Leaderboard
-
satan
கருத்துக்கள உறவுகள்15Points10098Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87984Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்11Points3043Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்9Points19100Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/19/24 in all areas
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
7 pointsஆண்டு சரியாக நினைவில்லை, தெரிந்தவர்கள் குறிப்பிடுவார்கள். ஜெனிவா கூட்டத்திற்கு நமது பிரச்சனைப்பற்றி கதைப்பதற்காக த. தே. கூட்டமைப்பு செல்வதாக முடிவெடுக்கப்பட்டது. அப்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சாளராக இருந்தார். இந்த முடிவு எட்டியபின், சுரேஷ், அவருடன் சிலர் இந்தியா சென்றிருந்தனர். அந்த சமயம் சம்பந்தர், சுமந்திரன் கூடி ஜெனிவா போவதில்லை என முடிவெடுத்து வெளியிட்டனர். இது சுரேஷுக்கு தெரியாது. அவரை விமான நிலையத்தில் பேட்டி எடுத்த ஊடகவியலாளர், ஜெனிவா போவது பற்றி கேள்வி எழுப்பிய போது, நாம் செல்வோம் என்று பதில் கூறினார். அதற்கு பத்திரிகையாளர் சம்பந்தர் சுமந்திரனின் முடிவை கூறினார். இது சரியா? ஒரு கட்சி எடுத்த முடிவை இருவர் தன்னிச்சையாக, கட்சியோடு ஆலோசிக்காமல், தெரிவிக்காமல், முடிவெடுப்பது சரியா? உங்கள் வீட்டில், நீங்களும் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து, (உங்களுக்கு அந்த பந்தம் ஏற்பட்டிருக்கோ தெரியவில்லை, உதாரணத்துக்கு சொல்கிறேன். கோவிக்க வேண்டாம்!) எடுத்த முடிவை, உங்கள் மனைவி அதை உங்களுக்கு தெரியாமல் மாற்றி அதை இன்னொருவர் வந்து உங்களிடம் அறிவிக்கும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? அதுவும் உங்கள் குடும்பத்துக்கு பாதகமான முடிவை எடுக்கும்போது? இருக்கட்டும், அதன்பின் ஊடகவியலாளர்கள் இவரை அணுகி ஜெனீவாவுக்கு போவதாக எடுக்கப்பட்ட முடிவை ஏன் மாற்றினீர்கள்? எனக்கேட்ட போது, அமெரிக்கா சொன்னது, நீங்கள் வரவேண்டாம் அது நாங்கள் பாத்துக்கொள்கிறோம் என பதிலளித்தார். சொல்லுங்கள்! பாதிக்கப்பட்டது உங்கள் குடும்பம், வழக்கு நடக்கிறது, பாதிக்கப்பட்டவர் சார்பில் யாரும் இல்லாமல் வேறு ஒருவர் நமது துயரங்களை இழப்புகளை வலிகளை எடுத்துச்சொல்ல முடியுமா? நாமே அக்கறையில்லாமல் இருந்தால், விசாரிப்பவர்களுக்கு என்ன கரிசனை வந்துவிடப்போகிறது? சரி, அவர்கள் இழுத்தடிக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி நீதியை தேட வேண்டுமோ இல்லையோ? புலம்பெயர்ந்தோர் தவறாமல் போய் போராடுகிறார்கள். அவர்களையும் புலம்பெயர்ந்தோர் விருப்பத்திற்கு இங்கு அரசியல் செய்ய முடியாது என்றார். ஆனால் புலம்பெயர்ந்தவரிடம் ஏன் போகிறார்? இன்னொருதடவை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய போது, இவர் அடிச்சு விழுந்து அமெரிக்காவுக்கு போய், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க வேண்டுமென்கிறார். எதற்கு? பிரச்சனையை அமெரிக்கா பாத்துக்கொள்ளும் என்றவர், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க ஏன் ஓடினார்? அதை அமெரிக்கா பாத்துக்கொள்ளாதா? பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதி, ஏன் அரசுக்காக ஓடுறார்? சும்மா வாயை வைச்சுக்கொண்டு இருக்க கூடாதா? முன்னாள் பிரித்தானிய பிரதமர் தமிழ் மக்களை, அவர்களின் பிரச்சனைகளை சந்திக்க, அரசாங்கத்தின் கெடுபிடிகளை, தடைகளையும் தாண்டி வருகிறார். மக்களின் பிரதிநிதிகள் அங்கில்லை. அப்போது, அவரது ஆங்கில புலமை, திறமை, சட்ட அறிவு, கோட்டு சூட்டு எங்கே போனது? அப்போ, மக்கள் இவரது புலமை, அறிவு, திறமை, இல்லாமல் தங்கள் சாதாரண உடையுடன் தங்கள் துயரங்களை பகிரவில்லையா? அல்லது டேவிட் கமரோன் அவர்கள் துயரங்களை கேட்க மறுத்தாரா? அவர் அந்த மக்களின் குடிசைகளை, வெள்ளம் நிரம்பிய பாதைகளை கடந்து சென்று, அவர்களோடு பேசினார். இவர் ஒருநாளாவது அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லியிருப்பாரா? தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால் சிங்களவருக்கு கோபம், பயம் வருகிறதாம். அதற்கு நமக்கென்ன? அது தெரிந்துதானே அந்தக்கட்சியில் இணைந்தார், ஏன் இணைந்தார்? அதை இல்லாது செய்து சிங்களத்துக்கு மகழ்ச்சியை அளிக்கவா? அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார்? தன் மக்களுக்கு நடந்த அனிஞாயங்களுக்கு தீர்வு இல்லை, ஆறுதல் சொல்ல யாருமில்லை, முஸ்லீம் மேடையில் இருந்து முழங்குகிறார். இவர் யாரின் பிரதிநிதி, யாருக்காக பேச வேண்டும்? சிங்கள மக்களுடன் வாழுவது தனது அதிஸ்ட்டமாம். இருக்கட்டுமேன். யார் இவரை தட்டு வைத்து அழைத்தார்கள் தமிழரோடு வாழுங்கள் என்று? அங்கேயே வாக்கையும் சேகரிக்க வேண்டியதுதானே. இப்போ மக்கள் இவரை நிராகரித்து சிங்கள மக்களோடு வாழுங்கள் என்று