Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19129
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    14676
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3061
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/17/24 in Posts

  1. ஊதாரி ஊடகங்கள் ************************ எங்கு பார்த்தாலும் வலையொளித்தளங்கள் எதையெடுத்தாலும் எம்நாட்டுச் செய்திகள். உழைப்புக்காக ஊடக தர்மத்தை-சிலர் விலைக்கு விற்கும் வேடதாரிகள். தலைப்பில் மட்டும் உழைப்பை தேடுவார்-உள்ளே தரமில்லா செய்தியால் மடையராக்குவார் ஒருவரை உயர்வாய் ஓங்கியே கத்துவார் ஒருசில நாட்களில் ஏறியும் மிதிப்பார். செய்திகள் பற்றி கவலையே இல்லை சேரும் பணம்தான் அவர்களின் எல்லை ஆளுக்கொரு கமறா கிடைத்தால் அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார். ஏழை மக்களின் படங்களைக் காட்டி எல்லோர் மனதிலும் நெருடலை மூட்டி புலம்பெயர் பணத்தை தன்வசப்படுத்தும்-சில போக்கிரியர்களும் இணையத்தில் திரிகிறார். நல்லசெய்தியும் சிந்தனை உயர்வும் நலம்கெடா நடுநிலை ஊடகத் தெழிவும் உள்ள பலபேரின் உண்மைத் தன்மையும் உலகமறியும் இதுஉங்களுக்கில்லை. அன்புடன் -பசுவூர்க்கோபி.
  2. யூ டியுப்பர்கள் என்ன தலையங்கம் போடுவார்கள் ? 1)அர்ஜூனா அதிரடி விஜயம்..வைத்தார் வெடி பூட்டுக்கு... 2)அர்ஜூனாவின் ...சுவினால் அதிர்ந்தது நகராட்சி 3)அர்ஜூனா வைத்தர்ர் ஆப்பு தமிழ்தேசிய வாதிகளுக்கு 4)அர்ஜுனாவின் படை தளபதி கெளசல்யாவின் தலமையில் முற்றுகை 5) திணறுகின்றனர் சாவகச்சேரி மக்கள் அர்ஜூனாவின் காலில் விழ... 😅
  3. முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... வழக்கமாக அணியும்.. கோட்டு, சூட்டு, கழுத்துப் பட்டி (Tie) எதுவும் இல்லாமல்... வெறும் சேர்ட்டுடன் போன படியால்.... சாணக்கியனின் வாகன சாரதியாக, "பைல்" தூக்கிக் கொண்டு, பின்னால் போயிருப்பார். படத்தைப் பார்க்க... "மிக்சர்" சாப்பிடப் போன ஆள் மாதிரித்தான் தெரியுது. 😂 🤣
  4. நீங்கள் இப்படியான ஒரு ராசாவாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் என்றைய விருப்பமும்............ ஆனால் போலிப் பெருமைக்காக உங்களை அவர்களில் ஒருவராக காட்டிக்கொள்ள நீங்கள் எவ்வளவு பிரயத்தனங்கள் செய்கின்றீர்கள்...................😌. பண்ணைப்புரமும், அந்த தாயும் எந்த கோவிலுக்கும் ஈடானதே என்ற ஒரு இறுமாப்புடன் நீங்கள் வாழ்ந்திருக்கவேண்டும்........................
  5. சரியான திட்டமிடல் இல்லாமலும்,எதோ ஒரு காரணத்திற்காகவும் அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்புறது...கேட்டால் சிங்கள அரசு ஒன்றும் தருவதில்லை என்று சொல்றது. 9 மணிக்கு வேலைக்கு 9 மணிக்கு தான் வீட்டை இருந்து வெளிக்கிடுறது...12 மணி எண்டவுடனே வீட்ட சாப்பிட ஓடி வாறது,5 மணி என்றவுடனே பறக்கிறது, இடையிடையே சொந்த அலுவல்கள் என்று வெளிக்கிடுவது ,பத்தாததற்கு ஆளாளுக்கு அரட்டை சிங்கள பகுதிகளில் ஒரு நாளில் முடிக்கிற வேலையை தமிழர் பகுதிகளில் 6 மாதத்திற்கு இழுத்தடிக்கிறது ...பிறகு நேரமின்மையால் வேலை முடியல்ல என்று குற்றம் சொல்றது
  6. நன்றி. பார்ப்பாரற்று எங்கோ இருந்த “மூனா என்னும் தோழமைக் கரம்” பதிவை மீண்டும் கொண்டு வந்த மோகனுக்கு நன்றி. இங்கே தங்கள் கருத்துக்களை பதிவிட்ட அனைவருக்கும் எனது நன்றியை ஒட்டு மொத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். “மூனாவின் கிறுக்கல்கள்” புத்தகத்துக்கு அதிகம் செலவாகி இருக்கும் என கிருபன் கேட்டிருந்தார். உண்மை. ஒரு பதிவாக இருக்கட்டுமே என்றுதான் அதை வெளியிட்டேன். (அதற்கும் ஒரு கதை இருக்கிறது) புத்தகத்தை பார்க்க விரும்பினால் இந்தப் பக்கத்தில் pdf வடிவத்தில் இருக்கிறது. https://noolaham.net/project/711/71035/71035.pdf மீண்டும் ஒரு தடவை அனைவருக்கும் நன்றி.
