Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    2951
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19122
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31968
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/10/24 in all areas

  1. அர்ச்சுனாவை இன்னும் ஆதரிக்கும், அவர் மீது நம்பிக்கை வைக்கும் வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு இது சமர்ப்பணம். சத்தியமூர்த்தி, எந்த ஒரு பா.உ வின் கீழும் இருக்கும் ஊழியர் அல்ல. பா.உ வுக்கு முறைப்பாடு யாழ் மக்களிடமிருந்து கிடைத்தால், அவர் நேரே முறைப்பாடு கிடைத்த இடத்திற்குப் போகலாம் என்று இலங்கை அரசியல் அமைப்பில் எழுதியிருக்கும் என நான் நம்பவில்லை. அர்ச்சுனா செய்திருக்க வேண்டியது, ஒரு கடிதம் அல்லது சந்திப்பு மூலம் சத்தியமூர்த்தியின் மேலதிகாரியான சுகாதார அமைச்சுக்கு அறிவிப்பது தான். யாராவது மெர்வின் சில்வாவிற்கு ரூபவாகினியில் நடந்ததை அர்ச்சுனா அவர்களுக்கு நினைவூட்டினால் நல்லது என நினைக்கிறேன். பி.கு: இது சத்தியமூர்த்தியின் செயலின்மையை ஆதரிக்கும் கருத்தல்ல. ஆனால், அவர் இந்த விடயத்தில் அர்ச்சுனாவை நடத்திய விதம் சட்ட விதிகளின் படி சரியானது.
  2. நாடாளுமன்ற உறுப்பினரை சேர் என்று அழைக்கவேண்டும் என்ற எந்தவொரு அவசியமுமில்லை. வைத்திய நிர்வாக சேவையின் மூப்பு அடிப்படையில் சத்தியமூர்த்தியைத் தான் அர்ச்சுனா சேர் என்று அழைக்கவேண்டும். கடைசியில் அர்ச்சுனா கட்டக் கோவணங்கூட இல்லாமல் ஓடப்போகின்றார். அரியத்தை பப்பாவில் ஏத்தின கோஶ்டி இவரையும் பப்பாவில ஏத்திவிட்டுட்டு நிக்குதுகள். ஏறினால் பிறகு அதுகள் ஓடீடுங்கள். தங்கம் கூட கிட்ட நிக்காது! 😂
  3. ஒரு பழைய மாணவன் தனது முன்னாள் பாடசாலைக்குப் போவதானாற்கூட , வாசலில் நிற்கும் காவளாளியிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் அலுவலகப் பியோனிடம் அனுமதி பெற்று தலைமையாசிரியரையோ அல்லது பொறுப்பாசிரியரையோ சந்தித்து அனுமதி பெற்றுத்தான் தனது பாடசாலையச் சுற்றிப்பார்க்க முடியும். இது பாடசாலைகளுக்கு அல்லது கல்லூரிகளுக்குச் சென்ற பழைய மாணவர்களுக்குப் புரியும். 😁
  4. வருங் கால ஆடலரசிகள்
  5. சத்தியமூர்த்திக்கு தன் பதவிக்கேற்ற மாதிரி நடந்து கொள்ள தெரியாது...பப்ளிக்காய் தனது மு.புத்தகத்தில் அர்ஜுனாவுக்கு வோட்டு போட தனக்கு என்ன விசரோ😎 என்று தேர்தலுக்கு முன்பு எழுதினவர் ...சும் தான் இந்த தடவையும் வெல்லுவார்...தன்னுடைய ராஜ்ஜியம் என்று நினைச்சிருப்பார்...எல்லாம் பூச்சியமாயிட்டுது😬...உடனே பிரதேசவாதத்தை கையில் எடுத்து கொண்டு கோசம் போடுகிறார். எனக்கு முதலில் சத்தியமூர்த்தி மேல் நல்ல அபிப்பிராயம்,நம்பிக்கை இருந்தது....யாழிலும் முன்பு ஆதரவாய் எழுதியிருந்தேன் ...ஒரு சில கட்டுரைகள் துறை சார்ந்த நிபுணர்களால் எழுதப்பட்டதை வாசித்தவுடன்,அதை விட அங்கிருந்து வரும் தகவல்கள் அவருக்கு நல்லதொரு பாடம் படிப்பிக்க வேண்டும்...அது யார் படிப்பித்தாலும் சரி😧 சத்தியமூர்த்தி தானே கேதீஸ்வரன் போதைப் பொருள் விற்றதாக சொன்ன நினைவு....இருவருக்கும் இடையிலும் பிரச்சனை அல்லவா .
  6. அது ஏலவே தொடங்கிவிட்டது. எமது நிலைதான் துருக்கிய குர்தீஸ் மக்களுக்கு. மேற்குலகால் அவர்கள் கைகழு நட்டாற்றில் விடப்படுவர். துருக்கி அவர்களைத் தின்று தீர்க்கும். சிரியாவில் இஸ்ரேல் சிரியாவின் தென் மேற்குப் பகுதியை ஏப்பம் விடத் தொடங்கிவிட்டது. துருக்கி சிரியாவின் வட பகுதியை ஏப்பம் விடத் தொடங்கிவிட்டது. மேற்கை நம்பினோர் கைவிடப்படுவர். அனுபவம். ☹️
  7. யானை... தனக்கு தீங்கு செய்தவர்களை, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்... நினைத்து வைத்து பழிவாங்குமாம். 😂 அதே குணம் கொண்டவர்தான், வைத்தியர் அர்ச்சுனா... என்று சொல்கிறார்கள். 🤣 ஆக... சத்தியமூர்த்திக்கு, "ஏழரை" ஸ்ரார்ட் பண்ணி விட்டது. 😂 🤣
  8. இலங்கையில் கொடுப்பது மட்டும் என்ன அனுர, ரணில், மைத்திரி, மகிந்த வீட்டு பணமா? ஜேர்மனி பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு - அதன் கஜானாவை மக்களின், நிறுவனங்களின் வரிப்பணம் நிரப்புகிறது. அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு ஜேர்மனி செலவழிக்கிறது. இலங்கை பொருளாதாரத்தில் பிந்தங்கிய நாடு - அதன் கஜானவை வெளிநாட்டு கடனும், அந்நிய செலாவணியும், உதவிகளும் நிரப்புகிறன. அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு இலங்கை செலவழிக்கிறது.
  9. இங்கு சம்பந்தப்பட்ட இருவருமே சமூகத்தில் அதிகூடிய பொறுப்புள்ளவர்கள், மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள். உண்மையில் வைத்தியர் சத்திய மூர்த்தி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை, பிழையாக இருந்தாலும். அவரின் வீட்டுக்கு போயும் கதைக்க முடியாது. ஆகவே அவருக்கு உரிய முறையில் அழைத்து விசாரித்திருக்கலாம். உண்மையில் போலீஸார்கூட செய்யும் அக்கிரமங்களை யாராவது தட்டிக்கேட்டால் தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி சுட்டுக்கொன்று விடுகிறார்கள், அதையும் சட்டம் சரியென ஏற்றுக்கொள்கிறது. இந்த இருவருக்கும் பஞ்சாயத்து தீர்ப்பதிலேயே ஐந்து வருடங்கள் ஓடி மறைந்து விடும். இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்பட வாய்ப்புண்டு. தமது பிரச்சனைகளை தீர்ப்பார் என்று நம்பி வாக்களித்த மக்களும், இந்த தொண்டர் சேவையாளர்களுமே பாதிக்கப்படுவர் இவர்களின் பொறுப்பற்ற செயலால்.
  10. கொடுக்கலாம் ஆனால் இலவசம் இல்லை இங்கே ஜேர்மனியில் சமூக நலத்திட்டங்களில். இருந்த அத்தனை பேரின். பிள்ளைகளும் கிட்டத்தட்ட மாதம் 500 யூரோ வரி மட்டுமே செலுத்துறார்கள். இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது பெறுவது கொடுப்பது சுழற்சி முறையானது அதாவது மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுப்பது இதில் எங்கே இலவசம்??? நான் சொன்னது இலவசம் என்ற போச்சே இருக்கக்கூடாது இது மக்கள் பணம் எங்கள் பணம் எங்களுக்கு தாருகிறீர்கள். மக்களுக்கு தாருகிறீர்கள். 🙏🤪
  11. இந்த விசுக்கோத்து எம்பிக்கு வாக்குப்போட்டு அனுப்பின பனிக்கூட்டத்திற்கு இன்னும் ஷோ காட்டுவார்! He clearly abused his power and violated the law/act. https://parliament.lk/files/pdf/powers-privileges-act-en.pdf
  12. சிரிப்பினை வர வைத்தாலும் இது ஒரு துரதிர்ஸ்டமான உணமை.
  13. இல்லை. ஆனால் இதே லொஜிக்கின் படி பார்த்தால் பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரமே கொடுத்திருக்க கூடாது. ஏன் எண்டால் இலங்கை ஆட்சியாளர்கள் 76 வருடமாக மோசமான ஆட்சியைத்தான் வழங்குகிறனர். தமிழ் அரசியல்வாதிகள் சரியில்லை ஆகவே தமிழருக்கு சுயாட்சி தேவையில்லை என்றால் - இலங்கை ஆட்சியாளர்கள் சரியில்லை ஆகவே ஆட்சியை மீள பிரித்தானியாவிடம் கொடுக்க வேண்டும் எனவும் வாதிடலாம். தமிழர்களுக்கு உரிய அதிகாரம் அவர்களின் சுய உரிமை. அதை அவர்கள் போட்டடிக்கலாம் அல்லது சிறப்பாக பாவிக்கலாம். அது அவர்களின் பிரச்சனை.
