அந்நியரிடமிருந்து ஒன்று சேர்ந்து பெற்ற சுதந்திரத்தை, தன்னகப்படுத்தி அந்த இனத்தை அந்நியப்படுத்திய துரோகிகள் நாட்டை, மக்களை, மதத்தை, மொழியை பிரித்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் தியாகிகளாம். இவர்களின் இந்த வாய் வீர உணர்ச்சி வசப்பேச்சுகளை நம்பி மக்கள் ஏமாறுவதாலேயே இவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் செய்ய முடிகிறது. ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றுவோரும் குறைவுபடார். சட்டத்திற்கு தலை வணங்குபவர், நீதிபதியை வீட்டுக்கு அனுப்பி பழிவாங்கியது ஏன்? நீதிமன்றத்திற்கு போக அஞ்சி மக்களை திரட்டுவது ஏன்? விமர்சிப்பது ஏன்? நோய் வருவது ஏன்? விழுந்து எழும்புவதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுமேன்? தாங்களே நாட்டை ஆளவேண்டுமென்று சட்டங்களை மாற்றி இயற்றியது மனதில் வரவில்லையோ இவருக்கு இதை சொல்லும்போது? அது சரி, மக்களை ஊடகங்களை அழைத்து புலம்புவது ஏன்? வீடற்றவர் போல் ஒப்பாரி வைத்ததுமேன்? மக்கள் பணத்தில் சொகுசாக வாழ்ந்தவர் கோடி சொத்துக்களை முறையற்ற விதத்தில் சேர்த்தவர், இளைப்பாறிய பின்னும் மக்கள் பணத்தில் வாழ நினைப்பது பேராசை. தன் வேலையை தானே செய்ய முடியாமல் வேலையாட்களை கேட்பவர், தன்னை பாதுகாக்க பாதுகாப்பு கேட்பவர், தனக்கென வீடு இல்லாமல் மக்களின் வீடுகளில் வாழ நினைப்பவர்கள் மக்களுக்கு, நாட்டுக்கு எப்படி சேவை செய்யப்போகிறார்கள்? பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியவர்கள், அது தங்களுக்கு எதிராக பாயும் போது அதை தாங்க முடியவில்லை, குறை கூறுகிறார்கள். என்ன செய்வது? வேலிக்கு வைத்த முள் வைத்தவரின் காலை குற்றத்தான் செய்யும். சுதந்திரம்! அது இந்த நாட்டில் இருக்கிறதா? அதை சிதைத்தவர் தொலைத்தவரே இவர்தான்! இந்த இராணுவத்தை சர்வதேசத்தில் குற்றவாளிகளாக்கி, தங்களுக்குள் தியாகிகளாக காட்டி தம்மை பாதுகாத்து கொள்கிறார்கள். தமது திட்டத்தை நிறைவேற்றவும், தம்மை பாதுகாக்கவும் இராணுவத்தை பலி கொடுக்கிறார்கள். அந்த இராணுவமே இவர்களை கைவிட்டதை மறந்து விட்டார் போலும். ஒரு தலைவன், தன் பிள்ளைகளை, குடும்பத்தை பாதுகாத்துக்கொண்டு, சொகுசு அனுபவித்துக்கொண்டு, ஏழைப்பிள்ளைகளை பலி கொடுத்து, தான் வீரம் பேசுவது, தானே சுதந்திரத்தை கொண்டுவந்தேன் என்று கொண்டாடுவதும், உயிர் இழந்த இராணுவத்தினரின் உடல்களை உறவுகளுக்கு அளிக்காமல் உண்மைகளை மறைத்ததும் சரியா? யார் போர் புரிந்தவர்கள்? இவரா அல்லது இவர் குடும்பத்தை சேர்ந்தவர்களா? றக்பி வீரரின் கொலையில் இவர் பிள்ளைகளின் தனிப்பட்ட ஒழுக்கம் நாடு அறிந்தது. ஊடகவியலார்களின் கொலையில் இவரது குடும்ப ஒழுக்கம் வெளிப்பட்டது. பாதாள, போதைக்கும்பலில் இவர்களின் அரசியல் ஒழுக்கம் வெளிப்படுகிறது. எல்லோருக்கும் சட்டம் சமன். இவர்கள் மட்டும் ஏன் அஞ்சுகிறார்கள், வைத்தியசாலையில் படுக்கிறார்கள், விமர்ச்சிக்கிறார்கள், புலம்புகிறார்கள், வெதும்புகிறார்கள்? அதன் பலனை அவர்களே முதலில் அனுபவித்தார்கள். அவர்கள் மேல் வைத்த குற்றச்சாட்டை, அரசியலுக்கு வந்த உடனேயே உங்களாக மாற்றி காட்டிய பெருமை உங்களை சாரும். நீங்கள் அரசியல் செய்ய, செய்த ஊழலை மறைக்க, அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என