Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்26Points88827Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்16Points33372Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்14Points3127Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்12Points39346Posts
Popular Content
Showing content with the highest reputation on 11/14/24 in Posts
-
பூச்சிய மாற்றம்
12 pointsபூச்சிய மாற்றம் --------------------------- வீட்டுக் கதவினூடு வெளியேறியதும் இன்னொரு நாடு வருகின்றது எத்தனை தடவைகள் கதவைத் திறந்து நான் போய் வந்தாலும் அது பழக்கமில்லாத இடமாகவே இருக்கின்றது அதனூடு என் நாட்டிற்கு போய் என்னவர்களுடன் நான் வட்டமாக இருக்கின்றேன் விளையாடுகின்றேன் சிரிக்கின்றேன் சில வேளைகளில் நாங்கள் சேர்ந்து அழுவதும் உண்டு மீண்டும் அதே பாதையில் அந்த நாட்டை கடந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்ததும் இது தான் என் இடம் என்று மீண்டும் நிமிர்கின்றேன் வீட்டினுள் இருந்து மாற்றம் ஒன்றே மாறாதது மாறுங்கள் மாறுங்கள் என்று எழுதிக் குவிக்கின்றேன் என் எழுத்து கூட அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை.12 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
4 pointsவெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம்4 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
4 pointsதமிழன் ஈழத்தில் இருக்கும் வரை தமிழ் தேசியம் தொடரும் ....தேர்தலுக்கு தமிழ் தேசியம் தேவையின்றி போகலாம் .... தமிழ் தேசியம் ஓர் அடையாளம் ....4 points
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள பிரபல அரசியல் ஆய்வாளர்களே கணிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் நிலையில்... கந்தப்பு அவர்களால் மிக நுணுக்கமாக தயாரிக்கப் பட்ட 60 கேள்விகளுக்கு... யாழ்.கள வாசகர்களாகிய நாமும் சளைத்தவர்கள் இல்லை என்று துணிந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த.... @வாத்தியார், @Kandiah57, @vasee, @சுவைப்பிரியன், @தமிழ் சிறி, @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலவர், @Ahasthiyan, @ஈழப்பிரியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @goshan_che, @nunavilan, @villavan, @putthan, @தமிழன்பன், @வாதவூரான், @நிழலி, @பிரபா, @வாலி, @நிலாமதி, @ரசோதரன், @குமாரசாமி, @Sasi_varnam ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள், ❤️ இந்தப் போட்டியை நடத்தி தரும்படி... கந்தப்பு அவர்களிடம் கேட்ட போது, மறுப்பேதும் சொல்லாமல்... குறுகிய காலத்தில் கேள்விக் கொத்தை தயாரித்து போட்டியை நடத்திக் கொண்டிருக்கும் கந்தப்பு அவர்களுக்கும் விசேட நன்றிகள். 🙏4 points
-
"சிரிக்க மட்டும் ..."
3 points"சிரிக்க மட்டும் " *தேர்தலுக்கு முன்பு.* *தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம். *மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..? *தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம். *மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...? *தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.. *மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...? *தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை. *மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..? *தலைவர்* : நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்.! *மக்கள்* : ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா..? *தலைவர்* : உங்களுக்கென்ன பைத்தியமா...அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை... *மக்கள்* : உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா..? *தலைவர்* : ஆம்.. *மக்கள்* : நீங்கள் தான் எங்கள் தலைவர். ( தேர்ந்தெடுக்கப்பட்டதின் பிறகு...) மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்.. சிரிக்க மட்டும் ...3 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
3 pointsஇதை பற்றி இனி புலம்பெயர்ந்த நாங்கள் கதைப்பது அழகல்ல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் அதற்கு இணங்க மக்கள் வாழட்டும் நான் பிறந்த வீட்டில், அதன் சூழலில் சிங்களம் படித்த தமிழ் பட்டதாரிகள் பலரும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இல்லாத அறிவா எங்களிடம் இருக்கின்றது . அங்கிருக்கும் மக்கள் தயார் நாங்கள் தான் இன்னும் எதோ ஒன்றுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றோம்3 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
3 pointsசனம் இவங்களில இருந்த கடுப்பை அவங்களுக்கு வாக்களிச்சு தீர்த்துப்போட்டுது! நம்மட தோஸ்து ஒன்று அவங்கட பொக்கற் மீற்றிங்கில போய்ச் சொன்னது சரியாப் போச்சே! நீங்கள் வாக்கு கேட்க தேவையில்லை, வேட்பாளரை அறிமுகப்படுத்துங்கோ என்று சொன்னவராம்!!3 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
3 pointsஇந்த நேரம் சிவாஜிலிங்கத்தை நினைச்சு பாக்கிறன்.. தேர்தலுக்கு காசில்லை ஆகக்குறைந்தது நூறு ரூபாய் ஆவது தாங்கோ எண்டு ஒரு பேப்பரில் சிவாஜிலிங்கத்தின் விளம்பரம் பார்த்தேன்.. தீவிர தமிழ் தேசியம் கதைக்கும் சைக்கிள் கோஸ்டியும் சரி வீட்டுக் கோஷ்டியும் சரி கிளிநொச்சி வாத்தியார் கூட்டமும் சரி அன்று அந்த தேசத்தின் புதல்வனை ஈன்ற தாயை பொறுப்பு எடுக்கவில்லை.. புலிகளால் உருவாக்கிய கூட்டமைப்பின் எம்பிக்கள் பலர் கை விட்டனர்.. சிவாஜி ஐயா மட்டுமே பொறுப்பு எடுத்தார்.. ஆனால் தேர்தல்களில் அப்போது கடுமையாக போராளிகள் பெயர் சொல்லி மீண்டும் பாராளுமன்றம் போனார்கள்.. ஏன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல பேர் திரைக்கு பின்னால் கொடுக்கும் வெளிநாட்டு கடிதங்கள் மூலம் உழைத்த காசு கொஞ்ம் இல்லை.. ஆனால் வெளிய தமிழ் தேசியம் தமிழ் மக்கள் என்று கத்துவினேம் ஆனால் சில வருடம் முன்பு ஒருவன் அவரை சிக்க வைக்க செட்டப் பண்ணி வீடியோ எடுக்கிறான்.. வெளிநாட்டு அரசியல் தஞ்ச கோரிக்கை கடிதம் கேட்டு எவ்வளவு ஐயா காசு வேண்டும் என்று.. மனுசன் ஒரு வார்த்தை சொல்லுது எனக்கு எதுக்கு காசு விசா கிடைச்சா கஸ்டப்பட்ச சனங்களுக்கு போராளிகளுக்கு உதவி செய்யுங்கோ எண்டு... நேரடியாக இவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. ஆனால் இப்பவும் நினைவிருக்கு பல மக்கள் போராட்டக் களம் நினைவேந்தல் இடங்கள் என்று அவரின் தமிழ் தேசிய பற்று அரசியலை பார்த்து வளர்ந்த ஆட்கள் நாம்.. அவர் வெல்லுறரோ தோற்கிறரோ அவர் நிற்கும் கட்சி மீதும் நிலைப்பாடுகள் வேறாக இருக்கலாம்.. இந்த இனத்திற்காக அவர் குரல் எப்போதும் இருந்திருக்கிறது… அவர் தமிழர் சார்பில் வெல்லனும்..வெண்டால் சந்தோசம்.. நல்ல மனுஷன்,பட் சேர்ந்த இடம் சரி இல்லை...😢3 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
3 pointsலூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத்திருக்குது.. ஊர் நிலவரம் தெரியாமல் நீங்கள் வேற குறுக்க மறுக்க ஓடிக்கொண்டு.. சிங்களம் படிப்பிக்கிற வாத்திமாற்ற காட்டில இனி மழைதான்.. நல்ல விசயம் அப்பிடியாவது பிரச்சினை தீரட்டும்.. இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டு அழிவையே சந்திச்ச மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நிம்மதி கிடைச்சா சந்தோசம்தான்.. எண்டாலும் தாங்க முடியலையே.. வாயப்பொத்திக்கொண்டு சத்தம் கேக்காமல் அழுவம்.. அவ்வ்வ்வ்..3 points
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
வரும் 20ம் திகதியின் பின் தற்போதுள்ள சேர்வரின் பாவனைக் கால எல்லை முடிவடைகின்றது. நாளை / நாளை மறுதினம் சேர்வர் வேலைகளைப் பார்க்கலாம் என்றிருந்தேன். தேர்தல் முடிவுகள் வரும் வரை மாற்றத்தினை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப் போடுகின்றேன். புதிய திகதி பின்னர் அறித் தருகின்றேன்.3 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
