Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    88827
    Posts
  2. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    15827
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46979
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33811
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/28/24 in all areas

  1. எம். கே. சிவாஜிலிங்கம், அரச புலனாய்வாளர்களின் அடாவடித்தனமற்ற இப்படியான சுதந்திர நிகழ்வுகளில் மட்டும் முன்னிற்பவர் அல்ல. நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இறுக்கமான தடை இருந்த கடந்த காலங்களில் எல்லாம் புயலாய் ஒற்றை மனிதனாய் நின்று நினைவேந்தல்களை செய்திருக்கிறார். ஆயுத முனையில் இராணுவத்தின் முன் ஒற்றை வாழைக்குற்றியுடன் நின்றிருக்கிறார். இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரச் செல்வங்களை நினைவேந்தி காட்டியிருக்கிறார். மேதகுவின் தாயார் இந்தியாவில் இறந்த போது கூட அவரின் உடலை ஏற்க இன்று தமிழ் தேசியத்தில் தாம் ஊறி திழைத்தவர்களாக காட்டும் அத்தனை அரசியல்வாதிகளும் பின்னின்ற போதும் தானாக முன்னின்று வீரப்புதல்வனை சுமந்த அந்த தாயின் உடலை ஈழமண்ணிற்கு கொண்டுவந்து அவரின் சொந்த இடமான வல்வெட்டிதுறையில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மரணச்சடங்கை நிகழ்த்தினார். அவரின் ஆஸ்தியை இந்தியக் கடலில் கூட கரைப்பித்தார். ஒவொரு முறையிம் தலைவனின் பிறந்தநாளுக்கு பாக்கெட்டில் இனிப்புடன் தான் திருவார் மற்றவர்களுக்கு வழங்கவென! இப்புறை அவரின் வீட்டிலேயே மக்களை ஒன்றுதிரட்டி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். சமீப காலங்களில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்தாலும் தன் உடல் நிலை கருதாது இன்றும் கடும் மழையில் நனைந்து மாவீரங்களை நினைவேந்துகிறார். இதுதான் அவரது அடையாளம். ஆனால் மக்கள் தான் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை!!! சிவாஜி அரசியலுக்கு அப்பால் ஓர் தமிழ் தேசிய செயற்பாட்டாளன்! Mathusuthan Kumarasamy
  2. ஆனால் இவர்கள் வடகிழக்கு தமிழர்களுக்கு செய்த அநியாயம் இன சுத்திகரிப்பை விட மோசமானது அதை அவர்கள் ஒரு போதும் கவலைப்பட போவதில்லை அவர்களுக்கு தந்திரமாக சிங்களவர்களுக்கு முதுகு தேய்த்து கொண்டு இலங்கையை அரபு பூமியாக்குவதே நோக்கம் .
  3. ஒராள்... குடை பிடித்துக் கொண்டு நிற்க, மாவை Football விளையாடுகிறார். எல்லாம்... விசர் முத்தின கூட்டங்கள். 😂 🤣
  4. நிஜமாகவே சிவாஜிலிங்கம் ஒரு மாமனிதர்தான் . ......!
  5. சிங்கள ஜேவிபிக்குக்கு வாக்களித்த தமிழர்களைவிட மொத்தமாக தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் அதிகம் தானே
  6. தமிழ்த் தேசியம் செத்துவிட்டது, சிங்கள இனவாதிகளை தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிற செய்திகளும், இலங்கையராக இணைவோம் என்கிற கூச்சல்களும் இப்போது எங்கே போய்விட்டன? தமிழினம் தலைவரையும் மாவீரர்களையும் எப்போதும் மறக்காது என்பதற்கு இன்றைய மாவீரர் தின நிகழ்வுகள் சாட்சி. வீரவணக்கம் !!!
  7. ஈழத்தமிழர்கள் கேட்டதை கிந்தியா செய்து கொடுத்திருக்குமேயானால்......! சிங்களவர்களும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்- ஈழத்தமிழர்களும் சகல சுக போகங்களுடனும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்- கிந்தியனின் தென்பகுதிக்கு அரணாகவும் இருந்திருப்பார்கள்.
