Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்11Points88812Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்9Points19667Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்8Points20351Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33807Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/18/25 in all areas
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
3 pointsஒரே ஒரு இழையில் தொங்கியபடி ஒரு சிலந்தி இருந்தது. எங்கிருந்தோ யாரோ சொன்னார்கள், சிலந்தி இருப்பது கூட்டுக்கு நடுவில் அல்லவா? சிலந்தியும் ஊடுபாவாக கூடு கட்டத் துவங்கிற்று. போதாக்குறைக்கு உலக வலைப்பின்னலிலும். ... இப்போதெல்லாம் அது கட்டிவிட்ட கூட்டிலிருந்து தப்பிவிடத் தான் எத்தனிக்கிறது ஆனால் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி இழைகளே அதை நெரிக்கின்றன அதன் கூக்குரலோ வலைப்பின்னல்களில் எதிரொலித்தாலும் யாருக்கும் கேட்பதாயில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் தன்னைப் போலவே பல சிலந்திகள்... சிலதோ ஏதோ ஒரு உத்வேகத்தோடு, கழுத்தை நெரித்தாலும் - மேலும் மேலும் வலைகளைப் பின்னுவதும் தெரிகிறது. இப்போது சிலந்திக்குச் சிரிப்பும் வருகிறது வலையைப் பின்னப்போய் வாழ்க்கையை இழந்து விட்டேனே.3 points
-
தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
3 pointsஇந்த பாடலை கர்ணன் படத்தில் வந்த “கண்டா வரச்சொல்லுங்க” மெட்டில் பாட/வாசிக்கவும். தலைவரை கண்டா வரச்சொல்லுங்க வல்லையிலே பிறந்த புள்ள இனம் வாழவென வந்த புள்ள… வல்லையிலே பிறந்த புள்ள இனம் வாழவென வந்த புள்ள… வேலுப்பிள்ளை பெத்த புள்ள.. விடுதலைய தந்த புள்ள… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… ******* ஊரெங்கும் ரத்தவாசம் ஒடுங்கி போச்சு நம்ம இனம்…ஊரெங்கும் ரத்தவாசம் ஒடுங்கி போச்சு நம்ம இனம்… வீர்கொண்டெழுந்தார் பாரு விரிந்ததங்கு தமிழர் தேசம்… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… ********* ஊரு நம்ம ஊரு அப்பா.. துண்டுபட்டு போனதப்பா.. ஊரு நம்ம ஊரு அப்பா.. துண்டுபட்டு போனதப்பா.. வேங்கையவர் வந்த பின்னே எங்கள் வேற்றுமைகள் ஒழிந்ததப்பா… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… ******* ஆட்சியிலும் அமரவில்லை எந்த அதிகாரமும் சுவைக்கவில்லை… தேசம் எனும் பெருங்கனவை என்றும் விலகி அவர் நடந்ததில்லை… தேசம் எனும் பெருங்கனவை என்றும் விலகி அவர் நடந்ததில்லை… கண்டா வரச்சொல்லுங்க…. தலைவரை கையோட கூட்டி வாருங்க… அவர கண்டா வரச்சொல்லுங்க தலைவரை கையோட கூட்டி வாருங்க… -கோஷான் சே-3 points
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
யாழுக்கு வருவது எமது கருத்தை சொல்லமட்டும் அல்ல, ஏனையோர் சொல்வதை கேட்டு அதை மீளாய்வுசெய்யவும்தான். உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.3 points
-
கருத்து படங்கள்
3 points3 points
- தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
உண்மைதான். கலப்படமில்லாத கள்வர்கள் 🤣 தலைவர் இல்லை என்பதை நான் எப்போதோ ஏற்று கொண்டு விட்டேன். அவரை முறைப்படி நினைவுகூர கூட நம்மால் இயலவில்லை என்பதே வரலாற்று சோகம். #மொத்தமாகவும் சில்லறையாகவும்2 points- தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
மலையக தமிழ் கட்சிகளுக்கு விழும் வாக்கை பிரிப்பதற்காக.. சுமந்திரன் தலைமையிலான தமிழரசு கட்சி செய்யும் கீழ்த்தரமான செயல். தமிழரசு கட்சி… கொழும்பு, கண்டியில் போட்டியிட்டு இருக்காவிடில், அங்கு வசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்… தமிழர் என்ற முறையில் மலையக தமிழ் கட்சிகளுக்கே இதுவரை வாக்களித்து வந்தவர்கள். இம்முறை… சுமந்திரன் என்னும் சகுனியின் வேலையால் சிங்களப் பகுதியில் உள்ள தமிழ் வாக்குகள் சிதறுண்டு உள்ளூராட்சி மன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவம் குறையப் போகின்றது. இது… மனோ கணேசன், செந்தில் தொண்டமான் மீது… சுமந்திரனுக்கு இருக்கும் தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ளும் செய்கையாகவே கருதப்படுகின்றது.2 points- தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
ஊரறிந்த செய்தியையே 16 ஆண்டுகள் கழித்துத்தான் (தானுமொரு தரவழியாம் என்று) இதிலுள்ளவர்கள் வெளியிடுறாங்கள் என்றால் எப்பேர்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.2 points- யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் கௌசல்யா!
