Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    38756
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19129
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/10/25 in Posts

  1. விஜய் மட்டுமல்ல, நியாயமாக சிந்திக்க கூடிய ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பின், அவர்கள் செய்யக் கூடியது மக்களைத் திரட்டி போராட்டம் அல்ல. மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டிச் சென்று, அயலக மீனவர்களின் மீன்வளத்தை கொள்ளையடிக்க வேண்டாம் என்று சொல்வதே. கடல்வள கொள்ளையர்கள் தம் செயல்களை நிறுத்துவதைத் தவிர இந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் இல்லை. ஸ்டாலினில் இருந்து, சீமான் மற்றும் விஜய் வரைக்கும் இதைச் சொல்லும் துணிவு அற்றவர்கள்.
  2. அவளைத் தொடுவானேன்...? சிறு வயதில் இருந்தே இசை நாடகம் பாடல்களில் ஈடுபாடு அதிகம் எனக்கு. சாதாரண தரப் பரீட்சையில் சங்கீதத்தில் செய்முறை அதாவது பாடி 60 க்கு 58 புள்ளி எடுத்து அதி சித்தி (D) எடுத்திருந்தேன். அத்துடன் நகைச்சுவை என்னோடு கூடப் பிறந்தது. இதனால் என்னை சுற்றி எப்பொழுதும் ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் கூட்டமும் நான் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் இருக்கும். அந்த நேரத்தில் தான் தென் பகுதியில் படித்து கொண்டு இருந்தவள் எங்கள் ஊருக்கு வந்தாள். அவள் நடக்கும் போது காலடிகளில் இரத்தம் பொக்களிப்பது தெரியும் அந்த அளவுக்கு அவள் வெள்ளையாக இருந்தாள் அத்துடன் தென் பகுதியில் படித்ததால் அவள் தமிழ் இன்னொரு வகை தேனாக இனிக்கும். கேட்க கேட்க கேட்க தோன்றும். அவள் என்னிடம் பாடச்சொல்லி கேட்பாள். நான் அவளை பேசு என்பேன். இப்படி தான் அறிமுகமானோம். அவள் என் கையை எப்பொழுதும் பிடித்துக் கொள்வாள். இதற்கு மேல் தாங்காது நான் அவளை தொட்டேன்..... காலம் என்னை தூக்கி கொழும்பில் போட்டது. தொடர்பு அறுந்தது. தொடரும்.....
  3. யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.
  4. யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.
  5. சுற்றுலா, வேலை, நண்பர்கள் சந்திப்பு, கொண்டாட்டம் என்று வெளியே சில நாட்கள் நாம் போய் இருந்து விட்டு வந்தாலும், வீட்டுக்கு திரும்ப வந்து சொந்தக் கட்டிலில் நித்திரை கொள்வது எப்போதும் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிம்மதியையும் தரும். அது தான் வீட்டின் தனித்துவமான தன்மை. ஆனால் தனது வீட்டில், தனது கட்டிலில் படுத்திருக்கும் காஞ்சனாவுக்கு மட்டும் நித்திரையும் வரவில்லை. அமைதியும் கிடைக்கவில்லை. இருட்டில் விழித்தபடி இருந்தாள். “நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்” அவளது தந்தை சொன்ன போது அவள் பதில் சொல்லவில்லை. யேர்மனியில் பிறந்து வேறு ஒரு கலாச்சாரத்துக்குள் வாழும் தனக்கு நாட்டில் இருந்து வரும் மாப்பிள்ளை ஒத்து வருமா? என்ற கேள்வியுடனே சில நாட்கள் போனது. அவளது நண்பிகளே கேட்டார்கள், ”என்னது? முன்பின் தெரியாத ஒருவன். நேரில் கூட பார்க்கவுமில்லை. உங்களுக்கு எப்பிடி இது சாத்தியமாகிறது?” அவர்களது கேள்வியிலும் உண்மை இருந்தது. காஞ்சனாவுக்கு ஐந்து வயாதாக இருக்கும் போது நடந்த கார் விபத்தில் தாயை இழந்திருந்தாள். அதன் பிறகு அவளது தந்தையே அவளுக்கு எல்லாமுமாக இருந்தார். எத்தனை பேர் கேட்டும், தனக்கு இன்னுமொரு கலியாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து தனக்காக வாழும் தந்தையை எப்போதும் அவள் உயரத்திலையே வைத்திருந்தாள். அவரது வார்த்தைக்கு அவள் மறு பேச்சு சொன்னதும் இல்லை. சீதனமாக ஒரு இலட்சம் யூரோ, நகை, ஊரில் அவர்களுக்கு இருந்த காணி, பூமி, சிறீலங்காவில் இருந்து கல்யாணத்துக்கு உறவினர்கள் யேர்மனிக்கு வந்து போவதற்கான பயணச் செலவுகள், கல்யாணச் செலவு… என்று ஏகப்பட்ட செலவுகளுடன் எங்கள் நாட்டுக் முறைப்படி கரை சேர்ந்தாள் காஞ்சனா. கல்யாணம் முடிந்து ஒரு மாதம்தான். விடுமுறை முடிந்து விட்டது. பிரச்சினையும் தொடங்கி விட்டது. அன்று வேலை முடிந்து வீட்டுக்கதவைத் திறந்த போதே வீட்டில் புயல் மையம் கொண்டிருந்ததை காஞ்சனா விளங்கிக் கொண்டாள். “நேரம் என்ன எண்டு தெரியுதோ?” “நீங்கள்தானே கையிலை Mobile வைச்சிருக்கிறீங்கள். Mobile இலை நேரம் என்ன display செய்யேல்லையோ?” “எனக்குத் தெரியுது? உனக்குத்தான் தெரியேல்லை. ஒரு பொம்பிளை வீட்டுக்கு வாற நேரமே இது? “ “இப்பத்தானப்பா வேலை முடிஞ்சுது” “இரவு ஒன்பது மணிக்கோ? எல்லாரும் office முடிஞ்சு ஐஞ்சு ஆறு மணிக்குள்ளை வீட்டை போயிடுவாங்கள். உனக்கு மட்டும் ஒன்பது பத்து மணியாகுது” “இண்டைக்கு வேலை கூட. அதை முடிக்காமல் வரேலாது. அப்பிடி வந்து மிச்ச வேலையைச் செய்ய நாளைக்குப் போனால், ஒவ்வொரு நாளும் போக வேணுமோ எண்டு புராணம் பாடத் தொடங்கீடுவிங்கள்” “மகள் home office தான் செய்யிறாள். எப்போதாவது மாதத்திலை ஒண்டு இரண்டு நாட்களுக்குத்தான் officeக்குப் போவாள் எண்டு சொல்லித்தானே கலியாணம் செய்து வைச்சவை. “உண்மை. ஆனால் என்ரை வேலை அப்பிடி. சில வேலைகளை office க்குப் போய்த்தான் செய்யோணும்” “எனக்கென்னவோ நீ வேலைக்காக office க்குப் போறதாத் தெரியேல்லை” “மாதவன், களைச்சுப் போய் வந்திருக்கிறன். நல்லமுறையிலை கதையுங்கோ. சிறீலங்காவிலை இருக்கிற ஊர் வாழ்க்கையை இங்கை உள்ள வாழ்க்கை முறையோடை ஒப்பிட்டுப் பார்க்காதையுங்கோ. அங்கை உள்ள சூழல் வேறை. இங்கை வேறை. “நாங்கள் தமிழர்கள். எங்கை வாழ்ந்தாலும் எங்களின்ரை பண்பாடுகளை மாத்தேலாது. இரவு ஒன்பது பத்து மணிக்கு வீட்டுக்கு வாறதை என்னாலை ஒத்துக் கொள்ளேலாது” “முதலிலை நானும் மனித இனம் எண்டதை ஒத்துக் கொள்ளுங்கோ. எங்கடை கலாச்சாரம், பண்பாடுகள்... என்னை அடிமைப் படுத்தும் எண்டால் எனக்கு அது தேவையில்லை” “கலியாணம் பேசக்கை நீ நல்ல பிள்ளை, பண்பான பிள்ளை எண்டெல்லாம் எனக்குச் சொல்லிச்சினம். உடுப்பு, ஆளின்ரை நடை, செயல்பாடு எல்லாம் இஞ்சை வேறையாக் கிடக்கு” மனம் ஒரு