Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  3. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11884
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38770
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/27/25 in Posts

  1. முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் புலவர் ஒரு கை பார்க்க வேண்டும் என நினைத்தாலும் நடக்குதில்லை 🤣 முதல் நாள் முதல்வர் அமெரிக்கன் அய்யா மெல்ல மெல்ல நகர்வதைப்பார்த்தால் அகஸ்தியனுக்கு அடுத்த சுமைதாங்கி அவராகத் தான் இருப்பார்😂
  2. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ரியான் ரிக்கெல்ரன், சூர்யகுமார் யாதவின் அதிரடிப் புயல்வேக அரைச் சதங்களுடனும், நமன் டீர், கோர்பின் பொஷ் ஆகியோரின் கமியோ விளாசல்களுடனும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பித்தாலும் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததால் துரத்துவதில் சறுக்கி, இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததாலும், கேஎல் ராஹுல் வேகமாக அடித்தாடத் திணறியதாலும் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள் விராட் கோலியின் நிதானமான அரைச் சதமும், க்ருனல் பாண்டியாவில் அதிரடியான அரைச் சதமும் 18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைய உதவியது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. 27 APR, 2025 | 04:56 PM கடந்த காலங்களில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது முறையாக நடைபெறவில்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து, தேவையான திறமையான உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசாங்கம் செயற்படுகிறது. அந்தத் திட்டங்களை கிராமத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியலின் உயர் மட்டங்கள் தூய்மைப்படுத்தப்பட்டது போல, கீழ் மட்டமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். எங்கள் போட்டி குழுக்களுக்கு வெவ்வேறு நலன்கள் உள்ளன என்பதையும், இது எதிர்க்கட்சியின் அரசியல் இருப்புக்கான விடயம் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் எங்களுக்கு இருப்பு தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அரசாங்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு எமக்கு ஒரு சரியான நிர்வாக முறைமை இருக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்திற்குள் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருப்பதைக் கண்டேன். அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. பின்னர் சஜித் பிரேமதாச டிசம்பர் மாதத்திற்குள் தான் ஜனாதிபதியாகிவிடுவேன் என்றார். இந்த கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. நகைச்சுவையான இத்தகைய கருத்துக்களை நாம் அனுதாபத்துடன் பார்த்து நம் வழியில் செல்ல வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், எமது பயணம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய எமக்குத் தேவையான குழுவை தெரிவுசெய்து அனுப்புவதுதான். ஜனாதிபதி அவர்கள் பதவிக்கு வந்ததிலிருந்து அரசியல் கலாசாரத்தில் நாம் ஏற்படுத்திய மாற்றத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த நாட்டு மக்களுக்கு சுமையாக இல்லாத வகையில் அரசாங்கத்தை நடத்துவதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அரசியல்வாதிகள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ள நாங்கள் அனுமதிப்பதில்லை. மேலதிக செலவுகள், வீண் விரயம் மற்றும் திருட்டு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இனிமேல் நாம் யாரையும் திருடியதாகக் குற்றம் சாட்ட முடியாது. தற்போது கண்டிக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். வரலாற்றில் முதல்முறையாக, கண்டிக்குச் சென்று புனித தந்தத்தை வழிபடும் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முஸ்லிம் மக்கள் பள்ளிவாயல்களையும் வர்த்தகஸ்தாபனங்களையும் திறந்துகொடுத்துள்ளனர். நாட்டு மக்களிடையே அத்தகைய ஐக்கிய உணர்வு எழுந்துள்ளது. எமது பிள்ளைகளுக்கு அறிவு இருந்தாலும், உலகில் அவர்கள் முன்னேற உதவும் திறன்களையும் மனப்பான்மைகளையும் வளர்ப்பதில் கடுமையான சிக்கல்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல், இன்னும் மேலே சென்றால், குறைந்தபட்சம் இந்த கல்வி முறையில் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்கள் முறையாக வளர்க்கப்படவில்லை என்பதுதான் இதன் பொருள், இது ஒரு பெரிய சமூக நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பாடசாலைகளுக்கு இடையே முரண்பாடு உள்ளது. சிறந்த பாடசாலைகளுக்கும் அவ்வாறல்லாத பாடசாலைகளுக்கும், பிரபலமான பாடசாலைகளுக்கும் பிரபலமற்ற பாடசாலைகளுக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது. உயர்தரப் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில்லை. அவர்கள் பாடசாலைக்குச் செல்வது தமது பெயரைப் பதிவேட்டில் சேர்த்து, பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு மட்டுமே. ஆண் பிள்ளைகள் வேகமாக கல்வியை பாதியில் இடைநிறுத்தி வருகின்றனர். பாடசாலைகளிலும் பல பிரச்சனைகள் உள்ளன. கல்வி என்பது அறிவை வழங்குவது மட்டுமல்லாமல், சமூகத்திற்குத் தேவையான குணங்களையும் ஆன்மீக வளர்ச்சியையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும். இதை மாற்ற நாம் தலையிட வேண்டும். பின்னர், கல்வி மூலம், இந்தப் பொருளாதாரத்திலும் இந்த அபிவிருத்தித் திட்டத்திலும் ஈடுபடக்கூடிய திறன்களைக் கொண்டவர்களை உருவாக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் வழங்கப்படுவது பயிற்சி அல்ல, அது பகிடி வதை போன்ற ஒன்று. தங்குமிட வசதிகள் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை, கற்றல் வசதிகள் இல்லை, பதினைந்து ஆண்டுகளில் பாடத்திட்டம் மாறவில்லை, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்ற கற்பித்தல் விரிவுரையாளர்கள் இல்லை. இதையெல்லாம் நாம் சரிசெய்ய வேண்டும். ஜெர்மனியில், ஒரு ஆசிரியர் 9 வருட பயிற்சியின் பின்னரேயே பிள்ளைகளுக்கு கற்பிக்க அனுமதிக்கப்படுகிறார், ஆனால் எமது நாட்டில் என்ன செய்கிறார்கள்? அந்த சூழ்நிலை இல்லாவிட்டாலும், தற்போதைய நிலையிலிருந்து முன்னேறுவதற்குத் தேவையான சூழலை நாம் உருவாக்க வேண்டும். பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் பகிர்வில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கடந்த காலங்களில் ஆசிரியர்கள் முறையாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவில்லை. எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். பாடசாலைகளில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் பாடசாலைகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். மேலும், பிரிவெனா கல்வியில் பல கடுமையான பிரச்சினைகள் உள்ளன. அது பற்றி சரியாக ஆராய்ந்து, தேவைகளை அடையாளம் காணவும், தேவையான பரிந்துரைகளை உடனடியாக வழங்கவும் ஒரு குழு இப்போது நியமிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பிக்கப்படும். இந்தப் புதிய சீர்திருத்தங்கள் தரம் 1 மற்றும் தரம் 6 க்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது பிரபலமடைவதற்கோ அல்லது வாக்குகளைப் பெறுவதற்கோ செய்யப்படவில்லை, மாறாக நம் நாட்டில் கல்வியை மேம்படுத்தும் உண்மையான நோக்கத்துடன் செய்யப்படுகிறது. கிராமிய மட்டத்தில் இவை அனைத்தையும் செயற்படுத்த களத்தில் தூய்மையான தலைமை மிகவும் முக்கியம். மே 6 ஆம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மகத்தான வெற்றியைத் தருவார்கள் என்று தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். https://www.virakesari.lk/article/213080
  4. இன்றைக்கு மோசமான நாள். இரண்டு முட்டைகள் முதன் முதலாக. கீழே போகும் வேகம் வேகமாயிருக்கு. பராபரமே. இப்பிடி நாமம் இழுக்கக் கூடாது.
