Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    88842
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46979
    Posts
  3. satan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    10280
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19678
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/14/24 in Posts

  1. முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில் பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂
  2. ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல் காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர். சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.
  3. குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம் எழுத்துப் பழக்கம் ஏற்படும் முன்பே அடியேனுக்கு மேடைப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. எழுத்திற்காக எனக்குக் கொம்பு சீவி விட்டவள் என் மகள் சோம.அழகு என்றால், மேடை நோக்கி என்னை ஏவி விட்டவர்கள் எனது MUTA தொழிற்சங்கத் தோழர்கள். எனது எழுத்திற்கு நானே வாசகனாய் மனநிறைவு கொள்வதுண்டு. மேடையைப் பொறுத்தவரை பெரும்பான்மை மேடைப் பேச்சாளர்களின் வரையறையில் நான் நிற்பதில்லை என்பதே என்னைப் பற்றிய எனது கணிப்பு (அவர்கள் அப்படி ஏதோ வரையறை வைத்திருக்கிறார்கள் என்பது எனது கற்பனையாகவும் இருக்கலாம்). மேடையின் கீழே நின்றுகொண்டு நான்கைந்து பேர் கொண்ட நண்பர் குழாமில் எப்படிப் பேசுவேனோ அப்படித்தான் மேடையிலும் எனக்கு வருகிறது. பேசும்போதே யோசித்துக் கொண்டு, சொல்ல வந்தது பாதி வாக்கியத்திலேயே தெளிவானால் அடுத்த வாக்கியத்திற்குத் தாவி விடுவது, பேச்சில் முன்னும் பின்னும் செல்வது இவையெல்லாம் நீங்களும் நானும் அன்றாட உரையாடலில் அவை பற்றிய உணர்வே இல்லாமல் நடைமுறைப் படுத்துவது. மேடையிலும் இது அனிச்சைச் செயலாக வருவதே என் மேடைப் பேச்சு. இது குறையா நிறையா என்று நான் ஆய்வு செய்யும் முன்பே, அந்த என் பேச்சு இயல்பாக இருப்பதாக எனது நட்பு வட்டம் எனக்கு முறுக்கேற்றி விட்டது. அதனால்தானே அது நட்பு வட்டம் ! குறிப்பாக என் குருநாதர் பேரா.தொ.பரமசிவன் அவர்கள் அந்த என் பாணியை மாற்ற முயல வேண்டாம் என அறிவுரைத்து, அது மேடையில் வேறாகத் தெரிவதே ரசனைக்குரியது என்று குறித்தது நான் எதிர்பாராத ஒன்று. மாற்ற முயன்றாலும் என்னால் இயலுமா என்பது வேறு. என்னுள் ஏற்பட்ட இந்த சிந்தனையை உங்கள் முன் சிதறி விட்டேன். எடுத்துக்காட்டாக எனது சமீபத்திய சிற்றுரைகளுக்கான இணைப்புகளைக் கீழே தந்துள்ளேன். ஒன்று, நண்பரின் புத்தக வெளியீட்டில்; மற்றொன்று, ஜமாஅத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில். புதிதாக மேடையேற நினைக்கும் இளையோருக்கு, அவர்கள் எடுக்கவும் விடுக்கவும் இங்கு சில விடயங்கள் அமையலாம். (1) (2) https://drive.google.com/file/d/1VezZulqg8lUh9rqkM8XRPDGUA92w2cqk/view?usp=drivesdk இக்காணொளிகள் எனது சமீபத்திய கட்டுரைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன. வாசிக்க நேரமில்லாதோர் கேட்கலாம்.
  4. உங்கள் கருத்தை கவனித்தில் எடுக்கிறேன். எனக்கு அருச்சுனா மீது காழ்புணர்ச்சி ஏதும் இல்லை. ஆனால் ஆஸ்பத்திரி தமிழ் செக்கூரிட்டியை சி ஐ டி யிடம் பிடித்து கொடுப்பேன் என அவர் மிரட்டிய வீடியோ பார்த்தேன். அதில் அகங்காரத்தை தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை.
  5. திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
  6. அது சரி தெரியாமல் கேக்கிறன்.....😎 சிலோன் வரலாற்றிலை எப்ப கூப்பன்மாவிலையும்,கூப்பன் அரிசியிலையும் வண்டு,புழுக்கள் இல்லாமல் இருந்தது? 🤣 பாணிலை கூட வண்டு இருந்தால் அப்பிடியே நுள்ளி அங்காலை எறிஞ்சு போட்டு ஒண்டு தெரியாதமாதிரி சம்பலோட ஒரே அமுக்காய் அமுக்கிற ஆக்கள் எல்லோ நாங்கள்....
  7. மாவை இராஜினாமாசெய்வதாக அறிவித்தது அவருக்கு தேர்தலில் போட்டியிட சுமத்திரன் தரப்பப பெரும்பான்யைhகக் கொண்ட தேர்தல்நியமனக்குழு அனுமதியளிக்காத கடுப்பில். அ(.அவருக்கு மட்டுமல்ல சிறிதரனுக்கும் அனுமதி மநறுக்கப்பட்ட பொழுது நான் போட்டியிடக்கூடாதென்றால் சுமத்திரனும் போட்டியிடக்கூடாது என்று வாதாடியமையால் வேறு வழியின்றி சம்மதித்தனர்).வரது ராஜினமாக்கடிதம் தனக்கு கிடைக்க வில்லை என்று செயலாளர் சத்தியலிங்கம் அறிவித்திருந்தது.குறிப்பிடத்தக்கது.அப்படியாயின் சட்டப்படி அவரே தொடர்ந்து லைவராக இருக்க முடியும். கட்சித்தலமை சுமத்திரன்கைக்குப் போகக் கூடாது என்றே மாவை இந்த தள்ளாத வயதிலுத் தான்தான் தலைவர் என்று அடம்பிடிக்கிறார். சுமத்தரன்கையில்தலைமை இருப்பதிலும்பார்க்க அறளை பேந்த மாவையின் கையில் தலைமை இருப்பது நல்லது.
  8. 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........
  9. விளிம்பில் கறுப்பாக தெரிவது கருக்கு என்று சொல்வோம் அண்ணை.