3 pointsஇப்படி நடந்தால் தமிழ்த் தேசியத்தை கிடங்கு கிண்டி புதைத்துவிட்டு குப்புறபடுத்து தூங்கவேண்டியதுதான். புலம்பெயர் புண்ணியவான்கள் சும்மா இருந்திருந்தாலே நல்லா இருந்திருக்கும். கடந்த 15 வருடங்களாக மாறிமாறி குதிரைகளுக்கு பணம்கட்டியும் மாடுகளுக்கு கொம்பு சீவியும் விட்டதன் பெறுபேறு எனக்கொள்ளலாம்.3 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
3 pointsGeneral Elections 2024: Kalutara, Postal; NPP - 29,076 SJB - 3,340 NDF - 1,528 SLPP - 1,160 SB - 613- adaderana.lk நண்பனின் பதிவு (யாழ்ப்பாணத்தில் இருந்து) . யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது, இது எமது அரசியல் களத்திற்கு பெறுமதியான பாடமாக விளங்குகிறது. தமிழ் தேசியத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அனைத்து தமிழ் தேசியவாத தலைவர்களும் இந்த முக்கிய தருணத்தை உணர்ந்து, ஒரு மன்றத்தை உருவாக்க ஒன்றிணைந்து, தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சமீபத்திய முன்னேற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தவும் நிறுவவும் ஒரு கூட்டு, அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்வோம்.3 points
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
கஜேந்திரகுமார் அவர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள். ஊழல் இவர்களிடம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், "எங்கள் கொள்கையோடு ஒரே லைனில் வருவோரோடு மட்டுமே பேசுவோம்!" என்று தேர்தலில் பதவிகள் வென்று கொண்டிருந்தால், பா.உ பதவி மட்டும் தான் கிடைக்கும். சிங்களவரோடு, வெளிநாடுகளோடு, ஏனைய தமிழ் கட்சிகளோடு பேசாமல், ஒலிவாங்கியோடு மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டிய நிலை வரும். மக்கள் இதைக் கண்டு விலகிப் போக முன்னர், சைக்கிள் காரர் கொஞ்சம் இறங்கி வர வேணும்!3 points
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
யாழ்மாவட்டத்தேர்தல் தொகுதியின் முதலாவது சின்னம் துவிச்சக்கரவண்டி என நினைக்கிறேன்.3 points
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
@ஏராளன், @சுவைப்பிரியன், @பாலபத்ர ஓணாண்டி, @தனிக்காட்டு ராஜா, @அக்னியஷ்த்ரா எல்லாரும் டக்கெண்டு போய் வாக்குப் போடுங்கோ. அங்குள்ள கள நிலைமையை எங்களுக்கும் அறியத் தந்தால் சந்தோசம்.3 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsதமிழர்களுக்கு நிறுதிட்டமான அரசியல் இல்லாததின் விளைவுகள் தான் இவை. எமது மூத்த அரசியல்வாதிகள் விட்ட தவறுகளினால் முளைத்த கோழிச்சூடன்கள்.2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsஎனக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை...அங்குள்ளவர்களுக்கு..அரசியல் வியாதிகளின் நடிப்பும் செயலும் பிடிக்கவில்லை...அதன் வெளிப்பாடெ சிங்களக்கட்சிகளின் தமிழரை தெரிவு செய்கின்றனர்...இதனை மறுக்க முடியுமா...புலம் பெயரவரின் உணர்வு முழுதாக இனம் ,மானம் ..சம்பந்தப்பட்டது...ஒரு அவதானம் ..ஊரில் போனபோது ..ஒவ்வொரு வீட்டிற்கும் போனேன்...அங்கு கண்டது அதிசயம் ...அவர்களிடம் எந்தவித எதிபார்ப்போ...ஆச்சரியமோ தென்படவில்லை..நீயும் நானும் சமந்தான் என்பதுபோல் இருந்தது..அதனை நான் வரவேற்கின்றேன்.. இங்குதான் திருப்புமுனை..அதாவ்து எம்முடைய கழிசடை அரசியல்வாதிகள் நேர்மையாக நடந்திருந்தால் ..இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsஇது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை! நண்பனின் பதிவு .. அமைதிப்படையில் சத்தியராஜ் வென்றதுமாதிரி பைத்தியரின் வெற்றி நெருங்க நெருங்க சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிசிரி என சிரித்து நாளைக்கு பைத்தியம் பிடித்தால் அவரட்டை சொல்லி ஒரு ஊசிபோட்டால் போதும் என நினைக்கிறேன். 😂2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsசைக்கிளுக்கு காற்று போச்சு பொன்னம்பலத்துக்கு மூச்சு போச்சு.2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsஉண்மை புத்தன்...வெறுப்பு அரசியல்தான் இந்த முடிவே தவிர ..உணர்வு மங்கவில்லை..என் நேரடி அனுபவம்... இந்த களத்தி பரும் பலவகையாக சொல்லலாம்... உண்மை அதுவல்ல2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsதேசிய மக்கள் சக்தி முதலாவதாக வராத முடிவுகளையும், முதலாவதாக வந்து 60 வீதத்திற்கும் குறைவான வாக்குகளை எடுத்த முடிவுகளையும்தான் இனிப் பகிரலாம் போலிருக்கு!2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsஇதில் அதிசயம் எதுவும் இல்லை. 2020 replay மாதிரி இருக்கிறது எனக்கு. அந்த நேரம் எல்லா "தீ கக்கும்" தேசியவாதிகளும் "சும்மை தூக்கு, சும்மை தூக்கு" என்று விசர்க் கூத்தாடிக் கொண்டிருக்க, இனப்படுகொலையாளியின் கட்சியைச் சேர்ந்த அங்கஜன் சத்தமே இல்லாமல் பாரிய வெற்றி பெற்றார். இப்போது இனப்படுகொலையோடு தொடர்பில்லாத NPP க்கு மக்கள் பெருவாரியாக வழங்கியிருக்கிறார்கள். தங்களுக்கு பிடரியில் செருப்படி விழுந்தது தெரியாமல் புலம்பெயர் பட்டாசு ரீம் இன்னும் சுமந்திரன் தான் காரணமென்று வாயில் எச்சில் வடிய புலம்பித் திரிகிறது😂. இனியென்ன, அடுத்த தேர்தல் 2028 ஆ? புதிசாக ஏதாவது "மேக்கப்" போட்டுக் கொண்டு இதே பட்டாசு ரீம் வரும், விசர்க்கூத்தாடும்! de javu தான்!2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsதீதும் நன்றும் பிறர் தர வாரா.. தமிழர்கள் தங்கள் தவறுகளுக்கு மற்றவர்களை கை நீட்டாமல், சுய விமர்சனங்களுடன் தங்கள் தவறுகளை என்றைக்கு ஏற்றுக்கொள்கிறார்களோ அன்றைக்குத்தான் விமோசனம்… தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர அது பிறந்து வளர்ந்த ஈழத்தில் தேய்ந்தழிந்தது.. அந்தோ பரிதாபம்..😢 நன்றி சீமான் தமிழ்நாட்டில் ஆவது அதை வாழவைத்ததுக்கு..🙏2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsஇதனை தமிழ் தேசியத்தின் முடிவுக்கான ஆரம்பம் என சிலர் விளக்க முயற்சிக்கலாம். ஆனால், இந்தத் தேர்தலில் பாரம்பரிய தமிழ்க் கட்சிகளின் சாத்தியமான அழிவு என்பது உண்மையிலேயே தமிழ்த் தேசிய முன்னெடுப்பிற்கான வரமாகும். ஏனெனில்: தமிழ் தேர்தல் அரசியல் என்பது தமிழ்த் தேசியத்துடன் பின்னிப் பிணைந்ததாக இருப்பதால், கட்சிகளின் செயற்பாட்டினை தமிழ் தேசியம் தொடர்பான பொது அர்ப்பணிப்பிற்கான குறிகாட்டியாக பல வர்ணனையாளர்கள் பார்க்கின்றனர். ஆனால், சமூகம்சார் நீரோட்டங்கள் அரசியல் செயற்பாட்டாளர்களில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, இந்த தளங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சமூகம்சார் நீரோட்டங்களில் தங்கியிருக்கின்றனர் என்பதனைப் புரிந்துகொள்வது இங்கு மிகவும் முக்கியமாகும்.2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsFB?? இவைகளை நம்பிக் கருத்துரைப்பது வில்லங்கமான வேலை. சசிகலா ரவிராஜும் இப்படியான உறுதிப் படுத்த இயலாத முடிவுகளை நம்பி பிறகு ஒப்பாரி வைக்க வேண்டியிருந்தது😂!2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsதபால் வாக்குகளில் மொட்டு கட்சி, 4% வரை எடுக்கிறது. ஜனாதிதேர்தலில் இது 2% ஆம். அதே போல் என் பி பி இப்போதைக்கு வந்த முடிவுகளில் 79%.2 points
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
முந்தநாள் இரவு நான் ஒரு காணொளி பார்த்தேன். அதில், சுமந்திரன் வரும் போது... "கள்ளா... கள்ளா..." என கோசம் போட்டார்கள். 😂 அப்பவே... சுமந்திரனுக்கு, கட்டுக்காசும் கிடைக்காது என தெரிந்து விட்டது. 🤣2 points
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
நன்றி சகோதரா. உங்கள் பார்வையில் தொண்டு ஆக இருக்கலாம். எனக்கு அது ஒரு கடமையாகப்படுகிறது. என்னை கொஞ்சம் சிந்திக்கும் திறனோடு இயங்க இயற்கை அனுமதித்தது என்னிலும் மோசமான நிலையில் இருப்போரை கவனிக்கத்தானோ என நான் நினைப்பதுண்டு.2 points
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
2 points
- வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்!
