Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    19669
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88827
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1582
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14707
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/11/24 in Posts

  1. 76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம் ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்) அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன: சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும். அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு. இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே. முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது. இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழர்களோடு டீல் பண்ணுவது மட்டும் இல்லாமல், முன்னர் தரகர்களாக இருந்த தமிழ் தேசிய, அபிவிருத்தி அரசியல்வாதிகள் சாதிக்காத பலதை செய்து தரபோகிறனர் என்ற செய்தியையும் சொல்லி நிற்கிறது. யாழ்களத்தில் இந்த இரு நிகழ்வுகளும் பலரை கொஞ்சம் அல்ல நிறையவே நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது என்பது தெரிகிறது. எனக்கும் நம்பிக்கை துளிர்விடத்தான் செய்கிறது. களத்துக்கு வெளியிலும் இப்படியே இருக்கும் என ஊகிப்பது கடினம் அல்ல. ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருப்பதை நாம் மறக்க கூடாது. அது பற்றிய என் பார்வை கீழே. தமிழ் அரசியல்வாதிகள் கேட்டபோதெல்லாம் கொடுக்காததை - இப்போ எனக்கு வாக்கு போடுங்கள் தருவேன் என்கிறார் அனுரா. அதாவது, தமிழ் அரசியல்வாதிகளை காயடித்து, அவர்களால் எதுவும் முடியாது என்ற நிலையை வலிந்து உருவாக்கி விட்டு, அவர்களிடையே சுயநலமிகளை இறக்கி ஒற்றுமையை தூள் தூளாக்கி விட்டு, இப்போ தமிழ் மக்களிடம் தெற்கு நேரடியாக டீல் பேசுகிறது. சுயநிர்ணயம், 13+, இப்போ இருக்கும் மாகாணசபை கூட இல்லை, ஆனால் அரசியல் கைதிகளை, காணிகளை, விடுவிப்போம். உங்களை ஒரு சம பிரசையாக நடத்துவோம். எமக்கு வாக்களியுங்கள். இதுதான் தெற்கு, வடக்கு-கிழக்கு தமிழ் வாக்காளரோடு இப்போ போடுகிற டீல். இதை நான் ஒரு நெடிய, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட போரின், மூன்றாவதும், கடைசியும், வெற்றியை உறுதி செய்ய விழைவதுமான பகுதியாக பார்க்கிறேன். 50 களில் பேரினவாதம் எம்மீதான போரை தொடங்கிய போது தொட்டு இன்று வரை அதன் இலக்கு - எமக்கான குறைந்த பட்ச சுயாட்ச்சியை கூட தராமல், எமது நில, பொலிஸ் அதிகாரங்களை, பாரம்பரிய வாழிடம் மீதான எம் கோரிக்கையை, பின்னாளில் திம்பு கோட்பாடு வலியுறுத்திய அத்தனையையும் நிராகரித்து, அந்த நிராகரிப்பை நாமே ஏற்கும் அளவுக்கு எம்மை தோற்கடித்தல். நாம் இந்த நிலையை ஏற்கும் போதுதான் பேரினவாத்ததின் எம் மீதானா போர் வெற்றி முழுமை அடையும். இந்த வகையில்தான் எம்மீது போர் 3 பகுதிகளாக நடத்தப்பட்டது. பகுதி 1 -1948 முதல் 2009 வரை. பேரினவாதம் எம்மீது வன் போரை தொடுத்தது. நாமும் பாரிய தவறுகளை விட்டோம். முடிவு -பேரினவாதம் வன்போரில் வென்றது. பகுதி 2 -2009 முதல் 2024 வரை. இது மென்போர் காலம். எமது ஒற்றுமையை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் சிதைத்து, போலிகளை உள்ளிருத்தி, ஓர்மத்தை முனை மழுங்க வைத்து, ஆளை ஆள் சந்தேகபட வைத்து, தலைவர் இருக்கிறார், இன்னும் பல மாயக்கதைகளை, மாய மனிதர்களை எம்மை நம்பவைத்து, அல்லது நம்பாமல் அடிபட வைத்து, கூடவே ஊரில் உள்ள எமது தேசிய தலைமைகளுக்கு எதுவும் கொடாமல் (வடக்கு முதலமைச்சர் நிதியம்) அவர்களை காயடித்து, கேலிப்பொருளாக்கி, சுயநலமிகளை அவர்களாகவே அடையாளப்படுத்த விட்டு (கஜேஸ், சுமந்திரன், சிறி, சுரேஸ் இத்தியதிகள்), வினைத்திறன் அற்றோரை மேலும் வினைதிறனற்ரோர் ஆக்கி (விக்கி), அபிவிருத்தி அரசியல் காரர்களை கூட ஒரு அளவுக்குள் தட்டி வைத்து (டக்கிளஸ், அங்கயன், பிள்ளையான்), இவர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்று முழுதாக துடைத்தெறித்தார்கள். இதையேதான் நாடுகடந்த அரசு இதர புலம் பெயர் தமிழ் அமைப்புகளிலும் செய்தார்கள். எனக்கு இதை எழுதும் போதே ஐலண்ட்டின் @island குரல் கேட்கிறது. இந்த பகுதி 1, 2 இல் நடந்தவைக்கு புலிகளும், நமது அரசியல்வாதிகளும், புலம்பெயர் பிரமுகர்களும் அல்லவா அல்லவா பொறுப்பு என்பார் அவர். அவர்களும் பொறுப்பு, மறுக்கமுடியாது. ஆனால் நான் மேலே விபரித்த வகையில் இந்த இரு காலப்பகுதிகளிலும் எம்மீது ஒரு நேரடி, பின் மறைமுகப்போரை நன்கு திட்டமிட்டு, இலங்கையின் ஆழ்-அரசு தொடுத்தது என்பது என் நம்பிக்கை. அதற்கு நாமும் அறிந்தோ அறியாமலோ துணை போனோம். இப்போ…. பகுதி 3 - போர் வெற்றியை நிரந்தரமாக்கும் காலம் -2024 முதல். மேலே நான் சொன்னதை போல - நாமாக “திம்பு”வை கைவிடும் காலம் வரும் வரை தெற்கின் எந்த வெற்றியும் நிரந்தரமானதல்ல (நாம் என்றால் வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்கள்). இப்போ இதை நோக்கித்தான் அதாவது தாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கும் நகர்வைத்தான் தெற்கு எடுக்கிறது. ஒற்றை இலங்கையர் அடையாளம்+ மாகாணசபைகள் வெறும் விரய செலவுகள்,+தமிழ் கட்சிகள் எதுவும் செய்யாது+ஊழல் அற்ற அரசு+ எல்லோர்க்கும் ஒரே உரிமை +மேனாடுகள் போன்ற ஒரு இனவாதமற்ற நாடு = நீங்களாகவே “திம்பு” வை மறுதலித்தல், அதாவது தமிழ் தேசிய அரசியலை கைவிடல். இதை நோக்கி எம்மை உந்துவதுதான், இந்த கடைசி பகுதி போரின் நோக்கம். இதுதான் தெற்கு பெற்ற போரின் வெற்றியை நிரந்தரமக்கும் மூலோபாயம். இதன் முதல் படிதான் 2024 இன் இரு தேர்தல்களும். இதுதான் என் பார்வை. ———————————————— அடுத்து…… இங்கே சில கேள்விகளை ஊகித்து பதிலை தருகிறேன். கேள்வி1 அறகல, என்பிபி எழுச்சி, கோவிட், பொருளாதார நெருக்கடி எல்லாமும் random நிகழ்வுகளாக இருக்கும்போது , நீங்கள் சொல்லும் மூன்றாம் பகுதி ஏற்படவே இவைதான் காரணம் எனும் போது - இதை எப்படி ஒரு நீண்ட போரின், போர் இலக்கின் ஒரே பகுதி என்பீர்கள்? பதில் இவை எல்லாமுமே உண்மையில் random நிகழ்வுகளா என்பது கேள்வி குறி. அப்படியே random நிகழ்வுகளாக இருப்பினும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு ஆழரசு (deep state) இலங்கையில் உள்ளது என்பதையும் அதன் முதல் இலக்கு பெளத்த-சிங்கள மேலாண்மையை பேணல் என்பதையும் இங்கே அநேகர் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆள் அரசைத்தான் நாம் இலகு மொழியில் பிக்குகள் என்போம். நான் சொன்னபடி 1950 இல் இருந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலில்த்தான் இந்த யுத்தம் நடக்கிறது எனில், இப்போ நடக்கும் random நிகழ்வுகளை சுற்றி, இப்போரின் மூன்றாம் பகுதியை இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்பது என் பதில்.
  2. சிங்களத்தின் காலை பிடி என வகுப்பு எடுப்பவர்களை ...நாம் என்ன செய்ய முடியும் ...சிங்கள பொலிசார் உத்தமர்கள் என சொல்ல முடியாது ...மீண்டும் சொல்கின்றேன் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முக்கிய் காரணம் சிங்கள் பொலிசார் இது இன்றைய இளசுகளுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அன்றைய இளசுகளுக்கு நன்றாகவே தெரியும்... சிங்களத்தின் காலை பிடி என்பதை எவனும் ஏற்று கொள்ளமாட்டான் ....ஆனால் டமிழன் அமைதியாக வாழ் நினைப்பவன் ..அவனுக்கு பல சமுகங்களுடன் வாழ்ந்து முன்னுக்கு வந்த அனுபவம் உண்டு..பல தடவைகள் கை நீட்டியுள்ளான் சிங்களத்துடன் ...மீண்டும் நீட்டுகிறான் ...பார்ப்போம் அடுத்த ஐந்து வருடம் என்ன நடக்கின்றது என.......எது எப்படியோ 75 வருட அனுபவம் பாடங்கள் இனி வரும் சந்த்ததிக்கும் கிடைக்குமல்லோ....
  3. கமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார், அது கொஞ்சம் மிகையோ என்று தோன்றுமளவிற்கு ஐயம் வரும், ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல் எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு இந்த காணொலியில் இருக்கிறது
  4. அருட்தந்தை சொன்னது 99% சரி. ஆனால் எம்மை போலவே அவரும் இல்லாத மேய்ப்பனை தேடுகிறார் போலும், அதனால் எவரையும் கைகாட்டி இவருக்கு போடுங்கள் என சொல்ல முடியவில்லை. ஆனால் குறைந்தபட்சம் என்பிபி பற்றிய அபாய சங்கையாவது ஊதுகிறார்🙏. ———————— யாழில் நான் ஒரு மானசீக வாக்கெடுப்பு நடத்த போகிறேன். அன்று, நீங்கள் ஊரில் வாக்காளராக இருந்தால் எந்த கட்சிக்கு போடுவீர்கள் என. @தமிழ் சிறி அண்ணை ஆக்களை சேர்க்கவும்🙏
  5. நாகேஷ் நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் பிச்சு வாங்குவார்.இன்றிருக்கும் நடன நடிகர்கள் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.
  6. யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு இவ்வாறான தளத்தில் இணைவது இதுவே முதல்முறை. என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை, பலகோடி தமிழர்களில் ஒருவன் அவ்வள்ளவே!!!