  10. அர்ச்சனா உண்மையில் கோமாளியா அல்லது யாழ்பாண/புலன்பெயர் தலைமுறையின் மனோநிலையை நன்கு Stady பண்ணிய மனோதத்துவவியலாளரா? பிரச்சனைகளை தீர்ப்பதை விட பிரச்சனைக்கு காரணமானவராக தம்மால் கற்பிதம் செய்தவர்களை நடுசந்தியில் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாலே ஆர்கஸம் அடையும் மனோநிலை கொண்ட ஒரு கூட்டத்தை திறமையாக புரிந்து கொண்டு செயற்படுகிறார். இவரது செயற்பாடுகள் வெறும் பேஸ்புக், யுருயூப் விசிலடிப்புகளுக்காக மட்டுமே. தொண்டர் உதவியாளர்கள் என்ற பிரச்சனை 2002 ம் ஆண்டில் இருந்து உள்ள பிரச்சனை. அதை பற்றி அர்சனாவுக்கும் நீண்ட காலமாக தெரியும். இதனை சுகாதார அமைச்சுன் கவனத்துக்கு வருவதற்கான போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று அந்த விடயம் ஒரளவு அது முன்னேற்ற மான நிலையிலும் உள்ள நிலையில் அதனை மென்மேலும் வலுப்படுத்தக்கூட வகையில் சுகாதார அமைச்சுடன் நேரடியாக பேசக்கூடிய இயலுமை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அர்ச்சனாவுக்கு உண்டு. இருப்பினும் அதை விடுத்து சத்தியமூர்த்தி அவர்களின் அலுவலக்கதுக்குள் அத்து மீறி நுளைந்தது அவரோடு இவருக்கு இருக்கும் தனிபட்ட ஈகோவுக்காகவும் இவரது சமூகவலைதள விசுலடிச்சான் குஞ்சுகளுக்காகவுமே. மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சனையாக கையிலெடுத்தி ருக்கக்கூடிய நிலையை புரிந்து கொண்டு இவ்வாறு தடாலடியாக இவர் நடந்து கொள்வதும் ஒரு தந்திரம் தான். தானாக கனியும் கனிகளை தான் புகைபோட்டு தான் கனிந்தது என்ற பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதும் நோக்கம். ஏற்கனவே மருத்துவர்களைக்கெதிராக இவரது குற்றச்சாட்டுகள் இவரால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு மக்களுக்கு காட்டப்பட்டது. எதற்கும் இவரிடம் ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத, அவதூறுகளை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் ஒரு மக்கட் கூட்டதை நன்கு புரிந்து செயற்படுகிறார். பொதுத் துறை ஊழலை ஒழிக்க உண்மையாக மனப்பூர்வமாக இவர் விரும்பினால் ஆதாரங்களை திரட்டி அதை அரசிடம் கையளிக்கலாம். பாராளுமன்றத்தில் ஆதாரங்களை முறைப்படி வெளியிடலாம்.
  11. நான் அர்ச்சனா ஆதரவாள்ன் ..இல்லை...செய்வது தவறாக இருக்கலாம்...நான் ஊரில் நின்றநேரம் சில அலுவல்களுக்காக் அலுவலகங்கள் சென்றபோது..கண்டவை ...அலுவலர் திமிர்த்தனம்.. அலட்சியம்..ஊழல்...பொதுநலநோக்கு கிடையவே கிடையாது..சுயநலம் ...எத்தனையோ திட்டங்கள் இவர்களின் அசமந்தப் போக்கால் ..அரைகுறையாக கிடக்கின்றன...போட்டிமனப்பான்மை கிடைக்கின்ற காசுகளும் திரும்பிவிடுகின்றன.. இப்படி பலவற்றை கண்டேன்...என்னைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் ..இந்த நேரடிக் கேள்விகள் ..வடகிழக்கில் உண்மையான அபிவிருத்தி நடைபெற உதவலாம்..ஆனால் அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்
  12. ஆமா ....முன்பு சுமந்திரனும் காலதாமதமாக வந்துள்ளார். இருக்கட்டும்.... என்ன காரணம் என்று கேட்டால் குறைந்தா போய்விடுவார்கள்? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் என்ன ஆவது? இவ்வாறு சக உறுப்பினர் மீது கரிசனை இல்லாதவர்கள் மக்களை எப்படி அணுகுவார்கள்? நல்லவேளை, சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்படுவார் என்கிற செய்தி வந்ததும், விசாரணைக்கு அழைத்துச் சென்றதும் சாணக்கியன் தப்பித்துக்கொண்டார். இல்லையென்றால் முந்திய வரலாற்றை மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறன். அர்ச்சுனனையும் அனுராவையும் மக்கள் தெரிந்தெடுக்க யார் காரணம் என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்களுக்கு தெரியும். மக்கள் அல்லல் படும்போது அதை தடுக்க திராணியில்லை, கட்சிக்குள் குடைச்சல், மக்கள் தமக்கு உதவக்கூடியவர்களை தெரிந்தெடுத்தார்கள். சும்மா இருப்பதற்கு மக்கள் ஏன் வாக்குபோடவேண்டும்? அதிகாரம் செலுத்தவும் மக்களை குறை சொல்லவுமா?
  13. மத்திய கிழக்கு முழுவதுமே ஓரளவுக்குமேல் நாகரீகமடையாத மக்கள் கூட்டத்தைக் கொண்டது. இந்த வகையான ஆட்சிக்குத்தான் அது பழக்கப்பட்டது. அங்குள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கை முறைகளை உற்றுக் கவனித்திருந்தீர்களென்றால் அது ஏன் என்று புரியும். குர்ரானைக் கட்டிப்பிடித்து வரிக்குவரி அதனைக் கடைப்பிடிக்க முயற்சித்தால் இது அப்படியே தொடரும்.
  14. கருக்குமட்டை எல்லாம் வேண்டாம் பெருமாள் ........கருத்துக்கள் வைத்தால் போதும் . ........எனக்கும் திண்ணை இருப்பது விருப்பம் . ...... எதாவது ஒரு விரைவில் பெற்றுக் கொள்ளலாம் . ...... அதேநேரத்தில் தங்களின் பல வேலைகளுக்கு இடையில் மட்டுறுத்தினர் இங்கு வருகிறார்கள் . .....அவர்களின் நிலைமைகளையும் புரிந்து நயமான கருத்துக்களை நாங்கள்தான் பொறுப்போடு இட வேண்டும் . ........! 😁 ஏதாவது ஒரு தகவல்கள் . ......!
  15. இந்து முறைப்படி… ஈமச்சடங்கு செய்துள்ளார்கள் போலுள்ளது. 🥸
  16. பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.
  17. இதை தான் ரணில் அனுபவ ரீதியாக சொன்னவர் ...எல் போர்ட் அரசு எண்டு... அதுசரி.. இதையெல்லாம் தோழர் அனுரா சுங்க திணைக்களத்துக்கு போய் பார்வையிட ஏலாது .. இது என்ன சினிமாவா மூன்று மணித்தியாலத்தில் தோழர்கள் நினைத்த சோசலிஸ்ட் ரட்டையை உருவாக்குவதற்கு ..30 வருடங்களுக்கு மேல் செல்லும் அதுவரை தாக்கு பிடிக்க வேணும்...புயல்,காற்று ,ஊழல்,இனவாதம்,பூலோக அரசியல் ....இப்படி பல பூதங்கள் இவரை சுற்றி வலம் வரும்... பாகிஸ்தானில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய பிளான் போடுதோ ஒரு குறூப்
  18. Valavan எழுதியதற்குப் பதில் எழுதியிருக்கிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? விடுதலைப் போராட்டத்திற்கு தாங்கள் உழைத்தவர் என்று நீங்கள் கூறுகின்ற காரணத்தினாலேயே உங்களைக் கனம் பண்ணுகிறேன். அதற்காக விபு க்களுக்கு சொந்தம் கொண்டாட நினைப்பது மாகா தப்பு,.... நினைவில் வைத்திருங்கள். 😏
  19. நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.
  20. திண்ணையை பற்றி திரும்பவும் வாய் திறக்கும் ஆக்களுக்கு கருக்கம் மட்டையால (அந்த இடத்திலதான்) அடிவிழும் என்று அதிபர் சொல்லப்போகின்றார்.
