Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19122
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34974
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/07/24 in all areas

  1. ஜூலை மாதம் முன்சனுக்கு[munchan] வந்திருந்தோம் உங்களுக்கென்ன பிரச்சனை😧 என்ட அண்ணருடைய பலகாரம் நான் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுவேன்
  2. உண்மை தான் அதிலும் பழைய இரும்பு என்றால் வேற லெவல்..,🤣
  3. எனக்கு தெரிந்த சிங்கள சிற்றறிவுக்கு, யாழ், கிளிநொச்சி மாவட்ட மாதுபான அனுமதி பத்திர விபரங்களை மொழி மாற்றம் செய்துள்ளேன். இந்த விபரங்களை வெளியிடாமல் தமிழ் ஊடகங்கள் கள்ள மௌனம் காப்பதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.
  4. கொஞ்சம் காரமாக இருந்தாலும்…கஜன் மீதான எனது எதிர்பார்ப்பும் இதுதான். புலம்பெயர் புலிவால்கள் - அப்படி இப்போ ஒருவருமில்லை - எல்லாரும் அனுர பிரிகேட்🤣.
  5. ஒட்டு மொத்த தேசியம் பேசிய கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளார்கள். அதிலும் வரட்டு தமிழ் தேசியம் பேசும் சைக்கிள் கட்சி பெற்ற வாக்குகள் ஒட்டு மொத்தமாக அகில இலங்கை ரீதியாக 39894 மட்டுமே. படு தோல்வி. யாழ்பாணத்தில் சைக்கில் கும்பல் பெற்ற வாக்குகளும் மூன்றே மாதம் அரசியல் செய்த அர்சனாவின் சுயேட்சை குழு பெற்ற வாக்குகளும் கிட்ட தட்ட சமமானவையே. அதாவது சுயேட்சைக்குழு 27855. சைக்கிள் குழு 27986. சென்ற முறையை விட அரைவாசி குறைவு. விருப்புவாக்கில் கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் பெற்ற விருப்பு வாக்குகள் கிட்டத்தட்ட சமமானதே. எனவே, மக்கள் கூறிய செய்தி வரட்டு தமிழ் தேசியத்தை கைவிடுங்கள் என்பதாகும். சைக்கில் கும்பலை தோற்கடித்த மக்கள் சொல்லிய செய்தி புலம் பெயர் நாடுகளில் இருந்து சைக்கில் கும்பலை ஆதரித்த சுயநல புலிவால் கும்பல்களுக்கும் சேர்தது தான். இதன் திரு கஜேந்திரகுமார் அவர்களும் சற்றே உணர்திருக்கிறார் போலவே தெரிகிறது. அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டால் அது வரவேற்கத்தக்கதே. தனது முன்னைய அரசியலை திருத்தி அவர் சரியான பாதையில் பயணிக்கும் போது இந்த புலம்பெயர் புலிவால்கள் அவருக்கும் துரோகிப்பட்டம் சூட்டுவார்கள். ஆனால் இந்த சுயநல கும்பலை புறக்கணித்து அவர் இனியாவது சரியான பாதையில் பயணிக்க வேண்டும்.
  6. உழுற மாடு உள்ளூரிலையும் உழும் என்பதற்கிணங்க குமாரசாமியன் ஊரிலையே பஞ்சமில்லாமல் வாழ்கிறான். 😎 😂 Kumarasamy"Made in Karaveddy"
  7. ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள் விசுகர். அது எவ்வளவு நேரம். அடிசசாலும். வளைத்து கொடுக்காது உடையவும். மாட்டாது 🤣
  8. “Made in Germany“ என்றாலே… இரும்பு சாமான்களுக்கு, உலகம் எங்கும் மதிப்புத்தானே அண்ணை. 🤣
  9. தாயலாந்தைவிட வியட்னாம் பரவாயில்லைப் போல் உள்ளது . .........! 😂
  10. என்ன இருந்தாலும் உலகளாவிய இல்லத்தரசிகளின் சேமிப்பு பழக்கத்தை இந்தளவிற்கு வழிச்சு ஊத்தக்கூடாது.😂
  11. 7.0 என்றால் பெரிது தான்........... இந்த தடவையும் தப்பிவிட்டோம்............... இங்குள்ள வீடுகள் தலைக்கு மேல இடிந்து விழுந்தால் கூட தப்பி விடலாம்............... ஆனால் பரணில் வைக்கப்பட்டுள்ள பழைய சாமான்கள் உச்சந்தலையில் விழுந்தால், எதுவென்றாலும் அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியவரை இப்பவே மேலே போய் பார்க்க வேண்டி வந்துவிடும்........................🤣.
  12. அவ சும்மா அடித்து விடுகிறா உண்மையிலே அவ அங்கு வந்து இருந்தால் யாழில் உங்கள் கருத்து திரியை பார்க்காமல் போயிருக்க மாட்டா அப்படி சிலவேளை அவ வந்து இருந்தாலும் உங்களுக்கு கட்டாயம் பலகார தட்டுப்பாடு வந்து இருக்கும் .😄
  13. அவனவன் எல்லாம் கண்டபடி யோசிக்க தெய்வம் மட்டும் தான் நிறுத்தி நிதானிச்சு யோசிச்சிருக்கு...😎
  14. இருந்தால் குடைய மாட்டனா🤣. பாப்பம் @zuma போல் யாரும் சிங்களம் வாசிக்க முடிந்தவர்கள் விடயத்தை தெளிவுபடுத்தக்கூடும்.
