Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1569
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8907
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/30/24 in Posts

  1. இப்படியே உணர்ச்சி மிகு கட்டுரைகளை எழுதிக் கொண்டு தாமும் இன்பமடைந்து மக்களில் ஒரு சிறு பிரிவினரை ஏமாற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான். மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்பது தம் பிள்ளைகளை, சகோதரங்களை, நண்பர்களை, அவர் தம் தியாகங்களை மதிப்பதனால். அடுத்த வருடமும், இன்னும் பத்து வருடங்களின் பின்னும் மக்கள் இவ்வாறு அஞ்சலிப்பர். அதே நேரம் தமிழ் கட்சிகள், காத்திரமான முறையில் அரசியல் செய்யாது விடின், வடக்கில் இருந்து ஒரு சிங்களவரைக் கூட இதே தமிழ் மக்கள் தெரிவு செய்து பாராளுமன்ற த்திற்கோ மாகாணசபை க்கு அனுப்பி வைப்பர்.
  2. தேர்தல் முடிவுகளை வைத்து அது தமிழ்மக்கள் சிங்கள தலைமைகளை ஏற்று வாழ தயாராகிவிட்டார்களென்றோ, அல்லது தமிழர்களின் தேசிய உணர்வை மறந்து விட்டார்களென்றோ பல்கலைகழக மாணவர்களும் ஊடக சந்திப்பு நடத்த தேவையில்லை, சீன தூதுவரும் அறிக்கைவிட தேவையில்லை. சிங்கள கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட பெரும் வாக்குகள் சிங்கள கட்சிகளின் மேல் கொண்ட அன்பினால் அல்ல தமிழ்கட்சிகள் மேல் கொண்ட வெறுப்பினால் என்பதே யதார்த்தம். எம் மக்கள் எந்தவித ஆசை வார்த்தைகளுக்கும் சலுகைகளுக்கும் இனத்தை அடைவு வைக்க மாட்டார்களென்பதற்கு வடக்கிலிருந்து கிழக்குவரை புயல் பெருவெள்ளம் இடி மின்னல் நடுவே முழங்காலளவு தண்ணீருக்குள் நின்றபடி எம் இன மானம் காத்தவர்களை சாரை சாரையாக அணிவகுத்து வந்து நினைவு கூர்ந்ததே சாட்சி. அதேபோல சிங்கள கட்சிகளும் தமிழர்கள் இனிமே நிரந்தரமாக எம் பக்கம் என்று எக்காலமும் நினைத்திடலாகாது, வெறும் வாக்கு வங்கிகளாக நீங்கள் எம்மைபயன்படுத்தலாம் என்று கனவிலும் எண்ணக்கூடாது. அது மாவீரர் மண், அது எதற்காகவும் இனமானத்தை யாருக்கும் விற்காது என்பதற்கு பெருமெடுப்பில் நடந்த நிகழ்வேந்தலும், தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டமும், பெரும் எண்ணிக்கையில் மாவீரர், மற்றும் தலைவரை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரும் எண்ணிக்கையில் கைதாகும் எம் இளைஞர்களும் சாட்சி. இந்த ஐந்தாண்டு காலத்தில் இன அர்ப்பணிப்புள்ள உறுதியான தமிழ்தலைமை ஒன்று தமிழர் மத்தியில் உருவானால் அடுத்த தேர்தலில் யாழ்ப்பாணம் ஒட்டுமொத்தமா அநுர அரசை வடக்கிலிருந்து அகற்றிவிடும். அப்படி ஒரு அர்ப்பணிப்புள்ள தமிழ்தலைமையோ அல்லது இன்று எஞ்சியிருக்கும் தமிழ்கட்சிகளோ இன்னமும் கடந்தகால வரலாற்றில் பாடம் படிக்காமல் ஊர் சுத்தி திரிஞ்சால் அடுத்த தேர்தலில் அநுர ஆறு ஆசனங்களையும் பெறும் வாய்ப்பிருக்கிறது அதையும் மறுப்பதற்கில்லை. அதுகூட அநுரதான் கடவுள் என்று அவர்கள் கொள்ளபோகும் அர்த்தமல்ல, நமக்கு வாய்த்ததுகள் இயமனுகள் என்ற வெறுப்புத்தான். தமிழர் மான தேசியத்தையும், தமிழர் தேசியம் என்று பேசி திரிந்து எம் முதுகில் குதிரையோடிய தமிழர் கட்சிகளையும் எம் மக்கள் ஒன்றாக்கி பார்க்கவில்லையென்பதே மாவீரர்நாள் நிகழ்வுகளும் இந்த தேர்தலில் அநுரவின் வடபகுதியின் அமோக வெற்றியும். அவர்களை பொறுத்தவரை அவர்களுக்கும் கடல்கடந்துவிட்ட எமக்கும் தேவை இனமான தேசியம், இனத்தை விற்று தமிழ்கட்சிகள் நடத்திய யாசகம் அல்ல.
  3. பயங்கர தடைச்சட்டம் மிகப்பெரிய ஆயுதம் சிங்களவருக்கு. அதை அவர்கள் கைவிடுவார்கள் என்று எம்மவர் சொல்வது தான் மிகப் பெரிய ஏமாற்றுதல்.
  4. இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்பாகப் பேசுவோரும் புலநாய்வுத்துறையினரால் இன்றுவரை அச்சுருத்தப்பட்டே வருகின்றனர். அப்படியான ஒருவர்தான் பவநேசன். தமிழர் தாயகத்தின் அனைத்து மூலைகளுக்கும் (எல்லையோரக் கிராமங்கள் உட்பட) சென்று காணொளிகளைப் பதிவிடுவது, ஊரவர்களுடன் பேசுவது, முன்னைய காலங்களுக்கும் இன்றிருக்கும் நிலைமைகளுக்குமான வித்தியாசத்தினை மக்களிடமிருந்தே கேட்டு அறிவது, சிறுவர்களுடன் கலகலப்பாகப் பேசி மகிழ்வது என்பது இவரது வழமை. இவரை அண்மைக்காலமாக எல்லையோரக் கிராமங்களுக்குச் செல்வதையோ, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அழிவுற்றிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதையோ செய்யவேண்டாம் என்று வீட்டிற்கு வந்த புலநாய்வுத்துறையினர் அச்சுருத்தியிருந்தனர். இதன் பின்னர் அவர் அவ்வாறான காணொளிகளை வெளியிடுவதை விட்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்குள் இருக்கும் சில ஊர்களுக்குச் சென்று வரத் தொடங்கினார். இதனையும் செய்யவேண்டாம் என்று மீண்டும் புலநாய்வுத்துறையினர் இவரது வீட்டிற்குச் சென்று அச்சுருத்தியிருந்தனர். அநுர ஆட்சிக்கு வந்தபின்னர் அவரது ஆட்சியில் நடக்கும் நல்ல விடயங்கள் குறித்தும், தமிழர்கள் நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்றவேண்டும் என்றும் அடிக்கடி இப்போது பேசிவரும் நிலையில் நேற்றைய முந்தினம் அவரை உடனடியாக யாழ்ப்பாணம் புலநாய்வுத்துறை அலுவலகத்திற்கு வந்து தமக்கு விளக்கம் தருமாறு கோரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இவர் மாவீரர் தினம் குறித்தோ, தலைவரின் பிறந்த தினம் குறித்தோ ஒரு வார்த்தையேனும் பேசவில்லை என்பதுதான் உண்மை. ஆக மகிந்த - கோத்தா ஆட்சிக்கும் சந்தர்ப்பவாதத் தமிழர்கள் கடவுளாகப் போசிக்கும் அநுரவிற்கும் இடையே தமிழர் நலன் என்று வரும்போது வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
  5. தீருவிலில் மழையிலும் புயலிலும் மாவீரர்களுக்கு அஞ்சலிகள் செலுத்தியதும், புயல் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட நேரடியாக வந்த இலங்கையின் புதிய அமைச்சரை கொண்டாடுவதும் ஒரே மக்கள் தான். வல்வை நகரசபையில் டக்ளஸிற்கும் உறுப்பினர்கள் இருந்தார்கள். என்ன தான் நடக்குது, மக்கள் எந்தப் பக்கம், இங்கு எது தான் உண்மையில் உயிர்ப்புடன் இருக்கின்றது என்று பார்த்தால், இன்று அங்கு மக்கள் உணர்வுகளுடன் உயிர் வாழ எது வழியோ அதை மட்டுமே தேடிப் போகின்றார்கள்...........
  6. A/L படிக்கிற நேரத்திலும் ஒரு பெண்ணை வன் சைட் லவ் பண்ணினேன். நான் லவ் பண்ணுறது அவளுக்குத் தெரியும். அதனால் என்னுடன் பேசும்போது ஒரு இடைவெளி விட்டே பேசுவாள். ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ப்ரொபோஸ் பண்ணினேன். அவள் என்னை ஒரு நண்பனாக மட்டுமே பார்ப்பதாகக் கூறி என்னை ரிஜெக்ட் பண்ணிவிட்டாள். "இதெல்லாம் காரணம் இல்ல, உண்மையான காரணம் சொல்லு?" என்று நான் நச்சரிக்கவும் என்னுடைய தொடர்பு எல்லாத்தையும் துண்டித்து விட்டாள். காலம் உருண்டோடியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவளை ஃபேஸ்புக்ல பார்த்தேன். ரிக்குவெஸ்ட் கொடுத்ததும் அக்செப்ட் பண்ணிவிட்டாள். இப்போது அவளுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதைக் கண்டேன். போஸ்ட்களுக்கு ரியாக்சன் போடுவது மட்டுமே இருவருக்கும் இடையே இருந்தது. நேற்று மெஸெஞ்சர்ல சும்மா மெஸேஜ் போட்டு பழைய கதைகளைப் பேசினேன். இருவரும் பேசும்போது "உண்மையைச் சொல்லு அப்ப ஏன் என்னைய வேணாம் எண்டு சொன்னாய்?" என்று கேட்டேன். "அப்ப நீ பார்க்கிறதுக்கு நல்லா இருக்க மாட்டா டா" என்றாள். "அப்ப இப்ப பார்க்கிறதுக்கு நல்லா இருக்கேனா?" என்று கேட்டேன். "இல்ல இப்ப இருக்கிறதுக்கு அப்ப இருந்தது பரவால்ல போல" என்றாள். அந்த அவமானத்துல இப்ப நான் அவள ப்ளொக் பண்ணிட்டேன். 😂 Suhirtharaj Logarasa
  7. நீங்கள் சொல்வது உண்மைதான் வசீ , சில செடிகள் பயன்தரு மரங்கள் எத்தனையோ முயற்சிகள் செய்தாலும் இறுதிவரை பயன் தராமலே கருகி போய்விடுகின்றன ,இவர்கள் தகவல்கள் முயற்சிகள் வேறு தரத்திலுள்ளன. முயன்றுதான் பார்ப்போமே என்று எண்ண தோன்றுகிறது. நாமெல்லாம் தண்டுகள் விதைகளை வைத்தே சில செடிகளை உருவாக்குவோம், ஆனால் இலைகளை வைத்தே மாமரம் கொக்கோகோலா உதவியுடன் மிகவும் குள்ளமாக உருவாக்கலாமென்று இவர் கூறுகின்றார் இது இன்னொருமுறை குள்ளமான செடிகளென்பதால் குளிர்காலங்களில் வெயில் படும்படியா வீட்டினுள்ளே வைத்தும் பரமரிக்கலாம் போல இருக்கிறது இது வேகமாக ஆரோக்கியமான ரோஜாக்களை உருவாக்கும்முறை, வீடியோவின் இறுதியில் அவர் தனது குழந்தைகளை அணைத்தபடி நின்றபோது எது ரோஜா எது குழந்தைகள் என்று குழப்பமா போனது
  8. @பாலபத்ர ஓணாண்டி அதையேவெளிப்படையா செய்து அடிவாங்குறது சுமந்திரன்.. 🤣🤣🤣🤣🤣 👍
  9. இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர் சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு ஓத்தாசையாக இருக்க வேண்டியது அவசியம்.எமக்கும் சிங்களவருக்கும் நடந்த சண்டையில் தம்மை வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள் தான். இலங்கை நிர்வாக சேவை பரீட்சை மற்றும் இலங்கை law council நாடாத்தும் பரீட்சைகள், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு நாடாதப்படும் viva exam போன்றவற்றில் முஸ்லீம் இனத்தவரின் தமிழ் மக்கள் மீதான வெறுப்பு அனைவரும் அறிந்ததே. முறைப்படி பன்றி இறைச்சி பரிமாறப்படும் பாராளுமன்றதுக்கு ஒழுங்கான முஸ்லீம் போகவே கூடாது. இலங்கையில் தமிழ் தெரிந்த உத்தியோகாஸ்தர் பதவிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்படாமல் கொச்சை தமிழ் பேசும் முஸ்லீகளுக்கு அவர்களின் அரசியல் வாதிகளால் வழங்கப்பட்டபொழுது நாம் சும்மா தானே இருந்தோம், அதே போல் இப்போது தமிழ் பேசும் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று முஸ்லீம்கள் சும்மா இருக்க வேண்டியது தான்.
