Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்19Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்13Points3054Posts -
கந்தப்பு
கருத்துக்கள உறவுகள்11Points12678Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்11Points14676Posts
Popular Content
Showing content with the highest reputation on 11/18/24 in all areas
-
சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
முதலில் இளம்பிறையனை "யாழ் பல்கலை விரிவுரயாளர்" என்று அழைப்பதை தமிழ்வின் கைவிட வேணும். அவர் ஒரு "உடற்பயிற்சிப் போதனாசிரியர்" (demonstrator). "உடற்பயிற்சிப் போதனாசிரியருக்கும்" அரசியலுக்கும் என்ன தொடர்பு😂? சும்மா, பல்கலையில் காவல் கடமையில் இருக்கும் Marshal ஐ எல்லாம் கொண்டு வந்து ஒரு அரசியல் நிகழ்ச்சி செய்யும் ரொய்லெற் ஊடகங்கள் எங்கள் சாபக் கேடு!4 points
-
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தமிழ்வின்னில் வரும் செய்திகளை நம்பாதீர்கள்............... இவர்கள் ஒரு ஊடகப் பொய்யர்கள்........... எங்களின் அரசியல் பொய்யர்கள் போலவே............... வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், உடுப்பிட்டி வீதியில் 'தமிழ்க் கடை' என்று ஒரு கடை இருக்கின்றது. அங்கு பனம் பொருட்கள் மற்றும் இதே போன்ற பொருட்களை மட்டுமே விற்கின்றனர். அங்கு பனங்கட்டி எப்போதும் கிடைக்கும். சடையாண்டி வைரவர் கோயிலின் முன்னே இந்தக் கடை உள்ளது. முன்னொரு காலத்தில் இந்தக் கடையின் பெயர் சித்தி விநாயகம் ஸ்டோர்ஸ் என்று ஞாபகம்..................3 points
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நிழலி சில கேள்விகளுக்கு முதலில் பதில் அளிக்கவில்லை. அதனால் அவருக்கு அக்கேள்விகளுக்கு விடை என்ன என்றும் , சில தேர்தல் மாவட்டங்களில் 2 கட்சிகள் முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் முதலில் எழுதியதினால் ஒரு கட்சியின் பெயரை மட்டும் எழுதும் படி கேட்டிருந்தேன். அவர் இக்கேள்விகளுக்கு பதில் எழுதும் போது தேசிய மக்கள் கட்சி 154 இடங்களை பிடிக்கும் என்றும் பதில் அளித்திருந்தார். 1-5 வித்தியாசத்தினால் பதில் அளித்தினால் அவருக்கு 1 புள்ளிகள் கிடைக்கவேண்டும். கவனிக்காமல் விட்டதினால் மனம் வருந்துகிறேன். 1)பிரபா - 43 புள்ளிகள் 2)வாதவூரான் - 42 புள்ளிகள் 3)வாலி - 41 புள்ளிகள் 4)வீரப்பையன் - 39 புள்ளிகள் 5) Alvayan - 38 புள்ளிகள் 6) நிழலி - 38 புள்ளிகள் 7)தமிழ்சிறி - 37 புள்ளிகள் 8)கிருபன் - 37 புள்ளிகள் 9)goshan_che - 37 புள்ளிகள் 10)நூணாவிலான் - 37 புள்ளிகள் 11)நிலாமதி - 37 புள்ளிகள் 12) ரசோதரன் - 37 புள்ளிகள் 13) கந்தையா 57 - 35புள்ளிகள் 14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள் 15) வில்லவன் - 34 புள்ளிகள் 16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள் 17)சசிவர்ணம் - 33 புள்ளிகள் 18)சுவைபிரியன் - 32 புள்ளிகள் 19)புலவர் - 30 புள்ளிகள் 20)வாத்தியார் - 29 புள்ளிகள் 21) புத்தன் - 29 புள்ளிகள் 22)அகத்தியன் - 27 புள்ளிகள் 23)குமாரசாமி - 27 புள்ளிகள் 24) சுவி - 26 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 , 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 68)3 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
3 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
3 pointsஉண்மைதான்.... சுமந்திரனின் பஞ்சாயத்து பார்க்கிறதாலேயே பலரின் நேரங்கள், யாழில் பல பக்கங்கள் வீணாகி உள்ளது. 😂 சுமந்திரன் தோற்றதுடன், இனி... உந்த தொல்லை, புடுங்குப்பாடு ஒன்றும் இராது. 🤣 ஆபிரஹாம் சுமந்திரனை... தோல்வி அடையச் செய்த, யாழ்.மாவட்ட மக்களுக்கு நன்றி. 🙏3 points
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
கொதித்தெழும் ஷிராஸ் யூனஸ் (தமிழர்கள் தேசிய போராட்டம் குறித்த மிகவும் மோசமான பார்வை கொண்டவர்)2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsno need divercity.....இதற்கு தான் அதிகம்பேர் தம்ஸ் அப் போட்டிருக்கினம் ...அதாவது படிச்ச காய்கள் பன்முகதன்மையை விரும்பவில்லை....2 points
-
யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
2 pointsபோனமுறை போய் பருத்திதுறை காபரி ல் நின்று தமிழ்நாட்டை பார்த்தவரெல்லோ...இந்தமுறை போய் ஆறுதலாய் இருந்து பார்க்கப் போறார்....நானு ஊருக்குப்போய் ..அதேகாபரில்போய் ஆறுதாலாய் இருந்து பார்த்தனான்...இசுடாலினின் ..தலையிலை கிடக்கிற டோப்பே தெரியுது..😎2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 points👍................. மீண்டும் மீண்டும் கட்டுக்கதைகளையும், வதந்திகளையும் பரப்பும் ஊடகங்களை முற்றாக தவிர்க்க வேண்டும், பையன் சார். உங்களின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. அத்துடன் தமிழ் கொலைகளைச் செய்யும் ஊடகங்களும் தவிர்க்கப்படவேண்டும். முக்கியமாக ஆதவன் போன்ற செய்தித் தளங்கள். தமிழ், தமிழ் என்று நாங்கள் சொல்லிக் கொண்டே, இவைகளை எப்படி ஆதரிக்க முடியும்............. ஒரு தனிநபர் தமிழில் தவறுகள் விடுவதை புரிந்து கொள்ளலாம். தமிழ்மொழி மிகக் கடினமான ஒரு மொழி.... ஆனால் ஒரு ஊடகம் என்று குழுவாக இருப்பவர்கள், இயங்குபவர்கள் இதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது.............. மொழி மீது ஒரு பற்றும், மரியாதையும் அவர்களுக்கு இல்லை என்றே இதை எடுக்கவேண்டும்.2 points
-
உரிமைக் குரல் - சுப.சோமசுந்தரம்