அர்ச்சுனா வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து அந்த இடத்திற்கு கௌசல்யாவை நியமிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். இப்போ கௌசல்யா யாழ். மேயர் வேட்பாளர் என்றால்… அப்போ சொன்னது பொய்யா கோபால். 😂2 points- அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
முகநூலில் இருந்து.. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கிறேன் என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். சக பா.உ சந்திரசேகரன் அவர்களை சீண்டி மலையக மக்களை இழிவுபடுத்தினார் டாக்குத்தர் அர்ச்சுனா. படிச்சவன் எல்லாம் அறிவுஜீவி என்ற கணக்கில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நீ என்ன படிச்சனி? பல்கலைக்கழகம் போனனியா? உன்ரை கல்வித் தகைமை என்ன? என அசல் யாழ்ப்பாண கல்விப் பவுசு மனநிலையின் கைதியாக உழல்கிறார் அவர். இப்போ பெண் அரசியல் செயற்பாட்டாளரை "விபச்சாரி" என விளித்து ஒரு ஆணாதிக்க ஒழுக்கவாதியாகி தாக்குதல் தொடுக்கிறார். அந்த பெண் செயற்பாட்டாளரின் அரசியல் அறிவுக்கும் தத்துவார்த்த அறிவுக்கும் ஈடுகொடுக்க அவரது டாக்குத்தர் சான்றிதழினதும் மும்மொழி அறிவினதும் போதாமையானது மனித இழிவுபடுத்தலை அவரிடமிருந்து முன்தள்ளுகிறது. நமது இயக்கங்கள் ஒழுக்கவாதங்களை கேள்விக்கு உட்படுத்தி முன்னேறாமல் அதற்குள் சுழன்று திரிந்தவர்கள். வறுமை துரத்தி பால்வினைத் தொழிலுக்குள் தள்ளிய பெண்களை 'சமூக விரோதி' என மின்கம்ப தண்டனை வழங்கியவர்கள். அந்த நிலைக்கு தள்ளிய அரசியல் பொருளாதார சமூக காரணிகளை கட்டவிழ்த்து செயற்பட வக்கில்லாமல் தேங்கிய அறிவுடன் இருந்தது மட்டுமன்றி, பால்வினை செயற்பாட்டை நுகரும் ஆண் பட்டாளமின்றி பால்வினைத் தொழில் எவ்வாறு இயங்குநிலையில் இருக்கும் என்ற தர்க்க அறிவுகூட இல்லாமல் இருந்தனர். அதிகாரத்தாலும் ஆயுதத்தாலும் சட்டத்தாலும் பெண்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்தியதற்கு அப்பால் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்தியல் போராட்டம் புலிகளின் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் காத்திரமாக இருந்ததில்லை. வளர்ச்சி அடையவுமில்லை. அதனாலேயே தப்பிப் பிழைத்த புலிப் பெண் போராளிகளை இயக்கத்தவர் மட்டுமல்ல சமூகமும் கீழ்நிலைக்கு தள்ளி வாழ்வாதாரத்துக்கு வழியற்றவர்களாக ஆக்கியது. ஆணாதிக்க கற்பிதங்களை நொருக்கிக் காட்டிய அவர்களை பெருமையாக கொண்டாட வேண்டிய சமூகம், போரின் பின் அதே போர்க்குணத்தை 'பெண்மை'க்கு எதிரானதாக நிறுத்திய அவலம் நடந்தது. அவர்களை திருமணம் செய்ய சமூக ஆண்கள் உட்பட ஆண் போராளிகள்கூட பின்னின்றனர். இதன்வழி வந்த இன்றைய கலாச்சார காவலர்கள் யூரியூப் தொடக்கம் பாராளுமன்றம் வரை பேசுகிற பேச்சுகளில் அறிவு கிழிந்து தொங்குகிறது. 'பாலியல் வல்லுறவு' என்ற வார்த்தையை பாலியல் வன்புணர்வு, பாலியல் வல்லுறவு எனவும் 'விபச்சாரம்' என்பதை பாலியல் தொழில், பால்வினைத் தொழில் எனவும் இலங்கையின் தமிழ் செய்திப் பத்திரிகைகள்கூட எழுதத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. புகலிட மாக்சியர்கள் ஒருசிலர் கூட இப்போதும் 'பாலியல் வல்லுறவு', 'விபச்சாரம்' (அரசியல் விபச்சாரம்) என எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க மொழி, ஆணாதிக்க ஒழுக்கவாதம் என்பவற்றை தாண்ட முடியாமல் அவதிப்படுகிற நிலை அவர்களது. சக மனிதரை உடல் அவமதிப்பு அல்லது அறிவு அவமதிப்பு செய்கிற நிலை இன்னொருபுறம் பெரும்பாலானவர்களிடமும் இருக்கிறது. மிருகங்களை உருவகப்படுத்தி பேசுகிற நிலை காணப்படுகிறது. ஒருவேளை நாயோ குரங்கோ பேசும் வல்லமை கொண்டிருந்தால் மனிதர்களுக்கு அவை -தமது தனித்துவம் குறித்து- வகுப்பெடுக்க வேண்டி வந்திருக்கும். இந்த எல்லா கசடுகளையும் மூளைக்குள் வைத்துக்கொண்டு மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் போய்வருவதற்கு டாக்குத்தருக்கும் வேறு பலருக்கும் கோட்டும் சூட்டும் வெள்ளை வேட்டியும் பவுசும் வேறு தேவைப்படுகிறது. Ravindran Pa நன்றி https://www.facebook.com/share/p/15vnSeGRsx/?2 points- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
உங்கள் அர்சனாவும் அவரது அடி பொடிகளான வன்னி அணியும் தமிழ் பெண்கள் மீது மேற்கொண்ட அவதூறுகளுக்கு ஆதாரம் உண்டா வாத்தியாரே. பெண் யூருப்பர் சங்கவி மீது அபாண்டமான அவதூறுகளை தனது வன்னி அணி மூலம் பரப்பி அதை தானே share செய்து அர்சசனாவிடம் நீங்கள் அதற்கு ஆதாரம் நீங்கள் கேட்கவில்லையே! அந்த பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நேர்மையாக காணொளி மூலம் அர்சனாவிடம் நீதி கோரிய போது, அதற்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு அர்சனா சைக்கோ ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில் அந்த பெண்மீது மீது தானே நேரடியாகவே அவதூறுகளும் இழிவு படுத்தும் விதாமாகவும் ஒரு சைக்கோவை போல் பேசியிருந்த அரச்சனாவிடம் ஆதாரம் கேட்டீர்களா? அர்சனாவின் அந்த அவதூறு காணொளியை பார்தத பின்னும் அவரை ஆதரிப்பவர்களும் மன நிலை பாதிக்கப்பட்ட சைக்கோக்களே.2 points- தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
2 points2 points- தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
2 pointsஅவருடைய போரிடும் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்னும் பெருமை எமக்குண்டு ..........! நறுக்கென்ற வரிகள் நல்லா இருக்கு . ..........! 👍2 points- தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
2 pointsவரிகளை மாற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். இன்று எல்லோரும் வணங்கும் எந்தக் கடவுள் என்றாலும் வீரதீரங்கள் நிறைந்தவர்களாகவே இருந்ததாக சொல்கிறார்கள். இந்த ரீதியில் எம் கண்முன்னே தமிழினத்தின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய வீரன் உலக தமிழினத்தின் தலைவன் தேசியத் தலைவரை ஒரு கடவுளாகவே பார்க்கிறேன்.2 points- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
