Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19122
    Posts
  2. vasee

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3314
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    9308
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/26/25 in all areas

  1. நாங்கள் திராவிட தமிழர்கள் அல்ல என்றால் நீங்கள் சீமான் ஆதரவாளர் என்பது என் கருத்தை நீ ஆமோதிக்கும்வரை நீ நசுக்கப்படுவாய் என்பது போன்ற ஏகாதிபத்தியவாத மனநிலை தான். இங்கே புலிகளை சீமான் பயன் படுத்திக் கொள்கிறார் என்று கருணை கொள்ளும் பலரும் புலிகளை மிக மிக கேவலமாக பலவீனப்படுத்தியவரே. எனவே எது நடிப்பு என்பது யாழ் களம் அறியும். எனது கருத்து மற்றும் கணிப்பு தமிழக மக்கள் மற்றும் வாக்காளர்கள் சார்ந்தது மட்டுமே. ஈழத் தமிழர்கள் சார்ந்தது அல்ல. ஈரோடு தேர்தலில் பின் பேசுவோம். நன்றி..
  2. ஏதோ இந்த வரி நன்றாக இருப்பது போல உணர்கின்றேன், உங்கல் எழுத்துக்கள் நாளுக்கு நாள் முன்னேற்றம் காட்டுகிறது, கலை கலைக்காகவே என படித்தவர்களுக்குள் கும்மியடிக்கும் இலக்கிய வட்டத்திற்குள் புகாமல் எங்களை போன்றவர்களை மனதில் வைத்து இதே போலவே தொடர்ந்து எழுதுங்கள்😁.
  3. இந்தியாவிற்கு எதிராகப் போரிட்ட ஒரே ஒரு தமிழன் பிரபாகரன். 🙏
  4. பழையபடி விளங்காத மாதிரி நடிப்பு. தேவையில்லாமல் எம்மை தம் அரசியலில் இழுத்து குறைந்தது 3.5 கோடி பேரை எம் எதிரிகள் என சமைத்தவர் சீமான். 35 இலட்சத்துக்காக 3.5 கோடியை நாம் இழக்க முடியாது. ஆகவேதான் சீமான் எதிர்ப்பு என்பது தவிர்க்கவியலாதது ஆகிறது. தமிழக-ஈழ தமிழர் நல்லுறவு தழைக்க, சீமான் அரசியல்வாழ்வு அஸ்தமிப்பது, இனி இன்றியமையாதது. கீழே கிருபன் ஜி சொல்வதும் இதைத்தான்.
  5. முதலாம் ஆண்டில் கற்கவுள்ள 31 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டது 25/01/2025 அவுஸ்திரேலியா சிட்னி நகரத்தில் வசிக்கும் சுழிபுரம் மத்தி ராசாப்பா மகன் தவவரதராஜலிங்கம் அவர்களின் பேர்த்தியான செல்வி ஆரியா கண்ணன் முதன் முதல் பாடசாலைக்கு இவ்வருடம் செல்கின்றார், அதனை முன்னிட்டு தாயகத்தில் முதல் முதல் பாடசாலை செல்லும் 31 மாணவர்களுக்கு புத்தக பைகளை இன்று வழங்கி உள்ளார்கள். செல்வி ஆரியா கண்ணன் குடும்பத்தினருக்கு 31 பிள்ளைகளின் பெற்றோர் சார்பாக உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இங்கே வருகை தந்த மாணவச் செல்வங்களிற்கும் அவர்களை அழைத்து வந்த பெற்றோருக்கும் எமது நன்றிகள். இந்த நிகழ்விற்கான நன்கொடையை பெற்றுத் தந்த விக்ரோறியன் செந்தில் அண்ணாவிற்கும் புத்தகப் பைகளை தைத்துப் பெற வழிகாட்டிய சின்னையா அன் சன்ஸ் கெனத் ஜீவகுமார் அண்ணாவிற்கும் நியாய விலையில் தைத்து வழங்கிய சகோதரி ஜெனிலா குமரன் அவர்களிற்கும் புத்தகப் பைகளை சரியான நேரத்தில் எடுத்து வந்து தந்த வினோதரன் அவர்களுக்கும் இந்த நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்த நிர்வாகிகளுக்கும் புத்தகப் பைகளை வழங்கி வைத்த விருந்தினர்களுக்கும் உளமார நன்றி கூறுகின்றோம். தம்பிமார் கஜறூபன், மகிந்தன், விஜயறூபன், சிறிசுபாஸ் ஆகியோருக்கும் எமது நிர்வாகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். ஆலோசனைகள் மற்றும் உதவிகளுக்கு தொடர்புகொள்ள +94777775448(WhatsApp, Viber)
  6. நீங்கள் சீமானை எதிர்ப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை, ஆனால் திராவிட புலிகள் எனும் இந்த புரட்டிற்கு நான் எழுதிய பதிலை எதற்கு தேவையில்லாமல் சீமானின் புரட்டினை பதிலாக போடுகிறீர்கள் எனக்கு என ஆரம்பத்திலிருந்து விளங்கவில்லை. முதல் கருத்திலேயே அவர்களுக்குள் உள்ள பிரச்சினை அவர்கள் கூறுவதனடிப்படையில் ஒரு தரப்பிற்கு பிராமணர் பிரச்சினை மறு தரப்பிற்கு வெளி மானிலத்தவர் பிரச்சினை அதனை கூட தெளிவாக எழுதியுள்ளேன். நான் பெரிதாக சீமானை எதிர்த்ததும் இல்லை, திராவிட கட்சியினை ஆதரித்ததும் இல்லை ஆனால் இரு தரப்பும் செய்த நன்மைகளை மட்டுமே குறிப்பிட்டிருக்கலாம். இந்த விடயத்தில் எப்படி என்னை ஒரு தரப்பின் சார்பாக கருத்து தெரிவித்ததாக கருதி சீமானின் புரட்டுக்களை எனக்கு பதிலாக்குகிறீர்கள் என எனக்கு தற்போதும் விளங்கவில்லை. திராவிட புலிகள் என்பது புரட்டு என கூறினால் அதற்கு அர்த்தம் சீமானின் ஆதரவாளன் என்பதாக நீங்கள் அர்த்தம் கொள்வீர்கள் என கருதவில்லை.