அனுப்பிவிட்டனர். போகிறாரா மனிசன்? இன்னும் கூவிக்கொண்டு இங்கேதான் திரிகிறார். ஏனென்றால்; எம்மக்கள் ஏமாளிகள், முட்டாள்கள், நேரம் செலவிட்டு அடிமேல் அடிஅடித்தால் நகருவார்கள் என அவர்களின் இயலாமையை பாவிக்க நினைக்கிறார். எம்மக்கள் இழப்பிலே துவளுகிறார்கள் இறந்தவர்களை நினைவு கூர முடியாமல். இவர் பொப்பி பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போகிறார். கேட்டால், இராணுவத்தினருக்கு மரியாதையாம். ஒன்று அவர்கள் பக்கம் இருக்க வேண்டும் எங்களை விட்டு விலகி. நல்லாட்சி கலைக்கப்பட்டபோது இவர் ரணிலுக்காக நீதிமன்றம் போய் எதை சாதித்தார்? இருந்த ஒரு, மக்கள் அளித்த எதிர்க்கட்சி கதிரையும் பறி போனது. சரி, எங்களுடைய அரசியல் கைதிகள் எங்களை மீட்பார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள், இவர்களுக்காக இவர் என்ன செய்தார்? இரண்டொரு வருடத்திற்கு முன் தியாகி திலீபனின் நினைவு கூரலுக்கு நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கைக்கமைய தடை அறிவித்தது. இதுபற்றி ஊடகவியலாளர் சுமந்திரனிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில், போனதடவை ஆர்னோல்ட் என்னை கேட்ட படியால் நான் நீதிமன்றம் போய் அனுமதி பெற்றேன். இந்தமுறை அவர் என்னை கேட்கவில்லை, (அவர் ஏன் கேட்கவில்லை என்பது அவர்களிருவருக்குந்தான் தெரியும்). நீதிபதி தடையுத்தரவு அளித்துவிட்டார், இது தாமதமாகிவிட்டது என்றார். சொல்லுங்கள்! அந்த மக்களின் பிரதிநிதி, அவர்களுக்காக தானாக ஒன்றும் செய்ய மாட்டார், யாராவது கேட்கவேண்டும், தட்ஷணை வைக்கவேண்டும். இலங்கைக்காக அமெரிக்கா ஓடுகிறார், ரணிலிக்காக நீதிமன்றம் செல்கிறார். இதெல்லாம் தெரியாதா உங்களுக்கு? ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒன்று நக்குண்டார் நாவிடார், சுயநலம், அவரைப்பற்றி முழுமையாக தெரியாமை, அவரது குணாதிசயங்களோடு ஒத்தமை. அனுமதிப்பத்திரம் வழங்கிய செய்தி வந்தவுடன், அவர்கள் பெயர் அறிவிக்காமல், இவர் எப்படி பெயர் சுட்டி பிரச்சாரம் செய்தார்? ஏன் அனுமதி வழங்கிய ரணிலுக்கெதிராக ஏதும் கூவவில்லை? அதை தெரிந்தே மக்கள் குறிப்பட்டவர்களுக்கு வாக்களித்தார்கள், அதோடு அந்தப்பிரச்சனையை கைவிட வேண்டியது அல்லது சமூகபொறுப்புணர்ச்சி இருந்தால் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது மக்களுக்கு. செய்ய வேண்டியதை செய்யாமல், தனக்கு வேண்டியதை மட்டும் செய்தால், அது அவர் வீட்டில் செய்ய வேண்டும். ஏன், தேர்தலுக்கு முன்னர் என்ன சொன்னார்? நான் தனிப்பட்ட சந்திப்பை நடத்தி ரணில் எங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார். அடுத்தநாள், தான் யாருக்கும் எந்த உறுதியும் அளிக்கவில்லை எண்டு ரணில் பகிரங்கப்படுத்தியபின் வேறு கட்சிக்கு ஆதரவு என்றார். ஏன் இவ்வளவு அவசரம்,அபிமானம், பாசம் தனது மக்களை தவிர? இவரை இவ்வளவு காலமும் அரசியலில் இருக்க விட்டதே மக்களின் பெருந்தன்மை! இந்த வசனம் உங்களது அனுபவம் என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது. ஆனாலும் என்னை சிக்க வைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ தெரியவில்லை. எனக்கு அவரோடு எந்த தனி கொடுக்கல் வாங்கலுமில்லை, நடந்ததை சொல்லியிருக்கிறேன். முதல் முன்னாள் விக்கினேஸ்வரனுடன் சமராடினார். அவர் பதவி விலகவேண்டும் என்று போற வாற இடம், தெருக்கோடி எல்லாம் கூவினார், சவால் விட்டார், ஆட்களை கூட்டி விரட்டினார். பின்னர் வேறொரு கதை சொன்னார், அதை சொல்வதற்கு இவர் யார்? முடிந்தால் இந்தக்கட்சியை விட்டு வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டுங்கள் என்றார். அவர் செய்து காட்டினார். இன்னும் விடுகிறாரா அவரை? இவர் ஒரு தனி ரகம் சார்! தான் தான் எங்கும் எதிலும் முன்னுக்கு நிக்க வேணும் என்று அடம் பிடிப்பார். எதிர்ப்பவர் யாரும் இருந்தால், அவர்களை நாறடிச்சிடுவார். இதற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை தெரிந்தவர்கள் தொடர்வார்கள். நீங்கள் ஒன்றும் தெரியாமல் கேட்கவில்லை, ஆனாலும் கேட்டபடியால் சிலதை மட்டும் கூறியிருக்கிறேன். நேரில் சில சம்பவங்கள் அண்மைய காலங்களில் நடக்கின்றன சாட்சியாக. அவை உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, அதை நீங்கள் நம்பமுடியாவிட்டால் நான் சொல்வதையும் விளங்கி தெளியும் என நான் நம்பவில்லை. விளங்குகிறது. நான் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரித்து, இன்னொருவரை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதில்லை. மக்களுக்கு எதிராக செயற்படும் யாரையும் சாடுகிறேன், விமர்ச்சிக்கிறேன். அதை நீங்கள் காணத்தவறி விட்டீர்கள், அல்லது விரும்பவில்லை என நினைக்கிறன். சிலர் எனது கருத்தை மேலோட்டமாக வாசிப்பார்கள். காரணம் பந்தி. நான் எழுதும் கருத்துக்கு ஆதாரம் கொடுக்கும்போது பந்தியாகிறது, கொடுக்காவிட்டால் உங்களைப்போல், மூர்க்கத்தனமாக எதிர்க்கிறேன் என்பார்கள். நான் அனுராவை புகழ்வது கோஸானை சீண்டுவதற்கே. எல்லாத்திரிகளிலும் நான் சொன்னதை இழுத்துக்கொண்டு ஓடி வருவார், அதை நான் ரசிப்பதுண்டு. முக்கியமாக "அனுரா தெய்யோ, கண்ணை குத்திப்போடுவார்." போராடி களைத்த, இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆதரிக்க யாருமில்லை என ஏங்கும் என் இனத்துக்கு, கடைசி நட்சேத்திரம் அனுரா ஏதும் செய்ய மாட்டாரா என்கிற எதிர்பாப்பும் ஏக்கமும் பிரார்த்தனையும் இருக்கிறது. நன்றி வணக்கம்!7 points