சிறிலங்கா இஸ்லாமிய சமுகம் சர்வதேச இஸ்லாமிய சமுகத்துடன் நேரடியாக தொடர்புடையது.அவர்கள் மன்னிப்பு கேட்டால் அது உலகலாவிய இஸ்லாமியர்களை பாதிக்கும் என்ற நிலைப்பாட்டை உடையவர்கள்.. இஸ்லாமியனாக பிறக்காவிட்டால் அவன் "கறாமி"பாவி "யகுதி" என்ற கொள்கையை உடையவ்ர்கள் ..அவர்களிடமிருந்து மன்னிப்பை எதிர் பார்க்க முடியாது முக்கியமாக வேற்று மதத்தினர்... பலஸ்தீன விடுதலைக்கு சிறிலங்காவிலிருந்து குரல் கொடுப்பார்கள்2 points- அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற விவாத தொடக்கத்தில் சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது பிமல் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கம் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக ஸ்வஸ்திகா அருள்லிங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அது குறித்து முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி, குறித்த விடயத்தை விசாரணை செய்து இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தைக்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். https://ibctamil.com/article/request-filed-in-parliament-against-mp-archuna-17422214711 point- பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள்
'இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்' - பெற்றோர்களின் கடின உழைப்பை புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் மாணவர்கள் பட மூலாதாரம்,JAYARAJ S படக்குறிப்பு,பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2025, 05:55 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன் நாள் முழுக்க தன் அம்மா வேலை செய்வதை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார், 12ம் வகுப்பு படிக்கும் ஜெயராஜ். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சின்னத்தம்பிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ், ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் படித்துவருகிறார். "நானும் செங்கல் சூளையில் அம்மாவுடன் வேலை செய்திருக்கிறேன். மண்ணைக் குழைத்து, செங்கலை உருவாக்குவது வரை கடுமையான வேலை அது. தலையில் மண்ணை சுமந்து, குழைத்து அதனை செங்கல்லாக உருவாக்க வேண்டும். மதியம் வெயிலில் அதிக வேலைகளை பார்க்க முடியாது என்பதால் அதிகாலையிலேயே அம்மா வேலை பார்ப்பார். அவரை புகைப்படம் எடுப்பதற்காக அதிகாலை 2 மணிக்கு ஒருமுறை எழுந்தேன். ஒரேயொரு புகைப்படம் எடுத்துவிட்டு தூக்கம் வருகிறது என வந்துவிட்டேன். ஆனால், அம்மாவுக்கு அது தினசரி செயல்பாடு." பட மூலாதாரம்,SHEIK HASAN K ஜெயராஜ் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுமார் 17 அரசு மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் 40 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் செய்யும் வேலைகளையும் தங்கள் சுற்றத்தில் உழைக்கும் மக்கள் பலரையும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். உழைக்கும் மக்களின் வலியை உணர்த்தும் வகையிலான படங்களாக அவை உள்ளன. துப்புரவு பணி, கட்டுமான தொழில், கல் குவாரி, செருப்பு தைத்தல், மஞ்சள் ஆலை, பனை மரம் ஏறுதல், பேருந்து ஓட்டுநர், தையல் தொழிலாளி என, கடும் உழைப்பை கோரும் வேலைகளைச் செய்யும் தங்கள் பெற்றோர்களை லென்ஸ் வாயிலாக புகைப்படம் எடுத்துள்ளனர். வெட்டுக் காயங்கள், சிமெண்ட், மண் ஊறிய கை, கால்களை பிரதானமாக அவர்களின் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. அவர்கள் பெற்றோரின் உழைப்பு அந்த படங்களில் பிரதிபலிக்கிறது. "செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது கால் பாதம் வெடித்துப் புண்ணாகிவிடும். தலைவலி, கால்வலி, மயக்கம், இடுப்பு வலி அடிக்கடி ஏற்படும். கேமரா வழியே புகைப்படம் எடுக்கும் போதுதான் அம்மாவுடைய வலி எனக்குப் புரிகிறது. புகைப்படங்கள் மூலம் அம்மாவின் வலியை மற்றவர்களுக்குக் கடத்த முடியும் என நினைக்கிறேன்." என்கிறார் ஜெயராஜ். அப்பாராவை 20 ஆண்டுகள் கொத்தடிமையாக நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அண்ணாதுரை சொல்வது என்ன? இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் அன்று ஓய்வறியாத மாஞ்சோலை எஸ்டேட்டில் இன்று பேரமைதி - தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்? தேசிய அளவில் 42%: ஜவுளி முதல் கார் உற்பத்தி வரை தமிழ்நாட்டுப் பெண்கள் நுழைந்து சாதித்தது எப்படி? "அம்மா முதலில் அவரை புகைப்படம் எடுக்க ஒத்துக்கொள்ளவில்லை. நான் எவ்வளவோ கேட்ட பிறகுதான், 'சரி நான் வேலை பார்க்கிறேன், நீ எடுத்துக்கோ'ன்னு சொன்னாங்க. புகைப்படத்தைக் காண்பித்ததும் 'நல்லா இருக்குன்னு' சொன்னாங்க." அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புகைப்படக் கலை, அரங்கக் கலை, மைமிங், நிகழ்த்துக் கலைகள் என பலவும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கலையை கற்பதன் மூலம், நான்கு ஆண்டுகளில் நான்கு வெவ்வேறு கலைகளை அவர்களால் கற்க முடியும் என்பதே இதன் நோக்கம். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இது செயல்படுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GOVARTHANAN L S படக்குறிப்பு,இந்த புகைப்பட கண்காட்சி கடந்த பிப்ரவரி மாதம் 3 நாட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது 'அப்பா ஒரு ஹீரோ' அப்படி புகைப்படக் கலையை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு 6-7 மாதங்களாக பயிற்சியளித்து, 'உழைக்கும் மக்கள்' எனும் தலைப்பில் அவர்கள் எடுத்த புகைப்படங்கள், கடந்த பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு மாதிரி பள்ளிகள் என்பது உண்டு உறைவிட பள்ளிகளாகும். எனவே, வார விடுமுறையில்தான் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போதுதான் இந்த புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். மதுரை அரசு மாதிரிப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவரும் கோபிகா லெட்சுமியின் தந்தை முத்துகிருஷ்ணன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய ஒரு சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்துவருகிறார். பட மூலாதாரம்,GOPIKA LAKSHMI M படக்குறிப்பு,கோபிகாலெட்சுமியின் தந்தை டயாலிசிஸ் செய்த நிலையிலும் வாகனத்திலேயே சென்று பலசரக்குகளை விற்பனை செய்துவருகிறார் "அப்பா ஒரு சிறிய நான்கு சக்கர வாகனத்திலேயே பல சரக்கு வியாபாரம் செய்துவருகிறார். அருகிலுள்ள கிராமங்களுக்கு வாகனத்திலேயே சென்று