Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19134
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  3. பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    306
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    53011
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/26/25 in all areas

  1. ஒரு பந்தா பரமசிவம் ஊரில் இருந்து டுபாய் போய் மிகவும் கஸ்டபட்டு உழைத்து ஊரில் நல்ல வீடு வளவு எல்லாம் வாங்கினாராம். ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும் புது வகை போன், புதுவகை கைசெயின் என்ன புதிது, புதிதாக கொண்டு போய் போட்டு பந்தா காட்டுவாரம். இந்த முறை தங்கைக்கு பலகோடி சீதனம் கொடுத்து ஒரு கலியாணத்தை ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை வீட்டாரோ, நீங்கள் ஜொலி ஜொலிப்பாக இருந்தால் மாப்பிள்ளை டல்லாக தெரிவார் எனவே மிகவும் சாதாரணமாகவே நீங்கள் கலியாணத்துக்கு வர வேண்டும், வாட்ச் ஈறாக எதுவும் கூடாது என கறாராக சொல்லி விட்டார்களாம். பந்தா காட்ட என்றே பிறந்த நம்மாள் இதை கேட்டு ரொம்ப அப்செட். ஒரு வழியாக மூளையை கசக்கி, தங்கை கலியாணத்தில் பந்தா காட்ட ஒரு வழியை கண்டு பிடித்தாராம். அதாவது நல்ல உயர் ரக, பெறுமதியான, லிமிடெட் எடிஷன் நைக் ஜட்டி ஒன்றை வாங்கி, அதை போட்டு கொண்டு, வேட்டியை கொஞ்சம் உயர்த்தி மடிச்சு கட்டி கொண்டு பந்தி பரிமாறினால், எல்லாரும் அதை காண்பார்கள், நல்ல பந்தாவாக இருக்கும். இதுதான் அந்த பிளான். திருமண நாளும் வந்ததாம், எங்காளும் திட்டமிட்ட படியே பந்தி பரிமாறினாராம். ஊரில் எல்லாரும் வைத்த கண் வாங்காமல் தன் ஜட்டியை பார்ப்பதை கண்டு எங்காளுக்கு பெருமை பிடிபடவில்லையாம். கொஞ்சம் வெட்கப்பட்டு பார்த்த பெண் பிரசுகளுக்கு… “ வெட்கபடாமல் பாருங்கோ… டுபாய்ல இப்ப இதுதான் பேஷன்…ஷேய்க் கூட இப்படித்தான்” என ஊக்கம் வேறு கொடுத்தராம் நம்மாளு. ஒரு வழியாக திருமண வேலை எல்லாம் முடிந்து… களையோடு வீடு திரும்பி ஹால் கதவை திறந்தால்… அயர்ன் மேசையில் அப்படியே இருந்ததாம்…அவர் போட மறந்த டுபாய் நைக் ஜட்டி🤣.
  2. 2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர். சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் சாதனை படைத்துள்ளனர். மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  3. விடுங்க பாஸ் மணி இருக்கிறவன் போடுவான். 😁
  4. இதென்ன கொட்ட்டா பட்டி ஜட்டியா? கொடியில் இருந்து உருவி கசங்கலோடு அப்படியே போட🤣. லிமிடெட் எடிஷன் நைக் ஐயா… வாங்கும் போதே கறுப்பு வெள்ளை பெட்டியில் ஒரு ஐபோனை விட கியாதியாக பேக்கேஜ் செய்யப்பட்டிருக்கும். வாங்குவதற்கு மூன்று வருட வெயிட்டிங் லிஸ்ட். அப்போதும் எல்லாருக்கும் விற்க மாட்டார்கள் - வாங்குபவரின் profile எல்லாம் செக் பண்ணி, ஏற்புடையதாகின் மட்டுமே விற்பார்கள். கிட்டதட்ட ஒரு பெராரே கார் வாங்குவதற்கு சமன். இதை கையால், மிஷினில் எல்லாம் தோய்க்கப்படாது. டிரை கிளீந்தான். பிறகு அதை அப்படியே மடிப்பு கசங்காமல் அயன் மேசையில் எடுத்து வைத்து, பூப்போல எடுத்து அணிய வேண்டும். பிகு குறிகாட்டுவான் கம்பெனி கூட இதை போல - “நெடியகாடு” என்ற பெயரில் ஒரு லிமிடெட் எடிஷன் ஐட்டம் இறக்கவுள்ளார்களாம்.