  7. மனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும். மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான். பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல. ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜. *********************************************************************************** பாடல் ஒன்று - கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் -------------------------------------------------------------------------- எத்தனை தடவைகள் தான் ஊரின் ஒரு எல்லையிலிருந்து மற்ற எல்லைக்கு நடப்பது. என்னதான் தெருவெங்கும் குழாய் மின்விளக்குகள் பத்து அடிகளுக்கு ஒன்று என்று இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு, அவை பளிச்சென்று பகல் போல எரிந்து கொண்டிருந்தாலும், சூடான தேநீர் கோப்பி மற்றும் குளிரான இனிப்பு பானங்கள் என்று தாராளமாக, இலவசமாகவே, பல இடங்களில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், கால்கள் போதும் போதும் என்று கெஞ்ச ஆரம்பித்திருந்தது. அக்காவின் கால்களின் நிலைமையும் அதுவே தான். ஆனால் அக்காவிற்கு பாடல்கள் மேல் இருக்கும் ஆசை பூமிக்குள் கொதித்து எரிந்து கொண்டிருக்கும் எரிமலை போன்றது. அன்று அது வெளியே வந்து ஆகாயம் வரை பரவிக் கொண்டிருந்தது. பாடல்களை கேட்பதில் மட்டுமே அவரின் கவனம் குவிந்திருந்தது. அந்த இரவில் ஊரின் பிரதான வீதியில் பத்து இசைக்குழுக்கள் பாடிக் கொண்டிருந்தன. இரண்டு மைல்கள் நீண்ட வீதியில் ஓரளவிற்கு சரியான இடைவெளிகள் விட்டு இசைக்குழுக்களின் மேடைகள் இருந்தன. ஒரு இசைக்குழுவின் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் அக்கா, 'சரி வா, அடுத்ததிற்கு போவோம்.............' என்று சொல்லிக் கொண்டே, என் பதிலை எதிர்பார்க்காமலேயே, எழும்பி நடந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். அக்காவிற்கும் எனக்கும் ஒரு வயது தான் இடைவெளி. ஆனால் அக்கா எங்களிருவருக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது போல நடந்துகொள்வார். அவருக்கு எல்லாமே தெரிந்தும் இருந்தது. எனக்கு எதுவுமே தெரியாது என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ ஒரு நசிந்த விரலை கவனமாக பொத்திப் பொத்தி பார்ப்பது போல அக்காவும் அம்மாவும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மண்டைதீவிலிருக்கும் ஒரு சாத்திரியார் தான் வீட்டில் எல்லோருக்கும் குறிப்புகள், ஜென்ம பலன், எழுதி இருந்தார். என்னைத் தவிர மற்ற எல்லோருடைய குறிப்புகளிலும் அவர்கள் ஆஹா, ஓஹோ என்று வருவார்கள் என்று இருந்தது. என்னுடைய குறிப்பு மட்டும் படு மோசமாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் நல்ல குறிப்புகளும், எனக்கு மட்டுமே மோசமாகவும் இருந்தபடியால் வீட்டில் எல்லோரும் எல்லா குறிப்புகளையும் சரியே என்று நம்பியும் இருந்தனர். மண்டைதீவு சாத்திரியார் எழுதிய குறிப்பின் படி நான் கடைசியாக படிக்கும் வகுப்பு பத்தாம் வகுப்புத்தான். அத்துடன் கல்வி முடிந்து விடும் என்று தெளிவாக எழுதி இருந்தார். நான் அந்தக் குறிப்பை பல தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். திருமணம் அந்நிய வழியில் நடக்கும் என்றும் ஜென்ம பலனில் எழுதப்பட்டிருந்தது. அந்நிய வழி என்றால் என்னவென்ற சந்தேகம் எப்போதும் இருந்தது, ஆனால் நான் எவரையும் இது சம்பந்தமாக இன்று வரை விசாரிக்கவில்லை. அக்காவும் நானும் ஊரின் ஒரு எல்லையில் நடந்து கொண்டிருக்கும் இசைக்குழுவின் மேடை போடப்பட்டிருந்த பாடசாலை மைதானத்தின் முன் மீண்டும் வந்து விட்டிருந்தோம். இது நாலாவது தடவை. இதற்கு மேலால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, இங்கேயே இருப்போம் என்று நான் அக்காவிடம் கெஞ்சினேன். அக்கா என்னைக் கவனிக்கவில்லை. அவர் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தார். கிழக்கு மேற்காக நீண்ட மைதானத்தில் மேடை வடக்குப் பக்கமாக அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் மேற்குப் பக்கத்தில் ஒரு வரிசை வீடுகள், அதன் பின்னர் இராணுவ முகாம். மைதானத்தின் வடக்குப் பக்கமாக, மேடையின் பின்னால், பனைமரங்கள், அதன் பின்னால் கடல். தெற்குப் பக்கத்தில் வீதி, அதன் பின்னர் பாடசாலை. அக்கா மைதானத்திற்குள் கால் வைக்காமல் வீதி ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தார். திரும்பி நடந்து விடுவாரோ என்று நான் ஏங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். இராணுவ முகாமில் இருந்து பல இராணுவ வீரர்கள் அங்கங்கே வந்து நின்று இசைக்குழு பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளில் எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வேறு, நாங்கள் வேறு என்றும், எங்களுக்கிடையில் ஏதோ சில அடையாள வித்தியாசங்கள் இருப்பதும் வெளிப்படையாகவே இருந்தன. மேடையின் பின்னால், கொஞ்சம் மேற்குப் பக்கமாக, முன் நின்ற மிக உயர்ந்த சில பனைமரங்களின் முன்னால் மிகப்பெரிய ஒரு போர்டிகோ கட்டப்பட்டிருந்தது. கட் அவுட்டை நாங்கள் போர்டிகோ என்று சொல்வோம். இன்று நடிகர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வைக்கும் கட் அவுட்டுகளை விட என்னுடைய ஊரில் சிறப்பானதும், பெரியதுமான கட் அவுட்டுகளை அன்றே வைப்பார்கள். ஐம்பது அடிகளில் கூட சாதாரணமாக செய்து வைப்பார்கள். எல்லா கட் அவுட்டுகளும் சாமியின் உருவங்களாகவோ அல்லது அழகிய பெண்ணின் உருவங்களாகவோ மட்டுமே இருக்கும். ஆண் உருவங்களில் கட் அவுட் வைப்பதில்லை போல. நான் பார்த்ததில்லை. அந்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் பிரமாண்டமாக இருந்தது. லவனும் குசனும் ஒரு குதிரையை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போன்ற மிக உயர்ந்த ஒரு கட் அவுட். பனைமரங்களிற்கு மேலால் லவனும் குசனும் நின்றார்கள். அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு வெள்ளைக் குதிரை. சீதாப்பிராட்டியின் புத்திரர்களின் அதே அளவு கம்பீரத்துடன் அந்தப் புரவியும் அங்கே நின்று கொண்டிருந்தது. அடுத்த பாடல் 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான். கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..................' என்று அந்த இசைக்குழுவின் அறிவிப்பாளர் அறிவித்தது எதிரொலித்துக் கொண்டிருந்தது. 'சரி............. வா, போய் இருப்பம்...........' என்று அக்கா மைதானத்திற்குள் நடந்தார். நான் அக்காவைப் பின்தொடர்ந்தேன்.
  8. இன்னுமொரு விடயம் நான் இங்கே கொள்ளுவது புலிகள் மீதான “கருணை” அல்ல. புலிகள் 2009 ற்கு பின் இல்லை. சீமான் மட்டுமா? புலத்தில் கூட பலர் அவர்களை வித்துத்தான் வாழ்கிறார்கள். ஆகவே தனியே புலிகளை மட்டும் சீமான் வித்தால் - போய் தொலை சனியனே என கூட விட்டு விடலாம். ஆனால் சீமான் தமிழக மக்களுடனான ஈழதமிழரின் உறவில், எதிர்காலத்தில் நஞ்சை கலக்கிறார். இதற்கு புலிகளுக்கு கண்மூடிதனமான பக்தியை காட்டியவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதல்ல. தன் இனத்தின் எதிர்காலம் மீது அக்கறை உள்ள எந்த ஈழத்தமிழனும் செய்யலாம்.
