Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    31956
    Posts
  2. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11881
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20010
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/04/25 in all areas

  1. போட்டியைத் திறம்பட நடத்திய @கந்தப்பு வுக்கு நன்றிகள். பலருக்கும் புள்ளிகள் கிடைக்கத் தக்கதாக கேள்விகள் அமைந்தன. “குண்டக்க மண்டக்க” கேள்விகள் இல்லை என்பது ஆறுதல்😂 போட்டியில் வெற்றிபெற்ற கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @Ahasthiyan , @alvayan , @செம்பாட்டான் க்கும் சியர்ஸ் போய் @வீரப் பையன்26 க்கும், கலந்து சிறப்பித்து திரியில் கலகலத்தவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉
  2. தலைவர் அந்தப்பக்கமா என்று நீங்கள் கேட்டது வழுக்கை ஆற்றின் அந்தப்பக்கமா என்றா அல்லது எந்தப்பக்கம் என்று கேட்ட நீங்கள் 😃 ஓம் நானும் அந்தப்பக்கம் தான் ஆனால் இப்போது இந்தப்பக்கம் 😃 அந்தப்பக்கமாக இருந்தால் என்ன எந்தப்பக்கம் என்றாலும்😇 அந்தப்பக்கத்திற்கும் ஒரு மறுபக்கம் இருக்கும் அல்லவா 😃 அந்தப்பக்கம் தீவா நகரா என்ற இழுபறியில் இருக்கு அதுவரைக்கும் அந்தப்பக்கம் அந்தப்பக்கமாகவே இருக்கட்டும்🤣🤪 கோஷான் வேறை இந்தப்பக்கம் நிக்கிறாப்பல 😂
  3. பழைய நினைவுகளை மீண்டும் கிரகித்து பார்க்கின்றேன். இராணுவத்திற்கு விடுதலை புலிகள் அமைப்பு, நடமாட்டங்கள் பற்றிய உள்ளூர் தகவல்களை வழங்குகின்றார்கள், காட்டி கொடுக்கின்றார்கள் எனும் காரணத்தாலேயே முஸ்லீம் மக்கள் அப்போது வெளியேற்றப்பட்டார்கள் என ஊருக்குள் கதைத்தார்கள். முஸ்லீம் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது விடுதலை புலிகளுக்கு பல்வேறு அனுகூலங்களை ஏற்படுத்தின. நிர்வாக ஒழுங்குகளுடன் அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சி அடைவதை இந்த வெளியேற்றம் இலகுவாக்கியது என்றே கூறவேண்டும். ஒருவேளை முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்து நிலைகொண்ட நிலை காணப்பட்டால் போராட்டம் எந்த பாதையில், எப்படி பயணித்து இருக்கும் எனவும் சிந்தித்து பார்க்கலாம். 1990 இல் வெளியேற்றம் ஏற்பட்டது. 1995 இல் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இலங்கை இராணுவம் வசமாகியது. கிட்டத்தட்ட இந்த ஐந்து வருட கால இடைவெளியில் முஸ்லீம் மக்களை வெளியேற்றதன் மூலம் விடுதலை புலிகளுக்கு கிடைத்த பலன்கள் எவை, பாதகங்கள் எவை எனவும் நோக்கப்படலாம்.
  4. அப்பு சோறு முக்கியம். வேலை இல்லா பட்டதாரிகள் சொல்லுறாங்களே என்று வேலை நேரத்தில் கவனமப்பு. போதிய வசதிகள் இல்லாமல் போட்டியை திறம்படி நடத்திய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். துல்லியமான விடைகளைக் கணித்து முதலாவது இடத்தைப் பிடித்த @Ahasthiyan னுக்கு வாழ்த்துக்கள். போட்டியை விறுவிறுப்பாக கொண்டு போன உறவுகளுக்கும் பாராட்டுக்கள். பையா எங்களை @கிருபன் கூகிளில் விடை எழுத பழக்கியதால் கூகிள் இல்லாமல் சரியாக விடைகள் எழுத முடியவில்லை.
  5. போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் , அல்வாயான், செம்பாட்டான், ஏராளன் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள் .........! இந்த திரியை அணையாமல் கொழுத்திக் கொண்டிருந்த மேன்மையான உறவுகளுக்கு நன்றிகள் .....! கந்தப்புவுக்கு ம் . ........ சொல்லி வேல இல்ல ......... ரொம்ப நன்றி ........! 🙂
  6. அது படுபாதக கொலைகார இயக்கம் . ஜேவிபி சுத்தம் அது ஒரு நல்லாட்சி தரும் என்று தமிழர்கள் பிரசாரம் செய்வதால் அது உண்மையாகிவிடாது.