  15. பிரான்ஸில் 5 ஆண்டுகளின் பின் திறக்கப்படும் தேவாலயம்; பல உலகத்தலைவர்கள் பங்கேற்பு Shar விளம்பரமபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சுமார் 750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த தேவாலய திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
  16. இலக்கியம் சிலப்பதிகாரம் காட்டிநிற்கும் புரட்சிச் சிந்தனைகள் - மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா - - மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா - இலக்கியம் சிலம்பின் சிறப்பு சிலப்பதிகாரத்தை ஏன் படிக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தில் அப்படி என்னதான் பொதிந்து கிடக்கிறது ! சிலப்பதிகாரத்தைவிட வேறு காப்பியங்கள் தமிழில் சிறந்து விளங்கவில்லையா ? என்றெல்லாம் எம க்குமுன்னே பல ஐயங்கள் வந்து நிற்கும் . சிலப்பதிகாரத்தைப் பற்றிய சிறப்பும் அதன் சிந்தனைகருத் துக்களும் சரியான முறையில் எம்மிடம் புகுந்துவிடுமானால் இப்படியான ஐயம் எழுவதற்கே இடமில் லாமல் போய்விடும் என்பது எனது மனக்கருத்தாகும்.தமிழில் வந்த முதல்காப்பியமாக சிலப்பதிகாரமே விளங்குகிறது. இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் , மூன்றையும் கொண்ட முதல் தமிழ் காப்பியம் என்னும் பெருமையையும் கொண்டு நிற்கிறது. சேர, சோழ, பாண்டிய, நாடுகளான முத்தமிழ் நாட்டினையும் முழுமைபெறச் செய்த காப்பியமாகவும் அமைந்திருக்கிறது.இலக்கிய உன்னதத்தை வெளிப்படுத்தும் காப்பியமாகவும் இருக்கிறது. தமிழர்களின் பன்முகப்பட்ட சமூகப் பண்பாட்டினைக் காட்டி நிற்கும் காப்பியமாகவும் திகழ்கிறது. வாழ்வியல் நெறிகள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசுமுறைகள்,நீதி நிர்வாகம், பெண்களின் சமு தாய நிலை, என்று பலவற்றைக் காட்டி நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கிறது எனலாம். இக் காப்பியத்தை புரட்சிக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சமுதாயக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், தேசியக் காப்பியம், நாடகம் காப்பியம் என்றெல்லாம் பன்முகப் பார்வையில் நின்றும் பாராட்டப்படும் நிலையும் காணப்படுகிறது. இதனால் காலத்தை வென்று நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் இருக்கி றது என்பது மறுத்துவிட முடியாத உண்மையெனலாம். இதனால் அன்றோ தேசியக்கவி பாரதி " நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் " என்று விதந்தோதி நின்றார் போலும் ! பாரதியின் வாக்கு எத்தனை வலிமையும் பெறுமதியுமானது என்பதிலிருந்தே சிலப்பின் சிறப்புப் புலனாகி நிற்கிறதல்லவா ! சிலப்பதிகாரம் தமிழ் தேசியக் காப்பி யம். சிலப்பதிகாரம் தமிழின் சொத்தாக நிற்கும் காப்பியம். சிலம்பைப் படித்தால் சிந்தனை வளரும் ! சிலம்பை நினைத்தால் பெருமிதம் நிலைக்கும் ! சிலம்பின் புதுப்பாதை நாட்டையோ , சாதியையோ, சமயத்தையோ, சிக்கலுக்குள் புகாவண்ணம் நடுநிலையினைப் பேணி க்காத்து உண்மை ஒளி விளங்கும் வகையில் சிலம்பு மலர்ந்திருக்கிறது. வேற்றுமை பாராட்டும் பாங் கினை சிலம்பு தவிர்த்தே நிற்கிறது எனலாம். சாதிகளுக்கிடையே வேறுபாடுகள் காணாது ஒத்தும் உறழ்ந்தும் செல்ல வேண்டும் என்பது சிலம்பின் புதுப்பாதை எனலாம். கவுந்தி அடிகள் சாதியையோ குலத்தையோ பாராதவராக சிலம்பில் வருகிறார். இதுவும் சிலம்பின் புதுப்பாதையினையே காட்டுகிறது. காவியங்களின் தலைவனாக பெரும்பாலும் சிலம்பின் காலத்து உலக காவியங்களில் அரசர்களே வந் திருந்த வேளை - அரசர்க்கு அடுத்த நிலையில் இருந்த வணிக குலத்தை சேர்ந்தவரை காவியத்தலை மைக்கு காட்டியதும் சிலம்பின் புதுப்பாதை எனலாம். மூன்றாம் வருணமாகக் கொள்ளப்படும் வணிக குலத்து பெண்ணான கண்ணகியை தெய்வமாக்கி எல்லா வருணத்தாருமே வணங்கும் நிலையினை சிலம்பு உருவாக்கி நிற்பதும் சிலம்பின் புதுப்பாதை என்று எண்ண முடிகிறது அல்லவா ! பத்தினித் தெய்வமாக கண்ணகியை வழிபடும் நிலையினை உருவாக்கியமை சங்ககால இலக்கிய மரபில்வந்த கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியே எனலாம்.இதனை நோக்கும் பொழுது கண்ணகியை தேசிய அளவில் தெய்வமாக உருவாக்கும் புதுப்பாதை சிலம்பினால் வருகிறது என்றே எண்ண முடிகிறது.சேர சோழ பாண்டிய நாடுகளுடன் நின்றுவிடாது இலங்கையிலும் இடம்பெறும் நிலைக்கு தேசிய நிலையா க்கிய புதுமை சிலம்பின் புதுமை என்றுதானே பார்க்க முடியும். சுவாமி விபுலானநந்த அடிகளாரின் யாழ் நூல் தோற்றத்துக்கு பாதை அமைத்ததும் சிலம்பன்றோ ! தமிழிசை இயக்கும் உருவாவதற்கு பாதை வகுத்ததும் சிலம்பேயாகும். சிலம்புக்கு முற்பட்ட காலத்துப் புலவர்கள் கையாளாத பல புதிய கவிதை வடிவங்களை சிலம்பில் இடம்பெறச் செய்து இளங்கோ புதுப்பாதையை வருங்காலத்து காட்டி நிற்கிறார்.அகவலும் வெண்பா வுமே மிகுதியாகக் காணப்பட்டது பழைய இலக்கியத்தில் எனலாம். பிற்காலத்தில் தாழிசை, துறை , விருத்தம் என்னும் பெயரில் செய்யுள் இனங்கள் வளர்ந்ததைக் காண்கிறோம்.இவ்வாறான புதிய வடிவ ங்கள் வருவதற்கு வழிகாட்டிய பெருமையும் சிலம்புக்கே உரித்தாகிவிடுகிறது எனலாம். அக்காலத்தில் வழக்கிலிருந்த நாட்டுப் பாடல்களை உள்வாங்கியே கானல்வரிப் பாடல்களும், ஆய்ச்சியர் குரவைப் பாடல்களும் சிலம்பில் வரப்பண்ணியதும் இளங்கோவின் புதுப்பாதைதனையே காட்டுகிறது என்றும் கொள்ள முடிகிறது.