Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38754
    Posts
  2. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1223
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20012
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/28/25 in all areas

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 47வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சுப்மன் கில்லும், ஜொஸ் பட்லரும் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடனும் பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 11 சிக்ஸர்கள், 7 நாலுகள் என 35 பந்துகளில் புயல்வேகத்தில் அடித்த கன்னிச் சதத்துடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் வேகமாக அடித்தாடி ஆட்டமிழக்காமல் எடுத்த 70 ஓட்டங்களுடனும் சவாலான வெற்றி இலக்கை இலகுவாக 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. சூர்யவன்ஷி இரண்டாவது வேகமான ஐபிஎல் சதத்தை எடுத்து சாதனை புரிந்துள்ளார். கிறிஸ் கெயில் 30 பந்துகளில் அடித்த வேகமான சதம் இன்னமும் முறியடிக்கப்படாமல் உள்ளது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. வணக்கம், யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 94 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைகின்றது. எனவே அதன் பின்னர் புதிய சுய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். (suvy) "கரை கடந்த புயல்" (kandiah Thillaivinayagalingam) காற்றாடி ( ரசோதரன்) "கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்" (kandiah Thillaivinayagalingam) இன்னொரு சக்கரவர்த்தி ( ரசோதரன்) "நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே" (kandiah Thillaivinayagalingam) "மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" (kandiah Thillaivinayagalingam) கர்ண பரம்பரையின் கனவு ( ரசோதரன்) "அன்புடன் தேன்மொழி" (kandiah Thillaivinayagalingam) "ஏனிந்தக் கோலம்" (kandiah Thillaivinayagalingam) "வாழ்வில் வசந்தம்" & "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" ( kandiah Thillaivinayagalingam) ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! (goshan_che) இன்றைய அதிசயம் ( ரசோதரன்) "உனக்காக் காத்திருக்கேன் [14 பெப்ரவரி 2025 ]" [காதலர் தினம் கொண்டாடும் உறவுகளுக்காக] (kandiah Thillaivinayagalingam) இறை குறைபடுமோ ? - (சுப.சோமசுந்தரம்) காதலர் தினக் கதை ( ரசோதரன்) காதலர் தினத்தில் கனவொன்று கண்டேன்... (alvayan) "கும்மிருட்டில் நடனம்" (kandiah Thillaivinayagalingam) "அன்பு வலிமையானது" & "ஓடுகிற தண்ணியிலே" (kandiah Thillaivinayagalingam) ஒரு காரின் கடைசி வாக்குமூலம் ( ரசோதரன்) இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே (alvayan) "சொல்ல துடிக்குது மனசு" & "பாலகன்பிறந்தார்" (kandiah Thillaivinayagalingam) இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்? (ஈழப்பிரியன்) ஒரு முட்டை ஆயிரம் டாலர் ( ரசோதரன்) சும்மா ஒர் பதிவு (putthan) "இதுவும் கடந்து போகட்டும்" & "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "நெஞ்சோடு நிழலாடுதே" & "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு" (kandiah Thillaivinayagalingam) கைவிலங்குகள் ( ரசோதரன்) நியாயத்தின் சாம்பல் (villavan) "உன்னோடு வாழ்வது உவப்பானதே" & "புது விடியல்" (kandiah Thillaivinayagalingam) ஓயும் ஊசல் ( ரசோதரன்) ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் (goshan_che) "பிள்ளை நிலா" (kandiah Thillaivinayagalingam) "செருக்கு” [தன்முனைக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) குறள்மொழி இன்பம் / "குறள் 1265" (kandiah Thillaivinayagalingam) மூன்று கோழிக்குஞ்சுகள் ( ரசோதரன்) "யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] & "நடை பயிற்சி" (kandiah Thillaivinayagalingam) விதியற்றவர் (மெசொபொத்தேமியா சுமேரியர்) ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" & "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "நீயில்லா வாழ்வு" (kandiah Thillaivinayagalingam) பூனைகளின் பேச்சுவார்த்தை ( ரசோதரன்) "தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே" (kandiah Thillaivinayagalingam) “ஏனடி இந்த வேதனை..?” (kandiah Thillaivinayagalingam) "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" & "என்றுமே முதலாளி" (kandiah Thillaivinayagalingam) ராணுவ ரகசியம் ( ரசோதரன்) "எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] & "மாங்கல்ய கனவுடன்" (kandiah Thillaivinayagalingam) அமைதி மணம் (villavan) "மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா" (kandiah Thillaivinayagalingam) "பாலியல் வன்கொடுமை" (kandiah Thillaivinayagalingam) முழிக்கும் மொழி ( ரசோதரன்) பிட்டுக்கு மனம் சுமந்து (மெசொபொத்தேமியா சுமேரியர்) தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே (Kavi arunasalam) "நீயில்லை நிழலில்லை" (kandiah Thillaivinayagalingam) அவளைத்தொடுவானேன்....??? (விசுகு) "மூன்றும் உடையது", குறள் 1085 & "பனிப்பொழிவு" (kandiah Thillaivinayagalingam) "பணம் படுத்தும் பாடு", "தைப்பொங்கல்” [ஹைக்கூ கவிதை] & "மரியாதை" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "தைமகளே வருக" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) கண் கண்ட தெய்வம் ( ரசோதரன்) தூத்துகுடி கொத்தனாரு…. (goshan_che) "வாழ்ந்து காட்டுவோம்" & "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” (kandiah Thillaivinayagalingam) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) பார்த்தீனியம் ( ரசோதரன்) கிழவனை கண்டா வரச்சொல்லுங்க (goshan_che) "கிராமியக் கலைஞன்" (kandiah Thillaivinayagalingam) தலைவரை கண்டா வரச்சொல்லுங்க (goshan_che) மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்? (villavan) "தை மகளே வருக" (kandiah Thillaivinayagalingam) பம்மாத்து (சுப.சோமசுந்தரம்) அப்பா...... (விசுகு) நானும் ஊர்க் காணியும் (மெசொபொத்தேமியா சுமேரியர்) "உழவர் திருநாள்" & "தித்திக்கும் பொங்கல் திருநாள்" (kandiah Thillaivinayagalingam) "எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு " (kandiah Thillaivinayagalingam) செவ்வந்தியில் செவ்வந்தி ( ரசோதரன்) இரத்த சொந்தம் (நிலாமதி) “காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” (kandiah Thillaivinayagalingam) "தை பிறந்தால்" & "பரோபகாரம்" (kandiah Thillaivinayagalingam) ஏழரைக்கனவு (தனிக்காட்டு ராஜா) யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது. (தமிழ் சிறி) "புதிய ஆரம்பம்" (kandiah Thillaivinayagalingam) "வாடகை வீடு..!" (kandiah Thillaivinayagalingam) "உன்னைச் செதுக்கு" (kandiah Thillaivinayagalingam) "பொறுப்பற்ற ஒரு ஊதாரி கணவன்" (kandiah Thillaivinayagalingam) "எங்களுக்கும் காலம் வரும்" (kandiah Thillaivinayagalingam) "கந்துவட்டி" (kandiah Thillaivinayagalingam) "சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிகிறதே!" (kandiah Thillaivinayagalingam) "இளங்கவியும் 'ஏடிஎச்டி' யும் [ADHD]" (kandiah Thillaivinayagalingam) கூடுவேம் என்பது அவா / குறள்1310 (kandiah Thillaivinayagalingam) "தனிக் குடித்தனம்" (kandiah Thillaivinayagalingam) "மௌனம் சம்மதமா?" (kandiah Thillaivinayagalingam) “போராடி வென்றவள்" (kandiah Thillaivinayagalingam) "உயிர்பெறுமா ஓவியம்" (kandiah Thillaivinayagalingam) "வீட்டு வேலைக்காரி" (kandiah Thillaivinayagalingam) "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்" (kandiah Thillaivinayagalingam) "மீட்டாத வீணை.." (kandiah Thillaivinayagalingam) பதியப்பட்ட 94 ஆக்கங்களில் களஉறுப்பினர்கள் @kandiah Thillaivinayagalingam 53 ஆக்கங்களையும் @ரசோதரன் 16 ஆக்கங்களையும் பதிந்துள்ளனர். கள உறுப்பினர்கள் கந்தையா தில்லைவிநாயகலிங்கம், ரசோதரன் ஆகியோருக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு: யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  3. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ரியான் ரிக்கெல்ரன், சூர்யகுமார் யாதவின் அதிரடிப் புயல்வேக அரைச் சதங்களுடனும், நமன் டீர், கோர்பின் பொஷ் ஆகியோரின் கமியோ விளாசல்களுடனும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பித்தாலும் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததால் துரத்துவதில் சறுக்கி, இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததாலும், கேஎல் ராஹுல் வேகமாக அடித்தாடத் திணறியதாலும் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள் விராட் கோலியின் நிதானமான அரைச் சதமும், க்ருனல் பாண்டியாவில் அதிரடியான அரைச் சதமும் 18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைய உதவியது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  4. 14 வயது சிறுமியை மூன்று வருடங்களாக கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் செய்ய வைத்துள்ளனர். அதாவது 11 வயதில் இருந்து. இந்த இரண்டு காட்டுமிராண்டிகளுக்கு சின்னஞ் சிறு சிறுமி தேவைப்பட்டு இருக்கு. மகள் வயதுடைய பிள்ளையின் வாழ்வை அழித்து இருக்கின்றார்கள் இந்த கொடூரன்கள். இப்படியான காட்டேரிகளின் விபரங்களை பகிரங்கப்படுத்தி இருக்க வேண்டும். யூரீபர்களாவது இதைச் செய்ய வேண்டும். தலைவர் பிஸ்டல் குழுவையாவது இயங்கு நிலையில் வைத்து விட்டு சென்றிருக்கலாம்.