நிலையில் இல்லாமல் கட்டிலில் நித்திரையின்றி தவித்துக் கொண்டிருந்த காஞ்சனா, அலைபேசியில் ஒலித்த “ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்“ பாடலைக் கேட்டு கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டாள். அந்தப் பாடலை தனது தந்தையின் தொலைபேசி அழைப்பாக அவள் அலைபேசியில் பதிவு செய்திருந்தாள். கட்டிலில் இருந்த படியே அலைபேசியைக் கையிலெடுத்து “சொல்லுங்கோ அப்பா” என்றாள். “மாதவன் ரெலிபோன் எடுத்தார்” “எடுப்பார் எண்டு எனக்குத் தெரியும்” “கதவைத் திறக்கேலாதாம் உனக்கு போன் எடுத்தால் answer இல்லையாம்” “அவராலை கதவைத் திறக்க ஏலாது. நான் கதவின்ரை பூட்டை முழுசா மாத்தீட்டன். Phoneஇலையும் அவரை block செய்திட்டன். எனக்கும் அவருக்கும் ஒத்து வரேல்லை. அவருக்கும் எனக்குமான கலியாண ஒப்பந்தம் முடிவுக்கு வருகுது. நான் lawyer ஓடை எல்லாம் கதைச்சிட்டன். நீங்கள் கலியாணம் என்று கேட்டபோதே நான் வேண்டாமெண்டு சொல்லியிருக்கோணும். அந்த நேரம் நான் உங்களின்ரை சொல்லை மதிச்சனே தவிர மற்றதையெல்லாம் சிந்திச்சுப் பாக்கேல்லை. இங்கை ஒவ்வொருநாளும் சண்டை. அவரின்ரை சந்தேகப் பார்வை, பேச்சு…… அப்பா, நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். மாதவனுக்கு சீதனமா ஊரிலை இருக்கிற சொத்துகள், பிறகு காசு, நகை எல்லாம் குடுத்தீங்கள். வேணுமெண்டால் ஒரு நட்ட ஈடாக மாதவனும் அவரின்ரை குடும்பமும் அதுகளை எடுத்துக் கொள்ளட்டும். என்னைக் கட்டினதாலை அவருக்கு யேர்மனி விசாவும் கிடைச்சிருக்கு. நல்ல வேலையையும் அவருக்கு ஏற்ற பொம்பிளையையும் அவர் தேடிக் கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை இனி அவர் எனக்கு வேண்டாம். மாதவனின்ரை சகல பொருட்களையும் கட்டி கராஜ்ஜுக்குள்ளை வைச்சிருக்கிறன். கராஜ் திறந்துதான் இருக்கு. எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கோ” அலைபேசியை வைத்து விட்டு காஞ்சனா கட்டிலில் படுத்தாள். நிம்மதியாக இருந்தது. இனி வீட்டுக் கட்டிலில் சுகமான தூக்கம் அவளுக்கு க் கிடைக்கலாம்.
  6. ட்றம்பின் வரி மிரட்டலுக்கான தாக்கம் இன்று அமெரிக்க பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது. இதில் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனம் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்றைய வீழ்ச்சியுடன் கடந்த 3 மாதங்களில் டெஸ்லா நிறுவனம் 800 பில்லியன் டொலருக்கும் (மில்லியன் அல்ல) அதிகமான பங்குச் சந்தை முதலீட்டினை இழந்துள்ளது. டெஸ்லாவின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக மஸ்க் - ட்றம்ப் கூட்டு மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவான மஸ்கின் அண்மைய கருத்துக்கள் குறிப்பிடப்படுகிறது. இப்படியே சென்றால் டெஸ்லா நிறுவன முதலீட்டாலர்கள் மஸ்கை நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்கலாம். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இறுமாப்புடன் ஆட்டம் போட்ட இவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் உலகம் தக்க பதில் கொடுக்கிறது.
  7. மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதாகவும் மத்திய அரசும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட வலை, மீன்பிடி முறைகளை தடை செய்துள்ளதாம்! ஆனால் கடலுக்கு செல்லும் மீனவப்படகு அனுமதி முதல் பரிசோதனைகள் எல்லாம் மாநில அரசிடம் தானே அண்ணை அதிகாரம் இருக்கிறது. அவர்கள் தடைசெய்யப்பட்ட முறைகளை கண்காணித்து பிடித்தாலே போதுமே! தமிழக மீன்பிடி படகு முதலாளிகள் அரசியல்வாதிகள் எனில் அவர்கள் எப்போதும் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவது வழமை தானே!
  8. முதலீடு இல்லாத குடிசைக் கைத்தொழிலாக ஆரம்பித்து இப்போது றௌடிகளை உருவாக்கி விடும் பெருந்தொழில் பேட்டையாக மாறி நிற்கிறது. ஏன் இந்த லூசுகளின் அலட்டல் வீடியோக்களைப் பார்த்து வளர்த்து விடுகிறார்கள் மக்கள்? நுகர்வோர் இல்லா விட்டால் உற்பத்தியும் குறைந்து விடும், எனவே நுகர்வைக் குறையுங்கள், சந்தா தாரராக இருந்தால் நீங்கி விடுங்கள்.
  9. வீரப்பையன், இந்தத் திரியிலே அதிக குப்பை கொட்டினதும் நாமதானாம்.😁
  10. கிரெடிபிலிட்டி காற்றில் போய்விட்டது என வேலிபாய்ந்தோடியவர்கள் யார் என்பது யாழ்களத்துக்கு வாசகருக்கு என்றும் நினைவில் இருக்கும்🤣. ஆகவே யாருக்கு, யார், யாரை இனங்காட்டுவது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்🤣. மேலே சீமான் மேலே சொல்லியது சடையல் அல்ல. நான் சீமான் பிஜேபி ஏ டீம் என சொல்லவில்லையே? அவர் பி டீம். அவர் அடிப்பதுமாரி அடிப்பார், பிஜேபி அழுவதுமாரி அழும். சீமானை பார்த்து அழுக்காறு நான் அடைய தேவையில்லை. ஏன்? நான் சொந்த உழைப்பில் சாப்பிடுகிறேன். சீமானை போல (சினிமா) எனது துறையில் தோல்வி அடைந்து விட்டு இன்னொரு துறைக்கு நான் பாயவில்லை. திருமணம் ஒன்றுதான் எந்த பெண்ணும் என்னை ஏமாற்றிவிட்டார் என சொல்ல இடமில்லாமல் வாழ்கிறேன். என்னை ஒத்த தோற்றமுடைய 15 வயது பையனை மனைவியின் வளப்பு மகன் என நான் திடீரென அறிமுகம் செய்யவில்லை. போன தேர்தலில் இல்லாத 8 கோடி நீலாங்கரை பங்களா என்னிடம் இல்லை. எனது உற்ற தோழன் இறந்தபின் அவன் சாவுகட்டை இடிப்பித்து, அவன் யாரென்றே தெரியாது என பொய் கூறும் வஞ்சகன் நான் இல்லை. இன்னும் பல காரணங்கள் உளன. தேவைபட்டால் கேட்கவும். என்னை கேவலப்படுத்துவது யாழில் எழுதுவதோடு கூடவே வரும் occupational hazard அதை நான் கிஞ்சித்தும் கனம் பண்ணுவதில்லை. ஆனால் இப்படிபட்ட கேவலமான மனிதனோடு எனக்கு அழுக்காறு என கேவலப்படுத்துவது ஓவர் 🤣. அண்டைக்கு 100 லைக்ஸ் யூடியூபரோடு அழுக்காறு எண்டீர்கள். இப்போ இது🤣
  11. எழுதி அனுப்பின‌ பிற‌க்கு அல்லா அக்ப‌ட் எழுத‌ ம‌ற‌ந்து விட‌ வேண்டாம் குரு😁 செம்பாட்டான் , நான் , இருவ‌ரும் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் இந்த‌ தொட‌ரில் விளையாட‌ வில்லை , அப்ப‌டி இருந்தும் 42 புள்ளி கிடைச்ச‌து ம‌கிழ்ச்சி...................
