Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38754
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7044
    Posts
  3. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    11531
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/27/25 in all areas

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 69வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவின் அதிரடியான 57 ஓட்டங்களுடனுன் ரியான் ரிக்கெல்ரன், ஹார்டிக் பாண்டியா, நமன் தீர் ஆகியோரின் கமியோ ஆட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியன்ஷ் ஆர்யாவின் புயல்வேகத்தில் எடுத்த 62 ஓட்டங்களுடனும், ஜொஷ் இங்கிலிஸின் அதிரடிவேகத்தில் எடுத்த 73 ஓட்டங்களுடனும், ஷ்ரேயஸ் ஐயரின் கமியோ ஆட்டத்துடனும் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. குழுநிலைப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 1-73 வரையான பதில்களின் அடிப்படையில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: தொடர்ந்து முதல் நிலையில் இருக்கும் @நந்தன் க்கு வாழ்துக்கள்
  3. நந்தனுக்குக் கோபம் வந்து பார்த்ததில்லை போல. போன கிழமை நடந்ததப் பார்த்தீங்கள் என்றால் தெரியும். அவரின் தெரிவுகள் எல்லாம் இம்முறை அந்தமாதிரி. என்ன மாயமோ மந்திரமோ 41 போட்டிகளைச் சரியாக தெரிவு செய்திருக்கிறார்.
  4. முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏 எந்த அடாவடியும் இல்லாமல் மக்களோடு மக்களாக தலமைப் பதவியில் அமர்ந்து நல்லாட்சி செய்பவரே எங்களுக்குத் தேவை . 😇 ஆதலால் தொடர்ந்தும் முதல்வர் பதவியை உங்கள் கையில் ஒப்படைக்க நாம் தயார்.😂
  5. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த குழுநிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர் மிச்சல் மார்ஷின் அதிரடியான 67 ஓட்டங்களுடனுன் ரிஷப் பந்தில் புயல்வேக சதத்துடனும் (ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்கள்) 3 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சவாலான ஓட்ட இலக்கை எட்டும் நோக்கில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆட்டத்தில் இறங்கினர். விராட் கோலியின் 54 ஓட்டங்களுடனும், மயங் அகர்வாலின் 41 ஓட்டங்களுடனும், ஜிதேஷ் ஷர்மாவின் மின்னல்வேகத்தில் 33 பந்துகளில் எடுத்த 85 ஓட்டங்களுடனும் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 230 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  6. செய்தியைக் கவனியுங்கள், திருமணத்தின் பின்னர்தான் மக்ரோன் ஏற்றம் கண்டுள்ளார். ஜனாதிபதி ஆகியுள்ளார். உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையானால் யோசித்து முடிவு எடுங்கள் 🤣
  7. கிழவி தடக்குப்பட்டு விழும்போது கை முகத்தில் பட்டிருக்கும்! விசுகர் மேடைக்கு அழைக்கப்படுகிறார்! பிரான்ஸ் நாட்டில் மேக்ரோனுக்கு வேறு பெண்களே கிடைக்கவில்லையா!!
  8. குழுநிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டி நாளை செவ்வாய் 27 மே GMT நேரப்படி பிற்பகல் 02:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதன் பின்னர் குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் அடுத்த கட்ட Play-Off போட்டிகளில் விளையாடவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 70) செவ்வாய் 27 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB ஆறு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி கந்தப்பு அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குழுநிலைகளில் முதலாவதாக வருமா?
