Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்16Points46790Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்9Points19129Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்9Points14676Posts -
Kadancha
கருத்துக்கள உறவுகள்7Points2935Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/16/25 in Posts
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இதை பொதுவாகத் தான் சொல்கிறேன். எவரையும் குறை சொல்வதற்கு இல்லை. பொங்கலின் அர்த்த குறியீடு முன்பே சொல்லிவிட்டேன். ஒரு விடயத்தை மட்டும் வைத்து பார்க்க முடியாது , தைப்பொங்கலுக்கு பல குறியீடுகள் உள்ளது (சூரியனுக்கு நன்றி, உழவர் நன்றி திருநாள் .. போன்றவை , இங்கே உழவர் என்றே பொதுவாக வழங்கப்பட்டு வந்து இருக்கிறது என்பதையும், விவசாயி, கமக்காரர் .. என்று வழங்கப்படவில்லை என்பதும்). அனால் தமிழரை பொறுத்தவரையில் சமயம் சார்ந்தது அல்ல என்பதற்கு, தைபொங்கல் திதி எப்படி கூடி வருகிறது, வரலாறையும் பார்க்க வேண்டும். உ.ம். ஆக போத்துக்கேயர் வருகை, கிறிஸ்தவ மதம் வலோற்கார மாற்றம், போன்றவை தமிழ் கிறிஸ்தவர்களை பொங்கலில் இருந்து விலத்தியது என்பது உண்மை. (ஆயினும் கிறிஸ்தவம் போர்த்துக்கேயருக்கு முதலே வந்து பரவத் தொடங்கி விட்டது. உ.ம். தமிழ்நாடு பறங்கி மலையில் இருக்கும் Apostle (இயேசுவின் சீடர்) St Thomas இன் சமாதியும், அதன் பின் கட்டப்பட்ட தேவாலயாமும், இவர் இயேசுவை சந்தேகித்ததாக சொல்லப்படுகிறது.) இன்னொரு வளமாக, தமிழரின் தைப்பொங்கல் ( (மகர) சங்கராந்தி) திதி கூடுவது (இது முக்கியம், திதி கணிப்பது சந்திரனின் நிலையை கொண்டு, தமிழருக்கே உரிய சோதிட முறை, வாக்கிய பஞ்சாங்கம் ) சூரியன் மகரத்தில் நுழையும் முதல் நாள், தமிழ் வருடத்தின் படி தை மாதம் 1 ம் நாள். இதை உத்தராணாய காலம் என்பது, அதாவது பூமியை பொறுத்தவரை (பூமியின் சுழற்சியால்) சூரியன் வடக்கு சார்ந்து (வடவரைக் கோள ம்சார்ந்து) நிலைக்கு வர ஆரம்பிப்பது. உத்தராணாய காலம் தமிழ் தைமாதத்தில் இருந்து தமிழ் ஆனி மாதம் வரைக்கும். சூரியன் பூமியை பொறுத்தவரை தென்னரை கோளம் சார்ந்து நிலை எடுப்பதை தட்சிணாய காலம் என்பது, இது தமிழ் ஆடியில் இருந்து தமிழ் மார்கழி வரை. (தமிழரின் சோதிடத்தை பொறுத்தவரை, சூரியன், சந்திரன், இராகு, கேது என்ற கிரகங்களுக்கு வக்கிர பெயர்ச்சி இல்லை, வக்கிர பெயர்சி என்பது புவியின் சார்பாக குறிப்பிட்ட கிரகம் பின்னோக்கி செல்வதான (மாயத்) தோற்றம். இந்த தோற்றம் சூரியன், சந்திரன், இராகு, கேது என்ற கிரகங்களுக்கு ஏற்படாது. ) ஆகவே, பொங்கல் தமிழ் சோதிட (காலக்கணிப்பின்) படி தமிழரின் விழா (அங்கே மதம் இல்லை). இதில் உள்ள முரண்பாடு எண்னென்றால், தமிரின் மற்ற எல்லா சோதிட விடயங்களும் சந்திரனை மையமாக வைத்து (ஆம் தைபொங்கலின் திதி சந்திரனை வைத்து கணிக்கப்படுவது). ஆனால், திதி கூடுவது சூரியன் மகரத்தில் நுழையும் நாள், தமிழ் தை முதல் நாள். எதை சொன்னாலும் சூரிய நிலையயும்ம் கொண்டு கணிப்பை எடுப்பது, ஆரிய அடிப்படையும் கலந்துள்ளது. (தைப்பொங்கலை, அந்த காலத்தை, அகத்தியரின் அறிவுரை படி ) இந்திர விழா என்று சோழர் தொடக்கி கொண்டாடிய காலமும் என்றும் இருக்கிறது (என்று மணிமேகலையில் இருக்கிறது). அது உண்மையாக இருக்க வேண்டும், ஏனெனில் சூரியனின் நிலையை கொண்டு தைபொங்கல் நாள் (இப்போதும்) கணிக்கப்படுவதால். (மற்றது, சோழர் அவர்களை சூரிய வம்சம் என நம்பிக்கையும், இது எனது தனிப்பட்ட முடிவு). மாறாக, சூரியன் மட்டும் தான் அடிப்படை என்றால், மேற்கு நாட்டவர்களும் அதை கொண்டாடி இருக்க வேண்டும், ஏனெனில் மேற்கு சோதிட கணிப்பு, முழுமையாக சூரியனை அடிப்படையாக வைத்து. ஆனால், அப்டி இல்லை. அதனால், தைப்பொங்கல் (மகர சங்கராந்தி) இந்தப் பிராந்தியதுக்கான கலாசார நாளும், கொண்டாட்டமும்.7 points
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
பொங்கல் முற்று முழுதான தமிழ் பண்டிகை என்பதிலும், அதில் மதம் சிறிதளவும் இல்லை என்பதிலும் நான் தெளிவாக இருக்கின்றேன். அதனை என் குடும்பத்துக்கு, என் பிள்ளைகளுக்கு உரத்து சொல்ல ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த முறை பொங்கல் அமைந்தது. காரணம், என் அப்பாவின் தங்கை, எனக்கு மிகவும் பிடித்த மாமி இந்த மாதம் 10 ஆம் திகதி அன்று தன் 74 ஆவது பிறந்த நாள் அன்றே இயற்கை எய்தி விட்டார். அவர் இறந்தமையால், மத நம்பிக்கைகளின் படி, ஒரு நல்ல விடயமும் செய்யக் கூடாது என்று என் அம்மாவில் இருந்து சிலர் அறிவுறுத்தினர். ஆனால் நான், பொங்கல் என்பது தமிழர்களின் நன்றி உணர்வை இயற்கைக்கும், தன் உழவுத் தொழிலுக்கு உதவுகின்றவைக்கும் சொல்வதற்குமான ஒரு நாள் என்பதாலும், தமிழர்களின் பண்டிகை என்பதாலும் (ஆரிய பண்டிகை எதையும் நான் கொண்டாடுவதில்லை) அதில் மதம் ஒரு துளிதானும் இல்லை என்பதாலும் கண்டிப்பாக பொங்குவேன் என்று பொங்கல் வைத்து அதனை முக நூலிலும் பகிர்ந்து இருந்தேன். அதைப் பார்த்து முகம் சுளிக்கவும் சிலர் இருக்கத்தான் செய்தனர்.4 points
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
3 pointsநன்றாக டிக்டொக் ,யூ டியுப் செய்ய தெரியுமா அவருக்கு ......நல்லவனாக இருந்து அரசியல் செய்வது கடினம்😀3 points
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
3 pointsசீமான் நடித்த ஒரு திரைப்படத்தில் அவருக்கு என்ன பொருத்தமான வேடம் கொடுத்திருக்கிறார்கள் பார்ததீர்களா? அந்த டைரக்ருக்கு சீமானைப்கற்றி முன்பே தெரிந்திருக்கிறது.3 points
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
கிராம வாழ்வில் இவ்வாறான தனித்துவம் இருந்து இருக்கலாம். ஆனால் நகர வாழ்வில் எல்லாம் கலந்த ஒன்றே இனி சாத்தியம். இது நல்லது தானே. நீ வேறு நான் வேறு என்றில்லாமல் உனது நல்லது கெட்டதில் நான் உன்னோடு சேர்ந்திருக்கிறேன் என்று கட்டாயப் படுத்தாமல் அவரவராகவே ஒற்றுமை பேணும் எதுவும் நன்றே. கடவுள் நம்பிக்கை அற்ற எனது வீட்டில் மார்கழி மாதத்தில் கிறிஸ்துமஸ் மரமும் நிழலி வீட்டில் பொங்கல் படையலும் உணர்த்துவது இதை தான்.2 points
-
யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்
நல்ல வேளை..பாலத்துக்கு உள்ளை வைத்த நாலைந்து கம்பியையும் இழுக்காமல் விட்டான்கள்2 points
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
2 pointsஇது தேர்தல் ஆணையாளரின் வேலை அல்ல. ஒவ்வொரு வேட்பாளரையும் அவர் துப்பு துலக்கி கொண்டிருக்க முடியாது. வேட்புமனு கொடுப்பது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம். கீழே உள்ள லிங்கில் appendix A யில் உள்ள படிவத்தை நிரப்பி அதோடு ஜேபி கையெழுத்து வைத்து கொடுக்க வேண்டும். தகவல்கள் சரியாயின் வேட்புமனு ஏற்கப்படும். ஒரு எம்பியாக நிற்க அடிப்படை தகுதிகள் என்ன, அவற்றை எப்படி தன்னளவில் பூர்த்தி செய்வதை உறுதி செய்வது என்பது வேட்பாளரின் வேலை. இந்த சின்ன விடயத்தை கூட கிரமமாக செய்யமுடியாதவர்கள் இப்படி வழக்குகளை சந்தித்து பதவி இழப்பார்கள். இதில் சட்டத்திலோ, நடைமுறையிலோ, தேர்தல் ஆணையத்திலோ எந்த தவறும் இல்லை. தவறு முழுக்க அருச்சுனாவில்தான். https://www.srilankalaw.lk/revised-statutes/alphabetical-list-of-statutes/862-parliamentary-elections-act.html தொழில் இருந்தால்தானே நிறுத்த🤣. ——— சட்டத்தில் ஒரு பாரபட்சமும் இல்லை. மிக சுருக்கமாக—- அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றால் தேர்தலில் நிற்க முடியாது. இடை விடுப்பு ஆவது எடுக்க வேண்டும். பல ரீச்சர்கள் இப்படி இடை-விடுப்பு எடுத்து விட்டு போட்டியிட்டனர் என நினைக்கிறேன்.2 points
