Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3061
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    12678
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/18/24 in Posts

  1. முதலில் இளம்பிறையனை "யாழ் பல்கலை விரிவுரயாளர்" என்று அழைப்பதை தமிழ்வின் கைவிட வேணும். அவர் ஒரு "உடற்பயிற்சிப் போதனாசிரியர்" (demonstrator). "உடற்பயிற்சிப் போதனாசிரியருக்கும்" அரசியலுக்கும் என்ன தொடர்பு😂? சும்மா, பல்கலையில் காவல் கடமையில் இருக்கும் Marshal ஐ எல்லாம் கொண்டு வந்து ஒரு அரசியல் நிகழ்ச்சி செய்யும் ரொய்லெற் ஊடகங்கள் எங்கள் சாபக் கேடு!
  2. தமிழ்வின்னில் வரும் செய்திகளை நம்பாதீர்கள்............... இவர்கள் ஒரு ஊடகப் பொய்யர்கள்........... எங்களின் அரசியல் பொய்யர்கள் போலவே............... வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், உடுப்பிட்டி வீதியில் 'தமிழ்க் கடை' என்று ஒரு கடை இருக்கின்றது. அங்கு பனம் பொருட்கள் மற்றும் இதே போன்ற பொருட்களை மட்டுமே விற்கின்றனர். அங்கு பனங்கட்டி எப்போதும் கிடைக்கும். சடையாண்டி வைரவர் கோயிலின் முன்னே இந்தக் கடை உள்ளது. முன்னொரு காலத்தில் இந்தக் கடையின் பெயர் சித்தி விநாயகம் ஸ்டோர்ஸ் என்று ஞாபகம்..................
  3. நிழலி சில கேள்விகளுக்கு முதலில் பதில் அளிக்கவில்லை. அதனால் அவருக்கு அக்கேள்விகளுக்கு விடை என்ன என்றும் , சில தேர்தல் மாவட்டங்களில் 2 கட்சிகள் முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் முதலில் எழுதியதினால் ஒரு கட்சியின் பெயரை மட்டும் எழுதும் படி கேட்டிருந்தேன். அவர் இக்கேள்விகளுக்கு பதில் எழுதும் போது தேசிய மக்கள் கட்சி 154 இடங்களை பிடிக்கும் என்றும் பதில் அளித்திருந்தார். 1-5 வித்தியாசத்தினால் பதில் அளித்தினால் அவருக்கு 1 புள்ளிகள் கிடைக்கவேண்டும். கவனிக்காமல் விட்டதினால் மனம் வருந்துகிறேன். 1)பிரபா - 43 புள்ளிகள் 2)வாதவூரான் - 42 புள்ளிகள் 3)வாலி - 41 புள்ளிகள் 4)வீரப்பையன் - 39 புள்ளிகள் 5) Alvayan - 38 புள்ளிகள் 6) நிழலி - 38 புள்ளிகள் 7)தமிழ்சிறி - 37 புள்ளிகள் 8)கிருபன் - 37 புள்ளிகள் 9)goshan_che - 37 புள்ளிகள் 10)நூணாவிலான் - 37 புள்ளிகள் 11)நிலாமதி - 37 புள்ளிகள் 12) ரசோதரன் - 37 புள்ளிகள் 13) கந்தையா 57 - 35புள்ளிகள் 14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள் 15) வில்லவன் - 34 புள்ளிகள் 16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள் 17)சசிவர்ணம் - 33 புள்ளிகள் 18)சுவைபிரியன் - 32 புள்ளிகள் 19)புலவர் - 30 புள்ளிகள் 20)வாத்தியார் - 29 புள்ளிகள் 21) புத்தன் - 29 புள்ளிகள் 22)அகத்தியன் - 27 புள்ளிகள் 23)குமாரசாமி - 27 புள்ளிகள் 24) சுவி - 26 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 , 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 68)
  4. உண்மைதான்.... சுமந்திரனின் பஞ்சாயத்து பார்க்கிறதாலேயே பலரின் நேரங்கள், யாழில் பல பக்கங்கள் வீணாகி உள்ளது. 😂 சுமந்திரன் தோற்றதுடன், இனி... உந்த தொல்லை, புடுங்குப்பாடு ஒன்றும் இராது. 🤣 ஆபிரஹாம் சுமந்திரனை... தோல்வி அடையச் செய்த, யாழ்.மாவட்ட மக்களுக்கு நன்றி. 🙏
  5. கொதித்தெழும் ஷிராஸ் யூனஸ் (தமிழர்கள் தேசிய போராட்டம் குறித்த மிகவும் மோசமான பார்வை கொண்டவர்)
  6. no need divercity.....இதற்கு தான் அதிகம்பேர் தம்ஸ் அப் போட்டிருக்கினம் ...அதாவது படிச்ச காய்கள் பன்முகதன்மையை விரும்பவில்லை....
