Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்16Points19122Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்10Points3054Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்7Points38756Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/28/25 in all areas
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது எதிர் கட்சிகளின் அவதூறு உறவே. நம்ப வேண்டாம்🤣 பிறகு சண்டை பிடிக்கிறாங்கள் எண்டு எங்களை பழி சொல்லுங்கோ🤣 நாளைக்கு அவுஸ் வென்றால்…. அன்புமணி ஆகிய நான்….🤣6 points
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
தமிழ் கஞ்சா குடுக்கிகலோ, மறத்தமிழ் காவலிகளோ போவார்களோ, இல்லையோ என்று கவலைகொள்வோர், தமிழருக்கு நீதி, நியாயம் வேண்டி எதிர்ப்பு காட்டிய மானத்தமிழர்கள் ஒருசிலரை பாராட்டலாமே. இனப்படுகொலை செய்தவர்களை காவிய நாயகர்களாக புகழ்ந்து இசை பாடியவர்களை, அவர்களின் கொலைச் சாய முகங்களை கழுவி ஒப்பனை போட்டு கௌரவ படுத்தியவர்களை அவர்களின் அந்த செயல் தவறு என்று சுட்டிக்காட்டுவதில் தப்பில்லை.4 points
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
3 pointsபூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூனை கொஞ்சம் குனிந்த சுண்டெலி 'எந்த வகை ராஜதந்திரம்..........' என்று உதவிப் பூனையை மெதுவாகக் கேட்டது பூனைக் கூட்டம் துள்ளி விழுந்தன மின்சாரம் அடித்தது போல 'மியாவ் மியாவ்.......' என்று கத்தின நமக்கு இது அவமானம் என்று குறுகின நன்றி கெட்ட சுண்டெலி என்றன ஒரே ஒரு வார்த்தையால் அடிபட்ட பூனைகள் சுண்டெலிக்கு பொறி வைக்க வேலியில் நிற்கும் அந்தப் பூனையுடன் இனிப் பேசும்.3 points
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
நான் பிபிசி யில் வந்திருந்த காணொளிகளை பார்த்தேன். உலகில் ஒரு நாட்டின் சனாதிபதியை இன்னொரு நாட்டின் சனாதிபதி இவ்வாறுஅவமதித்ததை காணவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை. தாம் மிக உயர்ந்தவர்கள் என்றும், தம் உதவியின்றி வாழ முடியாது என்றும் மமதையில் இருக்கும் ஒருவரின் திமிர்தனமான செயல்பாடுகள் தான் ரம்ப் செய்வது. உக்ரைனுக்கு இந்த சந்திப்புக்கு முன்னர் இருந்ததை விட, அன் நாட்டு மக்களினது மட்டுமல்ல, பல நாடுகளில் இருந்தும் தார்மீக ஆதரவு இதன் மூலம் கிடைக்க போகின்றது.3 points
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
யாழ்களத்தில் நல்லவனாக இருந்தாலும் அடிக்கிறீர்கள் கெட்டவனா இருந்தாலும் அடிக்கிறீர்கள் . ஏன் வில்லங்கம் என்று உங்களை மாதிரியே இருந்து கொள்கிறோம் என்றாலும் அடிக்கிறீர்களே ....... எனக்ளுக்கு விமோசனம் கிடையாதா? இனப்படுகொலை உச்சத்தில் இருந்த நேரம் அதுக்கும் அதை முன்னின்று நடத்தியவர்களுக்கு வக்காலத்து வாங்கியர்களையும் பற்றி எழுதியபோது கிரிகெடையும் இனப்படுகொலையையும் ஏன் ஒன்றாக பார்க்கிறீர்கள் என்கிறார்கள் விடுதலைப்போரை கொச்சைப்படுத்தும் விதமாக பின்பு சினிமா எனும் போர்வையில் படங்கள் எடுத்தபோது அதுபற்றி எழுதும்போது சினிமாவையும் போரையும் ஏன் ஒன்றாக பார்க்கிறீர்கள் என்கிறார்கள் ஏன் வில்லங்கம் என்று நாம் வேறு வேறாக பார்த்து பழகுவதற்கு முடிந்த அளவில் முயறசி செய்யும்போது இப்போ இப்பிடி எழுதுகிறீர்கள் .........3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
3 points- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூர் ராசு(அதிமுக) தங்கம் தென்னரசு (திமுக) ராதாகிருட்டினண் (பாஜக) அனிதாகிருட்டினன்(திமுக) தளவாய் சுந்தரம் (அதிமுக) தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக) கனிமொழி , கீதா ஜீவன்(திமுக) எசி சண்முகம் VS தாமோதரன் VS காந்தி எவ வேலு அக்ரி VS கிருட்டிணமூர்த்தி திருமாவளவன் சந்திர காசி பூவை ஜெகன் கிருட்டினசாமி சான் பாண்டியன் எனக்கு தெரிந்தது கொஞ்சம் இன்னும் நிறைய இருக்கு.இவர்கள் எல்லாம் திராவிட தலைமைகளால் ஸ்பெசல் ஒப்பாயின்மென்ற் செய்யபட்டவர்கள் . தங்கள் தலைமையை யார் எதிர்த்து அறிக்கைவிட்டாலும் அவரின்ட குலம் கோத்திரம் அறிந்து ( சாதி ஒழிப்பு ? ) முன் களத்திற்கு வந்து நிற்பார்கள்.. ஆனால் சீமானுக்கு எதிராக வித்தியாசமான ஒப்பாயின்மென்ட் சுப வீரபாண்டியன் வீரமணி கொளத்தூர் மணி கோவை ராமகிருட்டினண் :: கொள்கைவழி ( ? ) விசயலட்சுமி / வீரலட்சுமி / சுந்தரவள்ளி / ஜோதிமணி /காளியம்மாள்..? (கொம்பு சீவப்படுவதாக கேள்வி ) ::பெண்கள் வழி ( ? ) ராஜீவ் காந்தி / தமிழன் பிரசன்னா / செந்தில்குமார்(திமுக) வன்னியரசு (வி.சிறுத்தைகள்) அர்ஜூன் சம்பத் :: அரசியல் வழி (?) காவல் துறை :: வருண் IPS / இப்போ பிரவீன் ராஜேஷ் :: இன்னும் தொடருமாம் .. சுருங்க கூறின் அவன் பொருளை எடுத்து அவனையே போடு என்பதாகும்.இதுவே திராவிட சித்தாந்தமாகும்3 points- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