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
பேராசிரியர் சண்முகதாஸின் ஒரு உரையில் கேட்டிருக்கிறேன். ஜப்பானிலும் பொங்கலை "அறுவடை நாள், நன்றி கூறல்" என்ற நிகழ்வாகக் கொண்டாடுவார்களாம். இந்தப் பண்டிகை koshogatsu என்பார்கள் . ஊரில், 90 களில் யாழ் நகரின் மத்தியில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் பொங்கல் கொண்டாடிய நினைவிருக்கிறது. ஆனால், கத்தோலிக்கர், ஏனைய கிறிஸ்தவர்களின் வீடுகளில் பொங்கலைக் கொண்டாடியதை 90 களில் நான் காணவில்லை. சில தரவுகள், தகவல்களை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீய நோக்கத்திலும் பயன்படுத்தலாம்😂. 1960 களில், கத்தோலிக்க திருச்சபையில் இப்படியான ஒரு சிந்தனை உருவானது: "நாம் உலகம் முழுவதும் பல்வேறு இனங்கள் நாடுகளிடையே பரவி விட்டோம். ஐரோப்பிய மொழியான லத்தீனில் வழிபாடு செய்யும் படி இந்த ஐரோப்பியரல்லாத மக்களைக் கேட்க முடியாது. எனவே, அந்தந்த இனங்கள், நாடுகள், பாரம்பரியங்களின் படி வழிபாடு செய்ய விதிகளை வகுக்க வேண்டும்" இதன் விளவு தான் இரண்டாம் வத்திக்கான் சங்கம். இதன் முடிவில் உருவான மாற்றங்களுள் சில உடனே அமலுக்கு வந்தன. உதாரணமாக, வழிபாட்டு மொழி, கீதங்கள் என்பன உடனே தாய்மொழிக்கு மாற்றப் பட்டன. சில மாற்றங்கள் நடைமுறையாக நீண்ட காலங்கள் எடுத்தன. பொங்கலை கத்தோலிக்க நிறுவனங்கள் கொண்டாடுதல் என்பது இப்படி நீண்ட நாட்களின் பின் அமலான மாற்றம். இது கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்குரிய விளக்கம். இங்கிலாந்து திருச்சபை - தமிழ் நாட்டில் வேரூன்றியிருப்பதால்- அவர்களும் பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். ஆனால், பெந்கோஸ்து, யெஹோவா போன்ற non-denomination இல் இருக்கும் மக்கள் பொங்கல் இன்னும் Paganism என்று தான் பார்ப்பர். இந்த வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளின் வரலாறு தெரியாதோருக்கு, குருடன் யானை பார்த்தது போன்ற "தெளிவு" கிடைக்கும்😎.2 points
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
பொங்கல் என்பது….. Wait for it…..: தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல…. வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இதை பற்றி யாழில் முன்பே எழுதியுள்ளேன். ஜனவரி 13-16 க்கு இடையில் இந்திய துணை கண்டத்தின் கிழக்கு கரையில் இருப்போர் கொண்டாடும் பண்டிகை. அதில் மிகவும் ஸ்பெசலாக கொண்டாடும் கூட்டம் நாம். அவ்வளவுதான். அதில் கூட தமிழ் நாட்டில் பொங்கல் நான்கு நாள் கொண்டாட்டம். எமக்கு ஒருநாள். மாடு வைத்கிருப்போருக்கு 2 நாள். https://www.holidify.com/collections/harvest-festivals-in-india ———— பொங்கல் இயற்கையை வழிபட்டு நன்றி சொல்லும் நாள். சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் இந்த புதிய பைத்தியங்கள் எம்மை பீடிக்க முதல் நாம் இயற்கை வணங்கிகள். கடவுளாக அன்றி எம்மை பாலிக்கும் சக்தியாக இயற்கையை வணக்கிய தத்துவ மார்க்கத்தினர். அணங்குகளும், பேய்களும், சூரனும், நில தெய்வங்களுமே எமது இறை. அதன் தொடர்சியே பொங்கல். இப்படி தனியே தமிழர் திருவிழாவும் இல்லாத, சைவத்துக்கு சம்பந்தமே இல்லாத பொங்கலை - தமிழ்-சைவர் கொண்டாட்டம் என நீங்கள் சுவீகாரம் செய்ய முனைவது அபத்தமானது. ————- எனக்கு தெரிய கிறிஸ்தவர்கள் என் அயலில் கொண்டாடியதில்லை. ஆனால் இங்கே பலர் தம் சொந்த அனுபவத்தை எழுதும் போது அதை நான் எப்படி மறுதலிக்க முடியும்? சில இடங்களில் முன்பே கொண்டாடி இருக்கலாம். சில இடங்களில் புதிதாக கொண்டாட தொடங்கி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பொருட்டா? எது முக்கியம்? நாம் எல்லோரும் தமிழராக உணர்ந்து கொண்டாடும் ஒரு போக்கு வலுப்பெறுகிறது. இன ஒற்றுமைக்கு இது மிக நன்மையானது. இதை வரவேற்கவேண்டியது மட்டுமே நம் கடமை. பெளத்த-சிங்களவன் ஏனைய சிங்களவரை இப்படித்தான் உள்வாங்குவான். என்ன செய்வது வட்டத்தை குறுக்கி, குறுக்கி அழிந்துபோவது இந்த இனத்தின் சாபக்கேடு.2 points
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
2 pointsஅந்த பாடலுக்கு கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், சந்திரகலா நடித்தனர். இப்பாடல் இலங்கை வானொலியால் மட்டுமே பிரபலமாந்து.2 points
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
2 points
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
2 points2 points
- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
🤣..................... இப்படி ஒரு சூடான பொங்கல் திரியில் நான் ஒரு கருத்தைக் கூட எழுதவில்லையே என்ற ஏக்கம் எட்டிப் பார்க்கத் தொடங்க நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள்.....................🤣. பொங்கலுக்கு தமிழ்நாட்டில் ஒரு சந்தையில் சில கோடி ரூபாய்களுக்கு ஆடுகள் விற்பனையானது என்ற செய்தியைப் பார்த்த பின், எந்த மதத்தில் என்றாலும் பரவாயில்லை, ஆனால் அடுத்த ஜென்மம் அந்த ஊரில் தான் பிறக்க வேண்டும் என்று வேண்டியுள்ளேன்...................😜.1 point- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
1 pointஉங்களுடைய சீமான் தனது யேர்மன் ஆதரவாளரை பற்றி கதை விடுகின்ற காணொளியையே பார்த்து சிரித்து முடியவில்லை🤣 இப்போது பொருத்தமான வேடத்தில் சீமான் தோன்றுகின்ற இன்னொரு காணொளியா 🤣1 point- யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
நீங்கள் நல்லஎண்ணத்துடன் இப்படி எழுதுகின்றீர்கள் ..என்னுடைய குறுக்கால் போன புத்தி இப்படி எண்ண வைக்கின்றது.. இதில் பர்மா தேசத்து "ரொகின்கொஇஸ்லாமியர்கள்" வந்திருக்கலாம் எண்டு .. இராணுவத்தினரும் ஊர் மக்களும் புத்த மத வெறியர்களின் செயலைப்பற்றி விவாதிக்க, இஸ்லாமிய அகிம்சாவாதிகள் "ரொகின்கோ அகதிகளை" பொம்மைவெளியில் மறைத்து வைத்திருக்கலாம் ...எண்டு..1 point- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
நாலாம் தடவை சூடு தான், கதை பேச்சு இல்லை ..........................🤣. புதுமணத் தம்பதிகள் Grand Canyonக்கு போன அந்தக் கதையில் வந்தது போல............😜.1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அருமை. இப்படி கிடைக்கும் சந்தர்பத்தில் எல்லாம் கிறிஸ்தவ தமிழர்களை நோண்டுபவர்கள்தான், காலம் மாறி விட்டது, அனுரவின் வரவோடு நாம் பெளத்த-சிங்கள பேரினவாதத்தோடு இசைந்து வாழ வேண்டும் என்றும் புதிய ஸ்வரம் இசைக்கிறார்கள். கூடவே வாழ்ந்து, கொடுமைகளை அனுபவித்து, மத நிறுவனமாகவே போராட்டத்தில் பங்கெடுத்து, மாவீரர்களையும், தளபதிகளையும் தந்த சக தமிழரிடம் காட்டாத நெகிழ்வை - பெளத்தபேரினவாதிகளிடம் காட்டுகிறார்கள். வெட்கக்கேடு!1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இப்படி நீங்கள் நல்லவராக வந்திட்டா எப்படி நாங்க அடுத்த பரம்பரையினருக்கு ராமரை,ஜெசுவை,அல்லாவை,புத்தரை அறிமுகப்படுத்துவது.... எங்கன்ட தோழர் அனுரா சின்ன வயசில நினைத்திருப்பார் தனது கடவுள் மாவோசேதுங் கின் சமாதியை தரிசனம் பண்ண வேணும் எண்டு ...இன்று ஜனாதிபதியாக வந்தவுடன் போய் தரிசிக்கின்றார் ..பொதுவுடமை வாதி....என்ற கொள்கைக்காக ..😀😀1 point- இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசும் உடனடியாக தடைசெய்ய வேண்டும் - தமிழக முதல்வரிடம் அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை
Published By: DIGITAL DESK 2 14 JAN, 2025 | 07:39 PM (நமது நிருபர்) இழுவைமடிப்படகு , சுருக்குவலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசாங்கமும் தடைசெய்வதற்கு உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அயகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதல்வர், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் மூலம் தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் கைது செய்யப்படுகின்றார்கள் என்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ஆனால் அவர்கள் ஏன் கைது செய்யப்படுகின்றார்கள் என்பதை கூறுவதற்கு அவர் மறுதலித்துவிட்டார். எந்தவொரு பிரஜையும் வெளிநாட்டுக்குச் செல்கின்றபோது காரணம் இல்லாது கைது செய்யப்படுவதில்லை. உண்மையில் இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதாலும், சுருக்குவலை, இழுவைமடிப்படகு ஆகிய சட்டவிரோத முறைமைகளை பின்பற்றுவதாலும் தான் கைது செய்யப்படுகின்றார்கள். இவ்வாறு அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி முறைமைகள் மூலமாக நாளைய தலைமுறைக்குச் சொந்தமான வளங்கள் நிறைந்த கடற்பரப்பினையே நாசமாக்கிக் கொண்டுவருகின்றார்கள். இந்தச் செயற்பாட்டுக்கு பெருமளவான தமிழக மீனவர்களே எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலர் தான் அவ்விதமாகச் செயற்படுகின்றார்கள். அவ்வாறு குறிப்பிட்ட சிலர் வளங்கள் நிறைந்த கடற்பரப்பினை நாசமாக்குவதால் பாதிக்கப்படுவது யாரென்று பார்த்தீர்கள் என்றால் வடக்கில் உள்ள தமிழர்கள் தான். அவர்கள் மூன்று தசாப்தமாக போருக்கு முகங்கொடுத்து உயிர்கள், உடைமைகள் என்று அனைத்தையும் இழந்து நின்றவர்கள் தற்போது தான் தங்களுடைய வாழ்க்கையை பொருளாதார ரீதியாக மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். வடக்கு தமிழ் மீனவர்கள் என்னிடத்தில் நேரடியாகவே பல சந்தர்ப்பங்களில், இழுவை மடிப்படகுகள் உட்பட சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்துங்கள் இல்லையென்றால் நாங்கள் கடலில் வீழ்ந்து தான் மரணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். ஆகவே இந்தவிடயம் சம்பந்தமாக நாம் இந்திய உயர்ஸ்தானிகரிடத்தில் எடுத்துரைத்துள்ளோம். தமிழக முதல்வரிடத்திலும் ஒருவிடயத்தினை நாம் கோரிக்கையாக முன்வைக்கின்றோம். அதாவது சட்டவிரேதமான மீன்பிடி முறைமைகளை தடைசெய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மேலும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபவர்கள் தான் கைது செய்யப்படுகின்றாhகள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். தமிழக மீனவர்கள் இந்தியாவின் ஏனைய மாநிலங்களான ஆந்திராவுக்குள்ளோ, குஜராத்துக்குள்ளோ, கேரளாவுக்குள்ளோ செல்லமுடியுமா? இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள்ளோ, சீனக் கடற்பரப்பிற்குள்ளோ செல்ல முடியுமா? இல்லை. ஆனால் இலங்கைக் கடற்பரப்பினையே தான்தோன்றித்தனமாக பயன்படுத்தும் செயற்பாடு எதேச்சதிகாரமாக முன்னெடுக்கப்படுகின்றது. அந்தச் செயற்பாட்டையே நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். சட்டவிரோத மீன்பிடி முறைமைகளான சுருக்குவலை மற்றும் இழுவைமடிப்படகு ஆகியவற்றை தடைசெய்யும் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் தமிழக அரசாங்கமும் அத்தீர்மானத்தினை எடுப்பதோடு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அதில் காணப்படுகின்ற தாமதங்களால் தான் கைதுகள் தொடருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/2038121 point- யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்
பிறகுதான் தெரிஞ்சிருக்கும் பாலத்தையே கம்பி வைக்காமல் கட்டியிருக்கின்றாங்கள் என்று1 point- யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்
அவர்கள் பாலத்துக்கு கீழ போய் அந்தக் கம்பிகளை இழுத்திருந்தால் பாலம் அவர்களுக்கு மேல் இருந்திருக்கும் ........ பிறகெப்படி அந்தக் கம்பிகளைக் கொண்டுபோய் விற்பது . .....! 😂1 point- யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்
கள்வர்கள்… கஸ்ரப்பட்டு களவெடுக்க மாட்டார்கள். நோகாமல்… நொங்கு தின்றுவிட்டு போய்விடுவார்கள். 😂1 point- முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்
அன்று பட்டனத்தார் காலத்தில், இந்த இறுக்கமான சீன உடுப்புகள் வந்திருந்தால்! ஆளைமயக்கும் பெண்களிடம் உள்ள நெளிவு சுளிவுகளை மறைத்து, அது நேரான உலக்கைபோல் அவர்களைக் காண்பித்திருக்கும். பட்டனத்தாரும் “பிறந்த இடத்தையும், கறந்த இடத்தையும் நாடுதே பேதைமட நெஞ்சம்” என்று பாடியிருப்பாரோ.??🤔😂1 point- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
1 point- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
ஊரில் முதியவர்களைப் பார்க்க வேலைக்கு ஆட்கள் இல்லை, சரியான மேசன், தச்சு வேலை தெரிந்தவர்கள் இல்லை, கடைகளில் வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, கட்டட வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு, மருத்துவ உதவியாளார்கள் போதவில்லை. இந்த வேலையெல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்களா? லூசுகள்1 point- யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
யாழில் வித்தியாசமானப் போரட்டமாகத்தெரியலாம் ஆனால் மேலை நாடுகளில் எம்மில் பலர் மொப் வாளியுடன் தான் வாழ்க்கையைத் தொடங்குகினார்கள், ஆனால் இன்று எட்டிப்பிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறார்கள்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointஅன்புத் தம்பி உங்களுக்கு ஜேர்மன் பாசை தெரியுமா. மேலே உள்ளது தரமான…. ரைமிங் பகிடி. மொழி புரியாதவர்களுக்காக…. //வீதி பழுதாகி உள்ளது என்று எச்சரிக்கை பலகை வைக்கப் பட்டுளது. அதற்கு கீழே யாரோ ஒருவர்… “அறிவித்தலுக்கு நன்றி. தயவு செய்து திருத்தி விடுங்கள்” என்று எழுதி விட்டுப் போயுள்ளார். 😂1 point- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
1 point- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
அவ்வளவுக்கு தங்கம் தங்கமான செய்லில் ஈடுபட்டிருக்கின்றார்1 point- முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்
போடடா சிறிலங்கன் ஏயர்லைனில் டிக்கட்டை ,வெளிக்கிட்டா சிறிலங்கா மாதாட்டா.பார் அடா அவையின்ட சீனா உடுப்பை1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
