Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    20351
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88812
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    9308
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    10275
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/20/24 in all areas

  1. மாயபிம்பம் ------------------ ஆரம்பத்தில் தூரத்திலிருந்து அது ஒரு சிலையாக சிற்பமாக தெரிந்தது அப்படித்தான் அது ஒரு அழகு மிளிரும் சிலை என்றும் சொல்லியிருந்தனர் அதுவும் ஒரு காரணம் கொஞ்சம் நெருங்க அது சிற்பம் இல்லை அதில் அங்கங்கே சில செதுக்கல்கள் மட்டும் தெரிந்தது சிலையாக இல்லாவிட்டாலும் வெறும் பாறாங்கல்லாக அப்படியே படுத்தே இருக்காமல் செதுக்கல்கள் இருக்குதே இதுவே இந்நாளில் அரிது என்று இன்னும் இன்னும் நெருங்க பூமியுடன் தோன்றிய அதே கல்லுத் தான் இதுவும் என்று புரிந்தது.
  2. மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே தமிழர்களின் வெளிவிவகார அமைச்சரான விஜித்த ஹேரத், அதே தமிழர்களின் பெருவிருப்பிற்குரிய பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகிய முப்பெரும் தலைவர்கள் உட்பட பல மக்கள் விடுதலை முன்னணித் தலைவர்கள் இதனை கடந்த சில தினங்களாகக் கூறி வருகிறார்கள். "தமிழருக்கு இருப்பது இனப்பிரச்சினையல்ல, நாட்டிலுள்ள ஏனைய இன மக்களுக்கிருப்பது போன்ற அதே பொருளாதாரப் பிரச்சினைகள் தான், வடக்குக் கிழக்கு இணைக்கப்படக் கூடாது, மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கம் தேவையில்லை, போர்க்குற்றவாளிகள் என்று எந்த இராணுவ வீரனையோ தளபதியையோ நாம் காட்டிக்கொடுக்கப் போவதில்லை, சுதந்திரமான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கோ அல்லது அது தொடர்பான சாட்சித் தேடல்களுக்கோ நாம் அனுமதியளிக்கப்போவதில்லை" என்கிற "தெமுழுவோ" க்களுக்கு பெரிதும் நண்மை பயக்கும் வரங்களை அள்ளி வழங்கிக்கொண்டு வருகிறார்கள். இங்கு யாழ்க்களத்தில் இந்த இனவாதிகளுக்கு அப்பட்டமாக செம்புதூக்கும் ஒருவரும் அவரின் மேலும் இரு ஆதரவாளர்களும் இத்தனை வரங்களுக்குப் பின்னரும் அக்கட்சியை ஆதரிக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒருவர் தமிழர் என்கிற அடையாளம் வேண்டாம் , இலங்கையராக இணைந்து, மக்கள் விடுதலை முன்னணியுடன் பணியாற்றுவோம் என்று அழுகிறார். சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியில் முன்னர் இணைந்து பணியாற்றிய முஸ்லீமான அஞ்சன் உம்மா, தமிழரான சந்திரசேகரன் மற்றும் தற்போது அநுரவின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்தவர் ஆகியோர் பேசிவந்த அல்லது பேசி வருகின்ற விடயங்களைக் கேட்பவர்களுக்கு இவ்வாறான இனத்துரோகிகளை அக்கட்சி இணைப்பது தமிழருக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவல்ல, மாறாக இவ்விரு சமூகங்களுக்குள்ளும் தமது இனவாத வேர்களை நுழையவிட்டு அவ்வினங்களைப் பலவீனப்படுத்தத்தான் என்பது இந்த செம்புதூக்கிகளுக்கு நன்கு தெரிந்தபின்னரும், அதனையே செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். போலி மாக்ஸிஸம் பேசிக்கொண்டு, அப்பட்டமான சிங்க‌ளப் பேரினவாதம் கக்கும் ஒரு கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களைப்போன்றே "தமிழ் எனும் அடையாளம் துறந்து இலங்கையராக இணைவோம்" என்று ஊளையிடும் செம்புதூக்கிகள் செய்ய விரும்புவது தமிழர்களை மேலும் மேலும் மூளைச்சலவை செய்து, அவர்களின் தாயகத்தில் சிங்கள இனவாதிகளை வேரூன்றச் செய்வதுதான். சிங்கள இனவாதிகளுக்கு தமிழர் தாயகத்தில் செங்கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருக்கும் இப்புல்லுருவிகளின் கனா கலைக்கப்பட வேண்டுமானால், தமிழர்கள் செய்யவேண்டியது இந்த இனவாதிகளையும், அவர்களைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கத் தவமிருக்கும் புல்லுருவிகளையும் அடையாளம் கண்டு அகற்றுவதுதான். தமிழர்களின் பொருளாதாரத்தைச் சரிசெய்கிறோம் என்று கூவும் இதே இனவாதிகள் 1983 இல் இருந்து இன்றுவரை அதே தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டக் காரணமாக இருந்தவர்கள் என்பதை செம்புதூக்கிகள் மறக்கலாம், மறைக்கலாம், ஆனால் தமிழர்கள் இதுகுறித்து அவதானமாக‌ இருப்பதும், தாயகத்தில் சிங்கள இனவாதிகள் காலூன்றுவதைத் தடுப்பதும் காலத்தின் கட்டாயம்.