  5. இன்று புள்ளி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அந்தப் பையனின் விளையாட்டிற்கு ஒரு சல்யூட் 💥
  6. பயமறியா வயது. எல்லா சுதந்திரமும் குடுத்திருக்கினம் போல. நீ அடிச்சு ஆடு. பாத்துக்கலாம் என்று ட்ராவிட் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறன். இணைப்பாட்டம் 100 ஓட்டங்களைக் கடந்து...
  7. எனக்கு இளையராஜாவின் மீது விமர்சனங்கள் உண்டு. ஒரு மனிதராக அவர் பல பிழைகளைக் கொண்ட ஒருவர். ஆதி திராவிட சமூகத்தில் பிறந்து விட்டு, அதை மறுக்கும் விதமாக நடந்து கொள்வதுடன் தன்னை ஒரு பார்ப்பனராக, ஒரு சங்கியாக நினைப்பதுடன், மற்றவர்களும் தன்னை அவ்வாறுதான் நடத்த வேண்டும் எனும் எண்ணம் கொண்ட ஒருவர். எந்த சமூகம் அதிகாரத்துடன் உள்ளதோ, அதில் தானும் சங்கமிப்பதனூடாக, அதிகாரம் அற்ற, குரலற்ற சமூகங்களை ஏளனப்படுத்த முனைகின்ற ஒருவர் இளையராஜா. மோடிக்கு முன், முதலமைச்சர் முன், கோயில் பூசாரி முன், குருக்கள் முன் பவ்வியமாக கைகட்டி நிற்பார். அவர்கள் இவரை மதிக்காவிடின் கூட, அவர்கள் கால்களை கழுவி விடக் கூட துணிவார். ஆனால் ஒரு சாதாரண ஊடகவியலாளரைக் கூட மதிக்க மாட்டார். சபை நாகரீகம் என்பது மேட்டுக்குடியினருக்கு மட்டுமே என்ற கொள்கை கொண்டவர். ஆரம்பத்தில் தன் குருக்களாக, பழைய இசையமைப்பாளர்களை ஒவ்வொரு மேடையிலும் குறிப்பிட்டுச் சொல்வார். இன்று தன்னை பிரம்மாவாக நினைத்துக் கொள்கின்றார். மிகுந்த தலைக்கனம் பிடித்தவர். குடும்பத்தினருடன் கூட தலைக்கனமாக நடந்து கொள்கின்றவர். அவருக்கு பா.ஜ.க வின் மூலம் கிடைத்த ராஜ்யசபா எம் பி பதவி என்பது தலையில் சந்தனம் என்று நினைத்து அவரே வைத்துக் கொண்ட மலக் குவியல். ஆனாலும் இளையராஜா ஒரு அற்புதமான, அருமையான, இயற்கை எமக்கு அருளிய ஒரு கொடை. இதுவரைக்கும் அவர் கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் ஒரு 100 பாடல்கள் வரைக்கும் ஏனைய பாடல்களின் மெட்டுக்களை உருவி இசையமைத்து இருப்பார். ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அவரது அளப்பரிய இசையை எடை போட்டு மட்டம் தட்ட முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் ரஹுமான், ஹரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரையும் கவரக்கூடிய இசையை அளிப்பவர்கள் அல்ல. ஆனால் இளையராஜாவால் அது முடியும். சாதாரண, படிக்காத, அன்றாடம் காச்சி, பாமரனான் ஒருவராலும் அவரது இசையை ரசிக்க முடியும்; தனி விமானம் வைத்து பயணம் செய்கின்றவர்களாலும் ரசிக்க முடியும். கருவில் இருந்து சுடுகாடு போகும் வரைக்குமான வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். அந்தந்த கட்டங்கள் வாழ்வில் வரும் போது, அதற்கு ஏதுவாக ஒரு பாடலை , இசையை ஏற்கனவே அவர் இசையமைத்து இருப்பார். பாடல்கள் மட்டுமல்ல, அவரது பின்னனி இசையும் அற்புதமானது. பிதாமகன் படத்தில் கள்ளச்சாராயம் காச்சி குதிரைகளில் வைத்து கடத்தி செல்லும் காட்சியில் பின்னனி இசைத்து இருப்பார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், பரவசம் அடைவோம் (இப் படத்தில் உள்ள பிறையே பிறையே பாடல் தனிமையில் கேட்கும் போது புல்லரிக்க வைக்கும்). மெளனராகத்தின் படத்தின் பின்னனி இசை முழுதுமே ஒரு தனி அல்பமாக போட்டு கேட்க முடியும். தளபதி படத்தில் வரும் பின்னனி இசை இன்னொரு வகையான பரவசம். -------- என் அம்மாவுக்கு 80 வயதாகின்றது. இப்ப இருக்கும் அம்மா முன்னர் இருந்த என் அம்மா மாதிரி அல்ல. எப்பவும் தன்னை பற்றி மட்டுமே கதைக்கின்ற, தற்பெருமை பேசுகின்ற, என் அப்பாவை எப்பவும் உயர்த்தி மட்டுமே கதைக்கின்ற ஒருவராக இப்ப அம்மா உள்ளார். அறளை பெயர்ந்து தற்பெருமை பேசும் ஒருவராக அம்மா மாறிவிட்டார். ஆனாலும் அம்மா மீதான என் பாசம் குறையவில்லை. அவர் எனக்கு செய்த அனைத்து நன்மைகளையும் நான் மறக்கவில்லை எனக்கு இளையராஜாவும் அப்படித்தான். இன்னும் சொன்னால், நான் அம்மாவுடன் கழித்த ஒட்டுமொத்த நிமிடங்களை விட, இளையராஜாவின் இசையும் கழித்த நிமிடங்கள் பல மடங்கு அதிகம். Wishing you long life Ilayarajah
  8. இனிய காலை வணக்கம் அனைவருக்கும் ........... மிக மிக மதிப்பான ஒரு காலை ........... ! 🙏
  9. கோசான் வெளி நாடு போக அவரின் காணியை நான் பிடிப்போம் என்டால் ஒருத்தர் போட்டிக்கு நிக்கிறார்.☹️😀
  10. நானும் குஜராத்தான், ஜுரல் 3 ஆவதாக வந்தால் அப்படி ஒரு வேலை செய்துவிடுவார் எனும் நம்பிக்கைதான்,🤣
  11. ட்ரம்ப் பல முயற்சிகளை ஒருங்கே செய்ய முயற்சிக்கின்றார், ட்ரம்ப் தொடர்பில் அவர் மீதான விமர்சனம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது அண்மையில் அமெரிக்க மத்திய வங்கி ஆளுனரின் பதவியினை பறிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வாறு மத்திய வங்கியின் ஆளுனரை பதவியிலிருந்து தூக்கியெறிய முடியாது, மத்திய வங்கி சட்டம் மூலம் அவர் மீட்கு வட்டி விகிதம் குறைக்கவில்லை என்பதற்காக பதவி விலக்கினால் நீதிமன்றத்தில் ட்ரம்ப் தோல்வியடைவார் என கூறப்படுகிறது ( For cause). அமெரிக்காவின் முதல் காலாண்டு மொத்த தேசிய வருமானம் -0.2% ஆக வந்துள்ளது இன்னுமொரு காலாண்டு மொத்த தேசிய வருமான மறை இலக்கத்தில் வந்தால் பொதுவாக அதனை பொருளாதார சரிவு என வரையறுக்கிறார்கள் (recession). இந்த புள்ளி விபரம் தெரிந்த ட்ரம்ப் தனது தாக்குதலை மத்திய வங்கி ஆளுனரின் மேல் தொடங்கியுள்ளார் என கருதுகிறேன், வட்டி விகித குறைப்பு பொருளாதாரத்தினை தூண்டும் ஆனால் தற்போது பணவீக்கம் முழுமையாக கட்டிற்குள் வரவில்லை அந்த நிலையில் வட்டி விகித குறைப்பு பொருளாதார சரிவினை தூண்டும். பொருளாதார சரிவு வெறுமனே மொத்த தேசிய வருமானத்தினை மட்டும் கவனத்தில் கொள்ளப்படும் விடயம் அல்ல, மாறாக வேலை