Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46979
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20357
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88827
    Posts
  4. பகிடி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    597
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/11/25 in all areas

  1. உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம். சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர் 1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்கத்தவர்களிடமோ இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு வைரஸ் தாக்குவது போல் இவர்களுக்கு சீமானின் தாக்கம் வந்து விடுகின்றது. 2) மத வெறியர்கள் இவர்களுக்கு கருணாநிதி, திராவிட இயக்கம் என்றாலே ஆரம்பில் இருந்தே கசப்புத் தான். சரியான சமயம் வரும்வரை காத்து இருந்தார்கள், ஈழ யுத்தம் முடிய போரின் தோல்விக்கு திராவிட இயக்கம் மேல் பழியைப் போட்டு விட்டார்கள். போரின் பொழுது இவர்கள் பிரபாகரனுக்கு பயந்து அடக்கி வாசித்தார்கள். இவர்களுக்கு இப்பொழுதும் சீமான் மேல் எந்தக் காதலும் இல்லை, மாறாக சீமானைக் கொண்டு தமிழ் இனத்தில் எஞ்சி இருக்கும் மிச்சம் மீதியையும் இந்துத்துவாவுக்குள் அடக்கப் பிரயசைப்படுகிறார்கள்
  2. அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம். இதுவும் கலிபோர்ணியா தான்.
  3. பெரியார் தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்வதுல. தொலை நோக்கு சிந்தனையுடன் செயற்பட்டார். தமிழ் எழுத்து சீர்திருத்தம் தமிழ் மொழியின் வளர்சிக்கு மிக முக்ககியம் என்பதை வலியுறுத்தியதுடன் அதனை 1934 ம் ஆண்டிலேயேதனது பத்திரிகைகளான “விடுதலை” , “குடியரசு” பத்திரிகைகளில் பயன்படுத்த தொடங்கிவிட்டார். புதுமையான எழுத்து முறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்திதன மூலம் எழுத்து சீர்திருத்தத்தின் அவசியத்தை பொது மக்களுக்கு விளக்க முயன்றார். இது தமிழ் எழுத்து சீர்திருத்த புரட்சிக்கு வழிவகுத்த முக்கியமுயற்சிகளில் ஒன்றாகும். பெரியாரின் சீர்திருத்த யோசனைகள் தமிழ் எழுத்துக்களை சர்வதேச அளவில் பயன்படுத்த முன்னோடியாக அமைந்தது. எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டது தமிழின் பாவனையை உலக அளவில மேற்கொள்ள முக்கியமான படியாக கருதப்படுகிறது.
  4. பார் போற்றும் பாராளுமன்ற (பார் + ஆள் + உம் + மன்ற) உறுபினர் கவுரவ சிறிதரன் அய்யா அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிகழ்வு கண்டிகப்பட வேண்டியது. அவருக்கும் தமிழக முதல்வர் மான்புமிகு திரு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் புரிந்த மொழியில் நிகழ்த்தப்படும் நிகழ்வு என்பதால் அய்யா கட்டாயம் சென்றிருக்கவேண்டும். உடனடியாக அய்யா தமிழகம் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்!
  5. என்ன குத்து கரணம் அடித்தாலும் இனி தேர்தலில் அங்குள்ள சனம் காறிதுப்பி அனுப்பும் பதவிக்காக அலையுதுகள் ஒனாணன் சுமத்திரன் கூட்டம் .
  6. மார்க் மாஸ்ரர் எங்காவது செல்ல நேரிட்டால் தனது அறைத் திறப்பை சிவபாதம் கடையில் கொடுத்து விட்டுச் செல்வார். மாலையில் நான் ஓவியம் பயிலச் செல்லும் முன் சிவபாதம் கடைக்கு ஒரு தடவை சென்று விட்டுத்தான் மார்க் மாஸ்ரரின் அறைக்குப் போவேன். திறப்பு சிவபாதம் கடையில் இருந்தால் மார்க் மாஸ்ரர் எத்தனை மணிக்கு தனது அறைக்கு வருவார் என்ற தகவலும் அங்கிருக்கும். மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லித் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கும் மேலாக நான் college of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். இந்த வேளையில்தான் எனது பாடசாலையில் பயிலும் சகமாணவனான சேகரும் ஓவியம் பயில விருப்பம் தெரிவித்ததால் மார்க் மாஸ்ரரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவனையும் என்னுடன் சேர்ந்து வந்து தன்னிடம் ஓவியம் பயில ஒப்புதல் தந்தார். சிலவேளைகளில் எனக்கு நேரம் போதாதிருந்தால் சேகரே சிவபாதம் கடைக்குப் போய் மார்க் மாஸ்ரரின் அறைத் திறப்பை வாங்கி வருவான். ஒருநாள் என்று மில்லாதவாறு மார்க் மாஸ்ரரின் முகத்தில் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. சந்தேகமோ, சலிப்போ அவரது முகத்தில் நிறைந்திருந்தது. நானும் சேகரும் வரைதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். மார்க் மாஸ்ரர் சிவபாதத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார். திடீரென மார்க் மாஸ்ரர் என்னைக் கூப்பிட்டார். "இதிலையிருந்த ரண்டு புத்தகங்களைக் காணயில்லை. எடுத்தனீரோ?" எடுத்தனீரோ என்ற வார்த்தைகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை. "நானெடுக்கேல்லை.. நானெடுக்கிறதெண்டால் உங்களிட்டை சொல்லிப் போட்டுத்தானே கொண்டு போவன்..." "அப்ப.. இதிலையிருந்த ரண்டு புத்தகங்களும் எங்கை? " "எனக்குத் தெரியாது.." "உமக்குத் தெரியோணும்.. நீர்தான் இதுக்குப் பொறுப்பு... நானில்லையெண்டால் சிவபாதத்திட்டை போய் திறப்பு வாங்கி வந்து ரூமை கவனிக்கிறது நீர்தானே..? நீர்தான் இதுக்குப் பதில் சொல்லோணும்." நான் சேகரைப் பார்த்தேன். எந்தவித குழப்பமுமில்லாமல் படத்தைக் கீறிக் கொண்டிருந்தான். "அந்தப் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்காது.. நான் கனபேரிட்டை சொல்லித்தான் அதை வாங்கி வைச்சிருந்தனான்.. எப்பிடியோ அந்தப் புத்தகங்கள் இஞ்சை திரும்பி வரவேணும்.." மார்க் மாஸ்ரர் சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குள் நான் சிறுமையாகப் போனது போன்ற உணர்வு. எனது தன்மானத்தை தட்டிவிட்டது போன்ற பிரமை. அன்று