  10. 30 NOV, 2024 | 01:43 PM தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என வெரிட்டே ரிசேர்ச்சின் publicfinance.lk ஆய்வினூடாக தகவல் வெளியாகியுள்ளது. வெரிட்டே ரிசேர்ச் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023ஆம் ஆண்டில் மொத்த தொழிற்படையான 8 மில்லியனில் 1.16 மில்லியன் பேர் அதாவது 15 வீதமானோர் மத்திய அரசாங்கம், துணைத் தேசிய அலகுகள் மற்றும் இராணுவம் உட்பட அரச துறையில் பணிபுரிந்துள்ளனர். குறிப்பாக, மொத்த அரச உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு துறையில் பணியாற்றுகின்றனர். ஒப்பீட்டு ரீதியில், பிராந்தியத்தில் உள்ள ஒரே மாதிரியான பொருளாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் மிகக் குறைவான அரச உத்தியோகத்தர்களே பணிபுரிகின்றனர். தமது தொழிற்படையில் இந்தியா 9 வீதமும் வியட்நாம் 8 வீதமும் பங்களாதேஷ் 5 வீத உத்தியோகத்தர்களை மட்டுமே அரச துறையில் பயன்படுத்துகின்றன. அரச துறைக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாலும், இதன் காரணமாக அதிக செலவு ஏற்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் 940 பில்லியன் ரூபாவினை அதன் மீண்டெழும் பாதீட்டில் 20 வீதத்தையும் அதன் வருமானத்தில் 31 வீதத்தையும் அரச துறை சம்பளங்களுக்காகச் செலவிட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் அரச செலவினத்தில் சராசரியாக 23 வீதம் சம்பளங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளதுடன் சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு வரையறுக்கப்பட்ட நிதியே எஞ்சியுள்ளமை ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/200075
  11. பலத்த சந்தேகம் தான், வளவன். வாழைப்பழத்திலிருந்து வாழையா............ ஆனாலும் சோடாவைக் குடித்தால் உடம்பு கெடும் என்கின்றார்கள்............. சோடாவை வாழைப்பழத்திற்கு கொடுத்துப் பார்ப்போமே என்ன நடக்கிறது என்று............🤣. குட்டி வாழையில் குலைகளை பார்த்தவுடன் பன்றி வாழை நினைவும், இங்கு நடந்த ஒரு நிகழ்வும் நினைவில் வருகின்றது. இங்கு ஒரு கல்யாண வீட்டிற்காக என் வீட்டிலிருந்து இரண்டு வாழைகளை வெட்டிக் கொடுத்தேன். பெரிய வாழைகளை முக்கால்வாசிக்கும் மேல் வெட்டிக் கொடுத்தேன். அப்படித்தான் அவர்கள் கேட்டிருந்தனர். பின்னர் மிகுதியாக இருந்த இரண்டு கால் வாழைகளிலிருந்தும் குருத்துகள் வந்தது. ஏதோ சரியான கவலையாகப் போய்விட்டது. இப்படி செய்திருக்கவே கூடாது என்றும் தோன்றியது. வாழைகள் கொஞ்சம் உயிர் கூடிய மரங்கள் போல தோன்றுகின்றன. சில வாரங்களில் அதில் ஒன்று குலை தள்ளப் போகின்றது என்று தெரிந்தது. புதிதாக வந்த மெல்லிய தண்டு, அதனுள்ளே வாழை மொத்தி, பின்னர் குலை............. கடவுளே, இது எப்படி அதைத் தாங்கும் என்று ஒரே யோசனை............... ஆனால், நான் அதைக் காப்பற்றி எடுத்தேன்.............. இங்கே மனிதர்கள் கேட்டுக்கேள்விகள் இல்லாமல் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பயல் ஒரு வாழைக்கும், அதன் குலைக்கும் பரிதாபப்படுகின்றானே என்று தோன்றினால்............... எனக்கும் தோன்றியது............. ஆனாலும் அந்த வாழை தான் வென்றது. அதன் அடிகள் இன்னமும் வீட்டில் நிற்கின்றன.............
  12. தற்போதுள்ள இடர்பாடுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். இதை யார் செய்கிறார்கள் என்பது பிரச்சனையல்ல. கூடுதலாக பாதிக்கப்பட்டது கஸ்டப்பட்ட மக்களே. எனவே அவர்களுக்கு யார் குத்தியாவது அரிசியாகட்டும்.
  13. ஐயா, என்கருத்தில் என்ன குறை கண்டீர் என தாங்கள் செம்புள்ளி குத்தியுள்ளீர், சொற்குற்றமா, பொருட்குற்றமா? . 😋 ஒருசில எலும்பு துண்டுகளுக்காக, தமிழ் மக்களை காட்டியும், கூட்டியும் கொடுத்த கருணா, டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை விடவா இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் நியமனம் தமிழர்களை தமிழர்களோடு உரசவிடப் போகின்றது.
  14. முதல் 3 இடங்களை பிடித்த பிரபா, வாதவூரான், வாலி ஆகியோருக்கு பாராட்டுகள். வாலி தான் முதல் இடத்திற்கு வருவார் என நினைத்திருந்தேன். அவரின் பல அரசியல் ரீதியிலான கணிப்புகள் பின்னர் நிகழ்வதை அவதானித்துள்ளேன். கிருபனை விட அதிக புள்ளிகள் நான் பெற்றதை கண்டு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது எனக்கு. போட்டியினை திறம்பட நடாத்திய கந்தப்பிற்கு பாராட்டுகள். மனுசனுக்கு நல்ல பொறுமையும் இருக்கு.
  15. சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி இதன் மூலம் வலுப்படும். ஜேவிபி சமூக நீதி எனும் முகமூடி போட்ட மிக மோசமான ஒரு இனவாதக் கட்சி என்பதால் அது வெல்லக் கூடாது என தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். இன்று நடப்பவை எனக்கு எந்த வியப்பையும் அளிக்கவில்லை. இன்னும் நிறைய நடக்கவுள்ளன. மழை வெள்ளத்தை அனுர அரசு வடக்கில் கையாண்ட விதத்தை மக்கள அங்கு மிகவும் வரவேற்கின்றனர். வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியில் இருந்து வடக்கிற்கு முதலமைச்சர் தெரிவாகும் சாத்தியங்கள் அதிகம். அப்பவும் நாம் புலம்பிக் கொண்டு இருப்போம்.
  16. நசுக்கிடாக்கள்ளனுக்கு உதாரணம் பார் சிறியன்.. தவறோ சரியோ சுமந்திரனிடம் இருக்கும் வெளிப்படைத்தன்மை இந்த பார் சிறியிடம் இல்லை.. எல்லா ஓட்டுமாட்டையும் பிளக்கில செய்திட்டு வெள்ளையும் சொள்ளையுமா ஊருக்குள்ள வார கள்ளன் பார் சிறி.. அதையே வெளிப்படையா செய்து அடிவாங்குறது சுமந்திரன்..
  17. மத்தியரசின் ஒருபலமான அமைச்சர் தலைவராக இருப்பதும் சிலவேளை நன்மை பயக்கலாம்.
  18. நல்ல ஒரு பகுப்பாய்வு.............👍. பாதுகாப்பு படையினர், துணை பாதுகாப்பு படையினரை அரைப்பங்காக குறைத்தால் கூட, மலேசியாவிற்கு அடுத்த இடத்தில் இரண்டாவதாகத் தான் இலங்கை இருக்கும். எட்டு வீதம் அளவில் கொண்டு வந்தால் எவ்வளவோ நல்லாயிருக்கும், ஆனால் அரசுப் பணிகளில் இருந்து விடுபடுவோருக்கு வெளியில் வேலைகள் கொடுப்பதற்கு இலங்கையில் இப்போதைக்கு வழியில்லை என்றே தெரிகின்றது. அமெரிக்காவிலும் இப்படி ஒரு நடவடிக்கையையே எலானும், விவேக்கும் முன்னெடுத்து இருக்கின்றார்கள். ஆனால் இங்கே தடாலடிதான்.................. நீங்களாகவே வேலையை விட்டுவிட்டு போகிறீர்களா, அல்லது நாங்களே உங்களை நிற்பாட்டவா என்று ஏற்கனவே எலான் பயம்காட்டத் தொடங்கிவிட்டார்.
  19. இது தமிழர்களை தமிழர்களோடு உரசவிட நூல் விடும் ஏற்பாடு. அவர்கள் நினைத்ததை விட அதிகமான பலனை கொடுக்கத் தொடங்கி இருப்பது யாழ் களத்திலும் காணக்கிடைக்கிறது.
  20. எப்படி ஒரு வடக்கன் உயர்குடி யாழ்ப்பாண மக்களுக்கு தலைமையேற்ற முடியும். கடந்த காலங்களில் ஒருங்கமைப்பு தலைவர்களாக இருந்த பார் அங்கஜன், ஒட்டுக்குழு டக்கிலஸ் விட கடந்த 12 வருடங்களாக வடக்கில் இருந்து அடிமடட மக்களுக்கு உழைத்த இராமலிங்கம் எவ்வளவோ திறம் .
  21. புலத்தில் உள்ளவர்களும் அறிக்கை விடக் கூடாது தாயகத்தில் உள்ளவர்களையும் அறிக்கை விடக்கூடாது என்றால் இதில் யார் திருந்தணும்?? இந்த சிங்கள தேசியவாதிகளின் எடுபிடி தாங்கமுடியல சாமி....
  22. பௌத்த வினாவல் - 5, ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பௌத்தத்தின் எழுச்சியும் பரவலும் அசோகர் புத்த ஸ்தூபத்தை வழிபடச்செல்லுதல் 277. பெருவாரியான மக்கள் பின்பற்றும் மற்ற மதங்களை ஒப்பிடும் போது பௌத்ததை பின்பற்றும் மக்கள் எவ்வளவு இருப்பர்? புத்த தர்மத்தை பின்பற்றுவோரின் எண்ணிக்கை வேறெந்த மதங்களை பின்பற்றுவோரையும்விட மிகுதிதான். 278. எவ்வளவு மக்கள் பின்பற்றுகின்றனர் என்ற எண்ணிக்கையை கூறமுடியுமா? சுமார் ஐந்நூறு கோடி. இது உலக மக்கள் தொகையில் 5:13 என்ற விகிதத்தில் உள்ளது. அல்லது உலக மக்கள் தொகையில் சரிபாதி அளவிற்கு குறைவாக உள்ளது. 279. புத்த தர்மத்தின் பரவலுக்காக பெரும் போர்களும், பல நாடுகள் கைப்பற்றப்பட்டதும், பெரும் மனிதக் குருதியும் சிந்தப்பட்டுள்ளனவா? வரலாறு அப்படி கொடுமைகளும் குற்றங்களும் எங்கள் மதத்தின் பரவலுக்காக நிகழ்த்தப்பட்டது என்று ஆவணப்படுத்தவில்லை. இன்றளவும் நாங்கள் அறிந்தவரையில் ஒரு துளி இரத்தம் சிந்தவும் அது காரணமாகவில்லை. பேரராசிரியர் கோல்ப் (kolb) தனது History of culture நூலில் இவ்வாறு சொல்கிறார்: ”போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கும், கைப்பற்றப்பட்ட நிலங்களில் வாழ்ந்த மக்கள் சிறைபிடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதற்கும் நாம் பௌத்தத்திற்கு நன்றி சொல்லியாக வேண்டும்” 280. பிறகு எவ்வாறு அது பிரம்மிக்கத்தக்க வகையில் பரவியது. அதன் பரவலுக்கான ரகசியம் என்ன? பௌத்தத்தினுள்ளிருக்கும் அதன் சிறப்பை தவிர வேறெந்த காரணமுமில்லை. மெய்மையை அடிப்படையாக கொண்ட அதன் தரிசனம், உயரிய அற போதனைகள், மற்றும் மனிதர்களின் அனைத்து தேவைகளுக்கும் நிறைவளிக்கும் அதன் தன்மை ஆகியவையே. 281. எவ்வாறு பௌத்தம் பரப்பப்பட்டது? புத்தர் தனது நாற்பதாண்டு கால ஆசிரிய வாழ்க்கையில் இந்தியாவின் பல நிலங்களுக்கு பயணம் செய்து தம்மத்தை போதித்தார். அவரின் அறிவார்ந்த மற்றும் சிறந்த சீடர்களை இந்தியாவெங்கும் பயணம் செய்ய வைத்து தம்மத்தை பரப்பினார். 282. புத்தர் தனது மாணவர்களை எப்போது அனுப்பினார்? புரட்டாசி மாதத்தின் ஒரு முழுமதி நாளன்று. 283. அவர்களிடம் புத்தர் என்ன கூறினார்? புத்தர் அவர்கள் அனைவரையும் அழைத்து “செல்லுங்கள் பிக்குகளே, சென்று உலகிற்கு தர்மத்தை உபதேசம் செய்யுங்கள். பிறர் நலனுக்கும் உங்கள் நலனுக்கும் உழைத்திடுங்கள். இந்த நற்செய்தியை ஒவ்வொரு மனிதனுக்கும் சுமந்துசெல்லுங்கள். ஆனால் நீங்கள் யாரும் ஒரேவழியை பின்பற்ற வேண்டாம், ஒவ்வொருவரும் படைப்பூக்கத்துடன் செயல்படுங்கள்”. 284. கிறித்துவ யுகத்திலிருந்து எத்தனை ஆண்டுகள் முன்னர் இது நிகழ்ந்தது? சுமார் ஆறு நூற்றாண்டுகள் முன்னர். 285. அரசர்கள் என்ன உதவி செய்தனர்? தாழ்ந்தநிலை மக்களுடன் பேரரசர்களும் மதம் மாறி பௌத்தம் பரவ தங்கள் செல்வாக்கை வழங்கினர். 286. யாத்ரீகர்கள் பங்கென்ன? கற்றறிந்த யாத்ரீகர்கள் வெவ்வேறு நூற்றாண்டுகளில் இந்தியா வந்து இங்கிருந்து அரிய நூல்களையும் போதனைகளையும் தங்கள் நாட்டிற்கு கொண்டுசென்றுள்ளனர். ஆகவே படிப்படியாக பல நாடுகள் தங்கள் பழைய நம்பிக்கைகளை கைவிட்டு பௌத்தர்களாக மாறினார். 287. புத்த மதம் ஆழமாக வேரூன்றியதற்கு மற்ற யாரையும் விட எந்த ஒரு மனிதருக்காக உலகு கடன்பட்டுள்ளது? அவர் பேரரசர் அசோகர். இவர் பியாதாசி என்றும் தர்மசோக்கா என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவர் மகத மன்னர் பிந்துசாராவின் மகன். கிரேக்கர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றிய சந்திரகுப்தரின் பேரன். 288. அவரின் ஆட்சிக்காலம் எப்போது? பொ.மு மூன்றாம் நூற்றாண்டு. புத்தரின் காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகள் பின்னர். வரலாற்று ஆசிரியர்கள் இந்த காலக்கணிப்பை மறுக்கின்றனர், எனினும் அவ்வளவு உறுதியாக அல்ல. 289. எது அவரை உயர்ந்தவர் ஆக்கியது? அவர் இந்திய வரலாற்றில் மிகவும் ஆற்றல்மிக்க பேரரசர், மாவீரர் மற்றும் இராஜதந்திரியாக அறியப்படுகிறார். ஆனால் அவரின் உன்னத குணங்கள் என்பது உண்மை மற்றும் அறத்தின் மீதான பற்று, மத நல்லிணக்கம், அனைவருக்கும் சமமான அரசு, கருணை - நோய்வாய்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் விலங்குகள் மீதான அவரின் கருணை. அவரின் புகழ் சைபீரியா முதல் சிலோன் வரை மரியாதையுடன் நினைவுகூறப்படுகிறது. 290. பிறப்பிலேயே அவர் பௌத்தரா? இல்லை. அவரின் பட்டாபிஷேகம் முடிந்து தன்னுடைய பத்தாம் வயதில் அவர் பௌத்த மதத்திற்கு நிஃரோத சமனீரா என்னும் அராகதரால் மாற்றப்பட்டார். 