வாய்ப்பு, உற்பத்தித்துறை, தனிநபர் தேறிய வருமானம் என்பவற்றில் தங்கியுள்ளது. மொத்த தேசிய வருமானத்திலேயே அமெரிக்கா தற்போது சரிவினை கண்டு வருகிறது ஆனால் மற்ற விடயங்களில் ட்ரம்பின் ஆட்சி ஏற்பின் பின்னர் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது ஆனால் இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய காரணி, ஒன்று சரிந்தால் மற்றதும் சரிவடையலாம். Real-time Sahm Rule Recession In...Real-time Sahm Rule Recession Indicator https://tradingeconomics.com/united-states/manufacturing-pmi ட்ரம்ப் தனது புகழை விட்டு செல்ல விரும்புகிறார், ஆனால் அவர் நினைப்பதற்கும் நடைமுறைக்கும் இடையே இடைவெளி உள்ளது போல இருக்கிறது. தற்போது உலகம் ஒரு உண்மையினை உணர்ந்துள்ளது, போரினால் யாரும் அனுகூலமடைய முடியாது, கர்மா வீடு தேடி வரும்.
  12. கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும் 0 கதையாசிரியர்: தி.ஞானசேகரன் தின/வார இதழ்: வீரகேசரி 1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டி ருக்கிறாள். வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி யிருக்கின்றன. பின் வளவைக் கூட்டித் துப்புரவாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். பால் கொடுப்பதிலே ஏதோ சுகத்தைக் காண்பவள்போல கதிரி கண்களை மூடிய வண்ணம் சுவரோடு சாய்ந்திருக்கிறாள். அவளது மடியில் முழங்கால்களை அழுத்தி, தலையை நிமிர்த்தி, தன் பிஞ்சுக் கரங்களால் தாயின் மார்பில் விளையாடிக் கொண்டே அவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். சில வேளைகளில் தனது சிறிய கால்களை நிலத்திலே உதைத்துத் தாயின் மார்பிலே தலையால் முட்டுகிறான். அப்படிச் செய்வது அவனுக்கு ஒரு விளையாட்டோ என்னவோ. கண்ணாடியின் முன்னால் நின்று கண் புருவத்துக்கு மைதீட்டிக் கொண்டிருந்த வசந்தியின் பார்வை, கோடிப்புறத்து யன்னலின் ஊடாகக் கதிரியின் மேல் விழுகிறது. மைதீட்டுவதை நிறுத்திவிட்டு அவள் மெதுவாக யன்னலின் அருகில் வந்து கம்பிகளைப் பிடித்தவண்ணம் கதிரி பால் கொடுப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். அவளது பார்வை சிறிதுநேரம் கதிரியின் மார்பிலே மேய்கிறது. கதிரியின் உடலமைப்பைக் கவனித்தபோது வசந்திக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. வளவு கூட்டுவதற்காக மாதத்தில் இரண்டு தடவையாவது கதிரி இங்கு வருவாள். நெல் குத்துதல், மாவு இடித்தல் போன்ற வேறு வேலை களிலிருந்து சொல்லியனுப்பினாலும் அவள் வந்து செய்து கொடுப்பாள். வசந்தி கொழும்பிலிருந்து ஊருக்கு வந்திருந்த வேளைகளில், கதிரி அங்கு வேலைக்கு வரவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் போய் விட்டன. அதனால் கதிரியை ஐந்தாறு வருடங்களாக வசந்தியால் பார்க்க முடியவில்லை. வசந்தி கல்யாணஞ் செய்து கணவனுடன் கொழும்புக்கு போவதற்கு முன் கதிரியை அடிக்கடி பார்த்திருக்கிறாள். அப்போது இருந்த அவளது இறுக்கமான உடலமைப்பும், அழகும் இன்றும் மாறாமல் அப்படியே இருக்கின்றன. ‘நறுக்’கென்று அந்தச் சிறுவன் கதிரியின் மார்புக்காம்பில் கடித்து விடுகிறான். ‘ஆ’ என்று ஒருவித வேதனையோடு அந்தச் சிறுவனைத் தூக்கி நிமிர்த்திய கதிரி, “ஏன்ரா கள்ளா கடிச்சனி?” என அவனிடம் செல்லமாகக் கடிந்து கொள்ளுகிறாள். அவன் தாயைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனது கடை வாய்களிலிருந்து பால் வழிகிறது. கதிரி தன் சேலைத் தலைப்பினால் அந்தச் சிறுவனின் வாயைத் துடைத்துவிட்டு, நெஞ்சை மறைத்துக் ‘குறுக்குக் கட்டு’க் கட்டிக்கொள்ளுகிறாள். இப்போது அந்தச் சிறுவன் எழுந்து நிற்கிறான். அவனது உடல் முழுவதும் புழுதி படிந்திருக்கிறது. அவனது மெலிந்த உடலின் நெஞ்சு எலும்புகள் பளிச்சென்று தெரிகின்றன. அவனது தோற்றத்துக்குக் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் வயிறு மட்டும் முட்டிக்கொண்டு பெரிதாக இருக்கிறது. கொழும்பிலிருக்கும் மாதர்சங்கம் ஒன்றிற்கு வசந்தி அடிக்கடி செல்வாள். அந்தச் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் அவளது சிநேகிதிகளில் பலர், குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களிலேயே பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். பால் கொடுப்பதனால் உடலுறுப்புகளின் இறுக்கமும் கவர்ச்சியும் குறைந்து விடுவதைப்பற்றி அவளுடைய சிநேகிதிகள் அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள். சிறிது காலத்துக்கு முன்பு மாதர் சங்கத் தலைவி பால் கொடுப்பதை நிறுத்துவதற்கு இலகுவான முறைகள் எவை என்பதைப்பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள். இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வசந்தியின் நினைவில் வந்துகொண்டிருந்தன. வசந்தியின் மனது துருதுருக்கிறது. வளர்ந்துவிட்ட குழந்தை யொன்றுக்குப் பால் கொடுக்கும் கதிரியின் உடல் எவ்வளவு அழகாக இருக்கிறது! வசந்தி கதிரியிருக்கும் இடத்திற்கு வருகிறாள். “பிள்ளை, எப்ப கொழும்பாலை வந்தது?” வசந்தியைக் கண்டதும் ஆச்சரியத்தோடு கேட்கிறாள் கதிரி. “காலைமைதான் வந்தனான்; நான் வந்ததைப் பற்றி அம்மா உன்னட்டைச் சொல்லேல்லையோ?” “இல்லைப் பிள்ளை, நான் வரேக்கை அவ அடுப்படியிலை வேலையாயிருந்தா, அவவையேன் குழப்புவான் எண்டு நான் பின்வளவுக்குக் குப்பை கூட்டப் போட்டன்.” அந்தச் சிறுவன் இப்போது வசந்தியை ஆச்சரியமாகப் பார்க்கிறான். பின்பு பயத்துடன் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான். “இவன்தான் பிள்ளை என்ரை கடைசிப் பெடியன், ஆள் வலு சுட்டியன். பிள்ளையை ஒரு நாளும் பார்க்கேல்லையெல்லே; அது தான் பயப்பிடுகிறான். அந்தச் சிறுவனின் தலைமயிர்களைத் தன் விரல்களினால் கோதியபடியே