  9. தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. அதே போன்று தான் இந்த புகைப்படத்திற்கும் பெரிய வரலாறு உண்டு. இந்த புகைப்படமானது 1987 ஜனவரி 6 ஆம் தியதி தொண்டமானாறு கெருடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் ஒன் எனும் முகாமில் 1987 ஜனவரி அன்று இரவு எடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேசியத் தலைவர் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், கடைசியாக இந்தியாவில் இருந்து 1987 ஜனவரி 5ஆம் தியதி அன்று தான் புறப்பட்டு மாதகல் வழியாக யாழ்ப்பாணம் வந்தது குறிப்பிடத்தக்கது. தாயகம் திரும்பிய அன்றைய மறு தினமே இந்த முகாமிற்கு தலைவர் வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தளபதி கிட்டு தலைமையில் யாழ்குடா நாடு அன்று ஓரளவு கட்டுப்பாடு ஆக இருந்தது. இந்த முகமானது சிங்கள ராணுவ நிலைகளின் மிக அருகில் இருக்கும் ஒரு அபாயகரமான பகுதியில் இருந்த காவல் முன்னரங்கு நிலை முக்கிய முகாம்களில் ஒன்றாகும். தேசியத் தலைவர் அவர்கள் இந்த முகாமிற்கு வருகை தந்து, அனைவரிடமும் கதைத்து, கலந்துரையாடிக் கொண்டிருந்த பொன்னான தருணங்கள் ஆகும். சில மணி நேரங்களின் பின்பு எடுக்கப்பட்டது தான் இந்த புகைப்படம். இந்த புகைப்படத்தில் பாதி உருவத்தில் முன்னர் நின்று கொண்டிருப்பது வீரச்சாவடைந்த பூலோகம் ஆவார். அடுத்ததாக கைகட்டி கொண்டு நிற்பவர் வீரச்சாவடைந்த கேப்டன் அலன் ஆவார். அவரின் அருகில் நிற்பது வீரச்சாவடைந்த கேப்டன் மோரிஸ் ஆவார். பின்புறம் இருந்து எட்டி பார்த்துக்கொண்டு இருப்பவர் முதல் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் ஆவார். அதேபோன்று வீரச் சாவடைந்த கேப்டன் வினோத் அவர்கள், வீரச் சாவடைந்த கேப்டன் விடுதலை அவர்களும் இப் புகைப்படத்தில் உள்ளனர். தேசிய தலைவரின் அருகில் காற்சட்டையுடன் நிற்பது வீரச்சாவடைந்த கிருபா அவர்கள். கிருபாவின் பின்னால் நிற்பது வீரசாவடைந்த மேஜர் கணேஷ் அவர்கள். கிருபாவின் அருகில் இருப்பது வீரச்சாவடைந்த சுந்தர் அவர்கள். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் கேப்டன் அலன் அவர்களும், கிருபா அவர்களும் 38 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளில் தான் வடமராட்சி ஆபரேஷன் லிபெரேஷனில் கலந்து கொண்டு இதே அன்றைய நாள் அதிகாலையில் வீரச்சாவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தில் இருக்கும் ஓரிருவர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் வீரச்சாவடைந்த மாவீரர்கள். இந்த புகைப்படம் என்பது நமது தாயக வீர வரலாற்றின் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமான புகைப்படம் ஆகும். இவர்களின் வீரவரலாற்றின் வழியில் நமது மண்ணின் விடுதலைக்கான பயணம் தொடரும்
  10. இங்கே எல்லோரும் சொல்வதில் கொஞ்சம் நியாயம் உள்ளது என்றே நினைக்கின்றேன் யார் எதை உண்பது என்பதை வேறொருவர் தீர்மானிக்கக் கூடாது இன்னொருவர் உணர்வினை மற்றொருவர் மதிக்க வேண்டும், காயப்படுத்துவது தவறு. இது இரு பக்கமும் சரியான விகிதத்தில் நடைபெறும் பொழுது பிரச்சனைகள் வலுப்பது குறையும் வலது மற்றும் இடது சாரிகள் விசித்திரமானவர்கள், அமெரிக்காவில் மாட்டு இறைச்சியை முறையே ஆதரித்தும் எதிர்த்தும் போராடும் அவர்கள் இலங்கை இந்தியாவில் அதை மாற்றிச் செய்கிறார்கள்.உணவை அரசியல் ஆக்குவதால் அவர்கள் அதிகாரம் அடைக்கிறார்கள் கனவு காணும் போழுது மிருகம் துரத்துவது போலோ அல்லது கிழே விழுவது போன்றோ வரும் காட்சிகள் எல்லாம் பல ஆயிரம் வருடம் முன் எம் முன்னோர்கள் வாழ்ந்த, பட்ட, வாழ்வின் நினைவுகள் என்று சொல்வார்கள், அது போல் நாமும் ஆதி காலத்தில் உண்ட இறைச்சி வத்தலை விட்டுவிட்டு விடாப் பிடியாக சைவ உணவோடு மட்டும் வாழ்ந்து விட்டு போக முடியாது, நான் 20 வயது வரைக்கும் மச்சம் சாப்பிட வில்லை, இன்று மச்சம் இல்லாமல் உணவு இறங்குவதும் இல்லை. நீங்கள் மாறா விட்டாலும் உங்கள் பிள்ளைகள் மாறி விடும். ஆகவே விடாப் பிடியாக ஒரே பிடியில் நிற்பது தோல்வியையும் விரக்தி நிலையையும் உருவாக்கும். ஒரு மனிதன் தான் பிறந்து வளர்ந்த சமூகம், சாதி, மனநிலை, உண்ட உணவு, அவனுக்குள் காலா காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடந்து உடனடியாகவெல்லாம் வந்து விட முடியாது. அதற்கு காலம் எடுக்கும். சில நேரம் பரம்பரைகள் தாண்டித் தான் தாம் இதுவரை நம்பியதில் கோளாறு உண்டு என்று தெரிய வரும். சமூகத்தை திருத்தி எடுக்கின்றேன் என்று புறப்படும் புரட்சியாளர்களுக்கு இந்தப் புரிதல் முக்கியம். உடனடிப் புரட்சி வன்முறையில் முடியும். அரசியலில் மதம் கலக்கக் கூடாது. வேலன் சுவாமிக்கு இது தேவை இல்லாத வேலை. அவரே பார்க்க காட்டுக்கு வேட்டை நாயோடு உடும்பு பிடிக்கப் போகும் ஆள் போல் உள்ளார். அவரின் உடம்புக்கும் முக லட்ஷணத்துக்கும் அவர் எடுத்த அரசியல் தேவை இல்லாத ஆணி. சரி இது போன்ற பிரச்சனைகளுக்கு எது தான் தீர்வு? இது போன்ற பிரச்சனைகள் இடைக்கிட நடப்பதே தீர்வு.
