Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    2954
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/22/24 in Posts

  1. பணம் பலதும் செய்யும் ஒருவர் சொல்லும் பொய் சில வேளைகளில் அவரையே சிக்கலுக்குள் மாட்டிவிடும். ஸ்ரிபன் றிலே(†51), ஈனா கெனோயர் (48) இருவரும் அமெரிக்காவில் மைநோட் நகரைச் சேர்ந்தவர்கள். இருவரும் பத்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்தார்கள். திருமணம் மட்டும் ஏனோ செய்து கொள்ளவில்லை. ஒருநாள் ஸ்ரிபன், தனக்கு சொத்தாக மிகப் பெரிய தொகைப் பணம் வர இருக்கிறது, அதற்காக தான் நொத்தாரிஸைப் போய்ச் சந்திக்க வேண்டும் என்று சுற்றியிருப்பவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். அப்படி பணம் வரும் பட்சத்தில் ஈனாவை தான் விட்டு விலகி விடுவேன் எனவும் சொல்லிக் கொண்டான். சொத்து விடயமாக 03.11.2023 திகதிக்கு நொத்தாரிஸைப் பார்க்கப் போவதாகவும் தெரிவித்தான். 06.11.2023 அன்று திடீரென ஸ்ரிபன் இயலாமல் படுத்துவிட்டான். வைத்தியசாலைக்குக் கொண்டோடினார்கள். “இறந்து விட்டான்” என வைத்தியர்கள் சொன்னார்கள். “இன்று நிறைய மது குடித்துவிட்டார்” என ஈனா கவலையோடு சொன்னாள். “பணம் வரப் போகிறது என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு குடிப்பதா? என நட்பு வட்டமும் தங்கள் தரப்பில் கவலைப்பட்டார்கள்” ஆனால் பிரேத பரிசோதனையில், அதிகளவு மது அருந்தி ஸ்ரிபன் இறக்கவில்லை. மாறாக அவன் உட்கொண்ட உணவில் விசம் கலக்கப்பட்டிருந்திருக்கிறது எனத் தெரிய வந்தது. பொலீஸார் ஈனாவைக் கைது செய்தார்கள். தேநீரில் உறைதல் தடுப்பு மருந்தை (antifreeze) தான் கலந்ததை ஈனா ஒப்புக் கொண்டாள். வழக்கு இப்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது. ஈனாவுக்கு 25 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது. எல்லாம் சரி. எதற்காக ஈனா, ஸ்ரிபனை விசம் வைத்துக் கொன்றாள் என்ற கேள்வி ஒன்று இருக்கிறதல்லவா? ஸ்ரிபன் தனக்கு 30 மில்லியன் டொலர் சொத்து கிடைக்கிறது என ஈனாவுக்குச் சொல்லி இருக்கிறான். ஸ்ரிபன் இறந்தால் அந்தப் பணம் தனக்குக் கிடைக்கும் என்று அவள் நினைத்து அவன் கதையை முடித்து விட்டாள். ஆனால் சட்டப்படி அவர்கள் திருமணம் செய்யாததால் அந்தப் பணம் தனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அவள் நினைத்துப் பார்க்கத் தவறி விட்டாள். அப்படியானால் ஸ்ரிபனுக்கு கிடைக்க இருந்த பணம் யாருக்குச் சொந்தமாகப் போகிறது? ஒருவருக்கும் கிடைக்காது. ஏனென்றால் தனக்கு 30 மில்லியன் டொலர்கள் கிடைக்கப் போகிறது என்று ஸ்ரிபன் சொன்னதெல்லாம் பொய். தூக்குத் தூக்கி சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம். கலைஞர்தான் கதை வசனம். அந்தப் படத்தில் இப்படியான வசனம் இருக்கும். “…உயிர் காப்பான் தோழன். தருணத்தில் கொலையும் செய்வாள் பத்தினி” https://www.minotdailynews.com/news/local-news/2024/10/kenoyer-gets-25-years-for-poisoning-death/
  2. யாழ் ஆஸ்பத்திரி படுகொலைகள் 1987ம் ஆண்டு தீபாவளியை யாழ்ப்பாண மக்கள் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. Operation Pawan (Pawan என்றால் ஹிந்தியில் காற்று) என்ற இராணுவ நடவடிக்கை, அமைதி காக்க வந்த இந்திய படைகளால் ஓக்டோபர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. சில மாதங்களிற்கு முன்னர் புது டில்லியில், “If you defy us, We can finish you before I put out this smoke.” என்று தனது சுருட்டை புகைத்தபடி, தலைவர் பிரபாகரனை மிரட்டிய இந்தியாவின் உயர்ஸ்தானிகர் டிக்ஸிட்டின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக, ஒரு காற்றை போல் துரிதமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் குறிக்கோளுடன் Operation Pawan முன்னெடுக்கப்படுகிறது. 48 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட Operation Pawan நடவடிக்கை புலிகளின் பலத்த எதிர்ப்பை முகம்கொள்கிறது. பல்கலைகழகம், கோட்டை, கோண்டாவில் என்று பல முனைகளில் பலமான இழப்பை இந்திய இராணுவம் சந்திக்கிறது. பலாலி, நாவற்குழி, யாழ் கோட்டை முனைகளில் இந்திய இராணுவம் உலங்குவானூர்திகளின் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சிக்கிறார்கள், கடும் சண்டையில் யாழ் மண் அதிர்கிறது. பல்கலைகழக வளாகத்தில் உலங்குவானூர்திகளில் வந்திறங்கிய சிறப்பு பரா அதிரடிப்படைகளால் புலிகளின் தலைமையை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையை புலிகள் தீரத்துடன் முறியடிக்கிறார்கள். ஓக்டோபர் 21, 1987 தீபாவளி நாள். அன்று காலை கோண்டாவில் பகுதியில் நடந்த சண்டையில் இரண்டு இந்திய தாங்கிகள் அழிக்கப்பட, புலிகள் தரப்பில் லெப்.கேணல் சந்தோஷம் வித்தாகிறார். கோட்டையில் இருந்து முன்னேறிய இந்தியப் படை சாந்தி தியேட்டரை அண்மித்த பகுதிகளில் நிலைகொள்கிறது. அன்று காலையிலிருந்து ஆஸ்பத்திரி பகுதியை நோக்கி ஷெல் வீச்சில் இந்திய இராணுவம் ஈடுபடுகிறது. ஒரு ஷெல் 8ம் இலக்க வார்ட்டில் விழுந்து 7 நோயாளர்கள் பலியாகினர். பிற்பகல் நான்கு மணியளவில் இந்திய இராணுவம் ஆஸ்பத்திரியின் முன் வாயிலூடாக கண்டபடி சுட்டுக்கொண்டு உள் நுழைகிறது. 8ம் இலக்க வார்ட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு Radiology அறையில் அடைக்கலம் புகுந்திருந்த நோயாளிகளும் ஊழியர்களும் இந்திய இராணுவத்தின் கொலை தாண்டவத்திற்கு முதற் பலியாகிறார்கள். அசுரனை அழித்த திருநாளில், இந்திய இராணுவ அசுரர்களின் கோர தாண்டவம் யாழ்ப்பாணத்தில் அரங்கேறுகிறது. தண்ணி குடிக்க எழும்பினவன், காயத்தால் முனகினவன் என்று சத்தம் வந்த பக்கம் எல்லாம் போட்டு தள்ளுகிறது அமைதி காக்க வந்த இந்தியப் படை. ஒரு அறையில் இருமல் சத்தம் கேட்க, இந்திய ஆமிகாரன் கிரனேட்டை கிளிப்பை கழற்றிவிட்டு இருமிய நோயாளி பக்கம் வீச, பக்கத்தில் படுத்திருந்த ஆம்புலன்ஸ் சாரதி உட்பட சிலர் பலியாகிறார்கள். இதேவேளை யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகள் ஷெல் சத்தத்தால் அதிர்கின்றன. தீபாவளி பண்டிகைக்கு இந்தியன் ஆமி வெடி கொளுத்தி கொண்டாடுறாங்கள் என்று அவலத்திலும் சனம் நக்கலடித்தது. இலங்கை இராணுவத்தின் ஒபரேஷன் லிபரேஷன் காலத்தில் வெட்டிய பங்கர்கள் சமாதானம் வந்திட்டுது என்று நினைத்து சனம் மூடிவிட, ஊரில் இருந்த தேவாலயங்கள், கோயில்கள், பாடசாலைகள், மேல்மாடி வீடுகள் என்பன ஷெல் வீச்சிலிருந்து காக்கும் அரண்களாகின்றன. விண் கூவிக்கொண்டு பறக்கும் ஷெல்கள் எங்கேயிருந்து வருகின்றன எங்கே விழுகின்றன என்று புரியாமல் யாழ்ப்பாணம் கதிகலங்குகிறது. ஷெல் குத்தும் சத்தத்தை வைத்து எத்தனை ஷெல்கள் லோட் பண்ணுறாங்கள் என்று எண்ணுவது, பிறகு