அக்கால நாட்டுப் பாடல்களை மனமிருத்தி அதனூடாகப் பெற்றவற்றை புதிய செய் யுள் வடிவங்கள் ஆக்குவதற்கு முயன்று அதனை காப்பியத்திலும் இடம்பெறும் வண்ணம் செய்தமை நல்லவொரு புதுப்பாதை என்றே எண்ண முடிகிறது எனலாம். இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு இளங்கோ அடிகள் செய்திருக்கும் தொண்டு மிகவும் பெறுமதி மிக்கதென்றே கொள்ளல் வேண்டும். சங்கால இலக்கிய மரபில் காதலும் வீரமும் அறமும் காட்டப்பட்டிருந்தாலும் கதையாக தொடராக இலக்கியத்தில் இடம்பெறவில்லை என்றே கொள்ள முடிகிறது. சங்ககாலத்தை அண்டிய காலத்தில் முதன் முதலாக ஒரு தொடராக ஒரு கதையினை வெளியிட்டு அதில் காதல், வீரம், அறம் , அத்தனையும் காட்டி தமிழ் இலக்கியத்துக்கே புதுப்பாதை காட்டிய வகையிலும் சிலம்பினை காட்டி நிற்கி றார் இளங்கோ அடிகள் என்பதை எவருமே மறுத்துவிட முடியாது என்பது உண்மை எனலாம். தமிழ் இலக்கியத்துக்கே சிலம்பு புதுப்பாதையாக அமைந்தமையால் பின்னர் காப்பியங்கள் பல வரவும் வாய் த்தது என்பதும் மனங்கொள்ளத்தக்கதெனலாம்.பின்னர் வந்த காப்பியங்கள் வழிநூல் வழிவந்து நூலாகி நிற்கின்றன. ஆனால் வழி நூல்கள் எதுவும் இன்றி தானே மூலநூலாய் தமிழ் இலக்கியப் பாதையில் புதுப்பாதை காட்டி அதன்வழி வந்தபெருமையினை சிலம்பதிகாரம் ஒன்றே பெற்று கொள் கிறது என்பதே சிலம்பின் சிறப்பும் பெருமையும் என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை என்பதையே காட்டி நிற்கிறது எனலாம். அறநூல் என்று சிறப்பிக்கும் நூல்களும் ஏனைய நூல்களும் ஆரம்பிக்கும் வேளை கடவுள் துதியி னைப் பாடியே தொடங்கும் மரபே காணப்பட்ட வேளை அவற்றை யெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இயற்கையினைப் பாடியே சிலம்பினை தொடக்கி காவிய மரபில் புதுப்பாதையக் காட்டி நிற்கிறார் இளங்கோ அடிகள் எனலாம். இப்பாதை தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் மாறுபட்ட வேறுபட்ட புதுப் பாதை என்று அறிஞர்களே வியந்து நிற்கிறார்கள். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று இயற்கையினையே பாடி அதனையே மங்கல வாழ்த்தாக்கி சிலம்பினை ஆரம்பிக்கின்றார் இளங்கோ அடிகள். இஃது முற்றிலும் வித்தியாசமான புதுப்பாதை அல்லவா ! பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதுதான் இறையாகும்.ஆகவே அந்த இறையினை இயற்கையில் கண்டு தனது காவியத்தை புதுப்பாதையில் தொடக்கியமை இளங்கோவின் மதி நுட்பத்தை புலப்படுத்தி நிற்கிற தல்லவா ! சிலம்பின் புரட்சி அவதாரங்களையும் அரசர்களையும் ஆளும் வர்க்கத்தையும் கதைக்கு தலைமைதாங்கும் வண்ணமே காப்பியங்கள் வந்திருக்கின்றன. சாதாரண குடிமக்கள் தலைமை என்பது நினைத்துமே பார்க்கமுடியா மரபில் அதனை உடைத்து அவதாரமோ உயர்நிலையோ அல்லாத அதுவும் ஒரு சாதாரண குடிமகளை கதைக்கு தலைமைதாங்க வைத்து மாபெரும் காப்பியத்தை வடிவமைத்த இளங்கோ அடிகளாரின் புரட் சியானது தமிழ் இலக்கியத்தில் நடந்த மிகப்பெரிய புரட்சி என்றே கூறலாம். காப்பியத்தின் பெயரே புரட்சியாகவே மலர்கிறது. கதையின் நாயகியின் பெயராலோ அல்லது நாயகன் பெயராலோ அமையாது ஒரு அணியின் பெயரால் அமையப்பெற்றிருப்பது அடிகளாரின் மற்றொரு புரட்சியாகி நிற்கிறது.காப்பியத்தின் நாயகியான கண்ணகி கற்புத் தெய்வமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். அந்தத் தெய்வத்தின் திருவடியைக் காண்பதுதான் மிக மிக பொருத்தமாகும். " கண்ணகி காப்பியம் " என்று பெயரிட்டால் அவளது திருமேனிதான் நினைவில் வந்து நிற்கும் என்னும் அச்ச உணர்வினால் அவள் திருவடியை அலங்கரிக்கும் அணியான சிலம்பின் பெயரை வைத்து அவளின் திருவடி ஒன்றே எல்லோர் நெஞ்சிலும் பதியவேண்டும் என்ற புரட்சிகரமான சிந்தனையினாலேதான் இளங்கோ வடிகள் " சிலப்பதிகாரம் " என்னும் பெயரையே சூட்டி இருக்கிறார். இது காப்பிய வரலாற்றில் எண்ணியே பார்க்கமுடியாப் புரட்சி என்று அறிஞர்கள் விதந்து நிற்கிறார்கள். மக்களின் உள்ளங்களை அறிந்தவர் இளங்கோவடிகள். இவருக்கு முன் இருந்த புலவர்கள் வழியில் செல்லாது அவர்கள் தொடாதவற்றை அவர்களால் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஆடல் பாடல் களை ஆசையுடன் நோக்கினார். மக்களின் வாழ்வில் பாடப்பட்ட படல்களைப் பற்றியோ அவர்களின் கூத்து வடிவங்களையோ சங்கநூல்களில் கண்டறியமுடியாதிருக்கிறது.ஆனால் இளங்கோவடிகள் அந்தப் பாடல்களின் உரிமையானவர்களின் கலைகளை மதித்தார். அவற்றுக்கு எழுத்து வடிவம் கொடு த்து தனது காப்பியத்தில் இடம்பெறுமாறு செய்தார். கதையில் எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அங்கெல்லாம் இப்பாடல்கள் வைத்து அழகு படுத்தினார். கடற்கரையில் செம்படவர் பாடும் பாடும் காதல் பாடல்கள், காவிரியாற்றினைப்பற்றி மக்கள் பாடி வந்த பாடல்கள், வேடர்கள் காளியை வழிபட்டுப் பாடும் பாடல்கள், குரவைப் பாடல்கள், திருமாலை, முருகனை, வழிபாடாற்றும் பாடல்கள், அம்மானைப் பாடல்கள், நெல்குற்றும் பாடல்கள், ஊஞ்சலாடும்போது பாடும் பாடல்கள், எல்லாவற்றையும் உள்வாங்கி அதன்வழியிலே செய்யுள்களை யாத்து அந் தநாட்டு மக்களே வாயாலே பாடப்படுவதாக காப்பியத்தில் அமைத்து காவிய வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இளங்கோவடிகள் எனலாம். இப்புரட்சியால் பழங்கால நாட்டுப்புற வடிவங்களை நாம் இன்று கண்டுகொள்ளுவதற்கு சிலம்புதான் ஆதாரவிளங்கின்றது எனலாம். மூன்று நாடு , மூன்று அரசர் , மூன்று கருத்து , மூன்று காண்டம், மூன்று தமிழ் , என்று காட்டிய இளங்கோவடிகள் மூன்று பெண்களைக் காட்டி பண்டையகால கற்பொழுக்கத்தை சிலம்பில் காட்டி யமையும் அவரின் ஒரு புரட்சி என்றே கொள்ளமுடிகிறது. " வாயிலோயே வாயிலோயே அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே " என்றும் " தேரா