291. அவர் பௌத்தத்திற்கு என்ன செய்தார்? அவர் போலி பிக்குகளை வெளியேற்றி நல்லவர்களை ஊக்குவித்தார், மடாலயங்கள் மற்றும் டகோபாக்கள் எழுப்பினார், நந்தவனங்கள் நிறுவினார், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் மருத்துவமனைகள் ஏற்படுத்தினார், பாடலிபுத்திரத்தில் தர்மத்தை மறுபரிசீலனை செய்யவும் மீளுருவாக்கம் செய்யவும் மன்றம் நிறுவினார், பெண்களுக்கும் மதக்கல்வி கற்கும் உயர்வளித்தார். ஐந்து கிரேக்க அரசர்கள், அவரது நட்பு நட்டுகள், மற்றும் இந்தியாவின் பேரரசர்களுக்கும் புத்தரின் சித்தாந்தத்தை போதிக்க தூதரக அதிகாரிகளை அனுப்பிவைத்தார். அவரே எங்கள் முதன்மை யாத்திரை நகரங்களான கபிலவஸ்து, புத்தகயா, இசிபட்டானா மற்றும் குசினராவில் ஸ்தூபிகளை எழுப்பினார். மேலும் பல ஆயிரம் கட்டிடங்களை எழுப்பினார். 292. அவரின் உன்னத குணங்களை நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது? கடந்த சிறு காலத்திற்குள்ளேயே இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அவரின் பதினான்கு அரசாணைகள் பாறை கல்வெட்டிலும் அவரின் கட்டளைகளால் எழுப்பப்பட்ட எட்டு தூண்களிலும் கண்டுபிடிக்கப்பட்டன. அவையனைத்தும் அவரை இப்புவியில் வாழ்ந்தவரில் விவகமும், உயர் மனமும் கொண்ட பேரரசர் என நிரூபிக்கின்றன. 293. இந்த கல்வெட்டுக்கள் பௌத்தத்திற்கு என்ன பண்புகளை அளிக்கிறது? இவை பௌத்தத்தை பெரும் சகிப்புத்தன்மை கொண்ட மதமாகவும், உலக சகதோரத்துவம், உயர் நெறி மற்றும் தர்மத்தை கடைபிடிக்கும் மதமாகவும் காட்டுகின்றன. இது சுயநலமோ, வகுப்புப்பிரிவினையோ அல்லது சகிப்பின்மையோ கொண்டதாக எங்கும் ஒரு சுவடும் இல்லை. அந்த கல்வெட்டுகள் மேற்கின் பெரும் பண்டிதர்களால் மரியாதையுடன் போற்றப்படுகின்றன. 294. தர்மசோகா என அழைக்கப்படும் அசோகர் பௌத்தத்திற்கு அளித்த மதிப்புமிக்க பரிசென்ன? தன் அன்பிற்குரிய மகன் மஹிந்தா மற்றும் மகள் சங்கமித்ரையை புத்த சங்கத்திற்கு அளித்தார். மேலும் அவர்களை இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தை அறிமுகம் செய்வித்தார். 295. இந்த உண்மை தகவல் சிலோனின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளதா? ஆம். அரசு நிகழ்வுகளை பதிவுசெய்யும் மகாவம்சம் என்னும் நூலில் சமயப்பரப்பாளர்களின் பணியை நேரில் கண்டவர்களால் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. 296. சங்கமித்ரை மேற்கொண்ட சமயப்பணி குறித்தான ஆதாரம் ஏதேனும் இன்றுள்ளதா? உள்ளது. அவர் சிலோன் செல்கையில் புத்தர் எந்த போதி மரத்தடியில் ஞானமடைந்தாரோ அதே மரத்தின் ஒரு கிளையை தன்னுடன் கொண்டுசென்றார். அது இன்றும் வளர்ந்துகொண்டிருக்கிறது. 297. எங்கு? அனந்தபுரம் என்னும் இடத்தில். அதன் வரலாறு இன்றும் அதிகாரபூர்வமாக பாதுகாக்கப்படுகிறது. பொ.மு. 306-ல் நடப்பட்ட இம்மரமே வரலாற்றில் பதிவாகிய பழம்பெரும் மரம். 298. அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த பேரரசர் யார்? தேவனாம்பிரியா தீசா. அவரின் துணைராணி அனுலா சங்கமித்ரையை வரவேற்று பிக்குணிகளுக்கான சங்கத்தை நிறுவுமாறு கூறினார். 299. சங்கமித்ரையுடன் வந்தவர்கள் யார்? பல பிக்குணிகள் உடன்வந்தனர். அவர் குறுகிய காலத்தில் அரசியையும் மற்றும் அவருடன் இருந்த மகளிர்களையும் மேலும் ஐந்நூறு கன்னி பெண்களையும் சங்கத்தில் உட்புகுத்தினார். 300. அசோகரின் மறைபணியாளர்கள் அந்நிய நிலத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்னென்ன? அவரின் மகனும் மகளும் பௌத்தத்தை இலங்கையில் அறிமுகம் செய்தனர். அவரின் துறவிகள் பௌத்தத்தை வடஇந்தியா மற்றும் தங்களின் எல்லைக்கப்பாற்பட்ட பதினான்கு இந்திய நிலங்களிலும், ஐந்து கிரேக்க அரசர்களுக்கும் மற்றும் ஏற்கனவே தங்கள் சமய பணியாளர்களை அனுமதிக்கும் ஒப்பந்தம் கொண்ட நட்பு நாடுகளுக்கும் கொண்டுசென்றனர். 301. அவர்களை பெயர் கூறமுடியுமா? சிரியாவின் அண்டியோசிஸ் (Antiochus), எகிப்தின் படோலேமி (Ptolemy), மாசிடோனின் ஆன்டிகோன்ஸ் (Antigonus), சிரேனின் மர்கஸ் (Margas), எபிரோசின் அலெக்ஸாண்டர் (Alexander). 302. இதை எங்கே அறிந்துகொள்வது? பேரரசர் அசோகர் அவராலேயே பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலும் கல்தூண்களிலும் உள்ள அரசாணைகளில் காணலாம். அவை இன்றும் அவ்விடங்களுக்கு செல்வோர் அனைவரும் காணும்வகையில் நிலையாக இருக்கின்றன. 303. மேற்கின் எந்த இணை மதங்களோடு புத்த தர்மம் மேற்கத்திய சிந்தனையோடு ஒன்றுசேர்கிறது? எகிப்தின் தேராபெட்ஸ் (Therapeuts) மற்றும் பாலஸ்தீனத்தின் எஸ்சென்ஸ் (Essenes). 304. சீனாவில் பெளத்த நூல்கள் எப்போது அறிமுகம் செய்யபட்டன? சமந்த பசதிக்க (samanta pasadika) மற்றும் சாரத்த திபானி (sarattha dipani) ஆகிய இரண்டு பாலி நூல்கள் பொ.மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தர்மசோகரின் ஐந்து பிக்குகளால் சீனாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன என கூறப்படுகிறது. 305. எங்கிருந்து எப்போது கொரியா தேசத்திற்குள் சென்றது? சீனாவிலிருந்து பொ.யு. 372-ல் சென்றது. 306. ஜப்பானிய நாட்டிற்கு எப்போது எங்கிருந்து சென்றது? கொரியாவிலிருந்து பொ.யு. 552-ல் ஜப்பானிற்கு சென்றது. 307- எங்கிருந்து எப்போது கொச்சின்சீனா (Cochinchina - வியட்நாம்), ஃபார்மோசா (Formosa), ஜாவா, மங்கோலியா, யோர்கண்ட் (Yorkand), பால்க் (Balk), போகாரா (Bokhara), ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்றது? உறுதியாக பொ.யு. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் சென்றது. 308. இலங்கையிலிருந்து எங்கெங்கே எப்போது பௌத்தம் பரவியது? பொ.யு. 450-ஆம் ஆண்டில் பர்மாவிற்கும், பின்னர் அங்கிருந்து படிப்படியாக அரகன் (Arakan), கம்போயா (Kamboya) மற்றும் பெகுவிற்கும் (Pegu) பரவியது. ஏழாம் நூற்றாண்டில் (பொ.யு. 638) சியாமிற்கும் (தாய்லாந்து) பரவியது. அன்று முதல் இன்று வரை அது சியாமின் அரச மதமாகவே உள்ளது. 309. காஷ்மீரிலிருந்து சீனா தவிர்த்து கூடுதலாக வேறெங்கு பரவியது? நேபாளம் மற்றும் திபெத். 310. ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பான்மை மதமாக இருந்த பௌத்தம் ஏன் இப்போது இந்தியாவில் அழிவின் நிலையிலுள்ளது? துவக்கத்தில் பௌத்தம் ததாகதரின் போதனைகளின் புனிதமும் உன்னதமும் கொண்டிருந்தது; சங்கம் உயர் ஒழுங்குடனும் தர்ம விதிகளை பின்பற்றியும் நடந்தது; அது எல்லோர் மனதையும் வென்று காலை ஒளி மலர்களை உயிர்த்தெழுப்புவது போல பல நாடுகளெங்கும் மகிழ்ச்சியை பரவ செய்தது. ஆனால் சில நூற்றாண்டுகள் கழிந்து தீய பிக்குகள் உபசம்வதா (துறவு) ஏற்றனர், அதன்பிறகு சங்கத்தில் செல்வமும், சோம்பலும் மற்றும் புலன் நாட்டமும் வந்துசேர்ந்தது, தர்மம் நலிவுற்றது. ஆகவே இந்திய தேசம் அதை கைவிட்டது. 311. இந்த வீழ்ச்சி வெகு விரைவாக நடைபெற பொ.யு ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் ஏதேனும் நடந்ததா? ஆம் 312. ஆன்மீகத்தில் ஏற்பட்ட குறைபாடு, சங்கத்தின் சீரழிவு, மற்றும் உயர் விழுமியம் கொண்ட மக்கள் பின் மூடத்தனமான உருவவழிபாட்டிற்கு மாறிய விளைவு இவைகளல்லாமல் வேறேதும் காரணங்கள் உண்டா? ஆம். இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்சல்மான்கள் தாங்கள் சென்ற இடெமெல்லாம் பெரும் சேதம் உண்டாக்கி எங்கள் மதத்தை இல்லாமலாக்கினர். 313. எத்தகைய கொடுஞ்செயல் அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ளது ? எங்கள் விஹாரைகளை எரித்து அல்லது இடித்துத்தள்ளி அழித்தனர், பிக்குகளை கொன்றழித்தனர், எங்கள் புனித மத நூல்களை நெருப்பிற்கு இரையாக்கினர். 314. நம்முடைய நூல்கள் மொத்தமாக இந்தியாவில் அழிந்துவிட்டதா? இல்லை. பல பிக்குகள் எல்லை கடந்து திபெத் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்கள் நூல்களுடன் தஞ்சமடைந்தனர். 315. சமீப காலங்களில் இந்த புத்தகங்கள் பற்றி ஏதேனும் தடயங்கள் கண்டறியபட்டதா? ஆம். ராய்பகதூர் சரத்சந்திரதாஸ் என்னும் வங்காள அறிஞர் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை திபெத்தின் நூலகங்களில் கண்டு அவற்றில் மிகவும் முக்கியமானவற்றை நகல் எடுத்து தன்னுடன் கொண்டுவந்தார். அவர் தற்போது இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு அப்புதகங்களை தொகுத்து பிரசுரிக்கும் பணியில் உள்ளார். 316. எந்த நாட்டில் துவக்ககால பௌத்ததின் புனித நூல்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு குறைந்த அளவே சிதைக்கப்பட்டுள்ளது என நாம் நம்புவதற்கு காரணமாகிறது? இலங்கை. பிரிட்டானிக்காவின் கலைக்களஞ்சியம் இப்படி சொல்கிறது “இந்த தீவில் பௌத்தம் அதன் அப்பழுகற்ற தூய நிலையில் இந்த நவீன காலத்திலும் தக்கவைக்கப்பட்டுள்ளது”. 317. நவீன காலகட்டத்தில் பிடகங்கள் திருத்தம் செய்யபட்டுள்ளனவா? ஆம். இலங்கையில் மிகவும் கவனமாக சுமங்கலா (H Sumangala) மற்றும் பிரதன ஸ்தவீரா (Pradhana sthavira) ஆகியோரின் தலைமையில் கற்றறிந்த பிக்குகளால் பொ.யு 1875-ல் வினய பிடகம் திருத்தம் செய்யப்பட்டது. 318. தெற்கு மற்றும் வடக்கு என பிரிவாக உள்ள பெளத்த நாடுகள் பௌத்ததின் நன்மைக்காக தங்களுக்குள் நட்பார்ந்த உறவு கொள்வதுண்டா? பொ.யு. 1891-ல் இந்த இருபெரும் பிரிவினரின் ’பிரதான நாயகர்’களிடையே பதினான்கு கருத்துக்கள் பௌத்தத்தின் அடிப்படை நம்பிக்கை கூறுகளாக ஏற்கப்பட்டு இருபிரிவினரும் கற்க வேண்டும் என்ற வெற்றிகரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கலோனல் ஆல்காட் அவர்களால் வரைவு செய்யப்பட்ட இக்கருத்துக்கள் பர்மா, சிங்களம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒவ்வொன்றாக விவாதித்து தலைமை பிக்குகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டு கையொப்பம் பெற்று தை மாதம் 1892 ஆம் ஆண்டு பிரசுரமானது. 319. இதனால் என்ன நல்விழைவு ஏற்பட்டது? இருவருக்குமான நற்புரிதலின் விழைவால் எண்ணற்ற ஜப்பானிய பிக்குகள் மற்றும் சமநேரர்கள் (புதிய ஆண் பிக்கு மாணவர்கள்) சிலோன் மற்றும் இந்தியாவிற்கு பாலி மற்றும் சமஸ்கிருதம் பயில அனுப்பப்பட்டனர். 320. புத்த தர்மம் பௌத்தம் அல்லாத நாடுகளிலும் பிரபலம் ஆவதற்கான தடயங்கள் ஏதேனும் உள்ளதா? உள்ளது. எங்களின் மதிப்புமிக்க நூல்களின் மொழிபெயர்ப்புகள் மற்றும் பல கட்டுரைகள் சிற்றிதழ்களிலும் நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்படுகிறன்றன. மற்றும் சிறப்பான சமய ஆய்வுக்கட்டுரைகள் தலைசிறந்த எழுத்தாளர்களால் அச்சிதழ்களில் வெளியிடப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மேற்கு நாடுகளில் பௌத்தர்களும் அல்லாதவரும் பெளத்த கருத்துக்களை பொதுவெளியில் பெரும் கூட்டத்தின் முன் சொற்பொழிவு செய்கின்றனர். ஷின் ஷூ (shin shu) பிரிவை சேர்ந்த ஜப்பானிய பௌத்தர்கள் ஹொனோலுலு, சான்பிரான்ஸிஸ்கோ, சக்ரமெண்டோ மற்றும் பிற அமெரிக்க நிலங்களில் தங்கள் சமயகுழுக்களை அமைத்துள்ளனர். 321. நம்முடைய எந்த இரண்டு முதன்மை கருத்துக்கள் மேற்கத்திய மனதை ஆக்கிரமித்துள்ளது? கர்மா மற்றும் மறுபிறப்பு. இதனை அவர்கள் ஏற்றுகொண்டதன் விரைவு ஆச்சர்யமயளிக்கிறது. 322. இந்த ஏற்பிற்கான விளக்கம் எது என நம்பப்படுகிறது? அவை இயற்கையாக உள்ளுறைந்திருக்கும் அறத்திற்கு முக்கியத்துவம் தருவதும் மற்றும் அவற்றின் தெளிவான நியாயத்தன்மையுமே காரணம். ஹென்றி ஸ்டீல் ஆல்காட் தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி ஹென்றி ஸ்டீல் ஆல்காட் விஷ்ணுகுமார் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார். இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார். இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும் அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. https://www.kurugu.in/2024/11/buddhism.html
  23. மாவீரர் நாளை கொண்டாட அனுமதித்ததாக கூறி அனுரவுக்கு ஏன் சாராயக்கடை சிறி மாவீரர் நாள் நடக்க முன்பே அவசரப்பட்டு நன்றி நக்கினார்? மேலே குசா அண்ணை கூறியது போல இனவாதம் அப்படியேதான் இருக்கிறது. தாம் ஊழல் வழக்குகளில் இருந்து தப்ப - அனுரவுக்கு வெள்ளை அடிக்கிறனர் சாராய சிறி போன்றோர். இது 2ஜி வழக்கில் இருந்து தப்ப கருணாநிதி ஆடிய நாடகத்தின் சின்ன வேர்ஷன்.
