Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38754
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19109
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87988
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/01/25 in all areas

  1. இன்றைய மூன்றாவது Play-off Qualifier 2 போட்டி மழை காரணமாகத் தாமதமாக ஆரம்பித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஜொனி பெயிர்ஸ்ரோ, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், நமன் தீர் ஆகியோரின் அதிரடியான ஆட்டங்களினால் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை விரைவில் இழந்தாலும், ஜொஷ் இங்கிலிஸினதும், நெஹால் வதேராவினதும் அதிரடியான ஆட்டங்களுடனும், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என நாலா பக்கமும் பந்தை சிதறடித்து ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்கள் எடுத்த அணித்தலைவர் ஷ்ரேயஸ் ஐயரின் மரண அடியுடனும் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் வெல்லும் என ஒருவரும் கணிக்காததாலும், மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியதாலும், போட்டியில் இல்லாத ஏனைய அணிகளை வெல்லும் கணித்ததாலும் யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! பஞ்சாப் கிங்ஸ் அணியின் புரவலர் பிரீத்தி ஸிந்தா எல்லோருக்கும் புஷ்டியான முட்டைகளைப் பரிமாறியுள்ளார்! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை):
  2. இந்த விமானங்கள் உண்மையில் இழக்கப்பட்டிருப்பின் ரஸ்யாவின் குரூஸ் ஏவுகணை ஏவும் வல்லமை கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்கிறனர். நான் முன்பே பலதடவை சொல்லி இருக்கிறேன் உக்ரேனின் இராணுவ நகர்வுகள் பல புலிகளை ஒத்ததாக இருப்பதாக எனக்கு படுகிறது என. இது அப்படியே கட்டுநாயக்க தாக்குதலை நினைவுக்கு கொண்டு வந்தது. BBC NewsVideo appears to show Ukraine drone attack in RussiaFootage shows attack drones homing in on their targets as they sit on the tarmac.
  3. தாய்லாந்து பெண் உலக அழகியாக தேர்வு - இந்தியாவின் நந்தினி எந்த இடத்தை பிடித்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலக அழகியாக தேர்வான ஒபல் சுசாதா சௌசி. 1 ஜூன் 2025, 02:38 GMT இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒபல் சுசாதா சௌசி பட்டம் வென்றுள்ளார். இதன் இறுதிச் சுற்று ஹைதராபாத்தில் மே 31, சனிக்கிழமை இரவு நடைபெற்றது. மே 7-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் பல்வேறு நாட்டில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். 1951-ஆம் ஆண்டு முதல் 'ப்யூட்டி வித் பர்பஸ்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் உலக அழகி போட்டி நடத்தப்பட்டது. பட மூலாதாரம்,OPAL SUCHATA/ FB படக்குறிப்பு,1951-ஆம் ஆண்டு முதல் 'ப்யூட்டி வித் பர்பஸ்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தூதராக விருப்பம் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக படித்து வரும் ஒபல் சுசாதா சௌசி, ஒரு நாள் தூதுவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தன்னுடைய எதிர்காலத் திட்டம் பற்றி பேசியதாக மிஸ் வேர்ல்ட் இணைய தளம் தெரிவிக்கிறது. மனநல ஆரோக்கியம் மற்றும் மானுடவியல் போன்ற துறைகளிலும் ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர். பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அவர். ஒபல் அவருடைய வீட்டில் 16 பூனைகள் மற்றும் 5 நாய்களை வளர்த்து வருகிறார். பட மூலாதாரம்,OPAL SUCHATA/ FB படக்குறிப்பு,மனநல ஆரோக்கியம் மற்றும் மானுடவியல் போன்ற துறைகளிலும் ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர். இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவர்கள் யார்? தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா, எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹஸெட் டெரிஜி, போலந்தைச் சேர்ந்த மஜா லாஜா, மார்டினிகைச் சேர்ந்த ஆரேலியா ஜோச்சேம் என இந்த நான்கு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஒபல் உலக அழகிப் பட்டத்தை வென்றார். எத்தியோப்பியாவின் டெரிஜி இரண்டாம் இடத்தையும், லாஜா மூன்றாம் இடத்தையும் ஜோச்சேம் நான்காம் இடத்தையும் பிடித்தனர். பட மூலாதாரம்,MISS WORLD/FB படக்குறிப்பு,ஒபல் உலக அழகிப் பட்டத்தை வென்றார். எத்தியோப்பியாவின் டெரிஜி இரண்டாம் இடத்தையும், லாஜா மூன்றாம் இடத்தையும் ஜோச்சேம் நான்காம் இடத்தையும் பிடித்தனர். 108 நாடுகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்கள் 108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். முதல்சுற்று போட்டிகளுக்குப் பிறகு, அமெரிக்காஸ் கரீபியன், ஆப்ரிக்கா, ஐரோப்பியா, ஆசியா-ஓசினியா என்று ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் 10 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள் மூன்று கட்டங்களாக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பங்கேற்றனர். காலிறுதிப் போட்டியின் முதல் சுற்று கடந்த ஞாயிறு அன்று நிறைவுற்றது. ஒவ்வொரு கண்டத்திலும் இருந்தும் தலா 10 நபர்கள் என்று தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 40 போட்டியாளர்களில், காலிறுதிக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்திலும் முதல் 5 இடங்களைப் பிடித்த நபர்கள் இரண்டாம் சுற்றுக்கு அனுப்பப்பட்டனர். பட மூலாதாரம்,IPR TELANGANA படக்குறிப்பு,108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட ஐந்து நபர்களில் முதல் இடம் பிடித்த இரண்டு நபர்கள் அடுத்த கட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. அதன்படி, ஏற்கனவே ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் உலக அழகிப் பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா. பட மூலாதாரம்,IPR TELANGANA படக்குறிப்பு,சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச் சுற்றில் உலக அழகிப் பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா. கேள்வி எழுப்பிய நடுவர்கள் இறுதிச் சுற்றில் நடுவர்கள், போட்டியாளர்களிடம் கேள்விகளைக் கேட்டனர். நம்ரதா ஶ்ரீரோத்கர் போலந்தின் லாஜாவிடம் கேள்வி எழுப்பினர். தகுபதி ராணா எத்தியோப்பிய போட்டியாளரிடமும், முன்னாள் உலக அழகிப் பட்டம் பெற்ற இந்தியாவின் மானுஷி சில்லார் மார்டினிக் போட்டியாளரிடமும், சோனு சூட் தாய்லாந்து போட்டியாளரிடம் கேள்விகள் கேட்டனர். இந்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையிலேயே வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா சார்பில் பங்கேற்ற போட்டியாளர் நந்தினி குப்தா, முதல் 20 இடங்களில் இடம் பிடித்திருந்தார். ஆனால் இறுதிச்சுற்றுக்கு அவரால் முன்னேற முடியவில்லை. பட மூலாதாரம்,IPR TELANGANA படக்குறிப்பு,இறுதிச் சுற்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போட்டியாளர்கள் அளித்த பதில்களின் அடிப்படையிலேயே வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8d10v20p43o
  4. ஆசியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே அண்டை நாடுகளில் தீவிர, பயங்கர, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் எப்பொதும் முதல் 5க்குள் வரும். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்கள், பின்னர் தாலிபான். இந்தியாவில் காலிஸ்தானிகள், கஸ்மீரிகள். இந்தியா - இலங்கை, வங்கதேசம், பாலூச்சிஸ்தான்.