  9. இது என்ன வகை நடிப்பு என விளங்கவில்லை விசுகர்! உங்கள் சீமான் மீதான அபிமானம் அவர் "புலிகளை, பிரபாகரனை தன் பேச்சுகள் வழியாக தலை மேல் சுமக்கிறார்" என்பதால் இருக்கலாம், இப்படியான பல போலிகளை நீங்கள் சில இடங்களில் ஆதரித்து நின்றிருக்கிறீர்கள் என்பதால் இது எதிர்பார்க்கக் கூடியதே! ஆனால், சீமான் ஏனைய தமிழக கட்சிகள் போல அல்லாமல், ஈழத்தவரையும் பெரும்பாலான தமிழக மக்களையும் பகை மூட்டி, அதன் மூலம் பணமும் , பதவியும், இலவச தேர்தல் விளம்பரமும் தேடுகிறார். "எல்லோரும் எமக்கு வேண்டும்" என்ற உங்கள் காரணம் உண்மையாக இருந்தால், சீமானைக் கண்டிக்கும் தரப்பில் தான் நீங்கள் இருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை. "ஒருவனது வாய்ப் பேச்சுத் தான் முக்கியம், பின்னணி, உள்நோக்கம் பற்றி அக்கறையில்லை" என்று இருக்கும் அளவுக்கு கலிபர் இல்லாதவர் அல்ல நீங்கள். எனவே இது நடிப்புப் போலத் தான் எனக்குப் படுகிறது.
  10. சீமான் நூற்றுக்கு ஒரு சதவீதம் கூட நாகரிகமான தலைவர் என்ற தலைவன் கிடையாது. சாக்கடையில் உழன்ற பன்றி வீட்டுக்குள் வர எத்தனித்தால் வீட்டில் உள்ள அனைவரும் விரட்டி அடிக்கத்தான் பார்ப்பார்கள். அந்த பன்றி தனியாக வந்தாலும் சரி கூட்டமாக வந்தாலும் சரி மிதித்து விரட்டப்படும், இல்லையேல் ஊர் நாறிவிடும்.
  11. சீமானுக்கு,..58 வயது கயல்விழிக்கு 31. வயது கயல்விழியின். அம்மாவின் வயது 52. சீமானின். வயது கயல்வியின். அம்மாவை விட கூட ஆகும். சீமானுக்கும். கயல்விழிக்கும். வயது வித்தியாசம் 27. வருடங்கள். ஆகும் இந்த லட்சணத்தில். பெரியருக்கு வகுப்பு எடுக்கிறார். எனக்கு 68. வயது ஒரு 40. வயது கிடைக்குமா??? என்று தேடுகிறேன். 🤣🤣
  12. எனக்கும் இப்படியான எண்ணம் வந்தது. ரசோதரன் யாழுக்கு கிடைத் பொக்கிசம்.
  13. 1. நீங்கள் கூறிய கருத்து எனக்கு விளங்கவில்லை என்றே எழுதினேன். இப்போ எனக்கு விளங்கும் படி எழுதி உள்ளீர்கள் அதனால் விளங்கி பதில் எழுதுகிறேன். 2. புலிகளை சகல தமிழ் நாட்டு கட்சிகளும் பயன்படுத்தின. எம்ஜிஆர், கருணாநிதி, இராமதாஸ், வைகோ, கடைசியில் 2011 இல் ஜெ கூட பயன்படுத்தினார். அதே போல் புலிகளும் பயன்படுத்தினார்கள். உதாரணமாக இவர்கள் வீடுகளில் பண்ணைகளில் இருந்து கொண்டே எவருக்கும் அறிவிக்காமல் ரஜீவை கொண்டு, இவர்கள் பலரை ஆபத்தில் தள்ளினார்கள். விஜயகாந்த் வீடு கிட்டதட்ட அவரை உள்ளே வைத்து கொழுத்தபட இருந்தது, கருணாநிதி, தேவாரம் (என நினைக்கிறேன்) தலையிட்டு காப்பாற்றினார்கள். தக்க திரிகளில் இவை பற்றியும், வைகோ சொல்லி புலிகள் தன்னை கொல்ல போகிறார்கள் என கருணாநிதி ஆடிய நாடகம் பற்றியும், மனைவி துணைவி தேனீர் தவிப்பு போராட்டம் பற்றியும் எல்லாம் எழுதி இருக்கிறோம், இருக்கிறேன். இவற்றை நீங்கள் மறந்து இருக்கலாம் (செலக்டிவ் அம்னீசியா). மேலே திரியில் கூட புலிகள்-தமிழக கட்சிகள் உறவு ஒன்றியவாழிகள் உறவு (symbiotic relationship) என எழுதி உள்ளேன். ஆனால் ஏனைய கட்சிகள் புலிகளை தமிழ்-அனுதாப வாக்குகளாக பயன்படுத்தினவே ஒழிய, தம் சண்டையில் ஒரு தரப்பாக புலிகளை எவரும் இழுக்கவில்லை. உதாரணமாக - புலிகள் எம்ஜிஆர் நெருக்கம் இருந்த போதும். எம் ஜி ஆரோ, அதிமுகவோ கருணாநிதியை - புலிகளின், ஈழதமிழரின் எதிரி என சொல்லவில்லை. அதே போல் கருணாநிதி - வைகோ பிளவில், கருணாநிதி புலிகளை இழுத்தாலும், வைகோ இழுக்கவில்லை. திருமா-இராமதாஸ் கலவரம் வரை அடிபட்டாலும் - புலிகளை இழுத்ததில்லை. தொடர்சியாக ஜெ - தீய சக்தி என புலிகளை தாக்கிய போதும். பிரபாகரன் vs ஜெ என யாரும் கிளம்பவில்லை. ஏன் என்றால் ஈழ தமிழ்/ புலிகள் தமிழ் நாட்டு கட்சி அரசியலில் கலக்க கூடாது என்ற தெளிவு புலிகளுக்கும், புலி ஆதரவு தமிழக கட்சிகளுக்கும் இருந்தது. ஆனால் - இதை உடைத்தவர் சீமான். எம்மை தேவையில்லாமல் கொண்டு போய் அவர்கள் கட்சி அரசியலில் சேர்தது மட்டும் இல்லாமல், சில புலம்பெயர் வெங்குகளை நேரடியாக தமிழக அரசியலில் கருத்து கூற வைத்து, தீரா பகையை மூட்டியவர் சீமான். இன்னும் இந்த பகையை ஊதி விட்டு கொண்டே இருக்கிறார். இது நிச்சயம் ரோ சொல்லி செய்வதுதான். ஈழ தமிழர் மேற்கு, ரஸ்யா, சீனா எல்லாராலும் கைவிடபட்டாலும் - என்றோ ஒரு நாள் அவர்களுக்காக தமிழ் நாடு எழுந்து நின்றால் - இந்தியாவின் இலங்கை கொள்கை காலி. ஆகவே ஈழதமிழர் - தமிழக மக்கள் இடையே 1983-2009 வரை இருந்த அளவு கூட உறவு இல்லாமல் ஜென்ம பகையை விதைப்பது இந்திய நலனுக்கு இன்றி அமையாதது. இதைத்தான் சீமான் செய்கிறார். இதனால்தான் முத்துகுமார் மர்ம மரணத்தை பற்றி இங்கே எழுதினேன். சீமான் செய்யும் இந்த நச்சு வேலை வேறு எவரும் செய்யாதது. ஆகவேதான் சீமானை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறோம் (றேன்). இதைத்தான் திருப்பி திருப்பி ஒரே கேள்வியை கேட்கிறீர்கள் என எழுதினேன். உண்மையிலேயே விளங்கவில்லையா, அல்லது விளங்காதது போல் நடிக்கிறீர்களா? ஐயா - சீமான் எம்மை அவர்கள் அரசியலில் கொண்டு போய் தேவையில்லாமல் சேர்க்கும் வரை - நாம் சிவனே என்றுதான் இருந்தோம். அவர் சேர்த்தது மட்டும் அன்றி, ஒட்டு மொத்த திராவிட கட்சி, கட்சி சாரா திராவிட கொள்கை அனுதாபிகளை (தமிழக மக்களின் அறுதி பெரும்பான்மை) எமக்கு எதிரிகளாகக்க முயன்ற பின்னர்தான் எதிர்க்க ஆரம்பித்தோம். இப்போதும் நாம் சீமானை எதிர்கிறோமே ஒழிய வேறு எவரையும் ஆதரிப்பதில்லை.