  11. நீங்கள் அடிக்கடி தலிபான்ஸ் எனும் சொல்லை பாவிப்பதால் உங்கள் உருட்டல் பிரட்டல்களை வறட்டல்களை வத்திக்கான் நோக்கியும் திசை திருப்ப வேண்டியுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கூட்டி கழித்து பார்த்தால் பெரிய தலிபான்கள் வத்திக்கானில் தான் இருக்கின்றார்கள்.
  12. அப்பிடியாங்க. அப்ப சரி.😁
  13. முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏 என்ன வியப்பு!நானும்நந்தனும் இறுதியாக வரும் அணியைும் ஒரேமாதிரி DC கணித்திருக்கிறோம்.
  14. அதச் சொல்ல வேற வேணுமா. இக்களத்தில் எத்தினை பேரின் மனது புண்பட்டிருக்கும். கடைசி என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்.
  15. வசி... என்ன பின்னால வந்து நிக்கிறியல். நல்ல வேளை, இன்றோடு, போட்டிகள் முடிஞ்சுது. இனி இடக்கு முடக்கு கேள்விகள்தான் பதில் சொல்ல வேணும்.
  16. டிரிலியனில் எழுதியமையால் குற்று போட மறந்து விட்டேன். 22.600 என்று வந்திருக்க வேண்டும். https://misterprepa.net/pib-classement-pays-monde/ இந்த இணையத் தளத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான சீனாவின் உற்பத்தி 21.643 டிரிலியன் என்று குறிப்பிட்டுள்ளனர். அதன்படி 4.5 வீத நடப்பாண்டின் வருமானம் 22.600 ற்கு அதிகமக இருக்கும்.
  17. பக்கத்தில் நின்றபெண்ணுக்கு கிஸ் அடிச்சிருப்பார் போல ...அது தந்த கோபமாக்கும் . இருந்தாலும் மனுஷன் சமாளிக்கிறார் .😃
  18. இறுதிக் காலங்களில் புலிகளால் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இந்த விடயங்கள் தொடர்பாக நீங்கள் எவ்வாறு மறுதலித்து அது ஒரு கீழ்த்தரமான சிந்தனை என்று குறிப்பிடுகின்றீர்களோ, அதே போன்று தான் சிங்களவர்களும் தம் ரணவிருவாக்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தெரிவிப்பவர்களை, விமர்சிப்பவர்களை, அவர்கள் ரணவிருவாவாக ஏற்றுக் கொள்ளாதவர்களையிட்டும் குறிப்பிடுகின்றார்கள். இங்கு யார் அதிகம் குற்றச்சாட்டுகளுக்கு உரியவர், யார் குறைந்த குற்றச்சாட்டுகளுக்கு உரியவர் என்ற கணக்கீடுகளுக்கு அப்பால், இரு தரப்புமே (சிங்களவர் / தமிழர்) என்றுமே தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவிதமான பொறுப்புக் கூறல்களுக்கு விரும்புவதில்லை. விருப்பமோ, விருப்பம் இல்லையோ, இலங்கை நாட்டில் இவ் இரு இனங்களும் இணைந்தே தான் வாழ வேண்டிய சூழ்நிலையில் இரு தரப்புமே தாம் எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் உரியவர்கள் இல்லை என்று மறுத்துக் கொண்டே இருக்கும் வரைக்கும் ஒரு போதும் அங்கு அமைதி ஏற்படப் போவதும் இல்லை, முன்னேற்றம் வரப் போவதும் இல்லை.
  19. நேற்று சுமந்திரன் இது சம்பந்தமாக சட்ட ஆலோசனை மற்றும் பதிவுகளை செய்திருந்தார். இது பெரும்பாலும் அரசுக்கே உதவும் என்ற கருத்து நிலவுகிறது ( குறைந்தளவு மக்கள் மட்டுமே உரிமை கோரும் போது)
  20. இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் டூக் பந்து பாவிக்கின்றது இது குக்கபாரா பிங்க் பந்தினை விட அதிக விசம் கொண்டது, இந்தியணியிற்கு பந்தும் ஆடுகளமும் உயிர்ப்புடன் இருந்தால் தலைவலியாக இருக்கும் இந்த மாதிரியான சூழ்நிலையில் ராகுல் போன்ற ஆட்டக்காரர்கள் சிறப்பான தேர்வு சாய் சுதர்சனும் நல்ல தெரிவாக இருக்கும் என கருதுகிறேன், நமது கில் கூட இந்த சூழலுக்கு மிகவும் சிரமப்படுவார் (பிச்சை வேண்டாம் நாயை பிடி). ஏற்கனவே பாகிஸ்தானுடனான போரில் ஏற்பட்ட தோல்விக்கு பாவம் எனது இந்திய நண்பர்கள் கடும் ஆற்றாமையில் இல்லாத பொல்லாதது எல்லாம் சொல்லி பைத்தியகாரர் போல் அலைகிறார்கள், இந்த தோல்வியினை (விளையாட்டில் கூட தோற்க விரும்பாத) எப்படி எதிர்கொள்ளப்போகிறார்களோ? கடவுள்தான் ஏதாவது அதிசயம் நிகழ்த்தி இந்தியணி வெல்ல வைத்து என்னை காப்பாற்ற வேண்டும்.☹️
  21. ஆரம்பத்தில் இருந்தே இதனை சாத்தியமான வழிகளில் எதிர்த்து வந்த தமிழரசுக் கட்சிக்கும் சுமந்திரனுக்கும் பாராட்டுகள். இந்த வர்த்தமானியை பிரசுரிக்கும் வரைக்கும் அரசுக்கு முடிந்தளவு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். விமல் வீரவன்சவுக்கு இன்னொரு விடயம் கிடைத்து விட்டது இனவாதத்தை கக்குவதற்கு.
  22. சீனாவின் கடந்த ஆண்டிற்குரிய மொத்த தேசிய உற்பத்தி 18.2 (2024)டிரில்லியன் கொண்டுள்ளது. 17.79 டிரில்லியன் 2023 ஆண்டிற்கான மொத்த தேசிய உற்பத்தி உள்ளது எனகருதுகிறேன், சீனாவின் இந்த ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி விகிதம் 5% ஆக வரலாம் என கருதப்படுகிறது. அவ்வாறாயின் மொத்த தேசிய உற்பத்தி 19.11 டிரில்லியனாக வர வாய்ப்புள்ளது. 2023 சீனாவின் தனிநபர் வருமானம் 12.614 அமெரிக்க டொலராகவும் இந்தியாவின் தனிநபர் வருமானம் (GDP Capita) 2480 அமெரிக்க டொலராக உள்ளது.
  23. "கூகிள் மேப்"... இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. 😂
  24. கோயில் ஆயிரம் கோடியில் கட்டுவதாக. அறிந்தேன். அம்மன் கோயில் இது தான் மிகப்பெரிய கோவில் இந்த தகவல்கள் பிழையா ??? ஆம் உண்மை தான் எல்லோரும் வேலை வெட்டி இல்லாமல் இருந்து சாப்பிட பார்க்கிறார்கள் 🤣 இதை விட அந்த வேலன். பறுவாயில்லை
  25. முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். முதலமைச்சர் லொட்டோ எடுத்துப் பார்க்கலாமே.
  26. நாங்கள் எல்லா விடயங்களையும் சீரியஸ்சாக கதைக்க முடியாது. மத விடயங்களில் ஆதாரம் என்று பார்த்தால் எதுவுமே மெய்யானது இல்லை.வாதம் விதண்டாவாதம் செய்யலாமே தவிர நிறுவப்போவது யாருமில்லை. கலிகை கந்தனுக்கு ஒரு நக்கல் கதை இருக்கும். கதிர்காம கந்தனுக்கு இன்னொரு நக்கல் கதை இருக்கும். செல்வசந்நிதியானுக்கு இன்னொரு பட்டப்பெயர் இருக்கும். பணக்கார கந்தன் நல்லூரானுக்கு இன்னொரு நக்கல் இருக்கும். மத விடயத்தில் அவரவர் நம்பிக்கையை தவிர வேறெதும் இல்லை.மத நூல்களும் மத வரலாறுகளும் பொய்யானவை என்பது என் கருத்து.மற்றும் படி அந்த இயற்கையை நோக்கி அரோகரா சொல்வதில் எந்த தவறுமில்லை. இயற்கை வலிமையானது.
  27. நீங்க வேற, இதை அறிந்ததில் இருந்து எனக்கு கந்தையா அண்ணை மேல் உள்ள மதிப்பு பலமடங்கு எகிறி உள்ளது. மேளகாரருக்கே இந்த உபசரிப்பு எண்டால் நாங்கள் விருந்தினராக போனால் தடல்புடல் பண்ணி விடுவார் என நினைக்கவே வாயூறுது🤣. உண்மையிலேயே கிடுக்கு பிடி கேள்வி. இரெண்டு பேரும் எங்களுக்கு விருந்து வையுங்கோ, சாப்பிட்டு பார்த்து ஆர் பெரிய கிடா வெட்டி எண்டு நாங்கள் சொல்லுறம்🤣
  28. 21பேருக்கு முட்டை கிடைக‌லாம் பும்ரா ஏதாவ‌து மாஜிக் காட்டினால் த‌ப்பிக்க‌லாம் இல்லையேன் முட்டை தான்..............................