  5. ட்ரம்ப் பல முயற்சிகளை ஒருங்கே செய்ய முயற்சிக்கின்றார், ட்ரம்ப் தொடர்பில் அவர் மீதான விமர்சனம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது அண்மையில் அமெரிக்க மத்திய வங்கி ஆளுனரின் பதவியினை பறிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வாறு மத்திய வங்கியின் ஆளுனரை பதவியிலிருந்து தூக்கியெறிய முடியாது, மத்திய வங்கி சட்டம் மூலம் அவர் மீட்கு வட்டி விகிதம் குறைக்கவில்லை என்பதற்காக பதவி விலக்கினால் நீதிமன்றத்தில் ட்ரம்ப் தோல்வியடைவார் என கூறப்படுகிறது ( For cause). அமெரிக்காவின் முதல் காலாண்டு மொத்த தேசிய வருமானம் -0.2% ஆக வந்துள்ளது இன்னுமொரு காலாண்டு மொத்த தேசிய வருமான மறை இலக்கத்தில் வந்தால் பொதுவாக அதனை பொருளாதார சரிவு என வரையறுக்கிறார்கள் (recession). இந்த புள்ளி விபரம் தெரிந்த ட்ரம்ப் தனது தாக்குதலை மத்திய வங்கி ஆளுனரின் மேல் தொடங்கியுள்ளார் என கருதுகிறேன், வட்டி விகித குறைப்பு பொருளாதாரத்தினை தூண்டும் ஆனால் தற்போது பணவீக்கம் முழுமையாக கட்டிற்குள் வரவில்லை அந்த நிலையில் வட்டி விகித குறைப்பு பொருளாதார சரிவினை தூண்டும். பொருளாதார சரிவு வெறுமனே மொத்த தேசிய வருமானத்தினை மட்டும் கவனத்தில் கொள்ளப்படும் விடயம் அல்ல, மாறாக வேலை வாய்ப்பு, உற்பத்தித்துறை, தனிநபர் தேறிய வருமானம் என்பவற்றில் தங்கியுள்ளது. மொத்த தேசிய வருமானத்திலேயே அமெரிக்கா தற்போது சரிவினை கண்டு வருகிறது ஆனால் மற்ற விடயங்களில் ட்ரம்பின் ஆட்சி ஏற்பின் பின்னர் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது ஆனால் இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய காரணி, ஒன்று சரிந்தால் மற்றதும் சரிவடையலாம். Real-time Sahm Rule Recession In...Real-time Sahm Rule Recession Indicator https://tradingeconomics.com/united-states/manufacturing-pmi ட்ரம்ப் தனது புகழை விட்டு செல்ல விரும்புகிறார், ஆனால் அவர் நினைப்பதற்கும் நடைமுறைக்கும் இடையே இடைவெளி உள்ளது போல இருக்கிறது. தற்போது உலகம் ஒரு உண்மையினை உணர்ந்துள்ளது, போரினால் யாரும் அனுகூலமடைய முடியாது, கர்மா வீடு தேடி வரும்.
  6. ஜெற்றிய ஜட்டி எண்டு மாறிச்சொல்லிப்போட்டன் தங்கச்சி.....அதுக்கு வரிசை கட்டி மாறி மாறி அடிக்கிறானுவள் தங்கச்சி......😂
  7. திரு பிமல் ரத்நாயக்க என்கின்ற ஜேவிபி அமைச்சர் வடக்கு மக்களிடம் நீங்கள் உப்பில் பார்ப்பது பெயரையா அல்லது ருசியையா என கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஒரு பொருளின் Authenticity யும் , பெறுமதியையும் அதிகரிக்க அந்த உற்பத்திப் பொருளின் பெயருக்கு, அதனை உற்பத்தி செய்த இடத்தின் அடையாளத்தை வழங்க வேண்டும் அதேபோல், குறிப்பிட்ட உற்பத்தி பொருளுக்கு பிராந்தியத்தின் அடையாளம் (Regional identity) ஊடக Value சேர்க்கவும் பெயரிடல் அவசியமானது. இவை மட்டுமன்றி, இந்த அணுகுமுறை Branding மற்றும் Storytelling-க்கும் முக்கியத்துவமானது குறிப்பாக Himalayan Pink Salt, Maldon Sea Salt, Darjeeling Tea, Scotch Whisky, Manuka Honey உட்பட பிரபல உற்பத்திகள் பிராந்திய அடையாளங்கள் ஊடாகவே புகழ் பெற்று இருக்கின்றன அதாவது பெயரிடல் அணுகுமுறை பிராந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு (Economic development) மிக தேவையானது அந்த வகையில் பூர்விக மக்கள் தங்கள் பிராந்திய வளம் மற்றும் உற்பத்தி என்கின்ற (Local pride) அடிப்படையில் முன்வைக்கும் கோரிக்கை அடிப்படையில் மிக நியாயமானது ஆனால் கல்வியறிவற்ற திரு பிமல் ரத்நாயக்க (University Dropout) எங்களை இனவாதிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றார் மைத்திரிபால சிறிசேன கால இடைக்கால அறிக்கைக்கு ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்படக்கூடாது என திரு அனுர குமாரவுடன் சேர்ந்து எழுதி கொடுத்த விமல் என்கின்ற இனவாதி எங்களுக்கு பாடம் நடத்துகின்றார் உண்மையில் ஆனையிறவு உப்பள உற்பத்திக்கும் ஜேவிபி ஆட்சியாளர்களுக்கும் எந்த தொடர்புமில்லை கடந்த கால ஆட்சியாளர்கள் உள்ளூர் முதலீட்டாளர்களை புறக்கணித்து தென்பகுதி வியாபாரிகளை பொறிமுறையில் உள்வாங்கியதால் தான் சிங்கள பெயர் வழங்கப்பட்டுள்ளது அரசியல் மட்டுமின்றி பிராந்திய பொருளாதாரத்தின் பார்வையிலும் இது உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் அதாவது தமிழ் பிராந்தியத்தின் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் இதனூடாக உப்பு பெயர் சர்ச்சைக்கு தீர்வு காண முடியும். ஆனால் அதற்கு தயாரில்லாத ஜேவிபி எங்களை இனவாதிகளாக்க முயற்சிக்கின்றது இதற்கிடையில் சிங்கள ஆட்சியாளர்கள் தான் கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க பிரதேச வீதிக்கு 'தமிழ் சங்க வீதி' என பெயரிடவிடாமல் பல ஆண்டுகளாக தடுத்து வருகின்றார்கள் வடக்கு மாகாணசபை அம்மாச்சி உணவகம் திட்டத்தை முன்வைத்த போது தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளால் பெயரின்றி உணவகங்களை திறக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு இருந்தது ஜேவிபி பங்காளிகளாகவிருந்த கடந்த கால ஆட்சியாளர்கள் ஜேவிபி உட்பட்ட இனவாதிகளை காரணமாக வைத்து வெறும் பெயரில் மட்டும் பல நூறு அரசியல் செய்தார்கள் குறைந்த பட்சம் ஜேவிபி அதிகாரத்திற்கு வந்த பின்னர் கூட இதை சரி செய்ய தயாரில்லை பட்டலந்த விவகாரத்தில் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களை சர்வதேச உதவி பெற்றாவது தண்டிப்போம் என் பேசும் ஜேவிபி வடக்கில் பலவந்தமாக கடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்தமாட்டோம் என அறிவித்திருப்பது இனவாதமாகும் அரசியல் கைதிகள் இல்லை என பகிரங்கமாக ஜேவிபி அறிவித்திருப்பது இனவாதமாகும் அரச கட்டமைப்புகளை சிங்கள மயப்படுத்தி தொடர்ச்சியாக எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களுக்கு வாய்ப்பை ஜேவிபி மறுத்து வருவது இனவாதமாகும் தமிழ் முஸ்லீம் சமூக செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு விசாரணைகளை ஏவிவிடும் சம நேரத்தில் ஆக்கிரமிப்பு ஈடுபடும் பிக்குகளை ஜேவிபி பாதுகாப்பது இனவாதமாகும் தொல்பொருள் திணைக்களம் ஊடக தமிழ் பிரதேசங்களில் புதிய தொல்பொருள் ஆய்வு களங்களை ஜேவிபி அனுமதிப்பது இனவாதமாகும் பூர்விக மக்களுக்கு சொந்தமான வீதிகளுக்கு சட்டவிரோத கட்டுப்பாடுகளை விதிப்பது இனவாதமாகும் ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் தேசிய மொழி கொள்கைக்கு எதிராக ஜேவிபி செயற்பட்டு வருவது இனவாதமாகும் இவ்வாறு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இனவாத செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ஜேவிபி சொந்த மண்ணில் , நிம்மதியாக, கௌரவத்துடன் வாழ விரும்பும் தமிழ் தேசிய மக்களை இனவாதிகளாக சித்தரிக்க முயலுவது அசிங்கமானது குறிப்பாக சிங்கள மக்களது அரசியற் சுதந்திரங்களுக்கோ அல்லது அவர்களது சமூக பொருளாதார, கலாச்சார வாழ்விற்கோ எண்ணிக்கையில் சிறிய தமிழ் தேசம் தடையாக இல்லாத நிலையில் அவர்களை இனவாதிகளாக சித்தரிக்க முயலுவதே இனவாதமாகும். இனமொன்றின் குரல்
  8. கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும் 0 கதையாசிரியர்: தி.ஞானசேகரன் தின/வார இதழ்: வீரகேசரி 1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டி ருக்கிறாள். வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி யிருக்கின்றன. பின் வளவைக் கூட்டித் துப்புரவாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். பால் கொடுப்பதிலே ஏதோ சுகத்தைக் காண்பவள்போல கதிரி கண்களை மூடிய வண்ணம் சுவரோடு சாய்ந்திருக்கிறாள். அவளது மடியில் முழங்கால்களை அழுத்தி, தலையை நிமிர்த்தி, தன் பிஞ்சுக் கரங்களால் தாயின் மார்பில் விளையாடிக் கொண்டே அவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். சில வேளைகளில் தனது சிறிய கால்களை நிலத்திலே உதைத்துத் தாயின் மார்பிலே தலையால் முட்டுகிறான். அப்படிச் செய்வது அவனுக்கு ஒரு விளையாட்டோ என்னவோ. கண்ணாடியின் முன்னால் நின்று கண் புருவத்துக்கு மைதீட்டிக் கொண்டிருந்த வசந்தியின் பார்வை, கோடிப்புறத்து யன்னலின் ஊடாகக் கதிரியின் மேல் விழுகிறது. மைதீட்டுவதை நிறுத்திவிட்டு அவள் மெதுவாக யன்னலின் அருகில் வந்து கம்பிகளைப் பிடித்தவண்ணம் கதிரி பால் கொடுப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். அவளது பார்வை சிறிதுநேரம் கதிரியின் மார்பிலே மேய்கிறது. கதிரியின் உடலமைப்பைக் கவனித்தபோது வசந்திக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. வளவு கூட்டுவதற்காக மாதத்தில் இரண்டு தடவையாவது கதிரி இங்கு வருவாள். நெல் குத்துதல், மாவு இடித்தல் போன்ற வேறு வேலை களிலிருந்து சொல்லியனுப்பினாலும் அவள் வந்து செய்து கொடுப்பாள். வசந்தி கொழும்பிலிருந்து ஊருக்கு வந்திருந்த வேளைகளில், கதிரி அங்கு வேலைக்கு வரவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் போய் விட்டன. அதனால் கதிரியை ஐந்தாறு வருடங்களாக வசந்தியால் பார்க்க முடியவில்லை. வசந்தி கல்யாணஞ் செய்து கணவனுடன் கொழும்புக்கு போவதற்கு முன் கதிரியை அடிக்கடி பார்த்திருக்கிறாள். அப்போது இருந்த அவளது இறுக்கமான உடலமைப்பும், அழகும் இன்றும் மாறாமல் அப்படியே இருக்கின்றன. ‘நறுக்’கென்று அந்தச் சிறுவன் கதிரியின் மார்புக்காம்பில் கடித்து விடுகிறான். ‘ஆ’ என்று ஒருவித வேதனையோடு அந்தச் சிறுவனைத் தூக்கி நிமிர்த்திய கதிரி, “ஏன்ரா கள்ளா கடிச்சனி?” என அவனிடம் செல்லமாகக் கடிந்து கொள்ளுகிறாள். அவன் தாயைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனது கடை வாய்களிலிருந்து பால் வழிகிறது. கதிரி தன் சேலைத் தலைப்பினால் அந்தச் சிறுவனின் வாயைத் துடைத்துவிட்டு, நெஞ்சை மறைத்துக் ‘குறுக்குக் கட்டு’க் கட்டிக்கொள்ளுகிறாள். இப்போது அந்தச் சிறுவன் எழுந்து நிற்கிறான். அவனது உடல் முழுவதும் புழுதி படிந்திருக்கிறது. அவனது மெலிந்த உடலின் நெஞ்சு எலும்புகள் பளிச்சென்று தெரிகின்றன. அவனது தோற்றத்துக்குக் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் வயிறு மட்டும் முட்டிக்கொண்டு பெரிதாக இருக்கிறது. கொழும்பிலிருக்கும் மாதர்சங்கம் ஒன்றிற்கு வசந்தி அடிக்கடி செல்வாள். அந்தச் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் அவளது சிநேகிதிகளில் பலர், குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களிலேயே பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். பால் கொடுப்பதனால் உடலுறுப்புகளின் இறுக்கமும் கவர்ச்சியும் குறைந்து விடுவதைப்பற்றி அவளுடைய சிநேகிதிகள் அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள். சிறிது காலத்துக்கு முன்பு மாதர் சங்கத் தலைவி பால் கொடுப்பதை நிறுத்துவதற்கு இலகுவான முறைகள் எவை என்பதைப்பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள். இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வசந்தியின் நினைவில் வந்துகொண்டிருந்தன. வசந்தியின் மனது துருதுருக்கிறது. வளர்ந்துவிட்ட குழந்தை யொன்றுக்குப் பால் கொடுக்கும் கதிரியின் உடல் எவ்வளவு அழகாக இருக்கிறது! வசந்தி கதிரியிருக்கும் இடத்திற்கு வருகிறாள். “பிள்ளை, எப்ப கொழும்பாலை வந்தது?” வசந்தியைக் கண்டதும் ஆச்சரியத்தோடு கேட்கிறாள் கதிரி. “காலைமைதான் வந்தனான்; நான் வந்ததைப் பற்றி அம்மா உன்னட்டைச் சொல்லேல்லையோ?” “இல்லைப் பிள்ளை, நான் வரேக்கை அவ அடுப்படியிலை வேலையாயிருந்தா, அவவையேன் குழப்புவான் எண்டு நான் பின்வளவுக்குக் குப்பை கூட்டப் போட்டன்.” அந்தச் சிறுவன் இப்போது வசந்தியை ஆச்சரியமாகப் பார்க்கிறான். பின்பு