  24. சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட பயிர்களுக்கு மேலதிகமாக மலையக மற்றும் தாழ்நில மரக்கறி விவசாயிகள் மற்றும் பழ விவசாயிகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நாமல் கருணாரத்ன, அவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=196627
  25. அப்படியென்றால் அநுரவையும் அவனது கூட்டத்தையும் எதற்காக சிலர் வராது வந்த மாமணியாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்?
  26. கென்ட், டொலர் குடியேற்றங்கள் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கலாக நூற்றுக்கணக்கான தமிழர்களைப் பலியிட்ட சிங்கள இராணுவம் கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்கள் நடைபெற்ற மறுநாளே தமிழ் மக்கள் மீதான தனது பழிவாங்கல்த் தாக்குதல்களையும், அவர்களின் பூர்வீக வாழிடங்களிலிருந்து அவர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆரம்பித்தது. வவுனியா தடைமுகாம் படுகொலை வவுனியா இராணுவத் தடை முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 20 தமிழர்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. தப்பியோட எத்தனித்தபோது அவர்களைத் தாம் சுட்டுக் கொன்றதாக இராணுவம் கூறியது. ஆனால் இப்படுகொலையினை விசாரித்த மனிதவுரிமைச் சபை உள்ளிட்ட இன்னும் சில மனிதவுரிமை அமைப்புக்கள் இராணுவம் கூறிய படுகொலைகளுக்கான காரணத்தை முற்றாக நிராகரித்திருந்தன. இப்படுகொலைகள் நேரடியாகப் பார்த்த சாட்சிகளைப் பேட்டிகண்டவேளை, அடைத்துவைக்கப்பட்டிருந்த 20 தமிழர்களையும் முகாமின் எல்லைக்குக் கொண்டுசென்ற இராணுவத்தினர், அவர்களைத் தப்பியோடுங்கள் என்று கட்டளையிட்டதாகவும், அவ்வாறு இளைஞர்கள் தப்பியோடும்போது பின்னாலிருந்து அவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருக்கிறார்கள். வவுனியா, நெடுங்கேணிப் பகுதிகள் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களைப் புலிகள் என பெயரிட்ட லலித் அதுலத் முதலி புலிகளின் தாக்குதல் நடைபெற்ற மறுநாள் இராணுவத்தினரும், விமானப்படையினர் நடவடிக்கையில் இறங்கினர். மார்கழி 1 ஆம் திகதி காலை வானில் தோன்றிய விமானப்படையின் உலங்குவானூர்திகள் தமிழ்க் கிராமங்களான வவுனியா மற்றும் நெடுங்கேணி மீது சரமாரியான இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டதுடன், குண்டுகளையும் வீசினர். பதவியா சிங்களக் குடியேற்றத்தின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த பராக்கிரமபுர இராணுவ முகாமிலிருந்தும், வவுனியாவில் அமைந்திருந்த இணைந்த கூட்டுப்படைகளின் படைப்பிரிவிலிருந்தும் புறப்பட்ட இராணுவத்தினர் தேடியழிக்கும் தாக்குதலை ஆரம்பித்தனர். அன்று மாலை தமது இராணுவ நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்ட லலித் அதுலத் முதலி, கென்ட், டொலர் பண்ணைகள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடியழிக்கும் நடவடிக்கைகளைத் தாம் ஆரம்பித்திருப்பதாகக் கூறினார். மேலும் தப்பியோடும் பயங்கரவாதிகள விமானப்படையினர் வானிலிருந்து கண்காணித்து அவர்களை தாக்கி அழித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மார்கழி 2 ஆம் திகதி வெளிவந்த சண்டே ஒப்சேர்வர் மற்றும் வீரகேசரிப் பத்திரிக்கைகள் தேசிய பாதுகாப்பு அமைச்சினால் தமக்கு வழங்கப்பட்ட தாக்குதல் தொடர்பான செய்திகளை வெளியிட்டிருந்தன. அதன்படி 68 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 42 பேர் காயப்படுத்தப்பட்டதாகவும், மேலும் 35 பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறி 145 தமிழ் மக்களுக்கான கணக்கினைக் காட்டியிருந்தன. சிங்கள மக்களுக்கு தேசிய பாதுகாப்பு அமைச்சு வழங்கிய செய்தியில், "நாம் அவர்களில் இன்னும் பலரைக் கொன்றிருக்கிறோம்" என்பதாகும். வீரகேசரி இன்னும் இரு செய்திக் குறிப்புகளை மேலதிகமாக வெளியிட்டிருந்தது. பத்திரிக்கையின் மாகாணச் செய்தியாளர்களினூடாக இச்செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. வவுனியா நிருபர் அனுப்பியிருந்த செய்தியின்படி விமானப்படையினர் வவுனியாவிலும், நெடுங்கேணிப்பகுதியிலும் தமிழ் மக்கள் குடியிருப்புக்கள் மீதே தாக்குதலை நடத்தியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவரும் அப்பாவித் தமிழ் மக்களே என்றும் அச்செய்தி கூறியது. திருகோணமலை மாவட்டத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள் திருகோணமலை மாவட்டத்திலிருந்து வந்த செய்தியறிக்கையில் இராணுவத்தினருடன் இணைந்துகொண்ட சிங்களக் காடையர்கள் அருகிலிருந்த தமிழ்க் கிராமங்களுள் நுழைந்து படுகொலைகளில் ஈடுபட்டதாகக் கூறியது. திருகோணமலையில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவருமே அப்பாவித் தமிழ் மக்களே என்றும் அச்செய்திக் குறிப்புக் கூறியது. இராணுவத்தினரின் பழிவாங்கும் தாக்குதல்கள் குறித்து ஆரய்ந்திருந்த மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்ககழக ஆசிரியர்கள் அமைப்பு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் சட்டர்டே ரிவியூ ஆகியவையும் வீரகேசரிப் பத்திரிக்கைச் செய்தியினை உறுதிப்படுத்தியிருந்தன. இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான பழிவாங்கும் தாக்குதல்களையடுத்து அமிர்தலிங்கம் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியிடம் இதுகுறித்து முறையிட்டிருந்தார். இதனையடுத்து ரஜீவின் வேண்டுகோளிற்கு அமைவாக இத்தாக்குதல்கள் குறித்து ஆராயவென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மூதுருக்கான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவருமான தங்கத்துரையை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தது. இக்காலப்பகுதியில் வெளிவந்த இந்த அறிக்கைகளும், இவற்றைத் தொடர்ந்து வெளிவந்த இன்னும் இரு அறிக்கைகளும் 1984 ஆம் ஆண்டு மார்கழி மற்றும் 1985 மார்கழி ஆகிய காலப்பகுதிகளில் திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்க் கிராமங்கள் மீது அரச படைகளும், சிங்களக் காடையர்களும் நடத்திய தாக்குதல்கள் குறித்துப் பேசியிருந்தன. திரு விஜயரட்ணம் என்பவரால் மண‌ல் ஆறு எனும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகத்தின் 23 ஆம் அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் அமரவயல் எனும் புராதனத் தமிழ்க் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த சில விடயங்களையும், குருநாதன் என்பவரால் எழுதப்பட்ட தென்னைமரவாடி எனும் இன்னொரு தமிழ்க் கிராமம் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின் தொகுப்பிலிருந்து சில விடயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பதவியா சிங்களக் குடியேற்றத்தால் விழுங்கப்பட்ட தமிழ்க் கிராமம் அமரவயல் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளுக்கும் பதவியா சிங்கள்க் குடியேற்றத்திற்கும் நடுவே அமைந்திருந்த தமிழர் கிராமமான அமரவயல் பகுதியிலிருந்து 1984 ஆம் ஆண்டு மார்கழி 2 ஆம் திகதி தமிழ் மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டனர். சரித்திர காலம் தொட்டு தமிழர்களின் விளைச்சல் மிக்க விவசாயக் காணிகள் அமைந்திருந்த அமரவயல் பகுதி பதவியாக் குடியேற்றத்துடனும், கென்ட் , டொலர் பண்ணைகளுடனும் இணைக்கப்பட்டு தெற்கிலிருந்து சிங்களக் குடியேற்றவாசிகளால் நிரப்பப்ப‌ட்டது. அமரவயலைப் போன்றே அப்பகுதியைச் சுற்றியிருந்த இன்னும் பல தமிழ்க் கிராமங்களும் தமிழ்நீக்கம் செய்யப்பட்டு அதே நாட்களில் சிங்களக் குடியேற்றங்களுக்குள் உள்வாங்கப்பட்டன. செம்மலையிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட தமிழ் மக்கள் (2+) தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்களில் செம்மலையும் ஒன்று. அன்று காலை செம்மலைப் பகுதிக்கு வந்த இராணுவ ஜீப் வண்டியொன்று அங்கிருப்பவர்களை உடனடியாக அங்கிருந்து ஓடித் தப்புமாறும் இல்லாதுவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்றும் அறிவித்தது. ஜீப் வண்டியிலிருந்த இராணுவத்தினர் அங்கிருந்த மக்கள் மீது உடனடியாகக் கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். இரு தமிழ் மக்கள் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டு விழ ஏனையோர் ஓடத் தொடங்கினர். அக்கிராமம் முழுவதும் இரு நாட்களுக்கு அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் உயிர்காக்க ஒளித்திருந்தது. தமிழர்களை செம்மலையிலிருந்து விரட்டியடித்த இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் கிராமத்திற்குள் நுழைந்து, தமிழர்களின் வீடுகளையும், வயற்குடில்களையும் கொள்ளையிட்டு விட்டு எரியூட்டினர்.தமது வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டதை செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தமது புராதன வாழிடத்தைக் கைவிட்டு முல்லைத்தீவு நோக்கி நடக்கத் தொடங்கினர். ஒதியாமலைப் படுகொலைகள் (32+) திருகோணமலை மாவட்டத்தின் இன்னொரு தமிழ்க் கிராமமான ஒதியாமலை மீதும் இராணுவத்தினரும், சிங்களவர்களும் அதேநாள் தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதல் மிகவும் குரூரமானது. மார்கழி 1 ஆம் திகதி மாலை பதவியா இராணுவ முகாமிலிருந்து இராணுவ வாகனங்கள் வந்திறங்கிய இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் கிராமத்தின் முகப்பில் அமைந்திருந்த ஊர்க்காவலன் ஆலயத்தின் முன்னால் கூடினர். அன்றிரவு முழுதும் ஆலயத்தில் தங்கியிருந்த சிங்களத் தாக்குதல் அணி மறுநாள் காலை கிராமத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டது. பின்னர் கிராமத்தினுள் புகுந்து இளவயது ஆண்களைக் கைதுசெய்து இழுத்துவந்து கிராமத்தின் சனசமூக நிலையக் கட்டிடத்திற்குள் அனைவரையும் வரிசையில் நிற்கவைத்துச் சுற்றுக் கொன்றது. படுகொலையினை நிறைவுசெய்துவிட்டு முகாம் திரும்புகையில் ஐந்து வயதான தமிழர்களை அவ்வணி இழுத்துச் சென்றது. சுமார் இரு வாரங்களுக்குப் பின்னர் கென்ட் பண்ணைக்கருகில் உழவு இயந்திரத்துடன் சேர்த்து எரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒதியாமலைப் படுகொலைகள் நடந்த மறுநாள் அப்பகுதிக்குச் சென்ற முல்லைத்தீவு அரசாங்க அதிபரும், பிரதான மருத்துவ அதிகாரியும், கிராமத் தலைவரும் கொல்லப்பட்ட 27 தமிழர்களின் உடல்களைக் கண்டனர். அங்கு வருகை தந்த அதிகாரிகள் சாட்சியங்களைப் பதிவுசெய்ய, கிராமத் தலைவரும் உறவினர்களும் கொல்லப்பட்ட தமிழர்களை அடையாளம் காண, ஏனைய அதிகாரிகள் அவர்களின் பெயர் விபரங்களைப் பதிவுசெய்துகொண்டபின்னர் அவற்றிற்கு தீமூட்டி இறுதிக் கிரியைகளை நடத்தினர். இப்படுகொலைகளில் பலியான தமிழர்கள் அனைவரையும் பெயரிட்டு, பயங்கரவாதிகள் என்று மறுநாள் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. தென்னைமரவாடிப் படுகொலைகள் (24+) கொக்கிளாய், நாயாறு சிங்கள் குடியேற்றங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கலாக மார்கழி 3 ஆம் திகதி மற்றுமொரு படுகொலையினை இலங்கை