  12. போட்டியை மிகச் சிறப்பாக நடத்திய @கிருபன் கிருபனுக்கு மிக்க நன்றி. @வீரப் பையன்26 பையன் சார், சொல்லி அடித்து விட்டீர்களே......... வாழ்த்துகளும் மிக்க மகிழ்ச்சியும்...........❤️. முதலிடத்தை பகிர்ந்து கொண்ட செம்பாட்டான், எப்போதும் தமிழன், புலவர், நீர்வேலியான் மற்றும் கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். @செம்பாட்டான் செம்பாட்டான், முதல் போட்டியிலேயே தூள் கிளப்பியது மட்டும் அல்ல, போட்டிகளை கலகலப்பாக வைத்திருந்தமைக்கும் மிக்க நன்றி..........👍. பிற்குறிப்பு: இங்கு வல்லுநர்களால் கூறப்பட்ட பல தகவல்களை தொகுத்து சுருக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனத்திற்கு அனுப்புவதாக உள்ளேன்.................🤣.
  13. கேட்கவே ஆசையாக உள்ளது. இலங்கை கடற்படையை அண்ணனின் நெய்தல் படை அடித்து துவம்சம் செய்யும் நாள் நெருங்கிவருகிறது போலும்.
  14. என்னப்பா வீடுவளவு விற்று பரிசில் தொகையும் வழங்கியாச்சு இப்போது புதிதாக பதவி ஏற்பவர்களை என்ன செய்வது? முதலில் பரிசில்கள் வாங்கிய 3 பேரும் கெளரவமாக கொண்டுவந்து ஒப்படைக்கவும். அப்புறம் ராணுவத்தை விட்டு சொத்துக்கள் பறி முதலாக போகுது. புதிதாக பதவி ஏற்ற @வீரப் பையன்26 @செம்பாட்டான் @Eppothum Thamizhan மூவருக்கும் வாழ்த்துக்கள். கல்லோ @குமாரசாமி நான் எங்க நிற்கிறன் தெரியுதோ? மேல அண்ணாந்து பாருங்க.
  15. அப்ப நாங்கள் எல்லாம் என்ன தக்காளி தொக்கா🤣… நீங்கள் paper correction கேட்டதால நான் 4ம் இடத்தில் இருந்து 12 க்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளேன்🤣… ஏற்கனவே மழையால் பயிரெல்லாம் அழிஞ்சு போச்சு…🤣 உங்க paper correction ல கொள்ளிய வைக்க…🤣. பிகு போட்டியை கலகலப்பாக கொண்டு போன அனைவருக்கும் நன்றி. செம்பாட்டான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக கலக்கினார். எனக்கு ஐபில் அறவே பிடியாது. 1st class ஐ விட தரம் குறைந்த (டோனியை எந்த 1st class அணி எடுக்கும் 2025 இல்) போட்டி அது. அதை பார்ப்பதால் - சர்வதேச ஆட்டம் பார்க்கும் ஈர்ப்பு கூட குறைகிறது. ஆகவே அந்த போட்டியில் நான் இல்லை. வாய்ப்பை பயன்படுத்தி கிருபன் ஜி அதிலும் என் பெரிய வீட்டை எடுக்க வாழ்த்து🤣. WTC finals SA v AUS - 10க்கும் குறைவான கேள்விகளோடு ஒரு போட்டி வைக்கலாம் என நினைக்கிறேன். 4ம் நாள் போட்டியை நேரில் பார்க்கவும் டிக்கெட் புக்பண்ணி விட்டேன். யாழிலும் ஒரு மினி போட்டிக்கு ஆர்வம் இருந்தால் - செய்யலாம். நன்றி. வணக்கம்.
  16. நன்றி கிருபன். புலவர் கோவிக்கவேண்டாம். நான் நேரலையில் பார்த்ததைத்தான் சொன்னேனேயொழிய உங்கள்மீது எந்த வெறுப்பும் இல்லை!! அதை வைத்துதான் கிருபன் கணிக்க முன்பே முதலிரு இடங்களையும் சொன்னேன்!! மற்றும்படி முதல் ஆறுபேரும் வெற்றியாளர்களே! 👍
  17. இல்லை பையா இனி வாய்ப்பிலை. பையனுக்கு அவர் அமைச்சரவைக்கும் வாழ்த்து.
  18. இவர்களை (ஜெ.வி.பி காராரை) பிரபல படுத்தி காணொளி போட்டதே இந்த யூ டியுப்காரார் தான் ...அவர்கள் மீது கை வைப்பது கடினமாக தான் இருக்கும் ...உந்த ஜெ.வி.பின‌ருக்காக சிங்க கொடி எல்லாம் தூக்கி ஊர்வலம் போனவையல் ...
  19. கேள்விகள் 27) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:
  20. விளையாட்டு திரி என்றால் குப்பை கொட்ட‌ பிடிக்கும் 😁 யாழில் இருக்கும் பெரிசுக‌ள் போட்டி ப‌திவை ப‌திந்து விட்டு பேசாம‌ இருப்பின‌ம் நாம‌ தான் இதுக்கை ப‌ம்ப‌ல் அடிப்ப‌து................... என‌க்கும் ஜ‌பிஎல் பிடிக்காது பெரிய‌ப்ப‌ரின் விருப்ப‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொள்ளுவோம்😁👍......................
  21. அதிரடியாக பிரேக் போட்டு விபத்தை தடுத்துவிட்டார் ...அனுரா அரசின் அதிரடி நடவடிக்கை
  22. உண்மை @Kavi arunasalam அண்ணை. கடைசியில் காஞ்சனாக்கு நல்ல தூக்கம் மற்றும் வாழ்க்கை கிடைத்தது நல்ல முடிவு. எத்தனையோ பேர் குடும்பங்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் சமாளித்தபடி தங்கள் வாழ்க்கையையே முழுமையாகத் தொலைத்து விட்டு ஏதோ கடைமைக்கு வாழ்கின்றனர். அப்பிடிப் பார்க்கும் போது காஞ்சனா கெட்டிக்காரி.
  23. நடுவில கொஞ்ச பக்கத்தை காணோம் என்ற மாதிரி காணாமல் போய்விட்டீர்களே? ருமேனியாதான் நல்ல உதாரணம்.
  24. முதலாமிடம் பெற்ற @வீரப் பையன்26 இரண்டாமிடம் பெற்ற @செம்பாட்டான்மூன்றாம் இடம்பெற்ற @Eppothum Thamizhanசகோதரர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட 24 போட்டியாளர்களுக்கும் போட்டியை திறம்பட நடத்திய கிருபன் அண்ணைக்கும் எனது வாழ்த்துகள். ஐபிஎல் போட்டியிலயாவது அதிட்டம் அடிக்குமோ பார்ப்பம்! 😃
  25. இதைதான் எந்த தமிழ் நாட்டு கட்சியும் செய்யாது என மேலே நிழலிக்கு எழுதினேன். சீமான் தமிழ் நாட்டு அரசை குறைகூறுவதும் இப்படி செய்யவில்லை என்றல்ல. மாறாக மீனவர்களை காப்பாற்றாமல்விடுகிறார்கள் என்றே. முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் இந்தியர்கள். நீங்கள் நினைப்பது போல் அங்கே எவரும் இதில் நியாயத்தை பார்ப்பதில்லை. எமது இந்திய மீனவர் மீன்பிடிப்பதை இலங்கை தடுக்கிறது. இந்தியா தட்டி கேட்கவேண்டும் என்பதே அங்கே மக்கள், அரசியல்வாதிகள் அனைவரினும் நிலைப்பாடு. அதிலேயே ஏன் சீமானினை உள்ளே கொண்டுவந்தேன் என்ற விளக்கமும் இருக்கும் போது அது நோயின் அறிகுறி அல்லவே அண்ணை🤣.