  5. ஏக்கிய ராஜ்ய தொடர்பாக சட்டத்தரணி சுமந்திரன் தொடர்ந்தும் பொய் கூறுகிறார்என் பி.பி ஒரு பாரிய அடியை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாங்க போகின்றது. சமஸ்டி தீர்வு பற்றி 9 ஆவது நிமிடத்தில். 12 ஆவது நிமிடத்தில் இருந்து ஏக்கிய ராட்சிய பற்றிய விளக்கம்.
  6. அத்தியாவசிய விடயங்களில் செலவை குறைக்காமல், ஏனைய விடயங்களில் செலவை குறைக்க முடியும். உதாரணமாக, தியேட்டர் போய் படம் பார்க்காமல் வீட்டிலேயே படம் பார்ப்பது, உணவு விடுதிக்கு செல்வதை குறைப்பது, விருந்துகளை குறைப்பது, எல்லாவற்றையும் விட முக்கியமாக உணவு விரயத்தை கூடுமான வரை தவிர்ப்பது போன்றவற்றை செய்தாலே போதும். Cutting the corners
  7. ஞாயிறு 27 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 19 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் ஏராளன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC எதிர் RCB 09 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 14 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் கிருபன் அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  8. நீங்கள் சொல்வது சரி: https://rtisrilanka.lk/en/keerimalai-presidential-palace-given-on-unrestricted-lease-to-a-private-university/
  9. 2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர். சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் சாதனை படைத்துள்ளனர். மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/jaffna-district-results-in-the-a-l-examination-1745679242
  10. சா, இன்றைக்கு அடிச்சு வெண்டிருப்பம்! தப்பீட்டான்கள்!! 😜
  11. கோழி முட்டையை கூட இறக்குமதி செய்யும் நாட்டில், ஜட்டி உற்பத்தியில் தன்னிறைவு காண…. மக்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய சந்திரசேகரன் ஐயாவுக்கு இந்த நாடே கடமைப் பட்டிருக்கு. 😂
  12. இதென்ன பிரமாதம்… குறிகாட்டுவானின் சக்சசை பார்த்து விட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் தயாரிப்புகள் கல்லடி, கல்முனை, போன்ற பெயர்களில் எல்லாம் வர முஸ்தீபாம்😀. திருகோணமலை நானாமார் தமெக்கென பிரத்தியேகமாக கிளிவெட்டி என்ற பிராண்டினை இறகுகிறார்களாம்😀.
  13. இனிய மாலை வணக்கம் அனைவருக்கும் ......... ! 😂 காவ்யாவின் மற்ற ரியாக்சன் படங்களைப் பார்க்க சகிக்கலை ......... கனவு கலைஞ்சிடும் . ....... ! 😂
  14. பஞ்சாப் KKRக்கு எதிரா இரண்டு சாதனைகள் செய்திருக்கு. ஜபில் வரலாற்றில் அதிகூடிய ஓட்டத்தை துரத்தி அடித்தவை. 261 ஓட்டங்கள் ஜபில் வரலாற்றில் குறைந்த ஓட்டத்தை தடுத்து வென்றவை. 111 அடிச்சு KKRஜ 95க்க அமத்தினவை
  15. புரிகிறது. கிருபனின் போட்டிகளை நாங்கள் முதலே தெரிவு செய்வதால், என்ன நடந்தாலும், சிரிச்சுக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அணிகள் எப்படி விளையாடும் என்ற அறிவு இல்லாமல்தானே தெரிவு சேய்கிறோம்.
  16. மஹிந்தா, கோத்தா போன்ற இடி அமீன்களின் உல்லாச விடுதிகள், அதற்கு இணையாக விகாரைகள். இதுதான் போருக்குப் பின்னான சாதனையென தெற்கு மக்களுக்கு அறிவியுங்கள். பொருளாதார வீழ்ச்சியின் காரணம் எதுவென தெரிவியுங்கள். இனிமேலும் இவர்களோ, இவர் சந்ததியினரோ ஆட்சிபீடம் ஏறுவதை கனவிலும் காணாதபடி செய்யுங்கள்.