  14. பகல் போட்டிகளுக்கு சிகப்பு புலனாகும் தன்மை அதிகமாக காணப்படும், இரவு போட்டிகளின் போது பந்து தெளிவாக தெரிவதற்காக பந்தின் நிறத்தினை வெள்ளையாக பயன்படுத்துவதாக கூறுகிறார்கள், இந்த பிங் பந்து இரண்டுக்கும் இடைப்பட்ட வெள்ளையும் சிகப்பும் இணைந்த நிறத்தில் பயன்படுத்துவதன் மூலம் பந்தின் புலனாகும் தன்மையினை இரவு பகல் போட்டிகளுக்கு சாதகமாகும் விதத்தில் உருவாக்கியுள்ளார்கள், ஆனால் மாலை கருக்கல் எனக்கூறும் அந்தி சாயும் வேளையில் வானத்தின் நிறமும் பிங் பந்தின் நிறமும் ஓரளவிற்கு ஒரே மாதிரியிருக்கும் போது பந்தினை கணிப்பது சிரமம் என கூறுகிறார்கள், அத்துடன் மின்னொளியில் பந்து அதிகமாக சுவிங் ஆகும் எனவும் கூறுகிறார்கள். முந்தய டெஸ் போட்டிகளில் பயன்படுத்திய அரக்கின் அளவினை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமாகவும் கட்டுகள் மிக உறுதியாக இருப்பதால் பந்து காற்றில் திரும்புவதும் தரையில் பட்டு திரும்புவதும் அதிகமாக காணப்படுகிறது (இதனால் டெஸ்ட் போட்டிகள் குறுகிய காலத்தில் முடிவடைவதற்Kஉ அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்) பிங் பந்து சிகப்பு பந்தினை விட அதிக அரக்கு காணப்படுவதால் ரிவர்ஸ் சுவிங் ஆகாது என கூறுகிறார்கள் பந்து பெரும்பாலான பகுதி முழுவதும் சுவிங் ஆகும் அத்துடன் கட்டும் சிகப்பு பந்தினை விட உறுதியானது.
  15. இதை சத்தியமூர்த்தியிடம் கேட்க வேண்டும். பணிப்பாளர் தரத்தில் இருப்பவர் அமைச்சு அனுமதி பெற்றுப் பேச வேண்டுமென்று விதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், இதே ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கில் தற்போது நடந்து வரும் காய்ச்சல் மரணங்கள் தொடர்பிலும் பேசுகிறார், எனவே "மருத்துவமனையைப் பாதிக்கும் எல்லாம் பற்றி மக்களுக்குத் தெளிவு படுத்தினேன்" என்று அவர் சொன்னால் அமைச்சும் எதுவும் செய்யாது. நிற்க. இப்ப அர்ச்சுனா விசர்கூத்தாடினதை மறைக்க சத்தியமூர்த்தியின் இந்த நடவடிக்கையைப் பெரிய கோடாகக் காட்ட முயல்கிறீர்களா😂?
  16. சத்தியமூர்த்தி அவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதி பெற்றா அல்லது பெறாமலா ஊடகவியலாளர் சந்திப்பு செய்கின்றார்? நாட்டின் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் தம்பாட்டுக்கு ஊடகவியலாளர் சந்திப்பு செய்யலாமா? இவர் ஒரு அரசியல்வாதிபோல் அல்லவா செயற்படுகின்றார்?
  17. த‌வ‌றான‌ புரித‌ல் குருநாதா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் த‌லைவ‌ரின் 70வ‌து பிற‌ந்த‌ நாள் கூட்ட‌த்தின் போது பேசின‌ விடைய‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் 10நிமிட‌ம் தான் அண்ண‌ன் சீமான் த‌லைவ‌ரை ச‌ந்தித்தார் என‌ சொல்லுகின‌ம் அந்த‌ 10நிமிட‌ ச‌ந்திப்பு த‌மிழ‌க‌த்தில் இவ‌ள‌வு அர‌சிய‌ல் பேச்சாய் மாற்றிய‌வ‌ர் அண்ண‌ன் சீமான் இதை தான் ச‌கோத‌ரி பொதுவாக‌ சொல்ல‌ வ‌ந்தா இதில் ஒரு உள் குத்தும் இல்லை அவ‌ர்க‌ளுக்குள் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை அதுக்கான‌ விள‌க்க‌த்தையும் ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் அடுத்த‌ க‌ன‌மே கொடுத்து விட்டா 200ரூபாய் ஊப்பிக‌ள் தான் அதை ப‌ர‌ப்பி குளிர் காய‌ பார்த்த‌வை மீண்டும் ச‌ரி வ‌ர‌ வில்லை ....................ச‌கோத‌ரி தொட‌ர்ந்து சீமான் கூட‌ தான் ப‌ய‌ணிக்கிறா...............................த‌மிழ் நாட்டு மாபியா ஊட‌க‌ங்க‌ள் திருட்டு திமுக்காவின் க‌ட்டு பாட்டில் இருக்கு அதோட‌ ப‌ல‌ ல‌ச்ச‌ம் செல‌வு செய்து ப‌ல‌ இணைய‌கைகூலிக‌ளை வைத்து இருக்கின‌ம் அவ‌தூறு ப‌ர‌ப்ப‌ காளிய‌ம்மாள் ப‌ற்றி இந்த‌ வ‌ருட‌ம் எத்த‌னை அவ‌தூறுக‌ளை ப‌ர‌ப்பினார்க‌ள் அதில் ஒன்றாவ‌து உண்மை ஆகி இருக்கா😁............................ க‌ட்சிய‌ விட்டு ஒரு பெண் வெளிய‌ போனால் க‌ட்சிக்குள் உள்ள‌ வ‌ர‌ ப‌ல‌ பெண்க‌ள் இருக்கின‌ம்🙏🥰......................... இதோ ஜிங்சாங் மியுசிக் ஓட‌ நான் வ‌ந்து விட்டேன்......................
  18. 🤣............. இது தான் இவரைத் தேர்தெடுத்த மக்கள் இவரிடம் எதிர்பார்த்தது.............. உண்மையிலேயே. இவர் இப்படியே கைதட்டல்களுக்காக ஒரு வித்தைக்காரர் போல மரங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்க வேண்டியது தான்..............🫣.
  19. மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா? MinnambalamDec 09, 2024 07:00AM ராஜன் குறை மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கலாம். எது மிக முக்கியமான வேறுபாடு என்று புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் தனி மனிதர் அரியணை ஏறி ஆட்சிக்கு வருவார். அவர் மன்னராக முடிசூட்டப்பட்டிருந்தால் அவர் தனது ஆயுட்காலம் முழுவதும் மன்னராக இருப்பார். அவர் ஒரு தனி மனிதராகத்தான் பிறப்பின் அடிப்படையிலோ, யானை மாலை போட்டதாலோ, வேறு எந்த காரணத்தாலோ அரசராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். மக்களாட்சியில் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும். ஒட்டுமொத்த கட்சியும் ஆட்சி செய்ய முடியாது என்பதால்தான் அந்தக் கட்சியினர் தேர்ந்தெடுக்கும் ஒருவர் முதல்வராகவோ, பிரதமராகவோ பதவி ஏற்று ஆட்சி செய்வார். மக்களாட்சியில் கட்சித் தலைவர் நேரடியாக ஆட்சிக்கு வர முடியாது. சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள், அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரே கட்சியை அல்லது ஒரு கூட்டணியைச் சார்ந்தவர்கள் யாரை பிரதம அமைச்சராக, முதல் அமைச்சராகத் தேர்வு செய்கிறார்களோ அவர்தான் ஆட்சிக்குத் தலைமை தாங்குவார். அந்தக் கட்சிக்காரர்களே எப்போது ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அவர் பதவி இழந்து விடுவார். மராத்திய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அப்படித்தான் பதவி இழந்தார். அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே பாஜக தூண்டுதலில் அவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டனர். அப்படி நிகழாவிட்டால்கூட ஐந்தாண்டுக் காலம்தான் ஒருவர் ஆட்சியில் தொடர முடியும். பின்னர் மீண்டும் தேர்தல். அதில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்தால்தான் தொடர முடியும். அப்படி கட்சியினருடைய, மக்களுடைய ஆதரவை தொடர்ந்து பெறுவது யாருக்குமே பெரிய சவால்தான். ஏகப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். மன்னர் போல ஆட்சிக்கு வர விரும்பும் தனி நபரே விஜய் விஜய் ஒரு பிரபல திரைப்பட நடிகர். கதாநாயகனாக அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு நடிகராக அவர் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்காக, குணசித்திர நடிப்பிற்காக புகழ் பெற்றவர் இல்லை. நன்றாக நடனம் ஆடுகிறார், சண்டை செய்கிறார், முத்தாய்ப்பான வசனங்களை ஸ்டைலாக உச்சரிக்கிறார் ஆகிய அம்சங்களே அவரை மக்கள் திரளை கவரும் கதாநாயகன் ஆக்கின. வணிக அம்சங்களை நம்பிய வாழ்க்கை. அருவாளை எடுத்து வெறித்தனமாக வெட்ட வேண்டும். வடு மாங்கா ஊறுதுங்கோ என்று ஆட வேண்டும். இவ்வாறு திரைப்பட நடிகராக அவருக்குள்ள பிம்பத்தை வைத்து ஒரு தனி நபராகத்தான் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார். அவர் ஒரு கட்சி தொடங்கியுள்ளார். ஆனால், அந்தக் கட்சியில் பல்வேறு அணிகளுக்கோ, மாவட்ட அளவிலோ வேறு யாரும் குறிப்பிடப்படத்தக்க தலைவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. கட்சிப் பணிகளை நிர்வகிக்க ஒரு மேலாளரை நியமித்துள்ளார். அவர் பெயர் புஸ்ஸி ஆனந்த். மற்றபடி அவர் கட்சியில் வேறு நிர்வாகிகளோ, அரசியல் அனுபவம் உள்ள தலைவர்களோ கிடையாது. விஜய்தான் கட்சி என்பதை அவர் கட்சியின் முதல் மாநில மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அதில் அவர் மட்டும்தான் பேசினார். ஒரு பேச்சுக்குக் கூட வேறு பேச்சாளர்கள் கிடையாது. அவரும் கட்சி நிர்வாகிகள் பெயர்களைச் சொல்லி விளித்து பேச்சைத் தொடங்குவது தேவையற்ற சடங்கு என்று ஏளனமாகச் சொல்லி விட்டார். அவர்தான் கட்சி, அவர் ஆட்சிக்கு வருவதுதான் கட்சியின் ஒரே நோக்கம். மக்களாட்சி என்றால் என்னவென்று புரியாதவர்கள் இப்படி தனி நபர் தலைமைதான் கட்சி என்று பாமரத்தனமாக நினைத்துக் கொள்வார்கள். ரசிகர் மன்றங்கள் கட்சி அமைப்புகள் ஆகுமா? மக்களாட்சி அரசியல் என்பதன் அடிப்படை வெவ்வேறு