  5. புலம்பெயர் நாடுகளில் இறுதிக்கட்ட போருக்கென குடும்பத்திற்கு 2000 என சேகரித்த நிதிகள் எங்கே போனது? அந்த பணம் சேகரித்த பின்னர் பெரிய எதிர்ப்பு சண்டைகள் எதுவுமே நடக்கவில்லை.
  6. அப்படி எல்லாம் கிடையாது! ரிவைண்ட் என்று ஒரு பட்டன் இப்பவும் வேலை செய்யுது! லைவ்விலும் ரிவைண்ட் பண்ணலாம்😀 ஆசை, தோசை, அப்பளம், வடை!
  7. மாங்கொட்டை (அடிமட்ட தொண்டர்கள்) ஐயாவோடுதான் என நினைக்கிறேன். அதைவைத்து கண்டு பிடிக்கலாம்.
  8. பிரித்தியின் கட்டிப்பிடிப்பை கவனித்தியளோ
  9. ஸ்ரேயாஸ். என்ன ஒரு அழகான ஆட்டம். வெளியால போற பந்தை, பின்னங்காலில் வந்து, உள்பக்கமா தூக்கி ஆறடிக்கிறான். எப்பிடிடா முடியுது. வெளியால போற பந்த வெளிப்புறமாத்தானே அடிக்கணும். இவன் என்னென்டா ... வீர சூரன்டா. நேர காலுக்க போட்டா, நின்ட நிலையில ஆறடிக்கிறான். எங்கதான்டா பந்தப் போடுறது. வீரன் சூரன் இவன்தான்.
  10. தடை செய்யப்பட்டோர் பெயர் பட்டியலில் குமாரசாமி @குமாரசாமி குமாரசாமி @குமாரசாமி என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சேர்க்கை செய்து உள்ளார்கள். இவர் @குமாரசாமி யோ ஊருக்கு போய் தோட்டம் செய்யப்போறன், கடை வைக்கப்போறன், ஓய்வு எடுக்கப்போறன் என்று எழுதிக்கொண்டு திரிகிறார். அவ்வப்போது இங்கு லைக்ஸ் போட்டது, பதில் கருத்து கூறியது தவிர இவருடன் எனக்கு எதுவித தொடர்பும் இல்லை என கூறிக்கொள்கின்றேன்.
  11. நல்ல ஆலோசனைகள். ஆனால் ஐயாவின். மாங்காய். ஏது??? சின்னைய்யாவின் மாங்காய். ஏது என்று எப்படி மக்கள் பிரித்து அறிவது 🤣🤣🤣🤣 இரண்டுமே ஒரே மாதிரி இருக்கும் இல்லையா???
  12. இதை தலைவரே சொல்லி உள்ளார் - வளமில்லாத நலிந்த இனமொன்றின் மிகபெறுமதியான, ஆயுங்கள் கரும்புலிகள் என. இன்றுவரை மேற்கில் நான் பேசும் பலருக்கு இதை விளங்கவைக்க என்னால் முடியவில்லை. அவர்கள் தற்கொலை என்ற வட்டத்தை தாண்டி சிந்திக்க தயாரில்லை. ஆனால் சாவு நிச்சயம் என தெரிந்தும் முன்னேறிய தாக்கிய தம் வீரர்களை மெச்சுவார்கள். இரெண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது உறைப்பதே இல்லை.
  13. கட்டுநாயக்க மற்றும் அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை ஆகியவையும் நினைவிற்கு வந்துபோகின்றன. ஒரே வித்தியாசம் இது ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது. எமது தாக்குதல்கள் போராளிகள் மூலம் நடத்தப்பட்டவை. Video appears to show Ukraine drone attack in Russia
  14. பொதுவாக எல்லோருக்கும், விடயம் இருந்தால் சொல்லவும் அதிகாரிகள், அரசியல் தலைமையை உரிய காரணதுடன் மேவலாம் என்பது யதார்த்தம் இந்திய அரசில், யாப்பின் படி. V.P. மேனன் (என்ற மிகவும் மூத்த அதிகாரி) அவர் வாயால் (கொள்கை ஆக்கத்தில்) சொன்னதே இருக்கிறது. ஆனால், அது இனிமேலும் தேவை இல்லை. எந்தவித எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை. ஆனால், சொல்லபடுவது யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதி. இந்த விடயத்தில், இந்திய அரசில் அதிகாரிகள் அரசியல் தலைமையை மேவ முடியாது என்று சொன்ன எவருக்கும், இந்த விடயம், அதன் வரலாறு போன்றவற்றை பற்றி எந்த அறிவும் இல்லை என்பது வெளிப்படை. இந்திய சனநாயகத்தின் தனித்துவம் பற்றியும் தெரியாது, அறியாது மேற்கில் இருந்து கனவு காண்பது. அதை பற்றி சுருக்கமாக சொல்லியும், அவர்களின் பொத்தாம் போது கற்பனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது. சிலர் இங்கு எதிர்பார்பது conformance ஐ, ஆனால் விடயம் அறியாமல். அதற்கு நான் இணங்கப்போவதில்லை என்பதில் தெளிவு. இங்கு எல்லோருமே ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்திய அரசில் அதிகாரிகள் உரிய காரணத்துடன் அரசியல் தலைமையை மேவலாம் என்பது தான் யதார்த்தம்.