  3. தமிழ்நாடு ஆளுநர் ரவி இங்கு வந்த நாள் முதல் சநாதனம், ரிஷி அல்லது முனிவர்களால் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியம், நீட் தேர்வின் சிறப்பு, புதிய கல்விக் கொள்கை என்று தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கேவலமான விஷயங்களையே பேசித் திரிகிறார். ஒன்றிய அரசின், இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தின், தூதுவராக முழுநேரப் பணி செய்கிறார் என்பதைத் தமிழ்நாட்டில் அறம் அறிந்தோர் அறிவர். சமீபத்தில் இந்தியத் தொலைக்காட்சித் துறையில் (தூர்தர்ஷன்) கடைப்பிடிக்கப்பட்ட 'இந்தி மாத' (!!!) நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய ஒருவர் "தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல்திருநாடும்" எனும் வரியினை விலக்கிப் பாடினார். தமிழ்ச் சமூகத்தில் அது பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியதும், பாடியவரின் கவனச் சிதறலால் நிகழ்ந்தது என்றும், அதனால் ஆளுநருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்புக் கோரி தூர்தர்ஷன் துரிதமாக அறிக்கை வெளியிட்டது. அதாவது, ஆளுநர் அலுவலகம் சொன்னதன்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கத் தானாகவோ தூர்தர்ஷன் இவ்வாறு பாடவில்லையாம். இதை நம்புவதற்கு தமிழ்ச் சமூகம் எடுப்பார் கைப்பிள்ளையா, என்ன ! தூர்தர்ஷன் மன்னிப்புக் கேட்க வேண்டியது தமிழ் மக்களிடம்; ஆர்.எஸ்.எஸ்.ரவியிடம் அல்ல (ஆர்.என்.ரவி என்பது ஆர்.எஸ்.எஸ்.ரவியானது நமது கவனச் சிதறல். ஆளுநரும் தூர்தர்ஷனும் நம்பித்தான் ஆக வேண்டும்). மன்னிப்புக் கேட்கும் முகமாக மனோன்மணியம் சுந்தரனார் பாடிய அந்த முழுப் பாடலையும் ஒளி பரப்புவதே சிறந்த பரிகாரமாக அமையும். அதில், "உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்த ஆரியம் (சமஸ்கிருதம்)" என்று சுந்தரனார் அடிக்கும் ஆணியில் ஆளுநரும் சங்கிகளும் கதறுவது தமிழர்தம் காதுகளில் தேனிசையாய்ப் பாயும். இனி அந்த முழுப் பாடலும் பொருளும் இதற்கு முன் கேளாதோர் வாசித்து இன்புறத் தரப்பட்டுள்ளன (தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட வாழ்த்திற்காக மூலப் பாடலில் நீக்கப்பட்ட பகுதி தடித்த எழுத்துகளில்) : பாடல் : "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!" பொருள் : நீர் நிறை கடலினை உடுத்தியவள் நிலமாகிய மடந்தை; அவளது எழில் மிகுந்த சிறப்பு வாய்ந்த முகமாகத் திகழ்வது பாரத துணைக் கண்டம்; அந்த எழில் முகத்திற்குத் தகுதியான சிறிய பிறை போன்ற நெற்றியே தென்னாடு (தெக்கணம் - தென்னிந்தியா); அந்நெற்றியில் வாசனைப் பொருட் கலவையினால் இட்ட திலகமே (பொட்டு) தென்னாட்டில் சிறந்த திராவிடத் திருநாடு (இன்றைய தமிழகம்); அத்திலகத்தின் வாசனை எங்கும் பரவி இன்பம் பயப்பது போல், எல்லாத் திசைகளிலும் புகழ் மணம் பரவி நிற்கும் தமிழ்ப் பெண்ணே ! பல்வகை உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து அழித்தாலும் ஒரு எல்லையில்லாத பரம்பொருள் முன் இருந்தபடியே