தமிழ் நாட்டை இதுவரை ஆட்சி செய்த அனைவரும் தமிழர்களே. இனதூய்மை வாதம் பேசும் இனவெறி சீமான் கட்சி என்றுமே ஆட்சி பீடம் ஏறாது. ஆனால் மக்களிடையே நச்சு கருத்துகளை விதைக்கும் அயோக்கியத்தனத்தை அது மேற்கொள்ளும். இனதூய்மை வாத நஞ்சை மக்களிடையே விதைக்கும் சீமானும் கலப்பினம் தான். சீமானின் மனைவியும் கலப்பினம் தான். தான் கேரள வம்சாவழி என்பது மறைக்கவே சீமான் என்ற அயோக்கிய அரசியல் வாதி இனதூய்மை வாதத்தை பேசுகிறார். சீமான் என ற இனவெறியரை ஆதரிக்கும் எவருக்கும் சிங்கள இனவாதத்தை பற்றி பேச அருகதை இல்லை. சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவாதிகள் இந்த சீமானின் தற்குறி தம்பிகள்.2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பத்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்குத் தாக்குப் பிடித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, ராவிஸ் ஹெட்டினது அதிரடியான ஆட்டத்தால் 12.5 ஓவர்களில் 109 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை வந்து தடைப்பட்டது. போட்டி மீண்டும் மீள ஆரம்பிக்கமுடியாமையால் அவுஸ்திரேலியா வெற்றியை எட்டமுடியவில்லை. முடிவு: முடிவில்லை! எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. @goshan_che யின் ஒருநாள் முதல்வர் ஆகும் கனவும் இன்று நிறைவேறவில்லை! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மழை என் பதவி கனவுக்கு ஆப்பு வைத்து விட்டது 🤣🤣🤣. அன்பு மணியை மேற்கோள் காட்டும் போதே நினைச்சேன் அசிங்கபடும்படி ஆகும் என்று🤣🤣🤣 இந்தா ஆயிடுச்சே🤣2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தம்பி அன்புமணி முதலமைச்சர் பதவி மணக்குது. மேளதாளங்களுக்கு ஓடர் கொடுத்துட்டு காவல் இருக்கிறோம். ஆனால் எந்த மேளம் என்று கேட்கக் கூடாது.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
போரடிய உறவுகளுக்கு நன்றி. மஞ்சள் சிவப்பு நிறத்தை மட்டும் தாங்கி பிடித்திருக்கலாம், சின்ன-கொடி, பயங்கரவாதிகளின் எதிர்ப்பு என இலகுவாக கடந்து போகும் வாய்ப்பை இலங்கைக்கு கொடுத்திருக்கும். கஞ்சா குடுக்கியள், இசை வேறு, அரசியல் வேறு என நாக்கை பிரட்டி விட்டு, குப்புறபடுத்திருப்பார்கள். வீரம் எல்லாம் தமிழ் பெண்களிடமும் 60 வயது தாண்டியவர்களிடமும்தான்.2 points- கருத்து படங்கள்
2 points2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எப்போதும் தமிழன்தானே இப்போ முன்னுக்கு. அவரே முன்னாடி போகட்டும். ஆப்கான் அடிக்கிறான். அவுஸ்ஸ வீட்டுக்கு அனுப்பிறான்.2 points- பாட்டுக் கதைகள்
2 pointsஅப்பொழுது GELT வகுப்புகள் நடந்த காலம். ஜேவிபி பிரச்சனையால் பல்கலைகள் மூடியிருந்தன. நாங்கள் அனுமதி பெற்றுவிட்டு வீட்டிலேயே இருந்தோம். இப்படியே சும்மாவே இருக்கின்றார்களே என்று அரசாங்கம் இந்த வகுப்புகளை ஆரம்பித்தது. ஆங்கிலம் படிபித்தார்கள். அத்துடன் சில இடங்களுக்கு வேலை அனுபவம் அல்லது அறிமுகம் பெறவும் அனுப்பி வைத்தார்கள். வகுப்புகள் சில நாட்களில், வேலை சில நாட்களில் என்று போய்க் கொண்டிருந்தது என்று நினைக்கின்றேன். ஆங்கில வகுப்பின் நாலாம் நாள். நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் நடந்து கொண்டிருந்தது. வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் ஒன்று வந்து சுட்டார்கள். மேசைக்கு கீழே ஆங்கில ஆசிரியரையும் கண்டேன். அதற்குப் பின் நான் அந்த வகுப்புகளுக்கு போகவேயில்லை. அரசாங்கம் தான் நாங்கள் சும்மா இருக்கின்றோம் என்று நினைத்தது, ஆனால் ஊரில் நாங்கள் உண்மையிலேயே பிசியாக இருந்தோம்....................... வேலைக்கு கட்டாயம் போக வேண்டி இருந்தது. வரவு எடுத்து, அதை நிரப்பி, எங்கோ அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கச்சேரி, டிப்போ, துறைமுகம், மருத்துவமனை, இப்படியான இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பருத்தித்துறை டிப்போவிற்கு எங்களில் சிலரை அனுப்பியிருந்தனர். அதில் சிலர் அங்கிருந்த கராஜில் போய் புதினம் பார்த்தார்கள். சிலர் டிப்போ அலுவலகத்தில் நின்றனர். அங்கு எங்களின் பயிற்சிக் காலம் முடிந்த பின், பஸ் சேவையை எப்படி முன்னேற்றலாம் என்று எங்கள் ஒவ்வொருவரையும் கட்டுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தனர். நாங்கள் கூடிப் பேசி, நிறைகளையும் குறைகளையும் பட்டியலிட்டு, தீர்வுகளையும் கதைத்துக் கொண்டோம். தனித்தனியே எழுதியும் கொடுத்தோம். பின்னர் ஒரு நாள் எங்களை எல்லாம் டிப்போவிற்கு கூப்பிட்டிருந்தனர். எல்லோரையும் பொதுவாக பாராட்டி விட்டு, எங்களில் ஒரே ஒரு ஆள் மட்டும் கண்டைதையும், கடியதையும் எழுதியிருக்கின்றார் என்று கோபப்பட்டனர். இனிமேல் இவர்கள் எவர்களையும் நம்பவே கூடாது அன்று நினைத்தேன்................🤣.2 points- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
அப்பவே, 2011ம் ஆண்டில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றினார்கள் என்று தான் விஜயலட்சுமி சொல்கின்றார். சமயாசாரப்படி நடந்த விவாகம் என்று ஒன்று ஊரில் இருப்பது போல. நீங்கள் சொல்லியிருப்பது தான் அண்ணா மிக எளிய தீர்வு. இருவருமே ஒன்றாக வாழ்ந்திருப்பதால் இதை ஏற்றுக் கொண்டு போவது தான் சரி. தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒரு மனைவியா அல்லது ஒன்றுக்கு மேலா என்பதெல்லாம் பிரபலங்களுக்கும், அரசியலுக்கும் ஒரு பொருட்டே அல்ல. மேலும் சீமானின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் எவரும் அவர் இதை ஒத்துக் கொண்டால் கூட, அவரை விட்டு நீங்கப் போவது கிடையாது. தமிழ் தமிழ் என்று சொல்லி விட்டு, அவரின் மகனே தமிழில் படிக்கவில்லை என்பது வெளியில் தெரிந்த போது, அவரின் ஆதரவாளர்கள் எவராவது அதன் காரணமாக விலகினார்களா............ இல்லைத்தானே, மாறாக அவரின் தெரிவை நியாயம் தான் செய்தார்கள். யார் முதல் மனைவி, அதன் காரணமாக சொத்துரிமை என்பதில் சிக்கல் வரும் தான். கயல்விழி வீட்டில் இருந்து வந்ததவைகள் அவருக்கே சொந்தமாகும், ஆனால் இவர் சேர்த்தவைகளை பிரிக்கத்தான் வேண்டும். திமுக இதை வேண்டும் என்றே தான் செய்கின்றது. இது மட்டும் இல்லை, இன்னும் பல வழக்குகள் இவர் மேல் சமீபத்தில் போடப்பட்டன. நேற்று இன்னொரு சம்மனும் ஈரோட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருக்கின்றார்கள். 'வெடிகுண்டு எறிவேன்.................' என்று சமீபத்திய இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதால் வந்த வழக்கு அது. இதைவிட பெரியார் பற்றி இவர் பேசியதை ஒட்டி பல ஊர்களில் வழக்கு போடப்பட்டிருக்கின்றது. வருண் ஐபிஎஸ் வழக்கும் இருக்கின்றது. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக, மேடையில் எதையும்பேசலாம் என்றில்லை. எவரையும் எந்த சொல்லாலும் இழிவுபடுத்தலாம் என்றில்லை. இணையத்தில் அநாகரீகமாக தனிமனிதர்களையும், குடும்பங்களையும் சித்தரிக்கலாம் என்றில்லை. மீறி, இவர் கட்டுப்பாட்டை இழந்ததால், அதுவே பூமராங் போல சுழன்று கொண்டு திரும்பி வருகின்றது இப்பொழுது .........................1 point- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
நானும் இப்படி எழுதுவதால் விளக்கம்: சீமான் இனதூய்மைவாதம் பேசாவிடில் இதை நான் கதைக்கபோவதில்லை. ஆனால் அவர் தூய (இனத்தூய்மை) தமிழர் மட்டுமே ஆளவேண்டும் என்கிறார். ஆனால் அவரோ மலையாளி, அவரின் மனைவியோ தெலுங்கு+தமிழ் கலப்பின வழித்தோன்றல். இது கபடத்தனமாது. இதை சுட்டுவது இனவாதம் ஆகாது. உதாரணமாக நைஜல் பராஜ்தான் ஜேர்மன் பெண்ணமணம் முடித்து, தன் பிள்ளைகளுக்கு ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்தப்படியே, பிரெக்சிற்றினை நடத்தினார். அதை விமர்சித்தோம். அதேபோலத்தான் இதுவும். தமிழர் தலையில் மிளாகாய் அரைக்கபார்க்கிறார்.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு மாதிரி கோசானின் முதலமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்துவிட்டீர்கள், இந்த மழை திருப்பத்தினை நான் எதிர்பார்க்கவே இல்லை, இந்த் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றால் கோசான் முதலைம்ச்சராகலாமா? இந்த் போட்டியில் கோச்சானை வாழ வைத்த தெய்வமும் காலை வாரினால் என்ன ஆகும்?1 point- உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