மன்னா செப்புவது உடையேன் " என்றும் கண்ணகி என்னும் பெண்ணை துணிவுடன் பேசவைத்து ஒரு நாட்டின் அரசனையே எதிர்கொள்ளும் புரட்சியை இளங்கோவடிகள் சிலம்பில் காட்டி நிற்கிறார். பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு மன்ன னையே குற்றவாளியாக்கி அதனால் மன்னனும் இறந்து வீழ அதனைப்பார்த்த அரசியும் அவ்விடத்தே உயிர் துறந்து தனது கற்பின் திண்மையைக் காட்டி விடுகிறாள். இதைப்பார்த்த கண்ணகி பாண்டியன் தேவியின் கற்புக்கு தனது கற்பு குறைந்தது அன்று எனக்காட்டும் முகமாக " பட்டாங்கு யானும்ஓர் பத்தினியே ஆமாகில் " என்று கண்ணகியை உச்சத்துக்கு கொண்டுபோய் மதுரையை எரிப்பதற்கு ஆணையிடுவது கூட இளங் கோவின் நல்லதோர் உத்தியும் ஒரு புரட்சிச் சிந்தனை எனலலாம். கற்புடை பெண்கள் " பெய் என்றால் மழையும் பெய்யும் " என்னும் வள்ளுவத்தின் சிந்தனை இங்கு கண்ணகியின் வாயிலிருந்து வருகின்ற "எரி " என்னும் சொல்லுக்கு வலுவூட்டி நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதே. பாடியதில் புரட்சி. பாத்திரங்கள் படைத்ததில் புரட்சி. கருத்துக்களை முன் கொண்டுவந்து வைத்ததில் புரட்சி. தொடங்கியதில் புரட்சி. குழந்தை இல்லாக் காப்பியமாக சிலம்பினைச் செய்ததும் பெரும் புரட்சி என்றே எடுத்துக் கொள்ள வேண்டியும் இருக்கிறது.இவ்வாறு சிலம்பு முழுவதுமே இளங்கோவடிகளின் புரட்சிச் சிந்தனைகளே நிறைந்து பொலிவினை வழங்கி சிலம்பினை உயர்வாக்கி இருக்கிறது எனலாம். எங்களின் சொத்து முத்தமிழும் விரைவிவர எங்களின் தமிழ் சொத்தாக விளங்குவது சிலப்பதிகாரம். கோவலன் ஒரு கோ - அல்லன். அவன் ஒருசாதாரண குடிமகன். கண்ணகியும் கோ- மகள் அல்ல. அவளும் குடிமகளே. குடிமகனையும் குடிமகளையும் சிலப்பின் தலைவன் தலைவியாக்கி முடிமக்கள் காப்பியம் அல்ல குடி மக்கள் காப்பியம் என்று தமிழில் சிலம்பதிகாரம் அமையப் பெற்றிருப்பதே எங்களுக்கு பெரும் பெரு மையல்லவா ? இதனை எங்கள் சொத்து என்பது மிக மிக பெருமிதமும் அல்லவா ! கம்பனையும் வள் ளுவனையும் வியந்த பாரதி நிறைவில் “ இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை " என்று வியந்து நிற்பதும் எமது தமிழுக்கு வாய்த்த பெருமை அல்லவா! தேசிய ஒற்றுமைக்கு சிலப்பதிகாரம் வழிவகுதிருப்பதும் எங்கள் மொழிக்கு வாய்த்த பெருமை அல்லவா? அரசியல் பிழை த்தால் அறம் நிச்சயம் பதில் தந்தே தீரும்.கற்பு என்பது சமூகத்தின் கட்டாயம். கற்புடன் வாழும் பெண் கள் போற்றப்படுவர்.அவர்கள் வணங்கும் நிலையிலும் உயருவார்கள் என்பதை எல்லாம் சொல்லி நிற்கும் சிலம்பு எங்கள் மொழியின் பெருஞ் சொத்து அல்லவா ! நீதி தவறினால் உயிர்வாழ்தல் கூடாது என்பது எப்பொழுதும் எல்லா நாட்டுக்கும் பொதுவன்றோ ! அதைக்காட்டி நிற்கும் சிலம்பு எமக்கு வாய்த்த பெரும் சொத்தல்லவா ! பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்; தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின் பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்; ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்; செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்; பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்; அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்; பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்; பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்; அற மனை காமின்; அல்லவை கடிமின்; கள்ளும், களவும், காமமும், பொய்யும், வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின் இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது; செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்- மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என் என்று பண்பாட்டின் பல பண்பட்ட தன்மைகளையெல்லாம் எடுத்துரைத்து அறத்தையும் நீதியையும் அனைவரது அகங்களிலும் அமர்ந்துவிடும் வண்ணம் இலக்கியச் சுவையினை அதனூடாக ஊட்டி எமக்கு எமது மொழியில் வாய்த்திருக்கும் மிகப்பெரிய சொத்தாக இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் விளங்குகிறது. தமிழுக்குக் கிடைத்த சிலம்பதிகாரம் எனும் சொத்தினை கண்ணுங்கருத்துமாய் காப்ப தும் அதன் பெருமகளை உண்மைகளை எடுத்து விளக்குவதும் அதனை உலகெங்கும் பரப்புவதும் ஒவ் வொரு தமிழரதும் தலையாய பொறுப்பாகும். jeyaramiyer@yahoo.com.au https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-56/8843-2024-12-07-15-52-43?fbclid=IwY2xjawHBauJleHRuA2FlbQIxMAABHeItyH2x9RkG26Uyv-md1KkRfqVb4xpRnnnnhmSQavJ4CNCAJ3eS-sRtFw_aem_cH71Dl6UHuvD7O37Ad2KvA
  17. பகிடி என்னவென்றால் அமெரிக்காவுக்கு ஒன்றுமே தெரியாதாம். அனால். Assad சிரியாவை ஒப்பீட்டளவில், எல்லா இனத்துக்கும் இடம் கொடுத்து வைத்து இருந்த ஆட்சி. சமயத்தால் அரசுக்கு மதம் பிடிப்பதை தடுத்து, கட்டி வைத்து இருந்த ஆட்சி. வரப்போவது மேற்கு நல்லது என்று சொல்லும், மதத்தால், இனத்தால் மதம் பிடித்த ஆட்சி. Assad இலும் கொடுமையானதாக இருக்கும்.
  18. ஓ.............. அந்த அரிசியா................ அதை இணையத்தில் மட்டுமே வாங்கி, சமூக ஊடகங்களில் மட்டுமே சமைத்துச் சாப்பிடமுடியும்.................................🤣.
  19. குமார் குணரெட்ணம் தெமிளு...என்ன தான் சிறிலங்கன் எண்டு புலம்பினாலும் இந்த விடயத்தில் அனுராவும் விட்டு கொடுக்க மாட்டார் உடனே இனவாதம் பேசி ஆட்சியை தக்க வைப்பார்... சைனாக்காரன் நேரடியாக பருத்திதுறையில் இறக்க பார்க்கிறான் போல...
