Leaderboard
-
Justin
கருத்துக்கள உறவுகள்12Points7051Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87990Posts -
valavan
கருத்துக்கள உறவுகள்8Points1569Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்8Points3061Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/04/24 in Posts
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
என்னைக் கேட்டால் (அவர் கேட்கப் போவதில்லை😂), சுமந்திரன் இவையெதுவும் செய்யாமல் விலகி இருப்பது தான் அவர் செய்ய வேண்டியதென்பேன். ஏனெனில், சுமந்திரனைக் கவனிக்காமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பொய்ச் செய்திகள், வதந்திகள் எல்லாம் போட்டு அடித்து, நேரடியாக ரௌடிகளை வைத்தும் அவமானம் செய்து, டிபிஸ் சொல்வது உண்மையாக இருந்தால், ஊரில் இருந்த சிலரை வைத்துக் கொலை முயற்சி கூடச் செய்திருக்கிறார்கள். மண்டையன் குழுத்தலைவர் பிரபாகரனைத் தலையில் தூக்கி வைத்தவுடன் மன்னித்தவர்கள், உச்ச நீதிமன்றில் இருந்த வேளையில் தமிழ் சந்தேகநபர்களுக்கு தீர்ப்பெழுதியிருக்கக் கூடிய விக்கியை புலிகளைத் தலையில் தூக்கி வைத்ததும் மன்னித்தவர்கள், "போராட்டத்தை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உண்மையைச் சொன்ன சுமந்திரனை வதை செய்தது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயம் என நினைக்கிறேன். இப்படி பட்ட மலினமான முட்டாள்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுமந்திரன் தன் நேரத்தையும், முயற்சியையும் வீணாக்காமல் தன் சொந்த வாழ்வைப் பார்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும். நேற்று ஒரு திரியில், ஏராளமான தமிழ் அரசியல் அறிஞர்கள் சுமந்திரனை விட சிறப்பாகப் பங்காற்றக் கூடிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீலன், சுமந்திரன் போன்றோர் நடத்தப் பட்ட விதத்தைப் பார்த்த எந்த தமிழ் அரசியல் அறிஞரும் தன் கழுத்தை கூட்டத்திலிருந்து வெளியே நீட்ட மாட்டார்கள் என்று தான் நம்புகிறேன். வாத்தியார் சிறிதரன், நீதி மன்றம் போகாத பரிஸ்ரர் பொன்னம்பலம், MD in Medical Administration முடித்த அர்ச்சுனா போன்றோர் தான் இனி "அரசியல் அறிஞர்களாக" உழைக்க வேண்டும்😂!8 points
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
தொடர்ந்து அவர் தேசியப் பட்டியலில் (பின் கதவால்) மட்டும் வந்து ஒன்றும் பேசாமல் "பின் குசினியில் வேலை" செய்திருக்கலாம் என்கிறீர்களா😂? ஐயா, 2 முறை தேர்தல் வென்றதையே சகித்துக் கொள்ளாமல் பொங்கிய பட்டாசு ரீம் தாங்களே போட்டுத் தள்ளியிருப்பர் சுமந்திரனை. ஆனால், இந்த சுமந்திரன் மீதான இவர்களின் ஒற்றை வன்மம் எப்படி இவர்களைத் தேர்ந்தெடுத்த குருடர்களாக - selective blind மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா? 1. ஈழவேந்தனை புலிகள் தேசியப் பட்டியல் (பின் கதவு) மூலம் வர வைத்தனர். நல்ல பேச்சாளர். லீவு போட்டு விட்டு ஊர் சுற்ற ஆரம்பித்து இறுதியில் அதனாலேயே பதவி பறி போனது. பதவி பறி போகும் தறுவாயிலும் தன் பா.உ குடியிருப்பு சலுகையை வைத்திருக்கப் போராடியவர் அமரர் ஈழவேந்தன். இதையெல்லாம் மறந்து விட்டு, அவருக்கு "தேசியப் புகழ் மாலை" சாத்தியவர்கள் இருக்கிறார்கள். 2. நம் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் முதல் முறை பா. உ ஆனது புலிகள் கிழக்கில் தெரிவான ஒரு கூட்டமைப்பு பா. உவை ஆயுத முனையில் மிரட்டி பதவி விலக வைத்தமையால் வந்த வெற்றிடத்திற்கு.இதைப் பின் கதவென்று கூட சொல்ல முடியாது, "கூரையைப் பிரிச்சு" இறங்கியதாகத் தான் சொல்ல முடியும்😂! இதுவும் கண்ணுக்குத் தெரியாமல் தேர்ந்த குருடர்களாக இருக்கிறார்கள்!3 points
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
3 points
- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சீனா மக்களை அடக்கி ஆள்வதற்கு கம்யூனிசத்தையும் நாட்டை முன்னேற்ற முதலாளித்துவ கொள்கையையும் கடைப்பிடித்து வருகின்றது. சீன மக்களின் வாழ்கை வசதிகள் ஈரான் உக்ரைனுக்கு கீழே உள்ளது. சிங்கப்பூர் அதிக உயர்தர மக்கள் வாழ்க்கை தரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.3 points- மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!
இந்த சர்வதேச கோமாளிகளின் பக்கச்சார்பை நினைக்க..............🤣😂 இவர்கள் நல்ல நடிகர்கள், பாராட்ட வேண்டும் நடிப்பிற்கு👍3 points- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
1. சும் த.தே.கூட்டமைப்பிற்குள் வரும் போது கஜேந்திரகுமாரும் உடன் இருந்தார். ஆனால் 2010 தேர்தலில் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களையும் தமிழ் தேசியவாதிகளையும் அகற்றிய போது குறிப்பாக அகில இலங்கை காங்கிரஸ் இற்கு ஒரு ஆசனத்தை மட்டும் வழங்கியதாலேயே கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். 2. அருச்சுணாவிற்கு 6 பிளாஸ்ரிக் கதிரைகள் என கிண்டலடித்ததை மறந்து விட்டீர்களா?3 points- குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம்
2 pointsகுறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம் எழுத்துப் பழக்கம் ஏற்படும் முன்பே அடியேனுக்கு மேடைப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. எழுத்திற்காக எனக்குக் கொம்பு சீவி விட்டவள் என் மகள் சோம.அழகு என்றால், மேடை நோக்கி என்னை ஏவி விட்டவர்கள் எனது MUTA தொழிற்சங்கத் தோழர்கள். எனது எழுத்திற்கு நானே வாசகனாய் மனநிறைவு கொள்வதுண்டு. மேடையைப் பொறுத்தவரை பெரும்பான்மை மேடைப் பேச்சாளர்களின் வரையறையில் நான் நிற்பதில்லை என்பதே என்னைப் பற்றிய எனது கணிப்பு (அவர்கள் அப்படி ஏதோ வரையறை வைத்திருக்கிறார்கள் என்பது எனது கற்பனையாகவும் இருக்கலாம்). மேடையின் கீழே நின்றுகொண்டு நான்கைந்து பேர் கொண்ட நண்பர் குழாமில் எப்படிப் பேசுவேனோ அப்படித்தான் மேடையிலும் எனக்கு வருகிறது. பேசும்போதே யோசித்துக் கொண்டு, சொல்ல வந்தது பாதி வாக்கியத்திலேயே தெளிவானால் அடுத்த வாக்கியத்திற்குத் தாவி விடுவது, பேச்சில் முன்னும் பின்னும் செல்வது இவையெல்லாம் நீங்களும் நானும் அன்றாட உரையாடலில் அவை பற்றிய உணர்வே இல்லாமல் நடைமுறைப் படுத்துவது. மேடையிலும் இது அனிச்சைச் செயலாக வருவதே என் மேடைப் பேச்சு. இது குறையா நிறையா என்று நான் ஆய்வு செய்யும் முன்பே, அந்த என் பேச்சு இயல்பாக இருப்பதாக எனது நட்பு வட்டம் எனக்கு முறுக்கேற்றி விட்டது. அதனால்தானே அது நட்பு வட்டம் ! குறிப்பாக என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் அந்த என் பாணியை மாற்ற முயல வேண்டாம் என அறிவுரைத்து, அது மேடையில் வேறாகத் தெரிவதே ரசனைக்குரியது என்று குறித்தது நான் எதிர்பாராத ஒன்று. மாற்ற முயன்றாலும் என்னால் இயலுமா என்பது வேறு. என்னுள் ஏற்பட்ட இந்த சிந்தனையை உங்கள் முன் சிதறி விட்டேன். எடுத்துக்காட்டாக எனது சமீபத்திய சிற்றுரைகளுக்கான இணைப்புகளைக் கீழே தந்துள்ளேன். ஒன்று, நண்பரின் புத்தக வெளியீட்டில்; மற்றொன்று, ஜமாஅத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில். புதிதாக மேடையேற நினைக்கும் இளையோருக்கு, அவர்கள் எடுக்கவும் விடுக்கவும் இங்கு சில விடயங்கள் அமையலாம். (1) (2) https://drive.google.com/file/d/1VezZulqg8lUh9rqkM8XRPDGUA92w2cqk/view?usp=drivesdk இக்காணொளிகள் எனது சமீபத்திய கட்டுரைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன. வாசிக்க நேரமில்லாதோர் கேட்கலாம்.2 points- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பா.உ.மன்ற உறுப்பினர்கள் இதை செய்திருப்பினம் போல..😅2 points- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