2 pointsஉரிமைக் குரல் - சுப.சோமசுந்தரம் சுமார் ஓராண்டுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டில் மிகக் குறைந்த வயதில் (21) பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் என்ற தொல் பழங்குடி இன சமூகச் செயற்பாட்டாளர் தமது இனத்தின் போர் முழக்கமான ஹக்கா எனும் மரபுப் பாடலொன்றுடன் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அது உலகம் முழுவதும் வைரல் ஆனது. அது குறித்து எனது அப்போதைய முகநூற் பதிவின் இணைப்பு : https://www.facebook.com/share/p/14bJyTCimP/ 1840 ல் நியூசிலாந்து பிரிட்டனின் ஆதிக்கத்தில் வந்தபோது பிரிட்டிஷ் அரசுக்கும் நியூசிலாந்தின் மவுரி பழங்குடி இன மக்களுக்கும் இடையே 'வைதாங்கி ஒப்பந்தம் (Treaty of Waitangi)' கையெழுத்தானது. அதன்படி சில சிறப்புச் சலுகைகளும் உரிமைகளும் மவுரி இன மக்களுக்கு வழங்கப்பட்டன. நியூசிலாந்து 1986 ல் முழுமையாக விடுதலை பெற்ற பின்னரும் நியூசிலாந்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் வைதாங்கி ஒப்பந்தம் பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் மசோதாவை அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மாற்றத்தால் மவுரி இன மக்களின் சில உரிமைகள் பறி போகும் என்பது வெளிப்படை. சமத்துவ நோக்கில் அம்மாற்றம் கொண்டு வரப்படுவதாக நியூசிலாந்து அரசு அறிவிப்பது வேடிக்கையும் வேதனையும். நியூசிலாந்தின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதமான மவுரி இன மக்களிடமிருந்து அம்மசோதாவிற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பு பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் அந்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்து அவர்களது போர் முழக்கமான ஹக்கா பாடலைப் பாடி அறச்சீற்றத்துடன் அப்பாடலுக்கான நடனத்தை மேற்கொண்டார். பிற மவுரி இன உறுப்பினர்களும் அந்த ஆவேச ஆடல் பாடலில் கலந்து கொள்ள, பாராளுமன்றம் அமளிதுமளியானது. மீண்டும் இந்நிகழ்வு உலகம் முழுவதும் வைரல் ஆனது. இத்தகைய நிகழ்வுகள் நம் தாய்த் திருநாட்டில் அதிகமாகவே நடைபெறுவன. நமது நாட்டின் காட்சித் திரை நம் மனக்கண்ணில் விரிவது தவிர்க்க இயலாத ஒன்று. குஜராத்தில் மதச்சிறுபான்மையினர் மீது சொல்லில் விவரிக்க இயலாத வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்போதும் அதன் மீது நீண்ட காலம் விசாரணை நடைபெறும்போதும் அதுபற்றி வாயே திறக்காத குடியரசுத் தலைவரான A.P.J அப்துல் கலாம் உங்கள் நினைவுக்கு வரலாம். மணிப்பூர் பற்றியெரியும் போது அது பற்றிக் கள்ள மௌனம் சாதிக்கும் பிரதமரை ஓரளவு புரிந்து கொள்ளலாம்; பற்றியெரிந்த/பற்ற வைக்கப்பட்ட குஜராத்தின் அன்றைய முதல்வரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ? ஆனால் மணிப்பூர் கலவரத்தில் பெரும்பாலும் சிறுபான்மையினரான பழங்குடி குக்கி இன மக்களே பாதிப்புக்கு உள்ளாகும்போது, பழங்குடி இனத்தவரான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாதிக்கும் மௌனத்தை எந்த வகையில் சேர்ப்பீர்கள் ? உலகளவில் பேசப்படும் நியூசிலாந்தின் ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் பற்றியெல்லாம் திரௌபதி முர்முவுக்குத் தெரியுமா ? தன்மானம் காக்கத் தலைவிரி கோலமான மகாபாரதத் திரௌபதியின் கதையாவது தெரியுமா ? குலத்தொழிலுக்கு இட்டுச் செல்லும் விஸ்வகர்மா யோஜனாவை ஆதரிக்கும் எல்.முருகன் போன்றோர் தம் சந்ததியினரைக் குலத்தொழிலுக்குத் தயார் செய்து விட்டார்களா ? மேற்கண்ட காட்சித் திரை உங்கள் மனக்கண்ணில் விரிந்தால், உங்கள் பெற்றோர், ஆசிரியர், தோழர்கள் உங்களைச் சரியாக வளர்த்திருக்கிறார்கள் என்று பொருள். நியூசிலாந்தின் வைதாங்கி ஒப்பந்தமானது, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் அக்டோபர் 1947 ல் மகாராஜா ஹரி சிங் - மவுண்ட்பேட்டன் பிரபு இடையில் ஏற்பட்ட நிலையான ஒப்பந்தத்தை உங்களுக்கு நினைவுபடுத்தினால் நீங்கள் நல்ல தலைவர்களால் வழிநடத்தப் பட்டுள்ளீர்கள் என்று பொருள். இனி உலகெங்கும் ஒலிக்கும் நியூசிலாந்து ஹனாவின் போர் முழக்கம் - உரிமைக்குரல் : https://www.facebook.com/share/p/189yZuZxQp/2 points
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
சில விடயங்களில் இவர்கள் மாறவே மாட்டார்கள். இந்தியாவில் பிஜேபி அரசு ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை கொண்டு இழுப்பது போல........... வலு அமைச்சர் ஆகியிருக்கும் குமார ஜெயக்கொடி எங்களுக்கு ஒரு வருடம் முந்தியவர். ஆனாலும் நாங்களும், அவர்களும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். அந்த வருடம் இரண்டு வகுப்புகளை ஒன்றாக உள்ளே எடுத்திருந்தனர். அமைச்சரவையில் அநுர குமார, குமார ஜெயக்கொடி என்று 'நாலு ரூபாய் சாப்பாட்டுச் சட்டம்' கொண்டு வந்தவர்கள் பலர் இருக்கின்றர் என்று நினைக்கின்றேன்..............🤣2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsகோசான், நீங்கள் ஜேவிபிஇடம் ஏதோ பெரிதாக எதிர்பார்த்து உங்களுக்கு கிடைக்கவில்லைபோல் இருக்கிறது. இங்கேயே குந்தியிருந்து போட்டு தாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள், ஒருவேளை பார் லைசென்ஸ் ஆக இருக்குமோ?2 points
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அட அனுரவே யாழ்பாணத்தான் பிறகு நமக்கென்ன கவலை. அனுர பிரிகேட் 🤣 மூணு சீட் கொடுத்த யாழ்பாண மானஸ்தனுக்கும் நாலு ரூபா சாப்பாடா…ஐயகோ🤣. இதுதான் ஜேவிபி. 2/3 எடுத்தவுடன் என் பி பி முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக களர்கிறது. உள்ளே இருந்து வர்க்கவாத, இனவாத ஜேவிபி வரும் போது…. கோசானின் ஊகங்கள் எல்லாம் புரியும்🤣.2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsகோசான் இரண்டு தமிழர் அமைச்சர் என்று வயிறு வலிக்க சிரிக்கின்றீர்களே... எனக்குத் தெரிந்து ராமலிங்கம் சந்திரசேகர் அனுராவின் கட்சியில் 30 - 35 வருடங்களுக்கு மேல் இருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப் பட்டவர்கள் மிகக் குறுகிய காலத்தில் அனுர கட்சியில் இணைக்கப் பட்டவர்களே ஆகும். அதிலும் வைத்தியர் எஸ். சிறி பவானந்தராஜா ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்... இரண்டு மாதத்திற்குள் கட்சியில் இணைக்கப் பட்டவர். (இவருடன்... திருமலை நீதிபதி இளஞ்செழியனையும் இணைத்து வடக்கில் போட்டியிட அனுர கட்சியில் முயற்சிக்கப் பட்டது. நீதிபதி இளஞ்செழியன் ஏனோ பின்வாங்கி விட்டார்.) தேர்தலுக்காக இணைக்கப்பட்ட புதியவர்களுக்கு பாராளுமன்றத்துக்கு தெரிவானவுடனேயே அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். 🙃 நீங்கள் ஏதோ... எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது போலுள்ளது. 😂 அதைவிட... இந்தத் தேர்தலில், நாடெங்கிலும் உள்ள முஸ்லீம்களும் அனுர கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு ஒரு அமைச்சுப் பதவியும் கொடுக்கப் படவில்லையே. அவர்கள் இதுவரை கவலையை தெரிவிக்கா விட்டாலும், உள்ளுக்கு புழுங்கிக் கொண்டு இருப்பார்கள். நீங்கள் இரண்டு கிடைத்தது என்று திருப்தி அடையுங்கள். 😃 "போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து." 💪 கிடைத்ததை வைத்து சந்தோசப் படுபவன்.. முழு மனிதன். 😂 கிடைத்ததும் காணாது என்று.. அடம் பிடிப்பவன்.. அரை மனிதன். 🤣2 points