  20. மட்டகளப்பு தேர்தல் மாவட்டம் பல்லின மாவட்டம் அல்ல. இங்கே ஒரு சிங்கள எம்பி கூட வரமுடியாது. 4 தமிழர் ஒரு முஸ்லிம் அல்லது 3 தமிழர் 2 முஸ்லிம். அம்பாறை, சிங்கள பெரும்பான்மை மாவட்டம். திருகோணமலை மட்டுமே பல்லின மாவட்டம். உண்மையில் இங்கேயும் 2/4 சிங்கள எம்பி வரவேதான் வாய்ப்பு. இந்த முறை என்பிபி க்கு விழுந்த சிங்கள வாக்குகள் + தமிழ் வாக்குகளால் என் பி பி யில் ஹேமசந்திர வென்றுள்ளார். கந்தளாய்யை கந்தளே, குமரன் கடவு கோமரங்கடவல, சேருவில்லு சேருவல என திட்டமிட்டு 76 ஆண்டுகளில் குடியேற்றியதால் மாற்றி அமைக்கப்பட்ட மாவட்டம் திருகோணமலை.
  21. இந்தியாவிலிருந்து பம்பாய் வெங்காயம் இறக்குமதி செய்ய கூடாது என போரடியவர்கள் ஜெ.வி.பி யினர் அவர்களிடமே போய் இறக்குமதி செய் எண்டு கேட்கினம்....
  22. உங்கள் வாந்திக்கான எச்சரிக்கை அது. வாந்தி எடுக்காமல் உங்களால் எழுத முடியாது. எனவே மீண்டும் மீண்டும்.....
  23. மன்னிப்பு கேட்டா அவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை..சிங்கள புத்திஜீவிகள்/மற்றும் ஜெ.வி.பி அரசியல்வாதிகள் யாழ் நூலக எரிப்பை பற்றி ,மேடைக்கு மேடை.வீட்டுக்கு வீடு பேச தாயார் ஆனால் இனக்கலவரங்கள்,மற்றும் இனவிடுதலைக்காக போராடியவர்களின் உயிர் இழப்பை பற்றி பேச தயார் இல்லை ..அதை பகிரங்கமாக கூறவும் மாட்டார்கள் ...சில சமயம் தமிழ் இனத்தை முற்றாக அந்த மண்ணில் இருந்து துடைத்தெரிந்த பின்பு ,மீண்டும் தமிழ் இனம் அந்த மண்ணில்(வடக்கு கிழக்கில்) உயிர்ப்புடன் செயல் படாத நிலை ஏற்பட்ட பின்பு சிங்கள ஜனதாவின் முன்றாம் நாங்காம் தலை முறை சிங்களத்தில் மன்னிப்பு கேட்பார்கள் ....அதை அடையாளங்களை தொலைத்த தமிழர்கள் சிங்கள மொழியில் புரிந்து கொள்வார்கள்.... வெளிநாடுகளின் பூர்வீக குடிகளிடம் ஆக்கிரமிப்பாளர்களின் தற்போதைய த‌லைமுறையினர் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்பது போல...
  24. 'எல் போர்ட்' அணி என்று ரணில் சொன்னதை இப்பொழுது பலரும் சுட்டிக் காட்டப்போகின்றனர்.............. அரிசியை இறக்குகின்றோம் என்றார்கள், நான்கு மணித்தியாலங்களில் சுங்கச் சோதனையை முடித்து விடுவோம் என்றார்கள்................... கடைசியில் அரிசிக் கப்பல்கள் இப்ப எங்கே நிற்குது என்றே தெரியவில்லை...........🫣. நன்றாகப் பாடத்தை படித்து பாடமாக்கிக் கொண்டு வரும் மாணவர்கள், பரீட்சையில் 'out of syllabus ' கேள்விகள் வந்தால் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடுவார்கள், அது போலவே இது..............😜.
  25. பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தொடர்பில் ஊடக அறிக்கையிடலில் கவனம் தேவை. இவை சித்திரக் கதைகள் அல்ல, ஆனால் வாழ்க்கை! - பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக 1938 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுங்கள் - பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் "பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற வாசகம் தாங்கிய கைப்பட்டி பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அணிவிப்பு பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாள் உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (டிச. 06) பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பெண் பணியாளர்கள் செம்மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தனர். முதலாவதாக "பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” எனும் வாசகம் தங்கிய கைப்பட்டி குழுக்களில் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர உள்ளிட்ட பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றிய அங்கத்தவர்களால் கௌரவ சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க ஆகியோருக்கும் இந்த கைப்பட்டி அணிவிக்கப்பட்டது. இதன்போது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். அதனையடுத்து, "பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” எனும் வாசகம் தங்கிய கைப்பட்டி பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, சபை முதல்வர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) நலிந்த ஜயதிஸ்ஸ, பிரதி சபாநாயகர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரிஸ்வி சாலி ஆகியோருக்கும் அணிவிக்கப்பட்டது. அத்துடன், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கைப்பட்டி மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழித்தல் மற்றும் பாலின அடிப்படையிலான சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலான பொது உறுதிமொழி அடங்கிய பத்திரமும் இங்கு வழங்கப்பட்டது. அதனையடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதமர் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய குறிப்பிடுகையில், வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தொடர்பான செய்திகள் சித்திரக்கதைகள் அல்ல என்றும் , வாழ்க்கை தொடர்பான விடயங்கள் என்பதால், அவை தொடர்பான ஊடக அறிக்கையிடல்களில் கவனம் தேவை எனவும் தெரிவித்தார். பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் அறியாதவர்களால் அல்ல என்றும் மிகவும் நெருக்கமானவர்களால் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் குறிப்பிடுகையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக 1938 எனும் இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவித்தார். அவ்வாறான வன்முறைகள் தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பெண்கள் மீதான கணினி ஊடாக மேற்கொள்ளும் குற்றங்கள் தொடர்பின் கடினமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு பாராளுமன்றத்தில் முன்னுதாரணமாக பணியாற்றுவது பொறுப்பானது எனவும், நாட்டில் சட்டம் இயற்றும் பொறுப்பு காணப்படும் இடமான பாராளுமன்றத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அபிமானம், கௌரவம் நாட்டின் அனைத்துப் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் அபிமானம் மற்றும் கௌரவத்தை தீர்மானிக்கும் பிரதான இடமாகும் என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். https://www.parliament.lk/ta/news/view/4279?category=6
  26. நல்ல விடயம்! இவ்வாறான குற்றங்களைத் தடுப்பதற்காக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும்!