உண்மைதான்…. என்ன செய்வது ஐலண்ட் …..இனி போய் நீலனை கூட்டி வர முடியாது. தலைவரையும் கூட்டி வந்து செய்தது பிழை என ஏற்றுகொள்ளவைக்கம்முடியாது…. இப்படியே எவ்வளவு காலம்தான் மாறி மாறி பழைய கறள் கதைகளை கதைச்சு கொண்டே இருக்க போறம்.2 points- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
இப்ப... உங்களுக்கு, என்ன பிரச்சினை? கீழே உள்ள செய்தி தமிழில் தானே உள்ளது. அதனை நீங்கள் வாசித்து விளங்கிக் கொள்வதில், உங்களுக்கு ஏதாவது கோளாறு உள்ளதா? கிளிநொச்சியில்.... அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசிய கட்சியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சந்திரகுமார் எல்லோரினது சாராயக் கடைகளும் உள்ளது தெரியுமா? ஸ்ரீதரன்... //மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.// என்று... வெளிப்படையாக அறிவித்த பின்பும், லூசுத் தனமாக எழுதிக் கொண்டு இருக்காமல்... அவர் சாராய அனுமதி பெற்றதை நிரூபித்து, அவரை அரசியலில் இருந்து விலக வைக்கின்ற அலுவலை பார்க்கவும். 👇 கீழே உள்ள இணைப்பை... உங்கள் மூளையில் பதியும் வரை... திரும்ப, திரும்ப வாசிக்கவும். அப்படியும் விளங்கவில்லை என்றால், ஏதோ... கோளாறு இருக்குது என்று அர்த்தம். நல்ல வைத்தியரை நாடவும். நன்றி. 👇2 points- ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣. டி 20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு நியூயோர்க் மைதானத்திற்கு வந்த பிட்ச் அடிலேட்டில் இருந்தே கொண்டு வரப்பட்டது என்று ஒரு ஞாபகம். வேற ஒன்றும் வேண்டாம்............. அதே பிட்சை இப்பவும் போடுங்கோ................ ஒரு விக்கட் இலவசம்..................🤣.2 points- சிரிக்க மட்டும் வாங்க
2 points- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
தமிழ் மக்கள் யார் யாரை உயர்த்தியுள்ளனர்?2 points- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நல்லவேளை இலங்கை குடியுரிமையும், வாக்குரிமையும் வைத்திருக்கும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நானும் என் நிலையறிந்து பயரும் விடுவதில்லை அதனால் பெயரில் அக்கினியையும் நெருப்பையும் வைத்திருக்க முடிகிறது. கொழுப்பெடுத்து போய் பயர் விட்டால் எந்த நாட்டிலும் பிதுக்கி விடுவார்கள் என்பது உண்மைதான் போலும். அனுர மட்டும்தான் பிதுக்குவார் என்பதில்லை போல2 points- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அது என்ன ஒரு மனிசன் கருத்து சொல்லலாம்னு வந்தா நீங்களே அத முதல்ல சொல்லிடுறது?😝 கந்தையா அண்ணை அறிந்த தகவல் தவறானது, சீனா முதலில் ஒரு அபிவிருத்தியடைந்த நாடல்ல, பிரமாண்ட நகர வளர்ச்சியை கொண்டிருந்தாலும், கிராமப்புறங்கள் இன்னும் சுகாதாரம் வறுமை மிக குறைந்த ஊதியம், வேலையில்லா திண்டாட்டம் , சேரிப்புற மக்கள் என மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளன. விளங்க நினைப்பவன் சொன்னதுபோல் உள்நாட்டு விவகாரங்களில் கம்யூனிச கொள்கையை கடைப்பிடிக்கும் சீனா பொருளாதார விஷயத்தில் முற்று முழுதாக மேற்குலகம் சார்ந்தே செயல்படுகிறது. உலகின் புகழ்பெற்ற அனைத்து வியாபார நிறுவனங்களும் சீனாவிற்குள் நிலைகொண்டு சீனர்களின் உழைப்பு பணத்தை முதலீடு என்ற பெயரில் அள்ளி செல்கின்றன, சீனாவில் நிலைகொண்டுள்ள மேற்குலக சில உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் https://msadvisory.com/list-of-foreign-companies-operating-in-china/ சீனா எப்படி உலக பொருளாதாரத்தை சுரண்டுகிறதோ அதேபோல் சீன பொருளாதாரத்தையும் உலகம் சுரண்டுகிறது2 points- கருத்து படங்கள்
2 points2 points- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
ஆயிரத்தில் ஒன்று. 1) பரவாயில்லை. பொய்ச் செய்திகள், வதந்திகள் எல்லாம் போட்டு அடித்து, நேரடியாக ரௌடிகளை வைத்தும் அவமானம் செய்து,... யாழ் களத்திலேயே பல பிர பல அறிவில் ஆதவன்கள் தேர்தல் நேரத்தில் போட்ட காட்டுக் கூச்சல் இதற்கு நல்ல உதாரணம். தேர்தல் முடிந்தவுடன் தற்போது தொப்பியைப் பிரட்டிப்போட்டு குத்துக்கரணம் அடிப்பதில் முஸ்லிம்கள் தோற்றார்கள். 2) மண்டையன் குழுத்தலைவர் பிரபாகரனைத் தலையில் தூக்கி வைத்தவுடன் மன்னித்தவர்கள், உச்ச நீதிமன்றில் இருந்த வேளையில் தமிழ் சந்தேகநபர்களுக்கு தீர்ப்பெழுதியிருக்கக் கூடிய விக்கியை புலிகளைத் தலையில் தூக்கி வைத்ததும் மன்னித்தவர்கள், "போராட்டத்தை எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளவில்லை" என்று உண்மையைச் சொன்ன சுமந்திரனை வதை செய்தது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத அநியாயம் என நினைக்கிறேன். தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகக் கூறியது, புலம்பெயர்ஸ் வியாபாரக் கூட்டத்திற்கு சகிக்க முடியவில்லை. அதன் விலை தற்போது அர்ச்சுனா (வடிவேலு style ல் கூறினால்🤣) ரமனாதான் போன்ற மனோவியாதிஸ்தர்களை இலங்கையின் அதியுயர் பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அங்கே வடக்கன்ஸ்களின் கொஞ்ச நெஞ்ச மரியாதையையும் காற்றில் பறக்க வைத்திவிட்டது. 3) இப்படி பட்ட மலினமான முட்டாள்களை உள்ளடக்கிய ஒரு மக்கள் கூட்டத்திற்கு சுமந்திரன் தன் நேரத்தையும், முயற்சியையும் வீணாக்காமல் தன் சொந்த வாழ்வைப் பார்த்துக் கொள்வது தான் சரியாக இருக்கும். எந்தவிதமான கட்டுப்பாடோ அல்லது ஒழுக்கமோ அற்ற, கும்பலில் கோவிந்தா போடும் ஒரு மலினமான, சாதியை மூலதனமாகவும், கல்வியை கொழுத்த சீர்தனத்திற்கான மூலமாகவும் கொண்டு தன்னைக் கல்வியறிவுள்ள இனமாக எண்ணிக் கொண்டு, தாழ்வுச் சிக்கலில் உழலும் ஒரு இனத்திற்கு தனது நேரத்தையும் முயற்சியையும் வீணாக்காமல் இருப்பது சுமந்திரன் போன்றோருக்கு நன்மை பயக்கும். 4) ஏராளமான தமிழ் அரசியல் அறிஞர்கள் சுமந்திரனை விட சிறப்பாகப் பங்காற்றக் கூடிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீலன், சுமந்திரன் போன்றோர் நடத்தப் பட்ட விதத்தைப் பார்த்த எந்த தமிழ் அரசியல் அறிஞரும் தன் கழுத்தை கூட்டத்திலிருந்து வெளியே நீட்ட மாட்டார்கள்,.... உந்த வஞ்சகப் புகழ்ச்சிக்கு தமிழ் அரசியல் அறிஞர்கள் எவரும் சிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 5) வாத்தியார் சிறிதரன், நீதி மன்றம் போகாத பரிஸ்ரர் பொன்னம்பலம், MD in Medical Administration முடித்த அர்ச்சுனா உலகமெங்கிலும் பரந்திருக்கும் இலங்கைத் தமிழருக்குத் தலைமை தாங்கும் தகுதி உந்த Bar License புகழ் வாத்தியாருக்கும், தனக்கு சிறப்பு அளிக்கப்படாது என்பதை அறிந்தவுடன் விலகி ஓடும் Colombo - 7 பொன்னம்பலத்தாருக்கும், Joker அர்ச்சுனா ரமநாதனுக்கும் இருக்கிறது என்று நம்பும் உந்த டமில் இனம் அழிந்து போவதற்குத் தகுதியானதே.2 points- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி. அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு? அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை. அதாவது இலங்கைக்குள் புலிகள் தனிநாடு உருவாக்க நினைத்தது ஜேவிபியைவிட ஆபத்தான செயலா? அப்போ கொழும்பில் இருந்தவனையெல்லாம் 58/77/83ல் அடிச்சு மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சிங்களவன் விரட்டிவிட்டு அது உங்கள் இடம் ஓடுங்கோடா என்று கலைச்சுவிட்டது உங்கநாடு இதுதான் என்று சிங்களவன் சொன்னது மாதிரி இல்லையா? தனிநாட்டை முதலில் கோடு போட்டு காட்டியது சிங்களவனா தமிழனா?2 points- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