  7. நான் கணக்கில ரொம்பவே வீக்- ஆனாலும். இலங்கை தமிழர் தொகை எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் போக்கை என்னால் கூட காண முடிகிறது. 30 வருட போரில் இளையோரை அதிகம் காவு கொடுத்ததன் பின் விழைவு, இன்னும் சில பத்தாண்டுகளுக்காவது இலங்கை தமிழர் பிறப்பு வீதத்தில் தெரியத்தான் செய்யும். ஆனாலும் ஒட்டு மொத்தமாக இது 15 வருடத்துள் மீள நேர்மறை வளர்சிக்கு வந்துள்ளது நல்ல செய்தியே. ஆனால் இது மட்டுமே நல்ல செய்தியாக எனக்கு படுகிறது. எமது மக்கள் தம் பாரம்பரிய வாழிடங்களில் குறிப்பாக, யாழ், மட்டகளப்புக்கு அப்பால் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் வீழ்சியை அல்லது மந்த நிலையை காட்டுவது கவலையான விடயம். யாரையும் ஒரு மாவட்டத்தில் இரு என கட்டாயம் செய்ய முடியாது. வாய்புக்கள் தேடி கொழும்பு இதர பகுதிகளுக்கு போவது இயல்பே. ஆனால் 1980 ற்கு முந்திய காலம் போல் இப்படி போவபர்கள், ஊருக்கு வருவதையோ, வாக்களிப்பு பதிவை ஊரில் வைத்திருப்பதையோ இப்போ செய்வதில்லை. கொழும்பு போனால் சில வருடங்களில் அங்கே ஐக்கியமாகி விடுகிறார்கள். யாழ் மாவட்டத்தில் கூட நகருக்கு 10 கிமிக்குள் இருக்கவே பலர் விரும்புகிறனர். மட்டகளப்பிலும் எழுவான்கரையில்தான் அநேகர். தரவுகளை பார்த்தால் - சனத்தொகை அடர்த்தி குறைந்த முதல் எட்டு மாவட்டமும் எமதுதான். ஒரு ஒற்றையாட்ட்சி நாட்டில் - குறைந்தளவு மக்கள், இப்படி அதிகளவு மண்ணை ஒரு அளவுக்கு மேல் பிடித்து வைக்க முடியாது. ஏனைய மாவட்டங்களில் வளப்பற்றாக்குறை ஏற்படும் போது, கவனம் எமது மாவட்டங்கள் மீதே திரும்பும். இது மேலும் எமது மாவட்டங்களில் எமது எம் வீதத்தை குறைக்கும். எமது தனித்துவத்தின் அடிப்படையே எமது மண்ணில் நாம் அறுதி பெரும்பான்யாக இருப்பதுதான். ஆகவே ஒட்டு மொத்தமாக சதவீதம் கூடி விட்டது என்ற நற்செய்தியை விட எமது பாரம்பரிய வாழிடத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பாரதூரமான விடயம். இதை சரிக்கட்டும் அளவுக்கு வாய்புகளை ஏற்படுத்த முடியாவிடினும், மூன்று பிள்ளைகள் பெற்று, 8 மாவட்டங்களில் ஒன்றில் வாழ்வோருக்கு மாதாந்த தொகை போல ஏதும் கொடுத்தால் ஒரு சிறிய மாற்றம் வரலாம். ஆனால் நான் உட்பட சிறிய குடும்பமே நன்று என்ற மனநிலை தமிழ் சிங்கள மக்கள் இடையே ஊறிவிட்டது. இதை உதவி தொகைகள் பெரிதாக மாற்ற சாத்தியமில்லை. முஸ்லிம்களை பிழை சொல்ல முடியாது. அவர்கள் ஒன்றும் திட்டமிட்டு இதை செய்வதில்லை. எண்ணிக்கையே பலம், இறைவன் கொடுக்கும் அருள் பிள்ளைகள் என அவர்கள் இயல்பாக நம்புவதால், எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கிறது. அப்போ சிங்களவர், தமிழர் எண்ணிக்கையை கூட்ட என்ன செய்ய வேண்டும்? முதலில் தத்தம் மாவட்டங்களுக்கு பதிவு அளவிலாவது மீள வேண்டும். இன்றைய வேகமான உலகில் இது சாத்தியமே. அடுத்து, தனித்துவத்தை பேண நாம் எம் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற கூட்டு மனோநிலை உருவாக வேண்டும். அப்படி உருவாகி பிறக்கும் பிள்ளைகளை தெருவில் விடாமல், பராமரிக்க சமூக அமைப்புகள் இருக்க வேண்டும். குடும்பகட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்புகள் போல, பிறப்புவீதத்தை ஊக்குவிக்கும் பிரச்சார அமைபுகளும் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் முயன்றுமே - ஸ்கெண்டிநேவிய நாடுகளின் இது போன்ற திட்டங்கள் தோல்விதான். ஆகவே இதற்கு silver bullet முடிவு ஏதும் இல்லை.
  8. அப்ப அடுத்த மகளிர் அணிக்கான யாழ் கள போட்டியில் யார் யார் எந்த நிறத்தில் போட்டு வைப்பார்கள் என்ற ஒரு கேள்வியை நான் இப்பவே பரிந்துரை செய்கின்றேன்😂😅
  9. போட்டியைத் திறம்பட நடத்திய @கந்தப்பு வுக்கு நன்றிகள். போட்டியில் வெற்றிபெற்ற @Ahasthiyan , @alvayan , @செம்பாட்டான் க்கும் வாழ்த்துக்கள்
  10. "நடந்தாய் வாழி வழுக்கியாறு" செங்கை ஆழியான் 1984 இல் எழுதி வெளியிட்ட, வழுக்கியாற்றின் தடத்தினூடாக மாடு தேடிப் பயணிக்கும் கதை👇! https://noolaham.net/project/176/17527/17527.pdf
  11. இந்த திரியை அணையாமல் கொழுத்திக் கொண்டிருந்த மேன்மையான உறவுகளுக்கு நன்றிகள் .....! கந்தப்புவுக்கு ம் . ........ சொல்லி வேல இல்ல ......... ரொம்ப நன்றி ........! 🙂 முதல் மூன்றில் வந்ததில் மகிழ்ச்சி. அதுவும் மழையுடன் விளையாட்டு. தொடர் நன்றாகவே போனது. போட்டியை நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி. என்னையும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...
  12. Advance Booking- ல Rape பண்ணிட்டு இருக்கீங்க | Kadhal Sadugudu | Vikram | Vivek முதல் மூன்று நிமிடம் 5 விநாடிகளில் நீங்கள் குறிப்பிட்ட தண்டனை மைனருக்கு வழங்கப்பட்டது.
  13. இவரும் என் பி பி - கட்சி இல்லை என நினைக்கிறேன்😂 குற்ற செயலில் ஈடுபடுபவரின் மைத்துனர், பக்கத்து வீட்டுகாரார், ஒரே பஸ்சில் கூடப்பயணித்தவர் என இந்த லிஸ்ட் நீளும் போல உள்ளதே😂. தாம் நிரந்தரமாக ஆட்சி செய்ய, பாதாள உலகம், கட்டுப்பாடற்ற பேரினவாதம் இரெண்டும் ஆபத்து என உணர்ந்த ஜேவிபி, அதனோடு நூலிழை சம்பந்தம் உள்ளோரை கூட கொஞ்சம் கொஞ்சமாக போட்டு தள்ள ஆரம்பித்துள்ளது. தமது சொல்லை கேட்கவில்லை என்பதால் 87 இல் விதானைமார், சப்போஸ்மாஸ்டர், போஸ்ட்மன் ஈறாக போட்டுத்தள்ளிய அமைப்புத்தான் ஜேவிபி.
  14. இந்தியா போன்ற நாட்டில் சும்மா சுட்டால் போதாது கால்களுக்கு இடையில் தொங்குவதற்கு குறிபார்த்து சுட்டால்தான் திருந்துவார்கள்.
  15. யோசிக்கலாம்தான்……..ஆனால் புகையிலையை சாகுபடி செய்பவர்கள் 99% தமிழர்கள் அல்லவா.??