  7. போனமுறை போய் பருத்திதுறை காபரி ல் நின்று தமிழ்நாட்டை பார்த்தவரெல்லோ...இந்தமுறை போய் ஆறுதலாய் இருந்து பார்க்கப் போறார்....நானு ஊருக்குப்போய் ..அதேகாபரில்போய் ஆறுதாலாய் இருந்து பார்த்தனான்...இசுடாலினின் ..தலையிலை கிடக்கிற டோப்பே தெரியுது..😎
  8. 👍................. மீண்டும் மீண்டும் கட்டுக்கதைகளையும், வதந்திகளையும் பரப்பும் ஊடகங்களை முற்றாக தவிர்க்க வேண்டும், பையன் சார். உங்களின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. அத்துடன் தமிழ் கொலைகளைச் செய்யும் ஊடகங்களும் தவிர்க்கப்படவேண்டும். முக்கியமாக ஆதவன் போன்ற செய்தித் தளங்கள். தமிழ், தமிழ் என்று நாங்கள் சொல்லிக் கொண்டே, இவைகளை எப்படி ஆதரிக்க முடியும்............. ஒரு தனிநபர் தமிழில் தவறுகள் விடுவதை புரிந்து கொள்ளலாம். தமிழ்மொழி மிகக் கடினமான ஒரு மொழி.... ஆனால் ஒரு ஊடகம் என்று குழுவாக இருப்பவர்கள், இயங்குபவர்கள் இதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது.............. மொழி மீது ஒரு பற்றும், மரியாதையும் அவர்களுக்கு இல்லை என்றே இதை எடுக்கவேண்டும்.
  9. உரிமைக் குரல் - சுப.சோமசுந்தரம் சுமார் ஓராண்டுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டில் மிகக் குறைந்த வயதில் (21) பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் என்ற தொல் பழங்குடி இன சமூகச் செயற்பாட்டாளர் தமது இனத்தின் போர் முழக்கமான ஹக்கா எனும் மரபுப் பாடலொன்றுடன் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அது உலகம் முழுவதும் வைரல் ஆனது. அது குறித்து எனது அப்போதைய முகநூற் பதிவின் இணைப்பு : https://www.facebook.com/share/p/14bJyTCimP/ 1840 ல் நியூசிலாந்து பிரிட்டனின் ஆதிக்கத்தில் வந்தபோது பிரிட்டிஷ் அரசுக்கும் நியூசிலாந்தின் மவுரி பழங்குடி இன மக்களுக்கும் இடையே 'வைதாங்கி ஒப்பந்தம் (Treaty of Waitangi)' கையெழுத்தானது. அதன்படி சில சிறப்புச் சலுகைகளும் உரிமைகளும் மவுரி இன மக்களுக்கு வழங்கப்பட்டன. நியூசிலாந்து 1986 ல் முழுமையாக விடுதலை பெற்ற பின்னரும் நியூசிலாந்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் வைதாங்கி ஒப்பந்தம் பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் மசோதாவை அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மாற்றத்தால் மவுரி இன மக்களின் சில உரிமைகள் பறி போகும் என்பது வெளிப்படை. சமத்துவ நோக்கில் அம்மாற்றம் கொண்டு வரப்படுவதாக நியூசிலாந்து அரசு அறிவிப்பது வேடிக்கையும் வேதனையும். நியூசிலாந்தின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதமான மவுரி இன மக்களிடமிருந்து அம்மசோதாவிற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பு பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் அந்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்து அவர்களது போர் முழக்கமான ஹக்கா பாடலைப் பாடி அறச்சீற்றத்துடன் அப்பாடலுக்கான நடனத்தை மேற்கொண்டார். பிற மவுரி இன உறுப்பினர்களும் அந்த ஆவேச ஆடல் பாடலில் கலந்து