விழுந்து வெடிக்கும் சத்தத்தை எண்ணி அந்த ரவுண்ட் முடிந்து விட்டது என்று நிம்மதியடைவது, கர்த்தரையும் முருகனையும் துணைக்கழைப்பது, கந்தசஷ்டியும் செபமும் பெலக்க சொல்வது, என்று தீபாவளி இரவை யாழ்ப்பாணம் உயிரைக் கையில் பிடித்தபடி கழிக்கிறது. யாழ் ஆஸ்பத்திரியில் பிணங்களுக்கு அடியில் படுத்தும், பிணம் போல் நடித்தும் உயிர் பிழைக்கிறார்கள் நோயாளிகளும் மருத்துவர்களும் ஊழியர்களும். அடுத்த நாள் காலை 8.30 மணியளவில் காயக்காரரை காப்பாற்றும் உன்னத நோக்கோடு" We surrender, we are innocent doctors and nurses" என்று ஆங்கிலத்தில் கத்தியபடி கைகளை உயர்த்திக் கொண்டு மூன்று தாதிமார்களுடன் வெளியில் வந்த பிரபல மருத்துவர் சிவபாதசுந்தரம், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிக்கு இரையாகிறார். ஒக்டோபர் 22ம் திகதி முற்பகல் வேளை இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் ஒரு இந்திய இராணுவ உயரதிகாரியின் வரவுடன் முடிவிற்கு வர, கையில் ஸ்டெதஸ்கோப்பை பிடித்தபடி மருத்துவர் கணேஷரட்னத்தின் உயிரற்ற உடலோடு 70 பேரின் உடல்கள் மீட்கப்படுகின்றன. ஈழமுரசும் முரசொலியும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டு, உதயன் முடக்கப்பட்ட சூழ்நிலையில், பல உடலங்கள் உறவினர்களிற்கு கையளிக்கப்படாமல் மரண விசாரணையும் நடாத்தப்படாமல் எரியூட்டப்படுகின்றன. புலிகளிற்கும் இந்திய படைகளிற்கும் இடையில் நடந்த மோதலில் சிக்குண்டு பொதுமக்கள் இறந்ததாக இந்திய அமைதி படையின் தளபதி திபீந்தர் சிங் அறிக்கை விட்டார். இதைப்போன்ற படுகொலைகளுக்கு பின்னர் இந்திய அமைதி காக்கும் படையான IPKFக்கு, சனம் Innocent People Killing Force என்று பெயரிட்டார்கள். இதுவும் Crime against Humanity தான். இலங்கை மற்றும் இந்தியப் படைகளல் இதைப் போன்ற பல படுகொலைகளிற்கு உள்ளாகியும், அன்றிலிருந்து இன்றுவரை கேட்க நாதியற்ற இனமாகவே நாங்கள் பயணிக்கிறோம். ஜெனிவாவை, ஏன் தமிழகத்தையே, எட்டாத இந்த ஆஸ்பத்திரி படுகொலையை நாங்கள் மட்டும் நினைவு கூற, இன்று வரை நீதிக்காக நியாயம் காத்திருக்கிறது. அந்த நினைவு நாள், இந்தப படுகொலை நாள் என்று வருஷம் முழுக்க விளக்கு கொளுத்தவும் அஞ்சலி செலுத்தவும் எங்களுக்கு ஏதாவது ஒன்று இருக்கும். விளக்கு கொளுத்தி கொளுத்தியே அழுது ஒப்பாரி வைத்துக் புலம்பிக் கொண்டிருக்கும் எங்கள் இனத்திற்கு நலமான எதிர்காலம் தான் துலங்குவது எப்போது ? - Jude Prakash
  3. பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக இரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையின் சாராம்சமாவது: பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும். ரேனியஸ் செல்வின் மிகவும் அர்ப்பணிப்பான, ஊழலற்ற, வினைத்திறனான, துறைசார் அறிவுடைய அதிகாரி. அவர் நியமிக்கப்பட்டமைக்காக நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், ஊடகங்கள் சிலவற்றில், பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டமைக்கு அதன் பணியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி முழுவதும் பொய்யானதும் புனையப்பட்டதுமான செய்தியாகும். இந்த நியமனத்தால் அதிகாரிகள் சிலர் தங்களின் ஊழல் மோசடிகள் வெளிவருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். அவர்களுக்கு இந்த நியமனம் சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனினும் பணியாளர்களுக்கு அவ்வாறல்ல -என்றுள்ளது. (ப) https://newuthayan.com/article/பனை_அபிவிருத்திச்_சபைக்கு__புதிய_தலைவர்!
  4. தமிழ் மக்களின் ஒப்பற்ற நம்பிக்கை சந்திக்கின்ற இரண்டாவது முள்ளிவாய்க்காலாக இந்தத் தேர்தல்களத்தில் தமிழரசுக் கட்சியின் பரிதாப நிலையைப் பார்க்கமுடிகின்றது. ஏன் இந்த அவலநிலை? என்ன நடந்தது தமிழரசுக் கட்சிக்கு? எப்படி இந்தத் தாழ்புள்ளிக்கு வந்துசேர்ந்தது தமிழரசுக் கட்சி? தமிழரசுக் கட்சியின் இன்றைய அவலநிலைக்கு யார் காரணம்? இந்தவிடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: https://tamilwin.com/article/inside-stories-of-tamil-politics-by-tamil-people-1729593302
  5. கட்டிப் பிடிப்பதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி Dunedin (Neuseeland) விமான நிலையத்தில் இருக்கும் அறிவித்தல் பலகையைப் பார்க்கும் போது, கோபமும் வருகிறது அதே நேரம் சிரிப்பும் சேர்ந்து வருகிறது. பயணிகளை வழியனுப்பும் போது கூட வருபவர்கள் அவர்களைக் கட்டி அணைத்துக் கொள்வதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி என்று Dunedin விமான நிலைய அறிவித்தல் பலகையில் இருக்கிறது. விமான நிலையத்தின் தலைவர் டானியல் டி போனோ (Daniel De Bono) ஒரு வானொலி நேர்காணலில் இப்படிச் சொல்கிறார், “ஒரு ஆய்வின்படி, கட்டிப்பிடிக்கும்போது, "காதல் ஹோர்மோன்" ஒக்ஸிடாசினை ("love hormone" oxytocin) வெளியிட 20 வினாடிகள் போதுமானது. ஆகவே மூன்று நிமிடங்கள் கட்டிப் பிடிப்பதே அதிகமானது. யாராவது மூன்று நிமிடங்களுக்கு மேல் கட்டிப் பிடிக்க விரும்பினால் விமான நிலையத்தில் உள்ள வாகனத் தரிப்பிடத்துக்குச் சென்று நீண்ட நேரம் கட்டிப் பிடிக்கலாம் என்கிறார். மனுசனுக்குக் கட்டிப் பிடிப்பதில் என்ன பிரச்சினையோ?
  6. நிர்வாணம் என்றால் ஞான நிலை அனைத்து பற்றுகளையும் துறந்த நிலை என்று பொருள் அதாவது மனதில் நிர்வாணம், உலக பற்றுகளில் நிர்வாணம், பந்த பாசங்களில் இருந்து நிர்வாணம் பால் உணர்விலிருந்து நிர்வாணம் என அனைத்து செயல்கள் அனைத்து உணர்வுகள் எல்லாவற்றையும் விட்டு விலகி ஞான நிலையினை அடைந்த நிலையாகும்.
  7. இதனை நீங்கள்... ஜேர்மன்காரனுக்கும், பிரான்ஸ் காரனுக்கும், ஜப்பான்காரனுக்கும், சீனாக்காரனுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். 😂 அவர்கள் விஷயம் தெரியாமல், தமது தாய் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர் முட்டாள் பயலுகள். 🤣
  8. உங்களது இதே எண்ணம் எனக்கும் காலையில் இருந்தது. எழுத நேரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் திலீபனின் நினைவுநாள் வந்தது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய (உப)தூதராலயம் கண்டு கொள்ளவேயில்லை. சில தினங்கள் கழித்து வந்த காந்தி நினைவு தினம் பொது மக்களோடு யாழ்ப்பாணத்தில் நினைவு கூறப்பட்டிருக்கிறது. ‘ திராவிடம்’ என்ற சொல்லைச் சேர்த்துப் பாடவில்லை என்பதற்காக தமிழகத்தில் ஆளுனரிடம் சண்டைக்குப் போகிறார்கள். நாங்கள் எங்களுக்குள்ளேயே குத்தி முறிந்து கொண்டிருக்கின்றோம். குறைந்த பட்சம் தூதராலயத்துக்கு முன் படங்களை வைத்தாவது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். சிறிய நாடு. அதற்கு இரண்டு இந்தியத் தூதராலயம்.
