Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19129
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3061
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8907
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/16/24 in Posts

  1. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் பிரசன்னமாகியிருந்த எனது அண்ணாவுடன் கதைத்தேன். அவர் கூறியதன் சாராம்சம் பின்வருமாறு; 1. அருச்சுனா கேள்வி கேட்டது தப்பில்லை ஆனால் மற்றவர்க்ளுக்கு கதைப்பதற்கு சந்தர்ப்பமே வழங்கவில்லை. 2. அருச்சுனா சிலரை தனிப்பட தாக்கி கேள்வி கேட்டதுமல்லாமல் அவர்களின் பதவிக்கு அவசியமில்லாத தகமைகள் அவர்களிடம் உள்ளதா என தனிப்பட தாக்கியுள்ளார். 3. அன்றையநிகழ்ச்சிநிரலை சரியாக கொண்டு செல்லவிடாமல் மின்சாரசபைப்பிரச்சினையையும் சத்தியமூர்த்தியின் பிரச்சினையையும் மாத்திரம் கதைத்தார். 4. அருச்சுனா கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கப்பட்டாலும் அருச்சுனா அதைக்கணக்கிலையே எடுக்கவில்லை. 5. இவ்வளவும்நடந்ததன் பின் தான் பின்வரிசையில் இருந்த கிராம அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள் சத்தம் போட்டார்கள் அருச்சுனாவைப் பார்த்து வெளியே போகுமாறு. முன்வரிசையில் இருந்த அரச அதிகாரிகள் ஒருவரும் எதுவும் பேசவில்லை. அமைச்சர் எத்தனையோ தடவை சொல்லியும் அருச்சுனா கேட்கவில்லை. இனி அபிவிருத்திக்குரிய பணம் திரும்பிச் செல்வது பற்றி, 1. பிரதேச செயலகங்களால் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை மாறாக அரசியல் வாதிகளால் முன்மொழியப்படுபவைக்கே ஒதுக்கப்படும். 2. ஒதுக்கப்படும் பணம் பெரும்பாலும் ஜூனுக்குப் பிறகே வந்து சேரும். 3. அரசியல்வாதிகளால் முன்மொழியப்படும் திட்டங்கள் பெரும்பாலும் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்படாததாகவும் சிலவேளைகளில் செய்யமுடியாததாகவும் இருக்கும். 4. ஒதுக்கப்படும் பணம் தெவையுடன் ஒப்பிடும் போது மிகச்சிறியதாகவே இருக்கும் (உ+ம் ஒருகிலோமீற்றர் தார் வீதிக்கு 80லட்சம் தேவை ஆனால் சில அரசியல்வாதிகள் 3கிலோமீற்றர் வீதிக்கு 5லட்சம் மட்டும் ஒதுக்கியுள்ளனர். 5. சிலதிட்டங்களுக்கு திறமையான உள்ளூர் ஒப்பந்தகாரர் இல்லை. அப்படி இருந்தாலும் ஒரேநேரத்தில் பலவேலைகளை எடுத்து எந்த வேலையையும் அந்தநேரத்திற்கு முடிப்பதில்லை. 6. அரசியல்வாதிகளின் திட்டங்களுக்கு சாத்திய அறிக்கை முதலே தயாரிக்கப்படாத்தால் பணம் ஒதுக்கப்பட்டபின்னரே எல்லாம் செய்யவேண்டும். சிலவேளைகளில் பல திணைக்களங்களின் ஒப்புதல் தேவைப்படும். எல்லா ஒப்புதலும் பெறுவதற்கிடையில் வருடம் முடிந்துவிடும் (எங்களுடைய திணக்களங்களின் வேகம் தெரியும் தானே). 7. பெரும்பாலான திணக்களங்களில் திறமையான தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு தட்டுப்பாடு. 8. இருக்கும் தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கும்நவீன தொழில்நுட்பத்துக்கு தேவையான பயிற்சி வழங்குவது குறைவு. மேற்குறிப்பிட்ட காரணங்களால் அபிவிருத்தித் திட்டங்கள்நேரத்துக்கு முடிக்க முடிவதில்லை. அதைவிட பெரும்பாலான திட்டங்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாகவே செய்யப்படுகிறது. அவர்களுக்கு சட்டரீதியான பொறுப்புக் கூறல் என்பது இல்லை. இதனால் சிலவேளைகளில் ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிச்செல்கிறது. கேள்வி கேட்பது இலகு செய்து முடிப்பது கடினம். இதற்கு மூளைசாலிகள் வெளியேற்றமும் ஒரு காரணம்
  2. தவறு, தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்படாது இருந்திருந்தால் எந்த இரத்தமும் சிந்தப்பட்டிருக்காது. ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் பாதிக்கப்பட்டவன் மீதே குற்றம் காண விழைவது ஏனென்று கேட்கத் தோன்றுகிறது?