கொள்ள, பாராளுமன்றம் அமளிதுமளியானது. மீண்டும் இந்நிகழ்வு உலகம் முழுவதும் வைரல் ஆனது. இத்தகைய நிகழ்வுகள் நம் தாய்த் திருநாட்டில் அதிகமாகவே நடைபெறுவன. நமது நாட்டின் காட்சித் திரை நம் மனக்கண்ணில் விரிவது தவிர்க்க இயலாத ஒன்று. குஜராத்தில் மதச்சிறுபான்மையினர் மீது சொல்லில் விவரிக்க இயலாத வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்போதும் அதன் மீது நீண்ட காலம் விசாரணை நடைபெறும்போதும் அதுபற்றி வாயே திறக்காத குடியரசுத் தலைவரான A.P.J அப்துல் கலாம் உங்கள் நினைவுக்கு வரலாம். மணிப்பூர் பற்றியெரியும் போது அது பற்றிக் கள்ள மௌனம் சாதிக்கும் பிரதமரை ஓரளவு புரிந்து கொள்ளலாம்; பற்றியெரிந்த/பற்ற வைக்கப்பட்ட குஜராத்தின் அன்றைய முதல்வரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ? ஆனால் மணிப்பூர் கலவரத்தில் பெரும்பாலும் சிறுபான்மையினரான பழங்குடி குக்கி இன மக்களே பாதிப்புக்கு உள்ளாகும்போது, பழங்குடி இனத்தவரான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாதிக்கும் மௌனத்தை எந்த வகையில் சேர்ப்பீர்கள் ? உலகளவில் பேசப்படும் நியூசிலாந்தின் ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் பற்றியெல்லாம் திரௌபதி முர்முவுக்குத் தெரியுமா ? தன்மானம் காக்கத் தலைவிரி கோலமான மகாபாரதத் திரௌபதியின் கதையாவது தெரியுமா ? குலத்தொழிலுக்கு இட்டுச் செல்லும் விஸ்வகர்மா யோஜனாவை ஆதரிக்கும் எல்.முருகன் போன்றோர் தம் சந்ததியினரைக் குலத்தொழிலுக்குத் தயார் செய்து விட்டார்களா ? மேற்கண்ட காட்சித் திரை உங்கள் மனக்கண்ணில் விரிந்தால், உங்கள் பெற்றோர், ஆசிரியர், தோழர்கள் உங்களைச் சரியாக வளர்த்திருக்கிறார்கள் என்று பொருள். நியூசிலாந்தின் வைதாங்கி ஒப்பந்தமானது, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் அக்டோபர் 1947 ல் மகாராஜா ஹரி சிங் - மவுண்ட்பேட்டன் பிரபு இடையில் ஏற்பட்ட நிலையான ஒப்பந்தத்தை உங்களுக்கு நினைவுபடுத்தினால் நீங்கள் நல்ல தலைவர்களால் வழிநடத்தப் பட்டுள்ளீர்கள் என்று பொருள். இனி உலகெங்கும் ஒலிக்கும் நியூசிலாந்து ஹனாவின் போர் முழக்கம் - உரிமைக்குரல் : https://www.facebook.com/share/p/189yZuZxQp/
  10. சில விடயங்களில் இவர்கள் மாறவே மாட்டார்கள். இந்தியாவில் பிஜேபி அரசு ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை கொண்டு இழுப்பது போல........... வலு அமைச்சர் ஆகியிருக்கும் குமார ஜெயக்கொடி எங்களுக்கு ஒரு வருடம் முந்தியவர். ஆனாலும் நாங்களும், அவர்களும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். அந்த வருடம் இரண்டு வகுப்புகளை ஒன்றாக உள்ளே எடுத்திருந்தனர். அமைச்சரவையில் அநுர குமார, குமார ஜெயக்கொடி என்று 'நாலு ரூபாய் சாப்பாட்டுச் சட்டம்' கொண்டு வந்தவர்கள் பலர் இருக்கின்றர் என்று நினைக்கின்றேன்..............🤣
  11. கோசான், நீங்கள் ஜேவிபிஇடம் ஏதோ பெரிதாக எதிர்பார்த்து உங்களுக்கு கிடைக்கவில்லைபோல் இருக்கிறது. இங்கேயே குந்தியிருந்து போட்டு தாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள், ஒருவேளை பார் லைசென்ஸ் ஆக இருக்குமோ?
