Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3054
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31968
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    53011
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/24/24 in all areas

  1. இன்று 24/12 பிறந்தநாள் கொண்டாடும் ஏராளனை வாழ்த்துங்கோ உறவுகளே!!! நீங்கள் மறந்தாலும் நாங்கள் விடமாட்டோம்!
  2. டாக்டர், 50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?
  3. Luther Vandross - Dance With My Father Back when I was a child, Before life removed all the innocence, My father would leave behind and dance with my mother and me and then spin me around 'till I fell asleep then up the stairs he would carry me And I knew for sure I was loved If I could get another chance, Another walk, another dance with him I'd play a song that would never, ever, ever end How I'd love, love, love to dance with my father again. When I and my mother would disagree To get my way I would run from her to him He'd make me laugh just to comfort me then finally make me do just what my mama said later that night when I was asleep he left a dollar under my sheet Never dreamed that he would be gone from me. If I could steal one final glance, one final stare, One final dance with him, I'd play a so g that would never, ever, ever end How I'd love, love, love to dance with my father again Sometimes I'd listen outside the door and I'd hear how my mother cried for him I pray for her even more than me I pray for her even more than me Ohhhh I know I'm praying for much too much but could you send back the only man she loved I know you don't do it usually but Dear Lord she's dying to dance with my father again every night I fall asleep this is all I ever DREAM I know you don't do it usually but Lord she's dying to dance with my father again. Source: Musixmatch Songwriters: Richard Marx / Luther Vandross
  4. தொடர்ந்து கட்டிப் பிடித்து உருண்டு பிரண்டால் விரைவில் குணமாகும். ரசோதரன் இல்லாத நேரம் நான்தான் டாக்ரர்.
  5. நீங்கள் சொல்வது சரியே, கோஷான். இவர்கள் சிலர் இவர்கள் செய்த பணிகளால் அன்று முக்கியஸ்தர்கள் மற்றும் உலகிற்கு தெரிந்தவர்கள். ஒரு விலை கொடுத்தே அவர்கள் வெளியே வரவேண்டி இருந்தது. இந்தப் புரிதல்களும், அவர்களின் தன்னலமற்ற பணிகளையும் அப்படியே விட்டுவிட்டு, அவர்களை துரோகிகள் என்ற எல்லைவரை இழுத்துக் கொண்டு போவதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புதிதாக வந்த ஒருவர் சேவை செய்கின்றார், புரட்சி செய்கின்றார் என்கின்றார்கள். உண்மையில் இதுவரை அவர் அப்படி என்னதான் செய்துவிட்டார்.................. அப்படியே எப்பவாவது ஏதாவது காத்திரமாக செய்து விட்டாலும் கூட, இறுதிப் போரில் அங்கேயே நின்று மக்களுக்கு இவர்கள் செய்த சேவைகளை அவை மிஞ்சிவிடுமா............... பல தாக்குதல்களில், நடவடிக்கைகளில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஒன்றே என் பார்வைக்கு தெரிகின்றது. என் பார்வை பிழையாகக் கூட இருக்கலாம். ஒரு சமூகமாக, எப்போதும் மிகவும் உணர்ச்சிவசப்படுகின்றோம், யாரையாவது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றோம், தொடர்ச்சியாக அவதானிப்பதை தவிர்க்கின்றோம் அதனால் நாங்கள் கொண்டாடுவதை கேள்விக்கு உட்படுத்தாமல் நம்பத் தலைப்படுகின்றோம்.............
  6. 🤣................... காய்ச்சல் போல தெரியும், ஆனால் இது காய்ச்சல் இல்லை, நிழலி................... இது உடம்புச் சூடு............. நீங்கள் கொஞ்சம் சூட்டு உடம்புக்காரர் போல................ மருந்து மாத்திரை தேவையில்லை.............. அதுவா அடங்கும்...............😜. ** டாக்டரா, இல்லையா என்று என்ற பிரச்சனை இன்னமும் முடியவில்லை. நீங்கள் வேற புதிதாக ஒரு டாக்டரை இறக்கி விட்டிருக்கிறீர்கள்............... 🤣................. நிழலி இந்தக் கதவால் வந்தால், நான் அந்தக் கதவால் ஓடி விடுவேன், விசுகு ஐயா............