  26. முழுவதுமே சிரிப்புத்தான்............... அதிலும் இந்த ஒற்றைவரி அல்டிமேட்.............
  27. @goshan_che @Justin அண்ணனின் நெய்தல் படையை பார்தது நீங்கள் இருவரும் சிரித்துள்ளீர்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள்….ஒரு நாள்…. இந்த நிலம் அண்ணன் கையில் சிக்கிடிச்சு…. நீங்கள் இருவரும் செத்தீங்க.! 😂
  28. நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் மற்றும் அவரது கட்சி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் கொல்லப்படுவதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்... அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையின்மையை விமர்சித்து, தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்... உதாரணமாக, எனக்கு நினைவில் நிற்கும் இரண்டு போராட்டங்களை கீழே தருகிறேன்..👇 2021ஆம் ஆண்டு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி போராட்டங்களை நடத்தி, மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தது... அவர்கள் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக தக்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்... இது குறித்து வந்த செய்தி ஒன்று..👇 மேலும், 2017ஆம் ஆண்டில், தமிழக மீனவர் பிரான்சிஸ் ஜெயராஜ் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி, மத்திய அரசின் நடவடிக்கையின்மையை கண்டித்தது. அவர்கள் தமிழக மீனவர்களின் உயிர்களை பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்..👇 இவை உடனும் எனக்கு நினைவுக்கு வந்தவை.. இதைவிட பல போராட்டங்கள் இருக்கின்றன.. இந்த நிகழ்வுகள் எல்லாம் மத்திய அரசை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான போராட்டங்களை வெளிப்படுத்துகின்றன.. ஆகவே காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளை பரப்பித்திரிவோரை யாழை வாசிப்பவர்கள் பிரித்தறிவார்களாக.. “எரிச்சலும் பொறாமையும் எஞ்ஞான்றும் எற்றாது அறிசியார் மாணத் தரும்.” (திருக்குறள் – 162) இந்தக் குறளில், எரிச்சல் மற்றும் பொறாமை காழ்ப்புணர்ச்சிக்கே வழிவகுக்கும் என்பதையும், அவை அறிவில்லாதவர்களை மட்டுமே இழிவில் ஆழ்த்தும் என்பதையும் வள்ளுவர் உணர்த்துகிறார்…
  29. போட்டியில்... முதலிடத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் @வீரப் பையன்26 க்கும், அதே அளவு 42 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட... @செம்பாட்டான், @Eppothum Thamizhan, @புலவர், @நீர்வேலியான், @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
  30. ஐரோப்பிய ஒன்றியம் எனும் அமைப்பு செயலிழக்கும் நிலையினை நோக்கி நகர்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, இரஸ்சியாவின் குறி தாம் என கூறிக்கொண்டு போலந்து அரசு தன்னை பலப்படுத்தி வருகிறது, ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பிற்கு வெளியே தன்னை பலப்படுத்தி வரும் ஒரே நாடு போலந்து, நேட்டோவின் வகிபாகம் எதிர்காலத்தில் இல்லாது போகும் பட்சத்தில் போலந்து ஒரு அதிகார மையமாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம். போலந்து இந்த நீண்ட கால நிலைப்பாடு அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் எனும் நிலைப்பாடாகும். உக்கிரேன் போரிற்கு பின்னரான ஐரோப்பா என்பது மிகவும் பலவீனமான உள்முரண்பாடு நிறைந்ததாக காணப்பட போகிறது.
  31. பால் சமத்துவம் என்பது உரிமைகளில் மட்டுமல்ல, பொறுப்புகளிலும் சமமாக இருக்க வேண்டும்... பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதோடு, அவர்களும் சமூக பொறுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பதே நியாயமானது... ஆண்கள் மட்டும் போர் கடமையை ஏற்க வேண்டும் என்பதும், பெண்கள் மட்டும் பிள்ளை பெற்றல் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதும் சமத்துவம் இல்லை… சமூக பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகளை ஆண்களும், பெண்களும் சமமாக ஏற்க வேண்டும்… ஆண்கள் பிள்ளை பெறமுடியாது என்றாலும் குழந்தை வளர்ப்பு, குடும்ப பொறுப்புகளில் சமமாக பங்கு பெற வேண்டும் எனபது சட்டம், தப்பி ஓடமுடியாது.. பொறுப்பை பகிர்ந்தே ஆகவேண்டும்... பால் சமத்துவம் என்றால், உரிமைகளிலும் பொறுப்புகளிலும் சமமாக இருப்பதே உண்மையான சமத்துவம் என்று நான் நம்புகிறேன்… பகிடி சொல்லியதுபோல் பெண்கள் பின் அரங்கில் நன்றாக செயல்படுவார்கள் என்றால் பெண்களுக்கு கட்டாய தாதிப் பயிற்சிபோன்றவையாவது கொடுக்கப்பட வேண்டும்… பெண்கள் போர் மையத்தில் மட்டுமல்ல, மருத்துவம், தகவல் தொடர்பு, தளபதி பதவிகள் போன்ற பல பிரிவுகளில் பங்கு பெறலாம்... ஆகக்குறைந்தது ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுக்கேற்ற வகையில் பங்கிடலாம்... தப்பி ஓடக்குடாது.. போரில் பங்கேற்பது ஆண்களின் கடமை என்று மட்டும் வரையறுப்பது பால் சமத்துவத்துக்குப் புறம்பானது... பால் சமத்துவம் என்பது உரிமைகளின் சமத்துவத்தையும், பொறுப்புகளின் சமத்துவத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.. மேலும், போர் கடமை என்பது அனைத்து குடிமக்களுக்கும் பொது கடமையாக இருக்க வேண்டும்... பெண்கள் தங்களது திறமைகளின் அடிப்படையில் போர் மையத்தில் மட்டுமல்ல, அறிவு சார்ந்த மற்றும் தலைமையிடப் பொறுப்புகளில் பங்குபெறுவதும் சாத்தியமே….
  32. அவர்களுக்கு எங்கிருந்து வந்தது உடல் வலிமை எங்கிருந்து வந்தது ஓர்மம் வீரம்? தங்கள் நாடு இன்னலில் இருந்தபோது தன்னந்தனியாக பனகுற்றிகளையும் தென்னங்குற்றிகளையும் தறித்து தோழில் சுமந்து கொண்டுபோய் பங்கர் கட்டி போராடியவர்கள் அவர்கள்.. இதேபோல் குர்தீஷ் பெண்போராளிகள்.. அவர்களால் எல்லாம் முடிகிறது அப்போ மற்றவர்கள் நடிப்புத்தானே..? யாருக்கு உடல்வலிமை இல்லை என்று கதைவிடுகிறார்கள்..
  33. மூன்றும் குழந்தைகள்.
  34. ம், கிழக்கில் இருந்து ஒரு பெண் இவரிடம் உதவிகேட்டு ஒரு மேலதிக தேவையுடைய பிள்ளையுடன் வந்திருந்தார். அவரை இவர் சி. ஐ. டி. மாதிரி விசாரணை செய்கிறார். அவர் உண்மை சொன்னாரா பொய் சொன்னாரா என்று ஆராய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இவர் நடந்து கொண்ட விதம் முகம் சுழிக்கக்கூடியதாக இருந்தது. அதனையும் பலர் பாராட்டியிருந்தனர். இவரே ஒரு ஏமாத்து, அதில விசாரிக்கிறாராம். ஏமாற்றுகிறவனுக்கு தான் தெரியும் அதன் நுணுக்கங்கள். தான் ஏமாற்றுகிறாராம் மற்றவர்கள் ஏமாற்றக்கூடாதாம், கற்றுக்கொடுப்பவரே இவர்தான். இன்னும் விட்டிருந்தால் அரசியல் ரவுடியாக வளர்ந்திருப்பார். எத்தனைபேரை அவமானப்படுத்தியிருப்பார், தலைகுனிய வைத்திருப்பார், பகட்டாக சுற்றியிருப்பார், செலவழித்திருப்பார், புலம்பெயர்ந்தோரை இழிச்ச வாய்களாக நினைத்திருக்கிறார். ஆனால் அவர்களின் காசில் இவருக்கு எகத்தாளம். எதை பாவித்து அதை செய்தாரோ, அதனாலேயே தாக்கப்படுகிறார். வேஷம் கலைந்தது.