  9. இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்ட எந்த ஒரு இந்திய இராணுவத்தினனோ அல்லது இதை செய்ய ஏவிவிட்டவர்களோ இன்றுவரைக்கும் தண்டிக்கப்படவுமில்லை, இனி தண்டனைக்குள்ளாகப் போவதும் இல்லை. ஆனால் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தியும், கண்டும் காணாமல் இருந்த மண்டையன் குழுத் தலைவன் சுரேஸ் பிரேதசந்திரன் போன்றோர், இன்றும் தமிழ் தேசிய போராளிகளாக வலம் வருவதை கண்டு மக்கள் இனியாவது ஏமாறாமல் இருக்க வேண்டும்.
  10. வாகன parking தான் பிரச்சனை. Canada வில் வாகனத்திலிருந்து இறக்கிவிடும் பல இடங்களுக்குக் Kiss and Ride என்று பெயருண்டு. பயணிகளை இறக்கிவிட்டு, கட்டியணைத்து ஒரு முத்தத்தைக் கொடுத்தவுடன் வாகனத்தை எடுத்து நகர்ந்துவிட வேண்டும். இல்லையேல் பின்னால் இறக்கிவிடக் காத்திருக்கும் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்படும். வாகன நெரிசலைக் குறைக்கத்தான் இந்த ஏற்பாடு. 😁
  11. கட்டிப்புடிச்சு வழியனுப்புறம் எண்டு சொல்லிப்போட்டு 10,15 நிமிசமாய் என்னென்ன ஜில்மா வேலையள் செய்தினமோ ஆருக்குத்தெரியும்? 😎
  12. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) 28) வன்னி 29) மட்டக்களப்பு) 30)திருமலை 31)அம்பாறை 32)நுவரெலியா 33)அம்பாந்தோட்டை 34)கொழும்பு 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் 39) உடுப்பிட்டி 40) ஊர்காவற்றுறை 41) கிளிநொச்சி 42) மன்னர் 43) முல்லைத்தீவு 44) வவுனியா 45) மட்டக்களப்பு 46) பட்டிருப்பு 47) திருகோணமலை 48) அம்பாறை 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 54)தமிழரசு கட்சி 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  13. இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல் adminOctober 21, 2024 யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். https://globaltamilnews.net/2024/207708/
  14. உண்மையா ?? இன்று தான் அறிகிறேன் நன்றி அப்ப. எப்படி பாராளுமன்றம் போகலாம்???
  15. ஓ இதுவா சங்கதி. எனக்கு இருந்த இடத்திலிருந்து எழும்பேலாமல் இருக்கு.
  16. கண்டிப்பாக! நீதிமன்றம் மரண தீர்ப்பளித்த ஒரு குற்றவாளிக்கு, அந்த தீர்ப்பை சவாலுக்கு உட்ப்படுத்தும் வகையில் கோத்தா அந்த குற்றவாளிக்கு விடுதலை அளித்து பதவி கொடுக்கலாம், சாதாரண மக்கள் கேள்வி எழுப்பக்கூடாதோ? அது என்ன நீதி? அரசியல்வாதிகள் நீதி அமைச்சில் தலையிடாதவரை, நீதி அமைச்சில் எல்லோருக்கும் ஒரே சட்டம் எனும் நிலை வராத போது, இப்படியான நிகழ்வுகள் நடந்தே தீரும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நீதியை தேடி அடைய உரிமை இருக்கிறது, அதை யாரும் கேள்விக்குட்ப்படுத்த முடியாது. லலித் குகன் யாழ்ப்பாணத்தில் வைத்தே அன்றைய இராணுவ புலனாய்வாளர்களால் காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாட்டில் எந்தப்பக்கமும் யார் வேண்டுமானாலும் போய்வரக் கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்தோம் என்றவர்கள், இப்போ தாம் வரப்பயப்படுவதேன்? ஒருவேளை தான் செய்தது தனக்கே திரும்பி வந்துவிடுமென பயப்படுகிறாரோ? மஹிந்தா தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்தார் பயமில்லாமல், இப்போ அவருக்குரிய பாதுகாப்பு குறைப்பு என்கிற பேச்சு வந்தவுடன் தனக்கு பயங்கரவாதிகளால் ஆபத்தாம். மற்றவரை வகைதொகையின்றி கொன்று குவித்து ரசித்தார்கள், கொண்டாடினார்கள். இப்போ தனக்கு என்றவுடன் பயப்படுகிறார்கள்.
  17. அண்மையில் எனது கடனட்டையைப் பயன்படுத்தி நியூயோர்க்கில் இருந்து ராஸ் அங்கிலசில் உள்ள ஓடர் கொடுத்து எடுத்துள்ளனர். கடனட்டை வங்கிக்கு அறிவித்து 3 கிழமையில் கணக்கை சரி செய்துவிட்டு புதிய கடனட்டையும் அனுப்பியிருந்தனர். கடனட்டை உபயோகப்படுத்தும் போது எனது கைபேசிக்கும் குறும்செய்தி வரும்.அதனால் உடனடியாகவே உசாராகிவிடலாம். ஆனால் மேலே உள்ள நிகழ்ச்சி அடிமையாக வைத்து சொல்வழி கேட்காவிட்டால் கறன்ற் சொக்(இதனால் சிலபேர் இறந்தும் உள்ளார்களாம்)கொடுக்கிறார்கள்.அதிலே ஒருவர் 2 மாதமாக வெறும் சோறு மாத்திரம் சாப்பிட்டதாக சொல்கிறார். எமக்கு எந்த நாளும் Scam call என்று வரும். முதல்தடவையாக Scam company யைப் பற்றி கேள்விப்படுகிறேன்.மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது Apple pay மூலம் பணத்தை செலுத்துகிறேன்.ஆனால் எல்லா இடமும் இந்த வசதி இல்லை. இப்போதைக்கு இது பாதுகாப்ப என்கிறார்கள்.
  18. தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் விமோசனமும் , பாதுகாப்பும் உண்டு. எல்லா மாநிலத்தவர்களும் கும்மாளமடிக்கும் / கொள்ளையடிக்கும் சினிமா உலகை விரும்பினால் திராவிட சங்கம் என அழைக்கலாம்.😁 ஆனால் அந்த மண்ணையும் மக்களையும் ஆளும் அருகதை தமிழருக்கே உரியது. 😎 வாழ்க தமிழ். 💪
  19. இப்போது வரும் அட்டைகளில் தொடுகை மூலம் பரிமாற்றம் செய்யும் RFID இருப்பதால் இது முடிகிறது. shimming என்பார்கள். இதைத் தடுக்க சில வழிகள் இருக்கின்றன. கடனட்டைகளை வேறு அட்டைகளோடு அடுக்கி அதை பேர்சினுள் வைத்திருக்க வேண்டுமாம். இப்படி வைத்திருந்தால் இலகுவாக தொடர்பை ஏற்படுத்த முடியாது என்கிறார்கள். எங்காவது புதிய இடத்திற்குப் போய் கடனட்டை பாவிக்கும் போது ஒரு குறிப்பிட்ட கடனட்டையை மட்டும் பயன்படுத்தினால் அதில் ஏதாவது சந்தேகம் தரும் செயல்கள் நடந்திருக்கின்றனவா என்று இலகுவாகக் கண்காணிக்க முடியும். அனேகமாக எல்லாக் கடனட்டைகளும் தற்போது zero liability கொண்டவையாக இருக்கின்றன. இதன் அர்த்தம் நீங்கள் செலவழிக்காத ஒரு தொகையை நீங்கள் கண்டு பிடித்து கம்பனியிடம் "இது என்னுடையது அல்ல" என்று முறையிட்டால், அந்தத் தொகையை உங்கள் கணக்கில் இருந்து அகற்றி விடுவர்.
  20. ரணிலும், அவரின் துணைவியாரும் மட்டுமே.......... ஆனால் இந்த 16 சமையல்காரர்கள், 40 குடைகள் வேண்டும் என்று ரணிலுக்கு தெரியாமல் ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கேட்டு விட்டார்களாம்............ ரணிலின் செயலாளர் சொன்ன காரணம் இது.............🫣. ஹெலிகாப்டர், பிளேன், கப்பல்,.................. அண்ணன், நீங்கள் வேறு எதையோ ஒன்றை இங்கு எதிர்பார்க்கின்றீர்கள் போல.......😜.