இருக்கவல்லது; அப்பரம்பொருளைப் போலவே கன்னடம், இன்பத் தெலுங்கு, இனிய மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழணங்காகிய உன் வயிற்றில் உதித்துப் பலவாக ஆனாலும், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து போனதைப் போல் அல்லாமல் என்றும் சிதையாத உன் சீரும் சிறப்பும் வாய்ந்த இளமைத் திறத்தை வியந்து, அவ்வியப்பில் வேறு செயலற்று உன்னை வாழ்த்தி அமைகிறோம். பின்குறிப்பு : நிலத்தை மடந்தையாகவும், பாரத நாட்டை அவளது எழில் முகமாகவும், தென்னாட்டை அவளது நெற்றியாகவும், தமிழகத்தை அந்நெற்றியின் திலகமாகவும், திலக வாசனையைத் தமிழ் மணமாகவும் உருவகித்தது உருவக அணி. பாடலில் பரம்பொருள் என்று பேரா. சுந்தரம்பிள்ளை சொல்வது உலகளாவிய சிவனையே குறிக்கும் என்பர் (சுவாமி விவேகானந்தர் 1892ல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, அவரது உரையின் பின் நடந்த ஆரோக்கியமான விவாதத்தில் பேரா.சுந்தரம் பிள்ளை,"I am not a Hindu, I am a Saivite" என்று வாதிட்ட குறிப்பு உண்டு). எனவே குறிப்பிட்ட மதம் சார்ந்த வரி எனும் விவாதங்களைத் தவிர்க்கவும், ஏனைய மொழிகளைப் பற்றிய குறிப்புகளைத் தவிர்க்கவும் அப்பகுதி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தில் நீக்கப்பட்டது அன்றைய தமிழக அரசின் மாண்பு. இக்கட்டுரைக்கான எனது முகநூற் பதிவு கீழ்வரும் இணைப்பில் : https://www.facebook.com/share/p/MiYLxthH6xdEt9oP/
  4. போருக்கு பின்னரான மீழ் கட்டமைப்பு, நிர்வாக நெருக்கடி, மீழ் குடியேற்றம், ஆக்கிரமிப்பு நிலங்கள் விடுவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களிற்கான புனர்வாழ்வு, பாதுகாப்பு என்பன இன்னமும் உருப்படியாக நிறைவேற்றாத நிலையிலேயே தொடர்ந்தும் இப்பாதிக்கப்பட்ட மக்களை வைத்திருக்க இலங்கையிலுள்ள தேசிய கட்சிகள் விருபுகின்ற இந்த நிலையிலே, சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளினால் கூட எதனையும் செய்ய முடியாத நிலையிலேயே தற்போது வரை இந்த வட கிழக்கு மக்கள் வாழ்கை நிலவுகிறது. பொதுவாக ஏனைய நாடுகளில் இவ்வாறான பாதிப்புள்ளாகும் நாடுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகள் மூலம் மேம்படுத்த முயல்வார்கள் ஆனால் இலங்கையில் பெரும்பான்மை இனத்தினை பிரதிநித்துவம் செய்யும் கட்சிகள் திட்ட மிட்டே இந்த பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து வருகின்ற நிலையிலே பிராந்திய கட்சிகள் செல்வாக்கினை இழக்கும் போது இப்பிராந்திய மக்கள் மேலும் நலிவுறும் நிலை உருவாகும். இது நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பொருளாதார ரீதியில் நலிவுற செய்யும். இதனை புரிந்து கொள்ளவோ அல்லது ஒரு தொலைநோக்கு பார்வையோ மக்களிடம் இருக்காது, இதனை மக்களிடம் எடுத்து செல்ல படித்த இளைஞ்சர்கள் முன்வர வேண்டும்.
  5. பொறுங்கள்! மக்களிடம் கொள்ளையடித்து உகாண்டாவிலோ வேறெங்கிலோ பதுக்கி வைத்திருக்கும் பணம், பலமடங்காக நாட்டுக்கு திரும்பி வரப்போகுதென முன்னறிவிப்பு வந்திருக்கு இச்சம்பவத்தின் மூலம். நல்ல சகுனம்!
