Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    88816
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19667
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    7138
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3125
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/22/24 in all areas

  1. அர்ச்சுனாவிற்கு உண்மையாகவே புலிகளின்மீதும், புலிகள் தலைமைமீதும் தீவிர காதல் இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் பெயர்களை தேவையற்ற இடங்களில் பாவிப்பதை தவிர்க்கவேண்டும். தமது பதவியையும் அதிகாரத்தையும் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டையும் வைத்து மெளனமாக முன்னாள் போராளிகள், அங்கவீனமடைந்த போராளிகள், அடிப்படை வசதிகளையே இழந்த பெண் போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதை அவர்களையும் அவர்கள் வாரிசுகளையும் , கல்வி பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதையும் முதற் செயற்பாடாக வைத்திருங்கள். அதைவிட்டு புலிகள், தலைவர் என்றுபோய் பழையபடி சிங்களவனை கடுப்பாக்கி மஹிந்த கோட்டபாய கோஷ்டிகளில் தப்பில்லை தமிழர்கள்மேல்தான் தவறு என்றொரு மாயையை உருவாக்காதீர்கள். புலிகளையும் தலைவரையும் பற்றி நீங்கள் சமூக ஊடகங்களிலும் சபைகளிலும் பேசி ஏதாவது சாதிக்க முடியுமென்றால் தாராளமாக பேசுங்கள், இல்லையென்றால் இது உங்களின் வெறும் வெட்டி விளம்பரம் பாந்தாவாகவே பார்க்கப்படும். மாறாக தேவையற்ற முறையில் புலிகளின் பெயரை போற வாற இடமெல்லாம் இழுத்து எம்மண்ணில் சிங்கள படைமுகாம்களின் இருப்பையும், தேசிய பாதுகாப்பு மண்ணாங்கட்டி பாதுகாப்பு என்று நாமல் பழையபடி துவேசத்தை சிங்களவர்களுக்கு ஊட்ட முயற்சிக்கிறானே அதை மட்டுமே அதிகரிக்க உதவும். 76 வருடகால அரசியலில் இப்போதான் முதற் தடவையாக வடபகுதியில் சிங்கள தலைமை ஒன்றை வடக்கில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்ம், அடுத்த ஐந்து வருடங்களில் ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம், முடியாவிட்டால் அடுத்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எம்மண்ணில் இருந்து அவர்களை அகற்றிவிடலாம். யாழ்மண் அதை கண்டிப்பாக செய்யும் ஏனெனின் எவருக்கு வாக்கு போட்டாலும் எம் இனம் என்பதை எவருக்கும் விட்டுக்கொடுக்காத மண் அது, அது எம்மைவிட சிங்களவர்களுக்கு நன்றே தெரியும், அதனால்தான் என்பிபி வடபகுதியில் எப்படி வென்றது என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை. எமக்கு தற்போதைய தேவை கிடைத்த வாய்ப்புகளை எப்படி எம் மக்களுக்கு சார்பாக பயன்படுத்தலாம் என்பது மட்டுமே, அதை உங்களின் அர்த்தமற்ற குறளி வித்தைகளுக்கு பயன்படுத்தி சபையை குழப்பாதீர்கள் திருவாளர் அர்ச்சுனா அவர்களே. படித்தவராக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களின் பல செயற்பாடுகள் ஐந்து வயசு குழந்தைபோல் சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது.
  2. இந்த பாராளுமன்றக் "கன்ரீன்" என்பது நம் அக்பர், அருணாசலம், ஹில்டா கன்ரீன் போல ஏழை மாணவர்கள் "அடு" எடுத்துச் சாப்பிடும் இடமல்ல! உண்மையில் இது கன்ரீனே அல்ல. இலங்கையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் வழங்கப் படும் பிளேட்டுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் உணவை, மிகக் குறைந்த விலையில் பா.உக்களுக்கு வழங்கும் ஒரு சொகுசு உணவகம் இது. ஆனால், உணவிற்கான மிகுதி விலையை பொது மக்களின் வரிப் பணமும், வெளிநாடுகள் வழங்கும் பிச்சைப் பணமும் செலுத்துகின்றன. ஒரு பா.உவை சந்திக்கப் போகும் ஆட்களையும் பா.உ இந்த சலுகை விலையில் சாப்பிட அனுமதிக்கும் சலுகை முன்னர் இருந்தது, இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. நிதி விரயத்தில் உண்மையிலேயே NPP அக்கறை செலுத்தினால், இந்த குறைந்த விலை சலுகையை நீக்க வேண்டும். பா.உக்கள் தம் நண்பர்களை கூட்டிச் சென்று ஏறத்தாழ இலவசமாக சாப்பிட அனுமதிக்கும் சலுகையை நீக்க வேண்டும். மிக முக்கியமாக, "கொட்டுக்கொள" போன்ற ஆரோக்கியமான உள்ளூர் உணவுகளை அதிகரித்தால், பா.உக்கள் ஒரு வருடத்திலேயே "நிரந்தரக் கர்ப்பவதிகள்" போல தொந்தி வளர்ப்பதைத் தடுத்து அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம்😂!
  3. இலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣. https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#
  4. சாதாரண விடயங்களை நம்மவர்களே மிகைப்படுத்துகின்றார்கள். இதற்கான காரணங்கள் எரிச்சல், பொறாமை, பழிவாங்குதல் என பல வகைப்படலாம். மருத்துவர் அர்ச்சனாவின் விழிப்புணர்வின் பின் முன்புபோல் வைத்தியசாலைகளில் ஐஸ் அடிக்க முடியவில்லை, நேரத்திற்கு தனிப்பட்ட வேலைகளுக்கு கிளம்ப முடியவில்லை என எனது மருத்துவ நண்பர் ஒருவர் கூறினார். இப்போது கொஞ்சம் பயம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட கொஞ்சம் அவதானமாக மருத்துவர்கள் வேலை பார்க்கின்றார்கள். மருத்துவர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்ப்போம்.