மக்கள் தொகுதிகளின் கோரிக்கைகள்தான். விவசாயிகளுக்குக் கோரிக்கைகள் இருக்கும், மீனவர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும், ஆசிரியர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும், வர்த்தகர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும். இவர்கள் கோரிக்கைகளுக்காக அமைப்புகள் தோன்றும். ஒரு வெகுஜன கட்சி என்பது ஒரு சில பொது முழக்கங்களுக்குள் இவர்கள் கோரிக்கைகளை ஒன்று திரட்ட வேண்டும். அப்போதுதான் கட்சி வெற்றி பெறும். அது தவிர அந்தந்த தொகுதிகளுக்கான தனி கட்சிகளும், அமைப்புகளும் இருக்கும். அவர்கள் ஆதரவையும் பெற வேண்டும். பல விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகளின் தொகுப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் கோரிக்கைகளுக்காக கட்சிகள் உள்ளன. வன்னியர் சங்கம் என்ற பெயரில் இயங்கிய அமைப்புதான் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. இது வன்னியர்கள் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறவில்லை, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் உருவானது. கலைஞர் அவர்களையும் உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20% உள் ஒதுக்கீட்டை உருவாக்கினார். இப்போது அதற்குள்ளும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இப்படியாக மக்கள் தொகுதிகள் கோரிக்கை அடிப்படையில்தான் கட்சிகளாகவோ, கட்சி அணிகளாகவோ மாறும். அவைதான் மக்களாட்சி அரசியல் வேர்கள். கட்சிகளின் சமூகத்தளம். ரசிகர் மன்றங்களுக்கு என்று அரசியல் கோரிக்கைகள் எதுவும் இருக்க முடியாது. படம் வெளியிடுவதற்கு முன்னால் தனி ரசிகர் மன்ற காட்சிகளை அனுமதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை இருக்கலாம். ஆனால், இது முக்கியமான அரசியல் கோரிக்கை என்று யாரும் கூற மாட்டார்கள். அதற்காக வாக்களிக்கவும் மாட்டார்கள். மற்றபடி ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மக்கள் தொகுதிகளின் அங்கமாகத்தான் இருப்பார்கள். ஒருவர் வர்த்தகராக இருப்பார். போக்குவரத்து ஊழியராக இருப்பார். ஆட்டோ ஓட்டுநராக இருப்பார். அவர்களுடைய அரசியல் கோரிக்கைகள் தனித்தனியானவை. ரசிகர் மன்றம் என்பது கேளிக்கைக்கான, மன உற்சாகத்திற்கான ஓர் அமைப்பு. உதாரணமாக “ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றம்” என்ற அமைப்பை நான் ஓர் ஊரில் பார்த்திருக்கிறேன். அதன் உறுப்பினர்களாக பல்வேறு பணிகளில், தொழில்களில் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்கள் வழிபாட்டு நேரத்தில் அங்கே கூடுவார்கள். சிவப்பு ஆடை அணிந்திருப்பார்கள். அவர்களை உடனே ஓர் அரசியல் தொகுதியாக மாற்ற முடியாது. அவரவர் தொழில்கள் சார்ந்தோ, சமூக பின்னணி சார்ந்தோதான் அவர்கள் அரசியலில் அணி திரள்வார்கள். திரை பிம்பத் தலைமைக்கு சமூக அடித்தளம் உண்டா? திரைப்பட நடிகர்கள் எந்த ஊருக்குப் போனாலும் பெரும் கூட்டம் கூடும். அவர்களைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு செல்வார்கள். அப்படிச் செல்வதால் அந்த நடிகர்கள் கூறுபவர்களுக்கு உடனே வாக்களித்துவிட மாட்டார்கள். உதாரணமாக அறுபதுகளின் பிற்பகுதி, எழுபதுகளில் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்தவர்கள், பங்கேற்றவர்கள் பலரிடம் கேட்டபோது அவர்கள் ஓர் ஊரில் எம்.ஜி.ஆரை பார்க்க எவ்வளவு கூட்டம் வருமோ, அதே அளவு சிவாஜியை பார்க்கவும் வரும் என்று கூறினார்கள். ஆனால், வாக்குகள் எம்.ஜி.ஆர் கட்சியான தி.மு.க-விற்கு அல்லது அ.இ.அ.தி.மு.க-விற்குத்தான் விழும். சிவாஜி ஆதரிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கு விழாது. திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணையான போட்டியைத் தந்த சிவாஜியால், அரசியலில் அப்படித் தர முடியவில்லை. காரணம் என்ன? எம்.ஜி.ஆருக்கான சமூக அடித்தளத்தை தி.மு.க உருவாக்கித் தந்தது. அந்தக் கட்சியினர் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் கோரிக்கைகளையும் அறிந்து, அனைத்திற்கும் தீர்வாக முற்போக்கான, மக்கள்நல சோஷலிஸ கொள்கைகளைக் கொண்ட ஆட்சியை அமைக்க உறுதியளித்தார்கள். ‘காங்கிரஸ் தனவந்தர்களின், மேட்டுக்குடியினர் கட்சி, நாங்கள் சாமானியர்கள் கட்சி’ என்பதை தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். அதற்கு ஏற்றாற்போல எம்.ஜி.ஆர் ஏழைகளை, எளியோரைக் காப்பவராக சினிமாவில் நடித்தார். அதனால் அந்த கட்சியினரின் அணி திரட்டலும், அவர் திரை பிம்பமும் இணைந்து போனது. அவர் தி.மு.க-விலிருந்து பிரிந்தபோதும் பல தலைவர்களை அவரால் தன்னுடன் கூட்டிச் செல்ல முடிந்தது. அவரை கடுமையாக எதிர்த்த நாவலர் நெடுஞ்செழியனே அவர் கட்சியில் இணைந்தார். தத்துவ மேதை, பகுத்தறிவுப் பகலவன் பெரியார் ஐம்பதாண்டுக் காலம் அவர் கால்படாத கிராமமே இல்லையென்ற அளவு தமிழ்நாட்டில் பயணம் செய்து மக்களிடையே தன்னுணர்வை மலரச் செய்தார். அரசியல் தத்துவ மேதை அண்ணா திராவிடவிய சிந்தனையை அரசியல் கோட்பாடாக பயிற்றுவித்தார். கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பல படைப்பாளுமை மிக்க இளைஞர்கள் ஓயாமல் உழைத்து கட்சியின் சமூக அடித்தளத்தை வடிவமைத்தார்கள். எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தில் தன்னை பிணைத்துக் கொண்டு அதன் நிழலில் தனக்கென ஒரு சமூக தளத்தை உருவாக்கிக் கொண்டார். எம்.ஜி.ஆர் போல வேறு எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர் தி.மு.க என்ற பெருமரத்தின் நிழலில் வளர்ந்தார் என்பதுதான். கட்சியைத் தேடும் பிம்பத் தலைமை விஜய் விஜய்க்கு தன்னிடம் சமூக அடித்தளம் கொண்ட கட்சி இல்லை என்பது புரிகிறது. ஆனால் அவர் என்ன நினைக்கிறார் என்றால் சமூக அடித்தளம் கொண்ட கட்சிகளை ஆட்சியில் பங்கு தருவதாகச் சொல்லி இணைத்துக் கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறார். ஒரு சொலவடை சொல்வார்கள்: “நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டுவருகிறேன்; இருவரும் ஊதி, ஊதி தின்னலாம்” என்று ஒருவர் சாதுரியமாக சொன்னதாக. விஜய் அப்படித்தான் அரசியல் கட்சிகளைக் குறிவைக்கிறார். முதலில் அ.இ.அ.தி.மு.க; அரை நூற்றாண்டு கடந்த கட்சி. கிட்டத்தட்ட முப்பதாண்டுக் காலம் ஆட்சியில் இருந்த கட்சி என்பதால் மிக வலுவான சமூக அடித்தளம் அதனிடம் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஒரு கருத்தொருமிப்பு கொண்ட தலைமை உருவாக பாஜக விடவில்லை. அ.இ.அ.தி.மு.க-வை பிளந்து, பலவீனப்படுத்தி அதன் சமூகத்தளத்தில் தான் கால் பதித்துவிடலாம் என்று நினைத்தது பாஜக. ஆனால், பாதிக்கிணறுதான் தாண்ட முடிந்தது. அ.இ.அ.தி.மு.க-வை உடைத்து விட்டது. பலவீனப்படுத்திவிட்டது. ஆனால், அதனால் அந்த இடத்தில் காலூன்ற இயலவில்லை. திராவிடவிய அரசியல் தடுக்கிறது. அதற்குச் சான்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள். எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெருவாரியான நிர்வாகிகளை தன்னிடம் தக்கவைத்துக்கொள்வதில் வெற்றி பெற்று விட்டார். ஆனால், அவரிடம் மக்களை வசீகரிக்கும் அளவு பேச்சாற்றலோ, ஆளுமைத் திறமோ இருப்பதாகத் தெரியவில்லை. சசிகலா முடக்கப்பட்டுவிட்டார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஒரு சில பகுதிகளில்தான் செல்வாக்குடன் உள்ளனர். இவர்கள் யாருமே பாஜக-வை எதிர்த்து திராவிடவிய அரசியல் செய்வதில் தி.மு.க-வை முந்திச் செல்ல முடியாத அளவு ஒன்றிய அரசின் அழுத்தங்கள் உள்ளன. இந்த நிலையில் தன்னுடைய கவர்ச்சிகரமான முகத்தை ஏற்றுக்கொண்டு இவர்கள் எல்லாம் அல்லது ஒரு சிலராவது, தங்கள் கட்சிகளின் சமூக அடித்தளத்தைக் கொண்டுவந்தால், வெறும் பிம்பமாக இருக்கும் தனக்கு ஓர் அரசியல் உடல் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார் விஜய். எப்படியாவது தி.மு.