Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்18Points88798Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்10Points14707Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்8Points33330Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்7Points20342Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/15/25 in Posts
-
"கிளீன்......"
6 pointsஅண்மையில் தேசிய பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலை கடித தாளில் (லெட்டர் ஹெட்டில்)பாழைய மாணவ சங்கங்களுக்கு "கிளீன் (விரும்பிய பாடசாலையின் பெயரை போடவும்) கல்லூரி"என்ற திட்டத்தை அமுல் படுத்த பணம் தேவை என கடிதம் அனுப்பியிருந்தார் . நல்ல விடயம் கேட்ட தொகை கிட்டதட்ட 3லட்சம் ... கிளீன் சிறிலங்கா என ஜனாதிபதி பாடம் நடத்த இவர்கள் புலம்பெயர் மக்களிடம் கிளீன் பாடசாலை என வெளிக்கிட்டினம் ..சிங்கள பாடசாலையிலும் இது நடை பெறுகிறது. தேசியம் பேசுகிறார்கள், தேசிய ஒற்றுமை என கூவுகின்றனர்.பாடசாலைகளுக்கு குப்பை தொட்டி வாங்குவதற்கு ஏன் புலம் பெயர் தமிழ் தேசிய மக்களிடம் கை ஏந்துகின்றனர் இந்த இடதுசாரிகள்...விகாரை கட்டுவதற்கு ,,இராணுவ கட்டமைப்புக்கு என பணத்தை வாரி இறைக்கின்றனர் ஏன் குப்பை தொட்டிக்கு பணம் கொடுக்க முடியவில்லை... நாங்கள் படிக்கும்/பாடசாலைக்கு செல்லும் பொழுதும் குப்பைகள் இருக்கவில்லையா அல்லது குப்பைகளுக்குள் இருந்து படித்து முன்னுக்கு வந்தார்களா அன்றைய மாணவர்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.சிறிலங்கா மக்களின் எதிர் பார்ப்பு தான் என்ன ? ஜனாதிபதி வெளிநாடுகளிடம் கை ஏந்துகிறார் நாட்டு மக்களுக்கு அன்றாட தேவைகளான அரிசி,தேங்காய்,முட்டை போன்றவற்றை வழங்க, .பாடசாலை அதிபர்கள் பழைய மாணவ சங்கத்திடம் கை ஏந்துகின்றனர் குப்பைகளை முகாமைத்துவம் பண்ணுவதற்காக. வெளிநாடுகளை போல தங்கள் நாடு முன்னுக்கு வர வேணும் என நினைப்பதில் தப்பு இல்லை ஆனால் அதை சொந்த மண்ணில் உற்பத்தி யாகும் பொருட்களில் இருந்து செய்ய முன்வர வேணும் ... ஒரு பக்கம் கிளீன் சிறிலங்கா ,என சொல்லி கொண்டு பிளாஸ்டிக் பொருட்களினால் ஆன குப்பை தொட்டிகள்,பிளாஸ்டிக் பைகள் போன்ற வற்றை உபயோகப்படுத்த முயற்சிக்கின்றனர். எமது தாயக பகுதிகளில் பனை ஒலைகள் தாராளமாக கிடைக்கின்றது ஏன் இதை பயன்படுத்தி பெரிய கடகம் போன்ற குப்பை தொட்டியை உருவாக்க முடியாது ?வர்ணம் பூசி வேரு படுத்தி காட்டலாம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஏன் சணல் நூலினால் பின்னப்பட்ட சாக்குகளை உபயோக படுத்த முடியாது.. பனை மட்டைகளை பயன் படுத்தி பெரிய கூடுகளை அமைக்கலாம் .. இப் பொருட்கள் இலகுவில் உக்கி போகும் .. அட்வைஸ் பண்ணுவது இலகுவானது அதை நடை முறையில் நாங்களே(அட்வைஸ் பண்ணும் நானே) செய்வது கடினம் .6 points
-
யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி
இன்று பிரதமர் வருகை தந்த தொல்புரம் மேடை வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமேடை. பிரதமர் வருகை தந்தபோது சிறிது நேரம் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.5 points
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
வலம்புரி…. தங்கும் விடுதிகளும் வைத்துள்ளார்கள் என நினைக்கின்றேன். தங்கும் விடுதியும், மேலே சம்பவம் நடந்த உணவகமும் ஒன்றா அல்லது வேறானவையா எனத் தெரியவில்லை. ஆனால்… பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தரமான விடுதிகளில் இதனையும் குறிப்பிடுகின்றார்கள். நானும் பிள்ளைகள் குடும்பமாக இந்த உணவகத்திற்கு போயிருந்தேன்.நல்ல சாப்பாடு நன்றாக கவனித்தார்கள்.நிறைய பேர் நிறைய சாப்பாடு எடுத்தபடியால் ஏதாவது சுத்துமாத்து விட்டிருப்பார்களோ என்று மருமகனிடம் பில்லைக் கொடுத்தேன்.எதிலும் தவறு இல்லை என்றார். வான் சாரதி தான் அமைதியாக குடும்பமாக இருந்து சாப்பிடக் கூடிய இடம் என்றார். பாவம் அவர் பக்கத்து மேசையில் போய் உட்காந்தார். தம்பி அமெரிக்காவில நானும் ரைவர் தான் என்று கட்டாயப்படுத்தி கூட்டியாந்தேன். ஆரம்பத்தில் சமூகவலைத் தளங்கள் இவர் பின்னால் திரிந்து நன்றாக பணம் பண்ணினார்கள். இப்போ டாக்ரர் தனியே யுரியூப் தொடங்கியபடியால் கொஞ்சம் கடுப்பில் இருக்கிறார்கள்.3 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
3 points
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
3 points- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
கவனமா போய் வா மச்சான் ! புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.20172 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்று இரவு யாழ் களம் இயங்காது என்று அறிவித்தல் வருகின்றது. இன்னமும் ஒரு நாளே இருப்பதால் விரைந்து உங்கள் பதில்களைத் தாருங்கள்.. பஸ்ஸைத் தவறவிட்டால் பிடிக்கமுடியாது! @goshan_che @பிரபா @Ahasthiyan, @கந்தப்பு @kalyani @theeya @கறுப்பி @P.S.பிரபா @முதல்வன் @நீர்வேலியான் @ரதி நமக்கும் மண்டையில் இருக்கும் முடியைப் பிச்சுக்கிற வேலைதான்.. அதற்குள் இருந்து கொஞ்சம் தப்பத்தான் இந்தப் போட்டியை வைக்கின்றேன்..!2 points- The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்!
2 pointsபடம் நன்றாக உள்ளது, நன்றி! prime video இலே இதே போல ஒரு ஒரு பிரிந்து வாழும் தந்தைக்கும் மகளுக்குமிடையேயான கதை I want to talk இதற்கு தமிழில் உப தலைப்பும் உள்ளது. அதில் அந்த சிறிய குழந்தை தனக்கு நெருக்கமான பெரியவர்களின் பேச்சை உண்மை என கருதி தந்தை பொய் கூறுகிறார் என உறுதியாக கருதியிருக்கும் போது உண்மை தாக்கும் போது குழந்தை காட்டும் அந்த அதிர்ச்சியான உணர்வினை வெளிப்படுத்தும் அழகு, மிக சிறப்பான நடிப்பு, உங்களை இந்த படமும் கவரும் என கருதுகிறேன். அந்த குழந்தைக்கு தந்தை நெருக்கமானவர் அல்ல.2 points- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 3 களமுனைக்கு மிக அருகில் புலிகளின் இராணுவ மருத்துவர்கள் ! களமுனைக்கு மிக அருகில் கொண்டுபோய் பிரதான இராணுவமருத்துவமனையை நிர்வகித்த விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்கள். 2007 இன் ஆரம்ப காலம், மன்னார் களமுனையில் கட்டளைத்தளபதியாக இருந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் உடல்நலம் குறைந்த போது பின்நகர்த்தப்பட்டு கட்டளைத் தளபதியாக கேணல் பானு அவர்கள் நியமிக்கப்பட்டார். அந்த நாட்கள் பல இடர்களை சுமந்து நின்றது தமிழீழ எல்லை வேலி. சிங்களப்படை புதிது புதிதாக களமுனைகளை திறந்து கொண்டிருந்தது. எங்கும் ஓய்வற்ற சண்டை. வெடியோசைகளும் இரத்த சிதறல்களும். வீரச்சாவுகளும் காயங்கள் நிறைந்தன. அதைப்போலவே மன்னார் களமுனையும் அதிர்ந்தது. அந்த பிரதேசம் எங்கும் எம் படையணிகள் வீழ்ந்து விதையாகிக் கொண்டிருந்தாலும் நிமிர்ந்து நின்று எதிரிக்கும் இழப்புக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் நிலை சொல்ல முடியாதது. மிக கொடூரமான சிங்களத்தின் தாக்குதல்களால் தம் உடல், உயிர் , உடமைகளை இழந்து ஏதிலிகளாக்கப் பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளமடுவில் இருந்த அரச மருத்துவமனை தான் மாந்தை மேற்கு பிரதேசத்தின் பிரதான மருத்துவ சிகிச்சைக்கான இடம். அந்த மருத்துவமனையில் தமிழீழ சுகாதாரசேவை பணிப்பாளர் மருத்துவர் சுஜந்தன் அவர்களின் பணிப்பில் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்களான தமிழ்நேசன் ( பின் நாள் ஒன்றில் சுதந்திரபுரம் பகுதியில் லெப் கேணல் தமிழ்நேசனாக வீரச்சாவு) , தணிகை, இசைவாணன் (இறுதி சண்டையின் போது லெப் கேணல் இசைவாணனாக வீரச்சாவு ) , காந்தன்( இறுதி சண்டையில் லெப் கேணல் காந்தனாக வீரச்சாவு) , வளர்பிறை ( பின் நாட்களில் இராணுவ மருத்துவராக அம்பாறைக்குச் சென்று கடமை செய்த போது லெப் கேணல் வளர்பிறையாக வீரச்சாவு) ஆகியோர் கடமையில் இருக்கிறார்கள். அங்கு செறிந்து வாழ்ந்து வந்த மக்களுக்கான பிரதான மருத்துவமனையாக இருந்த அந்த அரசினர் மருத்துவ மனையில் அரசமருத்துவரான வைத்திய கலாநிதி விஜயன் அவர்கள் கடமையில் இருந்தார். அவரோடு போராளி மருத்துவர்களும் கடமையில் இருந்தார்கள். இங்கே தமிழீழ சுகாதாரப்பிரிவு பற்றி நாம் சிறு விடயத்தை பார்க்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவத்துறை இரு பிரதான பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒன்று மருத்துவப்பிரிவு. இது பிரதானமாக போராளிகளுக்கான மருத்துவம் மற்றும் சிகிச்சைகளை வழங்கும் பிரதான செயற்பாட்டை கொண்டதாகும் இரண்டாவதாக தமிழீழ சுகாதாரப்பிரிவு. இது முற்றுமுழுதாக மக்களுக்கான மருத்துவ சேவையை அடிப்படையாக கொண்டது. இதற்குள் பெரும்பாலான செயற்பாட்டளர்கள் மருத்துவப்பிரிவு போராளிகளே. இவ்வாறான பெரும் பிரிவுகளைக் கொண்ட மருத்துவத்துறை அப்போது ரேகா அவர்களின் தமிழீழ பொறுப்புக்குள் இயக்கம் கொண்டிருந்தது. இது இவ்வாறு இருக்க, தமிழீழ மருத்துவப்பிரிவின் பொறுப்பாளர் ரேகா அவர்களின் அனுமதியோடு தமிழீழ சுகாதாரப்பிரிவு பணிப்பாளர் சுஜந்தன் போராளி மருத்துவர்களை மன்னார் பிரதேசத்தில் மக்கள் பணிக்காக அனுப்பி இருந்தார். அவர்கள் அங்கே கடமையில் இருந்த அரசமருத்துவருடன் இணைந்து மருத்துவப்பணி செய்தனர். ஆனாலும் அங்கே தீவிரசிகிச்சைகளை வழங்கவோ அல்லது சத்திரசிகிச்சைகள் செய்யக்கூடிய சத்திரசிகிச்சை ஏற்பாடுகளோ இல்லை. அவை எதுவும் அரசால் பள்ளமடு மருத்துவமனைக்கு கொடுக்கப்படவில்லை. அவை அனைத்தையும் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவும் மருத்துவர்களுமே ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்கள் போராளிகளுக்கான சிகிச்சைகள் மட்டுமன்றி மக்களுக்கான சிகிச்சையையும் சிறப்பாகவே கொடுத்தார்கள். மக்களுக்காக சாகத் துணிந்து நின்ற ஒவ்வொரு போராளிகள் அவர்கள். மக்கள் அழியக் கூடாது என்ற பெரும் இலக்கிற்காக இரவு பகல் தூக்கமற்று கிடக்கிறார்கள். இந்த நிலையில் திடீர் என்று ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, உடனடியாக களமுனையில் இருந்து பாதுகாப்பான பகுதியில் மருத்துவமனையை நகர்த்துமாறு மன்னார் களமுனை கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் பானு அவர்களிடம் இருந்து கட்டளை கிடைக்கிறது. மக்கள் மருத்துவமனையாக இருந்த பள்ளமடு மருத்துவமனையை அண்டி இருந்த மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து போய்விட, முற்றுமுழுவதுமாக இராணுவ மருத்துவமனையாக இயங்கத் தொடங்கியது. பள்ளமடு மருத்துவமனை. அப்போது பாதுகாப்பு பிரதேசமாக கொள்ளக்கூடிய பகுதிகளாக இருந்த இடங்கள் என்பதை விட இலுப்பக்கடவை மற்றும் வெள்ளாங்குளம் ஆகிய இடங்களில் தான் அரச மருத்துவமனைகள் இருந்தன. அதனால் அவை முன்மொழியப்பட்டன. ஆனால் அந்த இருபகுதிகளுக்கும் காயமடைந்த போராளிகளையோ அல்லது மக்களையோ நகர்த்துவது என்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. ஏனெனில் அங்கே