  7. மண்டியிடும் மன்னர்கள் ------------------------------------- இரண்டு சிறு குழந்தைகளுடன் இருவர் நாங்கள் இந்த வீட்டிற்கு அநேக வருடங்களின் முன்னொரு நாள் குடி வந்தோம் பன்னிரண்டு வீடுகள் உள்ள தெருவில் பதினொரு மன்னர்கள் குடி இருந்தனர் சில மன்னர்கள் பேசினர் சிலர் வெறும் புன்னகை மட்டும் சிலர் எங்களைக் காணவேயில்லை அடைமழை நாளென்றில் கடும் காற்றில் என் முன் நின்ற பெரும் மரம் காற்றின் முன் மண்டியிட மறுத்து முறிந்து விழுந்தது மன்னர்கள் ஓடி வந்தனர் அவர்கள் வீடுகளுக்கும் சேதமில்லை என் வீட்டிற்கும் சேதமில்லை எல்லோரும் மீண்டும் போய் விட்டனர் வந்த வழியே ஓங்கி வளர்ந்து உள்ளே ஆழ வேர் விட்டு நித்தியம் என்று நின்ற மரங்களே பொத்தென்று விழ இங்கே மன்னர்கள் மட்டும் நிலைக்கவா போகின்றார்கள் மூப்பும் நோயும் பிணியும் பிரிவும் காலத்தில் வர அவர்கள் எவ்வளவு மண்டியிட்டும் காலம் விடவில்லை பதினொரு மன்னர்களையும் மாமன்னன் அலெக்சாண்டரே கடைசியில் மண்டியிட்டாராம் இந்த தெருவில் இப்போது நான் ஒரு மன்னன்.
  8. மிகவும் தெளிவான அவதானிப்பு. முன்னர் ஒரு முறை நான் ஒரு கருத்தை எழுதி இருந்தேன். உண்மையில் அது எனது கருத்தல்ல, சேப்பியன்ஸ் என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சொல்கிறார், சேப்பியன்ஸ் எம்மை விட உடல் வலுவும், மூளை அளவும் கூடிய நியண்டதால் மனிதர் மடிய, நாம் தக்கண பிழைத்தமைக்கு காரணம் - கூர்ப்பில் எமக்கு இருந்த ஒரு அனுகூலம் என. அந்த அனுகூலமாக அவர் குறிப்பிடுவது, எண்ணிக்கை பெரிதாக இருப்பினும், ஒரு குழுவாக செயற்படும் இயலுமையை. அதாவது பத்தாயிரம் சேப்பியனும், பத்தாயிரம் நியந்தாலும் ஒரு பள்ளத்தாக்கில் வசித்தால்….. நியந்ததால் மனிதனால் ஒரு விடயத்துக்கு (போர்) 10 பேரை மட்டும் சேர்க்க முடியும் போது - சேப்பியனின் கூர்ப்பு அனுகூலத்தால் அவனால் 1000 பேரை சேர்க்க முடியுமாக இருந்ததாம். இதனால்தான் சேப்பியன் குடும்பம் என்ற அலகை, ஊர், சாதி, இனம், நாடு, பேராரசு என பெரிதாக்கி கொள்ள, குடும்பத்துக்கு மேலாக சிந்திக்க முடியாத நியந்ததால் சேப்பியனில் கரைந்து போனார்களாம். இப்போ நீங்கள் சொன்ன விடயம்…. நீங்கள் சொன்ன பொதுமகன் இலங்கை தமிழ் பொதுமகன் மட்டுமே? சிங்கள பொதுமகன்…கடும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னும், பெளத்த-சிங்கள இலங்கை என்பதில் ஒற்றுமையாக, உறுதியாக நிற்கிறான். அவனுக்கு இருக்கு ஓர் பெளத்த மடாலய ஆழ்-அரசு போல் ஏன் நமக்கிடையே இல்லை. புலிகள் ஆழ்-அரசுக்குரிய கூறுகளை கொண்டிருந்தாலும் அவர்கள் ஒரு வெளித் தெரிந்த அரசியல்-இராணுவம். யூதருக்கு இருப்பதாக சொல்லப்படுவது போல், சனாதனிகளுக்கு ஆர் எஸ் என் போல், தமிழக திராவிட அமைப்புகளுக்கு தி.க. போல், சிங்களவர்க்கு பெளத்த பீடங்கள் போல்…. திம்பு கொள்கையை ஏற்று கொள்ளும் அனைவரும் ஏற்று கொள்ள கூடிய, கொள்கை வழி நடத்த கூடிய ஒரு அமைப்பு ஏன் எம்மிடம் ஒரு போதும் உருவாகவில்லை? கூர்ப்பில் சறுக்கிறோமோ?
  9. அழகிகளுடன் ‘ஹில்மா’ பண்ணிட்டு எதுக்காக கழுதையில் ஏறினார் என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை.
  10. இங்கே கவனிக்க வேண்டியது, பொதுமகன் தானாக எதுவும் கேட்பதில்லை. யாராவது தருவதாகச் சொன்னால், அவர் பின்னால் அவன் போய்விடுவான். சிங்களவன் அடித்தான் பொதுமகன் வடக்கு/கிழக்குக்கு ஓடி வந்துவிட்டான். கொஞ்சக் காலம் கழித்துத் தயங்கித் தயங்கி மீண்டும் போனான். திரும்பவும் சிங்களவன் அடித்தான். ஓடிவந்தான். பொதுமகனுக்கு இந்தப் பரமபதம் விளையாட்டு நன்றாகப் பழகிவிட்டது. அரசியல் கட்சியில் முக்கியமானவர்களில் இருவர் தோற்றுப் போயினர். தங்கள் இருப்பைத் தக்க வைக்க ‘தமிழ் ஈழம்’ தான் தீர்வு என்றார்கள். ஆயுதம் இளைஞர் கைகளுக்குப் போனது. அப்பொழுதும் பொதுமகன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவன் தனது வேலையையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மகனும் துப்பாக்கியைத் தூக்கிவிட்டான் என்றவுடன் பொதுமகனும் தனிநாடுதான் தீர்வு என்றான். அதுவும் வரலாறு காணாத இழப்பைத் தந்துவிட, ‘உலகநாடுகள் சும்மாவிடாது’ எனச் சொல்லிக் கொண்டு திரிந்தான். உலக நாடுகளுடன் தாங்கள் கதைக்கிறோம் என்று தமிழ் அரசியல்வாதிகள் கேட்டதற்கு இணங்கி அவர்களைத் தெரிவு செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்க பொதுமகன் போய்விட்டான். இப்பொழுது போதைப் பொருட்கள், வாள் வீச்சுகள் நடுவில் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்த பொதுமகனிடம், சிங்களவனே நேரில் வந்து, “உனக்கென்ன பிரச்சினை இருக்கிறது? நான் தீர்த்து வைக்கிறேன். மறந்தும் தனிநாடோ சுயாட்சியோ கேட்டு விடாதே. வெளிநாடு போனவனின் பணம் தேவைப்படுகிறது. கொண்டுவரச் சொல்லு இந்த நாடு சொர்க்கபுரி ஆகிவிடும்” என்கிறான். இப்பொழுதெல்லாம் பொதுமகனுக்கு தனிநாடு என்ற கனவு வருவதில்லை. சுயாட்சி என்றால் என்ன என்பதுவும் அவனுக்குத் தெரியவில்லை. பேசாமல் சிங்களவனுக்குப் பின்னால் போய் நிற்கிறான். பொதுமகன் தானாக எதுவும் கேட்பதில்லை. யாராவது தருவதாகச் சொன்னால் அவர் பின்னால் அவன் போய்விடுவான்.
  11. கூட அண்ணை! திகாமடுல்லைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 42 சுயாதீன குழுக்களிலிருந்து 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இந்த மாவட்டத்திலேயே களமிறங்க முன்வந்துள்ளன. யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயாதீன குழுக்களிலிருந்து 396 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்கு 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயாதீன குழுக்களிலிருந்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயாதீன குழுக்களிலிருந்து 217 வேட்பாளர்கள் களமிங்குகின்றனர். இலங்கை முழுவதுமான வேட்பாளர் விபரத்திற்கு கீழுள்ள வீரகேசரி இணைப்பைப் பாருங்கள். https://www.virakesari.lk/article/196141
  12. இந்தக் கணிப்பில், வாய்க்கு வந்தபடி, குத்து மதிப்பாகத் தான் பதில் எழுத முடிந்தது. ஊரில் உள்ளவர்களுடன் கதைக்கும் போது தாமும் குழம்பி, எம்மையும் குழப்பியடிக்கின்றனர். ஒரு பக்கம் சிங்கள தேசியக் கட்சிகளிடம் ஒட்டுமொத்தமாக செல்வது தமக்கு ஒரு இழுக்கு என நம்புகின்றனர். அதே நேரம், தமிழ் கட்சிகளின் மீது கடும் வெறுப்பும் கொண்டுள்ளனர். இவற்றை விட, தமக்கு தெரிந்தவர் போட்டியிடுகின்றார் என்று அந்தப் பக்கமும் இல்லாமல். இந்தப் பக்கமும் இல்லாமல் தெரிந்தவருக்கு வாக்களிக்க போவதாக சொல்கின்றனர். என் நண்பன், லண்டனில் இருக்கின்றான். அரசியல் பிரக்ஞை உள்ளவன். ஆனால் தனக்கு தெரிந்த ஒருவர் / உறவுக்காரர் ஊஞ்சல் சின்னத்தில் போட்டியிடுகின்றார் என்பதற்காக அங்கு போய் அவருக்கு உதவி செய்கின்றான். தம் உறவுகள் எல்லாம் அவருக்குத் தானாம் வாக்கு போடுவினமாம். ஏனென்றா...ல் ஒரே சாதியாம். விரைவில் எம் மக்கள் மத்தியிலும் சாதிக் கட்சிகள் தோன்ற வாய்ப்புகள் உள்ளன. தமிழ் தேசிய உணர்வை சாதி உணர்வு மேவிச் செல்ல இடம் கொடுக்கும் வண்ணம் நிகழ்வுகள் மாற்றப்படலாம் எதிர்காலத்தில்.
  13. பின்கதை என்னவாக இருந்தாலும், குழந்தையையும், தாயையும் தாக்கியது மிகவும் தவறான செயல். பிள்ளை நலமாக இருக்கிறதாமா?
  14. தேசிய கூத்தமைப்பும் நட்டு கழண்ட அரசாங்கமும் ஒன்னுக்கொன்னு சளைத்ததில்லை. சர்.... நானும் இருக்கேன் என்று சவுண்டு விட்டு காட்றாப்ல
  15. உங்கள் கருத்து மீது முரண்பாடில்லை சகோ. சட்டம் ஒழுங்கு சரியான முறையில் விதைக்கப்படணும் அவை எல்லோருக்கும் பொதுமானதாக பக்கச்சார்பற்றதாக இருக்கணும். நாம் கண்ட கனவு தேசம் என நமக்கு மறுக்கப்பட்டாலும் எவருக்குமே நீதிக்கான அநீதிக்கெதிரான எமது பார்வை ஒன்றே மாறாதது. மாறக்கூடாதது. அல்லவா? அத்திவாரம் தவறானால்??
  16. நீங்கள் எங்கேயோ போய்டியள் ..புலம்பெயர்ந்த காரணத்தால் உங்கள் சிந்தனை ,கருத்து எல்லாம் உச்சத்தில் இருக்கு நீங்கள் வாழும் நாட்டில் எப்படி பொலிசும் மக்களும் செய்ல படுகின்றனரோ அது போல சிறிலங்கனும்ஸ் செயல் பட வேணும் என நினைக்கிறீயள்..... இந்த சிறிலங்கன் பொலீஸ் 1977 லில் யாழ் நகரில் என்ன செய்தார்களோ அதையே இன்றும் செய்கிறார்கள்...இவர்களுக்கு பொலிஸ் பயிற்சி கல்லூரிகளில் இதெல்லாம் சொல்லி கொடுப்பார்களோ தெரியவில்லை... எது எப்படியோ இன்று தொழில்நுடபம் வளர்ந்த்துள்ளது யாவற்றையும் படம் பிடித்து யாவரும் அறிய முடியும்...
