிப்போன அவர்கள் அடுத்த நகர்வை செய்வதற்கு பயனுறுதியுடைய தந்திரோபாயத்தை வகுக்க முடியாதவர்களாக அப்போது இருந்தார்கள். ஆனால், திசாநாயக்க ‘அறகலய’வுக்கு தலைமை தாங்கவில்லை என்றபோதிலும், அவரின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கியது. அந்த போராட்டத்தின் விளைவாக நாட்டின் அரசியல் நிலவரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் பயனாக அவர் இன்று ஜனாதிபதியாக வந்திருக்கிறார். அன்றைய இடதுசாரி தலைவர்களினால் அவர்களது சொந்தத்தில் ஒருபோதும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றி இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக ஒரு இடதுசாரி அரசியல்வாதியை நாட்டின் தலைவராக உச்சநிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. அவரது வெற்றி ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக ஆட்சியில் ஏகபோகத்தை தங்கள் பிறப்புரிமை போன்று அனுபவித்த பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை ஒரு சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒருவருக்கு கைமாற்றியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, “திசாநாயக்க”வின் வெற்றி குறித்து கருத்துக் கூறியபோது குடும்ப ஆதிக்க அரசியலை மக்கள் நிராகரித்திருப்பது பற்றி எதுவும் கூறாமல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இன்று நாட்டின் உயர்பதவிக்கு வந்ததற்கு தனது தந்தையார் மண்டாரநாயக்க 1956 ஆண்டில் செய்த ‘புரட்சியே’ காரணம் என்று உரிமை கோரியிருக்கிறார். இலங்கையின் முக்கியமான அரசியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொடவின் வார்த்தைகளில் கூறுவதானால் அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்கள் கொழும்பை மையமாகக்கொண்டு வாழும் மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைக் கொண்ட சிறுபான்மையினரான உயர்குடியினரிடம் இருந்து சாதாரண சமூக சக்திகளுக்கு மாறியிருக்கிறது. ஜனநாயகத்தின் ஊடாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் வர்க்க ஏகபோகம் அதே ஜனநாயகத்தினால் தகர்க்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். இலங்கையில் முதற்தடவையாக மார்க்சியவாதி ஒருவர் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பதாக வர்ணிக்கப்படுகிறது. பாரம்பரிய அர்த்தத்திலான மார்க்சியவாதியாக திசாநாயக்கவை இன்று நோக்கமுடியாது. பத்து வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் தலைவராக வந்த பிறகு அவர் முன்னைய போக்குகளில் இருந்து பெரிதும் வேறுபட்ட முறையிலேயே கட்சியை வழிநடத்தி வந்திருக்கிறார். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன்று ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கிறது என்றால் திசாநாயக்க கட்சியின் போக்குகளில் செய்த மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணம். தெற்காசியாவில் நேபாளத்திற்கு பிறகு இடதுசாரி தலைவர் ஒருவரை அரசாங்க தலைவராக தெரிவு செய்த நாடாக இலங்கை விளங்குகிறது. உலகின் ஒரேயொரு இந்து இராச்சியமாக விளங்கிய நேபாளத்தில் முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மாவோவாத கம்யூனிஸ்ட் ஆயுதக்கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய பிரசண்டா முதற் தடவையாக 2008 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றார். இதுவரையான 18 வருடங்களில் அவர் மூன்று தடவைகள் பிரதமராக பதவிக்கு வந்தார். இப்போதும் அவரே பிரதமராக இருக்கிறார். மாவோவாதியான பிரசண்டாவும் அவரது கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியதிகாரத்தில் இருந்துவந்த காலப்பகுதியில் அவர்களின் அணுகுமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் அவர்களை நேபாளத்தின் ஏனைய தாராளவாத முதலாளித்துவ கட்சிகளில் இருந்து பெருமளவுக்கு வேறுபடுத்திப் பார்க்கமுடியாத நிலையை உருவாக்கி விட்டது என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். இலங்கையில் திசாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி. ஏற்கெனவே ஒரு இடதுசாரிப் போக்கில் இருந்து பெருமளவுக்கு விடுபடத் தொடங்கி விட்டது. தீவிர வலதுசாரியான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த இரு வருடங்களாக சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுத்துவந்த பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை தொடருவதாக உறுதியளிக்கின்ற அளவுக்கு தேசிய மக்கள் சக்தி மாறுதலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களுக்கு பதிலளிக்கும் வேளைகளில் எல்லாம் திசாநாயக்க அடிப்படைக் கொள்கைகளை கைவிடவில்லை என்ற போதிலும் தற்போதைய சர்வதேச நிலைவரங்களுக்கு ஏற்ற முறையில் தங்களது அணுகுமுறைகளில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கூறிவந்திருக்கிறார். உலகில் ஒரு சோசலிச முகாம் இல்லாத காரணத்தால் இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றும் அவர் விளக்கமளித்தார். பொருளாதார நெருக்கடி உட்பட தாங்கள் எதிர்நோக்கும் பெருவாரியான பிரச்சினைகளுக்கு பாரம்பரிய அரசியல் சக்திகளின் தவறான ஆட்சிமுறையே காரணம் என்பதை விளங்கிக் கொண்ட மக்கள் மத்தியில் பொது வாழ்வை தூய்மைப்படுத்துவது குறித்து திசாநாயக்க அளித்த உறுதிமொழி பெரும் வரவேற்பை பெற்றது. ஊழலுக்கு எதிரான அவரின் செய்தியும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாக அளித்த வாக்குறுதியும் முறைமை மாற்றம் ஒன்றை வேண்டிநின்ற இளம் வாக்காளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன. நீண்டகாலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் கூட பழைய பிரதான அரசியல் கட்சிகளையே மாறிமாறி ஆட்சிக்கு கொண்டுவந்து சலித்துப்போன மக்கள் இரு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பநிலைக்கு பிறகு பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதில் காட்டிய ஆர்வத்தை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. உண்மையில் இது மக்கள் செய்து பார்க்கத்துணிந்த ஒரு பரிசோதனையே என்பதில் சந்தேகமில்லை. பாரம்பரிய அதிகார வர்க்கத்தின் மீது கடுமையாக வெறுப்படைந்த மக்கள் ‘மாற்றத்துக்கான’ வேட்பாளராக திசாநாயக்காவை நோக்கினார்கள். கடந்த இரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக தன்னால் சாதிக்க முடிந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரசாரப்படுத்திய ‘உறுதிப்பாட்டையும் வழமை நிலையையும்’ அனுபவிக்கக்கூடியவர்களாக இருந்த பிரிவினரே அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு விக்கிரமசிங்க தனது பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் முழுமையாக தங்கியிருந்தது அவரின் தந்திரோபாயங்களில் இருந்த மிகப்பெரிய குறைபாடாகும். நீண்டகால அரசியல் அனுபவத்தையும் வளமான அறிவையும் கொண்ட அவருக்கு நாடு அண்மைக்காலமாக எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்கள் பொருளாதாரக் காரணியை மாத்திரம் மனதிற்கொண்டு வாக்களிக்கப் போவதில்லை என்பது தெரிந்திருக்கவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடும் ஆர்வத்தில் மக்கள் இதுகாலவரையான தவறான ஆட்சிமுறை, குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவு மற்றும் முன்னென்றும் இல்லாத ஊழலை மறந்து விடுவார்கள் என்று அவர் நினைத்தாரோ? தனது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இல்லாத நிலையில் ராஜபக்சாக்களின் கட்சியில் இருந்தும் வேறு கட்சிகளில் இருந்தும் வந்த அரசியல்வாதிகளை நம்பி கூட்டணி ஒன்றை அமைத்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்று விக்கிரமசிங்க நினைத்தது பெரும் தவறு. முன்னரைப் போன்று சிறுபான்மைச் சமூகங்களும் அவரை இந்த தடவை ஆதரிக்க முன்வரவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பெரும்பாலான மக்கள் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தின் ஒரு அங்கமாகவே நோக்கினார்கள். அவருக்கு இது ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தோல்வி. திசாநாயக்கவிடம் தோல்வி கண்டாலும் கூட விக்கிரமசிங்கவை தோற்கடித்துவிட்டதில் பிரேமதாச ஒருவிதத்தில் திருப்தியடைந்திருக்கக்கூடும். ஜனாதிபதி திசாநாயக்கவும் கூட ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியவில்லை. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மற்றைய வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய நிர்ப்பந்தம் இந்த தடவையே ஏற்பட்டது. தனக்கு கிடைத்த ஆணையின் தன்மையை அவர் விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. கொழும்பில் அதிகார ஏகபோகத்தைக் கொண்டிருந்த மூன்று பிரதான அரசியல் கட்சிகளையும் கிரகணம் செய்து திசாநாயக்கவும் தேசிய ஐக்கிய மக்கள் சக்தியும் தேர்தலில் கண்டிருக்கும் வெற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற வைத்த 2022 மக்கள் கிளர்ச்சியுடன் தொடக்கிய மாற்றத்தை நோக்கிய அரசியல் நிகழ்வுகளின் சுழற்சியை நிறைவு செய்கிறது என்று எவரும் மெத்தனமாக நினைத்து விடக்கூடாது. ஜனாதிபதி திசாநாயக்க சமாளிக்க முடியாத எண்ணற்ற சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவராக இருக்கிறார். பாராளுமன்றத்தை கலைத்து இரு மாதங்களுக்கும் குறைவான இடைவெளிக்குள் பொதுத்தேர்தலுக்கான திகதியை அவர் அறிவித்திருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் கண்ட தோல்வியின் தாக்கத்தில் இருந்து மற்றைய கட்சிகள் விடுபடுவற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. பொருளாதாரத்தை உறுதிப்பாட்டுக்கு கொண்டுவரவும் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியைத் தரவேண்டும் என்று திசாநாயக்க தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களிடம் கோருவார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் அடிப்படையில் தான் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அமையுமா அல்லது அவருக்கு முழுமையான வாய்ப்பைக் கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியை மக்கள் அதிகப்பெரும்பான்மை ஆசனங்களுடன் தெரிவு செய்வார்களா என்பது முக்கியமான கேள்வி. இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் புவியியல் ஒழுங்கை கருத்தில் எடுக்கவேண்டியதும் அவசியமாகிறது. தென்னிலங்கையில் இருந்து குறிப்பாக சிங்கள பௌத்த சமூகத்தவர்கள் அதிகப்பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்களில் இருந்து பெரும்பான்மை ஆதரவைப் பெற்று திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு மாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மயைகத்திலும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்குமே பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மைச் சமூகங்கள் திசாநாயக்கவுக்கு முற்றாக வாக்களிக்கவில்லை என்று கூறமுடியாது. ஆனால், பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகள் தான் அவரை வெற்றிபெற வைத்தன. அதற்காக கோட்டாபய ராஜபக்ச போன்று சிங்கள மக்களே தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் என்று திசாநாயக்க ஒருபோதும் சொல்லப்போவதில்லை. கோட்டாபய சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணத்துக்கும் திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட காரணத்துக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. அதேவேளை, தாங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு அரசியல் தலைவராக திசாநாயக்கவை சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளில் கணிசமான பிரிவினர் அடையாளம் கண்டு ஆதரவு வழங்கியிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான அந்த தேசியவாத சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல் துணிச்சலாக திசாநாயக்க நடந்து கொள்வாரா இல்லையா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். தங்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து புதிய அணுகுமுறையை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன. சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்று தேர்தல் முடிவுகளை வியாக்கியானம் செய்யமுடியாது. சிங்கள மக்கள் விரும்புகின்ற மாற்றத்திற்குள் தங்களது அபிலாசைகளுக்கு எந்தளவுக்கு மதிப்பளிக்கப்படும் என்பதே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கேள்வி. எது எவ்வாறிருந்தாலும், இதுகாலவரை இலங்கை அரசியல் அதிகாரத்தை தங்களது ஏகபோகத்தில் வைத்திருந்த ஒரு வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒரு ‘ தோழர்’ ஜனநாயக வழிமுறையின் மூலமாக நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதில் உள்ள வரலாற்று முக்கியத்துவத்துவம் உரியமுறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஜனாதிபதி திசாநாயக்க ஒரு கணிசமான காலப்பகுதிக்கு ஆட்சிசெய்த பின்னர் மாத்திரமே அவரைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்யமுடியும். https://arangamnews.com/?p=11287
  4. என்னை இங்கு வந்து தனிப்பட்ட ரீதியில் தாக்கியும், என் மீது வசை மாறி பொழிந்தும் இன்புற்றவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள். எனென்றால், உங்களின் எதிர்ப்பே என்னை இத்தொடரை இறுதிவரை இழுத்துச் சென்று முற்றாகப் பதியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. உங்களின் வசைகளும், "நாசமாய்ப் போவாய்" என்கிற "ஆசீர்வாதங்களும்" என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஊக்கமும் ஆதரவும் தரும் ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், பெருமாள் ஆகியோரிற்கு எனது இருகரம் குவிந்த நன்றிகள். எழுதுவதற்கான எனது உரிமையை ஏற்றுக்கொண்டபோதிலும், இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள். யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன். நான் எழுதுவது நடந்த சரித்திரத்தை. சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் என்கிற ஆதங்கத்தில்த்தான். அதை இங்கே செய்யவேண்டாம் என்றாலும் கவலைப்படப்போவதில்லை. எனது கருத்துக்களை வெளிக்கொணர வேறு மார்க்கங்களும் இருக்கின்றன. எனது இனம் மீது இன்றுவரை நடத்தப்படுகின்ற திட்டமிட்ட இனக்கொலை, எனது தாயகம் மீது ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பெளத்த இராணுவம், நாள்தோறும் கபளீகரம் செய்யப்பட்டு, சிங்களமயமாகும் எனது தாயகம், கொல்லப்பட்ட எனது மக்களுக்கும், மாவீரர்களுக்குமான நீதி, அரசியல்கைதிகளுக்கான விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி...இவை அனைத்திற்குமான நேர்மையான பதில்களும், தீர்வுகளும் எந்தவொரு சிங்களத் தலைவனிடமிருந்து உண்மையாக வருகின்றதோ, அன்றைக்கு நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன். என்னை இனவாதி என்று அழையுங்கள், சாதியில் குறைந்தவன் என்று முகத்தில் உமிழுங்கள், ஆங்கிலமும் தமிழும் தெரியாதவன் என்று எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. எனது பணி தொடரும். முடிந்தால் யாழில், இல்லாவிட்டால் எனக்கு எங்கெல்லாம் எழுதமுடியுமோ, அங்கெல்லாம். எல்லோருக்கும் நன்றி. இடதுசாரி எனும் போர்வைக்குள் ஒளிந்து நின்றுகொண்டு தனது தீவிர சிங்கள இனவாத முகத்தை மறைக்க எத்தனிக்கும் அநுரவுக்கெதிரான எனது கருத்துக்கள் மறுபடியும் இன்றிரவில் (சிட்னி நேரப்படி 8 மணி) இருந்து தொடரும். மறவாமல் உங்களின் வசைவுகளையும் அடிக்கடி இணையுங்கள், எழுத்துத்துணைக்கும் எனக்கு ஆள்த் தேவைப்படுகிறது.
  5. புலிகளின் நடவடிக்கைகளை விமர்சனத்துக்கு உட்படுத்த வேணும் என்று சொல்லி புலிகளை வசைபாடுவது உங்க ஸ்டைல் இங்கு அனுரா வின் கடந்த கால நடவடிக்கைககள் அவர் கட்சி சார்ந்த தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைககள் போன்றவற்றை ரஞ்சித் எமது பார்வைக்கு நினைவு படுத்துகிறார் உங்களால் அவர் எழுதிய விடயங்களில் பிழை கண்டு பிடிக்க முடியவில்லை ஏனென்றால் அவர் எழுதுவது அனைத்தும் நடந்த விடயங்களே .பொது வேட்பாளர் அவர் உண்மையிலே யார் என்று தெரியாத போதிலும் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டுவதுதான் யாழில் உங்களின் 24 மணி நேர சேவை . நல்ல கருத்துக்கள் வரவேணும் அதற்காக எப்ப பார்த்தாலும் பழம் சீல கிழிந்தது போல் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டிக்கொண்டு புலம்பெயர் தமிழரையும் திட்டிக்கொண்டு எழுதுவதை எல்லாம் நீங்கள் கருத்து என்று எடுத்து கொண்டது உங்கள் சிறுமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்குது . அநேகமா இனி அனுரா திருந்தியும் இருக்கலாம் இரு இனமும் ஒன்று பட்டால் தான் அந்த தீவில் நல் வாழ்வு என்று அதற்கு முதல் ....................அறுத்து ஆடுகிரியல் உங்க வழக்கமான விளயாட்ட ?