நாங்களும் நத்தார்,ஈஸ்டர்,ஆங்கில புதுவருடம், மற்றும் பல வேற்று மத பண்டிகைகளை கொண்டாடுகின்றோம்.ஆனால் சொந்தம் கொண்டாடவில்லை.அதை தேசியம் என விளிக்கவில்லை. ஏனைய மதத்தில் உள்ள ஆயிரத்தில் பத்து பேர் பொங்கல் பொங்கினால் அதுவே தேசிய உதாரணங்கள் ஆக முடியாது. என் கிறிஸ்தவ நண்பன் சைவ கோவில்களுக்கு போகின்றான் என்பதிற்காக கிறிஸ்தவ சமூகமே அப்படித்தான் என்ற கோட்பாட்டை நிறுவ முடியாது. நான் மட்டக்களப்பில் இருக்கும் போது அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வது வழமை. அதற்காக ஏனைய மதத்தினரும் அங்கே செல்கிறார்கள் என கதை விடப்படாது அல்லவா?1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இல்லை நான் சொன்ன அனைத்து புலம்பெயர் நிகழ்வுகளும் பொங்கல் விழாவாகவே நடைபெறுகிறன. பொங்கல் பொங்குவது கூட நடப்பதுண்டு. வசதி கருதி பொங்கல் வாரநாளில் வந்தால் - அதை வார இறுதியில் கொண்டாடுவார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. அதை தள்ளி வைத்த பொங்கல் என்று வேணுமானால் சொல்லலாம். பொங்கல் சம்பந்தமான விழா அல்ல. உப்பிடி உங்களை போன்றோர் அறளை கதையள் கதச்சதும் கூட முஸ்லிம்கள் தாம் தமிழர் அல்ல சோனகர் என்ற தனி இனம் என பிரிய காரணமாகியது. இப்போ தமிழனாக உணரும் கிறிஸதவரையும் துரத்தி அடியுங்கோ. இப்படியே எல்லாரையும் துரத்தி, துரத்தி, கடைசியா சாவச்சேரி வெள்ளாம் ஆட்கள் மட்டும்தான் தமிழன் எண்டு வந்து நிப்பியள் 🤣.1 point- முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்
அடி மடியிலையே கை வைக்கிறீங்களே.....அதன் சொகம் உங்களுக்கு தெரியுமா 😂 தென்றல் வந்து தீண்டும் போது.. என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது.. என்ன வண்ணமோ நினைப்புல.. வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா.. எண்ணங்களுக்கேத்தபடி.. வண்ணமெல்லாம் மாறுமம்மா.. உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்.. பொன்னம்மா சின்னக் கண்ணே.. தென்றல் வந்து தீண்டும் போது. என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது.. என்ன வண்ணமோ நினைப்புல...1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
"Ignorance breeds fear and hatred" அறிவின்மை என்பது பிரிவினைக்கு ஊற்றாகும் அச்சங்களின் விளை நிலம்! நிறுவனமயமான கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும், உதிரிகளாக திரியும் ஓரக் குழுக்களான கிறிஸ்தவக் குழுக்களுக்குமிடையேயான வேறு பாடுகள் பற்றிய உங்களுடைய "அறிவின்மை" பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது (மேலே இஸ்லாமியர் பற்றி கேள்வி கேட்டவருக்கும் அதுவே பிரச்சினை😎). இது ஏன் உங்களைப் போன்ற சில சைவர்களிடம் மட்டும் இருக்கிறதென எனக்கு விளங்கவில்லை. ஏனெனில், நித்தியின் கூத்துகளைப் பார்த்து இந்துக்களை வேறு மதத்தவர் எடை போடுவதில்லை! சச்சியைப் பார்த்து "இலங்கை பீகார் போல ஆகி விட்டது" என நாம் யாரும் அச்சம் கொள்வதில்லை😂! ஆனால்: மேலே, நிழலி சுட்டிக் காட்டியிருப்பது போல உங்களைப் போல ஏனைய மதங்கள் பற்றிய அறிவின்மையை தங்கள் முடிவுகளுக்கு அடிப்படையாகக் கொள்வோரால், ஈழம் பீகாராக மாற வாய்ப்புகள் இருக்கின்றன.1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
எங்களில் மறவன்புலவு சச்சிதானந்தன் இருப்பது போல் எல்லா இனங்களிலு எல்லா மதங்களிலும் இப்படியான லூசுக் கூட்டங்கள் இருக்கின்றன. இதே போன்று அல்லா தான் ராமன் (இராமர்) என்று சொல்லும் இஸ்லாமிய மதவெறியர்களும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளனர். தம் குறுகிய நலங்களை அடைவதற்காக ஒற்றுமையாக இருக்கும் சமூகங்களிற்கிடையில் பிரிவினைகளை தோற்றுவிக்க முயல்கின்ற அயோக்கியர்கள் இல்லாத இனமோ மதமோ கிடையாது. மாட்டிறைச்சி உண்டதுக்காக முஸ்லிம்களை வெட்டி கொன்ற இந்து சமய வெறியர்களும் இருப்பதும் இந்தியாவில் தான். ஆனால் இப்படியானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு இனத்தையோ தேசத்தையோ எடை போட முடியாது. அவ்வாறு எடை போடுவதும் இவர்களை வைத்துக் கொண்டு இனவாத / மதவாத ரீதியில் நாம் சிந்திப்பதும் இப்படியானவர்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகவே அமையும்.1 point- யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!
ஒவ்வொரு ஊருக்கும், பிரதேசத்திற்கும் என்று சில சிறப்புகள் இருக்கும். சிறு வயதுகளில் இருந்தே ஊருடன் அல்லது பிரதேசத்துடன் சேர்ந்து தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்பவர்கள் ஒரு மீன் குஞ்சு நீந்துவது போல அங்கிருப்பவற்றில் தேர்ந்தவர்கள் ஆகின்றனர். வல்வையில் கடல் நீச்சல், உதைபந்தாட்டம், பட்டம் கட்டுதல், புகைக்குண்டு செய்தல் போன்றன அந்த ஊரின் சிறப்புகள். நான் பதின்ம வயதுகளில் அங்கு இருக்கும் போது, 80ம் ஆண்டுகளில், ஊரில் பெரிய பெரிய படலங்களை கட்டுவது, படலங்களை ஒன்றன் பின் ஒன்றாக தொடுத்து விடுவது, 'லைட் படலம்' ஏற்றுவது என்பன தான் பெரிய முயற்சிகள். இன்று இந்த இளைஞர்கள், அவர்கள் கட்டி ஏற்றும் பட்டங்கள் போன்றே, வேறு ஒரு உயரத்திற்குப் போய்விட்டார்கள்............................❤️. சில பழைய நினைவுகள். என் வீட்டுக்கு பக்கத்து ஒழுங்கையில், தெணியம்பை ஒழுங்கை, இருந்த ஒரு குடும்பம் 25 பட்டங்களை தொடுத்துவிடுவார்கள். முதலில் ஏறும் பட்டம் மிகக் குட்டியாக இருக்கும். அடுத்தது கொஞ்சம் பெரிதாக இருக்கும். இப்படியே 25 பட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வானத்தில் வரிசையாக நிற்கும். இன்னும் அது கண்களை விட்டு மறையவில்லை. கடைசியாக ஏறும் பட்டம் கயிறு போன்ற ஒரு நூலில் தான் ஏற்றப்படும். அதுவே நைலோனாக இருந்தால், கொஞ்சம் அசந்தாலே கையை துண்டாக்கி விட்டுவிடும். குர்லோன் வகை என்றால் கையை வெட்டாது, ஆனாலும் ஒருவராலோ அல்லது இருவராலோ 25 பட்டங்களையும் இழுத்து வைத்துக்கொள்ள முடியாது. அது ஆட்களை இழுத்துக் கொண்டு போய் அடுத்த அடுத்த ஊர்களில் போட்டுவிடும். கப்பி கட்டி, அதனூடு நூலை/கயிற்றை விட்டு, பட்டங்களை பிடிப்பதும் உண்டு. நான் ஒருமுறை எட்டுப் படலங்களை தொடுத்து விட்டுவிட்டு, வீட்டுக் கூரையின் வளை ஒன்றில் துணிகளை சுற்றிவிட்டு, பட்டங்களைக் கட்டி வைத்திருந்தேன். மிகவும் தடித்த நைலோன் நூல். திடீரென்று மேல் காற்று குழம்ப, பட்டங்கள் அதிகமாக அசைய, வீட்டு வளை தூக்கப்பட்டது. அப்படியே பல ஓடுகள் பொலபொலவென்று விழுந்தன. விழுந்த ஓடுகளை விட முதுகில் விழுந்த அடிகள் கூட. மாரிகாலம் வேற. முன்னோடிகளுக்கு முதுகில் அடி விழும் என்பதை அனுபவமாக அறிந்துகொண்ட தருணம் அது. பெரிய பட்டங்களை கமுகம் சலாகையில் கட்டுவோம். ஓரளவான பட்டங்களை மூங்கிலில் கட்டுவோம். ஆகச் சிறியவற்றை ஈர்க்கிலில் கட்டுவோம். மூங்கிலில் கல் மூங்கில், தோல் மூங்கில் என்று இரண்டு வகைகள் அந்த நாட்களில் இருந்தன. ஊரில் வளர்வது கல் மூங்கில். தோல் மூங்கில் கடலில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அதன் விலை அதிகம். விடிய முன்னரே கடற்கரைக்கு ஓடிப் போய் ஏதாவது மூங்கில் மிதந்து வருகின்றதா என்று கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை துலாவிய நாட்களும் உண்டு. இதை எழுத ஆரம்பித்தால் எழுதி முடியாது போலிருக்கின்றது..................❤️.1 point- யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!