  27. இதைககேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இலங்கை ஒரு விவசாயநாடு.முன்பு சிறமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் இருந்த பொருளாதாரதடை காரணமாக அதிகளவான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். அரசசேவையில் இருப்போர் கூட பகுதியளவில் விவசாயம் சிறுதோட்டங்கள் போனறவற்றைச் செய்து தமக்கான உணவுத்தேவையையையும் பணத்தேவையைுயும் பூர்த்தி செய்து கொண்னர்.அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சின்ன வெங்காயம் அதிக செலவில்லாத குறகிய காலத்தில் 2-3 மதங்களில் பணத்தை ஈட்டக் கூடிய பயராக இருந்தது. மாரிப்போகம் என்றால் தண்ணீர் இறைக்க வேண்டிய தேவையும் இருக்காது.யா;ப்பாணத்தில் வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து வெங்காயத்தைக் கொளவனவு செய்தார்கள்.கார்த்திகை மாதம் அளவில் நட்டு இருதடவை புல்லுப் பிடுங்கி யூரியாவையும் 2 தடவை போட்டு விட்டால் தைை மாசிமாதமளவில் அறுவடைசெய்து உடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அன்று வெங்காயம் வசய்த தோட்டங்களில் இப்பொழது வெங்காயம்பயரிடப்படுவதில்லை. கேட்டால் வேர் அழுகல் நோய் வருவதால் மாரிப்போக் செய்ய முடியாமல் இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள். விவசாய அமைச்சு இதற்கான ஈராய்ச்சிகளைச் செய்து அதைதடுப்பதற்கான வழிமுறைகளை இலகுவான முறையில் விளங்கப்படுத்தி வெங்காயச் செய்னகயை ஊக்குவிக்க வேண்டும்.அந்தக் காலத்தில்1977 இற்கு முதல் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த இலங்கை இன்று அரிசிக்கும் வெங்காயத்திற்கும் கையேந்துகின்ற நிலமையில் இருக்கிறார்கள்.வெங்காயம் நடுவதற்கும் புல்லுப்பிடுங்குவதற்கும் அறுவடைசெய்வதற்கும் ஒரே நேரத்தில் பல 10-15 கூலிஆட்கள் தேவைப்படுகிறார்கள். இலகுவான வேலை என்பதால் பெண்களே இந்த வேலைகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்டபொழுது வேலை ஆட்கள் பிடிப்பது மிகவும் கடினம் விவசாயிகள் சொல்கிறார்கள். ஆகவே இப்படியான டீவலைகளுக்குரிய இயந்திரங்களைக் கண்டு பிடித்து அற்முகப்படுத்த வேண்டும்.
  28. நானே நானா, யாரோ தானா ........! 😂
  29. உண்மை தான் அண்ணா பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது என்பதற்காக இலங்கை ஜனாதிபதியோ பாராளுமன்ற உறுப்பினரோ பிரிட்டனில் கல்வி கற்றிருக்க வேண்டியது இல்லை. உண்மை தான் Zuma. விசில் அடிச்சான் குஞ்சுகளை குசிபடுத்துவதே அவரது செயற்பாடாக இருக்கபோகின்றது.
  30. வெற்றிலை வள்ளி கிழங்கு 65
  31. எங்கள் இடத்தில் இருந்து…. 280 கிலோ மீற்றர் தூரம்தான் München. உங்கள் அண்ணர்… @குமாரசாமி யின் இடத்தில் இருந்து 650 கிலோ மீற்றர். 😂 ஜேர்மனிக்கு முதன் முறையாக வந்தீர்களா? உங்கள் முதல் பார்வையில்… ஜேர்மனியை பற்றி மனதில் தோன்றிய அபிப்பிராயத்தை அறிய ஆவல் ரதி.
  32. பல மொழிகளை பேசி, அபிவிருத்திகளை காட்டி மக்களை ஏமாற்றுவது நீடித்து நிற்கக்கூடியதல்ல. மாறாக மக்களின் தேவைகள், இழப்புகள், பாதிப்புக்களை இனங்கண்டு மனந்திருந்தி, மன்னிப்பு கேட்டு, பரிகாரம் செய்து அந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதபடி உறுதி செய்வதே அரசின் பொறுப்பு. பேசுவதோடு கடமை முடிவதில்லை, மக்களின் நிஞாயமான ஆசைகளை வெளிகொண்டுவந்து தீர்த்து வைப்பதே மக்களின் தலைவர்களின் கடமை. அனுரா நடந்த கொடுமைகள், அதற்கான காரணங்கள், தீர்க்கப்படவேண்டிய முறைகளை தொட்டுச்சென்றிருக்கிறார். அவரின் சொந்த அனுபவங்கள் அதை புரிந்துகொள்ள உதவியிருக்கின்றன. அதை அவர் அரசியலுக்கப்பால் செயலாற்ற முன்வரவேண்டும். அர்ச்சுனா சிங்கள மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முன்வரவேண்டும். அப்போதான் மாற்றம் வரும். வெறும் பாராளுமன்றத்திற்குள் வீர வசனம் பேசுவதால் மாற்றம் ஏற்படவோ, மக்கள் மத்தியில் நல்லிணக்கமோ வரப்போவதில்லை. அனுரா செய்வார். ஆனால் அவரோடு கூட இருப்பவர்கள், இனவாதத்தை வளர்த்து அரசியல் ருசி கணடவர்கள் அவரை அனுமதிக்கப்போவதில்லை. மக்களே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.
  33. ஓம் தகப்பன் பண்டாவுக்கு சிங்களம் பெரிதாக எழுத வாசிக்க தெரியாதாம். புனித தோமையர், பின் ஆக்ஸ்போர்ட், அதன் பின் இன்னர் டெம்பிளில் பாரிஸ்டர் என சிங்களத்தில் சொல்லும் களு சுட்த்தா (கறுப்பு-வெள்ளைகாரன்) அவர். ஆக்ஸ்போர்ட்டின் முதல் ஆசிய மாணவர் சங்க செயலாளர் என நினைக்கிறேன். அதே போல் அத்துலத் முதலி முதலாவது ஆசிய மாணவர் சங்க தலைவர் என நினைக்கிறேன். அனுர கொஞ்சம் மந்த புத்திதான். அஜால் குஜாலிலுல் ஆர்வம் அதிகம். அவர் ஒரு கட்சிக்கு போனால் அது சிலமாதங்களில் எதிர்கட்சியாகும் யோகமும் இருந்தது🤣. தொண்டா, அஷ்ரப், டக்லஸ் அநேக காலம் ஆளும்கட்சி. அதேபோல் அனுர அநேக காலம் எதிர்கட்சி🤣. 78க்கு பின் சிறிமாவின் வாக்குரிமை பறிக்கப்பட்ட பின் சு க வை முழுவதும் அழிந்து விடாமல் காப்பாற்றினார். சந்திரிகா விஜே குமாரதுங்கவை முடித்து, குடும்பம், கட்சி சகலதையும் விட்டு வெளியேறிய பின் தாய்க்கும், கட்சிக்கும் பலமாக இருந்தார். குமாரதுங்க, பிரேமதாச மறைய 1993 இல் சந்திரிக்கா நாடு திரும்பி அரசியலில் இறங்கினார். சிறிமா, சந்திரிகாவை ஏற்க, சில காலத்தில் அனுர யூ என்பிபக்கம் தாவினார். பின்னர் மாறி மாறி தாவினார். தந்தையின் கட்சியை, ஆட்சியை அவருக்கு விசுவாசமான அடிப்பொடியாக இருந்த டி ஏ ராஜபக்சவின் மகன்கள் கைப்பறிய காட்சியையும் கண்டு கண்மூடினார். ஆனால் கடைசிவரை மகிந்த இவரை “லொக்கா” (பெரியவர்) என்றே அழைத்தார்.
  34. நீங்கள் சிரித்தாலும், உங்களின் மனக்கவலை புரிகின்றது, விசுகு ஐயா. அதை நீங்கள் எழுதியும் இருக்கின்றீர்கள். உங்களைப் போலவே இங்கு ஒரு அண்ணன் இருக்கின்றார். 'உன்னட்ட நான் இப்ப விளக்கம் கேட்கல்ல, நீ இதை இப்ப செய்வியோ அல்லது மாட்டியோ..............' என்று சொல்லி இடைக்கிடை ஏதாவது செய்யச் சொல்லிக் கேட்பார்.........