  6. ❤️.......... மிகவும் தேவையான ஒரு கருத்தை தாயகத்திலிருந்து பதிந்திருக்கின்றீர்கள், ஓணான்டியார்..........👍. நான் இந்த அவருடம் ஊருக்கு போயிருந்த போது வவுனியாவில் ஒரு வீட்டிற்கு போயிருந்தேன். அவர்களை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். இப்பொழுது மிகச் சாதாரண ஒரு வாழ்க்கையையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கணவன், மனைவி, சில பிள்ளைகள். அந்த அக்கா சொன்னார், 'தம்பி, எங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்றும் நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.............'. அவர்களிடம் எதுவுமே இல்லை. ஒரு கூட்டில் 50 கோழிக் குஞ்சுகள் மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனுடனேயே இவ்வளவு திருப்தியா......... நான் கண் கலங்கி விடக் கூடாதென்பதில் மிக உறுதியாக இருந்தேன். அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. இந்தச் சனங்களை அப்படியே வாழ விடுங்கள் என்று தான் நானும் கேட்கின்றேன். அவர்கள் கடந்து வந்த பாதை போதும்.
  7. 1) அனுரா ஒன்றும் அரசியல்ப் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை.. அதனால் அதை பேசுவதில் பலன் இல்லை.. நடந்தால் சந்தோசமே.. ஆனால் 2) மகிந்த யுகம் முடிந்து மைத்திரி யுகம் வந்தபோது அவுஸ்திரேலியாவில் கனடாவில் இருப்பதுபோல் இல்லாவிட்டாலும் எங்கள் வாழ்க்கையை உயிர்ப்பயம் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து அவுஸ்த்திரேலியா கனடா ஜரோப்பாவில் இருப்பது போல் இல்லாமல் பிள்ளைகளை தமிழ்மொழியில் படிப்பத்து தமிழை பேசி பேரக்குழந்தைகளுக்கும் தமிழை கற்றுக்கொடுத்து தமிழையும் வளர்த்து தமிழ் இனத்தையும் சிறிது சிறுதாக பெருக்கினோம்.. 2) இப்பொழுதும் அப்படி அனுராவின் கீழ் ஏதோ சாவுப்பயம் இல்லாமல் எங்கள் மண்ணில் வாழ்ந்திட்டு போறம்.. அதில் கொள்ளிக்கட்டையை செருகாதீர்கள்.. மொழிதான் இப்பொழுது இங்கு பெரிய பிரச்சினை.. தமிழர்கள் இரண்டாவது மொழியாக சிங்களத்தையும் கற்றுக்கொண்டால் அரசியல்ப்பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும் விளங்காப்பிரச்சினைகளால் வரும் பாதிப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.. நீங்கள் ஜேர்மனி பிரான்ஸ் அவுஸ்த்திரேலியா என்று போய் அந்த நாட்டு மொழியை கற்று இரண்டு தலைமுறைக்குள் தமிழை மறந்து இன அடையாளத்தையும் இழந்து ஒரு தலைமுறையை புலம்பெயர்ந்து இன அழிப்பு செய்யும் புலம்பெயர் தமிழர்களுடன் ஒப்பிடும்போது ஊரில் இருந்து தமிழையும் கற்று வளர்த்து தாய்நிலத்தில் வாழ்ந்து தமிழ்பேசும் சந்தத்திகளையும் உருவாக்கிக்கொண்டு சிங்களத்தை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்பவர்களின் காலில் வீழ்ந்து கும்பிடலாம்.. உங்களால் பிரஞ்சையும் டொச்சையும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு இனவெறி பேசினாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து வெள்ளைகளோடு சந்தோசமாக வாழமுடியும் என்றால் ஊரில் இருப்பவர்கள் ஏன் சிங்களம் கற்று முஸ்லீம்கள் போல் உங்களைப்போல் சந்தர்ப்பவாதிகளாய் வாழமுடியாது..? வாழ்ந்தால்தான் என்ன தப்பு..? இனம் இருந்தால்தானே இடமே இருக்கும்.. ஆக நீங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உங்கள் பாடுகளை பார்ப்பதுபோல் ஊரில் இருப்பவர்களையும் அவர்கள பாடுகளை பார்க்கவிடுங்கள்.. ஊதி ஊதி அணைந்து போய் இருக்கும் நெருப்பை எரித்து தமிழர்களுக்கு என்று இருக்கும் ரெண்டு சின்ன மாகாணங்களை எப்பொழுதும் சுடுகாடாக வைத்திருக்க விரும்பாதீர்கள்.. அப்படி நினைப்பவர்கள் நல்லா இருக்க மாட்டீர்கள்.. நாசாமாப்போவீர்கள்.. வாழு வாழ விடு… பாலைவனம் கடந்து வந்தோம்.. பாதங்களை ஆற விடு..🙏
  8. ரஞ்சித் எழுதியது அத்தனையும் உண்மை தான்.நடந்தவைகள் தான். அப்போது அவர்களை வளர்த்துக் கொள்ள முழு இனவாதம் தேவைப்பட்டது. இப்போது வளர்ந்து அதிகாரத்துக்கும் வந்துவிட்டார்கள். முன்னர் இந்தியாவுக்கு எதிராக எப்படியெல்லாம் கூக்குரலிட்டார்கள். இந்திய சாமான்களை விற்கவே கடைக்காரர்கள் பயப்பட்டார்கள். இப்போ இந்தியாவே இவர்களைக் கூப்பிட்டு செங்கம்பளம் விரித்து கைலாகு கொடுத்து வரவேற்கிறது.அவர்களும் யாருக்கும் எதிராக எதுவுமே இன்னமும் சொல்லவில்லை. நீங்கள் எழுதியவைகளை தமிழர்கள் மறக்கவும் கூடாது. முன்னர் புலிகள் பலமாக இருந்த காலங்களில் காலையில் எழும்பினால் இன்று என்னென்ன மாஜாஜாலங்கள் செய்துள்ளார்கள் என்று தமிழ்நாதத்தை புரட்டி எடுப்போம். அதே மாதிரி இன்று சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழர்களும் என்பிபி என்னென்ன மாஜாஜாலங்கள் செய்துள்ளார்கள் என்று ஆவலுடன் பார்க்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலும் புலிகள் ஒவ்வொரு தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது போல உள்ளூர மனம் சந்தோசமடைகிறது. ஒரு தலைவனைத் தேடிக் கொண்டிருக்கும் எமது மக்கள் இவரைத் தேடிப் போவது தவிர்க்க முடியாததாகிறது.அந்தளவுக்கு எமது அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். கீழே வாட்சப்பில் வந்த ஒரு செய்தியை இணைக்கிறேன் பாருங்கள்.காலையில் எழும்பி பார்க்க பிபி தான் எகிறுது. கிளிநொச்சி நகரில் என்னதான் நடக்கிறது*!! *⭕ரணில் விக்ரமசிங்க அரசிடம் சாராயம் விற்பதற்கான அனுமதிப்பத்திரம் வாங்கி அதனை பல கோடி ரூபாக்களுக்கு விற்றதாக பல தமிழ் பேசும் எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது*. *⭕இந் நிலையில் கிளிநொச்சி நாட்டாமை என்று பெயரெடுத்த சிறிதரன் எம்பியின் கோட்டைக்குள் இவ்வளவு சாராயக்கடைகள் எவ்வாறு வந்தது?* *🟣சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்*…. *A9 வீதி கிளிநொச்சி ஊடாக செல்ல வேண்டிய தேவையின் நிமித்தம் சென்ற போது. வீதி சமிக்ஞைக்கு மேலதிமாக பல பச்சை நிறத்தில் வெள்ளை எழுத்துகளால் ஆன பல பெயர்ப் பலகைகள் காணக் கண்டேன். உற்றுக் கவனித்ததில் அவை யாவும் புதிதாக திறக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கும் மதுபான விற்பனை நிலையங்கள் என தெரிந்தது.* *அட என்னடா இது பரந்தன் சந்தி தொடக்கம் அறிவியல் நகர் வரையிலான Bar 9 வீதியில் sorry A9 வீதியில் இத்தனை கடைகளா ? அட இவ்ளோ கடையிலும் போய் வாங்கி குடிக்க அங்க ஆக்கள் வேணுமே டா. என்னங்கடா போட்டிக்கு கடை திறந்தது போல……!* *இதில் முதலாவதாக இருப்பது Bar & Restaurant அதாவது வாங்கி அங்கேயே குடிக்கலாம். இது இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் தான் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஏனைய கல்வி நிலையங்கள் காணப்படுகின்றது*. *எல்லோரும் அரசியல்வாதிகளை சலுகை பெற்றுவிட்டதாக சொல்லிக்கொண்டு இருக்க, போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி Bar ஆல் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதையும் எதிர்கால சந்ததிகள் அழிவடைவதற்கு திட்டமிட்ட வகையில் செயற்படுவதையும் பேசவில்லை*. *தேசியம் சுயநிர்ணயம் என்று சொல்லுபவர்கள், திட்டமிட்ட இன அழிப்பு என்று சொல்லுபவர்கள், கருத்துக்களை கோர்த்து அழகாய் பேசி உணர்ச்சி பொங்க பேசுபவர்கள், அரசியல்வாதிகள், அரசியலுக்கு வர இருக்கும் அறிவாளிகள், ஆய்வாளர்கள், சமுக சிந்தனைவாதிகள், அன்மீகவாதிகள் என யாருமே இது பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லைதெரிவிக்கவில்லை.* *யாரோ சலுகை பெற்றுவிட்டனர் என்றே குறை கூறிக்கொண்டு இருக்கின்றனர். திட்டமிட்டு ஒரு சமுதாயம் அழிக்கப்பட்டுக் கொண்டு இருப்பதை யாரும் சுட்டிக்காட்டவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. இது எல்லா இடத்திலும் இருக்கிறது (Bar) தானே என்பார்கள்.* *ஆனால் பாடசாலைக்கு அருகில் கோவிலுக்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு அருகில் அமைப்பதற்கு யாரும் அனுமதிப்பதில்லை.* *மாறாக பிரதேச மக்களின் எதிர்ப்புகளே இடம்பெற்று இருக்கிறது. அடுத்தவரை குறை கூறி, சாடி பழகிவிட்டோமே தவிர எமது சமுதாயம் சீரழிந்து போவதை தடுப்பதும் இல்லை எதிர்ப்பதும் இல்லை. சுய லாப அரசியல்வாதிகளுக்கு பின்னால் நின்று அவர்களை வளர்த்துக்கொண்டே செல்கின்றீர்கள்.* *இது மாற்றப்படல் வேண்டும். “இரத்து செய்யப்பட்ட அனுமதிகள்” என செய்திகளை பார்த்து மகிழ்ந்தோம். அது செய்தி மட்டும் தான் நிஜத்தில் இல்லை என்பது போலவே குறித்த மதுபான விற்பனை நிலைய நடத்துநர்கள் சிரிப்பது தெரிகின்றது.* *10 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கும் உட்பட்ட குறித்த சாலையில் எனது கண்ணில் தென்பட 14 மதுபான விற்பனை நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டிந்தது.* *இன்னும் எத்தனை இருக்கின்றதோ தெரியவில்லை. (உள் வீதிகளில்)* *பல்கலைக்கழகத்திற்கு அருகில் Bar & Restaurant அமைக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது யாரும் கேட்கவில்லை எதிர்க்கவில்லை. சமுக சேவைகள் திணைக்களமும் அருகில் தான் இருக்கின்றது.* *இது கடந்து செல்லும் விடயமல்ல…..!*!😱😱😱🤔🤔🤔 வாட்சப்பில் வந்தது.