  7. நீங்கள் புதிசுதானே? 🤣 சில விடயங்கள் யாழ் கள உறவுகள் குறைந்தது நால்வர் தனி தனியாக கையாளப்பட எத்தனித்து - எதேற்சையாக அது வெளி வந்து - ஒரு குட்டு உடைக்கப்பட்டது. குட்டை உடைத்தவர்களுக்கு யாழ் நிர்வாகமும் நன்றியை சொல்லி இருந்தது. இது நடந்தது அநேகம் திண்ணையில். அநேக யாழ்கள உறுப்பினர்களிற்கு குறித்த நபர் யாரென்பதும் - அவர் இயற்பெயர், வெளி உலகில் அவர் நடத்தும் இந்திய சார்பு இணையத்தளம் என்ன என்பதும் தெரியும். யாழில் இந்திய எதிர்ப்பு வேஷம். ஆனால் உண்மையான நோக்கம் மேற்கை நோக்கி புலம்பெயர் தமிழர்களை திருப்புவது. சும்மா சொல்லக்கூடாது - மஹாராசன் - தொழில் ரொம்ப சுத்தம். வாங்குவற்கும் மேலாலயே கூவிறாண்டா கொய்யால ரகம். மற்றையவர் தான் இந்திய இராஜதந்திரிகளிடம் பேசுவதாக அவரே யாழில் கூறி உள்ளார். இவர் காசு வாங்காமலே கூவும் ரகமாக இருக்க கூடும் என்பது என் அனுமானம். இலங்கையில் இவ்வளவு மினக்கெடும் இந்தியா - யாழ் போன்ற ஒரு தளத்தில் ஊடுவாது விட வாய்ப்பே இல்லை. அது யார் என்பதை உய்தறிவது கஸ்டம் ஆனால் முடியாத காரியமில்லை. Rule of thumb - 1. யார் இந்தியாவை கடுமையாக எதிர்ப்பது போல் காட்டி கொள்கிறார்களோ, குறிப்பாக ஹிந்தியா போன்ற வார்த்தைகளை பயன்படுத்திகிறார்களோ - அவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும். (நெடுக்காலபோவான் விதி விலக்கு). 2. கணக்குகள் 2009 க்கு பின் உருவானவையாக இருக்கும்.
  8. சும்மரும் செய்தவர் என யாராவது போர் கொடி தூக்கினால் உங்கள் பதில்?😅
  9. ஓம். யோஷித்த ராஜபக்‌ச ஒரு பெண்ணை காதலித்தவர். அந்தப் பெண் இவரை விரும்பாமல்... முஸ்லீம் பையன் ஒருவரில் காதல் கொண்ட போது, அந்த முஸ்லீம் பையனை கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. மேலதிக தகவல்களுக்கு.... @goshan_che, @குமாரசாமி, @Nathamuni ஆகியோரை அணுகவும். 😂
  10. கவி அருணாச்சலத்தைப் பற்றி.... வீரகேசரி பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) அன்று.. //"மூனா" என்கிற தெட்சிணாமூர்த்தி செல்வகுமாரன். ஈழத்தின் கருத்தோவிய உலகில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்// எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வந்ததாக அறிகின்றேன். அதனை @ஏராளன், @கிருபன் அல்லது வேறு யாராவது தேடி எடுத்து இங்கு இணைத்து விடும்படி அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி. 🙂
  11. இதைத் தான் நானும் அண்ணைக்கு எழுத இருந்தேன். இப்படி தான் ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். அது தொடர்ந்தபோது இங்கே அதை சில நாட்களின் பின்னர் சுட்டிக் காட்டினேன். இதையும் இங்கே பல தடவைகள் சுட்டிக் காட்டி இருக்கின்றேன். எமக்கான நீதி வேண்டும் என்று நாம் முயலும் முன் இவ்வுலகில் யார் நீதிக்கு எதிரானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே முதற்படி உலகின் எந்த நாட்டிலும் எந்த கட்சியிலும் இருக்கலாம். அவர்கள் எவராயினும் எமது அநீதிகளுக்கு குரல் தரவேண்டும் என்றால் நாம் மற்றவர்களின் அநீதிகளுக்கு குரல் கொடுப்பவராக கொடுத்தவராக இருக்கவேண்டும். நன்றி சகோ.
  12. உள்ளக ஆபத்து அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, எந்த தேசத்திற்கு வந்தாலும் என்ன செய்ய வேண்டுமென்று யாப்பில் எழுதியிருக்கும். இப்போதும் ஜனவரி 6 கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது seditious conspiracy குற்றம் நீதிமன்றில் விசாரணை செய்து நிரூபணமாகி சிறையில் இருக்கிறார், நிலத்தின் கீழ் சித்திரவதைக் கூடத்தில் அல்ல😎. இப்ப இவை பற்றியா பேசுகிறோம்? ஒரு தனிக் குடும்பம் - அதுவும் சோசலிஸ்ட் பாத் கட்சி என்று கட்சிப் பெயரில் சோசலிசம் வைத்துக் கொண்டு- தான் ஆட்சியில் இருக்க செய்த படுகொலைகளைப் பேசுகிறோம். இதையெல்லாம் "சகஜமயப்படுத்த" நீங்கள், உங்களுக்கு பின்னால் இருந்து உசுப்பேத்த ஒருவர்😂. உங்கள் போன்ற போலிப் புத்திஜீவிகளால் தான் உலகம் இன்று ட்ரம்ப்,புரின், கிம், பராஜ், லீ பென் போன்ற ஆட்களையெல்லாம் "விடுதலை வீரர்களாகக்" கொண்டாடும் நிலையில் நிற்கிறது. இந்த முட்டாள் தனங்களை தமிழ் சமூகத்திலும் அறிமுகம் செய்தால் இன்னும் ஒரு தலைமுறையில் நம் கதையும் கந்தல் தான்!