  14. "கால மாற்றத்தில் காணாத புள்ளினம்" "கால மாற்றத்தில் காணாத புள்ளினம் கோலம் வேறாக அழிந்த பண்பாடு உலகம் சுருங்க தழைத்த இணையம் ஓலம் வேண்டாம் உண்மை உணர்வாய்!" "பச்சை வெளிகள் வறண்டு காயுது நதிகள் உடைத்து நாட்டுக்குள் பாயுது வானத்தில் கேட்ட புள்ளுவம் காணோம் வண்ணச் சிறகுகள் பறப்பது மறையுது!" "காற்று கொடூரமாக வானம் வெறுமையாக கருணை குறைவாக கானம் வெளியாக காடுகள் அழிந்து கட்டிடங்கள் தோன்ற கார்மேகம் கூட மாசு படுகுது!" "பறவைகள் வாழ வழி தெரியவில்லை உறவுகள் கூடிக்குலாவ கிளைகள் இல்லை சிறகுகள் விரித்து பறப்பது எங்கே இறப்பதை தவிர முடிவு வேறுண்டா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. 'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர்! - வ.ந.கிரிதரன் - - வ.ந.கிரிதரன் - - 'வைகறை' ரவி ( ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை) - வைகறை பத்திரிகையை வெளியிட்டு வந்தவர் ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை. வைகறைக் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பத்திரிகைகளிலொன்று. அதன் ஆசிரியர்களில் ஒருவராகவுமிருந்தார்.அதன் காரணமாகவே ரவி பொன்னுத்துரை என்றறியப்பட்டவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். நண்பர் ஐங்கரநேரன் பொன்னுத்துரையின் சகோதரர் என்பதைப் பின்னரே அறிந்தேன். அவரது மறைவுச் செய்தியினை முகநூல் கிரி செல்வரத்தினம் அறியத்தந்தார். இரமணியும் தன் முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். எதிர்பாராத இழப்புகளில் ஒன்று ரவி பொன்னுத்துரையின் இழப்பு. அவரது இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள் , நண்பர்கள் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன். ரவி பொன்னுத்துரை சிறந்த புகைப்படக் கலைஞர். அவரது முகநூற் பதிவுகளில் அவர் பகிர்ந்துகொள்ளும் இயற்கையின் வனப்பை வெளிப்பை, உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களே அதற்குச் சான்று. கனடாவில் 'நடு' இதழின்ஐம்பதாவது இதழ் வெளியீட்டு நிகழ்வு நடந்தபோது, நிகழ்வுக் காட்சிகளைப் புகைப்படங்களாக்கிப் பகிர்ந்திருந்தார். எனக்கும் அனுப்பியிருந்தார். சூழலியாளர். சமூகப் பிரக்ஞை மிக்கவர். இத்தருணத்தில் வைகறையில் எனது படைப்புகள் வெளியிட்டதையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.மீண்டும் என் ஆழ்ந்த இரங்கல். என்னைக் கவர்ந்த அவரது முகநூற் பதிவொன்று.. அண்மையில் நான் இரண்டு வாரங்கள் Costa Rica பூர்விக குடிகளுடன் தங்கி வேலை செய்யவேண்டிய ஒரு தேவை இருந்தது. அங்கு மூத்த தலைவர் ஒருவருடன் பேசும் பொழுது அவர் கூறினார்: "நீண்ட காலனித்துவ வரலாறு எங்கள் சமூகத்தின் ஒழுக்கம், அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளங்களை நொருக்கி இருந்தது. எம் சமூகத்தின் பெருமைகளை (sense of community pride) நீர்மூலம் செய்து இருந்தது. அடுத்த அடுத்த தலைமுறைகள் சமூகத்தின் மீதான நம்பிக்கையை இழந்தார்கள். தனது பெருமையை இழந்த சமூகம், ஒரு சமூகமாக திரள்வது சாத்தியம் இல்லாத விடயம். இழந்த பெருமையை எப்படி உருவாக்குவது என்பது பற்றி நாம் சிந்தித்தோம். அந்த பெருமையை மீட்டு எடுத்தோம். அது எமது சமூகத்துக்குள் செய்யவேண்டிய முக்கிய விடயமாக இருந்தது. அது இலகுவாக இருக்கவில்லை. நாம் பிரிந்து இருந்தோம். பிரிக்கபட்டு இருந்தோம். உதாரணமாக எமது பிரதேசத்தில் ஒரு வைத்தியசாலையை நீண்ட போராட்டங்களின் மூலம் Costa Rica அரசு, மற்றும் சில அமைப்புகளின் உதவியுடன் உருவாக்கி இருந்தோம். ஆனால் எங்கள் சமூகத்தில் இருந்து ஒரு நோயாளிகளும் வரவில்லை. அதை காரணம் காட்டி Costa Rica அரசும் தொடச்சியான வளங்களை, வசதிகளை செய்து தர மறுத்தது. நாங்கள் எங்கள் சமூகத்தில் இருந்து சில இளையவர்களை கியூபா அரசின் உதவியில் மருத்துவம் கற்பதற்காக அனுப்பினோம். அவர்களுக்கு சில நிபந்தனைகள் வைத்தோம். படித்து முடிந்தவுடன் எமது வைத்திய சாலையில் குறைந்தது 5 வருடம் வேலை செய்யவேண்டும் என்று. அதில் சிலர் எங்கள் நிபந்தனைகளின்படி மருத்துவ கல்வியை முடித்துவிட்டு எங்கள் பிரதேச வைத்தியசாலைக்கேய் வந்தார்கள். சிலர் இங்கு வரவில்லை. வந்தவர்களால் எமது மக்கள் மெது மெதுவாக எமது பிரதேசத்தில் உள்ள வைத்திய சாலையை நோக்கி வர தொடங்கினார்கள். இன்று இந்த வைத்தியசாலை மேற்கு - பாரம்பரிய வைத்திய முறைகளை உள் அடக்கிய தரமான வைத்தியசாலையாக - எமது மக்கள் நம்பிக்கையுடன் சிகிச்சைக்கு அணுக கூடிய வைத்திய சாலையாக வளர்த்துள்ளது. இப்படி தான் மெது மெதுவாக நாங்கள், எங்கள் பிரதேசத்தை கணிசமான அளவு முன்னகர்த்தி உள்ளோம். பொருளாதார வளங்களை எங்கள் பிரதேசங்களில் உருவாக்கி இருக்கிறோம். இது இன்னும் முழுமையானது இல்லை. ஆனால், மூத்தவர்களாக எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - எங்கள் அடுத்த தலைமுறைகள் பெருமையுடன் மேலும் முன்னேறும் என்று. எம் சமூகத்தின் பெருமையை நாம் மீட்டு எடுத்து இருக்கிறோம். எமது சமூக அரசியல் விடுதலைக்கு எம் சமூகத்தின் பெருமையை மீட்டு எடுப்பது முன் நிபந்தனையாக இருந்தது". https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/8935-2025-01-25-17-48-49