  9. பாராளுமன்றம் சென்று கதிரையில் நித்திரை கொள்வது இலகுவான காரியமல்ல ..நாடியில் கை வைத்து பேச்சுக்களை அவதானிப்பது போல் நடித்து நித்திரை கொள்வ‌து மிக மிக கடினம்...அதற்கு 1 லட்சம் அல்ல அதைவிட அதிகம் கொடுக்க வேணும்... சும்மா இருந்து சுகம் காண்பது மிகவும் கடினமான விடயம்
  10. ரஞ்சித் அவர்களே நன்றி, வேலை-உணவு- செமிபாட்டு நடை என்று புலத்திலே நாம் பாதுகாப்பாக இருந்துகொண்டு தட்டிக்கொண்டிருக்க, பொருத்தமான காலத்தில் நீங்கள் யே.வி.பியினதும், அதன் கூட்டுகளதும் இனவாத முகத்தை நினைவூட்டுகிறீர்கள். சிறிலங்காத் தேசியர்களுக்கு உவப்பாக இராதபோதும், தமிழருக்கு இருக்கும் மறதிக்குணத்தில், போன கிழமை ரணிலோடை சும் நிண்டதே மறந்துபோச்சு, அவற்றை ஒத்துமை அறிக்கையோடை.... அப்ப 20 ஆண்டகளுக்கு முற்பட்டது நினைவிருக்குமோ. யே.ஆரால் வளர்கபபட்ட ரணிலும், றோகனவின் பாசறையில் வளர்ந்த அனுரவும் வேறுபட்ட நிறங்களைக் காட்டினாலும் முகங்களின் வார்த்தை ஒன்றேதான். அவை சிங்கள பௌத்த தேசியவாத முகங்கள். நொச்சி
  11. 👍................ சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் ஏறக்குறைய முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்ட பின்னர், இவர்களுக்கு நல்லதொரு நீண்ட எதிர்காலம் இருக்கின்றது. இவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு போட்டியாளர் சஜித் மட்டுமே. சஜித்தின் தனிப்பட்ட ஆளுமையில் சந்தேகம் இருந்தாலும், அவர் இவர்களுக்கு மிகவும் பலமான ஒரு எதிராளியே. அநுர சிறிது சறுக்கினாலும், அங்கே அது சஜித்திற்கு ஆதரவாக முடிந்துவிடும். சில செயல்கள் ஒரு விம்பத்தை கட்டி எழுப்பும்: வாகனங்களை மீளப் பெறுதல். குடியிருப்புகளை மீட்டெடுத்தல் போன்றன. இவை ஆரம்பத்தில் பெரிதாகத் தோன்றும், ஆனால் நாளடைவில் மக்களுக்கு இவை சலித்துவிடும், அத்துடன் இவை ஒரு ஆரம்ப நடவடிக்கைகளின் பின்னர் பெரும் பொருள் அற்ற செயல்களும் கூட. சில செயல்கள் பெரும்பாலும் உணர்வு பூர்வமானவை, ஆனால் நடைமுறைச் சாத்தியம் அற்றவை: ஊழல், கொள்ளைப் பணத்தை மீட்போம் என்பது. சிறிய அமைச்சரவை என்பது. எல்லா பொறிமுறைகளையும், கல்வி, உட்பட மாற்றப் போகின்றோம் என்று சொல்வது. இவைகளில் ஒரு அடி முன்வைக்க ஒரு அடி சறுக்கிக் கொண்டும் போகலாம். இவைகளை செய்யாமல் கைவிட்டாலும் மக்கள் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள். சில செயல்கள் காலாவதியான வெற்றுக் கோட்பாடுகள்: தனியார்மயப்படுத்தலை எதிர்த்தல். பலவேறுபட்ட இனக்குழுக்களை, அவர்களின் பண்புகளை ஏற்றுக்கொள்ள மறுத்தல். ஒரே ஒரு வகையான புத்திஜீவிகளை மட்டும் உள்வாங்குதல் போன்றன. இவை பெரும் சேதத்தை கட்சிக்கும், நாட்டுக்கும் உண்டாக்கும். ஒரு பிரதேச சபையைக் கூட இதுவரை ஜனநாயக முறையின் கீழ் நிர்வகிக்காதவர்கள் இவர்கள். போகும் வழியிலேயே கற்றுத் தேர்வார்கள் என்பதே பலரினதும் நம்பிக்கை.
  12. பத்து வருடம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால்….. 80,000 ரூபாய் ஓய்வூதியம் எடுக்கின்றார்கள். ஏழை நாட்டுக்கு இது மிக அதிகம். மக்களின் வரிப்பணம் எல்லாம் இப்படி வீணாக போகின்றது.
  13. தோழர் இன்று எடுத்துள்ள முடிவே இதுவரை அவர் ஜனாதிபதியாக வந்து எடுத்துள்ளவைகளில் முக்கியமான முடிவு. இலங்கை விமான நிறுவனம் விற்கப்படமாட்டாது, தனியார்மயப்படுத்தலும் இல்லை என்று முடிவெடுத்திருக்கின்றார். இவை போன்ற முடிவுகள் நாட்டை பொருளதாரா ரீதியாக மீண்டும் இக்கட்டான ஒரு நிலைக்கு தள்ளக்கூடும். ஏற்கனவே 550 மில்லியன் கடன்களில் நின்று கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தில் மிகச் சிலரை மாற்றுவதால் மட்டும் இது ஒரு இலாபகரமான நிறுவனமாக மாறப் போவதில்லை. மேலும் இன்னும் சில அரச நிறுவனங்களும் தனியார்மயப்படுத்த வேண்டிய இந்தப் பட்டியலில் இருக்கின்றது. சுதேசம், சுய பொருளாதாரம், சுயநிறைவு......... போன்ற கொள்கைகள் நடைமுறையில் சாத்தியமானவை இல்லை. குதிரைகள் ஓடிக் கொண்டிருப்பதால், புழுதி பாராளுமன்ற தேர்தல் வரை பறக்கும். அதன் பின்னர், அவை அடங்க, நிஜம் துலங்கும்.