பயின்று முடிந்து புறப்படும் போது ஏதோ ஒப்புக்குத்தான் சொன்னேன். "போட்டு வாறன்." "அடுத்த முறை வரக்கை புத்தகங்களையும் கொண்டு வாரும் " மார்க் மாஸ்ரர் சொல்வது காதில் கேட்டது. அதன் பின்னர் நான் அந்தப் பக்கம் செல்லவேயில்லை. ஒன்று, அந்தப் புத்தகங்களை யார் எடுத்தது அது இப்போ எங்கே இருக்கிறது என்பது பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. மற்றது, என்னை சந்தேகித்தது என்னிடம் அதைப்பற்றி அவர் கேட்டமுறை எனக்குப் பிடிக்கவில்லை. நீண்ட நாட்களின் பின்னர் நகரத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பின்புறமாக இருந்து ஒரு கை எனது தோளில் விழுந்தது. முன்னால் நின்ற நண்பர்களின் கண்களில் மரியாதை தெரிந்தது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். மார்க் மாஸ்ரர். வார்த்தைகள் வர மறுத்தன. அவரே எனக்காவும் பேசினார் போல் இருந்தது. "எப்பிடி இருக்கிறீர்..? அந்தப் பக்கம் பிறகு ஆளையே காணேல்லை..." நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். "வாரும் பஸ் ஸ்ரான்ட்டுக்குத்தான் போறன். அதுமட்டும் கதைச்சுக் கொண்டு போவம். அலுவல் ஒண்டு இருந்ததாலைதான் பள்ளிக் கூடத்துக்கு வந்தனான்.. இப்ப நான் இங்கை படிப்பிக்கிறேல்லை.. மாறி அங்கை போட்டன்.." "தெரியும்..." "தெரிஞ்சு கொண்டும் என்னை வழியனுப்ப நீர் வரேல்லை? ம்.. கோவம் எல்லாருக்கும் வாறதுதான்.. ஆனால் இந்த வயசிலை உமக்கு இவ்வளவு கோவம் கூடாது... நான் அப்பிடித்தான் கேக்கவேணும்.. சேகரை எனக்குத் தெரியாது.. நீர்தான் கூட்டிக்கொண்டு வந்து விட்டனீர்.. நீர்தானே அதுக்குப் பொறுப்பு.. அதுசரி அந்தப் புத்தகங்கள் எங்கேயிருக்குது எண்டாவது தெரியுமே?" குனிந்து பார்த்தபடியே தலையசைத்து "தெரியாது" என்று பதில் சொன்னேன். "மோகன் ஆர்ட்ஸ் கடையிலை இருக்குது. சேகர்தான் கொண்டே குடுத்திருக்கிறான். சேகரும் அவனும் நல்ல சிநேகிதம்.. அங்கை புத்தகங்கள் இருந்ததை சிவபாதம் பாத்திட்டு வந்து என்னட்டை சொன்னாப் போலைதான் எனக்கு புத்தகங்கள் காணாமல் போன விசயமே தெரியும். வீணா ஏன் படிக்கிறவனை குழப்புவான் எண்டிட்டுதான் உம்மட்டை உரிமையோடை கேட்டன். அவனும் திருப்பிக் கொண்டுவந்து புத்தகங்களை வைப்பான் எண்டு பாத்தன். நீர் கோவிச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்." என்னால் எதுவுமே பேச முடியவில்லை. "புதுவீடு கட்டியிருக்கிறன். குடிபோகக்கை ஓரு அறைக்கு உம்முடைய பெயின்றிங் இருக்கோணும் என்று ஆசைப்பட்டன்.. நீர் வரவேயில்லை........... கதையோடை கதையா எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்.." "வாழ்த்துக்கள் மாஸ்ரர் " "அவனுக்கு என்ன பெயர் தெரியுமோ?" கேட்டுவிட்டு வாஞ்சையுடன் என்னைப் பார்த்தார். நானும் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். "அவனுக்கு உம்முடைய பெயரைத்தான் வைச்சிருக்கிறன். " சொல்லிவிட்டு புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு யன்னலூடாகக் கையசைத்தார். மார்க் மாஸ்ரரை நான் கடைசியாகப் பார்த்தது அப்பொழுதுதான். நான் புலம் பெயர்ந்து வந்த போது மார்க் மாஸ்ரரும் இடம் பெயர்ந்து மன்னாருக்குப் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது. 2002 இல் நான் தாயகம் போன போது “மன்னாருக்குச் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா?” என அரசியல்துறையிடம் காரணத்தையும் சொல்லிக் கேட்டேன். “செய்யலாம்” என்றார்கள். அடுத்தநாள் நேரில் வந்து செய்தி சொன்னார்கள், “மார்க் மாஸ்ரர் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர் 2000ம் ஆண்டில் காலமாகிவிட்டார்” என்று. 1973ம் ஆண்டு பிறந்த மார்க் மாஸ்ரரின் செல்வகுமாரனுக்கு இப்பொழுது 51 வயதாக இருக்கும். இன்னும் நான் அவரைப் பார்க்கவில்லை. “நான் எனது மாணவர்களால் நினைவு கூரப்படுவேன்” மார்க் மாஸ்ரர் சொன்னது நினைவில் இருக்கிறது.
  7. ரத்தினசுருக்கம். முன்பும் எழுதியதுதான். ஈழத்தில் தலைவரை, தமிழ்நாட்டில் பெரியாரை இகழ்ந்து விட்டு அரசியல் செய்ய முடியாது. இருவரும் சில தவறுகளை (வேறு வேறான) விட்டுள்ளனர். ஆனால் அவர்கள் செய்த நல்லதுகள் அதன் பல மடங்கு. அவர்கள் இதயசுத்தி மீது மக்கள் இன்றும் வைத்துள்ள நம்பிக்கை மிக பெரிது.
  8. கனிமொழிக்கு… இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஒன்றும் தெரியாது போலுள்ளது. இவர்கள் இருவரும் விளங்கப் படுத்தி விட்டது நல்லதாய் போச்சு.
  9. அது என்ன விஷயமென்றால்; சிறிதரனுக்கும் விஷேட அழைப்பு வந்ததாம், அவர் விமான நிலையம் சென்றபோது, சி. ஐ. டி. அவரது பாஸ்போட்டில் தவறு இருக்கிறதென்று தடுத்து விட்டார்களாம். இதே கடவுச்சீட்டுடன் அண்மையில் மூன்று தடவைகள் இதே விமான நிலையத்தினூடாக வெளிநாட்டுக்கு சிறிதரன் சென்றிருக்கிறார். அப்போ இல்லாத பிழை இப்போ எப்படி வந்தது? அவரை தடுத்துவிட்டு, இவர்கள் முன்னுக்கு ஓடிப்போய் தங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என ஆதாரம் தெரிவிக்கினமாம். இதுதான் சட்ட மேதையின் திறன். "உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய்." என்று இருவரும் புலம்பும் நேரம் வரும். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தார்களா? உல்லாசம் அனுபவிக்க வந்தார்களா? "அழியிற காலத்துக்கு எழுகிறது அகந்தை." இதைத்தான் அத்தைக்குணம் என்று ஊரில் சொல்வார்கள்! சாணக்கியனோடு ஒட்டிக்கொண்டு திரிந்து பயிற்சி அளிக்கிறாராம். மக்களை எப்படி ஏமாற்றுவது, இரகசிய சந்திப்புகளை எப்படி நடத்துவதென்று. இருக்கட்டும், அவ்வளவு திறமையானவரை ஏன் கட்சியும், மக்களும் நிராகரித்தார்கள் என்பதை ஆய்ந்தறிய சாணக்கியனுக்கு அனுபவம் இல்லை. இவரில தொங்கிக்கொண்டு திரிந்தால் அது வராது, கபடப்புத்திதான் வளரும்.