முடிந்தால் கஜனிடம் சொல்லி விடுங்கோ… அவருக்கு ஒரு off ramp தேவைப்பட்டால்…இதோ👇 1. கட்சியின் கொள்கை என்றவகையில், ஒரு நாடு இரு தேசம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். 2. பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ் தேசிய வாக்குகள் சிதறியமை, மக்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டு விட்டார்கள் என்ற பொய்பிரச்சாரத்தை வலுப்படுத்துகிறது. 3. ஆகவே உடனடித்தேவை என்ற வகையில் - தமிழ் தேசிய சக்திகளை ஒரு முகப்படுத்தும் வகையில் - தமிழ் கட்சிகள் இடையே ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் - நாம் தமிழரசு கட்சி, ஏனைய கட்சிகள் முன்வைக்கும் யோசனைகளையும் பரிசீலித்து, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வர சித்தமாயுள்ளோம்.2 points- புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
இயற்கை அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உதவி 29/11/2024 சந்ததியார் அறக்கட்டளையூடாக சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் குடும்பத்தினர் இயலாமையுடைய பிள்ளைகளின் 10 குடும்பங்களிற்கு அரிசி, பருப்பு, சோயாமீற், சீனி என்பவற்றை வழங்கி உதவியுள்ளனர். கதிர்காமநாதன் குடும்பத்தினருக்கு எமது புலர் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாகவும் இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் அண்மையில்(26/12/2024) காலமான செல்வி கஜீபனாவின் அம்மாவிடம் 30000 ரூபா புலர் அறக்கட்டளையின் வங்கி நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் செயலாளர் திரு இ.பரணீதரன், பொருளாளர் சி.தேவகுமாரன், உபசெயலாளர் இ.சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.2 points- நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும் - அது கூட்டு அரசியலில் சுடராக வியாபிக்கட்டும் என்கிறார் அருட்தந்தை சத்திவேல்
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. அரசியல் களச் சூழ்நிலை அறிந்து எமக்கிடையிலான பலமான அரசியல் கூட்டு கட்டமைப்பு உருவாக்கினால் மட்டுமே நாம் எதிர்நோக்கும் அரசியல் போரினை எதிர்கொள்ள முடியும். தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் பிரேரணைகளை மையப்படுத்தி பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான ஆயத்த பேச்சுவார்த்தையினை தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் தமிழரசு கட்சி தலைவர் சிறீததரனுக்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சு வார்த்தையை வரவேற்பதோடு, இக்கூட்டு செயற்பாடு நாடாளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் கொள்கை ரீதியில் பலமடைய வேண்டும். விரிவடைய வேண்டும். புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களும் தடம் மாறாது களத்திலும் புலத்திலும் அரசியல் கடப்பாட்டினை நிறைவேற்ற துணை நிற்க வேண்டும். அன்று பொங்கு தமிழாக அதனைத்தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையாக திரண்டது போன்று மீண்டும் மக்கள் அரசியலும் அதற்கான கூட்டு செயல்பாடும் கொள்கை ரீதியில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி பலமடைய அனைவரும் அரசியல் முதிர்ச்சியோடு தம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்கின்றோம். தமிழர் தாயக விடுதலை போராட்டத்தை தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் பயணத்தை சிதைத்த சக்திகளுக்கு மத்தியில் நேற்று முளைத்த சில அரசியல் காளான்களுக்கும் எம் தாயக அரசிற்கான கூட்டு தடையாக இருக்கலாம். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் கெட்ட தேசமாக அமையட்டும். அது எல்லாவற்றையும் பாடமாக கொண்டு அரசியல் பயணத்தில் விரைவாக பலமடைய வேண்டும் என்பதே தமிழ் தேச மக்களின் அரசியல் விருப்பம். நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்றில் 3/2 அதிகமான பெரும்பான்மை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும், மாகாண சபை தேர்தலிலும் முழு நாட்டையும் தமதாக்கிய பின்னர் யாப்பு சீர்திருத்தம் எனும் போர்வையில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும். சூடு கண்டவர்களாக நாம் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கட்சிகளாகவும் சமூக அமைப்புகளாகவும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எம் தாயக அரசியலை மையப்படுத்தி கூட்டு செயற்பாட்டு சூழலை அவசரமாக தமிழர் தாயக பிரதேசங்களில் உயிர்ப்பித்தல் அவசியம். உயிர்ப்பிக்கப்படும் கூட்டு தமிழ் மக்கள் பேரவை முன் வைத்த அரசியல் முன்மொழிவுகளோடு ஆரம்பிக்கலாம். பல்வேறு விதமான கருத்து மோதல்கள், தலைமைத்துவம் தொடர்பான சிக்கல்கள்,அமைப்பு ரீதியில் நிர்வாக சிக்கல்களும் வரலாம். கொள்கை அரசியலில் விட்டுக்கொடுப்புகள் இன்றி பலமான தேச அரசியலை கருத்தினை முதன்மைபடுத்தி சகிப்புத்தன்மையுடன் பயணத்தை தொடருவது சாலச் சிறந்தது. மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் அண்மைய ஊடக பேட்டியில் மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் ஒன்று என்று கூறியதில் இருந்து மக்கள் முன்னணியில் அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாதவர்கள் தேசிய மக்கள் சக்தி என முகம் கொண்டு வெளியில் வந்துள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளருடைய கூற்றுக்கு தேசிய மக்கள் சக்தி இதுவரைக்கும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. எனவே தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணியே. எனவே தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அதன் கோரமுகம் அவ்வாறே உள்ளது என்பதிலே மாற்று கருத்து கிடையாது. தமிழர் தேசத்தில் அரசு படைகளை பலப்படுத்தியதும், படைத்தளங்களை விரிவுபடுத்தியதும், அரச காணி மற்றும் பொதுமக்கள் காணிகளையும் கையகப்படுத்தியதும், மகாவலி அதிகாரி சபையை முன்னோக்கி நகர்த்துவதும் சிங்கள பௌத்த திணைக்களங்களை சுதந்திரமாக செயல்பட இடமளித்ததும் தெற்கின் சிங்கள பௌத்த பேரின வாத அரசியலின் தேவை கருதியே. தற்போதும் அதே அரசியல் கருத்தியல் கொண்டவர்கள் பாதைகள் திறந்து விடுகின்றனர் ,படைத்தளங்களை கூடுகின்றனர்( படைகளை குறைக்கவில்லை) மாவீரர் தினத்தை நினைவு கூற அனுமதிக்கின்றனர் கைதும் செய்கின்றனர்). இது போன்ற கவர்ச்சி செயல்கள் மேலும் தொடரலாம். இதுவும் அவர்களின் அரசியல் தேவை கருதியே அன்றி தமிழர்களின் தேவை கருதி அல்ல. இதனை தமிழ் தேச மக்களும் நன்கு உணர்வார்கள். இந்நிலையில் மாற்றம் அடையலாம். எதிர்த்தரப்பு கோஷங்களுக்கு மத்தியில் மேலும் இறுக்கமடையலாம். ஆட்சி அதிகாரமும் பெரும்பான்மையையும் அவர்களிடத்தில் இருக்கின்றது என்பதை நாம் மறக்கவில்லை. தமிழர் எதிர்கால அரசியல் நலன் கருதி கடந்த கால அரசியல் குரோதங்கள், போட்டியை அரசியல், காட்டிக் கொடுப்புக்கள், சலுகை அரசியல் என்பவருக்கு இடம் கொடுக்காது பெரும் தேசிய வாதத்தினை தேசமாக மக்களோடு சேர்ந்து எதிர் கொள்ள கொடுக்கவும் பேச்சு வார்த்தை தொய்வும் தோல்வியையும் சந்திக்காது முன்னோக்கி நகர்ந்து செல்லும் பொறுப்பும் கடப்பாடும் தமிழ் தேச உணர்வாளர்களுக்கு அவசியம். மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். அது கூட்டு அரசியலில் சுடராக வியாபிக்கட்டும். https://thinakkural.lk/article/3131601 point- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இரு முனைப்போட்டிதான், அனுர எதிர் அர்ச்சுனா.1 point- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