  13. தமிழரசுக் கட்சியில் இருந்து தெரிவாகி பாராளுமன்றம் போன யாராவது பதவி விலகினால் அந்த இடத்துக்கு பின்னால் உள்ளவர்கள் உள்நுழையலாம்.
  14. என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள். இலங்கையில்... இதன் மூலம், மாதம் 40 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் தமிழ் "யூ ரியூப்" நடத்துபவர்களும் இருக்கின்றார்கள். தமிழ் நாட்டில்... ஒரு கிராமிய சமையல் யூ ரியூப் நடத்துபவர்கள் இந்திய ரூபாயில் 80 லட்ச ரூபாய் வரை ஒரு காணொளிக்கு, வருமானம் பெறுவதாக சொன்னார்கள். அவர்கள் கிழமைக்கு ஒரு காணொளியை வெளியிடுவார்கள். வயல் வரப்பில் இருந்து சமைத்து ஒரு கிழமைக்கு 80 லட்ச ரூபாய் பெறுவது எவ்வளவு பெரிய வருமானம்.
  15. எந்தத் தகுதியும் இல்லாமலே நானும் கிளறிக்கல் சேவன்ராக வேலைபார்த்த காலமும் உண்டு. அதைக் கிளற அப்போது ரணிலும் இல்லை, சஜித்தும் இல்லை. என் பேரன் இரண்டு வயதில் ஏதோ கல்லை விழுங்கிவிட்டான், அது என்ன கல் என்று பார்ப்பதற்கு அவன் கடன்களை முடித்த வேளைகளில் எல்லாம் நானும் அதனைக் கிளறிக் கல் பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன்.🤪
  16. காவோலையை நிமிர்த்துவதற்கும் படிமனவாக்குவதற்கும் வேறு வழிகள் உள்ளது. குழைக்காட்டார் இல்லையென்றால் நகரத்தாரின் வண்டியும் குண்டியும் வற்றிப்போகும்😎
  17. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் பிரசன்னமாகியிருந்த எனது அண்ணாவுடன் கதைத்தேன். அவர் கூறியதன் சாராம்சம் பின்வருமாறு; 1. அருச்சுனா கேள்வி கேட்டது தப்பில்லை ஆனால் மற்றவர்க்ளுக்கு கதைப்பதற்கு சந்தர்ப்பமே வழங்கவில்லை. 2. அருச்சுனா சிலரை தனிப்பட தாக்கி கேள்வி கேட்டதுமல்லாமல் அவர்களின் பதவிக்கு அவசியமில்லாத தகமைகள் அவர்களிடம் உள்ளதா என தனிப்பட தாக்கியுள்ளார். 3. அன்றையநிகழ்ச்சிநிரலை சரியாக கொண்டு செல்லவிடாமல் மின்சாரசபைப்பிரச்சினையையும் சத்தியமூர்த்தியின் பிரச்சினையையும் மாத்திரம் கதைத்தார். 4. அருச்சுனா கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கப்பட்டாலும் அருச்சுனா அதைக்கணக்கிலையே எடுக்கவில்லை. 5. இவ்வளவும்நடந்ததன் பின் தான் பின்வரிசையில் இருந்த கிராம அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள் சத்தம் போட்டார்கள் அருச்சுனாவைப் பார்த்து வெளியே போகுமாறு. முன்வரிசையில் இருந்த அரச அதிகாரிகள் ஒருவரும் எதுவும் பேசவில்லை. அமைச்சர் எத்தனையோ தடவை சொல்லியும் அருச்சுனா கேட்கவில்லை. இனி அபிவிருத்திக்குரிய பணம் திரும்பிச் செல்வது பற்றி, 1. பிரதேச செயலகங்களால் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை மாறாக அரசியல் வாதிகளால் முன்மொழியப்படுபவைக்கே ஒதுக்கப்படும். 2. ஒதுக்கப்படும் பணம் பெரும்பாலும் ஜூனுக்குப் பிறகே வந்து சேரும். 3. அரசியல்வாதிகளால் முன்மொழியப்படும் திட்டங்கள் பெரும்பாலும் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்படாததாகவும் சிலவேளைகளில் செய்யமுடியாததாகவும் இருக்கும். 4. ஒதுக்கப்படும் பணம் தெவையுடன் ஒப்பிடும் போது மிகச்சிறியதாகவே இருக்கும் (உ+ம் ஒருகிலோமீற்றர் தார் வீதிக்கு 80லட்சம் தேவை ஆனால் சில அரசியல்வாதிகள் 3கிலோமீற்றர் வீதிக்கு 5லட்சம் மட்டும் ஒதுக்கியுள்ளனர். 5. சிலதிட்டங்களுக்கு திறமையான உள்ளூர் ஒப்பந்தகாரர் இல்லை. அப்படி இருந்தாலும் ஒரேநேரத்தில் பலவேலைகளை எடுத்து எந்த வேலையையும் அந்தநேரத்திற்கு முடிப்பதில்லை. 