  10. அடேய் இஞ்சை பாரடா....இஞ்சை பாரடா ரஜனிகாந்த் டோப் வைக்காத மாதிரி கிடக்கடா...ஆரெண்டு பாத்து சொல்லுங்கோடா...?😃
  11. இசையை தாண்டி Raja sir இப்படித்தான்!😱ARR Opens up about Ilaiyaraja🔥Goosebumps Interview - Part 2
  12. டக்கென்று ஞாபகத்தில் வந்தது உங்கள் இருவரையும் தான், அத்துடன் இருவரின் வட்சப் இருந்தபடியால் படுத்திருந்து கொண்டே செய்திகளை அனுப்பினேன். யாழிணையம் முகந்தெரியாத பல புதிய உறவுகளை வழங்கி இருக்கிறது. யாழுக்கும் அதை உருவாக்கிய மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள்.
  13. என்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு.
  14. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை. திரு திருமதி தில்லையம்பலம் தம்பதியினருக்கு 1963-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் இரண்டாவது மகனாகப்பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவநேசன். ஏற்கனவே ஒரு அண்ணனை மட்டும் சகோதரனாகக் கொண்ட சிவநேசனை எல்லோரும் செல்லமாக காந்தி என்றுதான் அழைத்தனர். இளமைப்பராயத்தில் பள்ளிப்படிப்புக்களில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற காந்தி உயர் வகுப்புக் கல்விகளை வடமராட்சி வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் முன்னெடுத்திருந்தார். காந்திஅவர்கள் பத்தொன்பது வயதையெட்டிய 1982-ம்ஆண்டுகாலப்பகுதி. சிங்கள பேரினவாத சக்திகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்போராட்டம் முளையிடத் தொடங்கிய காலம். பேரினவாத சக்திகள் தமிழ்மக்கள்மீது திணித்த அடக்குமுறைகள் உயர்தரக்கல்வி கற்றுக்கொண்டிருந்த காந்தி அவர்களின் மனதை வெகுவாகப் பாதித்திருந்தது. அந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான கப்டன் பண்டிதர், கப்டன் றஞ்சன்லாலா, கேணல் கிட்டு ஆகியோர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டுக் காலப்பகுதியில் காந்தி அவர்கள் தன்னையும் ஒரு முழுநேர விடுதலைப் போராளியாக இணைத்துக்கொண்டார். இயக்கப் பாசறையில்தான் இயக்கப்பெயராக சூசை என்ற பெயரைப் பெற்றிருந்தார். தொடக்கநாட்களில் கேணல் கிட்டு அவர்களின் வழிகாட்டலில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக இராணுவ அரசியல் ரீதியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார். இதன்பின்னர் 1983-ம்ஆண்டின் பிற்பகுதியில் லெப் கேணல் பொன்னம்மான் தலைமையில் இருநூறு போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சிஅணியினர் பயிற்சிக்காக இந்தியாவிற்குச் சென்றபொழுது அந்த அணியில் சூசைஅவர்களும் சென்றிருந்தார். இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் அமைந்திருந்த முதலாவது பயிற்சிப்பாசறையில் வழங்கப்பட்ட பயிற்சிகள் அனைத்திலும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சிபெற்று ஒரு சிறந்த போராளியாக மட்டுமன்றி சிறந்த ஆளுமைமிக்க பொறுப்பாளராகவும் புடம்போடப்பப்பட்டு தனது பயிற்சிகளை சிறந்த முறையில் நிறைவுசெய்திருந்தார் சூசை அவர்கள். 1984-ம்ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பயிற்சிப்பாசறை நிறைவடைந்ததையடுத்து தாயகம் வந்த சூசை அவர்கள் அதே காலப்பகுதியில் வடமராட்சிக்கோட்டப் பொறுப்பாளராக தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். சூசைஅவர்கள் வடமராட்சிக் கோட்டத்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து வடமராட்சி மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முனைப்புப்பெற்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தை பலம்மிக்க ஒரு அமைப்பாக கட்டியெழுப்பும் பொருட்டு பெருமளவு இளைஞர்களை போராட்டத்தில் இணைத்து பயிற்சிகள் பெறுவதற்காக கடல்வழியாக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் மாவிலங்கை காட்டுப்பகுதியிலும் பயிற்சிமுகாம் அமைத்து அங்கும் புதியபோராளிகளுக்கான பயிற்சிகளை வழங்கி இயக்கத்தின் ஆட்பலத்தை விருத்திசெய்து விடுதலைப்போராட்டத்தின் படிக்கல்லாகத் திகழ்ந்தார். அத்துடன் மக்கள் மத்தியில் போராட்டம் தொடர்பான கருத்துக்களை எடுத்துக்கூறி போராட்டத்திற்கான மக்கள் ஆதரவினையும் வலுப்படுத்தினார். கிராமங்கள் தோறும் மக்கள்கடை என்ற பெயரில் வணிகநிலையங்களை நிறுவி மலிவுவிலைகளில் பொருடகள் மக்களுக்கு கிடைக்கக்கூடியவாறான சூழலை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார். அத்துடன் முதலுதவித் தொண்டர்களை உருவாக்கும் முகமாக கிராமங்களிலுள்ள சில படித்த இளைஞர் யுவதிகளை ஒன்றுசேர்த்து முதலுதவிப் பயிற்சிகளை வழங்கியதோடு பின்தங்கிய இடங்களில் முதலுதவி நிலையங்களை நிறுவி பயிற்றுவித்த முதலுதவித் தொண்டர்களை அந்த நிலையங்களில் மருத்துவத் தொண்டர்களாகப் பணிக்கமர்த்தி மக்களின் வைத்தியத் தேவைகளை நிறைவு செய்தார். அன்றய நாட்களில் அந்த முதலுதவி நிலையங்களின் சேவையால் அநேகமான மக்கள் பெரிதும் நன்மையடைந்ததுவும் குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற குடும்பப்பிணக்குகள், காணிப்பிணக்குகள் உட்பட ஏனைய பிணக்குகளுக்கும் தீர்வுகாணும்முகமாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் படித்த அறிவில் முதிர்ந்ததும் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவர்களுமான சிலரை இணைத்து இணக்கமன்றங்களை நிறுவி மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற பிணக்குகளுக்கு அந்த இணக்கமன்றங்கள் ஊடாக உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்தார். அத்துடன் வடமராட்சியில் இலங்கை இராணுவத்தினருக்கெதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் அனைத்திலும் நேரடியாக பங்கெடுத்திருந்தார். 