  3. சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று நாமலை அறிக்கை விடச் சொன்ன பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களை நாமல் இப்பொழுது தேடிக் கொண்டிருப்பார் போல...................🤣.
  4. என் பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்! பிறந்தவுடன் தூக்கிய நேர்ஸ் இனைப் பார்த்து கண்ணடித்தது நேற்று நடந்தது போல் இருக்கின்றது. அதற்குள் 50 வருடம் ஓடிப்போய் விட்டது!
  5. திண்ணைக்குரிய script இன்னொரு தனிநபர் / நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதனையே இங்கு மேலதிகமாக களத்தில் இணைத்திருந்தோம். பின்னாளில் அதன் புதுப்பித்தல் பிரச்சனைகளுடன் களத்தின் வேகத்தினை மிகவும் மந்தப்படுத்தியதன் காரணமாக திண்ணையை நீக்கியிருந்தோம். தற்போது திண்ணையில்லாத தளம் சீராகவும், மிகவும் குறைந்த அளவிலான சேர்வர் பிரச்சனைகளுடனும் தளமும் வேகமாக இயங்குகின்றது என்பதால் திண்ணையினை தவிர்ப்பது சிறந்தது என்றே தெரிகின்றது.
  6. விவசாயியின் வாழ்க்கை . ...........! 🙏
  7. அர்ச்சுனாவின் ஏரியாவிலேயே கார்பெட் ரோடு என்ற பெயரில் காவோலை ரோடு போடுகின்றீர்களா............. என்ன துணிவு உங்களுக்கு...............
  8. நேற்று சண்டே சாயந்திரம் சாப்பிடலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட் போனேன் !!!!!! பார்த்தா ஒரே கூட்டம் !!!!!!! எல்லா டேபிளும் ஆள் உட்கார்ந்து இருக்காங்க !!!! அதுவும் சோடி !!!! !சோடியா !!!!!!! எனக்கு பசி !!!!!!!!!!! மற்றும் கொஞ்சம் லைட்டா வயித்தெரிச்சல் ! உடனே போனை எடுத்தேன் !!!!!!!! நண்பனை அழைத்தேன் !!!!!! " மச்சான் உன் ஆளு இங்கதான் யாருடனோ !!!!!!!!! கடலை போட்டு கொண்டு !!!!!!! மன்னிக்கவும் சாப்பிட்டு கொண்டு இருக்கு !!!!! சீக்கிரம் வா மச்சான் !!!!!! " என்று சொன்ன மாத்திரம் தான் ! ரெண்டே நிமிசத்தில் !! ஆறு டேபிள் காலி !!!!!! நான் பொறுமையா அமர்ந்து சாப்பிட்டு வந்தேன் ! வயிறும் நிறைந்தது ! வயித்தெரிச்சல் குறைந்தது !
  9. இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில், வலு அவதானமாக இருக்க வேண்டும். ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 அத்துடன்... எல்லாத்தையும், வலு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து... சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து பக்காவாக செய்யும் போது தான்... எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம் கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான். 🤣 எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்... சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂 இது... தான், தொழில் ரகசியம்.
  10. @goshan_che… இண்டைக்கு “ஓவர் ரைம்” வேலை செய்ய வேண்டி வரப் போகுது. 😂
  11. தரமான சேர்டிபிக்கட் உள்ள “கலாநிதி” சபநாயகர்.
  12. இனவாதம் இல்லாத மக்களின் மொழியை கற்பதில் தவறில்லை.
  13. ஒரு நல்ல கருத்து. அதிலும் உங்கள் வக்கிர புத்தி. உங்கள் தப்பில்லை கொடுக்கப்பட்ட தொழில். வாங்கும் கூலிக்கு நீங்கள் இவ்வாறு தான் எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு கூவவேண்டும். அதில் என்னையும் போட்டு கட்ட கடந்த பல வருடங்களாக நீங்கள் முயல்வதை யாழ் களம் அறியும். புலத்தில் தலைவர் நம்பிய ஒரு சிலர் செய்த தவறுகளை வைத்து முழுப் பேரையும் தாயக நேசிப்பிலிருந்து துரத்தும் உங்கள் எஜமானர்களின் பணிகள் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்ல உங்கள் போன்ற கூலிகளின் முதுகுகுத்திகள் தான் காரணம். தாயக மக்களுக்கு புலத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவுக் கரத்தை ஒடுக்கும் தடுக்கும் உங்கள் கூலிப்பணிக்கு நீங்கள் பெறும் கூலி உங்கள் பரம்பரையையே நாசமாக்கும். (நான் இவ்வாறு யாழில் எவருக்கும் எழுதியதில்லை. ஆனால் எங்கும் தமிழர்களை புலம்பெயர் தமிழர்களை செயற்பாட்டாளர்களை தேசியத்தை நேசிப்பவர்களை நீங்கள் தொடர்ந்து கலைத்து கலைத்து தாக்கி வருவதால் இவ்வாறு எழுதவேண்டிய நிலை. இனி மேல் முதுகுகுத்தியுடன் எந்த தகவல் பரிமாற்றத்தையும் வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. டொட்.)