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
சரி இனி என் நிலைப்பாட்டை சொல்கிறேன். அதற்கு முன் இரெண்டு பொறுப்பு துறப்புகள். 1. சும்மா எழுதுகிறேன் என்பதால் என்னை போராட எல்லாம் கூப்பிட கூடாது. பிறகு எழுதுவதையும் நிப்பாட்டி போடுவன். முன்னர் இன்னொரு திரியில் எழுதியது போல கூட்டாக புலம்பெயர்தேசத்தில் போராடும் போது ஒரு தலை என்பதுதான் என உச்ச எல்லை. 2. கீழே நான் சொல்லும் நிலைப்பாடு - வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக தமிழ் தேசிய கட்சிகளை தேர்தலில் ஆதரிக்கும் மட்டும்தான். அவர்கள் கைவிடாமல் இவற்றை கைவிடும் அல்லது கைவிட கோரும் அதிகாரம் எமக்கு இல்லை என்பது என் நிலைப்பாடு. அதே போல் அவர்கள் கைவிட்டால் நானும் அக்னி, ஐலண்ட் போல உஜாலாவுக்கு மாறி விடுவேன். ஆனால் அந்த நிலைப்பாட்டை பற்றி பத்தி எழுதி மினகெடமாட்டேன், தேவையும் இல்லை. என நிலைப்பாடு 1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லை. இப்போ காணாமல் போனோர் என எவரும் இல்லை அனைவரும் கொல்லப்பட்டார்கள் என நான் நம்புகிறேன். ஆனால் - கேள்வி 4க்கு இது முக்கியம். 2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்? இல்லை. இதை தனியார் சட்ட, போராட்ட வழிகளில் போராடி பெற வேண்டும். இது அந்த மக்களின் தனியார் காணிகள். இதை அவர்கள் மீட்க மிகுதி அனைவரும் உதவ வேண்டும். 3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்? இல்லை - மேலே குசா அண்ணை சொன்னது போல் - இதில் இந்தியாவை மீறி இலங்கை தண்டிக்கபட வாய்ப்புகள் அரிது. ஆனால் இதுவும் கேள்வி 4 க்கு முக்கியம். 4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? இல்லை - இந்த கோரிக்கைதான் சகலதுக்கும் அச்சாணி. இதை கைவிட்டால் - குறைந்த பட்ச அதிகாரபரவலாக்கலை கூட கைவிட்டதற்கு சமன். காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்த குற்ற விசாரணை, புலம்பெயர் மென்வலு இவை அனைத்தையும் leverage பண்ணி இந்த அதிகாரத்தை பெறுவதே நமக்கான குறைந்த பட்ச தீர்வாக இருக்க முடியும். 5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? ஆம் - ஒரு கடைசி பேரம் பேசலில் காத்திரமன, மீள பெற முடியாத காணி அதிகாரத்தை பெறும் போது, ஒரு காம்ப்ரமைசாக, இனவாதிகளை சாந்தபடுத்த. இதை விட்டு கொடுக்கலாம் (வேறு வழியில்லை - தமிழர் பொலிசை எந்த சிங்களவனும் ஏற்க போவதில்லை). ஆனால் இதன் போது ஒரு பொறுப்பு கூறல் மிக்க, சேவை பிராந்தியங்களின் இன பரம்பலை ஒத்த பொலிஸார்ரை கொண்ட தேசிய பொலிஸ் சேவை அமைவதை வலியுறுத்தலாம்.3 points
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இதனை பற்றி பேசுவதில் பிரயோசனம் இல்லை, அது ஒரு தவிர்க்க முடியாத இயற்கையியல் விதி, அதில் பெயர்கள் மட்டுமே வித்தியாசமாக இருக்கும்.2 points
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உதவுங்கள்; கனடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
இதை வாசிக்கும்…. சுமந்திரன் குரூப்புக்கு, அடி வயிறு பத்தி எரியப் போகுது. 😂 🚒🧯தீயணைப்பு வண்டி தொலைபேசி இலக்கம்: 📞 ☎️ 112 🤣 🚒2 points
-
பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - ஜீவன் தொண்டமான்
இதை நீங்கள் sarcastic ஆக சொன்னீர்களோ தெரியவில்லை. ஆனால் சொல்லிய விஷயத்தில் உள்ள உண்மையை மறுக்க முடியாது. மக்கள் தாமாக திருந்த முயல வேண்டும், எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளை குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பது என்பது இயலாமை. புத்திகூர்மையும் பிறந்த சூழலும், நடைமுறை அரசியலும் ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனினும் தனி மனித ஒழுக்கம், கடின உழைப்பு, சரியான தீர்மானங்களை சரியான நேரங்களில் எடுக்கும் திறமை, போதைக்கு( வெற்றிலை பாக்கு, சாராயம், புகையிலை சுருட்டு, ஆபாசம், சினிமா, youtube, Facebook முதலிய சமூக ஊடகங்கள் ) விலகி இருத்தல் ஆகியவற்றை கைக் கொண்டால் எல்லோரும் அடுத்தடுத்த படி நிலைகளை அடைய முடியும்.2 points
-
கால்நடைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவுகின்றதா? - ஆய்வு செய்வதற்கு கொழும்பில் இருந்து யாழுக்கு செல்கிறது விசேட குழு!