  17. இது கொஞ்சம் ஓவரான கற்பனை மட்டுமல்ல இஸ்லாமியர்களின் தனித்துவத்தை அழிக்கும் செயல் 🤣 அன்று தந்தை செல்வாக்கு டி.எஸ்.சேனநாயக்கா ..தந்தை செல்வா மறுத்துவிட்ட்டார் இன்று சந்திரசேகராவுக்கு அனுரா ...சந்திரா கவ்விக்கொண்டார்
  18. முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
  19. பந்தா பரமசிவம், பந்தா காட்டப் போய்… கலியாண வீட்டிலை, அதுகும் சாப்பாட்டு பந்தியிலை… தொங்கட்டானை காட்டிக் கொண்டு நிண்டிருக்கு. 😂 போதாக் குறைக்கு… துபாயிலை ஷேக்கு கூட இப்பிடித்தான் என்று, மொத்த ஷேக்கின்ரை மானத்தையும் வாங்கி போட்டுது. 😁 எனக்கும் நீண்ட நாட்களாக ஷேக்குமார்… ஜட்டி போடுவங்களா, இல்லையா என்ற சந்தேகமும் பந்தா பரமசிவம் மூலம் தீர்ந்தது. 🤣
  20. அட அந்த திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லையே என்று தமிழ் சிறியின் முகம் சுருங்கிவிட்டது. டுபாயில ஜட்டியை அயன் பண்ணியே போடுவார்கள் என்பது புதிய செய்தி.
  21. ?ஐபிஎல் வரலாற்றில் இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ் ஒரு அற்புதமான பிடியை எடுத்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
  22. அந்த நபர் தான் இதை 99வருட‌ குத்தகைக்கு எடுத்தவர்...ரணிலுடன் ஒப்பந்தம் செய்தவராம்...கந்தர்மடத்தில் ஒர் பெரிய கட்டிடம் உண்டு.
  23. இன்றைய நிலவரப்படி இடியப்பத்தின் விலை.அதுவும் கடைக்கு, கடை வேறு படும் என்று நினைக்கிறேன். String Hoppers String Hoppers $4.55 Includes Sothi and Sambal #1 most liked Choice of Quantity Choose 1 Required 25 50 +$4.55 Popular 100 +$13.65 இப்போ 100 +$13.65
  24. தமன்னா யாழில் வந்து ஆடினது இந்த கட்டிடத்தை தொழில்நுட்ப கூடமாக மாற்றுவதற்கு தானே ...பிறகு என்ன் புதுசா இவர்கள் ....ரணில் ஏதோ செய்தவ்ர் அல்லோ
  25. தமிழில் கற்கைகளை நடத்தினாலும் ஆங்கில கல்வியையும் பல்கலைக்கழகம் ஊக்குவிக்க வேண்டும். பட்டம் பெறுபவர்கள் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஏனெனில் இயற்கை வைத்தியம் என்பது உலகம் முழுவதும் நீண்ட காலமாக உள்ளன. அதுலும் பல வகைகளை உலகின. பல்வேறு நாடுகளில் உள்ளன. ஆகவே அந்த வைத்திய முறைகளையும் கற்றறிந ஆங்கில தேர்சசி உதவியாக இருக்கும். அப்போது தான் இவர்கள் தமது துறையில் முழுமை பெறலாம். தனியே தமிழில் மட்டும் கற்றுவிட்டு உலகத்துக்கே வைத்தியத்தை கொடுத்தவர்கள் நாம் என்பது போல லூசுத்தனமான கிணற்று தவளை கருத்துகளை கொண்டவர்களாக இருப்பர்.
  26. லீவ் கேட்டா பேசாம கொடுக்கனும் அதை விட்டு விட்டு! ஊழியர் - சார் !! தாத்தாவுக்கு ஊரில் உடம்பு சரியில்லை ரெண்டு நாள் லீவ் கொடுங்க! அதிகாரி - லீவ் இருக்கட்டும் நான் கேட்கிற கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு! பாகுபலியை ஏன் கட்டப்பா குத்தினார்! ஊழியர் - சார்! சரியான நேரத்தில்.இந்த கேள்வியை கேட்டு இருக்கீங்க சார்! பாஹுபலி கிட்ட நம்ம கட்டப்பா தாத்தா உடம்பு சரியில்லை என்று ரெண்டு நாள் லீவ் கேட்டு இருக்கார்! கொடுக்களை அதான் போட்டு தள்ளிட்டார்! அதிகாரி - ரெண்டு நாள் என்ன நாலு நாள் லீவ் எடுத்துக்கோ ப்பா!