  21. உண்மைகளை மூடி மறைத்தால் அது மேற்குலகுக்கு ஆதரவானது என்றும் உண்மைகளை சொன்னால் அது மேற்குலகுக்கு எதிரானது என்று ஒரு புதிய கொள்கை வகுக்கப்படுகிறது யாழ் களத்தில். உண்மையைச் சொல்வது ❤️ லைக் வேண்டுவதற்காக அல்ல.
  22. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த முன்னாள் ஜிகாதிகள் கையில் ஒட்டு மொத்த சிரியாவும் விழவில்லை. முன்னாள் ஜிகாதிகள் என்பதில் பல ஐஎஸ் ஆட்களும் உண்டு. இவர்களுக்கு பெயர்தான் முன்னாள் ஜிகாதிகளே தவிர இவர்கள் ஐஎஸ் போல மிலேச்சர்கள்தான். IKR எனப்படும் ஈராக்கி கேர்டிஸ்தான் போல சிரியாவில் வடக்கே பல நிலத்தொடர்புள்ள இடங்கள் குர்தி இன போராளிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. முன்னாள் ஜிகாதிகள் எஞ்சிய இடத்தை Free Syrian Army உட்பட்ட ஏனைய குழுக்களுடன் பங்கிடுகிறார்கள். முன்னாள் ஜிகாதிகள் இப்போ துருக்கியின் நண்பர்கள். ரஸ்யா தன் வான், கடற் படை தளங்களை இன்னும் அகற்றவில்லை. அசாத்தை கைவிட்டு விட்டு, இப்போ முன்னாள் கிளரையாளர்களுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். இனி சிரியாவில் ஒரு நிழல் யுத்தம் உள்நாட்டு போர் என்ற பெயரில் அரங்கேறும் என்றே நான் நினைக்கிறேன். இதில் முக்கிய பாத்திரம் துருக்கி, ரச்யாவுக்குத்தான் இருக்கும், ஆனால் பலவீனப்பட்டு வடகொரியாவிடம் படைகளை யாசிக்கும் நிலையில் உள்ள ரஸ்யாவால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை - மேற்கு FSA, குர்தீக்களை போசிக்க முனையலாம் - டிரம்ப் இதில் தலையிடேன் என அறிவித்து விட்டார். உண்மையில் இதில் ஆர்வம் உள்ள எல்லோரும் James Barr எழுதிய The Line in the Sand புத்தகத்தை வாசிக்க வேண்டும். வரைபடத்தை பார்த்தால் தெரியும் சிரியா, ஈராக் பகுதியில் எல்லை ஒரு ரூலரை வைத்து நேர் கோடு அடித்தது போல் இருக்கும். உண்மையில் நடந்ததும் அதுவே. இவை இயற்கையாக அமைந்த இனவழி தேசிய நாடுகள் அல்ல. அசாத், சதாம், கடாபி போன்ற கொடுங்கோலர்களின் இரும்புபிடி உடைய - நாடுகள் இன, மத உட்பிரிவு அடிப்படையில் உடைவது தவிர்க்கவியலாதத்து. மார்ஷல் டிட்டோவுக்கு பின் யூகோஸ்லாவியாவில் நடந்ததும் இதுவே.
  23. இலங்கையை பொறுத்தவரை அப்படித்தான் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் மாற்றி வைத்துள்ளார்கள். பிரச்சினைகளின் தீவிரத்தை உணராதவர்கள்தான் ... அது வேறு, இது வேறு என்று "பொய்ச் சமாதானம்" சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். காகம் எல்லாம்... கறுப்பு என்ற மாதிரித்தான், இலங்கையின் புத்தர் சிலையும்.
  24. இருக்கும் இருக்கும். சில கொள்ளையர் குழுவாகவும் செய்கிறார்கள், ஆகையால் சங்கமமைத்து அதற்கு நேர, இட, அட்டவணை போட்டு செய்வார்கள், பிறகு பங்கு பிரிப்பதில் சண்ட பிடிக்கவும் கூடும், அதன் பின் பிரிந்து சுயமாக தம் தொழிலை தொடர்வர். டக்கிளஸ் கூட ஓய்வுபெற்ற பின் என்று பிடித்தாராமே சம்பளத்திலிருந்து. அரசாங்க உத்தியோகத்தருக்கு தானாகவே ஓய்வூதியத்துக்கென ஒதுக்குகிறார்கள் அவர்கள் சம்பளத்திலிருந்து. அதில இவர் வேற பிடிக்கிறேனென கூறி ஏப்பம் விட்டிட்டார்.
  25. 2006 - 2009 வரை தமிழர் தாயகத்தில் வகை தொகையின்றி சிறீலங்கா ராணுவத்தினரால் கொல்லப்பட்டபோது அதனை இந்தியாவில் நியாயப்படுத்தி அறைகூவித் திரிந்த இந்த நபர் இன்று மரணம். Kunalan Karunagaran
  26. அரசுக்கு வரி கட்ட தேவையில்லை ஒரு சந்தேகம் இவர்களுக்கும் தொழிற்சங்கம் இருக்குமோ
  27. நான், அவரின் ரசிகை இல்லை ...ஆனால்,தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அதிகார வெறியில் ஆடுபவர்களுக்கு இவரை போல கேள்வி கேட்பவர்கள் அவசியம். முறையான அனுமதி இல்லாமல் அங்கு போக முடியாது என்று அவருக்குத் தெரியும்...போனது அவர்களுக்கு பயம் காட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இவர் செய்தது சரி என்று தான் சொல்கிறார்கள் ....ஏதோ ஒரு தேவைக்காய் அன்றாடம் வைத்தியசாலைக்கு போய் வருபவர்களுக்கு தான் அங்கு காவலிருப்பவர்கள் செய்யும் அநியாயம் தெரியும்.இந்த வைத்தியசாலை காவலில் இருக்கும் கொம்பனி யாருடையது என்பதும் , அந்த காவலில் இருப்பவர்கள் எத்தனை பேரை காலால் எட்டி உதைத்து அடித்து இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்கும். அல்லது தெரிந்திருந்தாலும்,அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை இங்கு அர்ஜுனாவை எதிர்ப்பது தானே முக்கியம் என்று எழுதி கொண்டு இருக்கிறீர்கள். நீங்களும்,மற்றவர்கள் மாதிரி ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காய் அவர் செய்யும் எல்லா செயல்களையும் எதிர்ப்பது ஆச்சரியமளிக்கிறது .
  28. மெல்லிய நகைச்சுவை கலந்த அருமையான மேடைப் பேச்சு. 👍🏽 மனதார ரசித்து கேட்டேன். நன்றி சுப. சோமசுந்தரம் ஐயா. 🙂
  29. நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
  30. பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.
  31. பேச்சு நன்றாக இருந்தது ஐயா
  32. அந்த கூட்டம் தொடர்பான காணொலி ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை, நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  33. நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன். நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல. எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும் அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா? தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள் அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை? அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
  34. அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித இருக்குமோ இருவருக்கும்?