  17. நன்றி மறந்த எங்கட தெரு நாய்களுக்கு வாக்கு போடுவதை விட ஒருமுறை அநுரவிக்கு போட்டு பார்க்கலாமே . தமிழ் கட்சிகளால் இதுவரை என்ன செய்ய முடிந்தது . சாராயக்கடை அனுமதி கொள்ளை அடித்தல் .... இதுக்கு ஏன் இந்தமுறை அந்த உதவாகரைகளுக்கு போடாமல் ஒரு மாற்றத்தினை செய்து பார்க்கலாமே .
  18. வெற்றிபெற வாழ்த்துகள் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன் 17)புத்தன்
  19. எம் இனத்தவனை, எம் தலைவனை அடையாளப்படுத்துபவர்களைத்தான் நாம் ஆதரிக்க முடியும். வழிகாட்டியாக இருந்த எம் தலைவனை அடையாளபடுத்தாதவர்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்.
  20. என்னுடைய வீடு தென் கலிஃபோர்னியாவில் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு நகரில் இருக்கின்றது, வளவன். குளிர் மிகவும் குறைந்த, பல மாதங்கள் வெப்பமான உலர் காலைநிலை உள்ள இடம், பனி விழுவதே இல்லை. ஓரளவிற்கு எங்களின் ஊர் போலவே. இங்கு பலரின் வீடுகளில் எங்களின் மரங்கள், தாவரங்கள், பூச்செடிகள் பலவும் உள்ளன. பெரிய இரண்டு முருங்கைகள், மா, பலா, கொய்யா, வாழை, நாவல், மாதுளை, பப்பாசி, கறி வேப்பிலை, தேசி என்று பல மரங்கள் இங்கு என் வீட்டில் நிற்கின்றன.............
  21. அவர் தற்போது யாழ் மூளாயில்தான் பணியாற்றுகிறார். 13:25 இல் இருந்து மருத்துவரின் பேட்டி இடம்பெறுகிறது வடபகுதியில் அநுரவின் வேட்பாளர்கள் யாரென்றே யாழில் உள்ள பலருக்கே தெரியவில்லை அதனை செய்த பெருமை யூடியூப் தளங்களுக்கே சேரும். அவர்களை பொறுத்தவரை அநுர என்ற பெயரே தெரிந்திருக்கிறது. அநுர வடக்கில் இருவரிகளில் தனது அரசியல் கொள்கையை வைத்துள்ளார் அது: அடிப்படை பிரச்சனைகளை தீர்த்தால் அரசியல் கோஷங்கள் தானாக அடங்கிவிடும். என்பதே, யாழில் கருத்து தெரிவிக்கும் மக்களில் பலரின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது, யாழில் சிங்கள அரசியல்கட்சிக்கான ஆதரவு அலை வீசுகின்றது என்பதைவிட்டு தமிழ் அரசியல்கட்சிகளுக்கெதிரான வெறுப்பே களை கட்டுகிறது என்று சொல்லலாம். அரசின் வெற்றி வடபகுதியில் உறுதியானால் தமிழர் அரசியல் அபிலாஷைகளுக்கு சாவுமணிதான், அதற்கு முழுகாரணமுமே தமிழர்கள் முதுகில் இதுவரைகாலம் குதிரை ஓட்ட கால இழுத்தடிப்பு செய்த தமிழ்கட்சிகள்தான்.
  22. வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழரல்லாதவர்களும் இவரது கட்சியில் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்களின் பெயர்கள் R.H. Upali Samarasinghe District Organizer S. Thilakanadan Veterinary A. Mailvaganam Jegadishwaran Teacher M.A. Pathima Hajistha Social Activist V.A. Don Priyankara Premarathne Student Scientist Mahaweli Authority Yogaraja Sivaruban Farmer J. Ragar Anton Kamalasragar Businessman A. Raizdin Principal Teacher Ramaiya Radha Krishnan Agricultural Insurance (Field Division Officer) திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் தமிழர் இல்லை Arun Hemachandra District Organizer M.A. Mohammed Rafique Teacher P. Indika Priyadarshana Paranawithana Farmer A.G. Roshan Priyanjana Teacher Karunanayakage Shila Social Activist M. Niyaz Mohammed Sabraan Assistant Manager Yevugan Irajendran Businessman அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதி. L.P.G. Wasantha Piyathissa Full-Time Politician A.M.M. Muthumanike Rathwatte Retired Army Mohammed Sultan Saththar Teacher Abubakar Adambavah Teacher M. Meemana Sugath Ratnayake Teacher M.M. Priyantha Kumara Wijerathna Lawyer A. Muhaideen Rameesh Farmer S.M. Buhari Mohammed Rizad Teacher R. Morris Anton Retired Principal K.M. Tilak Kithsiri Regional Environment Officer
  23. எந்த தலைப்பில் இணைப்பதென்று தெரியாது இந்த பகுதியில் இணைக்கிறேன் அதிவேகமுறையில் பயன் தரகூடிய பதிய முறைகள் என்று கரட், கற்றாழை, வாழைப்பழம், மஞ்சள்,உருளைகிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி ... எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள், இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன் பெரும்பாலும் தேங்காய்நார் உரமே பதியத்திற்கு மிக சிறந்தது என்கிறார்கள். மா எலுமிச்சை அவகாடோ தக்காளி & கத்தரி ஒட்டுமுறை பப்பாசி கொய்யா
  24. (எம்.ஆர்.எம்.வசீம்) தேர்தலில் எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி ஏற்படலாம். ஜனாதிபதி முதல் திசைகாட்டியில் இருக்கும் ஆட்சியாளர்கள் யாருக்கும் அனுபவம் இல்லை என்பது தற்பாேது நிரூபணமாகியுள்ளது. அதனால் ஆட்சி செய்த அனுபவமுள்ள சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை (10) மருதானையில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடந்து தெரிவிக்கையில், நாட்டில் இருந்த அனைத்து வரிசைகளையும் நாங்கள் நிறுத்தினோம். நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அனைத்து கடன்களையும் முகாமைத்துவம் செய்துகொண்டாேம். 2028ஆம்போது நாங்கள் கடனை செலுத்துவதற்கு ஆரம்பிக்க வேண்டும். அதற்கு 2042வரை காலம் இருக்கிறது. கடன் செலுத்தவில்லை என்றால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டிவரும். ஜனாதிபதி இதுவரை பொருளாதார இலக்கு தொடர்பில் தெரிவிக்கவில்லை. அதனால் பாரிய நிச்சியமற்ற நிலை இருந்துவருகிறது. தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு, தேங்காயின் விலை தேங்காய் மரத்தைவிட உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை தாமரைக்கோபுரம் போன்று உயர்ந்து செல்கிறது. முட்டை விலை அதிகரித்து செல்கிறது. இதற்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு முடியுமா? இந்த அரசாங்கம் நாணய நிதியத்துடன் எவ்வாறு கலந்துரையாடுகிறது? ஜனாதிபதி தேர்தலில் வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கையை கொண்டுவந்தார்கள். அவற்றை செயற்படுத்த முடியுமா? வரி நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி தேர்தலின்போது தெரிவித்தார். அவை கிடைக்கிறதா இல்லையா? என தெரிவிக்க வேண்டும். நாடு முன்னுக்கு செல்வதாக இருந்தால் நூற்றுக்கு 8வீத வருடாந்த பொருளாதார அபிவிருத்தி இருக்க வேண்டும். இவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது? சிறிலங்கன் விமான சேவையை வைத்துக்கொள்வதா எனதெரிவிக்க வேண்டும். திசைகாட்டி முன்வைத்திருக்கும் பொருளாதார வேலைத்திட்டத்துக்கு என்ன நடந்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார வேலைத்திட்டத்துக்கு அமைய அரசாங்கத்தை நிர்வகிக்க முடியுமா? தேசிய மக்கள் சக்தியில் வியத்மக வைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஜனாதிபதி போட்டாபயவை இல்லாமலாக்கினார்கள். இவர்களையும் இல்லாமலாக்க அவர்கள் தற்போது திசைகாட்டியில் போட்டியிடுகின்றனர். நாட்டுக்கு திறந்த பொருளாதாரம் இருக்க வேண்டும். நான் எப்போதும் பொருளாதாரத்தை திறந்து விட்டிருந்தேன். திசைகாட்டியில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. அது தொடர்பில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் நாங்கள் அறிமுகப்படுத்திய பயணத்தில் செல்லுங்கள். இந்த பயணத்தில் இருந்து தூரமாக வேண்டாம். அவ்வாறு இடம்பெற்றால் இந்த பொருளாதாரத்தை கையாள முடியாது. மேலும் உதய செனவிரத்ன அறிக்கையை செயற்படுத்த, திசைகாட்டி அரச ஊழியர்கள் ஏன் எதிர்ப்பு? இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டும். திசைகாட்டியின் பொருளாதார சபையில் வேலை செய்ய முடியாது. அந்த சபையில் வணிகக் கல்வி தொடர்பில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். வியாபார முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் தொடர்பில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். சமஸ்கிருத மொழி தெரிந்தவர்களும் இருக்கிறார்களாம். என்றாலும் பொருளாதாரம் தொடர்பில் அவர்களுக்கு என்ன தெரியும்.? இது அறியாதவர்கள் இருக்கின்ற அனுபவமில்லாத அரசாங்கமாகும். ஜனாதிபதி முதல் யாருக்கும் அனுபவமில்லை. அவர்களின் வேட்பாளர்கள் யார் என்று தெரியுமா? மறைந்திருக்கும் வேட்பாளரை கண்டுபிடித்து உறுப்பினராக்குமாறு தெரிவிக்கிறார்கள். அதனால் அனுபமில்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதா? அதனால் தற்போது இருப்பது எல்போட் அரசாங்கம். எல்போட் அரசாங்கமும் எல்போட் பாராளுமன்றமும் இருந்தால் பாரிய பிரச்சினை ஏற்படும். நாடு சீரழிந்துவிடும். எனவே நாங்கள் எல்போட் அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதா? பாராளுமன்றத்தை சிலிண்டருக்கு கொடுத்தால் ஏதாவது ஒன்றை செய்ய முடியும். அதனை நாங்கள் நடைமுறையில் காட்டி இருக்கிறோம். பொருளாதாரத்தை பாதுகாக்க சிலிண்டரில் போட்டியிடுபவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள். குப்பைகளை அகற்றுவதற்கு திசைகாட்டியை அபான்சுக்கு அனுப்புங்கள் என்றார். https://www.virakesari.lk/article/198463
  25. தனித்திரியாக கேளுங்கள். பலர் பதில் அளிப்பார்கள். நான் இலங்கையில் இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் ஒருபோதும் சிங்கள தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டேன்.
  26. இவர் இலங்கையில் மட்டும் தான் படித்து பட்டம் பெற்றார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் ஒன்றை பின்னர் வழங்கியிருந்தது. ஆக்ஸ்ஃபோட்டில் கேட்டார்கள், கேம்பிரிட்ஜில் கேட்டார்கள்............ என்று 'கரகாட்டக்காரன்' கோவை சரளா போல அவரது ஆதரவாளார்கள் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்...........🫣.