சரக்குகளை விற்பார். டயாலிசிஸ் செய்தும் அப்பா எங்களுக்காக கடினமாக உழைக்கிறார். டயாலிசிஸ் செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுப்பதற்கு எங்களுக்கு வசதி இல்லை. இந்த நிலையிலும் அப்பா எப்படி உழைக்கிறார் என்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்தேன். நாம் எடுக்கும் படங்கள் நம் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க வேண்டும்." என்கிறார் தா. வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிகாலெட்சுமி. அவரை பொறுத்தவரை இந்த புகைப்படங்களில் அவருடைய அப்பா 'ஒரு ஹீரோ போன்று இருக்கிறார்." அறக்கட்டளை மூலமாக இலவசமாக டயாலிசிஸ் செய்யும் முத்துக்கிருஷ்ணனுக்கு, மாதந்தோறும் ரூ.3,000 வரை மாத்திரைகளுக்கு செலவாகிறது. பட மூலாதாரம்,MUKESH படக்குறிப்பு,கல்குவாரியில் டிரில்லிங் வேலை செய்யும் கதிர்வேலுக்கு ஒருநாள் சம்பளம் ரூ.500-600 தொழில்முறையிலான டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது ஆரம்பத்தில் இந்த மாணவர்களுக்குக் கடினமானதாக இருந்தாலும், தொடர் பயிற்சியின் வாயிலாக இக்கலை சாத்தியமாகியிருக்கிறது. இம்மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள புகைப்படக் கலை பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர். "மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். குழந்தைகள் என்ன புகைப்படங்கள் எடுக்கின்றனர் என பார்க்க நினைத்தோம். உழைக்கும் மக்கள் அவர்களை சுற்றியே இருக்கின்றனர், அதை ஆவணப்படுத்தியிருக்கின்றனர். அவர்களை பற்றி தெரிந்து கொள்வதுதான் சமூக மாற்றத்தின் தொடக்கம்." என்கிறார், மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள முத்தமிழ் கலைவிழி. இவர், நீலம் அறக்கட்டடளை நிறுவனராகவும் உள்ளார். பட மூலாதாரம்,SARAN R படக்குறிப்பு,இம்மாணவர்களை பொறுத்தவரை இயற்கை காட்சிகளைவிட மற்றவர்களின் உழைப்பை புகைப்படங்களாக பதிவு செய்வதன் மூலம் அக்கலையின் நோக்கம் நிறைவேறுகிறது கடின உழைப்பும் சொற்ப வருமானமும் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த முகேஷ் அம்மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய அப்பா கதிர்வேல், திருத்தணியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலை பார்க்கிறார். "புகைப்படங்கள் எடுப்பதற்காக அப்பாவுடன் கல்குவாரியிலேயே நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் அப்பா கல் குவாரியில் எப்படியான வேலைகளை செய்கிறார் என்பதை முதன்முறையாக பார்த்தேன். அப்பா அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்." என்கிறார் முகேஷ். அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும் பின்னர் சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையும் தன் தந்தை கல் குவாரியில் 'டிரில்லிங்' வேலைகளை பார்ப்பதாகக் கூறுகிறார் அவர். 'விதிகளை வளைத்து ரூ.300 கோடி முறைகேடு' - உணவுத்துறை மீதான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்14 மார்ச் 2025 கோவையில் மத்திய அரசுப் பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் - வட மாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?13 மார்ச் 2025 பட மூலாதாரம்,MUKESH K படக்குறிப்பு,தங்களை சுற்றி இருப்பவர்களின், பலராலும் அறியப்படாத அவர்களின் உழைப்பை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இந்த மாணவர்களின் நோக்கமாக உள்ளது "அவர்கள் தங்கும் அறையில் கட்டில், மெத்தையெல்லாம் இல்லை. குவாரியில் உள்ள காலி அட்டைப் பெட்டிகள் மீதுதான் அப்பா படுத்திருப்பார். அப்பாவுக்கு கடும் வெயிலில் வேலை செய்வதால், கடந்தாண்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டது." இந்த டிரில்லிங் வேலையில் ஒரு நாளைக்கு 500-600 ரூபாய் கிடைக்கும் எனக்கூறுகிறார் முகேஷ். இந்த மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர், விளிம்புநிலை குழந்தைகள். தினசரி கூலி வேலைகளையே இவர்களின் பெற்றோர்கள் செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை பிரதானப்படுத்த வேண்டும் என்பது இந்த புகைப்படங்களின் நோக்கமல்ல, மாறாக, "தங்கள் பெற்றோரின் கடின உழைப்பை சமூகம் அறிய செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்;" என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும்போது புரிகிறது. பட மூலாதாரம்,KEERTHI S படக்குறிப்பு,சரக்குகளை வாங்க தன் அம்மா முத்துலட்சுமி பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார் கீர்த்தி தென்காசி மாவட்டம் மாயமான்குறிச்சியை சேர்ந்த கீர்த்தி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் முன்பு சிறியதாக பெட்டிக் கடை வைத்திருக்கும் தன் அம்மா முத்துலட்சுமி, சரக்குகளை வாங்க பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார். "அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. அம்மாதான், கடை, வீடு இரண்டையும் கவனிக்கிறார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை அவருக்கு வேலை இருக்கும். குழந்தைகளை முன்னேற்ற ஒரு பெண் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை புகைப்படங்கள் வாயிலாக காண்பிக்க வேண்டும் என நினைத்தேன்." என்கிறார் கீர்த்தி. "அம்மா வேலை செய்வதை கேமரா லென்ஸ் வழியாக பார்க்கும்போது புதிதாக இருந்தது. புரொபஷனல் கேமராவை பிடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் பின்னர் பழகிவிட்டது. இரவு நேரத்தில் எப்படி படம் எடுப்பது, ஷட்டர் ஸ்பீடு, அபெர்ச்சர் எப்படி சரிசெய்வது என எல்லாம் தெரியும்." பட மூலாதாரம்,SHEIK HASAN K படக்குறிப்பு,தங்கள் பெற்றோர்களின் கை, கால்களை புகைப்படம் எடுப்பதன் வாயிலாக அவர்களின் கதைகளை சொல்ல முயல்கின்றனர் இந்த புகைப்பட கண்காட்சியை புகைப்படக் கலைஞர் எம். பழனிக்குமார் ஒருங்கிணைத்துள்ளார். "நம் கதைகளை எப்படி ஆவணப்படுத்துவது என்பதை இந்த மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம்." என்கிறார் அவரர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் மரணங்களை தொடர்ச்சியாக தன் புகைப்படங்கள் வாயிலாக ஆவணப்படுத்தி வருகிறார் பழனிக்குமார். வேலை செய்யும் அம்மாவின் கைகள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் அம்மாக்களையும் சில மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். " வெளியில் சென்று வேலை பார்ப்பது மட்டும் உழைப்பு அல்ல, வீட்டில் காலை முதல் இரவு வரை என் அம்மாவின் கைகள் வேலை செய்துகொண்டேதான் இருக்கிறது" என தன் அம்மாவின் கைகளை மட்டுமே புகைப்படமாக எடுத்துள்ளார் மாணவி ஒருவர். "இம்மாணவர்களின் அப்பாவோ அம்மாவோ எப்படிப்பட்ட சூழல்களில் வேலை பார்க்கின்றனர் என்பதை முன்பு பெரும்பாலும் பார்த்திருக்க மாட்டார்கள். அதை நேரடியாக பார்க்கும்போது அந்த உழைப்பை உணருகின்றனர். அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. புகைப்படக் கலையில் அவர்களின் திறமையை அவர்களின் புகைப்படங்களை பார்த்தாலே புரியும்" என்றார். பட மூலாதாரம்,RASHMITHA T படக்குறிப்பு,பீடி சுற்றும் தொழில் செய்பவர்களின் வீடு முழுவதும் புகையிலை வாசனையே நிரம்பியிருக்கிறது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ரக்ஷ்மிதா, தங்கள் பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களை புகைப்படங்கள் எடுத்துள்ளார். "வீட்டு வாசல் முன்பு அமர்ந்துதான் பீடி சுற்றுவார்கள். அவர்களுடைய வீட்டில் புகையிலை வாசனை அதிகமாக இருக்கும். கொஞ்ச நேரத்துக்கு மேல் அங்கு இருக்க முடியாது. இவர்கள் ஆயிரம் பீடி சுற்றினால்தான் 250 ரூபாய் கிடைக்கும். மிக வேகமாக பீடி சுற்றுபவர்களுக்கே ஆயிரம் பீடி சுற்ற ஐந்து நாட்களாகும். அவர்களுக்கு காசநோய், நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. சொல்லப்படாத இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்." என்கிறார் ரக்ஷ்மிதா. சமூகத்தில் அதிகம் அறியப்படாத எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் பிள்ளைகளாலேயே புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70elj406yzo1 point- Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.
பரியோவான் கல்லூரி பழைய மாணவனும், என் நண்பனும், Yarl IT hub இன் முதுகெலும்பாகவும் இருக்கும் ரமோஷனின் வாழ்க்கை பயணம் பற்றிய காணொளி / பேட்டி. தான் மட்டும் முன்னேறியதுடன் வடக்கில் உள்ள இளையவர்களையும் முன்னேற்ற முயற்சிகளை எடுக்கும் ஒருவர் இவர். இக் காணொளியை தயாரித்து வெளியிட்ட Saho Creation இற்கு நன்றி.1 point- சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. 2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன். சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது. ஆனால் இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது. நுரையிரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை செலுத்தினால் தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்கிற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுகுழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள். இதை எப்படி சரிசெய்வது? வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது. மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது. வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு நாட்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்போதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும் படி ஒரு அவஸ்தை. ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத்தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும் படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை ஜீரம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது உண்ண முடியாது எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படி புகைத்தால் தான் கதை எழுத வரும் என்று முட்டாள் தனமாக நம்பியதை நொந்து கொண்டேன். மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால் மூச்சு திணறி இதோஸ.. இதோஸ என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பராவாயில்லை. மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல் வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள். - எழுத்தாளர் பாலகுமாரன் - Jeeva Murugesan ·1 point- கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
வெளிநாடுகளில பெயருகளை வெட்டிவெட்டி வைத்திருக்கிறார்கள். ஆங்கில பெயரா தமிழா சிங்களமா என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. கேட்டால் நீட்டுப் பெயர் என்கிறார்கள்.1 point- Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.
நல்ல வேலை நல்ல சம்பளம் இருந்தும் தாய்மண்ணுக்கு ஏதாவது பயனுள்ள விடயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். தான் மட்டுமல்லாது தன்குடும்பத்தையே இந்த விடயத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார். அந்த மனசுதான் கடவுள்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@ரசோதரன் 64) வது கேள்விக்கு பதில் இல்லை. RCB அல்லது SRH. எது உங்கள் தெரிவு? எப்படியும் ஒரு அணிக்குக் கொடுப்பார்கள். ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்தால் மூன்று புள்ளிகள் கிடைக்கக்கூடும். இல்லாவிட்டால் இந்தக் கேள்விக்கு மூன்று முட்டைகள்தான்!1 point- மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
1 point😅 உண்மை அண்ணை. முற்றும் துறந்து ஞானியானாத் தான் பிரச்சினை என்று பாத்தால், இல்லை, முயலுக்கு நாலு கால் தான் என்றாலும் பிரச்சினையாகவெல்லோ இருக்கு. உது பாதி ஆன்மிகம் பாதி சுய எள்ளல்.1 point- கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
தமிழர்களுக்கு இப்படி ஏதாவது நடந்தால் என்னை தூக்கத்தால் எழுப்பி விடவும்.1 point- கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
உங்க பாரடா சிரிலாங்காவில் சட்டம் ஒழுங்கு ,மனுநீதி கண்ட சோழனுக்கு பிறகு நம்ம தோழன் அனுராவின்ட ஆட்சியில தான் நடக்கின்றது ..மனுநீதி கண்ட சோழனின் மறு அவதாரம் அனுரா ....ஜெயவேவா1 point- தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
போலித்துவாரகா விடயத்தில் நடந்ததுதான் இதற்கும் நடக்கும்.றோ இருக்கிறார் என்றும் இல்லை என்றும் தனது முகவர்களை வைத்து நாடகத்தை அரங்கேற்றுகிறது. புலிகள் மீதான தடை அண்மையில் நீடிக்கப்பட்டுள்ளது.1 point- தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?