  35. இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......! 😂
  36. 👍.................... பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை தான். முழு ஆதரவும் கொடுத்து, எப்போதும் தூக்கிச் சீராட்டியதும் தமிழ்நாடு அரசு தான்............... சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் திடீரென தூக்கத்தில் இருந்து எழும்பி இருக்கின்றார்கள்................ இவர்களால் தான் சீமானுக்கு வேலை வருகின்றது................🤣 தெலுங்கு வழியாக வந்த தமிழர்கள் கோடிக் கணக்கில் இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில். கருணாநிதியின் குடும்பத்தையும் இப்படித் தானே சொல்கின்றனர். உதயநிதியும் 'தெலுங்கு பாய்' தான் இவர்களின் கணக்குப்படி.................. இதைத் தானே கஸ்தூரி சொல்ல ஆரம்பித்து, பின்னர் அவரைத் தேடிப் பிடித்தார்கள்.......😜.
  37. முன் பின் அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 😂
  38. ChessMood · Suivre 17 h · The updated list of the World Chess Champions The reigning World Champion: Gukesh Dommaraju பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......! 💐
  39. அனுர காலமல்ல ஜேஆர் காலத்திற்கு முன்பாக இருந்தே சிங்கள கட்சிகளுக்கு தமிழர் பிரதேசங்களில் கணிசமான வாக்குகளும் ஆதரவுகளும் இருந்துள்ளதை மறக்க/ மறைக்க முடியாத துர்ப்பாக்கய வரலாறு தமிழர்களுக்கு உண்டு.
  40. அல்லாரும்... ஒண்ணுக்க ஒண்ணா இருந்தா... ஒலகத்தில சண்டை ஏது, சச்சரவு ஏது. 😂 🤣
  41. ஐயா.. சாரே.. Gentleman..!🙏 திண்ணை இல்லாதது களையிழந்து போச்சுது.. கொஞ்சம் கருணை காட்டி திண்ணையை கொண்டு வாருங்கள்..🪹 யாரையும் நலம் விசாரிக்கக் கூட முடியவில்லை..!😢
  42. மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் முற்றிலும் இலவச Software Engineering பாடநெறி இலங்கை கணினிச் சங்கத்தின் அங்கீகாரத்தின் கீழ் DP Education அனுசரணையில் மொறட்டுவை பல்கலைக்கழகம் இலவச மென்பொருள் பாடநெறியை வழங்குகிறது. Trainee Full Stack Developer எனப்படும் இந்த பாடநெறியானது software engineering மற்றும் web development அறிவை வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பாடநெறியில் பின்வரும் விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன. 1. Python for Beginners 2. Web designing for beginners 3. Python programming 4. Front-end web development 5. Server-side web programming 6. Professional practice in software development (Soft skills & Technical skills) பாடநெறி முடிவில் பெறுமதிமிக்க சான்றிதழும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும். இன்றைய நாட்டு நிலைமையில் சாதாரண தரப் பரீட்சை ,உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர் மாணவர்கள் IT படிக்கிறேன் என்று பணத்தை அள்ளி செலவழிக்காமல் இத்தகைய பெறுமதியான இலவச பாடநெறியை கருத்திற் கொள்ளவும். நீங்களும் இவ்விலவச பாடநெறியை கற்க விரும்பினால் கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். https://open.uom.lk உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிரவும்
  43. மாவீரர் நினைவுகள் - உதிரம் கொடுத்து உயிர்காத்தவன் - மித்யா கானவி கப்டன் மணிமாறன்(சிலம்பரசன்) பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி நெடுஞ்சாலையை கைப்பற்றி வன்னியின் பூகோள ஒருமைப்பாட்டை சிதைத்து போராட்டத்தை கூறுபோடுவதற்காக தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஒப்பிறேசன் ஜெயசிக்குறு. இந் நடவடிக்கை 13.05 1997 ஆரம்பித்து ஒருவருடத்திற்கு மேலாக முட்டிமோதி திறன் இழந்துபோனது. இந்த எதிர்ச்சமர் நடவடிக்கை போராளிகளிற்கு கடினமானதும் நீண்டதுமானது. களவாழ்வில் ஓய்வு, உறக்கமின்றி நல்ல உணவின்றி போராளிகள் களத்தில் பணியாற்றினார்கள். அதே நேரம் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளிற்குள் தொல்லைப்பட்ட மக்கள் சீரற்ற காலநிலைக்கு முகம் கொடுத்து மலேரியா போன்ற தொற்றுநோய்களுடனும் எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தது. பெரும்பாலான வயல் நிலங்கள் செய்கை பண்ணப்படாமல் போனதால் தன்நிறைவு விவசாயமும் வீழ்ச்சி கண்டிருந்தது. இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களிற்கு மட்டுமன்றி மருந்துத் தடை, மண்ணெண்ணெய் தடை ,சக்கரைக்கும் தடை, பெண்கள் மாதவிடாய் காலங்களில் பாவிக்கும் பஞ்சுகளிற்கும் (period products) ஒரு பெண் அரச தலைவி சந்திரிக்கா அம்மையாரே தடைவிதித்திருந்ததும் அது முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்ததும் நாம் அனுபவித்த வலிகளே. மக்களைப்போலவே போராளிகளின் எல்லாப்பிரிவுகளிலும் வளத்தட்டுப்பாடு நிலவியது. அப்போது மருத்துவப்பிரிவும் நிர்வாக இலகுவாக்கலுக்காக வன்னிமேற்கு,கிழக்கு என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. வன்னி மேற்கின் நிர்வாகப் பொறுப்பாளராக நளன் அண்ணா இயங்கினார் எமது பிரதான தளமருத்துவமனையும் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னேரிக்குளம் சோலை என்ற