  16. கால்பந்து விளையாட்டில் அரிதான சில நிகழ்வுகள் ........! 😂
  17. எதிர்கால ரௌடிகள் ......... இப்படிக்கு மான்கள் .......! 😂
  18. பையா இது வழமைதான் ....... அறிமுகமாகும் ஒருவரின் திறமையை மற்றவர்களும் அறியும்படி உயர்வாக சொல்வதென்றால் எல்லோரும் அறிந்த ஒருவருடன் ஒப்பிட்டு சொல்வது .......! உதாரணமாக....... ஈழப்பிரியன் வந்து சுவிக்கு வீரப்பையனை விட கிரிக்கட் விபரங்கள் தெரியும் என்று சொன்னால் இங்கு எல்லோருக்கும் தெரியும் சுவி ஒரு 10 என்றும் பையன் 100 என்றும் . ...... ஆனால் சுவி யை விளம்பரப்படுத்த பையனுடன் ஓப்பிடவேண்டிய தேவை உள்ளது அதுதான் விடயம் . .....! 😂 அந்த ஜாம்பவான்களுடன் ஒப்பிடப்படுவது அவவுக்கு மிகவும் பெருமையான விடயம் . .......!
  19. இருவருக்கும் மிக்க நன்றிகள்.நான் தேடத் தேடத்ட தென்ஆபிரிக்க தலைவி அவுட்டான பிடி தான் வருகுது.இப்ப கண் குளிர பாத்தாச்சசு.
  20. இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீடு: இலங்கைத் தமிழர்களின் அதிகரிப்பு – உண்மையும் பின்னணியும்! வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன். adminNovember 4, 2025 இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீடு: இலங்கைத் தமிழர்களின் அதிகரிப்பு – உண்மையும் பின்னணியும் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் 📈 ஆச்சரியம் அளிக்கும் புதிய தகவல்: தமிழர்களின் வீதாசாரம் அதிகரிப்பா? (நன்றி: குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை ) அண்மையில் வெளியான இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீட்டின் அடிப்படை தகவல்கள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2012இல் 11.1% ஆக இருந்த இலங்கைத் தமிழர்கள், 2024இல் 12.3% ஆக அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி, இனவாதிகளின் வன்மத்தையும் அதிகரித்துள்ளது. ஒரு இனத்தின் குடித்தொகை வீதாசாரம் அதிகரிக்க, பொதுவாக கருவளம் (பிறப்பு வீதம்) அதிகரிக்க வேண்டும், இறப்பு வீதம் குறைய வேண்டும் அல்லது குடியேற்றம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, அனைத்துக் காரணிகளும் குடித்தொகை வீதாசாரத்தைக் குறைக்கும் திசையிலேயே இருக்கின்றன. 📉 வரலாற்றுப் போக்கு: வீழ்ச்சியும் முரண்பாடான மாற்றமும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து, இலங்கைத் தமிழரின் வீதாசாரம் தொடர்ச்சியாகக் குறைந்து வந்தது: ஆண்டு இலங்கைத் தமிழர்களின் வீதாசாரம் முஸ்லிம்களின் வீதாசாரம் 1981 12.7% 7.0% 2012 11.2% 9.2% இந்த அடிப்படையில், 2031ஆம் ஆண்டு இடம் பெறப்போகும் குடித்தொகைக் கணிப்பீட்டில் முஸ்லிம்கள் இலங்கைத் தமிழர்களை முந்திச் செல்வர் என்று நான் எதிர்வு கூறியிருந்தேன். இப்போது இந்த எதிர்வு கூறல்களுக்கு முரணாக வீதாசாரம் அதிகரித்து இருப்பது ஏன் என்பதை நாம் ஆராய வேண்டும். 🔍 உண்மை வெளிச்சம்: அடையாள மாற்றமே அதிகரிப்பின் காரணம் இந்த அதிகரிப்புக்குப் பின்னால் உள்ள உண்மை என்னவென்றால், குடிசன மதிப்பீட்டின் போது சேகரிக்கப்படும் தகவல்களது உண்மைத்தன்மையானது பரிசீலிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுவதில்லை. மாறாக வாய்வழியாகக் கேட்கப்படும் வினாக்களுக்குக் குடியிருப்பாளர் வழங்கும் பதில்கள் நேரடியாக எவ்வித ஆதாரச் சரிபார்ப்புகளும் இன்றிக் குடிசன மதிப்பீட்டாளரால் பதிவு செய்யப்படுவதே நடைமுறையாகும். இந்திய வம்சாவளித் தமிழர்களின் அடையாள மாற்றம்: 1981ஆம் ஆண்டு 5.5% ஆக இருந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள், அவர்களின் பிறப்பு வீதம் அதிகமாக இருந்தபோதிலும், தம்மைத் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதன் காரணமாக: 2012இல் 4.2% ஆகக் குறைந்தது. 