Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்11Points87988Posts -
satan
கருத்துக்கள உறவுகள்5Points10099Posts -
யாயினி
கருத்துக்கள உறவுகள்4Points10207Posts -
alvayan
கருத்துக்கள உறவுகள்4Points5416Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/29/25 in all areas
-
செம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன்
3 pointsசெம்மணிக்கு வந்த ஐநா - நிலாந்தன் 2015க்குப் பின் நடந்த ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சம்பந்தர் முள்ளிவாய்க்காலுக்கு வருகை தந்திருந்தார். அங்கு அவரை நோக்கிக் கேள்விகள் கேட்கப்பட்டன. நிலைமை கொந்தளிப்பாக மாறியது. அப்பொழுது ஒரு பெண் உணர்ச்சிவசப்பட்டவராக சம்பந்தரை நோக்கி உரத்த குரலில் ஆவேசமாகக் கேள்விகளைக் கேட்டார். அவர் அப்பொழுது கறுப்பும் சிவப்புமான நிறச் சீலையை உடுத்திருந்தார். இது நடந்து சில ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் முத்தவெளியில் வான் படை கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. இதில் வான்படை உலங்கு வானூர்திகளில் மக்கள் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அங்கே சம்பந்தரை கேள்வி கேட்ட அதே பெண் தனது வளர்ந்த மகனோடு அந்த உலங்கு வானூர்தியில் அமர்ந்திருந்து, படமெடுத்து அதை முகநூலில் பகிர்ந்திருந்தார். தமிழ் மக்களின் தலையில் குண்டுகளைப் போட்ட அரச படையின் உலங்கு வானூர்தி ஒன்றில் பிள்ளையோடு அமர்ந்திருந்து அந்த படத்தை போடுகிறார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சம்பந்தரை பார்த்து ஆவேசமாக கொதித்து எழுந்தார். இதில் எது சரி? சம்பந்தரை நோக்கிக் கொதித்தது சரியா? அல்லது உலங்கு வானூர்தியில் அமர்ந்திருந்து படம் எடுத்தது சரியா? அல்லது இரண்டுமே பிழையா? அப்படித்தான் கடந்த புதன்கிழமை செம்மணிப் போராட்டக் களத்தில் இருந்து சில அரசியல்வாதிகள் அவமதிக்கப்பட்டவை உணர்ச்சிக் கொதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள்தான். தமிழரசுக் கட்சிக்குள் உள்ள சுமந்திரன் அணிக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் கடுமையான அதிருப்தி உண்டு. இதுபோன்ற உணர்வுபூர்வமான சந்தர்ப்பங்களில் அது வெடித்துக் கிளம்பும். ஆனால் அந்த எதிர்ப்பை,கொதிப்பைக் காட்டியிருக்க வேண்டிய களம் செம்மணி அல்ல. குறிப்பாக தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் அதை காட்டியிருக்க வேண்டிய களம் மாட்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமையகம் ஆகும். இது கடந்த ஆண்டிலேயே சம்பந்தப்பட்டவர்களுளுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. சுமந்திரன் தந்திரமான வழிகளில் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார் என்று கொந்தளிப்பவர்கள் மாட்டின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தை முற்றுகையிடலாம். அங்கே தங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் தன்னார்வமாக ஒரு செயற்பாட்டு இயக்கம் கட்சி கடந்து முன்னெடுத்த ஒரு நடவடிக்கைக் களம் அதற்குரியதல்ல. அதைக் கட்சிகள் ஒழுங்கமைக்கவில்லை. எனவே அதைக் குழப்புவதற்கும் அவர்களுக்கு உரிமை இல்லை. அப்படிப்பட்ட இடங்களில் சிவஞானத்தை அல்லது சாணக்கியனை அல்லது சந்திரசேகரனை மறித்து வைத்து கேள்விகளை கேட்பது வேறு, அவர்களை அவமதிப்பது என்பது வேறு. இது இப்படியே போனால் இனி எதிர்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு செயற்பாட்டு அமைப்பும் கட்சி கடந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது கடினமாகிவிடும். ஒரு செயற்பாட்டு அமைப்பு அல்லது மக்கள் அமைப்பு எதையாவது செய்யப் புறப்பட்டால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எத்தனை பேர் அதனை ஹைஜாக் பண்ண முயற்சிக்கிறார்கள்? அணையா விளக்கு போராட்டக் களம் என்பது உள்ளூர் விடயம் ஒன்றுக்காக அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தோடு திறக்கப்பட்டது. எனவே அதற்கு ஓர் அனைத்துலக பரிமாணம் உண்டு. கட்சி சாராத அதுபோன்ற நடவடிக்கைகள் தமிழ் தேசிய பரப்பில் மிகக் குறைவு. ஆனால் அவற்றுக்குத்தான் புனிதம் அதிகம். அங்கேதான் கட்சி கடந்த தேசத் திரட்சி ஏற்படும். மெய்யான பொருளில் செயல்பூர்வமாக தமிழ் மக்களை ஒரு இனமாக, ஒரு தேசமாகத் திரட்டும் களங்கள் அவை. எனவே அந்த இடத்தில் உட்கட்சிப் பூசல்களுக்கும் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கும் இடமில்லை. கட்சி அரசியலை முன்னெடுப்பவர்கள் அந்தக் களங்களை கட்சி அரசியல் நோக்கத்தோடுதான் அணுகுவார்கள்; கையாளுவார்கள். அதில் சந்தேகமில்லை. இது தேசிய மக்கள் சக்திக்கும் பொருந்தும். ஆனால் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்கும் ஒரு போராட்டக் களத்தில் எல்லாத் தரப்புக்களையும் ஒன்று திரட்டுவது அந்தப் போராட்டத்தின் நீதியைப் பலப்படுத்தும். கோழியைத் திருடினவனும் கோழியை வளர்த்தவனும் ஒன்றாகப் போராட முடியாது என்று ஒரு விளக்கம் கூறப்படலாம். இன அழிப்புக்கு மறைமுகமாக உடந்தையாக இருந்தவர்களும் இன அழிப்பை விசாரிப்பதற்கு அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளாதவர்களும் இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரிப் போராடும் ஒரு களத்தில் வரக்கூடாது என்றில்லை. அவர்கள் அங்கே வருவது போராட்டத்தின் நியாயத்துக்கு வலுச்சேர்க்கும். அங்கே அவர்களை வரவழைத்ததே வெற்றிதான். அங்கே வந்தால்தான் அரசியல் செய்யலாம் என்று ஒரு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தைப் போராட்டம் ஏற்படுத்தியதே ஒரு வெற்றிதான். மேலும் இன அழிப்பில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களித்தவர்கள் அல்லது தங்களுக்குரிய தார்மீகப் பொறுப்பை நிறைவேற்றாதவர்கள் என்று பார்த்தால் ஈழத் தமிழர்கள் இந்த பூமியில் உள்ள பெரும்பாலான அரசுகளையும் பெரு நிறுவனங்களையும் குற்றம் சாட்ட வேண்டியிருக்கும். தமிழ் மக்களை இன அழிப்பு செய்தவர்கள் என்று பார்த்தால் பிரித்தானிய பேரரசிலிருந்து தொடங்கி உலகில் உள்ள எல்லாப் பேரரசுகளின் கைகளிலும் தமிழ் மக்களின் ரத்தம் உண்டு. ஏன் ஐநாவின் கைகளிலும்தான். எந்த ஐநாவிடம் தமிழ்மக்கள் நீதியைக் கேட்கின்றார்களோ,எந்த மேற்கு நாடுகளிடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றார்களோ, இந்த மேற்கத்திய ராஜதந்திரக் கட்டமைப்பானது இறுதிக்கட்டப் போரில் தமிழ் மக்களை கைவிட்டது. ஒருவகையில் அக்கால கட்டத்தில் நடந்த இன அழிப்புக்கு அவர்களும் பொறுப்பு. ஐநாவும் உட்பட. செம்மணியில் போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுதே காசாவில் இன அழிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. 16 ஆண்டுகளின் பின் மீண்டும் மேற்கு ஆசியாவில் ஒரு முள்ளிவாய்க்கால். 16 ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலில் எது நடந்ததோ அதுதான் இப்பொழுது காசாவில் நடந்து கொண்டிருக்கிறது. சிறு சிறு வித்தியாசங்கள். 16 ஆண்டுகளுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை கையாலாகாத சாட்சியாக ஐநா பார்த்துக் கொண்டிருந்தது. இன்றைக்கு காசாவிலும் அதே நிலைமைதான். எனவே தமிழ் மக்கள் நீதிமான்ககளிடம்தான் நீதியைக் கேட்க வேண்டும் என்று தீர்மானித்தால் இந்த குரூர உலகிலே யாரிடமும் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அரசியலில் யாருமே சுத்தமான நீதிவான்கள் கிடையாது. அண்மையில், மேற்கு ஆசியாவில் யுத்தம் வெடித்தபோது தமிழ் முகநூல் உலாவிகள் பெரும்பாலும் ஈரானின் பக்கம்தான் நின்றார்கள். அதை ஈரானின் பக்கம் என்று கூறுவதை விடவும் இஸ்ரேலுக்கு எதிராக என்று கூறுவதே தகும். அதாவது காசாவில் இன அழிப்பை செய்யும் இஸ்ரேலுக்கு எதிரான கூட்டுணர்வு அது. அந்த இடத்தில் தமிழ் மக்கள் பெரும்பாலும் இன அழிப்புக்கு எதிராகத் திரண்டு காணப்பட்டார்கள். ஆனால் இறுதிக் கட்டப் போரில் ஈரான் யாருடன் நின்றது? ராஜபக்சக்களோடு தான். இஸ்ரேல் யாரோடு நின்றது? ராஜபக்சக்களோடுதான். ஏன் அதிகம் போவான்? 