  16. 2015 இல் அமரதாஸ் எழுதிய பதிவு பத்து வருடம் கழிந்தும் அடிப்படை மாறாமல் உள்ளது. ஓ ரசிக்கும் சீமானே… widevisionstudio2025-01-26T21:34:06+00:00 தமிழ்த் திரைப்பட இயக்குநராக அறியப்பட்டு ஈழப் பயணத்திற்குப் பின்னர் ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருக்கும் சீமான் அவர்கள், ஈழப் பயணம் தொடர்பான பொய்களையும் புனைவுத் தகவல்களையும் பொதுவெளியில் அவ்வப்போது பகிர்ந்திருக்கிறார். புனைகதைகளை உருவாக்கிப் பிறர் ரசிக்கும் விதத்தில் நடித்து ரசித்து வெளிப்படுத்துவதில் ‘வல்லவர்’ என்று சீமான் அறியப்படுகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த சேரலாதன் அவர்களால் வன்னிக்கு வரவழைக்கப்பட்டிருந்த சீமான், ‘எல்லாளன்’ திரைப்படக் குழுவினரோடு தங்கவைக்கப்பட்டிருந்தார். சேரலாதனின் ஏற்பாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் பலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மற்றபடி, ‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கத்திற்கும் அவருக்கும் தொடர்பு இருக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கான பயண அனுமதியோடு (Visa) இலங்கை வந்து சில நாட்கள் மட்டுமே வன்னிக்குள் இருந்துவிட்டு, தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் சென்றவர் சீமான். பிறகு, ஒரு மாதம் வன்னியில் இருந்ததாகப் பொதுவெளியிற் பொய் சொல்லியிருக்கிறார். வெள்ளை மேலாடை அணிந்த நிலையில் ஆயுதங்களுடன் சீமான் இருப்பது போன்ற ஒளிப்படங்கள் பரவலாக்கப்பட்டு, அவை ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டபோது பதிவுசெய்யப்பட்டவை என்னும் தவறான ‘தோற்றப்பாடு’ உருவாக்கப்படுகிறது. ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிகழ்ந்துகொண்டிருந்த ஒரு இடத்திற்கு வந்திருந்த சீமானின் விருப்ப வேண்டுகோளுக்கு அமைவாக, அந்த ஒளிப்படங்களை நான் உருவாக்கியிருந்தேன். அப்போது, ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான ஒளிப்படக்கலை சார்ந்த பணிகள் அனைத்தும் எனது பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டன. அத் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு ஒரு நாள் வந்திருந்த சீமான், படப்பிடிப்பு சார்ந்த பயன்பாட்டிற்காக அங்கிருந்த ஆயுதங்களைக் கண்டு ஆவலாதிப்பட்டார். அவற்றோடு தான் இருப்பதுபோல ஒளிப்படங்களை உருவாக்குமாறு வேண்டிக்கொண்டார். அதன் பிறகு, பின்னணியைத் தேர்வுசெய்து அவரை நிறுத்தி வைத்து ஆயுதங்களைப் பிடிக்கும் விதத்தை ‘ஓரளவு’ சரிசெய்து ஒளிப்படங்களை உருவாக்கினேன். அப்போது அங்கு நிகழ்ந்த அங்கதச் சம்பவங்களை இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை. அப்போது அருகில் இருந்த ஒருவர் மூலம், அந்த ஒளிப்படங்களைத் தமிழ்நாட்டில் இருந்து பின்னர் பெற்றுக்கொண்டார் சீமான். எல்லாளன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஸ் அவர்களுடன் இறுதிப் போர் முடியும் தறுவாயில் சூசை அவர்கள் (கடற்புலிகள் பிரிவின் தளபதி) தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். அந்த உரையாடலின் பதிவைக் கேட்டு வாங்கிய சீமான், பொய்யான தகவல்களோடு அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்தியிருக்கிறார். (அதில் சூசை பேசியிருக்கும் விடயங்கள் தனியாக நோக்கப்பட வேண்டியவை.) தான் உறக்கத்தில் இருந்தபோது தனது தொலைபேசியில் சூசையின் அழைப்பு வந்ததாகவும் தனது உதவியாளர் அந்த அழைப்பில் சூசையுடன் உரையாடியதாகவும் ஒரு புனைகதையைக் கட்டிவிட்டிருக்கிறார் சீமான். சந்தோஸ், சீமானின் உதவியாளர் அல்ல. சூசையுடன் அவர் உரையாடியபோது சீமான் அருகிலேயே இருக்கவில்லை. சூசை, சந்தோஸ் ஆகியோருடன் பழகியிருக்கும் என்னால், அந்த உரையாடலின் ‘உண்மைத்தன்மை’ உறுதிசெய்யப்படக்கூடியது. எல்லாளன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஸ், அத் திரைப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். சூசையின் தொலைபேசி உரையாடல், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கையிடல் அல்ல. நெருக்கடிகள் நிறைந்த சூழ்நிலையில் அவர் காயப்பட்டிருந்தபோது தனக்குத் தெரிந்த தமிழ் நாட்டு ‘ஆதரவாளர்கள்’ சிலரது பெயர்களை மட்டும் நினைவுபடுத்திப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த உரையாடல், சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை சார்ந்து (context) புரிந்துகொள்ளப்பட வேண்டியது. சந்தோஸ் வைத்திருந்த உரையாடலின் பதிவைத் தருமாறு கேட்டுப் பெற்றுக்கொண்ட சீமான், அது பற்றிய பொய்யான தகவல்களோடு தன் கட்சி அரசியலுக்கான முதலீடு ஆக்கிக்கொண்டார். கட்சியின் தொடக்க நிகழ்வில் அதை அவர் ஒலிபரப்பியதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களை வலிந்து திணிக்கும் வகையிலான சீமானின் பிரயத்தனங்கள் ஆபத்தானவை. வன்னியில் மட்டுமல்ல, இறுதிப் போர் முடிந்த பிறகு தமிழ்நாட்டிலும் சீமானை நான் சந்தித்திக்க முடிந்தது..ஒரு திரைப்படக் கலைஞராக அறிமுகமாகியிருந்த சீமான், ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருந்தார். அவரது ஈழப் பயணம் பற்றி நான் அறிந்திருந்ததாலோ என்னவோ, ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் அல்லது தயக்கத்துடன் அப்போது அவர் இருந்ததாகத் தோன்றியது. அவர் கேட்ட முதற் கேள்வி ‘அண்ணனுக்கும் (பிரபாகரன்), சேரா வுக்கும் (சேரலாதன்) என்ன நடந்தது?’ என்பதுதான். அவர்கள் ‘தியாகச் சாவு’ அடைந்துவிட்டமை பற்றிச் சொன்னேன். திரு. கொளத்தூர் மணி, திரு. தியாகு போன்றவர்களையும் அக் காலத்தில் நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன். சீமானின் ஈழப் பயணம், அவரது அரசியற் செயற்பாடுகளின் போதாமைகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு திறந்த மடல் எழுதியிருந்தேன். வன்னியில் சீமான் தங்கியிருந்தபோது பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதற்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்து ஈழத்திற்கு வந்து சென்ற சிலர் பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார்கள். அவருடன் சாதாரணமாக நிகழ்த்தப்பட்ட சந்திப்பை மையப்படுத்தி, அரசியல் ரீதியான ஆதாயங்களைப் பெறும் உள்நோக்கத்துடன் கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார் சீமான். நடந்து முடிந்த நிகழ்வுகளைத் திரிபுபடுத்தியும் நடக்காதவற்றைப் புனைந்தும் சீமான் சொல்லியிருப்பவற்றைப் பகுப்பாய்வு செய்து பட்டியலிடுவது சிரமமான காரியம். பல விடயங்களையும் அவர் சிக்கலாக்கி வைத்திருக்கிறார். ஈழப் பயணத்தில் அவரோடு சம்மந்தப்பட்டிருந்த பலர் இப்போது இல்லை. வன்னியில் அவரோடு பழகிய சிலர் அவரது ஆதரவாளர்களாக மாறிப் பொய் சொல்லக்கூடும். அவரது குளறுபடிகளை அறிந்த சிலர் அமைதியாக இருக்கிறார்கள். இக் கட்டுரை சார்ந்த எதிர்வினைகள், அவதூறுகளாகவோ மடைமாற்றக் கருத்துகளாகவோ அல்லாமல் ஆக்கபூர்வமானவையாக வெளிப்படுமாயின் நன்று.. எனக்குத் தெரிந்த விடயங்களையும் நான் சம்மந்தப்பட்டிருந்த நிகழ்வுகளையும் ஒரு சுயாதீன ஊடகராகப் பதிவு செய்வது அவசியம் என்று தோன்றியது. ஈழத்தமிழ்த் தேசியம் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியத்திற்கு மாற்றீடு ஆக முடியாது. ஆனால், இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடுகள் மற்றும் பொதுத் தன்மைகள் விவாதிக்கப்பட வேண்டியவை. சீமானின் சில பேச்சுகளும் நடவடிக்கைகளும், தேசியவாதம் சார்ந்த சிந்தனைகளைத் தமிழ்த் தேசிய அடிப்படைவாதமாக மடைமாற்றும் வகையில் அமைந்துவிடுகின்றன.பொதுவெளியில் அவர் பேசும் சில விடயங்களும் கேள்விகளை எதிர்கொள்ளும் தோரணைகளும் ஒரு அடிப்படைவாதியாக அவரைக் காண்பித்துவிடுகின்றன. அண்மையிற் கூட, ‘தூய இரத்தம்’ பற்றிப் பேசியிருக்கிறார். அடிப்படைவாத மனத்தின் ஆபத்தான குரல் அது. ‘இனத்தூய்மைவாதம்’ சார்ந்த நிலைப்பாடுகள் மானுட விரோதச் செயல்களுக்கு இட்டுச்செல்லக்கூடியவை. தமிழ் நாட்டின் அரசியற் சூழல், ஈழத்தமிழ் அரசியற் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஈழத்தின் போராட்ட இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்த பிரபாகரனை வலிந்து முன்நிறுத்துவதன் மூலம் புதியதொரு அடையாள அரசியலைக் குறுக்கு வழியிற் கட்டமைக்க விழைகிறார் சீமான். சமூகச் சீர்திருத்தவாதி ஈ. வெ. ராமசாமி அவர்களையும் ஏனைய சில அரசியற் கட்சிகளையும் அரசியல் சார்ந்த தலைவர்களையும் எதிர்ப்பதற்கான ஆயுதமாகப் பிரபாகரனைச் சீமான் கட்டமைத்துப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் ஆரோக்கியமானதல்ல.. பிரபாகரனை மகிமைப்படுத்துவதான தோரணையில், அவரைக் கேடயமாக்கிக் கட்சி அரசியற் களத்தில் முன்நிறுத்தும் சீமானுக்குப் பிரபாகரனின் ‘புகழ் வெளிச்சம்’ மட்டுமே இப்போதைய தேவை. மற்றபடி, பிரபாகரனை விமர்சனபூர்வமாக அணுகக்கூடிய திராணியும் நேர்மையும் விடுதலை அரசியல் சார் புரிதலும் சீமானிடம் இல்லை. தமிழ்நாட்டில் பிரபாகரனைப் ‘பணயம்’ வைத்து, அரசியல் ரீதியாகச் சீமான் தொடரக்கூடிய ‘சூதாட்டம்’ கண்டனத்திற்குரியது. ஈ. வெ. ரா. போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளும் பிரபாாகரன் போன்ற போராளிகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. நடைமுறைத் தேவைகளுக்கும் சனநாயக விழுமியங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் அமைவாக, எத்தகைய சித்தாந்தங்களும் மேம்படுத்தப்பட வேண்டியவை. மாற்றுக் கருத்துகளையோ அவதூறுகளையோ கண்டு பதற்றமடையாமல் அறிவுபூர்வமாக எதிர்வினையாற்றுவதன் மூலமே ‘எதிர்ப்பு அரசியல்’ நடைமுறைகளைப் பலப்படுத்த முடியும். தனிமனித வழிபாடு’ மற்றும் ‘தனிமனித அவதூறு’ போன்றவை, மானுட இழி செயல்களாகவே பார்க்கப்பட வேண்டியவை. எத்தகைய விடயங்களும் ஆரோக்கியமான வழிமுறைகளில் விவாதிக்கப்படக்கூடியவை. தனது ஈழப் பயணம் தொடர்பான புனைகதைகளைச் சுயலாப அரசியல் உள்நோக்கத்துடன் இட்டுக்கட்டி வெளிப்படுத்தும் இழி செயலை இனியாவது சீமான் நிறுத்த வேண்டும். தவிர்க்க முடியாத ஒரு அரசியற் சக்தியாகத் தமிழ் நாட்டில் ‘நாம் தமிழர் கட்சி’ உருவாகி வருகிறது. அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொண்டும் அரசியல் நிலைப்பாடுகளைத் திருத்தியமைத்துக்கொண்டும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஆரோக்கியமான வழிமுறைகளில் மேற்கொள்ள முன்வருவாரா? சீமானின் இப்போதைய அதிகபட்ச இலக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவது. அதனால், தமிழ்நாட்டுத் தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் புதுவித நன்மைகள் நடக்குமென்றால் அது வரவேற்கப்படலாம். இந்திய அரசியல் அமைப்பின் விதிகளுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டிய முதலமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு அவரால் என்னவெல்லாம் செய்ய முடியும்? 2015-01-25 அமரதாஸ் இவை, ‘எல்லாளன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்கள். https://widevisionstudio.com/archives/3812?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0isTEPYSOPsx80PY_CUOgdyqft-okNG13REK0hbGfwJnt77nIVS4wy5vw_aem_Niv3yqN7HZJetZhNUOIRig
  17. மன்னிக்க வேண்டு அண்ணை. என்னை பொறுத்தமட்டில் கருணா, கேபி, போல ஒரு விசம்தான் சீமான். இந்த மூவரினையும், அவர்களின் ஆதரவாளர் முன்வைக்கும் கருத்த்தையும் எதிர்ப்பதில் எந்த சமரசமும், எல்லையும் எனக்கு இல்லை.