  7. தற்காலிக வேலைகளை நிரந்தரம் ஆக்குவதற்கு நானும் ஆதரவே, வசீ........... ஆனால், இவர்கள் தற்காலிக வேலையில் இருக்கவில்லை. தொண்டர் ஊழியர்களாகவே, பலர் சம்பளம் இல்லாமல் கூட இருந்திருக்கின்றார்கள். அதனாலேயே நான் Volunteer Job பற்றியும், தொண்டர் ஆசிரியர்கள் பற்றியும் இங்கே எழுதியிருந்தேன். தொண்டர் ஆசிரியர் பிரச்சனை நான் பாடசாலையில் மாணவனாக இருந்த காலத்தில் கூட அங்கே இருந்தது. இவர்களுக்கு கூட பயிற்சிகள் வழங்கி, பணி வழங்கி, அதை நிரந்தரமாக்கலாம் என்று தான் நானும் சொல்கின்றேன். ஆனால் இதை ஒரு அரசியல் விவாதம் ஆக்குவது முறையல்ல என்றும் சொல்கின்றேன். அனுபவத்தில் சில வேலைகளை மட்டுமே கற்றுக் கொள்ளலாம். பல வேலைகளுக்கு வேறு விதமான அடிப்படைகளும் தேவை என்பதை சொல்லவே அந்த உதாரணங்களைச் சொல்லியிருந்தேன்.................👍.
  8. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பிரதான சாட்சிகளாயிருப்பவர்களில் ஒருவரான Dr. சத்தியன், இலங்கையில் உயிருடன் இருப்பதற்கு எவ்வளவு விட்டுக்கொடுப்புக்களையும் சமரசங்களையும் செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கும். இதை ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. யாழ் பல்கலைப் பேராசிரியர், துணை வேந்தர் பதவியில் இருந்து சமூகத்தின் அடிமட்டத்தில் மக்களோடு மக்களாக வேலை செய்யும் கிராம சேவையாளர் வரை அரசியல் தலையீடு நிலவும் சூழலில் அதுவும் டக்கியரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும் சூழலில் யாழ் போதனா வைத்தியசாலையை எத்தகைய சூழலில் நிர்வகிக்க வேண்டி இருக்கும் என்பதையும் எமது புலன் பெயர் வியாபாரிகள் உணராமல் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் பக்கவாத்தியக் காறர்களாகவும் இருப்பது வருந்தத் தக்கது. ☹️
  9. அவனது பெயர் ராலெப் (Taleb A). சவுதி அரேபியாவில் 1974ம் ஆண்டு பிறந்தவன். 50 வயதான ராலெப் யேர்மனியில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்று, யேர்மனியில் பேர்ன்பர்க்கில் Bernburg உள்ள வைத்தியசாலையில் மனநல மருத்துவம் மற்றும் உளவியல் சிகிச்சையில் நிபுணராக பணியாற்றுகிறான். யேர்மனி சமூக ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிராக ராலெப் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தான். அத்துடன் வளைகுடா நாடுகள் மீதான தனது எதிர்ப்பையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டிருந்தான். ‘நல்ல இஸ்லாம் என்று எதுவும் இல்லை’ என்பது ராலெப்பின் வாதமாக இருந்தது. 2019 யூன் மாதம், பிராங்பேர்ட் நகரத்தில் இருந்து வரும் பத்திரிகை (Frankfurter Allgemeine Zeitung) இஸ்லாம் மற்றும் சவுதி அரேபியாவில் பெண்களின் நிலைமை பற்றி ராலெப்புடன் ஒரு நீண்ட நேர்காணலை நடத்தியது, இஸ்லாத்தை மிகவும் கடுமையாக விமர்சித்து தான் இஸ்லாத்தை விட்டு எப்பொழுதோ விலகி விட்டேன் என்று அந்த நேர்காணலில் ராலெப் சொல்லியிருந்தான். சவுதியில் இருந்து வந்த புலம்பெயர் சமூகத்தில் யேரமனியில் ஒரு முக்கியமான ஆளாக ராலெப் இருந்தான். சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்களுக்கான விழிப்புணர்வு அவர்களது உரிமைகள் பற்றி அதிகம் பேசினான். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தேவைகளை பற்றி பெரிதாக அக்கறை கொண்டிருந்தான். ராலெப் பற்றிய தகவல்கள் இப்படியாக இருக்கையில் அவன் 21.12.2024 சனிக்கிழமை காலை ஒரு வாடகைக் காரில் ஏறி, மாக்டேபர்க் (Magdeburg) கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் வேகமாகக் காரை ஓட்டி ஒரு சிறு குழந்தை உட்பட குறைந்தது நான்கு பேர்களைக் கொன்றிருக்கின்றான். 200 பேர்களுக்கு மேல் காயப் படுத்தியிருக்கின்றான். போலீசார் அவனது காரைத் தடுத்து நிறுத்தி அவனைக் கைது செய்திருக்கின்றார்கள். ராலெப் மீது நடத்தப்பட்ட சோதணையில் அவன் போதை மருந்து உட்கொண்டிருப்பதாக வைத்திய அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இன்று நடந்த இந்த அனர்த்தத்தால், யேர்மனியில் இந்த வருட கிறிஸ்மஸ் சந்தை இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இந்தச் சம்பவம் சம்பந்தமாக பொது மக்களோடான நேர்காணலில், அதிகளவான இஸ்லாமியர்களுக்கு அன்று புகலிடம் தந்த அன்றைய கன்ஸிலர் அஞ்சலா மேர்க்கலை பலர் திட்டித் தீர்ப்பதைக் காண முடிகிறது. யேர்மனியில் இந்த வாரம்தான் நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஆட்சி கலைக்கப்பட்டு பெப்ரவரி 23ந் திகதி தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்று நடந்த இந்தச் சம்பவம் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.
  10. அவர் செய்தது பிழையென்றால் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமே?
  11. 👍................ பல்லின மக்கள் வாழும் தேசங்களில் இந்த விடயத்தில் மேற்கத்தைய நாடுகளை மிஞ்சவே முடியாது. அதிலும் அமெரிக்கா இன்னும் சில படிகள் முன்னே............ அவ்வாறு தான் இந்த தேசம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகின்றது. நாசாவின் JPL இங்கே அருகிலேயே இருக்கின்றது. வருடத்திற்கு ஒரு தடவை Open House வைப்பார்கள். உள்ளே போனால், அங்கே எல்லா நாட்டவர்களும், முக்கியமாக கிழக்கு ஐரோப்பியர்கள் பலர், விஞ்ஞானிகளாக இருப்பார்கள். ஏராளமான இந்தியர்கள், ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள்............ உள்ளே பெரும் பதவிகளில் எல்லோரும் இருக்கின்றனர். பல வருடங்களின் முன், இங்கு மிகவும் சிக்கலாக ஒட்டிப் பிறந்த இரு குழந்தைகளை மிகவும் சிரமப்பட்டு இரு குழந்தைகளாக்கினர். யுசிஎல்ஏ மருத்துவமனையில் என்று நினைக்கிறேன். அதற்கு பொறுப்பான தலைமை மருத்துவர் பின்னர் தொலைக்காட்சியில் வந்தார். அவரின் ஆங்கிலம் மிகச் சாதாரணமான ஒன்று, அவரும் ஒரு கிழக்கு ஐரோப்பியரே.................. ஆனால் அவர் தான் தலைவர்..............👍.
  12. இதுக்கெல்லாம் நல்ல மருந்து, புளிக்கஞ்சியும், கீரைக்கஞ்சியும் (இறால், முருங்கை இலை, தேங்காய்ப்பாலும் போடவேண்டும்)
  13. வருத்தம் என்று குடும்ப வைத்தியரிடம் போனால் (தமிழ் மருத்துவர், பரியோவான் கல்லூரி பழைய மாணவர்). டொக்டர்: "Flue shot ஷொட் எடுத்ததோ" நான்: "இல்லை டொக்டர்...நான் ஒரு நாளும் எடுப்பதில்லை" டொக்டர்: "உமக்கு 50 வயசாச்சு என்று நினைவில்லையோ.. இந்த பழைய வீரம் எல்லாம் இனி இல்லை... அதுவும் உமக்கு இந்த வருடம் நிமோனியா வந்து போனது... இனி இப்படி எடுக்காட்டி அடிக்கடி அதுவும் வரும். இனிமேல் அது எடுக்காமல் இந்தப் பக்கம் வரக் கூடாது" என்று மனிசன் பேசிப் போட்டுது.