1987-ம்ஆண்டு இலங்கை இராணுவத்தினர் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கைமூலமாக வடமராட்சியைக் கைப்பற்றி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்தனர். இந்தப் படைமுகாமை அழிப்பதற்கென விடுதலைப்புலிகள் 1987-ம் ஆண்டு யூலைமாதம் 05-ம்திகதி முதன்முதலாக கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தை கொன்றொழித்து நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப்படைமுகாமை வெற்றிகொண்டனர். இந்த தாக்குதலில் படைமுகாமின் பிரதான தடையை உடைத்து, கரும்புலி கப்டன் மில்லர் அவர்கள் வெடிமருந்து நிரப்பிய வாகனத படைமுகாமின்;தை முகாமிற்கு உள்ளே கொண்டு செல்வதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு சூசை தலைமையிலான அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தினத்தன்று சரியாக இரவு 7மணி 2நிமிடத்திற்கு சூசை தலைமையிலான அணியினர் முகாமின் தடையை உடைத்து பிரதான பாதையை ஏற்படுத்திக்கொடுக்க 7மணி 5நிமிடத்திற்கு கரும்புலி கப்டன் மில்லர் வெடிமருந்து வாகனத்தை முகாமிற்கு உள்ளே கொண்டுசென்று கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டார். கரும்புலி கப்டன் மில்லர் அவர்களும் சூசை அவர்களின் ஆளுகையின் கீழ் வடமராட்சி அணியில் செயற்பட்டிருந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னரான காலப்பகுதியில அதாவது தமிழீழத்தில் இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மணலாற்றுக் காட்டை தளமாகக்கொண்டு செயற்பட்டவேளையிலும் சூசை அவர்களும் இன்னும் சில போராளிகளும் வடமராட்சிப் பகுதியிலேயே மக்களின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். இந்தக்காலப்பகுதியில் இந்தியப்படையினருக்கெதிரான கெரில்லா முறையிலான பல தாக்குதல்களை மேற்கொண்டதோடு தமிழ்நாட்டிலிருந்து கடல்வழியாக படகுகளில் கொண்டுவரப்படுகின்ற படைக்கலங்களையும் ஏனைய பொருட்களையும் பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்து அவற்றை மணலாற்றுக்காட்டுக்கு அனுப்பிவைப்பது உட்பட அந்த நெருக்கடியான காலகட்டத்திலும் போராட்டப்பாதையில் மிகவும் நேர்மையுடன் பயணித்தார் சூசை. இதன்பின்னர் ஒரு கட்டத்தில் தேசியத்தலைவரின் அழைப்பையடுத்து தேசியத்தலைவரை சந்திப்பதற்காக மணலாற்றுக் காட்டுப்பகுதிக்கு சென்றுகொண்டிருந்த வேளையில் மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் இந்தியப்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் இடர்மிகுந்த பயணத்தை; தொடர்ந்து தேசியத்தலைவரைச் சந்தித்தார். அதன்பின்னர் காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக தமிழகம் சென்றார். அங்கு காயத்திற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு காயம் குணமடைந்து உடல்நிலை தேறியபின்னர் தாயகம் வந்து தேசியத்தலைவருடன் மணலாற்றுக் காட்டில் செயற்பட்டார். 1990-ம்ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தமிழீழத்திலிருந்து முற்றாக வெளியேறியவுடன் மீண்டும் வடமராட்சிக ;கோட்டத்தைப் பொறுப்பேற்று சிறந்த முறையில் நிர்வகித்தார். இந்தக்காலப்பகுதியில் கலை கலாச்சாரப்பிரிவை உருவாக்கி அதனூடாக போராட்டக் கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்து கணிசமான இளைஞர் யுவதிகளை போராட்டத்தில் இணைத்து பலமானதொரு வடமராட்சி அணியைக் கட்டிவளர்த்திருந்தார். அந்தக்காலப்பகுதியில் மண்டைதீவில் தேசவிரோதக்கும்பல் மீதான தாக்குதல,; யாழ்-கோட்டை முகாம் மீதான தாக்குதல் மண்டைதீவுப்படைமுகாம் மீதான தாக்குதல் 1991-ம்ஆண்டு யூலைமாதம் ஆனையிறவுப்படைத்தளம்மீது மேற்கொள்ளப்பட்ட ஆகாயக்கடல்வெளிச்சமர் உட்பட அனைத்து தாக்குதல்களிலும் சூசை தலைமையிலான தாக்குதலணி பங்கெடுத்திருந்தது. ஆகாயக்கடல்வெளிச்சமர் முற்றுப்பெற்றதையடுத்து சூசை அவர்களுக்கான திருமணம் நடைபெற்றது. முதல் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் சகோதரி சத்தியதேவி(சுதா) அவர்கள்தான் சூசையின் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். தனது இல்லறவாழ்க்கையில் சிந்து என்ற ஒரு பெண்பிள்ளைக்கும் மணியரசன், சங்கர் ஆகிய இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் தந்தையானார். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்பட்டுக்கொண்டிருந்த கடற்புறா அணி 1991-ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19-ம்நாளன்று விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் என்ற கட்டமைப்பாக பரிணமித்தபோது அதன் சிறப்புத்தளபதியாக சூசை அவர்கள் நியமிக்கப்பட்டார். கடற்புலிகளென்றால் சூசை சூசையென்றால் கடற்புலிகள் என்று சொல்லுகின்ற அளவுக்கு அவரினுடய செயற்பாடுகள் அமைந்திருந்தன. அதாவது கடற்புலிகளினுடய நடவடிக்கைகள் அனைத்திலும் சூசை அவர்களின் பங்களிப்பு மிகப்பிரதானமாகவிருந்தது. கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமான நெய்தல் நிலத்தை கடற்புலிகள் நிர்வகிப்பதற்காக கடற்புலிகளின் அரசியல்துறை உருவாக்கப்பட்டு மக்களுக்கும் கடற்புலிகளுக்கும் மத்தியிலான ஒரு நெருக்கமான உறவுநிலையை ஏற்படுத்தியிருந்தார். யாழ்.குடாநாட்டுக்கான பாதைகள் தடைப்பட்டு கிளாலிக் கடல்வழியாக மக்களின் போக்குவரத்துக்கள் இடம்பெற்ற பொழுது இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக கடற்புலிகளின் சண்டைப்படகுகளை கடலில் இறக்கி மக்களுக்கான பாதுகாப்புக்களை வழங்கி நிறைவான போக்குவரத்துப்பணியை நெறிப்படுத்தினார். 