மற்ற நாட்டவர்கள் இப்படியான ஒரு நாளை கரிநாள் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள்.............. நாங்கள் ஒவ்வொரு நாளிலும் இந்த அரசின் அறிவிப்புகளைப் பார்த்து, ஒரு கரித்துண்டாகவே நிற்கின்றோம்......................☹️. ஆனால் இப்படியானவைக்கும் இங்கு இந்த நாட்டில் வரவேற்புகள் இருக்கின்றன...............🫣. இன்று நடந்த நிகழ்வில் இருந்து இந்த வரி தான் வரலாற்றில் நிலைத்து நிற்கும் போல.............😜.1 point- லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
விமோசனம் இருக்கு ....உங்கள் ஜாதகப்படி இப்பொழுது இனபடுகொலையாளிகள் வக்கிரமடைந்து இடதுசாரி ஆட்சியின் உச்சத்தில் உள்ளது இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த ஆட்சி தொடரும்,இந்த கால கட்டத்தில் நீங்கள் மிகவும் அவதானமாக செயல் பட வேணும் ,யாழ் கள உறவுகளுடனோ',ஏனைய நண்பர்களுடனோ கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும்.... பரிகாரம்..உங்களுக்கு விரும்பிய பூக்களாகிய லைக்,ஹா ஆஹா,தடுமாற்றம்,சோகம்,மைனஸ்1 போன்ற பூக்களை போட்டு உங்களுக்கு வரும் மனதொல்லைகளில் இருந்து விமோசனம் பெறலாம்.. மைனஸ்1 பூஜைக்கு உகந்தது அல்ல ...அதை பாவிக்கும் பொழுது மிகவும் அவதானம் வேண்டும்.. இனபடுகொலையாளிகளை இனப்படுகொலையாளியாக பாருங்கள் ....அவர்களை ஆதரியுங்கள் வரவேற்பு செய்யுங்கள் ....(தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை மட்டும்...உங்கள் ஆதர்வுக்கு ட்ரம்ப் மற்றும் நெத்தியாகுவை துணைக்கு வைத்திருங்கள் ... ஏனைய இனங்களை(தமிழர் அல்லாத ) படுகொலை செய்தவர்களுக்கு எதிராக குரல் கொடுங்கோ....ஹமாஸ்,பலஸ்தீனம்....ஆதரவாக ...1 point- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இதே புரிதல் சீமானுக்கு இருக்க வேண்டும். சீமானின் சாக்கடைத் தனமான அரசியல் உத்திகளை ரசிக்கும் தீவிர சீமான் தம்பிகளுக்கும் இருக்க வேண்டும். தற்போதைய நிலையின் படி, இந்த இரு தரப்புகளும் மாறப் போவதில்லை (தங்களுக்கு இன்பம் தரும் ஒன்றை யார் மாற்றுவர்?). எனவே, நா.த.க நச்சுச் செடியாகத் தொடரப் போவதே நடக்கும்!1 point- உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
காணொளி நாட்டு வருகை தந்த ஒருவரை இவ்வாறு அவமானப்படுத்தியது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.1 point- லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
ரசியுங்கோ...இன்று தமிழில் பாடுவது ,தமிழில் அரசியல் பேசுவது எல்லாம் தமிழுக்கே ஆபத்தாக வந்து நிற்கும் ..அது தான் நியதி,நியாயம் என்றால் யாரால் தான் தடுத்து நிறுத்த முடியும்...1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதான் வச்சு செஞ்சிட்டே🤣 அவிங்க சூனியத்யில மழைய வைக்க🤣 நம்பிக்கையில்லா பிரேரணை ஒரு வாக்கில் தோல்வி🤣 எவரோ சீப்ப ஒழிச்சிட்டாங்க சார்🤣1 point- தனித்தே போட்டி; சுமந்திரன் அறிவிப்பு
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தங்களின் தோல்வி, அங்கு பெய்யும் மழை எல்லாவற்றுக்கும் என்ன காரணம் என்று பாகிஸ்தான் கண்டுபிடித்துவிட்டது....................1 point- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாமழும் பின்னாலதான் நிக்கிறம். எங்களையும் கூட்டிக்கொண்டு போறது. தனிய போக நினைக்கப்படாது.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
அண்ணை, சம்மனை கிழித்த பின் கேற்றைத் திறந்து உள்ள போன பொலீஸ் அதிகாரி, சிவில் உடை அதிகாரிகள் சம்மனை வீட்டில் சென்று வழங்கி இருக்கலாம்/கட்சி அலுவலகத்தில் வழங்கி இருக்கலாம்! இது பரபரப்பிற்காக அல்லது வேறொன்றை திசைதிருப்ப செய்ததாக இருக்கலாம்.1 point- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