பயணிக்கும் இராணுவ வாகனங்களை குறி வைத்து LRRP என்று கூறப்படும் ஆழ ஊடுருவும் படையணியின் சிங்கள சிப்பாய்கள் கிளைமோர் தாக்குதல்களை செய்து கொண்டிருந்தனர். மேலும் 20 கிலோமீட்டர்கள் கடந்து களமுனையில் இருந்து காயப்பட்ட போராளிகளை அல்லது மக்களை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அவர்களுக்கு உயிரிழப்புக்கள் அதிகமாகும் சந்தர்ப்பங்கள் அதிகம். இந்த நிலையில் லெப் கேணல் தமிழ்நேசன் வீரச்சாவடைந்த நிலையில், நான்கு இராணுவ மருத்துவர்களும் ஆலோசித்து முடிவுக்கு வர முடியாது தவித்துக் கொண்டிருந்த போது, போராளி மருத்துவர் லெப் கேணல் காந்தன் ” நாங்கள் பெரியமடுவில கொஸ்பிட்டல போடுவம். அங்க போட்டால் லைன்ல மெயினுக்கு என்று பெடியள விடத் தேவையில்ல களமருத்துவ போராளிகளிடம் இருந்து நாங்களே பெடியள நேரே பொறுப்பெடுத்து காயங்கள காப்பாற்றலாம்” என்கிறார். அந்த யோசினையிலும் பாரதூரமான சிக்கல்கள் இருந்தன. களமுனைக்கு மிக அருகில் மருத்துவமனை அமைந்திருப்பதால் அதுவும் எதிரியின் ஐந்து இஞ்சி மற்றும் ஆட்லறி செல் தாக்குதல் இலக்குக்கு உள்ளாகலாம் அல்லது தாக்குதல் வலயத்துக்குள் இருப்பதால் இருப்பிடத்தை அறிந்து திடீர் என்று மருத்துவமனை கூட கைப்பற்றப்படலாம் என்ற பல பிரச்சனைகள் கண்முன்னே எழுந்தன. ஆனாலும் போராளி மருத்துவர்கள் முடிவெடுத்துக் கொள்கிறார்கள். கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பானு அவர்களுக்கு விடயத்தை தெரிவிக்கின்றனர். அவர் முற்றுமுழுதாக அந்த திட்டத்தை மறுக்கிறார். மருத்துவர்கள் நிலமையை தெளிவு படுத்தி விளக்கம் கொடுக்கிறார்கள் நாம் இரகசியத்தையும், மருத்துவமனையை சுற்றி நல்ல பாதுகாப்பையும் போட்டால் எந்தப் பிரச்சனையும் வராது என்ற உண்மையை உணர வைக்கின்றனர் காயப்பட்ட போராளிகளை வாகனங்களில் கொண்டு வந்து இறக்காது கொஞ்சம் தூரத்திலையே இறக்கி தூக்கி வருவது எதிரியின் கண்காணிப்பை உடைத்தெறியக் கூடியது என்ற உண்மைகளை எல்லாம் புரிந்து கொண்டாலும் பிரிகேடியர் பானு அவர்களால் மனம் உவந்து அனுமதி கொடுக்க முடியவில்லை எதாவது ஒன்று நடந்து மருத்துவமனை தாக்கப்பட்டால் அத்தனை போராளிகளையும் இழக்க நேரும் என்ற உண்மையும் ஒரு பக்கத்தில் உதைத்தெறிந்தது. எதாவது ஒன்று நடந்தால் நீங்கள் நால்வரும் தான் ஆளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் இதற்கு நான் அனுமதி தர முடியாது. ஆனால் இது உங்கள் முடிவு மட்டுமே என் முடிவல்ல உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். அந்த வார்த்தை மட்டுமே அனுமதி கிடைத்து விட்டதுக்கான அறிகுறியாக கருதியவர்கள் பள்ளமடுவில் இருந்து பெரியமடுவிற்கு மருத்துவமனையை நகர்த்துகிறார்கள். சண்டையின் போக்கு சற்று மாறுபட்டது. பின்நகர்ந்து கொண்டிருந்த எம் படையணிகள் நின்று நிலைத்து சண்டையிட்டன. வழமையை விட எதிரி பல விழுக்காடு அதிகமான இழப்புக்களை சந்திக்க நேர்ந்தது. எதிரிக்கு பேரிடிகளைக் கொடுத்து சண்டையிட்டன எமது சண்டையணிகள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலான காலப்பகுதி அந்த களமுனையை உடைத்து முன்நகர முடியாது திகைத்தது சிங்களம். மருத்துவமனை அங்கே போடப்பட்ட சில நாட்களில் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களை சந்தித்த பிரிகேடியர் பானு ” நீங்கள் சொன்னது சரிதான்டாப்பா… நீங்கள் பக்கத்தில நிக்கிறியள் என்றவுடனே பெடியளுக்கு நம்பிக்கை இன்னும் வந்திட்டுது எந்த தயக்கமும் இன்று சண்டை பிடிக்கிறாங்கள். உங்களுக்கு என்ன வேணும் என்றாலும் கேளுங்கோடாப்பா உடனே ஒழுங்கு படுத்துறன் ஆள் உங்கள பற்றி கதைச்சவர் பிரச்சனை இல்லைடாப்பா பெடியள கவனமா பாருங்கோ…” அவர் கொடுத்த உற்சாகம் இராணுவ மருத்துவர்களுக்கு ஊக்கத்தை தந்தது. பொதுவாக இராணுவ மருத்துவமனைகள் களமுனையை விட்டு பின்நகர்த்தப்படுவதே வழமை ஆனால் எம் போராளி மருத்துவர்களான தணிகை, காந்தன், இசைவாணன் மற்றும் வளர்பிறை ஆகியோர் பின்னால் கொண்டு செல்லாது களமுனைக்கு அருகில் முன்னோக்கி கொண்டு சென்று போராளிகளின் மனதில் நம்பிக்கையை விதைத்தது மட்டுமல்லாது சண்டையின் போக்கையே மாற்றினார்கள்… சண்டை அணிகளுக்கு வழங்கல் அணியும் மருத்துவ அணியும் அருகில் இருந்து இரு விநியோகமும் தடை இன்றி கிடைக்குமானால் சிறு சோர்வு கூட வராது. தமக்கான ரவைகளும் மருத்துவமும் அருகில் இருக்கின்றது என்ற நம்பிக்கை பிறக்கும் இதை அவர்கள் செய்து காட்டினார்கள். அவர்களது மனவுறுதிக்கு இன்னும் பலம் சேர்க்கும் மருத்துவத் துறையின் அருகாமை. அதுவும் இயக்கத்தின் மூத்த இராணுவ மருத்துவர்கள் களமுனையில் நிற்பதால் காயப்பட்டவர்கள் நிட்சயமாக காப்பாற்றப்படுவார்கள் என்ற மனவுணர்ச்சி அவர்களுக்கு இன்னும் புது வேகத்தை கொடுத்தது. படையணிகள் தீவிரத் தாக்குதலில் மடிந்து கொண்டிருந்தது சிங்களபடையணிகள். அப்போதும் எம் மருத்துவப்பிரிவின் பொறுப்பாளர் ரேகா அவர்கள் ஓயாது எம்மை வழி நடத்துவார் ஆனால் இப்போது அவரது இருப்பு வினாக்குறியோடு நீளும் அதே நேரம் என்னோட கூட நின்ற மற்ற மருத்துவர்கள் நால்வரும் பின் நாட்களில் விதையாக வீழ்ந்து லெப் கேணல் இசைவாணன், லெப் கேணல் காந்தன் , லெப் கேணல் வளர்பிறை, லெப் கேணல் தமிழ்நேசன் என்ற நிலையோடு மண்ணுக்குள் வாழ்கிறார்கள். அவர் விழிகள் கலங்கி உதட்டில் இருந்து விம்மல் ஒலி வருகிறது. சரி கவி சந்திப்போம் என்ற வார்த்தையோடு நிறைவு பெறுகிறது எனக்கும் போராளி மருத்துவர் தணிகைக்குமான இன்றைய தொலைபேசி உரையாடல் நன்றி தணிகையண்ண…. கவிமகன்.இ 24.11.20172 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குமாரசாமி குதித்து விட்டார் ........ நிர்வாகத்துக்கு நன்றி . ..........! 💐 கிருபன் எனது 30 வது கேள்விக்கு விடை kagiso rabada என்று சேர்த்து விடுங்கள்........! 😁2 points- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
நியாயம்… எனக்கு இந்தத் தாடியை தெரியாது. இப்படிப் பட்ட கீழ்த்தரமான குணநலன் உள்ளவர்கள் எனது நண்பர் வட்டத்தில் இல்லை. ஜேர்மனியில் வசித்தும்…. சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் மற்றவனின் மேசையில் போய் காவாலித்தனம் செய்யும் தாடிக்கும், நான்கு போட்டு அனுப்பியிருக்கலாம். தாடியருக்கு விழ வேண்டிய அடி, மாறி அவரின் சாரதிக்கு விழுந்திட்டுது போலுள்ளது.2 points- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
நான் இங்கே கதைப்பது உணவகத்தில். நடந்தது சரியா ???அல்லது பிழையா ??? என்பதை மட்டும் தான் அவரின் மனைவிகளின். எண்ணிக்கை பற்றியே வேறு இடங்களில் நடந்து கொண்டது பற்றியே அல்ல ஒவ்வொருவரும் உணவகங்களில் நிம்மதியாக மகிழ்ச்சியாக உணவு சாப்பிட்டு வரமுடியும். அர்ச்சுனா இந்த ரவுடிகளுடன். கதைக்கவில்லை இந்த ரவுடிகள் தான் முதலில் சேஷ்டை விட்டார்கள் அதற்கு அர்ச்சுனா நடநநு கொண்ட விதம் மிகவும் சரியானது ஆகும் குறிப்பு,...ஜேர்மனியில் சாப்பிட உணவகளுக்கு போனால் நல்ல முறையில் வரவேற்று மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பார்கள் எவரும் நக்கல் செய்ய அனுமதி இல்லை2 points- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
இந்த யாழ் கள உறுப்பினர்கள் சொல்லி உள்ளார்களா,..??? அர்ச்சுனா அடிபட. போகவில்லை ...சாப்பிடத் தான் போனார் உணவகங்களில் சாப்பிட போகலாம் ....அவர் ஒரு சாதாரண மனிதனாக சாப்பிட போனார் .. விருந்தினர்களை .....வாடிக்கையாளர்களை உணவகங்களில் நிற்பவர்கள். முதலாளியின். நண்பர்கள் நக்கல் அடிக்கலாமா??? இங்கே கருத்துகள் எழுதியவர்கள். உங்கள் துணையுடன் அல்லது தனியாக உணவு உள்கொள்ள. அதாவது சாப்பிட உணவகங்களுக்கு செல்கிறார்கள் என வைப்போம் அங்கே நிற்கும் ரவுடிகள் I Love You என்று சொன்னால் உங்கள் வாழ்க்கை துணை அல்லது நீங்கள் என்ன செய்வீங்கள் ??? அடிப்பீர்கள். ....அர்ச்சுனா போல் தாக்குவீர்கள். இல்லை எதுவும் செய்ய மாட்டீர்கள் ....உங்கள் வாழ்க்கை துணைக்கு பாதுகாப்பு கொடுக்க. முடியாது இல்லையா?? கண்டவன் நின்றவன். எல்லாம் I Love You சொல்லலாமா. ???. இங்கே அர்ச்சுனா செய்தது மிக மிக. சரியான வேலை இதற்க்கும். பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும். எந்தவொரு சம்பந்தமில்லை அர்ச்சுனா நீங்கள் தான் உண்மையான தமிழன் உண்மையான மனிதன். வாழ்த்துக்கள் 🙏2 points- பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
2 pointsசொந்த தாய் மொழியை காட்டுமிராண்டின்னு விளித்தவன் முன் காட்டுமிராண்ன்டிகளாக இருப்பதில் என்ன தவறு. கன்னட தேசத்தில் போய் அவன் போற்றும் மொழியை காட்டுமிராண்டி என்று சொல்லி.. தந்தை... பெரியார் பட்டங்களை எவனாவது ஒரு தமிழன் வாங்கி வரட்டும் பார்க்கலாம். சீமானின் தம்பிகளை காட்டுமிராண்டி என்று வசனம் எழுதுபவர்கள்.. பேசுபவர்கள். எல்லாப் போலிகளையும் இழிச்ச வாய் தமிழனிடத்தில் தான் விதைக்கலாம். தமிழனை மட்டும் தான் அந்நியன் ஆளலாம். ஆனால் மற்ற எல்லாரையும் அவரவர் இனம் தான் மொழிதான் ஆளலாம். சாபக்கேடு தமிழனே இதுக்கு காவடி தூக்கித் திரிவது தான்.2 points- இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! - சரத் வீரசேகர
இப்ப தலைவரையே உண்மையோ போலியோன்னு கேக்க வைக்கிற அளவுக்கு இருக்கு.. எம்மவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள நச்சு விதைகள். உளவியல் போரின் உச்சக்கட்டங்கள் அரங்கேறுகின்றன. அதுக்கு இன்னும் இன்னும் உயிர்ப்பூட்ட இங்கையும் ஆக்கள் இருக்கினம்... எழுதினம். தமிழகத்தில் போலித் திராவிடம் மும்மரமா இயங்குது. கிந்தியா சிதைவதை விட திராவிடம் அழிவது தமிழர்களின் இருப்புக்கு மிக அவசியம் என்றாகி வருகிறது. சிங்கள பெளத்த பேரினவாதத்தை விஞ்சும் அளவுக்கு தமிழர்கள் அழிப்பில் திராவிட மேலாதிக்க பாசிச சிந்தனை இருக்குது.2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
30ம், 31ம் விடைகள் மாறிவிட்டன, கிருபன். 30 வது கேள்விக்கான விடை: Shaheen Shah Afridi 31 வது கேள்விக்கான விடை: PAK பச்சைக் கலர் முக்கியம்.............................🤣. 👍.............. பையன் சார், எண் சாத்திரப்படி எட்டாம் நம்பர் எங்கேயோ போகுமாம். இங்கு களத்தில் தான் சில நாட்களின் முன் இந்த சாத்திரத்தை சொன்னார்கள். பங்குபற்றுபவர்களின் வரிசையை ஒரு தடவை பார்த்துக் கொள்ளுங்கள், குறிப்பாக யாருடைய பெயர் எட்டாவதாக இருக்கின்றது என்று...................😜.2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதுவரை போட்டியில் பங்குபற்றியவர்கள்: 1 ஈழப்பிரியன் 2 ஏராளன் 3 வீரப் பையன்26 4 சுவி 5 அல்வாயன் 6 தமிழ் சிறி 7 நிலாமதி 8 ரசோதரன் 9 நுணாவிலான் 10 வசீ 11 வாத்தியார் 12 நந்தன் 13 செம்பாட்டான் 14 குமாரசாமி 15 நியாயம் 16 வாதவூரான் பலரின் பதில்களில் திருத்தம் வேண்டும். ஒவ்வொருவராகச் சொல்லுகின்றேன் 😃 @ஏராளன் இருவரும் விளையாடாததால் வேறு பெயர்களைத் தாருங்கள். @suvy ஐயா, இவர் விளையாடவில்லை. வேறு பதிலைத் தாருங்கள்.2 points- நடனங்கள்.