  21. வாகனங்களும், பதியப்படாத வாகனங்களும் தான் இலங்கையில் இப்ப பெரிய பேசும் விடயமாக மாறியுள்ளது. கண்டியிலும் ஒரு வீட்டில் இரண்டு வாகனங்கள், ஒரு பஜீரோ மற்றது பிஎம்டபிள்யூ, பதியப்படாமல் நிற்க, அதிகாரிகள் அதை எடுத்திருக்கின்றார்கள். அதுவும் இன்னொரு முன்னாள் அமைச்சரினது என்கின்றார்கள். அந்த அமைச்சரோ, வழமை போலவே, அவை தன்னுடைய வாகனங்கள் என்று நிரூபித்தால் தான் அரசியலில் இருந்தே விலகுகின்றேன் என்கின்றார்............ பதிவே இல்லாவிட்டால் எப்படி நிரூபிப்பது......... அந்த வீட்டுக்காரர்களும் அவை என்னவென்றே தெரியாது என்கின்றார்கள்............🤨. ஜோன்ஸ்டன் கொஞ்சம் கையும் களவுமாக மாட்டுப்பட்டுவிட்டார். உள்ளுக்குள் அவரின் விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் இருந்துவிட்டது. வேறொரு புதிய திரைக்கதை வசனம் எழுதித்தான் அவர் தப்பிக்கவேண்டும். அரகலிய நேரத்தில் இவரைத் தேடினார்கள், இப்பொழுது தான் பிடிபட்டு இருக்கின்றார். மற்ற நாடுகளில் அரசியல்வாதிகள் எதை எதையோ பதியாமல், சொல்லாமல் இரகசியமாக வைத்திருப்பார்கள். நம்ம நாட்டில் வாகனங்களா..............😜. ரணில் கூட 16 சமையல்காரர்கள், 16 வாகனங்கள், அத்துடன் நாற்பது குடைகளும் கேட்டிருந்தார்........... இவர் என்ன ஹோட்டல் ஆரம்பிக்கப் போகின்றாரா என்று தான் உடனே நினைத்தேன். பின்னர் இந்த வேண்டுகோளை விட இன்னும் அதிகமாக சிரிப்பு வருகின்ற ஒரு காரணத்தை அவரின் செயலாளர் சொன்னார்........... மஹிந்தவிற்கு 16 வாகனங்கள் அவர் வீட்டில் நிற்கா விட்டால், அவரின் உயிருக்கு ஆபத்து காத்திருக்குதாம்............. இலங்கையிலேயே இவரின் உயிருக்கு தான் அதிகூடிய ஆபத்தும் இருக்குதாம் என்று மஹிந்தவே சொல்லுகின்றார்............ அடுத்த ஐஎம்எஃப் கொடுப்பனவின் முன், இந்த வாகன, குடை, சமையல்காரர்கள் போன்ற பிரச்சனைகளை ஐஎம்எஃப் கவனத்தில் எடுத்து, கடும் நிபந்தனைகளை விதிக்க வேண்டும்..........🤣. எல்லாருமே அலிபாபாவும் நாற்பது திருடர்களாகவுமே இருக்கின்றார்கள்..............
  22. அமைதிப்படையென வந்து தமிழின அழிப்புப்படையாகித் தாயக மண்ணில் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றிய இந்தியப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவேந்திய இரங்கல் வணக்கம்
  23. இப்பாடல் குறித்த உண்மை வரலாற்றை ஏற்கனவே வாசித்தது உண்மைகளை அறிந்ததாலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய அசல் பாடலிலேயே “திராவிடர் நல் திருநாடும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ள உண்மை தெரிந்ததாலும் நீக்கப்பட்ட வரிகள் உத்தியோகபூர்வமாக காரணம் கூறப்பட்டு தமிழ் நாடு அரசிலால் நீக்கப்பட்டது என்ற உண்மை தெரிந்ததாலும் புலவர் இங்கு பகிர்ந்த யாரோ உண்மை தெரியாத ஒருவரின் உளரல் எழுத்தை வாசித்தபோது எனக்கு “புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே” என்ற ஆயிரம் பொய் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஞாபகத்துக்கு வந்தது. 😂 தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவராவார். இவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம்நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம்எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்.[1] வரலாறு பாடல் வரிகள் “ நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. “ நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! கவிதைக்கு பொய்யழகு என்பார். அதனால் புலவர்க்கும் பொய்யழகோ?
  24. சாரி புரோ,.....அது எனது தவறான புரிதல் என்பதால் உடனே அழித்துவிட்டேன.
  25. இதில் என்ன முரண்பாட்டை கண்டீர்கள் மீரா. தமிழ் மக்களை உணர்ச்சி வசப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடும் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்மக்களை மிக அதிகம் பாதிக்கும் ஒரு சட்டதிற்கெதிராக ஒரு போராட்டதை கூட்டுணைந்து செய்ய வந்த அழைப்பை தமது சுயநலத்திற்காக புறக்கணித்துள்ளனர். குறைந்த பட்சம் அதிகார பீடங்களுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பை செய்வதற்கான தொடர்சியான தொடர்பாடல்களை வளர்பதற்கான, தமது அரசியல் தலைமைத்துவ அறிவை வளர்பதற்கான வேலைத்திட்டங்களில் கூட பங்கேற்க மனமின்றி சுலநலமாக சிந்தித்துள்ளார்கள். ஆகவே இவர்களை போன்ற சுய நலவாதிகளின் அறிக்கைகளை விமர்சனமின்றி மக்கள் அப்படியே ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது சரி தானே!
  26. எப்படியோ பனை அபிவிருத்தியடைந்து ஓங்கி வளர்ந்தால் போதும் . .........! 👍
  27. இந்திய படையால் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலிகள், பொதுவாக இந்திய இராணுவ காலத்திற்கு முன்னர், யாழ் பாணியர்கள் பெருமளவில் சிங்கள இராணுவத்தினால் ( குறிப்பிட்ட யாழ் பிரதேசங்களில் மட்டும் பெருமளவான படுகொலைகள் நடாத்தப்பட மற்ற பகுதிகளுக்கு சிங்கள இராணுவம் நுழைய முடியாத நிலை காணப்பட்டதனால்) பாதிப்பிற்குள்ளாகமல் இருந்த நிலையே காணப்பட்ட்டது, ஆனால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சிங்கள இராணுவம் சிங்கள் ஊர்காவல் படை, இஸ்லாமிய ஊர்காவல் படை (ஜிகாத்) இனரால் மோசமாக பாதிக்கப்பட்ட நிலை காணப்பட்டிருந்தது, அந்த கால கட்டத்தில் கிழக்கு மாகாண நபர்கள் கூறுவதனடிப்படையில் இந்திய இராணுவ கால கட்டமே அவர்களின் பொற்காலம் என கூறுவார்கள். தொடர்ச்சியாக பல அழிவுகளை சந்தித்த கிழக்கு மாகாணத்தமிழ் மக்களுக்கு இந்திய இராணுவம் தனது ஆதரவினை வழங்கியிருந்தாக கூறினார்கள், சம்பந்தப்பட்ட மற்ற தரப்புக்களை இந்திய இராணுவம் அடக்கி வைத்ததாக கூறுவார்கள், சரத் பொன்ஸ்சேகாவிற்கே அவரால் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்களித்துள்ளார்கள், தமிழ் மக்களை அழித்த அழிக்கின்ற சிங்கள இனவாத அரசுடனேயே இணைந்து பயணிக்க தமிழ் மக்கள் தயாராக உள்ளார்கள் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து, இந்தியா கொள்கை வகுப்பினால் ஏற்பட்ட பாதிப்பினால் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வுகளை கடந்து தமிழ் மக்கள் இந்தியாவுடன் இணைந்து பயணிப்பதற்கு இந்தியா தமிழ் மக்க்களிற்கு வட கிழக்கு இணைந்த காணி, நிதி, காவல் அதிகாரங்கள் கொண்ட ஒரு பாதுகாப்பான சூழ்நிலையினை உருவாக்கினால் அது அப்பிராந்தியத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கைக்கும் ஒரு நன்மையினை விளைவிக்கும். இது இந்து சமுத்திர பிராந்தியத்தில் போர் பதற்றநிலையினை தணிக்கும் நடவடிக்கையாக அமையும். அதனால் இந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள தவறுகள் களையப்பட்டு ஒரு புதிய சிறந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும், இலங்கை அரசினை கையாழ தற்போதய நிலையில் இந்தியாவால் மட்டுமே முடியும் ஆனால் அதே வேளை பிராந்திய வல்லரசான சீனாவினையும் தமிழ் மக்கள் அனுசரித்து நடப்பதுடன் மேற்கின் ஆதரவையும் பெற முயற்சிக்க வேண்டும்.
