புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது.
சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?
புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே?
டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை.
சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிடவேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் தண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை.
தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது.
இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா - உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார்.
இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.