பயத்துடன் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான். “இவன்தான் பிள்ளை என்ரை கடைசிப் பெடியன், ஆள் வலு சுட்டியன். பிள்ளையை ஒரு நாளும் பார்க்கேல்லையெல்லே; அது தான் பயப்பிடுகிறான். அந்தச் சிறுவனின் தலைமயிர்களைத் தன் விரல்களினால் கோதியபடியே கூறுகிறாள் கதிரி. “உவனுக்கு எத்தனை வயசு?” “ஓ, இவன் பிறந்தது பிள்ளைக்குத் தெரியாது தானே. இந்த முறை எங்கடை அன்னமார் கோயில் வேள்வி வந்தால் இரண்டு முடிஞ்சு போம்.” “இப்பவும் நீ உவனுக்குப் பால் கொடுக்கிறாய். ஏன் நிற்பாட்டேல்லை? நெடுகப் பால் கொடுத்தால் உன்னுடைய உடம்பு பழுதாய்ப் போமெல்லே.” “என்ன பிள்ளை உப்பிடிச் சொல்லுறாய்? உவன் வயித்திலை வாறவரைக்கும் முந்தினவன் மூண்டரை வரியமாய்க் குடிச்சவன். பால் நிற்பாட்ட ஏலாமல் வேப்பெண்ணை பூசித்தான் நிற்பாட்டினனான். என்ரை நடுவிலாளும் அப்பிடித்தான்; இரண்டு வரியமாய்க் குடிச்சவள். பெத்த பிள்ளையளுக்குப் பாலைக் குடுக்காமல் அப்பிடியென்ன எங்கடை உடம்பைக் கட்டிக்காக்க வேணுமே?” கதிரி சொல்லுவது வசந்திக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவள் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மூன்று வருடங்களுக்குக் குறையாமல் பால் கொடுத்திருக்கிறாள்!. வீட்டினுள்ளேயிருந்து குழந்தையின் அழுகைக் குரல் கேட்கிறது. “பிள்ளைக்கும் போன பொங்கலுக்கையெல்லோ குழந்தை பிறந்தது. கொழும்பிலை ஆசுப்பத்திரியிலை தான் பிறந்ததெண்டு கொம்மா சொன்னவ. இப்ப குழந்தைக்கு ஏழு மாசமிருக்குமே?” “இல்லை ஆறு மாசந்தான்” “எடி வசந்தி, குழந்தை அழுகிறசத்தம் உனக்குக் கேக்கல் லையோ? அதுக்குப் பசிக்குதுபோலை. உங்கை கதிரியோடையிருந்து என்ன கதைச்சுக்கொண்டிருக்கிறாய்?” வசந்தியின் தாய் அன்னம்மா, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு வருகிறாள். “ஏதோ கனாக்கண்டு அழுகுதாக்கும். காலைமை எட்டு மணிக்குத்தானே பால் கொடுத்தனான். இனி பன்னிரண்டு மணிக்குத்தான் கொடுக்கவேணும்.” வசந்தி தான் கூறுகிறாள். “இந்தா குழந்தையைப் பிடி, நீ என்னத்தையாவது செய். நான் போய்க் கதிரிக்குத் தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்.” வசந்தியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அன்னம்மா திரும்புகிறாள். குழந்தையை இறுக அணைத்து, அதன் தொடைகளைத் தட்டி அழுகையைக் குறைக்க முயலுகிறாள் வசந்தி. குழந்தை வசந்தியின் மார்பிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு வீரிட்டு அழுகிறது. “அம்மா தொட்டிலுக்கை சூப்பி இருக்கு, அதையும் எடுத்துக் கொண்டு வாங்கோ.” அன்னம்மா கதிரிக்குத் தேநீர் கொண்டு வரும்போது சூப்பியையும் மறக்காமல் எடுத்து வருகிறாள். வசந்தி அதனை வாங்கி குழந்தையின் வாயில் வைத்தபின்புதான் ஒருவாறு அதன் அழுகை ஓய்கிறது. குழந்தை தாயின் முகத்தைப் பார்த்தபடி அந்த றப்பரை ஆவலுடன் உமியத் தொடங்குகிறது. கதிரி எழுந்து கோடிப்புறத்து வேலியிலே செருகியிருந்த தனது சிரட்டையை எடுத்துத் துடைத்து, அதிலே படிந்திருந்த தூசியை நிலத்திலே தட்டி நீக்கி விட்டு அன்னம்மாவிடம் நீட்டுகிறாள். அந்தச் சிரட்டையிலே செம்பு முட்டிவிடக்கூடாதே என்ற கவனத்துடன் அன்னம்மா அதற்குள் தேநீரை வார்க்கிறாள். “பிள்ளை, குழந்தைக்குப் பசிக்குதுபோலை; பாலைக் குடுமன்” வசந்தியைப் பார்த்துக் கதிரி கூறுகிறாள். “அழுகிற நேரமெல்லாம் பால் கொடுக்கப்படாது. பிறகு பால் நிற்பாட்டிறது கரைச்சல். நான் இப்ப பால் கொடுக்கிறதைக் குறைச்சுப் போட்டன்; வாற மாசத்தோடை நிற்பாட்டப்போறன். நேரத்தின்படிதான் பால் கொடுக்கவேணும்.” அதைக் கேட்டபோது கதிரியின் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குப் பசிக்கிறது, அதற்குப் பால் கொடுக்காமல் ஏமாற்றுகிறாள் தாய். கதிரியின் தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருக்கிறது. தேநீர் உள்ளே இறங்க மறுக்கிறது. “ஏன் கதிரி தேத்தண்ணியைக் குடிக்காமல் வைச்சுக் கொண்டிருக்கிறாய்? சுறுக்காய்க் குடிச்சிட்டுப் போய்க் குப்பையைக் கூட்டன். கையோடை ஒரு கத்தை வைக்கலையும் எடுத்துக்கொண்டு போய் மாட்டுக்குப் போட்டு விடு. காலைமை தொடக்கம் அது கத்திக் கொண்டு நிற்குது.” கதிரியிடம் கூறிவிட்டு அன்னம்மா வீட்டுக்குள் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து வசந்தியும் குழந்தையுடன் செல்கிறாள். கதிரியால் தேநீரைக் குடிக்க முடியவில்லை; அவள் அதனை வெளியே ஊற்றிவிட்டு சிரட்டையை வேலியில் செருகுகிறாள். பின்பு கோடியில் அடுக்கியிருந்த வைக்கோற் போரில் ஒரு கற்றை வைக்கோலை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டிலுக்குச் செல்லுகிறாள். அவளைப் பின் தொடர்ந்து அந்தச் சிறுவனும் செல்லுகிறான். கதிரியைப் பார்த்ததும் அந்தப் பசுமாடு உறுமுகிறது. கொட்டிலின் மறுபுறத்தில் கட்டப்பட்டிருந்த அதன்கன்று, பால்குடிப்பதற்காகக் கயிற்றை இழுத்துக் கொண்டு தாய்ப்பசுவின் அருகே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தாய்ப்பசு கன்றின் முகத்தைத் தன் நாவினால் நக்குகிறது. இப்போது பசுவின் முலைக் காம்பிலிருந்து பால் சுரந்து சொட்டுச் சொட்டாக நிலத்திலே சிந்துகிறது. கதிரி அதனை உற்றுப் பார்க்கிறாள். அந்தப் பசு நல்ல உயர்சாதிப் பசுவாகத்தான் இருக்க வேண்டும். கதிரி வைக்கோலைத் தொட்டிலுக்குள் போட்டு உதறி விடுகிறாள். பின்பு அதன் கன்றை ஆதரவாகத் தடவிவிட்டு அதற்கும் சிறிது வைக்கோலைப் போடுகிறாள். வெயில் உக்கிரமாக எறிக்கிறது. கதிரிக்குக் களைப்பாகவும் ஆயாசமாகவுமிருக்கிறது. தொடர்ந்தும் வேலைசெய்ய அவளால் முடியவில்லை. அருகிலிருக்கும் வேப்ப மரநிழலின் கீழ் தனது சேலைத் தலைப்பை விரித்து அதிலே சாய்ந்து கொள்ளுகிறாள். அவளது சிறுவன் தூரத்திலே விளையாடிக் கொண்டிருக்கிறான். வசந்தி தன் தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்குச் செல்வ தற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். வெகுநேரமாகக் கண்ணாடியின் முன்னால் நின்று