இலங்கை மதுபான இலாகாவின் இணையத்தளத்தில் பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு வரையிலான மதுபான அனுமதி பெற்றவர்களின் பெயர் விபரங்களுடன் பல்வேறு தரப்பட்ட மதுபான லைசென்சுகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய விபரங்கள் எதுவும் தரவேற்றப்படவில்லை. https://www.excise.gov.lk1 point- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நீங்கள் மாறுங்கள் நாங்கள் மாற மாட்டோம்...😅 சிங்களவனால் சுட்ட வடு மாறும் தமிழனால் சுட்ட வடு மாறது ..😅1 point- நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
பேச்சாளர்களாக எனக்கும் சீமானின் பேச்சு பிடிக்கும் வை கோ கூட நன்றாக பேசுவார் அனால் சீமானளவிற்கு பேசுவார் என நினைக்கவில்லை, அதிலும் குறிபாக எனக்கு பிடித்த ஆமை ஒட்டினை படகாக பயன்படுத்தின கதை நன்றாக இருந்தது, சொல்வது பொய் என தெரிந்தாலும் மக்கள் அவர் கூறுவதனை அசந்து போய் கேட்டுக்கொண்டிருப்பார்கள் அதுதான் திறமை.1 point- ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
Ind vs Aus: பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்து தேர்வு செய்யப்பட்டது ஏன்? - யாருக்கு சாதகமாக அமையும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது. எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக இந்தியா - ஆஸ்திரேலிய இடையே பிங்க் பந்தால், மின்னொளியில் நடத்தப்படும் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் வரும் 6-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது. பகலிரவு ஒருநாள், டி20 போட்டியில் இந்திய அணி பல ஆட்டங்களை விளையாடினாலும், அவற்றிலிருந்து பிங்க் பந்தில் நடத்தப்படும் இந்த பகலிரவு டெஸ்ட் முற்றிலும் வேறுபட்டது. பகலிரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும் பிங்க் பந்து, டெஸ்ட் போட்டியில் வழக்கமாக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற கூக்கபுரா(எஸ்ஜி, டியூக்ஸ்) பந்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பேட்டர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் முற்றிலும் புதிய அனுபவத்தை இந்த பிங்க் நிறப் பந்து வழங்கும். பேட்டர்களின் பேட்டிங் திறமைக்கு பெரிய சவாலாக அமையும். டெஸ்ட் போட்டி பாரம்பரியம் காக்க கிரிக்கெட்டில் பாரம்பரியமாக நடத்தப்படும் டெஸ்ட் போட்டி என்றாலே பகலில் தொடங்கி மாலையில் முடிக்கப்படும் என்ற நிலை மாறி, பிற்பகலில் தொடங்கி இரவு வரை நடக்கும் பகலிரவு டெஸ்ட் முறை 2000-ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிக்குரிய இடத்தை டி20 போட்டி ஆக்கிரமிக்கத் தொடங்கியபின், டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்களின் ஆர்வம் மெல்ல குறையத் தொடங்கியது. டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கொடுக்கவும், மாலை நேரத்தில் ரசிகர்களின் கூட்டத்தை கவர்ந்திழுக்கவும் பகலிரவு டெஸ்ட் நடத்தும் புதிய சிந்தனை உதயமானது. பாரம்பரிய டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கொடுக்கவும், புதிய கோணத்தில் காலத்துக்கு ஏற்ப மாற்றவும் கொண்டுவரப்பட்டதே பகலிரவு டெஸ்ட் போட்டி. இந்த டெஸ்ட் போட்டியின் முற்பகுதி சூரியஒளியிலும் பிற்பகுதி ஆட்டம் மின்னொளியில் நடக்கும். வழக்கமான சிவப்பு பந்துக்குப் பதிலாக எந்த நிறத்தில் பந்தைப் பயன்படுத்துவது என பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆரஞ்சு நிறம், மஞ்சள், பிங்க் ஆகிய வண்ணங்களில் பந்துகள் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019 இல் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே பிங்க் பந்து கொண்ட முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. அங்கிருந்த கட்டிடங்கள் இளஞ்சிவப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்(ஈசிபி) ஒர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் வங்கதேசத்துக்கு எதிராக 4 நாட்கள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி பகலிரவாக நடத்தப்பட்டு அதில் பிங்க் பந்து பயன்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால் துர்ஹாம் மற்றும் வோர்ஷெஸ்டர்ஷையர் அணிகள் அதற்கு மறுத்துவிட்டன. இதனிடையே 2010-ஆம் ஆண்டு ஜனவரியில் மேற்கிந்தியத்தீவுகளில் பிங்க் பந்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. கவுன்டிஅணிகளைச் சமாதானம் செய்தபின் 2010-ஆம் ஆண்டு “சாம்பியன்ஸ் கவுன்டி” போட்டித் தொடரை அபுதாபியில் மின்னொளியில் பிங்க் பந்தில் நடத்த ஈசிபி முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கேன்டர்பரி கிளப்பும் கவுன்டி சாம்பியன்ஷிப்பை பிங்க் பந்தில் மின்னொளியில் நடத்தியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 2010-11-ஆம் ஆண்டில் “குவாதி-இ-ஆசம்” கோப்பைத் தொடரை பகலிரவாக ஆரஞ்சு பந்தில் நடத்திப் பரிசோதித்து, இறுதிப்போட்டியை பிங்க் பந்தில் நடத்தியது. 2012ல் தென் ஆப்பிரிக்காவும், 2013-ஆம் ஆண்டில் வங்கதேச அணியும் பிங்க் பந்தில் விளையாடி பரிசோதனை செய்தன. ஆஸ்திரேலியாவில் 2014-ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டிகள் அனைத்தும் பிங்க் நிற கூக்கபுரா பந்திலேயே நடத்தி பரிசோதிக்கப்பட்டது. பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்தை பெரும்பாலான அணிகள் பயன்படுத்தியதைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் பகலிரவு டெஸ்ட் பட மூலாதாரம்,SAEED KHAN/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, நவம்பர் 27, 2015 அன்று அடிலெய்டு ஓவலில் நடந்த முதல் பகல்-இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது பந்து வீசத் தயாராக இருந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பிங்க் நிறப் பந்தை டாஸ் செய்தார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடிலெய்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டது. 3 நாட்களில் முடிந்த இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பிங்க் பந்து பயன்பாட்டுக்காக பிட்ச்சில் கூடுதலாக புற்கள் வளர்க்கப்பட்ட நிலையில் பந்துக்கு லேசாக மட்டுமே தேய்ந்திருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த பிங்க் பந்து அமைந்திருந்தது. அதிகமான ஸ்விங், கூடுதல் வேகம், பவுன்ஸ் என வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யும் போட்டியாக பிங்க் டெஸ்ட் அமைந்திருந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்திய கருத்துக் கணிப்பிலும் 81 சதவீத ரசிகர்கள் பிங்க் டெஸ்ட் போட்டியை ரசிப்பதாகவும், பிற்பகலில் தொடங்கும் டெஸ்டை இரவுவரைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தனர். ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு அடுத்தார் போல் ரசிகர்கள் கூட்டமும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இருந்தது. 