  15. யேர்மனியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு. Posted on June 1, 2025 by சமர்வீரன் 70 0 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமாகி நடைபெற்று. தமிழீழ விடுதலைக்காக இறுதி மூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையில், வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைவரலாற்றில் இவர்களது வீரவரலாறும் பதியம்பெற்று, எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இம்மாவீரர்களின் இலட்சியத்தை நாமும் சுமந்து தமிழீழம் விடுதலையடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியுடன் தாயகம் நோக்கி பயணிப்போம். உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் பெயர் விபரம். 01. வீரவேங்கை ஆனந்தி – அருண்மொழி 02 – வீரவேங்கை கோபி 03 – வீரவேங்கை முத்தப்பன் 04 – வீரவேங்கை ஆண்டாள் 05 – வீரவேங்கை அகழிசை 06 – வீரவேங்கை பேரின்பன் 07 – வீரவேங்கை பிரதீப் 08 -வீரவேங்கை சீத்தா 09- வீரவேங்கை மதுவிழி 10 – வீரவேங்கை கோமதி – நிதர்சனா 11 – வீரவேங்கை அருளினி 12 – வீரவேங்கை இளையவன் 13 – வீரவேங்கை புனிதா 14 – காவல்துறை மாவீரர் அம்பிகைபாலன் 15 – வீரவேங்கை சுபேசினி 16 – வீரவேங்கை காதாம்பரி 17 – வீரவேங்கை காந்தன் 18 – வீரவேங்கை சந்திரன் 19 – வீரவேங்கை இரும்பொறை – https://www.kuriyeedu.com/?p=676900
  16. விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலான சிங்களவர் தவிர பட்டியிலில் உள்ளவர்கள் தமிழர்களும் முஸ்லிம்களுமே. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/5/2438-47_T.pdf
  17. நெறிமுறயை மேற்கு எப்போதாவது கடைபிடித்ததா அதுக்கு வரும் போது? இன்று வட கொரியாவை மேற்கு தாக்காத காரணம் என்ன? அனல், ஈரானை தாக்குவோம் என்று நிற்பதும். இந்தியாவுக்கு ஆயுதம் வழங்குவது, வழங்கும் போக்கை காட்டுவது மேற்கு, குறிப்பாக us. ஏனெனில், மிகவும் உயர் மட்டத்தில் சீனாவுக்கு எதிரான சமப்படுத்தும் அரசாக நோக்குவது. அத்துடன் , குறிப்பாக, இந்தியா இப்போதும் அதன் மதி காலனித்துவத்தில் இருந்து விடுபட முடியாமையும். அதாவது காலனித்துவதில் இருந்த, உருவாக்கிய மட்டங்களை (hierarchy) ஐ விரும்புவதும்.
  18. இங்கே கூவித்திரியுற ஒரு கோழியின் பெயர் கூட இருக்காது.
  19. Singam News பென்ஸ் கார் கம்பெனி முதலாளி பென்ஸ் அவர்கள், தான் முதன் முதலில் 1888.ம் ஆண்டு உருவாக்கிய, இந்த கார் அமைப்புள்ள வாகனத்தைத் தயாரித்து, அதை அவரது மனைவி பெர்த்தா பென்ஸ் அவர்களை 106 கிலோ மீட்டர் தூரம் ஓட்ட செய்து, உலகிலேயே முதல் கார் டிரைவர் என்ற பெயரை பெறச் செய்தார், அதற்கு முன் கார் என்ற வாகனமே உலகில் கிடையாது, பென்ஸ் உருவாக்கிய முதல் காரை இவர் முதன் முதலில் ஓட்டியதால், உலகிலேயே முதன் முதலில் கார் ஓட்டிய கார் டிரைவர் பெர்த்தா பென்ஸ் என்பவரே என்று பெயர் பெற்றார்......... !