அகற்றப்பட்டுள்ளன என்று வந்திருக்கவேண்டும்! எனக்கு ரிப்போர்ட்டர் வேலை தந்திருந்தால் இப்படி நீட்டி முழக்கி எழுதியிருப்பேன்😉👇🏿 இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் அகற்றப்பட்டு நேற்று காலை முதல் பொதுமக்களின் சுதந்திரமான போக்குவரத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.2 points- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ? நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட மீனவர்களைத்தானே? இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்று நாட்டு மீனவர்கள் தவறுதலாகத்தானும் உள் நுழைந்தால் கைது செய்யாமல் விடுவார்களா? அப்படி இந்திய மீனவர்களும் எல்லை தாண்டினால் கைது செய்யப்படுவார்கள்தானே? பொருளாதாரத் தடை விதிக்கும்படி கோரும் சீமான், தமது மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என்று ஏன் கூறுவதில்லை? கூறினால் என்ன நடக்கும்? உங்களிடம் பதில் இருக்கிறதா?2 points- சிரிக்கலாம் வாங்க
2 pointsதாத்தா... ஸ்ரேடியத்துக்கு வந்து, என்னத்தை படம் எடுக்கிறார் என்று பாருங்கோ... 😂2 points- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்களத்தில் போட்டவையையும் சேர்த்தா? @பாலபத்ர ஓணாண்டி ஒருக்கா என்னெண்டு கேக்கிறது🤣1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நான் நினைக்கிறேன் இது அனுர அலை அல்ல, உலக மாற்றத்தின் நிழல் இலங்கையிலும் தொடர்கிறதோ😁 ரஸ்சியா, சீனா, இந்தியா போன்ற முன்னால் இடது சாரிகளின் புதிய வேடம் சர்வாதிகார முதலாளித்துவம் (Authoritarian Capitalism) 2/3 அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் இலங்கையில் அரசியல் சட்டம், சட்டம் என்பவை இந்த சர்வாதிகார முதலாளித்துவத்தினை நோக்கி இரஸ்சியா, சீனா போல பயணிக்கலாம். உலகம் பலதுருவ மாற்றத்திற்கு தாயாராகி வருவதன் முதல் அறிகுறி? இந்த பல துருவ உலக அரசியலின் செல்வாக்காக இலங்கை உள்ளதோ😁.1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
போய் என்ன பலன்.?? இவர்களால் என்ன செய்ய முடியும்??? இவர்கள் அனைவரும் பாராளுமன்றம் சென்றாலும் செயல்கள் பூச்சியம் என்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை சார்! தமிழ் மக்களின் வாக்கை வாங்கி பாராளுமன்றம் போய், முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று கூவினர். கவனம், பாத்து.... உங்களுக்காக வாதாட என்று உங்களிடம் காசு வாங்கிக்கொண்டு, உங்கள் எதிரிக்காக வக்காலத்து வாங்கப்போறார். ஏற்கெனவே அரசியலில் அவரின் சுத்துமாத்து பிரபல்யம். ஆகவே இவரை ஒருவரும் நாட மாட்டார்கள், எல்லா நஷ்டத்தையும் உங்களிலேயே கறந்து விடுவார். இவரைவிட நேர்மையான அமைதியான வக்கீல்கள் நிறைய உண்டு அவர்களை நாடவும்!1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
1 point- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
1 point- இலங்கையின் வடகடலில் இந்திய அத்துமீறல் : கடல் வள அழிவும் சமூகப் பொருளாதார பாதிப்புகளும் – பகுதி 1
1 pointஇந்த கட்டுரை ஒருவருடத்துக்கு முன் வந்தது காலத்தின் தேவை கருதி இங்கு இணைக்கபடுகிறது . ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது. ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் முதல் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் (1994-1999) விடுதலைப் புலிகள் அமைப்புடன் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்த சமாதானப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக உதவிய நோர்வே மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் உடன்பட்டிருந்தன. அந்தப்பேச்சு வார்த்தைகள் முற்று முழுதாக முடிவடையாமல் இருந்தாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளுக்கும் சந்திரிகா அரசுக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடந்தபடி இருந்தன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் எதிர்பார்த்தபடி எந்தவித உடன்பாடுகளையும் எட்ட முடியவில்லை. எனினும், தீர்வொன்று கிடைத்தால், தமது ஆட்சிக்கு உட்படப்போகும் பிரதேசங்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு உடன்பட்டார்கள். இதன் பின்னணியில் பல பொருளாதார நலன்களையும் மற்றும் சில தொடர்புச் சாதனங்களையும் அதற்கான கருவிகளையும் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நோர்வேயின் மேற்பார்வையில் பல நாடுகள் வடக்கு- கிழக்கு பகுதிகளில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் அதற்காக முதலீடுகளைச் செய்யவும் தயாராக இருந்தார்கள். இந்த நிலையில், அந்த அபிவிருத்திகளின் உள்ளடக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளவும், அவை தொடர்பான துல்லியமான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நோர்வே தயாரிப்புகளில் ஈடுபட்டது. இதன் அடிப்படையில் நோர்வேயைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அபிவிருத்தி சம்பந்தமான வரைவுகளை மேற்கொண்டன. இந்த வகையில் இரு ஆய்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அவையாவன, போர் நடக்கும் பிரதேசங்களில் தமிழ் இளையோரும் தற்கொலையும், வடக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலின் இன்றைய நிலையும் அதன் சவால்களும், என்பவையாகும். இதில், முதலாவது தவிர இரண்டாவது ஆய்வு முற்றுமுழுதாக முடிக்கப்படவில்லை. ஆய்வின் தரவுகளை சேகரிப்பதற்கான களவேலைகள் மட்டுமே முடிந்து விட்ட நிலையில், பேச்சுவார்த்தைகளில் குழப்பங்கள் ஏற்பட்டதனால் அது நிறுத்தப்பட்டது. ஆனால் கிடைத்த தரவுகளை அடிப்படையாக் கொண்டு 2011 இல் தமிழில் இணையத்தளங்கள் மற்றும் சில பத்திரிகைகளில் அரைகுறை கட்டுரைத் தொடர்களை எழுதி வெளியிட்டேன். இதன் திருத்திய மறு வெளியீடு (17.05.2018) தமிழரங்கம்.com மற்றும் ndpfront.com இணையங்களில் வெளியிடப்பட்டன. அவை இன்றுவரை பலரால் அவரவர் அரசியலுக்கேற்ப பாவிக்கப்படுகிறன. அவ்வாறு எழுதிய கட்டுரையில் ஒன்றே இங்கு வெளியாகின்றது. இந்தக் கட்டுரை எழுதிய காலம் சில வருடங்களுக்கு முன்பு என்றாலும், இதன் பேசுபொருள், உள்ளடக்கம், மற்றும் தரவுகள் அனைத்தும் இப்போதும் எம் மீனவர் சமுதாயத்தின் தீர்க்கப்படாத, எரிந்து கொண்டிருக்கும் சமுதாயத் தீயின் வெளிப்பாடாகவே உள்ளன. அறிமுகம் முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற தமிழ்பேசும் மக்கள் மீதான இனவாத ஒடுக்குமுறைப் போர் இராணுவ ரீதியில் முடிவுக்குவந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகின்றது. ஆனாலும், தமிழ்பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் தன்மையிலோ, உக்கிரத்திலோ எந்தவித காத்திரமான மாற்றங்களும் நிகழ்ந்து விடவில்லை. இனவாத ஒடுக்குமுறையானது பல புதிய வடிவங்களில் இன்னும் தொடர்கிறது. அபிவிருத்தி என்ற பெயரில் பாரம்பரிய விவசாய நிலங்களும், காடுகளும், கரம்பைகளும் அபகரிக்கப்படுகின்றன. சர்வதேசப் பொருளாதார உதவி மற்றும் முதலீடு என்ற பெயரில் மேலாதிக்க நாடுகளுக்கு எமது தேசத்தின் (ஒட்டுமொத்த இலங்கையின்) வளங்களை, ஆளும் இனவாத சக்திகளும் அவர்களுக்குத் துணைபோகும் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகளென தம்மைக் கூறிக்கொள்வோரும் போட்டி போட்டுக் கொண்டு மலிவு விலையில் விற்கின்றனர். இது ஒரு புறமிருக்க, நம் தேசத்தின் கடல் வளங்கள் கேட்க எவருமின்றி கொள்ளையடிக்கப்படுகிறன. இந்தக் கொள்ளைகள் பற்றி எவரும் பெரிதாக அலட்டிக் கொள்வதாயில்லை. தமிழ் மொழிப் பாரம்பரியத்தில் நிலங்களையும் அல்லது பாரம்பரிய வாழ்நிலைப் பிரதேசத்தை – அதாவது தேசத்தின் நிலத்தை – அவற்றின் அமைப்புக்கு ஏற்பவும், உபயோகத்திற்கு ஏற்பவும், அதன் கலை – கலாசாரம், வாழும் பண்பாடு சார்ந்தும் முல்லை, மருதம், நெய்தல், பாலை, குறிஞ்சி என வகைப்படுத்தி உள்ளனர். ஆனாலும், பொதுப் புத்தியின் ஆதிக்கத்தால் மக்கள் தேசம் என்பதை நிலம் என்று மட்டுமே விளங்கிக் கொள்கின்றனர். இங்கு, கடலும்-கடல் சார்ந்த பிரதேசமாக வகைப்படுத்தப்படும் நெய்தல் நிலத்தின் அரைப்பகுதியான கடல் சார்ந்த நிலப் பகுதி (கரையோர நிலங்கள்) மட்டுமே தேசமென்ற வரையறைக்குள் மக்களால் விளங்கிக் கொள்ளப்படுகிறது. கடற்கரையை அடுத்துள்ள கடற் பிரதேசமும் அதன் வளங்களும் ஏதோ அந்நியமானதொன்றாக – எடுப்பார் கைப்பிள்ளையாகவே விளங்கிக் கொள்ளப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஒரு தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பாளர்களும், சமூகப் போராளிகளும், தேசியவிடுதலைப் போராளிகளும் கூட “தேசம் என்பது நிலம் மட்டுமே” என்ற அரைகுறைப் புரிதலைக் கொண்டிருந்தால், அந்தத்தவறான புரிதல் பாரிய எதிர்மறைத் தாக்கத்தை அந்தத் தேசத்தின் வளர்ச்சியில் ஏற்படுத்தும். இலங்கையைத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்துள்ள சிங்களமொழி பேசும் மேலாதிக்க இனவாத சக்திகள் முதல், தமிழ்பேசும் மக்களுக்காக தொடர்ந்தும் போராடுபவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரை, “தேசம் என்பது நிலம் மட்டுமே” என்ற வரையறைக்குள் நின்று கொண்டே அரசியல் செய்கின்றனர். மேற்கூறிய சக்திகள் ஏதோ விளங்காத்தனமாக இப்புரிதலைக் கொண்டிருக்கவில்லை. இப்புரிதல் இவர்களின் அரசியற் கொள்கை மற்றும் பொருளாதாரச் சிந்தனையை சார்ந்ததாகும். சந்தர்ப்பவாத அரசியற் பாதைகளையும், ஆதிக்க நாடுகளுக்கு அடிபணிந்து, அவர்களின் அடிவருடி, அவற்றில் தங்கிவாழும் அரசியலை அடிப்படையாகக் கொண்ட கொள்கையின் வெளிப்பாடுகளேயாகும். மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடித்து, அவர்களை நிரந்தரப் பொருளாதார அடிமைகளாக்கும், தமது சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி இயங்கும் சக்திகளான, விதேசியவாதிகளான இவர்களிடம் வேறு எந்த வகையான ‘தேசியப்’ புரிதலை எதிர்பார்க்க முடியும்? பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததென்பது போல, இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியக் கடற்பிரதேசம் இன்று இந்தியாவினால் கொள்ளையிடப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கின் மீன்பிடிச் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் எல்லாவகை செயற்பாடுகளும், முயற்சிகளும் இவ் இந்தியக் கடற்கொள்ளையால் மூர்க்கமான முறையில் கருவிலேயே சிதைக்கப்படுகிறன. இந்தியாவின் அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பாளர்களும், ஏன் இடதுசாரிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்வோரும் கூட இந்தியக் கடற்கொள்ளையை எல்லா வகையிலும் ஆதரிக்கின்றனர். பொதுவாக இந்தியர்கள் தமது தேசநலன் சார்த்த விடயத்தில் மிகவும் தெளிவாகவே உள்ளனர். இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் இனவாத அரசியலைத் தோற்கடித்து, தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெறப் போராடுவதாக ‘தமிழ்த் தேசியத் தலைவர்கள்’ கூறுகின்றனர். தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அரசியற் சக்திகளான இவர்கள், மேலாதிக்க இந்திய அரசுக்கு வால்பிடிக்க முயல்வதுடன், தென்னிந்திய தமிழ் இனவாதிகளான சீமான், வை.கோ, நெடுமாறன் போன்ற சீரழிந்த மூன்றாந்தர அரசியல்வாதிகளை இலங்கைத் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக தலையில் வைத்து கொண்டாடுகின்றனர். மறுபுறத்தில், இடதுசாரிகள் எனவும் மக்கள் சார்ந்த அரசியல் செய்பவர்கள் எனவும் தம்மைக் கூறும் இலங்கைத் தமிழர்களில் ஒரு பகுதியினர், இந்தியக் கடற் கொள்ளைக்குத் துணைபோகும் மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க) போன்ற ‘இடதுசாரித்துவம்’ பேசும் இந்திய அமைப்புக்களை, எதிர்காலத்தில் இலங்கையில் நடைபெறப்போகும் புரட்சியின் நட்புச் சக்திகளாகவும், பங்காளிகளாகவும் மதித்து, அவர்களுக்குச் சிரம் தாழ்த்தி அரசியல் செய்கின்றனர். மேற்படி காரணங்களினால் இலங்கைத் தமிழினவாதிகளும், புலம்பெயர் ‘புரட்சிக்காரர்களும்’ இலங்கையின் கரைகளில் நடைபெறும் இந்தியர்களின் நாசகார மீன்பிடியை மூடி மறைத்து, இந்திய மீன்பிடிசார் பெரும் மூலதனக்காரர்களுக்கு சார்பாக நடாத்தும் அரசியலைத் தட்டிக் கேட்க முடியாதவர்களாய் உள்ளனர். புலிகளின் பின், ஏகப்பிரதிநிதித்துவம் கதைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தியக் கடற்கொள்ளைக்கு எதிராக இது வரை ஓர் அறிக்கை கூட விடவில்லை. இந்த நிலைமை ஏன்? இந்தச் சந்தர்ப்பவாத, மெளன அரசியலானது இந்திய ‘நாசகார மீன்பிடியால்’ பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களில் பெரும் பகுதியினரின் நாளாந்த சீவியத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்திய நாசகார மீன்பிடியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் புலிகளுடன் நின்று கடைசி வரை போரிட்ட பல போராளிகளும், அவர்கள் சார்ந்த சமூகங்களும் என்பதுதான். இலங்கை இனவாத அரசுக்கும், அதற்கு ஆதரவான அரசியல் சக்திகளுக்கும் எதிரான மனப்பான்மையுடன், ‘தமிழ் தேசிய உணர்வையும்’ கொண்டதாக இந்த சமூகங்களின் தொழிலாளிகளும் அவர்களின் பிள்ளைகளும் நின்றார்கள். ஆனால் இன்றுள்ள தமிழ்த் தரகுகளுக்கும் இனவாதிகளுக்கும் திடீர் அரசியல்வாதிகளுக்கும் இன்று இந்த சமூகங்களின் தொழிலாளிகளும் அவர்களின் பிள்ளைகளும் தேவையில்லாத பொருளாகப் போயுள்ளனரா? சிறு மனிதாபிமான தளத்தில் நின்று கூடவா இவர்களால் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க முடியாதுள்ளது? வடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி பற்றிய சிறு வரலாற்றுப் பார்வை இலங்கைக்கு பாரிய கடற்பிரதேசம் இருந்தும், இலங்கை இன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த ஒரு நாடல்ல. மீன்பிடித் தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1970 – 1977) பதவிக் காலத்தில் இடப்பட்டது. இக்காலப்பகுதியில் மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடித் தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டன. ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு, அந்தத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகு கடன்கள் மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டன. இந்தக்கடன்கள் மூலம் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மர வள்ளங்களும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களும், வலைகளும் தொழிலாளர்களுக்காக வழங்கப்பட்டன. அதன்பின் பதவிக்கு வந்த யூ.என்.பி. அரசு தனது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கேற்ப சிறிமாவோ பண்டாரநாயக்காவின் திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியது. மீன்பிடித் தொழிலை ஜப்பான் நாட்டின் உதவியுடன் நவீனப்படுத்த, அந்நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பான் நாடு தனது கடல்சார் தொழில் நுட்பத்தை இலங்கையில் சந்தைப்படுத்தும் தனியுரிமையை தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இலகு கடன் மூலம் ஜப்பானிய நிறுவனங்கள், சிறு வள்ளங்களுக்கும் கட்டுமரங்களுக்கும் பயன்படும் வெளியிணைப்பு இயந்திரங்களை மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கியது. அத்துடன் உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கொண்ட கரைகடந்து தொழில் செய்வதற்கான நவீன படகுகளை தனியார் வங்கிகளின் உதவியுடன் கட்டுவதற்கான ஊக்குவிப்பும் அரசினால் வழங்கப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படுத்தி பாரிய நலன்களை அனுபவித்தோர் மன்னாரில் இருந்து வடமராட்சி வரை தொழில் புரிந்த நடுத்தரவர்க்க மீனவர்கள் என்றால் மிகையாகாது. இதற்கான முக்கியமான காரணிகளாக பின்வருவனவற்றை கூறலாம் : தெற்குடன் ஒப்பிடுகையில் வடக்கின் பொருளாதாரம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் இருந்தே மிக நன்றாக இருந்தது. அத்துடன் சேமிப்பு பழக்கத்துடன் இணைந்த தனிநபர்களுக்கு இடையிலான வட்டிக்கு வழங்கும் முறை இலகுவாக கடன் பெற்று தொழில் நடத்த வகை செய்தமை. பலநூறு வருடங்களாக வடபகுதியைச் சேர்ந்த சில கிராமத்தவர்கள் மரப்படகு கட்டும் தொழில் நுட்பமும், அனுபவமும் கொண்டவர்களாக இருந்தமை. (இவர்கள் தான் பிற்காலத்தில் ஜா-எல, மற்றும் நீர்கொழும்பு பகுதியில் மரப்படகு கட்டும் தொழிலை சிங்களத் தொழிலாளர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள்.) நோர்வேயினால் அறுபதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சீ-நோர் நிறுவனமானது காரைநகரிலும், குருநகரிலும் வலையுற்பத்தி மற்றும் கண்ணாடி