2009க்கு பின் பலஸ்தீன் அதிகார சபையானது மஹிந்தவை ஒரு விருந்தாளியாக அழைத்து நாட்டின் அதி உயர் விருதை அவருக்கு வழங்கியது. அது மட்டுமல்ல அவருடைய பெயரால் ஒரு வீதியையும் திறந்து வைத்தது. இது நடந்தது 2014இல். தமிழ் மக்கள் யாரை இன அழிப்பு செய்தவர் என்று குற்றம் சாட்டினார்களோ அவரை அழைத்து பலஸ்தீனர்கள் கௌரவித்தார்கள். அங்கே பாலஸ்தீனர்கள் நீதியின் அடிப்படையிலோ அறம் சார்ந்தோ முடிவெடுக்கவில்லை. பலஸ்தீனியர்கள் மட்டுமல்ல ஈரானியர்கள்,இஸ்ரேலியர்கள் முதலாக இந்த பூமியில் உள்ள எல்லா அரசுடைய தரப்புக்களும் ராணுவ, பொருளாதார, அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கும். அறநெறிகளின் அடிப்படையிலோ நீதி நியாயங்களில் அடிப்படையிலோ அல்ல. எனவே தமிழ் மக்கள் உலக சமூகத்திடம் நீதியை எதிர்பார்க்கும் பொழுது, நாம் நீதியாகப் போராடுகிறோம், நீதிக்காகப் போராடுகிறோம்,எனவே உலகம் எங்களுக்கு நீதியை வழங்கிவிடும் என்றெல்லாம் அப்பாவித்தனமாக நம்பத் தேவையில்லை. குறிப்பாக ஐநாவை பொருத்தவரை அது முதலாவதாக அரசுகளின் அரங்கம். இரண்டாவதாககத்தான் அரசற்ற தரப்புகளின் அரங்கம். அங்கே அரசுகளின் நீதி தான் உண்டு. அங்கு மட்டுமல்ல இந்த பூமியில் எங்கும் அரசுகளின் நீதிதான் உண்டு. தூய நீதி கிடையாது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வரப்போகிறார் என்ற தகவல் கிடைத்ததும் ஒரு தொகுதி தமிழ் சிவில் சமூகங்கள் இணைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கூட்டாக ஒரு கடிதம் அனுப்பின. கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தில் இயங்கி வருகின்ற ஸ்ரீலங்காவைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான ஓர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள் விசா வழங்கவில்லை. அந்த அலுவலகமானது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்குரியது. இலங்கைக்குள் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கு அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை. இதைச் சுட்டிக்காட்டி இப்படிப்பட்ட ஒரு நாட்டுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வருவது என்பது அந்த நாடு செய்வதை அங்கீகரிப்பதாகக் கருதப்படும் என்ற பொருள்பட சிவில் சமூகங்கள் கருத்து தெரிவித்தன. அக்கடிதத்தைத் தொடர்ந்து ஐநா அலுவலர்களுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. புதிய இலங்கை அரசாங்கத்தை ஐநாவால் கையாளத்தக்க தூரத்துக்குள் வைத்திருப்பதென்றால் இந்த அரசாங்கத்தோடு “என்கேஜ்” பண்ண வேண்டும் என்று ஒரு விளக்கம் ஐநாவிடம் இருப்பதாக தெரிந்தது. எனவே, தமிழ் சிவில் சமூகங்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வருமிடத்து, அவர் செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட வேண்டும் என்று சிவில் சமூகங்கள் கோரிக்கை விடுத்தன. ஐநா அதை ஏற்றுக்கொண்டது. சிவில் சமூகங்களுக்கு ஐநா கூறியது ஒரு புதிய விளக்கம் அல்ல. கடந்த 16 ஆண்டுகளில் மேற்கு நாடுகள் தமிழ் சிவில் சமூகங்களுக்கு அடிக்கடி கூறி வந்த ஒரு விளக்கம்தான். குறிப்பாக ராஜபக்சக்களை எதிர்நிலைக்கு தள்ளினால் அவர்கள் சீனாவை நோக்கிப் போய்விடுவார்கள்; எனவே அவர்களோடு “என்கேஜ்” பண்ணுகிறோம் என்று பெரும்பாலான நாடுகள் கூறின. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்ததற்கு அவர்கள் வெளிப்படையாகக் கூறும் காரணங்களை விட ஆழமான ராஜதந்திர இலக்குகள் உண்டு. இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது ஜேவிபியை அடித்தளமாகக் கொண்டது. ஜேவிபி சீன சார்பு இடதுசாரி மரபில் வந்தது. தேசிய மக்கள் சக்தியின் முடிவெடுக்கும் அதிகாரமுடைய தலைவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா அண்மையில் சீனாவில் காணப்பட்டார். சீனாவின் செல்வாக்குப் பொறிக்குள் எளிதாக விழக்கூடிய ஒரு அரசாங்கத்தை தங்களால் கையாளப்படத்தக்க ஒரு எல்லைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று ஐநாவும் சிந்திக்கின்றது; அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகளும் இந்தியாவும் சிந்திக்கின்றன. எனவே இந்த அரசாங்கம் சீனாவை நோக்கிப் போவதை தடுக்கும் நோக்கத்தோடு இந்த அரசாங்கத்தோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்று மேற்கண்ட தரப்புக்கள் சிந்திக்கின்றன. இந்த ராஜதந்திர இலக்கை முன்வைத்துத்தான் மனித உரிமைகள் ஆணையர் இலங்கைக்குள் வந்தார். இப்படிப்பட்டதோர் ராஜதந்திரச் சூழலில், ஐநா தமிழ் மக்களுக்குத் தூய நீதியைப் பெற்றுத் தராது.ஆனால் அதற்காக தமிழ் மக்கள் போராடாமல் இருக்க முடியாது . அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் ஒரு இனமாக ஒரு தேசமாக திரண்டு போராடினால்தான்-அந்த திரட்சிதான்-அவர்களுடைய பேரத்தை கூட்டும். பேரபலம் அதிகரித்தால்தான் நாடுகளும் உலகப் பொது மன்றங்களும் தமிழ் மக்களை நோக்கி வரும். எனவே ஒரு இனமாக திரள்வதற்காக தமது பேர பலத்தை அதிகப்படுத்துவதற்காக தமிழ் மக்கள் போராட வேண்டும். ஐநா நிலைமாறு கால நீதியைத் தருமா? அல்லது பரிகார நீதியைத் தருமா? என்பதல்ல இங்கு கேள்வி. ஓர் உலகப் பொது மன்றம் என்ற அடிப்படையில் ஐநாவோடுதான் தமிழ் மக்கள் என்கேஜ் பண்ணவும் வேண்டும். நவீன ராஜதந்திரம் எனப்படுவது என்கேஜ் பண்ணுவதுதான்.எனவே தமிழ்மக்கள் உலக சமூகத்துடன் என்கேஜ் பண்ணுவது என்று சொன்னால் முதலில் தங்களை ஒரு தரப்பாக பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நீதிக்கான போராட்டத்தில் உலகத்தைத் தம்பக்கம் திரட்ட வேண்டுமென்றால் முதலில் தமிழ்மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக்கொள்ள வேண்டும்.செம்மணியில் நடந்தது போன்ற போராட்டங்கள் தமிழ் மக்களை அவ்வாறு கட்சி கடந்து ஒரு தேசமாகத் திரட்டக் கூடியவை. போராட்ட நெருப்பை அணைய விடாமல் பாதுகாப்பவை. https://www.nillanthan.com/7483/#google_vignette3 points
-
வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
வட கொரியாவின் பெரும்பாலான மக்களுக்கு உணவைக் கூட சீனாவும், ஐரோப்பிய யூனியனும், செஞ்சிலுவைசங்கம் போன்ற NGO அமைப்புகளும் தான் கொடுத்து உதவுகின்றன. இவ்வளவு வறுமையில் இருக்கும் மக்கள், இந்த உல்லாச விடுமுறைத் தளத்திற்குப் போய், தங்கி, mall இல் பொருட்கள் வாங்கி..என்ன விளையாட்டு இது😂? யாழ் களத்தில் கிம்மை "முன்னுதாரணத் தலைவராக" வரித்துக் கொண்ட உறுப்பினர்கள் இதை விளக்குவார்களா😎?3 points
-
வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை
உன்னைப்போல ஒரு புண்ணாக்கு புழுத்திக்கும் வாக்கு போடச்சொல்லி தமிழ் அரசியல் செய்த கூட்டம் ஒன்றும் இருக்கு!!!3 points
-
வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை
நாம் எப்போதும் நம் தரப்பு நியாயங்களையே சிந்திக்கிறோம், பேசுகிறோம். மற்றைய தரப்பின் உணர்வுகள், கோணங்கள் எங்களுக்குத் தேவையில்லாதவை. போர் முடிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் சிலரிடம் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இதைத்தான் முன்னால் இராணுவத் தளபதி பொன்சேகாவினதுடனான நேர்காணல் சொல்கிறது. “இன்னுமொரு எழுச்சி ஏற்படக்கூடாது” என்பதே அவரது எச்சரிக்கை. இதை நாம் பெரிதாக ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? பாதுகாப்பு என்பது எல்லா நாடுகளுக்கும் முக்கியமான விஷயம். இலங்கை விதிவிலக்காக இருக்க முடியாது. நான் யேர்மனிக்கு வந்தபோது இரண்டாம் உலகப்போர் முடிந்து 28 ஆண்டுகள் கடந்திருந்தன. ஆனாலும் யேர்மனியிலேயே அமெரிக்க இராணுவத் தளங்கள் இருந்தன. அந்தப் போர் முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்க இராணுவம் விலகியது. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரானது, பெரிய அளவில் இராணுவத்தை எங்கள் நிலத்துக்குள் கொண்டு வந்து விட்டது. போரில் தோற்றோம். இன்னும் காணாமல் போனவர்களைத் தேடி அலைகிறோம். இறந்தவர்களின் எண்ணிக்கையே உறுதியாக தெரியாத நிலை. புதைக்குழிகளைத் தேடி தோண்டுகிறோம், எண்ணுகிறோம். ஒரு கேள்வி எழுகிறது – போருக்கு முன்னர் எங்கள் நிலத்தில் இராணுவம் இல்லையா? இருந்தது. தென் இந்தியக் குடியேற்றங்களையும், கடத்தலையும் தடுக்கவே ஏற்கனவே தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனையிரவில் இறங்கி ஏற வேண்டியிருந்தது. நான் யேர்மனியில் வாழ்கிறேன். எனவே இங்குள்ள நிலையை நன்கு அறிகிறேன். யேர்மனியில் விடுதலைப் புலிகள் “தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு” என யேர்மனிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு அவர்கள் ‘விடுதலைப் புலிகள்’ பெயரில் செயல்படவே முடியாது. இருந்தாலும் கல்வி அமைப்புகள், சமூக அமைப்புகள், சமையப் பின்ணணிகளில் செயல்படலாம். ஆனாலும் யேர்மனிய அரசின்க ண்காணிப்பு இந்தச் செயற்பாட்டாளர்கள் மீது எப்போதும் இருக்கும். இவர்கள் யாருக்கும் இங்கே தீங்கு விளைவிக்கப்போவதில்லை என்பதால், யேர்மனிய அரசும் பேசாமல் இருக்கின்றது. இலங்கையில் இருந்து சில தலைவர்கள் வந்தால், கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யலாம். மாவீரர் தினம் நடத்தலாம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம். ஆனால் அதைவிட எதுவும் செய்யக்கூடிய நிலை யேர்மனியில் இல்லை. இந்தச் சுற்று வட்டத்தின் உள்ளேயே அவர்கள் சுழன்று கொண்டிருக்க வேண்டியதுதான் இன்றைய நிலை. விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்படதென்றால் அதன் கொடியும் தடை செய்யப்பட்டதுதான். இது யேர்மனியருக்கு நன்கு தெரியும். அந்தக் கொடியை பிடித்து ஆர்ப்பாடம் செய்தால் அது நாட்டில் இருந்து வரும் தலைவருக்கு நல்லதாகவே அமையுமே தவிர, எங்களுக்கு எந்த இலாபமும் இல்லை. அடுத்தவனை கேவலமாகப் பேசுவதும், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் எப்போதும் உயர்வைத் தந்துவிடாது. கடைசியாக, ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம், இனி விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் மனப்பாங்கு மக்களிடையே இல்லை. வெற்றி என்பது ஆயுதத்தின் வழியாகவே சாத்தியமெனும் நம்பிக்கையும் அங்கிருப்பவர்களிடம் இல்லை. பொன்சேகா பேச்சில் அலட்டிக் கொள்ள எதுவுமேயில்லை2 points