2 points- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 2 மீன் அடிச்ச ஆப்பு ! மணலாறு காட்டுக்குள் அலைந்து திரிந்த அந்த மனிதர்களின் வீரம் பற்றி யாரும் அறிய மாட்டார்கள். குண்டுகளும் துப்பாக்கிகளும் கிளைமோர்களும் தான் அவர்களுக்கு அதிகம் பிடித்தவை. உணவு என்பது அவசியமற்று போகும் போதெல்லாம் எங்கோ ஒரு இலக்கில் எதிரி சிதறப் போகும் யாதார்த்தம் நிமிர்ந்து நிற்கும். இலக்குக்காக அந்த மனிதர்கள் அலைந்த நாட்கள் கொஞ்சமல்ல. ஓய்வு என்பது மரணத்துக்கு பின் என்பது அவர்களது இயல்பாக இருக்கலாம். ஓய்வின்றி தேசியத்தலைவரின் எண்ணங்களுக்கு அந்த மனிதர்கள் வண்ணம் பூசி வெற்றி என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். 1996 முல்லை மண்ணில் முப்படைகளும் குந்தி இருந்து எம் மக்களுக்கு கொடுத்த பெரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளியிட்டனர் விடுதலைப்புலிகளின் சண்டையணிகள். யாழ்ப்பாணத்தை தம் ஆளுகைக்குள் கொண்டு வந்த பின் விடுதலைப்புலிகள் பலமிழந்துவிட்டதாக பரப்புரை செய்து கொண்டிருந்த சிங்களத்துக்கு நெத்தியடி கொடுத்த விடுதலைப்புலிகளின் அணிகளில் இவர்களும் இருந்தார்கள். பெரும் வெற்றியை எமக்குத் தந்துவிட்டு மீண்டும் மணலாறுக் காட்டை வதிவிடமாக கொண்டு எதிரிக்காக அலைந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறு தான் அவர்களில் இருந்த வேவுப் போராளிகளின் அணி ஒன்று வேவுக்காக சென்று திரும்பிய போது புன்னகையோடு இலக்கை கூறுகிறார்கள். “மரியதாஸ் ( பின்நாட்களில் “ஜெயசிக்குறு” நடவடிக்கையில் கப்டன் மரியதாஸ் வீரச்சாவு) அண்ண 10 பேரண்ண வடிவா குடுக்கலாம்…” ரைபிள் எல்லாத்தையும் நிலத்தில வைச்சிட்டு சென்றிக்கு ஒருத்தன் மட்டும் நிக்கிறான் மற்றவ குளிக்கிறாங்கள் கிளைமோர் ஒன்று செட் பண்ணினால் 10 பேரையும் தூக்கலாம்” எந்த இடத்தில? தளபதி ஆவலோடு வினவுகிறார். அண்ண எங்கட சின்னக் குளத்தில அண்ண. மணலாறு காட்டிடையே விடுதலைக்காக பயணித்துக் கொண்டிருந்த மூத்த போராளியும் அந்த வேவு அணிகளுக்கான அணித்தலைவனாகவும் இருந்த மரியதாஸ்க்கு வேவுத்தகவல் பிரியோசனமானதாகவே தோன்றியது. அந்த இலக்கு அவர்களின் வேவு வலயத்துக்குள் கொண்டுவரப்படுகிறது. அடிச்சால் பத்து சிங்களப் படையைக் கொண்ட எதிரியின் ஒரு அணி உயிரிழக்கும். அந்த குளம் எம்மவர்களின் பார்வை வீச்சில் இருந்து தப்பிக்க முடியாத அளவிற்கு வேவுப் போராளிகள் காத்திருந்தார்கள். தளபதி ஊடாக தலைவரின் அனுமதிக்காக திட்டம் அனுப்பப்படுகிறது. உடனடியாக திட்டம் அனுமதிக்கப்பட மகிழ்வில் பூரித்து போகிறார்கள் அவர்கள். குளத்தின் இந்தக்கரை எம்மவர்களாலும் மறு கரை இராணுவத்தாலும் சூழப்பட்டருந்தது. தினமும் குளிப்பதற்காக குறித்த நேரத்தில் அந்த அணி வந்து போகிறது. இது அந்த காலத்தில் அரியதான ஒரு இலக்கு. தொடர் வேவுகள் இலக்கை உறுதிப்படுத்திக் கொள்ள அன்றைய காலை வேளை அவர்களுக்காக குளத்துக்குள் ஒரு கிளைமோர் தயாராக காத்திருக்கிறது. இரவோடு இரவாக மரியதாஸ் கிளைமோரை குளத்து நீரின் அடியில் புதைத்திருந்தான். காத்திருக்கிறார்கள். அடிச்ச மறு நிமிடம் தங்களை எதிர்த்து தாக்க வேறு அணி வரலாம் அவர்கள் எம் அணிகளை நோக்கி பாரிய தாக்குதல் செய்யலாம் என்ற நியம் மரியதாஸ் தலமையிலான போராளிகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் அதற்கும் தயாராகவே காத்திருந்தார்கள். அப்போதெல்லாம் எம் வெடிகுண்டு தொழில்நுட்பம் வயிரின் மூலம் மின் கொடுக்கப்பட்டு வெடிக்க வைப்பதே. அதனால் நீண்ட மின் கடத்தக்கூடியதான தொலைபேசி வயரை குளத்து நீரின் அடியால் மிக சிரமத்தோடு தாட்டு கிளைமோரை நிலைப்படுத்துகிறார் மரியதாஸ். நீரிற்கு வெளியிலும் மண்ணுக்குள் வயரை தாட்டு குளக்கரையில் இருந்த பெரும் காட்டுக்குள் கொண்டு வருகிறார். இப்போது எல்லாம் தயார். மின்கலத்தின் மூலம் வெடிக்க வைக்க தயாராக காத்திருக்கிறார்கள் அந்த மனிதர்கள். மரியதாஸ் கண் இமைக்காமல் இராணுவ அணியை அவதானித்த்துக் கொண்டிருக்கிறார். தூர சில உருவங்கள் காட்டை விட்டு வெளி வருவது தெரிகிறது. இராணுவ அணி உடைகளை கழைந்து குளிப்பதற்காக குளத்துக்குள் இறங்குகின்றனர். அவர்களில் சிலர் துப்பாக்கியோடும் சிலர் குளிப்பதற்கான பொருட்களோடுமே வந்திருந்தனர். குளத்துக்குள் இறங்கி சிலர் குளிக்க இரண்டு மூன்று பேர் அருகில் இருந்த கற்களில் உடைகளை தோய்க்கத் தொடங்கி இருந்தனர். இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் நெருக்கமாக வந்து விட்டது. மரியதாஸ் மின் இணைப்பை மின்கலத்தின் மூலம் கொடுக்கிறான். “ஏமாற்றம்…” கிளைமோர் வெடிக்காமல் சதி செய்தது மின்கலத்தில் மின் இல்லை என்று நினைத்து வேறு மின்கலத்தின் மூலம் மீண்டும் முயற்சி செய்த போது அதுவும் தோல்வி. மனம் வெறுத்துப் போக குளத்தையே வெறித்து பாக்கிறார்கள். ச்சீ… தப்பீட்டாங்கள்… அனைவரும் மனம் வெறுத்து அந்த குளக்கரையோரம் நீண்டு நிமிர்ந்த மரங்களின் அடியில் படுத்து கிடக்கிறார்கள். இலக்கு தப்பி விட்டது. வந்த அணி திரும்பி விட்டது. தளபதிக்கு விடயம் தெரிவிக்கப்பட்டு இவர்களும் அன்று முழுவதும் அந்த காட்டோரம் படுத்திருந்து தாம் தயாராக்கி வைத்த கிளைமோரை மீட்க குளத்துக்குள் இறங்குகிறார்கள். கிளைமோரை தூக்கி வெளியில் வந்து பார்த்த போது சிரிப்பதா அழுவதா என்று நிலை தெரியாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.என்னண்ண ஆச்சு? இங்க பார் மீன் என்ன செய்திருக்கு என்று? அட நாசமா போன மீன்கள் இப்பிடி வயர கடிச்சு தின்டிருக்குதகள்? இடையில் அறுபட்டு கிடந்த வயரைப் பார்த்து மீன்களை திட்டத் தொடங்கினான் ஆறுமுகம். விடுடா அதுகளுக்கு தெரிஞ்சு போச்சு போல இவங்கள் ஆமிய மட்டுமல்ல எங்களையும் சேர்த்து சாகடிக்க போறாங்கள் என்று அது தான் அதுகள் எங்களுக்கு எதிரா போர்க்கொடி தூக்கி இருக்குதுகள். என்று இரகசியமாக கூறி சிரித்து விட்டு முகாம் மீண்டார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் அந்த இலக்கு தவறியது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நீரைத் தவிர வேறு இடத்தில் கிளைமோரை பொருத்தினால் இலக்கு வலயத்துக்குள் அந்த அணி முழுவதும் வராது அதனால் அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. அதனால் சிந்தனையை கூர்மையாக்கிக் கொண்டான். என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? யோசித்து யோசித்து களைத்த அவனுக்கு வயர்லெஸ் ( wireless ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் என்ன என்ற சிந்தனை கருத்தரித்தது. அதாவது வயர் இணைப்பு இல்லாது வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம். உதாரணத்துக்கு ரிமோட்கொன்ரோல் (remote control ) தனக்கு தோன்றியதை மரியதாஸ்க்கு தெரியப்படுத்தினான். மரியதாஸுக்கும் அது சரியான ஒன்றாகவே பட்டது. சிந்தனை செயலாக்கம் பெற்றது இரண்டு வோக்கிகள் அதற்காக பயன்படுத்தப்பட்டன. ஒரு வோக்கியின் ஒலிபெருக்கிக்கு செல்லும் வயரில் இருந்து கிடைக்கும் மின்சாரம் கிளைமோரோடு இணைக்கப்படுகிறது. அந்த மின்சாரத் தூண்டல் கிளைமோரை வெடிக்க வைக்க போதுமானதா என்று சரிபார்க்கப்பட்டு அதற்கான மின்சாரத் தூண்டலை அதிகரிக்க செய்யும் ஒரு இலத்திரனியல் பகுதி அதனுடன் இணைக்கப்படுகிறது. அதன் மூலம் கிளைமோருக்கான வெடிப்பிக்குத் தேவையான மின்சாரம் சரி செய்யப்படுகிறது. இப்போது இவர்கள் கையில் இருக்கும் வோக்கியின் PTT அமத்தப்பட்டால் கிளைமோருடன் இணைக்கப்பட்ட வோக்கியில் இருந்து மின்சாரம் பாச்சப்படும் அந்த மின் தூண்டல் வெடிப்பியை வெடிக்க வைத்து கிளைமோர் வெடிக்கும் இலக்கு தவறாது சிதறும். ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. அதாவது இவர்கள் அந்த திட்டத்துக்காக பயன்படுத்திய வோக்கியின் இலக்கம் 328. இதே இலக்கத்தில் எதிரியும் தொடர்பை பேணுவானாக இருந்தால் அல்லது வோக்கியின் அழைப்பு வலயத்துக்குள் இருந்து வேறு எதாவது வோக்கியில் இருந்து அந்த இலக்கத்துக்கு PTT அழுத்தப்பட்டால் கட்டாயமாக கிளைமோர் வெடித்து சிதறும். ஆனாலும் எமது அணிகளுக்கு இந்த இலக்கத்தை பாவிக்க வேணாம் என்ற ஒரு கட்டளையை வழங்கி ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால் எதிரி…? யோசித்த போது இறுதியாக முயற்சி செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவர்களாக நடவடிக்கையில் இறங்கினர் மரியதாஸ் தலமையிலான அணி. அந்த நெருக்கடியான காலமானது தொழில்நுட்ப அறிவியல் வளராத இயக்க வரலாற்றின் பக்கத்தை கொண்டது. ஆனாலும் கிடைக்கும் பொருட்களின் மூலம் உயர் பயன்பாட்டை பெறக்கூடிய விடுதலைப்புலிகளின் போராளிகள் தமது உயர் தொழில்நுட்ப அறிவை தம் சிந்தனைகளுக்கூடாகவே வளர்த்துக் கொண்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடே இந்த கிளைமோர் தாக்குதல்.