-
யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
2 pointsயாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பக்கத்தில்... மாசேதுங் சிலை வைக்க வேணும். அத்துடன்... அங்கு இனி காந்தி ஜெயந்தி, காந்தி வசந்தி... எல்லாம் இனி கொண்டாட முடியாது என்று தடை செய்ய வேண்டும். 😂2 points
-
கருத்து படங்கள்
2 pointsஇராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பாதைகள் திறக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்தோம் எனும் பொருள் பட இந்த கருத்தோவியம் உள்ளது.2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார். பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார். பொது நிர்வாக மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன பதவியேற்றுள்ளார். நீதி, தேசிய ஒருமைப்பாட்டு சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவியேற்றுள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவியேற்றுள்ளார். விவசாயம், காணி, கால்நடை மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராக லால் காந்த பதவியேற்றுள்ளார் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றுள்ளார். கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார். கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே பதவியேற்றுள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி பதவியேற்றுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபால பதவியேற்றுள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிமல் ரட்நாயக்க பதவியேற்றுள்ளார். பௌத்த சாசன அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவியேற்றுள்ளார். சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பதவியேற்றுள்ளார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவியேற்றுள்ளா். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே பதவியேற்றுள்ளார் வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவியேற்றுள்ளார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கலாநிதி கிருஷாந்த சில்வா அபேயசேன பதவியேற்றுள்ளார் தொழில் அமைச்சராக கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோ பதவியேற்றுள்ளார். வலுசக்தி அமைச்சராக பொறியியலாளர் குமார ஜயகொடி பதவியேற்றுள்ளார். சுற்றாடல் அமைச்சராக வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி பதவியேற்றுள்ளார் அனுர புராணம் பாடிய அனைவருக்கும் இது சமர்ப்பணம்...தமிழனுக்கு முதல் தீர்வு கொடுத்தாகிவிட்டது....இதிலை டக்கியின் இடத்துக்கு ராமலிங்கம்..பவத்தசாசன அமைச்சர் பார்வையிலேயெ அவரு நடவடிக்கை விளங்குது....சரோசாவும் ..போலியோ மருந்து கொடுக்கத்தான்...யாப்பாணிஸ் போங்கடா போய் பனங்கொட்டையை சூப்புங்கடா.2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ.. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனக்கு ஈமெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். ‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி... நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...2 points
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதன் பிரதிபலிப்பாக மதவாதத்தை கையிலெடுத்து முஸ்லீம்களை அநுரவுக்கெதிரா கொந்தளிக்க மறைமுகமாக சொல்கிறார். கால சக்கரம் எதிராக சுழல்கிறது, கடந்த பல தாசாப்தங்களாக தமிழர்களுக்கெதிராக வன்மம் கக்கி சிங்களவர்களுடன் ஒட்டியுறவாடி பதவி பொருளாதாரம் என்று அனுபவித்த இனத்திலிருந்து விலகி அரசியலாலும் சிங்கள மக்கள் புரிதலாலும் படிப்படியாக சிங்கள சமூகம் தமிழர்களை நோக்கி நகர்கிறது. வெறும் மதவாத வன்மம் கக்கி சிங்களவர்களுக்கெதிராய் இவர்கள் காய் நகர்த்தினால் சிங்களம் தமிழர்களுடன் இறுக்கமான நட்பை பேணி இவர்கள் சமூகத்தை தள்ளி வைக்கும் நிலையில்தான் இந்த தேர்தலின் பின்னர் இலங்கை நிலவரம் இருக்கிறது. இவர்களுக்கு ஆப்பு வைத்ததில் பெரும்பங்கு சிங்களவர்களுடன் கூட இருந்தே அவர்களுக்கு குழிபறித்த சஹ்ரானுக்கு இருக்கிறது. தமிழர்களுடன் பெரும்போரில் ஈடுபட்டிருந்தாலும் நேருக்கு நேர் மோதிய நேர்மையான எதிரிகள் என்பது பல சிங்களவர்கள் மனதில் உண்டு.1 point
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
1 point
-
யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
1 pointசிறப்பு ....அந்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வருமானம் வரும் வழிகளை செய்ய வேண்டும்... இந்தியா போல கோவில்களை கட்டி வருமானங்களை இந்தியாவுக்கு எடுத்து செல்லாமல் ... அனுராவின் அரசு பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமானமாக்கி(இந்தியா மட்டும் சர்வதேசம் இல்லை) புலம்பெயர்ஸ் நேரடியாக யாழ்மண்ணை முத்தமிட வழிவகை செய்தால் பொருளாதாரம் நிச்சயமாக தன்னிறைவு பெரும் மத்திய அரசு வரிகள் ஊடாக வருமான்ம் பெறலாம் (யாவும் கற்பனையே)1 point
-
ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கையின் உண்மைத் தகவல்
"அமைதியான் சூழலை இயற்கை தான் உருவாக்கி தந்துள்ளது "என எழுதியுள்ளார்களே அங்க தான் வெளிப்படையாக தெரிகின்றது இடதுசாரி செம்பு,அனுரா சொம்பு என்பது ....வலதுசாரி எழுதியிருந்தால் இறைவன் ,கடவுள் என ......1 point
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
🤣.................. கடைசியாகக் கிடைத்த தகவல்களின் படி, சுமந்திரனை இன்னும் ஒரு மாதத்திற்கு இணையத்தில் தாறுமாறாக அடிக்கலாம் என்றும், அதுவரை மற்ற எந்த நடவடிக்கைகளைப் பற்றியும் பேசத் தேவையில்லை என்றும் முக்கியமானவர்கள் சிலர் கூடி முக்கியமான ஒரு முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. ஆதலால் இப்போதைக்கு அநுர எங்களிடமிருந்து தப்பிப் பிழைத்து இருக்கட்டும்.................😜.1 point