ஒரு புதிய ‘பாஷன்’ கொண்டையைப் போடுவதில் அவள் முனைந்திருக்கிறாள். அந்தக் கொண்டை அவளது தோற்றத்துக்கு மிகவும் எடுப்பாகவிருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு நாள் அந்தக் கொண்டையோடு அவள் மாதர் சங்கத்துக்கு போயிருந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருமுகமாக அவளது அழகைப் புகழ்ந்தார்கள். அன்று அந்தக் கொண்டையை அடுத்த வீட்டிலிருக்கும் அவளது தோழிதான் போட்டுவிட்டாள். கொண்டை போட்டு முடிந்துவிட்டது. ஆனாலும் வசந்திக்கு அது திருப்தியை அளிக்கவில்லை. ஒருவாறாகத் தனது அலங்காரத்தை முடித்துக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டாள். வெகு நேரமாகத் தூங்கிக்கொண்டிருந்த வசந்தியின் குழந்தை அழத் தொடங்குகிறது. அன்னம்மா ஓடிச்சென்று குழந்தையைத் தூக்குகிறாள். அவளைப் பார்த்ததும் குழந்தை வீரிட்டு அழுகிறது. அதன் அழுகையை நிறுத்த எண்ணிய அன்னம்மா, சூப்பியை எடுத்து அதன் வாயிலே வைக்கிறாள். குழந்தையின் அழுகை சிறிது நேரம் அடங்குகிறது. அதனைத் தன் தோளிற் சாய்த்து, முதுகிலே தட்டி நித்திரையாக்க முயலுகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் வீரிட்டு அழுகிறது. அன்னம்மா எவ்வளவோ முயற்சி செய்தபோதும் அதன் அழுகையை நிற்பாட்ட முடியவில்லை. குழந்தை மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறது. அதன் வாயிலிருந்த சூப்பி நிலத்திலே விழுகிறது. கண்ணயர்ந்திருந்த கதிரி எழுந்து உட்காருகிறாள். ஏன் அந்தக் குழந்தை வெகுநேரமாக அழுதுகொண்டிருக்கிறது? குழந்தையின் அழுகை கதிரியின் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை. “ஏன் கமக்காறிச்சி குழந்தை அழுகுது? பிள்ளையைக் கூப்பிட்டு பாலைக் குடுக்கச் சொல்லுமன்”அன்னம்மாவிடம் கூறுகிறாள் கதிரி. “இனி ஆறு மணிக்குத்தான் பால் குடுக்கவேணுமெண்டு சொல்லிப்போட்டு அவள் எங்கையோ கலியாணத்துக்குப் போட்டாள். இங்கை குழந்தை கிடந்து பசியிலை துடிக்குது. அப்பவும் நான் சொன்னனான், குழந்தையையும் கொண்டுபோகச்சொல்லி; அவள் கேட்டால் தானே. பால் குடுக்கிற நேரத்துக்கு வருவனெண்டு சொல்லிப் போட்டுப் போட்டாள். இப்ப என்ன செய்யிறது? அழுதழுது இதுகின்ரை தொண்டையும் அடைச்சுப்போச்சு”. அன்னம்மாவின் குரலையும் மீறிக்கொண்டு துடித்துத் துடித்து அழுகிறது குழந்தை. அன்னம்மா விளையாட்டுப் பொருட்களைக் காட்டிக் குழந் தையின் அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். ஆனாலும் அதன் அழுகை அடங்கவில்லை. அன்னம்மாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வெகு நேரமாக அழுது களைத்துப்போன அந்தக் குழந்தைக்கு இப்போது அழுவதற்கே சக்தியிருக்கவில்லை. அது இப்போது முனகிக் கொண்டிருக்கிறது. அன்னம்மாவின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொட்டிலில் கட்டியிருந்த பசுமாடு ‘அம்மா அம்மா’ என்று குரல் கொடுக்கிறது. பால் கறக்கும் நேரம் வந்துவிட்டால் அது கத்தத் தொடங்கி விடும். மாட்டுடன் சேர்ந்து இடையிடையே கன்றும் குரல் கொடுக்கிறது. இப்போது முனகுவதற்குக் கூடச் சத்தியில்லாமல் குழந்தை அன்னம்மாவைப் பரிதாபமாகப் பார்க்கிறது. “கமக்காறிச்சி, குழந்தை இனித் தாங்கமாட்டுது; பசுப் பாலையாவது குடுமன்.” கதிரி அன்னம்மாவிடம் கூறுகிறாள். “குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கொள் கதிரி, நான் ஓடிப்போய்ப் பாலைக் கறந்து கொண்டுவாறன். ” முற்றத்து விறாந்தையிலுள்ள திண்ணையில் பாயொன்றை விரித்துக் குழந்தையை அதிலே கிடத்திவிட்டு, செம்பை எடுத்துக் கொண்டு மாட்டுக்கொட்டில் பக்கம் போகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் அழத் தொடங்குகிறது. அது தன் பிஞ்சுக் கால்களால் நிலத்தில் உதைத்து, உடலை நெளித்துத் துடிக்கிறது. கதிரி ஒரு கணம் கண்களை மூடிக்கொள்ளுகிறாள். அவளால் குழந்தைபடும் வேதனையைப் பார்க்க முடியவில்லை. துடித்துப் புரண்டுகொண்டிருந்த குழந்தை திண்ணையின் ஓரத்திற்கு வந்து விடுகிறது. ஐயோ! குழந்தை விழப்போகிறதே ! கதிரி ஓடிச்சென்று, திண்ணையின் நடுவிலே குழந்தையைக் கிடத்துவதற்காகத் தன் இரு கைகளாலும் அதைத் தூக்குகிறாள். “அம்….. மா” குழந்தை அவளது முகத்தைப் பார்த்து வெம்புகிறது. குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி நிலத்திலே உட்கார்ந்து விடுகிறாள் கதிரி. குழந்தை அவளது நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு முனகுகிறது. தன் பிஞ்சுக் கரங்களால் அவளது நெஞ்சை விறாண்டுகிறது. நெஞ்சை மறைத்துக் குறுக்குக்கட்டுக் கட்டியிருந்த அவளது சேலை அவிழ்ந்து விடுகிறது. “அ….. ம்மா, அம்… மா ” கதிரி தன்னை மறக்கிறாள். கதிரியின் மார்புக் காம்புகள் நனைந்துவிடுகின்றன. மறுகணம் அந்தக் குழந்தை அவளது மார்பில் கைகளால் அளைந்தபடி வாயை வைத்து உமியத் தொடங்குகிறது. “ஐயோ கதிரி, மாடெல்லோ கயித்தை அறுத்துக் கொண்டு கண்டுக்குப் பாலைக் குடுத்துப் போட்டுது”. மாட்டுக் கொட்டிலில் இருந்தபடியே அன்னம்மா பலமாகக் கூறுகிறாள். அவள் கூறுவதைக் கேட்கக்கூடிய நிலையில், அப்போது கதிரி இருக்கவில்லை. கல்யாண வீட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வசந்தி, இப்போது தனது ‘ஹான்பாக்’கைத் திறந்து அதற்குள்ளிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, கலைந்திருந்த தனது அலங்காரத்தைச் சரிசெய்து கொள்ளுகிறாள். – வீரகேசரி 1973 – கால தரிசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1973, கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன். https://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9/
  9. முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். @goshan_che எனக்கு மேலே நிற்கிறார். ரொம்பவும் ஆச்சரியம். கொடுப்புக்குள் சிரிக்கிறது தெரியுது.