இராணுவம் முன்னெடுத்தது. திருகோணமலை மாவட்டத்தின் மிகவும் வடக்கான பகுதியில் அமைந்திருக்கும் இன்னொரு புராதன தமிழ்க் கிராமமான தென்னைமரவாடி மீது இராணுவத்தின் கவனம் திரும்பியிருந்தது. அன்று காலை கிராமத்தினுள் நுழைந்த கண்ணில் அகப்பட்ட 13 ஆண்களை வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றனர். பின்னர் கிராமத்திலிருந்தவர்களை அச்சுருத்திய இராணுவம் உடனடியாக அனைவரையும் அங்கிருந்து வெளியேறி ஓடிவிடுமாறு கட்டளையிட்டது. இதனையடுத்து அங்கிருந்த 200 தமிழர்களும் அங்கிருந்து வெளியேறி முல்லைத்தீவு மாவட்டத்தின் பொன்னகர் பகுதியில் சென்று அடைக்கலம் தேடிக் கொண்டனர். அதேநாள் கொக்கிளாய், நாயாறு பகுதிகளுக்கருகில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராணுவம் அங்கிருந்த மேலும் 12 தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து சுட்டுக் கொன்றது. செம்மடுப் படுகொலைகள் (எண்ணிக்கை தெரியவில்லை) மார்கழி 4 ஆம் திகதி இன்னும் இரு கொடூரமான படுகொலைகளை சிங்கள இராணுவமும் சிங்களக் காடையர் அணியும் நடத்தின. கென்ட், டொலர் பண்ணைகளில் இருந்து 16 கிலோமீட்டர்களில் அமைந்திருக்கிறது புராதன தமிழ்க் கிராமமான செம்மடு. அன்று காலை செம்மடு கிராமத்தினுள் புகுந்த இராணுவமும் காடையர்களும் ஒரு வயோதிபப் பெண்மணியையும், சில சிறுவர்களையும் மட்டுமே விட்டுவிட்டு ஏனையோர் அனைவரையும் இழுத்துச் சென்றது. ஆனால் இதுகுறித்த கேள்விகள் எழுந்தபோது அக்கிராமத்திற்குள் தாம் நுழையவே இல்லை என்று இராணுவம் மறுத்தது. ஆனால் இழுத்துச் செல்லப்பட்ட கிராம வாசிகள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டர்டே ரிவியூ மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியவற்றின் அறிக்கைகளின்படி அன்று இழுத்துச் செல்லப்பட்ட தமிழர்களும் அனைவரையும் இராணுவம் கொன்றுவிட்டதாக அறிய முடிகிறது. முருங்கனில் சிங்கள் காடையர்கள் அரங்கேற்றிய நரவேட்டை (107+) மார்கழி 4 ஆம் திகதியின் இரண்டாவது தமிழினப் படுகொலை மன்னாரின் முருங்கன் பகுதியில் நடைபெற்றது. இராணுவ வாகனம் ஒன்றின் மீது போராளிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு இராணுவத்தினன் கொல்லப்பட இன்னும் அறுவர் காயமடைந்தனர். தமது சகாக்களில் ஒருவன் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கற் தாக்குதலில் ஈடுபட்ட தள்ளாடி முகாமின் இராணுவக் காடையர்கள் 107 தமிழ் மக்களைப் படுகொலை செய்தனர். இப்படுகொலைகள் குறித்த விலாவாரியான அறிக்கையொன்றினை சட்டர்டே ரிவியூ வெளியிட்டிருந்தது. இப்படுகொலைகள் குறித்து முழுமையான விபரங்களை சர்வதேசக் குற்றவியல் ஆயத்தின் வேர்ஜினியா லியரியும் வெளியிட்டிருந்தார். இவ்வறிக்கைகளின் அடிப்படியில் அன்று நடந்த கொடூரம் குறித்து செய்திகளை வெளியிட்டிருந்தன. தாக்குதலில் ஈடுபட்ட் அனைத்து இராணுவத்தினரும் மிகுந்த போதையில் காணப்பட்டனர். கண்ணிவெடித் தாக்குதல் நடைபெற்ற பகுதியின் வீதியின் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்குக் காணப்பட்ட வீடுகளும், கடைகளும் அவர்களால் தீமூட்டப்பட்டன. வீடுகள் தீயிடப்படுமுன் அவற்றினுள் நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்த அனைவரையும் சுட்டுக் கொன்றனர்.அப்பகுதியில் நடைபெற்றுவந்த தாக்குதல்களையடுத்து உப தபால் அலுவலகத்திற்குள் பலர் ஓடித் தஞ்சமடைந்திருந்தனர். அங்கும் வந்த இராணுவத்தினர் உள்ளிருந்த அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு அலுவலகத்திற்கும் தீமூட்டினர். நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளை அறியாது அப்பகுதியூடாக வந்த பஸ் வண்டிகளும் மறிக்கப்பட்டு, உள்ளிருந்த தமிழர்கள் கீழே இறக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் அப்பிரதேசத்தின் வயற்காணிகளில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகளில் உயிர் தப்பியவர்களை செவ்விகண்டபோது, "நான்கு மணித்தியாலம் நடந்த கோரத் தாண்டவம்" என்று அப்படுகொலைகளை அச்சம் மிக வர்ணித்திருந்தனர். இலங்கையின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளின் வரிசையில் முருங்கன் படுகொலையும் மிகவும் முக்கியமானது என்றால் அது மிகையில்லை. படுகொலைகளுக்கான சாட்சியங்களைக் கொண்டு சென்றதற்காகக் கொல்லப்பட்ட மெதடிஸ்த்த பாதிரியாரின் குடும்பம் ஆனால் மன்னாரில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவத்தின் படுகொலைகள் முருங்கனுடன் மட்டுமே அன்று நின்றுவிடவில்லை. அந்நாட்களில் மேலும் பல படுகொலைகளை அவர்கள் அரங்கேற்றியிருந்தனர். முருங்கன் படுகொலை நடைபெற்று ஒரு சில நாட்களுக்குப் பின்னரும், 1985 ஆம் ஆண்டு தை மாதத்தின் முதலாம் வாரத்திலும் இவை நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களில் முதலில் பலியானவர்கள் முருங்கன் மெதடிஸ்த்த திருச்சபையின் போதகர் ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம், அவரது சிங்கள மனைவி பிரிஜ்ஜெட், அவர்களின் வாகனச் சாரதி மற்றும் அவர்களுடன் கொழும்பு நோக்கி டட்சண் பிக்கப் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த மேலும் இருவர் என ஐவரைச் சிங்கள இராணுவம் வழிமறித்துச் சுட்டுக் கொன்றது. போதகர் தன்னுடன் முருங்கன் படுகொலைகள் தொடர்பான ஒளிநாடாக்கள், கண்ணால்க் கண்ட சாட்சியங்களின் வாக்குமூலம் மற்றும் படுகொலைகளின் ஆதாரங்களான புகைப்படங்கள் ஆகியவற்றை தன்னுடன் கொழும்பிற்குக் கொண்டு சென்றதாக அறியக் கிடைக்கின்றது. தமது படுகொலைகள் வெளியே தெரிவதைத் தடுக்க இன்னும் அப்பாவிகள் ஐவரைச் சிங்கள இராணுவம் படுகொலை செய்தது. ஆனால் வழமை போலவே போதகரின் படுகொலைக்கும் தமக்கும் தொடர்பேதும் இல்லை என்று அரசாங்கம் கையை விரித்தது.
  27. உக்ரைன் நாட்டில் இருந்து யாழ் இயங்காவிட்டால் பரவாயில்லை சமாளிச்சிடலாம். ஆனால், உக்ரைன் போர் உக்கிரமாகிவிட்டது ஆட்கள் காணாது கருத்தெழுதிய எல்லாரும் அடிபட கட்டாயம் வரவேணும் என்று எங்களை மோகன் போர்க்களத்திற்கு கூட்டிக்கொண்டு போகாவிட்டால் சரி. 😁
  28. கடவுள் என்பது இயற்கையின் மறு வடிவம்.. பாமர மக்கள் இன்றும் இயற்கையை மதிக்கின்றார்கள். மன திருப்திக்காக இயற்கையை வழிபடுகின்றார்கள்.
  29. தேவையான நேரத்தில் செய்யும் உதவி மிகவும் பாராடட படத்தக்கது .உதவி செய்ய பணம் அனுப்பி உதவி செய்த்தவர்களுக்கும் தொண்டு நிறுவனத்துக்கும் மிக்க நன்றி
  30. தமிழீழத் தாய் பெற்றெடுத்த சூரியதேவன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70வது அகவைதினக் கொண்டாட்டம் பலெர்மோவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் எல்லோரும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி, மகிழ்ச்சியாக தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர் https://firetamil.com/?p=5799
  31. எத்தனையோ பயிரிடு முறைகள் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன் ஆனால் கொக்கோகோலாவிற்குள் வைத்து அதிவேகமாக எலுமிச்சை மரத்தை உருவாக்கலாம் என்று இவர் சொல்கிறார் , புதுசா இருக்கு. கீழே இலகுவாக தோடை பயிரிடும் முறை, ஆனாலும் இந்த காணொலியில் சிறு சந்தேகமுண்டு, விதைக்காக வைக்கப்பட்ட பழம் எப்படி அழுகாமல் வாடாமல் அப்படியே இருக்கிறது என்பது, இருந்தாலும் முயற்சி செய்து பார்க்காமல் சந்தேகம் கொள்வது தப்பென்பதால் இணைக்கிறேன். இது வாழை மரம்
  32. தேசியத் தலைவரின் பிறந்த நாளுக்கு கூடுதலான இளம் சந்ததியினர் பங்கு கொண்டு சிறப்பித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. படங்கள் இணைப்புக்க நன்றி நொச்சி.
  33. உண்மை அவர் ஒர் கள செயற்பாட்டாளர் ..எனக்கும் உங்களுக்கும் தெரியும் ஆனால் தமிழ் மக்களுக்கு ...தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழ் தேசியத்தை காப்பாற்ற சில சீன்களை சந்திரசேகரத்தை விட அதிகமாக செய்ய வேண்டும் ...சந்திரசேகரம் பக்கா இடதுசாரி ... மக்களுக்கு இலகுவாக பூ சுத்துவார்கள் சமத்துவம்,எளிமை என பித்தட்டுவார்கள் சீன் போடுவார்கள் ....பின்பு புட்டின் மாதிரி தாங்கள் மட்டும் ஆடம்பரமாக வாழ்வார்கள்... நம்ம ஆளுகள் இனி தீயாக வேலை செய்ய வேணும் இல்லை என்றால்...தமிழ் தேசியத்தை சிறிலங்கன்ஸ் குத்தகைக்கு எடுத்து போடுவாங்கள்
  34. தமிழ் ஈழம் கடைசிவரைக்கும் கிடைத்திருக்காது. அதற்கான சாத்தியம் எந்த காலத்திலும் இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியில் பலமாக இருந்த போது கூட புவிசார் உலக அரசியலில் தமிழீழம் சாத்தியமற்றதாகவே இருந்தது. ஆனால் ஒஸ்லோ இணக்கப்பாட்டின் படியான உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்சி தீர்வை பரிசீலிக்க இணங்கி பேச்சுவார்ததையை தொடர்ந்திருந்தால் என்ன வகையான மீர்வு கிடைத்திருக்கும் என்று கூற முடியாது. ஆனால், இன்றைய நிலையை விட பல மடங்கு சிறந்த நிலையில் தமிழர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பதை கூற பெரிய அரசியல் ஆய்வாளனாக இருக்க தேவையில்லை. இயல்பான சாதாரண பொது அறிவு இருந்தாலே அதை விளங்கிக் கொள்ள முடியும்.
  35. அப்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  36. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீரப் பையன்!
  37. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், பையன்…!
  38. இன்று பிறந்தநாள் கொண்டாடும் @வீரப் பையன்26 தம்பிக்கு வாழ்த்துகள். வளத்துடன் வாழ்க.
  39. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பையா ........! 💐
  40. 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 இடத்தை பிடிக்கும் என 4 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) பிரபா - 64 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 58 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 53 புள்ளிகள் 5) அல்வாயான் - 52 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள் 7) வில்லவன் - 52 புள்ளிகள் 😎 வீரப்பையன் - 51 புள்ளிகள் 9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 10) நிழலி - 51 புள்ளிகள் 11) நிலாமதி - 51 புள்ளிகள் 12) goshan_che = 49 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 48 புள்ளிகள் 14) நூணாவிலான் - 47 புள்ளிகள் 15) கந்தையா 57 - 46 புள்ளிகள் 16) ரசோதரன் - 46 புள்ளிகள் 17)கிருபன் - 45 புள்ளிகள் 18) வாத்தியார் - 43 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 20) அகத்தியன் - 40 புள்ளிகள் 21) குமாரசாமி - 40 புள்ளிகள் 22) புலவர் - 39 புள்ளிகள் 23)புத்தன் - 39 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 23 புள்ளிகள் (அதிக பட்ச புள்ளிகள் 100) வெற்றி பெற்ற பிரபாவுக்கு வாழ்த்துகள். 2, 3 இடத்தை பிடித்த வாதவூரன், வாலிக்கும் , குறிப்பாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். தமிழன்பன் முதல் 26 கேள்விகள் மட்டுமே பதில் அளித்திருக்கிறார். அதில் 23 சரி மிச்ச கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தால் ??