வணக்கம் 🙏. நான் இந்த இழுபறிகள். பற்றி கதைக்க விரும்பவில்லை ...இந்த பிரச்சனை எல்லாம் மூலம் என்ன ???. அது உண்மையா. ?? உண்மையா ??? உண்மையா.??? இந்த சீமான் அந்த பெணணுடன். பல ஆண்டுகள் குடும்பம் நடத்தியது உண்மையா. ?? உணமை எனில் அவளுக்கும். ஒரு தாலியை கட்டி னால். இந்த பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்து விடும் 🤣😂🙏 இங்கு சீமான் நான் குற்றம் அற்றவன். என்று ஏன் உறுதிப்பாடுத்த முடியாது ?? முதலில் சீமான் செய்ய வேண்டியது நான் குற்றம் அற்றவன். என்று நிறுவது தான் அதை விட்டுட்டு திமுக கள்ளர் .....பழி வாங்குகிறார்கள் ....பயப்படுகிறாரகள் ..என்றும் அந்த பெண் பொய் சொல்கிறார் விபசாரி. பணம் பறிக்கப். பார்கிறாள்.......இப்படி சொல்வது. சீமான் குற்றமாற்றவர். என்பது ஆகி விடாது நான் ஒரு குற்றம் அற்றவர் என்று 15. ஆண்டுகளாக நிறுபிக்க. முடியாத ஒருவர் எப்படி ஒரு கட்சியின் தலைவராக முடியும்??? தமிழ்நாட்டில் எப்படி முதல்வர் ஆக முடியும் ?? சிவப்பு புள்ளி கருத்து ஆகி விட முடியாது,.....ஆகவே எதிர் கருத்துகளை எழுதுங்கள் சீமான் குற்றம் அற்றவர் என்று நிறுவுங்கள். குறிப்பு,...சீமான் நடவடிக்கைகள் நான் குற்றவாளி என்று சொல்கிறது இந்த வழக்கு விடயத்தில் மட்டும் எனவே… இவரை குற்றவாளி என்று நிறுவது பொலிஸ்த்துறைக்கும். நீதிமன்றக்கும். மிகவும் இலகுவானது 🙏. வணக்கம் யாழ் கள உறவுகள் சீமான் ஆதரவளார்கள். என் மீது தயவுசெய்து கோபம் கொள்ள வேண்டாம்1 point- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
1 point- விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
அவசியமற்ற அலம்பல். HuffPostHere’s Exactly What Happens When Someone Dies On A Plane...In-flight deaths are rare, but there's a process for handling the situation when it does arise.There are specific procedures for securing the deceased person’s body in a way that respects their dignity and shows sensitivity to their travel companions and others on the plane. “To handle the body with dignity and respect while ensuring minimal disruption to other passengers, the crew covers the deceased passenger with a blanket,” Alves said. “Nearby passengers may be moved to other seats if space permits. The body may be moved to a less populated area, such as an empty row, if available. Otherwise, the body is secured in the original seat with the seatbelt fastened to prevent movement during the flight.” Dead body placed beside Australi...Dead body placed beside Australian couple on Qatar Airway...Cabin crew placed the body of a passenger who died mid-flight in an empty seat beside the pair.செய்தியின் அடிப்படையில் இறந்தவரை இவர் அருகில் கொண்டுவந்து வைத்துள்ளனர். Mr Eustance said that, while he was not being judgemental as he did not know the full situation, he was surprised that the crew did not move Mr Ring if there had been spare seats. "I would expect the crew would do all they could to avoid that. You are creating potential future liabilities in terms of the trauma of the people next to whom the body was placed," he said. "In my experience the crew would normally try to isolate the body, so there is no passenger exposure to the body and vice versa, for respect and privacy but also for medical reasons. You have a dead body that is uncontained and all that goes with it." சிலவேளை விமான ஊழியர்களுக்கு வழங்கப்படாத ஸ்பெஷல் ட்ரைனிங் இன் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் மிஸ்டர் நியாயத்திற்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கலாம்1 point- பாட்டுக் கதைகள்
1 pointஅவரே தான்...................👍. அவருடைய மகன் ஒருவரும் நானும் பாடசாலையில் ஒரே வகுப்பு, ஆனால் வெவ்வேறு டிவிசன். பரஞ்சோதி மாஸ்டர் நல்லாத்தான் படிப்பித்தார் என்று நினைக்கின்றேன்........... எனக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை.................🤣. இப்பவும் இங்கே இராணுவ ஹெலிகாப்டர்கள் தாழப் பறந்து போகும் போது, பழைய ஞாபகங்கள் வரும்..................1 point- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
1 point- ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின!