  6. மாவைக்கு ஏதாவது நடந்தால்... சுமந்திரனின் கொடும்பாவி கட்டி எரிக்கப்படும். -மாவை ரசிகர் மன்றம்.- ஜேர்மன் கிளை. 😂 @Kandiah57, @குமாரசாமி, @nochchi, @Paanch. 🤣
  7. உங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள்? ஆச்சரியமாய் இருக்கிறது விசுகர். கொழும்பில் உள்ள ஒருவரால் வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் உணர்வுகத் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்கிறீர்கள். ஆனால் , புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போருக்கு புரியும் என்கிறீர்கள். 😁 கற்பனைகளாலும் புனைகதைகளாலும் வெறியூட்டப்படும் ஒரு இனம் ஒருபோதும் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. அவர்களின் செயற்பாடுகள் அவர்களுக்குப் பாதகமாய் முடிவதே வரலாறு.
  8. என்ன வசி பொதுஜன முன்னணியில் ரொம்ப அன்பாக இருக்கிறீர்கள். இந்த எண்ணிக்கைகளை அவர்களே நம்பமாட்டார்கள்.
  9. இதுவரை நடந்த உண்மையையே கூறினேன். பலகலைக்கழக மாணவர்கள்படித்த, முழுமை பெற்ற தலைமுறை அல்ல இப்போதும் படித்துக்கொண்டிருக்கும், இன்னும் நிறைய படிக்க வேண்டிய தலைமுறை. ஒரு நிறுவனத்தில் உயர் பதவிக்கு வரவே இவர்கள் பெறும் பட்டத்துடன் பயிற்சி, அனுபவம் தேவைப்படும் நிலையில் உள்ள இவர்களின் அறிவுரையை முழுமையாக சுய சித்தனை இன்றி அப்படியே ஏற்றுகொள்ளவேண்டிய தேவை மக்களுக்கு இல்லை.
  10. நான்தாண்டி காத்தி நல்ல முத்துப் பேத்தி ..........! 😍
  11. மக்களின் அன்றாட பிரச்சனைகள் என்ன என்பதை பாராளுமன்ற உளுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களிடம் பேசி அறிந்து கொள்ள வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடனோ, அமைச்சருடனோ, அமைச்சு அதிகாரிகளினதோ கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தீர்க்க தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவை தீர்க்கப்பட்டதா என்பதை, அடிக்கடி அம்மக்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தொடர்சசியான உழைப்பின் மூலம் அவற்றை தீர்க்க முயற்சி செய்யலாம். அதை விட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தியும் இதனை செய்யலாம். மக்களின் நூறு வீத தேவைகளையும் நிச்சயமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தனது பதவிக்காலத்தில் செய்ய முடியாதெனிலும் பெரும்பாலான விடயங்களில் முன்னேற்றத்தை அடையலாம்.
  12. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம் 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம் 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) ஆம் 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) இல்லை 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 6 28) வன்னி தமிழரசு கட்சி 4 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி 3 30)திருமலை தமிழரசு கட்சி 2 31)அம்பாறை இலங்கை பொதுஜன முன்னணி 2 32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி 4 33)அம்பாந்தோட்டை இலங்கை பொதுஜன முன்னணி 6 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி 6 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 3 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை தமிழரசு கட்சி 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி 42) மன்னர் தமிழரசு கட்சி 43) முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44) வவுனியா தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு தமிழரசு கட்சி 47) திருகோணமலை தமிழரசு கட்சி 48) அம்பாறை இலங்கை பொதுஜன முன்னணி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) இலங்கை பொதுஜன முன்னணி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 0 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 2 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2 54)தமிழரசு கட்சி 9 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 105 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 27 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 10
  13. இல்லை இவர்களில் ஊழல் லஞ்ச பெறாத, ஊக்குவிக்காத மற்றும் சொத்து மதிப்பை தரும் தமிழர்களுக்கு வாக்களிக்கலாம்.