  29. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் பேணுவதில் இனப்படுகொலை சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் முதன்மையாக அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் 2009 களுக்கு பின்னர் மே மாதம் வடக்கு – கிழக்கு தாயக நிலப்பரப்பில் மாத்திரமன்றி, ஈழத் தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழினப் படுகொலையை மையப்படுத்திய நிகழ்வுகளும், நினைவேந்தல்களும், நினைவு உரைகளும் நிலையான தன்மையை பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு 16 வது ஆண்டு தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக அண்மைய ஆண்டுகளில் இறுதி யுத்தத்தின் துயரை நினைவூட்டும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு’ தமிழினப் படுகொலை நினைவேந்தலின் முக்கிய நிகழ்வாக நிலைபெற்று விட்டது. இவ்வாண்டு கனடாவில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத் தூபி அந்நாட்டு அரச அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டுள்ளமை ஈழத்தமிழர்களிடையே புத்தெழுச்சியை கொடுத்துள்ளது. இப்பின்னணியிலேயே இக்கட்டுரை கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபியும், அதனை மையப்படுத்தி எழுந்துள்ள உரையாடல்களினதும் அரசியல் வகிபாகத்தை அடையாளங் காண்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல்கள் அரச இயந்திரத்தின் நெருக்கடி பின்னணிகளுக்குள்ளேயே, மக்களின் தன்னார்வ எழுச்சிகளால் வருடா வருடம் நினைவு கூரப்பட்டு வருகின்றது. எனினும் தாயகத்தில் நினைவேந்தல்கள் நிலையான வடிவத்தை பெற முடியவில்லை என்ற குறைபாடு தொடர்ச்சியான துயராகவே காணப்படுகின்றது. இறுதி யுத்தத்தை தழுவி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே-18 அன்று தமிழினப் படுகொலைக்கான பொது நினைவேந்தல் கடந்த ஒரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது. எனினும், முள்ளிவாய்க்காலின் நினைவு முற்றக்காணி தொடர்பிலும் இடையிடையே சில சச்சரவான வாதங்களும் அரச ஆளுகைக்கான முனைப்புகளும் இடம்பெற்று வருகின்றது. அவ்வாறே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் நிறுவப்பட்ட தமிழினப் படுகொலை நினைவுத் தூபியும் 2021 ஆம் ஆண்டு இராணுவ நெருக்கீட்டில் உடைக்கப்பட்டது. எனினும் மாணவர்கள், மக்களின் தன்னார்வ எழுச்சி எதிர்ப்பு போராட்டம் மற்றும் சர்வதேசத்தின் அழுத்தத்தினால் மீள் நிர்மாணிப்புக்கு இலங்கை அரசாங்கம் மறுக்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டது. எனினும் அந்நிர்மாணமும் திட்டமிடப்பட்ட முழுமையான வடிவத்தை பெறவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே தாயகத்தில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி வெறுமையாக காணப்படினும், தாயகத்துக்கு வெளியே ஈழத்தமிழர் மீதான இலங்கை சிங்கள-பௌத்த பேரினவாத கட்டமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் நினைவுத் தூபிகளாக பதிக்கப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு தாய்த் தமிழகத்தில் தமிழினப்படுகொலைக்கான நினைவாலயம் உருவாக்கப்பட்டது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நவம்பர்-08, 2013 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. மேற்கு நாடுகளில் இடம்பெறும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலஸ்தீனியர்களின் துயர் வரலாறு மேற்கில் விதைக்கப்பட்டதன் விளைவானதாகும். அத்தகைய சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான உத்தியை ஈழத்தமிழர்களும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கையாள வேண்டும். இந்த நினைவு முற்றத்தில் போரில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை 55 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்ட சுவரில் தனித்தனி கற்களால் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த நினைவு முற்றத்தில் மாவீரர் மண்டபம், முத்தமிழ் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தலைவர்கள் முதல் தமிழீழ விடுதலைப் போரின் போது தன் உயிரை ஈகையாக தந்த தமிழீழ விடுதலைப் புலிகள் படங்கள் போன்ற 300க்கும் மேற்பட்டோர் படங்கள் வைக்கப்பட்டது. தற்போது கனடாவின் பிராம்ப்டனில் உள்ள சிங்குகூசி பூங்காவில் கனேடியத் தமிழர்களின் தேசிய பேரவை, பிரம்டன் தமிழர் அமைப்பு மற்றும் பிரம்டன் தமிழ் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நகர மேயரின் ஈடுபாட்டுடன் தமிழ் இனப்படுகொலைக்கான நினைவுத் தூபி மே-10, 2025 அன்று திறக்கப்பட்டது. குறித்த நினைவுத் தூபிக்கான அடிக்கல் ஆகஸ்ட் 14, 2024 அன்று நாட்டப்பட்டது. அன்றிலிருந்து இராஜதந்திர