  35. இப்படி எல்லாம் நீங்கள் ஆரூடம் கூறப்படாது. அனுரவுக்கு ஒரு நாலு வருடம் கொடுத்தால் என்ன குறைந்தா போய் விடுவீர்கள்? மேலும்…. சிங்களவர் எப்போதாவது தமிழர்களை ஒதுக்கி இருக்கிறார்களா, இப்போ ஒதுக்க? எப்போதும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என பாராது - தகுதி அடிப்படையில் பதவி வழங்கும் மனு நீதிச் சோழர்கள் அல்லவா அவர்கள்? நீங்கள் ஏன் இப்படி இனவாதமாக எழுதுகிறீர்கள்? இப்போ இதை நாம் (கருணா, பிள்ளையான், அவர்களின் அடிப்பொடிகள்) எப்படி பயன்படுத்துவோம் என்பதை இருந்து பாருங்கள்👇. நாம் இனி எப்படி எழுதுவோம் என்றால்…யாழ்பாணத்தவர்/ வடக்கு மக்கள் கெட்டிகாரர் என் பி பிக்கு போட்டு தப்பி கொண்டார்கள், ஆனால் கிழக்கு மக்கள் ஒட்டு மொத்தமாக தமிழரசுக்கு போட்டது முஸ்லிம்களுக்கு கிழக்கில் முதன்மை நிலையை உருவாக்கி விட்டது. இந்த ஆபத்தை தவிர்க்க அடுத்த முறை கிழக்கு மக்கள் பிள்ளையான் கருணாவுக்கு போட வேண்டும். எப்படி இருக்கு இந்த தில்லாலங்கடி அரசியல்?
  36. இவர் குஜராத் மாநிலம் தஹேகம் எனும் பகுதியைச் சேர்ந்த 49 வயதான சுரேஷ். பல தடைகளுக்கு எதிராகப் போராடி, தனக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனம் ஒன்றை இவர் வடிவமைத்திருக்கிறார். இந்த வாகனத்தை வடிவமைக்க சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் சுரேஷ் செலவழித்துள்ளார். இதில் தான் அக்கிராமத்தில் உள்ள தனது சிறிய கடைக்கு அவர் செல்கிறார். குறைவான உயரத்துடன் வாழ்வது எளிதானது அல்ல என்கிறார் அவர். எல்லா சவால்களையும் கடந்து சுரேஷ் நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த வாகனத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்வதன் மூலம் அந்த நிறைவை உணர்கிறார் சுரேஷ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  37. 1. மேற்கு நாடுகளில் வீதியோர சாராய கடைகள் ரொம்ப சாதாரணம் என்பது உண்மைதான். யூகேயில் தமிழ் வியாபாரிகளில், 90% க்கு மேல் கடை வைத்திருப்போர்தான். இந்த கடைகளில் 90% க்குமேல் off licence எனும் சாராயக்கடைகாரார்தான். அதாவது வாங்கி வீட்டில் போய் குடிப்பவருக்கு விற்பவர்கள். கடையில் வைத்து குடிக்க அனுமதிக்க கூடாது. சாராயத்தை விட கெடுதலான சிகெரெட்டையும் கிட்டதட்ட 100% தமிழர் கடைகளில் விற்பார்கள். 2. நீங்கள் சொன்னது போல் கசிப்பு என்று பாம்பு பல்லி பட்டரியை காய்சி குடிச்சு சாகாமல் - இதை குடிச்சு கொஞ்சம் லேட்டாக சாகலாம்தான். 3. மேலே உள்ள காரணங்கள் ஊரிலும் பார் வைப்பது ஏன் கூடாது என சிந்திக்க வைக்கலாம். ஆனால்… 4. ஊரில் இங்கே போல் அளவாக குடிக்கும் கலாச்சாரம் இல்லை (இதிலும் யூகே, ஐரோப்பிய நாடுகளை விட மோசம்). ஊரில் குடி என்றால், வெறிக்க வெறிக்க குடித்து விட்டு, மனுசியை போட்டு அடிப்பது, குடிக்கு அடிமையாகி பிள்ளைகளை நடுத்தெருவில் விடுவது என்பதே குடிமக்கள் கலாச்சாரம் (அநேகர்). ஆகவே டீச்ச்ண்டாக குடியை அணுகாத ஒரு இடத்தில் கண்டமாதிரி கடையை திறப்பது ஆபத்தே. 5. போதைக்கு தமிழ் இளஞர்களை அடிமைபடுத்தும் ஒரு நூதன யுத்தம் எம்மேல் திணிக்கப்படுவதாக பலர் உணர்கிறனர். இதற்கு குறைந்தது சந்தர்ப சாட்சியமாவது உள்ளது, இந்நிலையில் - போதையை எதிர்த்து வேலை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே பார் திறக்க உதவி செய்வது - மிக மோசமான வேலை. 6. தலைவரின் படத்தை பேஸ்புக்கில் போட்டாலே கதவை தட்டும் பொலிஸ், நிச்சயம் கசிப்பை கட்டுப்படுத்த முடியும். 7. நான் மது ஒழிப்பு ஆதரவாளன் அல்ல. அது முடியாதவிடயம். ஆனால் தேவையில்லாமல் மது பாவனையை கூட்டும் வேலைகளை அரசியல் தலைவர்கள் செய்ய கூடாது. அது வியாபாரிகளின் வேலை.
  38. செபஸ்டியான் சைமன் எனும் சீமான் தமிழ் நாட்டுக்கு தேவை.
  39. மிக சரியான பார்வை. மாவாட்டும் சபை….மன்னிக்கவும் மாவட்ட சபைதான் கிடைக்கப்போகிறது. அதையே டில்வின் போன்றோர் எதிர்க்க எதிர்க்க, மீட்பர் அனுர பிரான் பெரும் பிரயத்தனப்பட்டு வழங்கினார் என முடிப்பார்கள். எங்க பிரிகேட்டுகளும்…மாவட்டம் தந்த மஹா பிரபு என அனுர காலில் விழுந்து பிரளுவார்கள். தேசிய இனம் என்பதோ, காணி உரிமை என்பதோ எவரும் கேட்காதபடி, ஒரே இலங்கையர் கோசம் காதை பிளக்கும். இப்படி எம்மை மட்டகளப்பு, யாழ்பாணம் தேர்தல் தொகுதிக்குள் அடக்கிய பின், குடியேற்றம் அரச, தனியார் முறைகளில் துரிதப்படுத்த பட்டு, இந்த மாவட்டங்களுக்குள் நாம் முடக்கப்படுவோம். யாரும் எதிர்த்து கேட்டால், இனவாதி, பிரதேசவாதி, Xenophobe .