  14. அதே! அடுத்தவரின் கல்வித்தகமை பற்றிபேசுபவர்கள், தங்கள் கடந்தகால, நிகழ்கால ஊழல்களை விசாரிப்பதற்கு ஒத்துழைப்பார்களா? அல்லது அவரைப்போல் பதவி விலகும் தைரியம்தான் உள்ளதா? மாண்புமிகு ஜனாதிபதி சொன்னால் சொன்னதுதான்!
  15. நீங்கள் சொல்வதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. நானும் சுமார் 2 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளேன். ஆனால் நான் சொன்னது இலங்கை, இந்திய சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பற்றி. வாழ்க்கை சுட்டெண், கூடியது இலங்கை, ஆனால் பொருளாதார வாய்புகள் கூடியது இந்தியா. இது கிட்டதட்ட சுவிஸ்சில் வாழ்தல், அமேரிக்காவில் வாழ்தல் இடையான வித்தியாசம் போன்றது. தனி மனித அபிலாசைகள் வேறுபடும். பல இந்தியர்களும் இலங்கையில் சட்டவிரோதமாக வந்து இருக்கிறார்கள். ஆனால் எது வாழ சிறந்த இடம் என்றால் - இலங்கைதான் என்பார்கள் பெரும்பான்மையான இலங்கையர்.
  16. புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது. சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த‌ இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே? டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை. சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிட‌வேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் த‌ண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை. தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது. இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா ‍- உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார். இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.
  17. நான் அர்ச்சனா ஆதரவாள்ன் ..இல்லை...செய்வது தவறாக இருக்கலாம்...நான் ஊரில் நின்றநேரம் சில அலுவல்களுக்காக் அலுவலகங்கள் சென்றபோது..கண்டவை ...அலுவலர் திமிர்த்தனம்.. அலட்சியம்..ஊழல்...பொதுநலநோக்கு கிடையவே கிடையாது..சுயநலம் ...எத்தனையோ திட்டங்கள் இவர்களின் அசமந்தப் போக்கால் ..அரைகுறையாக கிடக்கின்றன...போட்டிமனப்பான்மை கிடைக்கின்ற காசுகளும் திரும்பிவிடுகின்றன.. இப்படி பலவற்றை கண்டேன்...என்னைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் ..இந்த நேரடிக் கேள்விகள் ..வடகிழக்கில் உண்மையான அபிவிருத்தி நடைபெற உதவலாம்..ஆனால் அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்
  18. சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை. பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
  19. சிவில் எஞ்சினியருக்கே தெரியாட்டி பிறகு நாங்கள் எங்க போறது ரசோ அண்ணை (உங்கள் பட்ஜை சொன்ன பின் ரசோ எண்டு அழைக்க ஒரு மாரியாக உள்ளது). ஒருவேளை - போடப்படும் materials ஐ கூல் பண்ண இப்படி நடக்கிறதோ? பாஸ்சுன்னே க்கள் கொங்ரீட் போடும் போது இப்படி எதையோ போட்டு தண்ணீர் ஊற்றுவதை கண்டுள்ளேன்.
  20. காலம் செல்லும் அதுவரை தொடரட்டும் தமிழ் தேசிய பணி...வரலாறு தானே பாடம்
  21. மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  22. 🤣............. ஆடு-புலி-புல்லுக்கட்டு போன்றது இலங்கை மக்களின் கதை........... இந்தியா அவர்களின் நாட்டுக்குள் இதுவரை பார்த்திராத ஒரு படைப்புகள் நாங்கள்................ பாலத்தை போடட்டும், நாங்கள் யாரென்று காட்டுகின்றோம்................🤣. முருகனின் பட்டம் முறையானதே............... இப்ப எவராவது 'டாக்டர்' என்று சொன்னாலே, உடனே சிரிப்பு வருகின்றது.............
  23. நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் ! ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார். போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய். சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன். இப்படியாக அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார். இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்.. அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது "அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன். அப்பொழுது தானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும். சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள், என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது. அவ்வளவுதான்.. அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம் எவன் இதில் ஜெயிக்கிறான்னு? நிச்சயமா எவனாலும், முடியாது என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர். அப்பொழுது திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம் அத்தனை பேரும் மூச்சுக்கூட விட மறந்து உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர். அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி வெடவெடவென நின்றான். பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை. "பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்". அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. வாய் தந்தியடித்தது, மிரட்சியில் கண்கள் அரண்டு போய் இருந்தது. பின், ஒருவித வெறியுடன் "அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்.." என்றான். சரி இப்ப நல்ல கருத்துக்களை பார்ப்போம்! 1 :முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,உனக்கே தெரியாது.. (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான் என்பதும் புரியவரும்.) 2 :உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள் உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே.. (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே..) 3 :சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும். 4 :சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது. (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும், பெற்றோரை நம்புங்கள்..)