  8. வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்ற போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு அவர்கள் கொண்டு வந்தனர். அனலைதீவு, எழுவைதீவு போன்ற பிரதேசங்களுக்கு மின்சாரம் பகலில் துண்டிக்கப்பட்டு இரவில் மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மின்சார விநியோகத்துக்கு தேவையான எரிபொருள் குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருப்பதாகவும், கடல் பயணத்துக்கு ஏதுவான நிலைமை ஏற்பட்டதும் அவற்றை உடனடியாக கடற்படையினரின் உதவியுடன் கொண்டு செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் வடக்குப் பிராந்திய முகாமையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அதேவேளை, அந்தப் பிரதேசங்களிலுள்ள மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கி மூலம் மின்சாரத்தை பெற்று இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது பல வெள்ள வாய்க்கால்களில் வெள்ளம் நிரம்பிய நிலையில் இருப்பதால் அதனுள் குப்பைகளைக் கொட்டுவதற்கு முயற்சிக்கக் கூடும் எனவும் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மேலும், வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதற்கு வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் காரணம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அதேபோன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டடங்களையும் அகற்றுமாறும் ஆளுநர் பணித்ததுடன், திரும்பத் திரும்ப இந்த விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/312826
  9. உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என் அநினைக்கிறேன் 1977 தேர்தல் முடிந்து 1980 களில் எமது மக்கள்(இளைஞர்கள்) தமிழர் விடுதலை கூட்டணியினரிடம் கேட்ட கேள்வி "கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது உங்களுக்கு பஜீரோ வண்டி" அது போல இந்த தடவை மக்கள் தமிழ்தேசிய கட்சிகளிடம் கேட்டது "பேசியது தமிழ் தேசியம் கிடைத்தது பார் லைசண்ஸ்"
  10. பலஸ்தீனரின் விடுதலைக்காக போராடும் ஹமாஸ்,ஹிஸ்புல்லா,ஈராணிய புரட்சி படை களை விட எமது போராளிகள் சிறந்தவர்கள்
  11. சுனாமி நேரத்தில் முதலில் பேரலை வந்தது, பின் புலிகள் வந்தனர் மக்களுக்கு உதவ. அவர்கள் தோற்றபின், வியாபாரிகள் எம் பிரதிநிதிகள் என்ற வேடம் போட்டு வந்தனர். மக்களின் எந்த இடரையும் களைய விருப்பின்றி காலம் கடத்தினர். மக்கள் இம் முறை அவர்களுக்கு பாடம் படிப்பித்தனர். இன்று தேசியப்பட்டியல் மூலம் தெரிவான, கடல் சூழா ஒரு இடத்தில் பிறந்து கடல் அலைகளில் கால்கள் நனைக்காது உப்புக் காற்றை கொஞ்சம் தானும் சுவாசிக்காது மலையகத்தில் வாழ்ந்த ஒருவர் கடல் வள , மீன் பிடித்துறை அமைச்சராகியவுடன் மீனவர்களை நோக்கி ஓடோடி வருகின்றார் துயர் துடைக்க! இது தான் மக்கள் சேவை. தமிழ் தேசியம் வாழ, முதலில் தமிழ் மக்கள் வாழ வேண்டும். அதற்காகத்தான் தமிழ் மக்கள மாற்றத்தை கோரினர். இப்போதைக்காவது அது நிகழ்கின்றது. தமிழ் கட்சிகளின் கடைசிக் கோவணமும் உருவப்பட்டுக் கொண்டு இருக்கு இப்போது.
  12. அநுரவின் அரசாங்கம் ஈழத் தமிழருக்கு எதிரியா இல்லையா என்பதை ஈழத்தில் வாழும் மக்கள்தான் சொல்லவேண்டும். அதனை வரலாறு தெளிவாகப் பதியும். சும்மா விசர்க் கதைகதைச்சுக்கொண்டு திரியத்தான் பழ. நெடுமாறன் போன்றோர் லாயக்கு. அநுர அரசில் எல்லை தாண்டிவந்து மீன்கொள்ளையில் ஈடுபடும் இந்தியக் கடற்கொள்ளையருக்கு ஆபத்து என்பதைத்தான் அய்யா சொல்லியிருக்கின்றார் என நினைக்கின்றேன்.