என்னைப் பொறுத்த வரைக்கும், குப்பையனுகளிலை குற்றம் கண்டுபிடிப்பதை விட - இவர்களுக்கு நிகரான அ விடப்பெரியதான ஒரு அமைப்பை உருவாக்கி இவர்களை நீர்த்துப்போகச் செய்யலாம்தானே! கனடாவாழ் தமிழர் ஒருவர் கூட ஏன் இதை செய்ய மறுக்கின்றனர்? அச்சமா? நல்ல பயனுள்ள கட்டுரை... CTCஇன் வண்டவாளங்களை அறியாதோர் இதை வாசித்து அடிப்படை அறிவை பெறலாம்.1 point- தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
1 point@goshan_che தமிழ்சூரியன் என்ற பெயரில் நெதர்லாந்தில் இருந்து தமிழ்தேசியத்தை காதலிக்கும் ஒருவர் யாழில் இருந்தார். தனிப்பட்ட பிரச்சனைகளால் ஒதுங்கிவிட்டார். இரா சேகர் என்ற பெயரில் முகநூலில் இருக்கிறார். இவர் ஒரு பாட்டுக்குழுவை வைத்து நடாத்துகிறார். இவருடைய தொடர்பு இலக்கம் பலரிடமும் இருக்லாம். இல்லாவிட்டால் முகநுhலில் தொடர்பு கொண்டு கேட்கலாம். உங்கள் முடிவை சொல்லவும்.1 point- பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்
பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்
1 pointபல தகவல்களை நினைவுபடுத்திய கட்டுரை.1 point- வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!
ரம் செய்தாலும் செய்வார். இப்போது 1700களில் இருந்த போர்கால சட்டத்தைப் பயன்படுத்தி திருப்பி அனுப்புகிறார். நீதிபதி அனுப்ப வேண்டாம் கொண்டு போனவர்களை திரும்ப கொண்டு வாருங்கள் என்று சொன்ன பினபும் சட்டத்தை மதிக்காமல் விட்டுள்ளனர். இதற்கு மிஞ்சி நீதிபதிக்கு என்ன அதிகாரம் உள்ளதென்று தெரியவில்லை. ஆனாலும் இன்றைய நாளில் ஒரே பேசுபொருளாக உள்ளது. இது இன்னமும் இயங்குகிறதா என்று யாருக்கும் தெரியாது. தனக்கு எதிராகவே இயங்குவதாக சொல்லி அரச பணத்தை விரயமாக்க வேண்டாம் என்று நிற்பாட்டச் சொல்லியுள்ளார்.1 point- அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
ஸ்வஸ்திகா அருள்லிங்கம் -- பெண் அரசியல் செயற்பாட்டாளரை விபச்சாரி என விளித்து ஒரு ஆணாதிக்க ஒழுக்கவாதியாகி தாக்குதல் தொடுக்கிறார். அந்த பெண் செயற்பாட்டாளரின் அரசியல் அறிவுக்கும் தத்துவார்த்த அறிவுக்கும் ஈடுகொடுக்க அவரது டாக்குத்தர் சான்றிதழினதும் மும்மொழி அறிவினதும் போதாமையானது மனித இழிவுபடுத்தலை அவரிடமிருந்து முன்தள்ளுகிறது. ] எல்லாவித அழுக்குளையும் மூளைக்குள் வைத்துக்கொண்டுள்ள டாக்குத்தர் அர்ச்சுனாவின் உண்மை நிலை இது தான்1 point- வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!
ஓம் ஒம் சிலவேளை அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த பாதளக்குழு உறுப்பினர்கள் கிரிமினல்களை பிடித்து இலங்கைகு அனும்பும்போது ...உங்களையெல்லாம் சேர்த்து அனுப்பி விடுவார்கள் 🤣🤣🤣🤣 கவனம் இது கண்டிக்க வேண்டியது தான்1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மையா அப்பிடி நடந்திருக்கும் போல. அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே பேச்சுவார்த்தை தகர்ந்தது. இனி நேரடித்தாக்குதல் தான். போட்டியில வென்று பொட்டிய தூக்குவம்.1 point- மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
1 pointஇது மிகவும் பொத்தாம் பொதுவாக மாயவலைக்குள் சிக்கிக்கொள்ளும் மனிதர்களைப் பற்றித் தான். நாங்களே சில கருதுகோள்கள், உறவுகள், நம்பிக்கைகளில் வலை பின்னி பின் அதற்குள் அகப்பட்டு விடுகிறோம், உண்மைகள் தெரிய வரும் போதும் அந்த வலைகளை அறுக்க முடிவதில்லை. உண்மைதான், ஏஐ நாங்கள் நினைப்பதை வரைய உதவியாய் இருக்கிறது, சரியான வகையில் கட்டளைகளைக் கொடுத்தால். அதற்கு முதல் நம் கற்பனையில் நமக்கு என்ன வேண்டும் என்பது உதிக்க வேண்டும். பொதுவாகவே நமக்கு ஓவியத்தின் / ஓவியனின் அருமை தெரிவதில்லை, இனிமேல் ஏஐ க்கு பிறகு இன்னும் மோசமாகும் என்று தான் நினைக்கிறேன் 😆.1 point- மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
1 pointயாரை குறி வைத்துள்ளீர்கள்? ஏஐ வந்ததும் எல்லோருக்கும் படம் வரையும் வேலை சுலபமாகி விட்டது.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மூளை கிடந்தால் தானே கசக்கிறதுக்கு....... எண்டாலும் இருக்கிறதை வைச்சு சமாளிப்பம். 😎 குத்தியர்! எதுக்கும் தங்கட ராசி பலன்களை பார்த்து என்னுடன் மோதவும்....மோதவும் என்றால் மோதகம் என நினைக்கப்படாது. 😜1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிரிக்கேட் ஆலோசகர் இந்த முறை மூளைய கசக்கி களத்தில் குதிக்க போர மாதிரி தெரியுது ஜந்து பவுன்ஸ் பரிசை வெல்ல முன் கூட்டிய வாழ்த்துக்கள்......................................1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
உலகலாவிய பெரும்பான்மை முஸ்லிம்கள் அவர்கள் மத அடிப்படையில் தவறுகளை மூடி மறைப்பவர்கள். இலங்கையில் உள்ளவர்களோ தீவிர முஸ்லிம்கள். அர்ச்சுனா தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் போது அவர்களையும் இழிவுபடுத்தியுள்ளார் நல்ல மாற்றமோ எந்த நன்மையும் இவரால் கிடையாது.