-
வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை
எப்பொழுதும் தமிழர்களை அச்சுறுத்தலிலும் கட்டுப்பாட்டிலும் தமது கண்காணிப்பிலும் வைத்திருக்கவே சிங்களமும் தமிழ் அரசியல் வாதிகளும் சிந்திக்கின்றனர். தமிழரை வன்முறையை பற்றி சிந்திக்கவும் அதை நோக்கி தூண்டி இந அழிப்பை செய்யவும் நடவடிக்கையிலேயே அது தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆவா குழு, கஞ்சா எங்கிருந்து யாரால் எப்போது வடக்கில் தலைதூக்கியது என்பது இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. ஏன், தெற்கில் பாதாள உலகம் மற்றும் இவர் சொல்லும் பிரச்சனைகள் துப்பாக்கிச்சூடுகள் அதிலும் நீதிமன்றத்திற்குள் இல்லையா? ஏன் வடக்கில் மட்டும் இவ்வளவு கரிசனை? ஒரு இராணுவ அதிகாரி, நிர்வாகம் செய்ய முற்பட்டால் கருத்து சொல்ல வெளிக்கிட்டால் இப்படித்தான் இருக்கும். இந்த பிரச்னைகள் சமூகப்பிரச்னைகள். இவற்றை உருவாக்கி, வளர்த்து, சுயநலம், வருமானம் காண்பவர்கள். அரசியல்வாதிகள் மக்களை நல்வழியில் நடத்துவதற்கு பதிலாக இவ்வாறான சமுக சீர்கேடுகளை,இந, மத வன்முறைகளை, முரண்பாடுகளை தூண்டி வயிறு வளர்க்கின்றனர். இதை தீர்க்க வேண்டியது நீதி, சட்ட, காவற்துறை சம்பந்தமானது. சட்டம் எல்லோருக்கும் சமமாக இயற்றப்படவேண்டும், பிரச்சனைகள் நீதிமன்றம்மூலம் நிஞாயமாக தீர்க்கப்பட வேண்டும். அதை விட்டு ஆயுதம் தூக்க தூண்டக்கூடாது, அடக்குமுறை செயற்படுத்தக்கூடாது. உண்மை, அந்த நாடுகள்போல் இங்கு சட்டங்கள் இல்லை, நீதி இல்லை, நாட்டு நலன் இல்லை, அரசியல் இல்லை, அரசியல்வாதிகள் இல்லை, எங்கே பிரச்சனையின் ஆரம்பம் என அடையாளம் காண முடியவில்லை அல்லது ஏற்றுக்கொள்ள தைரியம் இல்லை இவருக்கு. எல்லாவற்றையும் ஆயுதத்தாலும் அதிகாரத்தாலும் அடக்கிவிடலாமென நினைக்கிறார். அதனால் துரத்தப்பட்டவர்களை கண்டும் விளங்கிக்கொள்ளும் அறிவு இல்லை அல்லது தானும் மாட்டுப்பட்டு விடுவேன் என்கிற அச்சமோ தெரியவில்லை. இங்கு அது தான் பிரச்சனையே. அது தான் முக்கிய பிரச்சனை. அதை சரி செய்ய யாரும் இல்லை, சரி செய்யவும் விடமாட்டார்கள். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. அதுவே இப்போ பெரிய கள்ளர், கொலைகாரருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. இவருக்கு நாமல் போன்றவர்களுக்கு ஜனாதிபதி ஆசை அடங்கும் வரை இது தொடரும். குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலாவும்வரை இந்த நப்பாசை இருந்துகொண்டே இருக்கும். ஒரு வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போதுவிண்ணப்பதாரியின் நன்னடத்தை நற்சான்றிதழ் பரிசோதிக்கப்படுகிறது. வெளிநாட்டுக்கு குடியேற விரும்புவோருக்கும் அவ்வாறான நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. ஆனால் ஒரு நாட்டை ஆளும் தலைவர்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ இது நடைமுறையில்லிலை. இந்த நாட்டில், பாராளுமன்றத்தில் இருப்பதெல்லாம் வடித்தெடுத்த கள்ளர், கொலை கொள்ளை, பொறுக்கி, போதைப்பொருள் கடத்திகள். நாடு எப்படி உருப்படும்? அனுர இப்படியானவர்களை தண்டித்து இப்டிப்பட்டவர்கள் அரசியலில் ஈடுபட தடைச் சட்டம் கொண்டுவரவேண்டும். நாளைக்கு இவர் தேர்தலில் நின்றாலும், தமிழர் வாக்கை இவருக்காக சேகரிக்க ஒரு கூட்டம் முண்டியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.2 points
-
அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா
2 pointsஇன்று இணையத்தில் படிக்க முடிந்த மற்றுமொரு கவிதையொன்று..🖐👇 Posted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் Posted byBookday23/06/2025No CommentsPosted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் வேடிக்கை மனிதர்கள் ****************************** ஆயுதங்கள் உங்கள் கைகளில் விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது உங்கள் தொழில்நுட்ப அதிநவீனத் தோட்டத்தில் நாங்கள் வெறும் செயற்கைப் புற்கள் உங்கள் சொற்களின் செய்நேர்த்தியில் எங்கள் சித்தாந்தங்கள் எல்லாம் அரதப் பழசாகிவிட்டன எங்கள் உடலுறுப்புகள் இனி உபயோகிக்கப் பட முடியாத உலோக பாகங்களாய் உதிர்ந்து கிடக்கின்றன எவ்வளவு நவீனமயப்படுத்தப்பட்டாலும் எங்கள் வயிறுகள் பசியின் பழைய மொழியை மறந்தபாடில்லை எங்கள் சஹாராத் தாகம் தணிக்க வற்ற வற்றக் குளித்த உங்கள் நீச்சல் குளங்களில் ஒரு சொட்டுத் தண்ணீரும் மிச்சமில்லை நாங்கள் தாகம் என்கிறோம் குடிக்கக் குருதி கொடுக்கிறீர்கள் நாங்கள் பசி என்கிறோம் ஒடுக்கு விழுந்த எங்கள் உணவுத் தட்டுகளில் பதுங்குகுழி தகர்க்கிற வெடிப் பொருள்களையும் இலக்கு மாறாத ஏவுகணைகளையும் பரிமாறுகிறீர்கள் போர் என்பது பங்குச் சந்தைகளில் விற்கப்படுகிற இன்னொரு சூதாட்டப் பத்திரம்! பெரு முதலாளிகளின் சதுரங்கத்தில் நிராதரவு அறிவுஜீவிகள் ராணியைவும் ராஜாவையும் காப்பாற்ற வெட்டுப்படப்போகிற வெறும் சிப்பாய்கள்! ஜனநாயகம் சர்வாதிகாரம் கேபிடலிசம் சோசலிசம் கம்யூனிசம் எல்லாச் சொற்களுமே உங்கள் அகராதிகளில் அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்யமுடியாது எங்கள் அரிச்சுவடிகள் உங்கள் ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன எல்லைத் தகராறு வயல்களில் பூக்களை வளர்க்கப் போகிறீர்கள் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் உங்களின் பழைய சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் நாங்கள்! பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது நவீன கட்டுமானமான செயற்கை நுண்ணறிவு மாளிகையை எங்களுக்கான சிறைச்சாலைகளாக மாற்றி வருகிறீர்கள் கேலிக்குரிய முரண் என்னவெனில் எங்களுக்காக நீங்கள் ஏற்பாடு செய்யும் ‘நவீன அடிமை’ பெயர் சூட்டுவிழாவில் அலைமோதி அலைமோதி இடம்பிடிக்கப் போகும் ஆடியன்ஸ்களும் நாங்கள்! எழுதியவர் : – நா.வே.அருள் https://bookday.in/series-3-some-poems-from-canada-written-by-na-ve-arul/2 points
-
மனதுக்கு பிடித்த BGM Background Music
மன உளைசல் , கவலைகளில் இருக்கும் போது கைபேசியில் இருந்து இப்படியான BGM இசைய கேட்டால் மனதில் மகிழ்ச்சி வரும்👍🥰❤️😍 , இசை தான் நல்ல மருந்து......................1 point
-
அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா
1 pointஅமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒரு பிரபஞ்சத்தைத் தேடி அது நடக்கிறது. நெடும் பாலைவனம் அதற்கு வழிவிடுகிறது. பெரும் பருந்தின் நிழலில் ஒட்டகங்களை வளர்க்கும் மன்னர்களின் கூடாரங்களுக்குள் தேநீர்க் கலசம் கொதிக்கிறது. பேரீச்சம் பழக் கூடை கனக்கிறது. இரந்துண்ணாக் குழந்தை. வழிநெடுகிலும் ஒட்டகங்களை மேய்க்கும் கறுத்துலர்ந்த மானுடர், முக்காடு இட்டு முகம் மூடிய பெண்கள். சாவீடுகளின் ஒப்பாரி. கொலைத் தொழிலை வரிந்து கொண்ட நெத்தன் யாகு கொக்கரிக்கிறான். பாரசீக நிலத்தின் கலாசாரச் காவலர்கள் யூரானியத்தைக் கொண்டு மலை முகடுகளுக்கிடையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வண்ணக் கம்பளங்கள் மூடிய நகரத்தில் மரணவீடுகளும் சிதறுகின்றன. கணைகளின் மொழியொன்றே பழம்பெரும் தேசத்தில எஞ்சுகிறது. கணிதமும் கவிதையும் பிரபஞ்சமும் அறிந்தவனின் புதை மேட்டில் தடக்கிய குழந்தை சொல்கிறது: தந்தையே உனது கல்லறையின் மீது ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் இரு முறை மலர்களைச் சொரியும் என்றாய் உன் மீது பூச் சொரிவதற்கு எப் பிணம் தின்னியும் தருவொன்றையும் உயிருடன் விடமாட்டான். உன் மீது ஒலிவம் பழங்களைச் சொரிவதற்கு என்னிடமும் ஒரு மரம் கூட இல்லை. ஆனால், ஒரு நாள் உன் கல்லறை மீது பிணந் தின்னிகளின் மனித முகமூடி கழன்று விழும். பெண்களின் முக்காடுகளும் உருமறைப்புக்களும் உதிரும். சிதறிய நகரங்களின் மேல் உன் பிள்ளைகள் வண்ண வண்ணக் கம்பளங்களால் கூடாரம் அமைப்பர் எனக்குக் கைகளும் கால்களும் முளைக்கும் பசியும் தாகமும் எடுக்கும். நேத்தன் யாகுவின் கல்லறை மீது ஒவ்வொரு வருடமும் இரு முறை மானுடம் காறி உமிழும். சொல்லிய கணத்தில் பாரசீக முகட்டில் குண்டுகள் பெரும் துளைகளை இட்டன. அத்துளைகளில் அமெரிக்க மூத்திரம் நிரம்பியது. தேவ அபிரா 23-06-20251 point