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பது பாஜக-வின் அகில இந்திய செயல்திட்டத்திற்கு அவசியம் என்பதால் பாஜக இத்தகைய இணைவிற்கு ஒத்துழைக்கலாம் என்று நினைக்கிறார். அதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நின்று, கிராமம் கிராமமாக சென்று பேசி, எந்த ஊடகத்திலும் வராத எண்ணற்ற போராட்டங்களை களத்தில் நடத்தி, அகில இந்திய அளவில் முக்கியமான தலித் அரசியல் தலைவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள திருமாவளவனை விஜய் குறிவைப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாக உள்ளது. இதுதான் “நீ நெல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்” என்ற சூதிற்கு மிக மோசமான உதாரணமாக இருக்கிறது. விஜய் அவருடைய கட்சி மாநாட்டில் பேசியதானாலும், விகடன்-ஆதவ் அர்ஜுன் உருவாக்கிய அரக்கு மாளிகை மேடையில் பேசியதானாலும், அவருக்கென்று எந்த சொந்த அரசியல் கொள்கையும், கோட்பாடும், குறிக்கோளும் இல்லை என்பதையே தெளிவுபடுத்தியது. ஏன் அரசியல் புரிதலே அறவே இல்லை என்பதை வரி, வரியாகச் சுட்டி விளக்கலாம். விஜய் பிரபல நட்சத்திரம் என்பதால் மக்கள் பேராதரவில் மிதப்பதாக நினைக்கிறார். அதனால் ஆட்சிக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறார். ஊடகங்களுக்கு அரசியலை சுவாரஸ்யமாக்க இது நல்ல கதையாடல் என்பதால் அவருக்கு நிறைய வெளிச்சம் போடுவார்கள். ஆனால், அவர் கற்பனை செய்யும் அந்த மக்கள் ஆதரவைத் திரட்டி உதவ அவருக்கு சமூக அடித்தளம் கொண்ட கட்சி வேண்டும். அதற்கு யார் தங்கள் கட்சி சமூக அடித்தளத்தை கொடுத்து உதவினாலும் அவர்களை கூட்டணி அரசில் சேர்த்துக் கொள்வார். பாண்டவர்கள் தங்குவதற்காக மிக அழகான ஓர் அரக்கு மாளிகையை கெளரவர்கள் உருவாக்கினார்கள். அதில் அவர்கள் தங்கி உறங்கும்போது அதை கொளுத்தி விடலாம் என்று திட்டம். இன்று பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் பெயரைக் கொண்டவரே அரக்கு மாளிகை கட்டுகிறார். திருமாவளவன் அதற்குச் செல்லவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். இன்றைய தேதியில் வங்கியில் பணம் இல்லாமல் ஒருவர் பத்து கோடிக்கு ரூபாய்க்கு பதினான்கு மாதம் கழித்த ஒரு தேதியிட்டு காசோலை வழங்கலாம். அதை நம்பி, உற்பத்திக்கான மூலப் பொருட்களை நாம் கொடுத்தால், அவர் வெற்றிகரமாக பண்டத்தை உற்பத்தி செய்து லாபம் ஈட்டினால்தான் அந்தக் காசோலைக்கு மதிப்பு. அதற்கு அடிப்படையில் அவருக்கு தொழில் தெரிந்திருக்க வேண்டும். அனுபவமற்றவர்களின் வாய்ச்சவடாலை நம்பினால் பேரிழப்புதான் மிஞ்சும். விஜய்யின் அரசியல் ஈடுபாடு எத்தகையது என்று தெரிந்துகொள்ள சமீபத்திய நிகழ்வு ஒன்றே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். புதிய கட்சி துவங்குகிறார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை மாநாட்டுக்குத் திரட்டிக் காட்டுகிறார். சில மாதங்கள் கழித்து வரலாறு காணாத புயல் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர் உடனே அவர் கட்சி அணியினருக்கு ஒரு குரல் கொடுத்து, தானே தலைமையேற்றுச் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டாமா? விஜய் கட்சியினர் மக்களுக்கு பணி செய்வார்கள் என்று நிறுவ வேண்டாமா? விஜய் அவ்வாறு செய்வதை போட்டோ ஆப்பர்சூயினிட்டி, சடங்கு, சம்பிரதாயம் என்று நினைக்கிறார். களத்துக்குச் செல்லாமல், மக்களை தன்னிடத்திற்குக் கூட்டி வந்து நிவாரணப் பொருட்களை வழங்குகிறார். இதுதான் அபத்தமான சடங்காக அனைவராலும் எள்ளி நகையாடப்படுகிறது. அவரை மையப்படுத்தி சிந்திக்கிறாரே தவிர, கட்சி அணியினரைக் குறித்து அவர் சிந்திப்பதேயில்லை. அவருக்கு அரசியல் தெரிந்தால்தானே, அவர்களை அரசியல் மயப்படுத்த முடியும்? மக்களுக்கு பேரிடரில் உதவி செய்வது சம்பிரதாயமா? அதுதானே ஐயா, அரசியல்? ஆனால், விஜய் ஆட்சி அமைப்பதுதான் அரசியல் என்று கூச்சமின்றி முழங்குகிறார். தன்னுடைய தனிநபர் திரை பிம்பத்தை வைத்து வாக்குகளை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் அமரலாம் என்று நினைப்பதுதான் மன்னராட்சியின் சாராம்சம். அதற்குப் பதில் கட்சியில் ஒரு பொறுப்பினை ஏற்று, கட்சி அணியினருடன் பணி செய்து, உட்கட்சி பூசலுடன் மல்லுகட்டி, மக்களிடையே சென்று பேசி, உதவி செய்து, தினசரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி, பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அரசியல் செய்பவர் யாரானாலும் அவர்களே மக்களாட்சியின் மாண்பை அறிந்தவர்கள். ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு “கொள்கை வாரிசு தலைவர்கள்” உள்ளபடியே அனுதாபத்திற்கு உரியவர்கள். வசதியான பின்புலம் கொண்ட அவர்கள், தெரிந்த தொழிலை செய்துகொண்டு, அமைதியாக உல்லாசமாக வாழாமல், ஏன் அரசியலில் ஈடுபட்டு, நடையாய் நடந்து, நாவரளப் பேசி பாடுபடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றும். அவர்கள் அப்படி பாடுபட்டு ஆட்சிக்கு வருவது சுயநலம் என்றால், திரை பிம்பங்கள் திடீர் தலைவராகி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் தியாக தீபங்களா என்ன? எனக்கு ஓரளவு கட்சி அமைப்பு என்றால் என்ன, கட்சி அணிகளைச் சந்திப்பது என்றால் என்ன என்று களப்பணி மூலம் தெரியும். அதனால்தான் உண்மையில் சமூக அடித்தளம் கொண்ட கட்சி அரசியல் செய்பவர்கள் யார் மீதும் எனக்குப் பரிவு உண்டு. அவர்களை வாரிசு தலைவர்கள் என்று விமர்சிப்பவர்கள், வெறும் திரை பிம்பத்தைத் தூக்கிக்கொண்டு நானும் அரசியல்வாதி என்று வருபவர்களை ரசிக்கும் விநோதம்தான் ஊடகங்கள் உருவாக்கும் மெய்நிகர் உலகம். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. https://minnambalam.com/political-news/actor-vijay-who-dreams-of-monarchy-does-he-understand-democracy-special-article-in-tamil-by-rajan-kurai/
  20. ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி வந்தது அகில உலகிற்கும் ஆதி பரம்பொருள் நீ ஆலய திருவிழா சேரும் நேரத்தில் தூய சிந்தையுடன் நின் திருவடி சேரவே 👍🔔
  21. நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்.உந்த பெருமாளுக்கு தேவை இல்லாத வேலை 😎
  22. தன்மானம் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளைகள் எப்போதும் எல்லோர் பின்னாலும் திரிவார்கள் அவர்களை சிங்களம் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. இதுதான் சிங்களத்தின் மாபெரும் வெற்றி. இது மனம் சம்பந்தமானது. அடிமைகளுக்கு யார் வந்தாலும் பின்னால் போகத்தயார். சிங்களத்துக்கு பிரச்சாரம் செய்ய நல்லதொரு செய்தி. ஒரு முசுறு கடிக்க, கூட்டோடு நசுக்கப்படுகிற கதை.] @goshan_che படித்தேன் புல்லு அரிக்குது.
  23. அந்த திரிக்கு வந்த பின்னூட்டத்தின் அடிப்படையில்தான் என் மேலய கருத்து இருந்தது. ——- இதோ அந்த திரி… அந்த திரியில் நம்ம @satan எழுதியது👇 சரத் வீரசேகர சொன்னது, தான் காரைநகரில் கடமையாற்றியபோது தனக்கு இடமாற்றம் வந்தபோது அங்குள்ள மக்கள் அவரின் இடமாற்றத்தை எதிர்த்து மனு அளித்தனராம். இதே போன்று வடமாகாணத்தில் இருந்த படைத்தளபதி பெயரை மறந்துவிட்டேன், அவரை இடமாற்ற வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தனர். தன்மானம் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளைகள் எப்போதும் எல்லோர் பின்னாலும் திரிவார்கள் அவர்களை சிங்களம் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. வடக்கில் பணிபுரியும் சிங்கள போலீஸ், இராணுவ படைகள் தாங்கள் இடமாற்றம் செய்யப்படுவதை விரும்புவதில்லை, தங்களுக்கு தெரிந்த மக்களை அதற்கு எதிராக மனு அளிக்கும்படி கேட்பதுண்டு. கைலஞ்சம், சொகுசான வாழ்க்கை, போராட்ட காலத்தில் கூடுதல் சம்பளம். இதுதான் சிங்களத்தின் மாபெரும் வெற்றி. போரின் போது பெற்றது வெறும் இடம் சம்பந்தமானது. இது மனம் சம்பந்தமானது. அடிமைகளுக்கு யார் வந்தாலும் பின்னால் போகத்தயார். தமிழ் மக்கள் பிரிவினை கோரவில்லை, அவர்கள் எங்கள் அடிமைகளாக இருக்க பூரண சம்மதம்! சிங்களத்துக்கு பிரச்சாரம் செய்ய நல்லதொரு செய்தி. ஒரு முசுறு கடிக்க, கூட்டோடு நசுக்கப்படுகிற கதை. ஒரே விடயத்தை எப்படி மாத்தி, மாத்தி எழுதியுள்ளார் என்பதை - வாசகர் பார்வைக்கே விடுகிறேன்.
  24. அசாத்தின் 9 பில்லியன் டாலர்கள் ரஸ்சியாவிடம் தானே இருக்கிறது. இதுக்கு தானே சிரியா சின்னாபின்னமாக்கப்பட்டது us மற்றும் அதன் வாலான நேட்டோ ஆலும். (வேறு நோக்கங்கள், இஸ்ரேல், ஈரான் போன்றவையும் இருக்கிறது. ) ஆனால் தொடங்கியது அசாத் 9 பில்லியன் ஐ cia இன் கண்ணில் மண்ணைத் தூவி வெட்டியாடியபடியால். என்ன மக்களை அசாத் போட்டு வதைக்கிறார் என்றா? மத்திய கிழக்கில் அசாத் செய்தது - ஆட்சியை எதிர்த்தவர்களுக்கு - அங்கே நடக்காதது ஒன்றும் அல்ல. அசாத்தை ஐடா கொடுமைகள், அப்பாவிகளுக்கு அமெரிக்காவின் வாலுகள் செய்து இருக்கின்றன, இப்போதும் செய்வதாக முன்னணி துருக்கி, இஸ்ரேல் (பலஸ்தீனியரின் காணியை திருடுவதற்கு, அவர்களை வதைத்து அகற்றுவதற்கு us, மேற்கின் இன் முழமையான விருப்பம்)
  25. சத்தியமூர்த்தியை கேள்வி கேட்பவர் கவனம் காவல்துறையில் முறைப்பாடு குடுத்துவிடுவார்.