  5. குப்பையிலிருந்து குப்பை --------------------------------------- நல்ல எழுத்தா........... அதை யார் வாசிப்பார்கள் ஏதாவது கேளிக்கையாக இருந்தால் சொல் என்றோம் முடிவு: இன்றைய எழுத்து எதுவும் நாளை நிற்காது. கலைப் படமா.................. இருக்கிற பிரச்சனை போதாதா ஜனரஞ்சகமா ஏதாவது வந்தால் சொல் என்றோம் முடிவு: வந்தது கங்குவா. அரசியல்வாதியா............ அவர் நல்ல பகிடி ஆளும் பார்க்க நல்லா இருக்கின்றார் அவரே பிரதிநிதி என்றோம் முடிவு: எல்லாமே பகிடி எதுவுமே வெற்றி இல்லை. கருத்துச் சொல்கின்றாயா......... அதெல்லாம் போதும் ஏதாவது சிரிக்க சிரிக்க இருந்தால் சொல் என்றோம் முடிவு: தினம் ஒரு மீம்ஸ். அடுத்த தலைமுறையா............ அவர்கள் தான் உருப்படாதவர்கள் ஆயிட்டுதே எல்லாமே போய் விட்டதே இனி என்ன செய்வது என்கின்றோம். உள்ளே போவது தான் வெளியே வருகின்றது.
  6. சுமந்திரனை விட... அர்ச்சுனாவும், கௌசல்யாவும் சுயேச்சையில் நின்று அதிக வாக்கு எடுத்து விட்டார்களே என்ற அவமானம், பொறாண்மை, வயித்தெரிச்சல்... இருக்கத்தானே செய்யும். சுமந்திரன்கள் ஒழுங்காக இருந்திருந்தால்... அர்ச்சுனாவுக்கும், கௌசல்யாவுக்கும் மக்கள் ஏன் வாக்களிக்கப் போகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில், அகில இலங்கையில் போட்டியிட்ட... அத்தனை சுயேட்சை வேட்பாளர்களில்... வென்ற ஒரேயொருவர் அர்ச்சுனா மட்டும் தானாம்.
  7. 5) வீரப்பையன் - 48 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் ########### ######### @குமாரசாமி தாத்தா... தன்னுடைய அரசியல் அறிவை எல்லாம் @வீரப் பையன்26 க்கு கொடுத்து, ஏணியிலை உச்சத்திலை ஏத்தி விட்டுட்டு.. கீழை 21´ம் இடத்திலை நின்று அண்ணாந்து பார்க்கின்றார். 😂 இப்பிடி ஒரு தாத்தா கிடைக்க... பையன் கொடுத்து வைத்திருக்க வேணும். 🤣
  8. அந்த குப்பைக்கு யாரும் பயப்படவில்லை .....சனியன் தொலையவேண்டும் என்ற ஆவல்
  9. 57) இலங்கை பொதுஜன முன்னணி 3 இடங்களை பிடித்திருக்கிறது. சரியாக சொன்னவர் கந்தையா 57. இவருக்கு 2 புள்ளிகள். 1-5 வித்தியாசத்துக்குள் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி 1)வாலி - 56 புள்ளிகள் 2)வாதவூரான் - 55 புள்ளிகள் 3)பிரபா- 55 புள்ளிகள் 4) அல்வாயான் - 48 புள்ளிகள் 5) வீரப்பையன் - 48 புள்ளிகள் 6) goshan_che - 48 புள்ளிகள் 7) நிலாமதி - 48 புள்ளிகள் 😎 தமிழ்சிறி - 47 புள்ளிகள் 9) ஈழப்பிரியன் - 47 புள்ளிகள் 10) புரட்சிகர தமிழ் தேசிகன் - 47 புள்ளிகள் 11) வில்லவன் - 47 புள்ளிகள் 12)நூணாவிலான் - 46 புள்ளிகள் 13) நிழலி - 46 புள்ளிகள் 14)கந்தையா 57 - 45 புள்ளிகள் 15) கிருபன் - 44 புள்ளிகள் 16) ரசோதரன் - 44 புள்ளிகள் 17) சுவைபிரியன் - 42 புள்ளிகள் 18) வாத்தியார் - 41 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 41 புள்ளிகள் 20)அகத்தியன் - 39 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் 22)புலவர்- 37 புள்ளிகள் 23) புத்தன் - 37 புள்ளிகள் 24)சுவி - 36 புள்ளிகள் 25) வசி - 27 புள்ளிகள் 26) தமிழன்பன் - 21 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 22, 24 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 91)
  10. நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு. அன்புடன் -பசுவூர்க்கோபி.
  11. @Justin @ரசோதரன் @ragaa என்ன இங்கே ஒரே “அடு பத்” கூட்டமாக இருக்கிறது🤣. நான் முன்பு ஒரு பாடசாலை அணியில் இருந்தேன் - போட்டிகள் முடிந்ததும் அருகில் உள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டல் போய் சாப்பிடுவது வழமை. அதில் ஒருவருக்கு பெயரே அடு பத் தான்🤣. வஞ்சகமில்லாமல் அடுவுக்கு அடு வுக்கு அடு எடுத்து சாப்பிடுவார்🤣. இந்த குடல்கறியை பாபத் என்பார்கள் - உவேக்…..🤮
  12. இவர்கள் சேரலாம் பிரியலாம் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் ஒன்றைமட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்: வீணை என்றால் அதனை மீட்டவேண்டும், உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும், புல்லாங்குழல் என்றால் அதனை ஊதவேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்.