கூறுகிறாள் கதிரி. “உவனுக்கு எத்தனை வயசு?” “ஓ, இவன் பிறந்தது பிள்ளைக்குத் தெரியாது தானே. இந்த முறை எங்கடை அன்னமார் கோயில் வேள்வி வந்தால் இரண்டு முடிஞ்சு போம்.” “இப்பவும் நீ உவனுக்குப் பால் கொடுக்கிறாய். ஏன் நிற்பாட்டேல்லை? நெடுகப் பால் கொடுத்தால் உன்னுடைய உடம்பு பழுதாய்ப் போமெல்லே.” “என்ன பிள்ளை உப்பிடிச் சொல்லுறாய்? உவன் வயித்திலை வாறவரைக்கும் முந்தினவன் மூண்டரை வரியமாய்க் குடிச்சவன். பால் நிற்பாட்ட ஏலாமல் வேப்பெண்ணை பூசித்தான் நிற்பாட்டினனான். என்ரை நடுவிலாளும் அப்பிடித்தான்; இரண்டு வரியமாய்க் குடிச்சவள். பெத்த பிள்ளையளுக்குப் பாலைக் குடுக்காமல் அப்பிடியென்ன எங்கடை உடம்பைக் கட்டிக்காக்க வேணுமே?” கதிரி சொல்லுவது வசந்திக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவள் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மூன்று வருடங்களுக்குக் குறையாமல் பால் கொடுத்திருக்கிறாள்!. வீட்டினுள்ளேயிருந்து குழந்தையின் அழுகைக் குரல் கேட்கிறது. “பிள்ளைக்கும் போன பொங்கலுக்கையெல்லோ குழந்தை பிறந்தது. கொழும்பிலை ஆசுப்பத்திரியிலை தான் பிறந்ததெண்டு கொம்மா சொன்னவ. இப்ப குழந்தைக்கு ஏழு மாசமிருக்குமே?” “இல்லை ஆறு மாசந்தான்” “எடி வசந்தி, குழந்தை அழுகிறசத்தம் உனக்குக் கேக்கல் லையோ? அதுக்குப் பசிக்குதுபோலை. உங்கை கதிரியோடையிருந்து என்ன கதைச்சுக்கொண்டிருக்கிறாய்?” வசந்தியின் தாய் அன்னம்மா, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு வருகிறாள். “ஏதோ கனாக்கண்டு அழுகுதாக்கும். காலைமை எட்டு மணிக்குத்தானே பால் கொடுத்தனான். இனி பன்னிரண்டு மணிக்குத்தான் கொடுக்கவேணும்.” வசந்தி தான் கூறுகிறாள். “இந்தா குழந்தையைப் பிடி, நீ என்னத்தையாவது செய். நான் போய்க் கதிரிக்குத் தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்.” வசந்தியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அன்னம்மா திரும்புகிறாள். குழந்தையை இறுக அணைத்து, அதன் தொடைகளைத் தட்டி அழுகையைக் குறைக்க முயலுகிறாள் வசந்தி. குழந்தை வசந்தியின் மார்பிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு வீரிட்டு அழுகிறது. “அம்மா தொட்டிலுக்கை சூப்பி இருக்கு, அதையும் எடுத்துக் கொண்டு வாங்கோ.” அன்னம்மா கதிரிக்குத் தேநீர் கொண்டு வரும்போது சூப்பியையும் மறக்காமல் எடுத்து வருகிறாள். வசந்தி அதனை வாங்கி குழந்தையின் வாயில் வைத்தபின்புதான் ஒருவாறு அதன் அழுகை ஓய்கிறது. குழந்தை தாயின் முகத்தைப் பார்த்தபடி அந்த றப்பரை ஆவலுடன் உமியத் தொடங்குகிறது. கதிரி எழுந்து கோடிப்புறத்து வேலியிலே செருகியிருந்த தனது சிரட்டையை எடுத்துத் துடைத்து, அதிலே படிந்திருந்த தூசியை நிலத்திலே தட்டி நீக்கி விட்டு அன்னம்மாவிடம் நீட்டுகிறாள். அந்தச் சிரட்டையிலே செம்பு முட்டிவிடக்கூடாதே என்ற கவனத்துடன் அன்னம்மா அதற்குள் தேநீரை வார்க்கிறாள். “பிள்ளை, குழந்தைக்குப் பசிக்குதுபோலை; பாலைக் குடுமன்” வசந்தியைப் பார்த்துக் கதிரி கூறுகிறாள். “அழுகிற நேரமெல்லாம் பால் கொடுக்கப்படாது. பிறகு பால் நிற்பாட்டிறது கரைச்சல். நான் இப்ப பால் கொடுக்கிறதைக் குறைச்சுப் போட்டன்; வாற மாசத்தோடை நிற்பாட்டப்போறன். நேரத்தின்படிதான் பால் கொடுக்கவேணும்.” அதைக் கேட்டபோது கதிரியின் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குப் பசிக்கிறது, அதற்குப் பால் கொடுக்காமல் ஏமாற்றுகிறாள் தாய். கதிரியின் தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருக்கிறது. தேநீர் உள்ளே இறங்க மறுக்கிறது. “ஏன் கதிரி தேத்தண்ணியைக் குடிக்காமல் வைச்சுக் கொண்டிருக்கிறாய்? சுறுக்காய்க் குடிச்சிட்டுப் போய்க் குப்பையைக் கூட்டன். கையோடை ஒரு கத்தை வைக்கலையும் எடுத்துக்கொண்டு போய் மாட்டுக்குப் போட்டு விடு. காலைமை தொடக்கம் அது கத்திக் கொண்டு நிற்குது.” கதிரியிடம் கூறிவிட்டு அன்னம்மா வீட்டுக்குள் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து வசந்தியும் குழந்தையுடன் செல்கிறாள். கதிரியால் தேநீரைக் குடிக்க முடியவில்லை; அவள் அதனை வெளியே ஊற்றிவிட்டு சிரட்டையை வேலியில் செருகுகிறாள். பின்பு கோடியில் அடுக்கியிருந்த வைக்கோற் போரில் ஒரு கற்றை வைக்கோலை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டிலுக்குச் செல்லுகிறாள். அவளைப் பின் தொடர்ந்து அந்தச் சிறுவனும் செல்லுகிறான். கதிரியைப் பார்த்ததும் அந்தப் பசுமாடு உறுமுகிறது. கொட்டிலின் மறுபுறத்தில் கட்டப்பட்டிருந்த அதன்கன்று, பால்குடிப்பதற்காகக் கயிற்றை இழுத்துக் கொண்டு தாய்ப்பசுவின் அருகே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தாய்ப்பசு கன்றின் முகத்தைத் தன் நாவினால் நக்குகிறது. இப்போது பசுவின் முலைக் காம்பிலிருந்து பால் சுரந்து சொட்டுச் சொட்டாக நிலத்திலே சிந்துகிறது. கதிரி அதனை உற்றுப் பார்க்கிறாள். அந்தப் பசு நல்ல உயர்சாதிப் பசுவாகத்தான் இருக்க வேண்டும். கதிரி வைக்கோலைத் தொட்டிலுக்குள் போட்டு உதறி விடுகிறாள். பின்பு அதன் கன்றை ஆதரவாகத் தடவிவிட்டு அதற்கும் சிறிது வைக்கோலைப் போடுகிறாள். வெயில் உக்கிரமாக எறிக்கிறது. கதிரிக்குக் களைப்பாகவும் ஆயாசமாகவுமிருக்கிறது. தொடர்ந்தும் வேலைசெய்ய அவளால் முடியவில்லை. அருகிலிருக்கும் வேப்ப மரநிழலின் கீழ் தனது சேலைத் தலைப்பை விரித்து அதிலே சாய்ந்து கொள்ளுகிறாள். அவளது சிறுவன் தூரத்திலே விளையாடிக் கொண்டிருக்கிறான். வசந்தி தன் தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்குச் செல்வ தற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். வெகுநேரமாகக் கண்ணாடியின் முன்னால் நின்று ஒரு புதிய ‘பாஷன்’ கொண்டையைப் போடுவதில் அவள் முனைந்திருக்கிறாள். அந்தக் கொண்டை