உறவின் அடிப்படையிலும், நீதித்துறையினூடாகவும் இத்தூபி நிர்மாண நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. எவையுமே சாத்தியப்படவில்லை. இதற்கான உயர்ந்தபட்ச எதிர்வினையாக பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுண் நினைவுத்தூபி திறப்பு விழாவில், “இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்று கூறுபவர்களுக்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை. கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இது ஈழத்தமிழர்களுக்கு உயர்வான உற்சாகத்தை அளித்துள்ளது. ஈழத்தமிழர்களும் சமூக வலைத்தளங்களில் பிரம்டன் மேயரை நாயகனாய் கொண்டாடுகின்றார்கள். கனடாவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை இனவாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரை அழைத்து தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பான படங்களில் இலங்கையின் உடல்மொழி கடுமையானதாக வெளிப்பட்டுள்ளது. அதேவேளை, போர்க்கால ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவும் தமது போர் வெற்றி வாக்குகளை பேணும் வகையில் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். “தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவது கனேடிய அரசாங்கத்தின் அரசியல் உந்துதல் நடவடிக்கையாகத் தோன்றுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக பிரிவினையைத் தூண்டிவிட்டன.” என்றவாறு நாமல் ராஜக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். எனினும் கனடா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர அழுத்தங்களையோ அல்லது இலங்கை எதிர்க்கட்சிகளின் இனவாத பிரசாரங்களையோ பொருட்படுத்துவதாக அமையவில்லை. மாறாக தமது செயற்பாட்டின் நியாயப்பாட்டையும் இலங்கையின் இனவாத அரசியலின் முகத்தை தோலுரிப்பதாகவுமே பதிலளிக்கப்பட்டுள்ளது. பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுண் தனது எக்ஸ் தளத்தில் நாமல் ராஜபக்சவின் பதிவை பகிர்ந்து, “தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கு ராஜபக்சவின் எதிர்ப்பானது, இந்தக் குடும்பத்தின் கையால் இழந்த அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களை உணர்ந்து நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகும்” என்றவாறு பதிலளித்துள்ளார். தாயகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அதற்கே உரிய இயல்பான தேர்தல் அரசியல் நலன்களுக்குள் இயங்குவதாகவே அமைகின்றது. மாறாக விடுதலைக்கு போராடும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளுக்குரிய இயல்பை வெளிப்படுத்த தவறுகின்றார்கள். கனடாவில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி நிறுவப்பட்டதும், அது சார்ந்து எழும் உரையாடல்களும் ஈழத்தமிழர்களிடையே எழுச்சிமிகு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியை எதிர்கொண்டவர்களை உணர்ச்சிகள் வெகுவாக ஆட்கொண்டு விடுகின்றது. எனினும் இதனை வெறுமனவே உணர்ச்சிக்குட்பட்டதாக கடந்து விடமுடியாது. இது ஆழமான அரசியல் நடைமுறைக்கான உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. ஆதலாலேயே இலங்கை அரசாங்கம் 2024 இல் அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து அதனை நிறுத்துவதற்கு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. தற்போதும் தனது விசனத்தை கடுமையான உடல்மொழிகள் உள்ளடங்கலாக வெளிப்படுத்தியுள்ளது. இதனை நுணுக்கமாக விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. முதலாவது, கனடா அரசியல் தரப்பினரது செயற்பாடுகளிலிருந்தும் உரையாடல்களிலிருந்துமான படிப்பினையை ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் தாயக மக்களும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் வாக்குகள் மூலம் அரசியல் அடையாளத்தை பெற்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள், ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டதை இனப்படுகொலையாக குறிப்பிட முடியாதென்றவாறு கருத்துரைத்துள்ளனர். எனினும் கனடாவின் நகரமேயர் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி உருவாக்கியுள்ளதுடன், ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை மறுப்பவர்கள் கனடாவிற்கு வரமுடியாது என்ற எச்சரிக்கையையும் வழங்கியுள்ளார். இது புலம்பெயர் தமிழர்களின் வாக்குப்பலத்தாலேயே சாத்தியமாகியுள்ளது. தாயத்தில் மக்கள் இத்தகைய வாக்கு பலத்தை சரியாக பயன்படுத்த தவறுகின்றார்களோ என்ற சந்தேகங்களை உருவாக்குகின்றது. கடந்த பொதுத்தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுமந்திரனின் வட்டாரத்தில் நிறுத்தப்பட்ட தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். எனினும் தொடர்ச்சியாக சுமந்திரன் அடுத்த மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் கனவை விதைத்து வருகின்றார். இது மக்கள் சுமந்திரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தமது வாக்கு பலத்தால் சரியான போதனையை வழங்க தவறியுள்ளார்கள் என்பதையே அடையாளப்படுத்துகின்றது. இரண்டாவது, சர்வதேச தளத்தில் இலங்கை அரசாங்கங்களால் ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை ஏற்றுக்கொள்வதனை வெறுமனவே நிகழ்வாக கடந்திட முடியாது. நீண்டதொரு தந்திரோபாய நகர்வுக்கான தளமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கனடா பூகோள அரசியலில் பிரதான சக்தியாக அமைகின்றது. கனடா இலங்கை அரசாங்கங்கள் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை அங்கீகரித்துள்ளமையானது, ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் ஓர் மைல்கல்லாகும். கனடாவின் உள்ளூர் அதிகார மட்டம் முதல் கனடா மத்திய அரசு வரை இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளமையை உறுதி செய்துள்ளது. இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே இன்றைய தேவையாகும். குறிப்பாக கனடாவில் மே 12 – 18, தமிழர் இனப்படுகொலை கல்வி வாரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னரே ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை அங்கீகரிப்பதன் மூலம், நடந்து கொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையின் நீடித்த படிப்பினைகளைப் பற்றி சிந்திக்கவும், அதைப் பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். இதனை வினைத்திறனாக கையாள்வதனூடாக வாக்குப்பலத்தினூடாக கிடைக்கப்பெற்ற அரசியல் தளத்துடன் ஏனைய மக்களின் ஒத்துழைப்புகளையும் பெறக்கூடியதாக அமையும். தமிழ்ச் சமூகமும் இளைஞர்களும் ஏனைய மக்களோடு தமிழ் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்வதோடு, தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் தலைமுறைகளுக்கு இடையேயான அதிர்ச்சியை ஏனைய சமூகங்களோடு பகிருவது அவசியமானதாகும். மேற்கு நாடுகளில் இடம்பெறும் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் பலஸ்தீனியர்களின் துயர் வரலாறு மேற்கில் விதைக்கப்பட்டதன் விளைவானதாகும். அத்தகைய சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான உத்தியை ஈழத்தமிழர்களும் வாய்ப்புக்களை பயன்படுத்தி கையாள வேண்டும். மூன்றாவது, ஈழத்தமிழர்களின் அரசியலானது 2009 களுக்கு பின்னர் அடிப்படையில் இனப்படுகொலைக்கான நீதியைக் கோருவதனை மையப்படுத்தியே காணப்படுகின்றது. அதுவே ஈழத்தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான தந்திரோபாய செயற்பாடாகும். எனினும் தாயகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அதற்கே உரிய இயல்பான தேர்தல் அரசியல் நலன்களுக்குள் இயங்குவதாகவே அமைகின்றது. மாறாக விடுதலைக்கு போராடும் தேசிய இனத்தின் பிரதிநிதிகளுக்குரிய இயல்பை வெளிப்படுத்த தவறுகின்றார்கள். கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி, இனப்படுகொலை என்ற சொல்லாடலுடன் அரசொன்றின் ஆதரவுடன் நிறுவப்பட்ட முதலாவது நினைவுத் தூபி ஆகும். இதனை ஈழத்தமிழர்கள் கொண்டாடுவதற்கு சமாந்தரமாக ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றி இருக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தென்னிலங்கை அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் இனவாதிகள் என கூட்டாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இராஜதந்திர ரீதியான ஆட்சேபனைகளையும் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் தனியன்களாக தமது சமூக வலைத்தளங்களில் பிரம்டன் நகர் மேயர் பட்ரிக் பிரவுணை நாயகனாக கொண்டாடுகின்ற போதிலும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் சார்பாக கூட்டு நன்றியுணர்வை வெளிப்படுத்த தவறியுள்ளார்கள். உயர்ந்தபட்சம் தமிழ் பிரதிநிதிகளின் பிரசன்னம் அந்நிகழ்வில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு அறிக்கையினூடாகவேனும் கனேடிய அரசாங்கத்திற்கும் செயற்பாட்டாளர்களுக்கும் கூட்டு நன்றியினை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். எனினும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதனை செய்ய தவறியுள்ளார்கள். மாறாக உள்ளூ ராட்சி சபை தேர்தல் முடிவுகளின் பின்னரான ஆசன இழுபறிக்குள் ஓய்வின்றி உள்ளார்கள். எனவே கனடாவில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் கனடா அரசாங்கத்தின் ஆதரவும், ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை உந்திவிடும் ஓர் ஊக்கக்காரணியமாக