  20. "பொய் சாட்சி" ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக் கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/2009 பின் மக்களின் போராட்டம் தீவீரம் அடைந்தது. ஆனால், இலங்கையில் நீடித்த மற்றும் அழிவுகரமான உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளத்தை ஏற்படுத்தி, பல தசாப்தங்களாக நீடித்த யுத்தம், தேசத்தின் மீது ஏற்படுத்திய வடுக்களை கலைவதற்குப் பதிலாக அது நீடிப்பதைத் தான் காண முடிந்தது. உதாரணமாக போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் கூட வலுக்கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருந்தன இந்த சூழலில் தான் சர்வதேச அழுத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கம், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தான் விசாரணைகளை ஆரம்பிப்பதாக ஆரம்பித்தது. எனவே, திருமண வாழ்க்கைக்குள் பிரவேசிக்காது, தனிமையில் வாழ்ந்து 11 வருடங்களாக தனது தாயை தேடும் போராட்டத்தை முன்னெடுத்து வரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த, தமிழ்செல்வி, இறுதி யுத்தத்தில் தனது தாய் தெய்வானையை இராணுவம் விசாரணைக்கு என கூட்டிச் சென்றதாகவும், அதன் பின் இன்றுவரை திரும்பி வரவில்லை என்றும், அதற்கான பதிலை இராணுவம் அல்லது அரசு தராமல் காலம் கடத்தி வருவதாகவும், இன்று தன் தாய் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடங்கி விட்டதாகவும், எனவே தனக்கு வெளிப்படையான மறுமொழியுடன், நீதி வழங்கப்பட வேண்டும் என்று, 2020 ஆண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30-ஆம் தேதி நீதி மன்றத்தில் முறையிட்டார். முதல் நாள் வழக்கில் தமிழ்செல்வி, நீதிமன்றத்தில் எழும்பி "கனம் தங்கிய நீதிபதி அவர்களே என் அம்மா காணாமல் போகவில்லை! காணாமல் ஆக்கப்பட்டார்" என்று தனது முறையீட்டை கூறத்தொடங்கினார். விவிலியம், தொடக்க நூல் 4: 9 ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து "ஆண்டவர், காயினிடம், 'உன் சகோதரன் ஆபேல் எங்கே?' என்று கேட்டார். அதற்கு அவன் 'எனக்குத் தெரியாது. நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' என்றான். காயினின் மறுமொழியை ஆண்டவர் ஏற்கவில்லை. ஆபேலின் ரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து கதறிக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். காயின் ஆபேலைக் கொன்று புதைத்துவிட்டான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ஆதாமும் ஏவாளும்தான் உலகின் ஆதி மாந்தர்கள் என்பதை நம்புகிறவர்களுக்கு, காணாமற் போன முதல் மாந்தன் ஆபேல் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் அவன் காணாமல் போகவில்லை, காணாமலாக்கப் பட்டான். தொலைந்து போகவில்லை, தொலைத்துக் கட்டப்பட்டான். ஆபேலின் மறைவுக்குப் பொறுப்புக் கூறும்படி ஆண்டவர், காயினைக் கேட்டார். நாமறிந்த முதல் ‘பொறுப்புக் கூறல்’ (ACCOUNTABILITY) கோரிக்கை இதுவே கனம் நீதிபதி அவர்களே" என்று தன் வாதத்தை தொடங்கினார். "இப்போது ... நம் காலத்தில் … இலங்கைத் தீவுநாட்டில் “என் கணவர் எங்கே?” என்று ஒரு மனைவி கேட்கிறார். “என் மகன் எங்கே?” என்று ஒரு தாய் கேட்கிறார். எங்கள் தலைவர்களும் தளபதிகளும் அரசியல் அறிஞர்களும் கலைஞர்களும் வீரர்களும் எங்கே .. எங்கே.. என்று ஈழத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு முடிவே இல்லை போலும். இவற்றில் ஒரே ஒரு கேள்விக்குக்கூட “ஓ, அவரா, இதோ இங்கே இருக்கிறார்” என்று விடை கிடைக்கவில்லை. ஆக அவர்களின் சாத்வீக போராட்டம் தொடர்ந்து தினமும் நடைபெறுகிறது கனம் நீதிபதி அவர்களே. அந்த வரிசையில் தான், எங்கள் வீடு வந்து, என் அம்மாவை கூடிச் சென்ற இராணுவம் இன்னும் என் கேள்விக்கு முடிவு தராமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது. சிலோனாக இருந்த இலங்கைத் தீவு 1972இல் சிறிலங்கா குடியரசான பிறகுதான் காணாமல் ஆக்கும் நடைமுறைகள் இங்கு பரவலாயின. அதில் என் அம்மாவும் இப்ப ஒருவர், கனம் தங்கிய நீதிபதி அவர்களே" தமிழ் செல்வியால் தொடர்ந்து வாதாட முடியாமல் கண்ணீர் இரு கன்னங்களாலும் கீழே ஒழுகி அவள் மார்பையும் நனைத்தது. கொஞ்ச நேரம் அவள் அமைதியாக இருந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு கண்ணகியின் ஞாபகம் வந்தது. "வாயிலோயே வாயிலோயே அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே" என்ற கண்ணகியின் வழக்குரை பாணியை நினைத்தால், உடனே எழும்பி "காணாமல் ஆக்கப்பட்டவர்களது குருதியின் குரல் – ஆபேல் சிந்திய குருதியின் குரலைப் போலவே, கனம் தங்கிய நீதிபதி அவர்களே - மண்ணிலிருந்து கதறிக் கொண்டே இருக்கும். உலகத்தின் உளச்சான்றுக்குச் செவி இருந்தால் அந்தக் குரல் கேட்கும். நீதி கிடைக்கும்!, உங்களை நம்புகிறேன்!!" அவள் சுருக்கமாக தன் முதல் வாதத்தை நீதிமன்றத்துக்கு முன் வைத்தாள். ஆனால் அரசு மற்றும் இராணுவத்தின் சார்பில் இந்த காணாமல் போகும் போது, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்தவர் தனது சாட்சியை முன் வைத்தார். "போரின் போது சரணடைந்தர்கள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் உரிய முறையில் செயலாக்கப்பட்டதாக" அவர் கூறி, மேலும் "யுத்தத்தின் இறுதியிலும் அதன் பின்னும் கூட , நாங்கள் ஒரு நல்ல அமைப்பைக் கொண்டிருந்தோம், அங்கு நாங்கள் அழகான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தோம். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கவில்லை என்று நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அல்லது விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்ட மக்கள் திரும்பி வருவதில்லை - அது நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்ட கதை,” என்று அவர் ஒரு கேலி புன்னகையுடன் கூறினார். அதன் பின், காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சாட்சி அளித்த ஒரு உயர் அதிகாரி, அங்கு தடயவியல் நிபுணர்கள், சாட்சிகளைப் பாதுகாக்கும் பிரிவுகள் மற்றும் விசாரணை அதிகாரங்களைக் கொண்டு இருந்தாலும் அதற்கு குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அதிகாரம் இல்லை என்றும் அலுவலகம் சந்தேக நபர்களை வழக்கறிஞரிடம் மட்டுமே அனுப்ப முடியும் என்றும் கூறினார். அதை தொடர்ந்து தமிழ்செல்வி மீண்டும் சாட்சி கூண்டில் ஏறினாள். அவள் கையில் கண்ணகி வைத்திருந்த அந்த உடையாத மற்ற சலங்கை இருக்கவில்லை, ஆனால், அவள் நடுங்கும் கைகளில் நான்கு மங்கலான புகைப்படங்கள் இருந்தன. அவள் கண்ணீர் இன்னும் ஒழுகிக்கொண்டே இருந்தது. "2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர், வீட்டிற்கு வந்த இராணுவ புலன் விசாரணை குழு ஒன்று தான் என் அம்மாவை, வலுக்கட்டாயமாக பேருந்து ஒன்றில் மற்றும் பலருடன் ஏற்றினர். நான் எனது அம்மாவுடன் பேருந்தில் செல்ல அனுமதிக்குமாறு கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டார்கள்” என்று கூறி அதற்கு சான்றாக அந்த நாலு படங்களையும் நீதிபதியிடம் கொடுத்தார். இதை எதிர்பாராத அரச சாட்சிகள் கொஞ்சம் தடுமாறினார்கள். "நான் உங்களிடம் பணிவாக கேட்பது என் அம்மா கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு? அதை விட்டு நட்டஈடு அல்ல" அவள் உறுதியாக கூறினாள். இதைத்தொடர்ந்து, மேலும் சர்வதேச அழுத்தத்தின் கீழும், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் விசாரணைகளை நீதிமன்றம் ஆரம்பித்தது. இருப்பினும், உண்மையைத் தேடுவதற்கான உண்மையான முயற்சிகளுக்கு மத்தியில், ஒரு மோசமான சதி வெளிப்பட்டது. அங்கே ஒரு பிரிவு, மறைமுக நோக்கங்களால் உந்தப்பட்டு, பழியை மாற்றுவதற்கும், ஏதேனும் சாத்தியமான தவறுகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கும் ஆதாரங்களை உருவாக்க முடிவு செய்தது. போலியான சாட்சியங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்ற வடிவங்களை சோடித்தது. அதற்கு வடக்கு, கிழக்கு சில தமிழ் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் கூட விலை கொடுத்து வாங்கியது. இந்த மோசடி மற்றும் பொய் சாட்சிகள், அதிகாரத்தின் துணையுடன் தாண்டவம் ஆடியது. "விரி காஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும், பிரிவஞ்சாது அவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும் கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, எரி பொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன் செய்கோ?" காஞ்சிப் பூ மலர்ந்தது. குயில்கள் கூவுகின்றன. இந்தக் காலத்தில் பிரிந்திருக்கலாமா? நானும் மறைக்கத்தான் பார்க்கிறேன் முடிய வில்லையே! 'பொய் சாட்சி' சொன்னவன் வந்து கீழே நின்ற மரம் பட்டுப் போனது போல இருக்கிறதே என் நிலை ! என்கிறாள் ஒரு சங்க தமிழிச்சி! அப்படித்தான் இந்த 'பொய் சாட்சி'கள் அவள் மனதில் ஓரளவாவது துளிர்த்து இருந்த நம்பிக்கையை பட்டுப் போக செய்துவிட்டது. ‘ஒரு சமுதாயத்தில் நீதி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை யொட்டியே அச்சமூக நிறுவனங்களின் தன்மையும் பண்பும் அறியப்படுகின்றன. நீதியே எல்லா நலன்களுக்கும் முதன்மையானது" என்ற பிளேட்டோ வின் வசனம் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்ப நீதி மன்றத்தை நாடுவதை அவள் நிறுத்திவிட்டாள். அதிகாரத்தில் இருக்கும் பொய் சாட்சிக்கு முன் அவள் எங்கே ? நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. அந்த 217 தனிநபர்களின் பெயர்களை இணையுங்கள் வாசித்து பார்ப்போம்.
  22. மாதுரி டிக்‌ஷிற்றின் பாட்டை எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறளவிற்கு வசீக்கு வயசாகிவிட்டதா?😱 நம்ம பாட்டு இதூ!
  23. ஒரு நல்ல நெறி முறை இல்லா படையிடம் (ethics), எந்த வித ஒழுக்கமும் (morals) இருக்காது அவர்களிடம் அழிவு ஆயுதம் இருக்குமாயின் அது உலக அழிவிற்கு வழிவகுக்கும், இதற்கு முழுக்காரணம் இந்திய குடிமக்களே. ஆனால் இவர்களிற்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் குறைந்த பட்ச நெறிமுறையினையாவது பின்பற்றவேண்டும். ஒரு சாதாரண எல்லை முறுகலை அணு ஆயுத அழிவு வரை எடுத்து செல்வது பைத்தியக்காரத்தனம், இப்படியான பைத்தியக்காரர்களுக்கு ஆயுதம் வழங்கும் போது அது பற்றி உலகு சிந்திக்கவேண்டும். இரண்டு ஆக்கிரமிப்பு நாடுகளும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும், உயரொழுக்கம் கொண்ட அரசியல் தலைமகளை மக்கள்தான் உருவாக்க வேண்டும்.
  24. நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்... ஒரு நடிகராகப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களது உரையாடலும் அவரது தமிழ்ப்பற்றும் என்னை நடிகருக்கப்பாலான வேறொரு கோணத்தில் நோக்க வைக்கிறது. அதனை யாழ் கள உறவுகளோடு பகிரந்துகொள்ளும் நோக்கோடு இணைத்துள்ளேன். நன்றி யூரூப் இணையம் வேண்டுகோள்: பொருத்தமற்ற பகுதியில் இணைத்துள்ளேனென்றால், பொருத்தமான பகுதிக்கு நிருவாகத்தினர் மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  25. நண்டுகள் நாளையும் வரலாம் 😍
  26. நாளை ஞாயிறு (01 ஜூன்) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 76) ஞாயிறு 01 ஜூன் 2:00 pm GMT அஹமதாபாத் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI மூன்று பேர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். போட்டியில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் வெல்லும் என எவரும் கணிக்கவில்லை! போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று மூன்று பேருக்கு புள்ளிகள் கொடுக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைகளைப் பரிமாறுமா?