மக்களின் மனதை மாற்றி அரசியல் வெற்றி பெற்றவர், பின்னாளில் குடும்ப அரசியல் செய்ததை மக்கள் மறந்ததே உங்கள் வெற்றி. தமிழர் ஓரங்கட்டப்படுவதற்கு தனது தந்தையே முக்கிய காரணம் என்பதை காலம் கடந்து அவரது மகளே ஒத்துக்கொண்டுள்ளார். இவர் புதுக்கதை சொல்லி தன்னை கதாநாயகன் என்கிறார். அதே மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினருமே ஒரு இனத்தை அழித்து காணாமல் ஆக்கி துவம்சம் செய்து விட்டு, அது நடக்கவேயில்லை என வாதாடுகிறார், விசாரணை என்றால் அஞ்சுகிறார், இராணுவத்தை சாட்டி ஒழிய பார்க்கிறார். இவற்றில் ஈடுபட்டவர்கள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டதும் கொலை செய்யப்பட்டதும் சித்திரவதை செய்யப்பட்டதும் உங்கள் ஆட்சிக்காலத்தில். இப்போ உங்களுக்கென்றவுடன் உபதேசம் செய்ய முடிகிறது இந்த ரவுடிக்கும்பலால். தாங்கள் செய்தது தங்களுக்கு நேர்ந்து விடுமோவென அஞ்சுகிறார்கள், மக்களை கெஞ்சுகிறார்கள். முதலில் உங்களுக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஓடி ஒழியாமல், விழுந்து முறிந்து படுக்கையில் விழாமல், மக்களை திரட்டாமல், ஆரவாரம் செய்யாமல், இராணுவத்துக்கு பின்னால் ஒழியாமல் சட்டத்திற்கு கீழ்ப்பணிந்து தனித்து நின்று உங்களை நிஞாயவாதியாக நிரூபியுங்கள். அதன் பின் மற்றவைகளை யோசிக்கலாம். இப்படி ஒரு நிலைமை வராது என்றும் நீங்களே எப்போதும் நாட்டை ஆளுவீர்கள் என்றும் கனவு கண்டது உங்களது அறியாமை. அரசியலில் மட்டுமல்ல கொலை, ஏமாற்று, ஊழல் எல்லாவற்றிலுமே பலமாக இருந்துள்ளார். அதனாலேயே அவரும் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளார். குடும்பமே ஏமாற்று குடும்பம். இதற்கு அரசியல் ஒரு கேடு. சட்டம் சகலருக்கும் சமம். சரத் பொன்சேகாவை போர் முடிந்தவுடன் யாவரும் புகழ்ந்தனர், அதை பொறுத்துக்கொள்ளாத கோத்தா, அவரை ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் சீற்றமடைந்த பொன்சேகா அரசியலில் குதித்தார். இவரோடு சேர்ந்தால் தமக்கு வாக்கு அதிகமாகும் என எண்ணிய எதிர்கட்சிகள் பொன்சேகாவுடன் கரங்கோத்தனர். இதனால் அச்சம்கொண்ட ராஜபக்ஸக்கள், தேர்தல் குளறுபடி செய்து ஆட்சியை கைப்பற்றிய கையோடு அவரை ஒரு மிருகதைப்போல் அடித்து இழுத்து சென்று சிறையில் போட்டனர். அவரோடு சேர்ந்திருந்த அரசியல் வாதிகள் திகைத்து அவரை கைவிட்டு மறைந்தனர், அவரை சிறையில் சென்று சந்திக்கவேயில்லை. அன்று விழுந்த பொன்சேகாவால் இன்றுவரை எழுந்திருக்க முடியவில்லை. மக்களும் பேச அஞ்சினர். தேர்தல் ஆணையாளர் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது என கூப்பாடு போட்டார். இவர்கள் ஆட்சியைப்பிடித்தவுடன் அப்படியேதும் நடக்கவில்லையென பல்டி அடித்து விட்டார். அப்படியொரு காலாச்சாரத்தை ஏற்படுத்த ராஜபக்ஸக்களாலேயே முடியும். அதனாலேயே ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை துணிந்து நடத்தினர். ஊழல், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரத்தை வளர்த்தனர். அவர்களது காட்டாட்சியே இன்றைய துர்பாக்கிய நிலைமைக்கு காரணம். தங்களை நிஞாயப்படுத்த தமிழரை பலி கொடுத்து தம்மை மேன்மைப்படுத்திக்கொண்டனர். "செய்த அதர்மம் தக்க சமயத்தில் கழுத்தறுக்கும்."