  24. தமிழர்களையும் யூதர்களுக்கு சமமாக ஒப்பிட்ட விசயங்கள் கனக்க இருக்கு தெரியுமோ 😂🤣
  25. இது, சத்தியமூர்த்தியோடு சேர்ந்து ஊழல் செய்த யாராவது விசில் ஊதும் வரை, சாத்தியமில்லாத விடயம். தாயகத்தில் ஊழல் விடயங்களில் குழுவாக ஈடுபடுவர். பதவி நிலையில் சத்தியமூர்த்திக்கு மேலே இருப்பவரும் செய்வார், கீழே இருப்பவரும் செய்வார். எல்லோரும் மௌனமாக இருந்து ஒருவரையொருவர் காப்பாற்றுவர். யாழ் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபரைப் பிடித்தது போல, யாராவது இரகசிய ஒலி/ஒளிப் பதிவு மூலம் தான் இவர் போன்றவர்களை மாட்ட வைக்க முடியும்.
  26. 🤣.................. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், நிழலி!
  27. நன்றி. அந்த உரையாடலை நினைத்து கொண்டு உறங்கசென்றிருப்பீர்கள் போலும். கல் நெஞ்சகாரன் நாதமுனியா அல்லது நான் சுகம் விசாரித்ததை சொல்லாத நீங்களா🤣. தனி மடலில் எப்படி பட்ட படத்தை அனுப்பி இருப்பீர்கள் என நினைத்து ஒரே குபீர்…🤣 இதுக்கேன் மன்னிப்பு. தவறுகளுத்தான் மன்னிப்பு 🤣. செல்லிய எல்லாம் செல்லிப்போட்டு, மன்னிப்பு கேக்கிய இல்லியா🤣
  28. அருமையான "சமப்படுத்தல்" செய்திருக்கிறீர்கள். "புரின் காதல்" முற்றினால் - அதுவும் புரின் புரியன்மாருக்கு Red Bull , மன்னிக்கவும், Red Pill முழுங்கினால்- இப்படி முரட்டு முட்டுக் கொடுக்கும் பலம் வந்து விடுகிறதென நினைக்கிறேன்😎. குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது வானத்தில் இருந்து இரசாயன ஆயுதம் வீசிய, ஹிற்லருக்கு இணையான ஒருவர் அசாத்- இவர் சிறுபான்மையினரான அலவைற்றுகளுக்காகவும், ஷியாக்களுக்காகவும் இதைச் செய்யவில்லை. "அசாத்" குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகச் செய்தவையே இந்த மனித குலத்திற்கெதிரான செயல்கள்.
  29. வக்கீல்... சேர்டிபிக்கட் எடுக்க, பேராசிரியர் பீரிஸை வைத்து குதிரை ஓடிய நாமல் ராஜபக்சவும், பத்தாம் வகுப்பு "பாஸ்" பண்ணாத, பசில் ராஜபக்ச... நிதி அமைச்சராகவும், அமெரிக்காவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்த, கோத்தா ராஜபக்ச ஜனாதிபதியாகவும்.... எந்த வித பிரச்சினையும் இல்லாமல்... நாட்டை ஆண்டு விட்டு போயிருக்கின்றார்கள். 😂 அனுரவுக்குத்தான்... ஆரம்பித்த இரண்டு மாதத்திலேயே... சேர்டிபிக்கட் பிரச்சினை வந்திட்டுது. அனுபவம் காணாது போலுள்ளது. 🤣
  30. பிரதி ஒருவரும் உதேசர்டிபிக்கடுடன் இருக்கிறார் என்று அவங்க பர்ட்டி மேளம் அடிச்சிட்டு இருந்தாங்களே....அதுவும் அம்போதானா...அந்த பார்ட்டிகளுகு ..சனிமாற்றம் சரியில்லையோ😄
  31. இந்த பாலசிங்கம் சொன்ன விடயம் - தலைவர் பற்றிய கட்டுரை ஒன்றில் பிரித்தானிய ஊடகமான இண்டிபெண்டெண்டிலும் வந்துள்ளது. To explain the Tiger's internecine massacres, the English-speaking Tamil Tiger ideologue Anton Balasingham once remarked: "Down the history of liberation struggles all over the world, the big fish swallows the smaller fish. In the end, only the big fish remains." Prabhakaran was determined to make sure that he was the only big fish around. ஆனால் இதுவும் இந்த கட்டுரையாளருக்கு சொன்னதாக