  13. தாய் எவ்வழி சேய்கள் அவ்வழி ........! 😍
  14. மிகவும் வேதனையான சம்பவம் ... இந்த மழை இன்னும் எத்தனை பேரை காவுகொள்ள இப்படி பெய்கின்றது . ஆனால் வேதனையான விடயம் வடிகால் அமைப்பு என்பது எங்கள் நாட்டில் சீராக இல்லை. வெளிநாடுகளில் உள்ளமாதிரி அமைத்து மிகையான நீரை நீரேரி செல்லும் படி அமைத்து மிகையானதை கடலுக்கு செல்கின்றமாதிரி அமைக்க வேண்டும் ... எத்தனை பொறியியலாளர்கள் உள்ள எமது நாட்டில் அரசாங்கங்கள் சரியாக இல்லாததால் சரிவர அமைக்க முடியவில்லை.
  15. மக்கள் மனதில் ஆறாதவடுவாய் தேசியம் அலைபாய்கிறது....அதனை அணைக்க முயன்ற அரசியல் வியாதிகளுக்கு பாடம் புகட்டப்போய் ..சுயத்தை இழந்த தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்... கொடியமழை புயலால் கூட தடுக்க முடியாத அந்த உணர்வு ....தலைவன்...போராளிகள் .. மீதான அன்பையும் விசுவாசத்தையும் காட்டுகிறது..
  16. மருத்துவர் சத்திய மூர்த்தி பதிலளிக்க வேண்டிய சில கேஸ்கள் இருக்கின்றன. இந்த விடயம் அவற்றுள் ஒன்று அல்ல என்பது என் அபிப்பிராயம். காரணங்கள் இவை தான்: 1. மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை அவசியமில்லை என்பது தவறான புரிதல். ஒருவர் மருத்துவமனையில் இறந்தால், உடலைப் பொறுப்பெடுக்க வரும் உறவுகளிடம் "உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?, மரணவிசாரணை தேவையா?" என்று கேட்பார்கள். "இல்லை" என்று பதில் சொன்னால் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைக் கையளிப்பர். இங்கே உறவினர்கள் காவல்துறையை நாடிய போது, அவர்கள் மரணவிசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் - இது அவர்களின் கடமை. மரணவிசாரணையின் ஒரு அங்கமாக பிரேத பரிசோதனையைச் செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை செய்த உடலை ஒழுங்காகச் சீரமைக்காமல் கையளித்தது மட்டுமே மருத்துவ மனையின் தவறு. 2. "மாணவர்கள் புடை சூழ மருத்துவர் வலம் வந்தார், கவனிக்கவில்லை" என்பது அவசியமற்ற விமர்சனம். யாழ் மருத்துவமனை ஒரு போதனா மருத்துவ மனை, அங்கே மாணவர்கள் புடை சூழ மருத்துவர்கள் நடமாடுவது ஆச்சரியமல்ல. நோயாளியின் உறவினர்களோடு உரையாடுவதில் வேறு பாடுகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால், தோல் அழற்சியை (cellulitis) மருத்துவர் கண்டறிந்திருக்கிறார், பின்னர் எக்ஸ்றேயும் எடுத்திருக்கிறார்கள். என்பு முறிவுகள் இல்லாமையால் தோல் அழற்சிக்குத் தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன குறை இருக்கிறதென விளங்கவில்லை. 3. CRP (C-reactive Protein) இது உடலில் அழற்சி (inflammation) நிலை இருக்கும் போது இரத்தத்தில் அதிகரிக்கும் ஒரு குறிகாட்டி. இது தோல் அழற்சி இருக்கும் போது நிச்சயமாக அதிகரிக்கும். இதைப் பரிசோதிக்க முதலே, தோல் அழற்சி என்று நோய் நிர்ணயம் செய்து, அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். எனவே, CRP இனை 4 நாட்கள் பிந்திச் செய்தமையால் நோயாளிக்கான மருத்துவம் பாதிக்கப் படவில்லை. இங்கே ஒரு பிரச்சினை - மருத்துவர்களின் தவறினால் அல்லாமல்- இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம். தோல் அழற்சியின் குணங்குறிகள் போலவே தோன்றும் இன்னொரு நோய் நிலை நாளங்களில் ஏற்படும் குருதியுறைதல் நிலை (Deep Vein Thrombosis- DVT). இதை வேறு பிரித்தறிய சில இரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளி நல்ல நிலையில் இருந்ததால் இதைச் செய்யாமல் விட்டிருப்பர். மறு பக்கம், நோயாளி கட்டிலில் ஓய்வில் இருந்த காலத்தில் கூட இந்த DVT குருதியுறைதல் ஏற்பட்டு, மரணத்திற்குக் காரணமாகியிருக்கலாம். இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.