  27. @goshan_che நன்றி தரமான செயல். நான் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் பற்றி தான் அதிகம் எழுதுவேன். அதில் பலதையும் நீங்கள் சரியாக தொட்டிருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை தாயகத்தில் உடைக்க முடிந்த அளவுக்கு கூட புலம்பெயர் அமைப்புகளை உடைக்க முடியாத படி இருந்தன. உங்கள் பலருக்கும் இது 2009 க்கு பின்னர் என்று தான் தெரிந்து இருக்கக்கூடும். ஆனால் எனக்கு அது சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்கிய 2002 லிலேயே இது மும்மரமாகக்கப்பட்டு விட்டது. இதனை செய்வதற்கு சிறீலங்கா அரசுக்கு புலம்பெயர் தேசங்களில் சிங்களவர்கள் தேவையே இல்லை என்ற அளவிற்கு எமது இனத்தவர் முழுவதுமாக முழுநேரமாக உழைத்தனர் என்பது தான் கிரகித்து கொள்ள முடியாத நிஜம். இதனாலேயே யாழ் களத்தில் இவர்கள் சார்ந்த எழுத்துருக்களை காணும் போதெல்லாம் என் என் கண்கள் சிவக்கும். நன்றி சகோ நேரத்திற்கும் ஆக்கத்திற்கும்.
  28. @தமிழன்பன் அவர்களை, எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கின்றோம். 🙂
  29. IT யில் வேலை செய்யும்நிழலிக்கே கணக்கு தெரியாமல் போச்சே (75+156+1+1+8=241)
  30. வெற்றி பெற வாழ்த்துக்கள்,......ஆனால் 58. 59. கூட்டினாள் 231. வரும். இலங்கை பாராளுமன்றம் 225 உறுப்பினர்கள் உடையது. குறிப்பு,....கணக்கு முக்கியம் சும்மா கடுப்பேற்றுவம். 🤣😂
  31. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) ஆம் 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)\ 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி - 02 இடங்கள் தேசிய மக்கள் கட்சி: 02 இடம் (6 தொகுதிகளில் தமிழரசும், தேசிய மக்கள் கட்சியும் தலா 2 இடங்களை பெறும் என (கணித்துள்ளேன்.) 28) வன்னி தமிழரசு கட்சி - 02 இடங்கள் தேசிய மக்கள் கட்சி: 02 இடம் 6 தொகுதிகளில் தமிழரசும், தேசிய மக்கள் கட்சியும் தலா 2 இடங்களை பெறும் என (கணித்துள்ளேன்.) 29) மட்டக்களப்பு) தமிழரசு: 02 30)திருமலை தேசிய மக்கள் கட்சி: 02 இடம் 31)அம்பாறை தேசிய மக்கள் கட்சி: 03 இடம் 32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி: 03 தேசிய மக்கள் கட்சி: 03 இடம் (இரண்டும் சம அளவில் பெறும்) 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் கட்சி: 04 இடம் 34)கொழும்பு தேசிய மக்கள் கட்சி: 12 இடம் 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 01 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய்: தெரியாது 39) உடுப்பிட்டி: தெரியாது 40) ஊர்காவற்றுறை: EPDP 41) கிளிநொச்சி:தமிழரசு 42) மன்னர்: தமிழரசு 43) முல்லைத்தீவு:தேசிய மக்கள் கட்சி 44) வவுனியா: ஐக்கிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு: தமிழரசு 46) பட்டிருப்பு : தெரியாது 47) திருகோணமலை: தேசிய மக்கள் கட்சி 48) அம்பாறை:தேசிய மக்கள் கட்சி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் கட்சி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி): 03 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி): 09 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி: 01 54)தமிழரசு கட்சி: 08 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு:01 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி): 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி : 0 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி): 75 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி):156 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி): 0
  32. கண்ணீர் விட்டு அழுகிறது, ஏர் பிடித்து வயல் உழுகிறது, நிலத்தில் இருந்து மண்சோறு சாப்பிடுகிறது எல்லாம் பழைய "ரெக்னிக்" எல்லோ...
  33. விளம்பரம் அலையாகிய கேசம் பரந்த நெற்றி வில் புருவம் வேல் விழிகள் கொவ்வைச் செவ்வாய் எண்சாண் உயரம் உடுக்கிடை அகன்ற மார்பு வயதிரு பத்தைந்து இவளது அம்மாவுக்கு மணமகன் தேவை
  34. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி . கட்சித்தலைவர் பதவிபெற்றுக் கொள்வதற்காக ஆணை கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது.
  35. உருத்திரகுமார் மிக நீண்டகாலமாக எம் தாயகபோராட்ட அமைப்பின் ஓர் அங்கமாக இருந்து இன்று புலிகளின் நினைவாய் எஞ்சியிருக்கும் மிச்சங்களிலொன்று. எம் தாயக போராட்ட அமைப்புக்கு நெடுங்காலம் சட்டரீதியாக தன் போராட்ட பங்களிப்பய் செய்த நன்றிக்குரிய போராளி. ஆளுமைமிக்க நீங்கள் இந்த நாடுகடந்த அரசை கலைத்துவிட்டு, புலம்பெயர் தேச எமதுமக்கள் அமைப்புக்கள் தொழிலதிபர்களை இணைத்து எம் தாயக மக்களுக்கான அரசியல் பொருளாதார கல்வி ஆலோசனை நடவடிக்கைகளில் மறைமுக சக்தியாய் ஈடுபடலாம். நாடுகடந்த எம்பிக்கள் என்று இருந்தார்கள், அவர்களில் ஒரு சிலர் என்ன செய்கிறார்கள் என்று நன்கறிதிருக்கிறேன். கியூபா போய் மூக்குமுட்ட குடித்து அழகிகளுடன் ஹில்மா பண்ணி கழுதையில் ஏறி சவாரி போன ஒருவரையும் நானறிவேன்.. இவர்கள் தராதரத்திற்கும் புலிகள் அமைப்பின் மறுவடிவ உங்கள் அமைப்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? தற்போதைய தாயக நிலவரம் பார்த்தால் கண்முன்னே கூட்டம் கூட்டமாக எம் மக்கள் மீண்டுமொருமுறை சிங்களவனிடம் சரணடவது தெரிகிறது. முள்ளிவாய்க்கால் முடிவில் சரணடந்தது ஆபத்தானதல்ல, ஏனென்றால் அது விரும்பாமலே சரணடைந்தார்கள், இன்று விரும்பி சரணடைகிறார்கள் எமது பிரதிநிதிகள் எனப்படுகிறவர்களிடம் தொடர்ந்து ஏமாந்து போனதால் தமிழருக்கென்றொரு தனித்துவபகுதி அரசியல் என்பதையெல்லாம் தள்ளி வைக்க தயாராகிவிட்டார்களென்பது பொருள். இலங்கை தமிழ்மக்கள் தமிழகம் போன்று சினிமா செம்பு குத்துவிளக்கு குவாட்டர் பிரியாணிக்கான வாக்காளர்களல்ல, அடுத்துவரும் ஐந்து வருடங்களில் அநுர தமிழர்கட்சிகள்போலவே ஏமாற்றிக்கொண்டிருந்தால் அடுத்த தேர்தலில் மறுபடியும் தமிழர் தலைமைகளை நோக்கி வருவார்கள், அப்போதிருக்கபோகும் தமிழ் தலைமைகள் இப்போதிருந்தவர்களாக இருக்க கூடாது என்பதே அவா. அதற்கான எத்தனங்களின் பின்னால் மறைமுகமாக உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்பதே அபிப்பிராயம்.
  36. ஆம் , எந்த வேற்றுமையும் இருக்க கூடாது. அனால் , யதார்த்தம் அப்படி இல்லை. இவை வரலாறு. எதோ ஒரு விதத்தில் உதவும் வேற்றுமையை தணிக்க என்பது எனது நம்பிக்கை. சில வரலாற்றை பார்த்து பெருமை அடைவோம். வெட்கி தலை குனியக் கூடியது, ஒரு பகுதி சமூகத்தை வதைத்தது, கைவிட்டது போன்ற எல்லாவற்றையும் எம்மவர்கள் செய்தனர் என்பதை அறிவது நன்மை என்றே நினைக்கிறன். வரலாற்றில் அங்கெ நடந்தது அநேகமாக எல்லாம் இங்கேயும் நடந்தது. மூடிபோட்டு போகமுடியாது. மூடிபோட்டு போவதன் விளைவின் மறுதாக்கமாக ஓர்ம வடிவம் சித்தார்த் போல, 50 -100 வருடங்கள் கடந்து, அல்லது அவர் போன்றவர்களின் சந்ததிகள் அறியும் போது வரும். சித்தார்த் இப்போது சொல்லியதுக்கு (சித்தார்த் சரி என்று சொல்லவில்லை), சாதியின் பெயரால் அவரின் முனைய சந்ததிக்கு கொடுமை இழைக்கப்பட்டதையும் ஏற்றுக்கொண்டு, சித்தார்த் செய்த தவறையும் சுட்டிக்காட்டி, இரு பகுதியும் தமது தவறையும் ஒப்பொக்கொண்டு பகிரங்க வருத்தம் , மன்னிப்பு கேட்டு, வழங்கி கடந்து செல்வதே, இவற்றை தணிக்கும். இது ஒரு உதாரணம் மாத்திரமே. தமிழ் இலக்கியவாதிகள் சந்திப்பில் தான் அறிகிறேன், youtube வழியாக, தென்மராட்சியில் சாதியின் பெயரால் துரத்தி சென்று உயிர் தப்ப மரம் எறியவரை, மரத்தை தறித்து விழுத்தி கொன்றதாக, இது நடந்தது 1960 களில் (youtube இல் தமிழ் இலக்கியவாதிகள் சந்திப்பில் சொல்லப்பட்டது); அதே தென்மராதியில் jcb கொண்டு தேர் இழுக்கப்படுகிறது, மக்கள் இருந்தும், அவர்களை சாதியின் அடிப்படையில் தேர் இழுப்பதை தடுத்து. எங்களுக்குள் உள்ள கரும்ப் பொட்டுகள், சிரங்குகள், எழும்பு கூடுகள் ... வெளியே வர வேண்டும். அதற்கு இது ஒரு சிறிய வெளி. தொடர்ப்பில்லாதது என்று எங்கு வரையறை என்பது புரியவில்லை.
  37. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம் 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) இல்லை 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்
  38. நியாயமான கேள்வி. ஆனால் இது பிரான்ஸ் இல்லையே அண்ணை. இலங்கை. அரசு இயந்திரம் சிங்களவரான (?), பொலிஸ் பக்கம் சாராமல் தமிழரான (?) வான் சாரதி பக்கம் சாய்வது கொஞ்சம்…புதிசு கண்ணா புதுசு. ம்ம்ம்.. 83 இல் தமிழரும் சிங்களவரும் அடித்து கொண்டார்கள் என யாரோ எழுதியது போல இருக்கு ஜி. சுன்னாகத்தில், சிவிலில் நிக்கும் ஒரு பொலிஸ் கூட்டத்தின் மேல் - ஒரு சாதாரண வான் காரார் தானாக போய் கைவைத்திருப்பார் என நம்புகிறீர்களா ஜி?