பட்டங்கள் செய்வதிலும் அவற்றைப் பறக்க விடுவதிலும் வல்வெட்டித்துறை தேசத்தின் ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்லவேண்டும் . ....... அனைவருக்கும் பாராட்டுக்கள் . .......! 👍1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
ஆயிரமாயிரம் மக்கள் ஈழத்தில் அவதிப்பட அவர்களை விட்டு விட்டு உங்களுக்கு ஹெல்மட் ஹோல் அழைப்பிதழ் அனுப்பி ஜேர்மனிக்கு அழைத்தைப்போல அன்று Jean Chretien அவர்களை அழைத்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்.1 point- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
1 point1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
மாரித்தவளைகளை ஊரிலையே பார்த்து விட்டேன். 😂1 point- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
சமூகவியல் கற்றிருந்தால் இப்படி ஒரு கேள்வி எழுந்திருக்க வாய்ப்பில்லை. சூரியனுக்கு நன்றி கூறுதல் என்பது ஒவ்வொரு நாகரீகங்களிலும் இருந்து வரும் ஒரு பண்பாடு. இன்ரநெற் முழுவதும் இது தொடர்பாக கட்டுரைகள் ஏராளமாக இருக்கின்றன. சாதாரண தேடலுக்கே கிடைக்கும்.1 point- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
வழமை போல் தவறாக விளங்கி விட்டீர்கள். மக்களை,சமூகத்தை அவர்களின் நடவடிக்கைகளை திருத்தியெடுக்கும் மட்டும் ஆயுத முனை அவசியம். அதன் பின் புதிய சந்ததிகள் மாற மாற துப்பாக்கி முனையை சட்டங்களாக மாற்றலாம். இதே கொள்கையால் தான் உலகில் பல நாடுகள் பழமையை அழித்து புதுமையுடன் வாழ்கின்றது. சோம்பேறி இலங்கையில் விவசாயத்தை கூட ஆயுதமுனையில் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.🙂 தலைவர் பிரபாகரன் இருக்கும் மட்டும் சாதிபற்றி வாய்திறக்க பொதுமக்கள் பயந்தார்களா இல்லையா? அது வெற்றிதானே? தொடர்ந்திருந்தால் இன்றிருக்கும் சந்ததிக்கு சாதி ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. அவர் இல்லாத கஷ்டகாலம் 100 வருட பழக்கங்கள் எல்லாம் மீண்டும் தலைவிரித்தாடுகின்றது.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
1 point- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
எம்ஜிஆருக்காக இரண்டு பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியிருக்கின்றார். அதில் ஒன்று இது. நீதிக்குத் தலை வணங்கு திரைப்படத்தில் புலமைப் பித்தன் பாடலுக்கு எம்எஸ்வி இசை அமைத்திருப்பார்.1 point- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
ஆடி வெள்ளி, தேடி உன்னை வசந்த கால நதிகளிலே இரண்டு பாடல்களும் 'அந்தாதி' இலக்கணத்தை பின்பற்றி இயற்றப் பட்ட பாடல்கள் ... அதாவது ஆண் பாடகர் முடிக்கும் வார்த்தையை பயன்படுத்தி பெண் பாடகர் பாட ஆரம்பிப்பார்... இரண்டு பாடல்களும் அது போன்றே புனையப்பட்டவை ஆண் : {வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்} (2) {நீரலைகள் மீதினிலே நெஞ்சிறண்டின் நினைவலைகள்} (2) பெண் : {நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்} (2) பெண்: கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள் ஆண் : {மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்} ** இரண்டு பாடல்களுமே இதே விதத்தில் தான் இயற்றப்பட்டிருக்கும்1 point- 1/12/2003 இலிருந்து 8/09/2004 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புக்கள் - த.சபாரட்ணம்
மார்கழி 8, 2003 கடந்த வாரம் மிகவும் சுவாரசியமான, முக்கியமான விடயங்கள் இலங்கையில் நடந்தேறின. முதலாவது வினோதமான விடயம் கிரிக்கெட் உலகில் வேறு எங்கிலும் இதுவரை நடந்திராதது. சர்வதேச கிரிக்கெட்ட் ஆட்டங்களில் முக்கிய அமைப்பாகக் காணப்படும் எம்.ஸி.ஸி பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்நாட்களில் இலங்கை அணியின் காலி டெஸ்ட் ஆட்டம் மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், சர்வதேசக் கிரிக்கெட் பிரமுகர்கள் வருகைதந்த இவ்வாட்டத்தினைக் கண்டுகளிக்க இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவத்தின் தலைவர் திலங்க சுமதிபால அங்கு பிரசன்னமாகி இருக்கவில்லை என்பதுதான். அவரைத்தேடி நாடு முழுவதும் பொலீஸ் விசாரணையாளர்கள் செயற்பட்டுவரும் நிலையில் அவர் தலைமறைவாகியிருக்கிறார் என்பதுதான் உண்மை. இலங்கையின் வெளியகல்வு, உள்வரவு விதிகளை மீறினார் என்கிற குற்றச்சாட்டில் அவருக்கெதிராக பிடியாணை ஒன்றினை சட்டவாளர் அலுவலகம் நீதிமன்றமூடாக விதித்திருந்தது. மிகவும் பிரபலமான பாதாள உலகக் கொலைக்குழுவின் தலைவனான தம்மிக்க அமரசிங்கவை போலியான கடவுச்சீட்டினூடாக இலங்கையை விட்டுத் தப்பிச் செல்ல திலங்க சுமதிபால உதவினார் என்பதற்காகவே அவர்மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை உரிமைகள் மீதான மீறல் என்று திலங்க சுமதிபால தன்மீதான பிடியாணை குறித்து நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தபோதிலும், அதனை ஏற்கத் தவறிய நீதிமன்றம் இவருக்கெதிரான முடிவினை விரைவில் எடுக்குமாறு சட்டவாளர் திணைக்களத்திடம் கோரியுள்ளது. அதன்படி சட்டவாளர் அலுவலகம் நீதிமன்றிற்கு வழங்கியிருக்கும் அறிவிப்பில் இதுகுறித்து தை மாதம் 8 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் அதுவரையில் சுமதிபால ஒளிந்திருக்க வேண்டும் அல்லது தானாக வந்து சரணடைதல் வேண்டும். சுமதிபாலவிற்கு ஆதரவாக சந்திரிக்கா செயற்படுவதாக் கூறி மக்களிடையே அதிருப்தியொன்று உருவாகி வருகிறது. அத்துடன் ஜனாதிபதிப் பாதுகாப்பு அணியில் இருக்கும் ஒரு பகுதியினர் சுமதிபாலவிற்கு பாதுகாப்பு வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலீஸாரின் நடவடிக்கைகளில் தலையீடுகள் இருப்பதாகக் கூறியே ரணில் அரசிடமிருந்த பாதுகாப்புத்துறையினை சந்திரிக்கா பிடுங்கி எடுத்திருந்தார். மேலும், நாட்டில் குற்றச்செயல்கள் அதிகமாகி வருவதாகவும் அவர் தனது நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்திருந்தார். ஆனால் சண்டே லீடர் வார இறுதிப் பத்திரிக்கை வெளியிட்ட தகவல்களின்படி சந்திரிக்காவினால் பொலீஸ் உட்பட்ட பாதுகாப்புத்துறை கையகப்படுத்தப்பட்ட மூன்று வராங்களில் குற்றச்செயல்கள் குறைவடையவில்லை என்பதனையே காட்டுகின்றன. இக்காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற படுகொலைகளின் எண்ணிக்கையினை வெளியிடாத சண்டே லீடர், இக்காலப்பகுதியில் 69 பாலியல் வன்புணர்வுகளும், 103 கொள்ளைச் சம்பவங்களும், 122 வீடுடைப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறுகிறது. ஆனால் படுகொலைகள் நாள்தோறும் நடைபெற்றே வருகின்றன. கூலிக்குக் கொலை செய்யும் குழுக்களின் எண்ணிக்கை வழமைபோல அதிகரித்தே செல்கிறது. கூலிக்குக் கொலைசெய்வதென்பது மக்களின் நாளாந்த வாழ்வில் வழமையானதாக மாறியிருக்கிறது. நாட்டில் குறைவடையாது நீண்டுசெல்லும் குற்றச்செயல்களைச் சுட்டிக் காட்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், தமது அரசிடமிருந்து பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, ஊடத்துறை என்பனவற்றை சந்திரிக்கா கையக்கப்படுத்தியிருப்பது அரசியல்க் காரணங்களுக்காவன்றி குற்றங்களைத் தடுக்கவல்ல என்று கூறுகின்றனர். ஓரங்கட்டப்பட்டிருக்கும் ஜனாதிபதி எனும் பதவியில் இருக்கும் தன்னை மீளவும் அரசியல் வட்டத்தின் மைய்யத்தில் கொண்டுவந்து நிறுத்துவதற்காகவே சந்திரிக்கா இதனைச் செய்கிறார் என்று அவர்கள் கூறுகின்றனர். ரணிலுக்கு நெருக்கமான இரு பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ண மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் சந்திரிக்காவின் சூழ்ச்சிகளைப் பற்றி நாட்டு மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் நாடுமுழுதும் வலம்வருகின்றனர். இரத்திணபுரியில் இடம்பெற்ற பொதுக்கூட்டாம் ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜித்த சேனாரத்ண, "எமது ஜனாதிபதியைப் பொறுத்தவரை புலிகள் இப்போது நல்லவர்களாக மாறிவிட்டார்கள். பாதுகாப்புத்துறையினை அவர் கைய்யகப்படுத்தியதன் பின்னர் புலிகள் நல்லொழுக்கத்துடன் நடக்கத் தொடங்கிவிட்டார்கள். இதை நான் சொல்லவில்லை, ஜனாதிபதியே சொல்கிறார். அவருக்கு வேறு வழியில்லை, இதனைச் சொல்லியே ஆகவேண்டும். அப்படிச் சொல்லாவிட்டால் அவர் புலிகளுடன் போரிற்குச் செல்லவேண்டும், ஆனால் அவரால் அது முடியாதே!" என்று எள்ளி நகையாடினார்.1 point- 1/12/2003 இலிருந்து 8/09/2004 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புக்கள் - த.சபாரட்ணம்