-
விசேட தேவையுடைய ஒருவருக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளித்த தேசிய மக்கள் சக்தி
இது ஒரு நல்ல விடயம் சகோ. வரவேற்போம். சில வலிகளை நம்மை தவிர வேறு யாரால் அதிகம் உணரமுடியும்?1 point
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
பனங்கொட்டை சுவைத்தல் மட்டும்தானாம்🤣 போக போக தெரியும். அமைச்சரான தமிழர் இருவரும் கதிர்காமர் 2.0 டமாரா குணநாயகம் 2.0 தான். முத்திரை தயார் - மையில் தோய்ப்பதா இல்லையா என அடுத்த நடவடிக்கைகளை பார்த்து முடிவு செய்வோம். கப்டன்_சிறி அனுர பிரெகேட் கட்டளை அதிகாரி.1 point
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அமெரிக்காவிற்கான அநுரவின் குரல்தரவல்ல அதிகாரி அண்ணன் ரசோதரன் அவர்கள் அமைச்சரவை பதவியேற்பின் யாழுக்கு விஜயம்!1 point
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
முஸ்லீம் எவருக்கும் மந்திரிப் பதவி இல்லையோ.. எங்கேயோ இடிக்குதே 🧐 மருத்துவர் ஷாஃபி யையும் உள்வாங்கி செய்த பாவங்களை கழுவிக்கொள்ளுங்கள்.1 point
-
ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கையின் உண்மைத் தகவல்
ஆமாமா அது உண்மையா இருக்க வாய்ப்பிருக்கு ஏனென்றால் அமெரிக்க அதிபர்கூட இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்காரே .... இது யாரோ அநுர சொம்புகள் செய்த வேலை, மாவீரர்நாளை சுதந்திரமாக நினைவுகூர மைத்திரி, ரணில் ஆட்சியிலேயே அனுமதித்துவிட்டார்கள். அநுர வந்து புதிதாக செய்ய என்ன இருக்கு? அநுர உங்களுக்கு பிடித்திருந்தால் அவர் புகழ் பாடுங்கள் தப்பில்லை, எதுக்கு விடாத அறிக்கையை விட்டதென்று சொல்லி அண்டா கணக்குல உருட்டி விடுறீங்க?.1 point
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வினா 45) 4 போட்டியாளர்கள் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் முதல் இடம் பிடிக்கும் என கணித்திருக்கிறார்கள் 1)வாலி - 46 புள்ளிகள் 2)பிரபா- 45 புள்ளிகள் 3)வாதவூரான் - 44 புள்ளிகள் 4) நிலாமதி - 42 புள்ளிகள் 5) வீரப்பையன் - 41 புள்ளிகள் 6)அல்வாயான் - 40 புள்ளிகள் 7)தமிழ்சிறி - 39 புள்ளிகள் 8)புரட்சிகர தமிழ் தேசிகன் - 39 புள்ளிகள் 9)goshan_che - 39 புள்ளிகள் 10)வில்லவன் - 38 புள்ளிகள் 11)நிழலி - 38 புள்ளிகள் 12)கிருபன் - 37 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 14)நூணாவிலான் - 37 புள்ளிகள் 15)ரசோதரன் - 37 புள்ளிகள் 16)சுவைபிரியன் - 36 புள்ளிகள் 17)கந்தையா 57 - 35புள்ளிகள் 18)சசிவர்ணம் - 33 புள்ளிகள் 19)வாத்தியார் - 31 புள்ளிகள் 20)புலவர் - 30 புள்ளிகள் 21) அகத்தியன் - 30 புள்ளிகள் 22)குமாரசாமி - 30 புள்ளிகள் 23)புத்தன் - 29 புள்ளிகள் 24) சுவி - 28 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 52, 54 ,59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 75)1 point
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தமிழர் சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவது இந்த புளுகு வேட்டையர் என்ற ஜடி தான்.1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அவர்கள் நான்கு மதத்தலைவர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருந்தனர். முகநூலில் படம் இருக்கு1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சபாநாயகர் பதவி....பிரதி அமைச்சர் பதவி...எல்லாம் வடக்கன்ஸுக்கு....... வடக்கண்ஸ் முழு மாகாண்த்திலும் என்.பி.பி க்கு ஆதரவு (12 சீட்)கொடுத்தால் தான் மத்தியில் அமைச்சு கிடைக்கும்...புலம் பெயர்ஸ் எ.டி.கெ பணம் கொடுக்க தான் தேவை அமைச்சு பதவிக்கு அல்ல .1 point- வடக்கு பறிபோனது கிழக்கு பலமடைந்தது
வடக்கில் சிங்கள முஸ்லிம் குடியேற்றங்களாலோ, குடியேற்றவாசிகளாலோ இடையூறுகள் இல்லை. மற்றும் நீங்கள் சுட்டியிருப்பதுபோல் வெளிநாடுவாழ் உறவுகளின் உதவியென்று நிதியும் கிடைக்கும் அதேவேளை, எந்தவொரு அரசியல் புரிதலுமற்ற யுரூப்பர்களுடைய பரப்புரையின் தாக்கம் போன்றனவும் தாக்கம் செலுத்தியுள்ளன. எடுத்துக்காட்டிற்காக 1300மீற்றர் வீதி திறப்பைப் பேசியவர்கள்,அங்கே காணிகளுக்குக் கம்பிக்கட்டை போட்டு வேலி அமைப்பது பற்றி வாயே திறக்கவில்லை.1 point- யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
1 pointஇந்திய தூதரகத்தை மூடி யாழ் நகரில் சீனா தூதரகம் திறக்குமாறு யாழ் நகர் ஜெ.வி.பி தோழர்கள் கோரிக்கை வைக்க வேணும்...அப்படி யாழ்ப்பாண்த்தில் என்ன தான் இருக்கு ...சீனர்களுக்கு1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அல்வாயானின் ஊர் விசிட்டு...கந்தப்புவின் தேர்தலுக்கு நல்லா உதவி சேய்யுது...மீண்டும் தேர்தல் ஆணையாளருக்கு நன்றி1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
32) நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெரும் என 15 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். இவர்களில் வாலியும் நிலாமதியும் தேசிய மக்கள் சக்தி 5 இடங்களை பிடிக்கும் என சரியாக கணித்திருக்கிறார்கள். 1)பிரபா - 45 புள்ளிகள் 2)வாலி - 45 புள்ளிகள் 3)வாதவூரான் - 44 புள்ளிகள் 4)வீரப்பையன் - 41புள்ளிகள் 5)நிலாமதி - 41 புள்ளிகள் 6)Alvayan - 40 புள்ளிகள் 7)தமிழ்சிறி - 39 புள்ளிகள் 8)goshan_che - 39 புள்ளிகள் 9)நிழலி - 38 புள்ளிகள் 10)கிருபன் - 37 புள்ளிகள் 11) புரட்சிகர தமிழ் தேசீகன் - 37 புள்ளிகள் 12)நூணாவிலான் - 37 புள்ளிகள் 13)ரசோதரன் - 37 புள்ளிகள் 14)வில்லவன் - 36 புள்ளிகள் 15)கந்தையா 57 - 35புள்ளிகள் 16)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 17)சுவைபிரியன் - 34 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 33 புள்ளிகள் 19)வாத்தியார் - 31 புள்ளிகள் 20)புலவர் - 30 புள்ளிகள் 21) அகத்தியன் - 29 புள்ளிகள் 22)புத்தன் - 29 புள்ளிகள் 23)குமாரசாமி - 29 புள்ளிகள் 24) சுவி - 28 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 48, 52 ,59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 72)1 point- தமிழரசின் எதிர்காலமும் சிறீதரன், சுமந்திரனின் பொறுப்பும்