இல்லை. இதிலும் எந்த பேட்டியில் சொல்லப்பட்டது என்ற தகவல் இல்லை. என்ன சூழமைவில் சொல்லப்பட்டது என்ற தகவலும் இல்லை. “உலக சுதந்திர போராட்ட வராலாறுகளின் நெடுகிலும் பெரிய மீன் சின்ன மீனை விழுங்கும், இறுதியில் பெரிய மீன் மட்டுமே மிஞ்சும்”. இதுதான் பாலசிங்கம் சொன்னதா சொல்லப்படும் வசனம். இதில் அவர் இயக்க முரணை குரிப்பிட்டார் என்பது கட்டுரையாளரின் வியாக்கியானம். இதன் சூழமைவு இவர்கள் சொல்வது போல் எனினும் இதில் இருந்து புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்தமைக்கு தலைவரின் இருப்பு, பாதுகாப்பு பற்றிய மனபிராந்தியே காரணம் என கூற முடியாது. நேதாஜியும், காந்தியும் போராடினார்கள். காந்தி என்ற பெரிய மீன் நேதாஜியை விழுங்கி விட்டது. பட்டா வும் ஹமாசும், ஹமாஸ் என்ற பெரிய மீன் பட்டாவை விழுங்கியது. லெனினும் டிரோஸ்கியும் போராடினார்கள் ஆனால் ஸ்டாலின் என்ற திமிங்கிலம் டிரொஸ்கியை விழுங்கியது. இந்த அடிப்படையில்தான் புலிகள் பலரின் கைப்பொம்மைகளாக இருந்த அமைப்புக்களை தடை செய்து - தாம் ஏக பிரதிநிதிகள் ஆகினர். இதுதான் பாலசிங்கம் (சொல்லி இருந்தால்) சொன்னதன் சூழமைவு. https://www.independent.co.uk/news/obituaries/velupillai-prabhakaran-leader-of-the-tamil-tigers-1687239.html பிகு ஆதார சுட்டலுக்கு நன்றி 🙏
  32. வாசகர் கவனத்துக்கு! இங்கே டைம் மகசீனில் வெளிவந்த கட்டுரை என லங்கவெப் வெளியிட்ட கட்டுரை ஒன்று ஆதாரம் போல் காட்டப்பட்டது. இந்த கட்டுரை தலையங்கத்தை வைத்து - டைம் மகசீனின் ஒரிஜினல் கட்டுரையை என்னால் காண முடியவில்லை. லங்காவெப் இலங்கை புலநாய்வாளர்களால் வழிநடத்தப்பட்ட புலிகள் மீது உண்மைக்கு புறம்பானதை, அல்லது நடந்ததை பெருப்பித்து காட்டும் பிரச்சர போரில் முக்கியமான ஒரு அங்கம் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான். மிக முக்கியமாக இந்த கட்டுரையிலும் பாலசிங்கம் சொன்ன பேட்டியின் நகலோ அல்லது பேட்டி வெளிவந்த இதழ் பற்றியோ தகவல் ஏதும் இல்லை: ஆகவே இன்னும் பாலசிங்கம் எந்த பேட்டியில் இப்படி சொன்னார் என்பதும், இப்படி சொன்னாரா என்பதுமே நிருபிக்கபடவில்லை. நான் இங்கே பாலசிங்கம் கொடுத்த பேட்டிக்கான ஆதாரம் கேட்க காரணம் உள்ளது. அவர் சொன்னதாக சொல்லப்பட்ட ஆங்கில சொலவடையை பலவாறு அதன் சூழமைவை வைத்து வியாக்கியானம் பண்ணலாம். இதை இங்கே முதலில் தூக்கி வந்தவர், முன்பே செனேட்டர் லிண்ட்சே கிரேம் உட்பட பலர் ஆங்கிலத்தில் சொன்ன விடயங்களை தலை கீழாக புரிந்து கொண்டு அதற்கு சதிகோட்பாட்டு விளக்கம் கொடுத்தவர். ஆகவே பேட்டியை தக்க ஆதாரத்தோடு காணும் வரை - இது ஆதராமாக கருதப்படவியலாது.
  33. அந்த ஐந்த ஆண்டுகளுக்காக நீங்க சின்னவயசில் இருந்து வெயிற்றிங் போல. 😂
  34. நானும் நாதமுனியை "பொய்பொத்தல்" என்று ஒரு முறை அழைத்தேன். அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். மறுபடியும் வந்து எழுத வேண்டுகிறேன்.
  35. எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், நிழலி….!
  36. இப்படி கருத்துக்களை தனிப்பட எடுத்துக்கொள்ளாமல் ஒரு விளையாட்டாக கருத்துக்களை எதிர்கொண்டால் பிரச்சினை உருவாகாது, உங்கள் இருவருக்கும் நல்ல நகைசுவை உணர்வுண்டு.