  39. என்னைப் பொறுத்தவரை இம்முறை தமிழ் மக்களில் இருந்து பாராளுமன்றம் செல்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை உணர்நதவர்களாகவும், அதனை தீர்க்கும் ஆற்றல் மற்றும் விருப்பு மிகுந்தவர்களகவும், ஜதார்தத ரீதியில் சிந்தித்து நடைமுறை சாத்தியமான வழியில் ஒரு அரசியல் தீர்வுக்கு ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து புரிந்துணர்வை ஏற்படுத்தி அரசியலமைப்பு மாற்றங்களில் தமது பங்களிப்புகளையும் வழங்கி அதிகாரப்பரவலக்கலை ஏற்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்த அதில் முன்னேற்றம் காண தமது ஆற்றலையும் புத்திசாலித்தனத்தையும் பிரயோகப்படுத்துபவர்களாகவும், சில்லறை அரசியலுக்காக தம்முள் முரண்பாடுகளை மேற்கொள்ளாதவர்களாகவும் கட்சி வேறுபாடுகளை கடந்து புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுபவர்களாகவும் இருத்தல் வேண்டும். மக்களின் கலவி பொருளாதார மேம்பாட்டை ஆளும் அரசுகளுடன் கெளவரமான இணக்கப்பாட்டை மேற்கொண்டு வட கிழக்குல் தமிழரின் வாழ்ககை தரத்தை உயர்த்த முன்னுரிமை கொடுப்பவராக இருத்தல் வேண்டும். மக்கள் தமது பொருளாதார வாய்பபுகளை தேடி வெளிநாடு ஒடாது உள்நாட்டில் உரிய வருமானமீட்டி மகிழ்வுடன் வாழும் நிலையை சிறிது சிறிதாகவேனும் ஏற்படுத்துவது எமது மக்களின் மக்கள் செறிவை தாயகத்தில் பாதுகாக்கும். உனக்கு ஏன் இந்த பேராசை என்று உறவுகள் நினைக்கலாம். இருந்தாலும பேராசையை பதிவு செய்ததில் தவறில்லையே😂 தீவிர தமிழ் தேசிய வெறி நோய் முற்றி அதனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மரமண்டை அரசியல்வியாதிகள் கட்சி வேறுபாடு இன்றி முற்றாக தோற்கடிக்கப்படல் வேண்டும். ஏனெனில் எனது முதல் பந்தியில் கூறிய Eligibility யில் ஒன்று கூட இல்லாத வெறுமையாளர்கள் அவர்கள்.
  40. கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உள்ளிட்ட வேனிலிருந்தவர்களை சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர் : சம்பவ இடத்திற்கு விரைந்த கஜேந்திரகுமார் தெரிவிப்பு யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் பொலிஸார் அந்த வேனிலிருந்த ஆண்களிற்கு மிக மோசமாக அடித்து கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உட்பட வேனிலிருந்த பெண்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று அங்கு மிலேச்சத்தனமாக தாக்கியுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொனானம்பலம், செல்வராஜா கஜேந்திரன், நடராஜா காண்டீபன் ஆகியோர் பொலிஸாருடன் கதைத்து தாக்குதலுக்கு உட்பட்டவர்களை உடனடியாக பார்வையிட்டு அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் பின்னர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாவது. பொலிஸார் அந்த வேனிலிருந்த ஆண்களிற்கு மிக மோசமாக அடித்து கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உட்பட வேனினிலிருந்த பெண்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து சென்று வந்து மிலேச்சத்தனமான விதத்தில் தாக்கியுள்ளதுடன் கடும் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். சம்பவம் இடம்பெற்றவேளை தான் அந்த இடத்தில் இருக்கவில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து மிலேச்சதனமாக தாக்கியுள்ளனர் என அவர் எங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார். பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என அவர் எம்மிடம் தெரிவித்தார். ஆனால் அடிபட்ட பிரதேசத்தில் உள்ள நிலைமைகளை பார்க்கின்ற போது சி.சி.ரி.வி. ஊடாக நடந்த முழு சம்பவத்தையும் அறிவதற்கான வாய்ப்புள்ளது என அங்குள்ள மக்களின் கருத்துக்களின் மூலம் நாங்கள் அறிய முடிகின்றது. இந்த சம்பவமானது எமக்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்ற விடயம் என்னவென்றால் வடக்கு, கிழக்கிற்கு உள்ளே பொலிஸார் என்ற பெயரில் அனுப்பப்படுகின்றவர்கள் காடையர்களாக செயற்படுவதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது. உண்மையிலேயே இது பொதுப்பிரச்சினை. தெற்கிலே விதிமுறைகளை மீறி செயற்படுகின்ற பொலிஸார் தண்டனைக்காக வடக்கு பகுதிக்கு இடமாற்றப்படுகின்ற நிலைமைதான் காணப்படுகின்றது. வடகிழக்கிலே உள்ள மக்களை அரசாங்கம் ஒரு எதிரிபோன்று பார்க்கின்ற நிலையில் அவர்கள் எப்படி பிழையாக நடந்துகொண்டாலும் அதனை மூடிமறைக்கின்ற வகையில் மக்களை பாதுகாக்கின்ற வகையிலே செயற்படாமல் பொலிஸாரை பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இந்த நிலைமை தொடர்கின்றது என்பதை இந்த சம்பவம் தெளிவாக காண்பிக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/198292
  41. சின்ன வயதில் கழி ஒலியினை உருவாக்கி (மனித காதுகளால் உணர முடியாத அளவுக்கதிமான அதிர்வலைகளை) நுளம்பினை விரட்டுவதற்கு இலத்திரனியலில் உபகரணம் ஒன்றை செய்திருந்தேன் (3வோல்ட் இரண்டு பற்றரிகள்) ஆனால் நுளம்பு வழமைபோல் வந்து தொல்லைகொடுத்திருந்தது. 😁
  42. ஓயாத நிழல் யுத்தங்கள்-4 ஒக்ரோபர் மாதம் ஆரம்பித்திருக்கிறது. பனிப்போர் காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களுள் ஒன்றான கியூப ஏவுகணைப் பிணக்கு நிகழ்ந்து இந்த மாதம் 61 ஆண்டுகள் நிறைவாகிறது. இந்த முக்கிய நிகழ்வின் பின்னணியைப் பார்க்கலாம். வெளியே தெரியாத பேராபத்து பனிப்போரின் சுவாரசியமான கதைகள் சம்பவங்களுக்குப் பின்னணியில், ஒரு இருண்ட ஆபத்து எப்போதும் மறைந்திருந்தது. அணுவாயுதப் போர் தான் அந்த ஆபத்து. பனிப்போர் காலத்தில், அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் அணுவாயுதங்களை உற்பத்தி செய்து, பரிசோதித்து வந்தன. இதனோடு இணைந்து, இந்த அணுவாயுதங்களைக் காவிச் செல்லும் தொழில் நுட்பங்களையும் இரு நாடுகளும் தொடர்ந்து நவீன மயப்படுத்தி வந்தன. உலகின் முதல் அணுவாயுதம், அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் பசுபிக்கிற்கு எடுத்துச் செல்லப் பட்டு, அங்கே மீள ஒன்றிணைக்கப் பட்டு, பி 29 என்ற விசேட விமானத்தில் எடுத்துச் செல்லப் பட்டு வீசப்பட்டது. இது நடந்து 10 ஆண்டுகளில், ஏவுகணைகள் மூலம் அணுவாயுதங்களை இலக்குகள் நோக்கி அனுப்பி வைக்கும் தொழில் நுட்பத்தை இரு நாடுகளும் உருவாக்கி விட்டன. கையிருப்பில் இருக்கும் அணுவாயுதங்களின் எண்ணிக்கையை விட, இந்த ஏவுகணைத் தொழில் நுட்பம் அணுவாயுதப் போரின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக உருவாகி விட்டது. சோவியத் ஒன்றியம் கியூபாவில் நிறுத்தி வைத்த SS-4 வகை ஏவுகணை, மொஸ்கோ இராணுவ அணிவகுப்பின் போது. Medium-Range Ballistic Missile (MRBM) ஆன இதன் வீச்சு குறைந்தது 600 மைல்கள். அமெரிக்காவின் பல நகரங்கள் இந்த வீச்சினுள் அடங்கியிருந்தன. பட உதவி நன்றியுடன் ஜோன் கெனடி நினைவு நூலகம். சோவியத் ஒன்றியம் அணுவாயுதங்களை அமெரிக்கா நோக்கி ஏவுவதற்கு R-16 ரக ஏவுகணைகளை வைத்திருந்தது. திரவ எரிபொருள் மூலம் இயங்கிய இந்த ஏவுகணைகளை உடனே ஏவி விட முடியாதபடி பல மணி நேரத் தயாரிப்பு தேவையாக இருந்தது. இதற்கு எதிராக, அமெரிக்கா வைத்திருந்த அணுவாயுத தாங்கி ஏவுகணைகளில் Minuteman என்ற வகை திட எரிபொருள் மூலம் இயங்கிய உயர் தொழில் நுட்பத்தைக் கொண்டிருந்தது. இதன் பெயர் சுட்டிக் காட்டுவது போலவே, சில நிமிடங்களில் இந்த ஏவுகணையை தயாராக்கி ஏவி விடக் கூடியதாக இருந்தது. இது ஒரு பாரிய பலச்சம நிலைப் பிரச்சினையாக சோவியத் ஒன்றியத்திற்குத் தெரிந்தது. ஏனெனில், அணுவாயுதப் போரில் யார் முதலில் தாக்கி, எதிர் தரப்பின் துலங்கலைப் பூச்சியமாக்குகிறார் என்பதிலேயே வெற்றி தங்கியிருக்கிறது. 1960 களில், இந்த விடயத்தில் அமெரிக்காவின் கைகள் ஓங்கியிருந்தமையை சோவியத் ஒன்றியம் அறிந்தே இருந்தது - ஆனால், வெளிப்படையாக தங்களிடம் அதிக ஏவுகணைகள் இருப்பதாக ஒரு பிரச்சாரத்தை செய்து “Missile gap” என்றொன்று இருப்பதை அமெரிக்க நேட்டோ தரப்பை ரஷ்யர்கள் நம்ப வைத்திருந்தனர். இத்தகைய அனுகூலங்களோடு, நேட்டோ தரப்பிற்கு தங்கள் உறுப்பு நாடுகளில் அணுவாயுதம் தரித்த ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. மிக முக்கியமாக, சோவியத் அச்சுறுத்தலில் இருந்து தப்ப நேட்டோவில் இணைந்த துருக்கி, நேட்டோவின் ஏவுகணைகளை தன் நாட்டில் நிறுத்தி வைக்கவும் அனுமதித்திருந்தது. டசின் கணக்கான ஜுபிரர் (Jupiter) ஏவுகணைகள் அமெரிக்க விமானப் படையின் கட்டுப் பாட்டில் துருக்கியினுள் வைக்கப் பட்டிருந்தன. இதற்கு நிகராக, அமெரிக்காவிற்கு அருகில் மிக நெருங்கி தனது படைகளை நிறுத்தவோ, ஏவுகணைகளை வைத்திருக்கவோ சோவியத் ஒன்றியத்திற்கு வசதிகள் இருக்கவில்லை - ஆனால் 1959 இல் இந்த நிலை மாறியது! அமெரிக்கா உருவாக்கிய கியூபா கியூபா, அமெரிக்காவின் தென்கிழக்குக் கரையிலிருந்து 90 மைல்கள் தொலைவிலிருக்கும் ஒரு தீவுக் கூட்டம். இன்று 11 மில்லியனுக்கும் அதிக மக்கள் கொண்ட, கரீபியன் தீவுகளில் இரண்டாவது பெரிய சனத்தொகை கொண்ட நாடு கியூபா. 