1993-ம்ஆண்டு நவம்பர் மாதத்தில் பூநகரி-நாகதேவன்துறை படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கையில் எதிரியின் ஐந்து நீரூந்து விசைப்படகுகளை கைப்பற்றி போராட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்தார். இதன்பின்னர் ஓயாதஅலைகள் நடவடிக்கையில் முல்லைத்தீவுப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்டமை, ஓயாதஅலைகள் மூன்றில் வடமராட்சிக்கிழக்குப் பிரதேச மீட்புச்சமர், குடாரப்புதரையிறக்கம, தொடராக ஏற்படுகின்ற கடற்சமர்கள், ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகள் என அவரின் நெறிப்படுத்தல்கள் தொடர்ந்துகொண்டே சென்றன. 2002-ம்ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமாதானகாலத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும், சமாசங்களின் பிரதிநிதிகளை தென்மராட்சி-பளைப்பிரதேசத்திற்கு வரவழைத்து கலந்துரையாடல்களை நடாத்தி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தார்.; அத்துடன் முல்லைத்தீவு, வடமராட்சிக்கிழக்கு, மன்னார்மாவட்டம் ஆகிய அனைத்து கரையோரப் பிரதேசங்களிலுமுள்ள பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடரான கலந்துரையாடல்களை நடாத்தி மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து அவைகளுக்கெல்லாம் சுமூகமான முறைகளில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார். நித்திகைக்குளத்தில் காயப்பட்டபோது ரவையின் சிறிய பாகமொன்று அவரின் உடலில் புதைந்திருந்தது. அது உபாதைக்கு உட்படுத்தியதால் சிகிச்சைக்காக 2004-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் சிங்கபபூர் நாட்டிற்குச் சென்று சிகிச்சைபெற்று ஒரு வாரத்தில் நாடு திரும்பியிருந்தார். 2004-ம் ஆண்டு டிசம்பர்மாதம் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் முல்லைத்தீவு மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்கள் நிறையவே அழிவுகளைச் சந்தித்திருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பாக முல்லைத்தீவில் சூசை அவர்கள் நேரடியாக களத்தில் நின்று மீட்புப்பணிகளை நெறிப்படுத்தினார். சுனாமிஅனர்த்தம் ஏற்பட்டு தொடராக மூன்று மாதங்களுக்கு மேலாக முல்லைத்தீவிலும் வடமராட்சிக்கிழக்கிலும் ஒவ்வொருவாரமும் பொதுமக்களுடனான கலந்துரையாடல்களை நடாத்தி சுனாமி மீளகட்டுமானப்பணிகளை நெறிப்படுத்துவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். 2006-ம்ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் தொடங்கியபோது படையியல் ரீதியான நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டியவராகவிருந்தார். 2007-ம்ஆண்டு யூலைமாதம் 15-ம் நாளன்று பகல்வேளையில் புதிதாக தயாரிக்கப்பட்ட படகு ஒன்றைக் கடலில் பரீட்சித்துப் பார்த்தபோது தூரதிஸ்டவசமாக ஏற்பட்ட படகுவிபத்தில் சூசை அவர்கள் கடுமையாக காயமடைந்ததோடு அவரது ஐந்து வயது நிரம்பிய மகன் சங்கரும் அவரது மெய்ப்பாதுகாவலர் லெப்ரினன்ட் சீலனும் அந்தச்சம்பவத்தில் சாவடைந்தனர். படுகாயமடைந்த சூசை அவர்கள் உடனடியாக புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதனால் ஒரு மாதத்தில் அவரது உடல்நிலை ஓரளவிற்கு குணமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு மருத்துவர்கள் அனுமதித்திருந்தனர். மருத்துவமனையிலிருந்து வெளியேறியும் அவர் தனது பிரத்தியேக முகாமிற்குத்தான் வந்தார். அங்கிருந்தவாறு கடற்புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். என்னதான் வேலைச்சுமைகள் இருந்தாலும் பொதுமக்களிடமிருந்தும் போராளிகளிடமிருந்தும் வருகின்ற கடிதங்களை உடனுக்குடன் பார்வையிட்டு அதற்கான பதில்களை சமபந்தப்பட்ட பொறுப்பாள் ஊடாக அனுப்பிவைப்பார். போராளிகளை பலதுறைகளிலும் பயிற்றுவித்து ஆளுமைமிக்க போராளிகளாக வளர்த்தெடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அத்துடன் போராளிகளின் வீரச்சாவு நிகழ்வுகளில் எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும,; வீரச்சாவு நிகழ்வுகளில் எந்தவிதமான தவறுகளும் இடம்பெறக்கூடாது என்பதில் வலுகண்டிப்பாகச் செயற்பட்டதை அவதானிக்கமுடிந்தது. மேலும் போராளிகளின் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பிலும் மிகவும் கண்டிப்பாகச் செயற்பட்டதோடு தனிப்பட்ட ஒழுக்கம் தவறியவர்கள் அவரது தண்டனைகளுக்கு உள்ளாகியிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது. 2009-ம்ஆண்டின் முற்பகுதிகளில் படையினரின் தாக்குதல்களில் காயமடைந்த மக்களை ஏற்றிச்செல்வதற்கும் போர்வலயத்திற்குள் சிக்குண்ட மக்களுக்கான உணவுப்பொருட்களை கொண்டுவருவதிலும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் கப்பல் சேவை மேற்கொண்டிருந்தனர். இந்த கப்பல் சேவையை வன்னிக்கு எடுப்பதில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொலைபேசி மூலமாகத்தொடர்பு கொண்டு கடமையான பிரயத்தனம் மேற்கொண்டார். வன்னியில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த இனவழிப்புப்போர் தொடர்பாகவும் மக்கள்படும் துன்பங்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துக்கூறி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்காக அயராது உழைத்திருந்தார். இயக்கத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் பொதுமக்களை பாதிக்கக்;கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்தார். போரின் இறுதிநாட்களிலும் எங்களது போராட்டம் தர்மத்துக்கான போராட்டம். அது நிச்சயம் வெற்றிபெறும். என்ற அசைக்கமுடியாத உறுதி அவரிடம் இருந்ததை அவதானிக்கமுடிந்தது. 2009 மேமாதம 15-ம் நாளன்றும் அவர் படையினரின் எறிகணை வீச்சில் காயமடைந்தபோதிலும் அவர் தளர்வடையவில்லை. மேமாதம் 16-ம்நாளன்று இரவு தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் உறுதிதளராத குரலில் வன்னியின் இறுதிநேர நிலைமைகள் தொடர்பாக அறிவித்துக்கொண்டிருந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது. மறுநாளான 17-ம் நாளன்று அதிகாலைப்பொழுதிலும் அவரது மெய்ப்பாதுகாவலர் புரட்சியின் தொலைத்தொடர்பு சாதனத்தில் அவரது கம்பீரமான கட்டளையை கேட்கமுடிந்தது. அதுதான் இறுதியாக எனது செவிகளில் கேட்ட அவரது குரலாக இருந்தது. அந்த உறுதியானகுரல் மூன்று ஆண்டுகளாகியும் எனது செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது. தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ
  15. நியூயோர்க்கில் உள்ள Fire Hydrant எல்லாம் அடிக்கடி வேலை செய்யுதா என்று திறந்து பார்ப்பார்கள். லாஸ் அங்கிலஸ்சில் அப்படியான சோதனைகள் செய்து திருத்துவதில்லைப் போல தெரிகிறது. பல திறந்த போதும் தண்ணீரே வரவில்லையாம். அங்குள்ள மேயர்மாருக்கு இது ஒரு பிரச்சனையாக மாறலாம்.