சில வாரங்கள் கடந்து போக, மீண்டும் வேவுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட அந்த இரவு அவர்களுக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது சிலவேளைகளில் இதுவும் தவறினால்? அனைவரின் மனதிலும் இதுவே எழுந்த கேள்வி. வெடிக்காமல் போனால் பரவாயில்லை தவறி இலக்கு வர முன் வெடித்தால்? இலக்கு பிசகி விடும் அதே நேரம் இப்படியான இலகுவாக கிடைக்கும் இலக்குக்காக நீண்ட காலங்கள் காத்திருக்க வேண்டி வரும். அனைவரும் அந்த குளக்கரையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மரியதாஸ் கையில் வெடிக்க வைக்கும் வோக்கி இருந்தது. இலக்கு கிளைமோரின் வலயத்துக்குள் வருகிறது. இவர்களின் மனப் பதட்டம் அதிகரிக்கிறது. வந்தவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு தமக்கான ஆபத்து காத்திருப்பதை அறியாது சிரித்து மகிழ்கின்றனர். மரியதாஸின் கையில் இருந்த வோக்கியின் PTT அழுத்தப்படுகிறது. அந்த காலை நேரம் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாது கிளைமோர் வெடித்து சிதறிப் போக சிங்களத்து சிப்பாய்கள் 9 பேர் அந்த இடத்திலையே சிதறிப் போனார்கள் காவல் பணியில் இருந்த ஒரு இராணுவம் மட்டும் காயத்தோடு தப்பித்து சென்று விட இலக்கை துவம்சம் செய்த வோக்கிக்கு ஒரு முத்தத்தை கொடுக்கிறான் மரியதாஸ். உடனே பின்தளம் திரும்ப கட்டளையிடுகிறான். அனைவரும் வெற்றி பெற்றுக் கொண்டு தளம் திரும்பினர். மரியதாஸ் தலமையிலான மணலாறு மாவட்ட படையணியின் வேவுப் போராளிகளின் இந்த தாக்குதலானது சிங்களத்துக்கு தடுமாற்றத்தையும் எமக்கு மகிழ்வையும் தந்த போது, அடுத்த இலக்கைத் தேடி அந்த மனிதர்கள் அந்த பெரும் காட்டுக்குள் ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தார்கள்… கவிமகன்.இ 22.11.20172 points- இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம் இறை நம்பிக்கை என்பதே இளம் பிராயத்தில் இருந்து செய்யப்பட்ட மூளைச்சலவை என்பதும், அதனால் அதுவும் ஒரு குருட்டு நம்பிக்கை என்பதுமே பெரும்பான்மை இறை மறுப்பாளர்களின் கருத்தாக இருப்பினும் அவர்கள் அக்கருத்தை அத்துணை ஆணித்தரமாக சமூகத்தில் வெளிப்படுத்துவதில்லை. எந்த சமூகத்திலும் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடையவராய் இருப்பதும், அம்மக்கட் பணியே தம் பணி எனக் கொண்டதும் அதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இறை நம்பிக்கை எல்லை கடந்து மூடநம்பிக்கையாய் உருவெடுக்கும்போது இறை மறுப்பாளர் மட்டுமல்லாமல் இறை நம்பிக்கை கொண்டோரிலும் பகுத்தறிவாளர் தமது எதிர்க் குரலை ஆங்காங்கே பதிவு செய்வது உண்டு. மூடநம்பிக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும், எந்த மதத்திலும் ஊடுருவி இருக்கக் காணலாம். தற்காலத்தில் கூட எங்காவது நடைபெற்றுச் செய்தியாகி விடுகிற நரபலியும், பெற்ற குழந்தையை நொடிப்பொழுதேனும் மண்ணில் புதைத்து எடுக்கிற கோரமும், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து ரத்தம் வடிவதும் நாம் மண் சார்ந்ததாய்க் கொண்டாடும் நாட்டார் தெய்வங்களின் மீது ஏற்றப்பட்ட வன்முறை. தொன்மையான தமிழ் நாகரிகம் மற்றும் கிரேக்க நாகரிகக் காலந் தொட்டு இவை நிலவி வந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லையாயினும், குறுந்தொகை போன்ற அக இலக்கியங்களில் தோன்றும் கட்டுவிச்சிகளும் (குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த குறி சொல்பவள்) கணியன்களும் நம்பிக்கைகளுக்கான மெல்லிய ஆதாரங்கள். அவையனைத்தும் இறை நம்பிக்கை சார்ந்தே தோன்றின என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, குறுந்தொகை 23 இல் " அகவன் மகளே! அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே; இன்னும் பாடுக பாட்டே! அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!" (குறுந்தொகை 23) என்று தலைவியின் தோழி குறி சொல்லும் கட்டுவிச்சியிடம் இப்பாடல் மூலமாகச் சொல்லும் செய்தியிலும், அது தரும் இலக்கிய இன்பத்திலும் மூழ்கித் திளைத்துப் பாடல் தெரிவிக்கும் மூடநம்பிக்கையை நாம் எளிதில் கடந்து விடுவதுண்டு. இங்கு ஒரு மண் சார்ந்த மூடநம்பிக்கையாக வெளிப்படுகிறதே தவிர இறை சார்ந்ததாய் வெளிப்படவில்லை. மேலும், இது இன்றளவும் தொடரும் நம்பிக்கையே ! இருப்பினும் இயற்கை குறித்தும் வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் தோன்றிய பயத்தில் பிறந்த இறை நம்பிக்கை பெரும்பாலும் மூடநம்பிக்கையின்பால் இட்டுச்செல்லும் என்பது சமயம், காலம், தேசம் எனும் எல்லைகள் தாண்டியது. தலைவனின் பிரிவாற்றாமையினால் வாடி உடல் மெலிந்திரங்கும் தலைவியின் நிலை பற்றிக் கேட்க வேலன் வெறியாட்டில் குறி கேட்கச் செல்லும் தாயினைப் பற்றி குறுந்தொகை 111 இல் காணலாம். வேலனாக வெறியாடும் குறி சொல்லும் கலைஞன் தலைவியின் வருத்தம் சேயோன் ஆகிய முருகனின் செயல் என்று அளந்து விடுவதும், அதனைத் தாயானவள் நம்புவதும் "பெரும் வேடிக்கை" என்று கூறித் தோழியானவள், "அவ்வேடிக்கை காணத் தலைவன் வருவானாக !" என்று தலைவியிடம் கூறுகிறாள். அன்று சமூகத்தில் நிலவிய அந்தக் குருட்டு நம்பிக்கையைப் புலவர் தீன்மதி நாகனார், போகிற போக்கில், வேடிக்கை (பெருநகை) என்றது நமக்கான ஆறுதல். "மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் அதுவென உணரும் ஆயின் ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன கேழிருந் துறுகற் கெழுமலை நாடன் வல்லே வருக தோழிநம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே". (குறுந்தொகை 111) பேய் பூதங்கள் பற்றிய பயமும் நம்பிக்கையும் கல் தோன்றி மண் தோன்றாக் காலந் தொட்டே வழங்கி வருவது போலும் ! சங்கப் புலவர்களில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பக்தி இலக்கியங்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்று சான்றோர் தம் பெயர்களே வழங்கி வந்தமை இதற்கான சான்று. "......................வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன உருகெழு பேய்மகள்" (புறநானூறு 371) என்ற பாடலைப் பாடிய கல்லாடனார், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திப் பேய் மகளிர் குரவைக் கூத்தாடுவதாகப் பதிவு செய்கிறார். இத்தனை மூட நம்பிக்கைகள் நிலவிய போதும் நரபலி போன்ற கொடூரமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் அநேகமாகக் காணப்படவில்லை எனலாம். எனவே அவை அறிவார்ந்த மக்களால் தமிழ்ச் சமூகத்தில் அப்பொழுதும் ஏற்கப்படவில்லை என்றே கொள்ளலாம். பண்டைய கிரேக்க நாகரிகத்தின் வழக்கத்துடன் இது குறித்து நோக்கத்தக்கது. அங்கே அவர்களது கடவுள்களை அமைதிப்படுத்த கொடூரக் கொலைகள் நிகழ்த்துவது அவர்களது இலக்கியங்களில் காணக் கிடைப்பது. எடுத்துக்காட்டாக, கி.மு. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கணிக்கப்படும் ஹோமரின் 'தி இலியட்' எனும் கிரேக்கக் காவியம் கி.மு. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ட்ரோஜான் போர் பற்றியது; அதில் வரும் அகமேம்னன் (Agamemnon) எனும் மைசீனிய (Mycenae) நாட்டு அரசன் ஆர்டிமிசு (Artemis) எனும் தேவதையை அமைதிப்படுத்தத் தன் மகள் இஃபிஜீனியாவைத் (Iphigeneia) தன் கையாலையே பலி கொடுக்கும் கொடுமை அரங்கேறுகிறது. ட்ரோஜான் போருக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைப்பதால், அப்போரினை அடிப்படையாய்க் கொண்ட கதையாகவே இருப்பினும் அத்தகைய வழக்கங்கள் அச்சமூகத்தில் நிலவியது சுட்டப் பெறுகிறது எனலாம். அதுபோலவே இப்ராஹீம் நபிகள் தமது மைந்தரான இஸ்மாயிலை இறைவனுக்குப் பலியிடத் துணிந்தபோது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, "ஆட்டினைப் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றுக" எனப் பணிக்கப்பட்டார்; இந்நிகழ்வே பக்ரீத் விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவோம். இந்நிகழ்வு விவிலியத்திலும் (பழைய ஏற்பாடு) பேசப்படுகிறது - சிறிய மாற்றத்துடன்; ஆபிரகாம் ஆகிய இப்ராஹிம் பலியிடத் துணிந்தது தமது மற்றொரு மகனாகிய ஈசாக்கை எனும் மாற்றத்துடன். அவலம் என்னவோ மாறவில்லை. இத்தகைய கொடிய கூத்துகளில் தமிழ்ச் சமூகம் தாமதமான போதிலும் சோடை போகவில்லை என்பதை ஏறக்குறைய கிபி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியபுராணம் பெருமிதத்துடன் (!!!) பதிவிடுகிறது. இதனைச் சற்று விரிவாகச் சொல்லுவதில் இக்கட்டுரை (வெட்கமின்றி) முழுமை பெறும் என்று நம்புகிறேன். நாம் பெரிய புராணத்தில் முதலில் கையிலெடுப்பது சிவனடியார் பரஞ்சோதியார் எனும் சிறுத்தொண்டர் நாயனார் புராணம். சிவனடியார் தொண்டே சிவத்தொண்டு என வாழும் சிறுத்தொண்டரின் பக்தித்திறம் சோதித்திட இறைவனே கயிலாயத்தினின்றும் இறங்கி சிவனடியார் வேடத்தில் 'வைரவர்' எனும் பெயருடன் சிறுத்தொண்டரின் ஊரான திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளுகின்றார். அன்று அமுது செய்விக்க (விருந்தளிக்க) சிவனடியார் எவரையும் காணாமல் வாடி நின்ற சிறுத்தொண்டர், சிவனடியாரான வைரவர் வரவறிந்து இறும்பூதெய்து கணபதீச்சரத்தில் திருவத்தியின் (அத்தி மரத்தின்) கீழ் அமர்ந்திருந்த வைரவரை அமுது செய்யத் தம் இல்லத்திற்கு அழைக்கின்றார். அப்போது தமது நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறுத்தொண்டரால் தமக்கு அமுது படைக்க முடியுமா எனும் ஐயப்பாட்டை வெளிப்படுத்துகிறார் வைரவர். எந்த நிபந்தனையையும் தம்மால் நிறைவேற்ற முடியும் என்று உறுதியளித்துக் கேட்கிறார் சிறுத்தொண்டர். அந்த நிபந்தனைகளை எண்ணிப் பார்க்கவே நமது உடலும் உள்ளமும் பதறும்போது, அவற்றை மொழிவது மட்டுமின்றி அது நிறைவேற்றப்படும் காட்சியை வெகு சாதாரணமாக ரசனையுடன் சேக்கிழார் பாடிச் செல்வது பேரதிர்ச்சி, பேரவலம் ! அதனைக் கேட்டுச் சிறிதும் மனச்சலனமின்றி மகிழ்வோடு