இடத்தில் லெப் கேணல் நீலன் ஞாபகார்த்தமாக அமைந்திருந்தது. அங்கு ஓய்வின்றி தொடர்ச்சியாக சத்திரசிகிச்சை கூடம் இயங்கிக்கொண்டேயிருக்கும். அப்போது இரத்தவங்கிக்கு பொறுப்பாக நானும், எனக்கு உதவியாக மணிமாறனும் இருக்கின்றோம். அடிப்படை மருத்துவக் கற்கை நெறியினை நிறைவு செய்த மணிமாறனுக்கும் அவனது அணிக்கும் மேலதிக கற்கை வகுப்புக்களும் அங்கு நடைபெற்றன. தெரியாத விடையங்களை கேட்டு படிப்பதில் மிக ஆர்வமாக இருப்பான். எல்லாக் களமுனைகளும் விரிந்திருந்ததால் தொடர்ச்சியாக காயமடைந்தவர்களும் வந்துகொண்டேயிருப்பார்கள். ஓய்வின்றி வேலை தொடர்ந்தாலும் கிடைக்கும் நேரத்தில் மேலதிக கற்கைகளும் நடைபெறும். அன்று ஒரு நாள் இரவு செய்தி பரிமாறப்பட்டிருந்தது, மன்னார் களமுனையில் நாளை அல்லது மறு நாள் இராணுவம் தாக்குதலை நடத்தவுள்ளதாக வைத்தியர் கெளரி அண்ணா என்னிடமும் மருத்துவத்தாதி அக்காவிடமும் முன் ஆயத்தங்களை செய்யுமாறு பணிக்கின்றார். கையிருப்பில்அதிகம் தேவைப்படும் குருதி வகைகள் இன்மையால் உடனடியாக குருதி சேகரிக்க காலையில் போக வேண்டியிருந்தது . இரண்டு நாட்களாக வாகனத்தை எதிர்பார்த்து வரவில்லை, குருதி எடுக்க தூரத்திற்கு போவதற்கு வாகன வசதியில்லை. வன்னிமேற்கு பகுதியில் மருத்துவத் தேவைகளை பூர்த்திசெய்ய நின்ற ஒரே வாகனமும், அது மாதத்தில் பாதி நாட்களிற்கு மேல் வாகன திருத்தகத்தில் தான் நிற்கும். முகாம் பொறுப்பாளரிடமும் ஏதாவது ஒழுங்கு செய்யுமாறு கேட்கின்றோம் …. “எப்பிடி எங்க போறிங்களோ நாளைக்கு Blood bank பொறுப்பாளர் விளட்டோட வந்தால் சரி” என்று தனது வழமையான பாணியில் சொல்லி சென்றார் கெளரி அண்ணா. என்ன செய்யலாம் என்று யோசித்தோம் மணிமாறன் தான் யோசனை சொன்னான் முகாம் பொறுப்பாளருக்கு, “விடிய கலை டொக்டரை நீங்கள் கொண்டுபோய்‌ வைத்தியசாலையில் வீட்டிட்டு ராசாத்தியை கொண்டுவாங்கோ” Dr கலை காலையில் அக்கராயன் பிரதேச வைத்தியசலைக்கு கடமைக்கு செல்வது வழமை. நாங்கள் தேவையான பொருட்களுடன் cool box ஐ (இரத்தத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்துப் பாதுகாக்க பயன்படும் பெட்டி) கொண்டு வாறம்.” “ஓ நல்ல ஐடியா ….. நாங்கள் சைக்கிளில் (துவிச்சக்கரவண்டி) வாறம் என்றேன். தேவையான பொருட்களை எடுத்து வைக்கின்றோம் இரவு பத்துமணியாகியது . ஓ …அப்போது தான் நினைவு வந்தது காலை குளிப்பதற்கு தண்ணீர் இருக்காது, நாங்கள் இருந்த இடத்தில் கிணறு இல்லை ஒரு குளத்திற்கு அல்லது,ஒரு கி.மீற்றர் தூரம்சென்றால் ஒரு வெட்டையில் கிணறு இருக்கும் அங்கு தான் குளிக்க போவோம். இரவில் தான் அந்த கிணற்றில் குளிக்கலாம். அந்த இடத்தின் பெயர் சோலை நல்ல மாமரச் சோலையாகவும் தான் இருந்தது. எமது மருத்துவ மனை இருந்த இடம் ஏன் சோலை என பெயர்பெற்றது என்று தெரியாவிட்டாலும் நாம் இருந்த வளாகம் முழுவதும் மரங்களால் மூடி சோலை என்ற பெயரிற்கு ஏற்றால் போல பொருத்தமாகவிருந்தது . ஆனால் தண்ணீர் இல்லை என்பது ஒரு குறை. ஆண்கள் பகுதியில் ஒரு சிறு கிணறு இருந்தது. நோயாளிகளிற்கு வேண்டிய தண்ணீரை பணியாளர்களில் ஒருவரான செந்தில் அப்பா எடுத்து வருவார். அவருக்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியாது நடிகர் செந்திலின் சாயலில் இருந்ததால் போராளிகள் எல்லோரும் செந்தில் அப்பா என்று அன்பாக அழைப்போம் அது அவருக்கும் மகிழ்ச்சியூட்டும். ஆனால் அவர் தண்ணீரை ஒரு ராங்கில் நிரப்பி தள்ளுவண்டியில் வைத்து கைகளால் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்த்தால் மனசு இறுகிக் கொள்ளும். அதனால் நாங்கள் அவர் கொண்டு வரும் நீரை எடுப்பதில்லை மருந்தைப்போல சிக்கனமாக பாவித்துக் கொள்ளுவோம். செந்தில் அப்பா சொல்லுவார் “பிள்ளைகள் தண்ணியைப் பாவியுங்கோ பின்னேரம் கொண்டு வாறன்” என்று…. அப்போதும் அவரது முகம் மலர்ந்து தான் இருக்கும். கைகள் தான் மரத்துப் போய்க் கிடக்கும். ஆனால் அதை அவர் பொருட்டாக எடுப்பதில்லை. விடுதலைப் பாதையில் போராளிகள் மட்டுமல்ல மக்களும் மனமுவந்து தோள் கொடுத்தார்கள். இந்த செந்தில் அப்பா போல் இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை பேரின் நினைவுகளும், வியார்வைகளும் சிந்தியிருக்கின்றது எம் நிலங்களில். அதி காலை இரத்தவங்கியில் நிற்கின்றோம் மணி அழைக்கிறான் “அக்கா…அக்கா… ராசாத்தியை காணேல்லை” யார் இரவு கொண்டு போனது என்று தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுதர்சனின் குரல் கேட்டது ராசாத்தியையும் இரவு மதனிட்ட விட்டிட்டன்….(மதன் வாகன திருத்தகத்தின் பெயர்) என்றபடி. சுதர்சன் பின்னாளில் தமிழீழத்தின் தலைசிறந்த பல் வைத்தியராக பலராலும் அறியப்பட்டான். 