  10. இதுக்குள்ளை எங்கடை கோஷான் சே எங்கே எண்டு தேடிப்பாத்தா 😅 என்ரை காணிக்கு ரெண்டு காணி தள்ளிப் பின்னால நிக்கிறார் 😂 மனுஷன் ஒரு நோக்கத்தோடைதான் வந்து கொண்டிருக்கிறார் 😀 சில வேலை முதல்வர் நந்தனாரை துரத்த வெளிக்கிட்டாரோ 😛
  11. முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள்
  12. GMT நேரப்படி நாளை திங்கள் 28 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 09 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 14 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் ஈழப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் கந்தப்பு ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  13. அணுவாயுதங்கள் இருக்கிறது என்று சொல்லுவது ஒரு சாதாரண நடைமுறையாகிவிட்டது. அவருக்கு ஒரு வீடு இருக்கிறது, இவருக்கு இரண்டு மனைவி இருக்கிறது என்பது போல. என்னே உலகம்.
  14. தென்றலாய் வந்தது வசந்தகாலம்! *************************************** பொதிகையிலே பூத்தவளே வசந்தத்தின் வடிவழகே இதமான மயிலிறகே இளம் காற்ரின் உடல் அழகே உலகெல்லாம் நடைபயிலும் உத்தமியே இனியவளே இயற்கையின்.. படைப்பில் நீதான் இளமொட்டுத் தேவதையே. கன்ணுக்குத் தெரியாத இளம் புன்னகை தாரகையே விண் தொட்டு மண் தொட்டு விளையாடும் பெண்ணழகே கடல் தொட்டு கரை தொட்டு காவியங்கள் படைத்தவளே அகிலத்தில் உனைத்தானே அனைத்துயிக்கும் பிடித்ததுவே பஞ்சு போன்ற உன் மேனி பட்டாலே உணர்வு பொங்கும் பிஞ்சான உன் கையை பிடித்திழுக்க எமைத்தூண்டும் வஞ்சமில்ல உன் நெஞ்சால் வருடிவிட்டு போகையிலே நெஞ்சமெல்லாம் இனிக்குமடி நின்மதியோ பெருகுமடி நீ வந்து தொடும் போது பழய நினைவெல்லாம் வருகிறது நிலவொளியில் கடல்கரையில் காதலித்த பொழுதுகள் தாய் தந்தை உறவோடு தமிழ் பூத்த நேரங்கள்-நாம் கூட்டுக் குடும்பங்களாய் குதுகழித்த காலங்கள். முல்லை பூ தடவிமுத்தமிட்டு நீ செல்வாய்-மரங்களை செல்லமாய் ஆட்டிவிட்டு செய்யாததுபோல் நீ நடிப்பாய் கல் நெஞ்சுக்காரரையும் கரையவைத்து மகிழ்விப்பாய் காலமெல்லாம் எம் வாழ்வில் கலந்து நீ உயிர் தருவாய். கவிஞர்-பசுவூர்க்கோபி.
  15. நல்ல ஒரு கவிதைக்கு நன்றி.
  16. நீண்ட காலத்தின்பின் வசந்த காலத்தென்றல் உடன் வந்துள்ளீர்கள். உங்கள் மூலம் யாழ்களம் தென்றல் வீசட்டும். பகிர்வுக்கு நன்றி .
  17. மிகுந்த முயற்சியுடன் தான் நினைத்ததை சாதித்துக் காட்டிய மாணவன். காணொளியின் இறுதியில் பெற்றோர் படபடத்த நெஞ்சுடன் நிற்கும் போது, இவன் கூறிய பதிலை கேட்டு அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.
  18. கிளி ஜோசியரை விட்டுட்டு என்னுடன் ஏன் கூட்டுச் சேர்ந்தீர்கள்? உங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.
  19. உங்களோட ஜோடி சேர்ந்தாலே. இன்று இரண்டு போட்டிகளிலும். ஜயகோ. மும்பை அடிச்சுப் பிடிச்சு இரண்டாவதா வேற வந்திட்டாங்கள்.
  20. நான் வேலை செய்வது இசை காப்புரிமை தொடர்பான அமைப்பில். பாடல்களின் காப்புரிமை காரணமாக கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை அதில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் அமைப்பில கனடாவில் வர்த்தக நோக்கத்திற்காக இசையை / பாடலை பயன்படுத்தினால் எம்மிடம் மற்றும் எம்மை போன்ற இன்னொரு அமைப்பிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது gym மில் ஒலிக்க விடும் பாடலாக இருந்தாலும் சரி, FM மில் ஒலிபரப்பும் பாடலாக இருந்தாலும் சரி அந்த இசைக்கான காப்புரிமை பணத்தை தரவேண்டும். Live music நிகழ்விற்கும் இது பொருந்தும். அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பங்கு காப்புரிமை பெற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். பாடல் யாருக்கு சொந்தம்? பாடல் அதன் இசையமைப்பாளருக்கே சொந்தம். இது தான் பெரும்பாலான நாடுகளின் சட்டம். கனடா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இது தான் சட்டம். ஒரு பாடலின் இசையை படத்தின் தயாரிப்பாளர் வாங்குகின்றார். அதை அவர் அப் படத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். SPB, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் போது, அங்கு இசைத்த, இசைக்கப்படும் பாடல்களின் list இனை நான் வேலை செய்யும் அமைப்புக்கோ (கனடாவில் நிகழ்ந்தால்) அல்லது அது போன்ற இன்னொரு அமைப்பிற்கோ வழங்கப்படும். அதன் படி காப்புரிமையின் படி வருமானத்தின் சிறு பங்கு பகிர்ந்தளிக்கப்படும். இதில் spb யின் மகனே இவ் நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்பவர் எனும் அடிப்படையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடினால் அதனையும் அந்த list இல் தர வேண்டும்.ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சட்ட ரீதியாக ஒரு நாட்டில் நிகழ்ச்சி நடாத்த அனுமதி பெற்று இளையராஜா வின் பாடலையும் பாடி வருமானம் பெற்று விட்டு, சட்ட ரீதியாக கொடுக்க வேண்டிய அதன் விபரங்களை அவர்கள் கொடுக்காமல் தவறினார்கள். இது வேண்டும் என்றே செய்த தவறு. இதே தவறை ஒரு பிரபலமான ஆங்கில பாடல் பாடி செய்து இருந்தால் பெரும் பணம் தண்டமாக கிடைத்திருக்க வாய்பிருந்து இருக்கும்.