  28. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை இந்த சங்கை எடுத்திருக்காது விட்டால் வேறொருவர் எடுத்து இருப்பார்கள். தவறானவர்களின் கைகளுக்கு செல்லாமல் எம்மவர்களே எடுத்தது என்று மகிழ்ச்சியடைய வேண்டும். சங்கினை திருடி விட்டார்கள் என்று கூக்குரலிடுபவர்கள் அதனை பதிவு செய்து இருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. பொதுக்கட்டமைப்பின் ஊடாக அடுத்த நாடாளுமன்ற தேர்தலையும் சங்கு சின்னத்தின் ஊடாக சந்திக்க வேண்டும் என்றுதான் அனைத்து தமிழர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இதனை நிலாந்தன், கே.ரி.கணேசலிங்கம், செல்வின் போன்றோர்தான் சிதறடித்தனர். சேகரிக்கப்பட்ட நிதிக்கும் கணக்கு - வழக்கு இல்லை. இன்று செல்வினுக்கு ஜே.வி.பி.யின் அரசங்கத்தால் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: ஈழநாடு நாளேடு) ஆக, சங்கினை திருடியவர்களோ எடுத்தவர்களோ அவர்களின் செய்கையினை நாம் பாராட்ட வேண்டும். ஏனெனில் இந்த சின்னம் முன்னர் கம்மன்பிலவினதோ அல்லது சம்பிக்கவினதோ (கட்சியோ, சுயேட்சையோ சரியாக தெரியாது.) கட்சிக்கு வழங்கப்பட்ட சின்னம். அப்படியெனில் பொதுக்கட்டமைப்பும் இன்னொரு சின்னத்தை திருடித்தான் பாவித்தது என்று கூறலாம் அல்லவா?
  29. நாம் ஆங்கிலேயேருக்கு அடிமைப் பட்ட காலம் முதல் எதிர்த்து நின்றாலும் இயலுமான வரைக்கும் எங்களை மேற்கொண்டவர்களிடம் இணங்கியே போனோம், அதனால் தான் ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டுப்போன பின் சிங்களவரை விட கல்வியிலும் பொருளாதாரதிலும் சனத்தொகையிலும் நல்ல நிலையில் இருந்தோம். இன்றும் ஆயுதப் போராட்டத்துக்குப் பின் நாம் தோல்வி அடைத்து விட்டோம் என்பதை ஏற்போம், கிட்டத்தட்ட வெள்ளையர்கள் சில நூற்றாண்டுக்கு முன் எம்மை அடிமைப் படுத்த வந்த காலம் போல் ஆகி விட்டது நம் நிலை, ஆகவே இனி இணக்க அரசியல் தான் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பயன் தரும்.அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு இனி தமிழ் தேசியம் என்பதன் பொருள் கல்வி, பொருளாதாரம் தான் . அதனை அடிபட்டு பிரிவினை பேசி விட்டுக்கொடுக்காமல் இருந்தால் அடைய முடியாது. முக்கியமாக இந்தியா என்கின்ற நாடு உடையாமல் அது நடக்காது.எங்களின் உண்மையான பகையாளிகள் சிங்களவர் அல்லர், மாறாக இன்றைய உலக ஒழுங்கும் அருகில் உள்ள இந்தியா என்ற நாடுமே ஆகும். இந்த உலக ஒழுங்கு மாறும் வரைக்கும் நாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.ஆகவே இன்றைய தமிழ் அரசுக் கட்சி மற்றவர்கள் போல் அரசியல் செய்யாமல் சிங்களாவரோடு ஒத்து இணங்கி நாம் இருக்கும் நம் நிலம் மற்றும் பொருள் வளத்தை காப்பாற்ற முயல வேண்டும். பிரியாணிக்கு ஆசைப்பட்டு பட்டினி கிடந்தது போதும், கிடைக்கும் சாப்பாட்டை இப்போது சாப்பிடுவோம்.
  30. புலிகள் வரவேற்றதால், தலைவர் வரவேற்றதால் மட்டும் அவர் புனிதராகி விடமாட்டார். ஏற்கனவே யாழில் எழுதியது தான். தலைவர் மண்டையன் குழு தலைவனுக்கு அருகில் நின்ற கொடுமையை கூட பார்த்தனாங்கள் என்று.
  31. நன்றி நன்னிச் சோழன், ஏராளன். அனேகமாக தற்செயல் மீள்நிகழ்வு தான் ரசோதரன். 🙂
  32. காசா பணமா அவருக்கும் ஒரு நன்றியை சொன்னால் போச்சு. @கிருபன் இணைப்புக்கு நன்றி. ஒன்று தமிழரைக் குழுப்புவதற்கு மற்றது சிங்களவருடன் கொண்டாடுவதற்கு.
  33. நான் எழுத நினைத்தேன்” இடம் கந்தர்மடம். என்றபடியால். தவிர்த்து விட்டேன் அங்கே ஒருவர் பசியில். வடியிருந்தால். திரும்பியும். பார்த்து இருக்கமாட்டார்கள்
  34. அழகான குட்டிக் கதை . ..........! 👍
  35. இதில் என்ன தவறு இருக்கிறது? அவனுக்கு கிடைத்தது தனக்கு கிடைக்கவில்லையே என்ற எரிச்சலா? ஒரு மாணவியின் வாழ்க்கையை வீணாக்குவதைத் தவிர வேறு எதைக் காணப் போகிறார்கள்? நாங்கள் இன்னமும் மாறவில்லை.
  36. கண்டிப்பாக இது ஒரு செய்திதான். ஏனெனில் 18 வயதுக்கு மேற்பட்ட இருவர் தம் சுயவிருப்பிற்கிணங்க உடலுறவு கொள்வதை மூர்க்கத்தனமாக தடுக்கின்ற, அதை எதிர்க்கின்ற ஒரு சமூகமாகவே இன்னும் யாழ் / தாயக சமூகம் உள்ளது என்பதை இந்த செய்தி மீண்டும் தெளிவாக காட்டுகின்றது. இதில் சம்பந்தப்பட்ட அயலவர்களை தூக்கி உள்ளே போட வேண்டும்.
  37. முதலில் அந்த முட்டாள் பயலுகள் நாடு மாதிரி கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரமர ஆகிய விடயங்களில் முன்னேறட்டும். பிறகு பார்க்கலாம். 😂
  38. இலங்கையின் புதிய கடவுச் சீட்டின் 6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் படம் உள்ளது. இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கடவுச்சீட்டு தொடர்பான சில தகவல்கள். இலங்கையில் 21.10.2024 இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராஜதந்திர கடவுச்சீட்டு, உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்கள் மூன்று வெவ்வேறு வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண கடவுச்சீட்டு கருமைநிறம் புலப்படக்கூடிய வகையில் கருநீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன. 4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை 6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் 8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம் 9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் 10-11 ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம் 12-13 ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை 14-15 ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம் 16-17 ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி 18-19 ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம் 20-21 ம் பக்கத்தில் காலி கோட்டை 22-23 ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம் 24-25 ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம் 26-27 ம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள் 28 ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம் 29 ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை 30 ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள் 31 ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை 32-33 ம் பக்கத்தில் சிகிரியா குன்று 34 ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு 35 ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா 36 ம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் 37 ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம் 38-39 ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம் 40-41 ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல் 42-43 ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை 44 ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு 45 ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை என்பன அச்சிடப்பட்டுள்ளன. AB Amam
  39. அடப்பாவிங்களா எப்படியெல்லாம் ஏமாத்திருக்காங்க.. 😮 | Neeya Naana | Episode Preview
  40. “வழக்கம் போல்தான். நீங்கள் ஒரு சேவையைப் பெறக் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அங்கு நீங்கள் தான் விற்கப்படுகிறீர்கள்” 😂அழகான வாக்கியம். சில தனியார் நிறுவனங்கள் எக்ஸ் தளத்தில் இருக்கும் சில ஆயிரம் பரிமாற்றங்களை "ஒரு செய்திக்கு இத்தனை டொலர்கள்" என்று விலைபேசி தம் ஆராய்ச்சிகளுக்காக (consumer research) வாங்கிக் கொள்வதாக அறிந்திருக்கிறேன். அப்படி கம்பனிகள் செலவு செய்யும் சில ஆயிரம் டொலர்கள், பின்னர் அவர்களுக்கு மில்லியன்களாக மீளக் கிடைக்கும் வாய்ப்புகள் வரும். பூட்டி விட்டு பேசாமல் இருங்கள். விளம்பரம் வருவது கூட பரவாயில்லை.உங்களையே விற்று காசு பார்ப்பார் சக்கர்பேர்க். இவரோடு சேர்ந்து மில்லியன் டொலர்கள் சம்பளத்திற்கு வேலை செய்து செற்றிலான சிலர், பின்னர் வெளியேறி வந்து "சமூகவலைத் தளங்களின் தீமைகள்" என்று புத்தகம் போட்டு, நேர்காணல்கள், உரைகள் ஆற்றி மேலும் சில மில்லியன்கள் பார்ப்பர்😂.