ஏற்று, தம் மனைவியிடம் பகிர்கின்றார் சிறுத்தொண்டர் : "வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர்தாம் உள்ளம் மகிழ அமுதுசெய இசைத்தார் குடிக்கு ஓர்சிறுவனும்ஆய்க் கொள்ளும் பிராயம் ஐந்து உள்ளால் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் பிள்ளைபிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப்பெறின் என்றார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 54) பொருள் : வள்ளலார் ஆகிய சிறுத்தொண்டர் தம் மனையாளாகிய திருவெண்காட்டு நங்கையை நோக்கி, "(தாய் தந்தைக்கு) ஒரே மகனாய்ப் பிறந்து எவ்வித உறுப்புக் குறைபாடுமின்றி உள்ள ஐந்து வயது சிறுவனைத் தாய் பிடித்துக் கொள்ள மகிழ்வோடு தந்தை அரிந்து (வெட்டி) சமைக்கப் பெற்றால் உள்ளம் மகிழ்ந்து திருவமுது செய்ய மாதவராகிய வைரவர் இசைந்தார்" என்றார். அடுத்து அக்கொடுமை அரங்கேறுகிறது. எந்த ஒரு உணர்ச்சியும் மிதமிஞ்சிப் போகும்போது மூளைச்சலவை முழுமை பெற்றது என்றே பொருள். கம்பனுக்கு நிகரான கவித்துவம் பெற்ற சேக்கிழார் முதல் சாமானிய இறைப்பற்றாளன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை : "இனிய மழலைக் கிண்கிண்கால் இரண்டும் மடியின் புடைஇடுக்கிக் கனிவாய் மைந்தன் கையிரண்டும் கையால் பிடிக்கக் காதலனும் நனிநீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகைசெய்யத் தனி மாமகனைத் தாதையார் கருவி கொடுதலை அரிவார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 63) பொருள் : இனிய மழலையை இசைக்கும் கிண்கிணியை அணிந்த கால்கள் இரண்டினையும் தாயானவள் (!) தன் மடியின் இடையே இடுக்கி, இனிமையான கனி போன்ற வாயுடைய மைந்தனின் கைகள் இரண்டையும் தன் கையால் பிடித்துக் கொள்ள காதற் கணவனும் (சிறுவனின் தந்தை) பெரிதும் உவகை கொண்டார் என ஒப்பற்ற அந்த மகனும் மகிழ்ந்து சிரிக்க, தந்தையானவர் கருவி கொண்டு மகனின் தலையை அரிகின்றார். அக்குரூரத்தை மேலும் வருணிக்கும் அளவு பக்தி முத்திப்போயிற்று : "அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக்கழித்து மன்றத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு முளை திறத்திட்டுக் கறிக்கு வேண்டும் பலகாயம் அரைத்துக் கூட்டிக்கடிது அமைப்பார்" (சிறுத்தொண்டர் நாயனார் புராணம்; பாடல் 65) பொருள் : அறுத்த தலையின் இறைச்சி சிவனடியார்க்குப் படைக்கும் திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து அதனை ஒதுக்கும் பொருட்டு சந்தனத்தாரது (சிறுத்தொண்டரது) கையில் கொடுத்து மற்ற உடல் உறுப்புகளின் இறைச்சியைக் கொத்தி அறுத்து எலும்பினைச் சுற்றியுள்ள தசையினைத் திறந்து கறிக்காக இட்டு அக்கறிக்கு வேண்டிய பொருட்களை அரைத்துக் கூட்டி (அத்தாயானவள் !!!) விரைவாக உணவைத் தயாரிக்கிறாள். இறுதியில் இறைவன் சிறுத்தொண்டரையும் அவரது இல்லாள் திருவெண்காட்டு நங்கையையும் ஆட்கொண்டு அவர்களது மகவான சீராளனை மீண்டும் அருளினார் என்ற கதையெல்லாம் ஒரு புறம். சிவனடியார்களிடம், அதன் மூலமாக சிவபெருமானிடம், சிறுத்தொண்டர் கொண்ட நேயம் மற்றும் அர்ப்பணிப்புக்கான சோதனையில் அவர் வென்றிருக்கலாம். ஆனால் இத்தகைய எல்லை தாண்டிய உணர்வு கொண்டாடப்படும்போது, சமூகம் எல்லை தாண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். மூடநம்பிக்கையினால் நரபலிகள் நியாயப்படுத்தப்படும். சங்க இலக்கியங்களில் இவை குறிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட பழங்காலத்தில் போருக்குச் செல்லும் முன் போர்த் தெய்வங்களுக்கு (War Deities) நரபலி தரும் வழக்கம், பலியாகும் வீரன் அதனை வீரத்தின் அடையாளமாக மனமுவந்து ஏற்றுக் கொண்ட கொடூரம் பற்றிய நாட்டுப்புறக் கதைகள் நம் காதுகளில் ஈயமாகக் காய்ச்சி விடப்பட்டிருக்கின்றனவே ! இவை கல்லாத சாமானியரின் வழக்கங்கள் என்று ஒதுக்குவதற்கு இல்லை. பெரிய புராணத்தில் சுட்டப்பெறும் அடியார்களும், அவர்களைக் கொண்டாடும் சேக்கிழார் பெருமானாரும், இப்ராஹிம் அல்லது ஆபிரகாம் வரலாறு சொன்னவர்களும் அந்தந்தக் காலத்தின் சான்றோர் பெருமக்கள்தாமே ! இவர்களால் வழிநடத்தப்படும் சாமானியர் எப்படி சான்றோராய் வளர முடியும் ? மதம் எப்படியெல்லாம் மதி மயங்கச் செய்யும் என்பதற்கு மேலும் ஒரு சான்று பெரிய புராணத்தின் இயற்பகை நாயனார் புராணத்தில் காணக் கிடைக்கிறது. மீண்டும் பெரிய புராணந்தானா ? கம்பனில் சம்பூக வதம் போன்ற பிற்போக்குத்தனங்கள் உண்டே ! அது வடக்கில் இருந்து வந்த கதை என்று புறந்தள்ளப் படலாம். பெரிய புராணத்தைப் புறந் தள்ளுவதற்கில்லையே ! உலகின் இயற்கையைப் (நடைமுறையை) பகையாக்கிக் கொண்டமையால் இயற்பகை நாயனார் என்று வழங்கப்படுகிறார். பூம்புகார் நகரத்தின் வணிகர் குலத்தில் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்தவர். தம்மை நாடி வந்த சிவனடியார் வேண்டியவை எவையாயினும் இல்லையெனக் கூறா இயல்புடையார். அவரது பக்தியின் திறன் உலகிற்குக் காட்டும் பொருட்டு திருச்சிற்றம்பலத்தில் ஆடும் சிவனார், அடியார் வேடம் பூண்டு நாயனார்தம் இல்லத்திற்கு வருகிறார். "முந்தை எம்பெருந் தவத்தினால் முனிவர் இங்கு எழுந்தருளியது" (இயற்கை நாயனார் புராணம்; பாடல் 5) "என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்றஅக் கைதவ மறையோர் கொன்றைவார் சடையர் அடியார்கள் குறித்து வேண்டிய குணம் எனக்கொண்ட ஒன்றும்நீர் எதிர்மாறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டுநும்பால் ஒன்று வேண்டி இன்றுநான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம்என்றான்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 6) பொருள் : முற்பிறவியில் யான் செய்த பெருந்தவத்தினால் முனிவர் தாம் இங்கு எழுந்தருளினீர்கள் என்று கூறிய இயற்பகையார் முன் கீழ்மைத்தன்மை உடைய மறையோராய் வேடமேற்று வந்த கொன்றை மலர் சூடிய சடையரான சிவபெருமான், "அடியார்கள் தாங்கள் உம்மிடம் வேண்டியவற்றை நீவிர் நற்குணம் பொருந்தியவை என ஏற்று (அவை நற்குணம் பொருந்தாமல் இருப்பினும்), மறுக்காமல் மகிழ்ந்து அளிக்கும் உண்மையினைக் கேட்டு உம்மிடம் ஒன்று வேண்டி இங்கு யான் வந்தேன். அதற்கு நீவிர் இசைவீர் எனில் யான் இயம்புவேன்" என்று கூறுகிறார். இங்கு முனிவர் பாதகம் ஏதோ இயற்ற வந்தார் என்பதைத் தற்குறிப்பாகச் சொல்ல நினைத்த சேக்கிழார் அவரைக் 'கைதவ மறையோர்' (கீழ்மைத் தன்மை கொண்ட மறையோர்) எனக் குறித்தமை தெளிவு. நடைபெறப் போகும் குற்றத்தைக் கொண்டாடுவதில் சேக்கிழார்க்குப் பங்கில்லை என்பது நமக்கான ஆறுதல். "என்ன அவ்வுரைகேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும்என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயமில்லை நீர்அருள் செயும் என்ன மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்குஎன அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 7) பொருள் : முனிவர்தம் உரையைக் கேட்டு இயற்பகையார், "அஃது என்னிடத்தில் இருக்குமானால், அது எம்பிரான் (சிவனார்) அடியவர்க்கு உரிமையானது. எவ்வித ஐயமுமின்றி தயங்காது கேட்டு அருள் செய்க" என்கிறார். அதற்கு அம்மறையோர், "நின்பால் நிலை பெற்ற காதல் கொண்ட நும் மனைவியை எனக்கு வேண்டிப் பெற வந்தேன்" என்று சொல்ல, அதைக் கேட்டு முன்னைவிட மகிழ்ந்து இயற்பகை நாயனார் சொல்ல ஆரம்பித்தார். "இது எனக்குமுன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறுஎனக்கு" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் எட்டு) பொருள் : "என்னிடம் முன்பே உள்ள பொருளைத் தாங்கள் கேட்டது எனக்கான பேறு" என்கிறார் நாயனார். இந்தக் கருமத்தை எங்கே போய்ச் சொல்ல ? அது மகாபாரத யுகம் போல பெண் பலதார மணமுறை (polyandry) நிலவும் சமூகமல்ல. கற்பின் திறம் பேசும் சமூகத்தில் இத்தகைய வெட்கக்கேடு நிகழ்வது பக்தி முற்றி மனம் பேதலித்தமை அன்றி வேறென்ன ? மேலும் அவர்தம் இல்லாளும் கணவனின் இறைப்பணியில் தன் பங்கு ஈதென்று மாறுபாடின்றி ஏற்றுக் கொள்கிறாள். இக்கேவலம் இத்தோடு நிற்கவில்லை. இருவழி சுற்றத்தாரும் (கணவன், மனைவி தரப்பினர்) இந்த மதியீனத்திற்கு எதிராகக் கிளர்ந்து எழுகின்றனர். இயற்பகை நாயனார் அவர்களுடன் போரிட்டு அவர்களை வெட்டிச் சாய்ப்பதாய்க் கதை தொடர்கிறது. "சென்று அவர் தடுத்தபோதில் இயற்பகையார் முன் சீறி வன்துணை வாளே ஆகச் சாரிகை மாறி வந்து துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து வென்றுஅடு புலிஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார்" (இயற்பகை நாயனார் புராணம்; பாடல் 21) பொருள் : சுற்றத்தார் வந்து தடுக்கையில் இயற்பகையார் சினமுற்று முன்வந்து வாளையே பெருந்துணையாகக் கொண்டு சுற்றத்தினரை மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களது தோள்களையும் கால்களையும் தலைகளையும் வெட்டிச்சாய்த்து, எதனையும் கொல்லும் திறன் கொண்ட ஆண் புலியைப் போல் அப்போர் ஆட்டத்தில் ஈடுபட்டார். இறுதியில் இறையனார் இயற்பகையாருக்குக் காட்சி தந்து அவர்தம் துணையொடு வாழ்வாங்கு வாழவைத்து, அவர்தம் சுற்றத்தாரையும் உய்வித்த கதையெல்லாம் 'சுபம்' எனும் நிறைவுத் திரைக்கானது. நமது கட்டுரைக்கான நிறைவுத் திரையை இப்படி அமைப்போமா ? - எந்த மதமானாலும் நிறைவான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகத்தானே அமைய முடியும் ! குறைபட்ட இறையமைப்பு வாழ்வில் நிறை தருமா ?1 point- காதலர் தினத்தில் கனவொன்று கண்டேன்...