இந்த எலிக்காய்ச்சல் நேரம் கட்டாக்காலி நாய்களால் உருவாகும் பொதுச்சுகாதாரக் கேடுகள் பற்றியும் பேச வேண்டும். கண்டியில் வளர்ப்பு நாய்களில் கூட 15 முதல் 20% நாய்களில் எலிக்காய்ச்சல் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்திருக்கின்றன. வளர்ப்பு நாய்களிலேயே இப்படியெனில், யாரும் வளர்க்காத கட்டாக்காலி நாய்களில் இந்த பக்ரீரியா மிக அதிகமாக இருக்கும் என ஊகிக்கிறேன். கண்டியில் நடந்த ஆய்வு இது👇: Insight into Canine Leptospirosis in Kandy Area, Sri Lanka: Sero-epidemiology and Environmental Contamination T.P.J. Athapattu1 et al. , *Corresponding author: ruchikaf@pdn.ac.lk Canine leptospirosis is a globally important zoonotic bacterial disease. Dogs act as the maintenance host for Leptospira interrogans serovar Canicola and incidental host for several other serovars. Chronic carriers are asymptomatic and excrete pathogenic leptospires in their urine intermittently resulting in environmental contamination and is a source of infection for humans. Several studies have confirmed the presence of leptospirosis in livestock, wildlife and peridomestic rats in Sri Lanka. Scanty information is available on the status of the disease in dogs or their potential role as a carrier of the etiological agent. Thus, the current study was aimed to understand the status of canine leptospirosis among owned dogs in Kandy area. Blood and urine samples were collected from 178 clinically healthy dogs brought to Government Veterinary Hospital, Peradeniya. Microscopic Agglutination Test (MAT) was carried out using the serum samples with a panel of 14 Leptospira strains belonging to 13 serogroups. The urine samples were used to collect pellets by ultracentrifugation. DNA in the pellets were extracted from 133 urine samples and were subjected to a PCR assay targeting the flaB gene specific to pathogenic leptospires. All PCR positive samples with leptospiral DNA were sequenced and a phylogenetic tree was constructed including 25 reference strains. Out of the 96 serum samples obtained from unvaccinated dogs, 15 (15.6%) were positive for MAT. The positive serogroups included Sejroe (11.5%), Canicola (2.1%), Icterohaemorrhagiae (1.0%), and Javanica (1.0%). Amongst the 82 serum samples obtained from properly vaccinated dogs, only one sample was positive for the serogroup Sejroe. Fourteen out of the 73 (19.2%) urine samples collected from unvaccinated dogs and 13 out of the 60 (21.7%) urine samples collected from properly vaccinated dogs were positive for DNA of pathogenic leptospires confirming the excretion of the organisms in their urine. DNA sequencing revealed that the positive animals were infected with L. interrogans, L.kmetyi, L. borgpetersenii and L.weilii which belong to Leptospira P1 subclade. A considerable proportion of vaccinated and unvaccinated dogs were infected with a variety of pathogenic leptospires. Both groups excreted pathogenic leptospires in urine posing a considerable public health risk.2 points
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இங்கும் இதே நிலைதான். முன்பு… போஞ்சி, காளான், தக்காளி போன்ற மரக்கறி வகைகளை 500 கிராம் பைகளில் பொதி செய்து கடைகளுக்கு அனுப்புவார்கள். கோவிட்டுக்குப் பிறகு 400 கிராம் பொதி ஆக்கி, விலையையும் கூட்டி விட்டார்கள்.2 points
-
பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - ஜீவன் தொண்டமான்
எல்லோரும் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் ஆனால் மக்கள்தான் முன்னேற மறுக்கிறார்கள்.2 points
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
ஒரே ஒரு சொல் மாத்திரம் நீக்கப்பட்டதாம். According to the Arjuna’s Facebook post2 points
-
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
முன்னெச்சரிக்கை இல்லாத செயற்பாடு. நம்மிடம் எல்லா வளங்களுமுண்டு, பருவ காலத்திற்கேற்ப பாவிக்க, பதப்படுத்த, சேமிக்க தெரியவில்லை. இப்பிடித்தான் தரம் குறைந்தவைகளை கூடிய விலைக்கு இறக்குமதி.2 points
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
உண்மை, நாம் நன்றி கெட்டவர்கள் தான். எங்களுக்காக போராடிய, சிறையில் அடைக்கப்பட்ட எத்தனையோ பல முகம் தெரியாத திராவிட இயக்க, திமுக தொண்டர்களை தெலுங்கன் என்றும் முதுகில் குதியவர்கள் என்றும் 2009 இல் facebook, youtube மூலம் மட்டுமே உலகை அறிந்துகொண்ட தலைமுறை திட்டியப்பொழுது நான் இல்லை என்று சொன்ன பொழுது என்னையும் தெலுங்கன் list ல் சேர்த்து விட்டார்கள் இந்த நன்றி கெட்ட கயவர்கள். பிறகு இல்லை நான் இந்த ஊர், இன்னார் சொந்தம் என்று சொன்ன பின் கிடைத்தது சாதி வெறியன் பட்டம். கடைசி வரைக்கும் நல்ல தமிழனாக உண்மையை சொல்ல வெளிக்கிட்டால் கிடைப்பது துரோகி, சாதி வெறியன், சிங்களவனுக்குப் பிறந்தவன் மற்றும் தெலுங்கன் பட்டமே.2 points
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
😂புலவர், நீங்கள் சிறு பையன் அல்ல! அதே புளித்துப் போன "பட்டி தொட்டி பிரபாகரன் பெயர்.." என்ற யூ ரீயூபர்களின் பல்லவியோடு வர. இந்தியா தாண்டியும் கூட தெரிந்த புலிகளையும், பிரபாகரனையும் பக்கத்தில் இருக்கும், ஒரே மொழி பேசும் மாநிலத்தின் மக்களுக்கு 2009 இற்குப் பிறகு சீமான் பிரபலமாக்கினார் என்பதை கேனையர்கள் நம்புவர் - யாழ் கள வாசகர்கள் கேனையர்கள் அல்ல!2 points
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
என்னப்பா அமீரையும் திட்டுறானுவள் சம்பந்தனையும் திட்டுறானுவள் சுமந்திரனையும் திட்டுறானுவள் சாராயக்கடை சிறியையும் திட்டுறானுவள் சிவாஜிலிங்கத்தையும் திட்டுறானுவள் சாணக்கியனையும் திட்டுறானுவள் தம்பி அர்ச்சுனாவையும் திட்டுறானுவள் ஏன்.... எங்கையோ கிடக்கிற சீமானையும் திட்டுறானுவள்..... அடேய்களா என்னதான் வேணும் உங்களுக்கு? 🤣2 points