  13. பலர் PSTSD யால் அவதி படுகிறார்கள். Post Sumanthiran Traumatic Stress Disorder🤣
  14. @வீரப் பையன்26 ம், நீங்களும் ஒரே வாங்கு. 😂 பையனின் அரசியல் அறிவு… இந்த வருடம் மிகப் பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 🤣
  15. மாவீரர் நாட்களில் கூட்டத்தினை வைக்காமல், வேறொரு தினத்தில் கூட்டத்தினை வைக்க.. மற்றைய கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது நல்ல ஒரு மாற்றம். 👍🏽
  16. 21)ஞானமுத்து - சிறினேசன் வெற்றி பெறுவார் என 22 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)வாலி - 56 புள்ளிகள் 2)வாதவூரான் - 54 புள்ளிகள் 3)பிரபா- 54 புள்ளிகள் 4) நிலாமதி - 48 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 47 புள்ளிகள் 6) அல்வாயான் - 47 புள்ளிகள் 7) வீரப்பையன் - 47 புள்ளிகள் 8)goshan_che - 47 புள்ளிகள் 9) ஈழப்பிரியன் - 46 புள்ளிகள் 10) புரட்சிகர தமிழ் தேசிகன் - 46 புள்ளிகள் 11) வில்லவன் - 46 புள்ளிகள் 12)நூணாவிலான் - 45 புள்ளிகள் 13) நிழலி - 45 புள்ளிகள் 14)கந்தையா 57 - 43 புள்ளிகள் 15) கிருபன் - 43 புள்ளிகள் 16) ரசோதரன் - 43 புள்ளிகள் 17) சுவைபிரியன் - 41 புள்ளிகள் 18) வாத்தியார் - 40 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 40 புள்ளிகள் 20)அகத்தியன் - 39 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் 22)புத்தன் - 37 புள்ளிகள் 23) புலவர் - 36 புள்ளிகள் 24)சுவி - 35 புள்ளிகள் 25) வசி - 27 புள்ளிகள் 26) தமிழன்பன் - 21 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 22, 24 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56, 58 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 89)
  17. ஏன் தமிழ்நாடு. எங்கடை மாவை இப்ப கொஞ்சநாளைக்கு முதல் அதை தான் செய்தார். அதுக்கு பிறகு தனுக்கு தான் தேசிய பட்டியல் இடம் வேணும் எண்டு நடு கதிரையில் போய் இருந்தவர். அதுக்கு முதல் எங்கள் பெரும் தலைவர் சமப்ந்தனும் அதையே செய்தார்.
  18. ம்ம் மக்களுக்கு மகிழ்ச்சி ஆனால் கஸ்ரப்படு வலையிட்டு பிடிப்பவர்களுக்கு நஸ்ரம் இடை தரகர்களுக்கு லாபம் இங்கு லாபத்தை அனுபவிப்பது யார் என பார்க்கிறீர்களா ?? இதுதான் இங்குள்ள நிலை யூ ரியுப் சணல் என செய்து ஒரு கஸ்ரப்பட்ட குடும்பத்தை காண்பித்து பணத்தை அடிச்ச கூட்டமும் உண்டு அதே போல டொக்டர் அருச்சுனாக்கு காசு அனுப்புன கூட்டமும் இருக்கு , வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பின கூட்டமும் இருக்கு இன்று முதல் நாளில் எதிர் கட்சி தலைவர் இருக்கும் ஆசனத்தில் இருந்து சண்டையும் போட்டு தன்ற தங்கத்தை கொண்டு போய் பாராளுமன்றத்தில் பார்வையாளர் இருக்கும் பகுதியில் அமர வச்சி என்ற தங்கம் என வீடியோவும் விட்டு இருக்கு தகவலுக்காகவே இவை🖕
  19. சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும், "ரியூசன்" வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும் போலுள்ளது. இப்போது படித்து பட்டதாரியாகும் மாணவ மாணவியர்கள்களுக்கு படிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. விளையாட்டுக்களில் இருந்து பேச்சுப்போட்டி கவிதை பாடல் என்று சிறிய வயதிலிருந்தே வெற்றி தோல்விகளையும் அடுத்தவருடன் பழகும் சந்தர்ப்பங்களையும் இழந்துவிடுகின்றனர். இதனால் படித்து பட்டங்களெடுத்தாலும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் உள்ளனர். திடீரென தோல்விகள் வரும்போது தாங்க முடியாமல் தற்கொலை செய்கிறார்கள்.
  20. என்னுடைய தந்தையார் தனியார் கல்வி, மருத்துவ துறைகளை கடுமையாக எதிர்க்கிறார்! ஆனால் நான் கேட்பேன் ஒரு சிறந்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் வாய்ப்பு, சிறந்த மருத்துவரிடம் மருத்துவம் செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க என்ன வழி என்று கேட்பேன்? அதற்கு பாடசாலையிலும் மருத்துவமனையிலும் சரியாக பணிபுரிந்தால் வேற இடம் போகத்தேவையில்லை என்பார்!
  21. இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின் இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மதசார்பற்ற நாடாக என்பிபி அரசால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். சரி அப்படி ஒரு யாப்பு உருவாக்கப்பட்டாலும் அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும்போது நிச்சயம் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளால் அது தோற்கடிக்கப்படும். சிங்கள கிறிஸ்தவர்களே அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். முடிவாக 1989 இல் ஜேவிபி 35 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்றோ அல்லது யூஎன்பி இப்படிப் படுதோல்வியடையும் என்றோ எந்தவொரு அரசியல் விற்பனரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள். அதுபோலவே 2009 இல் அழிக்கப்பட்ட எமது சுதந்திர தமிழீழ தனியரசின் கனவு 1000 ஆண்டுகளின் பின்னர் கூட நனவாகலாம் அல்லது இல்லாது போகலாம். வரலாறு நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றிருக்கின்றது. இஸ்ரேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பண்டைய எகிப்தியர் இன்று இல்லை. ஆனால் இன்றும் இஸ்ரேல் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று எகிப்தில் வாழ்பவர்கள் பின் நாட்களில் குடியேறிய அரேபியர்கள் ஆவார்கள். ஒரு 1000 வருடங்களுக்குப் பிறகு சிங்களப் பௌத்த மக்களே இல்லாமல் கூடப் போகலாம். யாருக்குத் தெரியும். இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்யும்!👀
  22. இதை ஒரு வரமாகவே எண்ணுகிறேன்.
  23. அத்தோடு மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் போல அல்லாது எங்கெங்கே மக்களுக்கு சேவை செய்யக் கூடிய வசதிகள் உள்ளன என்று ஓய்வு நேரங்களில் தேடியெடுத்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று துடிக்கிறார்.