  41. யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு யாழ். போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உட்பட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். https://www.virakesari.lk/article/196770
  42. நீங்கள் குறிப்பிட்டு இருந்தவர்கள் பழைய ஈரோஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பிரச்சனையை அணுகும் முறை மற்ற இயக்கங்களை விட சிறந்ததாகவே அன்று இருந்தது
  43. குறிச்சி என்பது? நீலாம்பிகை கன்னிப் பெண்ணாக இருந்தும் மீன் விற்பதற்குச் சங்கானைக்குப் போனதில் அவளது குறிச்சியே அதிர்ந்து போய் இருந்தது. அவள் அதைப் பற்றிக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணனின் கடும் எதிர்ப்பைக்கூட அசட்டை செய்யவில்லை. தம்பிராசா என்ன நினைப்பான் என்கின்ற ஒரு எண்ணம் எழுந்தாலும், அதையும் புறங்கையால் தள்ளிவிடுவது போலத் தள்ளி விட்டாள். சங்கானைக்குப் போய் வந்தபின் செக்கல் பொழுதில் கரைக் கிணற்றிற்குக் குளிக்கச் சென்ற நீலாம்பிகைக்கு அதிர்ச்சியாக இருந்தது. அள்ளிய வாளி நீரில் கல்லெண்ணை நாறியது. மேலும் முகர்ந்தபோது அது நிச்சயமாகிற்று. அதற்குள் யார் கல்லெண்ணெய் ஊற்றினார்கள் என்பதையோ, எதற்காக ஊற்றினார்கள் என்பதையோ அவள் அறிய மாட்டாள். நடு ஊராரின் கிணற்றில் குளிக்க விடாததிற்கு கிழக்குத்திக்கார் இரகசியமாக இரவோடு இரவாக கல்லெண்ணை ஊற்றியது அவளுக்குத் தெரியும். அதற்குப் பழிவாங்கலாக இது இருக்கலாம் என்பது விளங்கியது. என்ன செய்ய முடியும் என்று யோசித்தவண்ணம் வீட்டிற்குத் திரும்ப எண்ணிய போது தம்பிராசா வந்தான். அவன் தன்னைப் பார்ப்பதற்கு அலைவது பற்றி நீலாம்பிகை முதலில் கேள்விப்பட்டிருந்தாள். பின்பு ஒரு நாள் கள்ளுச்சீவும் இரட்டைப் பனையடியில் வைத்து 'நான் உன்னை விரும்பிறன் நீலா' என்றான். அவள் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. இப்போது அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு வெட்கமாக இருந்தது. அவள் ஒரு முறை பார்த்துவிட்டு வாளியைத் தூக்கினாள். 'என்ன குளிக்கேல்லையே?' என்று தம்பிராசா கேட்க அவள் நிலைமையை விளங்கப்படுத்தினாள். தம்பிராசா இருட்டி இருப்பதாலும், நடுத்திக்குக்காரின் கிணற்றில் ஆட்கள் இல்லாததாலும் அதில் குளித்துவிட்டுச் செல்லலாம் என்றான். அதைக் கேட்டு முதலில் நீலாம்பிகை நடுங்கினாலும், தம்பிராசா தன்னைக் கொலைநடுங்கி என்று நினைத்து விடுவானோ என்பதாக எண்ணியவள், சரி என்று கூற, இருவருமாக நடுத்திக்காரிக் கிணற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது திடீரென உழவு இயந்திரம் இவர்களை நோக்கி வர, பனைக் காட்டை நோக்கி ஓடிய இருவரும், அங்கே ஒளித்திருக்கும் போதுதான் அவர்கள் காதல், முத்தம் வரை சென்றது. ஒஸ்லோ என்றாலும் எங்கள் கலாச்சாரம் காப்பதாக, பார்த்துப் பார்த்து ஒழுங்கு செய்யப்பட்ட கலியாண வீடு அது. இது சொர்க்கத்தில் அல்ல, ஒஸ்லோவில் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பாடசாலை மண்டபம் ஒன்றில் நடைபெற்றாலும், அரச வைபவம் போல் அலங்கரிக்கப்பட்ட உள் மண்டப அழகு வேலைப்பாடுகள். வண்ண வண்ண ஆடல்களும், வடிவு சேர்க்கும் உருவங்களும், கண்ணைப் பறிக்கும் மணமேடையும், உயர்ந்து நின்ற மணமக்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளும், வானவில்லைப் பூமியில் நிறுவிய ஊதுபைகளுமாக மண்டபம் அமர்க்களப்பட்டது. சொந்த ஊர்ச்சனம், தெரிந்தவர்கள் என்று இரு நூறு விருந்தினர்கள் வந்திருப்பார்கள். ஐயர் புகையடிக்கும் தனது அலுவலில் மும்முரமாக, மேளமும், நாதஸ்வரமும் ஆரம்ப சுருதி பிடிப்பில் போட்டியாக. எங்கும் சிறுவர்களின் கீச்சுக் குரல், பெரியவர்களின் நகைப்பு, பேச்சு, என்பதாக வண்டுகளின் ரீங்காரமாய், களிப்பைப் பேசுவதாய், மண்டபம் உயிர் பெற்றிருந்தது. திருச்செல்வன் ஊரில் 'எதுவும் கிடையாது அவனுக்கு' என்று சொல்வார்களே, அந்த ரகத்தைச் சார்ந்தவன். இங்கே அதற்குத் தடை ஏது என்கிற சுதந்திரம் வேறு. அவனது திருநிறைச் செல்வன் சுகந்தனுக்கும், அளவெட்டியைச் சார்ந்த சிவபாலனின் ஏக புத்திரி சுகுனாவுக்கும், அன்றைய நாள் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டதால் இந்தக் கலியாணத் திருவிழா. விடுவானா திருச்செல்வன்? தனக்குத் தெரிந்த ஊர்க்காரர் எல்லோரையும் அழைத்ததோடு, பல தனது வெளியூர் நண்பர்களையும் அழைத்திருந்தான். நீளமாகப் பன்னிரண்டு நபர்கள் உட்காரும்படி நாற்காலிகள் போடப்பட்ட மேசைகள், அலங்காரத்தோடு குளிர்பானங்கள் தாங்கி, சேவைக்குத் தயாராகக் காத்து இருந்தன. அதில் சில மேசைகளில் அவன் ஊர்க்காரர்கள் ஆட்சி செய்தார்கள். அப்படி ஆட்சிக்கு உட்பட்ட மேசை ஒன்றில் தர்மசீலன், அவன் மனைவி சாந்ததேவி, ரவி, கவி என்கிற அவன் பிள்ளைகள், தவலிங்கம் அவன் மனைவியான ராணி, சிவறூபன், அவன் பாரியார் நந்தினி, கமலன் அவன் துணைவி சியாமளா, தம்பிராசா, அவன் இல்லத்தாள் நீலாம்பிகை என்பவர்கள் அமர்ந்து இருந்தார்கள். 'மனிதப் புறத்தோற்றம் ஐரோப்பா வந்த பின்பு அடையாளம் தெரியாது மாறிப்போனது, அல்லது ஒரு சமத்துவத்தை எட்டியது என்பதான ஒரு மாயை. இருந்தும் மர்மமான மனதுகள்? அதனுள் புதைந்துள்ள அகத் தோற்றங்கள்? அவை சாகாவரம் பெற்ற அசுரர்கள் போலப் பலரின் மனதின் ஆழத்தில் ஒளிந்து இருக்கிறது, இருந்தும் அது வெளியே தெரியாதபடி தடித்த முகமூடிகள் பலரைக் காப்பாற்றுகின்றன' எனத் தவலிங்கம் எண்ணிக் கொண்டான். அவன் மனது பாரதி போல சமூக அநியாயங்கள் கண்டு குமுறும். இருந்தும் போராடுவது பாதிக்கப்பட்டவனாய் இருக்க வேண்டும் என்று அவன் வலுவாக நம்புபவன். அப்போது அங்கே வந்த திருச்செல்வன், மேசையில் வைக்கப்பட்ட குளிர்பானத்தைப் பார்த்துவிட்டு, 'என்ன பாத்துக் கொண்டு இருக்கிறியள்? எடுத்து வாய நனையுங்க.... கெதியா பங்ஷன் ஆரம்பிச்சிடும். பிறகு பலகாரமும் ரீயும் வரும். எல்லாம் ஓ.