6. அரசியல்வாதிகளின் திட்டங்களுக்கு சாத்திய அறிக்கை முதலே தயாரிக்கப்படாத்தால் பணம் ஒதுக்கப்பட்டபின்னரே எல்லாம் செய்யவேண்டும். சிலவேளைகளில் பல திணைக்களங்களின் ஒப்புதல் தேவைப்படும். எல்லா ஒப்புதலும் பெறுவதற்கிடையில் வருடம் முடிந்துவிடும் (எங்களுடைய திணக்களங்களின் வேகம் தெரியும் தானே). 7. பெரும்பாலான திணக்களங்களில் திறமையான தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு தட்டுப்பாடு. 8. இருக்கும் தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கும்நவீன தொழில்நுட்பத்துக்கு தேவையான பயிற்சி வழங்குவது குறைவு. மேற்குறிப்பிட்ட காரணங்களால் அபிவிருத்தித் திட்டங்கள்நேரத்துக்கு முடிக்க முடிவதில்லை. அதைவிட பெரும்பாலான திட்டங்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாகவே செய்யப்படுகிறது. அவர்களுக்கு சட்டரீதியான பொறுப்புக் கூறல் என்பது இல்லை. இதனால் சிலவேளைகளில் ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிச்செல்கிறது. கேள்வி கேட்பது இலகு செய்து முடிப்பது கடினம். இதற்கு மூளைசாலிகள் வெளியேற்றமும் ஒரு காரணம்
  18. மூனாவைப் பற்றி விக்கிப்பீடியாவில்..... https://ta.wikipedia.org/wiki/மூனா
  19. பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன் December 17, 2024 11:35 am பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது, அதனை தற்போது நிரூபிக்க முடியாது என்பதால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அது நல்லதொரு விடயம். அதை நான் வரவேற்கின்றேன். இதேபோன்று மற்றவர்களும் மற்ற மற்ற விடயங்களுக்காக விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம்தான். பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம். விக்னேஸ்வரன் ஐயா தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார். ஒவ்வொரு இடங்களிலும் நிறையப் பார் போமிட் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. அதைச் சிபார்சு செய்தவர்கள் யார் என்ற தகவல் இன்னும் வரவில்லை. அந்தத் தகவல் வருகின்றபோது சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியமை போன்று விலக வேண்டும். அதனைச் சந்தோசமாக வரவேற்போம்.” – என்றார். https://oruvan.com/those-who-recommended-granting-of-parole-should-also-resign-like-the-speaker-sumanthiran/
  20. சில சுவாரசியமான தகவல்கள்: 1. அசாத் இலண்டனில் ஒரு கான்சர் டாக்டர் (ஒன்கோலொஜிஸ்ட்) வேலை பார்த்த சமயம் இங்கே பிறந்து வளர்ந்த சிரிய பெண்ணை மணம் முடித்தார். மாமனார் குடும்பமும் இங்கேதான். அப்போதெல்லாம் அதிர்ந்து பேசாத, தானுண்டு வேலை உண்டு என இருக்கும் மனிதனாம் அசாத். இவரின் சகோதரந்தான் அரசியல்வாரிசாக வளர்க்கப்பட்டார். அவர் கார் விபத்தில் இறக்க இவர் சிரியா போய் அவர் இடத்தை நிரவினார். 2. அசாத் ரஸ்யாவில் கிட்டதட்ட பணய கைதியாக இருக்கிறாரோ என நான் நினைக்கிறேன். சிரிய அதிபரின் டெலிகிராம் சேனலில் அசாத்தினது என ஒரு அறிக்கை வந்துள்ளதாம் -அதில், தான் எப்போதும் நாட்டை விட்டு ஓட முயலவில்லை, சிரியாவில் உள்ள ரஸ்ய தளத்தை மேற்பார்வை செய்ய சென்ற இடத்தில், ரஸ்யர்கள் எனது பாதுகாப்புக்கு இதுவே சரியான முடிவு என கருதி என்னை மஸ்கோ அனுப்பினர் என எழுதியுள்ளாராம்.