நார் இழைப்படகு உற்பத்திகளை மேற்கொண்டது. இதனால் மலிவு விலையில் தொழிலாளர்கள் மேற்கூறிய உபகரணங்களைப் பெற முடிந்தமை. (இந்நிறுவனம் பிற்காலத்தில் அரசமயப்படுத்தப்பட்டு, அதன் தொழில்நுட்பம் தெற்கில் படகுகள் தயார் செய்ய உபயோகிக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்திலும் காரைநகர் தொழில்நுட்பவியலாளர்களும், தொழிலாளர்களும் தென் இலங்கையருக்கு தொழில்நுட்பத்தை பழக்கினர். தென்பகுதியில், குறிப்பாக ஜா-எல பகுதியில் உருவாக்கப்பட்ட கண்ணாடி நார் இழைப் படகுகளை தமிழ்ப் போராட்ட இயக்கங்கள் பயன்படுத்தின. அந்தப்படகுகள் காரைநகர் படகுகளை விட ஆழ்கடல் அலை அடிப்பை தாங்கக் கூடியவை. காரைநகர் படகு உற்பத்தி, புளொட் இயக்கக் கொள்ளையினால் நிறுத்தப்பட்டது. குருநகர் வலை உற்பத்தி நிறுவனம், புளொட் இயக்கத்தாலும் புலிகளாலும் கொள்ளையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டு, வலையுற்பத்தி கொழும்புக்கு மாற்றப்பட்டது.) மீனின் பிறப்பும் வளர்ச்சியும் கடலடித்தளமேடை என்று சொல்லப்படும் (Continental Shelf) ஆழ்கடலுக்கும் பரவைகடல் / களம் / களப்பு கடலுக்கும் இடையிலான பகுதிலேயே நடைபெறுகிறது. இலங்கையின் பெரும்பகுதி கடலடித்தளமேடை மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 480 கிலோ மீற்றராகவும் அகலம் 22 கிலோ மீற்றரில் இருந்து 60 கிலோ மீற்றர் வரை உள்ளது. ஆகவே, இப்பகுதி உள்ளக அளவில் ஒப்பிடக்கூடிய மீன் உற்பத்தியாகும் பிரதேசமாகவுள்ளது. (இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலடித்தள மேடை கேரளக் கரையோரம் உள்ளது. அதனால் தான் கேரளம் மிக முக்கியமான மீன்பிடிப் பிரதேசமாகவுள்ளது.) இவ்வாறு இயற்கையாகவே மீன் உற்பத்தியாகும் பிரதேசத்தின் அருகில் வடபகுதி மீனவர்கள் வாழ்வதால், அவர்களால் அதை அனுபவிக்க முடிந்தது. வடபகுதியில் பிடிபடும் மீன் தென்பகுதியில் மிகவும் விரும்பப்படுகிறது. இதனால் அங்கு நல்ல விலையுடன் சந்தை வாய்ப்பும் கிடைத்தது. அத்துடன் பதனிடப்பட்ட வடபகுதி மீனுக்கும் சந்தை வாய்ப்பும் வரவேற்பும் இருந்ததால், வடபகுதியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் வீணாகாமல் பணமாக்கப்பட்டன. இவ்வாறு மீன்பிடி அபிவிருத்தி, வடபகுதி மீனவர்களின் வாழ்நிலையை உயர்த்தியது.1983 இல் வடபகுதியின் அதிஉச்ச மீன்பிடி காரணமாக நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத் தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்திருந்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்தச் சாதனையை செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 1983 ஆம் ஆண்டில் மொத்தமாக, உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 உம், வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2,600 உம், மரவள்ளங்கள் 3,865 உம் இருந்தன. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப் படகுகளாலும், கரையோர தொழிலாளர் பயன்படுத்தும் மர வள்ளங்களாலேயுமே பிடிக்கப்பட்டன. ரோலர் பயன்பாடு இலங்கையில் 80 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தம் காரணமாக வடபகுதி ரோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. வடபகுதியில் இருந்த ரோலர்களின் தொகை நூறுக்கும் குறைவானதே. வடபகுதியின் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம், ஆரம்பத்தில் கூறியது போல, வலைப்படுதலேயாகும். இவ்வலைகளின் கண்கள் கடலின் ஆழத்திற்கேற்பவும், எவ்வகையான மீன்களை மீனவர்கள் குறிவைக்கின்றனர், எந்தவகை காலநிலை நிலவுகிறது போன்ற காரணிகளின் அடிப்படையிலும் வேறுபடும். உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 இஞ்சி கண் விட்டத்திலிருந்து 8 இஞ்சி கண்விட்டமுள்ள, 7 இலிருந்து 10 மீற்றர் அகலமும் 1 இலிருந்து 2 கிலோமீற்றர் நீளமுள்ள வலைகளை உபயோகித்தன. கண்ணாடி இழைப் படகுகளில் தொழில் செய்தோர், 3 இஞ்சி கண்விட்டத்திலிருந்து 5 இஞ்சி கண்விட்டமுள்ள அறக்கொட்டியான் வலை, திருக்கை வலை போன்றவற்றைப் பயன்படுத்தினார்கள். ஆனால் மரவள்ளம் உள்ளவர்கள் களங்கண்டி, சிறுவலை, கொட்டுவலை, விடுவலை, பறிக்கூடு, சூள், தூண்டில்வலைக் கயிறு, முரல் தூண்டி, சிங்க இறால் பிடித்தல் போன்ற களக்கடல் அல்லது பரவைக்கடல் சார் தொழிலை மேற்கொண்டனர். இதை விட மன்னார் பிரதேசத்தின் சில பகுதிகளில் கரைவலை இழுப்பும் தொழிலாகச் செய்யப்பட்டது. இவ்வாறு ஒப்பீட்டளவில் இலங்கையிலே தெற்கை விட பல முறைகளில் வளர்ச்சியடைந்திருந்த வடக்கின் மீன்பிடித் துறை, 1983 ஆம் வருடத்தின் பின்வந்த யுத்த காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது. குறிப்பாக, சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில், 1995 இறுதியில் போர் காரணமாக மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வன்னிக்குச் சென்றபோது, யாழ். மாவட்டத்தின் மீன்பிடி உபகரணங்களும், மீன்பிடி முறைமைகளும், உட்கட்டுமானமும் முற்றாக அழிக்கப்பட்டன. மன்னாரின் நிலையும் அதேபோன்று, படகுகள் வலைகள் உட்பட மீன்பிடி உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கான வசதியின்மை, அரசபடைகளின் அட்டூழியம் போன்றவற்றால் அழிவுகண்டது. இன்று வடக்கின் மீன்பிடித் துறையானது வெளியிணைப்பு இயந்திரம் கொண்ட 2200 கண்ணாடி இழையப் படகுகளையும்,1800 மர வள்ளங்களையும்,120 உள்ளிணைப்பு இயந்திரம் கொண்ட மீன்பிடிக் கலங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் மன்னாரிலும், குருநகரிலும் மொத்தமாக 23 குறைந்த இழுதிறன் கொண்ட இறால் பிடிக்கவெனப் பாவிக்கும் ரோலர்கள் சட்டத்திற்கு முரணாக இயங்குவதாகவும் தகவல்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டின் மீன்பிடி : சிறு வரலாற்றுப் பார்வையும் சில தரவுகளும் தமிழ்நாட்டின் மீன்பிடி, உள்நாட்டு உணவுக்காகப் பயன்தரும் வளமாகவே பல காலமாக இருந்து வந்தது. ஆனால் 1972 இல் இந்திய மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தின்படி அது சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கேரளத்தில், நோர்வே சர்வதேச அரச அபிவிருத்தி நிதியுடன், அறுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திர இழுவைப் படகுகள் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டன. வள்ளம், கட்டுமரம் மூலம் சிறுவலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்ததற்கு பதிலாக இந்தவகையான நவீன பொறிமுறையைப் பாவிப்பதன் மூலம், உற்பத்தித் திறன் கூடுவதால் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என இந்திய அரசினால் நம்பப்பட்டது. 1972 ஆம் ஆண்டளவில் தமிழ்நாட்டில் 200 ஆகவிருந்த இயந்திரப் படகுகளின் தொகை 2008 ஆம் ஆண்டளவில் 5595 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டின் மீன்பிடி உற்பத்தித் திறன் இன்று கேரளா, குஜராத்திற்கு அடுத்ததாக இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மீன் உற்பத்தி 3,93,266.30 தொன்களாகும். இதில் 72,644 தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 18.3 பில்லியன் (அல்லது 18,131.4 மில்லியன்) இந்திய ரூபாய்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளன. இது சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதியால் பெறப்பட்ட வருமானம் மட்டுமே. உள்நாட்டு சந்தைப்படுத்தலால் பெறப்படும் வருமானம் இதைவிட அதிகமானது. இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டின் மீன்பிடித் துறையானது செல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது. ஆனால், மீன்பிடியால் பெறப்படும் செல்வம் முக்கியமாக யாருக்குப் போய் சேரவேண்டுமென 1972 ஆம் ஆண்டின் இந்திய அரச திட்டத்தில் கூறப்பட்டதோ, அவர்களுக்கு அது சென்றடையவில்லை. காரணம் மீன்பிடித் துறை மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டபோது, அரச நலன்களை பாவித்து அதில் முதலீடு செய்தவர்கள், இந்திய அரசியற் கட்சிகளில் செல்வாக்குப் பெற்ற பெரும் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் மீன்பிடிக்கே சம்பந்தமில்லாத வேற்றுச் சமூகத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களுமே. அரச மீன்பிடித் திட்டம் 1972 இல் நடைமுறைக்கு வந்தபோது பரம்பரை பரம்பரையாக