-
வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் வடகொரிய தனது கடற்கரை மாளிகையை திறந்துவிட்டால் கிம்மை முன்னுதாரணத் தலைவராக வரித்துக் கொண்ட யாழ்கள உறுப்பினர்கள் இலங்கை இந்தியா, கியுபா ,மேற்குலகநாடுகளுக்கு பதிலாக அங்கேயே செல்வார்கள்1 point
-
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இது விபடும் ..காசு அரசுக்கு வராது..1 point
-
நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம்
அண்ணாச்சி உங்க வீட்டிலையும் வந்து ..அஞ்சலி செலுத்தியிருக்க வேணும்...அதுதான் உங்கடை மனுசியின் கீப்பு..மகனின் நண்பன்..18 வயது பொடியன் படுக்கையறை கட்டிலில் கொல்லப்பட்டுக் கிடந்தானே ..அதுக்குத்தான்1 point
-
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இவ்வ்ளவு வருமானம் அரசுக்கு கிடைக்குது...பிறகேன் கடன் கடன் என்று கத்துகினம்1 point
-
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்ய மீண்டும் தடை!
அனுராவின் கட்டுப்பாட்டுக்குள் இன்னமும் ராணுவம் இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.1 point
-
இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்
ஆண்களுக்கு செய்யும் சுன்னத் இஸ்லாமிய மத கடப்பாடு. யூதருக்கும். ஆனால் பெண் பிள்ளைகளில் உறுப்பை முடமாக்கல் female genital mutilation மத கடப்பாடு அல்ல. வெறும் சமூக பழக்கம். பிரிதானியாவில் இதற்கு எதிராக கடும் சட்டம் உண்டு. வெளிநாட்டில் கொண்டு போய் செய்தாலும் மீள வந்ததும் பெற்றார் மீது வழக்கு பாயும். இப்படி சட்டங்கள் இலங்கையிலும் தேவை. இரெண்டு பேரை தூக்கி 5 வருடம் உள்ளே வைக்க எல்லாம் சரிவரும்.1 point
-
சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!
இங்கிலாந்தை போல் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் மைதானம் நிரம்பும் ஆதரவு ஏனை நாடுகலில் இல்லை எனிலும், இந்தியா, அவுஸ், தெஆ வில் இன்றும் டெஸ்டுக்கு மவுசு குறையவில்லை. ஆஷ்சஸ், பார்டர்-கவாஸ்கர், இந்தியா-பாக், இங்கிலாந்து/அவுஸ்/தெ ஆ தொடர்களுக்கு இந்த நாடுகளில் இப்போதும் நல்ல கூட்டம் வரும். இலங்கை பங்களாதேஷ் போன்ற போட்டிகளில் இந்த நாடுகளில் ஆர்வம் குறையினும், போட்டி விறு விறுப்பாக போனால் 3,4,5 நாளுக்கு கூட்டம் வரும். அனைத்தையும் விட முக்கியமாக, ஒரு அளவுக்கு கடினபந்து விளையாடிய அனைவருக்கும், பார்வையாளருக்கு அல்ல, வீரருக்கு டெஸ்டே இப்போதும் அவர்கள் விளையாட்டின் உச்சம். சச்சின் முதல், முரளி வரை தமது டெஸ்ட் சாதனைகளைதான் அதிகம் கொண்டாடுவார்கள். எத்தனை white ball specialist ஐ 10 வருடம் பின் நினைவில் வைக்கிறோம், ஆனால் அநேக டெஸ்ட்வீரர் புகழ் காலத்துக்கும் அழியாதது. ஆகவே இங்கிலாந்து, அவுஸ், தெ.ஆ, இந்தியா, பாக் இருக்கும் வரை டெஸ்ட்டுக்கு ஆபத்தில்லை. டெஸ்ட் உலக தொடர் புதிய ரத்தமும் பாய்ச்சியுள்ளது.1 point
-
பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த சின்னத்துரை தில்லைநாதன் - 75 வது அகவை வாழ்த்துகள்
தில்லைக்கு இன்று 75 29 JUN, 2025 | 02:33 PM வீரகத்தி தனபாலசிங்கம் வடமராட்சியில் எந்த சந்தியில் என்றாலும், எவரிடமாவது ‘றிப்போர்ட்டரை ‘ கண்டீர்களா என்று கேட்டால், அவர்கள் உடனே தில்லையைத் தான் கேட்கி!றார்கள் உடனடியாகவே என்று பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு தில்லைநாதன் வடமராட்சியில் மகா பிரபல்யம். அங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்ட மூத்த செய்தியாளர் அவர். கொழும்பிலும் கூட பிரதான தமிழ்ப் பத்திரிகை நிறுவனங்களில் வடபகுதி செய்தியாளர்களைப் பற்றி பேசும்போது தில்லையின் கதை வராமல் அந்த பேச்சு நிறைவுறாது. அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து இன்னமும் கூட சுறுசுறுப்புக் குறையாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தில்லை என்று நாம் அன்புடன் அழைக்கும் சின்னத்துரை தில்லைநாதன் இன்று தனது 75 வது அகவையில் பிரவேசிக்கிறார். இதுவரையான முக்கால் நூற்றாண்டு வாழ்வில் அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தை தில்லை பத்திரிகைத்துறைக்கு அர்ப்பணித்திருக்கிறார் வடமராட்சி மந்திகையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லையுடன் சுமார் நான்கு தசாப்தங்களுக்கும அதிகமான காலமாக எனக்கு நெருக்கமான நட்புறவு. அவரது எளிமையான சுபாவமும் நகைச்சுவையுணர்வு நிறைந்த பேச்சும் எவரையும் எளிதாக அவர்பால் கவர்ந்து விடும். தில்லைக்கு செய்தித்துறையில் நாட்டம் மிகவும் இளம் வயதில் அதாவது பள்ளிக்காலத்திலேயே முளைவிட்டுவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதையும் கூட. புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து படிக்கும்போது தில்லையின் வகுப்பாசிரியரான டி.எம்.இராசலிங்கம் அந்த வேளையில் வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளின் நிருபர். ஓய்வான நேர இடைவெளியில் வகுப்பில் வைத்தே செய்திகளை எழுதிவிட்டு தினமும் அவற்றை தபாலில் சேர்ப்பதற்காக மாணவர்களிடம் கொடுத்து அனுப்புவது அவர் வழக்கம். அவ்வாறு செய்திகளை தபாலில் சேர்க்கும் வேலையை விரும்பிச்செய்த மாணவர்களில் ஒருவர் தில்லை. ஆசிரியர் மறந்தாலும் தில்லை அவரிடம் சென்று ‘ சேர் இன்று தபால் கந்தோருக்கு போகத்தேவையில்லையா ‘ என்று தானாகவே கேட்டு செய்திகள் அடங்கிய தபாலுறைகளை வாங்கிக் கொள்வார். ஊரில் உள்ள புதினங்களை இந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு அவற்றை செய்தியாக்குவதிலும் இராசலிங்கம் வல்லவராம். அவ்வாறு புதினங்களை அவருக்குச் சொல்வதில் தில்லைக்கு ஒரு பிரியம். தாங்கள் தபாலில் சேர்த்த செய்திகள் பத்திரிகைகளில்ாபிரசுரமாகியிருக்கிறதா என்று தேடி வாசிக்கும் ஆர்வத்தையும் தில்லை நாளடைவில் வளர்த்துக் கொண்டார்.இவ்வாறு தான் பின்னாளில் பத்திரிகைத்துறையில் முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதற்கான விதையை ஊன்றிக் கொண்டதாக கூறுவார் தில்லை. பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது மந்திகை வைத்தியசாலைச் சந்தியை கடந்தே அவர் செல்லவேண்டும். வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகள் விவசாயிகள் நிறைந்தது. அந்த சந்தியில் தினமும் ‘ குழைத்தரகர்கள் ‘ கூடி நிற்பார்கள். அவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள். வீடு நோக்கிச்செல்லும் தில்லையை அவர்கள் இடைமறித்து வீரகேசரியையும் ஈழநாட்டையும் கொடுத்து உரத்து வாசிக்கவைத்து நாட்டு நடப்புக்களை அறிந்துகொள்வார்கள். இதை தில்லை ஒரு நாள், இரண்டு நாள் அல்ல தினமும்் செய்ய வேண்டி வந்தது. பத்திரிகைகளில் இருந்த சகல செய்திகளையும் ஒன்றுவிடாமல் வாசிக்கவேண்டும் என்று விடாப்பிடியாக நிர்பார்களாம் அந்த குழைத்தரகர்கள். தில்லை ஒன்றும் விருப்பமில்லாமல் அதைச் செய்யவுமில்லை. செய்திகளை முழுமையாக வாசித்து முடிந்த கையோடு அந்த தரகர்கள் அருகில் தேநீர் கடையில் வடை, பகோடா போன்ற பலகாரங்களை வாங்கி தில்லைக்கு கொடுப்பார்களாம். சிறு வயதில் இருந்தே தனக்கு பத்திரிகை வாசிப்பில் அக்கறை வளர்ந்ததற்கு அந்த ‘ மந்திகைச்சந்தி செய்திவாசிப்பு ‘ முக்கியமான ஒரு காரணம் என்று தில்லை தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் சுவாரஸ்யமாக கூறுவதுண்டு. பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட உடனடியாகவே தில்லை ஒரு செய்தியாளராக வேண்டும் என்பதைத் தவிர வேறு தொழிலில் நாட்டம் காட்டவில்லை. கண்டியில் இருந்து அப்போது வெளியாகிய ‘ செய்தி ‘ என்ற பத்திரிகையின் நிருபராகவே செய்தித் துறையில் அவர் காலடி வைத்தார். அந்த பத்திரிகையின் ஆசிரியர் சில வருடங்களுக்கு முன்னர் காலமான பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் மனைவியின் தந்தையார். ‘செய்தி ‘ நடத்திய கட்டுரைப்போட்டிக்கு தில்லை எழுதிய அனுப்பிய கட்டுரைக்கு பரிசு கிடைத்தது. 