ரணிலின் அரசைப் பலவீனப்படுத்துவதன் ஊடாக பேச்சுக்களைக் குழப்ப முயன்ற சந்திரிக்கா பட்டேர்னிடம் பேசும்போதும், பின்னர் தனது மாவீரர் தின உரையின் மூலமும் சர்வதேசத்திற்கான செய்தியைக் கூறும்போதும் புலிகள் பேச்சுக்களுக்குத் தயாராக இருப்பதை பிரபாகரன் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு முன்னதாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசனுடனான சந்திப்பின்போதும் "நாளை வேண்டுமானாலும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம்" என்று பிரபாகரன் தமது இயக்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார். பிரபாகரனுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு கொழும்பிற்கு உலங்குவானூர்தியூடாகப் பயம்ணப்படுவதற்கு முன்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய ஹெல்கீஸ்ன் பிரபாகரனின் பேச்சுக்களுக்கான விருப்பினை தெரியப்படுத்தியிருந்தார். "பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது தென்னிலங்கையில் காணப்படும் அரசியல் ஸ்த்திரமின்மைதான்" என்பதை பட்டேர்னிடமும், ஹெல்கீசனிடமும் பிரபாகரன் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். பேச்சுக்களுடன் நேரடியாகத் தொடர்புபடக்கூடிய முக்கிய மூன்று அமைச்சுக்களை ரணில் அரசாங்கத்திடமிருந்து பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டதன் மூலம் ரணிலைப் பலவீனமானவராக, செயற்றிறன் அற்றவராக சர்வதேசத்தின் முன்னால் சந்திரிக்கா நிறுத்தியிருந்தார். ஆனால், இந்த மூன்று அமைச்சுப் பொறுப்புக்களும் தன்வசம் இருந்த ஆறு மாத காலத்தில் ரணில் காத்திரமான நடவடிக்கைகள் எதனையுமே எடுக்கவில்லை, குறிப்பாக பாதுகாப்புத் தொடர்பான விடயங்களில் ரணில் தான் ஒத்துகொண்ட பல விடயங்களை செய்யத் தவறியிருந்தார். சந்திரிக்காவிற்கு விசுவாசமானவர்களாக வலம்வந்த இராணுவத்தளபதியும், கடற்படைத் தளபதியும் ரணில் பேச்சுவார்த்தைகளின்போது ஒத்துக்கொண்ட விடயங்களை செய்ய வெளிப்படையாகவே மறுத்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் என்பபவற்றை முன்னெடுப்பதற்கு அடிப்படையாக தமிழ் மக்களின் வீடுகளில் இருந்தும், பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தனியார் காணிகளில் இருந்தும் இராணுவத்தையோ அல்லது கடற்படையினரையோ விலக்கிக்கொள்ள இத்தளபதிகள் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். தற்போது பாதுகாப்புத் தரப்பின் அதிகாரம் சந்திரிக்காவின் கைகளுக்கு மாறியிருப்பதையடுத்து இராணுவத்தினரினதும் ஏனைய படைகளினதும் பிடிவாதம் இன்னும் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கின்றது. சந்திரிக்காவின் சூழ்ச்சிகளையும், திட்டங்களையும் பிரபாகரன் நன்கு அறிந்திருந்தார். "சமாதானத்திற்கான போர்" எனும் மயக்கம் தரும் சுலோகத்தினூடாக சர்வதேசத்தினை நீண்ட ஏழு ஆண்டுகளாக அவர் ஏமாற்றி வந்திருந்தார். புலிகள் போரிற்குத் தயாராகி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிக்கொண்டே போர் ஒன்றை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையினை அவர் ஏற்படுத்தி வந்திருந்தார். இப்போது அவர் செய்ய முனைவதும் அதையே. ஆனால் தற்போது அவர் தனது சுருதியினை சற்றே மாற்றிக்கொண்டிருக்கிறார். சமாதானத்திற்கான தனது முயற்சிகள் உண்மையானவை என்று கூறும் அதேவேளை பிரபாகரனை நம்பமுடியாது என்று அவர் பேசிவருகிறார். தன்னை ஒரு சமாதானத்தின் தேவதையாக சர்வதேசத்தின் முன்னால் காட்டி, யுத்தநிறுத்தத்திற்கு தான் உண்மையாகவே மதிப்பளிப்பதாகக் கூறிக்கொண்டு, புலிகள் யுத்தநிறுத்தத்தினை மீறும்வகையின் வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் சந்திரிக்காவின் சூழ்ச்சியினை அறிந்துகொண்ட பிரபாகரன் முந்திக்கொண்டார். ரணிலின் அரசைக் கவிழ்த்து, தனது தலைமையில் அரசொன்றினை அமைக்கும் சந்திரிக்காவின் முயற்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியினர் கூட்டத்தில், பாராளுமன்றத்தில் அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்குத் தேவையான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை தனக்குத் தராமைக்காக தனது கட்சி உறுப்பினர்களைக் கடுமையாகச் சந்திரிக்கா கடிந்துகொண்டார். மேலும், சர்வதேசச் சமூகத்திடமிருந்து தன்மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்பதையும் அவர் கணிக்கத் தவறியிருந்தார். சர்வதேசத்தில் சரிந்துவரும் தனது பெயரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சமாதான வேடம் போடவேண்டிய கட்டாயம் சந்திரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேசத்திலிருந்து வருகின்ற விமர்சனத்தையும், அதிருப்தியினையும் சமாளிப்பதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட துரும்புதான் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கப்போகிறேன் எனும் சுலோகம். ரணில் அரசாங்கத்திடம் இருக்கும் அதிகாரங்களைப் பலவீனப்படுத்துவதே சந்திரிக்கா அமைக்க விரும்பும் தேசிய அரசாங்கத்தின் உண்மையான நோக்கம். ஆனால் சந்திரிக்காவின் தேசிய அரசாங்கத்திற்கான அறைகூவலினை முற்றாக நிராகரித்திருக்கும் ரணிலின் அரசாங்கம், முக்கியமான விடயங்கள் தொடர்பாக மக்களின் விருப்பினைக் கேட்டறியலாம் என்று கூறியிருக்கிறது. அவ்விடயங்களாவன, சமாதானப் பேச்சுவார்த்தைகள், பொருளாதார அபிவிருத்தி, தேர்தல் நடைமுறைகள் மற்றும் நல்லாட்சி ஆகியனவாகும். மேலும் மக்களின் விருப்பினை அறிவதே இன்று அவசியமானது என்று கூறியிருக்கும் ரணில் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பது குறித்து நீண்டகால நோக்கில் சிந்திக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். நாட்டு மக்களின் விருப்பினை அறிவதற்கான ஆணைக்குழு ஒன்று சமரவிக்கிரம மற்றும் தித்தவலை ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாணைக்குழுவின் உறுப்பினர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் பிரட்மன் வீரக்கோன், ஜனாதிபதியின் ஆலோசகர் மனோ தித்தவலை மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கருணாரட்ண ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.1 point- 1/12/2003 இலிருந்து 8/09/2004 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புக்கள் - த.சபாரட்ணம்