  12. அட அனுரவே யாழ்பாணத்தான் பிறகு நமக்கென்ன கவலை. அனுர பிரிகேட் 🤣 மூணு சீட் கொடுத்த யாழ்பாண மானஸ்தனுக்கும் நாலு ரூபா சாப்பாடா…ஐயகோ🤣. இதுதான் ஜேவிபி. 2/3 எடுத்தவுடன் என் பி பி முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக களர்கிறது. உள்ளே இருந்து வர்க்கவாத, இனவாத ஜேவிபி வரும் போது…. கோசானின் ஊகங்கள் எல்லாம் புரியும்🤣.
  13. கோசான் இரண்டு தமிழர் அமைச்சர் என்று வயிறு வலிக்க சிரிக்கின்றீர்களே... எனக்குத் தெரிந்து ராமலிங்கம் சந்திரசேகர் அனுராவின் கட்சியில் 30 - 35 வருடங்களுக்கு மேல் இருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப் பட்டவர்கள் மிகக் குறுகிய காலத்தில் அனுர கட்சியில் இணைக்கப் பட்டவர்களே ஆகும். அதிலும் வைத்தியர் எஸ். சிறி பவானந்தராஜா ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்... இரண்டு மாதத்திற்குள் கட்சியில் இணைக்கப் பட்டவர். (இவருடன்... திருமலை நீதிபதி இளஞ்செழியனையும் இணைத்து வடக்கில் போட்டியிட அனுர கட்சியில் முயற்சிக்கப் பட்டது. நீதிபதி இளஞ்செழியன் ஏனோ பின்வாங்கி விட்டார்.) தேர்தலுக்காக இணைக்கப்பட்ட புதியவர்களுக்கு பாராளுமன்றத்துக்கு தெரிவானவுடனேயே அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். 🙃 நீங்கள் ஏதோ... எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது போலுள்ளது. 😂 அதைவிட... இந்தத் தேர்தலில், நாடெங்கிலும் உள்ள முஸ்லீம்களும் அனுர கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு ஒரு அமைச்சுப் பதவியும் கொடுக்கப் படவில்லையே. அவர்கள் இதுவரை கவலையை தெரிவிக்கா விட்டாலும், உள்ளுக்கு புழுங்கிக் கொண்டு இருப்பார்கள். நீங்கள் இரண்டு கிடைத்தது என்று திருப்தி அடையுங்கள். 😃 "போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து." 💪 கிடைத்ததை வைத்து சந்தோசப் படுபவன்.. முழு மனிதன். 😂 கிடைத்ததும் காணாது என்று.. அடம் பிடிப்பவன்.. அரை மனிதன். 🤣
  14. யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பக்கத்தில்... மாசேதுங் சிலை வைக்க வேணும். அத்துடன்... அங்கு இனி காந்தி ஜெயந்தி, காந்தி வசந்தி... எல்லாம் இனி கொண்டாட முடியாது என்று தடை செய்ய வேண்டும். 😂
  15. இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பாதைகள் திறக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்தோம் எனும் பொருள் பட இந்த கருத்தோவியம் உள்ளது.