  24. இது தான் எனது எண்ணமும். கொடுத்த கடிதத்தில் இன்று எங்கு வேணுமானாலும் இருக்கலாம் என்று எழுதிக் கொடுத்துள்ளார்கள். டாக்ரர் இருந்த கதிரையில் எந்த ஒருவருக்கான இருப்பு என்று பொறிக்கப்படவுமில்லை. இதில் டாக்ரர் கேட்டது நிஞாயமே. காலம் காலமாக அடிமையாக இருந்ததால் வேற்று இனத்தவர்கள் எது சொன்னாலும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது. இதன் பிற்பாடு சயித்துடன் சேர்ந்து செல்பியும் எடுத்துள்ளாராம்.
  25. Dr. அர்ச்சுனா ஒரு சாதாரண நபர் அல்ல. அவர் ஒரு வைத்தியர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு இன்னும் மேலதிக பொறுப்புள்ளது. எனவே அவர் மற்றவர்களை விடவும் இன்னும் பொறுப்புசெயற்பட வேண்டும்.
  26. பல திரிகளில் கொமெமெண்ட் போட்டு கதறடிப்போம்……. அந்த அடியின் தாக்கம்….. சில திரிகளில் நாம் ஏதும் எழுதாமலே அவர்களாகவே திரி திறந்து கதற வைக்கும். —————— சீமான் சந்தித்தது யாரை? ஒரு அரசியல் அநாதையை, துக்கடா பீசை. ஒரு வெற்றிபட நடிகரும், ஒரு தோல்விபட இயக்குனரும் சந்தித்துள்ளனர். இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கத்தேவையில்லை. ——————— சீமான் சந்திப்பை ஏற்பாடு செய்து, சந்திப்பில் கூட இருந்தவர் ரவீந்திரன் துரைசாமி. இவர் ஒரு சங்கி. 2024 இல் ரஜனியை மோடிக்கு ஆதரவாக பேசும்படி கேட்டேன் என அவரே கூறுகிறார். ஏ டீமிற்கு முன்பு வரவிருந்த பிளேயரை, பி டீம் கேப்டனுடன் பேச வைத்துள்ளார். இதன் எதிர்கால திட்டம் என்ன என்பதை நான் முன்பே சொல்லி விட்டேன். அமித்ஷா ஏ டீமை, பி டீமுடன் இணைக்கும் முடிவுக்கு வந்து விட்டார் போல இருக்கு. செத்த கிளிகள் இரெண்டு இனி சிங்காரிச்சா என்னா சிங்காரிக்காட்டி என்ன 🤣
  27. முதல் நாள் எவரும்... விரும்பிய இருக்கையில் அமரலாம் என்று முன்பே சொல்லப் பட்டதாம். அப்படி அவர், பிழை என்றால்... அன்றே சபாநாயகர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பாராம், அப்படி நடவடிக்கை எடுக்காத படியால்... அர்ச்சுனாவில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால்... என்ன இருந்தாலும்... பிரதம மந்திரிக்கு சமமான அந்தஸ்து உடைய எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்து, முதல் நாளே பிரச்சினை பட்டது சரி அல்ல என்பது எனது நிலைப்பாடு. தமிழர்களுக்கு ஒரு பண்பு உள்ளது. அதனை காவலித்தனமாகவோ, கோமாளித்தனமாகவோ செய்வது அருவருப்பை எனக்கு ஏற்படுத்துக்கின்றது. எத்தனையோ... பிரச்சினைகள் இருக்க, எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்துதான் தனது அடையாளத்தை காட்ட வேண்டும் என்று இல்லை. நேற்று முற்பகல் சஜித்தின் கதிரையில் இருந்து விட்டு, தேனீர் இடைவேளையில்... சஜித்துடன் நின்று ஒரு செல்ஃபியும் எடுத்துள்ளார். அத்துடன் அவர் தனது மதம் இந்து என்று பாராளுமன்ற பதிவில் கொடுத்தவராம், அதனை புத்த சமயம் என பதிந்து விட்டார்களாம் என்று இன்னொரு பஞ்சாயத்து போய்க் கொண்டு இருக்குது.
  28. பல்கலை மட்ட ஜேவிபி அடிப்படையில் உசார் மடையர்கள் தான். உடனே கை வைத்து விடுவார்கள். பின்னர் கை நீட்டியவன் மீது பல்கலை ஒழுக்க நடவடிக்கை எடுத்தால், மூன்று வேளையும் கன்ரீன் உணவைச் சாப்பிட்டு விட்டு வந்து வகுப்பிற்குப் போகாமல் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். மறந்தும் கூட "உண்ணாவிரதம்" போன்ற சுய ஒறுத்தல் போராட்டங்களில் ஈடு பட மாட்டார்கள்😂.
  29. சோறு முக்கியம் அமைச்சரே...
  30. 4. மேலே சுட்டிய விடயங்கள் இலங்கையில் இரு வேறு தமிழர் பகுப்புகள் உள்ளதை காட்டி நிற்கிறன. இந்த பகுப்பு ஒன்றும் தனியே 1815 ஐ ஒட்டிய தொழில் நுட்ப பகுப்பு மட்டும் அல்ல. பண்பாடு, மதம், சாதிய கட்டமைப்பை போலவே இந்த ஒரு பகுப்பினரதும் அரசியலும் மிகவும் வேறுபட்டதாக உள்ளது. இலங்கை வம்சாவழியினர் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்கிறனர். வடக்கு கிழக்கை தம் பாரம்பரிய வாழிடமாக கருதுகிறனர். இதன் அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை கோரி நிற்கிறனர். இந்த எந்த அபிலாசைகளும், பாரம்பரிய வாழிடத்துக்கான உரிமை கோரலும் இந்திய வம்சாவழியினரிடம் இல்லை. ஆகவே இலங்கை அரசியல் என வரும் போது இவ்விருதரப்பையும் ஒரே சட்டியில் வறுக்க முடியாது. இந்திய வம்சாவழிக்குள் கூட மேலக, மலையக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் வேறுபட்டாலும், நிலத்துடன் பிணைந்த இலங்கை வம்சாவழியின் தமிழ் தேசிய அரசியல் அங்கே இல்லை. இந்த அடிப்படையில்தான் இலங்கை வம்சாவழியை குறிக்கும் போது பிரக்கெட்டில் வடக்கு-கிழக்கு என எழுதினேன்.