  16. கொஞ்சம் பொறுங்கள். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையான விபரம் இன்னும் வெளிவரவில்லை. சிறீதரன் என்கிறார்கள், ஈ. பி .டி .பி என்கிறார்கள், மாவீரர் போராளிகள் குடும்ப காப்பகம் என்கிறார்கள். இந்தப்பிரச்சனைக்கு கடந்த மாவீரர் தினத்திலேயே அடிக்கல் போட்டாயிற்று. சிறிதரனை இலக்கு வைத்து பல பிரச்சனைகள், சேறடிப்புகள் பல பக்கத்தாலும் அரங்கேறுகிறது. சொந்த புத்தி இல்லாமல் இரவல் புத்தியில் கொஞ்சம் ஆடுதுகள். மாவீரர், எங்கள் நிம்மதிக்காக உணவிழந்து, உறக்கமிழந்து, உறவிழந்து, போராடி இப்போ, அமைதி கொள்கிறார்கள். அங்கேயும் அவர்களை அமைதியாக உறங்க விடக்கூடாதென எதிரி அவர் உடல்களை கிளறினான். இப்போ, இன்னொரு கூட்டம் அந்த வேலையை ஆரம்பிச்சிருக்கு. வேலையில்லாததுகளின் தேவையில்லாத வேலையிது. எங்களுக்காக உழைத்து, இன்று தங்கள் வாழ்வை கொண்டுசெல்ல முடியாமல் ததத்தளிக்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்கு இவர்கள் முண்டியடிக்கட்டும் பாப்போம்! மாவீரர் துயிலும் இல்லத்தில் அரசியல் செய்யும் தேவை யாருக்கோ இப்போது எழுந்திருக்கிறது.
  17. இணைப்புக்கு நன்றி ஏராளன். சீமான் கூறியது பொய் என்பது ஏற்கனவே பொதுவாக அறிவுடன் சிந்திக்கக்கூட மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயமே. வழமையாக தனது ஒவ்வொரு கூட்டங்களிலும் பொய்களை கூறிவரும. சீமானோ ஆர்எஸ்எஸ் உருவாக்கிய போலியான விடுதலை ஏட்டை நகலெடுத்து அதனை இணையத்தளங்களில் ஒட்டிய தற்குறிகளோ இதற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை. பெரியாரில் சீமானுக்கு உள்ள கோபம் என்ன வென்றால், “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று பெரியார் கூறியது தான். அது எப்படி எனக்கு இல்லாததை பெரியார் கூறலாம் என்ற ஆதங்கத்தில் தான் சீமான் இவ்வாறு தொடர்ந்து அவதூறுகளை கொட்டி வருகிறார்.
  18. பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா? கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் பெரியார் சொன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. பெரியார் அப்படிச் சொன்னாரா? கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை மேற்கோள்காட்டி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. சீமான் மன்னிப்பு கேட்க தூது விட்டாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன பிரச்னை? முழு பின்னணி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகுவது ஏன்? கட்சிக்குள் என்ன நடக்கிறது? திராவிடம் - தமிழ்த் தேசியம் என்ன வேறுபாடு? பிராமணர் மீதான அவற்றின் பார்வை என்ன? விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன? சீமான் என்ன பேசினார்? அந்தச் செய்தியாளர் சந்திப்பில், "தமிழ் மொழியையே காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசியிருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்? கம்பன் உங்களுக்கு எதிரி, இளங்கோவடிகள் ஒரு எதிரி, திருவள்ளுவர் எதிரி - பிறகென்ன சமூக சீர்திருத்தம்? அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி?'' என சீமான் பேசினார். மேலும் பெரியாரின் பெண்ணிய உரிமை குறித்து பேசிய சீமான், பெரியார் சொன்னதாக கூறி ஒரு கருத்தை குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து உடனடியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவின் 5 ச.கி.மீ. நிலத்தை வங்கதேசம் கைப்பற்றியதா? எல்லையில் ஒரு வாரமாக நீடிக்கும் பதற்றம்11 ஜனவரி 2025 கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்7 மணி நேரங்களுக்கு முன்னர் பெரியாரிய அமைப்புகள் பெரும் கண்டனம் தெரிவித்தன. அப்படிப் பெரியார் பேசிய அல்லது எழுதிய ஆதாரங்களை வெளியிடும்படி கோரினர். இதற்கடுத்து புதுச்சேரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது, "எல்லா ஆதாரங்களையும் நீங்கள் முடக்கிவைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? இவ்வளவு பேர் எடுத்து காணொளிகளாகப் போடுகிறோம். பொய் என்றால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன். வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கிவைத்துக்கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?" என்று பதிலளித்தார். இதற்குப் பிறகு, தமிழ்நாட்டின் பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெரியார் குறித்த சீமானின் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என கூறியது. மேலும் அவர் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஜனவரி 20-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது. ஆபாசப் பட நடிகை வழக்கு: டிரம்ப் 'குற்றவாளி' என்ற நீதிபதி தண்டனை விதிக்காதது ஏன்?11 ஜனவரி 2025 ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச போட்டிகளில் ஆட தடை வருமா? ஐ.சி.சி.யில் என்ன நடக்கிறது?11 ஜனவரி 2025 பெரியார் அப்படிப் பேசியது உண்மையா? இதுபோல பெரியார் பேசியதாக கூறப்படுவது முதல் முறையல்ல. 2017-ஆம் ஆண்டுவாக்கில்தான் முதன்முதலில் பெரியார் இப்படிச் சொன்னதாக செய்தி பரவ ஆரம்பித்தது. சில இயக்கங்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற வாசகத்துடன் பதிவுகளை வெளியிட்டன. இந்தச் செய்தி 1953-ஆம் ஆண்டு மே மாதம் திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடான விடுதலையில் வெளிவந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு, அவ்வப்போது சமூக வலைதளங்களில் இந்தக் கருத்து பரப்பப்பட்டு வந்தது. இதனை அந்தத் தருணத்திலேயே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மறுத்தனர். 2020ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு செய்தியைப் பதிவுசெய்த, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்தனர். அவரைக் காவல்துறை கைதும் செய்தது. இந்த நிலையில்தான் மீண்டும் சீமான் இதே கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இது தொடர்பான சமூக வலைதள பதிவுகளில் இந்தச் செய்தி விடுதலை இதழில் 1953-ஆம் ஆண்டின் மே 11ஆம் தேதி வெளியாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. படக்குறிப்பு, தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன. படக்குறிப்பு, குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது இது தொடர்பாக பிபிசி ஆராய்ந்த போது, அப்படி எந்தச் செய்தியும் அன்றைய தினம் வெளியான விடுதலை இதழில் இடம்பெறவில்லை. குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்த நான்கு பக்கங்களிலும் இதுபோன்ற ஒரு செய்தி எங்கேயும் இடம்பெறவில்லை. தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdd97j831yro
  19. சுமந்திரனும், சாணக்கியனும்.... ஸ்ரீதரனுக்குத் தெரியாமல், கனிமொழியை போய் சந்தித்து இருக்கலாம். சம்பந்தர் காலத்தில் இருந்து... ஒரு கட்சியில் உள்ளவர்கள் ஒன்றாக தமிநாட்டிற்குச் சென்று அங்கு தமது உட்கட்சிப் பூசலை வெளி உலகத்திற்கு காட்டி சந்தி சிரிக்க வைக்கும் கேவலமான வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனை ஒரு முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் என்னிடம் தெரிவித்த தகவலே இவை. தனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதாகவும் சொன்னார். சுமந்திரன்... உள்ளூரிலேயே, தன்னந்தனியாக பின்கதவால் சென்று, சிங்கள அரசியல் தலைவர்களை சந்தித்து விட்டு வரும் ஊத்தைவாளி பழக்க வழக்கம் உடைய நபர்.
  20. தொலைக்காட்சியில் வரப் போகிறீர்கள். அதற்கேற்ப வசீகரமாக இருக்க வேண்டும்.
  21. உண்மையான புலிகள் ஒரு போதும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்காகவோ அல்லது, கட்சி நபருக்காகவோ இப்படி பரிந்துரைப்பதில்லை. ஆனால் புலிகளின் வளத்தையும் பணத்தையும் கொள்ளை அடித்து கொளுத்த சருகுப் புலிகள் தான் இவ்வாறான வேலைகளை செய்வர்.
  22. சில மேடைகளில் ஒரு சில வார்த்தைகள் தமிழ் தவிர வேற்று மொழி கலந்து பேசினாலே மேடையை விட்டு இறங்கிப் போய் விடுவார்..அனைவரும் அறிந்தது தான்.அந்த வகையில் ரகுமான் மேல் மரியாதையுண்டு. பகிர்வுக்கு நன்றி தம்பி.🖐️
  23. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல் சென்னையில் இடம்பெறவுள்ள தமிழ்நாடு அரசின் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்றையதினம் சென்னைக்கு செல்வதற்காக சென்றிருந்த வேளை இவ்வாறு தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சிறீதரன் தரப்பினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அயலக தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக சிறீதரன் அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறீதரன் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, சிறீதரனை தடுத்து நிறுத்துமாறு சிஐடியினர் மூலம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தங்களுடைய கடவுச்சீட்டில் பிழை இருக்கின்றது என்றும், அதனால் நீங்கள் பயணிக்க முடியாது என்றும் சிறீதரனிடம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக சிறீதரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன திடீர் நடவடிக்கை தனது புதிய கடவுச்சீட்டின் ஊடாக சிறீதரன் எம்.பி இதுவரை நான்கு முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்ததாகவும், இதுவரையில் கடவுச்சீட்டில் பிழை இருப்பதாக அறிவிக்கப்பட்டதில்லை என்றும், தற்போது முதல்முறையாக இவ்வாறு அறிவிக்கப்படுவதால் இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறீதரன் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதேவேளை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வின் சிறீதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள நிலையில், சிறீதரனின் இதுபோன்ற நகர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சிலர் இவ்வாறு தடைகளை ஏற்படுத்தி, இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. உள்ளக பிரச்சினைகள் இது போன்ற, முறையற்ற நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் உள்ளக பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்தும் போது சில கடப்பாடுகள் இருக்கின்றன எனவும், அவை எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/travel-ban-on-mp-sridharan-1736525782
  24. சருகுகள் தானே மரங்களுக்கு பசளை, அதைவிட அது அந்த eco system இன் ஓர் இன்றியமையாத பகுதி. இப்போதுதீயணைப்பு படையினர் தண்ணீரால் அணைக்க கூடியதாக இருப்பதும், ஏனெனில் வளி வெக்கையாக இருக்கும் போது தண்ணீரை நிலத்துள் தங்க வைத்து இருப்பதும், பின் வெக்கையால் ஆவியாகி வளியுடன் கலந்து, புழுக்கத்தை உருவாக்கும் போது நெருப்பு இலகுவில் பரவாது. (வேகமான காற்றுத்தான் புழுக்கத்தை அகற்றுவது , நெருப்பு பரவுவது, அந்த வேகத்துக்கு ஏற்றவாறு தீயணைப்பு படையினர் தண்ணீரை கொட்ட முடியவில்லை என்பது வேறு விடயம்) அப்படி காற்று இருந்தாலும், சருகு படை தான் பரவலை குறைக்கிறது. காடு எரிவது சமநிலையை உருவாக்க (செயற்கையாக தீ வைத்து தொடங்கவிட்டால்) முன்பு இருந்த அடர்த்தி இப்போது அதிகமாகிவிட்டது, ஏனெனில் புவி ஏப்பம் அடைவதால். அப்படி தொடர்ந்து இருந்தால், மரங்கள் நீரை உறிஞ்ச, நிலம் கட்டாம் தரையாகி, பின் முழுக்காடே அழிந்து விடும். எனவே கடு எரிவது, தொடர்ந்து காடு நலமாக இருக்க அவசியம். eco system இன் ஒருபகுதி. எதிர்கால மனித சந்ததிக்கு அவசியம் என்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். (அனால்,காட்டுக்குள் போய் இருந்து கொண்டு வீடு எரிகிறது என்றால் என்ன செய்வது?)
  25. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை. 40 வருடமாக அகதிகளாக இருப்பவர்களுக்கு, இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை. குடியுரிமை இன்மையால் உயர் கல்வி கற்க முடியவில்லை. அரச வேலை வாய்ப்பு பெற முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கடவுச்சீட்டும் பெற முடியவில்லை. வாழ முடியவில்லை என்று.. தாயகம் திரும்ப விரும்பினாலும் அதற்கும் அனுமதி இல்லை. இது குறித்து, எமது தலைவர்களுக்கு அக்கறையும் இல்லை. கடந்த வருடமும் தமிழக அரசின் புலம் பெயர் விழாவில் சுமந்திரன் கலந்துகொண்டார். இந்த வருடமும் கலந்துகொள்கிறார். இவர் எதற்கு அங்கு செல்கிறார்? புலம்பெயர் தமிழர் விழாவில் கலந்துகொண்ட இவர்கள் கனிமொழியுடன் என்னதான் உரையாடியிருப்பர்? தோழர் பாலன்
  26. நன்றாக பச்சை மட்டையால் வாங்கிக்கொண்டவரா நீங்கள்?? எதற்கெடுத்தாலும் ஜேர்மனியில் புலிகள் என்று.....??