  21. ஒவ்வொரு பிரபலத்தினதும் தனிப்பட்ட வாழ்க்கையை நாம் அலசதேவையில்லை. என்பது என் நிலைப்பாடு. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சட்டத்தை மீறினார்கள் என மறுதரப்போ, மூன்றாம் தரப்போ புகார் கூறும் வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம். ஆனால் பொதுவெளியில் நடந்து கொள்ள என ஒரு முறை உள்ளது. இளையராஜாவிடம் தன்னை விட நலிந்தோரை தூக்கி போட்டு மிதிக்கும் ஒரு கேடு கெட்ட குணம் உள்ளது. பத்திரிகையாளரை, ரசிகரை, இசை ஆர்வம் உள்ள சிறுவனை அவர்கள் சுயமரியாதையை சீண்டும் படி பொது வெளியில் அவமரியாதை செய்யவார். ஆனால் கோவிலில் அவமரியாதையாக அவர் நடத்தப்பட்டால், அந்த அந்நீதியின் முன் நவதுவாரங்களையும் மூடி கொள்வார். அகங்காரமே கூடாத விடயம் - அதிலும் அகங்காரத்தை - ஆட்களின் ஸ்டேடஸ் பார்த்து காட்டுவது எவ்வளவு கீழ்தரமானது? இந்து இறையியலின் மிக அடிப்படையான விடயம் நான் என்ற மமதையை அழிப்பது. இந்த மமதையை அழிக்காமல் மனமுருகிபாடி, சாமியார் வேடம் போட்டு வாழ்வதில் ஒரு பயனும் இல்லை. நிச்சயமாக. ஆரம்பகால பாடல்கள் திரைப்பட நிறுவனன்வ்களுக்கும், பிந்தைய இளையராஜ ஒப்பந்தம் போட்ட பாடல்கள் அவருக்கும் உரியன என தீர்பாகும் என எதிர்பார்க்கிறேன். மேடையில் பாடுவதற்கு எந்த இசையமைப்பாளருக்கும் பணம் கொடுப்பதாக நான் அறியவில்லை. ஆதாரம் தந்தால் அறிந்து கொள்வேன். எல்லாம் பிடிபட்ட பின்புதான். யூடியூப் வரும் வரை நானே இசை பிரம்மா என்பதுதான் அவரின் நிலைப்பாடாக இருந்தது. என்ன காரணம் சொன்னாலும் களவு, களவுதானே. அதாவது இளையராஜ ஜீவி யை அண்மையில் சொன்னது போல சொல்வதாயின், ஆண்மை அற்ற தன்மை🤣.
  22. அழிக்க இருந்த சாராயப் போத்தலுக்குள்... தேயிலைச் சாயம் இருந்த மாதிரி, இவர்கள் கைப்பற்றிய ஹெரோயினை எடுத்து விட்டு கோதம்ப மாவை வைத்திருந்தால் எப்படி விற்பதாம். முன்னைய அரசாங்கத்தில் ஏற்கெனவே இவர்கள் கைப்பற்றுகின்ற கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள் சுழற்சி முறையில் மீண்டும் வேறு ஆட்களுக்கு கைமாறி விற்பனை செய்யப் படுவதாக ஒரு முன்னாள் அமைச்சர் பாரளுமன்றத்தில் காவல்துறையினரை கண்டித்து இருந்தார்.
  23. இப்படித்தான் அண்மையில்800 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் அழிக்கும்படி உத்தரவுக்கு எற்ப..அழிக்கும் இடத்தில் .போத்தகல்கள் சோதனையிடப்பட்டபோது ..அவற்றினுள்.. தேயிலைச்சாயமே இருந்ததாம் ...இதுதான் கிளீன் சிரிலங்கா
  24. இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ............. (கொஞ்சம் சோகம்தான் என்ன செய்வது ) ......... ! 😁
  25. 2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர். சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் சாதனை படைத்துள்ளனர். மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  26. என்ன சாத்தான் .....குழந்தைப் பிள்ளைபோல...இவருடைய தேர்தல் மந்திரமே சொப்பிங் பைதான்🤣
  27. ரிஷாட் பதியுதீன் பரம்பரை பணக்காரர் அல்ல. நீங்கள் கூறுவது…. பதியுதீன் மஹ்மூத். அவர்தான் ஶ்ரீமாவோ ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தவர்.