  21. 🤣 உப்பு அறவே கூடாது…ரோசம் கீசம் வந்து தொலைச்சால் கோஷ்சனால் யாழில் எழுதேலுமே🤣
  22. அதை சுமந்திரனே வெளிப்படுத்தி, அவர்கள் பதவி விலக வேண்டுமென்கிறார், கொழும்புக்கு ஓடி விட்டார் என்கிறார். யாரை சாடுகிறார் என்று தெரியவில்லையா உங்களுக்கு? விக்கினேஸ்வரன் அதற்கு பொறுப்பேற்று தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கொழுப்புக்கு போனாலென்ன, லண்டனுக்கு போனால்த்தான் இவருக்கென்ன? அவரை விமர்ச்சிக்க இவர் யார்? ஏன் அடுத்த கட்சிக்குள் மூக்கை நுழைக்கிறார்? இது அநாகரீகமில்லையா? தன் தோல்விக்கு பொறுப்பெடுத்து கட்சியின் சகல நடவடிக்கையிலும் இருந்து விலக துப்பில்லை, போனதடவை மாவையரை விரட்ட பத்திரிகை அறிக்கைகளும் கூட்டங்களும் நடத்தியவருக்கு தெரியாதா தனது நிலை? எதுக்கெடுத்தாலும் பதவி விலக வேண்டுமென்ற கூப்பாடு, இதை தவிர வேறேதும் உருப்படியா செய்ததில்லை. அதுதான் மக்கள் ஓய்வெடுக்கும்படி அனுப்பியுள்ளனர். அடங்குதா மனிசன்? யாரை பதவி விலத்துவேன் என்று கூவித்திரியுது.
  23. 🤣🤣 அதுக்கு வலுச் சேர்த்தது, உங்கட மடல் பகிடி தான்.... நீங்கள் போடத்தான், மொத்தமாய் சிக்கிட்டம் என்டு தெறிச்சு ஓடினான், இந்திய முகவர்.
  24. @நன்னிச் சோழன் என்னடா தம்பி சிரிப்பு🤣. நீங்கள் மட்டும் இல்லை என்றால் - நான் இண்டைக்கு வரைக்கும் நம்பி உரையாடிக்கொண்டிருப்பேன்🙏.
  25. அம்மைதி,அமைதி .இப்ப தானே பெரியண்ணை வீட்டில் சின்னதம்பி தோழர் அனுரா நல்ல விருந்து சாப்பிடு விட்டு வந்துள்ளார் ...இனி தான் தோழர் சாட்டையை எடுத்து சுழட்டுவார்...
  26. நீங்கள் ஜேர்மனியில் எந்த கட்சியில் இருந்தாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை அண்ணை. ஆனால் ஜேர்மனியின் எந்த கட்சியாயினும் அவர்கள் எல்லாரும் பிரதிநிதிதுவ ஜனநாயகம். சட்டதின் ஆளுமை, ஐரோப்பிய மனித உரிமை சாசனம் போன்ற சட்டங்களும் விழுமியங்களும் மதிக்கப்படும் ஒரு நாட்டில்தான் தம் அரசியலை செய்கிறனர். நீங்கள் AfD இல்லை என நினைக்கிறேன். கிரீன்ஸ் ஆக இருக்கலாம் என ஊகிக்கிறேன். ஆனால் நீங்கள் ரஸ்யாவையும், சீனாவையும், ஈரானையும் - மேற்கில் உள்ள ஜனநாயக நாடுகளோடு ஒப்பிட்டு எல்லாம் ஒன்றே என எழுதும் போது தான் பிணக்கு வருகிறது. இப்படி எழுத: 1. நீங்கள் சும்மா டைம்பாசுக்கு எழுத வேண்டும் அல்லது 2. மேற்கின் மீதான வெறுப்பில் எழுத வேண்டும் 3. அல்லது இன்னும் இருவர் போல் சம்பளத்துக்கு எழுத வேண்டும். இதில் மூன்றாவது இல்லை என அறுதியாக தெரியும். முதலாவதை ஒரு அளவுக்கு மேல் செய்ய முடியாது, ஆகவேதான் 2வது என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. இது மட்டும் அல்ல - எமது இழப்பில் மேற்கு அளவுக்கு ரஸ்யா, சீனா வுக்கு பங்கு இருக்கிறது என உங்களை விட வேறு எவருக்கும் தெரிந்ததல்ல. இருந்தும் மேற்கை மட்டுமே பழி சொல்வதுடன், ஒரு படி மேலே போய் ரஸ்யாவுக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்பதால் - இந்தியா புலிகள் விடயத்தில் நடந்தது கூட சரி என்று எழுதினீர்கள். இதை வேறு எப்படி விளங்கி கொள்வது? புலிகள் விடயத்தில் இந்தியா நடந்தது சரி, என வாதாடும் அளவுக்கு உங்களுக்கு புட்டின் காதல். இப்படி காரைக்கால் அம்மையார் கடவுள் மேல் கொண்டதை ஒப்ப உங்கள் புட்டின் மீதான காதல் ஏன் வந்தது? அவர்தான் மேற்கின் எதிரி நம்பர் 1. அதே போல மேற்கில் எந்த பிழை இருந்தாலும், நாம் இலங்கையை விட பலமாக இருப்பது இங்கே மேற்கில்தான். எனவே மேற்கினூடுதான் எமக்கு ஒரு தீர்வு வர வாய்ப்பு அதிகம். ஒரு போதும் ரஸ்யா, சீனா மூலம் இது வராது. இது தெரிந்தும், பலதடவை எடுத்து சொல்லியும் நீங்கள் - தமிழருக்கு இரு தரப்பும் ஒன்றே என்ற பொய் சமன்பாட்டை மீள மீள எழுதிவருகிறீர்கள். இவை எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் - நீங்கள் மிக மோசமான மேற்கு எதிர்ப்பு மனோநிலையில் அவதிபடுவது தெளிவு. இது அநேகமாக உங்களோடு முரண்படும் நான் மட்டும் கண்ட உண்மை அல்ல. இதை உங்களுடன் மிகுதி அனைத்திலும் உடன்படும் நண்பர்கள் கூட எழுதியுள்ளார்கள். பிகு தனிப்பட்டு உங்களுக்கு தனிமனித துதிபாடும் hero worshipping tendency உள்ளது எனவும் நான் அபிபிராயப்படுகிறேன். தலைவருக்கு முன்பு முட்டு கொடுப்பீர்கள் அது நியாயமானது (இப்போ எல்லாம் இதை கடந்து போய் விடுகிறீர்கள், மினகெடுவதில்லை), ஆனால் அதே வீரியத்துடன் சீமானுக்கும், புட்டினுக்கும், லேட்டஸ்டாக அனுரவுக்கும் முட்டு கொடுக்கும் போது - தொலைந்த காதலியை காணும் பெண்களில் எல்லாம் தேடும் காதலன் போல தலைவரை இவர்களில் project பண்ணுவதாகவே எனக்கு படுகிறது. இதுவும் உங்கள் மேற்கு எதிர்ப்பை வலுபடுத்துவதாக நான் எண்ணுகிறேன்.