  31. இலங்கை வம்சாவழி என்பதை வரைவிலக்க்கணப்படுத்த முன்னம், இந்திய வம்சாவழி தமிழர் யார் என்பதை வரைவிலக்கணம் செய்வது அவசியம் என நினைக்கிறேன். 1. இலங்கைக்கு 1815 (ஒன்றுபட்ட இலங்கை ஆங்கிலேய ஆட்சி) இன் பின், இந்தியாவில் இருந்து வந்து, குடியேறி வாழ்பவர்களின் சந்ததிகள் இந்திய வம்சாவழி தமிழர்கள் எனலாம். இவர்கள் இலங்கையின் எந்த பகுதியில் வசித்தாலும் - இவர்களின் அடையாளம் இதுவாகவே இருக்கும். இவர்கள் மலையகத்தில் பெருமளவிலும், மேற்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவிலும், இதர தென்னிலங்கை மாவட்டங்களிலும் வசிக்கிறனர். இவர்களில் சிறிய தொகையினர் இனவன்முறை, நாடு கடத்தலில் தப்பிக்க என வடக்கு கிழக்கில் வந்து வாழ்ந்து, பதிவு அடிப்படையில் அந்த மாகாண வாக்காளர்/மக்கள் என உருமாறிவிட்டனர். எனிலும் இவர்களை சமூக பார்வையில் அவர்களை சூழ இருக்கும் இலங்கை வம்சாவழி தமிழ் சமூகம் இன்றும் இந்திய வம்சாவழி என்றே கருதுகிறது. இந்த இந்திய வம்சாவழி மக்கள் பண்பாட்டில் தற்போதைய தமிழ் நாட்டு மக்களின் கண்ணாடி பிரதிகளாக இருக்கிறனர். குறிப்பாக இவர்களின் குல தெய்வ, சிறு தெய்வ வழிபாட்டை, சாதி பெயர்களை குறிப்பிடலாம். 2. இவர்கள் அல்லாத - 1815 க்கு முன்பிருந்தே மூதாதைகள் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கை வம்சாவழி. இவர்கள் பண்பாடும், மத அனுஸ்டானங்களும், உணவுகளும், சாதிய முறைகளும் தமிழ் நாட்டு/ இந்திய வம்சாவழி தமிழர்களை விட பெரிதும் வேறுபட்டும், சில இடங்களில் மலையாளிகளோடு ஒத்தும் இருக்கும். இவர்களைத்தான் 1815 க்கு முன் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தரும், போத்துகேயரும் தமது பதிவுகளில் மலபாரி வசிப்பாளர் Malabari inhabitants என்றனர். இவர்களின் சந்ததியினரே இலங்கை வம்சாவழி தமிழர். யாழ்பாணம், வன்னி, திருமலை, மட்டு-அம்பாறை என இவர்கள் இருப்பது யாரும் அறிந்ததே. பலர் அறியாத விடயம், முந்தல் போன்ற இடங்களில் இன்றும் உள்ளவர்களும், நீர்கொழும்பு-மன்னார் வரையான கடலோரத்தில் ஒரு காலத்தில் தமிழர்களாக இருந்து இன்று கீழ்நாட்டு சிங்களவராக அடையாளம் மாறிய தமிழரும் இலங்கை வம்சாவழியே (1815 க்கு முன்). ஆகவே இவர்களும் ஒற்றை பண்பாட்டில் உள்ளவர் அல்ல. 3. இந்த பகுப்பு வெறும் மூதாதைகள் இலங்கைக்கு வந்த காலத்தின் அடிப்படையிலானது மட்டுமே. ஆங்கிலத்தின் since records began என்பார்கள் - இந்திய வம்சாவழியினர் இலங்கை வந்தது பதிவுகள் ஆரம்பமான பின். இலங்கை வம்சாவழியினர் பதிவுகள் ஆரம்பிக்கும் போதே (when records began) இந்த மண்ணில் வாழ்கிறார்கள் (குளக்கோட்டன், யாழ்பாண அரசு, வன்னிமைகள்). அவர்கள் இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் (time immemorial/ pre historic times) தொட்டு வாழும் பூர்வகுடிகளா என்பது இன்னும் விடை கிடைக்காத கேள்வி. ஆனால் திசமாராம தொல்பொருட்கள் - இப்படி இருக்கலாம் என ஊகிக்க வைக்கிறன.