  18. வடக்கு அபிவிருத்தி..தேசிய ஒற்றுமை ...மாகாண சபையை பற்றியும் சொல்லுங்கோ... நீங்கள் என்னத்தைசெய்தாலும் சீனாவின் நண்பர்கள் அவர்கள்
  19. சந்திப்பின் நோக்கம் என்ன? கழுத்தறுப்புத்தானே,..😁 அந்தக் கூழ் முட்டையை அரவணைத்து சும்மை நிரந்தரமாக வெளியேற்றுவதுதான் நோக்கம்.
  20. மொழி பெயர்ப்பு ; இலங்கை இந்தியாவின் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது.; நீ என்ன விட்டுகினு ஓடிட முடியாது. புரியுதா? . 😉 இந்தியாவும் இலங்கையும் சக ஜனநாயக நாடுகள் மாத்திரமல்ல. நாங்கள் நமது பன்முகத்தன்மை மற்றும் முனைப்புடமை ஆகியவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம். நாங்கள் நாகரிகம் மிக்க சகாக்கள். எங்கள் வரலாறு, மொழி, மதம், நெறிமுறைகளை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்கின்றோம்.; நாங்களும் நீங்களும் ஒன்னுக்கு ஒன்னா ரிக்கனும். புரிஞ்சுக்கோ 😡 புவியியல் ரீதியிலான நெருக்கம் எங்களை இயற்கையான பங்காளிகளாக மாற்றியுள்ளது. அதேவேளை அருகில் இருப்பதால் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏனைய நாட்டின் நலன்கள் குறித்த உணர்வை கொண்டிருப்பது அவசியமாகிறது.; நீ என்ன செஞ்சாலும் உன்னை ஒருத்தனும் தள்ளிக்கீனு போக முடியாது. 😁 மேலும், ஒப்பிட முடியாத தன்னிச்சையுடன் மூன்றாம் தரப்பின் அழுத்தங்களால் பாதிக்கப்படாமல் நாம் ஒருவரையொருவர் ஆதரிக்கவேண்டும்.; நீ யாரையும் வைச்சீக்கோ, ஆனா என்னை விட்டுப்புட்டு இன்னா ஒருத்தன கலியாணம் கட்டிக்க ப்புடாது. 🙏 இந்தியா இலங்கையின் நம்பகமான சகா என்பதை இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. இயற்கை பேரிடர்களாக இருக்கலாம், கடலில் ஏற்படும் விபத்துக்களாக இருக்கலாம், கொவிட் பெருந்தொற்றாக இருக்கலாம் அல்லது சமீபத்தைய பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம்... எதுவாக இருந்தாலும், இந்தியா முதலாவது நாடாக இலங்கைக்கு உதவ விரைந்து முன்வந்துள்ளது.; நீ எத்தீனு தடவ மாதவி கிட்ட போனாலும் நா உன்ன கூடையில வைச்சு காவிக்கீனு திரிவேன். புரிஞ்சுதா,.😍
  21. இரண்டு தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பு வர வேற்கப்பட வேண்டிய சந்திப்பு
  22. சீமான் பொய்யன், கபடன், ஏமாற்றுகாரன், வாயால் வடைசுடுபவன், புளுகன். அவனை ஓரம்கட்டுவோம், ஓரம் கட்டுவதால் யாருக்கு இலாபம்?? ஓரம் கட்டிவிட்டு தமிழினத்தைப் பாதுகாக்கும் ஒரு தலைவரைக் கொண்டுவருவோம். அவர் யார்????? தெலுங்கனா? மலையாளியா? கன்னடனா? கர்னாடகனா? யார் அவர்?? நிச்சயம் அவர் ஒரு தமிழராக இருப்பார் என்பதில் தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் நம்பிக்கை இல்லை.
  23. நன்றி நொச்சி மிகவும் சரியான விளக்கம் ... அடுத்த தேர்தலில் இவர்கள் இனவாதத்தை கையில் எடுத்தாலும் எடுப்பார்கள் . பொருளாதார பிரச்சனை திசைமாற்ற இப்படியான கைதுகள் தேவை.என்ற "உங்களது மையின்ட் வோயிஸ்" எங்களுக்கும் கேட்குது
  24. தேங்காயின் விலைகூடிய காரணத்தால் "பொல் சம்பல்" சாப்பிடுவதை தவிருங்கள் என ஜெ.வி.பி தோழர்(பிரதி அமைச்சர்) அறிவுரை சொல்கின்றார் ...பொல் சம்பலும் பாணும் தான் ஒர் ஏழையின் தேசிய உணவு ...அதை தவிருங்கள் என கம்னியூஸ்ட்கள் பாடம் எடுக்கின்றனர் .. பக்கா இடதுசாரிகள் ...அமைச்சர் சந்திரசேகரை பார்த்தாலே தெரிகின்றது...வடமாகாண சபையில் ஆளுனர் பதவி ஏற்கும் பொழுது விபூதி சந்தனத்தை தவிர்த்த அமைச்சர் ,இன்று அவை அவரின் நெற்றியை அலங்கரிக்கின்றது ...சிவப்பு சேர்ட் உடன் நின்ற தோழர்கள் இன்று சுரிதார்(ஆண்கள் அணியும்) அணிகின்றார் கலர் கலராக....சிங்கள தோழர்களும் சலைத்தவர்கள் அல்ல..
  25. இந்திய வரலாற்றில் இது என்றுமே மறைக்கப்பட முடியாத மிகப் பெரிய இழிவு. சிங்களம் என்றோ ஒருநாள் இதற்காகவே பிரபாகரனைக் கெளரவிக்கும்.