  26. உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? வயதிற்கு ஏற்றார் போல் உடலின் நாற்றம் மாறுபடுமா? 7 டிசம்பர் 2024 Getty Images 'உடல் நாற்றம்' என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல உடல் நாற்றம் (Body odour) என்று சொன்னவுடன், பலரும் அதை உடலின் சுத்தத்துடன் மட்டுமே தொடர்புப்படுத்தி பார்ப்பார்கள். அதிகமாக வியர்த்தால் உடலில் அதிக நாற்றம் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நமது தோலில் இருந்து ஆவியாகும் ஒவ்வொரு துளி வியர்வையும் நமது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஆனால், உடல் துர்நாற்றம் என்ற பிரச்னையின் காரணமாக சிலர் உடலின் இந்த அத்தியாவசிய செயலை வெறுக்கிறார்கள் அல்லது அதை குறைக்க நினைக்கிறார்கள். ஆனால் வியர்வை என்பதே எந்தவொரு நாற்றமோ அல்லது மணமோ இல்லாத ஒரு திரவம்தான். சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள், வியர்வையை 'மணமுள்ள சேர்மங்களாக' பிரிக்கும்போது உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. 'உடல் நாற்றம்' என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, உணவுமுறை, ஹார்மோன் மாற்றங்கள், மரபியல், சில மருந்துகள், நீரிழிவு அல்லது கல்லீரல் நோய் போன்ற மருத்துவ நிலைமைகள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வுகளும் நிபுணர்களும் கூறுகிறார்கள். இதைவிட ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருவரின் வயதிற்கு ஏற்ப உடலின் நாற்றம் மாறும் என ஓர் ஆய்வு கூறுகிறது. Getty Images தினமும் இருமுறை குளிக்கும் நபருக்கு கூட 'உடல் துர்நாற்றம்' என்பது ஒரு பிரச்னையாக இருக்கலாம் உடலின் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? தோலில் உள்ள இரு வகைச் சுரப்பிகளால் வியர்வை உருவாகிறது. உடற்பயிற்சி செய்யும்போது உடலெங்கும் சுரக்கும் வியர்வை எக்ரின் (Eccrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இந்த வியர்வை உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. முடி நிறைந்த தோல் பகுதி, அக்குளிலும், பிறப்பு உறுப்பு பகுதிகளிலும் சுரக்கும் வியர்வை அபோக்ரின் (Apocrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இவ்வியர்வையில் புரதம் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த பல மூலக்கூறுகள் உள்ளன. பாக்டீரியாக்கள் இவற்றை துர்நாற்றம் கொண்டதாக மாற்றுகின்றன. மனித உடலில் இருந்து நூற்றுக்கணக்கான ஆவியாகும் கரிம சேர்மங்கள் (Volatile organic compounds- விஓசி) வெளியேற்றப்படுகின்றன என்றும், பொதுவாக அவற்றின் கூறுகள் ஒரு நபரின் வளர்சிதை மாற்ற நிலையை பிரதிபலிக்கின்றன என்றும் 'தி ஜர்னல் ஆப் பயோகெமிஸ்ட்ரி' எனும் அறிவியல் ஆய்வு இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. இந்த ஆய்விதழ், 1922ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது. இந்த ஆவியாகும் கரிம சேர்மங்கள் தான் உடலின் நாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. சுவாசம், வியர்வை, தோல், சிறுநீர், மலம் ஆகியவை இந்த சேர்மங்களின் முக்கிய ஆதாரங்கள். உடல் துர்நாற்றங்களுக்கு ரத்தமும் ஒரு முக்கிய காரணமாகும், ஏனெனில் வளர்சிதை மாற்றத்தில் உற்பத்தி செய்யப்படும் சில விஓசி சேர்மங்கள் ரத்தத்தில் சுரந்து, பிறகு சுவாசம் மற்றும் அல்லது வியர்வை வழியாக வெளிப்புறச் சூழலுக்கு உமிழப்படுகின்றன. அதே சமயம், இந்த ஆவியாகும் கரிம சேர்மங்களில் மணமற்றவையும் உள்ளன. மனித உடலின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெளிப்படும் இந்த சேர்மங்கள் வயது, உணவு, பாலினம், உடலியல் நிலை மற்றும் மரபணு பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகின்றன. Getty Images நமது வயதிற்கு ஏற்றார் போல, உடலின் இயற்கையான நாற்றத்திலும் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன 'வயதிற்கு ஏற்றார் போல மாறும் உடல் நாற்றம்' ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோஹன் லுண்ட்ஸ்த்ரோம், உடல் துர்நாற்றம் குறித்தும் உடல் வாசனைகள் குறித்தும் ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவரது குழு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், "நமது வயதிற்கு ஏற்றார் போல, உடலின் இயற்கையான நாற்றத்திலும் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக, இளம் வயது நபர்கள் (20–30 வயது), நடுத்தர வயது நபர்கள் (45–55), மற்றும் முதியோர்கள் (75–95) ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 41 தன்னார்வலர்களிடமிருந்து உடல் நாற்றத்தை ஆய்வு செய்வதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் இளம் மற்றும் நடுத்தர வயது நபர்களுடன் ஒப்பிடுகையில், முதியோர்களின் உடல் நாற்றம் என்பது குறைவான தீவிரம் கொண்டதாகவும், அதிக துர்நாற்றம் இல்லாததாக இருந்ததாகவும் தெரிய வந்தது. இதற்கு காரணம், முதுமை வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. இது வேறுபட்ட 'ஆவியாகும் கரிம சேர்மங்களின்' (விஓசி) உற்பத்திக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, முதியோர்களின் உடலில் அதிக அளவு 2-நோனீனல் (2-nonenal) எனும் சேர்மம் உற்பத்தியாகிறது. இதனால் முதியோர்களிடத்தில் மட்டுமே இருக்கும் ஒரு பிரத்யேக உடல் மணம் (old person smell) உருவாகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. Getty Images முதுமையின் மணத்திற்கும் (old person smell), சுகாதாரத்துக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை முதியோர்களின் இந்த பிரத்யேக உடல் மணம் சிலருக்கு விரும்பத்தகாததாக இருந்தாலும், பெரும்பாலானோர் அந்த மணத்தை தங்களது தாத்தா, பாட்டி மற்றும் வயதான பெற்றோர்கள் குறித்த அன்பான நினைவுகளுடன் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள். அதேசமயம் இந்த முதுமையின் மணத்திற்கும், சுகாதாரத்துக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை. இந்த 2-நோனீனல் சேர்மம் தண்ணீரில் கரையாது. எனவே குளிப்பதன் மூலமோ அல்லது துணிகளை துவைப்பதன் மூலமோ அதை எளிதில் அகற்ற முடியாது. உடல் துர்நாற்றத்தைக் குறைப்பது எப்படி? இயற்கையான உடல் வாசனையை நாம் வெறுக்கக் கூடாது என்கிறார் தோல் மருத்துவர் மித்ரா வசந்த் இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தோல் மருத்துவர் மித்ரா வசந்த், "ஒவ்வொருவருக்கும் என தனித்துவமான, இயற்கையான உடல் வாசனை இருக்கும். அதிக வியர்வையால் அந்த வாசனை, நாற்றமாக மாறும்போது அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு என்று பல வழிகள் உள்ளன. சுலபமான வழி என்றால் டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம்" என்கிறார். ஆனால் அதுபோன்ற டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களை நேரடியாக தோல் மீது அல்லாமல், உடுத்தும் ஆடைகள் மீது பயன்படுத்துவது சிறந்தது என்று கூறுகிறார். "அதுமட்டுமல்லாது, இருமுறை குளிப்பது, பருத்தி ஆடைகளை அணிவது, துர்நாற்றத்துடன் வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் இருக்கும் முடிகளை அகற்றுவது, போன்றவை உடல் நாற்றத்தைக் குறைக்க உதவும். மற்றபடி வியர்வை என்பது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று." "வியர்வையை தவிர்த்தால் உடல் நாற்றத்தை தவிர்க்கலாம் என்ற எண்ணம் நல்லதல்ல. உங்கள் அன்றாட வாழ்க்கையை உடல் துர்நாற்றம் பாதிக்கிறது என்றால், அதற்கு மேற்கூறிய வழிகளைப் பின்பற்றலாம். இல்லையென்றால் அடுத்த கட்ட சிகிச்சைகளும் உள்ளன" என்றும் கூறுகிறார். அளவுக்கு அதிகமான வியர்வையால், உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது என்றால், முறையாக ஒரு தோல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டுமென மருத்துவர் மித்ரா அறிவுறுத்துகிறார். "அதீத வியர்வைக்கு என பிரத்யேக மருந்துகள், சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இதையெல்லாம் தாண்டி உடல் நாற்றம் எப்போதுமே மோசமான விஷயம் அல்ல. இயற்கையான உடல் வாசனையை நாம் வெறுக்கக் கூடாது. அது மிகவும் இயல்பான ஒன்று தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்." என்று கூறுகிறார் மருத்துவர் மித்ரா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0j18jv02exo