50 ரூபா பரிசைப் பெறுவதற்காக அவர் 1968 ஆண்டு கண்டிக்கு சென்றபோது அந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற கே.ஜி.மகாதேவா ( பிறகு அவர் ஈழநாடு பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பல வருடங்கள் சேவையாற்றினார்) நிருபராகப் பணியாற்றுமாறு கேட்கவே தில்லை அடுத்த பேச்சின்றி இணங்கிக்கொண்டார். பத்திரிகைத்துறையில் அன்று பிரவேசித்த அவர் அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீண்டு இன்றும் தொடருகிறது அவரின் செய்திப்பணி. பிறகு 1969 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையின் நெல்லியடி செய்தியாளராக இணைந்துகொண்ட தில்லை மூன்று வருடங்களில் (1972) வீரகேசரியின் புலோலி செய்தியாளரானார். வடமராட்சியின் திக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.சுந்தரலிங்கம் அன்றைய வீரகேசரி ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்துடன் தனக்கிருந்த நட்புறவை பயன்படுத்தி அந்த வாய்ப்பை தனக்கு பெற்றுக்கொடுத்ததாக நன்றியுணர்வுடன் தில்லை அடிக்கடி கூறுவார். 1987 வரை புலோலி செய்தியாளராக பணியாற்றிய தில்லையை வடமராட்சி ‘ லிபறேசன் ஒப்பரேசன் ‘ இராணுவ நடவடிக்கைக்கு பிறகு வீரகேசரியின் அன்றைய செய்தி ஆசிரியர் காலஞ் சென்ற செ.நடராஜா வடமராட்சி செய்தியாளராக கூடுதல் பொறுப்புகளுடன் பணியாற்றுமாறு பணித்தார். பிறகு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து 1997 ஆம் ஆண்டில் அன்றைய வடபகுதி போர்நிலைவரங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண செய்தியாளராக அனுபவமும் பொறுப்பும் வாய்ந்த ஒருவரே செயற்படவேண்டும் என்று முடிவெடுத்த வீரகேசரி நிறுவனம் தில்லையை யாழ்நகரை தளமாகக்கொண்டு பணியாற்றும் யாழ்ப்பாண செய்தியாளராகவும் மாற்றியது. ஆபத்து நிறைந்த அந்த காலகடடத்திலும், தில்லை எந்த தயக்கமும் இன்றி துணிவாற்றலுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 2009 வரை செம்மையாகப் பணியாற்றினார். இலங்கையின் உள்நாட்டுப்போர் பிராந்தியச் செய்தியாளர்களை தேசியரீதியான முக்கியத்துவத்தைக் கொண்டர்களாக மாற்றியது. அன்றைய சூழ்நிலையில் அது தவிர்க்க முடியாதது. பிராந்தியங்களில் இடம்பெற்ற சம்பவங்களே போர்க்காலத்தில் பெரும்பாலும் தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல, வெளியுலகினதும் கவனத்துக்குரியவையாக இருந்தன. அந்த வேளையில் பிராந்திய செய்தியாளர்கள் உள்நாட்டு ஊடகங்களினால் மாத்திரமல்ல, சர்வதேச ஊடகங்களினாலும் பெரிதும் நாடப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்களது செய்திகள் வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களை உலகறியச்செய்தன. அத்தகைய பணியை இடர்மிகுந்த சூழ்நிலைக்கு் மத்தியிலும், அர்ப்பணிப்புச் சிந்தையுடன் செய்த யாழ்ப்பாணச் செய்தியாளர்களில் தில்லைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகும் அவரின் பணி சுறுசுறுப்பாகத் தொடருகிறது. 1970 களின் பிற்பகுதியில் பருத்தித்துறையில் இடம்பெற்ற கமலம் கொலைவழக்கு, 1990 களின் பிற்பகுதியில் நடைபெற்ற செம்மணி கிருசாந்தி குமாரசாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகளை விரிவான முறையில் தில்லை அறிக்கையிட்டபோது முதலில் வீரகேசரியிலும் பின்னர் தினக்குரலிலும் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த வழக்கு விசாரணைகளின் தொகுப்புக்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தார்கள்.அந்த விசாரணைகள் பற்றிய செய்தி ஒரு நாள் பத்திரிகையில் வெளியாகத் தவறினாலும் உடனே வாசகர்களிடமிருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். அந்தளவுக்கு சிறப்பான முறையில் தில்லை செய்திகளை தொகுத்தளித்தார். போர்க்கால கட்டத்தில் இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் 2004 ஆம் ஆண்டில் விருது வழங்கிக் கௌரவித்த போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அந்த விருது தில்லைக்கு கிடைத்தது. அடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து கொழும்பில் நடத்துகின்ற பத்திரிகைத்துறைக்கான உயர்விருது விழாவிலும் தில்லை கௌரவிக்கப்பட்டார். அவரின் ஊடகத்துறைச் சேவையை பாராட்டி பருத்தித்துறை பிரதேச செயலகம் 2013 ஆம் ஆண்டில் ‘ கலைப்பருதி ‘ பட்டம் வழங்கியது. கல்வி அமைச்சின் விருது ஒன்றும் தில்லைக்கு கிடைத்தது. பத்திரிகைத்துறைக்கு தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த காலஞ்சென்ற வீரகேசரி யாழ்ப்பாணச் செய்தியாளர் செல்லத்துரை போன்று அனுபவசாலிகளின் வரிசையில் வைத்து ஒப்பிடக்கூடிய ஒருவரான தில்லையை எந்த நேரத்தில் நேரடியாகக் கண்டாலும் அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டாலும், நலம் விசாரித்துவிட்டு அடுத்து உடனடியாக கதை பத்திரிகைத்துறைக்கு நகர்ந்து விடும். அந்த துறைக்கு தன்னாலான பணியை தொடர்ந்தும் செய்யவேண்டும் என்ற தில்லையின் ஆழமான ஆர்வத்தின் வெளிப்பாடே அது. தில்லை மிகுந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்ந்துவடமராட்சியில் எங்காவது ஒரு சந்தியில் எவரிடமாவது ‘றிப்போர்ட்டரை ‘ கண்டீர்களா என்று கேட்டால், அவர்கள் உடனே தில்லையைத்தான் கேட்கிறோம் என்று பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு தில்லைநாதன் வடமராட்சியில் மகா பிரபல்யம். அங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்ட செய்தியாளர் அவர். கொழும்பிலும் கூட பிரதான தமிழ்ப்பத்திரிகை நிறுவனங்களில் வடபகுதி செய்தியாளர்களைப் பற்றி பேசும்போது தில்லையின் கதை வராமல் இருக்காது. அரைநூற்றாண்டு காலமாக பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து இன்னமும் கூட சுறுசுறுப்புக் குறையாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தில்லை என்று நாம் அன்புடன் அழைக்கும் சின்னத்துரை தில்லைநாதன் நாளைய தினம் 70 வது அகவையில் காலடிவைக்கிறார். மந்திகையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லையுடன் சுமார் நான்கு தசாப்தங்களாக எனக்கு நெருக்கமான நட்புறவு இருந்துவருகிறது. அவரது எளிமையான சுபாவமும் நகைச்சுவையுணர்வு நிறைந்த பேச்சும் எவரையும் எளிதாக அவர்பால் கவர்ந்துவிடும். தில்லைக்கு செய்தித்துறையில் நாட்டம் மிகவும் இளம் வயதில் அதாவது பள்ளிக்காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதையும் கூட. புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து படிக்கும்போது தில்லையின் வகுப்பாசிரியரான டி.எம்.இராசலிங்கம் அந்தவேளையில் வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளின் நிருபர்.ஓய்வான நேர இடைவெளியில் வகுப்பில்வைத்தே செய்திகளை எழுதிவிட்டு தினமும் அவற்றை தபாலில் சேர்ப்பதற்காக மாணவர்களிடம் கொடுத்து அனுப்புவது அவர் வழக்கம். அவ்வாறு செய்திகளை தபாலில் சேர்க்கும் வேலையை விரும்பிச்செய்த மாணவர்களில் ஒருவர் தில்லை. ஆசிரியர் மறந்தாலும் தில்லை அவரிடம் சென்று ‘ சேர் இன்று தபால் கந்தோருக்கு போகத்தேவையில்லையா ‘ என்று தானாகவே கேட்டு செய்திகள் அடங்கிய தபாலுறைகளை வாங்கிக்கொள்வாராம். ஊரில் உள்ள புதினங்களை இந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு அவற்றை செய்தியாக்குவதிலும் இராசலிங்கம் வல்லவராம். அவ்வாறு புதினங்களை அவருக்குச் சொல்வதில் தில்லைக்கு ஒரு பிரியம்.தாங்கள் தபாலில் சேர்த்த செய்திகள் பத்திரிகைகளில் வந்திருக்கிறதா என்று தேடி வாசிக்கும் ஆர்வத்தையும் தில்லை நாளடைவில் வளர்த்துக்கொண்டார்.