  16. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார். பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார். பொது நிர்வாக மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன பதவியேற்றுள்ளார். நீதி, தேசிய ஒருமைப்பாட்டு சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவியேற்றுள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவியேற்றுள்ளார். விவசாயம், காணி, கால்நடை மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராக லால் காந்த பதவியேற்றுள்ளார் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றுள்ளார். கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார். கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே பதவியேற்றுள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி பதவியேற்றுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபால பதவியேற்றுள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிமல் ரட்நாயக்க பதவியேற்றுள்ளார். பௌத்த சாசன அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவியேற்றுள்ளார். சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பதவியேற்றுள்ளார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவியேற்றுள்ளா். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே பதவியேற்றுள்ளார் வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவியேற்றுள்ளார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கலாநிதி கிருஷாந்த சில்வா அபேயசேன பதவியேற்றுள்ளார் தொழில் அமைச்சராக கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோ பதவியேற்றுள்ளார். வலுசக்தி அமைச்சராக பொறியியலாளர் குமார ஜயகொடி பதவியேற்றுள்ளார். சுற்றாடல் அமைச்சராக வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி பதவியேற்றுள்ளார் அனுர புராணம் பாடிய அனைவருக்கும் இது சமர்ப்பணம்...தமிழனுக்கு முதல் தீர்வு கொடுத்தாகிவிட்டது....இதிலை டக்கியின் இடத்துக்கு ராமலிங்கம்..பவத்தசாசன அமைச்சர் பார்வையிலேயெ அவரு நடவடிக்கை விளங்குது....சரோசாவும் ..போலியோ மருந்து கொடுக்கத்தான்...யாப்பாணிஸ் போங்கடா போய் பனங்கொட்டையை சூப்புங்கடா.
  17. ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ.. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனக்கு ஈமெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். ‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி... நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...
  18. 😁😁😁😁😁😁😁 வாசித்தேன் சிரித்தேன்😁..................
  19. எப்படியும் உங்களின் தம்பியை பிரதமர் ஆக்கியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள்...........🤣. அங்கே போனால் என்ன, போகாவிட்டால் என்ன அண்ணை, இப்ப ஒன்றாக முழுநேரம் யாழ் களத்தில் நிற்பதில் தானே இரு வாழ்க்கைகளும் வந்து நிற்கின்றன.............😀.
  20. அறிவேன் அய்யா...அந்த பில்டப்பு...இடையிலைவாற கொமடிசீன் மாதிரி...மனசிலை போட்டுக்காதீங்க.. சரோசா -சிங்களத்தில்தான் எடுத்தார்....இந்த அமைச்சர்களின் முகமே அவர்களின் எதிர்கால நடவடிக்கையை புடம் போட்டுக் காட்டுகிறது
  21. சிறப்பு ....அந்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வருமானம் வரும் வழிகளை செய்ய வேண்டும்... இந்தியா போல கோவில்களை கட்டி வருமானங்களை இந்தியாவுக்கு எடுத்து செல்லாமல் ... அனுராவின் அரசு பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமானமாக்கி(இந்தியா மட்டும் சர்வதேசம் இல்லை) புலம்பெயர்ஸ் நேரடியாக யாழ்மண்ணை முத்தமிட வழிவகை செய்தால் பொருளாதாரம் நிச்சயமாக தன்னிறைவு பெரும் மத்திய அரசு வரிகள் ஊடாக வருமான்ம் பெறலாம் (யாவும் கற்பனையே)
  22. "அமைதியான் சூழலை இயற்கை தான் உருவாக்கி தந்துள்ளது "என எழுதியுள்ளார்களே அங்க தான் வெளிப்படையாக தெரிகின்றது இடதுசாரி செம்பு,அனுரா சொம்பு என்பது ....வலதுசாரி எழுதியிருந்தால் இறைவன் ,கடவுள் என ......