அமைகின்றது. இதனைப் பற்றிக்கொண்டு சர்வதேச அளவில் ஏனைய சமூகங்களின் ஈடுபாட்டுடனும் ஒத்துழைப்புடனும் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை சர்வதேச போராட்டமாக மாற்றுவது ஈழத்தமிழர்களின் அரசியல் வியூகத்திலேயே தங்கியுள்ளது. புலம்பெயர் தளம் தமது வாக்குப்பலத்தினூடாக வெகுவாக அரசியல் மட்டத்தில் இனப்படுகொலைக்கான நீதிப்போராட்டத்தை ஒருங்கு சேர்த்துள்ளது. கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபி மற்றும் சமகாலத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் அதனையே உறுதி செய்கின்றது. எனினும் இம்முன்னேற்றம் அரசியல் மட்டத்தை கடந்து சமூக மட்டத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதிக் கோரிக்கையை ஈழத்தமிழர்களுக்கு சமாந்தரமாக ஏனைய சமூகங்களும் ஒன்றிணைந்து கோரும் சூழலை உருவாக்க வேண்டும். இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டங்கள் உணர்வெழுச்சிகளுக்குள் சுருங்காது, தந்திரோபாயமாக நகர்த்தப்படுகையிலேயே நிலையான தீர்வைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும். https://thinakkural.lk/article/318257
  30. இலங்கையில் நாளாந்தம் பலர் விபத்துகளில் கொல்லப்படுகின்றனர். அதில் அரைவாசிக்கும் மேல் சாரதி நித்திரையாகி விடுவதால் நிகழ்கின்றது. அண்மையில் இடம்பெற்ற இ.போ.ச வண்டியின் கோர விபத்துக்கும் சாரதி நித்திரையாகிப் போனதே காரணம் என கண்டறிந்துள்ளனர். அதிகாலையில் வாகனத்தை செலுத்த வேண்டி வரும் எனில், அதற்கு முன்னர் நல்ல ஓய்வை எடுத்து இருக்க வேண்டும். 7 மணித்தியாலங்களாவது நித்திரை கொண்டு இருக்க வேண்டும். நான் நீண்ட தூரத்துக்கு வாகனம் செலுத்த வேண்டி வரும் போது, இடையில் நித்திரை வருகின்ற மாதிரி இருந்தால் உடனே அருகில் இருக்கும் Parking Area விற்கு இடத்துக்கு சென்று 15 நிமிடங்களாவது Nap எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.
  31. கிழவி வயசுக்கு வந்தா என்ன வராவிட்டா என்ன 😁
  32. சும்மா கதையைப் புகட்டி சொல்லக்கூடாது நல்லூர்க் கோயில் இருந்த இடத்தின் அருகில் முசுலீம்கள் குடியேறியதால் அந்தக் கோயிலின் விருத்தியை தடை செய்வார்கள் என்ற நோக்கில் பேரம் பேசி அது நடைபெறாததால் பன்றி உள்ளே வந்து அவர்கள் வெளியே சென்றது தான் வரலாறு. ஆக நல்லூர்க் கந்தன் அங்கேயேதான் அப்போதும் இருந்தார் குடியேறிய முஸ்லீம்களால் கோயிலின் வளர்ச்சி தான் தடைபட்டது நீங்கள் கூறுவது போல முஸ்லீம்கள் இருந்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை . விருத்தி செய்யப்பட்டு உள்ளது
  33. லிவர்பூலின் வெற்றி அணிவகுப்பில் கார் மோதி விபத்து; 50 பேர் காயம்! இங்கிலாந்து நகரில் லிவர்பூல் கால்பந்து கழகத்தின் பிரீமியர் லீக் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட இந்த விபத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர். அவர்களில் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 53 வயதான கார் சாரதியான பிரித்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக நம்பப்படவில்லை என்று பொலிஸாரின் ஆரம்ப அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. விபத்தினை அடுத்து சம்பவ இடத்தில் குறைந்தது 20 பேர் சிகிச்சை பெற்றனர். மேலும் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் நான்கு பேர் குழந்தைகள்/சிறுவர்கள் என்றும் அம்பியூலன்ஸ் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெரியவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், தெருவில் வரிசையாக நின்றிருந்த ரசிகர் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்துவதை காண்பிக்கின்றது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களில் சிலரை முதலில் மோதிய பின்னர் கார் நின்றது. தொடர்ந்து மக்கள் வாகனத்தை நோக்கி விரைந்து வந்து, அதன் கண்ணாடிகளை உடைத்ததாகவும், சாரதி தொடர்ந்து காரை செலுத்தி பலர் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. கார் நின்றதும், ஆத்திரமடைந்த ரசிகர்கள் அதைச் சூழ்ந்துகொண்டு, அதன் ஜன்னல்களை உடைத்தனர், பின்னர், காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு சாரதியை அவர்கள் அடையவிடாமல் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் மிகவும் புகழ்பெற்ற ஆண்கள் கால்பந்து அணியான லிவர்பூல் மற்றும் ஊழியர்கள் பிரீமியர் லீக் கிண்ணத்துடன் நகர மையத்தில் திறந்த மேல் பேருந்தில் அணிவகுத்துச் சென்றபோது இலட்சக்கணக்கான ரசிகர்கள் தெருக்களில் வரிசையாக நின்றபோது இந்த சம்பவம் நடந்தது. https://athavannews.com/2025/1433345

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.