அவளது தோற்றத்துக்கு மிகவும் எடுப்பாகவிருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு நாள் அந்தக் கொண்டையோடு அவள் மாதர் சங்கத்துக்கு போயிருந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருமுகமாக அவளது அழகைப் புகழ்ந்தார்கள். அன்று அந்தக் கொண்டையை அடுத்த வீட்டிலிருக்கும் அவளது தோழிதான் போட்டுவிட்டாள். கொண்டை போட்டு முடிந்துவிட்டது. ஆனாலும் வசந்திக்கு அது திருப்தியை அளிக்கவில்லை. ஒருவாறாகத் தனது அலங்காரத்தை முடித்துக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டாள். வெகு நேரமாகத் தூங்கிக்கொண்டிருந்த வசந்தியின் குழந்தை அழத் தொடங்குகிறது. அன்னம்மா ஓடிச்சென்று குழந்தையைத் தூக்குகிறாள். அவளைப் பார்த்ததும் குழந்தை வீரிட்டு அழுகிறது. அதன் அழுகையை நிறுத்த எண்ணிய அன்னம்மா, சூப்பியை எடுத்து அதன் வாயிலே வைக்கிறாள். குழந்தையின் அழுகை சிறிது நேரம் அடங்குகிறது. அதனைத் தன் தோளிற் சாய்த்து, முதுகிலே தட்டி நித்திரையாக்க முயலுகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் வீரிட்டு அழுகிறது. அன்னம்மா எவ்வளவோ முயற்சி செய்தபோதும் அதன் அழுகையை நிற்பாட்ட முடியவில்லை. குழந்தை மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறது. அதன் வாயிலிருந்த சூப்பி நிலத்திலே விழுகிறது. கண்ணயர்ந்திருந்த கதிரி எழுந்து உட்காருகிறாள். ஏன் அந்தக் குழந்தை வெகுநேரமாக அழுதுகொண்டிருக்கிறது? குழந்தையின் அழுகை கதிரியின் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை. “ஏன் கமக்காறிச்சி குழந்தை அழுகுது? பிள்ளையைக் கூப்பிட்டு பாலைக் குடுக்கச் சொல்லுமன்”அன்னம்மாவிடம் கூறுகிறாள் கதிரி. “இனி ஆறு மணிக்குத்தான் பால் குடுக்கவேணுமெண்டு சொல்லிப்போட்டு அவள் எங்கையோ கலியாணத்துக்குப் போட்டாள். இங்கை குழந்தை கிடந்து பசியிலை துடிக்குது. அப்பவும் நான் சொன்னனான், குழந்தையையும் கொண்டுபோகச்சொல்லி; அவள் கேட்டால் தானே. பால் குடுக்கிற நேரத்துக்கு வருவனெண்டு சொல்லிப் போட்டுப் போட்டாள். இப்ப என்ன செய்யிறது? அழுதழுது இதுகின்ரை தொண்டையும் அடைச்சுப்போச்சு”. அன்னம்மாவின் குரலையும் மீறிக்கொண்டு துடித்துத் துடித்து அழுகிறது குழந்தை. அன்னம்மா விளையாட்டுப் பொருட்களைக் காட்டிக் குழந் தையின் அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். ஆனாலும் அதன் அழுகை அடங்கவில்லை. அன்னம்மாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வெகு நேரமாக அழுது களைத்துப்போன அந்தக் குழந்தைக்கு இப்போது அழுவதற்கே சக்தியிருக்கவில்லை. அது இப்போது முனகிக் கொண்டிருக்கிறது. அன்னம்மாவின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொட்டிலில் கட்டியிருந்த பசுமாடு ‘அம்மா அம்மா’ என்று குரல் கொடுக்கிறது. பால் கறக்கும் நேரம் வந்துவிட்டால் அது கத்தத் தொடங்கி விடும். மாட்டுடன் சேர்ந்து இடையிடையே கன்றும் குரல் கொடுக்கிறது. இப்போது முனகுவதற்குக் கூடச் சத்தியில்லாமல் குழந்தை அன்னம்மாவைப் பரிதாபமாகப் பார்க்கிறது. “கமக்காறிச்சி, குழந்தை இனித் தாங்கமாட்டுது; பசுப் பாலையாவது குடுமன்.” கதிரி அன்னம்மாவிடம் கூறுகிறாள். “குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கொள் கதிரி, நான் ஓடிப்போய்ப் பாலைக் கறந்து கொண்டுவாறன். ” முற்றத்து விறாந்தையிலுள்ள திண்ணையில் பாயொன்றை விரித்துக் குழந்தையை அதிலே கிடத்திவிட்டு, செம்பை எடுத்துக் கொண்டு மாட்டுக்கொட்டில் பக்கம் போகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் அழத் தொடங்குகிறது. அது தன் பிஞ்சுக் கால்களால் நிலத்தில் உதைத்து, உடலை நெளித்துத் துடிக்கிறது. கதிரி ஒரு கணம் கண்களை மூடிக்கொள்ளுகிறாள். அவளால் குழந்தைபடும் வேதனையைப் பார்க்க முடியவில்லை. துடித்துப் புரண்டுகொண்டிருந்த குழந்தை திண்ணையின் ஓரத்திற்கு வந்து விடுகிறது. ஐயோ! குழந்தை விழப்போகிறதே ! கதிரி ஓடிச்சென்று, திண்ணையின் நடுவிலே குழந்தையைக் கிடத்துவதற்காகத் தன் இரு கைகளாலும் அதைத் தூக்குகிறாள். “அம்….. மா” குழந்தை அவளது முகத்தைப் பார்த்து வெம்புகிறது. குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி நிலத்திலே உட்கார்ந்து விடுகிறாள் கதிரி. குழந்தை அவளது நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு முனகுகிறது. தன் பிஞ்சுக் கரங்களால் அவளது நெஞ்சை விறாண்டுகிறது. நெஞ்சை மறைத்துக் குறுக்குக்கட்டுக் கட்டியிருந்த அவளது சேலை அவிழ்ந்து விடுகிறது. “அ….. ம்மா, அம்… மா ” கதிரி தன்னை மறக்கிறாள். கதிரியின் மார்புக் காம்புகள் நனைந்துவிடுகின்றன. மறுகணம் அந்தக் குழந்தை அவளது மார்பில் கைகளால் அளைந்தபடி வாயை வைத்து உமியத் தொடங்குகிறது. “ஐயோ கதிரி, மாடெல்லோ கயித்தை அறுத்துக் கொண்டு கண்டுக்குப் பாலைக் குடுத்துப் போட்டுது”. மாட்டுக் கொட்டிலில் இருந்தபடியே அன்னம்மா பலமாகக் கூறுகிறாள். அவள் கூறுவதைக் கேட்கக்கூடிய நிலையில், அப்போது கதிரி இருக்கவில்லை. கல்யாண வீட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வசந்தி, இப்போது தனது ‘ஹான்பாக்’கைத் திறந்து அதற்குள்ளிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, கலைந்திருந்த தனது அலங்காரத்தைச் சரிசெய்து கொள்ளுகிறாள். – வீரகேசரி 1973 – கால தரிசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1973, கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன். https://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9/
  13. ஆணுக்கு… அதிக வயது இருக்கும் போது, அதனை பெரிதாக எடுக்காத சமூகம்…. அதிக வயதுடைய பெண், வாலிபனுடன் தொடர்பில் இருக்கும் போது, பெரிதாக எடுப்பதும் ஒரு வகை பெண்ணாதிக்கம்தான்.
