மறைமுகமாக இலங்கைக்குள் இஸ்ரேலியர்களை அனுமதிக்ககூடாது என்பதை சுருக்கமாக சொல்கிறார்கள்.
எங்கோ இருக்குற காசாவுக்காக இலங்கையில் இவர்கள் போராடலாம் சுவரொட்டி ஒட்டலாம் ஊர்வலம் போகலாம்,பதாகைகள் தாங்கி நிற்கலாம், மதவழிபாட்டிடங்களில் சிறப்பு தொழுகை நடத்தலாம்ஆனால் பிறநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள், தமது இனம் மதம், மொழி,கவலைகளை ஆகியவற்றை அடையாளபடுத்தகூடாது அப்படியா?
அதாவது இலங்கை என்பது இஸ்லாமியர்கள் சொற்படிதான் கேட்கவேண்டுமா?
காசாவில் மக்கள் கொல்லபப்டுவது கவலையான விஷயம்தான்
ஆனால் ஒரிஜினல் இஸ்லாமியநாடுகளான எகிப்தின் துறைமுகமூடாகத்தான் கப்பல் கப்பலாக வெடிமருந்துகள் ஆயுதங்கள் அமெரிக்க ஐரோப்பாவிலிருந்து இஸ்ரேலுக்கு கடத்தப்படுகிறது அந்த இஸ்லாமியநாடுகளுக்கெதிராக பொங்கலாமே ஏன் தயங்குகிறார்கள்?
மைத்திரி ஆட்சியில் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா , ரிஷாத், கிழக்கு முதலமைச்சர் நசீர் ,மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் ஒரு மாகாணத்தில் முதலைமைச்சரும், ஆளுனரும் முஸ்லீம் என சிங்கள அரசின் மறைமுக ஆசியுடன் அதிவேகமாக காணிகள் அபகரிப்பு, வியாபாரம், மதமாற்றல்,மதராசா, பள்ளிவாசல் என்று தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கும் செயலில் இறங்கிய இவர்கள் சஹ்ரான் குண்டுவெடி தாக்குதலால் நிலமையே தலைகீழாகி சிங்களவர்களால் தூக்கியெறியப்பட்டு கொடுக்குகள் புடுங்கப்பட்டதால் இன்று அமைதிபோல் நடிக்கிறார்கள்.
ஐஎஸ் ஐஎஸ் , தலீபான், அல்கெய்டா கொடிகட்டி பறந்தபோது இங்கிருந்தபடி இன்ஷா அல்லாஹ் இன்னும் ஐஞ்சு வருஷத்தில் அமெரிக்கா , ஐரோப்பா எல்லாம் இஸ்லாமியநாடுகள் ஆகபோகிறது இறைவன் பெரியவன் என்றெல்லாம் முழங்கிய இவர்கள், அடுத்தவன் நாடுகளை உங்கள் மதநாடுகளாக்க நீங்கள் துடிக்கலாம் அடுத்தநாட்டுக்காரன் வந்து உங்கள் ஊரில் அவன் மொழியில்கூட எதுவும் எழுதகூடாது அப்படியா?
இலங்கை எனும் நாட்டில் உள்ள காத்தான்குடியில் அனைத்தும் பச்சைமயமாக்கி அறிவிப்பு பலகைகள்கூட அரபி மொழியில் வைத்து இன்னொரு சவுதியின் மாதிரியை நீங்கள் உருவாக்கலாம், அடுத்தவன் வீடு எடுத்துகூட நீண்டகாலம் தங்ககூடாது அப்படியா?
ஒரு நாட்டிற்குள் உல்லாச பயணிகளாக வருகிறவர்கள் எது செய்யலாம் செய்யகூடாது என்று தீர்மானிக்கவேண்டியது அறிவுறுத்த வேண்டியது அந்நாட்டு அரசுகள், வன்முறைகளில் அவர்கள் ஈடுபடாதவரை அந்த விடயங்களில் அறிவுரை சொல்லவும் ஆட்சேபனை செய்யவும் அறிக்கைவிடவும் நீங்கள் யார்?
ஒருநாட்டில் பிறநாட்டுக்காரன் ஆக்கிரமிப்பு தவறுதான் ஆனால், நீங்கள் இங்கேயிருந்துகொண்டு சின்வாருக்காகவுய்ம், நசருல்லாவுக்காகவும் , இஸ்மாயில் ஹனியேவுக்காகவும் அழ முடியுமென்றால் அவனும் இங்குவந்து தனது போர் வீரர்களுக்காக அழலாம் அதில் எந்த தவறுமேயில்லை.
காசாவில் குழந்தைகள் பெண்கள் கொல்லப்படுவது வேதனையானது மறுப்பதற்கில்லை இதே கவலையை ஒக்ரோபரில் இஸ்ரேலில் நுழைந்து பெண்கள் குழந்தைகள் முதியவர்களை கமாஸ் கொன்று குவித்தபோது உங்கள் கவலைகள் இதேயளவில் இருந்ததா? குழந்தைகளுக்குகிடையில் ஏது இஸ்ரேல் காசா என்று வித்தியாசம்?
எங்காவது இஸ்ரேலின் கை பெருமெடுப்பில் ஓங்கும்போது மட்டுமே தோல்வியை சகிக்க முடியாமல் பெண்கள் குழந்தைகள் பற்றி இவர்கள் கவலை இருக்கிறது, மற்றும்படி அல்லாஹு அக்பர் என்று கூவியபடி. 3'H எனப்படும் ஹமாஸ் ஹுத்தி, ஹிஸ்புல்லாவுக்கு கோஷம் போடுவது மட்டும்தான்
பெரும்பாலான முஸ்லீம்களின் கவலையெல்லாம் காசா மக்களைபற்றிய கவலையைவிட கமாஸ் ஹிஸ்புல்லா ஹுத்தி ஈரான் எல்லாம் இஸ்ரேலுக்கு அடிக்கவேண்டும் அவன் படை பலத்தை அழிக்கவேண்டும், சும்மாவாச்சும் தினமும் இஸ்ரேலின் 500 படையினர் கொல்லப்பட்டனர், 25 மெர்காவா டாங்குகள் அழிக்கப்பட்டன என்று சொல்லவேண்டும் என்பதிலேயே உள்ளது,
அதுதான் உண்மை செய்தி மற்ற ஊடகங்களெல்லாம் பொய் சொல்கின்றன என்று வேறு தூஷணத்தில் திட்டுவார்கள்..
நீங்கள் அவனை அழிக்க நினைத்தால் அவன் உங்களை அழிப்பான் அப்புறம் எதுக்கு இடைநடுவில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கவலைபடுகிறீர்கள் உங்கள் கவலையில் ஏதாவது நியாயம் உள்ளதா?