  35. கஞ்சியோ கூளோ,கத்தியோ கடப்பாரையோ,கறுப்போ வெள்ளையோ.... குமாரசாமி ஆகிய நான் நான்காம் இடத்தில் நின்று கர்ஜிப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.🤣 20 ம் இடத்தில் நிற்கும் மர்ம ஆசாமி அடுத்த போட்டியில் பங்குபற்றுவதையிட்டு ஆழ்ந்து சிந்திக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.😎 24ம் இடம் நோ கொமன்ஸ்...😂
  36. செந்தூர் தமிழ் Thas Re 7h · இது 1987 - 90 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடத்தின் புகைப்படமாகும். புகைப்படத்தின் நடுவில் இருப்பவர், பயங்கர காலத்தில் கைது செய்யப்பட்டு வதைக்கூடத்திற்கு கொண்டுவரப்பட்ட கைதியாவார். இரு பக்கங்களிலும் ஆயுதம் ஏந்தியிருப்பவர்கள், அரச பாதுகாப்பு படையினருக்கு உட்பட்டவர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாக தெரியும். இவர்கள், அற்கால காபினட் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பரான போலீஸ் அதிகாரி டக்லஸ் பீரிஸின் இரு மகன்கள். கைது செய்யப்பட்டு முகாமிற்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் கை, கால்களை உடைத்து சித்திரவதை செய்வது இவர்கள் மேற்கொண்ட ஒரு விளையாட்டு என எடுத்துக் கொள்ளலாம். பின்னாளில் ஆட்சி மாற்றத்துடன், டக்லஸ் பீரிஸ் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார். பின்னர் நீதிமன்றத்தின் சிறப்பு நடவடிக்கையால், அவர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு, பட்டலந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், சந்திரிகா குமாரதுங்க அரசின் அலட்சியம் காரணமாக, அந்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன. டக்லஸ் பீரிஸ் பின்னர் உயிரிழந்தார். அவர் மகன்கள் இருவரும் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவன் அங்கே தீ விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டக்லஸ் பீரிஸின் நெருங்கிய நண்பரான அந்த காபினட் அமைச்சர், இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதி ஆனார். அந்த காலத்தில் ரணிலின் குற்றங்களை அம்பலப்படுத்த வந்த சந்திரிகா குமாரதுங்க, தற்காலத்தில் ரணிலை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த மறைமுகமாக உதவி செய்தார் அந்த காலத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசு, 1987ஆம் ஆண்டு முதல் மக்கள் விடுதலைப் முண்ணனியை (JVP) இரத்தமும் இரும்பும் கொண்டு அடக்க முயற்சிகள் மேற்கொண்டது. மாத்தறையில் H.R. பியசிறி, வட மத்திய மாகாணத்தில் நெல்சன், M.S. அதிகாரி, மஹிந்தசோம, களுத்துறையில் ரணவக்க, காலியில் M.S. அமரசிறி, குருநாகலில் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஹலாவத்த, புத்தளம் பகுதிகளில் பெப்டஸ் பெரேரா, ஜான் அமரதுங்க, ஜோசப் மைக்கேல் பெரேரா, கம்பஹாவில் போல் பெரேரா, இவர்கள் ஒவ்வொருவருக்கும் J.R. ஜெயவர்தன அரசு அதிகாரங்களை வழங்கியது. பின்னர், கொழும்பு மாவட்டத்தின் அடக்குமுறையை ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தது. 1987 ஆம் ஆண்டில், பட்டலந்த வதைக்கூடத்தை நிறுவியது அவரே. அதற்காக, கொழும்பிற்கு அருகில் இருந்த சில அரசியல் ஆதரவாளர்களின் கட்டளைக்கிணங்கி, எந்தவொரு தீவிர செயலும் செய்யத் தயங்காத காவல்துறையினரை தேர்ந்தெடுத்தார். அந்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராக கான்ஸ்டபிள் டக்லஸ் பீரிஸ் இருந்தார். அவர் ஒரு மனித உருவை உடைய மிருகம் எனக் கூறலாம். பட்டலந்த வதைக்கூடத்தின் தலைவராக, ரணில் விக்ரமசிங்கவினால் டக்ளஸ் பீரிஸ் உயர் காவல் துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இதற்காக காவல்துறை விதிகளையும் சட்டங்களையும் முற்றிலும் மீறப்பட்டது. இந்த பதவி உயர்வுக்கு R. பிரேமதாச, ஜோசப் மைக்கேல், ஜான் அமரதுங்க ஆகியோர் முக்கிய பங்கை வகித்தனர். பட்டலந்த வத்காகாரத்திற்குக் கொண்டுவரப்பட்ட 5000க்கும் மேற்பட்ட தேசப்பற்றுள்ள பொதுமக்களை கொலை செய்ய, ரணிலின் நேரடி கட்டளையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த கொடூர கொலைகள் மேற்கொண்ட முக்கிய நபர், இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தைகளின் தந்தையான டக்லஸ் பீரிஸ்தான். 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டார் என்ற ஒரே வாதத்தை வைத்து ரணிலை மாபெரும் புத்திசாலியாக சிலர் சித்தரிக்கிறார்கள். ஆனால் அவர் நாட்டை மீட்டார் என்பதை விட நாட்டின் பல விலைமதிப்பற்ற இடங்களையும், சொத்துக்களையும் விற்று நாட்டை மீட்டார் என்று கூறுவது சாளச் சிறந்தது என நினைக்கிறேன். எது எப்படியோ ரணிலின் ஆரம்ப கால அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பல அப்பாவிகளின் இரத்தக் கறைகள் அவர் ஆடையில் பதிந்து தான் இருக்கிறது. எவ்வளவு நல்லவனாக நீங்கள் அவரை சித்தரிக்க முயன்றாலும் அவர் ஓர் சிறிய ஹிட்லர் தான். நன்றி: சமூக வலைத்தளம்
  37. எதுவுமே இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் புண் பொதுவாக ஒரு மாதத்தில் ஆறி விடும், epidural கொடுக்கும் முதுகு வலி பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும்.தவிர அந்த நோவினப் போக்கவும் வலி நிவாரணிகள் உண்டு இதனால்த் தான் பெண்களால் மேலும் பிள்ளைகள் பெற முடிகின்றது. அடுத்த விஷயம் ஆண்களை விட பெண்களுக்கு வலி தாங்கும் சக்தி அதிகம், அது இயற்கையாக அமைந்தது. புருஷன் போருக்குப் போகாமல் வீட்டில் உதவியாக இருந்தால் மனைவிக்கு depression பிரச்சனைகள் குறைவு. ஆனால் இதை மட்டுமே பிடித்து வைத்துக்கொண்டு ஆண்களை மட்டுமே கொலைக்களம் அனுப்புவது தவறு என்கின்றேன். பெண்கள் நாட்டின் சனத் தொகை க்கு முக்கியம், ஆகவே பிள்ளைப் பெறும் வயதுடைய பெண்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது. உங்கள் நியாயப்படி ஆண்கள் கட்டாயம் போரில் சாக வேண்டும் என்றால் பெண்கள் கட்டாயம் இத்தனை பிள்ளைகள் பெற வேண்டும் என்றாவது சட்டம் கொண்டு வர வேண்டும் பெண்கள் பிறப்பதே பிள்ளைப் பேறு என்னும் போருக்காகவே என்ற உண்மையை வெளிப்படையாக சொல்லிய உங்களுக்கு நன்றி. இதை கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்று பேசும் இன்றைய பெண்ணியப் போராளிகள் ஏற்க மாட்டார்கள் தவிர பெண்கள் பின் அரங்கில் நன்றாக செயல்படுவார்கள் என்பதை ஏற்கின்றேன். ஆகவே பெண்களுக்கு கட்டாய தாதிப் பயிற்சி போன்றவையாவது கொடுக்கப்பட வேண்டும்.