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
இல்லை நீங்கள் எதையும் தவறவிடவில்லை. தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? என்ற ரஞ்சித் அண்ணாவின் கட்டுரை இவர்களை பற்றி அறிந்து கொள்ள உதவும்1 point
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இருக்கும் இருக்கும் எதியோப்பியர்களுக்கும் எமக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறுகிறார்கள். ஒபாமா சொந்தக்காரன் கமலா சொந்தக்காரி அமெரிக்க தலைவர்கள் பலர் சொந்தமாகி விட்டார்கள்.1 point
-
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு - அமைச்சர் லால்காந்த
நேற்றோ அல்லது முந்தாநாளோ இங்கு யாழில் இணைக்கப்பட்டிருந்த ஒரு இணையக் கட்டுரை ஒன்றில் கடைசிப் பந்தியில் கிட்டத்தட்ட இப்படி எழுதப்பட்டிருந்தது: இப்படியான ஏகாதிபத்திய, எதேச்சதிகார அமெரிக்காவிற்கு எதிராகப் போராட உலகில் உள்ள எல்லா இளைஞர்களும் ஒன்றாக அணிதிரள வேண்டும்........... இன்னமும் இப்படி எழுதுகின்றார்களா, அதை மக்களும் வாசிக்கின்றார்களா............ என்று நினைப்பு போனது. இந்த வசனம் அரதப்பழசு, எங்களை விடப் பழசு............... அந்த பத்திரிகைக்காரர்களிடம் சொல்லவேண்டும்............. அமெரிக்கா இப்பொழுது உலகெங்கும் சில்லறை வர்த்தகத்திலும் கால் வைக்கத் தொடங்கியுள்ளது என்று..............🤣.1 point
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
அவர் நிறைவேற்றுவதாக கூறியவை எவை? நான் நினைகிறேன் அவர் கூறிய விடயங்கள் பொதுச்சேவையின் தரத்தினை உயர்த்தல், ஊழல் அற்ற ஆட்சி, பயங்கரவாத தடை சட்ட நீகம், பொருளாதார வளர்ச்சி, சிறுபான்மையினரின் மொழியுரிமை. இதற்கு முன்னரிருந்த ஜனாதிபதிகள் இதனைவிட ஜனரஞ்சகமான வாக்குறுதிகளை வழங்கினார்கள், பொதுச்சேவை தரமுயர்த்தல், அபிவிருத்தி, பயங்கரவாத தடைசட்டம் நீக்கம், இனப்பிரச்சினை தீர்வு, ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பவை இலங்கை அரசியலின் வழமையான cliche தானே? எனக்கு தெரிந்து புதிதாக புதிய ஜனாதிபதி எதுவும் கூறிய மாதிரி தெரியவில்லை, அல்லது நான் ஏதாவதை தவற விட்டுள்ளேனா?1 point
-
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
1 pointகடந்த செப்ரெம்பரில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு ஒன்று இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கு பிரான்சில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அதிகமான கவனிப்பைப் பெற்றுள்ளது. அவிக்னோனில் ( Avignon ) நடந்த பாலியல் வன்புணர்வு வழக்கின் முக்கிய குற்றவாளியான டொமினிக் பெலிகாட் (Dominique Pelicot)டுக்கு மோசமான பாலியல் குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. டொமினிக்கின் விதிக்கப்பட்டிருக்கிறது. மனைவி ஹீசலா (Gisele) மீது பாலியல் வன்முறையை மேற்கொண்ட மற்றைய 50 ஆண்களுக்கு இரண்டில் இருந்து பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. டொமினிக் பெலிகாட் ஹீசலாவுக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மீண்டும் மீண்டும் போதை மருந்தைக் கொடுத்து, அவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றார். மேலும் ஐம்பதுக்கு அதிகமான பிற ஆண்கள் மூலம் அவரை பாலியல் பலாத்காரம் செய்வித்திருக்கின்றார். நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தன்மேல் சுமத்தப் பட்ட அனைத்துக் குற்றங்களையும் டொமினிக் பெலிகாட் ஒத்துக்கொண்டிருந்தார். “எழுபதுகளின் ஆரம்பத்தில் இருக்கிறேன். என் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கான வழக்கு மூடிய கதவுகளுக்குள் நடைபெறுவதை நான் விரும்பவில்லை. இங்கே நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. நான் வெட்கப்படுவதற்கும், கூனிக் குறுகிப் போவதற்கும் ஒன்றுமேயில்லை. வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு ஒதுங்கிப் போகாமல் எனது இந்த நடவடிக்கை மூலம் தைரியம் பெற வேண்டும். வெட்கப்பட வேண்டியது பாதிக்கப்பட்ட நாங்கள் அல்ல, எங்கள் மீது அதை ஈடுபடுத்திய ஆண்கள்தான் வெட்கப்பட வேண்டும். தண்டனை பெற வேண்டும்” என ஹீசலா பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்திருக்கின்றார்.1 point
-
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு - அமைச்சர் லால்காந்த
முட்டை ,அரிசி, தென்னை இதற்கெல்லாம் அமெரிக்காவா ....அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலாகிய சிறிலங்காவை சுற்றி வளைத்து இந்தியா ,சீனா போன்ற நாடுகள் ராஜதந்திர தாக்குதலுக்கு தயாராகின்றது ... அது நாற வாய் இது வேற வாய் ...என்று சொல்லுறீயல்😅1 point
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உதவுங்கள்; கனடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
19 DEC, 2024 | 06:42 PM ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, குற்றவியல் பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானங்களைப் பிரேரிக்கும் மையக் குழு நாடுகளிடம் இந்தத் தரமுயர்த்தலை வேண்டுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கனடிய வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் உள்ளிட்ட கனடிய அரசியல் தரப்பினருடனான உத்தியோகபூர்வ சந்திப்பு வியாழக்கிழமை (19) ஒட்டாவாவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு கோரிக்கை கடிதமொன்றையும் கையளித்துள்ளார். அக்கடித்தில், ஈழத்தமிழர் மீது திட்டமிடப்பட்ட தொடர்தேர்ச்சியான இன அழிப்பு இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றக் குழுத் தலைவராக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி 1956 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய திருகோணமலைப் பிரகடனத்தில் எவ்வாறு இந்தத் திட்டமிடப்பட்ட இன அழிப்பை இலங்கை அரசு கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதென்பதை ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மறைந்த தந்தை செல்வா அவர்கள் ஆரம்பத்திலேயே தெளிவாக விளக்கியிருந்தார். அதன் ஒரு வடிவமாகவே ஒற்றையாட்சி அரசியலமைப்பு தொழிற்படுகிறதென்று சர்வதேச தரப்புகளை நோக்கி இலங்கை எதிர்நோக்கும் சிக்கல் என்ற வெளியீட்டை முதல் முதலாக சர்வதேசம் நோக்கி தமிழரசுக்கட்சி முன்வைத்திருந்தது. இது தொடர்பில் அன்று தொட்டு இன்று வரை