  40. பிலாக்காய் பிஞ்சின் துவையல் நிக்குது நெஞ்சில் ........! 👍
  41. எனது அவதானிப்புகள் 1. அருச்சுனா பேசியதில் எந்த வித பிழையையும் என்னால் காண முடியவில்லை. எழுதிய உரை மிக நேர்த்தியாகவே உள்ளது. 2. அதிகாரப்கிர்வு, மாகாணசபை போன்றவற்றை பேசவில்லை. இனி வரும் காலங்களில் பேச வேண்டும். 3. பேசும் போது ஆங்கில உச்சரிப்பு ரொம்பவே டல்லடிக்கிறது. ஆனால் உரையை அவரே எழுதி இருப்பார் போலவே உள்ளது. எழுதிய உரையில் இலக்கண பிழைகள் இல்லை, பொருத்தமான, கனதியான சொற்களை அவற்றின் பொருள் அறிந்து பொருத்தமான இடங்களில் பாவிக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் - இந்த உரையை இவரே எழுதி இருந்தால் - ஆளிடம் விசயம் இருக்கிறது, presentation இடறுகிறது என்பதை சுட்ட. யாரும் எழுதி கொடுத்து இருந்தால் தக்கவர்களிடம் ஆலோசனை எடுக்கிறார். அதுவும் நல்லதே. 4. தலைவரை பெயர்சொல்லாமலும், விஜயவீரவை பெயர் சொல்லியும் - இருவரையும் நினைவு கூர்ந்தது சிறப்பான சம்பவம். One man’s terrorist is another’s freedom fighter என்பதை மிக தெளிவாக சொல்லி உள்ளார். 5. காணாமல் போனோர் பற்றி கூறும் போது என் தந்தையே காணாமல் போனார் என்பது பர்சனல் டச். அதுவும் இலங்கை பொலிஸான அவர், 83 இல் இருந்து எப்படி காவல்துறை ஆளாகினார் என்பதையும் சொல்லி சென்றார். 6. புலம்பெயர் மக்களை உள்வாங்க வேண்டும், காணிகள் மீள கையளிக்கபட வேண்டும் என அவர் பல உடனடி விடயங்களை பேசினார். 7. வடமாகாண மக்களின் வீழ்ந்துவிடாதன்மையை தன் மருத்துவ பீட வழக்கோடு சேர்த்து - நாம் தோற்றவர்கள் அல்ல என கூறிச்சென்றார். இந்த வழக்கில் சுமந்திரன் உதவியதை நினைவு கூர்ந்தது வழமையான நன்றி மறக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் இருந்து வேறு பட்டு காட்டியது. 8. 65% கொடுக்கலாம். 9. ஒரு எம்பியாக தூதுவராலயங்கள் பார்ட்டிகள், இதர இடங்களில் இதே செய்தியை எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக நான் கட்சி சார்ந்தவன் அல்ல, தனி மனிதன். மக்களின் குரல் என்ற ரீதியில்.
  42. கிழக்கு மாகாண மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தததை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டும்.கிழக்கு மாகாண மக்களளுக்கு முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு பயம் இருக்கின்றது. அதனால்தான் முஸ்லிம்களை ஓரு காலத்தில் கடுமையாக எதிர்த்த பிள்ளையான் கருணா போன்றவர்களுக்கும் தங்கள் ஆதரவை கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருந்ததார்கள். ஆனால் அவர்கள் தற்போது சிறிலங்கா அரசின் கைதிகளாக சுதந்திரமாக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பதனைக் தெளிவாகத் தெரிந்து கொண்டதால் கிழக்கு மாகாண மக்களுக்கு நன்கு அறிமுகமான தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.கிழக்குமாகாணத்தில் சாணக்கியன் இல்லாமல் வேறு யார் போட்டியிட்டு இருந்தாலும் இந்த வெற்றி கிடைத்திருக்கும். அது முஸ்லிம்கள் தொடர்பான அச்சம் காரணமாக ஒன்று பட்டு வாக்களித்திருக்கிறார்கள்..ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிக்மல் விட்ட கிழக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியத்துக்காக தமிழருக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை. இதெ தெரிவுதான் வடக்கிலும் நடந்திருக்கிறது. அவர்கள் ஒரு பரிசோதனை முயற்சியைச் செய்திருக்கிறார்கள்.டக்ளஸ்>அங்கையன் போன்றவர்களுக்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை அவர்கள் அரசுடன் சேர்ந்து இருந்தாலும் பொம்மைகள்தான். ஆகவே இந்த முறை அரசாங்கத்தை அமைக்கக்கூடிய கட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள. பொருளாதார ரீதியாக வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் ஏதாவது முன்னேற்றம் வரும் என்று மாற்றி யோசித்து இருக்கிறார்கள். ஆனால் இது நிரந்தரமானது அல்ல.ஆடத்த தேர்தலிலேயே தலையடி கொடுப்பார்கள். டக்ளஸ்>பிள்ளையான் அங்கையன் போன்ற அருசக்கு முண்டு கொடுப்பவர்கள் தோற்கடிக்கப்பட்டது மகிழ்ச்சி.
  43. எப்படி சிங்களவர் (மட்டும் அல்ல முஸ்லிம்களும்) ஓம்படாமல் தீர்வை நாட்டில் எட்ட முடியாது என்பது உண்மையோ… அதே போல் புலத்தில் இருக்கும் நீங்கள் சொல்லும் சப்போர்டசை விலத்தி இங்கே ஒரு பெரிய அளுத்தத்தை பெற முடியாது. மேலும் அவர்களை போலவே நீங்களும் prisoner of your past அதாவது கடந்த கால கசப்பான அனுபவங்களின் கைதியாக இருக்கிறீர்கள். அருச்சுனா சொன்னது போல் இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை கஜனும் சிறியும் விழங்கிகொண்டது போல்… ஒவ்வொரு புலம்பெயர் ஐலண்ட்டும், குமாரசாமியும், தமிழ் சிறியும் விளங்கி ஒரே முகமாக செயல்பட்டால் எதையாவது முயலாலாம். இல்லை, இனம் உரிமையோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை பழைய கறளைத்தீர்ப்பதே இலக்கு என்றால் - உங்கள் இஸ்டம்.
  44. இந்த வருடம்.... கோசான் எழுதிய கருத்துக்களில், மேலே உள்ளதுதான்... மிகச் சிறந்த கருத்து. 👍 இருக்கின்ற சூழ்நிலையை யதார்த்தமாக அணுகும் மனநிலை, பலருக்கு இல்லை என்பது கவலையான விடயம்.
  45. வாழ்க்கையில் யார் முன்னேறிய வர்கள் ! ஒரு பெரிய கம்பெனி முன் ஒருவர் டீ கடை வைத்திருந்தார். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து டீ சாப்பிட்டுக் கொண்டே.... "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்.... பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்... "இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்" "எப்படி?" "பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து டீ கேனில் டீ விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா... உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க.... இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்.... நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்... அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்... நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்... ஆனால் உங்களுக்கு அப்படியில்லை... உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது... உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்.... உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்... நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்.... உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க.... ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்.... மேனேஜர் குடித்த டீ'க்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்... ஆகவே "தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது" THANKS - kongu guru prakash

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.