  17. அமிரை கண்டால் ஜீப்பை காணோம், ஜீப்பை கண்டால் அமிரை காணோம்🤣
  18. அமீருக்கு ஜீப் குடுத்தாப்பிறகு எங்கட பக்கம் வரவே இல்லை......ஆகவே ஜீப் என்ன நிறமெண்டு என்ரை இடத்து ஆக்களுக்கு தெரியாது... 😂
  19. அன்று தொடக்கம் தமிழ் அரசியல் தலைவர்கள் எதை செய்தார்களோ அதையே சாராயக்கடை அண்ணலும் செய்கின்றார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
  20. தமிழர்களுக்கு யார் எதிரி என இப்போதாவது விளங்குகின்றதா? சிங்களம் இனவாதம் இல்லாமல் வாழ ஆரம்பித்தாலும் இந்த முஸ்லீம்கள் ஏதோ ஒரு வகையில் தங்கள் இனமத துவேஷத்தை சந்தர்ப்பங்கள் வரும் போது வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். எனது முன்னோர்கள் அன்றே இந்த இனைத்தை பற்றி கணித்து வைத்தது சரியாகவே தெரிகின்றது.
  21. இதில் புலம் பெயர்ந்த எமக்கும் பங்கு இருக்கு முக்கியமாக பழைய மாணவர்கள் சங்கங்கள்... பாடசாலைகளுக்கு பெரிய கேட்,சுற்று மதில்...அதிபர்கள் தங்கள் புகழுக்காக பெரிய பெரிய கட்டிடங்களை கட்டுதல் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நிலத்தில் கொன்கிறீட் போடுதல் ...எல்லாம் வெளிநாட்டு காசு ...எனது பாடசாலைக்கு இரண்டு கேட் அது மட்டுமல்ல இரண்டுக்கும் பெரிய வளைவுகள் கோவில்களை அழகு படுத்தல் என்ற போர்வையில் ஐயர்மாரின் வேண்டுதலுக்கு ஏற்ப சில கட்டிடங்களை கட்டுதல் ..கோவில் கேணிகளை மூடி விடுதல் கொங்கிறீட் போட்டு ....திருவிழா காலங்களில் பாவிக்கப்படும் வாழை மரங்களை கேணிகளில் போடுதல்....இப்படி பல ..இவற்றை சீர் செய்ய சில புல்ம் பெயர் உறவுகள் முயன்றாலும் பல தடங்கள் வருகின்றது...
  22. அறிக்கை விட்டால் மட்டும் போதது களத்தில் இறங்கி வேலை செய்து படம் போட வேண்டும்....பாதிக்கப்பட்ட மக்களின் தோளில் கை போட்டு அரவணத்து பேச வேண்டும் அவர்களிடம் தேனீர் பருக வேண்டும் ...ஜெ.வி.பியினர் இப்படி செயல் படுகின்றனர்...முக்கியமாக அமைச்சர் சந்திரசேகரம்... வல்வெட்டித்துறை மக்கள் சொல்கின்றனர் ...நீங்கள் தான் எங்களுடன் இவ்வளவு நெருக்கமாக வந்து தோளில் கை போட்டு கதைத்த முதலாவது அமைச்சர் என்று...