சர்வதேசத்தின் பங்கை மக்கள் பிரதிநிதிகளாக நாம் வலியுறுத்திவருகிறோம். இலங்கைத் தீவு தொடர்பான பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாகுவதெனில் அதைப் பின்வரும் மூன்று விதமாகப் படிநிலைப்படுத்தப்பட்ட முக்கியத்துவத்தோடும் ஒழுங்கோடும் அணுக வேண்டும் என்பது எமது பார்வையாக உள்ளது: 1)தலையாய சர்வதேசக் குற்றமான இன அழிப்புத் தொடர்பான பொறுப்புக்கூறல் 2)இதர சர்வதேசக் குற்றங்களான போர்க்குற்றங்கள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, வலிந்து காணமலாக்கப்பட்டமை ஆகியவை பற்றிய பொறுப்புக்கூறல் 3)மேற்குறித்த குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாது புரையோடிப்போயிருக்கும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை, குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதும் பொறுப்புக்கூறலின் முக்கிய பெறுபேறாக அமையவேண்டும். மேற்குறித்த மூன்று முனைகளில் அர்த்தமுள்ளவகையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதிலும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதிலும் பெருந்தொகையாகப் புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் முதன்மையான நாடான கனடா நாடானது பின்வரும் வழிகளில் காத்திரமாக உதவவேண்டும் என்று அனைத்து ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் வேண்டி நிற்கிறேன் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/2016841 point
-
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு - அமைச்சர் லால்காந்த
அப்ப லால்காந்த ஓனர் இல்லையா......................🤣 அல்வாய், திக்கம் முழுக்க தென்னை நிற்குது தானே என்ற பெருமையில், அமெரிக்காவின் உதவி தேவையில்லை என்று நீங்கள் சொல்லவில்லை தானே...............😜. எவ்வளவு ஆட்களையப்பா அநுரவும் சமாளிப்பது........... இந்தியா, சைனா, அமெரிக்கா, அல்வாயன்,............. ஜீலி வேற அடிக்கடி யாரையாவது சந்தித்தபடியே இருக்கின்றார்..............1 point
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
எந்த சிங்கள் ஆட்சியாளர்களும் துணிந்து தமிழர் நலன் சார்பான அரசமைப்பை உருவாக்க மாட்டார்கள் ...பார்ப்போம் ...காலம் பதில் சொல்லட்டும்..1 point
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உதவுங்கள்; கனடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
வீடு பற்றி எரிகிறது முதலில் அதையும் அணைக்கவேண்டும். சிறி ஐயாவுக்கு வாழ்த்துகள்1 point
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அந்த நாட்களில் ஐந்து கோடி ரூபாய்களை ஒரே இரவில் பத்து கோடி ரூபாய்களாக மாற்றும் வல்லமை சிலருக்கு அங்கே இருந்தது............. இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால், முதலாவது என்ன தொகை கேட்டார்கள் என்ற திகைப்பை அகற்ற, இரண்டாவது ஏன் திரும்பவும் வந்தார்கள் என்பதன் பின்னணியை அறிந்து கொள்ள................1 point
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
🤣............ திண்மம், திரவம், வாயு என்று மூன்று பொருட்களும் இந்த இரண்டு வரிகளுக்குள் அடங்கி இருக்கின்றது போல, வசீ............................😜. இந்தப் படத்தால் (இனிமேல் பெயரைச் சொல்லமாட்டேன்.............🤣) சூர்யா நடிப்பதாக இருந்த மிகப்பெரிய ஒரு பான் - இந்திய திரைப்படம் அப்படியே நின்றுவிட்டது. சூர்யா மும்பையில் குடியேறியதற்கு இந்த புதிய முயற்சியும் ஒரு காரணம்............... ஆனால் இப்பொது எல்லாம் வீணாகப் போய்விட்டது............... படம் வெளியாகி அடுத்த நாளே தியேட்டர்களில் சத்தத்தின் அளவை குறைக்கச் சொல்லும்படி தயாரிப்பாளார்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது........... ஆனாலும் நடந்த சேதம் சேதம் தான்.........1 point
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
1 pointஶ்ரீலங்கா முஸ்லீம்கள்… இதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் “பம்மிக்” கொண்டு இருக்கிறார்கள். 😂 அனுர…. ஆட்சியில், அவ்வளவு பயம் இருக்குது போலை கிடக்கு. 🤣1 point
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கோவிட்டுக்குப் பின்பு சகல சாமான்களும் இதே நிலை தான். விலையையும் கூட்டி அளவையும் குறைத்து விட்டார்கள்.1 point
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
புலிகள் காலத்திலேயே புலிகள் பணத்தை ஏப்பம் விட்டு சுதந்திரமா இருந்திருக்கிறார் பலே கில்லாடிதான். அந்த உரிமையாளர் பெயர், பெட்ரோல் நிலையங்கள் அமைந்திருக்கும் இடங்கள் , வியாபார நிறுவனங்களின் பெயரை கூற முடியுமா? அனைவரும் அறிந்தால் அந்த உரிமையாளரை அவர் வருமானம் ஈட்டிய விதம் பற்றி விசாரிக்க சொல்லி அரசுக்கு அறிவிக்கலாம், ஆக குறைந்தது பொதுவெளியில் அறிவித்தால் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.1 point
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே ........ ஜெய்சங்கர் & வாணிஸ்ரீ .......! 😍1 point
-
சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை!
புத்தரின் சிந்தனையில் குடிமக்களின் உயிர்கள் காப்பாற்றப் படும். நானும் ஏதோ குடிகாரர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் என்று நினைத்து வாசிக்கத் தொடங்கி விட்டேன்.1 point
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
இது வாலில்லை, தலைதான்! பயம் தெளிஞ்சு போச்சுது போல. கோசானுக்கு தெரியுமோ இந்த விஷயம்?1 point
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