  23. 👍............ சம்பளத்தை வாங்குங்கோ.............. ஆனால் 16 சமையல்காரர்களும் கூடவே வேண்டும் என்று அடம்பிடிக்காதேங்கோ என்று தான் மக்கள் சொல்லியிருக்கின்றார்கள்...........🤣 ஜெயலலிதா தனக்கு மாதம் ஒரு ரூபா சம்பளம் போதும் என்று ஒரு தடவை சொல்லிச் செய்திருந்தார். பின்னர் அவரும் சசிகலாவும் நின்ற அந்த ஒரு படத்தில் போட்டிருந்த நகைகளே பல கிலோ கணக்காக இருந்தது.......... இப்படி எத்தனையோ பேர்கள் வந்து போய்விட்டனர். எவரும் தியாகிகளாக மாற வேண்டும் என்றில்லை.... சாதாரணமாக இருந்து விட்டுப் போனாலே போதும்..........
  24. தமிழ்வின்னையும், ஆதவனையும் நம்பி ஆற்றில் இறங்கலாமா..................🤣. என்னுடைய ஊர் ஒட்டுகளில் இருந்து வரும் உலகப் பொருளாதாரக் கொள்கை உரையாடல்கள் போன்றன அவை.................
  25. பகிர்விற்கு நன்றி வளவன் அண்ணா. நல்ல குரலும் அர்த்தம் தொனிக்கும் பாடலும்.
  26. பத்து வரி பேய் கதை. ஓர் இரவு நேரம்…ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிக் கொண்டிருக்கும் போது…தன் மனைவியின் மேல் உள்ள கோபத்தில் அவளைக் கொன்று, யாருக்கும் தெரியாமல் பிணத்தை புதைத்து விட்டான். மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவை பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்தான். ஆனால் மகன் அம்மாவை பற்றி கேட்கவில்லை. இரண்டாவது நாலாவது கேட்பான் என நினைத்தான். ஆனாலும் கேட்கவில்லை. வழக்கம்போல் மகன் சந்தோசமாக இருந்தான். மூன்றாவது நாள் மகனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தான், "உனக்கு நம் வீட்டில் ஏதாவது மாற்றம் தெரியுதா? _என்கிட்ட ஏதாவது கேட்கணும் போல இருந்தா கேளு". மகன் மெல்ல கேட்டான்:"மூணு நாளா அம்மா ஏன் உனக்கு பின்னாடியே நிக்கிறாங்கப்பா"?
  27. இது ஜே ஆர் சாவகச்சேரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு 1981 இல் சொன்னது தான். இப்ப இவர். அதன் பின்னர் நடத்தவை நாடறியும். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை.. சுயநிர்ணய உரிமையை.. பிரிவினைவாதம் என்ற வகைக்குள் வைத்து சில பத்தாயிரம் வாக்குகளால் மதிப்பிடக் கூடாது. ஏனெனில்.. இதே சனாதிபதியை வடக்குக் கிழக்கு மக்கள் நிராகரித்து வாக்களித்ததையும் கவனத்தில் கொள்வது சிறப்பு. இப்படி வாக்குச் சீட்டு அரசியல் பேசுவதாக இருந்தால். அடிப்படையில் அனுர ஒரு சிங்கள பெளத்த பேரினவாத சனாதிபதி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். எனி ஜே வி பி சார்ப்பில் நின்று தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை வாங்கிய தமிழர்கள் தான் இவருக்கு கள நிலவரத்தைச் சொல்லிக் கொடுக்கனும். இன்றேல்.. கடந்த காலத்தில் சிங்கள பெளத்த பெருந்தேசிய பேரினவாதக் கட்சிகளுக்கு அளித்த பதிலையே தமிழ் மக்கள் இவைக்கும் அளிப்பார்கள். எதுக்கும் சொறீலங்கா சனாதிபதி சந்திரசேகரத்திடம் ஆலோசனை பெறுவது நல்லது.