  14. இணைப்புக்கு நன்றி நுணா. அடுத்த வருட ஐபிஎல் இல் அதிகூடிய தொகைக்கு எடுப்பார்கள். இனிவரும் போட்டிகளிலும் பிரகாசிக்க வேண்டும். உங்கள் வர்ணனை நன்றாக இருந்தது.அதை வாசிக்கவே விளையாட்டைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.
  15. GMT நேரப்படி நாளை செவ்வாய் 29 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் சுவி செம்பாட்டான் நுணாவிலான் எப்போதும் தமிழன் அகஸ்தியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  16. வைபவ் சூரியவம்சி ........ பொடியன் நாய் பேய் அடி அடிக்கிறான் ......... 100 ஐ தாண்டி விட்டார் ....... எல்லா கேமராக்களும் அவர் மீதுதான் . .......சொந்த கட்சி எதிர்க்கட்சி என்று இல்லாமல் எல்லோருமே பாராட்டுகிறார்கள் . ...... கட்டிளங் கன்னிகளின் பார்வை எல்லாம் அவன் மேலேதான் ........! 😂
  17. கானக் கண் கோடி வேணும் பையனின் அடியைப் பார்க்க.
  18. சொல்லுவாங்கள். எனக்கு அடிக்கனும் என்றா, இனி ஒருத்தன் பிறந்துதான் வரணும் என்று. அப்பிடி ஒருத்தன் வந்திருக்காண்டா. இசாந் தனது அறிமுகத்தைச் செய்யும் போது அவன் பிறக்கவே இல்லை. இன்று, போட்டுப் பிளந்து கொண்டிருக்கிறான் பையன். வைபவ் சூரியவம்சி
  19. வர்த்தக நோக்கத்திற்காக இசையை பயன்படுத்த லைசென்ஸ் எடுத்து இருக்க வேண்டும். பெரும்பாலான நாடுகளில் இது தான் சட்டம். இதனையும் Tariff என்பர். இது ஒவ்வொரு இடத்துக்கும் மாறுபடும். ஜிம் போன்றவை ஒவ்வொரு பாடலுக்கும் காப்புரிமை பிரகாரம் பணம் செலுத்துவதில்லை. அவர்கள் எந்த நாட்டு இசையை பிரதானமாக இசைக்க விடுவர் என்று முன்னரே தெரிவித்து விடுவர். உதாரணத்துக்கு ஒரு ஜிம், ஜப்பானிய பாடல்களையும் அமெரிக்க இசையையும் ஒலிக்க விடுவாராயின், அதற்கான காப்புரிமைக்கான பணத்தை ஒவ்வொரு வருடமும் செலுத்துவர். IPRS போன்ற அமைப்புகள் அதனை வாங்கி, தம் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிப்பர். அதாவது அவ் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் ஜப்பானிய/ அமெரிக்க இசைக்கலைஞர்களுக்கு பகிர்ந்தளிப்பர். ஆனால் FM போன்றன, தாம் வர்த்தக நேரங்களில் இசைக்கும் பாடல்கள் அனைத்தினது விபரங்களையும் அனுப்பி வைப்பர். அதன் படி காப்புரிமை பணம் பகிர்ந்தளிக்கப்படும். வர்த்தக நிலையம் ஒன்று வானொலியில் வரும் பாடல்களை ஒலிக்கவிடின், காப்புரிமைக்கான பணத்தை செலுத்த தேவை இல்லை. ஏனெனில் FM நிலையங்கள் ஏற்கனவே அதற்கான கட்டணங்களை செலுத்துவதால். TikTok, YouTube, TV, Concert venues போன்றவையும் கட்டணம் செலுத்த வேண்டும். இவற்றின் மூலம் நினைத்து பார்க்காத அளவு பணம் collect பண்ணப்படுகின்றது. லக்ஸ்மன் சுருதி போன்றவைக்கும் இது பொருந்தும். ஆனால் இந்தியாவில் எவரும் சின்ன சின்ன இசைக்குழுக்களிடம் இருந்து இவற்றை எதிர்ப்பார்ப்பது இல்லை. ஆனால் இங்கு எதிர்ப்பார்க்கின்றனர். Chatgtp இல் இப்படித் தேடிப்பாருங்கள். இந்த லைசென்ஸ் / இனை பற்றி மேலும் அறிய முடியும் what is tariff in music industry விகடன் போன்றவை இதனை பற்றி எழுதியிருக்கின்றனர். அத்துடன், அண்மையிலும் ஒரு தயாரிப்பாளர் இதைக் கூறியிருந்தார்.
  20. உலக புகழ் பெற்ற இந்த தாக்குதல் பற்றிய தகவல்களுக்கு நன்றி நன்னி.
  21. வணக்கம் வாத்தியார் .......... ! பெண் : { பூவ பூவ பூவ பூவ பூவே } (3) பூவ பூவ பூவே பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ பெண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்து நீ குலுங்கினாய் வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய் பெண் : வண்ணங்களோடு மலருகிறாய் வாசனையோடு வாழுகிறாய் பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய் பெண் : பூவே சிறு பூவே உன்னை போல் வாழ்ந்திடும் வாழ்க்கையே வேண்டுமே பெண் : நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி நீ தானே என்றும் எனக்கு நல்ல தோழி பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட தன தீம் தன தீம் தன தீம் தன நா பெண் : வசந்தம் வந்த செய்தியினை வண்டுக்கு எப்படி சொல்வாயோ வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா பெண் : தேனை நீ தந்து எதை நீ பெறுவாய் பூவே பூவே பெண் : உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ ......... ! --- பூவ பூவ ---
  22. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடிய செலன்ஸ்கி! நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தின் திறந்தவெளி முற்றத்தில் இன்று இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி உட்பட பல உலகத் தலைவர்கள் வத்திகானுக்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் பிரான்சிஸ் திருத்தந்தையின் நல்லடக்க ஆராதனைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமர் செலன்ஸ்கியும் இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429622
  23. டிரம்ப் அடங்கியொடுங்கி கையை கால்களுக்கிடையில் வைத்து கவனமாக செவிமடுக்கின்றார்🤣
  24. ராஜஸ்தான் அணி இன்றைய குஜராத் அணியுடனான போட்டியில் துருவ் ஜுரலை ஏன் 3 ஆவதாக களமிறக்கக்கூடாது? அவசரப்பட்டு சாம்சனை காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் போட்டிக்குள் கொண்டுவரவேண்டிய தேவை இல்லை, சென்னை அணி போல ராஜஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிந்து விட்டது. ஜுரலினினை ஒரு போட்டியில் உக்கார வைப்பதற்கு பதிலாக 3 ஆவது இடத்தில் களமிறக்கினால் அவர் தனக்கு தேவையான நேரத்தினை எடுத்துக்கொள்ள 3 ஆவது இடம் நல்ல பொருத்தமான இடம். சாம்சனும் அடிக்கடி காயத்தினால் உள்ளே வெளியே என இருக்கிறார், ஜுரலுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை ஏன் குடுக்கக்கூடாது, இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருக்கும்(சாம்சனுக்கு மாற்றீடு), அத்துடன் எமக்கும் 2 புள்ளிகள் கிடைக்கும்.😂
  25. முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். @goshan_che எனக்கு மேலே நிற்கிறார். ரொம்பவும் ஆச்சரியம். கொடுப்புக்குள் சிரிக்கிறது தெரியுது.