2வது பிங்க் பந்து டெஸ்ட் போட்டி பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையே துபாயில் நடத்தப்பட்டது. பல அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியநிலையில் 4 ஆண்டுகளுக்குப்பின் 2019-ஆம் ஆண்டுதான் இந்திய அணி பிங்க் பந்தில் விளையாடியது. 2019-ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக பிங்க் பந்தில் இந்திய அணி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. 22 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் 2015-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சர்வதேச அளவில் 22 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி 12 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வென்று அசுரத்தனமாக இருக்கிறது. அடியெல்ட் மைதானத்தில்தான் அதிகபட்சமாக 7 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. இதில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்திய நாடுகள்தான் 22 போட்டிகளில் 18 ஆட்டங்களில் வென்றுள்ளன, 4 போட்டிகளில்தான் விருந்தினராக வந்த அணிகள் வென்றுள்ளன. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, துபாய் ஆகிய நாடுகளில் இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை அணிகள் தங்கள் நாடுகளில் இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019 இல் வங்கதேச அணிக்கு எதிரான இந்தியாவின் முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஈடன் கார்டன் மைதானம் அருகே கட்டிடங்களில் பிங்க் நிற விளக்குகள் ஒளிர்ந்தன ஏன் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மின்னொளியில் நடத்தப்படும்போது, இரு அணிகளின் வீரர்களும் வண்ண உடைகளில் விளையாடுவார்கள், அப்போது பந்து தெளிவாக பேட்டர்களுக்கு தெரிய வெள்ளைப்பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெள்ளை ஆடையயில் வீரர்கள் களமிறங்கி, வெள்ளைப் பந்து பயன்படுத்தப்பட்டால் பேட்டர்களால் பந்தை அடையாளம் காண்பதும், கவனிப்பதும் கடினம். மேலும் ஆடுகளத்தின் கறுப்பு அல்லது பிரவுன் நிறத்துக்கு எதிராக பந்து தெளிவாக தெரிய வேண்டும், பேட்டர்களுக்கு நன்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே “பிங்க் நிற” பந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த பிங்க் நிறத்துக்காகவே பந்தில் சிறப்பு ரசாயனப் பூச்சு பூசப்படுகிறது. வழக்கமான வெள்ளைப்பந்து விரைவில் நிறத்தை இழந்துவிடும்நிலையில் இந்த பிங்க் நிறம் எளிதாக தனது நிறத்தை இழக்காது, பந்தை தேய்ந்துபோகவிடாமல் ரசாயனப்பூச்சு பாதுகாக்கிறது. ரசயான பூச்சால் பிங்க் பந்து கூடுதல் பளபளப்பாக இருப்பதால் வழக்கமான சிவப்பு பந்தோடு ஒப்பிடுகையில் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு ஸ்விங் செய்ய முடியும், ஸ்விங் அளவும் அதிகரிக்கும். அதாவது புதிய சிவப்பு பந்தில் குறைந்த ஓவர்கள்தான் ஸ்விங் செய்ய முடியும், ஆனால், பிங்க் பந்தில் 40 ஓவர்கள் வரை ஸ்விங் செய்ய முடியும். பிங்க் - சிவப்பு பந்து வேறுபாடு என்ன? கிரிக்கெட்டில் விளையாடப்படும் பந்தின் எடை 156 கிராம் முதல் 162 கிராமுக்குள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பந்து நிராகரிக்கப்படும். இதற்காகவே கிரிக்கெட் பந்து தரமான தோலால் தயாரிக்கப்படுகிறது. சிவப்பு பந்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தோலைவிட, பிங்க் பந்து தயாரிக்க அதிக தரமான தோல் பயன்படுத்தப்படுகிறது. ஹாக்கி பந்து அளவுக்கு இணையாக, பிங்க் பந்து இருக்கும், இதன் விட்டம் 22.5 செ.மீ ஆகும். இதில் மொத்தம் 78 தையல்கள் போடப்பட்டிருக்கும். பிங்க் பந்தில் பந்துவீசும் போது, தொடக்க ஓவர்களில் வழக்கமான சிவப்பு பந்தைவிட 20 சதவீதம் கூடுதலாக ஸ்விங் ஆகும். இதற்கு பந்தின் மீது பூசப்பட்ட பிரத்தேய பிங்க் நிறமும், ரசாயன பாலிஷ்தான் காரணம். சிவப்பு பந்து வெள்ளை நூலால் தைக்கப்பட்டிருக்கும். ஆனால், பிங்க் பந்தில் கறுப்பு நூலால் தைக்கப்பட்டிருக்கும். பேட்டர்களுக்கு பந்து தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கறுப்பு நூலால் தைக்கப்படுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்டில் பயன்படுத்தப்படும் கூக்கபுரா பிங்க் பந்தில் மொத்தம் 6 தையல்கள் போடப்பட்டிருக்கும். இரு தையல்கள் கையாலும்,4 தையல்கள் எந்திரத்திலும் போடப்பட்டிருக்கும். இதன் விலை சர்வதேச அளவில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம்வரை விற்கப்படுகிறது. 3 வகை பந்துகள் சர்வதேச அளவில் கிரிக்கெட் பந்துகள் 3 வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் ‘எஸ்ஜி’ பந்துகளும் , இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தானில் ‘டியூக்ஸ்’ பந்துகளும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் ‘கூக்கபுரா’ பந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பந்திலும் அதன் தையல்கள் வேறுபட்டு இருக்கும். இதனால் பந்தின் வேகமும், உழைப்பும் மாறுபடும். அதாவது எஸ்ஜி(சான்ஸ்பேரல் க்ரீன்லாந்த்), டியூக்ஸ் பந்துகள் முற்றிலுமாக கையால் தைக்கப்படுபவை. ஆனால், கூக்கபுரா பந்துகள் எந்திரத்தாலும், கையாலும், சில நேரங்களில் முழுவதும் எந்திரத்தாலும் தைக்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏன் சாதகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய அனுபவத்தை இந்த பிங்க் நிறப் பந்து வழங்கும் பிங்க் பந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். பந்தின் மீது பூசப்பட்ட ஒருவகை ரசாயனத்தால் பந்தின் பளபளப்பு 40 ஓவர்கள்வரை தாக்குப்பிடிக்கும் என்பதால் நன்கு ஸ்விங் செய்யலாம், பந்தின் வேகமும் அதிகரிக்கும். பிங்க் பந்தில் இருக்கும் பாலிஷ் காரணமாக வழக்கமான சிவப்பு பந்தில் ஸ்விங் செய்வதைவிட கூடுதலாக 20 சதவீதம் ஸ்விங் ஆகும். அதாவது, பிங்க் பந்தை பந்துவீச்சாளர் வீசும்போது கையில் இருந்து பந்து வெளியேறுவதற்கும், தரையில் பிட்ச் ஆவதற்கும் இடையிலான வேகம் வழக்கமான சிவப்பு பந்தைவிட அதிகமாக இருக்கும். இதனால் பந்தின் வேகத்துக்கு ஏற்ப பேட்டர் தனது பேட்டிங்கின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் விக்கெட்டை இழக்க நேரிடும். இது பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமாகும். ஆனால், சிவப்பு நிறப் பந்து மீது போடப்பட்ட வேக்ஸ்(மெழுகு) தேயும்வரை மட்டும் ஸ்விங் ஆகும், அது தேய்ந்தவுடன் ஸ்விங் தன்மை குறைந்தவிடும். ஆனால், 40 ஓவர்களுக்குப்பின் ரிவர்ஸ் ஸ்விங் செய்யலாம். ஆனால், பிங்க் பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய பந்து நன்றாகத் தேய வேண்டும். பிங்க் பந்தைத் தயாரிக்கப்படும் செயற்கை சணல் இரவு நேர பனிப்பொழிவின் போது ஈரப்பதத்தை உறிஞ்சிகொள்ளவும், பந்தை இறுக்கமாகப் பிடித்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசவும் பயன்படுத்தப்படுகிறது. 40 ஓவர்களுக்கு மேல் பந்து தேயும்போதுதான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இந்த பந்து ஓரளவுக்கு உதவும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c623r5l6883o1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அது என்ன பிரமாதம் கந்தையா அண்ணை, ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்ககூடிய ஒன்றுதான் இருந்தாலும் சொல்றேன், அமெரிக்காவுக்கு அதிக கடன் வழங்கிய நாடு சீனா.1 point- "விவசாயி"