  27. மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடாகவில் படம் ஓடாது. மன்னிப்புக்கேட்டால் தமிழகத்தில் படம் ஓடாது. ஆப்பிழுத்த குரங்கின் நிலை கமலுக்கு. எப்படியும் ஓடாத படத்தை ஓடப்பண்ண இதுபோல சர்ச்சைகளை படம் சம்பந்தப்பட்டவர்கள் செய்வது வழமை;. இப்படித்தான் புரட்சித்தமிழன் என்று தன்னைக்கூறிக்கொள்ளும் திராவிடப்பங்காளி சத்தியராஜ் மன்னிப்புப் கேட்டார். இப்பொழுது கமலை மன்னிப்புக் கேட்கச்சொல்லி இருப்பதாக ஒரு செய்தி. இதுவெல்லாம் கமலுக்கு சின்னப் பிரச்சினை திமுகவை ஒழிக்க என்று கட்சி தொடங்கி ரோச்லைற்றால் ரிவி உடைத்து விட்டு இப்பொழுது உதயசூரியன் ஒளி இருககையில் ரோச்லைற் தேவை இல்லை என்று ராஜ்யசபா எம்பியாகி நம்பிவந்தவர்களை கைவிட்டு விட்டார். இப்பொழுது அவர்பேசியிருப்பதும் வழக்கம் போல மன்னிப்புக்கேட்டாரா இல்லையா என்று புரியாத மாதிரி பேசியிருக்கிறார்.
  28. மொழிகளை ஒப்பிட்டு இதிலிருந்து இது பிறந்தது என்று அடிபடுவது இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் பிரிவினையையுமே ஏற்படுத்தும். இவ்வாறு செய்யும் போது மொழிவெறியை மட்டுமே வைத்து மக்களிடையே அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் தீய சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமையும். உண்மையில் இது மொழியியல் ஆராய்சசி சம்பந்தமான விடையம். மொழியியல் அறிஞர்கள் மட்டுமே தங்களுக்குள் அறிவியல் ரீதியாக விவாதிக்க வேண்டிய விடயம். ஒரு அளவுக்கு மேல் தரவுகள் இல்லாததால் இதை 100 வீதம் நிறுவுவதும் கடினமான விடயம். உண்மையில் தூய மொழி என்று ஒன்று கிடையாது. எல்லாமே நீண்ட மனித வரலாற்றில் மொழிகள் எல்லாமே கலப்படம் தான். அதில் தவறும் இல்லை. உதாரணமாக இலவசமாக கிடைப்பதை ஓசியில் கிடைத்தது என கூறும் வழக்கம் தமிழில் உள்ளது. இது வந்தது பிரிட்டில் கிழக்கிந்திய கொம்பனி இந்தியாவை நிர்வாகம் செய்யயும் போது கடிதங்களை அனுப்பும் போது On Company Service (OC) என்ற முத்திரை சீல் பாவித்தால் கடிதங்களுக்கு முத்திரை ஒட்ட தேவையில்லை. அந்த பாவனை பின்னர் மருவி இலவசமாக பெறுவதற்கெல்லாம் ஓசி என்று கூறும் வழக்கம் உண்டானது. இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் கூட இலவசத்தை ஒசி என்று தமிழில் கூறுமளவுக்கு அந்த சொல் மக்களிடையே இரு நூற்றறாண்டு கடந்து சென்றடைந்துள்ளது. யோசித்து பாருங்கள் இரு நூறு ஆண்டுகளிலேயே இவ்வாறு என்றால் நீண்ட மனிதவாழ்வில் எந்த சொற்கள் எப்படி வந்தது என்பதை கண்டறிவது கடினமானது.
  29. --- புதிய நிறத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் -- எங்கிட்ட ஏற்கனவே அந்த கொலரில் புடவை இருக்கு ..
  30. தாய் - தந்தை இருக்கும் வரை கஸ்ரம் தெரியாது..
  31. லண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..