  14. வடக்கு கோளம் முழுக்க இது வைரஸ் காலம் போல, கிருபன். இங்கும் எல்லோரும் சீறிச்சீறிக் கொண்டே வருகின்றார்கள், போகின்றார்கள், விளையாடுகின்றார்கள்.......... (நிழலி செய்வதையும் செய்கின்றார்கள்.................🤣) எவரையும் விடாது இது............. ஆனால் இதை விட்டால் எங்களுக்கு விடுமுறையும் கிடையாதே.......
  15. இதுக்கு மட்டும் மருத்துவம் சொல்லாதீர்கள் @ரசோதரன் அடுத்த செங்கன்களில் அது உங்களுக்கும் கொத்தி விடும் 😋
  16. உங்களுக்கு தேவை என்றால் இறந்த காலமும் நிகழ்காலம் ஆகிவிடும்.
  17. மற்றவர்களின்... கும்பகர்ண தூக்கத்தை பார்க்க அப்படித்தான் தெரிகின்றது. 🙂 அவர்களுக்கு... அங்கை, மிளாகாய்த்தூள் தடவி விட்டால் உசாராக இருப்பார்கள். 😂 🤣
  18. பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்
  19. சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளார் Dr. இராமநாதன் அர்ச்சுனா.☝️ அர்ச்சுனாவின் வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு..... 👏 மக்கள் பிரச்சனைகளை துரிதமாக துணிவாக அலுப்புச் சலிப்புப் பாராமல் முன்னெடுப்பதில் முனைப்பாக நிற்கிறார் என்பதுதான் அவரது சிறப்பே....!💕 கடந்த பா.மன்ற அமர்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் 170 தொண்டர் கனிஷ்ட ஊழியர் வேலை சம்பந்தமாக காரசாரமாக சபையில் தெரிவித்து, அவர்களுக்கு நியாயம் கோரி சபையில் MP அர்ச்சுனா அவர்கள் குரல் எழுப்பியது யாவரும் அறிந்ததே....!☝ அதற்குரிய முதற்கட்ட தீர்வை நேற்று 23/12/2024 அன்று அவ்வூழியர்க்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.🙏 யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்களில் 28 பிரதிநிதிகளை கொழும்புக்கு வரவழைத்து சுகாதார அமைச்சர்,பிரதி அமைச்சருடன் நேரடியாகவே அவர்கள் குறைகளைப் பேச வைத்திருக்கிறார்.😘 இத்தனை காலத்தில் இப்படியான நிகழ்வு இதுதான் முதல்தடவை என நினைக்கிறேன்.😊 மேலும் Dr. அர்ச்சுனா கூறியதாவது👇 நான் கடந்த அரசுகளில் சுகாதார அமைச்சில் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது ஒரு அமைச்சரை சந்திக்க வேண்டுமென்றால், consultants உட்பட எல்லோருமே பல மணிநேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த NPP அரசில் (ஜனாதிபதி அநுரவின் ஆட்சியில்)..... இவ்வாறான ஒரு சுமூகமான பொதுமக்கள் அமைச்சர் சந்திப்பை எனது மருத்துவ நிர்வாக காலத்திலோ அல்லது மருத்துவனாக வேலை செய்யும் காலத்திலோ நான் கண்டதில்லை. 🥰 இதன் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் உண்மையிலேயே என்னை மதித்து என்னுடைய குரலுக்கு மதிப்பளித்து என்னை வரவேற்று எங்களுடைய சகல சுகாதார ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவர்களுக்கு உரிய பதிலை வழங்கியதற்கு தேசிய அரசாங்கத்திற்கும் மதிப்பிற்குரிய சுகாதார அமைச்சருக்கும் அது தவிர பிரதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மனமார்ந்த நன்றிகள்.🙏💕 சந்தர்ப்ப சூழ்ச்சிகளால் நலிந்து போனாலும், உண்மைகளுக்குத் துணை போகிறவர்கள் ஒரு போதும் வீழ்ந்து விடுவதில்லை .💕 முகப் புத்தகம். அடுத்த எலச்சனில் பெரிய முட்டை வாங்க இப்பவே அச்சாரம் போடுகின்றார் இப்ப ஒரு தேர்தல் நடந்தால் முன்னர் எடுத்த வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் எடுப்பார் போல உள்ளதே களநிலவரம்.