  28. நீங்கள் பகிடி விடக்கூடாதண்ணை! இது வரிக்குதிரை தனது உயிரைக் காப்பாற்றும் இறுதி முயற்சி.
  29. எங்கட மண்ணில எங்கட அடிப்படை உரிமயை கூட சிங்களவன் அனுமதித்தால் தான் அனுபவிக்கலாமாம். இது தான் எந்த சிங்களவன் ஆட்சிக்கு வந்தாலும் நிலை. அதுசரி.. யாழ்ப்பாணம் தெரிவு செய்த அனுர விசுவாசத் தமிழர்களின் நிலை நிலைப்பாடு என்னவோ..?! தேர்தலில் வென்றதும் கதையக் காணம். வாக்குப் போட்டவைக்கு உறைச்சால் சரி.
  30. இப்ப‌டி அர‌சிய‌ல் போட்டி ந‌ட‌த்துவ‌து மிக‌வும் சிர‌ம‌ம் கூடுத‌ல் நேர‌ம் எடுக்கும் எல்லா புள்ளி விவ‌ர‌ங்க‌ளையும் ச‌ரி பார்க்க‌னும் உற‌வுக‌ள் கோட்டு கொண்ட‌மைக்கு இன‌ங்க‌ போட்டிய‌ ந‌ட‌த்தின‌ உங்க‌ளுக்கு கோடான‌ கோடி நன்றி க‌ந்த‌ப்பு அண்ணா🙏................................
  31. அப்ப அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லையோ. மாகாணசபைத் தேர்தலுக்கு தான் அடிபோடுறார்
  32. நீங்கள் சொல்வது சரி. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.
  33. சபாநாயகர் பதவி....பிரதி அமைச்சர் பதவி...எல்லாம் வடக்கன்ஸுக்கு....... வடக்கண்ஸ் முழு மாகாண்த்திலும் என்.பி.பி க்கு ஆதரவு (12 சீட்)கொடுத்தால் தான் மத்தியில் அமைச்சு கிடைக்கும்...புலம் பெயர்ஸ் எ.டி.கெ பணம் கொடுக்க தான் தேவை அமைச்சு பதவிக்கு அல்ல .
  34. தமிழினத்தின் இன்றைய நிலைக்கு ரொய்லற் ஊடகங்களுக்கும் சம பங்கிருக்கிறது.
  35. கந்தப்பு..உங்கள் பொறுமை பெருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள் தேர்தல் ஆணையாளர் அவர்களே..
  36. ஆம் கடஞ்சா நீங்கள் சொல்வதே சரி, ஆனாலும் ஆணோ பெண்ணோ ஒரு இனத்தை அசிங்கபடுத்தியிருக்கிறார் என்பதே பிரச்சனை.
  37. ஏனப்பா திராவிட அன்னை என்று கண்ணதாசன் எழுதவில்லை. பாடல் எழுதப்பட்ட போது திராவிட இயக்கத்தில் இருந்தாலும் எம்ஜியாருக்கே பாட்டு எழுதினாலும் உண்மைகளை மறைக்க முடியாது.திராவிடம் என்று ஒரு சொல்லை மட்டும் தான் அப்போது சார்ந்திருந்த திராவிட இயக்கத்துக்காகப் போட்டுவிட்டு தமிழ்மன்னர்களையும் தமிழ் அன்னையையும் பாடியிருக்கிறார்.தானாடாவிட்டாலும் தசையாடும்.கண்ணதாசன் கண்ணதாசன்தான். blood is thicker than water.
  38. ஓணாண்டியர் உங்களுக்கு கோவண்ணா கபிதனின் நிலை விளங்கவில்லை. சும் தமிழ் தேசியம் என்றால் இவரும் தமிழ் தேசியம் என்பார் இல்லை என்றால் இவரும் இல்லை என்பார்.