  27. டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி? 9 டிசம்பர் 2024 டியாகோ கார்சியா தீவில் தற்காலிக முகாமில் இருக்கும் கூடாரங்கள் "டியாகோ கார்சியா" - இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தின் தொலைதூரப் பவளத் தீவு. இது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவு. பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் இந்த தீவில் அமைந்துள்ளது. இங்கு ஒரு தற்காலிக முகாமில் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு காலை வேளையில் சாந்தியின் கணவர், தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பு வேலியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தார். அங்கு ரோந்துப் பணியில் அதிகாரி ஒருவர் ஈடுபட்டிருந்தார், கூடவே காவல் நாய் ஒன்றும் இருந்தது. அந்த குழந்தைகள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது அந்த காட்சியை தான். "நாய்களுக்குக் கூட நம்மை விட அதிக சுதந்திரம் உள்ளது" என்று அவர்கள் தந்தையிடம் கூறினர். "அவர்கள் சொன்னது என்னை மனதளவில் கடுமையாக பாதித்தது. நான் மனம் உடைந்துபோனேன்" என்று அவர் விவரித்தார். இது அவர்களின் குடும்பம் இக்கட்டான சூழலில் இருந்ததை பிரதிபலிக்கிறது. அவர்கள் தற்செயலாக ஒரு மர்மமான ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களுக்கு 5 வயதில் மகனும், ஒன்பது வயதுடைய ஒரு மகளும் இருந்தனர். இலங்கையில் இருந்து தப்பிக்க முயற்சி டியாகோ கார்சியா சாந்தியின் (அவரது உண்மையான பெயர் அல்ல) குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த சிறிய முகாமில் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்த போதிலும், தங்களால் முடிந்த அளவுக்கு இயல்பாக இருக்க முயன்றனர். குடும்பமாக மகிழ்ந்திருப்பதிலும், படிப்பதிலும், செடிகளை வளர்ப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ரகசிய ராணுவ தீவான டியாகோ கார்சியாவில் தனது குழந்தைகளுக்கு இயல்பான உணர்வை உருவாக்க சாந்தி தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார். சாந்தி பிற இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து 12,000 கி. மீ. தொலைவில் இருக்கும் கனடாவுக்கு செல்ல ஆசைப்பட்டு, ஒரு சட்டவிரோத முகவரிடம் தன் மொத்த சேமிப்புப் பணத்தையும் (சுமார் ரூ. 4.23 லட்சம்), தனது தங்க நகைகள் அனைத்தையும் வழங்கியதாக கூறுகிறார். கடந்த 2009இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் உடனான தொடர்புகள் காரணமாக, துன்புறுத்தல் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில், அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து தப்பிக்க நினைத்ததாகக் கூறினர். மோசமான சூழலிலும் குழந்தைகளுக்கு கல்வி சாந்தியும் அவரது குடும்பத்தினரும் 2021 இல் இலங்கையை விட்டு வெளியேறினர் அவர்கள் சென்ற மீன்பிடி படகு நடுக்கடலில் சேதமடைந்தது. அதன் விளைவாக, ராயல் கடற்படை அவர்களைக் காப்பாற்ற நேர்ந்தது. கடற்படை அவர்களை அக்டோபர் 2021இல் டியாகோ கார்சியாவுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவர்கள் வேலியிடப்பட்ட புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அந்த முகாமிற்கு அழைத்து வரப்பட்ட போது, "கனடா வந்துவிட்டோமோ என்று மகன் கேட்டது" சாந்திக்கு நினைவுக்கு வந்தது. டியாகோ கார்சியா தீவை அடைந்த முதல் ஆறு மாதங்கள், அவரது பிள்ளைகள் தீவில் முறையான கல்வியைப் பெறவில்லை. எனவே, பயிற்சி பெற்ற ஆசிரியயையான சாந்தி, அந்த முகாமில் உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடங்களைக் கற்று கொடுக்கத் தொடங்கினார். இதன்மூலம் அவரின் பிள்ளைகளும் பயனடைந்தனர். "ஆங்கில எழுத்துக்கள், பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் என அடிப்படையான பாடங்களுடன் நாங்கள் கற்பிக்கத் தொடங்கினோம்" என்று அவர் கூறுகிறார். அதன் பின்னர், சாந்தியின் கணவர் அந்த கூடாரத்தில் வீட்டுப்பாடம் செய்ய ஏதுவாக, மரத்தாலான பலகைகளை வைத்து மேசையை உருவாக்கினார். கூண்டுக்குள் அடைப்பட்ட வாழ்க்கை டியாகோ கார்சியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம் "கூண்டுக்குள்" வாழ்வது போன்றது என்று சாந்தி கூறினார் கல்வி கற்க ஒரு சிறிய பாதை உருவானப் போதிலும், மாலை நேரங்களில் குழந்தைகள் சலிப்பை உணரத் தொடங்கினர். எனவே, இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்ற சாந்தி, நடனப் பாடங்களையும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். மேலும், அவரது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல்களை வைத்து நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்தார். இந்த குடும்பம் முகாமுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அவர்கள் இறுதியாக இந்த வாரம் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் நலன்களுக்காக அரசாங்கம் இதை "விதிவிலக்கானது" என விவரித்து, அவர்களை அனுப்பியது. "அந்த முகாம் ஒரு திறந்தவெளி சிறை போன்றது. நாங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் வேலியிடப்பட்ட ஒரு கூடாரத்தில் வாழ்ந்தோம்" என்கிறார் சாந்தி. 30 வயதுகளின் முற்பகுதியில் உள்ள பெண்ணான அவர், லண்டனில் இருந்த போது அளித்த பேட்டியில் இதனை கூறினார். "ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருந்தது. ஒரு கூண்டுக்குள் வாழ்வது போல் இருந்தது" என்று அவர் மேலும் கூறுகிறார். பாதுகாவலர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். ராணுவ ஜெட் விமானங்கள் அவ்வப்போது தலைக்கு மேல் கர்ஜிக்கும். இதனையடுத்து , சாந்தியும் மற்ற இலங்கை தமிழர்களும் தீவில் உள்ள பிரிட்டிஷ் படைகளை அணுகி, பாதுகாப்பான நாட்டிற்கு அனுப்புமாறு கடிதம் கொடுத்ததாக சாந்தி கூறுகிறார். இந்தப் பிராந்தியத்தில் புகலிடம் கோரி கடிதம் கொடுப்பது இதுவே முதல் முறை. இது பிரிட்டனில் 6,000 மைல்களுக்கு அப்பால் ஒரு நீண்ட சட்டப் போராட்டத்துக்கு வழிவகுத்தது. சட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் நடக்க, சாந்தியும் மற்றவர்களும் அந்த தீவில் தங்களுக்கான தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யத் தொடங்கினர். முகாமில் இருந்த தமிழர்கள் அவர்களுக்கான உணவை சமைக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே, அவர்கள் சில காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கினர். அங்கு, தென்னை மரங்கள் நிறைந்திருந்தன. அதிலிருந்து கிடைக்கும் தேங்காய் நாரை பயன்படுத்தி, சாந்தியும் மற்றவர்களும் மிளகாய், பூண்டு மற்றும் வெள்ளரி போன்ற காய்கறிகளை பயிரிட்டனர். முகாமில் விவசாயம் செய்தது எப்படி? முகாமில் மிளகாய் விதைகளும் வெள்ளரி விதைகளும் எப்படி கிடைத்தது என்பதை விவரித்த சாந்தி, "அவர்கள் சில சமயங்களில் சிவப்பு மிளகாயைக் கொடுப்பார்கள். நாங்கள் அவற்றை வெயிலில் காயவைத்து விதைகளைச் சேகரித்து பயிரிட்டோம்." என்றார். மேலும், "எங்களுக்குக் கொடுக்கப்படும் சாலட்டில் சில சமயங்களில் வெள்ளரித் துண்டுகள் இருக்கும். அவற்றில் இருந்து விதைகளை சேகரித்து சூரிய ஒளியில் வைத்தோம். அவை காய்ந்த பிறகு விதைத்துப் பயிரிட்டோம்" என்றார். அவர்கள் ஒவ்வொரு நாளும், தேங்காய் மற்றும் மிளகாயை பிசைந்து 'சம்பல்' என்னும் உணவை தயாரித்தனர். அது இலங்கையின் பிரபலமான உணவு. முகாமில் தங்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க உணவை சாப்பிட சாந்தி உள்ளிட்டோர் சிரமப்பட்டனர். மேலும், காய்கறிகளை பூண்டு மற்றும் மிளகாயுடன் வெந்நீரில் போட்டு குழம்பாக சமைக்க முயற்சித்தனர். முகாமில் இருந்தவர்களுக்கு ஆடை பற்றாக்குறையும் இருந்தது. குறிப்பாக, அங்குள்ள 16 குழந்தைகளுக்கும் போதுமான ஆடைகள் வழங்கப்படவில்லை. எனவே, சாந்தி மற்றும் பிற பெண்கள் படுக்கை விரிப்பை கிழித்து ஆடைகளை தைத்தனர். கிறிஸ்துமஸ் சமயத்தில், அவர்கள் காகித நாப்கின்களை (Tissue paper) பூக்களாக மாற்றி, ஒரு மரத்தை அலங்கரித்தனர். முகாமில் இருந்த காவலர்களுடன் தமிழர்களுக்கு அடிக்கடி பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஆனாலும், "நல்ல உள்ளம் கொண்ட அதிகாரி எங்களுக்கு பிரியாணி கொண்டு வந்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு காவலர் ஆவலாக தன் பிறந்தநாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த என் மகனின் பிறந்தநாளுக்கு கேக் கொண்டு வந்தார்" என்கிறார் சாந்தி. எலிக்கடி தொல்லை புயல் காலங்களில் கூடாரங்கள் மழை நீரால் நிரம்பி வழியும் "என்னதான் எங்களின் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொண்டாலும், நாட்கள் செல்ல செல்ல, உதவியற்று நிற்பது போன்ற உணர்வுகள் அதிகரித்தன" என்கிறார் சாந்தி. "முகாமில் வாழ்க்கை கூண்டுக்குள் இருப்பது போல இருந்தது. யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் வெடித்த பெரும் போர்கள் பற்றிய செய்திகள் முகாம் காவலர்கள் வாயிலாக எங்களுக்கு தெரிய வந்தது." சாகோஸ் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான இந்த தீவுக்கான அணுகல் பெரிதும் தடைசெய்யப்பட்டுள்ளது. 1970களின் முற்பகுதியில் இருந்து பிரிட்டன் அங்கு வசிக்கும் அனைத்து மக்களையும் வெளியேற்றியது முதல், இது அதிகாரப்பூர்வமாக குடியிருப்பு மக்கள்தொகையைக் கொண்டிருக்கவில்லை. இதன்மூலம், அங்கு ராணுவத் தளத்தை உருவாக்க முடியும் என்பதே இதன் நோக்கம். "முதல் நாள் முதல் நாங்கள் அங்கிருந்து புறப்பட்ட நாள் வரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எலிகளுடன் வாழ்ந்தோம்," என்கிறார் சாந்தி. "சில நேரங்களில் எலிகள் எங்களின் குழந்தைகளின் கால், கை விரல்களை கடிக்கும். அவை, எங்களின் உணவை உட்கொண்டன. இரவில் சில நேரங்களில் அவை எங்கள் போர்வைகள் மற்றும் தலையின் மீது ஊர்ந்து செல்லும்." என்று விவரித்தார். "ராட்சத தேங்காய் நண்டுகள் மற்றும் வெப்பமண்டல எறும்புகள் கூட முகாமுக்குள் ஊர்ந்து செல்லும். புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, தார்பாயால் போடப்பட்ட கூடாரங்களின் துளைகள் வழியாக மழை நீர் உள்ளே வரும். மேலும், இந்த கூடாரங்கள் இதற்கு முன்னர் தொற்றுநோய் சூழலின்போது கோவிட் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது." என்றார். கடந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய நாடுகளின் புலனாய்வாளர்கள் முகாமுக்குச் சென்றபோது, குழந்தைகள் அவர்களிடம் "சுற்றுலா செல்வது, சைக்கிள் ஓட்டுவது, ஐஸ்கிரீம் சாப்பிடுவது" போன்ற கனவுகள் இருப்பதாகக் கூறினார்கள். இந்த ஆண்டின் முற்பகுதியில், ஒரு மருத்துவ அதிகாரி இங்கு பெருமளவிலான தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்ததை குறிப்பிட்டு, இந்த முகாம் "முழுமையாக நெருக்கடியில்" இருப்பதாக விவரித்தார். "என் மகள் நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் என்னிடம் 'அம்மா அவர்கள் தங்களைத் தாங்களே வெட்டிக் கொண்டார்கள்' என்றாள். நானும் அப்படி செய்து கொள்ள வேண்டுமா?' என்று கேட்டாள். 