  37. இந்த விபத்து நடந்த அன்று என் தந்தை ஹட்டனில் இருந்தாராம். மீட்புப் பணியின் இரெண்டாம் அடுக்கில் தாம் இணைந்து கொண்டதாக சொல்லியுள்ளார். பின்னர் ஒரு பயணத்தின் போது வாகனத்தை இந்த வழியாக விட்டு, இடங்களையும் காட்டினார். அந்த காலத்தில் இலங்கையின் ரெக்கோர்ர்ட்டில் அதிக அளவான மக்கள் இறந்த நிகழ்வுகளில் ஒன்று இதுவென சொன்னார்.
  38. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலிக்கு. வயது போக போக இளமயாய் தோன்றுவது போல் உள்ளது பேப்பர் உடன் சேர்ந்து எடுத்த படம் பார்த்தேன் கொஞ்சம் முதல் .
  39. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிழலியண்ண.✍️
  40. நீங்கள் சீமான் அநுரகுமார திசாநாயக்கவை வலிந்து தேடி சென்று அவர்களால் முன்னேறி வசதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அவர்களை அடிக்கவில்லையே.
  41. ஒரு தவறு கண்முன்னே நடக்கும் போது அதை கண்டிக்க வக்கில்லை. உடனே நீ நிறமோ? என்று பக்கத்து வீட்டின் மதிலால் பார்ப்பது???
  42. நீங்கள் சொல்வது மிக சரியானது. இந்தியாவை ஒப்பிடுகையில் இலங்கையின் வட கிழக்கு பகுதிகளில் பொருளாதார பிரச்சனைகள் மிக மிக குறைவு.இருப்பதை வைத்து சுகபோகமாக வாழக்கூடிய நிலம்.
  43. அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............
  44. அர்ச்சனா உண்மையில் கோமாளியா அல்லது யாழ்பாண/புலன்பெயர் தலைமுறையின் மனோநிலையை நன்கு Stady பண்ணிய மனோதத்துவவியலாளரா? பிரச்சனைகளை தீர்ப்பதை விட பிரச்சனைக்கு காரணமானவராக தம்மால் கற்பிதம் செய்தவர்களை நடுசந்தியில் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாலே ஆர்கஸம் அடையும் மனோநிலை கொண்ட ஒரு கூட்டத்தை திறமையாக புரிந்து கொண்டு செயற்படுகிறார். இவரது செயற்பாடுகள் வெறும் பேஸ்புக், யுருயூப் விசிலடிப்புகளுக்காக மட்டுமே. தொண்டர் உதவியாளர்கள் என்ற பிரச்சனை 2002 ம் ஆண்டில் இருந்து உள்ள பிரச்சனை. அதை பற்றி அர்சனாவுக்கும் நீண்ட காலமாக தெரியும். இதனை சுகாதார அமைச்சுன் கவனத்துக்கு வருவதற்கான போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று அந்த விடயம் ஒரளவு அது முன்னேற்ற மான நிலையிலும் உள்ள நிலையில் அதனை மென்மேலும் வலுப்படுத்தக்கூட வகையில் சுகாதார அமைச்சுடன் நேரடியாக பேசக்கூடிய இயலுமை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அர்ச்சனாவுக்கு உண்டு. இருப்பினும் அதை விடுத்து சத்தியமூர்த்தி அவர்களின் அலுவலக்கதுக்குள் அத்து மீறி நுளைந்தது அவரோடு இவருக்கு இருக்கும் தனிபட்ட ஈகோவுக்காகவும் இவரது சமூகவலைதள விசுலடிச்சான் குஞ்சுகளுக்காகவுமே. மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சனையாக கையிலெடுத்தி ருக்கக்கூடிய நிலையை புரிந்து கொண்டு இவ்வாறு தடாலடியாக இவர் நடந்து கொள்வதும் ஒரு தந்திரம் தான். தானாக கனியும் கனிகளை தான் புகைபோட்டு தான் கனிந்தது என்ற பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதும் நோக்கம். ஏற்கனவே மருத்துவர்களைக்கெதிராக இவரது குற்றச்சாட்டுகள் இவரால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு மக்களுக்கு காட்டப்பட்டது. எதற்கும் இவரிடம் ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத, அவதூறுகளை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் ஒரு மக்கட் கூட்டதை நன்கு புரிந்து செயற்படுகிறார். பொதுத் துறை ஊழலை ஒழிக்க உண்மையாக மனப்பூர்வமாக இவர் விரும்பினால் ஆதாரங்களை திரட்டி அதை அரசிடம் கையளிக்கலாம். பாராளுமன்றத்தில் ஆதாரங்களை முறைப்படி வெளியிடலாம்.
  45. காதலா கட்சியா என்று ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரமிது. சுமந்திரனை பின்பற்றி சிங்கள சம்பந்தி என விக்கினேஸ்வரனை விளித்தவர்கள், இப்போ அவரொருவர் சிங்கள சம்பந்தியாகிவிட்டார், அதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. இதைத்தான் சொல்வது, "பழிப்பு படலேக்கை, சிரிப்பு சேலேய்க்கை," என்று.