தமிழரசின் எதிர்காலமும் சிறீதரன், சுமந்திரனின் பொறுப்பும் November 17, 2024 வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து இந்தத் தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் தனியொரு கட்சியைச் சேர்ந்த கூடுதல் எண்ணிக்கையானவர்கள் என்றால் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே. தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்னரும் இரு மாகாணங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்கள். ஆனால், இந்த தடவை நடந்திருப்பதைப் போன்று ஒரு தேசிய கட்சி அதுவும் ஓர் இடதுசாரிக்கட்சி தமிழ்பேசும் மக்களை பாரம்பரியமாக பிரதிநிதித்துவம் செய்துவந்த அரசியல் கட்சிகளை இவ்வாறாக தோற்கடித்ததில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆறு பாராளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியவாத கட்சிகளினால் ஒவ்வோர் ஆசனத்துக்கு மேல் பெறமுடியாமல் போகிற அளவுக்கு அவற்றை பின் தள்ளியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய நான்கு மாவட்டங்களிலும் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றிய முன்னிலைக் கட்சியாக தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்திருக்கிறது. இந்த அரசியல் கோல மாற்றத்துக்கு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழ்க்கட்சிகளின் செயல்பாடுகளில் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியும் வெறுப்பும் காரணமா அல்லது ஜனாதிபதி திஸநாயக்கவினதும் அவரது கட்சியினதும் கொள்கைகள் மீதான ஈர்ப்பு காரணமா? தமிழ் மக்கள் வாக்களித்த முறையை தமிழ்க் கட்சிகளும் தேசிய மக்கள் சக்தியும் எவ்வாறு வியாக்கியானப்படுத்துகின்றன என்பது அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விடயமாகும். இரு மாகாணங்களிலும் தங்களுக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்ததை ஒரு வெற்றியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில தலைவர்கள் பெருமைப்படுகிறார்கள். முன்னைய பாராளுமன்றத்தில் தங்களுக்கு இருந்த ஆறு ஆசனங்களையும் விட இரு ஆசனங்களை கூடுலாக தந்து தமிழ் மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் இயக்கமாக மீண்டும் அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாகவும் அந்த தலைவர்கள் தர்க்கநியாயம் செய்கிறார்கள். ஆனால், தமிழ் அரசுக் கட்சி பெற்றிருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கை குறித்து பெருமைப்படுவதையும் விட தேசிய மக்கள் சக்தியினால் இரு மாகாணங்களிலும் தமிழ்க் கட்சிகளை பின்தள்ளி எவ்வாறு கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது என்பதை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டியதே முக்கியமானதாகும். கடந்த காலம் குறித்து சுயபரிசோதனை செய்வதில் ஒரு போதும் அக்கறை காட்டாத தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தற்போதைய நிலைவரம் குறித்தாவது ஆழ்ந்து சிந்திப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் கட்சியாக – எட்டு ஆசனங்களுடன் என்றாலும் – விளங்கும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள் அதன் எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் அரசுக் கட்சி அதன் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத அளவுக்கு உட்பூசல்களினால் சீர்குலைந்து கிடக்கிறது. பாரம்பரியமாக அதன் கோட்டையாக விளக்கிய யாழ்ப்பாண மாவட்டமே கைவிட்டுப் போயிருக்கிறது. இவ்வருட முற்பகுதியில் திருகோணமலையில் நடைபெற்ற தலைவர் தேர்தலுக்கு பிறகு கட்சி உள்ளுக்குள் எத்தனை முகாம்களாக இருக்கிறதோ தெரியாது, ஆனால் வெளிப் படையாக இரு முகாம்களாக பிளவுபட்டு நிற்கிறது. கடந்த பதினைந்து வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வந்த மதியாபரணம் சுமந்திரனும் சிவஞானம் சிறீதரனுமே அந்த எதிரெதிர் முகாம்களின் ‘தளபதிகள்’. சுமந்திரனால் இந்த தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவாக முடியவில்லை. அதேவேளை அவர் தெரிவாகாமல் போனதும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக கூடுதல் விருப்பு வாக்குகளுடன் தான் தெரிவானதும் இன்றைய தமிழர் அரசியலின் கோலங்களுக்கு மத்தியில் சிறீதரன் பெரிதாகப் பெருமைப்படக்கூடிய அம்சங்கள் அல்ல. தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர இணக்கப்போக்கை கடைப்பிடிப்பதிலும் தலைமைத்துவத் தகராறை முடிவுக்கு கொண்டுவருவதிலும் சிறீதரன் அக்கறை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விலக்கிக்கொள்ளச் செய்து கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கான வழிமுறைகளை அவர் கடைப்பிடிக்கவேண்டும். தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்களில் அனுபவம் கூடியவர் என்ற முறையில் அதன் பாராளுமன்றக் குழுவின் தலைவராக பதவியேற்று தனது தலைமைத்துவ ஆளுமையை சீறீதரன் நிரூபிக்க வேண்டும். சிந்தித்துச் செயல்படாவிட்டால் எதிர்காலத் தேர்தல்களில் பாதிப்பு மேலும் மோசமாகலாம். சுமந்திரனும் இது விடயத்தில் தனது பக்குவத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம். https://eelanadu.lk/தமிழரசின்-எதிர்காலமும்-ச/1 point- சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
தமிழினத்தின் இன்றைய நிலைக்கு ரொய்லற் ஊடகங்களுக்கும் சம பங்கிருக்கிறது.1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு..உங்கள் பொறுமை பெருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள் தேர்தல் ஆணையாளர் அவர்களே..1 point- அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