சமாதான முயற்சிகளுக்கெதிரான சந்திரிக்காவின் செயற்பாடுகளும், பிரபாகரனின் மாவீரர் தின உரையும் கடந்த 46 வருடங்களாக சிங்களத் தலைவர்கள் நடத்திவரும் இத்தெருக்கூத்துக்களை மிக அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருந்தது. லேக் ஹவுஸ் பத்திரிக்கை நிறுவனத்தில் ஒரு நிருபராக 1957 ஆம் ஆண்டு இணைந்துகொண்ட நான், அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் செய்தியாக்கி வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் தமிழ் நாளிதழான தினகரனிலும் பின்னர் டெயிலி நியூஸ் பத்திரிக்கையிலும் செய்தியாளராகக் கடமையாற்றியிருக்கிறேன். மேலும், முடிவற்ற அரசியல் நாடகங்களின் பிரதான கதாப் பாத்திரங்களுடன் நெருங்கிப் பயணிக்கும் அனுபவங்களும் எனக்கு நிறையவே கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அவர்களுடன் நீண்டகாலமாக நெருங்கிப் பயணித்தவன் என்கிற வகையில் அவர்கள் அனைவருக்கும் இருந்த பொதுவான நோக்கம் என்னவெனில், தமிழர்களின் பிரச்சினையினை வைத்துக்கொண்டு தம்மை அரசியலில் உச்சத்திற்குக் கொண்டுவருவதேயன்றி, தமிழர்களுக்கான தீர்வினை எபோதும் வழங்குவது அல்ல என்பதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினை என்னவென்பதுபற்றிய தெளிவான விளக்கங்களோ அல்லது புரிதல்களோ இதுவரையில் சர்வதேசத்தில் வெளிக்கொணரப்படவில்லை. சர்வதேசத்தில் சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைக்கு நீதியான தீர்வைத் தர எத்தனிக்கின்றபோதிலும், தமிழர்கள், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இலட்சியமான தனிநாட்டில் உறுதியாக நிற்கிறார்கள், அதனை இராணுவ வல்லமையினால் அடைய முயற்சிக்கிறார்கள் எனும் மிகத் தவறான புரிதல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். தனது மாவீரர் தின உரையில் சர்வதேசத்தில் விதைக்கப்பட்டிருக்கும் தமிழரின் போராட்டம் தொடர்பான தவறான கற்பிதத்தினை உடைக்கும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் முயன்றிருந்தார். "முடிவற்ற துன்பியல் நாடகமாக தமிழர்களின் பிரச்சினை நீண்டுகொண்டு செல்கிறது. ஒவ்வொருமுறையும் ஆட்சியில் இருக்கும் கட்சி பிரச்சினைக்கான தீர்வினைக் காண முயற்சி செய்கின்ற அதேவேளை, அந்த முயற்சிகளையெல்லாம் தடம்புரளச் செய்துத் தோற்கடிப்பதையே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. இதே வகையான சுழற்சிமுறைச் செயற்பாடுகளை எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது ஆளும்கட்சியில் முன்னர் இருந்தவர்கள் செய்கிறார்கள். சிங்கள அரசத் தலைமைகளால் செய்யப்பட்டு வரும் இவ்வாறான நாடகங்கள் கடந்து 50 வருடங்களாகத் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்த நாடகங்களின் இயக்குநர்கள் இருபிரதான சிங்கள அரசியற் கட்சிகளின் தலைவர்கள் தான். நாடகத்தின் பிரதான கதாப் பாத்திரங்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தபோதிலும், நாடகத்தின் கதை எப்போதும்போல் மாறாது காக்கப்பட்டே வருகிறது. இன்று கொழும்பில் நடந்துவரும் அரசியல்க் கூத்துக்களும் அந்த நாடகத்தின் தொடர்ச்சிதான்". "சிங்களவர்களின் இந்த நாடகத்தில் தமிழர்கள் பகடைக்காய்களாகத் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வருகிறார்கள். சிங்களத் தலைமைகளால் ஒத்துக்கொள்ளப்பட்ட பல சமாதான ஒப்பந்தங்கள் தோற்கடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. தீர்விற்கான முயற்சிகளும், தீர்விற்கான பொதிகளும் தடம்புரளச் செய்யப்பட்டு, கிழித்தெறியப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக தமிழர்களின் இன்னல்கள் முடிவின்றித் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. எமது மக்களின் அவலவாழ்வும் முடிவின்றித் தொடர்கிறது" என்று கூறினார். தற்போதையன ஜனாதிபதி சந்திரிக்காவினால் பாதுகாப்புத்துறை, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் ஊடத்துறை ஆகிய அமைச்சுக்கள் அடாத்தாக ரணில் அரசாங்கத்திடமிருந்து பிடுங்கப்பட்டிருப்பதானது சிங்கள அரசியல்த் தலைமைகள் கடந்த 50 வருடங்களாகச் செய்துவருகின்ற அதே நாடகத்தின் தொடர்ச்சிதான் என்றால் அது மிகையில்லை. புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நாளில் இருந்து அதனை மிக வன்மையாக எதிர்த்துவரும் சந்திரிக்கா, இச்சமாதான ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்றும், ரணில் அரசு புலிகளின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுத்துவிட்டதாகவும், புலிகள் தம்மைப் பலப்படுத்தி மீள போரிற்குள் செல்வதற்கான அவகாசத்தை ரணில் அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றும் கடுமையாக பிரச்சாரம் செய்துவருகிறார். சந்திரிக்காவின் இப்பொய்ப்பிரச்சாரத்திற்கான பதிலை பிரபாகரன் தனது மாவீரர் தினை உரையில் அளித்திருந்தார். "சந்திரிக்கா செய்துவரும் பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை நான் ஐயம் திரிபுற தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எமது விடுதலை அமைப்பின் நம்பகத்தனமையினைக் கேவலப்படுத்தும் முகமாகவும், சமாதானச் செயற்பாடுகளைத் தடம்புரளச் செய்வதற்காகவுமே சந்திரிக்கா இதனைச் செய்கிறார். எமது விடுதலை அமைப்போ அல்லது எமது மக்களோ இன்னுமொரு யுத்தத்தினை விரும்பவில்லை. எமது பிரச்சினைகளை சமாதான வழிமுறைகளில் தீர்த்துக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். சமாதானத்திற்காக நாம் ஆளமான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்". சந்திரிக்காவின் இரண்டாவது குற்றச்சாட்டான ரணில் அரசாங்கம் புலிகளுக்கு தாராளமான விட்டுக்கொடுப்புக்களைச் செய்துவருகிறது என்பதற்குப் பதிலளிக்கையில், "சமாதான முயற்சிகளின் பலனாக தெற்கின் மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் பலன்கள் இதுவரையில் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு வந்து சேரவில்லை" என்று கூறியிருந்தார். ஆனால் சந்திரிக்காவின் இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையிலேயே ரணில் அரசிடமிருந்து முக்கியமான அமைச்சுக்களைப் பறித்தெடுக்கும் தனது சூழ்ச்சிக்கான புறச்சூழலினை ஏற்படுத்துவதற்காகவே முன்வைக்கப்பட்டன என்பதனை பிரபாகரன் நன்கு அறிந்தே இருந்தார். மேலும், நாட்டை மீண்டும் இன்னொரு போருக்குள் இழுத்துவிடுவதற்கான முயற்சிகளில் சந்திரிக்கா ஈடுபட்டு வருகிறார் என்பதனையும் அவர் நன்கு அறிந்திருந்தார். கொழும்பிற்கு அடிக்கடி விஜயம் செய்யும் சர்வதேசப் பிரமுகர்கள், இராஜதந்திரிகளுடனான பேச்சுக்களின்போது புலிகள் இன்னொரு போருக்கான ஆயுதங்களை நாட்டிற்குள் கொண்டுவருகிறார்கள், சிறார்களை இயக்கத்தில் இணைத்து ஆள்ப்பலத்தைப் பெருக்கி வருகிறார்கள் என்று கடுமையான பிரச்சாரத்தை சந்திரிக்கா செய்துவருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சரான கிறிஸ் பட்டேர்ன் அவர்களின் விஜயத்தின்போதும் சந்திரிக்கா இதனை கடுமையாக வலியுறுத்தியிருந்தார். புலிகளை நம்பமுடியாது, அவர்கள் இன்னுமொரு நீண்டபோரிற்குத் தயராகி வருகிறார்கள் என்று சந்திரிக்கா கிறிஸ் பட்டேர்னிடம் தெரிவித்திருந்தார். பிரபாகரனின் 50 ஆவது பிறந்ததினத்தில் அவரைச் சந்தித்த கிறிஸ் பட்டேர்ன் அவரிடம், "நீங்கள் இன்னுமொரு போரிற்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறதே, உண்மையாகவா?" என்று நேரடியாகவே கேட்டிருந்தார். பிரபாகரனுடனான இரு மணிநேர பேச்சுக்களின் பின்னர் கொழும்பு திரும்பிய கிறிஸ் ரணிலுடன் அதுகுறித்துப் பேசும்போது, "என்னுடனான இரு மணிநேர உரையாடலின்போது குறைந்தது ஆறு தடவைகளாவது தாம் மீளவும் யுத்தம் ஒன்றிற்குள் செல்லப்போவதில்லை என்பதை பிரபாகரன் என்னிடம் உறுதிபடக் கூறினார்" என்று தெரிவித்திருந்தார். பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பின்போதும் இதனையே கிறிஸ் தெரிவித்திருந்தார்.1 point- 1/12/2003 இலிருந்து 8/09/2004 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்த குறிப்புக்கள் - த.சபாரட்ணம்