மன்னிக்கவும் ..எதிர்கட்சி என்ற காரணத்தினால் இவர் எமது தோழர் அனுரா மீது இப்படியான கேலி செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோம் ... வஇமானத்தை ஒட்டி சென்றது நமது தோழர் தான் என்ற தகவல் தெரியாமல் புலம்புகின்றார் . முப்படை தளபதி அவர்...ஆகவே பாதுகாப்பு வீரர்கள் தேவையில்லை விமானம் அரசு உடமை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திக்கு ஓட்டி செல்ல சகல உரிமையும் உண்டு(இராவணன் புஸ்பக விமானத்தை அவனே செலுத்தி சென்று சீதையை சிறிலங்காவுக்கு கடத்தி வந்தவன் ..ஆகவே இராவண பலகேயாவின் வாரிசு நம்ம தோழர்)1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையேயான ஒன்பதாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது. எனவே யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோருக்கும் மழை முட்டைகளைப் பொழிந்துள்ளது! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):1 point- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
சீமான் மீதான வழக்கு: சம்மன் கொடுத்த இடத்தில் நடந்த சம்பவம்... பின்னணி என்ன? நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011-ம் ஆண்டு ஜீன் மாதம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால் ஏழு தடவை கர்ப்பம் அடைந்து அதை கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சீமான் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன்பேரில் வளசரவாக்கம் போலீஸார், சீமான் மீது மோசடி , கொலை மிரட்டல் , பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட (417,420,354,376, 506(1)) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சீமான் தரப்பு நடிகை விஜயலட்சுமியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த வழக்கில் மனவருத்தமடைந்த நடிகை விஜயலட்சுமி, வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறினார். அதனால் சீமான் தரப்பு, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி சீமான் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.. அதுமட்டுமின்றி சீமான் மீது உள்ள வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்திருக்கிறது. நீதிமன்றத்தில் உத்தரவின்பேரில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸார் கடந்த சில தினங்களாக விசாரித்தனர். அப்போது விஜயலட்சுமி, சீமானுக்கு எதிரான சில முக்கிய ஆதாரங்களையும் தகவல்களையும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சீமானிடம் விசாரிக்க அவருக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திலிருந்து கடந்த 24-ம் தேதி முதல் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் பிப்ரவரி 27-ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணக்கு ஆஜராகும்படி குறிப்பிட்டிருந்தது. ஆனால் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதோடு, அவர் தரப்பில் வழக்கறிஞர்கள் டீம் காவல் நிலையத்தில் ஆஜராகி, ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக சீமான் ஆஜராகி எழுத்துபூர்வமாக விளக்கம் கொடுத்துவிட்டார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாக போலீஸாரிடம் கூறினர். ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர்களின் விளக்கத்தை வளசரவாக்கம் போலீஸார் ஏற்றுக் கொள்ளவில்லை. நடிகை விஜயலட்சுமி அதனால் பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டில் இரண்டாவது சம்மனை வளசரவாக்கம் போலீஸார் ஒட்டினர். போலீஸார் அங்கிருந்து சென்றதும் சீமான் வீட்டிலிருந்து வந்தவர், அந்த சம்மனை கிழித்தெறிந்தார். அதனால் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான போலீஸார், சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சீமான் வீட்டுக்குச் சென்றனர். அப்போது சீமான் வீட்டுக்குள் போலீஸார் நுழைய முற்பட்டனர். அவர்களை காவலாளி ராஜ் தடுத்தார். அப்போது போலீஸாருக்கும் சீமான் வீட்டு காவலாளி ராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கைகலப்பாக மாறியது. அதைத் தொடர்ந்து காவலாளி ராஜை போலீஸார் பிடித்து போலீஸ் வாகனத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது ராஜிடம் கைத்துப்பாக்கி இருப்பதைக் கவனித்த போலீஸார் அதை