  32. வேடனை விடுதலை செய்யுங்கள் * "நான் பாணன் அல்ல பறையன் அல்ல புலையன் அல்ல நீ தம்புரானுமல்ல. ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!" வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை. வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன. அந்தப் பாடல்கள்தான் இன்று எல்லோர் மூளையையும் இதயத்தையும் ஊடுருவுகிறது. அவனது பாடல்கள் வியாபகமானவை. பலஸ்தீனம் குறித்து, மியன்மார் குறித்து, சிரிய அகதிச் சிறுவன் கடற்கரையில் இறந்து கிடந்தது குறித்து, அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் நிறவெறிப் பொலிசால் கொல்லப்பட்டது குறித்து, நிறவாதம் குறித்து, கறுப்புநிறம் சார்ந்த ஒதுக்கல் குறித்து, அடிமைத்தனம் குறித்து, போலி தேசியவாதம் குறித்து, வர்க்க வேறுபாடு குறித்து, பயங்கரவாதம் குறித்து எல்லாம் பேசுகிறான். அவன் தனது வலியின் மேல் நின்று இந்த ஒடுக்கப்படும் மக்களின் வலிகளை சர்வதேச மனிதனாகப் பார்க்கிறான். உணர்கிறான். பாடுகிறான். யசீர் அரபாத் முழங்கிய வாசகமான “ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் (சமாதானத்துக்கான) ஒலிவ் கிளையையும் தாங்கி நிற்கிறேன்” என்ற வாசகத்தையும் பாடுகிறான். யசீர் அரபாத் குறித்த விமர்னத்தோடு அவனது இந்த வரியை அணுகுவது அபத்தம். கலைஞன் என்ற வகையில் எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாகவே அதைப் பயன்படுத்துகிறான். அதேபோலவே ஈழத்தில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை, அதை எதிர்த்துநின்ற புலிகளை ஒருசில வரியில் பாடுகிறான். அவனது சர்வதேசியத்தன்மையை மறுத்து அவனை இழுத்துவந்து வீரத் தமிழன்டா. கேரளா தத்தெடுத்த யாழ்ப்பாணத் தமிழன்டா, புலிப்பால் குடித்தவன்டா, அதடா.. இதடா.. என்றெல்லாம் குறுக்குகிற முட்டாள்தனத்தை (ஈழ, புகலிட, தமிழக) தமிழர்கள் கைவிட வேண்டும். கேணைத்தனமான குறுந் தமிழ்த் தேசிய அரசியல் வியாதியிலிருந்து தொடங்கும் இந்த கூக்குரலுக்கு உரியவர்கள் சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வேடனுக்கு கிட்ட நெருங்கி வர பொருத்தமற்றவர்கள். ஓர் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட துயர வரலாறும் வலியும் கொண்ட ஈழத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலகின் தெருக்களில் -ஒருமுறையல்ல பலமுறை- பலஸ்தீன இனவழிப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவது அபூர்வம். நானும் சூரிச் ஆர்ப்பாட்டங்களில் ஒவ்வொரு முறையும் தேடிப் பார்ப்பதுண்டு. ஊஹம்!. இதுதான் நம்மட தமிழ்த் தேசிய முகம்; இனவழிப்புக்கு எதிரான குரலின் முகம். இன்னொரு வகையில் சொன்னால் இதுதான் சர்வதேசியவாதியாக உணர்வது குறித்த கரிசனையின் அளவு. இதுக்கை போய் வேடனின் சர்வதேசக் குரலை புரிய எவ்வாறு முடியும். அவனை வீரத் தமிழனாக புனையும் முனைப்பு இந்த புரியாமையின்பாற் பட்டதுதான். மியன்மார் குறித்த வேடனின் பாடல் வரியில் பாய்ந்து தொங்கி, “நீங்கள் புத்த மதத்தை பேணி வாழ்ந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்க வேண்டி வந்திருக்காது” என தேசியத் தலைவர் சொன்னதாகவும், அதை வேடனின் வரிகள் பிரதிபலிக்கிறதாகவும் வேடனோடு முடிச்சுப் போட்டு கதைக்கிற அளவுக்கு சிலர் போயிருக்கிறார்கள். வேடனது சாதியம் குறித்த குரல்களால் வெகுண்டெழுந்த சங்கிகளின் நோக்கத்துக்கு இதே முடிச்சு நல்ல வசதியாகப் போக வாய்ப்பிருக்கிறது. அவனது குரலை ஒடுக்க சங்கிகள் கங்கணம் கட்டுகிறார்கள். வேடனுக்குப் பின்னால் இருக்கும் சக்திகள் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். அதிகார வர்க்கங்களுக்கு விளிம்புநிலை மக்களின் தலைநிமிர்த்திய குரல்கள் எப்போதும் அச்சமூட்டுபவை. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அதுசார்ந்த நெருக்கடிகள் அவனுக்கு அருகிலேயே உள்ளன. இதுக்கை போய் ஈழ சென்றிமென்ற் பேசுபவர்கள் புகுந்துபோய் விளையாட என்ன இருக்கிறது. கேரளாவின் கேசரி இதழின் ஆசிரியர் என்.ஆர்.மது வேடனின் சர்வதேசக் குரலை மடைமாற்றி அந்த சர்வதேசியத்தன்மைக்கு பின்னாலுள்ள சக்திகள் ஜிகாதிகள் என கண்டுபிடித்துச் சொல்கிறார். உடலின் கறுப்புநிறத்தை வைத்தும் தன்னை ஒதுக்கியதற்கு எதிர்வினையாற்றுகிற அவன் தனது மேலங்கியின்றி மேடையில் நிமிர்ந்து நிற்பதை காபரே நடனம் என மது பரிகசிக்கிறார். இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா ரீச்சர் "றப் இசையைப் பாட வேடன் யார்" என -றப் இசையின் வரலாறு தெரியாமல்- லூசுத்தனமாக கேட்கிறார். உங்கள் பாரம்பரிய கலைகளை விட்டுவிட்டு என்ன றப் பாடவேண்டியிருக்கிறது என்கிறார். 2001 இல் வெளித்தெரியாதிருந்த வேடனின் “குரலற்றவர்களின் குரல்” (Voice of Voiceless) என்ற யூரியூப் பாடலில் வந்த வரியில் ஓரிடத்தில் “கபட தேசியவாதிகள்” என வருகிறது. அந்தச் சொற்களை முன்வைத்து, நான்கு வருட தூக்கம் கலைந்தெழுந்து இப்போ வந்து பொங்குகின்றனர் பாஜக வினர். பாலக்காடு பாஜக கவுன்சிலர் மினிமோல் வேடன் மோடியை போலி தேசியவாதி என பாடுகிறார் எனவும் இலங்கைவழி வந்த வேடனை என்.