கே தானே?' என்று தனது விருந்தினரை உபசரிப்பதாகக் கேட்டான். அதைக்கேட்ட தர்மசீலன் 'இதெல்லாம் நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேணுமே. உங்களுக்கு ஏதும் உதவி தேவை எண்டாச் சொல்லுங்க' என்றான் ஊர்க்காரன் என்கின்ற உரிமையில். 'ஓ... நான் தேவை எண்டா வந்து கேட்கிறன்' என்றவன் ஏதோ அவசர அலுவலாகச் சென்று விட்டான். அப்போதே, குளிர்பானத்தையும், மேசையைச் சுற்றி இருந்தவர்களையும் பார்த்த சிவறூபன், தம்பிராசாவையும், நீலாம்பிகையையும் பார்த்தான். அவனுக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பரபரப்பு அவன் மூளையில் முளைவிட்டது. சிவறூபன் ஒரு பொறியியலாளனாக வேலை செய்கிறான். ஒஸ்லோவில் மற்றவர்களோடு ஒப்பிடும்போது தான் கௌரவமான வேலை செய்வதான தடிப்பு. தனக்கு ஒரு தனி மதிப்பு இருக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இங்கு அதைப் பெரிதாகக் காட்டிக் கொள்ள முடியாததில் ஒருவித பொறுமையற்ற அடக்கம். அவன் மனதில் புதைந்து கிடக்கும் மனிதாபிமானத்திற்கு விரோதமான இன்னும் சில எண்ணங்கள். அதைப் பற்றி இங்கே கதைத்தால் தனக்கே அவமானம் என்கின்ற உண்மை விளங்கியதால் என்ன செய்வது என்கின்ற திணிக்கப்பட்ட சகிப்பு. சிறுவனாக இருக்கும்போது தம்பிராசா அப்பாவோடு சிவநாயகி அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தான். அவர் கணவர் தேவநேசன். யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்தார். வெள்ளிக்கிழமை என்றால் அவர் கொப்பிலேறி குரங்காகத் தாவிக்கொண்டு ஊருக்கு வருவார். அவர்களுக்கு ஊரில் அரைவாசி சொத்து உடைமையாக இருந்தது. அதனால் கூலிகள் யாவரும் அடிமைகள் என்கின்ற நினைப்பு. அதைப் பற்றி எல்லாம் தம்பிராசாவின் அப்பா கவலைப்படுவதில்லை. வேலை தந்து சம்பளமும் தரும் எசமானர்கள் கடவுளுக்குச் சமம் என்பது அவர் எண்ணம். அன்று தம்பிராசா அப்பாவோடு போனபோது சிவநாயகி அம்மாவின் கடைக்குட்டி ராகவன் நின்றான். அவனுக்கு ஆறுவயது இருக்கும். அவன் தம்பிராசாவின் அப்பாவைப் பார்த்து 'வாடா' என்பதோடு தொடர்ந்து சாதிப் பெயரையும் அப்பாவின் பெயரையும் சேர்த்துக் கூறினான். அப்பா கோவிப்பாரோ என்று தம்பிராசா நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தான். அவர் சிரித்துக்கொண்டு அவனுக்குப் பணிவு காட்டி 'அம்மா எங்க தம்பி?' என்று கேட்டபோது அவன் காதுகளை அவனாலேயே நம்பமுடியவில்லை. தம்பிராசாவிற்கு அன்றிலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மை. அப்பாவுக்கே இப்படி என்றால் எனக்கு என்பதை அவனுக்கு எண்ணவே பிடிப்பதில்லை. அது சாதிகளாய், குறிச்சிகளாய், இன்னும் பலவாய், பலரோடு பழகும் துணிவைச் சிலவேளைத் தின்றுவிடுகின்றது. பிரச்சினையை எதிர்கொள்வதைவிடத் தப்பிப்பதில் ஒரு அலாதி நிம்மதி தம்பிராசாவிற்கு. இருந்தும் நோர்வேக்கு வந்த பின்பு எல்லோரும் மாறிவிட்டார்கள் என்கின்ற தப்புக்கணக்கில் ஒரு துணிவு வளர்ந்தது. சிவறூபனுக்கு தம்பிராசா தம்பதிகளைப் பார்த்த ஞாபகம் வரவே இல்லை. அந்தப் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற பரபரப்பு மேலும் மேலும் கொம்பாய் முளைத்து விடுமோ என்பதான அவதி. அவன் ஊரில் மற்றவரை அறிமுகம் செய்து கொள்வதற்கு, இல்லை அவர்கள் தகவல்களை ஞாபகக் களஞ்சியத்திலிருந்து எடுப்பதற்கு, பரம்பரைப் பெயர், இல்லை என்றால் குறிச்சி தெரிய வேண்டும். அதில் ஏதாவது ஒன்றைக் கூறினால் அத்தனை தகவலும் அகரவரிசையில் அவர்கள் ஞாபகத்தில் வந்துவிடும். சிவறூபன் தம்பிராசாவைப் பார்த்து, 'நீங்கள் ஊரில எந்த இடம், உங்கட அப்பாவிற்கு என்ன பெயர்?' என்று கேட்டான். தம்பிராசாவிற்கும், நீலாம்பிகைக்கும் அந்தக் கேள்வியை யாரும் கேட்டால், கட்டி இருப்பதை உருவுவது போன்ற அவமானமும், பதை பதைப்பும் ஏற்படும். ஏற்படத்தான் வேண்டுமா என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டது இல்லை. 'ஈழத்திலிருந்து இங்கே வந்த பின்பு பலரும் அதை மறந்ததாகக் காட்டிக் கொள்கிறார்கள். கலந்து ஊர்வலம் போகிறார்கள். சில இடங்களில் சமபந்தி போஷனம் சங்கோஜம் இல்லாமல் செய்கிறார்கள். அவர்கள் மனது, உள் வீட்டின் மனநிலை, வெளியில் தெரியாதவை. அவை விரிவான ஆராய்ச்சிக்குரியது' என்பதான எண்ணம் நீலாம்பிகையிடம் இருந்தது. ஆனால் முகத்துக்கு நேரே வித்தியாசம் காட்டாது பழகுவதில் தம்பிராசாவும் நீலாம்பிகையும் திருப்தி அடைந்தனர். 'அல்லது அவர்களால் கறுப்பு வெள்ளை பிரச்சனை இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது. அதற்கு நியாயம் கேட்க முடியாது' என்பதும் அவர்களுக்குத் தெரியும். அந்தப் பாதுகாப்பிற்கு இன்று பங்கம் வந்ததாய் உடல் உதறிப் போட்டது. எழுந்து ஓடினாலும் அவமானம், இருந்து பதில் சொன்னாலும் அவமானம். வெளியேற இருந்த இரண்டு வாசலிலும் நெருப்பு பற்றினால் எங்கே ஓடுவது? என்கிற தத்தளிப்பு அவர்களிடம். தம்பிராசா பதில் சொல்லாது திருதிருவென முழித்தான். கார்மேகம் சூழ்ந்த வானமாய் அவன் முகம் இருண்டது. அதைப் பார்த்த தர்மசீலன் 'அவை எங்கடை ஊர்தான். உனக்குத் தெரியாதே?' என்று சமாதானம் சொல்ல முயன்றான். 'அதுதான் ஆர் எண்டு கேட்கிறன்' என்று தொடர்ந்தான் சிவறூபன். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த தவலிங்கம் 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்றான். 'சும்மா இருங்க அப்பா' என்றாள் ராணி அவசரமாக. சிவறூபன் அது தனக்கு என்று விளங்கிக் கொண்டான். தவலிங்கம் கூறியது அவனுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. அதை அவனுக்கு வேறு யாரிடமும் காட்ட முடியாது போக, அவன் பார்வை மீண்டும் தம்பிராசாவில் திரும்பியது. 