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR எதிர் KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK எதிர் RCB 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC எதிர் SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG எதிர் MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH எதிர் GT 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI எதிர் RCB 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS எதிர் CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR எதிர் RCB 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS எதிர் KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH எதிர் MI 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB எதிர் RR 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC எதிர் RCB 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI எதிர் GT 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR எதிர் CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK எதிர் RR 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT எதிர் LSG 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI எதிர் DC 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR எதிர் PBKS 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG எதிர் SRH கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK KKR MI SHR 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) CSK #2 - ? (3 புள்ளிகள்) KKR #3 - ? (2 புள்ளிகள்) MI #4 - ? (1 புள்ளி) SRH 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! DC 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator KKR 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? RR 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Abhishek Sharma 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SRH 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rashid Khan 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? GT 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Abhishek Sharma 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SRH 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Varun Chakravarthy 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? KKR 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Ravindra Jadeja 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? CSK1 point- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
இஸ்லாமியர்களும், தமிழர்களும் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளார்கள், ஆனால் அதனை உணர்ந்து தவறுகளை திருத்தி முன்செல்லாமல் இரண்டு தரப்பு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது தொடர்கினர், அதற்கு காரணம், தமிழர் தரப்பு மட்டும் தனது தவறினை உணர்ந்து அந்த தவறீற்காக மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் தமிழர் தரப்பில் குற்றம் சாட்டுவதுடன் இதுவரை தமது தரப்பின் தவறுகளை மூடி மறைத்து மன்னிப்பு கோரவில்லை, அதனாலேயே அர்சுனா போன்றவர்கள் இவ்வாறு இனவாதம் பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரை தமது வறுகளுக்காக மன்னிப்பு கேளாமல் அவர்களால் முன்னோக்கி செல்ல முடியாது, திறந்த மனதுடன் உண்மைகளை எதிர்கொள்ளும் பக்குவம் அற்றவர்களாக இஸ்லாமியர்கள்தொடர்ந்தும் இருக்கிறார்கள். பார்ப்போம் இந்த நாரதர் (அர்சுனா) கலகத்தால் ஏதாவது நல்ல மாற்றம் நிகழுகிறாதா என.1 point- ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
பெண்களின் மானத்தைக் காயப்படுத்தும் அவதூறுகள்: சமூக ஊடகங்களில் ஏற்படும் ஆபத்துகள்… சமூக ஊடகங்கள் இன்று தகவல் பரிமாற்றத்திற்கு மிகுந்த பங்களிப்பை வழங்குகின்றன... ஆனால், சிலர் இதை தவறாக பயன்படுத்தி, தனிநபர்களின் உரிமைகளை மீறுவதும் அவதூறு செய்யவும் செயல்படுகின்றனர்... கடந்த 2010-களில் நியூஜஃப்னா என்ற இணைய தளம், பொய்யான தகவல்களையும், ஆபாசமான கட்டுரைகளையும் வெளியிட்டு, பலரின் தனிப்பட்ட வாழ்க்கையை சீரழித்தது... இதில், பலரின் புகைப்படங்களை தவறாக இணைத்து, அவதூறுகளை பரப்பி, அந்த நபர்களின் குடும்பங்களையும் சமூக வாழ்வையும் பாதித்தனர்... அந்தச் செயல்கள் தற்போது மறுபடியும் தோன்றத் தொடங்கியுள்ளன... ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்ற முகநூல் பக்கம், பெண்களின் நிர்வாண படங்களையும் அவதூறுகளையும் வெளியிட்டு, பெண்களின் மானத்தையும் தனியுரிமையையும் உடைத்து வருகின்றது…. இது சமூக ஒழுங்கை சீரழிக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்தாகும். சமூக ஊடகங்களில் இவ்வாறான செயல்களை தவிர்க்கும் வகையில், பொறுப்பற்ற சமூக விரோத செயல்களை தடுக்க அரசு மற்றும் பொது அமைப்புகள் களமிறங்க வேண்டும்... இந்த அவதூறுகளுக்கு ஆதரவளிக்கும் முக்கியக் காரணம், சமூகத்தில் பொறுப்பில்லாத சில நபர்களின் செயல்களே... பொய்யான தகவல்களை பகிர்வது, அவற்றுக்கு விருப்பு செய்து பகிர்வது போன்ற செயல்கள், தவறான தகவல்களை விரைவாக பரப்பக் கூடும்... இதனால் பலர் ஆபத்துக்குள்ளாகின்றனர்... நியூஜஃப்னா போலவே, ஊழல் எதிர்ப்பு அணி வன்னி பக்கமும் சமூக சீரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்...