1 point"விவசாயி" இலங்கையில் உடவலவ நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசமாக இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இங்கு விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக இந்த நீர்த்தேக்கம் உள்ளது. கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தான் இரத்தினபுரி ஆகும். இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை இன்று அங்கு குறைந்து வருகிறது. ஐந்துக்கு மேற்பட்ட தமிழ் பாடசாலைகளையும் பிரசித்திபெற்ற சிவன் கோவில், மற்றும் ஜும்மா மசூதி அங்கு காணப்படுகிறது. இங்கு விவசாய குடும்பத்தில் பிறந்த ரமேஷ் என்ற இளைஞன் வாழ்ந்துவந்தான். உயர் வகுப்புவரை இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றாலும், அதன் பின் உயர் கல்வியை தொடராமல், தந்தையின் விவசாயத்தில் முழுநேரம் கவனம் செலுத்தினான். அவன் எளிய விவசாயியாக தொடக்கத்தில் இருந்தாலும், தனது நிலத்திற்கான அர்ப்பணிப்பிற்காகவும், தனது பயிர்களின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் அவன் வாழ்ந்த கிராமம் முழுவதும் நன்கு அறியப்பட்டான். என்றாலும் அவனுக்குள் ஒரு குறை. தனது பாடசாலையில் படித்த சக மாணவியும் அந்த கிராமத்து குயவனின் மகள் மீரா, அவன் பாடசாலையில் படிக்கும் மட்டும் மிக அன்னியோன்னியமாக அவனுடன் நெருங்கி பழகியவள், உயர்வகுப்புக்கு பின்பு பல்கலைக்கழகம் புகுந்ததும், ரமேஷ் பல்கலைக்கழகத்தை நிராகரித்து, தந்தையின் பரம்பரை விவசாயத்துக்கு போனதும் மெல்ல மெல்ல விலகியது அவனுக்கு மிக கவலையை கொடுத்தது. உலகத்து உயிர்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற இயற்கை உணர்வு தான் காதல். அதில் ஈடு கொண்ட ஒரு மனம் தனது துணையைப் பற்றி காணும் கனவுகளும், கற்பனைகளும் எத்தனை எத்தனை? என்றாலும் அவனுக்கு இன்று வெறுப்பு வெறுப்பாக உள்ளது. நன்றாக சிவந்துபோன நாக்கு, அணிசேர்ந்ததுபோல அழகான சிறிய பற்கள், குறைவான பேச்சு உள்ள அந்த மீராவை, அவள் இன்று தூர விலகி போனாலும், அவனால் மறக்கமுடியவில்லை. பொதுவாக காதல் தோல்வி அடைந்தாலோ அல்லது காதலி இடையில் விலகிப் போனாலோ நாம் அழுது வடிப்போம், மன அழுத்தத்தில் மௌனமாவோம், குடி உள்ளிட்ட போதைகளில் ஈடுபடுவோம் ... இப்படி எத்தனை எத்தனையோ, ஆனால் ரமேஷ் இவைகளில் இருந்து வேறுபட்டவன். ஒரு பெண்ணுடன் நீங்கள் ரசித்து உரையாடி உங்களை மறக்க அவளின் அழகு தான் பணப்பை விட முதலில் நிற்கிறது என்பதே உண்மை. அழகு என்பது ஒவ்வொரு பெண்ணும் அணியும் முகமூடி. அழகு என்பது காதலுக்கும் நமக்கும் இடையில் தோன்றும் மூடுபனி என்பதை உணர்ந்த அவன், எப்படி அவன் மீராவிடம் முழுக்கவனம் கொண்டு காதலித்தானோ, அதைவிட பலமடங்குடன் சூரியன் தினம் தினம் முத்தமிடும் வயல்களைத் காதலிக்கத் தொடங்கினான். சில ஆண்டுகள் கழிய, ரமேஷ் விவசாயத்தில் பெரும் முன்னேற்றம் கண்டு, இன்று அந்த கிராமத்தில் இளம் தலைவர்களில் ஒரு பெரும்புள்ளியாக பண்பிலும் செல்வத்திலும் உயர்ந்து, சில விவசாயத்துடன் தொர்புடைய தொழிற்சாலைகளின் அதிபதியாகவும் இருந்தான். என்றாலும் அவன் தன்னை விவசாயி என்று சொல்வதிலேயே பெருமையடைந்தான். ஒரு நாள், பருவமழை இயற்கையை பச்சை நிறத்தில் வர்ணம் பூசும்போது, தன்னிடம் கார் இப்ப இருந்த பொழுதிலும், எந்தவித பெருமையும் இல்லாமல், மாட்டுவண்டி ஒன்றில் ரமேஷ் தனது வயலுக்கு கிராமத்து குயவனின் மகள் மீராவின் வீட்டை கடந்து போனான். அவன் மனதில் இன்றும் மீரா ஒரு மூலையில் இருந்துகொண்டுதான் இருந்தாள். ஒவ்வொரு காதல் நினைவும் விசேடமானதுதான் ... அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும், அந்த உணர்வை காதலியிடம் அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி, பதட்டம், உணர்ச்சிப் பெருக்கு .. மறக்க முடியாத பசுமையான நினைவுகளே! கிராமத்துப் பாதைகளை அலங்கரித்த மணம் கமழும் மலர்களைப் போல அவளது கதிரியக்கச் சிரிப்பு வசீகரமாக அன்று அவனுக்கு இருந்தாலும், இன்றும் அவன் அந்த முதல் காதலை மறக்க முடியாவிட்டாலும், அவளின் பிரிவுதான், அது கொடுத்த வைராக்கியம் தான் இன்று தன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்ததை அவன் எப்படி மறப்பான்? "உன் முதல் பார்வையே என்னை முட்டாள் ஆக்கியதை இன்றுவரை உணர்கிறேன் ..., உன்னை நினைத்து சிரிக்கிறேன் உன் கடைசி பேச்சு என் மூளையில் நீங்காத அழிக்க முடியாத கல்வெட்டு வாசகம் ... அதுதான் நான் யார் என்று எனக்கு உணர்த்திய வாசகம்!" அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். "அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்" அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய காட்டுமல்லிகைச் செடியையும், பசியமரலையையும் களைந்தெறிவைத்து போல மீராவை ஏறிய ரமேஷ் ஆசைப்பட்டாலும், அவனால் முழுமையாக ஏறிய முடியவில்லை. அவன் அவளின் வீட்டை கடக்கும் பொழுது, அவனது கண் அவனை அறியாமலே அவளது வீட்டை நோட்டமிட்டது. அவள் அங்கு முற்றத்தில் தந்தையுடன் எதோ கதைத்துக்கொண்டு நின்றாள். "வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப, கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, " மூங்கீலென திரண்ட தோளினையும். மணத்தால் வெறியூட்டும், வளர்ந்த, ஐம்பால் ஒப்பனை செய்யப்பட்ட கூந்தலையும், மான் பார்வையை வென்ற மருண்ட பார்வையையும். மயில் போன்ற சாயலையும் ,அழகிய சிலம்பில் உள்ளிருக்கும் மணிகளால் ஆன கலங்களை உடைய, நடக்கும்போது ஒளி வீசி இமைக்கும் அணிகலன்களையும் . கொடியா, மின்னலா, அணங்கா என்று எண்ணும்படித் கண நேரத்தில் யாதென்றே தெரியாத அந்த மெல்லிய இடையை அவன் கண்கள் எந்த வெட்கமும் இன்றி நாடிச் சென்றன. 'ஐயா கொஞ்சம் நில்லுங்கள். என்று மீராவின் அப்பா கூப்பிட்டுக் கொண்டு படலைக்கு வெளியே வருவதைக் கண்டான். 'மீரா பட்டம் பெற்றுவிட்டாள், வேலை தான் கிடைக்கவில்லை. உங்க தொழிற்சாலையில் பயிற்சி முகாமையாளர் பதவி வெற்றிடம் என்று அறிந்தேன். அதை ... ' என முடிக்கமுடியாமல் முடித்தார். கொஞ்சம் தூர முற்றத்தில் நின்ற மீராவை, ரமேஷ் வேலிக்கூடாக பார்த்தான். அவள் தலை குனிந்தபடி, கால் விரலால் எதோ மண்ணில் எழுதிக்கொண்டு இருந்தாள். கொஞ்சம் உற்றுப்பார்த்தான். ஆங்கிலத்தில் வெரி சாரி என்று அது இருந்தது. ரமேஷ் கொஞ்சம் உரத்து, மீராவின் காதில் விழக்கூடியதாக, 'என் தொழிற்சாலைகள் விவசாய உற்பத்தியையும், விவசாயத்துக்கு தேவையானவற்றையும் அடிப்படையாக கொண்டவை. உங்கள் மகள் பட்டதாரி, இதற்கு உடன்படுவாரா ?' என்று கேட்டுக்கொண்டு 'அவர் சரி என்றாள், வரும் திங்கட் கிழமை காலை பொது முகாமையாளரை விண்ணப்ப பத்திரத்துடன் அலுவலகத்தில், நேர்முகப்பரீட்சைக்கு சந்திக்கலாம்' என்று கூறிவிட்டு, மீராவின் அப்பா அதற்கு பதில் சொல்லமுன்பு ரமேஷ் புறப்பட்டுவிட்டான். மீரா தன்னை மிகவும் அழகாக அலங்கரித்துக் கொண்டு, கொஞ்சம் முந்தியே ரமேஷின் தொழிற்சாலைக்கு போனாள். அங்கு ரமேஷ் இல்லை. பொது முகாமையாளர் அவளின் விண்ணப்பத்தை பெற்றுவிட்டு, கொஞ்சம் காத்திருப்பு அறையில் இருக்கும்படி கூறினார். கடும் வரட்சி காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து, உடவளவ நீர்த்தேக்கத்தின் கீழ் அறுவடை செய்யப்பட்ட 65,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டதால், ரமேஷ் விவசாயிகளுக்கு தலைமை வகுத்து, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு இரண்டு தவணை நீருக்காக சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து 27 மில்லியன் கனமீற்றர் நீரை 10 நாட்களுக்கு பெற்றுக்கொள்ள ஒரு ஏற்பாடு செய்யும் முகமாக பேச்சுவார்த்தை ஒன்றுக்கு போய் இருந்தான். என்றாலும், தற்போது 87 மில்லியன் கனமீற்றராக உள்ள சமனலேவாவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 60 மில்லியன் கனமீட்டராகக் குறைவடைந்தால், இலங்கை மின்சார சபையானது தென் மாகாணத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என்று கொடுக்க மறுத்து, அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. இதனால் கடும் கோபத்துடன் மதியம் அளவில் அலுவலகம் திரும்பினான். ரமேஷ் கொஞ்சம் அவசரமாகவும் கோபத்துடனும் தனது அலுவலகத்துக்குள் நுழைவதை கண்ட மீரா, கொஞ்சம் பதற்றத்துடன் எழும்பி நின்று கவனித்தாள். அவன் அவளை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. அவளின் அலங்காரம், அழகு அவனுக்கு இப்ப ஒரு பொருட்டு அல்ல. அவன் எண்ணம் எல்லாம் நீர் பற்றாக்குறையினால் அழிந்து வரும் நெற் கதிர்களே! இன்னும் காத்து இருப்பதா, இல்லை பேசாமல் போவதா என்று மீராவுக்கு புரியவில்லை. அவள் எழும்பிய படியே நின்றுவிட்டாள். திரும்பி மீண்டும் இருக்கவில்லை. ஒரு பத்து நிமிடத்தின் பின், அவள் இனி பிரயோசனம் இல்லை என்று மனதில் நினைத்தபடி, வீட்டிற்கு திரும்பி போக ஓர் இரு அடி எடுத்து வைத்தாள். அப்பொழுது பொது முகாமையாளரிடம் இருந்து 'மீரா, நீங்க உள்ளே வரலாம்' என்ற சத்தம் கேட்டது. அவள் உள்ளே வந்ததும், பொது முகாமையாளர், 'உங்களுக்கு தேவையான தகுதி இருக்கிறது, எமது முதலாளியும் சம்மதித்துவிட்டார். நாளையில் இருந்து ஒரு ஆண்டுக்கு பயிற்சி, அது வெற்றிகரமாக முடித்தால், பணி நிரந்தரமாகும். சம்பளமும் மேலும் அதிகரிக்கும். உங்களுக்கு தேவையான பயிற்சியை பெரும்பாலும் எம் முதலாளி ரமேஷ் தருவார்' என்று சொல்லி, உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று விடைகொடுத்தார். ரமேஸுக்கு தனது நன்றியை கூற மீரா விரும்பினாலும், ரமேஷ் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வரவே இல்லை. ஆனால் அவன் ஒரு விவசாயியாக, ஓரளவு நீரை வழங்கி, அழியும் பயிர்களை கொஞ்சமாவது காப்பாற்ற, மொனராகலை மாவட்டத்தில் உள்ள 11 குளங்களில் இருந்து ஒரு பகுதி வெலி ஓயா அணையின் ஊடாக உடவலவை நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்ல, மொனராகலை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தான். அடுத்த நாள், மீரா தனது பயிற்சியை தொடங்க அலுவலகம் வந்தாள் ரமேஷ் அவளுக்கு அடிப்படை பயிற்சிக்கான விளக்கத்தை கொடுத்ததுடன், நேரடியாக விவசாயம், மற்றும் அதனுடன் தொடர்புடையனவற்றை செய்முறையில் அறிவது அவசியம் என்பதை கோடிட்டு காட்டி, வயலில் அவளை கொஞ்ச மாதத்துக்கு பயிற்சி எடுக்க அனுப்பினான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தைப்பற்றி அறியத் தொடங்க, அவர்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடத் தொடங்கினர், அவர்கள் தங்கள் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் பரந்த பரப்பிற்கு கீழே விவாதித்தனர். அதுமட்டும் அல்ல, அவர்களின் பிணைப்பு ஆழமான நிலையில், மீரா நிலத்தின் மீதான தனது அன்பைப் பகிர்ந்து கொண்டதை ரமேஷ் கண்டுபிடித்தார். அவள் அடிக்கடி அவனுடன் வயல்களுக்குச் சென்றாள், அவளுடைய வேகமான விரல்கள் பழுத்த காய்கறிகளைப் பறிக்கவும், செடிகளை மென்மையாகப் பராமரிக்கவும் உதவின. வயல்வெளிகளுக்கும் மண்ணின் நறுமணத்துக்கும் நடுவே அவர்களது காதல் மீண்டும் மலர்ந்து, கிராமத்துச் சுவர்களில் ஏறிச் செல்லும் கொடிகள் போல இதயத்தைப் பின்னிப் பிணைந்தது. நல்ல உள்ளம் காதலின் பூஞ்சோலை; அன்பின் வளமான வயல்வெளி. இவைதாம் இதயத்தின் அழகு. இவை இல்லாத இதயம் வறண்ட பாலை நிலம்தான் என்பதை அவள் உணர்ந்து, தான் முன்பு விட்ட தவறுக்கு ரமேஷ் இடம் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்! "சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு" "தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி அல்ல பாடம்படி பவளக்கொடி உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- வுஹான் ஆய்வகத்திலிருந்து கொவிட் கசிவு; அமெரிக்க விசாரணையில் தகவல்!
மொழிபெயர்ப்பு சரி என்றால். கோவிட் வைரஸ் ஆகக்குறைந்தது வேறு ஏதோ இடத்திலும் இருந்து இருக்கிறது. வூஹானை தவிர, வேறு எந்த உயிரியல் பரிசோதனை கூடங்களில் கோவிட் வைரஸ் இருக்கவில்லை என்பதை ஏன் அமெரிக்கா விசாரணை உறுதிப்படுத்தமுடியவில்லை? அப்படி உறுதிப்படுத்தும் விசாணையே நடக்கவில்லை. அமெரிக்காவும் சேர்ந்தே இந்த ஆய்வில் ஈடுபட்டது, அந்த பக்கத்தை மறைகிறது போலும்.1 point- யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு வட ஆளுநரின் அறிவித்தல்
...இப்ப சிறிலங்காவின் வடக்கன்ஸ் உடைய பிரச்சனை அவங்கன்ட நிலத்தை சுவிஸ்லாந்து மாதிரி மாற்றுவதா(குளிர் பிரதேசம்)அல்லது சிங்கப்பூராக(வெப்பமதிகமான) மாற்றுவதா என்பதுதான்... அமெரிக்கா,அவுஸ்ரேலியா புலம்பெயர்ஸ் சொல்லியினம் வெப்பம் கூடிய பிரதேசமாக மாற்ற வேணும் எண்டு...சிங்கப்பூர் இவர்கள் தெரிவு ஐரோப்பியர்,கனடா புலம்பெயர்ஸ் சொல்லுயினம் குளிர் பிரதேசமாக்...அதாவது சுவிஸ்லாந்து போல ஐ.நா.சபையில் வாக்கு எடுப்பது அடுத்த வாரம் நடை பெறுகிறது வடமாகாண சபைக்கு விமான நிலையத்தை கட்டுப்ப்டுத்தும் அதிகாரமும் உண்டு என இந்தியாவிடம் அனுரா எடுத்து சொல்வார் ...13 ஆம் திருத்தத்திற்கு மேல அதிகாரம் கண்டியளோ1 point- யாழ். சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு வட ஆளுநரின் அறிவித்தல்
யாழ்ப்பாணத்தாருக்கு இவ்வளவு ஐஸ் வைக்கிறாங்க… கடைசியில எங்க போய் முடியப் போகிறதோ???1 point- மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!
1 point- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
இந்த திமிங்கில எடுப்பு நீண்ட காலத்திற்கு எடுபடாது என நினைக்கின்றேன்.ஏனென்றால் தமிழ்நாட்டில் போட்டி அரசியல் எக்கச்சக்கம். அந்த எக்கச்சக்கம் போல் அவர்களின் ஊழல்களும் அயோக்கிய அதிகாரங்களும் அளவிற்கு மீறியவை. இன்னொரு புதிய சமுதாயம் உருவாகிக்கொண்டு வருகின்றது. ஸ்டாலின் ஆட்சி போக சகல நிதிகளும் சிறையில் இருப்பார்கள் என நினைக்கின்றேன்.1 point- நாகேஷ் எனும் நடிகமலை
1 pointபையன் அண்ணன்கிட்ட ஆசைப்பட்டு கேட்டதால அது என்ன காமெடி என்று யூடியூப்பில் தேடி பார்த்தால், அது எம்ஜிஆர் படம் ஆனா அந்த காமெடி பண்ணினது நாகேஷ் அல்ல சந்திரபாபு.1 point- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
நான் என்றுமே ஈழக்கனவுகளை வைத்தோ அல்லது சீமான் அவர் தம் முதல்வர் கனவுகளை வைத்தோ அவரை ஆதரித்தது கிடையாது. இது பற்றி நான் பலதடவைகள் இங்கே எழுதி விட்டேன். எனவே மேற்குறிப்பிட்ட காரணம் சம்பந்தமாக எனது பூட்டை அங்கும் இங்கும் ஆட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்1 point- "விவசாயி"
1 point- முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
🤣.............. அதெல்லாம் கரெக்டா பார்த்து, கரெக்டான இடங்களில் இருந்து கொள்வோம்.................. இப்ப கூட செவ்வாய் கிரகம் தான் திறம் என்று சொன்னார்கள் என்றால், எலான் மஸ்க்கின் ராக்கெட்டுக்குள்ளே அவருக்கே தெரியாமலேயே நாங்கள் இருப்போம்..............1 point- மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!