மீன் பிடித்தோருக்கு அதில் முதலீடு செய்வதற்கான வளங்கள் இல்லாதிருந்ததும், அரச இயந்திரத்தின் இலஞ்சக் கொடுமையும், அடித்தட்டு மீனவர்கள் மீன்பிடி அபிவிருத்தியின் நலனை அனுபவிக்க தடையானது எனலாம். நோர்வே அரசினால் ரோலர் இழுவைப் படகுகள் கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் இதேநிலை தான் அங்கும் நடந்தது. அங்கும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்க்கை, பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டு, அவர்கள் நாளாந்த கூலிகளாக்கப்பட்டார்கள். மீன்பிடியைத் தளமாகக் கொண்டு பெரும் பணக்காரர்கள் தமது மூலதனத்தை உயர்த்திக் கொண்டார்கள். இதற்குத் துணைபோன நோர்வே அரசு, தனது கேரள அபிவிருத்திச் செயற்திட்டத்தை ஆய்வுசெய்தது. அது பல ஏழைகளை உருவாக்கியதுடன், இயற்கை வள அழிவுக்கும் வழிவகுத்ததென, ஐக்கிய நாடுகள் சபையின் உலக அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத் தொடரின் போது சுயவிமர்சனம் செய்துகொண்டது. இன்றுவரை கேரளாவில் நோர்வேயின் மீன்பிடி அபிவிருத்தி எவ்வாறு ‘ஒரு நாட்டில் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளக்கூடாது’ என்பதற்கு சிறந்த உதாரணமாகவுள்ளது. ஆனால், இவை எவற்றையும் கணக்கில் எடுக்காது, இந்திய மத்திய அரசும் தமிழ்நாடு மாநில அரசும், கேரளாவில் சமூகப் பாதிப்பையும் இயற்கைவள அழிவையும் ஏற்படுத்தி, ஒரு சில பணமுதலைகளை மேலும் பொருளாதாரத்தில் உயர்த்திய மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தின. அதன் விளைவு, பஞ்சத்திலும்கூட அடுத்தவருக்கு அடிபணியாது, கடலை நம்பியே வாழ்ந்த பெருமை மிகு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டு மீனவச் சமூகம் பெருமுதலாளிகளின் இயந்திரப் படகுகளில் நாட்கூலிகளாக ஆக்கப்பட்டனர். மேற்கூறப்பட்ட தகவல்கள் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீன்பிடி சார்ந்ததாகும். மன்னார் வளைகுடாவுக்கு வடக்கிலும் வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட புவியடித் தளமேடையில், நாகப்பட்டினம் வடக்கில் இருந்து இராமேஸ்வரம் தெற்கு வரையாக, சுமார் 480 கிலோமீற்றர் கரையோர பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்களே இன்று இலங்கை கடல்வலயத்தில் அத்துமீறல் செய்து, நம் தேசத்தின் கடல்வளத்தை சூறையாடி, இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கரையோரப் பிரதேசத்தில் சுமார் 43 சதவீதமாகும். அத்துடன் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி நாகப்பட்டினத்தில் 1,465 ரோலர்களும், தஞ்சாவூரில் 469 ரோலர்களும், புதுக்கோட்டையில் 866 ரோலர்களும், இராமநாதபுரத்தை சேர்ந்த 1,865 ரோலர்களில் 980 ரோலர்களும் (மீதமானவை மன்னார் வளைகுடாவில் தொழில் செய்கின்றன.) – அதாவது மொத்தமாக 3780 இந்திய ரோலர்கள் – பாக்கு நீரிணைப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இந்தத்தகவல் 2002 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. இன்றுவரை இந்தத் தொகை அதிகரித்தே வந்துள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இவற்றில் பெரும்பாலானவை கோடீஸ்வர முதலாளிகளுக்கும், பாரிய மீன் ஏற்றுமதிக் கொம்பனிகளுக்கும் சொந்தமானவையாகும். இதைவிடவும் இந்தப்பிரதேசத்தில் இலங்கையின் வடபிரதேசத்தைப் போல கரைசார் மீன்பிடியில் ஈடுபடும் 12,500 மரவள்ளங்களும், 19,500 கட்டுமரங்களும் கடற்றொழிலில் ஈடுபடுத்தப்படுகிறன. இவர்களும் பெரும்பாலும் சிறு வலைகளைப் பாவித்தே மீன்பிடிக்கின்றனர். தொடரும். About the Author மரியநாயகம் நியூட்டன் சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் அவர்கள் 14 வயதில் ஈழத்திலிருந்து நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர். The Arctic University of Norway and NORD University Bodø, Norway பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் இன்று வரை இலங்கையின் அரசியல், சமூக விடயங்கள் சார்ந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். நோர்வே மாநில மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார். https://www.ezhunaonline.com/surpassed-of-indian-fishermen-into-sri-lankan-boarder/1 point- "முதுமையில் தனிமை [Senior Isolation]"
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01 உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம். அக்டோபர் முதலாம் தேதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்க ப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் சுதந்திரம், ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய கால கட்டத்தில் ,சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு - இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்து உள்ளதுடன், சராசரி ஆயுள் காலம் 75 - ஐ தாண்டுகிறது. என்றாலும் அவர்கள் மகிழ்வாக வாழ்கிறார்களா என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது? பிசிராந்தையர் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய புறநானூறு பாடல் 191 ஞாபகம் வருகிறது: ‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்க; அதன்தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே. “உங்களுக்குச் சென்ற ஆண்டுகள் பலவாக இருக்கவும், உங்களுக்கு நரையில்லையே அது எப்படி என நீங்கள் கேட்பீராயின் கூறுவேன்: "வீட்டில் மனைவி நல்லவள்; மக்கள் அறிவு நிரம்பியவர். ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது போல் ஏவலர் குறிப்பறிந்து நடப்பவர். எனவே வீட்டில் சிக்கல் இல்லை. அக அமைதி கூடிற்று. புறத்தேயும் அரசன் நல்லவன்,என் நாட்டு அரசனும் நீதி அல்லாதவற்றைச் செய்யாமல் காவல் காப்பவன். ஊரார் சான்றோர். புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான் அந்த புலவன். ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. ஆண் - பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்ப தும், மற்றும் நகரமயமாதல், உலகமயமாதல் காரணமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்று பொதுவாக மூன்று விதமாக இந்த முதியோர்கள் வாழ்கிறார்கள். உதாரணமாக, சிலர் பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிக்கிறார்கள், சிலர் கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிக்கிறார்கள், மற்றும் சிலர் ஆணோ அல்லது பெண்ணோ ஒருவராக தனியாக வசிக்கிறார்கள். இங்கு ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப் பட்டு விடும் என ஏங்கத் தொடங்குவதும் அவர்களின் [முதியோர்களின்] உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை அதற்குச் சற்றும் குறைந்ததல்ல முதுமையில் தனிமை! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம். அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா? "இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே" இங்கே முதல் பதினொரு அடிகளில் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்வி ட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில் ... "பூண் சூட்டிய நுனியை யுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து , இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும் , முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார். அது மட்டும் அல்ல, நற்றிணை 10 இல் , காதல் என்பது உடற்காமம் அன்று அதனையும் கடந்து மனதளவில் உயர்ந்து நிற்பதாகும். எனவே, உடல் அழகு நீங்கி நரையோடு முதுமை வந்த போதும் அவளைப் போற்றுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்கிறது. இது இரு சாராருக்கும் பொருந்தும். "பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கே ழூர" மேலும் உடம்பின் வெவ்வேறு மாற்ற நிலையை குண்டலகேசிப் பாடல் ஒன்று இப்படி எடுத்து உரைக்கிறது; "பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளுநாள் சாகின் றோமால் நமக்குநாம் அழாதது என்னோ?" அதாவது, பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. பின் குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் பிறக்கிறது. அந்த காளைப் பருவம் செத்து, காதலுக்கு உரிய இளமைப் பருவம் ஏற்படுகிறது. அதுவும் பின் மாறி முதுமை உண்டாகிறது என்கிறது. ஆனால், பொதுவாக இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது. முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் "முதுமையில் தனிமை" மிகவும் கொடியது. அது மட்டும் அல்ல, முதுமையை இன்னொரு குழந்தைப் பருவம் எனலாம். குழந்தைகள் எப்படித் தங்கள் மீது கவனமும் அன்பும் செலுத்தப்பட வேண்டும் என்ற விரும்புவார்களோ, அதே போல முதியவர்களும் விரும்புவார்கள். இதை நாம் அறிய வேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும்.1 point- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