1902 இல் கியூபா உருவான போது, அங்கே சோசலிசம், கம்யூனிசம் இருக்கவில்லை. உண்மையில், ஸ்பெயினின் காலனி ஆட்சியிலிருந்து கியூபா விடுதலை பெற, காலனி எதிர்ப்பாளராக அன்று திகழ்ந்த அமெரிக்கா உதவி புரிந்தது. இதனால், அமெரிக்காவின் இராணுவத் தளங்களை அமைக்கவும், அமெரிக்க தொழிலதிபர்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவும் கியூபாவில் முன்னுரிமை கிடைத்தது. கரும்புச் செய்கையும், அதிலிருந்து கிடைக்கும் சீனியும் தான் கியூபாவின் பிரதான உற்பத்திப் பொருட்கள். 1950 களில் fபுல்ஜென்சியோ பரிஸ்ராவின் தலைமையில், கியூபா ஊழலும், அடக்கு முறைகளும் மலிந்த தேசமாக அமெரிக்காவின் ஆதரவுடன் திகழ்ந்த காலத்தில் தான் fபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோரின் தலைமையில் ஆட்சி மாற்ற முயற்சி புரட்சியாக துளிர் விட்டது. ஒரு கட்டத்தில், பரிஸ்ராவின் ஊழலை அமெரிக்காவினால் கூட பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், அமெரிக்க ஆதரவு நீங்கி விட, பரிஸ்ராவின் ஆட்சி வீழ்ந்து காஸ்ட்ரோவின் புரட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தனர் - இது நிகழ்ந்தது 1959 இல். கம்யூனிச கியூபா ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ உடனடியாக கம்யூனிச நாடாக கியூபாவை மாற்றவில்லை. அமெரிக்கா வழமை போல தன் நலன்களைப் பேண இடம் இருந்தது. ஒரு கட்டத்தில், நியூ யோர்க் நகருக்கு காஸ்ட்றோ விஜயம் செய்து பலமான மக்கள் வரவேற்பைப் பெற்ற நிலை கூட இருந்தது. ஆனால், அமெரிக்காவின் சி.ஐ.ஏ மத்திய அமெரிக்காவில் செயல்படுத்தியது போல, கியூபாவின் ஆட்சியை முற்றிலும் தம் சார்பாக மாற்றும் முயற்சிகளை எடுத்து, 1961 இல் ஒரு இரகசிய இராணுவ நடவடிக்கையைக் கூட எடுத்திருந்தது. இதனை அவதானித்த சோவியத் ஒன்றியம், காஸ்ட்ரோவை தன் பக்கம் அணைத்துக் கொண்டது. 1962 இல், காஸ்ட்ரோ தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக (அதுவும் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட்டாக) பகிரங்கமாக அறிவித்தார். ஒரு படி மேலே சென்று, கியூபாவில் இருந்த அமெரிக்க கம்பனிகளை அரசுடமையாக்கிய அறிவிப்பும் வெளிவந்தது. அமெரிக்கா பதிலுக்கு, கியூபாவின் சீனி உட்பட்ட ஏற்றுமதிகளைத் தடை செய்து, கியூப பொருளாதாரம் வீழ்ச்சியடைய வைத்தது. ஜோன் கெனடியும் நிகிரா குருசேவும் இந்த வேளையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இளையவர் கெனடி இருந்தார். சோவியத் தலைவராக இருந்த நிகிரா குருசேவ் அனுபவசாலி, படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னேறி மேலே வந்த பழுத்த அரசியல் வாதி. இந்த அனுபவ அசம நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தான் குருசேவ் கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை நிறுத்தி வைக்கும் திட்டத்தை முடுக்கி விட்டார். வெளிப்படையாக கெனடியுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய குருசேவ், ஜேர்மனியின் பெர்லின் நகர் முழுவதையும் சோவியத் தரப்பிடம் விட்டு விடும் படி அழுத்தம் கொடுத்தார். அமெரிக்காவின் இராணுவ தலைமையோ, பெர்லினில் இருந்து ஒரு அங்குலம் கூட நேட்டோ அணி பின்வாங்கக் கூடாது என்று கெனடிக்கு ஆலோசனை கொடுத்திருந்தது. கெனடியும் இதை விட்டுக் கொடுக்காமல் இருந்த நிலையில், ஒரு அழுத்தமாகத் தான், கியூபாவிற்கு சோவியத் ஏவுகணைகள் நகர்த்தப் பட்டன. கடத்தி வரப்பட்ட சோவியத் ஏவுகணைகள் கியூபாவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்குமிடையே இருந்த கப்பல் போக்குவரத்தைப் பயன்படுத்தியே சோவியத் ஏவுகணைகள் பாகங்களாக கியூபாவினுள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த இரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் 1962 செப்ரெம்பர் வரை அமெரிக்க உளவுத் துறைக்குத் தெரியவரவில்லை. ஆனால், சோவியத் சாதாரண ஆயுதங்களை கியூபாவிற்கு வழங்கி வருகிறது என்பதை அமெரிக்கா அறிந்தே இருந்தது. கியூபாவின் மீது கண்காணிப்புப் பறப்புகளை மேற்கொண்ட U-2 உளவு விமானத்தின் படங்கள் தான், ஏவுகணைகளுக்கான ஏவு தளங்கள் கியூபாவில் கட்டப் படுவதை முதலில் வெளிக்கொண்டு வந்தன. கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை ஏவக்கூடிய ஏவு தளமும், வாகனங்களும். விமானத்திலிருந்து எடுக்கப் பட்ட உளவுப் படம். பட உதவி நன்றியுடன் ஜோன் கெனடி நினைவு நூலகம். இதே வேளை, அமெரிக்கா இரகசியமாக அல்லாது, நேரடியாகவே கியூபா மீது ஒரு ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆரம்பக் கட்டத்தில் இருந்த இந்த திட்டத்திற்கு நாள் குறிக்கப் பட்டிருக்கவில்லை. கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் இருப்பதை அறிந்து கொண்ட ஒக்ரோபர் 14 முதல், அடுத்த இரு வாரங்கள் வாஷிங்ரனும், கிரெம்ளினும் இந்தப் பிணக்கைச் சமாளித்த விதம் பல பாடங்களுக்கு வழி வகுத்தது எனலாம்! அமெரிக்காவின் பதில் என்ன? கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டுமென்று ஒரு தரப்பும், உடனடியாக கியூபா மீது இராணுவத் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று ஒரு தீவிரமான தரப்பும் கெனடிக்கு ஆலோசனை வழங்கின. கெனடியோ, மூன்றாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்: கியூபாவைச் சுற்றி கடல்வழிப் போக்குவரத்திற்கு ஒரு தடையை (quarantine) உருவாக்கி, மேலதிக ஏவுகணைப் பாகங்கள் வராமல் தடுப்பதே அந்த மூன்றாவது வழி. இந்தத் தடை மூலம், கியூபாவை நோக்கி வரும் சகல சோவியத் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை பரிசோதிக்க வேண்டும். சோவியத் ஒன்றியம், தான் அனுப்பிய சில கப்பல்களை பரிசோதிக்க அனுமதிக்காமலே பயணத்தை இடை நடுவில் கைவிட்டு திரும்புப் படி செய்தது. ஆனால், ஏற்கனவே கியூபா வந்து விட்ட ஏவுகணைகளை அகற்ற ரஷ்யர்கள் மறுத்தனர். ஒரு கட்டத்தில், அமெரிக்காவின் U-2 உளவு விமானம் கியூபாவின் வான்பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப் பட்டது. இறுதியில், கியூபா மீதான அமெரிக்கத் தாக்குதல் தான் ஒரே தெரிவு என்ற நிலைக்கு அமெரிக்க தரப்பு வந்து விட்ட போது, குருசேவ் நிபந்தனையோடு கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்ற ஒப்புக் கொண்டார். கியூபா மீது தாக்குதல் தொடுக்கக் கூடாது, துருக்கியில் இருந்து நேட்டோவின் ஜுபிரர் ஏவுகணைகளை அகற்ற வேண்டும், ஆகியவையே குருசேவின் நிபந்தனைகளாக இருந்தன. முதல் நிபந்தனை உடனடியாக ஏற்றுக் கொள்ளப் பட்டு தாக்குதல் நடத்தப் படாதென்ற உறுதி மொழி வழங்கப் பட்டது. இரண்டாவது நிபந்தனையை அமெரிக்கா இலகுவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதைச் செய்வதானால், கியூபாவிற்கு சோவியத் வழங்கிய குண்டு வீச்சு விமானங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்ற அமெரிக்காவின் பதில் நிபந்தனையை சோவியத் ஒன்றியம் ஏற்றுக் கொண்டது. ஒக்ரோபர் 27, 1962 இல் கியூப ஏவுகணைப் பிணக்கு முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் கடல் போக்கு வரத்துத் தடை நவம்பரில் விலக்கப் பட்டது. சோவியத் ஏவுகணைகளையும், குண்டு வீச்சு விமானங்களையும் கியூபாவிலிருந்து அகற்றிய பின்னர், 1963 மத்தியில் நேட்டோ துருக்கியில் இருந்து தனது ஏவுகணைகளை விலக்கிக் கொண்டது. உலகம், தனது வழமையான பதற்றமற்ற பார்வையாளர் பணியைச் செய்ய ஆரம்பித்தது. பாடங்களும் விளைவுகளும் அணுவாயுதப் போர் விளிம்பு நிலைக்குக் கொண்டு சென்ற கியூப பிரச்சினையில், இரு தலைவர்களும் நடந்து கொண்ட முறை, வெளிக்காட்டிய பொறுப்புணர்வு என்பன அவதானிகளால் பாராட்டப் படுகின்றன. சில ஆண்டுகளின் பின்னர் தனது பின்வாங்கும் முடிவைப் பற்றிக் கருத்துரைத்த குருசேவ் இப்படிச் சொல்கிறார்: "உலக அழிவு பற்றிய அச்சம் எங்கள் பின்வாங்கும் முடிவிற்கு முக்கியமான காரணம். இன்றைய உலகின் ஒரு குறைபாடு, யாரும் அழிவைப் பற்றி அச்சம் கொள்வதில்லை!". கியூபப் பிணக்கின் விளைவாக பல நல்ல மாற்றங்கள், அமெரிக்க சோவியத் தலைமைகளின் தொடர்பாடலில் ஏற்பட்டன. புதிதாக வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்குமிடையேயான நேரடி தொலைபேசி இணைப்பொன்றும் (hot line) இதன் பின்னர் உருவாக்கப் பட்டது. மட்டுப் படுத்தப் பட்ட அளவில், ஒருவரது அணுவாயுதப் பரிசோதனையை எதிரணி கண்காணிக்கும் ஏற்பாடுகளும் உருவாக்கப் பட்டன. கியூபாவிற்கு என்ன நிகழ்ந்தது? கியூபா தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் பொருளாதாரம் சிதைந்த, கறுப்புச் சந்தை மூலம் மக்கள் வாழ்க்கையை நகர்த்தும் ஒரு கம்யூனிச தேசமாகத் தொடர்கிறது. அமெரிக்க பொருளாதாரத் தடையினால் கியூபா இழந்த வருமானத்தை, சோவியத் ஒன்றியத்தின் உதவிகளால் முழுமையாக ஈடு கட்ட இயலவில்லை. 