1 pointஐரோப்பிய அரசாங்கங்கள் புடாபெஸ்ட் உச்சிமாநாட்டில் ட்ரம்ப் தொடர்பான உறவுகள் குறித்து விவாதிக்கின்றன Alex Lantier 12 November 2024 மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக வியாழக்கிழமை ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC - European Political Community) தலைவர்கள் புடாபெஸ்டில் ஒன்றுகூடினர். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் முறைசாரா உச்சிமாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டங்கள், ட்ரம்பின் வெற்றியால் ஏற்பட்ட அரசியல் பூகம்பத்திற்கு ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் முதல் எதிர்வினையாக அமைந்தன. குறிப்பிடத்தக்க வகையில், ட்ரம்ப் 2021 ஜனவரி 6 அன்று 2020 தேர்தல் முடிவை மாற்றும் நோக்கில் தீவிர வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்டதோடு, அமெரிக்காவில் தேர்தல் முறையையே முடிவுக்குக் கொண்டுவருவது பற்றியும் பேசியிருந்தார். இடமிருந்து, போர்ச்சுகலின் பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ (Luis Montenegro), ஜேர்மனியின் சான்சிலர் ஓலாஃப் ஷொல்ஸ் (Olaf Scholz), குரோஷியாவின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் (Andrej Plenkovic) மற்றும் பின்லாந்தின் பிரதமர் பெட்டேரி ஓர்போ (Petteri Orpo) ஆகியோர் நவம்பர் 8, 2024 வெள்ளிக்கிழமை, புடாபெஸ்டில் உள்ள புஸ்காஸ் அரங்கில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் போது ஒரு முழுமையான அமர்வில் கலந்து கொள்கிறார்கள். [AP Photo/Denes Erdos] புடாபெஸ்ட் உச்சிமாநாடானது ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பாசிச போக்கிற்கான எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும். இந்த மாநாடு, பில்லியனர் பாசிசவாதி ட்ரம்ப் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தொடரும் வரை அவருடன் இணைந்து செயல்பட ஐரோப்பிய தலைவர்கள் விரும்புவதை சமிக்ஞை செய்தன. அமெரிக்காவுடனான வளர்ந்து வரும் ஏகாதிபத்தியங்களிளுக்கு இடையிலான பதட்டங்களை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மீது கடுமையான வரிகளை விதிக்கும் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை, தொழிலாளர் வர்க்கத்தின் வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் மீதான கடும் தாக்குதல்கள் மூலம் தீர்க்க அவர்கள் முயல்கின்றனர். அப்பட்டமாக மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிவலது ஆட்சிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் அணிதிரண்டு வருகின்ற நிலையில், வர்க்க போராட்டத்தின் ஒரு வெடிப்பார்ந்த தீவிரப்படலே இயக்கத்தில் வைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு இடையே ஆழமாக வேரூன்றிய மற்றும் இறுதியில் கையாளவியலாத பதட்டங்கள் நிலவுகின்ற அதேவேளையில், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ட்ரம்புடன் சேர்ந்து வெளிநாட்டில் ஏகாதிபத்தியப் போரையும் உள்நாட்டில் வர்க்கப் போரையும் நடத்துவதன் மூலமாக அவற்றைத் தீர்க்க நம்புகிறது. ஒரு சமீபத்திய பொலிட்டிகோ (Politico) கட்டுரை குறிப்பிட்டது, “ட்ரம்ப் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் ஆழமாக மதிப்பிழந்துள்ளார், அவரை அரவணைத்துப் பெறுவதற்கு அங்கே ஒரு சில அரசியல் புள்ளிகளே உள்ளன.” அமெரிக்க தேர்தல்களில் பிரெஞ்சு மக்களில் வெறும் 13 சதவீதத்தினர் மட்டுமே ட்ரம்பை ஆதரித்ததாக ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. எவ்வாறிருப்பினும், ஒரு பாசிசவாத அமெரிக்க ஜனாதிபதி, “ஒரு அனுகூலமான அதிர்ச்சியாக இருப்பார்... தொற்றுநோய் அல்லது உக்ரேன் போரைத் தொடரும் எரிசக்தி நெருக்கடி போன்றவைகளாகும்” என்று வாதிட்ட அநாமதேய ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகளை பொலிடிகோ மேற்கோள் காட்டியது. மற்றொருவர் கூறுகையில், ட்ரம்ப் “கசப்பான மருந்தை” வழங்குவார் என்றும், இராணுவ செலவினங்களை அதிகரிப்பதை நியாயப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உதவுவார் என்றும் தெரிவித்தார். இருப்பினும், உச்சிமாநாட்டின் வடிவமே நேட்டோ ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான தீவிர புவிசார் அரசியல் பதட்டங்களை வெளிப்படுத்தியது. உக்ரேன் போர் தொடங்கிய பின்னர், 2022 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் EPC-ஐ முதன்முதலில் முன்மொழிந்தார். இது ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகள், பிரிட்டன், துருக்கி, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கான ஒரு மன்றமாக, ரஷ்யாவை தனிமைப்படுத்த, அதனுடன் மோதல் ஏற்படுத்த மற்றும் இறுதியில் அதனை பலவீனப்படுத்த திட்டங்களை விவாதிக்க அமைக்கப்பட்டது. ட்ரம்ப்பின் வெற்றி ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC) அடித்தளத்தை உலுக்கியுள்ளது. உக்ரேன் படைகள் முழு முன்னணி அரங்குகளிலும் பின்வாங்கி, நாட்டிற்குள் வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலையில், ட்ரம்ப் இப்போரை “தோல்வியடைந்ததாக” குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இப்போரை “தூண்டியதாக” குற்றம்சாட்டி, வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் போருக்காக செலவிட்ட நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைக் குறித்து விமர்சித்துள்ளார். அமெரிக்காவுக்கு “பங்களிப்பு செய்யாத” ஐரோப்பிய நேட்டோ நாடுகளை ரஷ்யா “விரும்பியபடி நடத்த” அனுமதிப்பதாகவும் அவர் மிரட்டியுள்ளார். ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே ஜேர்மன் அரசாங்கம் கவிழ்ந்தது, EPC உச்சிமாநாடானது உத்தியோகபூர்வமாக முடிவடைந்த பின்னர்தான் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் வியாழனன்று இரவு உணவுக்கு வந்தார். பேர்லினில் நடந்த அரசாங்க பேச்சுவார்த்தைகள் ஷொல்ஸை முழு EPC கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து தடுத்ததாக பேர்லின் தெரிவித்தது. ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சிமாநாட்டில், மக்ரோன் ட்ரம்பின் வெற்றியை ஏற்றுக்கொண்டார், அவரது ஆட்சி “சட்டபூர்வமானது” என்றும் அவரது கொள்கைகள் “நல்லவை” என்றும் குறிப்பிட்டார். மக்ரோன் கூறியதாவது: “ஐரோப்பிய ஒன்றியத்தில் நமது பங்கு டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிப்பதல்ல, அது நல்லதா கெட்டதா என்பதை மதிப்பிடுவதும் அல்ல. அவர் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் அமெரிக்க மக்களின் நலன்களைப் பாதுகாப்பார், இது நியாயமானது மற்றும் நல்லதுதான்.” ட்ரம்பின் கீழும் கூட உக்ரேனில் ரஷ்யாவுடனான போர் தொடர்வதை உறுதிப்படுத்துவதே ஐரோப்பாவின் முக்கிய நலனாகும் என்று மக்ரோன் வாதிட்டார்: “ரஷ்யா இந்த போரில் வெல்லக்கூடாது என்பதே எங்கள் நலன்கள்... ஏனென்றால் ரஷ்யா வெற்றி பெற்றால், ‘நீங்கள் விரிவாக்கவாதியாக இருக்க முடியும்’ என்று நாம் கூறும் ஒரு ஏகாதிபத்திய சக்தி நமது எல்லைகளில் இருக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும்.” அதேநேரத்தில், மக்ரோன் நேட்டோவுக்குள்ளான பிளவுகளைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவில் இருந்து ஒரு தனியான ஐரோப்பிய ஒன்றிய இராணுவ ஸ்தாபகம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறைக்கு அழைப்பு விடுத்தார். அவர் இவ்வாறு கூறினார், “ஐரோப்பியர்களாகிய நாம் நமது பாதுகாப்பை அமெரிக்கர்களிடம் எக்காலத்திற்கும் ஒப்படைக்க வேண்டியதில்லை. நாங்கள் இப்போது பாதுகாப்பு தீர்வுகளை வழங்குபவர்கள் என்ற செய்தியை அனுப்புவது முக்கியம் என்று நான் நம்புகிறேன் ... இந்த வகை தொழில்துறை உற்பத்தியில் ஐரோப்பிய முன்னுரிமைக் கொள்கையை வெளிப்படையாக அறிவிப்பது.” மக்ரோன் இவ்வாறு கேள்வி எழுப்பினார்: “மற்றவர்களால் எழுதப்பட்ட வரலாற்றை - விளாடிமீர் புட்டின் தொடங்கிய போர்கள், அமெரிக்கத் தேர்தல்கள், சீனாவின் முடிவுகள் - நாம் வெறுமனே படிக்க விரும்புகிறோமா? அல்லது நாமே வரலாற்றை உருவாக்க விரும்புகிறோமா?” ஐரோப்பிய அரசியல் சமூகம் (EPC) ஒரு நம்பகமான, சுயாதீனமான இராணுவ சக்தியாக உருவெடுக்க முடியும் என மக்ரோன் வலியுறுத்தினார்: “வரலாறு, நலன்கள் மற்றும் விழுமியங்களால் இவ்வளவு ஒன்றிணைந்த 700 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வேறு எந்தச் சந்தையும் இல்லை, இந்த மேஜையைச் சுற்றியுள்ள நம்மைத் தவிர.” இபிசி உச்சி மாநாட்டில் ஷொல்ஸ் பேசவில்லை என்றாலும், ஜேர்மன் முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த கன்னைகளும் ரஷ்யா மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக ட்ரம்புடன் கூட்டணி வைக்கும் அதேபோன்றதொரு கொள்கையை முன்வைத்து வருகின்றன. மலிவான ரஷ்ய எரிவாயுவுக்கு பதிலாக அமெரிக்காவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அதிக விலைக்கு வாங்குவதன் மூலமாகவும், மற்றும் ரஷ்யாவுடனான போருக்காக பெரும் அளவிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதன் மூலமாகவும், ஐரோப்பாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதன் மூலமாக ட்ரம்பின் கோபத்தைத் தணிக்க பிரான்க்பியூர்ட்டர் அல்லகேமேன் ஸிட்டுங் (FAZ - Frankfurter Allgemeine Zeitung) அழைப்பு விடுத்தது. அமெரிக்க வர்த்தக தடையாணைகளுக்கு ஐரோப்பாவின் பலவீனத்தை ஒப்புக் கொண்ட அதேவேளையில், FAZ பத்திரிகை இவ்வாறு கூறியது: “இருந்தும் ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பற்றதாக இல்லை. [அமெரிக்க] திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, விவசாய பொருட்கள் அல்லது ஆயுதங்களை வாங்குவதன் மூலம் வர்த்தக உபரியைக் குறைக்க அது முயற்சிக்கலாம். ட்ரம்பைப் பொறுத்த வரையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான மற்றும் குறிப்பாக ஜேர்மனியுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை என்பது ஒரு வெறித்தனமாக உள்ளது. ஆனால் அவரது மிக முக்கியமான பொருளாதார ஆலோசகர்களும் மிகவும் சீரான வர்த்தகத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அமெரிக்க இறக்குமதி வரிவிதிப்புகளை விட சற்றே அதிகமான சுங்கவரிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் குறைக்கக்கூடும்.” இதுபோன்ற சலுகைகளைக் கொண்டு ட்ரம்ப் தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ள முடிவெடுத்தாலும் கூட, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இந்த கொள்கை இரண்டு வெளிப்படையான தடைகளை முகங்கொடுக்கிறது. முதலாவதாக, ஐரோப்பா மீதான ட்ரம்பின் பொருளாதார கோரிக்கைகளின் சுமைகளை தொழிலாளர்களின் தோள்களில் சுமக்கச் செய்வதன் மூலமாக ட்ரம்புடன் ஒரு கூட்டணியைப் பின்தொடர்வதானது, பெரிய, அணுஆயுதமேந்திய இராணுவ சக்திகளுடனான போர்களில் ஐரோப்பாவின் ஈடுபாட்டை ஆழப்படுத்தும். உலக வரைபடத்தில் இருந்து ஈரானை “துடைத்தெறிவது” உட்பட, மத்திய கிழக்கில் போரைத் தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களை ட்ரம்ப் தெளிவாக சமிக்ஞை செய்துள்ளார். உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர விரைவாக பேச்சுவார்த்தை நடத்த தனது “ஒப்பந்தத்தின் கலை” தன்னை அனுமதிக்கும் என்று ட்ரம்ப் கூறினாலும், அவரது கூற்றில் நம்பகத்தன்மை இல்லை. சீன இறக்குமதிகள் மீது பாரிய சுங்கவரிகளை விதிக்க ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார், இது சீன தொழில்துறை மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை சீரழிக்கும். ரஷ்யாவின் எல்லைகளில் மூலோபாயரீதியில் அமைந்துள்ள முக்கிய ரஷ்ய கூட்டாளிகளை நசுக்குவதற்கும் ட்ரம்ப் சூளுரைத்து வருகின்ற நிலைமைகளின் கீழ், ட்ரம்ப் அவற்றை வழங்கினாலும், மாஸ்கோவுக்கு அவரது சமாதான முன்மொழிவுகளை நம்புவதற்கு எந்த காரணமும் இருக்காது. ட்ரம்பின் தேர்தல் வெற்றி இரவில் மாஸ்கோவோ பெய்ஜிங்கோ அவரை அழைத்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. அன்றைய தினம், முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வெடேவ் கூறுகையில், ட்ரம்பால் போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது என்றும், அவர் முயன்றால் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியைப் போல படுகொலை செய்யப்படலாம் என்றும் தெரிவித்தார்: “’நான் ஒரு ஒப்பந்தத்தை முன்வைப்பேன்’ மற்றும் ‘எனக்கு சிறந்த உறவு உள்ளது’ போன்ற வெற்று வார்த்தைகளை கூறும் சோர்வடைந்த ட்ரம்ப்பும் அமைப்புமுறையின் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டியிருக்கும். அவரால் போரை நிறுத்த முடியாது. ஒரு நாளில் அல்ல, மூன்று நாட்களில் அல்ல, மூன்று மாதங்களில் கூட அல்ல. அவர் உண்மையிலேயே முயற்சித்தால், அவர் புதிய JFK ஆக மாறக்கூடும்.” இரண்டாவதாக, இராணுவ தீவிரப்பாடு உள்நாட்டில் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை முகங்கொடுக்கிறது, ஏனென்றால் அது தொழிலாளர்களின் இழப்பில் நிதியளிக்கப்பட உள்ளது. ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ சேவையை குறைக்க தயாரிப்பு செய்து வரும் செலவுக் குறைப்பு ஆணையத்தின் தலைவராக உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை நியமிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். பிரான்சின் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 112 சதவீதமாகவும், அமெரிக்க கடன் 122 சதவீதமாகவும், இத்தாலியின் கடன் 140 சதவீதமாகவும் உள்ள நிலையில், பல தசாப்த கால போர்கள் மற்றும் வங்கி பிணையெடுப்புகளின் ஒட்டுமொத்த நிதியத் தாக்கத்தின் கீழ் தேசிய அரசாங்கங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஐரோப்பிய போர் திட்டங்களுக்கும் காட்டுமிராண்டித்தனமான சமூக தாக்குதல்களும் அவசியப்படுகின்றன. வோல்ஸ்வாகனில் (Volkswagen) மலைப்பூட்டும் வகையில் 30,000 வேலை வெட்டுக்கள் மற்றும் பெல்ஜியத்தில் அவுடி (Audi) உற்பத்தியை நிறுத்துவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர், ஐரோப்பியத் தொழில்துறை முழுவதிலும் பாரிய பணிநீக்கங்கள் நடந்து வருகின்றன. இந்த வாரம் பிரான்சில் இன்னும் ஆயிரக்கணக்கான வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன. Michelin இல் 3,700 வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன. இதில் Cholet, Vannes ஆலைகள் மூடப்பட்டதும், Auchan பல்பொருள் அங்காடித் தொடரில் 2,400 வெட்டுக்களும் அடங்கும். பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள அரசாங்கங்கள் சமூக வேலைத்திட்டங்களில் இருந்து பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை வெட்டுவதற்காக சிக்கன வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு தயாரிப்பு செய்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியமானது இத்திட்டங்களை மூடிய கதவுகளுக்குப் பின்னால் தீவிரமாக விவாதித்து வருகிறது. “ஒரு புதிய புவிசார் அரசியல் யதார்த்தத்திற்கு” மத்தியில், அது “ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்க உறவுகள்” மீதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் “போட்டித்தன்மை மீதும்” ஒரு மூலோபாய விவாதத்தை நடத்தும் என்று புடாபெஸ்டில் வெள்ளிக்கிழமை உச்சிமாநாட்டின் திட்டநிரல் வெற்றுத்தனமாக குறிப்பிட்டது. மேலதிக சுதந்திர-சந்தை சீர்திருத்தங்களுக்கும், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புத் தொழில்துறையைப் பலப்படுத்துவதற்கும், மற்றும் வணிக நடவடிக்கைகளைப் பாதிக்கும் நெறிமுறைகளைக் குறைப்பதற்கும் அழைப்புவிடுத்து, “புதிய ஐரோப்பிய போட்டித்தன்மை உடன்படிக்கை மீதான புடாபெஸ்ட் பிரகடனம்” என்ற சுருக்கமாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு அறிக்கையை அது ஏற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கைகள், பாதுகாப்பு செலவினங்களில் 100 பில்லியன் யூரோ அதிகரிப்புக்கு நிதியாதாரம் திரட்டுவதற்காக ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்சில் கடந்த ஆண்டு நடந்த வேலைநிறுத்தங்களைப் போலவே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஆழமான எதிர்ப்பை முகங்கொடுக்கும். ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அதிவலது ஆட்சிக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதே முக்கிய பிரச்சினையாகும். அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, சர்வதேச சோசலிசப் புரட்சியின் முன்னோக்கில் தொடுக்கப்பட்ட அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் போராட்டம் அவசியமாகும். https://www.wsws.org/ta/articles/2024/11/12/pjrc-n12.html1 point- அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
1 pointஐரோப்பிய யூனியனில் உள்ள ஒரு சில நாடுகள் காலமாற்றத்திற்கு ஏற்ப தங்களை சுதாரிக்க முடியாமல் திணறி தள்ளாடுகின்றன. 😀1 point- சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
ஓம்…ஆனால் அதுக்கே நமக்கு முள்ளத்தண்டு சிலிர்த்து விடும்🤣.1 point- தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
அதுதான் சிரிப்பு அடையாளம் போட்டேன் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்1 point- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ஆப்பு செருகிடுச்சா அல்லது ஏறி குந்தினீர்களா???🤣🤣🤣🤣 சாணியில் தோய்த்து முகத்தில் குத்தியிருக்கிறார்கள்🤣🤣🤣1 point- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
என்னது! அரசியலில் சூழ்ச்சியும் தந்திரமும் நிறைந்தவர் சுமந்திரனா? அவர் தமிழ் மக்களை, அவர்களின் மூச்சான தேசியத்தை உடைப்பதிலும் முழு மூச்சாக சூழ்ச்சியும் செய்தார், தந்திரமும் செய்தார் ஒழிய அரசியலில் மக்களுக்கு எதுவும் சாதிக்கவில்லை. அதனாலேயே இன்று அரசியலில் கேள்விக்குறியாக இருக்கிறார். பேச்சாளர் பதவியை கைவிடாமல் வைத்திருப்பது, தனக்கு வரும் அவமானங்களை தடுப்பதற்கு, ஊடக சந்திப்புகளை நடத்தி மற்றவர்களை பேசவிடாமல் தடுப்பதற்கே. போனதடவை மாவையர் தோற்றபோது என்ன நடந்தது என்பதை கொஞ்சம் மனக்கண் கொண்டுவந்து பாருங்கள். மாவையரை அறியாமல், எத்தனை அறிக்கை விட்டார், எத்தனை ஊடக சந்திப்புகளை நடத்தினார், முடிவுகளை எடுத்தார், நியமனங்களை செய்தார். இன்று, தான் எவ்வாறு செயற்படுகிறார்? அவர் யாரையும் எதையும் மதிப்பதில்லை, தன்னிச்சைப்படியே நடப்பார். இது ஒன்றும் அவரது சொந்த வீடல்ல, தான் நினைத்தபடி நடந்து கொள்வதற்கு. தன்னாலேயே கட்சி இவ்வளவு பாரிய பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளது, அதிலும் இவருக்கு மீண்டெழ முடியாத அவமானம், தானே தேடிக்கொண்டது. இருந்தாலும் அதை எப்படி மாற்றி கதைவிடுகிறார் எனப் பாருங்கள். இதெல்லாம் பிறவிக்குணம். இவரை மாற்ற முடியாது, நாம் மாறவேண்டும். இவரை விட்டு கட்சியை மீட்டெடுக்க வேண்டும். இப்படியெல்லாம் அதுவும் அரசியலில் வெட்கக்கேடு. சர்வதேசமே, அட இவரிடமா பேசினோம் நாம். என நினைப்பார்கள் நிஞாய தர்மம் இல்லாதவர்.1 point- இராசவன்னியரின் மகன் திருமணம்
1 point- இராசவன்னியரின் மகன் திருமணம்
1 point- இராசவன்னியரின் மகன் திருமணம்
1 point- இராசவன்னியரின் மகன் திருமணம்
1 pointதிரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.✍️1 point - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.