  23. இன்று ஊடகங்கள் குடிசை கைத்தொழிலாக மாறிவிட்டதின் விளைவு ... வெள்ளைகாரன் சுருட்டை (சிகரட்,சிகார்) உற்பத்தி செய்து பணம் சம்பாதிப்பதை பார்த்து எங்கன்ட சனம் பீடி,சுருட்டு போன்றவற்றை உற்பத்தி செய்ய தொடங்கிச்சினம்....அதுபோல இப்ப எலான் மஸ்க் மாதிரி வரலாம் என ஊடகத்தை கையில் எடுத்து வீட்டுக்கு வீடு யூ டியுப் சனலை தொடங்கி வைச்சிருக்கினம்.... வெள்ளம் வடிந்து ஓடாமல் நிற்பதன் காரணங்களை மக்களுக்கு தெளிவு படுத்தினால் சிறப்பாக இருக்கும் ஆனால் இந்த யூ டியுப் குஞ்சுகளுகு அப்படியான அதிரடி தகவல்கள் எதுவும் தெரியாது
  24. சில விடயங்களை செய்ய சிலரால் மட்டுமே முடியும். அதை அவர் செய்தால் போதும். போற்றுதலுக்குரியவரே. 💯 வீத தூய்மை என்பது எங்கும் இல்லை. இல்லாத ஒன்றை எதற்காக தேடி இருக்கும் நண்பரையும் இழப்பான்???? நமக்கு ஒத்துவராத அவரது செயல்களுக்கு நாம் ஆதரவளிக்காதிருந்தாலே போதும் அது அவரே பாதை மாற்ற உதவக்கூடும்?
  25. வாழ்க்கையில் யார் முன்னேறிய வர்கள் ! ஒரு பெரிய கம்பெனி முன் ஒருவர் டீ கடை வைத்திருந்தார். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து டீ சாப்பிட்டுக் கொண்டே.... "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்.... பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்... "இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்" "எப்படி?" "பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து டீ கேனில் டீ விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா... உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க.... இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்.... நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்... அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்... நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்... ஆனால் உங்களுக்கு அப்படியில்லை... உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது... உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்.... உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்... நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்.... உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க.... ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்.... மேனேஜர் குடித்த டீ'க்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்... ஆகவே "தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது" THANKS - kongu guru prakash
  26. இதைத் தான் எமது தேசியத் தலைவர் திரும்பத் திரும்ப சொன்னார். ஆனாலும் இந்தியனின் செவிட்டு காதில் ஒருபோதும் விழுந்ததில்லை. இப்போ அமெரிக்கா ஓரளவுக்க காலூன்றிவிட்டது. இனித்தான் பேந்தபேந்த முழிப்பார்கள்.அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்.
  27. தமிழ் மக்களுக்கு கிடைக்குதோ இல்லையோ, இவருக்கு ஒன்றும் கிடைக்காது அநுர அரசில். ஏன் மற்றைய அரசுகளில் தமிழருக்கு என்ன வாங்கிக் கொடுத்தீர்கள், இதை மட்டும் குற்றம் சொல்ல? ஓ..... நீங்கள் பாராளுமன்றத்தில் இல்லாத படியினால், உங்களால் ஒன்றும் வாங்கித்தர முடியாது போய்விட்டது என்கிற கவலை. மக்கள் மேல் எவ்வளவு பாசம் இவருக்கு. ஆடு நனையுதென்று அழுததாம் ஓநாய் ஒன்று.
  28. உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக்க மாவீரர்நாள் நினைவேந்தல்! யாழ் பல்கலைக்கழக்கத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (27) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேஜர் விநோதரனின் தாயார் பாலசுந்தரம் பொதுச்சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்தமையடுத்து, ஏனையோர் ஈகச் சுடர்களை ஏற்றி மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் மாவீரர்களின் உறவுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/உணர்வெழுச்சியுடன்_இடம்பெற்ற_யாழ்_பல்கலைக்கழக்க_மாவீரர்நாள்_நினைவேந்தல்!