எனக்கு தெரிந்து, நியூஜஃப்னாவை விட இந்த பக்கம் நம் சமூகத்தில் ஏற்படுத்தப்போகும் சீரழிவு மிகப்பெரியதாக இருக்கும்… பெண்களின் பாதுகாப்பு, தனியுரிமை, சமூக நெறிமுறைகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்றே எடுக்கப்பட வேண்டும்... சமூகத்தில் பொறுப்பற்ற நபர்கள் பரப்பும் தவறான தகவல்களை தடுக்க, சமூகவிருப்பங்களைப் பகிரும் முன் உண்மையைக் கண்டறியும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்... பெண்களின் பாதுகாப்பிற்கும், தனிமனித உரிமைக்குமான ஆதரவை உருவாக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது… இந்த முகநூல் பக்கத்தை யாழ் சைக்கோ எம்பி அர்ச்சுனாவும் தமிழடியான் எனும் யூரியுப்காறரின் தலைமையில் சைக்கோ அர்ச்சுனாவின் சில அடிப்பொடிகளும் நடத்துவதாக நம்பத்தகுந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைக்கிறது.. குறிப்பிட்ட நபர்களும் அதை அந்த பக்கத்தில் மறைமுக உறுதிப்படுத்தி உள்ளனர்.. ஆயினும்.. நியூஜஃப்னாவில் இருந்து இந்த ஊழல் எதிர்ப்பு வன்னி அணி பக்கம் வரை யார் மூலகாரணம் அர்ச்சுனாவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ அல்லது அவர்போன்ற சைக்கோக்களோ அல்ல... அர்ச்சுனாவில் பழியை போட்டுவிட்டு எல்லா நேரமும் தப்ப முடியாது:.. அர்ச்சுனாவோ, கிருஷ்ணாவோ, ஊழல் எதிர்ப்பு அணியோ.... எங்கட சனம் எண்ட மூடர்கூடத்தின் ஆதரவு இல்லாமல் ஒருத்தரும் இங்க எதுவும் நகர்த்தமுடியாது... உண்மையான Culprits எந்த சமூக பொறுப்புமற்ற மக்கள்தான்… இவற்றை முளையிலேயே கிள்ள யாழ் இணையம் போன்ற சமூக பொறுப்புள்ள அனைத்து ஊடகங்களும் உறுப்பினர்களும் வாசகர்களும் எதிர்வினை ஆற்றவேண்டும்.. —-—-1 point- ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
போரால் வீழ்த்தப்பட்ட ஒரு சமுதாயத்தில் இப்படியான விளைவுகள் எதிர்பார்த்தவையே. இதைத்தான் சொல்லுறது "பனையாலை விழுந்தவனை மாடேறி உழக்கியது." என்று. தன்னம்பிக்கையற்ற ஆண்களின் இலக்கு, பெண்கள். அவர்களின் எழுச்சியை பொறுக்க மாட்டார்கள், எல்லாவிதத்திலும் அடக்கி, ஒடுக்கி மேலெழ விடாமல் கலாச்சாரம் என்கிற வேலிக்குள் அடைப்பார்கள். முன்னேற முயற்சிக்கும் சமுதாயத்திற்கு இது நல்லதல்ல.1 point- ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
அர்ச்சுனா தலைமையில் தமிழ் அடியான் மற்றும் மோசமான தலிபான்கள் பற்றிய பதிவுக்கு நன்றி தோழரே1 point- ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
எம்பி அர்ச்சுனா தலைமையில் தமிழ் தலிபான்களாக மாறியுள்ள வம்பன்கள்… ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா.உ.அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், நியூ ஜப்னா,வம்பன் டொட்கொம் போன்ற பக்கங்கள், ஈழப் பெண்களை இலக்காகக் கொண்டு, அவர்களை ஒடுக்கும் வகையில் செயல்படுகின்றன… வட கிழக்கில் வாழும் பெண்கள் எப்படிச் செயல்பட வேண்டும், எதைச் சொல்ல வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும், என்ன படிக்க வேண்டும், அவர்கள் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வெளியில் வர வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் , யாரை திருமணம் செய்ய வேண்டும், ஏன் யாருடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் மற்றும் யாருக்கு பிள்ளை பெற வேண்டும் என்றெல்லாம் இந்த இணைய பக்கங்களை நடத்தும் காவாலிகள் தீர்மானிக்கிறார்கள்... இது சமூக ஒழுங்கை சீரழிக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது... இது தலிபான்கள் செயல்களைப் போல் ஆபத்தானதாக மாறி வருகிறது…. எல்லாவற்றிலும் காலம்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டதைப்போல எல்லா மோதல்களிலும் பெண்கள் தான் இறுதியில் இலக்கு வைக்கப்படுகிறார்கள்... அதேபோன்று தான் சமூக வலைத்தளங்களிலும் நடக்கின்றது... தமிழ் தலிபான்களாக மாறியுள்ள வம்பன்கள், டாக்டர் அர்ச்சுனா, வன்னி ஊழல் தடுப்பு அணி, அதை இயக்கும் அர்ச்சுனா அடிப்பொடி லண்டன் தமிழ் அடியான் குழுவினர் ஈழப் பெண்களை இலக்குவைத்து பிளக்மெயில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.... பொட்டம்மான் போன்ற மிகச்சிறந்த புலநாய்வுப் போராளிகள் வாழ்ந்து மடிந்த மண்ணில் அடுத்தவன் வீட்டு கழிவறையையும் படுக்கை அறையையும் எட்டிப்பார்க்கும் இந்தப் பரதேசிகள்தான் புலனாய்வுப் புண்ணாக்குகளாம்.. ஈழப் பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்.. ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா உ அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், நியூ ஜப்னா, வம்பன் டொட்கொம், போன்றோர் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அடாவடித் தனங்கள், தலிபான்களிலும் பார்க்க மோசமானதாக மாறி வருகின்றது….1 point- இந்திய ரூபாவுக்கு (ரூ என்ற) புதிய குறியீடு; இந்தி திணிப்புக்கான ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை!
1 pointஅதுவும் சரிதான். அடுத்தவன் வீட்டு பிரச்சனை நமக்கு எதுக்கு. இந்த "ரூ" வை "றோ" என்று மாற்றினால் இன்னும் சிறப்பாக அமையுமோ.1 point- நடனங்கள்.
1 point1 point- "முதுமையில் தனிமை [Senior Isolation]"
முதுமையில் தனிமை = இளமையில் வறுமை? இப்பொது எதிர்பார்ப்பது எல்லாம் எந்த நேரத்திலும் vegetable (இதன் தமிழாக்கம் அசைவு, இயக்கம் வெகுவாக குறைவது அல்லது முற்றாக அற்றுப்போவது) ஆகிவிடக் கூடாது என்பது தான். முதுமை இருந்தால், அதிலும் இயங்கி கொண்டு இருக்க வேண்டும், அப்படியே எவருக்கும் சுமை இல்லாமல் போய்விட வேண்டும் என்பதே. ஆனாலும், முற்றாக என் (எவரின் கையிலும்) கையில் இல்லை.1 point- நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
1 point- நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்1 point- நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
1 point - தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.