இந்த இரண்டு காரணங்களுக்காகவே நான் இங்கே நடந்த தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்தேன். நன்றி தாயகத்தில் இருந்து உறுதிப்படுத்தியதற்கு.1 point- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இறுதிவரை போராடிய தென் ஆப்ரிக்கா - இந்திய அணியை காப்பாற்றிய திலக் வர்மா, அர்ஷ்தீப் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்தி ராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக திலக் வர்மாவின் அற்புதமான சதம், அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதம், அர்ஷ்தீப் பந்துவீச்சு ஆகியவற்றால் செஞ்சுரியனில் நேற்று (நவ. 13) நடந்த 3வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. 220 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது. அதிகபட்ச ஸ்கோர் கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அதிகபட்சமாக இந்த செஞ்சுரியன் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 218 ரன்களை இந்திய அணி சேர்த்திருந்தது. இதுதான் இந்த மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை இந்த ஆட்டத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி முறியடித்தது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. தோல்வி தொடர்கிறது கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பின் தென் ஆப்ரிக்க அணி சொந்த மண்ணில் எந்த டி20 தொடரையும் வென்றதில்லை என்ற நிலை இந்தத் தொடரிலும் தொடர்கிறது. கடைசி ஆட்டத்தில் ஒருவேளை தென் ஆப்ரிக்க அணி வென்றாலும், தொடர் சமநிலை ஆகுமே தவிர டி20 தொடரை வெல்ல முடியாது. 2022ஆம் ஆண்டுக்குப் பின் தென் ஆப்ரிக்க அணி 5 டி20 தொடர்களை இழந்து, 2 தொடர்களை சமன் செய்துள்ளது. ஆனால், இதுவரை வெல்லவில்லை. ஆட்டநாயகன் திலக் செஞ்சுரிய மைதானத்தில், டி20 போட்டியில் சதம் அடித்த 12வது இந்திய பேட்டர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றார். 32 பந்துகளில் அரைசதமும், 51 பந்துகளில் தனது முதல் சதம் அடித்து 107 ரன்களுடன் (7 சிக்ஸர், 8 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்த அவர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மில்லரின் விக்கெட்டை கொண்டாடும் இந்திய அணி இந்திய அணி இந்த காலண்டர் ஆண்டில் 8வது முறையாக டி20 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதுவரை ஒரு காலண்டர் ஆண்டில் எந்த அணியும் செய்யாத சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அதுமட்டுமல்லால், ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு அணியில் 5 வீரர்கள் ரோஹித் சர்மா(121), அபிஷேக் சர்மா(100), சாம்ஸன்(111, 107), திலக் வர்மா(107) சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வாலுக்குப் பின் டி20 போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றார். 2வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மாவுடன் இணைந்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப், 5வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங்குடன் சேர்ந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திலக் வர்மா அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் சதத்தை அடித்த மகிழ்ச்சியில் திலக் வர்மா ஒன்பதாவது ஓவரில் 100 ரன்களை இந்திய அணி எட்டியதாலும், நடுப்பகுதி ஓவர்களான 7 முதல் 15 ஓவர்களில் 85 ரன்களை குவித்ததால், ஸ்கோர் 240 ரன்களை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால், 219 ரன்களுடன் சுருங்கியது. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 65 ரன்கள் குவித்தாலும், யான்சென் வீசிய 20வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. திருப்புமுனை நாயகன் அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் வெற்றி கிளாசன், யான்சென் களத்தில் இருந்தவரை உறுதியில்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால், இருவரின் விக்கெட் சரிந்த பின்புதான் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தொடக்கத்தில் ரிக்கில்டன் விக்கெட்டை வீழ்த்தியும், நடுப்பகுதியில் கிளாசன், யான்சென் என இரு முக்கிய பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியும் திருப்புமுனை ஏற்படுத்தினார். 4 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் தவிர ரவி பிஸ்னோய், அக்ஸர் படேல் கட்டுக்கோப்பாகப் பந்து வீசினர். ஆனால், கடந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் பேட்டர்கள் அதிக ரன்களை குவித்துவிட்டனர். அதேபோல, ஹர்திக் பாண்டியா ஓவரும் வெளுக்கப்பட்டது. ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிளாசனின் விக்கெட்டை எடுத்த உற்சாகத்தில் அர்ஷ்தீப் சிங் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் நேற்று இந்திய அணி களமிறங்கியது. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை அர்ஷ்தீப் உறுதி செய்யும் விதத்தில் பந்துவீசினார். அதுமட்டுமல்லாமல், டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வரிசையில் பும்ரா, புவனேஷ்வர் குமார் எண்ணிக்கையைக் கடந்து 59 இன்னிங்ஸ்களில் 92 விக்கெட்டுகளுடன் அர்ஷ்தீப் 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் சஹல் 96 விக்கெட்டுகளுடன் உள்ளார். பும்ரா 69 இன்னிங்ஸ்களில் 89 விக்கெட்டுகளுடனும், புவனேஷ்வர் குமார் 86 இன்னிங்ஸ்களில் 90 விக்கெட்டுகளுடனும் உள்ளனர். அனுபவமின்மை டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கும் நிலையில் தென் ஆப்ரிக்க அணி இன்னும் புதிய வீரர்களுடன் பரிசோதனை முயற்சியில்தான் இருக்கிறது. பேட்டிங்கில் எந்த வீரரைக் களமிறக்குவது, அதன் ஆழம், தீவிரத்தன்மை, திட்டங்கள் என எதுவும் தெளிவாக இல்லாமலே போட்டியில் விளையாடியது. அனுபவ பந்துவீச்சாளர்கள் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, நார்ஜே இல்லாமல் தென் ஆப்ரிக்க அணி புதிய வீரர்களுடன் விளையாடியது. இதனால், நேற்று 10 வைடுகள், 3 நோ பால்களை வீசி அனுபவமின்மையை வெளிப்படுத்தினர். போராடிய தென் ஆப்ரிக்கா தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு ஓவருக்கு 12 ரன்ரேட் தேவைப்பட்டது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் சேர்த்து ஏறக்குறைய ரன்ரேட்டை தொட்டனர். ஆனால், கடைசி 5 ஓவர்களில் தேவைப்படும் ரன்ரேட் 17 ஆக உயர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால், கிளாசன், மில்லர் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் 35 பந்துகளில் 58 ரன்களை சேர்த்தவுடன் ஆட்டம் சூடுபிடித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் வெற்றி கிளாசன், யான்சென் களத்தில் இருந்தவரை உறுதியில்லை என்ற நிலைதான் இருந்தது ஆனால், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சூர்யகுமாரின் கேட்சை நினைவுபடுத்தியது போல மில்லருக்கு டீப் மிட்-விக்கெட்டில் அக்ஸர் படேல் பிடித்த கேட்ச் மில்லர்-கிளாசன் பார்ட்னர்ஷிப்பை உடைத்தது. மில்லர் 18 ரன்களில் ஏமாற்றத்துடன் சென்றார். அதேபோல, கிளாசன் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். வருண் சக்ரவர்த்தியின் 14வது ஓவரை வெளுத்த கிளாசன் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 23 ரன்களை குவித்தார். 