  41. 24)சுவி - 35 புள்ளிகள் 25) வசி - 27 புள்ளிகள் 26) தமிழன்பன் - 21 புள்ளிகள் "வயாகரா" குளிசை எல்லாம், கொம்பனி கணக்கில் வழங்கப்படும். ✔️ கடைசியாக வந்த மூன்று பேருக்கும்... தாய்லாந்து மசாஜுக்கு ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. 🤣 அங்கு யானைதான்... மசாஜ் செய்யும். 😂
  42. மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியம்- ஈழத்துக் கொற்றவை ஈழத்துக் கொற்றவைகள் தெய்வங்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு துயிலுமில்லங்களில் நினைவுக் கற்களோ கல்லறைகளோ இருக்காது. இவர்கள் வீரச்சாவடைந்தால் நினைவுநாட்களில் பெயர்களோ அடையாளங்களோ தகவல்களோ வெளிப்படுத்தப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் எந்தக் காலத்திலும் வெளிவராது. ஊரறியாமல் உறங்கும் உண்மைகள் இவர்கள். ஊமையாய் இருந்து ஒரு பெரும் சரித்திரத்தைப் படைத்துவிட்டுச் செல்வார்கள். கல்லாகிக் கிடக்கும் கடவுளர்களை மறந்துவிட்டு கல்லறை கூட இல்லாத எம்மின கொற்றவை தெய்வங்களை வணங்குவதே என்றும் போற்றுதற்குரியது. அவ்வாறாகப் போற்றப்பட வேண்டிய ஈழத்துக் கொற்றவைத் தெய்வங்களில் ஒருத்திதான் "சாதனா". பெயருக்கேற்ற வகையில் மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்து வரலாறாகிப் போவாள் என்று அவளின் பெற்றோர்கள் அன்று அவளுக்குப் பெயர் சூட்டும்போது நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். தமிழர் தலைநகரான திருகோணமலையில் தான் இவள் வீரப்பிறப்பெடுத்தாள். சாதனாவின் தந்தையார் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தாயார் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவளது இரண்டு வயது வரைக்குமான வாழ்க்கைப் பராயம் திருகோணமலையில் தான் இனிதே கழிந்தது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் வன்கவரப்பட்டுக் கொண்டிருந்த இவளது தந்தையின் சொந்த ஊரிலே தான் இவளது குழந்தைப் பருவத்தின் முதலிரண்டு ஆண்டுகள் கழிந்தன. இவளது குடும்பத்தினர் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக உதவிச் செயற்பாடுகளில் ஈடுபட்டதால் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்கள், காடையர்கள், இராணுவத்தினரின் கொடும் கெடுபிடிகளுக்கு ஆளானார்கள். இதனால் இவர்கள் அங்கு தொடர்ந்து வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சாதனாவின் தாயாரின் பிறப்பிடமான முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்று குடியேறினார்கள். அங்கு பெயர் சொல்லக்கூடிய மிகவும் செல்வாக்கான வசதிமிக்க குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் தான் அவளின் தாயின் குடும்பத்தினர். பல ஏக்கர் கணக்கான விளைநிலங்களும் மாட்டுப் பண்ணையுமென செல்வம் படைத்த, பாரம்பரியமிக்க விவசாயக் குடும்பத்தினராகவும் அவ்வூரிலேயுள்ள ஏழை எளியவர்கள் இல்லை என்று வந்து நிற்கும் போது அள்ளிக் கொடுப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினார்கள். சாதனா சிறுவயதிலிருந்தே மற்றச் சாதாரண குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேறுபட்ட சிந்தனையுடைய ஒரு அசாதாரண குழந்தையாகவே காணப்பட்டாள். வீட்டிலே அதிகாலையிலே எழும்பி தாயாருக்கு உதவியாகப் பால் கறப்பது. தந்தையாருக்கு உதவியாக வயல் வேலைகளுக்குச் செல்வது. அவ்வேலைகளை முடித்துவிட்டு வந்து பாடசாலை செல்வது என்று வீட்டிலே பொறுப்புமிக்க மனமுதிர்ச்சி கொண்ட ஒரு குழந்தையாகவே வளர்ந்து வந்தாள். முல்லைத்தீவு மாவட்டத்திலேயுள்ள மிகவும் பிரபல்யமான ஒரு பாடசாலையிலேயே சாதனா தனது கல்வியினை சிறுவயது முதல் கற்று வந்தாள். கல்வி, விளையாட்டு, ஓவியம் வரைதல், சிறுகதைகள், கவிதைகள் எழுதுதல் போன்ற பல்துறைகளிலும் ஆற்றல்மிக்கவளாக விளங்கியதோடு மட்டுமன்றி ஆசிரியரை மதித்து நடத்தல், சகமாணவரை அனுசரித்துப் போதல், அவர்களுக்கு ஏதாவது கஷ்டங்கள், பிரச்சனைகள் ஏற்படும்போது முதல் ஆளாக நின்று உதவி செய்தல் போன்ற காரணங்களினால் கல்லூரியிலேயே அனைவராலும் விரும்பப்படும் ஒரு மாணவியாகத் திகழ்ந்தாள். பொதுவாகவே அவளிடம் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்கு காணப்பட்டது. அதாவது வயது முதிர்ந்தவர்களைக் கண்டால் ஓடிப்போய் உதவி செய்தல், உணவின்றி கஷ்டப்படுபவர்களுக்கு தனது வீட்டிலிருந்து உணவு எடுத்துக்கொண்டு சென்று கொடுத்து உதவுதல் போன்ற இரக்கமான மனப்பாங்கு கொண்டவளாகக் காணப்பட்டாள். இந்திய இராணுவத்தினரால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், உயிர்க்கொலைகள், மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட எறிகணை வீச்சுகள், விமானக்குண்டு வீச்சுகளால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற காரணங்களினால் உளத்தாக்கமடைந்து "கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா...?அவர் இருக்கிறார் என்றால் இவ்வளவு அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறார்" என்று அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவாள். இதன் காரணத்தினால் தாயார் கோவிலுக்குச் சென்றுவரக் கூப்பிட்டால் "இராணுவம் இத்தனை அப்பாவி மக்களைக் கொல்லும் போது உந்தக் கடவுள் சும்மா தானே பார்த்துக் கொண்டிருந்தவர்....அதனைவிட தன்னின மக்கள் கொல்லப்படுவதைப் பார்த்து பொறுக்க முடியாமல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தன் மண்ணிற்காக மக்களிற்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களைக் கும்பிடலாம்" என்று மறுத்துக் கூறி இறைவழிபாட்டை வெறுத்து மாவீரர் துயிலுமில்லங்களுக்கே சென்று கல்லறைகளுக்கு மலர் வைத்து வழிபடுவாள். பாடசாலைகளில் தமிழீழ மாணவர் அமைப்பினால் ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்படும் முதலுதவி வகுப்புகள் மற்றும் சிரமதானப்பணிகள் போன்றவற்றிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தாள். இச்செயற்பாடுகளை மேற்கொள்ளும் போதுதான் சாதனாவுக்கும் போராளிகளுக்கும் இடையிலான உறவு ஆரம்பித்தது. போராளிகளின் தன்னலமற்ற உதவிபுரியும் மனப்பாங்கு, அவர்கள் மக்கள் மீது வைத்திருக்கும் தூய்மையான அன்பு, நீதி, நேர்மை, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடுகள் போன்றனவற்றின்பால் ஈர்க்கப்பட்டு தானும் ஒரு போராளியாக வேண்டும் என்ற விருப்பு அவள் மனதில் ஏற்பட்டது. அதன் காரணத்தினால் தனது 15 ஆவது அகவையில் 9 ஆவது வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்காகச் சென்றாள். அவளது வயதினையும் கற்றலின் முக்கியத்துவத்தினையும் கருத்தில் கொண்டு விடுதலைப்புலிகள் அமைப்பு க.பொ.த சாதாரணம் படித்து முடித்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்பியது. சாதனாவும் இடைப்பட்ட ஒன்றரை வருட காலப்பகுதியில் தான் கொண்ட உறுதியில் தவறாது தொடர்ந்து க.பொ.த சாதாரணம் பயின்று பொதுத்தேர்வில் தோற்றி தேர்வுகள் முடிந்த மறுநாள் மீண்டும் வந்து அமைப்பில் இணைந்துகொள்கின்றாள். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த பிறகு அவளது க.பொ.த சாதாரண பரீட்சை தேர்வு முடிவுகள் வெளிவருகின்றது. அந்த மிகவும் பிரபல்யமான பாடசாலையிலேயே அதிகூடிய பெறுபேறுகள் பெற்றவர்களின் பட்டியலில் அவளின் பெயரும் இடம்பெற்றது. அடிப்படைப் பயிற்சி முகாமில் அடிப்படைப்பயிற்சிகளை மேற்கொண்டு புடம் போடப்பட்டு ஒரு உறுதியான போராளியாக உருவாக்கப்படுகின்றாள். எந்தக் கடின பயிற்சிகளிலும் பின்வாங்காத உறுதி, இராணுவக்கல்விக் கற்கைநெறிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கும் விதம், சகிப்புத்தன்மை, இரகசியம் காத்தல் போன்ற ஒவ்வொரு திறமைகளும் அடிப்படைப் பயிற்சிமுகாமில் அவதானிக்கப்பட்டு பயிற்சிகள் நிறைவடைந்தவுடன் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்படுகின்றாள். அங்கு மறைமுகக் கரும்புலிகள் தொடர்பான நிருவாகப்பணிகளை மேற்கொள்ளும் போராளி ஒருவருக்கு உதவியாளராக சாதனா செயற்படுகின்றாள். முகாமில் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவளாகவும் அறிவுத்தனமான உரையாடல்களில் மட்டுமே பங்கு கொள்பவளாகவும் தனது குடும்பம், அன்பு, பாசப்பிணைப்புகள் பற்றி எவரிடமும் கதைக்காத தன்மை கொண்டவளாகவும் தேசியத்தலைவர் சிந்திப்பது போலவே ஒவ்வொரு விடயத்தையும் ஆராய்ந்து நிதானமாக சிந்தித்து தெளிவான முடிவு எடுப்பவளாகவும் ஒரு மனமுதிர்ச்சியடைந்த போராளியாக அவள் காணப்பட்டாள். அவளிடம் ஓவியம் வரைதல், உருவப்பொம்மைகள் செய்தல் போன்ற தனித்திறமைகளும் காணப்பட்டன. தான் ஓய்வாக இருக்கும் போது எமது மக்களின் இன்னல்கள் போராட்டங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் வரைவாள். உபயோகித்து முடித்த பிளாஸ்ரிக்காலான வெற்று பொன்ட்ஸ் பவுடர் (ponds powder) போத்தல்களை பிளேட்டினால் (blade) வெட்டி பெண் முதல் மாவீர வித்தான 2ம் லெப்ரினன்ட் மாலதி, தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபன், முதலாவது தரைக்கரும்புலி மாவீரரான லெப்.கேணல் போர்க் போன்றவர்களின் உருவங்களை மிக அழகாகச் செதுக்கி உருவப்பொம்மைகளாக்கி தனது பணியிடம் முழுவதும் ஓவியங்களாலும் உருவப்பொம்மைகளாலும் அலங்கரித்து வைத்து அவர்களின் நினைவிலேயே தானும் மனதில் உறுதியேற்றியபடி வாழ்ந்திருந்தாள். அதைவிட சிறுகதைகள்,கவிதைகளாலும் தனது நாளாந்தக் குறிப்பேடுகளை நிரப்பி வைத்திருந்தாள். அங்கே பணிமுடித்து ஓய்வான நேரங்களில் சாதனா உலக புலனாய்வு அமைப்புகள் தொடர்பான நூல்களை விரும்பி வாசிக்கின்றாள். மேலும் அவ்வமைப்புகள் தொடர்பான மேலதிக தகவல்கள், கேள்விகள், சந்தேகங்களை மிகவும் ஈடுபாட்டுடன் தனது பொறுப்பாளரிடம் துருவித் துருவிக் கேட்டுத் தெளிந்து கொள்கின்றாள். இதன் காரணத்தினால் அவளுக்கு மறைமுகக் கரும்புலிகள் அணியில் தானும் சேரவேண்டும் என்ற ஈடுபாடு வருகின்றது. அதனைத் தனது பொறுப்பாளரிடம் தெரிவிக்கின்றாள். இது தொடர்பில் அவளது தேடல், அதீத ஈடுபாட்டினைக் கண்ட பொறுப்பாளரும் துறைசார் முதன்மைப் பொறுப்பாளருக்கு அதனைத் தெரிவிக்கின்றார். அவரும் அவளை ஒருமுறை நேரில் சந்தித்துக் கதைத்துப் பார்த்து அவளது சுயதேடல், மனவுறுதி, விடுதலைப்போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் கொண்டிருந்த பற்று என்பனவற்றை இனங்கண்டு மறைமுகக் கரும்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்பட அனுமதியளிக்கின்றார். பின்பு சாதனா மறைமுகக் கரும்புலிகள் அணியின் சிறப்புப் பயிற்சிகள், கற்கைநெறிகளுக்குள் உள்வாங்கப்படுகின்றாள். அங்கு இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது ஒருவர் பற்றி இன்னொருவருக்கு தெரியக்கூடாது என்ற காரணத்தினால் வழங்கப்படும் தனிக் கொட்டில் வாழ்வு, உருமறைப்பிற்கான மூடிய ஆடைகள் எனச் சென்ற அந்தப் பயிற்சிக் காலம் என்பது அவளுக்குள் தன்னை மறைத்து, தன்னை ஒறுத்து, தமிழீழ விடுதலைக்காய் வெளியே தெரியாத வெளிச்சமாகிப் போகும் வாழ்விற்கு அவளை அணியப்படுத்தியது. மறைமுகக் கரும்புலிகள் அணியில் சாதனாவின் பயிற்சிகள் நிறைவுற்றதும் மொழிகள் (ஆங்கிலமொழி, சிங்களமொழி) தொடர்பான அறிவு பெறுவதற்கு அனுப்பப்படுகின்றாள். அங்கு சிங்களமொழி கற்பிப்பதற்கு ஆசிரியரை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு மாதம் தாமதமாகின்றது. அந்தக் காலத்தை வீணடிக்காது, ஒரு மாதத்திலேயே சிங்களமொழி நூல்களை படிப்பகத்திலிருந்து பெற்று சுயமாகவே கற்றுத் தேர்ச்சியடைகின்றாள். பின்பு சிங்களமொழி ஆசிரியரால் மொழி கற்பிக்கப்படும்போது ஏற்கனவே சிங்களமொழி நன்றாகக் கற்றுத் தேர்ந்த ஒருவரைப்போல அவளது மொழி தொடர்பான அதீத திறமையைக் கண்டு அவர் திகைப்படைகின்றார். இப்படியாக எதனையும் சுயமாகவே முயன்று கற்றுக் கொள்ளும் ஆற்றல் அவளிடம் காணப்பட்டது. பின்பு அவளுக்குரிய இலக்கு வழங்கப்பட்டு வெளிநடவடிக்கை ஒன்றிற்காக சிங்களமொழி பேசும் ஒரு இடத்திற்கு அனுப்பப்படுகின்றாள். அங்கே அவள் மறைப்பில் இருந்தகாலத்தில் தொழினுட்பக் கல்லூரியொன்றில் கல்விகற்று சான்றிதழும் பெற்றுக் கொள்கின்றாள். மக்களோடு மக்களாக எதிரிக்கு சந்தேகம் வராத மாதிரி சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு தனது இலக்கிற்குத் தேவையான தகவல்களையும் பெற்றுக் கொள்கின்றாள். க.பொ.