  38. ஒன்றுமே புரியல்ல ...பணம் சம்பாதிக்க குறுக்கு வழிகளை இளைஞர்கள் தெரிவு செய்கின்றனரா? பொலிசார் தங்கள் கட்மைய்யை செய்ய வேணும்...குமாரு.
  39. இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: யாழ் கள போட்டியின் வெற்றியாளர் இன்னும் முடிவாகவில்லை!
  40. செம. உண்மையிலேயே இது கடினமான கேள்வி. சரியாகத் தெரிவு செய்தது சிறப்பு. எனக்கும் அதேதான். நான் தெரிவு செய்தவர் ஒரு போட்டிகூட விளையாடவில்லை. இதை எங்கே போய் முட்டிக்க. IPLல பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினவை. அந்த மும்பை தாக்குதலோடதான் எல்லாம் தலைகீழாக மாறியது. அந்தத் தாக்குதல் நடந்திருக்காட்டி, இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறி சுற்றுப்பயணம் போயிருப்பினம்.
  41. காலை நேரக் குளிர் ஊசியாய்க் குத்த எழும்பவே மனமின்றி தடித்த போர்வையால் முகம் தவிர்ந்த அனைத்துப் பாகங்களையும் குளிர் புகா வண்ணம் போர்த்து மூடியபடி படுத்துக் கிடக்கிறேன் நான். லண்டனில் சினோ விழுவதில்லை. குளிர் குறைவு என்ற பேர்தான். ஐந்து பாகை குளிர்கூட மைனஸ் பத்துப்பாகை போல் குளிரும். அத்துடன் ஊசிக்காற்றும் சேர்ந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். வெளியே செல்லக்கூட மனமின்றிப் போகும். முன்னர் பதினெட்டு ஆண்டுகள் ஜெர்மனியில் இருந்தபோது நான்கு மாதங்களாவது பனி கொட்டும். பார்க்குமிடமெல்லாம் வெண்பனித்துகள்கள் வந்து அள்ளி விளையாடு என்று அழைக்கும். வெளியே சென்றால் கூட லண்டனில் குளிர்வதுபோல் குளிர் இருக்காது. ஆனால் இங்கு.............நினைத்துப் பார்த்தவளுக்குச் சிரிப்பும் வந்தது. அங்கு இளமைக் காலத்தில் வசித்தாய். முப்பத்தைந்து கடந்தபின் இந்த நாட்டுக்கு வந்தாய். வயது போகப் போக உடலும் மனமும் சேர்ந்து வலிமை இழக்கும் என்பது தெரியாதா” என யாரோ கேட்பதுபோல் இருக்க, தூக்கக் கலக்கத்திலும் முகம் சிரிப்பில் விரிகிறது. ஐம்பத்தைந்து கடந்துவிட்டதா எனக்கு? திருமணமாகிப் பிள்ளைகள் பெற்று அவர்களை வளர்த்து திருமணமும் செய்துகொடுத்தபின்னும் மனமும் உடலும் அப்படியே இருக்குமா என்ன? மனதில் வலுவும் பதினெட்டு வயதேயான நினைப்பும் இன்னமும் இருக்கிறதுதான். ஆனாலும் இடைகிடை ஒன்றிரண்டு நோய்களும் வந்து உனக்கு வயது கூடிக்கொண்டே போகிறது என்பதை நினைவுபடுத்தியும் விடுகிறது. நாமென்ன ஆண்களைப்போல் வேலைக்கு மட்டுமா போய் வருகிறோம். சமையல் வேலை, வீடு துப்பரவாக்கும் வேலை, உடுப்பு வோசிங்கிங் மெசினில்போட்டு எடுத்துக் காயவிட்டு அயண் செய்து மடித்து வைத்து........... இன்னும் எத்தனை எத்தனை இருக்கு. என் அயலில் வாழும் பல தமிழ்ப் பெண்கள் வேலைக்கே போகாமல் வீட்டில் தொடர்ந்தும் இருக்கிறார்கள்தான். அவர்கள் அதிட்டசாலிக்கள்தான் என மனம் எண்ணினாலும் எப்படித்தான் அவர்களால் வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க முடிகிறது எனவும் எண்ணியவுடனேயே அவர்கள்மேல் ஒருவித இரக்கமும் ஏற்படுகிறது. உடனேயே உன்னில இரக்கப்பட யாருமே இருந்ததில்லை. இப்ப நீ யாருக்கோ இரக்கப்படுகிறாயா என்கிறது மனம். வெளிநாடு வந்த நாளில் இருந்து கணவர் குடும்பத்துக்கு மாதாமாதம் பணம் அனுப்புவது தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. நான் அதை ஒருநாளும் தடுத்ததும் இல்லை. நான் வேலை செய்ய ஆரம்பித்ததும் எனது சம்பளம் முழுவதுமே கணவனிடம் போய்விடும். எனக்கு எதுவும் தேவை என்றால் கூட அவரிடம் கேட்டுத்தான் வாங்கவேண்டும். என் குடும்பமும் ஊரில இருக்கு. ஒரு கொஞ்சக் காசு அனுப்புவம் என்று நினைத்தால் கூட கையில் காசு இருக்காது. ஒருதடவை மனிசன் மகிழ்வாக இருந்த நேரம் பார்த்து அம்மாவுக்கு ஒரு இருபதாயிரம் அனுப்பட்டே என்று கேட்டதுதான். ஏன் கொப்பா வேலை செய்யிறார் தானே. அவைக்கு எதுக்குக் காசு என்று முகத்தில அடிச்சதுபோல சொல்ல, ஏன் உங்கடை அப்பாவும் வேலை செய்யிறார்தானே. நீங்கள் ஏன் அனுப்புறியள் எண்டதுக்கு கன்னத்தில விரல் அடையாளம் வந்ததுதான் மிச்சம். அதுமட்டுமில்லாமல் ஒருகிழமை மனிசன் என்னோடை கதைக்காமல் திரிய அதுக்குப் பிறகு நான் கேட்டதுதான் தப்போ என்று எனக்கே யோசினை வந்திட்டிது. லண்டன் வந்த பிறகுதான் எனக்கு கொஞ்சம் துணிவு வந்தது. அதுக்குக் காரணம் இல்லாமலும் இல்லை. ஐந்து நாளும் மனிசன் பதிஞ்சு வேலை. எனக்கு ஓரிடத்தில களவாய் வேலை. கையில காசு தருவினம். இவர் காலையில போனால் பின்னேரம்தான் வீட்டை வருவார். இவருக்குச் சொல்லாமல் இரண்டு மணிநேரம் அதிக வேலைசெய்து சேர்த்து வச்சு அம்மாவுக்கு அனுப்பியதை இப்ப நினைக்க கோவம்தான் வருது. எப்பிடி ஒரு துணிவில்லாத ஆளாய் இருந்திருக்கிறன். பிள்ளையள் எல்லாம் வளர வளர எனக்கும் கொஞ்சம் துணிவு வந்தது. என் உள்ளக் கிடக்கையை பிள்ளையளுக்கு சொல்லி அழ, அவைதான் “அம்மா இரண்டு பேருக்கும் சமமான உரிமை இருக்கு. நீங்களும் கஷ்ரப்பட்டுத்தானே வேலை செய்யிறியள். அப்பாவுக்குச் சொல்லிப்போட்டே அம்மம்மாவுக்கு காசை அனுப்புங்கோ” என்று சொன்ன துணிவில பிள்ளையளுக்கு முன்பாக கணவரிடம் கேட்க, வழமைபோல் மறுத்த கணவரை எதிர்த்து பிள்ளையள் நியாயம் கதைக்க, ஒண்டும் சொல்லாமல் போன மனிசன் வழமைபோல் என்னோடை கதைக்காமல் திரிய, நானும் அவரைக் கண்டுகொள்ளாமல் காசை அனுப்பியது மட்டுமல்லாமல் எனக்கு அவரோட கதைக்காமல் இருக்க