22 பந்துகளில் 41 ரன்களுடன் அதிரடியாக பேட் செய்த கிளாசனின் விக்கெட்டை ஆஃப்சைடு விலக்கி ஸ்லோபாலாக வீசியதன் மூலம் எடுத்தார் அர்ஷ்தீப் சிங். யான்சென் மிரட்டல் அரைசதம் கிளாசன் ஆட்டமிழந்தபின் ஆட்டம் விரைவாக முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எண்ணுகையில் யான்செனின் ஆட்டம் சூடுபிடித்தது. ரவி பிஸ்னோய் வீசிய 17வது ஓவரில் இரு சிக்சர்களை யான்சென் பறக்கவிட்டார். கடைசி இரு ஓவர்களில் தென் ஆப்ரிக்க வெற்றிக்கு 51 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் இருந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியா வீசிய 19வது ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களை பறக்கவிட்டு 26 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்க வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை கோட்ஸி தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தை சந்தித்த யான்சென் சிக்ஸர் விளாசி 16 பந்துகளில் முதல் டி20 அரைசதத்தைப் பதிவு செய்தார். ஆனால், 3வது பந்தில் கால்காப்பில் வாங்கி 54 ரன்களில் யான்சென் ஆட்டமிழந்தார். மூன்று பந்துளில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய சிமிலேன் 4வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் சமிலேன் ஒரு ரன் எடுத்தவுடன் வெற்றி இந்தியாவின் பக்கம் சாய்ந்தது. தென் ஆப்ரிக்க அணியின் யான்சென், கிளாசன், மில்லர் ஆகியோர் கடைசி வரை போராடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. சாம்சன் டக்-அவுட், அபிஷேக் அதிரடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிங்கு சிங் 8 ரன்னில் சிமிலேன் பந்துவீச்சில் போல்டானார் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்திலும் டக்-அவுட்டில் யான்சென் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து 2 சதங்களை அடித்த சாம்சன், தொடர்ந்து 2 டக்-அவுட்டில் ஆட்டமிழந்தார். கடந்த சில போட்டிகளாக ஃபார்மின்றி தவித்த அபிஷேக் சர்மா நேற்று நிதானமாக ஆடி, பின்னர் தன்னை நிலைப்படுத்தியபின் அதிரடிக்கு மாறினார். அபிஷேக் சர்மா, திலக் வர்மா இருவரின் பார்ட்னர்ஷிப்தான் அணியின் ஸ்கோரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. கோட்ஸி, சிபாலா, சிமிலேன் ஓவர்களை இருவரும் வெளுத்தனர். ஐந்து சிக்சர்கள், 3 பவுண்டரிகளை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் அதிரடியால் பவர்ப்ளேவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. அபிஷேக்-திலக் கூட்டணி 107 ரன்கள் சேர்த்தநிலையில் பிரிந்தது. அபிஷேக் 50 ரன்களில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் ஒரு ரன்னில் சிமிலேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவும் 18 ரன்களில் மகராஜ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ரிங்கு சிங்- திலக் வர்மா கூட்டணியில் திலக் வர்மா சேர்த்த ரன்கள்தான் அதிகம். இருவரும் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் அதில் 45 ரன்களை திலக் வர்மாதான் சேர்த்தார். ரிங்கு சிங் 8 ரன்னில் சிமிலேன் பந்துவீச்சில் போல்டானார். ராமன் தீப் சிங் 15 ரன்களில் ரன்-அவுட் ஆனார். ஆட்டத்தை நிறுத்திய ஈசல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த சில போட்டிகளாக ஃபார்மின்றி தவித்த அபிஷேக் சர்மா நேற்று நிதானமாக ஆடி, பின்னர் அதிரடிக்கு மாறினார் தென் ஆப்ரிக்க சேஸிங்கின் போது, மின் ஒளிக்கு ஏராளமான ஈசல்கள் மைதானத்தைச் சுற்றி வட்டமிட்டன. இதனால் இந்திய வீரர்களும் ஃபீல்டிங் செய்ய, பந்துவீசச் சிரமப்பட்டனர். தென் ஆப்ரிக்க பேட்டர்களின் கண்களில் ஈசல் பட்டதால் பேட் செய்ய முடியாமல் தவித்தனர். இதையடுத்து, ஈசல் பறப்பதை நிறுத்த மின்ஒளி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஈசலால் ஆட்டம் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது இதுதான் முதல் முறை. அச்சமில்லாத இளம் வீரர்கள் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில், “இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் கூட்டத்தில் என்ன ஆலோசித்தோமோ அதை ஆட்டத்தில் செய்துள்ளோம். இளம் வீரர்கள் அச்சமின்றி ஆடுகிறார்கள். வலைபயிற்சியில் ஆடும் ஆட்டத்தைப் போன்று, ஐபிஎல் தொடரில் அணிக்கு ஆடுவதைப் போன்று தங்கள் மாநிலத்துக்கு ஆடுவதைப் போன்று இங்கும் விளையாட வேண்டும் எனக் கூறினோம்" என்றார். சில போட்டிகளில் சிலர் வாய்ப்பைத் தவறவிட்டாலும், வீரர்கள் மீண்டும் தங்களை ஃபார்முக்கு கொண்டு வந்துவிட்டதாகக் கூறிய சூர்யகுமார், "3வது வீரராகக் களமிறங்கவா என என்னிடம் திலக் கேட்டார், இன்று உன்னுடைய நாள் அடித்து தூள் கிளப்பு என்று கூறினேன். திலக்கின் திறமை, பேட்டிங் குறித்து எனக்கு நன்கு தெரியும் என்பதால் நம்பிக்கையுடன் தெரிவித்தேன்,” எனத் தெரிவித்தார் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c4gmp7jdvk4o1 point- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
நான் அறிந்து யாரையும்மட்டம் தட்டியோ எகத்தாளம் பண்ணியோ காயப்படுத்தியோ கருத்திட நினைத்ததில்லை., அடுத்தவரை மட்டம் தட்ட என்னிடம் எந்த தராதரமும் இல்லை. நீண்ட காலத்தின் பின்னர் சிறிதுகாலம் விடுமுறையில் உள்ளேன் அதனால் கொஞ்சம் அதிகமாக பேசி அதிகமாக பதிவுகளிட்டதால் உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம், இயல்பில் அதிகம் பேசுவதில்லை, அதனால்தான் ஏறக்குறைய யாழில் இணைந்து 9 வருடங்களாகியும் 1500 கருத்துக்களைகூட என்னால் தொட முடியவில்லை. எனினும் உங்கள் கருத்து பெறுமதி மிக்கது, முடிந்தவரை எகத்தாளமின்றி என்னை அமைதிப்படுத்த இனி கூடுதல் முயற்சி செய்கிறேன் நன்றி 🙏1 point- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
சர்வதேச சட்டப்படி எந்த ஒரு நாட்டுக்கும் கரையிலிருந்து 12 கடல்மைல்கள் அவற்றின் சொந்த கடல்பகுதியாகவே கருதப்படும் என்கிறார்கள், ஆதலால் அனைத்துநாட்டிற்கும் கடல் எல்லைகள் உண்டு. பாக்குநீரிணை மன்னார் வளைகுடாபகுதி மிக குறுகலானது என்பதால்தான் எல்லைகள் மீறுவதில் ஏகப்பட்ட புடுங்கல்கள், ஆனால் நெடுந்தீவுக்கும், பருத்துறைகடற்கரைக்கும் முல்லைதீவுக்கும் இந்திய மீனவர்கள் வந்து மீன் பிடிப்பது எந்த வகையிலும் தவறாக எல்லையை புரிந்து கொண்டது அல்ல.அது அப்பட்டமான இன்னொருநாட்டின் கடல்வள கொள்ளை . கச்சதீவு என்ற ஒரு பிரச்சனை இலங்கை இந்தியாவிற்குள் இல்லை, இந்திராகாந்தி ஸ்ரீமா ஒப்பந்தபடி கச்ச தீவு என்பது இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது, கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ளவும் , மீன் வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் மட்டுமே இந்திய மீனவர்களுக்கு உரிமையுள்ளது, ஆனால் மீன் பிடிக்க உரிமையில்லை என்பதே ஒப்பந்தம் என்கிறார்கள். அதனால்தான் இலங்கை கடற்படையிடம் மாட்டும்போதெல்லாம் கச்சதீவில் மீன்பிடிக்கும்போது என்று அவர்கள் சொல்வதில்லை கச்சதீவுக்கு ‘’அருகில்’’ மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படை அட்டூழியம் என்று கப்சா விடுவார்கள். 1976 ஆம் ஆண்டு இருநாட்டு ஒப்பந்தங்களின்படி கச்சதீவை ஒருபோதும் இலங்கையிடமிருந்து மீளபெற முடியாது என்று பல தடவை மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கச்சதீவை மீட்போம் என்று பிரச்ச்சாரம் செய்யும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் தமிழக கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் அதுபற்றி பேசுவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கும் தெரியும் அது சாத்தியமில்லையென்று , மீனவ சமுதாயத்தின் வாக்குகளுக்காக ரீல் விடுவார்கள். இதில் அதியுச்ச நகைச்சுவை எந்த காங்கிரஸ் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்ததோ அதே காங்கிரசும் கூட்டுகட்சியான திமுகவும் தேர்தல் நேரங்களில் கச்சதீவை மீட்போம் என்று குரல் கொடுப்பது.1 point- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
நன்றி மறந்த எங்கட தெரு நாய்களுக்கு வாக்கு போடுவதை விட ஒருமுறை அநுரவிக்கு போட்டு பார்க்கலாமே . தமிழ் கட்சிகளால் இதுவரை என்ன செய்ய முடிந்தது . சாராயக்கடை அனுமதி கொள்ளை அடித்தல் .... இதுக்கு ஏன் இந்தமுறை அந்த உதவாகரைகளுக்கு போடாமல் ஒரு மாற்றத்தினை செய்து பார்க்கலாமே .1 point - வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.