  27. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! அதுவும் இங்லிஷ் தெரிந்தால் இன்னும் சிறப்பு😂 (நான் இங்க கம், கோ, யெஸ், நோ இங்கிஷ்ச சொல்லேல்ல)
  28. பார் பெர்மிட் வழங்கச் சிபாரிசு செய்த சமுக விரோதிகள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர்கள். இந்தச் சமூகவிரோதிகளும் அவர்களது துதிபாடிகளும் மக்களால் இனங்கணப்பட்டு அவர்களது முகத்தில் காறி தூவென உமிழவேண்டும். அத்துடன் இக் கயவர்களின் கல்வித் தகைமைகளும் சரி பார்க்கப்படவேண்டும்!
  29. அதன் பின்பு...அனுரவின் அமைசரவையில் பிரதமர்....எப்படி..
  30. ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோல் பூத்திருந்தா ..........! 😍
  31. சாணக்கியன் ஒரு எம்பி ஆனால் சுமந்திரன் எத்த முகாந்திரத்தில் சந்திப்பில் ஈடுபட்டார்.
  32. பா. உறுப்பினர் வேலையை உருப்படியா செய்த்தால் அது தேவையில்லை. அதைத்தான் அவர்கள் செய்வதில்லையே? கல்வியமைச்சர் வேலை வேணுமாம்! எங்கன்ர சுமந்திரனுக்கு வெளிநாட்டலுவலர் பதவி கிடைக்கப்போகுதென்று உதயன் கம்மன்பில சொன்னார், அதற்கு சுமந்திரன் சொன்னார், அது உதயன் கம்மன்பிலவின் கற்பனை. எனக்கு பிரதம மந்திரி பதவிக்கு அனுரா அழைப்பு விடுவார் என்று சொல்லி காத்திருந்தார். அது ஏன் அப்படிச்சொன்னார்? மக்கள் அதனை நம்பி தனக்கு வாக்களிப்பார்கள் என்று ஒரு உத்தி. ஆனால் அனுரா பக்கமிருந்து அவரை தலைகுனிய வைக்கும் அவர் எதிர்பார்க்காத பதில், மக்களிடம் இருந்து ஒரு ஆணை!
  33. உண்மையை மறைக்க அது உதவுமென சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கிறார்கள். தங்கள் நிஜத்தை அவர்களே விரும்பவில்லை, அதை மறைக்க ஏதோ ஒன்று அவர்களுக்கு தேவைப்படுகிறது. உண்மையாக கற்றவர்கள் தம்பட்டம் செய்ய மாட்டார்கள். இவைகளை காட்டியா இவர்கள் மக்களிடம் வாக்கு கேட்டார்கள்? அல்லது இவைகளை பார்த்தா மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்? இவர்களின் வாக்குறுதிகளை நம்பித்தானே. அதைத்தானே அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடுள்ளவர்கள்.
  34. அடடா... என்ன அழகு, என்ன கம்பீரம். அது சரி ....., கடைக்கு போன மனுஷனை கொண்டுபோய் இந்தியாவில இறக்கிவிட்டார்களோ? இல்லை.... எந்தவொரு ஆடம்பரமுமில்லாத உடை, நடை கெத்தில்ல! மற்றையவர் கடந்த காலங்களில் வெளிநாட்டுக்கு உத்தியோகபூர்வ பயணம் போனால் உடை, நடை, படை, என தனி விமானத்தில் போய் சொகுசு விடுதிகளில் தங்கி உல்லாசம் அனுபவித்து வருவார்கள். இவர் எத்தனை பேருடன் போனாராம்? வரவேற்பு என்னவோ பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால் சந்தித்தவர்கள் ஏன் இப்படி மூஞ்சியை இறுக்கமாக வைத்திருக்கிறார்கள்? எல்லாருக்கும் முன்பாக அழைத்து விருந்து கொடுத்து மருந்தும் கொடுத்துவிடுவார்கள். அனுராவுக்கு நன்கு தெரியும் இந்தியாவின் சகுனித்தனம். பாப்போம் எப்படி வெட்டியாடுகிறாரென்று! கவிழ்க்கப்போகிறார்கள் என்று அர்த்தம் சாமியார்! அனுராவின் வீரியம் தெரியும் அவர்களுக்கு போனவுடன் கோயிலில் விழுந்து கும்பிடும் கூட்டமல்ல இவர். வீட்டுக்கு வீரன், காட்டுக்கு கள்ளன் ரணில் என்னத்தை சொல்லுறது? எத்தனை நாடகம் தந்திரம் துரோகம் பவ்வியம் பிரிச்சாளுகை? என்ன செய்தாலும் ஒருமுறையாவது தனது ஆட்சிக்காலத்தை முழுமையாக, நிம்மதியாக, வெற்றியாக நிறைவு செய்ய முடியவில்லையே இவரால். பிறர்க்கிடும் பள்ளம் தான் விழும் குழி.