'இவர் என்ன பெரிய மகாராசாவே, பெயரைச் சொன்னோண்ணை ஞாபகம் வாறத்துக்கு? எங்கடை ஊரில என்ன வழமை? பரம்பரைப் பெயரைச் சொல்ல வேணும், இல்லாட்டி எந்தக் குறிச்சி எண்டு சொல்ல வேணும். அதை விட்டிட்டு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது எண்டு ஒரு உருப்படி இல்லாத பழமொழி சொல்லுறியள். அந்தச் சுரைக்காய்க்குத்தான் லட்சம் லட்சமாய் சம்பளம் அள்ளித் தாராங்கள்' என்றான் சூடாக. தவலிங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற வாய் நமைச்சல் . என்றாலும் ஏட்டுச் சுரைக்காய் பற்றி விளங்கிக் கொண்ட விதத்தை எண்ணி 'அவை அறிந்து பேசு' என்பதாக அமைதி காத்தான். தம்பிராசாவிற்கு எழுந்து போவதா, இருந்து அவமானப்படுவதா என்கின்ற சங்கடம். எழுந்து போவதே அவன் முதல் தெரிவாக இருந்தது. அவன் நீலாம்பிகையைப் பார்த்தான். அவள் அவன் கண்களைச் சங்கடமாகப் பார்த்தாள், சோகமான சிட்டுக்குருவி போல அவள் இமைகளைச் சோர்வாக வெட்டினாள். அவர்களின் சங்கடத்தைப் பார்த்த தர்மசீலன் புதையுண்டு கிடக்கும் தேரை இழுப்பது போல, 'திருச்செல்வன் பார்த்துப் பார்த்து ஹோல் அலங்காரம் எல்லாம் நல்லா செய்திருக்கிறான். நானும் உதவிக்கு வந்து இருக்கோணும். எனக்கு வேலையாப் போச்சுது' என்றான் கவலையும் காரணமுமாக. 'அது நிறைய ஆட்கள் உதவிக்கு வந்திச்சினம். இதில நான், தம்பிராசா, அதைவிட செல்வன், குமரேசன், குஞ்சன், மணி, தேவாரம், நகுலன், இன்னும் கன வெளியூர்க்காரர் எண்டு நல்ல பம்பலாப் போச்சுது' என்றான் தவலிங்கம் மேலும் தேரிழுக்க கை கொடுப்பது போல. தம்பிராசா தான் தப்பி விட்டதாகத்தான் நினைத்தான். தம்பிராசா யார் என்பதுகூட சிவறூபனுக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. ஒரு பொறியியலாளனை மதிக்காமல், தான் யார் என்று சொல்லாது இழுத்தடிப்பது, அவனை அவமானப்படுத்தியதான எண்ணத்தைத் தந்தது. அவன் மீண்டும் தம்பிராசாவைப் பார்த்தான். தம்பிராசா அவன் பார்வை வேண்டாம் என்பதாகப் பக்கத்து மேசையைப் பார்த்தான். 'நீ எங்கே பார்த்தாலும் உன்னை நான் விடமாட்டேன்' என்பதாகச் சிவறூபன், 'சரி, நீங்கள் ஊரில எந்த இடம்?' என்றான் மீண்டும். அமைதி ஒப்பந்தம் எழுதிவிட்டு விமானத் தாக்குதல் நடத்தியதாக அதிர்ந்தான் தம்பிராசா. இந்த ஆக்கினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய தவலிங்கம், 'அவர் எங்கடை குறிச்சிதான். கொழும்பில இருந்ததால உனக்குத் தெரியாது' என்றான். அவன் இத்தோடு ஓய்ந்து விடுவான் என்கின்ற ஒரு நப்பாசை. ஆனால் சிவறூபன் விடுவதாய் இல்லை. 'கொழும்பில இருந்தால் என்ன, ஆர்ற்ற பரம்பரை எண்டு சொன்னா எனக்குத் தெரியும்தானே' என்றான். கூடி இருந்த பலரும் ஆளை ஆள் பார்த்து விழித்தார்கள். அப்படி ஒரு பூட்டு அதில் இருப்பது அவர்களுக்குத்தான் தெரியும். குறிச்சிக்கோ, பெயருக்கோ குல விசாரணைக்கான அடையாள எண் போன்ற பெறுமானம் அவர்கள் ஊரில் உண்டு. தகவற் களஞ்சியத்தைவிடத் தனி மூளைகளில் அதைப் பற்றி அதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கும். 'உன்னைப் பற்றி அறிந்துகொள்ள அதில் ஒன்றைத் தா' என்பது சிவறூபனின் தொடர் அடம். 'எம் அடையாளம் தெரிந்தால் உன் கண்ணில் பரிகாசம் தோன்றுமே' என்கிற அஞ்சல், அவதி, சங்கடம் தம்பிராசாவிடம். பசுவும் கொலை செய்யும். மனித பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதாகக் கோபமும், அரிகண்டமும் தம்பிராசா மனதில் கொழுந்து விடத் துவங்கியது. நீலாம்பிகையின் அண்ணன் குட்டியன் கள்ளுச்சீவப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் தம்பிராசா கடன் கொடுத்த பணத்தைக் கேட்டதால் கோபமுற்ற முருகதாஸ் இருவரது காதலையும் அவனிடம் ஒப்புவித்தான். கோபத்தால் மனது தணலாகக் கொதிக்க, தடநாரையும் குடுவையையும் தெருவில் போட்டுவிட்டு பளைக்கத்தியோடு, இருவரையும் தேடி அலைய, ஒளித்து ஓடி ஒருவாறு சிவநாயகி வீட்டிற்குச் சென்று சரணடைய, ராகவன் எதற்கும் பயப்படாது தனது மகிழுந்தில் ஏற்றிச் சென்று வவுனியாவிற்கு அனுப்பியதையும், அதனால் தமது உயிரும், காதலும் பிழைத்ததையும் தம்பிராசாவால் மறக்க முடிவதில்லை. இன்று வரையும் எது ராகவன் என்பது அவனுக்கு விளங்கவில்லை. சிறுவனா அல்லது வளர்ந்த மனிதனா? மனிதர்கள் யார் எப்போது எப்படி இருப்பார்கள் என்பதோ எந்த நேரம் அவர்கள் எந்த முகம் வெளிப்படும் என்பதோ யாருக்கும் தெரியாது. அவை விதிக்கு அப்பாற்பட்டவை. 'என்ன தம்பிராசா வாய்க்க கொழுக்கட்டையே வச்சிருக்கிறியள்? ஒரு மனிஷன் கேட்டா அதுக்குப் பதில் சொல்ல மாட்டியளே?' என்று மீண்டும் பொல்லுப் போட்டான் சிவறூபன். தம்பிராசாவால் அதன் பின்பும் பொறுமையோடு மௌனம் காக்க முடியவில்லை. இதற்குப் பதிலளிக்க எதற்குத் தான் தயங்க வேண்டும் என்று எண்ணினான். இது, தன் குறையோ, குற்றமோ இல்லை என்று முடிவு செய்தவன் 'நான் கிழக்கு திக்கு' என்றான். அதைக் கேட்ட சிவறூபன் எள்ளலாக நகைத்த வண்ணம், 'அதே உந்த மசி மசிஞ்ச நீ' என்றான் ஒற்றையில். தம்பிராசா முறைத்துப் பார்த்த வண்ணம் மேசையிலிருந்து எழுந்தான். ஒலிபரப்பியில் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்கின்ற பாரதியின் பாட்டு போய்க் கொண்டு இருந்தது. 'புரட்சி செய்யாவிட்டாலும் மனிதாபிமானத்தோடு இருக்கலாம்' என்று எண்ணிய தவலிங்கத்திற்கு சிவறூபன் மேல் கடுங்கோபம் வந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று விளங்கவில்லை. ஆனால் தனது உரிமையை விட்டுக் கொடுத்து, தப்பிக்க முயன்ற தம்பிராசாவை உக்கிரமாகப் பார்த்து, 'எதுக்கு நீங்கள் இப்ப எழும்புகிறியள், அவருக்கு இதில இருக்கப் பிரச்சினை எண்டா அவர் எழும்பிப் போகட்டும், நீங்கள் ஏன் பயந்து ஓடவேணும்? அவனவன் பிரச்சினைக்கு அவனவன்தான் போராடோணும். மற்றவை போராட முடியாது' என்றான். தம்பிராசாவிற்கு தவலிங்கம் கூறியது சரியாகப் பட்டதோடு, தனது உரிமைக்கு தானே போராட வேண்டும் என்பதும் விளங்கியது. அவன் தனது இருப்பிடத்தில் மீண்டும் இருந்து கொண்டான். 'நான் அவரை யார் எண்டு தானே கேட்டன். எழும்பி ஓடச் சொன்னனா?' என்று சிவறூபன் அவமானத்தோடு வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான். 'கேட்கக் கூடாததை கேட்காமல் இருப்பதும் அறம். அறிஞ்சு கொள்ளும்' என்றான் தவலிங்கம். மணமகள் மேடைக்கு வந்ததால் எல்லோரது கவனமும் அங்கே திரும்பியது. - இ.தியாகலிங்கம், நோர்வே https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/46675-2024-05-06-10-38-14

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.