ஏலும் எண்டு காட்டிய பிறகுதான் மலையேறின சாமி இறங்கினது. இப்போதெல்லாம் வெளிநாட்டில் வசிக்கும் ஆண்கள் பலரும் மனைவியருக்கு உதவி செய்கின்றனர் தான். ஆனாலும் மனமிருக்கும் எல்லோருக்கும் உதவி செய்ய நேரம் இருக்கவேண்டுமே. மனிசன் கூட என்னிலும் நன்றாகப் புரியாணி செய்வார். பிள்ளைகள் கூட அப்பாவின் புரியாணி சுவையாக இருக்கு என்று என் முன்னாலேயே கூறும்போது சிறிது கோபம் எட்டிப்பார்க்கும். இத்தனைகாலம் மூன்று நேரமும் சமைத்துக் கொடுக்கிறேன். ஒருநாள்க் கூட இப்படிக் கணவரோ பிள்ளைகளோ புகழ்ந்ததில்லை. நன்றி கெட்டவர்கள் என்று அவர்களைத் திட்டவேண்டும் என்று மனதில் சிறிது கோபம் கூட எழும். சரி போகட்டும் என அடக்கிக் கொள்வேன். நான் எழுந்து பல் தீட்டிவிட்டு வந்து மீண்டும் கட்டிலில் முடங்கிக் கொள்கிறேன். இன்று வேலை இல்லை. இன்னும் சிறிது நேரம் படுத்திருப்போம் என்று எண்ணிக்கொண்டு அதையும் இதையும் நினைத்தபடி படுத்திருக்க கணவரின் போனில் அலாரம் அடிக்கிறது. நான் கேட்காததுபோல் கண்களை மூடியபடி கிடக்கிறேன். எழுந்த கணவர் பல் தீட்டிவிட்டு வந்தவர், அறையின் திரைச் சேலைகளை இழுத்து ஒதுக்க வெளிச்சம் கண்களைக் கூசச் செய்கிறது. “இன்னும் நீ எழும்பேல்லையே. நான் தேத்தண்ணி ஊத்தியிருப்பாய் எண்டு நினைச்சன்” “இண்டைக்கு எனக்கு வேலை இல்லை. நீங்கள் ஊத்த ஏலாதே” “நீ ஊத்துறமாதிரி வராது. உன்ர கையால குடிச்சாத்தான் குடிச்சமாதிரி இருக்கும்.......எழும்பு. சுடுதண்ணிப் போத்தலிலும் போட்டு வை. நான் வெளிக்கிட்டு வாறன். சாப்பாடுப் பெட்டியும் என்ர பாக்கில கிடக்கு. கழுவிப்போட்டு சாப்பாட்டையும் போட்டு வை” ஒரு நாளைக்கு எண்டாலும் கொஞ்ச நேரம் படுக்க விடாயினம். ஏன் அவர் ஊத்தினால் தேத்தண்ணி கோப்பியாய் மாறீடுமோ? வேலைக்குப் போக இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கு. நீங்களே போட்டுக்கொண்டு போக ஏலாதா என்று கேட்போம் என்று எண்ணியும் வார்த்தைகள் மனதுள்ளேயே சிக்கிக்கொள்கின்றன. எனக்கும் யாராவது தேத்தண்ணியோ கோப்பியோ ஊத்திக்கொண்டுவந்து ஒருநாளாவது தராயினமோ என்ற ஆசை அப்பப்ப எழுவதுதான். எனக்கு கொண்டுவந்து தாங்கோ என்று வாய்விட்டுக் கேட்கவும் என் தன்மானம் இடம்கொடுத்ததில்லை. கணவர் என்று இருக்கிறீர்கள். இத்தனைகாலத்தில ஒருக்காத்தன்னும் நீங்களாகத் தேநீரோ கோப்பியோ போட்டுத் தந்திருக்கிறியளா? இல்லை சும்மாதன்னும் கேட்டாவது இருக்கிறியளா? என எண்ணும்போதே அம்மாவின் முகமும் அப்பாவின் முகமும் கண்முன்னே வருகிறது. இருவருமே ஆசிரியர்கள். காலையில் அம்மா எழுந்து காலை உணவு, மதிய உணவு இரண்டையும் தயார் செய்ய வேணும். அதற்குள்ளும் எனக்கும் தம்பிக்கும் கட்டிலில் தேநீரைக் கொண்டுவந்து எழுப்புவார். எனக்கு ஒரு பன்னிரண்டு வயதுவரை இது தொடர்ந்தது. அப்பா அம்மாவுக்குத் தேங்காய் துருவிக் கொடுப்பது முதல் பல உதவிகளைச் செய்து கொடுப்பார். ஆரம்பத்தில் துலாவில் தண்ணீர் அள்ளித் தொட்டிக்குள் நிறைத்து எங்களைக் குளிப்பாட்டுவதுகூட அப்பாதான். அவர்கள் நினைவில் என் கண்கள் நிறைகிறது. என் கணவர் கூட உதவியே செய்யாதவர் அல்ல. எத்தினையோ உதவிகள் நான் கேட்காமலே செய்திருக்கிறார். ஆனாலும் உணவு விடயத்தில்த் தான் அதிகம் தலையீடு செய்வார். அதுதான் எனக்கு அதிக சினத்தைக் கொடுக்கும். நான் ஒரு சமையலைத் திட்டமிடும்போது அவர் வேறொரு விதமாய் சமையல் குறிப்புச் சொல்லுவார். என் சமையலை என் நண்பர்கள் உறவினர்கள் பாராட்டுவதோடு மட்டுமில்லாது மிச்சம் இருந்தால் தாடி என்று வீட்டுக்கும் எடுத்துச் செல்வதும் என் சமையலின் சுவையினால்தானே. பிறகு எதற்கு இவர் திருத்தம் சொல்கிறார் என்று கடுப்பாக இருக்கும். அதுவும் இப்ப கொஞ்ச நாட்கள் என் போனுக்கு சமையல் குறிப்புகளும் யூடியூப் லிங்குகளும் கணவர் போனில் இருந்து என் வற்சப், மெசெஞ்சர் என்று வந்து விழும்போது கடுப்பு அதிகரிக்கும். இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருக்கலாம். அதோடை இதைச் சேர்த்துக் கறி வைத்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லும்போது ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் வெளிக்காட்டாது நீங்களும் நல்லாச் சமைக்கிறீங்கள் தானே. நீங்களே இவற்றைச் சமைத்துத் தாருங்கள். என்றதுடன் மனிசனும் பேசாமல் இருப்பதும் அடிக்கடி நடப்பதுதான். அம்மா முன்னரெல்லாம் உப்புமா செய்வார். நெய்யில் வறுத்து உதிரி உதிரியாய் குழைந்து வராமல்...... எமக்கு மட்டுமல்ல அப்பாவுக்கும் அந்த உப்புமா மிகவும் பிடிக்கும். உப்புமாவோடு முட்டைப் பொரியாலோ அல்லது அவித்த முட்டையோ இருக்கும். பள்ளி முடிந்து வந்து உடுப்பை மாற்றி முகம் கழுவியவுடன் சமையலறைக்குச் சென்று மிகுதி உப்புமா இருக்கா என்றுதான் தேடுவேன். ஆனால் அம்மா எப்படித்தான் எல்லோருக்கும் அளவாக மிகுதியே வாராததுபோல் சமைப்பார் என்பது இன்றுவரை எனக்கு விளங்கக்கவே இல்லை. என்னடா இவள் தேவையில்லாமல் உப்புமாவைப் பற்றிக் கதைக்கிறாளே என்று உப்புமாவைப் பிடிக்காத உங்களுக்கு எரிச்சல் வரும்தான். ஆனாலும் அதிலும் ஒரு பெரிய விடயம் இருக்கு. திருமாணமான பின் நானும் உப்புமா செய்து பழகினேன் என்று கூறுவது தவறு. அம்மாவிடம் கேட்டுச் செய்தேன். கண்பார்த்தால் கை செய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எனக்குக் கை வந்த கலை. நானே