2024இல் 2.8% ஆக மேலும் குறைவடைந்துள்ளது. சில ஆய்வாளர்கள் இதை இந்திய வம்சாவளித் தமிழர்களின் கருவளத்தை வேரறுக்கும் சூழ்ச்சித் திட்டங்களால் ஏற்பட்டது எனக் கருத்துக் கூறுகின்றனர். தற்போது வெளியாகிய குடிசனமதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பிற தகவல்கள் மற்றும் ஆய்வுகள் இந்திய வம்சாவளித்தமிழர்கள் தம்மை இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம் என்ற கருதுகோளினை உறுதிப்படுத்தும் விதமாகவே காணப்படுகின்றன தரவுகள் தெளிவுபடுத்துகின்றன: மொத்த தமிழர்களின் வீதாசாரம்: (இலங்கைத் தமிழர்கள் + இந்திய வம்சாவளித் தமிழர்கள்) 2012இல் (11.1+4.1=15.2) ஆக இருந்தது, 2024இல் (12.3+2.8=15.1) ஆக, அதாவது வெறும் 0.1% மட்டுமே குறைந்துள்ளது. மத ரீதியான கணிப்பீடு: இந்துக்களின் வீதாசாரம் 2012 இல் இருந்து 2024 வரை 12.6% ஆக மாறாமல் இருப்பது இந்த அடையாள மாற்றத்துடன் ஒத்துப் போகிறது. பிராந்திய உதாரணம் (பதுளை மாவட்டம்): 2012 இல் இலங்கைத் தமிழர்கள் 2.7% இலிருந்து 2024இல் 9.4% ஆக அதிகரித்துள்ள அதே வேளையில், இந்திய வம்சாவளித் தமிழரின் வீதாசாரம் 18.5% இலிருந்து 11.0% ஆகக் குறைந்துள்ளது. (நன்றி: குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை) இலங்கைத் தமிழர்கள் பதுளைக்கு இடம்பெயர்ந்தமைக்கான காரணங்களோ, ஆதாரங்களோ இல்லாத நிலையில், இந்திய வம்சாவளித் தமிழர்கள் தம்மை இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியிருந்தாலே அன்றி வேறு எந்தக் காரணியும் மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரத்திற்கான விஞ்ஞானபூர்வ விளக்கமாக அமையாது ⚖️ அரசியல் சூழ்ச்சிகளும் வாக்கு வங்கி அரசியலும் சனத்தொகை மதிப்பீட்டில் தமிழர்கள் கூறுபடுத்தப்படுதை நாம் கவனமாக இங்கு அவதானிக்க வேண்டும். அதாவது 1981ஆம் ஆண்டு முதல் தாழ்நிலச் சிங்களவர்கள் மற்றும் கண்டியச் சிங்களவர்கள் சிங்களவர்களாக ஒன்றிணைக்கப்பட்டு கணக்கிடப்படுகிறார்கள். எனினும், ஆரம்பகாலங்களில் தமிழர்களாகக் கணக்கிடப்பட்டவர்கள் 2012 முதல் மேலும் பல உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இலங்கை செட்டி மற்றும் பரதவர்கள் என்று திட்டமிட்டவகையில் பிரிக்கப்பட்டுக் கணக்கிடப்படுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்கவேண்டுமானால், 2012ஆம் ஆண்டிலேயே தமிழர்கள் “தமிழர்” என்று ஒன்றுபட்டு தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால், அதை தமது சுயநல நோக்கங்களுக்காக, வாக்கு வங்கி சரிந்து விடும் என்று கருதிச் சில மலையக தலைமைகள் எதிர்த்து இருந்தன. 