  32. 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் அவர்கள் வெற்றி பெற மாட்டார் என 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) வாதவூரான் - 56 புள்ளிகள் 2) பிரபா- 56 புள்ளிகள் 3) வாலி - 56 புள்ளிகள் 4) அல்வாயான் - 49 புள்ளிகள் 5) வீரப்பையன் - 48 புள்ளிகள் 6) goshan_che - 48 புள்ளிகள் 7) வில்லவன் - 48 புள்ளிகள் 😎 நிலாமதி - 48 புள்ளிகள் 9) தமிழ்சிறி - 47 புள்ளிகள் 10) ஈழப்பிரியன் - 47 புள்ளிகள் 11) புரட்சிகர தமிழ் தேசிகன் - 47 புள்ளிகள் 12) கந்தையா 57 - 46 புள்ளிகள் 13) நூணாவிலான் - 46 புள்ளிகள் 14) நிழலி - 46 புள்ளிகள் 15) கிருபன் - 44 புள்ளிகள் 16) ரசோதரன் - 44 புள்ளிகள் 17) சுவைபிரியன் - 43 புள்ளிகள் 18) வாத்தியார் - 42 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 41 புள்ளிகள் 20)அகத்தியன் - 39 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் 22)புத்தன் - 38 புள்ளிகள் 23) சுவி - 37 புள்ளிகள் 24) புலவர் - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 22 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 92)
  33. அஞ்ஞாத வாசத்தில் அர்ஜுனன் ஆடல் கற்பிக்கும் அழகி பிருகந்நளையாக உருமறைப்புடன் வருவதுபோல வந்தால் கவலை எல்லாம் பஞ்சாகப் பறந்துவிடும்😁
  34. அதுவரைக்கும் உங்களை பிரிந்து இருக்க அவரால் முடியாதல்லவா? கவலை வேண்டாம் 🤩
  35. முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் தீர்மானம் 22 NOV, 2024 | 10:23 AM இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அதன் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த யானை தற்போது தாய்லாந்து நாட்டின் லாம்பாங் நகரத்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளது. முத்துராஜா நீண்ட தந்தங்களை கொண்டுள்ளமையினால் அதன் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் செல்லும்போது தந்தங்கள் தரையில் சிக்கி இழுக்கப்படுவதைத் தடுக்க அதன் தலையை தூக்கவேண்டியுள்ளதால் முத்துராஜா பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இது குறித்து கால்நடை வைத்தியர் வாரங்கனா லங்காபின் வியாழக்கிழமை (21) தெரிவிக்கையில், யானையின் தந்தங்களின் எடையைக் குறைப்பது தொடர்பில் நிபுணர்களிடம் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. எனினும், எந்தவொரு தீர்மானத்தையும் முன்னெடுக்க பல அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் அனுமதி தேவைப்படும். ப்ளாய் சாக் சுரின் யானையின் முன் இடதுகாலில் காயம் இருப்பதால் நடமாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என தெரிவித்துள்ளார். இலங்கையில் முத்துராஜா இரண்டு தசாப்தங்களாக மத நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு காயங்களுக்கும் உள்ளாகியிருந்தது. 2001ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகளில் முத்துராஜாவும் ஒன்றாகும். https://www.virakesari.lk/article/199379
  36. பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு. எல்லோருடைய ஆவலும் இது தான். காலம் பதில் சொல்லும் பொறுத்திருப்போம். காலத்துக்கேற்ற கவி வரிகளோடு வரும் தங்களுக்கு நன்றி
  37. இறுதி முடிவை z-score இல் அறிவித்து விடுவோம்...........🤣.
  38. நாம் இந்தியாவை குறிப்பாகத் தமிழ்நாட்டை எங்கள் தாய்த் தமிழகமாகவே இதுவரை கருதி வந்திருக்கிறோம். இது வரலாறு. இனிமேலாவது இலங்கைத் தமிழராக நடந்துகொள்வோம்.
  39. மக்கள் அறிந்தது இருக்கட்டும். மக்களின் தேவைகளை அவர்கள் இவர்மூலம் எப்படி அணுகுகிறார்கள் என்று பொறுத்திருந்து பாப்போம். முன்பு, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் அடங்காத்தமிழன் எனும் அடைமொழியுடன் சுந்தரலிங்கம் என்று ஒருவர் இருந்தாராம். அவரை ஒருதடவை பாராளுமன்ற காவலர்கள் கதிரையோடு தூக்கிக்கொண்டுபோய் பாராளுமன்றத்திற்கு வெளியே வைத்துவிட்டார்களாம். அப்படியேதும் நிகழாமல் இருந்தால் சரி. எந்த இடத்தில எப்படி நடக்க வேண்டுமென்பது அவைப்பழக்கம், நாகரிகம்.
  40. அநேகமா அனுரா இலங்கை அரசியலில் இருந்து உலகில் இருந்து விடுதலை ஆகுகின்றார் அதற்கான வேலைகள் மும்முரமாக நடை பெறுகின்றன . ஒருகாலமும் இந்த அழகானா தீவை சுபிட்சமாக அபிவிருத்தி அடைந்த நாடாக இருக்க பக்கத்தில் உள்ள வடக்கங்கள் விட மாட்டார்கள் அதே போல் தலாதா மாளிகையில் தமிழர் எதிர்ப்பு கருத்துக்கள் வைத்து அங்குள்ள பிக்குகள் செய்யும் தமிழர் எதிர்ப்பு அரசியலும் நிறுத்தனும் நடக்குமா ?
  41. அப்ப ஸ்ரீதர் தியேட்டரில கொஞ்ச நாளையால தமிழ்படங்கள் ஓடும் எண்டுறியள்....😁
  42. கிழக்கில் முஸ்லீம்களுக்கு அருகில் வாழும் தமிழர்கள் உல்லாச பிரயாணிகளாக அங்குவரும் இஸ்ரேலியர்களுக்கு அவர்கள் வீடுகள் விடுதிகளை வாடகைக்கு கொடுங்கள் தற்காலிகமாக குடியமர்த்துங்கள். அவர்கள்மேல் முஸ்லீம்கள் கை வைத்தால் சிங்களவன் நொங்கு எடுப்பான், இவர்களை முழு கண்காணிப்பின்கீழ் கொண்டுவருவான். எம் நிம்மதியை கெடுத்தால் ஏதாவது ஒருவழியில் அவர்கள் நிம்மதியை கெடுக்கலாம் தப்பில்லை
  43. உண்மையில் மிக மகிழ்ச்சியான செய்தி. 👍🏽 நான் சொல்லித்தான் இராணுவம் வெளியேறியது என்று, பைத்தியக்கார… தமிழ் அரசியல் வியாதிகள் உரிமை கோராமல் இருக்க வேண்டும். 😂 🤣