  29. அவை சொல்லுகினமோ இல்லையோ...நம்ம யூடியூப் குஞ்சுகள் கட்டாயம் சொல்லுவினம்🤣
  30. இதை இன்றும் சந்தர்ப்ப சாட்சியங்களின் கோர்வையாகவே நான் பார்க்கிறேன். இதில் சம்பந்தன் மட்டும் அல்ல, கஜேஸ், ஜெயானந்தமூர்த்தி, பத்மினி, ஈழவேந்தன் என பலரும் ஒண்டும் செய்யவில்லைத்தான். அப்படிபார்த்தால் 2009 மே யிற்கு பின் நாம் புதிய தலைவர்களைதான் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் மக்கள் ஆணை இவர்களுக்கே கிடைத்தது. ஆகவே சம்பந்தன் இப்படி கெட்ட எண்ணத்தில் செயல்பட்டாரா என்பது இன்றுவரை வெறும் ஊகம்தான். ஆனால் அவர் அதன் பின் பிழை விட்டது ஊகம் அல்ல, உண்மை, தரவு. ஆகவே என் ஆதரவும், எதிர்ப்பும் தரவு அடிப்படையிலானது. எனக்கு அவரை அப்படித்தெரியாது. ஆகவே அவர் சம்பந்தமான முடிவும் அவரின் நடத்தையை வைத்தே எட்டப்பட்டது.
  31. நன்றி ஜஸ்ரின் விலாவரியான விளக்கத்திற்கு. கடிதத்தில் எனது மிக நெருங்கிய மருத்துவ நண்பனைப் பெயர் குறித்து வந்த அவசியமற்ற விமர்சனம் கவலையைத் தந்திருந்தது. உங்கள் விளக்கம் அக்கவலையைப் போக்கிவிட்டது.🙏🏽
  32. இரவு ஊரில் கதைத்த போது மழையும் காற்றும் வெளியில் செல்ல முடியாது என கூறினார்கள். இவ்வளவு மக்கள் வெள்ளத்தை பார்க்கும் போது மாவீரர்கள் தமிழர் மனதில் அதிவிசேடமானவர்கள் என்பதை சொல்லி நிற்கிறது.
  33. நடமாடுவதே பாதுகாப்பில்லை என்ற புயல் சூழலில் மக்கள் அலை என எழும்பி வந்தது ….எல்லாமும் முடிந்து போய்விடவில்லை என்ற நம்பிக்கையை தருகிறது.
  34. வெட்கம் கெட்டவன், மானத்தை வாங்குகிறான். அக்கவுண்டனாக... கனடாவில் வேலை செய்து கொண்டு, இரட்டை குடியுரிமையும் வைத்துக் கொண்டு... பெண்ணின் கைப்பையை களவெடுக்க எவ்வளவு... பஞ்சப் பரதேசியாய் இருந்திருக்க வேண்டும். களவெடுத்த காசில்.. 9 விஸ்கிப் போத்திலும் வாங்கி இருக்குது இந்த எருமை. ஒரு ஆள்... சுங்கப் பகுதியால் இரண்டு போத்தில்தான் கொண்டு போகலாம் என்று நினைக்கின்றேன். இது 9 வாங்கி இருக்குது என்றால், இதன் நினைப்பு என்னவாக இருந்திருக்கும். நாயை... குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், நக்கித்தான் குடிக்குமாம். தரித்திரம் பிடித்தவனுக்கு, வெளிநாட்டு வாழ்க்கை ஒரு கேடு. த்தூ... 😡
  35. தன்னைப் பற்றி இன்னொருவர் செய்த ஆய்வை அப்படியே அர்ச்சுனா தன் முகநூலில் பதிந்திருக்கிறார். அர்ச்சுனா அவர்களின் பிரச்சினை, நான் அறிந்த வரையில், அவரது கட்டுப் பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு பிரச்சினை. இந்த சவால்களோடு அவர் க.பொ.த உயரதரம் உயிரியல் பிரிவில் சித்தி பெற்று, மருத்துவ பீடம் சென்று அங்கேயும் பல பின்னடைவுகளுடன் மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவராக வெளிவந்தமை, அவரது தனிப்பட்ட சாதனை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தன் சொந்த வாழ்க்கையில் காட்டிய அதே கட்டுப் பாட்டையும் ஒர்மத்தையும் பொது வாழ்க்கையில் காட்ட இயலாமல் தடுமாறுகிறார் என நினைக்கிறேன். இந்த தடுமாற்றத்திற்கான ஒரு பிரதான காரணி, இவரது தனிப்பட்ட சவால்களை அறியாமல் இவரைக் காட்சிப் பொருளாக்கி விட்டிருக்கும் யூ ரியூபர்களும், அதன் சந்தாதாரர்களும். தன்னுடைய வட்டத்தைக் குறுக்கிக் கொண்டு பொது வாழ்க்கையில் சில கட்டுப் பாடுகளைப் பேண வேண்டும் என்று புரிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்!