  35. பதினாறு சமையல்காரர் போனதினால், சுவையான சாப்பாட்டை இழந்துவிட்டார், தள்ளாத வயதில் சமையல் செய்ய வேண்டுமே என்கிற கவலை, வாழ்க்கையில் உருப்படியா ஜனாதிபதியாக ஒருபோதும் காலத்தை நிறைவு செய்ய வில்லையே என்கிற கவலை, வீட்டில் சந்தோசமாக நாட்களை கழிக்க சந்ததியில்லையே என்கிற கவலை, வசதி வாய்ப்புகள் இல்லாமல் போகப்போகுதே என்கிற கவலை, தமிழ் மக்களின் நிலங்களை முற்றாக அபகரித்து விகாரை, இராணுவமுகாம் ஆக்க முடியவில்லையே என்கிற கவலை, தமிழ் சமூகத்தை துரோகிகளை உருவாக்கி சிதைக்க முடியவில்லையே என்கிற கவலை, இப்படி எத்தனையோ கவலை அவருக்கு. தனக்கு சவாலானவர்களின் கையிலிருந்து நாட்டை பெற்று நிம்மதியாக நாட்டை ஆளலாம் என்று கனவு கண்டவருக்கு எங்கிருந்தோ எதிர்பாராத விதமாக வந்த பேரிடி! இதுக்கெல்லாம் காரணமான N.N.P யை துரத்த என்னென்ன வழி இருக்கென்று தேடிக்கொண்டிருக்கிறார். அவர்களும் விடுவதாக இல்லை. ஆம், கஞ்சா வியாபாரிகளும், அடிதடிகளும், கொலை கொள்ளைக்காரரும் சிறைக்கைதிகளும் பாராளுமன்றத்தை தங்கள் தங்கள் தொழிற் கூடங்களாக மாற்றி கதிரைகளாலும் மிளகாய்ப்பொடிகளாலும் தாக்கி தெருச்சண்டை பிடித்ததை வேடிக்கை பார்த்த அனுரா, படித்தவர்களை கொண்டுவந்து கௌரவமாக பாராளுமன்றத்தை நடத்த வெளிக்கிட்டது இவர்களுக்கு பிடிக்கவில்லை போலுள்ளது. தங்களது பதவிகளையும் வசதிகளையும் ஊழல்களையும் மறைக்க, இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த குடிமகன்களின் கைகளில் நாட்டை ஒப்படைத்ததை நிறைவேற்றவும் இதை தவிர ரணிலுக்கு ஏனையோருக்கும் வேறு வழியில்லை. குறுக்கு வழியில் பதவியை பெற்றுக்கொண்டவர் அது நிலைக்குமென்று எதிர்பார்த்திருக்க, இப்படி நிரந்தரமாக வீட்டில் தன்னை அமர்த்தி விடுவார்களென்று அவர் எதிர்பார்க்கவில்லை. இவர்களை இப்படியே விட்டுவிட்டால் இனி யாரும் அரசியல் வாழ்வை கனவுகாண முடியாது. அவர்களின் வெற்றி இவர்களுக்கு எதிர்கால அரசியல், கடந்தகால ஊழல் பயத்தை கடுப்பை உருவாக்குது. அனுரா அரசு, ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்தாலே நாடு தானாக முன்னேறும்.
  36. அந்த மகன் காது குத்து விழாவில் புரோகிதரை கூப்பிட்டு அவர் சமஸ்கிருதத்தில் ஒத கைகட்டி நின்றாரே அந்த தன்மான சிங்கத்தையா சொல்றீங்க 🤣. முடிந்தால்…அவர் குடும்பத்தில் ஆரிய வணக்கத்தை கைவிட சொல்லுங்கள். பிறகு மிச்ச புரட்சிய ஆரம்பிக்கலாம். நீ வேணா உன்னை பார்ப்பனனாக பாவனை செய்யலாம். இந்து என எண்ணலாம்…. எமக்கு நீ என்றும் டேனியல் இராசையா தான் என மூக்கிலே குத்தி விட்டிருக்கானுனோ…
  37. பாவம் முஸ்லிம்கள். இதிலையும் ஏமாற்றம்தான் மிச்சம். பிரதி சபாநாயகர் தனக்கு சபாநயகர் பதவி கிடைக்கும் என்று நினைச்சிருப்பார்! வடைபோச்சே!😂
  38. எல்லா இடமும் கை ஏந்தி, கடைசியில் சுயத்தை இழக்க வேண்டி வந்துவிட்டது. 1948´ல் சுதந்திரம் கிடைத்த கையுடன்... தமிழருடன் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஸ்ரீலங்கா... இன்று சிங்கப்பூர் மாதிரி இருந்திருக்கும். இனவாதம் விடவில்லையே... போர் என்று தொடங்கியதால், முழு நாட்டையும் சீனன், இந்தியன், அமெரிக்கன் என்று பங்கு போட காத்து இருக்கின்றார்கள். பிக்குகளுக்கும், இனவாதிகளுக்கும் சமர்ப்பணம்.