  44. அக்கினிக் கரங்கள் புத்தகத்தின் முற்பக்கங்களில் உள்ள விடயங்களையும் இணைத்திருக்கின்றேன். 21.10,1987 .அன்று இந்திய அமைதிப் படையினரால் யாழ். போதனா வைத்திய சாலையில் கொலை செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்நூல் காணிக்கை! பதிப்புரை ஈழத் தமிழரின் இனப்பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட உண்மை நிகழ்வுகளை கலாபூர்வமாகப் பதிவு செய்து வைக்கும் பணியிலேயே, திரு.நாவண்ணனின் இலக்கிய வாழ்வின் பெரும் பகுதி கழிந்திருக்கின்றது. எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை அவர், படைத்த இலக்கியங்கள் அதற்குச் சாட்சி. இந்த வகையில், உண்மை நிகழ்வுகளை இலக்கியப் படைப்புக்களாக உருவாக்கும் பணியில், தமிழீழ இலக்கிய வரலாற்றில் திரு. நாவண்ணனுக்கு தனித்துவமான ஓரிடம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அக்கினிக் கரங்கள் என்ற இந்தக் குறுநாவலும் அந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றது! 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22ஆம் திகதி களில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் இந்தி யப்படை புரிந்த படுகொலையை மையமாக வைத்தே இக் குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. உலகின் கண்களில் இருந்து கணிசமான அளவுக்கு மறைக்கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலைப் படு கொலையின்போது, அதிற் சிக்கி உயிர் தப்பிய .... சாட்சிகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு நாவண்ணன் இந்தக் குறுநாவலைப் படைத்துள்ளார்! போராட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் இத்தகைய இலக்கிய முயற்சிகளுக்கு நூலுருக் கொடுத்து வெளியிடுவதில் நாம் மன நிறைவடைகின்றோம். தமிழ்த்தாய் வெளியீட்டகம் அணிந்துரை இது ஒரு 'குறுநாவல்' என்கின்ற பரிமாணத்தையும் மீறி ஒரு காலத்தின் 'வரலாற்றுப் பதிவாகவே" அமைந்திருக்கின்றது. இந்தக் குறுநாவலைப் படிக்கின்ற போது எமது சரித்திரத்தின் அந்தக் கொடூரமான கால கட்டத்தில் வாழ்ந்து - அந்தக் கொடுமையான சம்பவங்களைக் கண்டு உயிர் தப்பிய என்போன்றவர்களுக்கு, இந் நிகழ்வுகள் திரைப்படமாகவே மனதில் வந்து செல்லும். இந்த நூலில் ஆக்கிரமிப்பாளர்களின் சுயரூபம் மிக அழகாக எடுத்துக்காட்டப்படுகின்றது. உலகில் மிகப் பெரிய 'ஜனநாயக நாடு' இந்தியா என்று தம்மைப் பற்றித் தம்பட்டம் அடிப்பவர்கள் - மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்; "ஒரு யுத்த களத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட, நடு நிலையாளராகக் கருதப்பட்டு மதிக்கப்படல் வேண்டும்' என சர்வதேசச் சட்டங்களும் தர்மங்களும் கூறுகின்ற வேளையில் ஒரு மருத்துவமனை, அதனுள் சீருடைகளில் தாதிகள், ஊழியர்கள், டொக்ரர்கள், காயத்துடனும், வேறு நோய்களுடனும் இருக்கின்ற நோயாளிகள் என்கின்ற மனிதநேயம் இல்லாமல்' அங்கு அத்துமீறி நடாத்திய அநர்த்தங்கள் யாவினையும் ஆசிரியர் மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். ஒரு நாள் உலகம் நீதி கேட்கின்ற போது, இது போன்ற உண்மை நிகழ்வுகளை உள்ளடக்கிய குறுநாவல் கள் நிச்சயமாக உண்மையை விளம்பும் மனச்சாட்சிகளாக - உறுதிப் படுத்தப்பட்ட ஆவணங்களாகத் தீச் சுவாலைகளுடன் எழுந்து நிற்கும். எதிர்கால சந்ததியினர் ஒரு காலத்தில் இங்கு என்ன நடந்தது ...... சுதந்திரம் பெறுவதற்காக இந்த மண் கொடுத்த விலை என்ன...... நாம் சிந்திய இரத்தம் எவ்வளவு...... என்பதைச் சொல்வதற்கு இந்தக் குறுநாவல் உதவும். இது எங்களுடைய தேசப்பற்றை இன்னும் வளர்த்து இந்த மண்ணிற்கு மேலும் உரமூட்ட உதவும். எதிர்காலத்தில் திரைப்படமாக்கப்பட்டு மக்களின் மனங்களில் இவை சரித்திர நிகழ்வுகளாகப் பதிவு செய் யப்படல் வேண்டும். இவ் வரலாற்றுப் பணியைச் செய்த நாவண்ணன் அவர்களை, அன்று அநியாயமாக கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களும் அவர்கள் உறவினர்களும் தமிழ் மக்களும் நன்றியுடன் நினைவு கூருவார்கள் என்றே நம்புகின்றேன். இவருடைய இலட்சியப் பணி தொடர வேண்டும் என வாழ்த்துவதோடு இது சம்பந்தமாக குறிப்பாக 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த கொடூரங்கள் பற்றியும் அன்று அங்கு கொலை செய்யப்பட்டவர்கள், கடமை புரிந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் பற்றிய மேலும் தகவல்களையும் தரவுகளையும் பெற்று இந்நிகழ்வை சரித்திரப் பெரும் நாவலாக எழுத வேண்டுமெனப் பணிவன்போடு கேட்டு மீண் டும் வாழ்த்துகின்றேன். வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர். சீர்மாறன் 23.12.1994 ஏன் எழுதினேன்? 'யாவும் கற்பனை' என்ற, அடிக்குறிப்புடனே இலக்கியம் படைக்கும் காலம் எமக்கு இன்று இல்லை. கற்பனையை விஞ்சிய அவலங்களும், அதிசயங்களும் நிகழும் யதார்த்தத்தில் நாமின்று வாழுகின்றோம்! எனவே, நாம் வாழுகின்ற காலத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் கலைத்துவத்துடன் பதிவு செய்து வருங்காலச் சந்ததிக்கு வழங்கிச் செல்வது எம் போன்றோரின் நிகழ்காலக் கடமையாகும். 