  14. ஒரு மூலையில் நின்று கொண்டு தனக்கான நேரம் வருமா எனக் காத்திருந்த மகிந்தவை இந்த உடன்படிக்கையின் பின் தான் முன் வரிசைக்கு கொண்டு வந்திருந்தனர். புலிகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு கொண்டு இருந்த ரணில் அரசை பதவி நீக்கம் செய்து, மகிந்தவை சந்திரிக்கா கொண்டு வந்தார். சில காலங்கள் செல்ல, தன் அரசியல் வாழ்வில் தான் செய்த மிகப் பெரிய பிழை, தன் கணவரைக் கொன்ற ஜேவியின் சொல்லைக் கேட்டு மகிந்தவை பிரதமராக்கியது என்று சந்திரிக்கா சொல்லி இருந்தார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், எந்த ரணில் பிரதமராக தொடரக் கூடாது என்று ஜேவிபி காரியமாற்றியதோ, அதே ரணிலை தோற்கடிப்பதற்காக புலிகளும் தேர்தலை புறக்கணிக்க சொல்லியது தான். புலிகளும் ஜேவிபியும் வெவ்வேறு நோக்கங்களுக்காக ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்ட விடயம் இது. மிச்சம் நடந்ததும் வரலாறுதான்.
  15. யாழ்கள உறவுகளே இந்த திரியை உங்கள் பாடசாலை, பல்கலை, ஊர் உறவுகள் னூடாக பகிர்ந்தால் அதில் ஒருவராவது அந்த பிள்ளையின் மருந்துவ உதவிக்கு கரம் நீட்டுவார்🙏
  16. அநேகமாக வரும் மாவீரர்கள் நாள் இதற்கான முதல்ப்படியை (நல்லது , கெட்டது) காட்டும்.
  17. நன்றிகள் உடையார் என்னுடைய அடுத்த உதவித்தொகையையும் அனுப்பியிருக்கிறேன். பார்ப்போம் 250 நல்லுள்ளங்கள் 100,000 படி உதவினாலோ, அல்லது 500 நல்லுள்ளங்கள் 50,000 படி உதவினாலோ சாத்தியப்படுத்தக்கூடிய தொகைதான் எம்மால் முடியாது என்றல்ல. முடிந்தவரை கடத்துவோம். உங்களுக்கு மீண்டுமொருமுறை நன்றிகள் 🤝
  18. அக்னி அவர்களுக்கு இதுவரை 3.5 இலட்சம் தான் சேர்ந்திருக்கு, நான் ஒரு லட்சம் அனுப்பியிருந்தேன், மீண்டும் ஒரு லட்சம் அனுப்பிவிடுகின்றேன், அவர்களுக்கு 2 கோடி தேவை, அந்த பிள்ளைக்கு உதவி செய்யுங்கள்🙏🙏🙏
  19. தாயகத்தில் தமிழ் தேசியத்தை அழிக்க முனைவது, புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் உள்ள நாட்டாமைகளும் அவர்களின் எடுபிடிகளாக உள்ள வயது போயும் ஓய்வெடுக்க விரும்பாத கிழட்டு அரசியல்வாதிகளும் தான். புலிகள் அழிக்கப்பட்ட பின் அதை அழித்த மகிந்தவின் ஆட்சியை அகற்ற தாயக மக்கள் சரத் பொன்சேக்கா, மைத்திரி, சஜித் என்று மாறி மாறி வாக்களித்தனர். ஆனால் புலிகள் அழியப் போகிறார்கள் என தெளிவாக புரிந்த பின் இறுதி யுத்ததிற்கென காசு சேர்த்து அதை ஆட்டையை போட்ட புலம்பெயர் அமைப்புகள் பல, புலிகள் அழிந்த பின் மகிந்தவுடன் டீல் பேசி அவருடன் கைகுலுக்கினர். எனவே தாயக மக்களின் நோக்கத்திற்கு எதிராகவே எப்பவும் இந்த புலம்பெயர் புண்ணாக்கு கோஷ்டிகள் இயங்கி வருகின்றனர் என்பது கண்கூடு. நீங்கள் மேலே குறிப்பிட்டது அப்படியானவர்களைத் தானே!
  20. இனவாதமற்ற நாடு என்பது ஒவ்வொரு பிரஜைக்கும் சமநிலை, சம உரிமைகள் மற்றும் சமப்பாடு வழங்கப்படும் ஒரு சமூகமாக இருக்க வேண்டும். அத்தகைய நாடு மக்கள் மக்களின் இன, மத, மொழி, தோற்றம், கலாசாரம் அல்லது பிற தனிப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில் வேறுபாடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இனவாதமற்ற நாடு என்பது ஒற்றுமை, பன்மை, சமநிலை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட நாட்டு அமைப்பாக இருக்கும். இதை அடைவதற்கு அநுர என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்ன அரசியலமைப்பு மாற்றங்களை செய்யப் போகிறார் என்பது எனக்கு தெரியாது. காலங்காலமாக புரையோடிப்போயிருக்கும் இனவாதத்தை ஒழிப்பது நிச்சயம் சவாலான விடயம். “நான் மந்திரவாதியல்ல ஆனால் இதை ஒழிக்க நான் எனது பதவிக்காலத்தில் என்னால் முடிந்த அளவு பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார். இனவாதத்தின் தீமைகள் பற்றி சிங்கள பிரதேசங்களிலும் அவர்கள் மத்தியில் அதிகமாக உரையாடி உள்ளார். அவர் தனது ஆட்சியை ஆரம்பிக்க முதலே அவரை இனவெறியர் என்று கட்டமைத்த பிரச்சாரத்தை ஆரம்பித்தது நிச்சயமாக தீய நோக்கிலேயே! இனவாதம் என்பது, தமிழர் மத்தியில் புரையோடிப்போயிருக்கும் சாதிவாதத்தையும் உள்ளடக்கியது. சிங்கள இனவாதம் குறைந்தாலும் அது குறையுமா என்பது சந்தேகமே. தமிழ் தேசியப் பரப்பில் தலைவர்களாக இவ்வாறான பல இனவெறியர்கள் இருந்தும் அவர்களை “இனவெறியர்” என்று அழைப்பார்களா? அதுவும் இனவாதம் தான் என்பதை, வரலாற்றில் எமது தவறுகளை மறைத்து எழுதும் அது பற்றி பேசுபவர்கள் மீது அவதூறுகளை பதிலாக தெரிவிக்கும் எம்மவர் இங்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை என்பதோடு அதை ஜஸ்ரின் கூறியபடி சத்தமின்றி மொள்ள கடந்து செல்லவே பலரும் இங்கு விரும்புவர்.
  21. எனக்கு கடந்த காலம் பற்றிய புரிதல் நன்றாகவே உள்ளது . இலங்கையில் இனவாதத்தை தூண்டியதிலும் அதை வளர்ததெடுத்ததுலும் சிங்களம், தமிழ் ஆகிய இரு பகுதியிலும் அரசியல் செய்த அனைவருக்கும் சம பங்கு உள்ளது என்பது .
  22. உந்த‌ ம‌துவால் எத்த‌னையோ குடும்ப‌ங்க‌ள் பிரிந்து பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் எல்லாம் நாச‌மாய் போச்சு நாட்டுக்கு போய் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு ப‌க்க‌ம் போய் பாருங்கோ ம‌துவின் விலைவு எப்ப‌டி என்று அனுரா ம‌துவை இல்லாம‌ செய்வேன் என்று சொன்ன‌தோட‌ நிக்காம‌ 50 ம‌து க‌டைக‌ளை மூடி விட்டார்......................... யாழ்ப்பாண‌த்து இளைஞ‌ர்க‌ள் ப‌ல‌ர் ம‌துவுக்கு க‌ஞ்சாவுக்கு அடிமையாய் போய் விட்டின‌ம் இவ‌ர்க‌ளை இதில் இருந்து மீட்டு ந‌ல்ல‌ வ‌ழியில் ப‌ய‌ணிக்க‌ வைப்ப‌வ‌னே உண்மையான‌ அர‌சிய‌ல் வாதியா இருக்க‌ த‌குதியான‌வ‌ர்.........................அனுராவின் நோக்க‌ம் நாட்டை க‌ட்டி எழுப்புத‌ல் அதோடு ஊழ‌ல் போதை பொருட்க‌ளை த‌டை செய்த‌ல்........................