  28. ஞாயிறு 27 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 19 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் ஏராளன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC எதிர் RCB 09 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 14 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் கிருபன் அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  29. இதனால் என்ன பயன் உண்டு” தமிழ் மக்களுக்கு ?? எதுவுமில்லை எனவே நீங்கள் ஆதரிக்கலாம் அதனாலும் எந்தவொரு பயனுமில்லை ஆகவே ஆதரிப்பது எதிர்ப்பது இரண்டுமே ஒன்று தான் அதாவது எந்த பலனுமில்லை நீங்கள் கிழவன்கள் வீட்டுகுள்இருங்கள் இளைஞர்களை வீட்டுக்கு வெளியில் விடுங்கள் அவர்கள் அரசியல் செய்யட்டும். அரசியலை படிக்கட்டும் அவர்கள் பிழை விட்டாலும் கவலையில்லை உங்கள் போன்ற வயோதிபரகள் பிழை விடுவதும் நொண்டி சாட்டுக்கள் சொல்வதும் ஏற்க முடியாது
  30. உண்மைதான் . ......... ஓவியம் வரைவதற்கு வர்ணங்களுடன் நிற்கும் பெண் அப்படியே தத்ரூபமாய் இருக்கு . ......... படைத்தவனைப் பாராட்டிட வேண்டும் . ........ ! 😂
  31. 3 .ipl வரலாற்றில் பஞ்சாப் அணி திடமான வெற்றியை நோக்கி சென்றும் KKR இற்கு எதிரான விளையாட்டில் தனது வெற்றியை மழையால் தவற விட்டதும் ஒரு ஒரு சோகமான வரலாறு தான். அந்தப் பதினெட்டுப் பேருக்கும் பெரும் வெற்றி😂
  32. சந்திரசேகரன் ஐயா தனது ஊரிலும் சிவனொளிபாத மலையின் ஆங்கில பெயரான Adam’s Peak எனும் பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். மேலதிக பெயர் வைக்கும் ஆலோசனைகளுக்கு please contact uDanceSamiyar@uruttuu.com
  33. விடுங்க பாஸ் மணி இருக்கிறவன் போடுவான். 😁
  34. இது ஒரு ஓவியம் என்றால்.... நம்ப முடிகின்றதா. 🙂
  35. இனிய மாலை வணக்கம் அனைவருக்கும் ......... ! 😂 காவ்யாவின் மற்ற ரியாக்சன் படங்களைப் பார்க்க சகிக்கலை ......... கனவு கலைஞ்சிடும் . ....... ! 😂
  36. தமன்னா யாழில் வந்து ஆடினது இந்த கட்டிடத்தை தொழில்நுட்ப கூடமாக மாற்றுவதற்கு தானே ...பிறகு என்ன் புதுசா இவர்கள் ....ரணில் ஏதோ செய்தவ்ர் அல்லோ
  37. உறவை கொஞ்ச நாட்களாக காணவில்லை களநிலவரங்களை அவதானிப்பதா 😄 தமிழ்நாட்டு தேர்தல் களத்திலே நின்று தீவிர பிரசாரம் செய்து கொண்டிருப்பார் 😂
  38. 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழ்நாடு மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்ற/பாராளுமன்ற/லோக்சபா தேர்தல் என்று மற்றைய நாடளாவிய பொதுத் தேர்தலை குறிப்பிடுகின்றனர். மத்திய அரசுக்கான தேர்தல். ராஜ்யசபா என்று ஒன்றும் அங்கே இருக்கின்றது. ஆனால் அதன் பிரதிநிதிகள் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிந்து எடுக்கப்படுவதில்லை. மாநிலப் பிரதிநிதித்துவமும், இன்னும் சில வழிமுறைகளிலும் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். இளையராஜா இருக்கின்றார். சச்சின் இருந்தார்.............
  39. கறுப்பு கங்காருவிற்கு வெள்ளை குட்டியும், வெள்ளை கங்காருவிற்கு கறுப்பு குட்டியும் பிறந்திருக்கு.
  40. செயற்கை ? போட்டொஷொப் ? அண்மையில் வாசித்தேன் மிளகாய் வியாபாரி தன்னை உறை பற்ற மிளகாய்க்கன்றுகளை ஏமாற்றி விற்றுவிடார்கள் என்று திணைக்களத்துக்கு முறையீடு செய்தாராம் . தனது மிளகாய்களை காரமற்றவை என்று வாங்குகிறார்களில்லை , விலைப்படவில்லையாம்.
  41. ஒரு முட்டை ஆயிரம் டாலர் ------------------------------------------ இப்ப இங்கே பல கடைகளில் முட்டை இல்லை சில கடைகளில் இருக்கின்றது ஆனால் எண்ணி எண்ணித்தான் வாங்கலாம் பலத்த கட்டுப்பாடு தட்டுப்பாட்டால் விலையும் பல மடங்காகிவிட்டது கோழிகளுக்கு காய்ச்சல் வந்தது என்று சும்மா சுகமாக நின்றவைகளையும் அழித்துப் போட்டார்கள் இப்ப புதுதாகக் குஞ்சுகளும் வேண்டாம் என்று அங்கே குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் வந்துள்ளது இது என்ன கலிகாலம் அமெரிக்காவில் முட்டைப் பொரியல் கூடக் கிடையாதா...... ஊரில் வீட்டில் கோழிகள் இருந்தன அப்பா முதன் முதல் ஒரு கோழி வாங்கித் தந்தார் ஒரு விதமான மஞ்சள் கலரில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கோழி அது அது வீட்டுக்கு வரும் போது அதன் வயது நாலு மாதங்கள் இருக்கும் ஒரு நாள் முழுக்க கிளிசரியா மரத்தடியில் கட்டி வைத்து விட்டு அடுத்த நாள் அவிழ்த்துவிட்டேன் அப்படியே வீட்டை சுற்றிச் சுற்றியே நின்றது அடுத்த அடுத்த மாதம் முட்டை போட ஆரம்பித்தது முதல் முட்டை போடு முன் பெரிய எடுப்புகள் எல்லாம் எடுத்தது ஒரு அதிகாலையிலேயே தலைமாட்டில் வந்து பதுங்கியது அது கேரிக்கொண்டு திரியும் போதே முட்டை போடப் போகின்றது என்று ஆச்சி சொன்னார் அதைப் பிடித்து கடகத்தால் கவிழ்த்து வைக்க முட்டை போட்டது சுற்றி இருந்த மூன்று வீட்டுக்கும் அது முட்டை போட்ட விசயம் தெரிந்தது அப்படி ஒரு விடாத கொக்கரிப்பு பன்னிரண்டு முட்டை போட்டு விட்டு அது அடை என்று ஒரு மூலையில் குணுகிக்கொண்டு படுத்துவிட்டது பின்னர் அயலூரில் முட்டை வாங்கி அடை வைத்து குஞ்சுகள் வந்து வந்து அதன் குடும்பம் பெருகியது பின்னர் முட்டை நாங்கள் கடையில் வாங்கவே இல்லை சரி இங்கும் கோழி வளர்ப்போம் என்று விசாரித்தேன் அக்கம்பக்கத்தவர்கள் சம்மதம் சொல்லவேண்டும் முதலில் பின்னர் ஒரு பெரிய கூடு வேண்டும் கோழிகளுக்கு தீனி வாங்க வேண்டும் கடையில் மருத்துவரும் வந்து போவார் அப்பப்ப அந்த செலவும் இருக்கின்றது கோழிக் குஞ்சுகளும் வாங்க வேண்டும் அதை மறந்துவிட்டேன் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் முதல் முட்டை கிடைக்கும் போது செலவு ஆயிரம் டாலர்கள் ஆகி விடும் என்று கணக்கு காட்டுகின்றது கலிகாலம் தான்!
  42. 🤣 நான் தலையங்கத்தை பார்த்து விட்டு…இந்த பயங்கரமான ஜேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு ஐந்து பேரை ஊருக்கு அனுப்பி சிங்களவனுக்கு ஒரு காட்டு காட்டலாம் எண்டு நினைச்சேன் வா🤣
  43. எனது நண்பர் ஒருவர் கோழி வளர்த்து அடிச்சுச் சாப்பிட ஆசைப் பட்டு (பெரிய வளவுடன் வீடு ) பக்கத்துக்கு கிராமத்துக்குள் சென்று அஞ்சாறு கோழி வாங்கிவந்து நிலத்தோடு கூடு செய்து விட்டு வளர்த்து வந்தார் . ...... முதல் கோழி சமைக்கும்போது எங்களுக்கும் சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது . .......ஒரு மாதம் வரை நன்றாகத்தான் போச்சு . ...... அன்று சமைப்பதற்கு கோழி பிடிக்க போயிருக்கிறார் ....... உள்ளே ஒரு பாம்பு இருந்து அவரை வரவேற்றிருக்கு . ........ பின் நாங்கள் எல்லாரும் சென்று ஒருமாதிரி அவரை வெளியேற்றி விட்டம் ....... மிச்ச கோழிகளை அன்றே உரித்து குளிர்பெட்டியில் அடக்கம் செய்தாயிற்று . .......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.