  26. குடிக்காமல். தண்ணீர் குடிக்காமல். எப்படி உங்கள் ஆயுதங்களை பாவிக்க முடியும் ?? இலங்கையையும். கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள் 🤣
  27. ஆமாம் பட்டதாரிகள் கலாநிதி அல்லது அது போன்ற படிப்பு படித்திருத்தால். வேண்டும் எனக்கு வடிவாக. தெரியாது ஆனால் ஒன்பது ஆண்டுகள் தேவைப்படலாம். ...அதாவது ஆசிரியராக. தொழில் புரியவதற்க்கு படிக்க வேண்டும் நாலு வருடங்கள். வேண்டும் என. நினைக்கிறேன் ஜேர்மன் உறவுகள் பிழை என்றால் திருத்துங்கள். நானும் அறிய முடியும் 🙏. என்னுடைய சொந்தக்காரர் ஒருவர் ஆசிரியர் ஆக வேலை செயகிறார். அதற்கு கலாநிதி செய்ய வேண்டும் என்று சொன்ன ஞாபகம் கிட்டத்தட்ட நாலு வருடங்கள் எடுக்கும்
  28. இதுக்குள்ளை எங்கடை கோஷான் சே எங்கே எண்டு தேடிப்பாத்தா 😅 என்ரை காணிக்கு ரெண்டு காணி தள்ளிப் பின்னால நிக்கிறார் 😂 மனுஷன் ஒரு நோக்கத்தோடைதான் வந்து கொண்டிருக்கிறார் 😀 சில வேலை முதல்வர் நந்தனாரை துரத்த வெளிக்கிட்டாரோ 😛
  29. அப்பாஸி ஒரு அப்பாவி விஷயம் தெரியாமல் ஜேவிபி யின் இளங்குமரன் 2021 இல் புலிகளால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று கூறியது போல ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார் : 😂
  30. முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் புலவர் ஒரு கை பார்க்க வேண்டும் என நினைத்தாலும் நடக்குதில்லை 🤣 முதல் நாள் முதல்வர் அமெரிக்கன் அய்யா மெல்ல மெல்ல நகர்வதைப்பார்த்தால் அகஸ்தியனுக்கு அடுத்த சுமைதாங்கி அவராகத் தான் இருப்பார்😂
  31. GMT நேரப்படி நாளை திங்கள் 28 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 09 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 14 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் ஈழப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் கந்தப்பு ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  32. உண்மைதான் அக்கா வேலைப்பளு காரணங்களால் தொடர்ந்து கவிதை தரமுடியாமலுள்ளது. இருந்தாலும் இடையிடையே "யாழ்" வந்து போவது மிக்க மகிழ்வு தருகிறது.அன்போடு நன்றிகள். அன்பு தமிழ் சிறி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
  33. தந்தை மீதான பொய் குற்றச்சாட்டுகளால் பாடசாலை கல்வியில் குழப்பம்; வைத்தியர் ஷாபியின் மகள் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி 27 APR, 2025 | 03:09 PM 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதாக்குதலின்போலியான கருத்தடை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட வைத்தியர் ஷாபி சிகாப்தீனின் மகள் 2024 கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் மிகத்திறமையாக சித்தியெய்தி உள்ளார். தந்தை எதிர்கொண்ட நெருக்கடிகளை தொடர்ந்து கடும் மன அழுத்தங்களை எதிர்கொண்டதால் தான் கல்விகற்றுக்கொண்டிருந்த பாடசாலையிலிருந்து விலகவேண்டிய நிலையை எதிர்கொண்ட போதிலும் அவர் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக பரீட்சை எழுதினார் கடும் மனஉறுதியை வெளிப்படுத்தினார். இவர் கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 3 ஏ பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/213059
  34. பொதுவான பதிவு முதலில் இந்திய ஜனநாயகத்தையும், மேற்கு ஜனநாயகத்தையும் ஒப்பிடுவது பொருத்தமும் அல்ல, தவறும் கூட. ஏனெனில் மேற்கு சனநாத்துக்கும், இந்திய சனநாயகத்துக்கும் உள்ள பாரிய வேறுபாடு, மக்கள் ஒரே தன்மை இல்லை, வேறுபாடுகள் இரத்த களரிக்கு இடடு செல்லும் நிலைமை, (பொதுவாக இப்பொது நிலம்கீழ் சென்று விட்டது, அனால், அவ்வப்போது மேல் வருகிறது) அரசியல்வாதிகளுக்கு அவர்கள் பிரபலமாக பெரிய தொகை மக்கள் விரும்புவதை கொண்டுவரலாம், அது அரச, தேசிய நலனுக்கு பாதகமாக இருந்தாலும். முக்கியமாக அமைச்சர் கொண்ட வருவது தனிப்பட்ட (அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில்). ஆனால் அதிகார பீடம் இணக்கம் , நிராகரிபு, மாற்றம், மாற்றீடு போன்றவை குழு முடிவு. எனவே முடிவு எந்த ஒரு பக்க மக்களுக்கு சாதகம், வேறு பக்க மக்களுக்கு பாதகம் ஆக இருப்பதத்திற்கு வாய்ப்புகள் மிக குறைவு. அத்துடன் அரச சேவை பயிற்றுவிக்கப்படும் விதமும். இந்தியா அரச சேவைக்கு எடுபடும் போதே அரைவாசி - முக்கால் வாசி பேதங்கள் அகன்று விடும், வெளிவரும் போது இந்தியா அரச, தேசிய நலன் மட்டுமுமே அந்த அதிகார பீடத்தின் மூச்சு, மனம், மதியாக இருக்கும். வரலாற்று காரணம் காலனித்துவ (பிரித்தானிய கொண்டுவந்த) சேவையில் தொடங்குகிறது. (விதிவிலக்குகள் இருக்கலாம்) அது போல, அந்த அதிகார பீடமும் அதிகாரத்தை துர்பிரோயோகம் செய்யாமல் இருக்க, அதிபர் ஒழுக்காற்று மற்றும் நீக்குவதை செய்யலாம். மந்திரிகள், பிரதமர், அதிபர் இலாகா ஊடாக அதன் அப்படியான செயற்பட்டுக்கு விண்ணப்பிக்கலாம். வற்றை கருத்தில் கொண்டும் அம்பேத்கார் வடிவமைத்தது யாப்பை.
  35. அதுதான் தலைப்பாடா அடிச்சுக் கொண்டிருக்கிறன். விதி ஆர விட்டது.
  36. கிளி ஜோசியரை விட்டுட்டு என்னுடன் ஏன் கூட்டுச் சேர்ந்தீர்கள்? உங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.
  37. ஹாட்லி கல்லூரி மாணவன் தசரத் கணிதவியலில் மாவட்டத்தில் முதலாவதாகவும் நாடாளாவியரீதியில் இரண்டாவதாகவும் வந்துள்ளார்! 28பேருக்கு 3A.