2009 ம்ஆண்டு இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இவனும் ஒருவன். வைத்திய போராளிகளிடம் ஒரே ஒரு மோட்டார் சைக்கிள் தான் இருந்தது. அதற்கு அவர்கள் வைத்த பெயர்தான் “ராசாத்தி “ அதனைத்தான் மாறி மாறி எல்லோரும் பயன்படுத்த வேண்டும் பல வைத்திய போராளிகள் அரசாங்க வைத்தியசாலைக்கு கடமைக்கு செல்லவேண்டும் . ராசாத்தி பகிடி மருத்துவ மனை முழுவதும் பரவி அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணா வின் காதுவரை போனது. “நீங்கள் நல்லா வருவீங்கள் அண்ணா ராசாத்தியையும் பழுதாக்கீட்டிங்களா “. சைக்கிளில எல்லாரும் போவோமா? என்றான் மணி . சரி, வேறு வழியில்லை போவோம் என்று cool box மற்றும் பொருட்களுடன் தயாரானோம். நன்றாக விடியவில்லை கருக்கல் நெருக்கலான மென் இருட்டு வன்னேரி கிராமத்தின் அலம்பல் வேலிகளின் பொத்தல்களாலும் மட்டை கடவையின் கீழாகவும் ஒவ்வொரு வீட்டு நாய்களும் குரைத்துக் கொண்டு அடுத்த வீட்டுப் படலை வரை கொண்டு போய் வழியனுப்பியது . மணிமாறன் சரியான குறும்புக்காரன் நாய்களுடன் சேட்டைபண்ணிக்கொண்டே மிதிவண்டியை ஓட்டினான். வன்னேரி ஐயனார் கோவில் மணியோசை கேட்கின்றது. ஐயனாரே இன்று எங்கள் தொழிலுக்கு நீ தான் துணை என்று சொல்லவும் அவனது மிதிவண்டி காற்றுப்போய் நிற்கவும் சரியாக இருந்தது. அப்போது முகாம்பொறுப்பாளர் வாணனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை . மணி என்ன செய்வதென்று தெரியாது திக்கிப்போய் நின்றான் அவனது முகம் வாடியது. ஐயனாரே நீயுமா இப்படிச் செய்வாய்? என்று நொந்து கொண்டான். பின்னர் சிறிது தூரத்தில் அஞ்சனாவின் மாமாவின் வீடு இருந்தது எமக்கு நிம்மதியை தந்தது. அஞ்சனாவும் நானும் சென்று அவர்களை எழுப்பி காற்றுப் பம்மை வாங்கி மணியிடம் கொடுக்கின்றோம். அடிக்கும் காற்று அப்படியே வெளியேறியது தெரிந்தது. இலங்கை அரசு சைகிள் ரயர், ரீயூப் ஏன் அதனை ஒட்டிப் பாவிக்கும் பசைக்கும் தடைதான் போட்டிருந்தது. இப்போ எங்கு சென்று ஒட்டுவது , என்ன சோதனையடா இது என்று மனம் சஞ்சலப்பட அஞ்சனாவின் மாமி சூடான தேனீருடன் படலைக்கே வந்தார் “கெதியண்டு குடிச்சிட்டு போங்கோ”என்றபடி. எங்கள் முகங்களில் பதில் இல்லை . ஏன் காற்று ஏறுதில்லையா? இல்லை அன்ரி ஒட்டுப்போல என்றேன். அவர்களிடமும் உதவி கேட்க முடியாது, எல்லாருக்கும் கஸ்ரம்தானே என்று மனம் சொல்ல மௌனித்தோம். அவர்களாகவே நிலமையை புரிந்து மாமாவின் சைக்கிளை தந்தார்கள். நல்ல பெரிய கரியல் வசதியாய் இருந்தது பெட்டியை வைத்து கட்டுவதற்கு. “போகேக்க வாங்கோ ஒட்டி வைக்கிறன் “ என்றார் மாமனார். அப்பாடி… என்று மனம் குளிர்ந்தது . ஆனாலும் எங்கு குருதி எடுப்பது என்ற முடிவு இருக்கவில்லை. அக்கராயன் முறிகண்டி நெடுஞ்சாலைகள் குன்றும் குழியுமாக கிடந்தது . மிதிவண்டி நேரம் செல்லச் செல்ல வேகமெடுத்தது. மேடு, பள்ளம் தாண்டி ஒருவாறு அக்கராயன் சந்தியை அடைந்தபின், மணிமாறன் கேட்டான் “எங்க அக்கா வையூரோவை திருப்புறது” மணிமாறன் எப்போதும் மெல்லிய நீலக்கலர் சேட் தான் அதிகம் போடுவான். அன்றும் அப்படித்தான் அவனது சேட் செம்மண் புழுதி பட்டு கலர்மாறி கிடந்தது . அவனின் உடையை போலவே மனமும் எப்போதும் மென்மையே. ஸ்கந்தபுரம் பகுதியிலேயே அனேகமான பாடசாலைகள் இயங்கின. கிளிநொச்சி பாடசாலை இடம்பெயர்ந்து அங்குதான் இயங்கியது; அங்கு போவோம் என்றேன் நான். வழமையாக அரசியற் போராளிகள் பாடசாலைகளில், கல்விநிலையங்களில் அல்லது வர்த்தக சங்கத்தில் குருதி சேகரிப்பதற்கான ஒழுங்கமைப்பை செய்வார்கள். இன்று அவர்களிடமும் உதவிகேட்க முடியவில்லை ஊருக்குள் இரண்டு மூன்று வீரச்சாவு நிகழ்வுகள் நடைபெற்றன. அக்காலத்தில் வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் யுத்தத்தினால் இருப்பிடம் இழந்து அக்கராயன் தொடக்கம் மல்லாவி வரையுமே மிகவும் நெருக்கமாக வசித்து வந்தனர். மதியம் இரண்டு மணியாகியும் எட்டு பைகள் குருதிக்குமேல் எடுக்கமுடியவில்லை . மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமாக குருதி தருவதற்காக வந்தாலும் அவர்களில் சிலருக்கு உடல் நிறை காணாமல் இருக்கும், பலருக்கு தொடர்ச்சியாக மலேரியா வந்ததால் குருதிச்சோகை இருந்தது. பலர் குருதிக்கொடையாளராக உதவ மனம் இருந்தாலும் உடல் நிலை இடம் தரவில்லை. அவர்களிற்கு எல்லாம் நாங்கள் கொண்டு சென்ற விற்றமின் ,இரும்புச்சத்து மாத்திரைகளை கொடுத்து அடுத்த முறை வந்து உங்களில் குருதி எடுக்கின்றோம் என்போம், அவர்கள் மனம் நோகாமல். சில பிள்ளைகள் தன்மானப் பிரச்சினையில் அடம் பிடிப்பார்கள். நாங்கள் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றோம் எடுங்கள் என்று அழக்கூடத் தொடங்கி விடுவார்கள். அவர்களை ஏதாவது சொல்லிச் சாமாளித்து விடவேண்டும். வெய்யில் நன்றாக காயத்தொடங்கியிருந்தது cool box ல் உள்ள இரத்தத்தை குளிர் குறையுமுன் உடனடியாக முகாமிற்கு அனுப்பவேண்டும். அது இப்போது சாத்தியமற்றது, மாலை வன்னேரியிலும் அக்கராயன் வர்த்தக சங்கத்திலும் குருதி எடுக்க அரசியல்துறைப் போராளி ஒருவர் சிறு ஒழுங்கை செய்திருந்தார் . அக்கராயன் வைத்தியசாலைக்கு சென்று சேகரித்த குருதிகளை மாலை வரை பாதுகாப்பாக வைக்கலாம் என்று யோசனை தோன்றியது. அந்த மருத்துவமனையும் நோயாளர்களால் நிறைந்து கிடந்தது. அப்போது மாவட்ட வைத்திய அதிகாரியாக வைத்தியர் விக்கி அவர்கள் இருக்கின்றார். நேரடியாக அவரிடம் சென்று குருதி வங்கியில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் சேகரித்த குருதிகளை பாதுகாப்பாக வைக்க அனுமதி கேட்கின்றோம். அவர் இல்லை என்றா சொல்வார்…. பின்னர் நாம் எதிர்பார்க்காத ஒன்றை எம்மிடம் வினாவினார்; “இஞ்ச அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஒரு நோயாளிக்கு அவசரம் ரத்தம்வேணும் Bநெக்கற்றிவ் உங்களிட்ட இருந்தா தாங்கோவன்” என்றார் இப்ப இல்லை இனி எடுக்கிற இடத்தில கிடைச்சால் தாறம். என்று கதைத்தபடியே இரத்த வங்கிக்கு போகின்றோம். அந்த நோயாளியின் மனைவி கண்களிலிருந்து நீர் வடிய ஒட்டிய உடலும் குழி விழுந்த கண்களுடன் சுமார் ஒரு 38 கிலோ தான் இருப்பார். கெஞ்சிக்கொண்டு நிக்கின்றார், “எத்தனை பேரை கொண்டு வந்திட்டன் ஒருவரிலையும் எடுக்க ஏலாது எண்டிற்றிங்கள் என்னில கொஞ்சம் எண்டாலும் எடுங்கோ என்ர மனுசன் எனக்கு வேணும் பிள்ளைக்கு அப்பா வேணும் ” என்றபடி.