'இல்லை, இல்லை. அப்படி செய்யக் கூடாது என்று நான் புரிய வைத்தேன். அவளின் கவனத்தை மாற்ற பேப்பர் எடுத்து ஓவியம் வரைய சொன்னேன்'' என்று அந்த சம்பவத்தைக் கண்ணீருடன் நினைவு கூர்ந்தார் சாந்தி. இரண்டு முறை தங்கள் மகள் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதைப் பற்றி சாந்தியும் அவரின் கணவரும் நினைவு கூர்ந்து கண்கலங்கினர். "என் மகள் இரண்டு முறை தன்னை தானே காயப்படுத்திக் கொண்டாள். அது மிகவும் மோசமான தருணம். ஏன் இப்படி செய்தாய் என்று என் மகளிடம் கேட்டதற்கு, தான் இப்படி செய்தால், அவளின் சகோதரன் பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்குச் செல்வார் என்ற நம்பிக்கையில் இதைச் செய்ததாகச் சொன்னாள்" என்று சாந்தி கூறுகிறார். `உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்’ முகாமில் இருக்கும் பிற புலம்பெயர்ந்தோரால் தங்களுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். "மூன்று வருடங்களாக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்" என்கிறார் சாந்தி. தீவில் தமிழர்கள் வாழ்ந்த காலம் முழுவதும், பிரித்தானிய அதிகாரிகள் அது அவர்களுக்கு ஏற்ற இடம் அல்ல என்பதை ஒப்புக்கொண்டதுடன், நீண்டகாலத் தீர்வுகளைத் தேடுவதாகவும் கூறினர். அங்கிருந்த மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. "அவர்கள் பிரிட்டனுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும், அங்கு ஆறு மாதங்கள் தங்குவதற்கு அவர்களுக்கு உரிமை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்தபோது எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. எங்களின் மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது" என்கிறார் சாந்தி. மகிழ்ச்சியில் அன்று இரவு முகாமில் யாரும் தூங்கவில்லை என்றும் கூறினார். "பிரிட்டனுக்கு வந்தவுடன், குளிர்ச்சியான சூழல் எங்களை உற்சாகப்படுத்தியது. இத்தனை நாள் கோமாவில் இருந்துவிட்டு, எழுந்தது போல் உணர்ந்தேன். மொபைல் ஆப்ஸ்-ஐ பதிவிறக்குவது, வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புவது, கடைகளில் பணம் செலுத்துவது எப்படி என்பதை முழுமையாக மறந்துவிட்டேன்" என்கிறார். சாந்தியின் குழந்தைகள் பள்ளியைத் தொடங்குவது, நண்பர்களை உருவாக்குவது மற்றும் இரட்டை அடுக்கு பேருந்தில் செல்வது பற்றி பேசி கொண்டிருப்பதாகக் கூறுகிறார். ஆனால், குடும்பத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. அவர்கள் எஞ்சியிருக்கும் நம்பிக்கையில் இப்போது பிரிட்டனில் புகலிடம் கோரியுள்ளனர். கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில், அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, சாகோஸ் தீவுகளை மொரீஷியஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது. இன்னும் கையொப்பமிடப்பட வேண்டிய இந்த ஒப்பந்தத்தின் கீழ், டியாகோ கார்சியா பிரிட்டன் - அமெரிக்க ராணுவத் தளமாகத் தொடர்ந்து செயல்படும், ஆனால் எதிர்காலத்தில் குடியேறுபவர்களின் வருகைக்கு மொரீஷியஸ் பொறுப்பேற்க வேண்டும். சாந்தி, டியாகோ கார்சியாவிலிருந்து ஒரு சிப்பியை கொண்டு வந்தார். அங்கிருந்ததன் நினைவாக, அதை தன் செயினில் போட்டு கழுத்தில் அணியப் போவதாகக் கூறுகிறார். சுவாமிநாதன் நடராஜன் வழங்கிய கூடுதல் தகவல்களுடன் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly4n9nng04o
  28. எடுத்தாலும் எனக்கு அதில் பெரிய கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை என்பதை பகிரங்கமாக கூறி கொள்கிறேன். யார் ஜேவிபி… எம்மை… தேசிய இனமாக… அங்கீகரித்து….. சாத்ஸ்சை குஷிபடுத்த வேணும் எண்டா என்ன வேணா எழுதுவீங்களா அண்ணா🤣
  29. ஜே ஆர்- ரணில்லை எம்மால் என்ன செய்ய முடிந்தது? எதுவுமில்லை. ஆனால் நாம் எம் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இப்போதும் அதையே செய்யலாம்.
  30. வெங்காயத்திடமிருந்து வெங்காயம் இறக்குமதி,......😁
  31. இரு தமிழன் (இந்து,கிறிஸ்தவன் தமிழன்),இரு இஸ்லாமியர்(சுன்னி,சியா),இரு சிங்களவர்(கிறிஸ்தவர் பெளத்தன்),ஒரு பறங்கியர் .ஒரு மலே.....அப்பே லாங்கவே மினிசு ...லஙகன்டா
  32. கோஷானும் ஒரு காரணம் என்று இப்பொழுது தெரிகின்றது.................🤣. சென்னையில் விஜய்காந்திற்கு காலில் சில விரல்களை அகற்றிய அந்த வாரத்தில், இவருக்கும் அதே சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஞாபகம். நான் சிறுவயதில் இருக்கும் போது இவரை நன்றாகவே தெரியும். அப்பொழுது நல்ல திடகாத்திரமாகவே இருப்பார். பின்னர் இவரை ஊரில் நான் கண்டதில்லை. பின்னர் இவர்கள் வீடு வீடியோ கேசட்டுகள் வாடகைக்கு விடும் இடம் ஆகியது. அது ஒரு கதை.....................
  33. அன்பால் இணைவோம் ANBAL INAIVOM · Rejoindre Jay R Jayakumar · 1 j · தினம் ஒரு சிறுகதை :-- எலி ஒன்று, வைர வியாபாரி வீட்டிலிருந்த ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது... வியாபாரி, எலி பிடிப்பவனைப் பார்த்து, எப்படியாவது அந்த எலியை ஷூட் செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டான்.. எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன் வந்துவிட்டான், எலியை ஷூட் செய்ய.. எலி அங்கே இங்கேயென்று போக்குக்காட்டி ஓடியதில் திடீரென்று நூற்றுக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன.. அந்த நூற்றுக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது . எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது.. சரியாக குறி பார்த்து, அந்த எலியை டுமீல்.. என சுட்டான். எலி spot out.. வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான். ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைரவியாபாரி கேட்டான். "ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனித்தே இருந்ததே..! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்..! என்ன காரணம்..?" அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்.. "இப்படித்தான்.. பலபேர் திடீர்ப் பணக்காரர்கள் ஆனதும், மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது." உறவுகளும் அப்படித்தான்.. சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி இறைவன் கொடுத்த உறவுகளை அசட்டை செய்துவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள். ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும், நல்ல நட்புமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்.... ......!
  34. 👍................ எனக்கும் இது பெரும் குழப்பமாகவே இருக்கின்றது. சிறிதரனை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றார்கள், அதே நேரத்தில் சுமந்திரனை அதைவிட அதிகமாக வெறுத்துக் கருத்து எழுதுகின்றார்கள். இது வெறும் பிரச்சார மேடை போலத் தான் இருக்கின்றது............. ஒரு கருத்துக்களம் போல அல்ல..............
  35. ஆரம்ப தளம்பல்களின் பின், ஆட்சியாளர்கள் சுதாகரித்துக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன். தனியார் முதலாளிகளின் அரிசிக் குடோன்கள் எங்கே இருக்கின்றன என்பது ஒரு இரகசியத் தகவல் அல்ல. ஆனால், அவற்றை அரசு கையகப்படுத்தலாமா, இல்லையா என்பதே சட்டச் சிக்கல்.
  36. @valavan எனது கருத்து என்பது அரசியல் தீர்மானம் குறித்த விமர்சனமே. அவ்வாறான விமர்சனங்கள் உலகில் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அரசியல் விடுதலை அமைப்புகளின் தலைமைகளுக்கும் பொருந்தும். ஒரு அரசியல் அமைப்பு அல்லது கட்சியின் அரசியல் தீர்மானங்கள் ஒட்டு மொத்தமான ஒரு தேசிய இனத்தின் மீது பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் போதும், அந்த தாக்கம் தலைமுறைகளை கடந்தும் தொடரும் போதும், அதை நோக்கிய விமர்சனங்கள், விவாதங்கள் நடப்பது உலக வழமை. சாதாரணமாக கண்கூடாக தெரியும் இந்த உண்மைகளை திரை போட்டு மறைக்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு என்பது கடந்த கால அரசியலை எதிர்கொண்டதில் ஏற்பட்ட தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளும. காரணமாக இருக்கும் போது அவற்றை பற்றி உரையாடுவது தவறானதல்ல. இங்கு அரசியலில் புனிதப்படுத்தலுக்கு இடமில்லை. அரசியல் தீர்மானங்கள் முடிவுகள் புனிதமானவை அல்ல. அரசியல் தலைமைகளை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டாதாக புனிதப்படுத்துதல்(sanctification )என்பது மிக தவறான முன்னுதாரணம். அவ்வாறு செய்வது அது சார்ந்த சமூகத்திற்கே தீமை விளைவிக்கும். ஒரு பழைய அரசியல் தலைமைகளை புனிதப்படுத்துவதானது, அவர்களது தவறான தீர்மானங்களையும் முடிவுகளையும் சிக்கலின்றி மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது ஒரு தலைமுறையின் அரசியல் தவறுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. ஒரு அரசியல் தலைமையின் தீர்மானங்கள் இவ்வாறு புனிதப்படுத்தப்பட்டால் அந்த அரசியலை உள்வாங்கி, அதை முன்னுதாரணமாக தொடரும் புதிய தலைமுறையும் அதே பாணியை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும். அதே எதிர்பார்பபில் எந்த பொறுப்புத்தன்மை ( Accountability) இல்லாத முடிவுகளை மீண்டும் எடுக்கும். மூன்று தசாப்சங்களுக்கு முன்பான ஒரு அரசியல் தீர்மானத்தை பற்றி பேசக்கூடாது என்று இப்போது அச்சுறுத்தல் வருகிறது என்றால் அந்த சுதந்திர போராட்டம் மக்களுக்கானதில்லையா? ஆகவே திரும்பவும் கூறுகிறேன் ஒரு அரசியல் இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது ஒரு போதும் மாவீரர்களை இழிவு படுத்துவதாகாது. அவ்வாறு நீங்கள் கருதுவது உங்கள் உரிமை உங்களுக்கு அந்த கருத்து இருக்கலாம். ஆனால் , அதை நீங்கள் என்மீது திணிக்க முற்படுவது தவறானது. அதை நான் ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை.