  38. நான் வேலை செய்வது இசை காப்புரிமை தொடர்பான அமைப்பில். பாடல்களின் காப்புரிமை காரணமாக கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை அதில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் அமைப்பில கனடாவில் வர்த்தக நோக்கத்திற்காக இசையை / பாடலை பயன்படுத்தினால் எம்மிடம் மற்றும் எம்மை போன்ற இன்னொரு அமைப்பிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது gym மில் ஒலிக்க விடும் பாடலாக இருந்தாலும் சரி, FM மில் ஒலிபரப்பும் பாடலாக இருந்தாலும் சரி அந்த இசைக்கான காப்புரிமை பணத்தை தரவேண்டும். Live music நிகழ்விற்கும் இது பொருந்தும். அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பங்கு காப்புரிமை பெற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். பாடல் யாருக்கு சொந்தம்? பாடல் அதன் இசையமைப்பாளருக்கே சொந்தம். இது தான் பெரும்பாலான நாடுகளின் சட்டம். கனடா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இது தான் சட்டம். ஒரு பாடலின் இசையை படத்தின் தயாரிப்பாளர் வாங்குகின்றார். அதை அவர் அப் படத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். SPB, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் போது, அங்கு இசைத்த, இசைக்கப்படும் பாடல்களின் list இனை நான் வேலை செய்யும் அமைப்புக்கோ (கனடாவில் நிகழ்ந்தால்) அல்லது அது போன்ற இன்னொரு அமைப்பிற்கோ வழங்கப்படும். அதன் படி காப்புரிமையின் படி வருமானத்தின் சிறு பங்கு பகிர்ந்தளிக்கப்படும். இதில் spb யின் மகனே இவ் நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்பவர் எனும் அடிப்படையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடினால் அதனையும் அந்த list இல் தர வேண்டும்.ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சட்ட ரீதியாக ஒரு நாட்டில் நிகழ்ச்சி நடாத்த அனுமதி பெற்று இளையராஜா வின் பாடலையும் பாடி வருமானம் பெற்று விட்டு, சட்ட ரீதியாக கொடுக்க வேண்டிய அதன் விபரங்களை அவர்கள் கொடுக்காமல் தவறினார்கள். இது வேண்டும் என்றே செய்த தவறு. இதே தவறை ஒரு பிரபலமான ஆங்கில பாடல் பாடி செய்து இருந்தால் பெரும் பணம் தண்டமாக கிடைத்திருக்க வாய்பிருந்து இருக்கும்.
  39. தெரியாவிட்டால் விடுங்கள். இது இந்தியா அரசை பற்றியது, எங்கு சென்றாலும் அதுக்கு ஒப்புமை காண முடியாது. அங்கு சென்று, இங்கு சென்று, சதிக்கதை என்று ... தவறாக திரிக்க தேவை இல்லை. தான் திரிப்பதை மற்றவர்கள் செய்தது என்று சொல்வது சீனாவை பற்றி மேற்கு ஊடகங்கள் சொல்லுவதை பிரதி செய்வது. சீனாவின் பார்வையில் எல்லோருமே அதிகாரிகள் அந்ததந்த தரத்தில். சீனாவை பற்றி தெரியாமல் கதைப்பது வசதிக்காக. அதன் அடிப்படை அமைப்பே திறமையான பணியாளர்களை, ஊழியர்களை selective - elective ஆக பொறுப்புக்கு கொண்டு வருவது. காங்கிரஸ் தேர்தலில் ல்லியது சீர்த்திருத்தம். தாராளம் என்பதோ திறந்த என்பதோ (இதுவல்ல இப்போதைய பொருளாதரமும்) என்றோ காங்கிரஸ் சொல்லவில்லை. (இப்போதைய பொருளாதாரம் தாராளம் உள்ள, மூடிய அமைப்பு சாய்ந்த பொருளாதாரம்) காங்கிரஸ் முதல் கட்டத்தில் (ராஜீவ் இருக்கும் பொது நடந்த தொகுதிகளில்) முற்றாக அடிபட்டு போய்விட்டது (உண்மையில் என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும், பொருளாதாரம் முக்கிய காரணம்) ராஜீவுக்கு (இறப்பின்) பின் நடந்ததில் கணிசமான வெற்றி பெற்றது. 1991 காங்கிரஸ் அரசாங்கம் சிறுபான்மை அரசாங்கம். (1991 மறக்க முடியாது சில காரணகளுக்காக) ஆம், காங்கிரஸ் பொருளியல் வல்லுனரை உள்ளுக்கு கொண்டு வந்தது, சுமுகமாக நடப்பதற்கு. அனால். அவருக்கு அதிகாரம் இல்லை தேர்தலில் சொன்னதை தலைகீழாக மாற்றுவதற்கு. அதுவும் சிறுபான்மை அரசாங்கத்தில். (அனால், இதில் சிறுபான்மை / பெரும்பான்மை அரசாங்கம் என்பது 2ம் பட்சம். பெரிய கொள்கை மற்றம் அல்லது மாற்றீடு என்பதே பிரச்சனை). அந்த நிலையில், அதிகாரா பீடத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதுவே பாவிக்கப்பட்டது. அது வெளியில் தெரியாது தான். மாறாக, எந்த அரசியல்வாதி/ மந்திரி கொள்கை வந்தாலும், அந்த அதிகார பீட இணக்கம் இல்லாமல் வரமுடியாது. திருத்தம், மாற்றம், மாற்றீடு செய்ப்படும். உதவியா வழங்கப்படும், யாப்பு அப்படியான நிலையில் வைத்து இருக்கிறது மந்திரிகளை. ஆனால், மேற்கு சொல்வது என்ன இந்திய அரசை பற்றி - complex democracy. ராஜதந்திரத்தில், அரச கலையில் complex என்பதன் அர்த்தம் தெரியாத கதை. இந்தியாவுக்கு (சீனாவுக்கும்) பொத்தாம் பொதுவான ஒப்புமை, அது தவறான ஒப்புமை என்று கூட புரியாமல்.
  40. மேஸ்டிரோ… பேஷ்…பேஷ்…காப்பின்னா மேஸ்டிரோ காப்பிதான்😂👇 மாட்டிகினாரு ஒத்தரு அவர காப்பத்தவேணும் கர்த்தரு…
  41. சகல விடயத்திலும் அணி பிரிந்து அடிபடத்தேவையில்லை😂. ஆர் செய்தாலும் தப்பு, தப்புத்தான். முன்பே ரஹ்மான் பல ஸ்பானிய இதர மொழி பாடல்களை அப்படியே உருவி பாவித்தமையை கண்டுள்ளோம். யூடியூப்பில் பல வீடியோக்களும் உள்ளன. ராஜாவும் இப்படி உருவி உள்ளார். எவ்வளவு பணம் இருக்கு, இசையை பாவிக்க முன்னம், உரிமையாளருக்கு கொஞ்சம் கொடுத்து, பெயரை படத்தின் முடிவில் ஓடும் கிரெட்டிசில் ஒரு மூலையில் போட்டால் ஒரு சர்ச்சையும் வராது. ஆனால் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் களவு எடுத்து மாட்டி கொள்வது😀. ராஜா மீதான விமர்சனம் 4 வகைபடும். அவர் இயல்பிலேயே சபை நாகரீகம் அற்றவர் பல படங்களின் பாடல் உரிமை அவருடையது அல்ல, தயாரிப்பாளரது பிச்சைகாரத்தனமாக மேடை நிகழ்ச்சியில், பணக்கஸ்டத்தில் இருக்கும் போது எஸ் பி பி பாடியதற்கு கூட காசு கேட்டார் மெட்டுக்களை திருடினார் இதில் 4 வது மட்டுமே இதுவரை ரஹ்மானுக்கு பொருந்தும்.
  42. நீங்கள் யாழ்ப்பாணத்தானை பனங்கொட்டை தமிழன் எண்டு நக்கலடிக்கலாம்.ஆனால் நாங்கள் எங்கட உப்பை ஆனையிறவு உப்பெண்டு சொல்லக்கூடாதாக்கும் 🧐
  43. நலம்.நலமறிய ஆவல். என்று எழுதுவார்கள். இது என்னடா தலைமுடி நிலையை ஆவல்? கடவுளே இன்னும் என்னென்ன கேட்கப் போறாங்களோ? எதுக்கும் கோசான் கொஞ்சம் உசாராக இருப்பது நல்லது.
  44. பம்பலுக்கு இல்லை. உண்மையாகத்தான். 13-21 வயது காலத்தை தவிர மிகுதி காலம் எல்லாம் இதை செய்தே வருகிறேன். தலைக்கு வைப்பதும் நல்லெண்ணைதான். ஜெல் வைத்தால் தலையிடிக்கும். கிரீம் வைதால் சொடுகு முப்போகம் விளையும்🤣
  45. இல்லையே வந்தது எல்லாரும் பெண்கள் ஆண்கள் மருத்துக்குகூட இல்லை தொடர்ந்து காணுங்கள் 😂 அருமையான கனவுகள்
  46. பட்டலந்த ஞாபகம் போல.
  47. உண்மை தான் அவர்கள் அப்படி தான் அவர்களை மாற்றுவது கொஞ்சம் கடினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.