  20. இன்று பிறந்தநாளை கொண்டாடும், ஏராளனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙂 வாழ்க வளமுடன். 🙏
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன். வாழும்வரை வளமாகவும் சுகமாகவும் வாழ வேண்டுகிறேன்.
  22. அப்படி இருப்பின் அவர் இதை ஒரு எழுத்து உத்தரவாக போட்டிருந்தால் அதை அதிகாரி தட்டி கழித்திருக்க முடியாது. ஏன் வாய்மூலம் சிபாரிசு? ரெக்கோர்ர்ட்டில் இல்லாமல் அலுவல் பாக்கும் கள்ளத்தனம்? மாகாணசபை தேர்தலை நடத்தாமல், மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தை, பின்கதவால் அனுபவிக்கும், பிரயோகிக்கும் ஒருவர்தான் இந்த ஆளுனரும் ஏனையோரும். இன்னும் ஒரு விடயம் தனக்கு கீழே வேலை செய்யும் ஒரு அதிகாரியை பொதுவெளியில் யார் என தெரியும் படி விபரம் சொல்லி விமர்சிக்கிறார்? இதெல்லாம் தலைமைதுவ பண்பு. இவர் எல்லாம் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி. அந்த அதிகாரியை பற்றி எனக்கு தெரியாது - ஆனால் இவர் அனுப்பி விட்டார் என்பதால் கூட்டத்தை விட்டு விட்டு அவர்களை சந்திக்க முடியாதே? வந்தவர்கள் நேராக அவரிடம் வராமல், ஆளுனர் மூலம் வந்த சிபாரிசு பேர்வழிகள் அவர்களுக்கு வெத்திலை வைக்க வேண்டும் என ஆளுனர் எதிர்பார்ப்பது அவரின் மமதையையே காட்டுகிறது. மிக முக்கியமாக - அதிகாரி நடந்தது தவறு எனில் ஏன் அவர் மீது துறைசார் நடவடிக்கை எடுக்க வில்லை? எடுத்தால் இவரின் அதிகார துஸ்பிரயோகம் - employment tribunal இல் நாறும் என்ற பயம்? எனவே தன் இயலாமையை மேடையில் கூறி உள்ளார்.
  23. நானும் பதில் சொல்லலாமா சார் 😄 சாலமன் பாப்பயா.
  24. எனது இளம்பிராயத்தில் வைத்தியரிடம் போக பயம், ஒரு தடவை வயிற்றில் உள்ள பூச்சிக்காக வைத்தியசாலை மருந்து கொடுத்தார்கள் அதனால் பக்க விளைவு ஏற்பட்டு மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றார்கள், வைத்டியர் ஊசி குத்த போகிறார் என்ற பயத்தில் ஏற்கனவே பல்கீனமாக இருந்த நான் மயக்கமாகிவிட்டேன், அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்து ஊசி மூலம் ஏற்றும் சேலைனை குத்திவிட்டார்கள்.😁 சில சமயம் சரியாக கதைப்பது போல இருக்கும் ஆனால் அப்படியே அதற்கு எதிர்மாறாக பின்னர் நிகழ்கிறது, இவரை யாராலும் வெல்ல முடியாது.😁
  25. மிகவும் முட்டாள்தனமான ஆரம்பம். தனது இருப்புக்குத் தானே குழிதோண்டுகிறார். மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டிய விடயங்களில் அவசரக் குடுக்கைத்தனமான வேலைகள் எங்கே கொண்டுபோய் விடும் என்பதை இப்போதே யூகிக்க முடியும். Good Luck Dr. அர்ச்சுனா 🥺
  26. அவரையும் என்னையும் ஏனப்பா தொடுத்துவிடுகிறீர்கள்..................🤣. பெரிதாக அமெரிக்க உள்நாட்டில் மாற்றம் ஒன்றும் இருக்காது, பெயர் மட்டும் மாறி இருக்கும் என்று சொல்லவே நினைத்தேன்............... இங்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது, இந்த நாடு காலத்தால் மாறுகின்றதே தவிர இரண்டு கட்சிகளாலும் மாறவில்லை என்பதே என் அனுபவம்...............