1989 இல் இந்தியஅமைதிப்படையின் ஆக்கிரமிப்பு மூச்சிழுக்கத் தொடங்கிய காலத்திலேயே, நண்பன் பாலநடராஜனின் ஆதரவுடன் 'காந்திய நாட்டின் காட்டுமிராண்டிகள் 'எனும் தலைப்பில் அமைதிப்படை எமக்கிழைத்த அக்கிரமங்களை பதிவு செய்யத் தொடங்கினேன். பாரிய அந்தப் பணியைத் தொடரப் போதிய பொருள் வளம் இன்மையால் ஆரம்ப முயற்சிகளோடு அது கைவிடப்பட்டது. சென்ற ஆண்டில் 'சுபமங்களா' ஆசிரி யர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்கள், தமிழீழத்துக்கு வருகை தந்து சென்ற பின்னர் இலங்கை எழுத்தாளர்களுக்கான, ஈழத்தை நிலைக்களனாகக் கொண்ட குறுநாவல் போட்டியை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடாத்துவதாக விளம்பரம் செய்திருந்தார். ஆரம்பத்தில் இதிற் கலந்து கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால். 1994 ஜூலை மாத சுபமங்களாவில் வெளியான திரு. கோமல் சுவாமி நாதனின் ‘அதிர்வலைகளை மீட்டும் யாழ்’ கட்டுரையின் சில வரிகள் என் மனதின் அதிர்வலையைத் தட்டிவிட்டன. அந்த வரிகள்….. "ஒரு காலத்தில் பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் உங்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கும் பொது அடைப்புகளும் பேரணிகளும் கூட நடந்தன. அரசாங்கம் கூட உங்களுக்கு ஆதரவாகப் பல உதவிகள் செய்தது. இதனை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்! ஆனால், ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் எல்லாமே முற்றிலும் மாறி விட்டது. மக்கள் அந்தச் சம்பவத்தின் மூலம் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். பரிதாப உணர்வு ... கோபமாக மாறியது. இன்று. புலிகளின் இயக்கத்துக்கு தமிழ் நாட்டில் தடை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினை அங்கு பேசப்படவில்லை .....!" மேற் கூறப்பட்ட வசனங்கள் ஓட்டுமொத்தமாக இந்தியர்களின் - இந்தியத் தமிழர்களின் கருத்து என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நிச்சயமாக இது திரு. கோமல் சுவாமி நாதனின் கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. தனது கருத்தை. இந்தியர்களின் கருத்து எனக் கூறுவ தன் மூலம் அங்குள்ள தமிழீழ அனுதாபிகளைக் கூடக் கொச்சைப்படுத்த முயலும் செயல் இது என்பதையும் உணர்ந்தேன். அதேவேளையில், ஒரு ராஜீவ் காந்தியின் மரணம் இந்திய மக்களிடையே தமிழீழ மக்களுக்கு எதிரான உணர்வை இந்த அளவுக்கு ஏற்படுத்தியிருக்குமானால் ராஜீவ் காந்தியின் பணிப்பின் பேரில் இந்திய ஆக்கிரமிப்புப் படை இங்கு செய்த கொலைகளும் அட்டூழியங்களும் தமிழீழ மக்களுக்கிடையே எத்தகைய எதிர்ப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்த்தவே இந்தக் குறுநாவலை எழுதவேண்டிய கடமைப்பாட்டை உணர்ந்தேன் 1987 இல் "கிறிஸ்துமஸ் நாளிலாவது யாழ்ப் பாணத்தில் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளலாமே!" என்று ராஜீவ் காந்தியிடம் கேட்கப் பட்டபோது."கிறிஸ்துமஸ் நாளில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள சிறிலங்கா ஒரு கிறிஸ்தவ நாடு அல்ல." என்று ராஜீவ் காந்தி திமிருடன் கூறிய பதிலை அன்றைய நாளிதழ்களில் படித்தபோது தமிழர்களைத் திட்டமிட்டு அடக்கி அழிப்பதில் ராஜிவ் காந்தி கொண்டிருந்த வெறியைக் கண்டு மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன்! எனவே தான், இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆக்கிரமங்களில் ஒரு துளியான யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைகளை, தீபாவளித் தினத்தன்று அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை வெறியாடியதைப் பகைப்புலமாகக் கொண்டு இக் குறுநாவலை எழுதி அனுப்பினேன். கூடவே திரு. கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு குறிப்பும் அனுப்பியிருந்தேன்... "நீங்கள் எனது இந்தக் குறுநாவலுக்குப் பரிசு தரமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால். 'சுபமங்களா 'ஆசிரியரும், பரிசுக்குரிய நாவலைத் தெரிவு செய்யும் நடுவர்குழுவும், இதைப் படித்தாலே போதும் ! நான் இந்த நாவலை எழுதியதன் நோக்கம் நிறைவேறியதாகக் கொள்வேன்." என்பதே அது. அந்த நோக்கம்கூட, முழுமையாக நிறைவேறியிருக்கும் என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு. யாழ். போதனா வைத்தியசாலைப் படு கொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு நாளில் நூல்வடிவில் இதனை வெளியிடுவது என்று நான் முயற்சி செய்துகொண்டிருந்த போது தான், 'தமிழ்த்தாய் வெளியீட்டகம்" குறிப்பிட்ட நாளில் இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்தது ! காலத்தின் தேவை கருதி இந்நூலை வெளியிடும் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினருக்கு என் இதய நன்றிகள். வைத்தியசாலைப் படுகொலை அவலத்தில் சிக்கி தாம் பட்ட அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டு இதனை எழுதி முடிக்க உதவியவர்களை நன்றியோடு நினைவு கூருகின்றேன். இந்தப் படுகொலை ஏனைய வைத்தியர்கள், நிகழ்வின் போது ஊழியர்களுடன் 'எக்ஸ் - றே 'பிரிவினுள் ஒளிந்து நின்று உயிர் தப்பியவரான வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர் சீர்மாறன் அவர்களிடம், அணிந்துரை பெற்ற தன் நோக்கமே. நான் எழுதியுள்ள உண்மைச் சம்பவங்களுக்கு அவரும் ஒரு சாட்சி என்பதால் தான்! மனமிசைந்து இந்நூலுக்கு அணிந்துரை தந்தமைக்கு என் நன்றிகள். போட்டிக்காக எழுதப்பட்ட பிரதியில் தவிர்க்கப்பட்டிருந்த சில விடயங்கள் பின்னர், திருத்தி எழுதப்பட்டு கதையோடு இணைக்கப்பட்டுள்ளன. எனது முன்னைய நூல்களுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்கும் என்பதால் வாசகர்களை அன்புடன் நினைவு கூருகின்றேன். நன்றி. நாவண்ணன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.