அதிகாலைப் பொழுது ஆழ்ந்துநான் உறங்கையிலே தூக்கத்தில் மனத்திரையில் எழுந்தது காட்சியொன்று! பசும்புல் நிறங்கொண்ட பச்சைச் சேலையுடன் பல்லவன் சிற்பமொன்று என்னருகில் நின்றதுபார்! ஆசையுடன் கையிரண்டில் அள்ளி நானெடுத்தேன் வஞ்சிக் குமரியவள் வளையல்க் கையிரண்டும் மாலையாய் எந்தோளில் விழுந்தது போலுணர்ந்தேன்! அல்லிப்பூ இதழின் அழகுக் கோலத்தால் ஆசையாய் முத்தமொன்று அவளிடம் கேட்டுவிட்டேன்! துள்ளிக் குதித்திறங்கித் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள் கையில் மிதக்கும் கனவேயது என்றுணர்ந்தேன்!1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்கள் பதில்களின்படி 15) BAN 18) SA அல்லது ENG. நீங்கள் இங்கிலாந்தில் இருப்பதால் SA ஐப் போடுகின்றேன். 19) AUS 20) PAK 26) க்கும் 30) க்கும் Rashid Khan ஐப் போட்டுள்ளேன்.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA SA ENG Select ENG Select AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) AUS 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) AUS 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NZ 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Rachin Ravindra 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- "கிளீன்......"
1 point"மீனைக் கொடுக்காமல் மீன் பிடிக்க கற்றுக் கொடு" என்பார்கள். சுயமாக முன்னேற நினைக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தில் சொல்லப்பட்டிருக்கலாம். ஏன் எல்லாவற்றுக்கும் "தங்கி " வாழ நினைக்கிறார்கள். சுய முயற்சியால் ஏன் முன்னேறக் கூடாது . அதிகம் கொடுத்து பழக்குவது நல்லதல்ல. சோம்பேறியாகி விடுவார்கள். பதில் களும் இந்த எண்ணத்திலே வருவது கண்டு மகிழ்ச்சி ....1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இந்த மனிமனின் பேச்சின் கவர்சசியை விரும்பிய கூட்டமே இனவாத தீயில் ஜேர்மமனி மூழ்க காரணமாயிற்று. இவரை போல் இராணுவ வல்லமையோ வீரமோ இல்லாத கோழையாக சீமான் இருந்தலும், தனது சொந்த நல்வாழ்வுக்காக நச்சு கருத்துக்களை மக்களிடம் விதைப்பதிலும், கோயபல்ஸ் பாணி பொய்கள் மூலம் பொய் வரலாறுகளை கட்டமைப்பதிலும் மனித வெறுப்பு அரசியல் மூலம் கல்வியறிவற்ற இளவயத்தினரிடையே நஞ்சை விதைப்பதிலும் சீமான் வல்லவர் தான். அதுவே மிக மிக ஆபத்தானது. தமிழ் நாட்டு மக்கள் அன்றைய ஜேர்மனியரை போல் ஏமாளிகளாக இல்லை என்பதை இந்த சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதி உயிருடன் உள்ளவரை உணர்ததிக்கொண்டே இருப்பது ஆறுதலளிக்கும் செய்தி. தனது வாழ் நாளின் இறுதி நாள்வரை (சேடம் இழுக்கும் வரை) இனவெறியை தனது கூட்டத்திற்கு விதைத்து விட்டு இந்த மனிதர் போய் சேரட்டும். ஆனால் இவரது கருத்துக்கள் என்ற நஞ்சு தமிழ் நாட்டில் பரவாமல் இருக்க வேண்டும் என்பதே மக்களின் அக்கறை. அந்த அக்கறையை சிம்ம சொப்பனம் என்று அர்ததப்படுத்தி கொள்ளக் கூடாது. இவரை ஆராதிப்பவர்களுக்கு சிங்கள இளவாதத்தை எதிப்பதற்கு எந்த அருகதையும் இல்லை.1 point- சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - சோம.அழகு
'திண்ணை' இணைய வார இதழில் வெளிவந்த மகள் சோம.அழகுவின் கட்டுரை : சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -- சோம. அழகு அமெரிக்க வாழ் தமிழர்களின் தமிழை வைத்து அவர்களது சொந்த ஊரைக் கண்டுபிடிக்கவே இயலாது. ஏனெனில் எல்லா வட்டார வழக்குகளையும் விழுங்கிவிட்ட ஒரு செயற்கையான மேட்டுக்குடித் தமிழ் அது. குழந்தைகளின் தமிழைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கேனும் எப்போதேனும் அவர்களிடமிருந்து எட்டிப் பார்க்கும் தமிழில் ர, ட போன்ற எழுத்துகள் அவற்றை ஒத்த ஆங்கில ஒலியைப் பெற்றுவிட்டன. [ல, ள, ழ], [ர, ற] மற்றும் [ந, ன, ண] ஆகியவற்றினுள் வித்தியாசமே இல்லை. நம் ஊரிலேயே இல்லையே என்கிறீர்களா? ஒவ்வொரு மாகாணத்திலும் தமிழ்ப் பற்றாளர்கள் சேர்ந்து இலவசமாகத் தமிழ்ப்பள்ளி நடத்துகிறார்கள். நான் இருக்கும் இடத்திலும் ஆறு நிலைகளில் தமிழ் வகுப்பு நடைபெறுகிறது. தாம் சேவை செய்வதாகவெல்லாம் இவர்கள் எண்ணவில்லை. அதையும் தாண்டி அடுத்த தலைமுறைக்கு நம் மொழியை எப்படியேனும் கொண்டு போய்ச் சேர்த்திட வேண்டும் என்ற பதட்டம் கலந்த அதீத பொறுப்புணர்வைத்தான் காண்கிறேன். தன்னார்வலர்களின் முயற்சியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் வாரம் ஒரு முறை வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக பத்து மாணவர்கள். சிங்கப்பூரில் இரண்டாம் மொழியாகத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள்தாம் பின்பற்றப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே நமது ஒன்றாம் இரண்டாம் வகுப்புத் தமிழ் பாட நூல்கள் இவர்களது ஆறாம் நிலை பாட நூலுக்கு ஒப்பாக இருந்தது. மிகவும் எளிமையான பாடத்திட்டம். நான் அங்கு ஆசிரியராக இணைந்த முதல் நாளே ஆறாம் நிலையில் அமர்த்தப்பட்டேன். பத்து முதல் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்கள். அந்த வகுப்பின் பொறுப்பாசிரியர் பிள்ளைகளின் தமிழ் அறிமுகத்தைப் பற்றி என்னிடம் எடுத்துக் கூற வந்தவர் வகுப்பு முடிந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி முதலில் அவர்களைத் தாம் கூறும் சில தமிழ்ச் சொற்களை எழுதுமாறு பணித்தார்கள். நாங்கள் இருவரும் ஒவ்வொருவரின் எழுத்துக் கோர்வையையும் சரி பார்த்துத் திருத்தம் கூறிக் கொண்டிருந்தோம். ‘மான்புளு’ என்ற புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்திருந்தான் ஒருவன். தென்தரவு, னீச்சள், இடவாளை, சுறியன், மதாம், காட்டயம், மதியவற், மன்தர பேட்டி என எல்லாமே ஏதோ எதிரி நாட்டுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக ரகசியமாக எழுதப்பட்ட சங்கேத மொழியைப் போல் இருந்தன. அதன் பிறகு வாசிப்புப் பயிற்சி. ஒவ்வொருவரையும் வரிசையாக ஒவ்வொரு வரியாக வாசிக்கச் சொன்னோம். முதலாமவன் வாசித்துக் கொண்டிருக்கையில் பிறர் அனைவரும் தம்முடைய முறையின் போது வரப் போகும் தமக்கான வரியை வாசித்துப் பழகிக் கொண்டிருந்தார்களே தவிர வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த வரியையோ வாசிப்பவனையோ சிறிதும் சட்டை செய்யவில்லை. அதிலும் ஒருவள் பென்சில் கொண்டு ஏதோ அந்தப் பத்தியின் அருகில் எழுதிக் கொண்டிருந்தாள். நான் மெல்ல எட்டிப் பார்க்க புன்னகையுடன் அதை மறைக்க முற்பட்டாள். ஆனால் பார்த்துவிட்டேன். Antha nari kuyilidam sendru…. என எழுதியிருந்ததைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்து “என்னடா பண்ணியிருக்கீங்க?” என சிரித்தவாறே கேட்டேன். “This way I could read easily. Otherwise am too slow” என்றாள். அங்குள்ள நிலைமையை விளக்க முனைந்த பொறுப்பாசிரியரின் வேலையை வெகுவாகக் குறைத்து விட்டிருந்தனர் அரும்பெரும் செல்வங்கள். ஒரு நாள் ‘தொட்டம்’ என்ற சொல்லைத் திருத்தும் பொருட்டு “ஒற்றைக் கொம்பு இடக்கூடாது. இரட்டைக் கொம்பு போடுங்க” என்றதும் அம்மாணவன் புரியாமல் விழிக்க இன்னொருவன் உதவினான் – “Hey! That telephone letter!”. பிறிதொரு நாள் விளையாட்டாகப் படிக்க வைக்கும் விதமாக அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து நான் தமிழ்ச் சொற்களைக் கூற யார் முதலில் சரியான பொருளைத் தருகிறார்கள் என போட்டி வைத்தோம். ‘சிறப்பு’ என்ற சொல்லுக்கு ஆர்வம் பொங்க Red என பதில் தந்து பூரிப்படைய வைத்தான் ஒருவன். ‘அரிது’ ‘knowledge’ எனப் புதிய பொருள் பெற்றதில் லேசாகத் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது எனக்கு. ‘இரும்பு’ என அடுத்த வார்த்தையைக் கூறிவிட்டு நான் தண்ணியை எடுத்துக் குடித்துக் கொண்டிருக்கும் போது Cough என்று பதில் மொழிந்தவனைப் பார்த்து என் கண்கள் அதிர்ச்சியில் விரிய அவனோ எனக்குப் புரியவில்லை என நினைத்துத் தன் முழங்கையைக் கொண்டு வாயை மூடி இருமி வேறு காண்பித்துச் செயல்முறை விளக்கம் தந்து புரையேற வைத்தான். துணிவு – Dress, பொறுமை – Jealousy… பொறுமை இழந்து இப்போது நான் ஆங்கிலச் சொற்களுக்கு மாறினேன். அப்போதும் Forest – விவசாயி, River – நிதி, Competition – பேட்டி என இப்பட்டியலும் பெரிசாகிக் கொண்டே செல்ல எல்லாச் சிறார்களுக்கும் சேர்ந்தாற் போல் திருஷ்டி கழிக்கும் பொருட்டு என் கைகளால் நெட்டி முறித்து, “நா பங்காரம்” எனக் கொடூரமாகத் தெலுங்கு பேசத் துவங்கிருந்தேன். இந்தத் தமிழ்ப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் குழந்தைகள் விருப்பத்துடனும் மகிழ்ச்சியாகவும் படிக்க வேண்டும் என்பதற்காகத் தேர்வு முறை வேண்டாம் என நல்லதொரு வரவேற்கத்தக்க முடிவைப் பின்பற்றி வந்தார். தமிழ் வகுப்புகளில் கட்டாயம் தமிழில்தான் கதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பிள்ளைகள் இயல்பாக ஆங்கிலத்தில்தான் உரையாடத் துவங்கினர் ஒவ்வொரு முறையும். மீண்டும் மீண்டும் தமிழில் பேச நினைவூட்டினாலும் ஒன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது குறித்து பொறுப்பாசிரியருடன் இன்னும் அளவளாவிய போது பள்ளிகளில் முழுக்க ஆங்கிலம் என்பதால் வீடுகளிலும் அதுவே பெற்றோருடனான புழக்க மொழியாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டது. மேலும் பதிமூன்று பதினான்கு வயதுகளில் பாடத்திட்டத்தின் சுமை அதிகரித்து விடுவதால் விளையாட்டு, ஆடல், இசை… என நீளும் extra curricular activities பட்டியலில் இருந்து முதலில் அடி வாங்குவது தமிழ் வகுப்பு என்றும் ஆதங்கத்துடன் கூறினார். மேலும் இங்குள்ள பெற்றோர்கள் அனைவரின் ஒருமித்த குரலில் ஒலிக்கும் ஒரே வாக்கியம் – என் பிள்ளைக்குத் தமிழில் பேசத் தெரிஞ்சா, ஓரளவு எழுதப் படிக்கத் தெரிஞ்சாப் போதும். இதையே பெரிய விஷயமாகக் கருதி ஒரு தேக்க நிலையை எட்டி அங்கேயே நின்றுவிட்டார்கள் எனத் தோன்றிற்று. தமிழ் என்னும் தேன்கடலில் நமது இரு கைகளாலும் அள்ளிப் பருகினாலே இந்த வாழ்நாளில் எல்லா இலக்கியங்களையும் சுவைக்க இயலாது. இவர்களோ ஒரு துளியை விரல் நுனியில் தொட்டு அடிநாக்கில் இட்டுப் போதுமென்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். நம் ஊர்களில் தம் குழந்தைகளுக்கு இரண்டாம் மொழியாக இந்தியைத் தேர்வு செய்து தமிழைப் புறக்கணிக்கும் பெற்றோர்களுடன் இவர்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொஞ்சம் ஆறுதலடைந்து