  39. திண்ணைக்குரிய script இன்னொரு தனிநபர் / நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதனையே இங்கு மேலதிகமாக களத்தில் இணைத்திருந்தோம். பின்னாளில் அதன் புதுப்பித்தல் பிரச்சனைகளுடன் களத்தின் வேகத்தினை மிகவும் மந்தப்படுத்தியதன் காரணமாக திண்ணையை நீக்கியிருந்தோம். தற்போது திண்ணையில்லாத தளம் சீராகவும், மிகவும் குறைந்த அளவிலான சேர்வர் பிரச்சனைகளுடனும் தளமும் வேகமாக இயங்குகின்றது என்பதால் திண்ணையினை தவிர்ப்பது சிறந்தது என்றே தெரிகின்றது.
  40. நீங்கள்... அவரின், சேர்டிபிக்கட் பார்த்தீங்களா? 😂
  41. பிகு2 இங்கே புலிகள் மாற்று இயககங்களை தடை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அசாத்தை போல ஒரு குடும்ப ஆட்சியை அல்லது தனிமனிதனை நிலை நிறுத்த அவர்கள் அப்படி செய்யவில்லை. ஏனையோர் துரோகம் இழைகிறார்கள், ஆகவே தடை செய்ய்ய வேண்டும் என்பதே எப்போதும் அவர்களின் நியாயமாக இருந்தது. இதோடு முரண்படலாம். நான் முரண்படுகிறேன். ஆனால் இதை வைத்து அசாத்துடன் ஒத்த கோடு கீற முடியாது.
  42. தவறு, தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்படாது இருந்திருந்தால் எந்த இரத்தமும் சிந்தப்பட்டிருக்காது. ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் பாதிக்கப்பட்டவன் மீதே குற்றம் காண விழைவது ஏனென்று கேட்கத் தோன்றுகிறது?
  43. வாசகர் கவனத்துக்கு! இங்கே டைம் மகசீனில் வெளிவந்த கட்டுரை என லங்கவெப் வெளியிட்ட கட்டுரை ஒன்று ஆதாரம் போல் காட்டப்பட்டது. இந்த கட்டுரை தலையங்கத்தை வைத்து - டைம் மகசீனின் ஒரிஜினல் கட்டுரையை என்னால் காண முடியவில்லை. லங்காவெப் இலங்கை புலநாய்வாளர்களால் வழிநடத்தப்பட்ட புலிகள் மீது உண்மைக்கு புறம்பானதை, அல்லது நடந்ததை பெருப்பித்து காட்டும் பிரச்சர போரில் முக்கியமான ஒரு அங்கம் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான். மிக முக்கியமாக இந்த கட்டுரையிலும் பாலசிங்கம் சொன்ன பேட்டியின் நகலோ அல்லது பேட்டி வெளிவந்த இதழ் பற்றியோ தகவல் ஏதும் இல்லை: ஆகவே இன்னும் பாலசிங்கம் எந்த பேட்டியில் இப்படி சொன்னார் என்பதும், இப்படி சொன்னாரா என்பதுமே நிருபிக்கபடவில்லை. நான் இங்கே பாலசிங்கம் கொடுத்த பேட்டிக்கான ஆதாரம் கேட்க காரணம் உள்ளது. அவர் சொன்னதாக சொல்லப்பட்ட ஆங்கில சொலவடையை பலவாறு அதன் சூழமைவை வைத்து வியாக்கியானம் பண்ணலாம். இதை இங்கே முதலில் தூக்கி வந்தவர், முன்பே செனேட்டர் லிண்ட்சே கிரேம் உட்பட பலர் ஆங்கிலத்தில் சொன்ன விடயங்களை தலை கீழாக புரிந்து கொண்டு அதற்கு சதிகோட்பாட்டு விளக்கம் கொடுத்தவர். ஆகவே பேட்டியை தக்க ஆதாரத்தோடு காணும் வரை - இது ஆதராமாக கருதப்படவியலாது.
  44. ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது. சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! ’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன! சடாரென வீசினார் கயிற்றை. கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
  45. கடற்தொழில் அமைச்சர் என்றால் எப்படி இருக்கவேண்டுமென்று வடக்கின் மிகபெரிய கடற்தொழில் நகர்களில் ஒன்றான வல்வெட்டிதுறை மக்கள் பேசுகிறார்கள்.
  46. இந்த வெயிலில் தொரைக்கு கோட் கேக்குதாம் . அதிரடிப்படையினருடன் வலம் வரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.