ஐ.ஏ இன்னும் ஏன் விட்டுவைத்திருக்கிறது என மத்திய அரசைக் கேட்கிறார். அந்த கபட தேசியவாதி என்பது நரேந்திர மோடியை பழித்த சொற்கள் என கண்டுபிடித்து வேடன் தேசத்துரோகி என்ற றேஞ்ச்சுக்கு போய் கேரள தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துகின்றனர். சரி அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. உலகின் மிகப் பெரும் சனநாயக நாடு என பெயரெடுத்திருக்கும் இந்தியாவில் மோடியை விமர்சிக்க ஒரு இந்தியக் குடிமகனுக்குக்கூட உரிமை இல்லையா என்ன. கேரள அரசு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் வேடன் பக்கம் நிற்கிறது. அது ஒரு பெரிய ஆறுதல். அதற்கான கட்சி அரசியல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம் என்றபோதும் அது வேடனுக்கான பாதுகாப்பு உணர்வு தரும் ஒன்றுதான். அத்தோடு மம்முட்டி, பிர்திவிராஜ் போன்ற பிரபலமான நடிகர்கள் வேடனுடன் நிற்கிறார்கள். “ஆயிரம் ஆண்டுகளாக நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டோம். இப்போ வேடன் பேசட்டும். அதைக் கொஞ்சம் கேளுங்கள்” என சங்கிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மம்முட்டி. பிருதிவிராஜ் “வேடனின் குரல் அடிமைப்பட்டவர்களின் குரல். குரலற்றவர்களின் குரல்” என்றார். ஆனால் தமிழக நடிகர்களோ இசையமைப்பாளர்களோ (பிரகாஸ்ராஜ் தவிர) கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். திரையில் உசுப்பேத்துவது, தேர்தல் மேடையில் முழங்குவது என ஓடித்திரியும் நடிகர்களின் முகமூடிகளை வேடனின் யதார்த்தமான நேர்மையான குரல் அச்சுறுத்துகிறதோ தெரியவில்லை. தாமே தமது சினிமா களத்தின் ஆளுகைக்குள் இசையை வைத்திருக்கும் இவர்களுக்கு அதுக்கு வெளியில் வேடனின் சுயாதீனக் கலை புயலாக எழுவது சவாலாக இருக்கிறதோ என்னவோ. ஒருவேளை வேடனையும் இந்த சினிமாவுக்குள் இழுத்து வீழ்த்தி பத்தோடு பதினொன்றாக ஆக்கிவிட திட்டம் போடுகிறார்களோ தெரியவில்லை. நடக்கலாம். அது வேடனின் கையில் உள்ளது. இப்படியாக வருகின்ற தடைகள், கள்ளமௌனம், உரிமை பாராட்டுதல், முடிச்சுப் போடுதல் எல்லாம் ஒன்றை புரியவைக்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் குரலை அங்கீகரிக்காத தன்மைதான் அது. அரசியல் களத்தில் மட்டுமல்ல கலைமேட்டிமையின் அல்லது கலையதிகாரத்தின் களத்திலும் அது நிகழத்தான் செய்யும். எல்லாவற்றையும் மேவி வருகின்ற விடாப்பிடியாக மக்கள் நலனை முன்னிறுத்தி எளிய மனிதர்களுக்காக ஒலிக்கிற இசை வடிவங்களை காலம் நீண்டும் மக்கள் கொண்டாடவே செய்வர். அதற்கு உதாரணமாக, எல்லா எதிர்ப்புகளையும் சந்தித்து அவற்றை உறுதியாக தாண்டி தன்னை நிலைநிறுத்திய றேகே இசைப் பாடகன் பொப் மார்லி நினைவில் வருகிறான். வேடனுக்கு அந்த துணிச்சல் வாய்க்குமா?. எதிர்காலம்தான் இதற்கான பதிலைத் தரும். இப்போதைக்கு “எல்லா குறுக்கல் வாதங்களிலிருந்தும் வேடனை விடுதலை செய்யுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது. All reactions: Thank you:Ravindran Pa https://www.facebook.com/share/p/1GdxBpxTjy/
  33. ராஜ்ய சபாவுல எங்களுக்கு தெரியாத இந்தி மொழியிலையா பேசறீங்க இருங்கடா என்ன பேசினாலும் புரியாத மாதிரி ஒரு ஆளை அனுப்புறோம் பாருங்க...!!!
  34. நேற்று பிரான்சின் Les Echos பத்திரிகை பிரசுரித்த கட்டுரை ஒன்றில் இக் கருத்தோவியத்தைப் போட்டுள்ளது.
  35. ச்சப்பா, முடியலடா சாமி! ஒன்றை எழுதும்போது கோர்வையாக மற்றவர்களுக்கு விளங்கும்படி எழுதவேண்டும்! முதல் வசனத்திற்கும் அடுத்த வசனத்திற்கும் சம்பந்தமேயில்லாமல் எழுதுகிறீர்கள்! அப்படி எழுத தெரியவில்லையென்றால் Chatgpt இடமாவது உதவிகிட்டு எழுதவும்!
  36. ஆட்சியில் இருந்தபோது அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லையே ? பெரும்பான்மை இனத்தவரின் வெறுப்பு அரசியலில் நிர்ப்பந்திக்கப்படும் எந்தவொரு இனக்குழுவும் தனிநாடு கேட்டுப் போராடுவது உலக நியதிதானே ! சரி, தனிநாடு இல்லாவிட்டாலும் சுயாட்சி அதிகாரத்தோடு தனிமாநிலத்துக்கான நகர்வினை ஏற்படுத்தித் தமிழினம் தன் அடையாளத்தோடும் உரிமைகளோடும் வாழ வழி செய்திருக்கலாம். அதிகாரத்தை ஒன்றியத்தில் குவித்து மையப்படுத்தும் எதேச்சாதிகாரப் போக்கிற்கு எந்த நாடும் விதிவிலக்கில்லை போலும் - இலங்கை, இந்தியா, பழைய சோவியத் யூனியன் .....................
  37. 👉 https://www.facebook.com/100076314756096/videos/1035897674674669 👈 நல்ல காலம்.... ஒருவரும் பார்க்கவில்லை. 😂 🤣
  38. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். ஜல்லிக்கட்டு தடையின் பின்னணி புரிந்ததா. அடையாளத்தை இழந்து அடிமையாக மாறும் தமிழா...
  39. சொன்ன சொல் தவறாதவர்.. அரிசந்திரனே இவரது எதிர்வீட்டில்தான் குடியிருக்கிறார். டிஸ்கி : நன்றிகள் பல மோடி ஜி ..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.