இவ்வாறுதான் பின்னாளில் பத்திரிகைத்துறையில் முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதற்கான விதையை ஊன்றிக்கொண்டதாக தில்லை கூறுவார். பாடசாலை முடிந்து தில்லை வீடு திரும்பும்போது மந்திகை வைத்தியசாலைச் சந்தியை கடந்தே செல்லவேண்டும். வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகள் விவசாயிகள் நிறைந்தது. அந்த சந்தியில் தினமும் ‘ குழைத்தரகர்கள் ‘ கூடி நிற்பார்கள். அவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள். வீடு நோக்கிச்செல்லும் தில்லையை அவர்கள் இடைமறித்து வீரகேசரியையும் ஈழநாட்டையும் கொடுத்து உரத்து வாசிக்கவைத்து நாட்டு நடப்புக்களை அறிந்துகொள்வார்கள். இதை தில்லை ஒரு நாள், இரண்டு நாள் அல்ல தினமும் செய்யவேண்டியேற்பட்டுவிட்டது. இரு பத்திரிகைகளிலும் இருந்த சகல செய்திகளையும் ஒன்றுவிடாமல் வாசிக்கவேண்டுமாம். தில்லை ஒன்றும் விருப்பமில்லாமல் அதைச் செய்யவுமில்லை. செய்திகளை முழுமையாக வாசித்துமுடிந்த உடனடியாக அந்த தரகர்கள் அருகில் இருந்த தேநீர் கடையில் வடை, பகோடா போன்ற பலகாரங்களை வாங்கி தில்லைக்கு கொடுப்பார்களாம். சிறு வயதில் இருந்தே தனக்கு பத்திரிகை வாசிப்பில் அக்கறை வளர்ந்ததற்கு அந்த ‘ மந்திகைச்சந்தி செய்திவாசிப்பு ‘ முக்கியமான ஒரு காரணம் என்று தில்லை தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் கூறுவார். பாடசாலை கல்வியை முடித்துக்கொண்ட உடனடியாகவே தில்லை ஒரு செய்தியாளராக வேண்டும் என்பதைத் தவிர வேறு தொழிலில் நாட்டம் காட்டவில்லை. அவர் கண்டியில் இருந்து வெளியாகிக்கொண்டிருந்த ‘ செய்தி ‘ என்ற பத்திரிகையின் நிருபராகவே செய்தித்துறையில் காலடி வைத்தார். அதன் ஆசிரியர் பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் மாமனாராவார். ‘ செய்தி ‘ நடத்திய கட்டுரைப்போட்டிக்கு தில்லை எழுதிய அனுப்பிய கட்டுரைக்கு பரிசு கிடைத்தது. 50 ரூபா பரிசைப் பெறுவதற்காக அவர் 1968 ஆண்டு கண்டிக்கு சென்றபோது அந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற கே.ஜி.மகாதேவா ( பிறகு அவர் ஈழநாடு பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பல வருடங்கள் சேவையாற்றினார்) நிருபராகப் பணியாற்றுமாறு கேட்கவே தில்லை மறுபேச்சின்றி இணங்கிக்கொண்டார். அன்று பத்திரிகைத்துறையில் பிரவேசித்த அவர் அதற்குப் பிறகு திரும்பிப்பார்க்கவில்லை. 52 வருடங்களாக நீண்டு இன்றும் தொடருகிறது அவரின் செய்திப்பணி. பிறகு 1969 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையின் நெல்லியடி செய்தியாளராக இணைந்துகொண்ட தில்லை மூன்று வருடங்களில் (1972) வீரகேசரியின் புலோலி செய்தியாளரானார். வடமராட்சியின் திக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.சுந்தரலிங்கம் அன்றைய வீரகேசரி ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்துடன் தனக்கிருந்த நட்புறவை பயன்படுத்தி வாய்ப்பை தனக்கு பெற்றுக்கொடுத்ததாக நன்றியுணர்வுடன் தில்லை அடிக்கடி கூறுவார். 1987 வரை புலோலி செய்தியாளராக பணியாற்றிய அவரை வடமராட்சி ‘ லிபறேசன் ஒப்பரேசன் ‘ இராணுவ நடவடிக்கைக்கு பிறகு வீரகேசரியின் அன்றைய செய்தி ஆசிரியர் காலஞ்சென்ற செ.நடராஜா வடமராட்சி செய்தியாளராக கூடுதல் பொறுப்புகளுடன் மாற்றினார். பிறகு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து 1997 ஆம் ஆண்டில் அன்றைய வடபகுதி போர்நிலைவரங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண செய்தியாளராக அனுபவமும் பொறுப்பும் வாய்ந்த ஒருவரே செயற்படவேண்டும் என்று முடிவெடுத்த வீரகேசரி நிறுவனம் தில்லையை யாழ்நகரை தளமாகக்கொண்டு பணியாற்றும் யாழ்ப்பாண செய்தியாளராக பணியாற்றவைத்தது. அது ஆபத்து நிறைந்த காலகட்டம் என்றபோதிலும், தில்லை எந்தவிதமான தயக்கமும் இன்றி துணிச்சலுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 2009 வரை பணியாற்றினார். இலங்கை உள்நாட்டுப்போர் பிராந்தியச் செய்தியாளர்களுக்கு தேசியரீதியான முக்கியத்துவத்தை தவிர்க்கமுடியாமல் கொடுத்தது. பிராந்தியங்களில் இடம்பெற்ற சம்பவங்களே போர்க்காலத்தில் பெரும்பாலும் தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல, வெளியுலகினதும் கவனத்துக்குரியவையாக இருந்தன. அந்தவேளையில் பிராந்திய செய்தியாளர்கள் உள்நாட்டு ஊடகங்களினால் மாத்திரமல்ல, சர்வதேச ஊடகங்களினாலும் பெரிதும் நாடப்பட்டவர்களாக இருந்தார்கள்.அவர்களது செய்திகள் வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களை உலகறியச்செய்தன. அத்தகைய பணியை இடர்மிகுந்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் செய்த யாழ்ப்பாணச் செய்தியாளர்களில் தில்லைக்கு ஒரு முக்கிய இடமுண்டு.உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகும் அவரின் பணி சுறுசுறுப்பாகத் தொடருகிறது. 1970 களின் பிற்பகுதியில் பருத்தித்துறையில் இடம்பெற்ற கமலம் கொலைவழக்கு, 1990 களின் பிற்பகுதியில் நடைபெற்ற செம்மணி கிருசாந்தி குமாரசாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகளை விரிவான முறையில் தில்லை அறிக்கையிட்டபோது முதலில் வீரகேசரியிலும் பின்னர் தினக்குரலிலும் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்த வழக்கு விசாரணைகளின் தொகுப்புக்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தார்கள்.அந்த விசாரணைகள் பற்றிய செய்தி ஒரு நாள் பத்திரிகையில் வெளியாகத் தவறினாலும் உடனே வாசகர்களிடமிருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துவிடும்.அந்தளவுக்கு சிறப்பான முறையில் தில்லை செய்திகளை தொகுத்தளித்தார். போர்க்கால கட்டத்தில் இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் 2004 ஆம் ஆண்டில் விருது வழங்கிக் கௌரவித்த போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அந்த விருது தில்லைக்கு கிடைத்தது. அடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து கொழும்பில் நடத்துகின்ற பத்திரிகைத்துறைக்கான உயர்விருது விழாவிலும் தில்லை கௌரவிக்கப்பட்டார். அவரின் ஊடகத்துறைச் சேவையை பாராட்டி பருத்தித்துறை பிரதேச செயலகம் 2013 ஆம் ஆண்டில் ‘ கலைப்பருதி ‘ பட்டம் வழங்கியது. கல்வி அமைச்சின் விருதொன்றும் அவருக்குக் கிடைத்தது. பத்திரிகைத்துறைக்கு தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த காலஞ்சென்ற வீரகேசரி யாழ்ப்பாணச் செய்தியாளர் செல்லத்துரை போன்று அனுபவம் மிக்கவர்களின் வரிசையில் வைத்து ஒப்பிடக்கூடிய ஒருவரான தில்லையை எந்த நேரத்தில் நேரடியாகக் கண்டாலும் அல்லது தொலைபேசியல் பேசினாலும் நலம் விசாரித்துவிட்டு அடுத்து உடனடியாக கதை பத்திரிகைத்துறை பற்றியதாக நகர்ந்துவிடும். அந்த துறைக்கு தன்னாலான பணியை தொடர்ந்தும் செய்யவேண்டும் என்ற அவரின் ஆழமான ஆர்வத்தின் வெளிப்பாடே அது. தில்லை மிகுந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்ந்து பத்திரிகைத்துறைப் பணியை செவ்வனே தொடர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறோம். https://www.virakesari.lk/article/2187281 point
-
தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் நிறைவேற்ற வேண்டும் - திஸ்ஸ விதாரண வலியுறுத்தல்
இது சரியான நிஞாயம்! இதை செய்யாமல் நாடு இம்மியளவும் முன்னேறாது. காலத்திற்கு காலம் இவற்றை சொல்லி ஏமாற்றியே தலைமைகள் மாறிக்கொண்டிருக்கும்.1 point
-
உள்ளகப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என்ற உண்மை உயர்ஸ்தானிகர் வோல்கரின் அறிக்கையில் உள்வாங்கப்படவேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்
இதைத்தானே சி. வி .விக்கினேஸ்வரனும் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார். அப்போ, சாணக்கியன் உட்பட பலர் விமர்சித்திருந்தனரே?1 point
-
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
அண்ணை, நானும் இந்த பாதையால் பயணிப்பதை அவ்வளவாக விரும்புவதில்லை. புகையால் சுவாசிப்பது சிரமமாக இருக்கும்.1 point
-
பஸ்ஸில் பெண்ணின் கால்களை காணொளி எடுத்த இளைஞனுக்கு சிறை தண்டனை
நேர பார்த்து ரசித்து விட்டு போயிருக்கலாம். போட்டோ எடுத்து வீட்டை கொண்டு போய் வைச்சு ரசிக்க நினைச்சது தான் தப்பு..😎 விசர் பொடியன்.🤣1 point
-
வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை
உண்மை, ஆனால் அந்தக்கூட்டத்துக்குத் தாம் படித்தவர்கள் என்று கூறியவாறு ஆலவட்டம் பிடிக்கிறதுக்கும் ஒரு கூட்டமிருப்பதுதான் வெட்கக்கேடு.1 point
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
இனவாத அரசுடன் சேர்ந்து அவர்களுக்காக தம் இனத்தவர்களையே கொத்துக்கொத்தாக கொலை செய்த டக்ளஸ்,சித்தார்த்தன் கும்பலை நியாயப்படுத்த முயல்கின்றீர்கள். முதலில் கொலைகள் ஏன் நடத்தப்பட்டன என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள் சொல்வது இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. யாழ்ப்பாணத்திற்கு மட்டும் அல்ல.1 point
-
பஸ்ஸில் பெண்ணின் கால்களை காணொளி எடுத்த இளைஞனுக்கு சிறை தண்டனை
இவ்வளவு விரைவாக தீர்ப்பு சொன்னது தவறு MY lord அவரது காலணியின் உயரத்தைக் கணக்கிட எடுத்திருக்கலாம். மீளாய்வு செய்யவும்.😃1 point
-
சிரிக்கலாம் வாங்க
1 point1 point
- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்!