🚨 தமிழ் அரசியல் கட்சிகள் மீதான நேரடி விமர்சனம் தமிழர்களது இருப்பைத் தக்கவைக்கும் அடிப்படைப் பொருண்மிய மேம்பாடு குறித்துத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகள் எவையும் அக்கறைப்படாதிருப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். புலிகளின் காலத்தில் அவர்கள் போரின் மத்தியிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை முன்னெடுத்து இருந்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக, பல தசாப்தங்களாகத் தமிழ் தேசியம் பேசிவரும் தமிழரசு கட்சி (ITAK) மற்றும் தமிழ் காங்கிரஸ் அல்லது இந்திய ஐந்தாம் படையுடன் இணைந்து செயல்படும் ஏனைய தமிழ்க் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கோ இன்றுவரை தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்பதே பாரிய பிரச்சினையாக இருக்கிறது. தமிழர்களுக்கு உரிமைகளைப் பெறுவதாக உணர்ச்சிகளைத் தூண்டிப் போராட்டம் நடத்துவதையும், உரிமைகளை இழந்தமைக்கு ஏனையவர்களைக் குற்றம் சாட்டுவதையும் செய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் இலக்கை அடைவதற்கு முயற்சி செய்தார்களே தவிர, இதுநாள் வரையில் குறித்த அரசியல் தலைமைகள் இனத்தின் இருப்பினைக் காப்பதற்காக ஒரு துரும்பையேனும் கிள்ளிப் போடவில்லை என்பதே நிதர்சனம். 💡 தமிழர்களின் இருப்புக்குத் தீர்வு: பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் அதிகரித்த திருமண வயது, சீதனம், சோதிட நம்பிக்கை, சாதீயம், பிராந்தியவாதம், மதவாதம் போன்ற பல காரணிகள் தமிழர்களின் பிறப்பு வீதத்தைக் குறைத்தாலும், நலிவடைந்த பொருளாதாரமே முதன்மைக் காரணியாகத் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதையும், குறைந்த பிள்ளைகள் பெறுவதையும் தூண்டுகிறது. தமிழர்களின் குடித்தொகையை இலங்கையில் அதிகரிக்க வேண்டுமானால், தமிழர்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். தமிழர்களின் நலிவடைந்த பொருளாதாரம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் தமிழர்களின் புள்ளிவிபரங்களினாலும், அதிகரித்த மந்த போசணை மற்றும் தாய்-சேய் இறப்பு வீதங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்திடம் இருந்து கற்க வேண்டிய பாடம்: இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மைக்கு மத்தியிலும், தமக்கென வங்கி கட்டமைப்பு, பள்ளிவாசல்கள் மூலம் ஒன்றுபட்ட சமூக பொருளாதார வேலை திட்டங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இவ்வாறான வேலைத்திட்டங்கள் எவற்றைப் பற்றியும் சிந்திக்காது, தமிழினம் விசர் தனமான பதிவுகளை யூடீயுப் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவேற்றி மற்றவர்களைக் குற்றம் சாட்டியும், நக்கலடித்தும் மகிழ்ந்து கொண்டிருப்பது தமிழினத்தின் சாபக்கேடு என்றே சொல்லவேண்டும். வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் சமுதாய மருத்துவ நிபுணர், குடித்தொகையியல் ஆய்வாளர் 4.11.2025 https://globaltamilnews.net/2025/222281/
  21. தற்போதைய நிலையில் ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தக்கூடிய சிறந்த நிர்வாக திறமையுடன் வடக்கில் தமிழர் பலத்தை சமயோசிதமாக கட்டியெழுப்பக் கூடிய நிர்வாகி ஒருவர் முதமைச்சராக வந்தாலே தமிழ் மக்களுக்கு நல்லது. பொது வெளியுல் கண்கலங்கும், அனுதாபத்தை தேடும் இவரது சென்றி மென்ற் அரசியல் இவரது நிர்வாக திறமையை சந்தேகிக்க வைக்கிறது.
  22. ஓம். ஆனால் அனுர வெள்ளை கொடி விவகாரத்தை சொல்லுற வகையில் இவரை தட்டவே மாட்டார். மீளவும் இனவாதம் மூலம் இவர்கள் தம்மை வெல்லாமல் தடுக்க மட்டுமே. மட்டுப்பட்ட தட்டல்.
  23. பயங்கர துவேசி , அத்துடன் ராஜபக்ஸ விசுவாசி. இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியோடு சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு முக்கிய சூத்திரதாரி/சாட்சி. தட்டுற மாதிரி தட்டினால் வாயை திறப்பார்!