  14. சுமந்திரன் தனது நோக்கங்களை அடைவதற்கு கையாளாக சிறீதரனை பாவிக்கிறது. உண்மையான நட்பு கிடையாது. முன்பு உள்ளூராட்சி தேர்தலின்போதாக இருக்கலாம், மாவை பதவிவிலகவேண்டும் என சுமந்திரன் அறிக்கை விட்டபோது, அவரின் தலைமை பதவிக்கு சிறீதரனையே கொம்பு சீவினார். அது சறுக்கி விடவே இவரின் தந்திரத்தை புரிந்துகொண்ட சிறீதரன் ஒட்டியும் ஒட்டாமலுமே சுமந்திரனுடனான உறவை வைத்துக்கொண்டார். அதன் பின் தமிழரசுக்கட்சி தலைவர் பதவி சிறீதரனுக்கு வந்ததே, அந்த கட்சி நீதிமன்றத்திற்கு போக காரணம் என்கிறார்கள். அப்போ; பதவியேற்க தான் தயார் என அறிக்கை விட்ட சிறீதரன், இப்போ; பதவியை ஏற்க இழுத்தடிப்பதற்கு என்ன காரணம்? மது பானசாலை அனுமதி பெற்ற பெயர்கள் என்கிற விஷயம் அடிப்பட்டபோது சிறீதனின் பெயரும் முதலில் அடிபட்டது, இது இப்போதல்ல பலகாலமாக பேசப்பட்டது. இப்போ, அவசரமாக விசாரணை, அது மதுவுக்கு அடிமையான ஒருவர் பரப்பிய வதந்தி என்று அறிக்கை விட்டதும், சுமந்திரன் ஓடிப்போய் அந்த பெயரை வெளியிடுங்கள் நாங்கள் அவர்களை பதவியிறக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விட்டதும், அந்தகையோடேயே நானும் சிறிதரனும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடுகிறோம் என அறிவித்ததும், இதற்கு பின்னால் ஒரு நய வஞ்சக திட்டமுண்டு. இருவர் மனதுக்குள்ளும் நீறு பூத்த நெருப்புப்போல் ஒரு பகை உள்ளது. அது எப்போதும் வெடிக்கலாம் அல்லது அடக்கி வாசிக்கலாம், அது தேர்தலின் பின் வரும் முடிவுகளை பொறுத்தது.
  15. அதுதானே உங்கள் பணி. அதற்காவே காத்திருப்பீர்கள், உடனே வந்துவிடுவீர்களே!
  16. ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இ‌ங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள் ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாய சகுனிகள் தம் காலிக் குவளையோ! மக்கள் விடமோ.. அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்.. by Karunya.
  17. எந்தப் புத்தகத்திலும் நன்மையான விடயங்களை எடுப்பதில் தப்பில்லையே? (கொழுத்திப்போடுவோம், எரியட்டும்) 🤣
  18. உங்க புரளி கதையை நிப்பாட்டுங்க கொஞ்சம் விட்டால் கலவரத்தை இங்கு உருவாக்கி விட்டு விடுவியல் .
  19. விழப்போகும் வீட்டை அதிலிருந்து தடுத்து நிறுத்த, வைக்கப்படும் வீசுகால் (கம்பு). எப்போதெல்லாம் வீடு வீழ்ச்சியை காணுதோ அப்போவெல்லாம் புதியவர்களை ஆகா ஓகோ என்று பாராட்டி வீட்டிற்குள் வரவேற்பார்கள். வீழ்ச்சி தடுக்கப்பட்டபின் அவர்களை விமர்சித்து, நாறடித்து, சேறடித்து, சவால் விட்டு விரட்டுவார்கள். இதுதான் தொடரும் வரலாறு. சி. வி. விக்கினேஸ்வரன், சசிகலா ரவிராஜ். இப்போ இவர் மாட்டிக்கின்னார். சோழியன் குடுமி சும்மா ஆடாது. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் செல்வநாயகம், கட்சி என்று சட்டாம்பி ஆற்பரித்ததுக்கு பின்னால் இவருக்கு கொடுக்கப்பட்ட முகவரி, கட்டியம் என்று புரிகிறது. செல்வநாயகம் கட்டியெழுப்பிய வீட்டை குட்டிச்சுவராக்கிப்போட்டு மீண்டும் அவரையே அழைக்கிறார்கள் புனரமைப்பதற்கு. அதற்கு முன், வீட்டை அரித்து பலவீனமாக்கும் கறையான்கள் அழிக்கப்படவேண்டும். இல்லையேல் வீட்டை காப்பாற்ற முடியாது.
  20. ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இ‌ங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள் ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாயச் சகுநிகள் தன் காலிக் குவளையோ! மக்கள் விடமோ.. அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்...
  21. லண்டன் தமிழ் பிபிசி சமயம் பரப்பும் வேலையிலும் இறங்கி விட்டது . கடந்த நவராத்திரி விழாவை குறிப்பிட்ட இடத்தில் கொண்டாட கூடாது என்று 1௦௦௦ பேர்க்கு மேல் பெட்டிசம் போட்டு விட்டார்கள் என்று கரோ கவுன்சில் அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள் .