மகனின் தலையை வருடினாள் எங்களிற்கும் அந்த காட்சியைப் பார்க்க கண்களில் நீர்நிறைந்து குளமாகியது. விக்கி டொக்டர் தான் அந்த அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டார். பின்னர் வர்த்தக சங்கத்திலிருந்தும் சிலரில் குருதிகளை எடுத்தும் Bநெக்கறிவ் கிடைக்கவில்லை. அப்போது மணிமாறன் “அக்கா நான் ஒருக்கா DT (குருதி வங்கியின் குருதி நோயாளிக்கு ஒத்துவருமா என்று அறியும் பரிசோதனை)செய்து பார்க்கவா? “ முதல் நீங்கள் ரத்தம் கொடுத்து இரண்டு மாதம் ஆகவில்லையே …. என்றேன். முதலில் எனது குருதி பொருந்துகின்றதா என்று பார்க்கின்றேன் என்றவன்; இவனது குருதிப் பொருத்தம் சரி என்றவுடன் உடனடியாக அடுத்த கதையின்றி “அம்மா அழாதேங்கோ நான் தாறன் ரத்தம் ” என்றான். ஏறி கட்டிலில் படுத்துக்கொண்டு அக்கா நீங்கள் எடுத்துக்கொடுங்கோ என்றான். ஆனால் அவனுக்கு ஊசி குத்துவது என்றால் பயம் கண்களை மூடிக்கொண்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, எடுங்கோ அக்கா என்றான். வாணணும் அஞ்சனாவும் “வேண்டாம் அக்கா பேச்சு வாங்குவீங்கள் டொக்டரிட்ட “ என்றனர். எனக்கும் தெரியும் மணிமாறன் 0- (நெக்கற்றிவ்) குருதி அடிக்கடி இரவுகளில் இவ்வகை குருதி தேவைப்படுவதுண்டு. அவசரதேவைக்கு ஒரு முறை கொடுத்து மூன்றுமாதத்திற்கு முன்பே அவனில் பல தடவை இரண்டாம் முறை எடுத்து விடுவோம் அதனால் தான் நான் சற்று தாமதித்தேன். “ஏனக்கா யோசிக்கிறிங்கள் பேச்சுத்தானே வாங்கிட்டு போங்கோ உயிரையே கொடுக்கிறார்கள் பேச்சு தானே வாங்கினா போச்சு எடுங்கோ” என்றான். “ அந்த அம்மா” என் தெய்வமே நீ நல்லாய் இருக்கவேணும் என்று கைகூப்பினாள் “ “.அன்று முழுவதும் உணவுமின்றி மணிமாறன் இன்னும் இழைத்திருந்தான். இரவு ஓரளவு குருதி சேகரித்த திருப்தியோடு நாமும் ,உதிரம் கொடுத்து உயிரை காப்பாற்றிய மகிழ்வில் மணியும் முகாம் திரும்பினோம். இரவு பதினொரு மணியிருக்கும் வாகனச் சத்தம் கேட்டது அதன் பின்னால் அன்பு அண்ணா (மூத்த மருத்துவப்போராளி பின்னர் பொக்கணைப் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனையில் வீழ்ந்தசெல்லில் வீரச்சாவு) தான் கூப்பிட்டார்” குயில் வாங்கோ” என்ற அவரது குரல் கண்ணீரென்றது பெண்களின் அவசரசிகிச்சை வோட்டில் இருந்த எனக்கு. ஏனோ மனம் பதை பதைத்தது “நல்ல பலாப்பழம் வந்திருக்கு” (பெரிய காயமென்றால் அப்படி அழைப்பது மருத்துவப் போராளிகளின் பரிபாசை) என்ன குருதிவகை என அறியமுனைந்த போது கும் இருட்டிலும் மின்னல் அடித்தது போல் இருந்தது 0- நெக்கற்விவ். மடியில் கனம் ஏறிக்கொண்டது “கடவுளே இரண்டு பையின்ற் தான் கிடக்கு அது காணுமா இருக்க வேண்டும்“என்று நினைவில் வந்த தெய்வங்களை வேண்டிக் கொண்டு சத்திரசிகிச்சை கூடத்தில் நுழைந்தேன். வைத்தியர் அஜோ,கெளரி அண்ணா மீனா அக்கா மற்றும் சிலரும் சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது சுமார் ஒரு மணித்தியாலம் கடந்தபின் “நல்ல அடிதான் ஈரலிலும் பட்டிற்று இன்னொரு விளட் போட்டு வையுங்கோ” என்றார். வைத்தியர் அஜோ இரண்டு தான் கிடந்தது டொக்டர் என்றேன். (0➖வகை குருதிக்கு அந்த வகை மட்டும் தான் ஏற்றலாம்) நெஞ்சு பட படத்தது அடுத்து மணிமாறனை தான் கேப்பார் என்பது எனக்கு தெரியும். மணிமாறன் னுக்கும் தெரியும். மணி என்னைப் பார்த்து சொல்லவேண்டாம் என கண்களால் சொல்லி அங்கிருந்து அடுத்த அறைக்கு நழுவிப் போனான். “மணி இரத்தம் கொடுத்து இரண்டு இரண்டரை மாதம் வந்திருக்கவேணும் போய் எப்ப கொடுத்தது என்று பாத்திட்டு DT போடுங்கோ தேவை என்றால் எடுக்கலாம்” என்றார் . பதிலுக்கு எதுவும் பேசமால் இன்று அக்கரயானில் கொடுத்ததை சொல்ல இது நேரமில்லை அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனை மூளையை குடைய சத்திரசிகிச்சை கூடத்தில் போடும் சட்டைகளை கழற்றிவிட்டு இரத்தவங்கிக்கு சென்றேன். என் பின்னால் மணிமாறன் “அக்கா ஏன் பயந்து சாகிறிங்கள் இரத்தம் தானே இன்னொருக்கா இழுத்து தள்ளுங்கோ” என்றான். அவனை கடிந்து கொள்ள முடியவில்லை. சுதர்சன் , வைத்தியர் சதா இருவரும் 0 – (நெக்கறிவ்) தான் கொடுத்து ஒரு மாதம் ஆகவில்லை என்ன செய்வோம் என்று அன்பு அண்ணையிடம் கேட்டேன். காயமடைந்த நோயாளர்களை பராமரிக்கும் பணியாளரில் ஒருவரான சுறுளி அண்ணாவை பக்கத்திலிருந்த அவரது வீட்டிற்கு சென்று கூட்டிவந்தார் அன்பு அண்ணா . அவரின் குருதி பொருந்தியது மனம் மகிழ்ந்தது. இப்படித்தான் மணிமாறனின் குருதி ஏற்றப்பட்டு அவசர நேரங்களில் உயிர் மீண்டோர் எத்தனை பெயர் என்று சொல்ல முடியாது. வவுனியா நொச்சிக்குளம்த்தை சொந்த இடமாக கொண்ட மணிமாறன்‌புதுக்குளம் ம.