கொள்ளலாம். தொன்மையான தமிழ் மொழியில் இருக்கும் சங்க இலக்கியங்களைப் போல் வேறெந்த மொழியிலாவது காட்ட இயலுமா? நான் கேள்விப்பட்டவரை முதல் வகுப்பிலேயே திருக்குறள், ஆத்திசூடி மேல்நிலை வகுப்புகளில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி,…. என மாபெரும் காப்பியங்களைக் கற்றுக் கொடுக்க முடிகிற ஒரே மொழி தமிழ். உலக அரங்கில் ஈடு இணையற்றதாக விளங்கும் நமது பதினெண்கீழ்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐங்குறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள்…… என அனைத்தும் இவர்களைக் கழிவிரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவ்விலக்கியங்களின் இருப்பைப் பற்றியே தெரியாமல் தாம் வாழ்க்கையில் எத்துணை நற்பேற்றினை இழந்து கொண்டிருக்கிறோம் என்று கூட உணர வழியில்லாமல் வளரும் இக்குழந்தைகளின் மீது பரிதாபமே மேலிடுகிறது. அதிகபட்சமாக தொண்ணூறுகள் வரை கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியர்கள் மில்டன், ஆஸ்கர் வைல்ட்,…. என ஆங்கிலக் கவிஞர்களைக் கரைத்துக் குடித்தவர்களாயிருப்பர். வகுப்புகளுக்கு வீசின கையும் வெறுங்கையுமாக வந்து அக்கவிதைகளை முறையான ஏற்ற இறக்கத்துடன் கூறி பொருளுடன் விளக்குவதைக் கேட்க அவ்வளவு ரசனையாக இருக்கும் என அப்பா கூறக் கேட்டிருக்கிறேன். தற்போது (இந்தியாவிலும்) ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரையும் கீட்ஸையும் படிக்காமலேயே ஒருவன் முனைவர் பட்டம் பெற்றுவிட முடிகிற அளவிற்குப் பாடதிட்டத்தை மேம்படுத்தி(!?) வைத்திருக்கிறார்கள். பெரும்பாலானோரால் உயர்வாகக் கருதப்படும் ஆங்கிலத்திற்கே இந்த கதி என்றால்… ? எல்லாமே வணிகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுவதுதான் முக்கிய காரணம். இந்த இடத்தில் Dead Poets Society திரைப்படத்தில் வரும் அருமையான வரிகள் நினைவிற்கு வருகின்றன. We don’t read and write poetry because it’s cute. We read and write poetry because we are members of the human race. And the human race is filled with passion. And medicine, law, business, engineering, these are noble pursuits and necessary to sustain life. But poetry, beauty, romance, love, these are what we stay alive for. மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற ஊடகம் மட்டுமல்ல – மாபெரும் வரலாற்றையும் செழுமையும் வளமையும் நிறைந்த ஒரு பண்பாட்டையும் உள்ளடக்கியது. ஒரு குழந்தைக்கு நாம் தாய்மொழியை மறுக்கும்போது, அதுவும் சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியை மறுக்கும் போது ஒரு நீண்ட நெடிய பாரம்பரியத்தையும் வலுவான அடையாளத்தையும் மறுத்துக் கொண்டே வருகிறோம். போர்க்காலச் சூழலில் குடும்பம் சிதறடிக்கப்பட்டு வதைமுகாமில் அகதியாக அடைபட்டுத்தான் அடையாளத்தை இழக்க வேண்டும் என்பதில்லை. தாய்மொழியைச் சரியாகக் கற்காமல் கூட அடையாளத்தை இழக்கலாம். **************************** பள்ளி துவங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஆண்டு மலர் கொண்டு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சில திருக்குறள்களைப் பொருளோடு அச்சிட்டுக் கொடுக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. அனைத்து இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தும் பொருட்டு உவமை, உருவகம், அளபெடை, அணி உள்ளிட்ட கவிதைக் கூறுகள் தென்படும் ரசனையான சங்ககாலப் பாடல்கள் சிலவற்றை ஒவ்வொரு நூலிலும் இருந்து திரட்டி ஒன்றாகத் தொகுக்கலாம் என்ற எனது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்தப் பொறுப்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டது. அகமகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். அப்பாவிடம் உதவி பெறும் துணிச்சல்தான், வேறென்ன? மனம் காலச்சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சுழற்றியது. முதலில் எனக்குத் தெரிந்த பாடல்களையெல்லாம் நினைவுகூரத் துவங்கினேன். இவையும் அப்பாவிடம் கற்றவைதாம். கம்பராமாயணம் – “கண்டெனன் கற்பினுக் கணியைக் கண்களால்….” – அனுமன் சீதையைக் கண்டுவிட்டதாக இராமனிடம் தெரிவிக்கும் இடம். கம்பர் இப்பாடல் இயற்றிய விதத்தை வெகுவாகச் சிலாகிப்பார்கள் அப்பா. கதாகலட்சேபம் மற்றும் வில்லுப்பாட்டுக் கச்சேரிகளில் “கண்டேன் சீதையை” என்று கேட்டுப் பழக்கமாகியிருந்ததால் இதில் என்ன பெரிய வேறுபாடு என்று அப்பா விளக்கித்தான் புரிந்தது. “சீதையைக் கண்டேன்” எனக் கூறும்போது இரு சொற்களுக்கும் இடையில் “ஐயோ! சீதைக்கு எதுவும் நேர்ந்துவிட்டதோ” எனச் சட்டென இதயத்துடிப்பு அதிகரிக்குமாம். அதனால்தான் முக்கியச் சொல் முதலில் வருகிறது. ஆனால் வில்லுப்பாட்டில் கூட கண்ட செய்தி மட்டும்தான் இருக்கிறது. ‘அவள் எப்படி இருக்கிறாளோ?’ என்ற பதைபதைப்பை உணர வழியில்லாமல் அந்த ஒரு வரியிலேயே அவள் நலமுடன் இருக்கும் செய்தியையும் சேர்த்து வெளிப்படுத்தியிருப்பார் கம்பர். இப்படியெல்லாம் சொல்லித் தந்தால் இலக்கியம் ஏன் ரசிக்காது? கணிதப் பேராசிரியராகப் பணியாற்றியிருந்தாலும் அப்பாவினுள் உறைந்தே இருக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பேராசிரியரின் தரிசனமும் எங்களுக்கு அவ்வப்போது கிட்டும். அன்றிலிருந்து அப்பாவிடம் “95 கணக்கில்” என்றுதான் மதிப்பெண் கூறுவேன். இது போலவே “….புதல்வரால் பொலிந்தான் நுந்தை” என்னும் கம்பராமாயணப் பாடலில் இன்றும் காணப்படும் பேச்சுவழக்கு, “குரவர்பணி யன்றியுங் குலப்பிறப் பாட்டியோடு….” (சிலப்பதிகாரம்), “கருங்கொடிப் புருவ மேறா கயனொடுங் கண்ணு மாடா….” (சீவகசிந்தாமணி), “யாண்டு பல வாக…” என்னும் பிசிராந்தையார் பாடல், “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்…” என்ற திருமூலரின் வாக்கு, “நட்ட கல்லைத் தெய்வமென்று….” என்னும் சிவவாக்கியார் பாடல், அனிச்ச மலர் இடம்பெரும் திருக்குறள்கள், தும்மல் series என நாங்கள் பெயர் கொடுத்த திருக்குறள்கள் உள்ளிட்ட பல நினைவிற்கு வந்தன. இவையெதுவுமே முறையாக உட்கார்ந்து அப்பாவிடம் கற்றதல்ல. எப்போதேனும் எங்கள் பேசுபொருள் தொடர்பாக அப்பாவிற்கு ஞாபகம் வருவதை எடுத்துக் கூறுவார்கள். உதாரணமாக அம்மா மோர்க்குழம்பு செய்த ஒரு நாளில்தான் “முளிதயிர் பிசைந்த காந்தண் மென்விரல்….” என்ற குறுந்தொகைப் பாடல் அறியக் கிடைத்தது. இவ்வாறாக வயிற்றுக்கும் செவிக்கும் அன்று தீம்புளிப் பாகர் கிட்டியது. மகிழுந்தில் செல்லும் போதும் மிகச் சாதாரண உரையாடல்களின் போதும் அப்பா புகட்டியவைதாம் அனைத்தும். உட்கார்ந்து மெனக்கிடுதலைக் காட்டிலும் இப்படிப் போகிற போக்கில் சான்றோனாக்கும் தம் கடமையைச் செவ்வனே செய்து வருகிறார்கள் அப்பா. கற்றலுக்கு அதுதான் சிறந்த வழி என்பதே அப்பாவின் கருத்து. அப்பாவிற்கும் எனக்கும் இருக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பில் வினையூக்கியாக முக்கியப் பங்காற்றியது எங்கள் தாய்மொழி. இப்பிள்ளைகளுக்கு? மொழிக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்பது பேதைகளுக்கான வாதம். எனில் அமெரிக்கர்களும் ஆங்கிலேயர்களும் பெற்றோருடன் இணக்கமாக இருந்திருப்பார்களே! எனவே தயாராகும் ஆண்டு மலரில் வரப்போகும் பாடல்களைச் சில பெற்றோரேனும் ரசித்து வாசித்துப் பிள்ளைகளுக்கும் சொல்லித் தருவார்கள் என்ற அவா வேகமாக என்னை முடுக்கியது. அவர்களில் சில குழந்தைகள் அடுத்த கட்டமாக இன்னும் தேடித்தேடி வாசிக்காமாட்டார்களா என்ற நைப்பாசையும் என்னை ஆட்கொண்டது. இவையனைத்தும் நடந்தே விட்டால்…? மனம் கற்பனைத் தேரில் ஏறியது. நாளை தமிழ் மொழியின் சிறப்பும், தமிழர்களின் நாகரிகமும் உலகின் முன்னோடியாக ஓங்கியுயர்ந்து நிற்கும் போது இக்குழந்தைகள் “ஆதி மொழிக்குச் சொந்தக்காரன் நான். எனது பாதங்கள் இங்கே இருந்தாலும் எனது வேர்கள் கீழடியிலும் ஆதிச்சநல்லூரிலும் ஊன்றப்பட்டவை” எனப் பெருமையாக, மிடுக்காகக் கூறும் நாள் வராமலா போய்விடும்? தமிழ் வகுப்புகளும் ஆலோசனைக் கூட்டமும் முடிந்தன. மிகுந்த நம்பிக்கையுடன் வெளியே வந்தேன். எனது வலதுபுறத்தில் இருந்து ஒரு நடுத்தர வயதுக்காரரின் குரல், “So? How was your Tamil class today?”. தேர்க்கால் ஒடிந்து நான் தொப்பென்று கீழே விழுந்தாற்போல இருந்தது. திரும்பிப் பார்த்து அக்குரலுக்கு முகம் கொடுக்க விரும்பாமல் விடுவிடுவென வேகமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். “இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!” – பாரதி சத்தமாக என் காதுகளில் ஒலிக்கத் துவங்கி “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்னும் வரிகளில் முடித்தான். தமிழுக்குக் கொண்டு வந்து சேர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இருப்பதைக் கொண்டு சென்று போகும் இடத்தின் நீரோட்டத்தில் கலந்து கரைத்து மொத்தமாகத் தொலைத்தல் தொழிலைச் செய்யாமலிருப்பதே தமிழுக்கு ஆற்றும் ஆகப் பெரிய நன்றி. மெல்லத் தமிழினிச் சாவதையும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்குவதையும் தடுக்கும் இத்தமிழ்ப் பள்ளிகளின் அரும்பணியும் முயற்சியும் நிச்சயம் பாராட்டுக்குரியன.1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இந்த மனிதனை ஏன் அவரை நேசிக்கும் மக்களுக்கு பிடிக்கிறது என்பதற்கும் ஏன் அவரை எதிர்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பதற்கும்..1 point- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
இதுவே வெளிநாடென்றால் அந்தக் கும்பலை சண்டை தொடங்க முதலே வெளியே தூக்கிப் போட்டிருப்பார்கள். சரி சண்டைக்குப் போனவர்கள் டாக்ரரை மடக்கியிருக்கலாமே? தண்ணி ரேஸ்ருக்கு டாக்ரரும் தங்கமுமா கிடைத்தார்கள். கடைசியில் வாங்கிக்கட்டிக் கொண்டு ஜேர்மன் புறப்படுகிறார்கள். இந்தக் காவாலிகள் தான் ஊரில் உள்ளவர்களையும் பழுதாக்குகிறார்கள். அதைப்பற்றி யாரும் மூச்சுவிடுவதில்லை.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா....................1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாங்கள் இதுக்கை தென் ஆபிரிக்கா அணிய பற்றி பெருமையா எழுத என்ர தலைவர் உடன மனம் மாறி விட்டார்.............ரபாடா அதிக விக்கேட் எடுக்க வாய்ப்பு இருக்கு தலைவரே🙏😁👍.............................1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- "கிளீன்......"