  23. எத்த‌னையோ சிறு பிள்ளைக‌ள் ப‌டிச்சு வாழ்க்கையில் முன்னுக்கு வ‌ர‌ விரும்புகின‌ம் அவையிட‌ம் போதிய‌ ப‌ண‌ம் இல்லை இப்போது எம் ம‌க்க‌ளுக்கு தேவை மூன்று நேர‌ உண‌வு நின்ம‌தியான‌ வாழ்க்கை . பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் எம்ம‌வ‌ர்க‌ளே க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் போதைய‌ இள‌ம் பெடிய‌ங்க‌ளுக்கு ஊத்தி கொடுத்து அதுக‌ளின் எதிர் கால‌த்தை சீர் அழித்த‌வை................அப்ப‌டியான‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை எம் ம‌க்க‌ள் புர‌க்க‌னிக்க‌னும்...................அனுரா ஊழ‌லை இல்லாம‌ செய்வேன் என்று சொல்லி இருக்கிறார் ப‌ல‌ ந‌ல்ல‌ திட்ட‌ங்க‌ளை வ‌குத்து இருக்கிறார் சிறு கால‌ம் அனுரா என்ன‌ செய்கிறார் என்ப‌தை பொறுத்து இருந்து பாப்போம் அண்ணா................ர‌னில‌ போல‌ குள்ள‌ ந‌ரி செய‌லில் அனுரா இற‌ங்க‌ மாட்டார் என்று நான் ந‌ம்புகிறேன்...........................
  24. உங்களிடம் ஒரு கேள்வி, இப்போதிருக்கும் நிலையில், அங்கிருப்பவர்கள் என்ன செய்யலாம், அல்லது என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? கொஞ்ச நாட்களுக்கு முன்பும் அங்கு போயிருந்தேன், மக்களின் சிந்தனைகள், தேவைகள் மாறிக்கொண்டு இருக்கின்றது. காலம் அதுபாட்டுக்கு மாற்றங்களுடன் போய்க்கொண்டிடுகிறது நாங்கள் சிலர் இங்கே கடந்த காலத்தில் தங்கிவிடுகிறோம், இவர்கள் இனப்பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று நம்பவில்லை. ஆனால் கப்பம், ரவுடித்தனம், அரசியல் தலையீடுகள், இராணுவத்தலையீடுகள்,மதத்தலையீடுகள், குடியேற்றங்கள் கொஞ்சம் குறையலாம், மக்கள் மூச்சுவிடுவதுக்கு கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். கொஞ்ச நாளில் இவர்கள் எப்பிடி என்று எல்லாம் தெரிந்துவிடப்போகிறது. தமிழர் தரப்பில் இருந்து வீசும் ஆதரவுஅலை, இதுவரை இருந்த சிங்கள தேசியக்கட்சிகள், தமிழ் கட்சிகளிலும் பார்க்க இவர்கள் பரவாயில்லை என்று தற்போது நினைப்பதால் வந்தது. பழைய முறையிலேயே எல்லாம் நடந்தால், இந்த அலையில் தற்போது உள்வாங்கப்படுபவர்கள் வெளியே வந்துவிடப்போகிறார்கள், எதுவுமே நிரந்தரமில்லை
  25. ஒரு கார் லைசென்ஸ், ஒரு பார் லைசென்ஸ் இப்படிக் கொடுத்தே நம்ம அரசியல் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள்............. யாரு இதெல்லாம் கொடுத்தது.............ரணிலா..........🤣. அந்தப் பக்கம் அவர் ஒரே ஒரு ஆள் போதும் போல ..........
  26. நீங்கள் மேலே பதிந்த தகவலின்படி.. வெளிவந்தது 10 மதுபானசாலைகள். கடந்த நான்கு மாதத்தில் மாத்திரம் 172 மதுபான அனுமதி பத்திரங்கள் கொடுக்கப் பட்டுள்ளதாம். இன்னும்... வெளிவரும். லோயர்... பழம் தின்று, கொட்டை போட்ட ஆள் 😂. எப்படியும், இந்த விசயத்தை அமுசடக்கமாக... இடது கைக்கு தெரியாமல் சாதுரியமாகத்தான் கையாண்டு இருப்பார். நெருப்பு இல்லாமல்... புகை வராது. அது வரை பொறுமை காப்போம். 🤣
  27. இந்த முறை ஊருக்கு போயிருந்த போது நான் கவனித்த ஒரு விடயம், அந்த நாட்களில் மதுபானக்கடை இருந்த இடத்தில் ஒரு தேத்தண்ணிக் கடை தான் இருந்தது. எப்படியும் ஒன்றாவது இங்கு இருக்காமல் இருக்காதே என்று நினைத்தனான். ஆனால் என் கண்ணில் ஒன்றும் அகப்படவில்லை. பக்கத்து ஊர்களில் எங்கும் இருக்கின்றதோ தெரியவில்லை............ கந்தையா அண்ணை, இந்த தகவல்கள் எல்லாம் ஒரு வாட்ஸ்அப் பதிவாக இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கின்றது. உண்மை பொய் தெரியாது. இங்கே முதலில் யாராவது இதை இணைத்தார்களா என்றும் தெரியவில்லை. ---------------- கிளிநொச்சியில் சந்திரகுமாரும் அங்கயனும் டக்ளசும் சாராயக்கடை வைத்திருக்கிறார்கள். இதை யாரும் கதைக்க தயார் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் உரிமையாளர் யார் என்று யாரும் அறிந்துகொள்ளலாம். சந்திரகுமாரின் மனைவியின் பெயரில் கரடிப்போக்கு சந்தியில் இரண்டு பார்கள் உள்ளன. பரந்தனில் இருக்கும் இரண்டு பார்கள் அங்கயனின் தம்பியின் பெயரில் இருக்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ளது. கனகபுரம் வீதியில் உள்ளது தான் கிளிநொச்சியில் அதிகவிலைக்கு விற்கப்பட்ட பாராம். இது டக்ளசின் தம்பி தயானந்தாவின் பெயரில் உள்ளது. பூநகரி சந்தியில் உள்ள ஒன்று Rockland சாராய நிறுவனத்தின் பெயரில் உள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு பக்கத்தில் உள்ள பார் புலம்பெயர் வாழ் பிரபல தமிழ் வர்த்தகர் பெயரில் உள்ளது. அதுவும் ஒரு சாராய நிறுவனத்தின் பெயரில் தான் பதிவு உள்ளது. 6.5 லட்சம் மக்கள் உள்ள யாழில் 67 பார்கள் உள்ளன. 2 லட்சம் மக்கள் உள்ள கிளிநொச்சியில் 6 பார்கள் உள்ளன. 2.5 லட்சம் மக்கள் உள்ள வவுனியாவில் 39 பார்கள் உள்ளனவாம். 1.8 லட்சம் மக்கள் உள்ள முல்லைத்தீவில் 11 பார்கள் உள்ளனவாம்.
  28. விமர்சனம், வசைபாடல் இரண்டுக்கும் நிறைந வேறுபாடுகள் உள்ளன. ஒரு இனத்தின் அல்லது நாட்டின் அரசியலில் பாரிய தாக்கத்ககதை ஏற்படுத்தும் எந்த அரசியல் செயற்பாடுகளையும் விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அரசியல் செயற்பாடுகளின் மீது விமர்சனம் வைத்ததை தவிர நான் புலிகளை தனிப்பட்ட ரீதியில் வசைபாடிய ஒரு இடத்தையேனும் இங்கு காட்ட முடியுமா?
  29. காரணம் இயலாமை ஒரு சிறுபான்மை இன மக்கள் தம்மால் முடிந்த அளவுக்கும் மேலாக அனைத்து வழிகளிலும் முயன்றும் தோல்வி அடைந்த நிலையில் வேறு வழியின்றி.....??? எவனையாவது கடவுள் அனுப்ப மாட்டாரா என்பது போன்ற நிலையில்???? இந்த நிலையில் தான் தவறானவர்களை எம்மவர் பின் தொடர்ந்து விடக்கூடாது என்று இவ்வளவும் எழுதுகிறோம் அண்மையில் டாக்ரர் அர்ச்சுனா ராமநாதனையே ஒரு மீட்டபராக பார்த்தோம். கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நம்மவர்கள் சிறிய தடி தென்பட்டாலும் பற்றிப் பிடிக்கவே செய்வர்.
  30. கொள்கை ரீதியாக பார்த்தால் சோசலிஸ்டுகளுடன் தமிழ்த்தேசியம் இலகுவாக கைகோர்க்க வேண்டுமே? சோசலிசத்தின் அத்திவாரத்தில் தானே விடுதலை புலிகள் அமைப்பு கட்டப்பட்டது? விடுதலை புலி உறுப்பினர்கள் எடுக்கும் உறுதிமொழியில் (முன்பு) சோசலிட் நாடு எனும் பதம் வருகின்றது அல்லவா? சிங்கள சோசலிஸ்டுகளும் தமிழ் சோசலிஸ்டுகளும் ஒன்று சேர்ந்து பயணித்தால் தமிழ்த்தேசியமும் சிங்களதேசியமும் மதிப்பிழந்து போய்விடும் என இரு இனத்தின் தேசிய தூண்களும் எண்ணுகின்றார்களா? @putthan நீங்கள் இன்னமும் கே. இன்பராசாவின் சுயேட்சை குழுவுக்கு தூண்கள் வழங்கக்கூடிய ஆதரவு பற்றி தெளிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.