அரசியல் அலசல் பகுதியில் இணைப்பதுதான் சரியென்று நினைக்கின்றேன். ஆனால் அதிகம் இணைத்தால் பார்வையாளர்கள் சுருங்கிவிடுகின்றார்கள்! இனிமேல் கவனம் எடுக்கின்றேன்😊1 point- செம்மணிப் புதைகுழி வேதனை....முகப்புத்தகத்தில் பிரதி பண்ணப்பட்டது
வன்னித் தேசம் 23h · 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அல்லைப்பிட்டிக்கு இலங்கை இராணுவம் வந்தபோது பிலிப்பு நேரியார் ஆலய வளவிற்குள் அகதிகளாக உட்கார்ந்து இருந்த 'அல்லைப்பிட்டி, மண்டைதீவு, மண்கும்பான்' ஆகிய மூன்று கிராம மக்களில் அனைத்து திருமணமான, சில திருமணமாகாத இளைஞர்களின் கைகளிலும் குழந்தைகள் இருந்தன. "பிள்ளை, குட்டிக் காரன் என்றால் பிடிக்க மாட்டார்கள்" என்று எண்ணிய பல இளைஞர்கள் தங்கள் அக்கா, தங்கையின் பிள்ளைகளைக் கையில் தூக்கி வைத்து இருந்தார்கள். கோயில் வளவிற்குள் ஒரு இராணுவ சிப்பாய் கூட நுழையவில்லை. அந்தப் படை நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மட்டும் தனது உதவியாளர்கள் இருவருடன் ஆலய வளவிற்குள் நுளைந்து வண.பிதா.சந்திரபோஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி "13 வயது தொடங்கி 40 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அனைவரையும் என்னிடம் நம்பி ஒப்படையுங்கள். 'தலையாட்டி' முன்னால் விட்டு அடையாளம் காட்டி விட்டுப் பத்திரமாக உங்களிடம் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம்! என்று அந்தக் குருவானவருக்கு உறுதி அளித்து விட்டு எனது அண்ணன்,நான், எனது ஒரு தம்பி உட்பட 13 வயது தொடங்கி 40 வயதுக்கு உட்பட்ட சுமார் 200 பேரைக் கைது செய்து மண்டைதீவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களில் பலர் 35 வருடங்கள் ஆகியும் இன்று வரை வீடு திரும்பவில்லை. ராணுவம் பிலிப்பு நேரியார் கோயில் வளவைச் சுற்றி வளைத்து நின்ற போது தனது பாதுகாப்புக்காக தனது அக்காவின் மகளைக் கையில் தூக்கி வைத்திருந்த எனது நண்பன் சிவபாலன் இராணுவம் எங்களை வெளியே அழைத்துச் சென்ற போது அந்த அக்காவின் குழந்தையை அக்காவிடமே கொடுத்து விட்டு எங்களுடன் வந்தான். எவ்வளவு உயிர்ப் பயம் இருந்தால் இளைஞர்கள் அக்காவின், தங்கையின் பிள்ளையைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு 'திருமணம் ஆனவர்கள்' போல நடித்திருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.😌" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t81/1/16/1f60c.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> எங்களைப் பிலிப்பு நேரியார் ஆலய வளவில் இருந்து தொலை தூரத்திற்கு அஃதாவது கிறீஸ்தவ மதகுரு மற்றும் அந்த ஆலயத்தில் எஞ்சியிருந்த பொதுமக்களுக்கு எங்கள் கதறல் சத்தம் கேட்காத தொலைவுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் எனக்கும் என்னோடு அழைத்து வரப்பட்ட சுமார் 200 பேருக்கும் நடந்ததெல்லாம் எழுத்தில் வடிக்க முடியாதவைகள். எனது அண்ணன் உட்பட இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியவர்கள் கண்ணைக் கட்டி அழைத்துச் செல்லப் பட்டது, சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் கூட 'தர்க்கவியல் ரீதியாக'(Logic) ஒரு காரணம் இருக்கலாம். ஆனால் இராணுவத்தைக் கண்டதும் உயிர்ப் பயத்தின் காரணமாக அக்காவின் குழந்தையைக் கையில் தூக்கி வைத்திருந்த 'இயக்கத்துடன்' எந்த வித தொடர்பையும் பேணாத எனது நண்பன் சிவபாலனும், தமிழகத்தில் இருந்து எங்கள் கிராமத்துக்குப் பிழைப்புத் தேடி வந்து எங்கள் உறவினர் ஒருவரின் கடையில் நம்பிக்கைக்கு உரிய ஊழியனாக வேலை செய்து கொண்டிருந்த 'முருகனும்' இன்னும் 23 பேரும் "இராணுவத்திற்கு சில வேலைகளில் உதவ வேண்டி இருக்கிறது, 25 பேர் தேவை; எழுந்து வாருங்கள்! இரண்டு நாட்களில் விட்டு விடுவோம்! என்று இன்னொரு ராணுவ அதிகாரியும் தற்போது தமிழ்த் தேசியப் பரப்பில் ஒரு கட்சியால் 'பாவமன்னிப்பு' கொடுக்கப் பட்டுள்ள தோழரும் சொன்னதை நம்பி அல்லவா எழுந்து சென்றார்கள். அந்த 'எந்தப் பாவமும் அறியாத 25 பேரும் கூட' 35 வருடங்கள் ஆகியும் இன்று வரை வீடு திரும்பாததை என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது. செம்மணியில் 'குழந்தைகளின் எலும்புக் கூடுகளும்' தோண்டி எடுக்கப் படுவதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்பாக்களுடன் அரியாலை, கைதடி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் போது அப்பா, சில வேளை அம்மாக்களுடன் இராணுவத்தால் பிடிக்கப் பட்டு இப்போது புதை குழிகளில் இருந்து எலும்புக் கூடுகளாக மீட்கப் படும் அந்தப் பிஞ்சுகளுக்கும் அஞ்சலி! 💐" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/te3/1/16/1f490.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌸" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tf0/1/16/1f338.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">💮" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t70/1/16/1f4ae.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪷" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4e/1/16/1fab7.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🏵" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t1a/1/16/1f3f5.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌹" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f339.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌺" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t99/1/16/1f33a.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌻" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t1a/1/16/1f33b.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌼" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t9b/1/16/1f33c.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌷" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6f/1/16/1f337.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">(அவர்கள் இப்போது உயிரோடு இருந்தால் சுமார் 35 வயதைத் தொட்ட நடு வயது ஆண்களாக, பெண்களாக மருத்துவராக, பொறியியலாளராக, ஆசிரியர்களாக இன்ன பிற பதவிகளில் இருந்திருப்பார்கள்) கீழே உள்ளது வேறு ஒருவர் எழுதிய பதிவு: ------------------------------------------------ முன் சைக்கிள் பார்ல எங்கள ஏத்திற்று பின்னுக்கு கரியல்ல அம்மாவ ஏத்திற்று அப்பா போவார் இது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும் இப்படித்தான் பல குடும்பங்கள் செம்மணி தாண்டிப் போகும்போது இராணுவம் சோதனைக்கு என்று கூப்பிடும். அங்கு என்ன நடக்கும்? அப்பாவையும் நிர்வாணமாக்கி அப்பா கண் முன்பே இராணுவம் அவர் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வார்கள். ஒருவனா இல்லை; அத்தனை பேரும் கொடுமை செய்து கெடுப்பார்கள். பின் குடும்பத்தையே அடித்து கொன்று குழி தோண்டிப் புதைப்பார்கள் இது அங்கு வழமையாக நடந்தது. ஒருவர் அல்ல இருவர் அல்ல ஒன்பது இராணுவமும் இரண்டு காவல்துறையும் சேர்ந்து பாடசாலை மாணவி கிருசாந்தியை வன் கொடுமை செய்ததாக அதே இராணுவ முகாம் இராணுவ சிப்பாயின் வாக்குமூலம் உள்ளது உங்களுக்கு தெரியுமா? கிருசாந்தியை தேடிச்சென்ற பக்கத்து வீட்டு அண்ணனையும், அவளின் தாயையும் சகோதரனையும் கொலை செய்யும்போதும் கூட அங்கு கிருசாந்தியை கூட்டு பாலியல் செய்துகொண்டுதான் இருந்தார்கள். கிருசாந்தியின் தாயையும் சகோதரனையும் மற்றவரையும் அவர்கள் அடித்துக் கொல்லும் போது நேரம் இரவு 10:00 மணி. கூட்டு பாலியல் செய்து முடிந்து கிருசாந்தியை கொலை செய்து புதைக்கும்போது நேரம் நள்ளிரவு 12:00 இப்படி எத்தனையோ குடும்பங்கள் சிதைக்கப்பட்ட இடம்தான் செம்மணி 😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😢" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/te/1/16/1f622.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> மறந்து வாழ ஆசைப்படுகிறீர்களா? அப்படி வாழ்ந்தால் வரலாறு உங்களை மன்னிக்காது.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
கொலைகளை செய்பவர்கள் அனைவரும் தப்பிக்கும் நோக்குடன் ஏதோ ஒரு காரணத்தை கூறிக்கொண்டே இருப்பர். இந்த விடயத்தில் இலங்கை அரசு இயக்கங்கள் எல்லோருமே ஒரே நேர்கோட்டிலேயே ஒரே கொள்கையிலேயே பயணித்தார்கள். அவரவுக்கு சார்பானவர்கள் அவர்களின் கொலைகளை மட்டும் நியாயப்படுத்துவார்கள். ஏதோ யுத்தம் முடிந்தது மக்களைப் பொறுத்தவரை மகிழ்சசியே. தமிழர்களின் ஜனத்தொகை யுத்தத்திற்கு முன்னர் இருந்த காலத்தில் வளர்சசியடைந்த வேகத்தில் மீண்டும் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. அதே போல யுத்தத்திற்கு முன்பு இருந்த கலவி, வேலைவாய்புகள், சுய பொருளாதாரம் ஆகியவை கிடைத்தாலே தற்போதைய நிலையில் போதைமர என்ற நிலையே காணப்படுகிறது. 1970 களில் யாழ்பாணத்தில் சொந்த உழைப்பில் வீடுகளைக் கட்டிய எம்மவரால் இன்று ஊர் உழைப்பில் அதை செய்ய முடியாதுள்ளது. வெளிநாட்டு வருமானத்தில் தங்கி வாழும் பொருளாதார நிலையையும் சோம்பேறித்தனத்தையும் யுத்தமே ஏற்படுத்தியது.1 point- பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் & படைக்கலன்கள் - 150+ படிமங்களுடன்
நல்லதொரு பதிவு. நன்னிகள் நன்னி மூன்று வருடங்களாச்சு. எப்பொ உங்கள் கருத்துவரும்😂1 point- சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!