முக்கியமான விடயம் இங்கு நான் அசாத் ஆதரவாளனில்லை. மத்தியகிழக்கு முக்கியமாக எந்த முஸ்லீம் நாடும் நாடுகளுக்கிடையிலான போரினாலோ அல்லது சிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டாலோ நான் அவர்களை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவது கிடையாது. இதற்க்கு காரணம் அவர்களது 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட முரண்பாடுகளின் மூட்டையை பற்றியும் அந்த மூட்டையை அவிழ்த்து தினந்தோறும் நுகர்பவன் எப்படியாக சிந்திப்பான் என்றும் போதுமான அறிவிருப்பதாலே. இங்கு நான் குறிப்பிட்டது புலிகள் மட்டும் ஒன்றும் தவறு செய்யாத உத்தமர்கள் அல்ல என்பதனையே. அசாத் போன்ற ஒரு கொடுங்கோலனுடன் புலிகளை ஒப்பிட முடியாது. ஆனால் புலிகளும் மனித உரிமை மீறல்களை படு சர்வசாதாரணமாக செய்துள்ளனர். கருணா புலிகளுடன் சேர்ந்து இயங்கிய காலம் முழுவதும் இழைத்த தவறுகளுக்கு தலைமைப்பீடம் மட்டுமே பொறுப்பு. நீங்கள் சொல்லவருவதைப்பார்த்தால் கிழக்கை கருணாவிடம் தூக்கிகொடுத்துவிட்டு தலைமைப்பீடம் அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் விரல்சூப்பிக்கொண்டிருந்தது என்பது போல் இருக்கிறது. கருணா தலைமையின் கட்டளையை மீறி அனுமதிக்கப்படாத முறையில் நிதி வசூலித்திருந்தால் உடனடியாக தலைமை நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் இது தலைமையின் பொறுப்பு. அளவுக்கதிகமான நம்பிக்கையை கருணாமீது வைத்து அவனை அவனது போக்கில் தான்தோன்றித்தனமாக ஆட அனுமத்திருந்தாலும் அதுவும் தலைமையின் பிழை. ஆம் நான் மேலே குறிப்பிட்ட STF இனால் கொல்லப்பட்ட போராளி வசூலித்த பணமூட்டைகளை ஒரு வீட்டில் பதுக்கி வைப்பது வழக்கம், குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன் அவை மொத்தமாக அனுப்பிவைக்கப்படும் இந்த ரகசியம் அந்த போராளி உட்பட இன்னும் இருவருக்கும் மட்டுமே தெரியும். STF வைத்த கண்ணியில் மூவரும் மாட்டி கொல்லப்பட அந்த வீட்டு உரிமையாளர் அவ்வளவு பணத்தையும் ஏப்பம் விட ஒரு காலத்தில் சாராயம் காய்ச்சும் தொழில் செய்தவர் இன்று இரண்டு பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பல வியாபார நிறுவனங்களுக்கு உரிமையாளர். பெரும் பணமுதலை. அதாகப்பட்டது மக்களிடம் அடித்து பிடுங்கி, எங்கேயோ இருந்த கள்ளச்சாராயக்காரனை கோடீஸ்வரனாக்கி விட்டிருக்கிறார்கள் புலிகள். என்ன செய்வது அவன் ஆடிய ஆட்டம் அப்படி. இவ்வளவிற்கும் இவன் புலிகளின் கப்டன் தர போராளி கூட இல்லை. கிழக்கில் புலிகளை விட புலிகளுடன் சேர்த்தியங்கிய இந்த On & Off வால்களால் மக்கள் பட்ட அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இவர்களது ஆட்டத்தை புலிகளும் அனுமதித்திருந்தார்கள் . இப்போ நீங்கள் எமது மக்களுக்கு பரிதுரைக்கும் “நடக்க வேண்டியது வேலை” என்ன? 1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லை 2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்? இல்லை 3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்? இல்லை 4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? இல்லை 5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? இல்லை இவ்வளவும் நடக்கவேண்டும் இவ்வவளவும் நடக்க அவ்வளவு புலம்பெயர் தமிழர்களும் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் பெட்டிபடுக்கை எல்லாவற்றையும் கட்டிக்கொண்டு கட்டுநாயக்கா வந்திறங்கி நேரடியாக போராட்டத்தில் ஈடுபடவேண்டும். இலங்கையில் நடக்கவேண்டியவற்றிற்கு இலங்கையில் போராடுவது தானே முறை. அப்போதுதானே சர்வதேசத்திற்கு ஒரு கடும் தொனியில் செய்தியை சொல்லலாம். இலங்கையில் நான்கு கிழவிகளை தெருவோரம் உட்காரவைத்து ஒவ்வொன்றாக போட்டு தள்ளுவதை விட சர்வதேசம் தீர்வு தராததால் நாங்கள் சர்வதேசத்தையே துறந்துவிட்டோம் என்று நாம் சொல்லப்போகும் செய்தியால் சர்வதேசமே ஆட்டம்காணாதா ...?1 point
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
யாராவது சுமந்திரனிடம் தொடர்பில் இருந்தால் சாத்ஸ்சின் இந்த பதிவை அவர் கண்ணில் காட்டி விடுங்கள். யாழில் பலர் சுமனை எதிர்க்க பல மறைமுக காரணங்கள் இருப்பது வெளிப்படை. ஆனால் சாத்ஸ் மேலே எழுதி இருப்பது ஒரு சராசரி தமிழனின் மனக்குமுறல்.1 point
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
அது மட்டுமல்ல 1982 ல் பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பின் பிரபா, உமா இருவரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஜே. ஆர் கேட்ட போது தமிழ் நாட்டில் இருந்த திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் வேறு பல கட்சிகளும் இணைந்து அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக போராடியதோடு மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தனர். அதனாலேயே அந்த நாடுகடத்தில் தவிர்க்கப்பட்டது. அன்று பிரபாவோ உமாவோ தமிழ் நாட்டில் எந்த அரசியல் முக்கியத்துவமும் அற்ற வெறும் தமிழ் போராளிகள் மட்டுமே. அதை விட போராட்டம் நடைபெற்ற காலத்தில் பல திராவிட இயக்க தொண்டர்கள் நினைத்து பார்கக பாரிய உதவிகளை போராளிகளுக்கு செய்திருந்தனர். குளத்தூர் மணி புலிகள் மறைவாக பயிற்சி பெற பெரும் நிலப்பரப்பை தனது ஊரில் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு போராட்டத்திற்கு பல விடயங்களில் உறுதுணையாக இருந்தார். அவரின் சிபார்சுலேயே சீமான் ஈழத்திற்கு சென்றார். ராஜீவ் கொலைக்கு பின் இந்திய கியூ பிராஞ் பொலிசாரால் அதிகம் துன்புறுத்தப்பட்டவர்கள் திராவிட இயக்க தோழர்களே. அந்த அடக்கு முறையையும் மீறி பலர் உதவி செய்ததி ருந்தனர். அதனால் பலர் வருடக்கணக்கில் சிறை சென்றனர். ஆனால் நன்றி கெட்ட புலம் பெயர் ஈழ தமிழர்கள் சீமானின் சொல்லை கேட்டு அவர்களில் பலரை துரோகிகளாக முத்திரை குத்தினர்.1 point
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
நாலாவது வருடத்தில் நடந்த ஒரு விடயம். மூன்றாவது வருட பரீட்சைத் தாள்களை அந்த வாரம் தான் அந்தப் பேராசிரியர் திருத்திக் கொண்டிருந்தார் போல................... 'this is going from bad to worse..................' என்று ஆரம்பித்து மனிதன் அன்று முழு வகுப்பையுமே காறித் துப்பினார்............... பொதுவாக அவர் படிப்பிப்பது எதுவுமே எவருக்கும் விளங்காது, ஆனால் அன்றைய அவரின் பேச்சு நல்லாவே விளங்கியது............... அவருக்கு இப்ப ஒரு மெயிலைப் போட்டு, 'சார், கல்லுக்கு கீழ காவோலை போடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..............' என்று ஒருக்கால் கேட்டால், மனிதன் இதயத்தை பிடித்துக் கொண்டு விழுகுதோ தெரியவில்லை............... படிப்பில் இது அவரின் ஏரியா வேற.............🤣.1 point
-
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு பூர்த்தி! இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்த்துள்ள தந்தை செல்வா சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.கே. சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இலங்கை தமிழரசுக் கட்சி 1949ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி கொழும்பு மருதானை எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் வைத்து தந்தை செல்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/இலங்கை_தமிழரசு_கட்சியின்_75வது_ஆண்டு_பூர்த்தி!1 point