  37. சத்தியமூர்த்தி ஏழரை சனி தொடங்கி விட்டது இதுவரை நடந்த ஊழல் அம்பலம் ஆகப் போகிறது என்று கவலைப்படுகிறார் அவரிடம் [டக்ளஸ் ] துப்பாக்கி இருந்தது அடிபெடி இருந்தது அரசாங்கம் இருந்தது அருச்சுனாவிடம். என்ன உண்டு ??? பயப்பட. இன்னும் கொஞ்ச நாள் சிறையில் போட விரும்புகிறார்கள் ஆனால் இந்த சாவகச்சேரி மக்கள் எனது தொகுதி மக்கள் அர்ச்சுனாவை கடவுளாக. பாரக்கிறார்கள 🤣🤣. எனவே… சத்தியமூர்த்தி வெல்ல முடியாது தோல்வி நிச்சயம்
  38. அம்பாந்தோட்டையில். 20 லட்சம் தொன் நெல் 20 லட்சம் தொன் அரிசி பதுக்கி வைக்க பட்டதை பிடித்து உள்ளார்கள் செய்தி உண்மையா??? சிங்கப்பூர் இல் 100 % இறக்குமதி தான் அங்கு பதுக்கலில்லை என்று நினைக்கிறேன் ப பதுக்குவோரின. உணவு பொருள்கள் பதுக்குவோரின். வியாபார. அனுமதி ரத்து செய்ய வேண்டும் இரண்டு மடங்குகள் அபராதம் விதிக்க வேண்டும் உணவுப் பொருள்கள் தடடுப்பாடாது.
  39. எனக்கு பிடித்திருந்தது...வெள்ளைக்கார நாட்டில் நிக்கிற பீலிங் இருந்தது...வெளிநாட்டு பயணிகள் வரும் இடத்தை விட மற்றைய இடங்கள் அமைதியாய் இருந்தது ..அங்கிருக்கும் மக்கள் சோம்பேறிகளாவும்,துவேசம் பிடித்தவர்களாய் இருப்பார்களோ என்று ஒரு சந்தேகம் ...ஜெர்மனியின் மற்ற இடங்களையும் வந்து பார்க்க வேண்டும் என்று ஆவல்
  40. பெருமாளுக்கு உங்களோட புடுங்குப்படாட்டி பத்தியப்படுறேல்லையெண்டு தெரிஞ்ச விசயம் தானே தங்கச்சி!😂 நான் யாழ்களத்துக்கு வாற நேரமெல்லாம் உங்களை நினைக்காமல் போனதேயில்லை.....ஏனோ தெரியேல்லை. உங்கள் எழுத்துக்கள் எனக்கு மட்டுமில்லை யாழ்களத்தில் உள்ள எல்லோருக்குமே பிடிக்கும் என நினைக்கின்றேன். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். அது எதிர்மறையான கருத்துக்களாகவும் இருக்கட்டும். 👈
  41. ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு ஒரு மகன். வயசான காலத்தில் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைப்பு தேடி பட்டணத்துக்கு வந்தான் அந்தப் பையன். அங்கே இங்கே தேடினான் வேலை கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு ஆள் இந்த பையனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். முதலில் சிலநாள் எந்த வேலையும் கொடுக்கவில்லை. பிறகு ஒரு நாள் அவனை கூட்டிக்கொண்டு ஒரு எருமை மாட்டுத் தோலை அவனிடம் கொடுத்தார். ஏன் எதற்கு என்று கேட்காமல் இவன் அதை வாங்கிக்கொண்டான். அப்புறம் அவர் ஒரு நான்கு கோணிப் பைகளை எடுத்துக் கொண்டார். ஒரு ஒட்டகத்தை ஏற்பாடு செய்தார். புறப்படு போகலாம் என்றார். இவன் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. முதலாளி கூப்பிடுகிறார் சரி என்று புறப்பட்டான். இரண்டு பேரும் சேர்ந்து அந்த ஒட்டகத்தில் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகியது. போய்க் கொண்டே இருந்தார்கள். ஒரு பெரிய செங்குத்தான மலை வந்தது. ஒட்டகத்தை நிறுத்தினார். பையன் இறங்கினான். அவர் சொன்னார் இதோ பாருப்பா இந்த மாட்டுத் தோலை விரித்து அதிலே படுத்துக் கொள் என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் முதலாளி சொல்கிறார் என்று படுத்து கொண்டான். உடனே அவர் அந்த எருமை தோலை நான்கு பக்கமும் எடுத்து ஒன்றாக்கி ஒரு கயிற்றினாலே கட்டினார். உள்ளே அந்த பையன். இவர் அவனை அப்படியே கட்டிப் போட்டு விட்டு விலகி வந்த ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். அங்கே அவர் கட்டிப்போட்டது ஒரு எருமை மாடு மாதிரி தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் இரண்டு பெரிய கழுகுகள் அங்கே பறந்து வந்தன. அந்த எருமை தோல் மூட்டையை அப்படியே தூக்கி கொண்டு உயரப் பறந்து போய் அந்த செங்குத்தான மலை உச்சியில் போட்டன. அலகால் கொத்தின. உள்ளே இருந்து ஒரு பையன் வெளியே வருவதை பார்த்ததும் அந்த கழுகுகள் பயந்து ஓடிவிட்டன. அந்த பையன் அங்கே பார்க்கிறான் அவன் காலடியில் ஏராளமான நவரத்தினங்கள் கொட்டிக் கிடந்தன. கீழே நின்று கொண்டிருந்த முதலாளி ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறாய். உன் காலடியில் கிடக்கிற கற்களைப் பொறுக்கி கீழே போடு என்றார். அவன் போட ஆரம்பித்தான். முதலாளி நான் எப்படி கீழே இறங்கி வருவது என்று கேட்டான். நீ முதலில் போடு அப்புறம் அதற்கு வழி சொல்கிறேன் என்றார். நான்கு சாக்கும் நிரம்பியது. சேர்த்துக் கட்டி ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் முதலாளி. முதலாளி என்று கத்தினான் அவன். முட்டாளே என் வேலையாட்களுக்கு எப்படி வேலை கொடுக்கிறேன் என்பது புரியவில்லையா? அந்த மலை உச்சியில் பின்னால் திரும்பிப் பார் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது புரியும் என்று சொல்லி விட்டு போய்விட்டார். பையன் திரும்பிப் பார்க்கிறான் அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள். ஆகா ஏமாந்து போய்விட்டோம் என்பதை புரிந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில் ஒரு கழுகு தலைக்கு மேலே பறந்து வந்தது. இவன் ரொம்ப சாமர்த்தியமாக ஒரே தாவலில் அதன் காலை பிடித்துக் கொண்டான். கழுகு பயந்துபோய் மேலே பறந்தது. கடைசியில் களைத்துப் போய் கீழே இறங்கத் தொடங்கிவிட்டது. இவன் தரையில் குதித்து தப்பித்துக் கொண்டான். கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் பழைய முதலாளியிடம் போய் வேலை கேட்டான். அவருக்கு ஆச்சரியம் இவன் எப்படி தப்பித்தான் என்று இருந்தாலும் இவன் வேற யாரோ அவன் சாயலில் இருக்கிறான் என்று நினைத்து வேலையில் சேர்த்துக் கொண்டார். இரண்டு நாள் கழித்து வழக்கம் போல நாலு சாக்கு எடுத்துக் கொண்டு அவனையும் அழைத்துக்கொண்டு அந்த மலைப் பக்கம் போனார். எருமை தோலை தரையில் விரித்து படுக்க சொன்னார். உடனே இவன் புத்திசாலித்தனமாக முதலாளி எனக்கு எப்படி படுப்பது என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் படுத்துக் காட்டினால் நன்றாக இருக்கும். அவரும் எதார்த்தமாக இதுகூட தெரியவில்லையா? என்று சொல்லிக் கொண்டு அதில் படுத்தார். அவ்வளவுதான் உடனே அவன் திடீரென்று அப்படியே சுருட்டி கட்டிவிட்டான். கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல் இரண்டு கழுகுகள் வந்து தூக்கிக் கொண்டு போய் அந்த நவரத்தின மலை உச்சியில் போட்டன. மூட்டையை பிரித்து முதலாளி வெளியே வந்தார். கீழே இருந்து பையன் கத்தினான். நேரத்தை வீணாக்காதீங்க. ரத்தினக் கல்லை எல்லாம் பொறுக்கி கீழே போடுங்க என்றான். அவருக்கு புரிந்து போனது இவன் பழைய ஆள்தான். சரி சரி மலை உச்சியில் இருந்து எப்படி கீழே இறங்கி வந்தாய். அதைச் சொல் முதலில் என்றார். முதலில் ரத்தினக் கல்லை பொறுக்கி கீழே போடுங்கள் அப்புறம் சொல்கிறேன் என்றான். வேற வழியில்லை பொறுக்கிப் போட்டார் நான்கு சாக்குகளிலும் கட்டிக்கொண்டு ஒட்டகத்தில் ஏறி புறப்பட்டான். முதலாளி கத்தினார். தப்பித்தது எப்படி என்பதைச் சொல்லாமல் போகிறாயே என்றார். உங்களுக்குப் பின்னால் இருக்கிற எலும்புக்கூடுகளின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். இது ஒரு துர்க்மெனிய நாட்டு கதை.
  42. கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ள நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ்வுத்தரவு இராணுவ தலமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/கற்கோவளம்_இராணுவ_முகாமிலிருந்து_இராணுவத்தினரை_வெளியேறுமாறு_உத்தரவு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.