  27. இது நடக்கக் கூடாது... அந்தக் காலத்திலையே தலைவர் சொல்லியிருந்தவர்... அவங்கள் என்னதான் கோடி கோடியாக் கொடுத்தாலும் இந்த பாலம் மட்டும் அமைக்க விடக்கூடாது என்று. எமது தேசமும் தீவும் கடும் இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும்...
  28. சுமந்திரனுக்கு டமில் தேசிக்காய்களிடம் அரசியல் செய்யத் தெரியாது. அவர் எதனையும் மறைக்காது நேராகப் பேசுவது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அவர் இலங்கையின் அதி உயர் மன்றத்தில், பிரதிநிதிகள் எல்லோரும், தான் பிரதிநிதித்துவம் செய்த மக்களைப் பார்த்து சிரிக்கும்படி செய்யவில்லை. சிறீதரன் போன்று வாயைத் திறக்காமல் (அவருக்கு வாயைத் திறக்கத் தெரியாது என்பது வேறு 😉) நமுட்டுச் சிரிப்புச் சிரித்தபடி 20 Bar Licence எடுத்து விற்றிருந்தால் உந்த புலன் பெயர் சமூகம் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கும். உந்தத் திருவிளையாடல் உவருக்குத் தெரியாமல் போனது சுமந்திரனின் துரதிஸ்ரமே. அதில் ஒருவர் Dr. சத்தியமூர்த்தி. அவரை உயிருடன் விட்டு வைத்திருப்பதே பெரிய சாதனைதான்.
  29. அடுத்த மாதத்திலிருந்து அமெரிக்க லிபரல் கிடையாது......... நாங்கள் கன்சர்வேட்டிவ் ஆகின்றோம்..... ஆதலால் தயவுடன் எங்களை உலகில் சிக்கலில் இருக்கும் லிபரல்களுடன் பின்னிப் பிணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.............. அத்துடன் அமெரிக்கா அடுத்த நான்கு வருடங்களுக்கு நாலு கால்களில் பாய முடிவெடுத்தும் உள்ளது (Make America Great Again and Again). இடையில் சிக்குபவர்கள் சின்னாபின்னமாக சிதறப் போகின்றார்கள்...........🤣.
  30. ஓம் கவி லண்டனில் சேவை செய்த போது கனடாவில் சேவை செய்த போது
  31. 🤦🏼‍♂️ Donald Trump மீதான கொலை முயற்சிகள், அவரை அரசியலில் இருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் என்பன எனது கற்பனை அல்லவே,.Facts. Canada, Germany, France, Grorgia போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி என்பதும் Facts. இதில் அகதி, சோசல் காசு, பிள்ளைப் பேறு, கவுன்சில் வீடு என்பன எங்கே வருகிறது? இந்த உண்மைகளை எந்தவித காய்ப்பு உவர்ப்பும் இன்றிக் குறிப்பிட்டுச் சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறது? கோபம் வரக் காரணம் என்ன?