  31. வெய்யிற்கேத்த நிழலுண்டு வீசும் தென்றற் காற்றுண்டு .........! 😁
  32. அண்ணா நீங்கள் சொல்வது கேட்க பார்க்க பரவசமாகத்தான் இருக்கிறது. பல்லக்கில் தூக்கப்பட்டவன் தூக்கியவனிடம் கையேந்தி நிற்கும் போது இனவாதம் எங்கேயிருந்து தொடங்கியது என்று நாங்கள் சொல்லித் தான் உங்களுக்கோ அல்லது இங்குள்ளோருக்கோ புரியணும் என்று இல்லை. ஆனால் இங்கே பேரினவாத சிங்களத்தில் ஒருவர் நல்லவர் அவரால் அனைத்தும் மாறும் என்கிற விசத்தை விதைக்கும் போது அவரது கட்சி மற்றும் அவரது தோழர்கள் தான் கிடைக்க இருந்த ஆகக் குறைந்த பாதுகாப்பை கூட அறுத்து எறிந்தனர் என்கிற வரலாற்று எச்சரிக்கை மட்டுமே பதியப்பட்டுள்ளது. அதைக் கூட பதியக்கூடாது பார்க்கக்கூடாது என்பது தான் இனவாத உச்சம். இது தான் அநுர செய்ய விரும்புவதும். இதுவரை செய்யப்பட்ட எந்த அழிவுகள் மற்றும் கொடூரங்களுக்கும் எந்த தீர்வோ விசாரணையோ மன்னிப்போ தரமுடியாது. எல்லாவற்றையும் மறந்து விட்டு அதைப்பற்றி பேசுவதையும் விட்டு விட்டு இலங்கையில் வாழ முயலுங்கள். அவ்வளவு தான்.
  33. அநுரவின் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் - தமிழில் பேசிய கிழக்கு ஆளுநர்!
  34. வெட்கம் என்றால் என்னவென்று தெரியாதவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்?
  35. நிழலி, தலைப்புகள் இரண்டு இருக்கின்றன. ஒன்றைத்தான் நீங்கள் திருத்தியிருக்கிறீர்கள். ‘இனவெறியன்’ என்று சொல்லும் போதே இந்தப் பதிவின் உள்நோக்கம் புரிந்துவிடுகிறது. உண்மையைத்தானே பதிவிடுகிறார் என்றால், ஜனாதிபதித் தேர்தலிலேயை இவைகளைப் பதிந்திருக்கலாம். யாழ்ப்பாணத்தில் அனுரா சொன்னதுக்கு எதிராக ரணில் கேட்டபோதவது போட்டிருக்கலாம். இந்த இடத்தில் சுமந்திரன் ஏன் சுஜித்தை ஆதரிப்பது என்று முடிவெடுத்த்திருந்தார் என்பதற்கான விளக்கம் இப்பொழுது கிடைத்து விடுகிறது. சுமந்திரன் மட்டும் அனுராவை (நேரடியாக) ஆதரித்திருந்தால், சங்கு மட்டுமல்ல முரசும் அடித்திருப்பார்கள். சுமந்திரனின் சாமர்த்தியத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அனுராவின் விடயம் மட்டுமல்ல கந்தன் கருணை சம்பவங்களும்,தவறான குண்டு வெடிப்புகளும் “பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்” இல் வந்துவிடப் போகிறது. இதற்கென்று ஏன் இப்பொழுது அவசரம். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அனுராவுக்கு என்று ஒரு அலை எழுந்துவிடக் கூடாது என்பதுதானே அதன் நோக்கம். வெண்ணை திரண்டு வர எப்பொழுதும் வாய்ப்பில்லை. அதற்கு முன்னரே நாங்கள் சட்டியை உடைத்து விடுவோம்.
  36. வரலாற்றை நினைவு கூறுகிறோம் என்ற போர்வையில் வன்மத்தையும் குரோதத்தையும் விதைப்பது சிங்கள , தமிழ் இனவாதிகளின் வாடிக்கை. முதலில், “இனவெறியன் அநுர” என்ற இத்தலைப்பு சரியானதுதானா என்பதை பொறுப்புடன் யாழ் இணையம் சிந்திக்க வேண்டும். அநுர அங்கம் வகித்த மக்கள் விடுதலை முன்னணிக்குள் பல மாற்றங்கள் வந்து பல இனவாதிகள் வெளியேற்றப்பட்டு ஹரணி அமரசூர போன்ற சமூக ஆர்வலர்கள் உள்வாங்கப்பட்ட நிலையில் அவற்றை கண்ணக்கெடுக்காமல் பழைய ஜேவிபி செய்த அரசியல் நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக அநுர மீது திணித்து அவரை இனவாதாக கட்டமைப்பது தவறானது. அநுர பதவிக்கு வந்து இனவாதத்திற் தீமைகளையும் எவ்வாறெல்லாம் கடந்த காலங்களில் எமது பழைய அரசியல்வாதிகள் இனவாதத்தை வளர்ததார்கள் என்று விரிவாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைத்து புதிய பாதையில் இனவாதமற்ற நாட்டை கட்டியெழுப்புவோன் என ற அறைகூவலை விடுத்த நிலையில் அவர் தனது ஆட்சியை முழுமையாக ஆரம்பிக்க முதலே அநுரவை ஒரு இனவெறியர் என்று கட்டமைக்க முன்வருவது வரலாற்றை நினைவுகூற அல்ல. மக்கள் மத்தியில் இனக்குரோதத்தை மறைய விடாமல் அதன் மூலம. தாம் அரசியல் நடத்தும் நயவஞ்சகமே.
  37. இதிலே எழுதியது மட்டுமல்ல எவ்வளவு கீழ்தரமாக பதிவு செய்கிறார்கள். நடந்தவைகளைத் தானே எழுதியிருக்கிறார்கள் என்று கூட யோசிக்கத் தோன்றவில்லை. ஊரிலே மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வாக்கே இல்லாத நாம தான் அடித்துப் புடுங்குகிறோம்.
  38. இத் திரியை பார்த்து ஏன் பதட்டபட வேண்டும்? வரலாற்றில் நடந்தவற்றை மீள நினைவூட்டுவதில் தவறில்லை என்பதுடன் தேவையும் கூட. சிங்களம் ஒரு போதும் இனவாதத்தை கைவிடப் போவதில்லை. நிறம் மட்டும் மாறலாம். திரிக்கு நன்றி ரஞ்சித்.
  39. கடந்த காலங்களில் கூட ஒவ்வொரு முறையும் தெற்கில் இனவாதத்தில் இருந்து விலகி பயணிக்கும் அரசியல் சக்திகள் சற்று பலம் பெற்று இனவாதம் பலமிழக்கும் சமிக்ஞைகள் எப்போதெல்லாம் தோன்றுகினதோ அப்போதெல்லாம் சிங்கள இனவாதத்தை எதிர்தது அரசியல் செய்வதாக காட்டிக்கொள்ளும் தரப்புகள் இவ்வாறு பதட்டம் அடைந்ததுடன் அதை கெடுத்து சிங்கள இனவாத அரசுகள. அங்கு பலம் பெற தம்பன் ஆனதெல்லவற்றும் செய்தன. அதன் தொடர்சசியே இப்போது சமூக வலைத்தளங்களில்லும் சில வலைத்தளங்கள், தொலைக்காட்சிகளிலும் அநுரவை சிங்கள இனவெறியலாக காட்டும் இந்த ஈனத்தனம். சிங்கள இனவாதிகளை விட மிக மோசமான இந்த இனவாதிகள் முறியடிக்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு பிறக்கும்.
  40. இவர்களின் எண்ணம் ஈடேறக் கூடாது. சிங்கள, தமிழ் இனவாதிகளால் கடந்த 75 ஆண்டுகளாக சிதைவடைந்துவரும் தமிழ் மக்களின் வாழ்க்கை இனியும் இந்த இரு பகுதி இனவெறியர்களால் சிதைவடைய அனுமதிக்க கூடாது.