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointநல்ல நாள் பார்த்து வாடகை வீட்டை காலி செய்து விட்டு சொந்த வீட்டுக்கு குடி போகலாம் என்று நாள் குறித்தான்! சொந்தங்கள், பந்தங்கள் , நட்புகள் எல்லாவற்றையும் குறித்த நாளில் வர சொல்லி இருந்தான்! அவன் கெட்ட நேரம் அவன் வீடு கட்டி இருந்த இடத்தில் நிலை நடுக்கம் வந்து வீடு தரைமட்டம் ஆனது! புது மனை வீட்டுக்கு வந்திருந்த அனைவரும் இடிந்த வீட்டிற்கு முன் அதிர்ச்சியில் சோகமாக நிற்க! அவனோ! வாங்கி வந்து இருந்த இனிப்புகளை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் கொடுக்க! வந்து இருந்தவர்கள் ! அவனை பார்த்து உனக்கு என்ன பைத்தியமா 25 வருட உழைப்பு இப்படி மண்ணாக போய் விட்டது! எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டு இருக்க என்று கேட்க! அதற்கு அவன் சொன்னான்! ஐயா வீடு குடி புகும் முன் இடிந்து போனது நல்லது தான்! ஒரு வேளை நாங்க குடும்பத்துடன் குடி வந்த பின் வீடு இடிந்து போய் இருந்தால்! எண்ணவாகி இருக்கும் ! அதான் என்றான் அமைதியாக!1 point
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
சீமான் இல்லை எனில் திராவிடர்கள் ஈழத்தமிழர் பிரச்சனை ஒன்று இல்லை என்பதை நிறுவி இருப்பார்கள். சினிமாவும் சீரியலும் என ஒரு மாயையை உருவாக்கி விட்டுருப்பார்கள்.1 point
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
தமிழன் இந்துவாகவும் சிங்களவன் பௌத்தனாகவும் இருக்கட்டும். இலங்கை தமிழன் சகல உரிமையுடனும் வாழணும். அதை உங்கள் தோழர் செய்து கொடுப்பாரா?1 point
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
புலவர், உங்கள் இந்த "பிடித்த தரப்பு எது செய்தாலும் ஓகே" என்று முரட்டு முட்டு கொடுக்கும் பண்பு விசித்திரமாக இருக்கிறது. இங்கே சீமானின் நடிப்பை ஆதரித்துக் கடந்து போகிறீர்கள். கஜேந்திரகுமார் மணியை "தேர்தல் வென்ற பின்னர் தூக்கி விட்டு" கஜேயைக் கொண்டு வந்ததைப் பற்றி, அதில் இருக்கும் உட்கட்சி ஜனநாயக மறுப்பை மௌனமாக ஆதரித்த படியே தமிழரசில் இருக்கும் ஜனநாயக மறுப்பைப் பற்றி காட்டமாக எழுதுவீர்கள்😂!1 point
-
யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்!
Parking charge போட்டால் சில சமயம் மாற்றம் ஏற்படும்.1 point
-
குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு
🤣........................ காவோலை வீதியில் நீங்கள் பதிந்த கருத்துகளில் இருந்தும், இந்தப் பதிவில் இருந்தும் நீங்கள் எந்த பஸ்களில் போய் வந்திருப்பீர்கள் என்று ஓரளவிற்கு தெரிகின்றது...................🤣.1 point
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
1 pointநானும் பாஞ்ச் ஐயாவும் சிறித்தம்பியும் சந்திக்கும் நிகழ்வில் மூனாவையும் சிறித்தம்பி அழைத்திருந்தார்.அந்நேரம் அவருக்கு வேறு தனிப்பட்ட நிகழ்வுகள் இருந்ததினால் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. தற்சமயம் அவரும் எம்மோடு கலந்து கொண்டிருந்தால் பலகார பை பழி அவர் மீதும் விழுந்திருக்கும்.🤣 நல்லகாலம்.......கடவுள் இருக்காரு குமாரு...😂1 point
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
1 pointமூனா எனும் யாழ் கள கவி அருணாசலம் என்பவரை பற்றிய பதிவை மேலே கொண்டு வந்த மோகன் மற்றும் தமிழ்சிறீ, குசா,ரசோதரன் ஆகியோருக்கு நன்றி .ஒரு கலைஞனை திறமைசாலியை, அருகி வரும் ஓவியத்தில் புலமை மிக்கவரை, சிறந்தவரை யாழ் களம் உறுப்பினராக கொண்டதில் பெருமை படுகிறது. என் இளைய சகோதரனின் இழப்பின் போது அவரை படமாக வரைந்திருந்தார் . இவரது ஓவியத்திறமையை நம் இளம் சமுதாயம் கற்க வேண்டும். பாராட்டுக்களும் வாழ்த்துக் களும் உரித்தாகுக .1 point
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
1 point@Kavi arunasalam கவிஞரே, எனக்கு இது இப்பொழுது தான் தெரியும்...............❤️. தரம் மிகவும் அதிகமாக இருக்கின்றதே என்று பலதடவைகள் நினைத்திருக்கின்றேன்.........👍. மிக்க நன்றி உங்களின் ஆக்கங்களை பகிர்வதற்கும், எங்களின் ஆக்கங்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கும்..............❤️.1 point
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
1 point
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
1 point
- பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
இவருக்கு இப்போ என்னதான் பிரச்சனை? ரணில் மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தின்கீழ் ஒரு வருடத்துக்குள் ஏக்கய ராஜ்ய அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படும், இல்லையேல் நான் பதவி விலகுவேன் என்று சவால் விட்ட அய்யாத்துரை பதவி விலகினால் தமிழ் மக்கள் சந்தோசமாக இருப்பார்கள், தமிழரசுக்கட்சியும் தமிழ்தேசியக்கட்சியாய் குடைச்சல் இல்லாமல் ஒன்றாய் இயங்கும். நாட்டில இப்போ நல்ல நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன, இதில நானுந்தான் என்று சொல்லிக்கொண்டு தலையை நீட்ட முடியவில்லையே என்கிற கவலை அவருக்கு. போற இடமெல்லாம் பதவி விலக வேண்டும், பதவி விலக வேண்டுமென்று கூவித்திரிகிறார். தான் இல்லாத பாராளுமன்றில் தமிழர் யாரும் இருக்கக்கூடாது என்பது அவர் எண்ணம். அதிலும் இப்போ சிறீதரனிலை கடுப்பான கடுப்பு. அன்று மாவைக்கு எதிராக சிறிதரனை தலைவராக்க ஓடுப்பட்டவர். இப்போ, அவர் தலைவரானது பொறுக்கவில்லை. நாளை சி. வி. கே. சிவஞானத்துக்கும் சத்தியலிங்கத்துக்கும் நடக்காது என்கிறது என்ன உத்தரவாதம்? சணம் பித்தம் சணம் வாதம் சுமந்திரனுக்கு, இவரை நம்பி கொஞ்சம் பின்னாலை அலையுதுகள்.1 point- "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
நீங்கள் இப்படியான ஒரு ராசாவாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் என்றைய விருப்பமும்............ ஆனால் போலிப் பெருமைக்காக உங்களை அவர்களில் ஒருவராக காட்டிக்கொள்ள நீங்கள் எவ்வளவு பிரயத்தனங்கள் செய்கின்றீர்கள்...................😌. பண்ணைப்புரமும், அந்த தாயும் எந்த கோவிலுக்கும் ஈடானதே என்ற ஒரு இறுமாப்புடன் நீங்கள் வாழ்ந்திருக்கவேண்டும்........................1 point - பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.