  36. "ஒப்பீடு" . எனது தட்டச்சு பிழை , தமிழின் தவறுக்கு உண்மையாகவே வருந்துகிறேன் . சம்பந்தன் அவர்களின் செயல் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் எவ்வாறு இருந்தது என்பதில் மட்டும் அல்ல, உச்ச போரின் போது இவர் எந்தவகையில் மக்கள் இறப்பினை தடுக்க பாடுபட்டார் என்பதிலும் , புலிகள் அழிய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தையும் வைத்துதான் இவரினை நான் நம்புவதில்லை ....வெளிநாட்டில் இப்ப இருக்கின்ற எந்த அமைப்பினையும் நான் நம்புவதில்லை . தலைவருக்கு முதல் வேறு , 2009 கு பிறகு வேறு. மற்றும் படி சுமந்திரன் எப்படிப்பட்டவர் அவரின் பின்புலம் எல்லாமே முதலே எனக்கு தெரியும் .... அதனால் தான் அவரின் கொள்கைகளை எப்பவுமே நம்புவதில்லை . உங்களை எதிர்த்து கருத்திட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இப்ப உள்ள அரசாங்கத்துக்கு நான் ஆதரவு என்றில்லை. ஆனால் அவர்களுக்கு காலம் தேவைப்படும் தமிழர் மீதான தீர்வுக்கு ....முதலில் அங்க உள்ள விடயங்களை கையாண்டு தமக்கு சாதகமான சூழலை உருவாக்கவேண்டும் ......கொஞ்சம் பொறுத்து பார்ப்பது நல்லம் .
  37. 70 வருசமாய் *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் வேலைகளை செய்து அரச சுகபோகங்களை அனுபவித்த அரசியல்வாதிகளைப்பற்றி வாயே திறக்காத சனம் அர்ச்சுனாவுக்கு எதிராய் நிக்குது..... எண்டால்...!!! உங்களுக்கு ஓடி விளங்கினாச்சரி
  38. தேசியத் தலைவருக்கும், தம்பி பையனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .........!
  39. மெய்யழகன் ஒரு சிறப்பான படம் . ......... பார்த்திருந்தேன் . .....! பகிர்வுக்கு நன்றி பிரபா ..........! 👍
  40. தேசியத் தலைவருக்கும், தம்பி பையனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .........!
  41. இன்று பிறந்தநாள் காணும் தமிழர்களின் தலைவன் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் வாழ்க.
  42. என்னுடைய பொது அறிவை பரிதோதனை செய்து, கேடயம் தரப் போகின்றீர்களா. 😂 எனக்கு உந்த "ஈர வெங்காயம்" ஒன்றும் வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். 🤣 கேட்டமைக்கு... நன்றி. 😃
  43. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் மரத்திலிந்து இறங்கி, அதனைச் சுமந்து கொண்டு செல்கையில் அதன் உள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து.... “மன்னா.... இரவு, பகல் பாராமல்... இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக? என்று கேட்டது. 😂 - அம்புலிமாமா - 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.