கொன்னுபுடுவேன்😂1 point- எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
கொலை என்பதே தவறான விடயம். இதில்..... உலகில் கொண்ட கொள்கைகளுக்கு எதிராக நிற்பவர்களை கொலை செய்வது அதிசயமல்ல. ஆனால்.... நியாயமான கொள்கைகளுக்கு எதிராக நிற்பவர்களை / குறுக்கீடு செய்பவர்களை கொலை செய்வதற்கும்.......நியாயமான கொள்கையாளர்களை எதிரிகளுக்கு காட்டிக்கொடுத்து கொலை செய்பவர்களுக்கும் நிறைய வேற்றுமையும் வித்தியாசங்களும் உண்டு.1 point- பல்லாண்டு பல்லாண்டு - சுப.சோமசுந்தரம்
நான் organ donation இற்கு எழுதிக் கொடுத்து இருக்கின்றேன். என் health card இல் நான் அவ்வாறு எழுதிக் கொடுத்ததுக்கு சான்றாக ஒரு முத்திரை இட்டுள்ளார்கள்.1 point- பல்லாண்டு பல்லாண்டு - சுப.சோமசுந்தரம்
நானும் அதைச் செய்திருக்கின்றேன். அதற்கான அடையாள அட்டை எப்பொழுதும் எனது Purseக்குள் இருக்கும்.1 point- எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
இந்த நிகழ்வில் இப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கக் கூடாது. ஆனால் சிவஞானம் தன்னை நியாயவாதியாக காட்டிக் கொள்கிறார். தமிழரசுக்கட்சியின் தலைவர்களாக மக்களாலும் கட்சி அங்கத்தவர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்களே இன்று தமிழரசுக்கட்சியின் தலைமையை அடாத்தாக கைப்பற்றியிருக்கிறார்கள். ஒரு பழம்பெரும்கட்சி தலைவர் பொதுச்செயலாளர் இல்லாமல் பதில்தலைவர் பதில் செலாளரை வைத்துக்கொண்டு நீண்டகாலமாக இருப்பது. நகைப்புக்குரியது. தற்காலிக ஏற்பாடாக யாப்பில் இருக்பகும் விடயத்தை நிரந்தர ஏற்பாடாக மாற்றி தங்களுக்குப் பிடிக்காதவர்களை கட்சியிலிருந்து வெளியேஷற்றி இருக்கிறார்கள். தான் செய்த செயலுக்கு பொது வெளியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் என்று தெரிந்து கொண்டு அவர் அதைத்தவிர்த்திருக்க வேண்டும்.அங்கே போய் தனக்கு வெள்ளையடிக்க வெளிக்கிட்டு அசிங்கப்பட்டுப் போயிருக்கிறார்.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointமத அடிப்படைவாதிகள் ஈரானில் முல்லாக்கள் செய்தது போன்று இருண்ட காலத்திற்கே மக்களை கொண்டு சென்று தங்களது அடிமைகளாக வைத்திருக்கவே முயற்சிப்பார்கள் மதவாதிகளின் கீழ் ஒடுக்கபட்டுவாழ்வதே உண்மையான மகிழ்ச்சியும் சுதந்திரமும் என்று போதிப்பார்கள் அதன் விளைவுகளே வவுனியாவில் மனைவி தலையை வெட்டியவரை ஹீரோவாக கொண்டாடிய நிலையும் யாழ்களத்தில் முல்லாக்கள் ஆட்சியை போற்றியதும் 👍 தனிய பிஜேபிடம் மட்டுமல்லாமல் இதர மதவாதிகளிடமும் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்1 point- அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா
1 pointநல்ல கவிதை நிழழி! இணையத்தில் தேடியபோது கிடைத மேலதிக தகவல். அம்ருதா இணைய இதழ் - Amrutha E-Ma...யுத்தத்தின் காயங்களும் அவற்றின் வடுக்களும் - தேவ அபிராஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம், புலம் பெயர்வு இரண்டு மையங்களிலும் இருந்து எழுந்த கருக்களில் இருந்துதான் இக்கதைகள் பிறந்திருக்கின்றன.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஆம் இதை அறிந்துள்ளேன். ருசியா எதை உடனடியாக மேற்கு, us, இஸ்ரேல் ஐ உறுத்தக் கூடியதாக செய்து இருக்க முடியும் என்பதை சிந்திப்பதத்திற்கு எந்தஒரு விடயமும் இல்லை. அல்லது (நான்) அறியாமல் இருக்கலாம் அனால் சீனா, அருமை உலோக உற்பத்தி கிட்டத்தட்ட ஏகபோக பிடியால், மேற்கு, us, இஸ்ரேல் க்கு boiling the frog போல வெளியே தெரியாமல் ஆயுதம் செய்வதை குறைப்பதுக்கு ஒன்றும் சொல்லாமல் ஒழுங்குகளை (regulations) ஐ இறுக்கி (சர்வசாதாரணமாக ஏற்றுமதி அனுமதி விண்ணப்பம் - அனுமதி நாட்களை கூட்டலாம்) செய்யலாம். ஏனெனில் இந்த அருமை உலோகங்கள் மிக உணர்திறன் (அதிஉயர் வெப்ப, காந்த, ராடாரை விலத்துவது, உறுஞ்சுவது போன்ற பிரயோகங்களுக்கு) ஆயுத உடற்பதியில் இன்றியமையாதது. (அருமை உலோகங்கள் உண்மையில் அருமை ஏனெனில் இயற்றுகை உலோக தாதுக்களில் அவற்றின் மிக செறிவு குறைவு, வேறு பொதுபவன உலோகங்களை உடற்பத்தி செய்யும் போது பக்கவிளைவை கொண்டு பெறவேண்டி இருப்பதால்.)1 point- செம்மணிப் புதைகுழி வேதனை....முகப்புத்தகத்தில் பிரதி பண்ணப்பட்டது
புலிகள் அவர்களை பணயக்கைதிகளாக வைத்து தம்மை காப்பாற்ற முனைந்தால்த்தான் இராணுவம் வேறு வழியின்றி அப்படி நடந்து கொண்டது என குதர்க்கம் பண்ணவும் நம்மில் சிலருண்டு பாத்துக்கதையுங்கோ!1 point- "வாழ்ந்து காட்டுவோம்" & "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!”
"வாழ்ந்து காட்டுவோம்" & "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” "வாழ்ந்து காட்டுவோம்" "மாழ்ந்த நாகரிகங்களை பாடமாய் படித்து ஆழ்ந்த சிந்தனையில் இலக்கியம் படைத்து தாழ்ந்த சமூகத்துக்கு அறிவுரை வழங்கி வீழ்ந்த உறவுக்கு கைகள் கொடுத்து சூழ்ந்த பகையை அறுத்து எறிந்து வாழ்ந்து காட்டுவோம் நாம் யாரென்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே உயர்வை நோக்கி கனவு அமையட்டும்! அயர்வை அகற்றி உழைத்து துயர்வைப் போக்குங்கள்!" " பயிர்கள் செழிக்கப் பசளையிட்டு உயிர்கள் தழைக்க விளைச்சலைப் பெருக்குவீர் தயிரைக் கடைந்து வெண்ணை கொடுப்பீர் வயிறார உணவளித்தே மானுடத்தார்க்கு வாழ்வளிப்பீர்!" "ஆடிப்பட்டம் தேடி விதைத்து ஆலமர நிழலில் ஓய்வு காணும் உழவனே ஆக்கம் தரும் தொழிலின் தலைவனே ஆண்டவனின மறுவுருவம் நீரன்றோ?" "ஏரெடுத்து பாடுபடும் மேன்மக்களே! ஏழை எளியவர்களுக்கு புத்தாடை பொங்கல் பகிர்வீர் ஏமாற்றம் தரா உழைப்பாளி நீர்தானே ஏதும் சுழலாது உழவனெனும் அச்சாணி இல்லையேல்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.