பறித்தனர். ஆனால் ராஜ், நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்னுடைய பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வைத்திருக்கிறேன் என்று கூறினார். அப்போது ராஜிக்கும் போலீஸாருக்கும் போலீஸ் வாகனத்துக்குள்ளேயே கடும் போராட்டம் நடந்தது. இறுதியில் ராஜிடமிருந்து போலீஸார் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து சீமான் வீட்டிலிருந்த சுபாகர் என்பவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரையும் போலீஸார் பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. சீமான் இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் கூறுகையில், ``நாங்கள் சம்மனை ஒட்டிவிட்டு நாளை (28-ம்தேதி) ஆஜராகும்படி கூறிவிட்டு வந்துவிட்டோம். அதன்பிறகு சம்மனை சீமான் வீட்டிலிருந்தவர்கள் கிழித்திருக்கிறார்கள். இந்தத் தகவலைத் தெரிந்து விசாரிக்க நீலாங்கரை போலீஸார் சென்றபோதுதான் அவர்களை காவலாளி ராஜிடம், ஊழியர் சுபாகரும் மிரட்டியிருக்கிறார்கள். நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். சீமான் வீட்டில் நடந்த சம்பவத்தை நீலாங்கரை போலீஸார் விசாரிக்கிறார்கள்" என்றனர். இதுகுறித்து நீலாங்கரை போலீஸாரிடம் கேட்டதற்கு, ``சம்மனை ஏன் கிழித்தீர்கள் என விசாரித்துக் கொண்டிருந்தபோது அவதூறாக எங்களை காவலாளியும் அங்கிருந்த ஊழியரும் பேசினர். அதனால் அவர்களைப் பிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறோம். காவலாளி ராஜிடமிருந்து துப்பாக்கி ஒன்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றனர். சீமான் மீதான வழக்கு: சம்மன் கொடுத்த இடத்தில் நடந்த சம்பவம்... பின்னணி என்ன? | Complaint case against Seeman: police arrested Seeman house security - Vikatan1 point- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு காவல் நிலையத்தின் காவல் அதிகாரி, கொலைத் திட்டம் குறித்து ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த பொலீஸ் அதிகாரி கைதை குறிப்பிடுகிறார்கள் அண்ணை.1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
1 pointஅடுத்த பத்து வருடங்களுக்கு 4.5 டிரில்லியன் டாலர்கள் வரிக் குறைப்பிற்கு திட்டம் போட்டுள்ளனர். செலவில் 2.0 டிரில்லியன் குறைக்கும் திட்டமும் இருக்கின்றது. சரி, இவர்களால் செலவில் இரண்டு டிரில்லியனைக் குறைக்க முடியும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், இந்தக் கணக்கில் மட்டும் துண்டு விழும் 2.5 டிரில்லியன் டாலர்களுக்கு எங்கே போவது........... இன்னும் பல கவர்ச்சிகரமான திட்டங்கள், லலிதா ஜூவலரி விளம்பரங்கள் போல, வரும் போல....... நான் முதலில் தலைப்பை மட்டும் வேறொரு இடத்தில் பார்த்து விட்டு, ஏதோ ஒரு புதுவகை கிரெடிட் கார்ட் போல என்று போக, பிறகு தான் தெரிந்தது இது அமெரிக்கக் குடியுரிமை என்று....... எங்களின் பெண்களிடம் ஒரு பழக்கம் இருக்கின்றது. எப்பவும் ஒரு சிறியளவு காசையாவது மாதம் மாதம் எடுத்து, காசாகவே சேர்த்து வைத்துக்கொள்வார்கள். அது அவர்களின் ஒரு திருப்தி என்று விட்டுவிட வேண்டியது தான்............... நாடு போகிற போக்கில், இங்கு ஒவ்வோரு வீடாக போய், இந்த அரசாங்கம் அதையும் கேட்டு வாங்குவார்கள் போல......1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- சிரிக்கலாம் வாங்க
1 pointபஸ்ஸில் ஒருவன் சிகரெட் பற்ற வைத்தான் உடனே நடத்துநர் தம்பி சிகரெட் பிடிக்காதே சுற்று சூழல் எவ்வளவு பாதிக்குது தெரியுமா என்றார் , உடனே அவன் நடத்துநர் பார்த்து சொன்னான் யோவ் பின்னாடி பார் உன் பஸ் விடும் புகையை ! நடத்துநர் சொன்னார் வரும் ஸ்டாப்பிங்ல பஸ் நிற்காது ? உடனே ஒரு பயணி கேட்டான் ஏன் என்று! நடத்துநர் சொன்னார் இது எக்ஸ்பிரஸ், வேகமாக செல்லும் வண்டி என்று! உடனே அவன் சொன்னான் எங்களுக்கு வேகமாக போய் ஒன்றும் ஆக போவதில்லை மெதுவா ஓட்ட சொல்லு டிரைவரை என்றான். இப்பொழுது அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்தது உடனே அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்! உடனே நடத்துநர் பஸ்சை நிறுத்தி மரியாதையாக இறங்கி விடு ! என்று சொல்ல ! அவன் நன்றி நடத்துநர் சார் ! நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் இது தான் என்று சொல்லி விட்டு இறங்கினான்!1 point- லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