  26. யார் கோசானா? அவர் இல்லை என்றால் பரமும் இல்லை, பரையும் இல்லை ஐயா!🧐
  27. கோசான் அவர்களுக்கு லைக்போடும் எல்லை முடிந்திருக்கலாம். லைக்குக்கு எல்லை போடக் கூடாது. அந்தவகையில் சாடிநிற்க நான் உங்கள் கட்சி.😌 எல்லைச் சண்டை யாழ்வாசிகளுக்கு மட்டுமே உரித்தானது. களம், யாழ் என்றாலும்! அதில் பங்குபோட முடியாது!!.🧐
  28. களத்தை விட்டு நான் எங்கையா போனேன், பூமர் அங்கிள்? உங்கள் ஊர் பயணக் கதை முதல், ஒவ்வொருவர் பதிவையும் பார்த்துக் கொண்டு தானே இருநதேன். பிளேன் ஏறினா, டயற்கோக் கேட்டமா, ஜஸ் வாங்கினமா, அடிச்சமா.... மப்பீல சாப்பிட்டு படுத்தமா எண்டு இருக்க வேணும். ரீ குடிக்கிறன் எண்டு, பின்னால போய் கடலை போடக்கூடாது. 😎 தமிழக அரசியலில் இருந்து, லீவ் எடுத்து, இலங்கை தேர்தல் நேரத்தில் மட்டும் ஆஜராகி, போட்டியில் பங்கு பற்றி, லீவை முடித்து திரும்பியதையும் பார்த்தேன். ஆக… இங்கின தான் சுத்திக் கிட்டிருந்தேன்! 🤗🤪😜
  29. இன்றுவரை இந்த பெயர் மாற்றத்துக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று மர்மமாகவே இருக்கிறது. இதுவரை சகல அரசியல்வாதிகளும் பெயர் சொல்லக் கூடியவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  30. முன்பு ஒரு செய்தி படித்த ஞாபகம், அமெரிக்கர்கள் தெருவில் போகிற பாம்பைப் பிடித்து பைக்கற்றில் போட்டுவிட்டு அது கடிக்கக் குய்யோ முறையோ என்று கத்துவார்களாம்.🕺 அமெரிக்கர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா? என்று அந்த உருசிய மங்கை காட்டியுள்ளார், அவ்வளவுதான்.💃🏼
  31. திண்ணை பத்தி கேட்டா, நிழலி கடுப்பாகிறார், my lord. 🤗 நிக்கிற திரியை திண்ணையாக்கிட்டு போய்க் கொண்டே இருப்பம்!😂🤣
  32. சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய் இது தலைப்பு. இதற்கான பதிவோ தற்போது தடம்மாறி அமெரிக்கன் மதில் பாய்வதில் வந்து நிற்கிறது. இதுவும் மாற்றம் கண்டு, சீமானின் வரவு தமிழர்களுக்கு எழுச்சி என்றும் மாறுமோ தெரியவில்லை.🤔
  33. அட நம்ம இங்க தானே லிவின்ஸ்டன்🤣 @Nathamuni கேட்டுகோங்க…செவ்வியன் IT காரர். நான் IT ல “சுத்தம்” எண்டுறது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறன்🤣.
  34. ஹாஹா மன்னிப்பெல்லாம் எதற்கு. இங்கு பலரை போல் நானும் முகமூடிக்கு பின்னால் இருந்து எழுதுபவன் தான். சில மாதங்களுக்கு முன் இறுதி யுத்த நிகழ்வுகள் தொடர்பான விடயங்களை தேடி படிக்கும் போது யாழ் தளத்தின் அறிமுகம் கிட்டியது அவ்வளவே, எனக்கு இத்தளத்தின் பங்காற்றிய பங்காற்றுகிற உறவுகளுக்கு நேரடி தொடர்பில்லை. முன்னால் இருந்ததாக கூறப்படுபவரின் ஐடி என்ன? தெரிந்துக்கொள்ள ஆர்வமாய்யிருக்கிறது.
  35. இலங்கை தமிழன் நெல் உற்பத்தியில் சாதனை 🔥| Climate action challenge | Safe food | Srilanka🇱🇰 நெற்பயிர்செய்கை தொடர்பான காணொளி. தேய்வடைந்துசெல்லும் துறையாக கமம் செய்தல் மாறிவரும் சூழலில் இளைய தலைமுறை இப்படிவருவதை அறிவோம். வரவேற்போம். நன்றி- யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  36. வெளிநாடுகளில் பெற்ற ஆயுத தளபாடங்களும், புலிகளிடம் கைப்பற்றி ஆயுத தளபாடங்களும், தமிழரிடம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமும், மகாவம்சமும் புத்தர்சிலைகளும் உள்ளன. இவற்றைப் பாதுகாக்கப் போதுமான படையினரும் உள்ளனர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  37. இது இலங்கைத் தமிழன்..... பெரும்பன்மை இனம் சாப்பிடும் மீனின் பிரச்சனை... எனக்கு விளங்கியது சாமியர்🤣
  38. "சித்திர செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" 78 இல் வந்த பாட்டு.அந்தநேரம் வெளிநாடு போகவென்று யாழும் கொழும்புமாக அலைந்த நேரம். மனைவி வீட்டுக்கு போய் எல்லோருக்கும் சேர்த்து போய்வருகிறேன் என்று சொல்ல போவேன். சிலவேளைகளில் இந்த பாட்டை ஒலிபரப்புவார்கள். எனக்காகவே ஒலிபரப்புவது போல ஒரு பிரமை.
  39. உங்கள் விருப்பம்
  40. பன்னாடை என்பது தவறாக பயனில் உள்ளது என்பதனால் வழமையாக பயன்படுத்தும் அந்த பதத்தினை பயன்படுத்தவில்லை என்றே குறிப்பிட்டேன். இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகளை தமது சுயநலத்திற்கு பயன்படுத்தும் ஒரு தரப்பின் மீது குற்றம் சாட்டும் நீங்களும் மற்றவர்களும் ஏன் மறுதரப்பு புலிகளை தமது நலனுக்கு பயன்படுத்தும் போது அது தொடர்பாக ஒரு சிறு கருத்து கூட தெரிவிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விடயம். எனது முதல் கருத்தில் அனைவரும் புலிகளை தமது சுய இலாபத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என பொதுவாக கூறியது (அது ஒரு சாதாரணமாக கூறிய விடயம் மட்டுமே) உங்களுக்கு எனோ ஏற்கமுடியாமல் இருந்துள்ளது, இந்த விடயங்களை சாதாரணமாக காடந்து போகவேண்டும் என நான் கருதுவது உங்களுக்கு ஏற்கமுடியாமல் இருக்கலாம், அதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் எனக்கு உடன்பாடாக இருக்கவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள எந்தகட்சியினாலும் இலங்கையில் உள்ள தமிழர்க்கு தீர்வு ஏற்படாது, அவர்களுக்குள்ளிருக்கும் பிரச்சினையில் நாங்கள் புகுந்து ஒரு தரப்பினை ஆதரிப்பது அல்லது ஒரு தரப்பினை எதிர்ப்பது தேவையில்லாத விடயம். ஆனால் எந்த தரப்பின் பொய்ப்பரப்புரையினையும் எதிர்ப்பதில் தப்பில்லை, அதில் ஒரு தரப்பிற்கு மட்டும் பாரபட்சம் காட்டக்கூடாது.
  41. 👍............... இப்படித்தான் சொல்லுகின்றார்கள், கிருபன். ஆனால், ஏதோ பிரச்சனையாகி விட்டதே என்று எல்லா வாடிக்கையாளர்களும் கதறிக் கொண்டிருக்கும் போது, என்னவென்று விழுந்தடித்து போய் பார்த்தால், சில சர்வர்களில் சிபியு 90 வீதத்திற்கும் மேலே போய் கடைசி மூச்சை அவை விட்டுக் கொண்டிருக்கும். இது என்ன கோலம் என்று உள்ளே தோண்டிக் கொண்டு போனல், மூல காரணம் அநேகமாக ஒரு long running SQL/Database query ஆக இருக்கும். 28 வருடங்களாக இங்கு வேலை செய்கின்றேன், எந்த தொழில்நுட்பம் வந்தும் இது மட்டும் மாறவே இல்லை...............
  42. தகவலுக்கு மிகவும் நன்றி ஏராளன். இலங்கை போகிறவர்களுக்கு இது மிகவும் தேவையான பதிவு.
  43. கவிதை அருமை..👍 பழையன கழிதலும் புதியன புகுதலும் என சொல்வார்கள். ஆனால் நேற்றைய வாழ்க்கைதான் இன்றும் எல்லோர்க்கும் தொடர்கின்றது 😃
  44. சிரித்துக் கொண்டே வரவேற்போம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.