  32. மீன் என்டால் கூட ஐயோ பாவம் வயிற்று பசிக்கு திருடிட்டான் என்று 2 மாசம் உள்ள வச்சு அனுப்பலாம் கஞ்சா தூள் ./ அபின் / கடல் ஆமை ./ கடல் அட்டை / தங்கம்.. etc நான் நினைக்கிறேன் இலங்கை காவல்துறையில் மாவு கட்டு போடுற ஸ்பெசல் ஒபிசர்ஸ் யாரும் இல்லை போல
  33. 🫣....................... கச்சதீவை மட்டும் மீட்டால் போதாது. நெடுந்தீவூ, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை என்று அந்தப் பகுதி முழுவதையும் நீங்கள் மீட்டெடுத்தால் தான் தமிழக மீனவர்கள் ஒரு தொல்லையும் இல்லாமல் அங்கே போய் மீன்பிடிக்க முடியும்...............🫣. சமீபத்தில் ஏதோ ஒரு மத்தியகிழக்கு நாட்டில் சிறையிலிருந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்தார்கள். அவர்களை அங்கே ஆறுமாதங்கள் அடைத்து வைத்திருந்தார்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக. அந்த கடலையும் ஸ்டாலின் போய் மீட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்............. 'ஓ மை காட், என்னது.............. நாங்கள் அங்கே போய் மீன்பிடிக்க முடியாதா..............' என்ற ரஜனிகாந்த் வகை உணர்ச்சியையே இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள், பிரமுகர்கள், நடிகர்கள் என்று ஒருவர் தப்பாமல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்..............
  34. கபிதனுடைய அவதாரும், கந்தையா அண்ணையின் அவதாரும் பச்சை நிறத்தில் K என்று இருந்ததால் ஆள் மாறாட்டம் ஏற்பட்டு விட்டது. 😂 கந்தையா அண்ணை... அதற்குள் நைசாக புகுந்ததை, கவனிக்காமல் விட்டு விட்டேன். 😂 கபிதன் திருந்தி விட்டார் என்று நான் சந்தோசப் பட்டு 15 நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் ரசோதரனும், அல்வாயனும், நுணாவிலானும் தட்டி எழுப்பி விட்டார்கள். 😃 சரி... அது, ஒரு கனவாகவே போகட்டும். 🤣 நுணா.... நான், நேற்று சுவிஸில் இருந்து ஜேர்மனி திரும்பி விட்டேன். 😃
  35. எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள் புடுங்குப்படுவது..நாடகமா ....
  36. சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.
  37. ROSÉ & Bruno Mars - APT. (Lyrics) | SONG OF THE YEAR! 채영이가 좋아하는 랜덤 게임, 랜덤 게임 Game start 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh Kissy face, kissy face sent to your phone, but I'm trying to kiss your lips for real (uh-huh, uh-huh) Red hearts, red hearts, that's what I'm on, yeah Come give me somethin' I can feel, oh-oh-oh Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? Sleep tomorrow, but tonight go crazy All you gotta do is just meet me at the 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh It's whatever, it's whatever, it's whatever you like (whoo) Turn this 아파트 into a club (uh-huh, uh-huh) I'm talking drink, dance, smoke, freak, party all night (come on) 건배, 건배, girl, what's up? Oh-oh-oh Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? Sleep tomorrow, but tonight go crazy All you gotta do is just meet me at the 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh Hey, so now you know the game Are you ready? 'Cause I'm comin' to get you, get you, get you Hold on, hold on, I'm on my way Yeah, yeah, yeah, yeah, yeah, I'm on my way Hold on, hold on, I'm on my way Yeah, yeah, yeah, yeah, yeah, I'm on my way Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? Sleep tomorrow, but tonight go crazy All you gotta do is just meet me at the 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh (just meet me at the) 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh (just meet me at the) 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh (just meet me at the) 아파트, 아파트, 아파트, 아파트 아파트, 아파트, uh, uh-huh, uh-huh
  38. இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது? திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள் இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
  39. சிறியர், சாமியார், கந்தையர், பாஞ் மற்றும் ஜெர்மன் வாழும் கள உறவுகள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?
  40. Go, go, go, go Go, go, go shawty It's your birthday We gon' party like it's yo birthday We gon' sip Bacardi like it's your birthday And you know we don't give a fuck It's not your birthday! You can find me in the club, bottle full of bub Look mami, I got the X if you into taking drugs I'm into having sex, I ain't into making love So come give me a hug if you into to getting rubbed You can find me in the club, bottle full of bub Look mami, I got the X if you into taking drugs I'm into having sex, I ain't into making love So come give me a hug if you into to getting rubbed..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.