  22. திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான தரப்பாக இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்போம். அவர்கள் பிழைவிட்டால் அடுத்த தேர்தலில் தண்டிப்போம்.
  23. என்னதான் குத்தி முறிங்சாலும் தமிழ்த்தேசியக் 4ட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து விட்ட சுமத்திரனுக்கு சொம்பு தூக்க நாலுபேர் இருக்கினம் .இந்தத் தேர்தல் அவர்களுக்கு நல்ல பதில் சொல்லும். பார்சிறியை கையோடை வைச்சிருக்கிறது க்கும் காரணம் இருக்கு.
  24. 10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.
  25. கட்டிப் பிடிப்பதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி Dunedin (Neuseeland) விமான நிலையத்தில் இருக்கும் அறிவித்தல் பலகையைப் பார்க்கும் போது, கோபமும் வருகிறது அதே நேரம் சிரிப்பும் சேர்ந்து வருகிறது. பயணிகளை வழியனுப்பும் போது கூட வருபவர்கள் அவர்களைக் கட்டி அணைத்துக் கொள்வதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி என்று Dunedin விமான நிலைய அறிவித்தல் பலகையில் இருக்கிறது. விமான நிலையத்தின் தலைவர் டானியல் டி போனோ (Daniel De Bono) ஒரு வானொலி நேர்காணலில் இப்படிச் சொல்கிறார், “ஒரு ஆய்வின்படி, கட்டிப்பிடிக்கும்போது, "காதல் ஹோர்மோன்" ஒக்ஸிடாசினை ("love hormone" oxytocin) வெளியிட 20 வினாடிகள் போதுமானது. ஆகவே மூன்று நிமிடங்கள் கட்டிப் பிடிப்பதே அதிகமானது. யாராவது மூன்று நிமிடங்களுக்கு மேல் கட்டிப் பிடிக்க விரும்பினால் விமான நிலையத்தில் உள்ள வாகனத் தரிப்பிடத்துக்குச் சென்று நீண்ட நேரம் கட்டிப் பிடிக்கலாம் என்கிறார். மனுசனுக்குக் கட்டிப் பிடிப்பதில் என்ன பிரச்சினையோ?
  26. நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதனால்தான் தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பி வருகின்றார்கள் என்றார். அத்துடன், இம்முறையும் அந்த ஆதரவு தொடரும் என வலுவாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். வேலணை மற்றும் வடக்கு நாரந்தனை, நாரந்தனை மத்தி ஆகிய பிரதேசங்களின் மக்களுடனான சந்திப்புக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது. இதன்போது இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில், நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது. குறிப்பாக, எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது. இதை ஏற்றுள்ள மக்கள் இம்முறை மத்தியில் உருவாகியுள்ள மாற்றம் போன்று வடக்கிலும் ஈபிடிபியிடம் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவார்கள் என நம்புகின்றேன். மேலும் ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் மத்திய அரசுடன் மட்டுமல்லாது ஏனைய இன மக்கள் மத்தியிலும் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது. அதனால்தான் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலத்தின் அடிப்படையிலேயே மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கும், பேரம் பேசலுக்கும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிகரித்த ஆசனங்களை வழங்குங்கள் எனவும் கோரிவருகின்றேன். அதனடிப்படையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யதார்த்த அரசியலையும் ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொண்டு உங்களது ஆதரவு பலத்தையும் வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அந்த வகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/196707
  27. கல்லிலே கலை வண்ணம் கண்டான்… கல்லிலே கலை வண்ணம் கண்டான்-இரு> கண் பார்வை மறைத்தாலும் காணும் வகை தந்தான்.
  28. இக்கரைக்கு அக்கரை பச்சை போல! சிலவற்றை தூர இருந்தே இரசித்து விலகுவதே மகிழ்ச்சி....