த சாதாரணதர சிறந்த பெறுபேறு, தொழில்நுட்பக்கல்லூரியில் கிடைக்கப் பெற்ற தகைமைச் சான்றிதழ் என்பனவற்றைக் கொண்டு கொழும்பில் மிகப்பிரபல்யமான மேல்தட்டுவர்க்கத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்கும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இணைந்து கல்வியைத் தொடர்ந்துகொண்டு இலக்கினை நோக்கி அணியப்படுத்திக்கொள்ளுமாறு அவளை அவளின் பொறுப்பாளர் பணிக்கிறார். அவளும் அவ்வாறே செய்கிறாள். சாதனாவின் ஆங்கில மொழிப் புலமை, சிங்கள மொழிப் புலமை, அமைதியுடன் கூடிய அழகிய தோற்றம் போன்றவற்றினால் அவளில் எவருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அங்கே கற்கைநெறியினை மேற்கொள்ளும்போது சாதனாவுக்கு நிறைய மேல்தட்டுவர்க்க சிங்கள நட்புகள் கிடைக்கின்றன. எவருமே போகமுடியாத முக்கிய நகரப்பகுதிகளில் உள்ள பல சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லும் இடங்களான விளையாட்டரங்குகள், உயர்தரக் கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களுக்கு தனது சிங்கள நண்பர்களுடன் சென்று தனது இலக்கிற்கான தகவல்களை மிகவும் திறமையாகச் சேகரிக்கின்றாள். பாதுகாப்புக் காரணங்களினால் வெளிநாடு ஒன்றிலிருந்து மிகச் சுருக்கமாகப் பரிமாறப்படும் தகவல்களின் மூலமாக மட்டும் தன்னுடைய பொறுப்பாளருடனும் துறைசார் பொறுப்பாளருடனும் தொடர்பினைப் பேணியவாறு தனது இலக்கினை நோக்கிச் செயற்பட்டு வந்தாள். அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கிற்கான தகவல்கள் வாய்ப்புகள் மட்டுமல்லாது வேறு இலக்குகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் வெற்றியளித்த பல நடவடிக்கைகளுக்கான தகவல்கள் வாய்ப்புகளும் சாதனாவின் அதீத திறமையினால் அவள் சார்ந்த துறை மேலாளருக்கு அவளால் வழங்கப்பட்டன. இந்தப் பணிகளை மேற்கொள்ளும்போது சாதனா வெறும் 20 அகவையினையே அடைந்திருந்தாள். அவள் கல்வி கற்குமிடத்தில் அவளுடன் கூடப் படிக்கும் வகுப்புத் தோழன் ஒருவன் இவளது அழகு, உதவும் மனப்பாங்கு , கற்றலில் உள்ள திறமை இவற்றைக்கண்டு சாதனாவின் மேல் காதல் வயப்படுகின்றான். அவள் அதனை முதிர்ச்சியுடன் கையாண்டு அவனைத் தனது இனிய நண்பனாகவும் சகோதரனாகவும் ஏற்றுப் பழகிக்கொண்டு அவனின் உதவியாலும், அவனின் அறிவுக்கு எட்டாத வகையிலும், சந்தேகம்வராத வகையிலும் தனது இலக்கிற்கு தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொள்கின்றாள். பருவகால இளவயது, மனதை மாற்றக் கூடிய சூழல்கள், காதல் போன்றவற்றினைச் சந்தித்த போதும் தனது கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாது, சிறப்புப் பயிற்சிகளின் முடிவில் அவள் உறுதிமொழியேற்கும் போதிருந்த அதே உறுதியுடன் மிகத்தெளிவாக தனது சரியான இலக்கை நோக்கி செயற்பட்டுக்கொண்டிருந்தாள். சிங்களமொழி பேசும் இடங்களில் வசித்ததால் சாதனாவிடம் சிங்கள நாளிதழ்கள் வாங்கி வாசிக்கும் பழக்கம் காணப்பட்டது. அப்போது தான் சிங்கள மக்கள் அப்பாவிகள் இல்லை என்பதும் அவர்கள் தமிழ்மக்களுக்கெதிராக கடும் மனவெழுச்சி கொண்டிருந்ததும் கருத்தியல் ரீதியாக அவளுக்குப் புரிந்தது. மற்றும் வன்னியில் சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்களால் தனது மக்களும் போராளிகளும் கொல்லப்படுவதைக் கண்டு அவளது உள்ளம் உலைக்களமாகக் கொதித்தது. அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வெறி அவளது உள்ளத்திலே ஆழ வேரூன்றியது. அதற்குச் சரியான வழி சிங்கள இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் பயிற்சி முகாமிலேயே வைத்து அவர்களை அழிப்பது என்று உணர்ந்து அந்த இலக்குத் தொடர்பான தகவல்களையும் தானே முன்னின்று சேகரித்துத் தலைமைக்கு கொடுத்து அது தொடர்பான வெற்றித் தாக்குதல்களுக்கும் வழியமைத்துக் கொடுத்தாள். அவளுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த மேல்தட்டுவர்க்க சிங்கள நண்பி ஒருவரின் விருந்துபசார விழா ஒன்றிற்கு சென்றபோது அங்கே ஒரு இராணுவ அதிகாரியை அவள் தற்செயலாகக் காணக் கிடைத்தது. தென்தமிழீழத்தில் படுகொலைகளை முன்னின்று நடாத்தி எமது மக்களை நேரில் நின்று கொன்றுகுவித்த சிங்கள இராணுவ அதிகாரி தான் அவன் என தான் முன்னர் வாசித்துத் துன்பப்பட்ட தென்தமிழீழப் படுகொலைகள் தொடர்பான குறிப்புகளை மீள்நினைவூட்டி உறுதிப்படுத்திக்கொண்டாள். அவனைப் பற்றிய நெருக்கமான தகவல்களைத் திரட்டியதோடு அவனை அணுகக் கூடிய வாய்ப்பும் அவளுக்குத் தற்செயலாகக் கிடைத்தது. அவளது மனதில் ஈவிரக்கமற்றுப் பொது மக்களைக் கொன்று குவித்த அந்த இராணுவ அதிகாரியை அழிக்க வேண்டும் என்ற வன்மம் உருவாகுகின்றது. அந்த இராணுவ அதிகாரியை தானே சுட்டுக் கொல்ல தலைமையிடம் அனுமதி கோருகின்றாள். ஆனால் தலைமை அவளுக்கு வழங்கப்பட்ட இலக்கு வேறு என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் அது பாதிக்கப்படும் என்று விளக்கங்கூறி அதற்கான அனுமதி அவளுக்கு மறுக்கப்படுகின்றது. ஆனால் சாதனா தனது இலக்கினைப் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்று உறுதியளித்து அனுமதி வாங்கி அதற்கான ஆயுதத்தினை வாங்கி பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அந்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களைச் சேகரிக்கின்றாள். அவனது நாளாந்த நடவடிக்கைகள், பொழுதுபோக்குகள் என்பவற்றினை அவதானித்து தெளிவான இலக்கிற்காக காத்திருக்கின்றாள். ஒருநாள் அந்த அதிகாரி தனது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் நாளிதழ் கடையில் நாளிதழ் வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது அவரைச் சுட்டுக் கொல்லக்கூடிய தெளிவான இலக்கு அமைகின்றது. மிகத் திறமையாக இலக்குப் பிசகாது அந்த இராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடுகின்றாள். அன்று அந்தத் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்தது அவளுக்கு மிக்க மகிழ்வாக இருந்தது. அந்தக் கொலைக்கான சூத்திரதாரியை சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் மூலை முடுக்கெல்லாம் தேடித் திரிந்தார்கள். அவர்களால் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அவளின் பாதுகாப்பு கருதியும் அவளைப் போன்ற திறமையுடைய அனுபவமுடைய போராளியால் மட்டுமே இன்னும் பல போராளிகளை உருவாக்கலாம் என்பதைக் கருதியும் இந்தத் தாக்குதல் வெற்றியடைந்ததே போதும் அவளது இலக்கை வேறொரு மறைமுகக் கரும்புலியிடம் கையளிக்கலாம் என்று கருதியும் சாதனாவைத் திரும்பி வன்னிக்கு வருமாறு தலைமையிடமிருந்து பணிப்பு வந்தது. ஆனால் அவளோ தனது இலக்கை அடையாமல் திரும்பி வரமாட்டேன் என்று தனது இலக்கிற்காகக் காத்திருந்தாள். கடைசியில் அவளது உறுதியின் முன்னால் தலைமையால் ஒன்றும் செய்ய முடியாமல் அவளது இலக்கை அவள் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதியளித்தது. அவள் காத்திருந்த இலக்கும் ஓர்நாள் வந்தது. வெகுமகிழ்வுடன் அதற்குரிய ஆயத்தங்களுடன் இலக்கை நோக்கிச் செல்கின்றாள். ஆனால் அவளால் அதனை நெருங்க முடியவில்லை. திரும்பியும் செல்ல முடியாத நிலையில் தன்னையே உயிராயுதமாக்கி வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவி வீரவரலாறாகின்றாள். 16 வயதில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து மிகக் குறுகிய காலத்தில் எவருமே செய்ய முடியாத சாதனை படைத்து வரலாறான சாதனாவின் வரலாற்றைப் படிக்கும் ஏனைய போராளிகள் இன்னும் புடம் போடப்பட்டு உத்வேகத்துடன் உருவாகுவார்கள். சாதனா மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியமான புலனாய்வுப் போராளியாக என்றும் எல்லோரின் மனங்களிலும் வாழுகின்றாள். "உயிர் மின்னல் கீறும் ஒரு ஓவியம்... அது வரைகின்ற நேரம் பெரும் காவியம்... திரை மூடி வாழும் ஒரு ஜீவிதம்... வெளி தெரியாமல் ஆடும் உயிர் நாடகம்…. புரியாத புதிராக ஒரு தென்றல் போகும்... புயலாகும் நேரத்தில் இடியாக மாறும்... அழியாத கதையாகி வரலாறு மீளும்... அவர் நாமம் ஒரு காலம் தமிழீழம் பேசும்!" யாவும் கற்பனை அல்ல... -நிலாதமிழ்(தமிழ்நிலா).
  43. லெப்ரினன்ட் புகழினி புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் "லொட லொட" என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு "தெண்டித் தெண்டி"சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள்.எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்....பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அவள் சராசரி உயரத்தை விட சற்றுக் குறைவான குள்ளமான உருவத்தை உடையவள்.இதனால் அவள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது.உதாரணத்துக்கு சைக்கிள் ஓட்டுவதற்குக் கூட ஏதாவது ஒரு புட்டியான இடம் பார்த்து தான் ஏறி ஓடுவாள்.இதனால் எல்லோரிடமும் நல்ல அறுவையையும் வாங்கிக் கட்டுவாள். எல்லோரையும் போலவும் தான் புகழினியின் பிள்ளைப் பராய வாழ்க்கையும் இன்பத்துடன் அமைந்தது.அம்மா,அப்பா,தம்பி,அவள் என அழகிய சிறிய குடும்பம் அவளுடையது.அவளது சொந்தப் பெயர் மேரி கொன்ஸ்ரலின்.வீட்டில் ஒரேயொரு பெண்பிள்ளை என்பதால் சரியான செல்லமாக வளர்ந்தாள்.அவளது சொந்த இடம் வலிகாமப் பகுதியில் சில்லாலை என்ற கிராமம்.அவள் தனது கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கற்றாள்.வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்வு ஏற்பட்டதின் காரணத்தினால் அவளாலும் ஒழுங்காக கல்வி கற்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. 1994 க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலைப் போராட்டமானது மிகவும் உச்ச நிலையை அடைந்திருந்தது.வலிகாமப் பகுதியில் எதிரியானவன் எம் நிலத்தை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த போது எமது போராட்டத்தின் உண்மை நிலையை உணர்ந்து பல்லாயிரக் கணக்கான இளைஞர்,யுவதிகள் தாமாகவே மனமுவந்து வந்து எமது அமைப்பில் இணைந்து கொண்டார்கள்.அந்த வகையில் மேரி கொன்ஸ்ரலினும் "வண்ணக் கனவுகள் தன்னில் கரைந்துமே பெண்மை கரைந்தது போதும்....இனி கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்....பூகம்பமே என்னில் சூழட்டும் நெஞ்சில் போர் எனும் தீ வந்து மூழட்டும்"என்று 1995ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் எமது அண்ணன் கரிகாலன் சேனையில் இணைந்து கொண்டாள்.அங்கு அவள் மகளிரணியின் 30ஆவது பயிற்சிப் பாசறையில் புகழினி எனும் நாமத்துடன் போராளியாக புடம் போடப்பட்டாள். பின்பு 1995ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டாள்.புகழினி கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம் தொட்டு நீண்ட காலம் மருந்து பால்மா கணக்காய்வு அணியிலேயே என்னுடன் இணைந்து கணக்காய்வை மேற் கொண்டாள்.அவள் பணியிடத்தில் பணியாளர்களிடம் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் அதேவேளை தேவைப்படும் போது கண்டிப்பாகவும் பணியை மேற்கொள்ளுவாள்.அவள் கணக்காய்வில் மட்டுமல்ல மற்ற இதர செயற்பாடுகளிலும் தன்னை வளர்த்துக் கொண்டாள். தற்காப்புக்கலையிலும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி வரை பெற்றவள்.அது மட்டுமல்ல அவள் முறிப்பு நடனம்(break dance)ஆடுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள்.எங்கள் முகாமில் நத்தார்தின நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் முறிப்பு நடனமாடி அவள் தான் கதாநாயகியாக திகழ்வாள்.மேலும் அவள் வாகன ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்று உழவு இயந்திரமும் நன்றாக செலுத்துவாள்.இயக்கத்துக்கு வரும் போது புகழினிக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.ஆனால் பின்பு உழவு இயந்திரம் செலுத்தக் கூடிய அளவுக்கு அவளை எமது அமைப்பு வளர்த்து விட்டிருந்தது. 1996ஆம் ஆண்டு ஆரம்ப காலம் தொடக்கம் 2000 ஆண்டு வரை நானும் புகழினியும் ஒன்றாகவே மருந்து பால்மா கணக்காய்வு அணியில் கணக்காய்வு பணி மேற்கொண்டமையினால் எனக்கும் அவளுக்குமான உறவானது பலமானதாகவும் பல இனிமையான தருணங்களைக் கொண்டதாகவும் இருந்தது.அதில் சிலவற்றை அவளது ஞாபகமாக பகிர்ந்து கொள்ள அவாக் கொண்டுள்ளேன். 1996ஆம் ஆண்டு வன்னிக்கு வந்த புதுசில நானும் புகழினியும் மருந்து பால்மா கணக்காய்வு அணியில் தான் கணக்காய்வை மேற் கொண்டோம். எங்களுக்கு பணிக்குச் செல்வதற்கு சைக்கிள் கூட இல்லை.நானும் புகழினியும் சைக்கிள் இல்லாத காரணத்தினால் நடராசாவில்(நடையில்) தான் பணிக்குச் செல்வோம்.எங்களின் முகாமில் உள்ள போராளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப் பெயர் வைத்து தான் கூப்பிடுவோம்.புகழினிக்கு "பேணி"தான் பட்டப் பெயர்.(எந்த நேரமும் "லொட லொட" என்று தகர டப்பா மாதிரி அலட்டுவதால் அவளுக்கு "பேணி" என்ற பட்டப் பெயர் உருவானது).என்னைப் பேணி "அரியத்தார்" என்று தான் கூப்பிடுவாள்.பின்பு பணிக்குச் செல்வதற்கு இரண்டு பேருக்கு ஒரு சைக்கிள் என்ற ரீதியில் கொடுக்கப்பட்டது.அதில் நானும் பேணியும்(புகழினி)தான் ஒன்றாக பணிக்குச் செல்வோம்.