  46. நாமலின் அட்டோர்னி அட் லா தகமையை எவரும் கேள்வி கேட்கமுடியாது….. ஏன் என்றால் அவருக்காக தனி அறையில் இருந்து பைனல் எக்சாம் எழுதியவர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ்🤣
  47. அறிவாளிகள் என்று சொல்லி திரியும் முட்டாள்களுக்கு சமர்ப்பணம் நம்ம ஆளு லண்டனில் படித்து கொண்டிருந்த சமயம் அது. அவருக்கு பீட்டர் என்று ஒரு பேராசிரியர் இருந்தார். அவருக்கு நம்ம ஆளை கண்டால் பிடிக்கவே பிடிக்காது. ஒரு சமயம் மதியம் அவர் உணவு அருந்தி கொண்டிருந்த மேசையில் நம்ம ஆள் அமர்ந்தார். நம்ம ஆளை வெருப்பேற்ற " பறவையும் ! பன்றியும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்த முடியாது ! " என்று எல்லோரும் கேட்கும் மாறு சத்தமாக சொல்ல! அதற்கு அவர் ! நம்ம ஆளை பார்த்து! " சரி அப்படி என்றால் நான் பறந்து போகிறேன்! " என்று சொல்லி விட்டு வேறு மேசைக்கு சென்று விட்டார். பேராசிரியருக்கு அவமானம் ஆகி விட்டது. எப்படியாவது நம்ம ஆளை பழி வாங்க நினைத்த அவர் அப்பொழுது வந்த தேர்வில் கடினமான கேள்விகளை கேட்டு இருந்தார். ஆனால் நம்ம ஆள் நன்றாக படித்து இருந்ததால் சரியாக விடை அளித்து இருந்தார். திருத்திய விடை தாளை கொடுக்கும் முன் நம்ம ஆளை நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா என்று கேட்க! நம்ம ஆள் சரி என்று சொல்ல! பேராசிரியர் " நீ நடந்து போகும் போது வழியில் உனக்கு பை கிடைக்கிறது அதில் நிறைய பணமும், அறிவும் இருக்கு! அதில் நீ எதை எடுப்பாய் என்று கேட்க! நம்ம ஆள் யோசிக்காமல் நான் பணத்தை தான் எடுப்பேன் என்று சொல்ல! பேராசிரியர் சிரித்து கொண்டே என்ன ! நானாக இருந்தால் அறிவை தான் தேர்ந்து எடுப்பேன் என்று சிரித்து கொண்டே சொல்ல ! அதற்கு நம்ம ஆள் அது சரி சார் பொதுவாக ஒருவர் தன்னிடம் இல்லாத ஒன்றை தானே தேர்ந்து எடுப்பார் என்று சொல்ல! வகுப்பில் எல்லோரும் சிரிக்க பேராசிரியருக்கு அவமானமாக போய் விட்டது. கோபத்தில் விடை தாளில் Idiot ( முட்டாள் ) என்று எழுதி விடை தாளை நம்ம ஆள் கிட்ட நீட்ட. நம்ம ஆள் வாங்கி பார்த்து விட்டு ஐயா உங்க கையொப்பம் போட்டு இருக்கீங்க ஆனா என் கிரேட் ( Grade) எவ்வளவு என்று போட மறந்து விட்டீர்கள்! என்று சொல்ல பேராசிரியர் திகைத்து போய் நின்றார்!
  48. ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு ஒரு மகன். வயசான காலத்தில் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைப்பு தேடி பட்டணத்துக்கு வந்தான் அந்தப் பையன். அங்கே இங்கே தேடினான் வேலை கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு ஆள் இந்த பையனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். முதலில் சிலநாள் எந்த வேலையும் கொடுக்கவில்லை. பிறகு ஒரு நாள் அவனை கூட்டிக்கொண்டு ஒரு எருமை மாட்டுத் தோலை அவனிடம் கொடுத்தார். ஏன் எதற்கு என்று கேட்காமல் இவன் அதை வாங்கிக்கொண்டான். அப்புறம் அவர் ஒரு நான்கு கோணிப் பைகளை எடுத்துக் கொண்டார். ஒரு ஒட்டகத்தை ஏற்பாடு செய்தார். புறப்படு போகலாம் என்றார். இவன் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. முதலாளி கூப்பிடுகிறார் சரி என்று புறப்பட்டான். இரண்டு பேரும் சேர்ந்து அந்த ஒட்டகத்தில் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகியது. போய்க் கொண்டே இருந்தார்கள். ஒரு பெரிய செங்குத்தான மலை வந்தது. ஒட்டகத்தை நிறுத்தினார். பையன் இறங்கினான். அவர் சொன்னார் இதோ பாருப்பா இந்த மாட்டுத் தோலை விரித்து அதிலே படுத்துக் கொள் என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் முதலாளி சொல்கிறார் என்று படுத்து கொண்டான். உடனே அவர் அந்த எருமை தோலை நான்கு பக்கமும் எடுத்து ஒன்றாக்கி ஒரு கயிற்றினாலே கட்டினார். உள்ளே அந்த பையன். இவர் அவனை அப்படியே கட்டிப் போட்டு