மார்கழி 1, 2003 இலங்கையில் நிகழ்கால நிகழ்வுகள் - பாகம் 1 1956 ஆம் ஆண்டிலிருந்து சிங்களத் தலைவர்கள் நடத்திவருகின்ற இனவாத அரசியலை நேரடியாகத் தரிசித்தவர்களில் இன்று உயிரோடு இருப்பவன் நான் மட்டுமே என்று நினைக்கிறேன். ஆனால், சிங்களத் தலைவர்களால் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட முதலாவது அக்கிரம நாடகத்தினை, அது சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியினைக் கொடுப்பதாக அமைந்திருந்தபோதும் அதனைப் பார்ப்பதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நாடகம் 1 காட்சி 1 நான் பார்க்கும் சந்தர்ப்பத்தினை இழந்ததும், சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியையும், தமிழர்களுக்கு வருத்தத்தினையும் ஒருங்கே கொடுத்திருந்த நிகழ்வு காலி முகத் திடலில் சமஷ்ட்டிக் கட்சியின் அரசியல்த் தலைவர்கள் மீது சிங்கள அரசியல்த் தலைமைகளினால் ஏவிவிடப்பட்ட சிங்களக் காடையர்கள் நடத்திய மிருகத்தனமான தாக்குதலாகும். காலிமுகத்திடலின் முன்னால் அமைந்திருக்கும் பழைய பாராளுமன்றத்தின் முன்னால் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல்த் தலைவர்கள் மீது பண்டாரநாயக்கவினால் ஏவிவிடப்பட்ட காடையர்கள் நடத்திய தாக்குதலில் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்தோட, அதனைத் துணியால் மறைத்துக் கட்டிக்கொண்டே பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார் அமிர்தலிங்கம். அவ்வாறு இரத்தம் தோய்ந்த தலையுடன் அவர் பாராளுமன்றம் நுழையும்போது, "யுத்தத்தின்போது அடைந்த மாண்புமிகு காயங்கள்" என்று கேலியுடன் அமிரை வரவேற்றார் பிரதமர் பண்டாரநாயக்க. ஆனி 5 ஆம் திகதியான அன்று பாராளுமன்றம் கூட்டப்பட்டதன் ஒரே நோக்கம் தனிச் சிங்களச் சட்டத்தினை அமுல்ப்படுத்துவதுதான். பண்டாரநாயக்க நினைத்தவாறே அன்றே அச்சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. காட்சி 2 இரண்டாம் காட்சியாக 1957 ஆம் ஆண்டு, இதே பண்டாரநாயக்கா எனும் சிங்கள இனவாதியும் தமிழர்களின் அன்றைய தலைவரான செல்வநாயகமும் மந்திரிசபை அலுவலகத்திலிருந்து ஒன்றாக இறங்கிவந்து தமக்காகக் காத்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டிருக்கிறோம் என்று கூறியவேளை நானும் அங்கு பிரசன்னமாகியிருந்தேன். காட்சி 3 மூன்றாவது காட்சியாக பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய உப தலைவராக இருந்த ஜெயார் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றமை. காட்சி 4 நான்காவது காட்சியாக பண்டா செல்வா ஒப்பந்தத்தினை எதிர்த்து பெளத்த பிக்குகள் சத்தியாக்கிரகம் இருந்தபோது பண்டா அவர்களின் முன்னே தோன்றி தான் செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினைத் தானே கிழித்தெறிந்ததையும் என்னால் தரிசிக்க முடிந்தது. நாடகம் 2 காட்சி 1 சிங்களத் தலைவர்களின் இரண்டாவது நாடகம் 1960 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அதில் முதலாவது காட்சி பண்டாரநாயக்கவின் மருமகனான பீலிக்ஸ் டயஸ், செல்வநாயகத்தின் அறைக்குள் நுழைந்து, "வருகிற தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்குவீர்களாக இருந்தால், பண்டா செல்வா ஒப்பந்தத்தினை மீளவும் நடைமுறைப்படுத்துவோம்" என்று கோரியது. ஆனால் இதனை செல்வா நிராகரித்தபோது, டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினை தேர்தலில் தோற்கடிப்பதற்காக "செல்வநாயகம் தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சி டட்லிக்கு ஆதரவளிப்பதால், தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப்போகிறார்கள்" என்று பிரச்சாரம் செய்தது அதே சுதந்திரக் கட்சி. காட்சி 2 இந்நாடகத்தில் இரண்டாம் காட்சியில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல்ப் பிரச்சாரத்தின்போது, "செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரித்துத் தமிழர்களுக்குக் கொடுக்கப்போகிறது சுதந்திரக் கட்சி" என்று ஐக்கியதேசியக் கட்சியினர் பேசிவந்தார்கள். காட்சி 3 இந்நாடகத்தின் மூன்றாவது காட்சியில், தேர்தலில் சிறிமா தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றிபெற்ற நிலையில், செல்வநாயகத்துடன் பேசிய பீலிக்ஸ், "உங்களுடன் பேசியவாறு பண்டா செல்வா ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதென்பது சாத்தியமில்லை, ஏனென்றால் நீங்கள் ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு எதிராக நிற்கிறது" என்று கையை விரித்ததுதான். நாடகம் 3 காட்சி 1 டட்லி சேனநாயக்கவும், செல்வநாயகமும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுகிறார்கள். இவ்வொப்பந்தத்தின்படி பிராந்திய சபைகளை அமைப்பதற்கு டட்லியின் அரசு இணங்குகிறது. இதனடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் செல்வநாயகத்தின் சமஷ்ட்டிக் கட்சியும் இடம்பிடிக்கிறது. காட்சி 2 அவ்வருட மே தினப் பேரணியில் கலந்துகொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், அதன் மாக்ஸிஸ்ட் கூட்டாளிகளும் இணைந்து, "டட்லியின் வயிறு முழுவதும் தமிழர்களின் வடையினால் நிரம்பியிருக்கிறது, அதனாலேயே தமிழர்களுக்கு நாட்டை தாரைவார்க்கிறார் அவர்" என்று கூச்சலிட்டுக்கொண்டு சென்றனர். காட்சி 3 1968 ஆம் ஆண்டு செல்வநாயகத்திடம் பேசிய டட்லி, "நான் இணங்கிக்கொண்டவாறு பிராந்திய அதிகார சபைகளை என்னால் தரமுடியாது, சுதந்திரக் கட்சியினரின் எதிர்ப்புப் பலமாக இருக்கிறது" என்று கையை விரிக்கிறார். நாடகம் 4 காட்சி 1 1977 ஆம் ஆண்டு தொண்டைமானின் பிரத்தியேக வாசஸ்த்தலத்தில் அமிர்தலிங்கத்தைச் சந்திக்கும் ஜெயார், தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கப்போவதாக உறுதியளிக்கிறார். காட்சி 2 சமஷ்ட்டி அடிப்படையில் தீர்வொன்றினைத் தாருங்கள் என்று தமிழர்கள் ஜெயவர்த்தனவிடம் இரைஞ்சியபோது அதற்கு பதிலளிக்கும் விதமாக 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தானே உருவாக்கிய திட்டமிட்ட இனக்கொலைகளை கட்டவிழ்த்து விடுகிறார். காட்சி 3 மத்தியிலிருக்கும் அதிகாரங்களில் சிலதை மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் கண்துடைப்பின் மூலம் பகிர்ந்தளிக்கப்போவதாக ஜெயார் பாசாங்கு செய்தபோது, "ஜெயார் தமிழர்களுக்கு நாட்டை விற்கிறார், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்றாலே தனிநாடு என்றுதான் பொருள்" என்று அந்த முயற்சியிற்கெதிராகவும் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி. காட்சி 4 மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குத் தான் தருவதாக உறுதியளித்த நிதியினையோ, அதிகாரங்களையோ ஜெயார் தரமறுக்கிறார் என்று வெளிப்படையாகவே கூறிக்கொண்டு தனது பதவியை இராஜினாமாச் செய்த யாழ்ப்பாண மாவட்ட அபிசிருத்திச் சபையின் தலைவர் நடராஜா. காட்சி 5 இந்திரா காந்தியிடமும், பின்னர் ரஜீவ் காந்தியிடமும்,"தமிழர்கள் கேட்கும் உரிமைகளை என்னால் ஒருபோதும் வழங்கமுடியாது, ஏனென்றால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அதற்கெதிராக பிரச்சாரம் செய்து சிங்கள மக்களை ஒருங்கிணைத்து வருகிறார்கள்" என்று வெளிப்படையாகவே கூறிய ஜெயார். நாடகம் 5 காட்சி 1 தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் என்று இரு பொதிகளை 1997 இலும் பின்னர் 2001 இலும் பாராளுமன்றத்தில் முன்வைக்கிறார் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க. ஆனால் , "தமிழர்களுக்கு நாட்டைத் தாரை வார்க்கிறார் சந்திரிக்கா" என்று பிரச்சாரம் செய்து இரு பொதிகளையும் தோற்கடித்த ஐக்கிய தேசியக் கட்சியினர். காட்சி 2 இன்றைய சூழ்நிலை (மார்கழி 2003). புலிகளுடன் பேச்சுக்களை நடத்தி தீர்வொன்றிற்கு வர முயலும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சிகளை மக்கள் விடுதலை முன்னணி எனும் அதிதீவிர இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்களுடன் இணைந்து தோற்கடிக்கப் பிரச்சாரம் செய்யும் அதே சந்திரிக்கா.1 point - நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.