  29. அழைப்புக்கு நன்றி, நான் வருவேன். எந்த இடத்தில் என்பதை இரகசியமாகச் வைத்திருக்கவும். பிறகு சும் விசுவாசிகள் கும்மியடித்துவிடுவார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இதைவிட ஒரு மனிதன் வன்மத்தோடு சிந்திக்கமுடியாது. உடல்நலம் குன்றிருக்கும் வேளையில் ஒரு மனிதனாகவேணும் சிந்திக்க வேண்டாமா? அரசியல் என்பது ஒவ்வொருவர் பார்வை பட்டறிவின்பாற்பட்டு பொதுநலம் சார்ந்தது. ஒருவர் சரியோ தவறோ தமிரது அரசியலில் இருந்தார் தற்போது ஒதுங்கி இருக்கிறார். முந்தநாள் வந்தசிலர் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்ததைவிட திரு.மாவையவர்கள் ஒன்றும் செய்யவில்லைத்தானே. நன்றி.நன்றி.நன்றி
  30. மாவைக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காததால்.. ஏற்பட்ட மன உழைச்சலால் சுகவீனம் ஏற்பட்டிருக்கலாம்.
  31. அரசியல் போராட்டகாலத்திலும் ஆயுத போராட்ட காலத்திலும் பின்னி பிணைந்தும் பின்புலத்தில் நின்றதும் யாழ்பல்கலைகழக சமூகமே. அவ்வாறான எம் அறிவார்ந்த போர்கூடம் கடந்தகால எம் சுத்துமாத்து தமிழ்கட்சிகளை இனம் காணவும் துடைத்தெறியவும் புதியவர்களை எம் மண்ணுக்காக மாற்றீடான தலைமைகளாக இனம் காட்ட வேண்டியதும் அவர்களை தேர்தலின்போது ஒன்றிணைப்பதும் எம் இனத்திற்கான தமது வரலாற்று கடமையாக கொள்ளவேண்டும். தெருவுக்கு தெரு எம் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட காலத்திலேயே பொங்குதமிழ், மாவீரர் நினைவேந்தல் என்று நெஞ்சுறுதியுடன் சிங்களத்தை எதிர்கொண்டு சிங்கள படைகளின் நடுவில் வாழ்ந்த எம் மக்களை தேசிய நலனுக்காய் ஒன்றுதிரட்டிய எம்மின பொக்கிஷ பல்கலைகழக சமூகம் இக்கால கட்டத்தில் பழைய தமிழ்கட்சிகள்போல் வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நின்று கொள்வது ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. தன்னலமற்ற எம் புதிய அரசியல் தலைமை ஒன்றின் உருவாக்கத்திற்கும் அடையாளபடுத்துதலுக்கும்,ஒன்றிணைப்பதற்கும் பழையனவற்றின் அகற்றலுக்கும் நீங்கள் சாட்டை எடுத்து சுழற்றலாம் யாரும் தவறென்று சொல்ல போவதில்லை.
  32. மக்கள் விடுதலை முன்னணியின்(JVP ) புதிய பெயர் கொண்டு கட்சியான தேசிய மக்கள் சக்தி(NPP) பல முகவர்கள் சுயேச்சைகளாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகவே இவற்றை ஆழமாக உற்றுநோக்கும் சிலரது கருத்தும் உள்ளது. எனவே தமிழ் மக்கள் இதுவரை இல்லாத பெரும் கவனத்தோடு வாக்களிக்க வேண்டிய தேர்தலாகும். தமிழின அழிப்புக்கான போரும், அதன் தொடர்ச்சியாக ஊதிப்பெருத்து நிற்கும் படைபல, ஆளணிப் பெருக்கத்தாலும் நாடு பெரும் பொருண்மிய வீழ்ச்சியைக் கண்டதை ஊழலால் நாடு பின்னோக்கிப்போனதாகக் காட்டிப் பெரும் எடுப்பிலே பரப்புரைசெய்து ஜ.வி.பெ(JVP) என்ற தே.ம.ச.(NPP) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு தமிழருக்குப் பொருண்மியப் பிரச்சினை மட்டுமே உள்ளது என்று கூறியவாறு தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தவாறு ஆளமுனையும் போலி மாக்ஸிட்களையும் தமிழ் மக்கள் இனங்கண்டு செயற்பட வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  33. இந்தப்படத்தில் வெற்றுடம்பாகக் கொல்லப்படக் காத்திருக்கும் தமிழருக்கு முன்னால், அவரை எட்டி உதைவதற்குத் தயாராக நிற்கும் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் சிங்களவன் இன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரான டில்வின் சில்வாவாக இருக்கலாம் என்று தமிழ் யூடியூப்பர் ஒருவரின் ஒளிப்பதிவில் கேட்டேன். டில்வின் சில்வா பிறந்தது 1962 இல். இப்புகைப்படம் எடுக்கப்பட்டது 1983 இல். அதாவது இங்கிருப்பவன் 21 வயதினனாக இருக்கவேண்டும். என்ன நினைக்கிறீர்கள்?