என்னது இந்தப்பக்கம் நீதிமான்கள் ஒருத்தரையும் காணேல்ல..... 😂1 point- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
அதே. ஏன் உதவ வேண்டும்…அவர்தான் எம்பி இல்லையே? நீங்கள்தான் தூக்கி வீசி விட்டீர்களே என யாரும் கேட்டால்? இனத்தின் மீது அக்கறை இருந்தால் இதை செய்யலாம். அல்லது விலகி நடக்கலாம்.1 point- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
கிழக்கு மாகாண மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தததை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டும்.கிழக்கு மாகாண மக்களளுக்கு முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு பயம் இருக்கின்றது. அதனால்தான் முஸ்லிம்களை ஓரு காலத்தில் கடுமையாக எதிர்த்த பிள்ளையான் கருணா போன்றவர்களுக்கும் தங்கள் ஆதரவை கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருந்ததார்கள். ஆனால் அவர்கள் தற்போது சிறிலங்கா அரசின் கைதிகளாக சுதந்திரமாக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பதனைக் தெளிவாகத் தெரிந்து கொண்டதால் கிழக்கு மாகாண மக்களுக்கு நன்கு அறிமுகமான தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.கிழக்குமாகாணத்தில் சாணக்கியன் இல்லாமல் வேறு யார் போட்டியிட்டு இருந்தாலும் இந்த வெற்றி கிடைத்திருக்கும். அது முஸ்லிம்கள் தொடர்பான அச்சம் காரணமாக ஒன்று பட்டு வாக்களித்திருக்கிறார்கள்..ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிக்மல் விட்ட கிழக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியத்துக்காக தமிழருக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை. இதெ தெரிவுதான் வடக்கிலும் நடந்திருக்கிறது. அவர்கள் ஒரு பரிசோதனை முயற்சியைச் செய்திருக்கிறார்கள்.டக்ளஸ்>அங்கையன் போன்றவர்களுக்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை அவர்கள் அரசுடன் சேர்ந்து இருந்தாலும் பொம்மைகள்தான். ஆகவே இந்த முறை அரசாங்கத்தை அமைக்கக்கூடிய கட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள. பொருளாதார ரீதியாக வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் ஏதாவது முன்னேற்றம் வரும் என்று மாற்றி யோசித்து இருக்கிறார்கள். ஆனால் இது நிரந்தரமானது அல்ல.ஆடத்த தேர்தலிலேயே தலையடி கொடுப்பார்கள். டக்ளஸ்>பிள்ளையான் அங்கையன் போன்ற அருசக்கு முண்டு கொடுப்பவர்கள் தோற்கடிக்கப்பட்டது மகிழ்ச்சி.1 point- 2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
அவர்கள் மனம் புண்படும் என்பதால் மெளனமாக இருக்க சொல்லவில்லை. பரஸ்பரம் குற்றசாட்டுகள் கூறும் கணவனும் மனைவியிம், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்…. இனி பழசை கிளறாமல்…எதிர் நோக்கி ஒற்றுமையாக சிந்திப்போம் என முடிவுக்கு வருவது உண்டல்லவா? அப்படி ஒரு கோரிக்கைதான் இதுவும். எனது, உங்கள் அரசியல் நிலைப்பாட்டில் அதிக வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் உங்களை போல், அனுர காட்டும் இலங்கை தேசியத்தில் கரைவதில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக தமிழர் காணி உரிமையை பெறாத எந்த தீர்வையும் என்னால் - என் இறுதிநாள் வரை ஒரு நல்ல தீர்வு என ஏற்க முடியாது. எனது மனநிலையில்தான் வடக்கு கிழக்கு தமிழ் வாக்களர்களில் பெரும்பான்மையானோர் உளர் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. அந்த மக்கள் இந்த நிலைப்பாட்டை விட்டு விலகும் வரை - நான் அதை ஆதரித்தபடியே இருப்பேன். அவர்களும் நிலையை மாற்றினால், அதன் பின் அதை பற்றி கதைக்க எனக்கு ஏதும் இல்லை. வடக்கு கிழக்கில் உள்ள தொடர்புகள் சகலதையும் முடித்து கொண்டு, காலியிலோ, உனவட்டுனவிலோ ஒரு கடற்கரைப்பக்கமாக ஒதுங்கி விடுவேன்🤣. இதுதான் நமக்கிடையேயான ஒரே வேறுபாடு என நினைக்கிறேன். புலி வால்களோடு எவ்வளவு கோபம் வந்தாலும், அதற்காக தமிழ் தேசியத்தை தூக்கி எறிய தேவையில்லை, என்பது என் நிலைப்பாடு.1 point- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
,இந்த சந்திப்பை வரவேற்கிறேன். சுமத்திரனை பழிவாங்குதாக நினைத்துக் கொண்டு இந்த சந்திப்பை சிறிதரன் கருதக்கூடாது. உண்மையான ஒற்றுமைக்கான 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியது போல இருக்க வேண்டும்.கஜேந்திரகுமாரும் கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும். அடிப்படைக் கொள்கைகளில் உநறுதியாக இருந்து கொண்டு ஏனைய விடயங்களில் நெகிழ்வுப் போக்கைக காண்பிக்க வேண்டும்.1 point- 2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இதில் எழுதி ஒரு பயனுமில்லையானாலும், உங்கள் புலத்தமிழர் ஒற்றுமை பற்றிய வியாக்கியானம் கொஞ்சம் திசை மாறிப் போகும் போது சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த தீவிரமான புலிகளின் ஆதரவாளர்களை விலக்கி விட்டு புலத்தில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மையாக இருக்கலாம் (செய்வது என்ன, பேசினாலே குடும்பம், பிள்ளை குட்டிகளை இழுத்துப் பேசி நமக்கேன் வம்பு என பேசாமல் விலகிப் போக வைத்து விடுவர்😂). இத்தகைய தீவிரவாத போக்கு என்பது புலிகள் மீதான அதீத பற்றினால் அன்றி ஒரு சுய இருத்தல் பற்றிய பயத்தினால் வருகிறது என ஐலண்ட் சொல்வது என் அனுபவத்தில் சரியாகப் படுகிறது. இதனால் தான் தீவிர தமிழ் தேசியர்கள் என்றாலே பலர் விலகிச் செல்கிறார்கள். இப்படியானவர்களை வைத்துக் கொண்டு ஒரு சுயாட்சி கிடைத்தால் கூட, அந்த ஆட்சி சுதந்திரம் பெற்ற எரித்திரியாவில் தற்போது நடக்கும் கடும்போக்கு/பிற்போக்கு வாத ஆட்சியாகத் தான் இருக்கும் என்ற அச்சமும் எனக்கு தனிப்பட இருக்கிறது. எனவே, என்னைப் பொறுத்தவரை தீவிர தமிழ் தேசியர்களின் பங்கு தாயக அரசியலிலும் சரி, புலத் தமிழர் பரப்பிலும் சரி குறைக்கப் பட வேண்டும். இது கறள் தீர்க்கும் மன நிலை அல்ல, எதிர்காலம் பற்றிய அச்சமும், அதை இப்பவே களையும் முயற்சியும் என்று தான் நான் கருதுகிறேன்.1 point- 2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
மீள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.1 point- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
10 ஆவது பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசியவாதிகளின் கன்னியுரை நம்பிக்கை தருவதாக உள்ளது...அனுரா புகழ்ந்து நேசக் கரம் நீட்டியுள்ளனர் ...மாகாணசபையுடன் வருவார்களா என இருந்து பார்ப்போம்...1 point- பதியம்
1 point👍............... பயன்படுத்திய தேயிலையை ஒரு சின்ன மலையாக வீட்டில் குவித்து வைத்திருக்கின்றார் பொறுப்பாளர்...... இப்பொழுது தான் காரணம் புரிகின்றது...............🤣.1 point- நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
இந்த முறையும் வழமை போல் ஜேர்மனிதான் மூன்றாம் உலக போரை சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் போல் தெரிகின்றது. அப்படி ஆரம்பித்தால் இனிமேல் ஜேர்மனி உலக வரைபடத்தில் இருக்காது. அல்லது புல் பூண்டுகள் முளைக்காத பாலைவனமாக மாறும்.1 point- நிலத்தடியில் மூன்று மாதம் தங்க வைக்கப்படும் தொழிலாளர்கள் - தங்கச் சுரங்கத்தை கட்டுப்படுத்தும் இரக்கமற்ற கும்பல்கள்
நான் ஒரு முறை நிலத்தடி தங்க சுரங்கத்திற்கு போனான் (1.2km ஆழம்) என்னால் மணித்தியாலத்திற்கு மேல் நிற்க முடியவில்லை, இவர்கள் மூன்று மாதம்????1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointதிரைப்பட பாடலாசிரியர் வாலியின் நகைச்சுவை! திரைப்பட பாடலாசிரியர் 'வாலி'யை, ஒரு சமயம் அவருடைய நண்பர் ஒருவர் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர் "டி.எஸ். ரங்கராஜன் என்ற அம்சமான உங்கள் இயற்பெயரை விடுத்து, வாலி என்று தாங்கள் பெயர் வைத்துக்கொள்ள என்ன காரணம்?" என்று கேட்டார். அதற்கு வாலி அவர்கள், "இராமாயணத்தில் வரும் வாலி எதிராளியின் பலத்தில் பாதியைப் பெற்று விடுபவன். அதேபோல நான் பார்ப்பவர்களின் அறிவில் பாதியைப் பெறவே இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன் " என்று கூறினார். உடனே அந்த அதிக பிரசங்கித்தனமான நண்பர் வாலியை மட்டம் தட்டுவதாக எண்ணி "உங்களைப் பார்த்தால் அப்படி அறிவைப் பெற்றவர் போல் தெரியவில்லையே? என்று கிண்டலாகச் சொன்னார். அதற்கு வாலி சிரித்துக் கொண்டே, "நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவே இல்லையே!" என்று மடக்கி நண்பரை திக்கு முக்காட வைத்தாரே பார்க்கலாம் !1 point - முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.