விட்டு விலகி வந்த ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். அங்கே அவர் கட்டிப்போட்டது ஒரு எருமை மாடு மாதிரி தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் இரண்டு பெரிய கழுகுகள் அங்கே பறந்து வந்தன. அந்த எருமை தோல் மூட்டையை அப்படியே தூக்கி கொண்டு உயரப் பறந்து போய் அந்த செங்குத்தான மலை உச்சியில் போட்டன. அலகால் கொத்தின. உள்ளே இருந்து ஒரு பையன் வெளியே வருவதை பார்த்ததும் அந்த கழுகுகள் பயந்து ஓடிவிட்டன. அந்த பையன் அங்கே பார்க்கிறான் அவன் காலடியில் ஏராளமான நவரத்தினங்கள் கொட்டிக் கிடந்தன. கீழே நின்று கொண்டிருந்த முதலாளி ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறாய். உன் காலடியில் கிடக்கிற கற்களைப் பொறுக்கி கீழே போடு என்றார். அவன் போட ஆரம்பித்தான். முதலாளி நான் எப்படி கீழே இறங்கி வருவது என்று கேட்டான். நீ முதலில் போடு அப்புறம் அதற்கு வழி சொல்கிறேன் என்றார். நான்கு சாக்கும் நிரம்பியது. சேர்த்துக் கட்டி ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் முதலாளி. முதலாளி என்று கத்தினான் அவன். முட்டாளே என் வேலையாட்களுக்கு எப்படி வேலை கொடுக்கிறேன் என்பது புரியவில்லையா? அந்த மலை உச்சியில் பின்னால் திரும்பிப் பார் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது புரியும் என்று சொல்லி விட்டு போய்விட்டார். பையன் திரும்பிப் பார்க்கிறான் அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள். ஆகா ஏமாந்து போய்விட்டோம் என்பதை புரிந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில் ஒரு கழுகு தலைக்கு மேலே பறந்து வந்தது. இவன் ரொம்ப சாமர்த்தியமாக ஒரே தாவலில் அதன் காலை பிடித்துக் கொண்டான். கழுகு பயந்துபோய் மேலே பறந்தது. கடைசியில் களைத்துப் போய் கீழே இறங்கத் தொடங்கிவிட்டது. இவன் தரையில் குதித்து தப்பித்துக் கொண்டான். கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் பழைய முதலாளியிடம் போய் வேலை கேட்டான். அவருக்கு ஆச்சரியம் இவன் எப்படி தப்பித்தான் என்று இருந்தாலும் இவன் வேற யாரோ அவன் சாயலில் இருக்கிறான் என்று நினைத்து வேலையில் சேர்த்துக் கொண்டார். இரண்டு நாள் கழித்து வழக்கம் போல நாலு சாக்கு எடுத்துக் கொண்டு அவனையும் அழைத்துக்கொண்டு அந்த மலைப் பக்கம் போனார். எருமை தோலை தரையில் விரித்து படுக்க சொன்னார். உடனே இவன் புத்திசாலித்தனமாக முதலாளி எனக்கு எப்படி படுப்பது என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் படுத்துக் காட்டினால் நன்றாக இருக்கும். அவரும் எதார்த்தமாக இதுகூட தெரியவில்லையா? என்று சொல்லிக் கொண்டு அதில் படுத்தார். அவ்வளவுதான் உடனே அவன் திடீரென்று அப்படியே சுருட்டி கட்டிவிட்டான். கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல் இரண்டு கழுகுகள் வந்து தூக்கிக் கொண்டு போய் அந்த நவரத்தின மலை உச்சியில் போட்டன. மூட்டையை பிரித்து முதலாளி வெளியே வந்தார். கீழே இருந்து பையன் கத்தினான். நேரத்தை வீணாக்காதீங்க. ரத்தினக் கல்லை எல்லாம் பொறுக்கி கீழே போடுங்க என்றான். அவருக்கு புரிந்து போனது இவன் பழைய ஆள்தான். சரி சரி மலை உச்சியில் இருந்து எப்படி கீழே இறங்கி வந்தாய். அதைச் சொல் முதலில் என்றார். முதலில் ரத்தினக் கல்லை பொறுக்கி கீழே போடுங்கள் அப்புறம் சொல்கிறேன் என்றான். வேற வழியில்லை பொறுக்கிப் போட்டார் நான்கு சாக்குகளிலும் கட்டிக்கொண்டு ஒட்டகத்தில் ஏறி புறப்பட்டான். முதலாளி கத்தினார். தப்பித்தது எப்படி என்பதைச் சொல்லாமல் போகிறாயே என்றார். உங்களுக்குப் பின்னால் இருக்கிற எலும்புக்கூடுகளின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். இது ஒரு துர்க்மெனிய நாட்டு கதை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.