  27. இப்பிடியே கொஞ்சக்காலம் விடுங்கோ, கட்டிடம் தன்பாட்டிலே விழுந்துவிடும்.
  28. இது செம உருட்டுடா சாமி . ........ ! 😂
  29. மா. வெள்ளை மா. மலிவு மற்றும் மற்றவன். கடையை மூட. செய்ய நாங்கள் நஷ்டங்களை. எற்றுக்கொள்வோம்.
  30. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 43வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆயுஷ் மஹாத்ரேயையும் டெவால்ட் ப்ரெவிஸையும் தவிர மற்றைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்காததால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களையே எடுத்தது. ஹர்ஷல் பட்டேல் 28 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்களும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இலக்கைத் துரத்துவதில் பின்னுக்கு நின்றாலும் இஷான் கிஷானின் 44 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸின் 32 ஓட்டங்களும் 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைய உதவியது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் முதல்வர் நிலையை இறுக்கமாகத் தக்கவைத்துள்ளார்!
  31. கனடாவின் சில விடயங்கள் எனக்கு இன்னும் புரியாத புதிர் தான். அவற்றுள் சில: பொருட்களின் விலைகள் அதிகம். இது அரசு போடும் விற்பனை வரி என்று நான் நினைத்திருந்தேன். அண்மையில் ஒரு பிபிசி கட்டுரையில் இன்னொரு முக்கிய காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள். கனடாவில், அமெரிக்காவை விட வர்த்தகப் போட்டி குறைவு எனவே, ஒரு சில வியாபாரிகளே மேலாண்மை (monopoly?) செய்து விலைகளையும் உயர்வாக வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். அமெரிக்காவில் இருப்பது போல, ஒன்ராறியோவில் பல உணவுப் பொருள் விற்கும் கடைகள் (Grocers) இல்லாமல் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அடுத்த அதிசயம், வீட்டுக் கடன் எடுக்கும் போது ARM எடுப்பது எங்கள் கனேடிய உறவுகளிடையே நான் அவதானித்திருக்கிறேன். மாதாந்த செலவு குறைவு என்பதால் கனடாவில் பிரபலம் என்பார்கள். "வட்டி அடுத்த அட்ஜஸ்ட்மென்ரில் கூடாது என்று என்ன நிச்சயம்?" என்று கேட்டால், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். வீட்டுக் கடனில் அடுத்த 5 வருடத்தை திட்டமிடாத அதே ஆட்கள், "பெற்றோல் விலை 5 சதம் அதிகரிக்கப் போகிறதாம்" என்று செய்தி வந்ததும், வீதியை மறித்து பெற்றோல் நிரப்பும் நிலையங்களில் வாகன வரிசை கட்டுவதும் இன்னொரு புதிர்😂!
  32. இப்படி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிராமல், கனடாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுக்காமல், மூட்டை முடிச்சுகளுடன் மீண்டும் இவர்கள் இந்தியாவிற்கே திரும்பிச் சென்றால் மகிழ்ச்சி. முக்கியமாக பஞ்சாபிகள் இவ்வாறான சிறந்த முடிவை ஒன்ராரியோவில் எடுத்தால் மிக்க மகிழ்ச்சி.
  33. கறுப்பு கங்காருவிற்கு வெள்ளை குட்டியும், வெள்ளை கங்காருவிற்கு கறுப்பு குட்டியும் பிறந்திருக்கு.
  34. அதே... தான். சில நாட்களுக்கு முன்பு நடந்த டன் பிரசாத் கொலையில் கூட, கொலையாளி முகக் கவசம் அணிந்த படி... டன் பிரசாத் வசித்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு இரவு ஒன்பது மணியளவில், மக்கள் நடமாட்டம் உள்ள நேரம் தயக்கமில்லாமல் வந்து சுட்டு விட்டு சென்று இருக்கின்றார்கள்.
  35. சில கொலைகளை மோட்டார் சைக்கிள் தலைக் கவசத்துடன் வந்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிப் போவதால் அடையாளம் காண்பதில் சிக்கலாக உள்ளதாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.