  34. தமிழ்த் தேசியத்தை பழித்தும் இழித்தும் உரைப்பவன் 1. சிங்களவானக இருக்கவேண்டும். 2. சிங்களத்தின் கைக்கூலியாக இருக்க வேண்டும். 3. தமிழனல்லாதவானாக இருக்க வேண்டும் இப்படியானவர்கள் குறித்து நீங்கள் நேரத்தை விரயமாக்குவதால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் தமது விசுவாசத்தைத் தமது எஜமானர்களுக்குக் காட்டவிட்டு நீங்கள் பயணிப்பதே பொருத்தமானது.
  35. வணக்கம் வாருங்கள்.
  36. பாஸ் ஏன் பைபிளைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்? அது வெறும் புத்தகம்தானே? 🤣
  37. சுவையான கிரிபத் + கட்டசம்பல் ..........! 👍
  38. இவர்கள் இலங்கை ராணுவத்தை அழிப்பதை விட புலிகளை அழிப்பதிலேயே இந்தியாவின் கட்டளையின் பேரில் செயல்பட்டார்கள். இந்தியாவின் செல்லப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள் இன்னும் விசுவாசமாக வேலை செய்கிறார்கள்.
  39. அனுரவின் இப்படியான வெருட்டல்கள் இல்லாவிட்டால்…. இவர்கள், பெரிய கொம்பு முழைத்த ஆட்கள் மாதிரி நாட்டாண்மை செய்து கொண்டு இருப்பார்கள். இப்ப பெட்டிப் பாம்பாக அடங்கி இருக்கின்றார்கள். 🤣
  40. எனக்கும் தந்தை செல்வாவின் பேரன் என்று இதைப் பார்த்த பின் தான் தெரியவந்தது. ஆனால், தோழர் பாலனின் பதிவின் நோக்கங்கள்: சுமந்திரனை இந்தியாவின் சொல்கேட்டு ஆடுபவராகக் காட்டுவதும், "சந்திரஹாசன் புலி எதிர்ப்பாளர்" என்று நினைவுறுத்தி சுமந்திரன் புலிநீக்கம் செய்கிறார் என்று காட்டுவதும். தந்தை செல்வா, சந்திரஹாசன், இப்போது இவர்- மூவரும் வாழ்ந்த காலங்கள் வேறு. அரசியல் படுகொலைகள் மலிந்த காலத்தில் சந்திரஹாசன் ஆயுதப் போராட்டத்தை வெறுத்தது அந்தக் காலத்தில் வாழ்ந்த பலரின் சாதாரண மனநிலை. அவர் செல்வநாயகத்தின் மகன் என்பதால் அவர் கருத்து பொதுவெளியில் கவனம் பெற்றது. இப்போது அரசியல் படுகொலையும் இல்லை, அதைச் செய்வோரும் இல்லை என்ற காலத்தில் பேரன் எதைக் கொண்டுவருகிறார் என்று தான் வாக்காளர்கள் பார்க்க வேண்டும். ஆனால், தோழர் பாலன் போன்ற தேசிக்காய்கள் "குத்தி முறிந்து" தந்தையின் மீதான எதிர்ப்பை இவர் மீதும், நாசூக்காக சுமந்திரன் மீதும் தூண்டி விடுவர். பட்டாசு றெஜிமென்ற் அதை எல்லா இடமும் பரப்பித் திரியும்😂!
  41. போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀 யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆
  42. அவரைப் போற்றும் எண்ணம் எனக்கும் இல்லை, போற்றவும் போவதில்லை.. ஆனால் அவருக்குச் சேற்றை மட்யும் வாரி இறைப்பதன் பின்னணியில் இருக்கும் நோக்கத்தை நான் கேள்விக்குள்ளாக்குகிறேன். தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்குவேன். துணைக்கு ஆள் சேர்க்கிறீங்களா சிறியர்,...... 😂😂 சுமந்திரனுக்கு சேறடிப்பதன் நோக்கம் என்ன? என்று கேட்டால் கேட்பவர் சுமந்திரனின் அல்லக்கை, செம்பு,. புலம்பெயர்ஸ் டமில் தேசிய வியாபாரிகளின் தேசிய வியாபாரத்தைக் கேள்விக்குள்ளாக்கினால் துரோகி,.. கவனமாக உற்றுப் பார்த்தால் இறுதியில் இரு பகுதியினரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 😁
  43. ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.