1990 வரை, கியூபாவிற்கு சோவியத் ஒன்றியம் பொருளாதார உதவிகளை வழங்கி வந்தது. 1991 இல், கொர்பச்சேவின் ஆட்சியில் சோவியத் ஒன்றியம் பாரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. மேற்கிடம் கடனும், உதவிகளும் பெற்று ரஷ்யர்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலைக்கு சோவியத் ஒன்றியம் இறங்கியது. இந்த உதவிகளுக்கு மேற்கு அணி விதித்த பல நிபந்தனைகளுக்கு சோவியத் குழு கட்டுப் பட வேண்டியிருந்தது. அவற்றுள் ஒரு நிபந்தனை, சோவியத்தின் ஆதரவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நஜிபுல்லா அரசு, கியூபாவின் காஸ்ட்ரோ அரசு ஆகியவற்றிற்கான நிதியுதவிகளை நிறுத்த வேண்டும் என்பதாகும். மேற்கு எதிர்பார்த்ததை விட இலகுவாக இந்த நிபந்தனைகளை கொர்பச்சேவ் குழு ஏற்றுக் கொண்டது. இரு நாடுகளுக்குமான சில பில்லியன் ரூபிள்கள் உதவியை சோவியத் ஒன்றியம் நிறுத்திக் கொண்டது. அடுத்த 6 மாதங்களில் காபூலின் நஜிபுல்லா அரசு வீழ்ந்தது. கியூபா, இன்னும் தப்பியிருக்கிறது. - தொடரும்
  43. ஓயாத நிழல் யுத்தங்கள் - 3 பனிப்போரின் முக்கிய திருப்பு முனைச் சம்பவங்களைப் பற்றிப் பேசும் இந்தத் தொடரில், கொரியப் போர், பெர்லின் சுவர் என்பன பற்றிப் பார்த்தோம். இத்தகைய முக்கிய நிகழ்வுகளுக்கு மேலதிகமாக, பனிப்போரின் முக்கிய அம்சமாக விளங்கிய ஒரு அம்சம், வல்லரசுகளுக்கிடையேயான உளவுப் போர். இத்தகைய உளவுப் போரின் சாட்சிகளாக விளங்கிய பலர் பின்னாட்களில் சிறந்த நாவலாசிரியர்களாக உருவாகி, அந்த உளவுப் போரின் உள்ளடக்கங்களை வாசகர்களுக்கு வழங்கினர். உளவுப் போர் 1991 இல் முடிவுக்கு வந்த கம்யூனிச, மேற்கு தேசங்களிடையேயான பனிப்போர் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆரம்பித்ததாகச் சுட்டிக் காட்ட முடியாது. அந்தளவுக்கு பல்வேறு நிகழ்வுகளில், பரிணாமங்களில் பனிப்போர் நிகழ்வுகள் அடங்கியிருந்தன. ஆனால், உளவு நடவடிக்கைகள் தான், சோவியத்திற்கும், மேற்கின் தலைமை நாடான அமெரிக்காவிற்கும் இடையே முதலில் பனிப்போரின் அடையாளமாக ஆரம்பித்தன. அமெரிக்க அணுவாயுத நுட்பத்தை உளவு மூலம் கவர்ந்த சோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் தலைமை அணுவாயுத விஞ்ஞானி ஒப்பன்ஹிமரின் வரலாறு திரைப்படமாக வெளிவந்திருக்கும் இக்காலப் பகுதியில் இதைப் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்கும். அமெரிக்காவின் அணுவாயுத தயாரிப்பு முயற்சி என்பது மிக இரகசியமாகப் பேணப்பட்ட ஒரு முயற்சி. ஜனாதிபதியாக றூஸவெல்ட் இருந்த போது ஆரம்பிக்கப் பட்ட இந்த முயற்சி பற்றி, றூஸவெல்ட் இறந்து தான் பதவிக்கு வரும் வரை துணை ஜனாதிபதியாக இருந்த ட்ரூமனுக்கே தெரியாமல் தான் இருந்திருக்கிறது. ஆனால், மன்ஹற்றன் திட்டம் நடந்து கொண்டிருந்த போதே, சோவியத் ஒன்றியம் ஒன்றுக்கு மேற்பட்ட தங்கள் உளவாளிகளை விஞ்ஞானிகளாக இந்த திட்டத்தினுள் விதைத்து விடும் அளவுக்கு, சோவியத் ஒன்றியத்தின் உளவு வலைப் பின்னல் மேற்கில் பலமாக இருந்திருக்கிறது. 2019 வரையான ஆய்வுகளின் படி, குறைந்தது 5 பேர், அணுவாயுத ஆய்வுத் திட்டத்தில் வேலை செய்தோர், சோவியத் உளவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். கிளாஸ் fபுக்ஸ்: லாஸ் அலாமோசில் பணியாற்றிய சோவியத் உளவாளிகளுள், வெற்றிகரமாக மொஸ்கோவிற்கு அமெரிக்க அணுவாயுத இரகசியங்களைக் கடத்திய ஒருவர். சோவியத் விஞ்ஞானிகளின் திறமையுடன், fபுக்ஸ் வழங்கிய அணுவாயுத இரகசியங்களும் 1949 இல் முதல் அணுவாயுதத்தை சோவியத் ஒன்றியம் பரீட்சிக்க உதவியது. பட உதவி நன்றியுடன்: லொஸ் அலாமொஸ் தேசிய ஆய்வுகூட ஆவணம். இவர்களுள், அணுவாயுத வடிவமைப்பு தொடர்பான இரகசியங்களை வெற்றிகரமாக மொஸ்கோவிற்குக் கடத்தியவராக கிளாஸ் fபுக்ஸ் (Claus Fuchs) இருந்தார். லாஸ் அலமோசில் இருந்த அணுவாயுத ஆய்வுகூடத்தில் இருந்த 5 சோவியத் உளவாளிகளில், fபுக்ஸ் மட்டும் தான், அணுவாயுதத்தின் சகல தகவல்களும் தெரிந்த பௌதீகவியலாளராக இருந்தார். இதனால், 1950 இல் சோவியத் ஒன்றியம் முதலில் பரீட்சித்த தனது அணுவாயுதம் பல விடயங்களில் அமெரிக்கா 1945 இல் நாகசாகி மீது வீசிய புளூட்டோனியம் குண்டு போலவே இருந்தது. இந்த சோவியத் உளவாளிகள் எல்லோருமே தண்டனை அனுபவிக்கவில்லை. 1950 இல் அமெரிக்க உளவு அமைப்பின் நடவடிக்கையினால் இந்த 5 பேரில் 4 பேர்கள் அடையாளம் காணப்பட்டனர். கிளாஸ் fபுக்ஸ், பிரிட்டனில் குற்றத்தை ஒப்புக் கொண்டு 10 ஆண்டுகள் சிறை சென்றார், சிறையிலிருந்து மீண்டதும் கிழக்கு ஜேர்மனி சென்று அங்கே ஒரு நல்ல பதவியில் நீடித்தார். இந்த சோவியத் உளவாளிகளுள் மிக இளையவரான தியோடர் ஹால், தண்டிக்கப்படாமலே தன் வாழ்வைத் தொடர்ந்தார். இருவர் மரண தண்டனை பெற்றனர். இன்றும் கூட ரஷ்ய, சீன அரசுகளுக்கு உளவாளிகளாக செயல்படும் அமெரிக்க பிரஜைகள், இராணுவத்தில் பணியாற்றுவோர் சிலர் ஒவ்வொரு வருடமும் கண்டறியப் பட்டுக் கைது செய்யப் படுகின்றனர். அனேகமாக பணத்திற்காக இவர்கள் உளவு வேலையில் ஈடுபடுகின்றனர். ஆனால், கிளாஸ் fபுக்ஸ், தியோடர் ஹால் போன்ற அக்கால உளவாளிகள், மனப்பூர்வமாக சோவியத் நாட்டின் கம்யூனிச கோட்பாடுகளை ஆதரித்து உளவாளிகளாக மாறினர் என்றே விசாரணைகளில் தெரிய வந்தது. பிரிட்டனின் உளவு அமைப்பை ஆழ ஊடுருவிய சோவியத் உளவாளிகள் பனிப்போர் கால உளவுப் போரில், அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்கள் திருடப் பட்டது கூட ஒரு அதிர்ச்சி தரும் நிகழ்வல்ல. இதை விட ஆச்சரியமான உளவுப் போர்முனை பிரிட்டனிலும், ஐரோப்பிய நிலப்பரப்பிலும் 1980 கள் வரை நிலைத்திருந்தது. இதில், பிரிட்டனின் எம்.ஐ 6 (MI6) என்ற இராணுவப் புனலாய்வுப் பிரிவினுள், ஹரோல்ட் கிம் fபில்பி (Harold “Kim” Philby) என்ற சோவியத் உளவாளி நீண்டகாலமாகப் பணியாற்றிய சம்பவம் இன்றும் திரைப்படங்களாகவும், நூல்களாகவும் வலம் வருகிறது. “சோவியத்தின் கம்யூனிச சித்தாந்தம், மேற்கின் இலாப நோக்க சித்தாந்தங்களை விட உலகிற்கு நல்லது” என்ற எண்ணத்தில் இருந்த fபில்பி உட்பட்ட கேம்பிரிட்ஜ் பட்டதாரிகள் ஐவர் (இவர்களை The Cambridge 5 என்பர்)- பிரிட்டனின் பல்வேறு இரகசிய திட்டங்களிலும் அரச ஊழியர்களாக இணைந்து சோவியத்தின் கே.ஜி.பி அமைப்பிற்கு தகவல்களை வழங்கும் உளவாளிகளாக நீண்ட காலம் வேலை செய்தனர். இந்த ஐவரில், மூவர் அமெரிக்காவிலும் பிரிட்டன் சார்பில் பணியாற்றியதால், ஏராளமான சோவியத் எதிர் (counterintelligence) நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் சோவியத் ஒன்றியத்திற்கு முன்கூட்டியே தெரியவந்தன. இவ்வாறு 20 வருடங்கள் தொடர்ந்த கேம்பிரிட்ஜ் ஐவரின் உளவு வேலை 1951 இல் அமெரிக்க புலநாய்வு அமைப்புகள், கே.ஜி.பியினுள் ஊடுருவிப் பெற்ற உளவுத் தகவல்களோடு முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த ஐவரினதும் தலைவர் என்று கருதப் பட்ட கிம் fபில்பி, 1963 வரை தப்பியிருந்து உளவுப் பணியைச் செய்த பின்னர், மொஸ்கோவிற்குத் தப்பிச் சென்று அங்கே 1988 வரை வாழ்ந்தார். கிம் fபில்பியின் உளவுப் பணிகளுக்காக, சோவியத் ஒன்றியம், மாதாந்த ஓய்வூதியமும் வழங்கி 90 களில் அவரை ஒரு சோவியத் ஒன்றிய தபால் முத்திரையின் மூலம் கௌரவித்தது. இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்த போது, அமெரிக்க, மேற்கு அணிகள் என்ன செய்து கொண்டிருந்தன? உளவாளிகளின் பாலம் மேற்கு நாடுகளின் உளவுப்பலம், பெரும்பாலும் சோவியத் கட்டுப் பாட்டிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளினுள், அந்த நாட்டு மக்களை வைத்தே உளவு வேலைகள் செய்வதில் இருந்தது. இந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை வார்சா ஒப்பந்த (Warsaw Pact) நாடுகள் என்ற , நேட்டோவிற்கு எதிரான அமைப்பின் கீழ் சோவியத் ஒன்றியம் ஒருங்கிணைத்திருந்தது. ஒப்பிற்கு ஒரு உள்ளூர் கட்சி கம்யூனிச ஆட்சி நடத்துவதாகக் காட்டப் படும், ஆனால் பின்னரங்கில் சோவியத்தின் கே.