  39. தென் தமிழீழ மக்கள் தலைவர் வழியில் நின்று வரலாற்றைப் புதுப்பித்திருக்கிறார்கள். வட தமிழீழ மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அவ்வளவுதான். எனவே தேசக் கோட்பாட்டுக்கு ஒரு பங்கமும் இல்லை. யாரும் பதட்டப்பட வேண்டாம்.
  40. வினா இலக்கம் 1 24 போட்டியாளர்கள் கஜேந்திரகுமார் அவர்கள் வெற்றி பெறுவார் என்று கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 29 புள்ளிகள் 2)கந்தையா 57 - 25 புள்ளிகள் 3)தமிழ்சிறி -25 புள்ளிகள் 4)வீரப்பையன் - 25 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ் தேசியன் - 25 புள்ளிகள் 6) Alvayan - 24 புள்ளிகள் 7) வாதவூரான் - 24 புள்ளிகள் 😎 வாலி - 24 புள்ளிகள் 9) நிலாமதி - 24 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 22 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 22 புள்ளிகள் 12)வில்லவன் - 22 புள்ளிகள் 13)நிழலி - 22 புள்ளிகள் 14)ரசோதரன் - 22 புள்ளிகள் 15)கிருபன் - 20 புள்ளிகள் 16)goshan_che - 20 புள்ளிகள் 17)நுணாவிலான் - 20 புள்ளிகள் 18)வாத்தியார் - 19 புள்ளிகள் 19)சசிவர்ணம் - 19 புள்ளிகள் 20)புலவர் - 18 புள்ளிகள் 21)சுவி - 17 புள்ளிகள் 22) புத்தன் - 16 புள்ளிகள் 23) அகத்தியன் - 14 புள்ளிகள் 24) குமாரசாமி - 14 புள்ளிகள் 25) வசி - 9 புள்ளிகள் 26) தமிழன்பன் - 6 புள்ளிகள் இதுவரை 1, 4, 7, 11, 17, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 49)
  41. வணக்கம் பங்காளி , பாத்து கனகாலம்., சார் யாருன்னு தெரியுதா? இவர்தான் நோர்வே சுமந்திரன்
  42. அனுரவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு வெறுமனே Youtubers தான் காரணம் என்று சொல்வது உண்மையான காரணங்களை மலினப்படுத்தி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற செயல். இதே யாழில் பெப்ரவரியில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கட்சிகளை நிராகரித்து சிங்கள தேசிய கட்சிகளை நோக்கி செல்லப் போகின்றனர் என்று தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளேன். காரணம் தமிழ் தேசிய கட்சிகளின் போலி வேசமும் அவர்களை இயக்கும் சுயநலம் பிடித்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளும். அத்துடன் இன்றைய நிலையில் நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை பற்றி மட்டுமே பேசிக் கொண்டு தமிழ் மக்கள் இம்மி அளவேனும் முன்னேறும் எந்த வழிமுறையையும் இவர்கள் செய்யவில்லை. கோசான் யாழ் சென்ற வந்த பின் இவ் வருட தொடக்கத்தில் எழுதிய பயணக்கட்டுரையிலும் ஜேவிபி இற்கான ஆதரவு அங்கு பெருகின்றது என குறிப்பிட்டு இருந்தார். இனி என்ன, அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த தேசிய மக்கள் சக்தியால் தமிழ் மக்களுக்கு நாசம் விளைய வேண்டும் என்று திட்டிக் கொண்டும் எதிர்பார்த்துக் கொண்டும் இருக்க வேண்டியது தான். ஏனெனில் அவ்வாறு செய்தால் தான் அதன் விளைவாக தமிழ் மக்கள் மீண்டும் தமிழ் தேசியம் நோக்கி நகர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில்.... ஆனால் அவ்வாறு நிகழாமல் தமிழ் சனம் எதை எதிர்பார்த்து வாக்களித்தனரோ அவை இனியாவது நிறைவேறட்டும் என உளமாற விரும்புகின்றேன்
  43. வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம்
  44. தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.