உண்டு பார்த்துவிட்டு என்னை மெச்சிக்கொண்டேன். கணவருக்கு ஆசையுடன் போட்டுக்கொண்டு போய்க் கொடுத்தவுடன் இரண்டு வாய் உண்டவர் “என்ன இது அவியாமல் இருக்கு. தண்ணீர் கூட விட்டு கிண்டினால்த்தான். சாப்பிடலாம். அம்மா அப்பிடித்தான் செய்து தாறவ” என்றவுடன் என் உற்சாகம் வடிந்து போக “அம்மா இப்பிடித்தான் செய்யிறவ. நல்லாய் இருக்குத் தானே என்றவுடன். “எனக்கு வேண்டாம். தொண்டைக்குள்ள சிக்குது. இடியப்பம் அவி” என்றுவிட்டு திரும்பிக்கொள்ள நான் உப்புமாவை கொண்டுபோகிறேன். இப்போதென்றால் என் பதில் வேறாக இருந்திருக்கும். திருமணமான புதிதில் புது மாப்பிளை சொன்னால் கேட்கத்தானே வேண்டும் என்று எண்ணி இடியப்பம் அவித்துக் கொடுத்தது மட்டுமின்றி. பின்னர் எப்போதும் அம்மா செய்வதுபோல் செய்ய எண்ணியது கூட இல்லை. தண்ணீர் அதிகம் விட்டு அவருக்காக அவரின் அம்மா செய்வதுபோல் செய்து குடுத்துக் குடுத்து அதையே நானும் உண்டு பழகி உப்புமா என்றாலே அதுதான் என்று எனக்கும் பழகிப் போச்சு. அது மட்டும்தான் என்று நினைக்காதேங்கோ. அம்மா நிறையத் தேங்காய்ப்பூப் போட்டு அவிக்கும் பிட்டுக் கூட என் ஆசைக்கு அவிக்கேலாமல் போச்சு. அம்மா கொஞ்சம் கொஞ்சமாத் தண்ணீர் விட்டு சிறிதாகக் குற்றி அவிக்கும் பிட்டின் வாசனை இன்றும் மனதை நிறைக்கிறது. நான் கணவருக்கு முதல்முதல் அவித்தபோது “என்ன புட்டு அவிக்கிறாய். அம்மா தண்ணீர் அதிகம் விட்டு கையால உதிர்த்துத்தான் புட்டு அவிப்பா. உப்பிடி சில்வர் கப்பால குத்துறேல்லை என்றபோது“ உங்கட வீட்டில சிவர் கப் இல்லையாக்கும்” என்று கூறி முடியமுதலே “தேவை இல்லாமல் வாய்க்கு வாய் காட்டாதை” என்றதோடை நில்லாமல் “இண்டைக்கு ஓகே. இனிமேல் அம்மா அவிக்கிற புட்டுமாதிரி அவிச்சுப் பழகு” என்று முடித்ததுதான். முப்பத்தெட்டு ஆண்டாய்த் தொடருது. இன்று மாலை என்ன சமைக்கலாம் என்று யோசித்தபோது அம்மா அவிக்கும் பிட்டுப்போல் வெள்ளைமாப் பிட்டு அவித்தால் என்ன என்று எண்ணியவுடனேயே வாயில் எச்சில் ஊற ஆரம்பிக்கிறது. கணவருக்கு தனியாகவும் எனக்குத் தனியாகவும் அவித்தால் என்ன என்ற யோசனைவர அதுவும் நல்லது என்ற எண்ணம் எழுகிறது. கணவர் ஆறு மணிக்கு வேலையால் வந்தாலும் எட்டு மணிக்குத்தான் இரவு உணவை உண்பார். நானோ ஆறு மணிக்குள் உண்டுவிடுவேன். பிட்டை எனக்கு மட்டும் அவித்து மதியம் வைத்த மீன் குழம்புடன் கடையில் வாங்கிய மாம்பழத்தையும் சீவி வைத்தபடி உணவு மேசையில் அமர்ந்து உலிர் பிட்டை ஆற அமர உண்டபோது மனதே நிறைந்துபோகிறது. கணவர் உணவு மேசைக்கு வருவதாகக் கட்டியங் கூறியவுடன் மளமளவென்று பிட்டை அவித்து மீன்குழம்பு மாம்பழத்துடன் பரிமாற, அரை வயிறு நிறைந்தபின்தான் “என்ன கொம்மான்ர புட்டு அவிச்சிருக்கிறாய்” என்கிறார். இத்தனை காலம் உங்கள் விருப்பத்துக்கு அவிச்சாச்சு. இனிமேல் இந்தப் பிட்டுத்தான் என்று கூறியபடி அப்பால் நகர்கிறேன் நான். அன்று இரவு எல்லா வேலையும் முடித்துக் களைத்து நாளை காலை வெள்ளண வேலைக்குப் போக எழுவதற்காக ஆறுமணிக்கு அலாமை வைத்துவிட்டு அக்கடா என்று கட்டிலில் சாய்கிறேன். கட்டிலுக்கு வந்த மனிசன் நித்திரை கொண்டிட்டீரோ என்றபடி கைகளால் துழாவ, நான் நித்திரை கொள்ளப்போறன், இண்டைக்கு ஏலாது என்றபடி திரும்பிப் படுக்கிறேன் நான்.
  42. ரணிலுக்கு எதிராக புதிய விசாரணைகள் - சுனில் வட்டகல Published By: Rajeeban 09 Mar, 2025 | 12:57 PM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம புதிய விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்தே விசாரணையில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் இந்த இரண்டும் ரணில் விக்கிரமசிங்;கவின் பதவிக்காலத்திலேயே இடம்பெற்றன என குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி வெளிப்படை தன்மை குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208698
  43. அனுரா வீட்டை கண்டுபிடித்துப்போய், தேநீர் அருந்தி விட்டு புகழ்ந்த நபராக இருக்குமோ? மண்டை கழுவப்பட்டதுகள்.
  44. வணக்கம் வாத்தியார் ......! நண்பரே, நீங்கள் இங்கு நலமே , நாங்கள் அங்கு நலமா ........! 😂 பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே பெண் : இந்திய பொண்ணு தாங்கோ இத்தாலி கண்ணு தாங்கோ நான் ஒரு மின்னல் தாங்கோ தில் இருந்தா வாங்கோ பெண் : ஹே மேனியே மேக்னட் தாங்கோ வார்த்தையே சாக்லேட் தாங்கோ நான் ஒரு மின்சாரங்கோ தள்ளி நின்னுகோங்கோ பெண் : ரெட் ஒயின் பாட்டில் நான் காஷ்மீர் ஆப்பிள் நான் கோல்டன் ஏஞ்சல் நானே பெண் : ஹா ஆடலாம் டங்கோ டங்கோ அடிக்கலாம் போங்கோ கோங்கோ வாழ்க்கையே ஷார்டோ லாங்கோ வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ பெண் : பாடலாம் சாங்கோ சாங்கோ உதடுகள் வீங்கோ வீங்கோ வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ வாழ்வோம் இனிமே வாங்கோ பெண் : ஓசோன் தாண்டி நம் ஓசை போகட்டும் வானம் கை தட்டுமே பெண் : ஆசைகள் ஒன்னோ ரெண்டோ அடங்கிடும் மனசும் உண்டோ நம் விழி ரெண்டும் விண்டோ மூடி வைப்பதேனோ பெண் : ஓஹோ ஹோ வானவில் பென்டு என்றோ பிறை நிலா வென்டு என்றோ சொல்பவன் முட்டாள் அன்றோ குறையை பார்த்தால் நன்றோ பெண் : நேற்று போயாச்சு நாளை புதிராச்சு இன்றே நிலையானது ...........! --- அலேக்ரா அலேக்ரா ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.