ஜி.பி ஏஜென்டுகளும், செம்படையின் தாங்கிகளும் குவிக்கப் பட்டிருக்கும் (இப்படியான ஒரு கே.ஜி.பி ஓற்றராக கிழக்கு ஜேர்மனியின் ட்றெஸ்டன் நகரில் சில ஆண்டுகள் பணியாற்றியவர் தான் தற்போதைய ரஷ்ய ஜனாதிபதி புரின்). இந்த நிலையில், மேற்கின் ஒரே கவலை, எப்போது சோவியத் ஒன்றியம், கிழக்கில் இருந்து தன் தாங்கிகள் சகிதம் மேற்கினை நோக்கிப் பாயும் என்பதாக இருந்தது. இதனைச் சமாளிக்க, ஏராளமான மேற்கின் உளவாளிகள் வார்சா ஒப்பந்த நாடுகளில் தங்கி வேலை செய்தார்கள். மேற்கு கிழக்கு ஜேர்மனிகளிடையே, பெர்லின் நகரில் சுவர் இருந்தாலும், இரு பகுதியின் ஆயுதப் படையினரும் முன்னரே அறிவித்து விட்டு நுழையும் ஏற்பாடு இருந்தது. இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி, சோவியத் அணியும், மேற்கின் பக்கமிருந்து அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளும் விசேட வாகனங்களில் உத்தியோக பூர்வமான பயணங்களை மேற்கொண்டு உளவுப் பணிகளிலும் ஈடுபடுவது ஒரு திறந்த இரகசியமாக இருந்தது. மேற்கின் அணிகள், சோவியத் புதிதாக உருவாக்கிய ரி- 80 (T-80) தாங்கியை இப்படியான ஒரு உளவுப் பயணத்தின் போது தான் முதன் முதலில் படம் பிடித்து வாஷிங்ரனை எச்சரிக்க உதவின. சில சந்தர்ப்பங்களில் இந்த அணிகள் பிடிபடுவதும், மிக அரிதாகக் கொல்லப் பட்டதும் கூட நிகழ்ந்திருக்கிறது. அவ்வாறு ஒரு தரப்பினால் கைதாகும் உளவாளிகளை, கைதிகள் பரிமாற்றம் மூலம் பரிமாறிக் கொள்ளும் நடைமுறையும் இருந்திருக்கிறது. பெர்லினில், ஹவெல் நதியின் மேலாக, மேற்கு, கிழக்கு பெர்லின்களை இணைக்கும் கிளைனிக் (Glienicke) பாலத்தில் அனேகமான இந்தக் கைதிகள் பரிமாற்றங்கள் நிகழ்ந்தமையால், அந்தப் பாலத்திற்கு "உளவாளிகள் பாலம்" (Bridge of Spies) என்றும் ஒரு பெயர் உருவானது. இப்படி சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்குமிடையே இப்பாலத்தினூடாகப் பரிமாறப்பட்ட ஒரு முக்கிய நபராக கேரி பவர்ஸ் (Gary Powers) என்ற அமெரிக்கர் விளங்குகிறார். 70,000 அடிகள் உயரத்திலிருந்து உளவு "தும்பி" என்று அழைக்கப் பட்ட யூ- 2 உளவு விமானத்தின் ஒரு தோற்றம். 70,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடிய இந்த உளவு விமானம் இன்று யூ 2 சி எனும் நவீன வடிவத்தில் பாவனையில் இருக்கிறது. பட உதவி, நன்றியுடன்: அமெரிக்க தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகம், வாசிங்ரன் டி.சி. கப்ரன் கெரி பவர்ஸ் பிரபலமாவதற்கு, அவர் செலுத்திய விமானம் தான் காரணம். பனிப்போரின் உச்சத்தில், 1956 ஜூலை 4 ஆம் திகதி, அமெரிக்க விமானப் படை முதன் முதலாக ஒரு புது வகை விமானத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தது. யூ 2 (U-2) என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் மிகவும் இரகசியமான திட்டம் மூலமாக , லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் வடிமைக்கப் பட்ட ஒரு உளவு விமானம். சாதாரண பயணிகள், மற்றும் சரக்கு விமானங்கள் 35,000 அடிகள் உயரத்தில் பறப்பவை. பி- 29 (B-29) வகையான, அமெரிக்காவின் அணுகுண்டு காவும் விமானங்கள் (Strategic bombers) 50,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடியவை. இந்த யூ 2 உளவு விமானம், 70,000 அடிகள் உயரத்தில், ரேடார்களின் கண்ணில் படாமல் பறக்கக் கூடியவையாக வடிவமைக்கப் பட்டிருந்தது. 60 அடிகள் நீளமான, 80 அடிகள் இறக்கை விஸ்தாரம் கொண்ட யூ 2 விமானத்தை "தும்பி" (Dragonfly) என்று செல்லமாக அழைப்பர். யூ 2 உளவு விமானத்தின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் சக்தி வாய்ந்த ஒளிப்படக் கமெராக்கள். 1959 இல், இக் கமெராக்கள் பிடித்த படங்கள், தற்போதைய கூகிள் ஏர்த் படங்களை விட துல்லியம் கூடியவையாக இருந்ததாக ஒரு ஆய்வு அண்மையில் உறுதி செய்திருந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகம், வாசிங்ரன் டி.சி. 70,000 அடிகள் உயரத்தில் ஒட்சிசனின் செறிவு குறைவு, எனவே இந்த விமானத்தை இயக்கும் ஒற்றை விமானி, ஒட்சிசனை சிலின்டரில் இருந்து சுவாசித்த படி விமானத்தைச் செலுத்த வேண்டும். விமானத்தின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் சக்தி மிக்க கமெராக்கள் மூலம் கீழே இருக்கும் கட்டமைப்புகள், ஏவுகணைத் தளங்கள் என்பன படம் பிடிக்கப் பட்டு சேகரிக்கப் படும். இத்தகைய இரகசியம் நிறைந்த யூ 2 விமானத்தை சி.ஐ.ஏ யின் கீழ் பணியாற்றிய கப்ரன் கெரி பவர்ஸ் மே மாதம் முதலாம் திகதி, 1960 இல் பாகிஸ்தானின் ஒரு அமெரிக்க தளத்திலிருந்து எடுத்துக் கொண்டு வட மேற்காக சோவியத் நிலப்பரப்பின் மீது பறக்க ஆரம்பித்தார். சோவியத்தின் பிரதான நிலப்பரப்பின் மீது 2900 மைல்கள் பறந்து, உளவுப் படங்கள் எடுத்த பின்னர் ஆர்கேஞ்சல் எனும் வட சோவியத் நகரூடாகக் கடந்து நோர்வேயில் தரையிறங்குவதே நோக்கமாக இருந்தது. ஆனால், யூரல் மலைப்பிரதேசத்தின் மீது வைத்து, விமானத்தின் ஒட்சிசன் வினியோகத்தில் கோளாறு ஏற்படவே, விமானத்தை 70,000 அடிகள் உயரத்திலிருந்து 35,000 அடிகளுக்கு இறக்க வேண்டிய நிலை கெரி பவர்ஸுக்கு ஏற்படுகிறது. இது கூட சோவியத் ஏவுகணைகளுக்கு எட்ட முடியாத உயரம் என்றே அமெரிக்கா நினைத்திருந்தது, ஆனால் ஒரு புதிய வகை ஏவுகணை மூலம் கெரி பவர்ஸின் யூ 2 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது, கெரி பவர்ஸ் பரசூட் மூலம் பாய்ந்து உயிர் தப்பி, சோவியத் ஒன்றியத்திடம் கைதியானார். முதலில் கப்ரன் பவர்ஸ் உயிரிழந்து விட்டார் என்று அமெரிக்கா செய்திக் குறிப்பை தயாரித்துக் கொண்டிருந்த போதே, அவர் உயிரோடிருப்பதை சோவியத் ஒன்றியம் வெளிப்படுத்தியது. அத்தோடு, அமெரிக்காவின் இரகசிய யூ 2 விமானத்தின் சிதைவுகளையும் சோவியத் பாதுகாப்புப் பிரிவு கைப்பற்றி ஆராய ஆரம்பித்தது. இந்த யூ 2 விமான விபத்தின் பிரதான விளைவாக, பாரிசில் நடக்கவிருந்த மேற்கு சோவியத் அணுவாயுதப் போட்டி தொடர்பான மாநாடு ரத்துச் செய்யப் பட்டது. 2 வருடங்கள் உளவுக் குற்றச் சாட்டில் சோவியத் சிறையில் அடைக்கப் பட்ட கெரி பவர்ஸ், 1962 இல் உளவாளிகள் பாலத்தின் வழியாக ஒரு சோவியத் உளவாளியோடு கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப் பட்டார். இந்த நிகழ்வுகளால் சோவியத் ஒன்றியம், அமெரிக்காவின் உளவுப் பறப்புகள் பற்றி அறிந்து கொண்டாலும், யூ 2 விமானத்தின் பயன்பாட்டை அமெரிக்கா நிறுத்தவில்லை. இரு ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் இருக்கும் கியூபாவில் சோவியத் ஒன்றியம் அணுவாயுத ஏவுகணைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த ஏவுகணைக் கட்டுமானங்களை உளவுப் பறப்பினால் படம் பிடித்து வெளிக்கொணர்ந்தது இதே யூ 2 விமானங்கள் தான். இதனால் விளைந்த கியூப ஏவுகணைப் பிணக்கை இன்னொரு பதிவில் பார்ப்போம். இன்றும் அமெரிக்கா டசின் கணக்கான யூ 2 உளவு விமானங்களைப் பாவனையில் வைத்திருக்கிறது. புதிய தொழில் நுட்பங்களைப் பரீட்சிக்க இந்த விமானங்கள் பயன்படுகின்றன. ஆனால், செய்மதித் தொழில்நுட்பங்கள் இப்போது விருத்தியடைந்திருப்பதால், எந்தக் கட்டுப் பாடுமின்றி பறப்பு மூலமான (overflight) உளவு பல நாடுகளுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. உளவுத் தொழிலைப் பிரபலமாக்கிய பனிப்போர் உளவுப் போரின் பல்வேறு பரிமாணங்களை நூல்களாகவும், திரைக்காவியங்களாகவும் படைத்து, பனிப்போரின் போதான உளவு நடவடிக்கைகள் திரில் நிறைந்தவையாக மக்கள் மத்தியில் பிரபலமாக்கப் பட்டிருக்கின்றன. இவற்றுள் சில படைப்புகள் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானவை, எனவே வரலாற்றை சுவாரசியமாக வாசிக்க/பார்க்க விரும்புவோருக்கு இந்தப் புனைவுகள் கூட நல்ல வரலாற்றுத் தகவல் மூலங்களாக இருக்கின்றன. John Le Carre எழுதிய “Tinker, Tailor, Soldier, Spy” என்ற நாவல் - இது திரைப்படமாகவும் வந்திருக்கிறது - கிம் fபில்பி சம்பந்தப் பட்ட சம்பவங்களின் அடிப்படையிலானது. ஸ்ரிவன் ஸ்பீல்பேர்க்கின், “Bridge of Spies” என்ற திரைப்படமும் சில உண்மை சம்பவங்களின் ஒரு நாடகபாணி விபரிப்பு. இது போன்ற நூல்கள், திரைப்படங்கள் மூலம், “நாட்டிற்காக உளவு வேலையில் ஈடுபடுவது ஒரு த்ரில்லிங்கான நல்ல செயல்” என்ற முன்மாதிரி மேற்கு நாடுகளில் தொடர்ந்து விதைக்கப் பட்டு வருகிறது. இது, முடிந்து போன பனிப்போரின் ஒரு எச்சம்! -தொடரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.