பெளசரின் வாசகர் வட்ட கூட்டத்தை குழப்பிய கஞ்சா குடுக்கியள் இந்த பக்கம் தலைவைத்தும் படாயினம்.1 point- உணர்வுகள் அந்தக்காலத்தில் ௐ
1 pointஅந்த காலம் . ஊசி போடாத Doctor. சில்லறை கேட்காத Conductor .. சிரிக்கும் police... முறைக்கும் காதலி .. உப்பு தொட்ட மாங்கா .. மொட்டமாடி தூக்கம் .. திருப்தியான ஏப்பம்... Notebookன் கடைசிப்பக்கம் ... தூங்க தோள் கொடுத்த சக பயணி .... பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்.. இப்பவும் டேய் என அழைக்கும் தோழி .. இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா... கோபம் மறந்த அப்பா .. சட்டையை ஆட்டய போடும் தம்பி.. அக்கறை காட்டும் அண்ணன்.. அதட்டும் அக்கா ... மாட்டி விடாத தங்கை.. சமையல் பழகும் மனைவி ... சேலைக்கு fleets எடுத்துவிடும் கணவன் .. வழிவிடும் ஆட்டோ காரர்... High beam போடாத லாரி ஓட்டுனர்.. அரை மூடி தேங்கா .. 12மணி குல்பி .. sunday சாலை ... மரத்தடி அரட்டை ... தூங்க விடாத குறட்டை ... புது நோட் வாசம்.. மார்கழி மாசம் .. ஜன்னல் இருக்கை .. கோவில் தெப்பகுளம் .. Exhibition அப்பளம்.. முறைப்பெண்ணின் சீராட்டு ... எதிரியின் பாராட்டு.. தோசைக்கல் சத்தம் .. எதிர்பாராத முத்தம் ... பிஞ்சு பாதம் .. எளிதில் மணப்பெண் கிடைத்தாள்., வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது ., சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்., முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்., மிதி வண்டி வைத்திருந்தோம்., எம்ஜிஆர், கலைஞர் உயிரோடு இருந்தார்கள். ரஜினி, கமல் படம் ரிலிஸ். கபில் தேவின் கிரிக்கெட் . குமுதம், விகடன் நேர்மையாக இருந்தது. வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்., எல்லோரும் *அரசு* பள்ளிகளில் படித்தோம்., சாலையில் எப்போதாவது வண்டி வரும்., தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்., மயில் இறகுகள் குட்டி போட்டன, புத்தகத்தில் ., மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, ஆங்கிலம் ., ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர் ., பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் ., எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.., கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா அழகி* ... பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ... கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை ... 7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் #பாட்டி.. பாட்டியிடம் பம்மும் #தாத்தா ... எல்லா வீடுகளிலும், #ரேடியோவிலும், கேசட்டிலும் பாடல் கேட்பது சுகமானது வீடுகளின் முன் #பெண்கள் காலையில் கோலமிட்டார்கள், மாலைப்பொழுதுகளில் வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள் #சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம் ஆடி 18 #தீபாவளி பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம் பருவ பெண்கள் #பாவாடை தாவணி உடுத்தினர்., சுவாசிக்க #காற்று இருந்தது., #குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை., தெருவில் சிறுமிகள் #பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் #நுங்கு வண்டி ஓட்டுவோம்., இதை எழுதும் நான் .. படிக்கும் நீங்கள் .. இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க .. கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்.., அனுபவித்தவர்கள் யார்? யார்? மனசுக்குள் ஒரு நமட்டு சிரிப்பு வருமே!! உண்மையா? இல்லையா? David Samuel Rajah.1 point- புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!
முத்துக் குமரனின் அழகு தமிழ் கேட்க இனிமையாக இருக்கும்.நல்ல தமிழ் கற்று சான்றோரின் கைகளால் புனையப்படட அழகு சிலைபோல. செந்தமிழ் கேட்க சிலிர்க்கின்றது தமிழ் உள்ளம்.1 point- புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!
இந்தக் அருந்தமிழ் இடம்பெற்ற நிகழ்ச்சி மீது எனக்கு வெறுப்பிருந்தாலும்..... அந்த தமிழை மீண்டும் மீண்டும் கேட்க ஆர்வமூட்டியது.💪 பகிர்வுக்கு நன்றி அன்புத்தம்பி 👈1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025