1 pointநீங்க சொல்லுறது சரி தான் புத்தன் . .! கடகம் மாதிரிக்கு கொஞ்சம் உயரமாகச் செய்து வைக்கலாம் ! உள்ளூர் வாசிகளுக்குத் தொழில் வாய்ப்புக் கொடுத்த மாதிரியும் இருக்கும் ! கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும் ! இப்பிடியெல்லாம் சிந்திக்கிற ஆக்கள் யாழில் இருப்பது ஒரு பெருமை தான் புத்தன் . ..!1 point- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
இவருக்கு எத்தனை வாழ்க்கை துணை...?...இவர் வாழ்வது கற்காலம் அல்ல முன்னேறிய காலம் ஆகவே ஒரளவு மனித நேயத்துடன் இருக்க வேணும் ...இவர் பொது வாழ்க்கைக்கு வந்தௌ விட்டார் என்றால் அதற்கு ஏற்ப சமுகத்தில் பெரும் பான்மை என்ன செய்கின்றனரோ அது போல செயல் பட வேணும் அதை விடுத்து காவாலி போல நட்ப்பது ஏற்று கொள்ள முஇயாது ...பொது வாழக்கைக்கு வராத நபர் எதுவும் செய்யலாம் ..ஆனால் மக்களின் வாக்கு பெற்று வந்த நபர் மக்களின் விருப்பப்படி நட்க்க வேண்டும்.1 point- இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! - சரத் வீரசேகர
இது தான் மிகவும் கவலை தரும் விடயம் ... திராவிடத்தை தமிழ் தேசியமாக மலர வைக்க வேண்டிய கடமை தமிழக தமிழருக்கு உண்டு1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆம் 2-0. இந்தியணி பவர்பிளேயிலேயே அடித்து விளையாட விரும்பும் என போகிளே கூறுகிறார், அதனால் நீண்ட ஒரு துடுப்பாட்ட நீளம் இருப்பதனை இந்தியா விரும்பும் எனும் தொணிபட கூறுகிறார். அதனால் இந்த 3 சகலதுறை ஆட்டக்காரர்களுள் ஒருவரையும், சிறந்த சுழல் பந்து வீச்சாளர் ஒருவரையும் இந்தியா தெரிவு செய்யும். நீங்கள் கூறுவது போல சுந்தரையும் அக்சரையும் எடுப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாகவே கருதுகிறேன். பந்தினை அடித்து விளையாடுவதன் மூலம் பந்தின் swing & seam இனை கட்டுப்படுத்தி பந்தினை விளையாடுவதற்கு இலகுவாக்க முடியும், அதே நேரம் களத்தடுப்பில் உள்ள கட்டுப்பாட்டினை பயன்படுத்தி நல்ல ஆரம்பத்தினையும் வழங்கலாம், அதனால் ரோகித்தின் அடித்தாடும் முயற்சி பெரும்பாலும் கைகொடுக்கும் ஆனால் ஆடுகளம் சிறிது உயிர்ப்பாக இருந்தால் ரோகித் மற்றும் கில்லால் விளையாடுவது கடினமாக இருக்கும். சுந்தர் விரல் சுழல் பந்து வீச்சாளர், இந்த துபாய் ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் பந்து வீசவே விரும்பும். ஆடுகளம் காய்ந்து மின் ஒளியில் பந்து இலகுவாக வரும், dew (புல் பனியினால்) பந்து ஈரமாகி பந்தினை பிடிக்க முடியாது கடினமாகி விடும், அதே நேரம் பந்து வழுக்கி வரும் என்பதால் மட்டையாளருக்கு சாதகமாகி விடும். சுந்தரினால் பவர் பிளேயில் பந்து வீச முடியும், ஆனால் ஆட்டத்தின் நடுப்பகுதியில் பந்து பெரிதாக சுந்தருக்கு திரும்பாது ஆனால் இந்த ஆடுகளத்தில் flat & quicker (கிடையாகவும் வேகமாகவும்) வீசும் ஜடேயா (விரல் சுழல் பந்து வீச்சாளர்) சிறப்பான தெரிவு, அத்துடன் இரண்டு மணிக்கட்டு பந்து வீச்சாளர்களில் ஒருவரான் குல்தீப் இந்தியாவின் முதல் தெரிவாக இருக்கும் (வருணிடம் பல தெரிவுகள் இருந்தாலும்), அதற்கு அவரது அனுபவமும் முற்று முழுதான மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர் என்பதால் நான் நினைக்கிறேன் ஜடேயா, குல்தீப் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கலை இந்தியணி தெரிவு செய்யலாம். காணொளி அவுஸ்ரேலிய முன்னால் ஆட்டக்காரான கிளார்க்கின் கருத்துப்படி பார்த்தால் பையனின் டெம்ப்பிளேட் தான் சிறந்தது. துபாய் ஆடுகளம் இந்தியணிக்கு சாதகமாக இருப்பதற்கான காரணத்தினையும் கூறுகிறார், இந்தியணி ஒரே ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடுவது மற்றது வெவ்வேறு ஆடுகளத்திற்காக பயணிக்க தேவையில்லை என கூறுகிறார். இந்தியணியே வெல்லும் எனவும், சிறந்த ஆட்டக்காரராக ரோகித்தையும் சிறந்த பந்து வீச்சாளாராக ஆர்ச்சரையும் கூறுகிறார். அவரது அணி வரிசை (அவர் இந்த வரிசையில் கூறவில்லை பொதுவாக கூறினாலும் அவர் மனதில் உள்ளது) IND AUS Pak NZ SA ENG AFG BAN அவரின் கருத்துப்படி பார்த்தால் உங்கள் கருத்து அப்படியே தலைகீழாக உள்ளது.1 point- காற்றாடி
1 pointஉந்த காபன் குச்சிக்கு சனம் அடிபட்டு புடுங்குப்படுகிறதை நானும் நெல்லியடி மகாத்மா தியேட்டரிலை பார்த்தனான்...அப்ப எனக்கு உந்த சூட்ட்சுமம் தெரியாது...அந்தகாலம் அப்பா அம்மாவின் காதலர் தினக்காலம்..எங்களை பெத்துப்போட்டமேயென்று...போடுதடியாய் கொண்டுபோறது...எங்களுக்கும் தியேட்டரிலை சரையில் சுத்திவிக்கிற கடலை தின்னுற ஆசையில்போறது...போறகளையிலை நித்திரை ...இன்டர்வெல் நேரத்துக்கு..கடலை சாப்பிட ரெடியாகிவிடுவம்.... நன்று உங்கள் கதைகள்...ஊர் நினைவை...அசைபோட வைக்குது.. தொடர்க1 point- தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!- ரணில் கூறிய இரகசிய ஆரூடம்
ஒருதடவையாவது இவர் தனது அரசியல் பதவிக்காலத்தை அமைதியாக, முழுமையாகவே கழிக்கவில்லையே, அது ஏன்? கணக்கன் கணக்கறிவானாம் தன் கணக்கை தானறியானாம். வெறும் சொல் மட்டுந்தான், அதிலிருந்து வெளிவர வகை தெரியாது. அப்படியேதும் அசம்பாவத்தில் இவர் ஜனாதிபதியானாற்தானுண்டு.1 point- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
பீங்கான் கோப்பைகள் அநியாயம். பேஸ்புக்கில் ஒரு மொமன்ற் பார்த்தேன். முள்ளு கரண்டியால் ஜேர்மன் மொட்டை பாஸ் கு**யில் நல்ல குத்து கொடுத்து இருக்கலாம். சிறியருக்கு இந்த தாடியை தெரியுமோ?1 point- தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!- ரணில் கூறிய இரகசிய ஆரூடம்
அந்தளவு ஆற்றல் இவருக்கு இருந்திருந்தால் . ...இவருக்கு ஏன் இந்த நிலைமை வந்திருக்கு , ஈழப்பிரியன் ?1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லோரும் பம்பலாகக் கலந்திருக்கும் இந்நேரத்தில் கட்டுப்பாட்டைத் தளர்த்தி அவரும் பங்குபற்றினால் நன்றாக இருக்கும் என்றுதான் நானும் நினைக்கின்றேன் .........!1 point- "அன்புடன் தேன்மொழி"
1 pointஎல்லாருக்கும் இப்படி ஒரு அனுபவம் வந்து தான் போகும் போல, உடையார்? நீங்களும் கன்னி ராசிக்காரன் போல…!😔1 point- ஒண்ணே ஒன்று கேட்கணும்.
1 point"டிரம் " ஐ பார்த்து ஒண்ணே ஒன்னு கேட்கணும். பெர்மிஷன் வாங்காம பத்த மடப்பாயை போட்டிருக்கான் என்ற ஒரே காரணத்துக்காக..ஈவு இரக்கம் இல்லாம மனுஷனாக மதிக்காம .சங்கிலியால கட்டி சரக்கு பிளேனில லோட் பண்ணி விட்டிருக்க .....இதே 1950 1960 வாக்குல ரயில்ல டிக்கட் எடுக்காம ஒருவன் வந்தான் ...அவனை நாங்க ஓட்டுப்போட்டு சி எம் ஆக்கி ஆசியாவிலே பெரீய்ய...... பணக்காரனாக்கி நாலு தலைமுறையா அமோகமாக வாழ விட்டிருக்கோம் அந்த மனித நேயம் வேணாமா ரொனால்டுக்கு படித்தவை பபடித்தவை டித்தவை1 point- பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
1 point😂 யாருடைய விருதுக்காக இப்படி நடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை! தமிழகத்தில் எல்லோரும் தேவையென்றால், தமிழகத்தில் பல திராவிடக் கட்சிகளின் அடையாளமாக இருக்கும் பெரியாரைப் பற்றி போலித் தரவுகளையும் பொய்களையும் வைத்துக் கொண்டு வசவுகள் எறியும் சீமான் குழுவை அல்லவா நீங்கள் கண்டிக்க வேண்டும்? தனது போலித் தரவுகளில் "பிரபாகரன் தெளிவூட்டினார்" என்று ஈழத்தமிழர்களை இழுத்து விட்ட சாக்கடை அரசியல் வாதியை அல்லவா கண்டிக்க வேண்டும்? நீங்கள் கண்டிக்காமல் இருக்கக் காரணம் அவர் புலிக்கொடியையும் பிரபாகரன் படத்தையும் தாங்கியிருக்கிறார் என்பது மட்டும் தான். இப்போது கூட இந்தத் திரியில் றௌடிகளைக் கண்டிக்க உங்களால் இயலவில்லை. மாறாக றௌடிகள் செய்ததை மறைத்து, நிகழ்வை நடத்தியவர்களைக் குறை சொல்லும் ஒரு பதிவை மட்டும் தான் உங்களால் போட முடிந்தது.1 point- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
1 pointஉழைப்பை திருடிய திருமுருகன் காந்தி. | இனப்பாசத்தில் நடத்திய துரோகம் | ஆவணங்களை திருடுவதில் ...1 point- காற்றாடி
1 pointபொறுப்பான பிள்ளையாக இருந்திருக்கின்றார் புங்கை அண்ணா. என்னுடைய நான்கு நண்பர்களின் பெற்றோர்கள் நைஜீரியாவில் ஆசிரியர்கள், எஞ்சினியர்களாக வேலை செய்தவர்கள். நண்பர்களும் அங்குதான் பிறந்தவர்கள். அவர்களின் தந்தைமார்கள் எல்லோருமே வீட்டுப் பொறுப்பால் நைஜீரியாவுக்கு வேலைக்குப் போனவர்கள்.1 point- காற்றாடி
1 pointஎனது இளமைக் காலங்களில் ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில், சில வருடங்களைச் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதற்க்காகத் தொலைத்திருக்கிறேன், ரசோதரன்…! பிறக்கும் போதே ஈழத்தமிழ் ஆண் மகனுக்கென சில கடமைகள், அவனை முந்திப் பிறந்து விடுகின்றன அல்லவா? இப்போது நிலமை எவ்வாரோ தெரியாது!1 point- நடனங்கள்.
1 point - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.