வி கல்வி கற்றபோது 1998 ஆம்‌ஆண்டு தன்னை போராளியாக‌மாற்றிக்கொள்கின்றன்‌ தனபாலசிங்கம் தம்பதிகளின் ஐந்தாவது ‌புதல்வனே ஞானேஸ்வன் ‌என்ற இயற்பெயர்கொண்ட மணி‌ இவனது மூத்த‌ அண்ணா 1988இல் போராளியாகி‌1992 ம் ஆண்டு ‌இந்த மண்ணிற்காய் விரகாவியம் ஆகினார். அவனதுபதையில் மணியும் சென்றுவிடுவான்‌என்று குடும்பத்தினர் நினைக்கவில்லை இரண்டு ‌அக்காவும்‌ தம்பி‌ அண்ணா என்று ‌பாசத்தில் கரைந்த‌ள் குடும்பத்தைவிட்டுமணி தன் தாய்நாட்டை காக்க‌புறப்பட்டான்‌ ஆனால்குடும்பநிலை காரணமாக மீண்டும் 2004 போரத்திலிருந்து விலத்தி மனித நேய கன்னிவெடி‌ அகற்றும் நிறுவனத்தில் வேலை செயதான். ஆனால் மீண்டும். போர் மேகங்கள் எமை சூழத்தொடங்க களமருத்துவ அணியுடன் இவன் களம்புகுந்தான் . 2006 ம் ஆண்டு மீண்டும் முகமாலையில் போர் வெடித்த போது அப்போது முகமாலைப்பகுதியில் களமருத்துவப் போராளியாக நின்ற மணி பாரிய காயமடைந்ததில் குருதிக்குழாய் பாதிப்படைந்தது. அதிக குருதி இழப்பால் அவன் எம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்தான் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. தோழர் உயிர்காக்க போராடிய பிள்ளை பாரிய விழுப்புண்ணடைந்து வலியால் துடிக்கின்றான், பாரிய சிதைவுக்காயம் காப்பாற்றத் துடிக்கின்றார்கள் மருத்துவ குழாம். “ என்னை நீங்கள் காப்பாற்ற மாட்டீங்கள் என்ர Blood..(இரத்தம்)..இல்லை என்றவனை காயத்தை கட்டி நம்பிக்கை யூட்டி அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள் ஆனால் பிரதான மருத்துவமனையின் வாசலிலேயே தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொள்கின்றான். உதிரம் கொடுத்து எத்தனை உயிர்களிற்கு மீள உயிர் அளித்திருப்பான்… இவர்கள் தான் தெய்வப்பிறவிகள் நாம் வணங்க வேண்டிய ஆத்மாத்தமானவர்கள். அவனது அண்ணா மேஜர் சிலம்பரசனாக மாவீரனானார். அவரது பெயரைத்தான் மணிமாறன் அல்லது சிலம்பரசன் என்று சூடிக்கொண்டவன் இவனும்‌ 12.08.2006 அன்று கப்டன்‌ மணிமாறன் (சிலம்பரசன்) ஆகிவிட்டான் . எப்போதும் சிரித்த அவனது முகம் வாடியிருந்தால் கேட்காமலே அறிந்து கொள்ளலாம் அவனது நோயாளர் விடுதியில் ஒரு போராளிக்கு உடல்நிலை மோசமாகவிருக்கிறது என்று. நேர்த்தியாக அவன் போடும் உடை, இரவில் எத்தனை மணிக்கு எழும்பி சத்திரசிகிச்சைக் கூடம் வந்தாலும் அவன் நேர்த்தியாக உடை அணிவான். மெல்லிய நீலநிற சேட் தான் அடிக்கடி போட்டிருப்பதால் அதன் பிரதிபலிப்பு அவன் அகமும் வெள்ளையே…. மற்றவர்களிற்கு ஒரு துன்பம் என்றால் அவனால் தங்கமுடியாது சிறிய விடையங்களில் கூட உன்னிப்பான கவனிப்பு இருக்கும். அவனது முகத்தில் எப்போதும் ஓர் பிரகாசமான ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். கண்களில் நிறைந்து பூத்திருக்கும் இலட்சிய உறுதி, மனதில் நிறைந்திருக்கும் பேரன்பு, எதையும் நுட்பமாக பார்த்தே தெரிந்துகொள்ளும் பக்குவம் என சொல்லில் வடிக்க முடியாத ஒரு துடிப்பும் எப்போதும் நாம் கண்ட சிறப்பு அவனிடம். சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் அதிகரித்ததால் எந்த இடங்களில் முகாம் இருக்கின்றதோ அந்தப் பகுதிகளை கவனிக்கும் பொறுப்பு அந்த துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட காலத்தில் கனகபுரம் துயிலும் இல்லத்திற்கு அண்மையில் யாழ்வேள் மருத்துவ மனையிருந்தது. காலையில் நாங்கள் தான் அந்தப்பகுதியை கண்காணிக்க றோந்து போகவேண்டும். ஒரு நாள்வழியில் ஒரு மாணவன் நீண்ட தூரம் நடந்து வெறும் காலுடன் பாடசாலை செல்கின்றான். இரண்டாவது நாளும் அதே மாணவனை வெறுங்காலுடன் கண்டபோது மணிமாறன் தான் போட்டிருந்த சப்பாத்தை கழற்றிக்கொடுத்து விட்டு வெறும் காலுடன் தான் நடந்து சென்று ரோந்தை முடித்து விட்டு வந்தபோது கல்லும் முள்ளும் கால்களில் குற்றி இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இது மட்டுமல்ல கிளி முறிப்புப் பகுதியில் காவலரனில் நின்றபோது உணவில் இருந்து உடைவரை அந்த சிறுவர்களிற்கு கொடுத்து விடுவான். இது ஒரு கதையில்லை இப்படித்தான் வாழ்ந்தவர்கள் மாவீரர்கள், இவர்கள் இறந்தபின்பும் எதையும் எதிர்பார்க்கப் போவதில்லை. தனக்காக வாழாது தன் இனத்திற்காய் வாழ்ந்த இவர்களா உங்கள் பார்வையில் பயங்கரவாதிகள்? மருத்துவப் பணியில் மணிமாறனும் நானும் பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்து இருக்கின்றோம். பல நினைவுகள் மனதில் இன்றும் நினைவாக தொடர்கின்றது. காயமடைந்து இவன் கரங்களில் சிகிச்சை பெற்று இன்றும் வாழும் பல போராளிகள் இவனை மறந்திருக்க மாட்டார்கள். மணி துடிப்பான ஒருவன் எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன். எங்களிற்கு வயதில் சிறியவனாக இருந்தாலும் மனம் தளரும் போதெல்லாம் புத்துணர்ச்சி தரும் அவன் பகிடிகளும் வார்த்தைகளும் இன்றும் பசுமையாய் ஒலிக்கின்றது. குறிப்பு -இந்த பதிவு திருத்திய மீள்பதிவு இந்த ‌மாவீரனின் புகைப்படம் பலரிடம் கேட்டு தேடிக் கொண்டிருந்தேன் .இப்போது கிடைத்தது ஊர் தேடிச்சென்று புகைப்படத்தை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தையும் இணைத்து விட்ட பசீலன் அண்ணா விற்கு பேரன்புடன் நன்றிகள் -நன்றி- மிதயா கானவி. https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/12/95446/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.