வழமையாக அவளை மருந்து பால்மா கடையில் விட்டு விட்டு நான் பொன்னம்பலம் வைத்தியசாலைக்குச் செல்வேன். நாங்கள் பணி முடித்து விட்டு மதிய உணவு நேர இடை வேளைக்கு முகாமில் சென்றுதான் சாப்பிடுவோம்.அப்போது சாப்பிடும் தட்டுக் கழுவிற பஞ்சியில நானும் புகழினியும் ஒரு தட்டில தான் உணவு உண்ணுகின்றனாங்கள்.சாப்பிட்ட தட்டைக் கழுவோணும் என்ற கள்ளத்தில நான் முதலாவதாகச் சாப்பிட்டிட்டு தட்டை அவளிடம் தள்ளி விட்டு ஓடி விடுவேன்.அவள் என்னைத் திட்டிக் கொட்டிப் புறுபுறுத்தபடி ஒருவாறு தட்டைக் கொட்டிக் கழுவிப் போட்டு வருவாள்.அவ்வாறு அவளது புறுபுறுப்பைக் கேட்பதிலே எனக்கு பெரிய ஒரு சந்தோசமாக இருக்கும். 1997ஆம் ஆண்டு நாங்கள் க.பொ.த உயர்தரத்தை முடிக்காமல் எமது அமைப்பில் இணைந்த படியால் பணித்தேவையின் தகுதி கருதி உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு பணிக்கப் பட்டோம்.எங்களுடன் புகழினியும் இணைந்து கல்வி கற்றாள்.அவள் இயல்பாகவே மிகவும் கூச்ச சுபாவமும்,இரக்க குணமும்,பயந்த சுபாவமும் உடையவள். அதனாலேயே அவளை எந்நேரமும் கிண்டலடிப்பது தான் எமது பொழுது போக்கு. உயர்தரம் படிக்கும் போது எமது பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.ஆனால் எமக்கோ வெளியில் விடுப்பு பார்க்காமல் இருக்க முடிவதில்லை.எங்கள் முகாம் முற்றத்திலே பெரிய அடர்ந்து செழித்து வளர்ந்த மாமரம் ஒன்று உண்டு.அதிலே ஏறிப் பார்த்தால் வெளியே குறிப்பிட்டளவு தூரம் மட்டும் என்ன நடந்தாலும் தெரியும்.அதனால் நாங்கள் மாமரத்துக்கு மேல ஏறி அமைதியாக இருந்து படிக்கிறம் என்று கதை விட்டு மாமரத்துக்கு மேல ஏறி இருந்து விடுப்புப் பார்த்துக் கொண்டு படிப்பதுண்டு.புகழினிக்கு மாமரத்தில எங்களோட சேர்ந்து ஏறி இருந்து விடுப்பு பார்க்க ஆசை....ஆனால் ஏறத் தெரியாது.அதனால் நாங்கள் இரண்டு பேர் அவளை மேலேயிருந்து அவளது இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க கீழே இருந்தும் ஒராள் தள்ளி விட்டு ஒரு மாதிரி ஏற்றிப் போடுவோம். மேலேயிருந்து படிக்கிறம் என்று போட்டு நாங்கள் மரத்தில இருக்கிற மாம்பிஞ்சுகளால றோட்டால மோட்டார் சைக்கிளில போற எங்கட இயக்க அண்ணாக்களுக்கு எறிவதுண்டு.அண்ணாக்களும் எறிவது நாங்கள் என்று தெரிந்தாலும் பாவம் பிள்ளைகள் தானே என்று விட்டுக் கண்டும் காணாத மாதிரி போய் விடுவினம். ஆனால் புகழினிக்கு நன்றாக இலக்கு பார்த்து எறிய தெரியாது.அவள் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மாம்பிஞ்சால எறிய வெளிக்கிட்டு அது போய் பின்னால சைக்கிளிலே வந்த அப்பு மேல பட்டு அந்த அப்பு வந்து பொறுப்பாளரிட்ட வந்து பிள்ளையள் மாம்பிஞ்சால எறிஞ்சு போட்டுதுகள் என்று சொல்லிக் கொடுத்து புகழினியால நாங்கள் நான்கு பேரும் நூறு தோப்புக் கரணம் போட்டதை இப்பவும் மறக்க முடியாது. புகழினிக்கு எங்களோட சேர்ந்து கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம்.நாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்தாலும் வரமாட்டாள்.எங்களது முகாமில் இருக்கும் போராளிகளின் பெற்றோர் அவர்களின் பிள்ளைகளைப் பார்க்க வரும் போது சாப்பிடுவதற்கு நிறைய உணவுப் பொருட்கள் கொண்டு வந்து தருவதுண்டு.அதை தமா அன்ரா தான்(ஒரு அக்காவின் பட்டப் பெயர் தான் தமா அன்ரா)எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பார்.அவர் எல்லோருக்கும் அளவாகக் கொடுத்து விட்டு மிகுதியை ஒரு மேசையில் கடைசி இழுப்பறையில் ( இலாச்சி) பதுக்கி வைப்பார்.அதில் கடைசி இலாச்சிக்கு மட்டும் தான் பூட்டு உள்ளது.மற்றைய இரண்டு இலாச்சிகளுக்கும் பூட்டு இல்லை.தமா அன்ரா கடைசி இலாச்சியில் வடிவாக வைத்து பூட்டிப் போட்டு அங்கால போனதும் நாங்கள் பூட்டில்லாத மேல் இலாச்சியைக் கழட்டிப் போட்டு கீழ் இலாச்சியில் உள்ள தின்பண்டங்களை எல்லாம் எடுத்துச் சாப்பிடுவோம்.புகழினியை இதுக்கு கூட்டுச் சேர்த்தால் வரவும் மாட்டாள் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்தாலும் சாப்பிடவும் மாட்டாள்.சாப்பிட்டால் பிறகு தமா அன்ராவிடம் நல்ல கிழி வாங்க வேண்டிவரும் என்ற பயம் அவளுக்கு.(எங்களுக்கு எவ்வளவு கிழி வாங்கினாலும் சாப்பாட்டு விசயத்தில சொரணை வராது). எங்கட முகாமுக்கு பின் புறத்தில் இரண்டு பெரிய பலா மரமும் உண்டு.அதில் நிறைய பலாப்பழங்கள் கனிந்து தொங்குவதுண்டு.எங்கள் முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சி முகாமுக்கு பக்கத்து வீட்டில தான் இருக்கிறவர்.அவர் அடிக்கடி முகாமுக்கு வந்து எத்தனை பலாப்பழம் காய்த்து இருக்கிறது என்று கண்காணிச்சுக் கொண்டு தான் இருப்பார்.எங்களுக்கோ அந்தப் பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும்.ஆச்சியின் கண்ணில மண்ணைத் தூவிப் போட்டு அந்த பலாப்பழங்களை அடிக்கடி நாங்கள் பிடுங்கிச் சாப்பிடுவதுண்டு.இந்தப் பலாப்பழம் பிடுங்குகின்ற நிகழ்வானது அடிக்கடி எங்கட இரவு நேரக்காவற்கடமை நேரத்தில் தான் நிகழும். மற்ற குழப்படி வேலைகளுக்கு பயப்படுகின்ற புகழினி பலாப்பழத்தில இருக்கிற அலாதிப் பிரியத்தில இதுக்கு மட்டும் எங்களோட கூட்டுச் சேருவாள்.பலாப்பழம் ஏறிப் பிடுங்கவோ வெட்டவோ வரமாட்டாள்...நாங்கள் ஏறிப் பிடுங்கி வெட்டி வைத்தால் மற்றைய எங்கட கூட்டுக் களவாணிகளை(முகாமில இருக்கிற எல்லோரையும் நாங்கள் இந்த நிகழ்வுக்கு சேர்ப்பது இல்லை...பல விசுவாசக்குஞ்சுகளும் இருந்ததால் போட்டுக் கொடுத்து விடுவினம் என்ற பயம்)நித்திரையில் இருந்து எழுப்பிக் கூட்டி வந்து அவைக்கும் பரிமாறி தானும் சாப்பிடுகின்ற வேலையை மட்டும் தான் பார்ப்பாள். இப்படித்தான் ஒருநாள் இரவு காவற்கடமை நேரத்தில் பலாப்பழத்தை இறக்கிச் சாப்பிட்டுப் போட்டு பலாச்சக்கையை புகழினியின் மொக்கை ஐடியாவால பக்கத்து வீட்டு வளவுக்கை தூக்கிப் போட்டு அந்த பக்கத்து வீட்டுக்கார அக்கா முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சியிடம் போட்டுக் கொடுத்து அந்த ஆச்சி முகாமுக்கு வந்து பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை பிடித்து பொறுப்பாளர் ஆச்சியை ஒரு மாதிரி சமாளிச்சு அனுப்பின கதையை இப்பவும் மறக்க முடியாது.(எங்களின் பொறுப்பாளர் சாப்பாட்டு விசயங்களில எங்களுக்குத் தண்டனை தருவது இல்லை).இப்படி புகழினியால நாங்களும் மாட்டுப் பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. புகழினியின் குடும்பத்தின் சூழ்நிலையானது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.அவளது குடும்பம் சொந்த இடத்தில் இருந்த போது சொந்த தொழில் செய்து வந்த படியால் நல்ல வசதியாகத் தான் வாழ்ந்து வந்தார்கள்.பின்பு வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்ததால் புகழினியின் அப்பாவிற்கு தொழில் வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்குக் கூடக் கஷ்டப்பட்டார்கள்.புகழினியின் அம்மா மகள் இயக்கத்துக்கு வந்ததாலே யோசித்து யோசித்து இருதய நோய் மற்றும் ஆஸ்துமா நோய் பீடிக்கப் பட்டு மிகவும் கஷ்டப்பட்டார்.அப்பா தான் ஓலைப் பாய்,பெட்டி இழைத்து விற்றுபிழைப்பு நடத்தி வந்தார்கள்.புகழினியின் தம்பியோ மிகவும் சிறிய பையன்.அப்போது பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.இதனால் நாங்கள் புகழினியுடன் அவளது வீட்டுக்குச் செல்லும்போது புகழினியின் அம்மா"என்ரை மகள் வீட்டை இருந்திருந்தால் படித்து உழைத்து எங்களைப் பார்த்திருக்கலாம் தானே" என்று சொல்லி அழுது கவலைப்படுவார்.ஆனால் புகழினியோ "வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்குத் தேவை தானே"உங்களுக்கு தம்பி இருக்கிறான் தானே என்று சொல்லி சிரித்து சமாளித்து விடுவாள். புகழினி எமது தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் எல்லாப் போராளிகளைப் போன்றே மிகுந்த பற்றும் விசுவாசமும் உடையவள்.எமது தலைவரின் புகைப்படங்களைச் சேகரித்து அதை ஒரு செருகேடாக(album) வைத்து இருந்தாள்.சில போராளிகள் வீட்டில "அம்மாவாணை "என்று சத்தியம் செய்வதைப் போல இயக்கத்திலே "அண்ணையாணை "என்று கதைப்பதுண்டு.அது புகழினிக்குப் பிடிக்காது.சும்மா அண்ணையை போட்டு உங்கட லூசுக் கூத்துக்களுக்கு இழுக்காதையுங்கோ என்பாள். எங்களின் பொறுப்பாளர் புகழினியின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவளைச் சண்டைக் களங்களுக்கு அனுப்புவதில்லை.1999ஆம் ஆண்டு எங்கள் முகாமில் இருந்து சிலபேர் நெடுங்கேணிப் பகுதிக்குச் சண்டைக் களத்திற்குச் சென்ற போது பொறுப்பாளர் புகழினியை அங்கே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.ஆனால் அவள் அழுது சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து அவரோடு சண்டை பிடித்து சண்டைக் களத்துக்குச் சென்று அங்கு திறம்பட செயற்பட்டு முகாமுக்கு திரும்பினாள். பொதுவாக நாங்கள் வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய பெரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது போராளிகள் பற்றாக்குறை காரணமாக உடற் குறையுள்ள விழுப்புண்ணடைந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் மட்டும் தேவையான கொஞ்சப் பேரை மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதிப் பேரை இடையிடையே போர்ப் பயிற்சிகள் தந்து களப்பணிகளுக்கு இணைத்துக் கொள்வார்கள்.எங்களுக்கும் களப்பணிகளில் ஈடுபடுவதில்லை என்று குற்றவுணர்ச்சி ஏற்படுவதால் இப்படி இடையிடையே இணைப்பதால் நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் களப் பணிகளுக்குச் சென்று வருவோம்.எமது தலைவரும் ஒரு போராளிக்கு வெளி நிர்வாகப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். அந்த வகையில் நிதித்துறை மகளிர் அணியைச் சேர்ந்த நாங்கள் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாலதி படையணியுடன் இணைந்து வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்காக சுண்டிக்குளம் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.அதே வேளை எங்கள் புகழினி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த படியால் அவர்களுடன் சேர்ந்து பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் எம் மக்களின் காவற் தேவதையாக காவற்கடமை புரிந்து கொண்டிருந்தாள். 29.05.2000அன்று எங்களுக்கு "புகழினி வீரச்சாவாம் " என்ற கொடிய செய்தி வந்தடைந்தது.எல்லோரும் கலங்கிப் போய் நின்றோம்.பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் அவள் காவற்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிரியின் ஆழ ஊடுருவும் அணியின் சுற்றிவளைப்பின் போது எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமுடனும் தீரமுடனும் போராடி எங்களின் புகழினி லெப்ரினன்ட் புகழினியாக வீரமரணத்தைத் தழுவிக் கொண்டாள். பின்பு நாங்கள் அனைவரும் எங்களது பயிற்சி முகாம் பொறுப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி கேட்டு புகழினியின் இறுதி வணக்க நிகழ்வுக்குச் சென்றோம்.அங்கே எங்கள் புகழினியின் வித்துடலை கடைசியாகக் கூட பார்க்க முடியாமல் வித்துடல் பேழை அடைக்கப்பட்டிருந்தது.அதைவிட புகழினியின் அப்பா என்னைப் பார்த்து "பிள்ளை உன்னோட தானே என்ரை மகள் ஒன்றாகத் திரியுறவள் நீ மட்டும் தான் வந்திருக்கிறாய் என்ரை மகள் எங்கே"என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கதறி அழுததும் நானும் குற்றவுணர்வால் அழுததும் நான் சாகும் வரை என் நினைவை விட்டுப் போகாது.பின்பு2002ஆம் ஆண்டு புகழினியின் அப்பா பொன்னம்பலம் வைத்தியசாலையில் நான் பணியை மேற்கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்து பிள்ளை தாங்கள் அனைவரும் சொந்த இடத்திற்கு (சில்லாலைக்கு)செல்லப் போறோம் என்று சொல்லி விட்டு "என்ர பிள்ளையில்லாமல் போகப் போறேன் "என்று கதறி அழுததை இன்றும் நினைத்தால் மனதை பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது. எங்களின் அன்புத் தோழி புகழினியே.... உன்னை இழந்த இந்த நாளில் மட்டுமல்ல எங்கள் வாழ்நாட்கள் முழுக்க எந்நாளுமே எங்கள் பழைய தோழிமார் யாரோடு கதைத்தாலும் உன் நினைவைத்தான் மீட்டிக் கொண்டிருக்கின்றோம்.உன்னைப் போன்ற ஒன்றாய்க் கூடி வாழ்ந்த தோழர்கள்,தோழியர்களை இழந்து விட்டு நாங்கள் மட்டும் தப்பி வந்து குற்றவுணர்வுடன் நடைப்பிணங்களாக எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக புன்னகை என்னும் அரிதாரத்தைப் பூசிக் கொண்டு மனதுள்ளே எரிமலை போன்று குமுறிக் கொண்டு உயிர் இருந்தும் ஜடமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இப்பொழுதும் நீ என்னை "அரியத்தார்" என்று கூப்பிடும் ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எம் தமிழீழ வரலாற்றில் என்றும் உன் கதை எழுதி வைக்கப்படும். -தமிழ்நிலா. மிக்க நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.