  27. காணொளி பார்த்தேன் இதே பெரியாரை கட்சி ஆரம்பித்த போது தன் கட்சி கொள்கை வழிகாட்டியாக அறிவித்தவர் சீமான். 2025ம் ஆண்டு பிறந்தவுடன் பெரியாரையும் எதிர்ப்பது தனது கொள்கை 🤣 சீமானை தங்கள் வழிகாட்டியாக வெளிநாட்டு ஈழதமிழர்கள் சிலர் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது போன்று இவரும் 2025 வரை 🤣
  28. தொடர்ந்து இருங்கள் . இதுவே இங்கு பலரது விருப்பமும் கூட. ஆனால் விலகினால் தயவு செய்து இன்னொரு முகமூடியை ( பெயரை) பயன்படுத்த வேண்டாம்.
  29. பகிர்வுக்கு நன்றி ஏராளன். A.R. Rahman னின் பணிவு, humbleness, தமிழ் / தமிழர்களின் மீதான அக்கறை எல்லாம் பிரம்மிக்க வைக்கின்றது. கோபிநாத் பேட்டி போலில்லாமல், உரையாடலாக இதை கொண்டு சென்றிருப்பதால் ரசிக்க கூடியதாகவுள்ளது.
  30. இது என்ன @Kapithan, @குமாரசாமி அண்ணா.............. குழந்தைப் பிள்ளைகள் போல விட்டுவிட்டுப் போகின்றேன் என்று சொல்கிறீர்கள். வேலை கூடிவிட்டது என்றால், முடியுமான நேரங்களில் வாருங்கள், ப்ளீஸ்......... நீங்களும், மற்றவர்களும் இல்லாமல் என்ன களம்...............🤝. என்னைப் போன்ற ஒரு ப்ரியம் உள்ள உறவை இழக்க உங்களுக்கு எப்படி மனம் வருகின்றதோ............😜.
  31. பாரதிராஜாவின் 'தாஜ்மஹால்' படத்தில் 'குளிருது குளிருது இரு உயிர் குளிருது.............' என்று ஒரு பாடல் இருக்கின்றது. அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமை. இந்தப் பாடலில் '.......சுற்றி எல்லாம் எரிகின்ற போது..................' என்று தொடங்கி சில வரிகள் போகும்............ நீங்கள் சொல்லியிருக்கின்றது தான்........🤣. ஆஸ்திரேலியாவால் கலிஃபோர்னியாவிற்கு வந்த நிலை உங்களுக்கு வரவில்லையே என்றும் ஆறுதல் அடையலாம்.................🤣.
  32. அதென்னண்டு தெரியேல்லை? கன பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை கவனிச்சால்..... உடனை அறிவிச்சதாயும்,உடனை வழக்கு போட்டதாயும் தெரியேல்லை. எல்லாம் சம்பவம் நடந்து 9,10,11,12 வருசத்துக்கு பிறகு போட்ட வழக்குகளாய் கிடக்கு...?!?!?!?!?!???? ☹️ எனக்கெதிராய் நிர்வாகத்திலை வழக்கு போடாமல் காரணம் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோப்பா...😁
  33. கடந்த சில நாட்களாக நுணாவைக் காணம் என்று தேடும் போது வரவில்லை....அதனால் நுணா இண்டைக்கும் யாழ் பக்கம் வராட்டி செய்தி ஏதாவது கொண்டு வந்து எடுத்த இடம் இல்லாமல் போட்டால் வருவார் என்று நினைச்சனான்.எல்லாம் இந்த கலிபோர்ணியா தீயால் தான் தேடினோம்.🖐️
  34. உதயகுமார்,குமாரசாமி இருவரின் கவிதையும் அருமை.
  35. இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடுத்தல் நன்றன்று. அந்த நேரத்தில் அவரது உதட்டில் வந்த பெயர் என்றளவில் மட்டுமே அது பொருத்தமானது. மற்றும் படி எமக்காக பல தியாகங்களை செய்த, தம் சொந்த வாழ்க்கையையே அர்ப்பணித்த தமிழ் உணர்வாளர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் எவரையும் நாம் எமது சொற்களால் காயப் படுத்தி விடக்கூடாது. நன்றி.
  36. அதாவது இந்த ஊடகம் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறேதும் இல்லை. இனியாவது ஆதாரம் என சொல்லி கண்ட கண்ட களிசறைகளை இணைத்து பம்மாத்து விடாதீர்கள். அந்த இணைய தளத்தினர் யாரென தெரியும்.
  37. அதை நீங்கள் அப்போது கடற்புலி சூசையிடம் கேட்டிடுக்க வேண்டும்.
  38. 🤣.................... அண்ணா, உங்களின் பெற்ற மனது பதைபதைத்துக் கொண்டே இருக்கும். எல்லாம் ஓரிரு நாட்களில் சரியாகி விடும்.................. பல வருடங்களின் முன், மகனின் பல்கலைக் கழக முதல் வருடம் பாஸ்டன் நகரில். அந்த வருடம் ஒரு நாள் அடித்த பனியில் அந்த நகரமே மூடப்பட்டது. எதுவுமே வேலை செய்யவில்லை. மகனுடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. நாங்கள் நாட்டின் ஒரு மூலையில், பிள்ளை இன்னொரு மூலையில். இறுதியில் ஒருவாறு அந்தப் பல்கலைக் கழக போலீஸுடன் தொடர்பு கொண்டோம். அவர்கள் அங்கு ஒரு விடுதியில் ஒன்றாக தங்க வைக்கப்பட்டிருந்த பல மாணவர்களில் மகனை கண்டுபிடித்து, எங்களுடன் கதைக்கவிட்டனர். அந்த இடைப்பட்ட நேரத்தில் ஆடித்தான் போனோம்..............
  39. ஆத்தை படுற பாடு இதுக்குள்ள குத்தியன் என்னத்துக்கோ அழுவுறான்.
  40. புதிய வகையான பாம்பு. 😂 🤣
  41. விசாரித்தமைக்கு நன்றி! நான் கிழக்குக் கரையில் (எங்களுக்கு வேற பிரச்சினை, கடுங்குளிர், கூதல் காற்று, ஆனால், பழகிய காலநிலை தான்). மருதர், தியா, நிகே ஆகியோரும் ஆபத்தில்லாத "பனிவனத்தில்" ! யூட் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, ஆனால் நலமாக இருப்பாரென நம்புகிறேன். பகிடி என்னவென்றால், தாயகத்தில் இருக்கும் என் சொந்தக் குடும்ப உறவுகளுக்கு நான் அமெரிக்காவில் எங்கே வசிக்கிறேன் என திக்குத் திசை தெரியாது. ஆனாலும் இன்னும் ஒருவரும் ஒரு கோல் எடுத்து "நீ ஓகேயா?" எனக் கேட்கவில்லை. யாழ் மூலம் பழக்கமான ஏராளன் மட்டும் தான் பனிப்புயல் வந்த போனவாரமே "அண்ணை நீங்கள் ஓகேயா?" என்று செய்தி அனுப்பியிருந்தார். "சட்டை கிழிஞ்சாலும்" யாழில நிண்டு அடிபடுறது இதுக்காகத் தான்😂!
  42. ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா ......... மதுரைவீரன் : எம் . ஜி . ஆர் & பத்மினி .........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.