  41. அநுரா இனவெறிக்கு எதிராக தெரிவித்த விடயங்கள் தமிழ் இனவெறியர்களை பதட்டமட செய்துள்ளது. தமது தமிழ் தேசிய வியாபாரத்துக்கு புலம்பெயர் தாயக பிரதேசங்களில் பாதிப்பு வந்துவிடும் என்று இத்தரப்புகள் அச்சம் கொண்டுள்ளன. எனவே அநுரா தனது ஆட்சியை சரியாக ஆரம்பிக்க முதலே அவசரமாக பழைய மக்கள் விடுதலை முன்னணி செயற்பாடுகளை தூசி தட்டி எடுத்து அதை வைத்து அநுர மீது வசைமாரி பொழிந்து அநுரவை சிங்கள இனவெறியனாக தமிழ் மக்கள் மத்தியில் காட்டி தமது தமிழ் தேசிய வியாபாரத்தை நடத் முயல்கிறார்கள் என்பது தெரிகிறது.
  42. அநுர குமார திஸாநாயக்க இனவெறியனாகாக இருக்க வேண்டும் என்று கடும் போக்கு தமிழ் இனவெறியர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. இந்த தமிழ் இனவெறியர்களின் விருப்பம் ஈடேடக் கூடாது என்பதே தமிழ் மக்கள் எதிர்பார்பபு.
  43. ஹமாஸோ ஹிஸ்புள்ளாவோ உருவாக்கப்பட்டது பலஸ்த்தீன மக்களின் விடுதலை ஒன்றை நோக்கமாகக் கொண்டே. இஸ்ரேலை முற்றாக அழிப்பதென்பது அவர்களின் இன்னொரு நோக்கமாக இருந்தாலும் பலஸ்த்தீன மக்களின் விடுதலையும், சுமூக வாழ்வும் இவ் அமைப்புக்களின் முக்கிய நோக்கமாகும். இப்போது ஹிஸ்புள்ளாவின் தலைவரையும், ஹமாஸின் தலைவரையும் இஸ்ரேலும் கொன்றிருக்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் தனது முக்கிய எதிரிகளில் இருவரை அது கொன்றிருப்பதாக ஆனந்தம் அடையலாம். ஆனால், பலஸ்த்தீன மக்களுக்கு? தென் லெபனானை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து ஹிஸ்புள்ளா காத்துக்கொள்ளும் என்று நம்பியிருந்த லெபனானிய மக்களுக்கு? உலகெங்கும் பரந்து வாழும் பலஸ்த்தீன, லெபனான் புலம்பெயர் மக்களுக்கு? இது ஒரு பாரிய இழப்புத்தான். தமது பெருத்த நம்பிக்கைகளில் பல ஒரே நேரத்தில் சாய்க்கப்பட்டது தாங்கொணாத் துயர்தான். இவர்களின் இழப்போடு எமது தலைவரும் போராளிகளும் நினைவில் வருகிறார்கள். ஏனென்றால், பலஸ்த்தீனர்களும் எம்மைப்போன்றே ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு நிற்கும் ஒரு இனம்தான்.
  44. தமிழ்நாட்டு மக்களும் தங்களுக்கு ஒரு அநுரகுமார வேண்டும் என்று விரும்பினார்களாமே............ இதோ உங்களுக்காக ஒரு உதயகுமார...........🤣. ராஜராஜ சோழன் பரம்பரை ஆட்சியை விட இது நீளப் போகுது போல...........
  45. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த புதிய நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால் வெறும் கண்களால் தெளிவாக பார்க்க முடியாது. கட்டுரை தகவல் எழுதியவர், மேடி மோலோய் பதவி, பிபிசி காலநிலை & அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு வானியல் ஆச்சரியத்தைக் காணத் தயாராகுங்கள். பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா’ ஆகப் பிரகாசிக்கப் போகிறது. இந்தத் தற்காலிக விண்வெளிச் சுற்றுலாவாசி எதிர்வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கி, இரண்டு மாதங்கள் வரை பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பித்துச் செல்லும். துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டாம் நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால், வெறும் கண்களால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஒரு நல்ல தொலைநோக்கி இருந்தால் இந்தச் சிறிய நிலாவைத் தெளிவாக கண்டு ரசிக்க முடியும். தற்காலிக 'நிலா' இந்தச் சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று நாசாவின் ‘ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க வானியல் கழகத்தின் ஆய்வுக் குறிப்புகளில், விஞ்ஞானிகள் தற்காலிகச் சிறிய நிலவின் பாதையைக் கணக்கிட்டுள்ளதைத் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் இந்தச் சிறுகோளை ‘2024 PT5’ எனக் குறிப்பிடுகின்றனர். இது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து வந்தது. அர்ஜுனா பெல்ட் பூமியின் சுற்றுப்பாதையை ஒத்த பாறைகளைக் கொண்டுள்ளது. எப்போதாவது, இந்தச் சிறுகோள்களில் சில, நமது கிரகத்திற்கு அருகே, 28 லட்சம் மைல்கள் (45 லட்சம் கி.மீ.) தொலைவில் நெருங்கி வருகின்றன. ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 2024 PT5 போன்ற ஒரு சிறுகோள் சுமார் மணிக்கு 3,540 கி.மீ என்ற மெதுவான வேகத்தில் (ஒப்பீட்டளவில்) நகர்ந்தால், பூமியின் ஈர்ப்புப் புலம் அதன் மீது வலுவான தாக்கத்தைச் செலுத்தும். அதன் விளைவாகத் தற்காலிகமாக பூமியால் ஈர்க்கப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும். இந்த நிகழ்வு, இந்த வார இறுதியில் தொடங்கி, இந்தச் சிறுகோள் பூமியைச் சுற்றி இரண்டு மாதங்கள் வரை பயணிக்கும். வானியலாளர், மற்றும் ‘Awesome Astronomy’ போட்காஸ்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான முனைவர் ஜெனிபர் மில்லார்ட், பிபிசியின் ‘டுடே’ நிகழ்ச்சியில், இந்தச் சிறுகோள் செப்டம்பர் 29-ஆம் தேதி சுற்றுப்பாதையில் நுழையும் என்றும், பின்னர் நவம்பர் 25-ஆம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். "2024 PT5 நமது கிரகத்தின் முழு சுழற்சியை முடிக்கப் போவதில்லை, அதன் சுற்றுப்பாதையை மாற்றிக் கொண்டு, பூமியால் ஈர்க்கப்பட்டு, சில காலத்துக்கு பின்னர் அது அதன் சொந்த சுற்றுப் பாதையில் தொடரும்,” என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமிக்கு அருகில் ஒரு சிறுகோள் (மாதிரிப் படம்) எப்படிப் பார்ப்பது? 2024 PT5 சிறுகோள் தோராயமாக 32 அடி (10மீ) நீளம் கொண்டது. இது பூமியின் நிரந்தரமான நிலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியது. இது தோராயமாக 3,474கி.மீ விட்டம் கொண்டது. இந்தச் சிறுகோள் அளவில் மிகச்சிறியது என்பதாலும், மங்கலான பாறையால் ஆனது என்பதாலும் வீட்டில் இருக்கும் சாதாரண தொலைநோக்கியைப் பயன்படுத்தி பூமியில் இருந்து பார்க்க முடியாது. "நல்ல தொழில்முறைத் தொலைநோக்கிகளால் இதனைப் பார்க்க முடியும். எனவே, நீங்கள் இந்தச் சிறிய புள்ளி போன்று இருக்கும் அற்புதமான சிறுகோளைப் பார்க்க முடியும். இணையத்தில் வெளியாகும் படங்கள் வாயிலாகவும் பார்க்க முடியும்," என்று முனைவர் மில்லார்ட் கூறினார். இதுபோன்ற சிறிய நிலவுகள் இதற்கு முன்னதாகவும் தோன்றியுள்ளன. மேலும், பல சிறுகோள்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சில சிறுகோள்கள் மீண்டும் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்கு வருகின்றன. ‘2022 NX1’ என்ற சிறுகோள் 1981-இல் சிறிய நிலவாக மாறியது. 2022-இல் மீண்டும் அது தோன்றியது. எனவே, இம்முறை நீங்கள் சிறிய நிலவைப் பார்க்கமுடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். விஞ்ஞானிகள் ‘2024 PT5’ எனும் இந்தச் சிறுகோள் 2055-இல் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்குத் திரும்பும் என்று கணித்துள்ளனர். "இந்தச் சிறுகோளின் கண்டுப்பிடிப்பு, நமது சூரியக் குடும்பத்தில் நாம் கண்டுபிடிக்காதது இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது,” என்கிறார் முனைவர் மில்லார்ட். "நாம் கண்டுபிடிக்காத பல்லாயிரக்கணக்கான வானியல் அற்புதங்கள் உள்ளன, எனவே நம் இரவு வானத்தைத் தொடர்ந்து கண்காணித்து இந்த வான்பொருட்கள் அனைத்தையும் கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக் காட்டுகிறது என்று நினைக்கிறேன்," என்கிறார் முனைவர் மில்லார்ட். https://www.bbc.com/tamil/articles/cn4zg37dj4no

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.