  24. பகிடிவதையின்போது பலவந்தமாக மதுபானம் பருக்கிய இந்த சிரேஷ்ட நாய்களை முதலில் ஜெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  25. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதவர் கோச்சாக வரலாறு படைத்த கதை - யார் அவர்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் அமோல் மஜும்தார் கட்டுரை தகவல் சாரதா மியாபுரம் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கரும் வினோத் காம்ப்ளியும் மும்பையின் சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளி அணிக்காக விளையாடி 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து உலக சாதனை படைத்தபோது, ஒரு பேட்ஸ்மேன் நாள் முழுவதும் கால்களில் பேட்களைக் கட்டிக்கொண்டு தன் முறைக்காகக் காத்திருந்தார். பள்ளியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளியுடன் படித்த அந்த மாணவரின் பெயர் அமோல் மஜும்தார். அந்தப் போட்டியில் அவருக்கு ஒரு பந்து கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு புதிய வழியில் வரையறுத்தது, அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படத் தொடங்கினார். அமோல் மஜும்தார் முதல் தர கிரிக்கெட்டில் 30 சதங்களுடன் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். ஒரு காலத்தில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்பட்டார், ஆனால் அவருக்கு ஒருபோதும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சச்சின் மற்றும் காம்ப்ளி போல, அமோல் மஜும்தாரும் சாரதாஷ்ரம் பள்ளியின் மாணவர்தான் (கோப்புப் படம்) தனது 21 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், அமோல் மஜும்தார் ஒருபோதும் இந்தியாவின் தேசிய அணிக்காக விளையாடவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இப்போது ஒரு பயிற்சியாளராக அவர் மகளிர் அணியை உலக சாம்பியனாக்கி உள்ளார். இந்திய அணி பெண்கள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பயிற்சியாளர் அமோல் மஜும்தாரை நோக்கி ஓடி, அவருடைய கால்களில் விழுந்தார், பின்னர் கட்டிப்பிடித்து விம்மி அழுதுவிட்டார். அவரும் இந்த வெற்றியைக் கண்டு மனம் திறந்து சிரித்தார், ஹர்மன்பிரீத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். போட்டிக்குப் பிறகு, அவர் உற்சாகமான வார்த்தைகளில் மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றதில் மிகுந்த பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார். இந்திய அணி கோப்பையை வென்றது அவருக்கு ஒருவேளை 'சக் தே இந்தியா' திரைப்படத்தின் 'கபீர் கான்' தருணம் போல இருந்திருக்கலாம். மும்பையில் ஒரு அற்புதமான ஆரம்பம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அமோல் மஜும்தார் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர். அமோல் மஜும்தார் மும்பைக்காக விளையாடி தனது முதல் தர கிரிக்கெட்டைத் தொடங்கினார். ஃபரிதாபாத்தில் ஹரியாணாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டி அவருடைய முதல் ரஞ்சி போட்டியாகும். இந்தப் போட்டியில், அவர் ஒரு இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்து, தனது அறிமுகப் போட்டியிலேயே அனைவரையும் கவர்ந்தார். இந்தச் செயல்திறன் காரணமாக, அவர் 'பம்பாய் பேட்டிங் பள்ளியில்' இருந்து வெளிவந்த மற்றொரு 'பெரிய சாதனை' என்று பாராட்டப்பட்டார். எனினும், 'ஸ்போர்ட்ஸ்ஸ்டார்' விளையாட்டுப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சலில் அன்கோலா மற்றும் வினோத் காம்ப்ளி போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட நியூசிலாந்து சென்றபோதுதான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று அமோல் மஜும்தார் கூறியிருந்தார். ரஞ்சி கோப்பையில் விளையாட இந்த வாய்ப்பை மும்பை கேப்டன் ரவி சாஸ்திரி தனக்கு வழங்கினார் என்று மஜும்தார் கூறினார். மஜும்தார் 1994 இல் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். அவர் சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் உடன் இந்தியா-ஏ அணிக்காகவும் விளையாடினார். உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்கள் எடுத்த போதிலும், அவருக்குத் தேசிய அணியில் ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான பயணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டில், மும்பையின் ரஞ்சி அணியின் தலைவராக அமோல் மஜும்தார். அமோல் மஜும்தார் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்துள்ளார். உண்மையில், அவர் இத்தகைய கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். மஜும்தார் தனது வாழ்க்கையில் 171 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 48.13 என்ற சராசரியுடன் 11,167 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 30 சதங்கள் மற்றும் 60 அரைசதங்கள் அடங்கும். அவர் இருந்த காலத்தில் மும்பை எட்டு முறை ரஞ்சி டிராபியை வென்றது. 2006-07 ரஞ்சி டிராபி சீசனில் மும்பை அணி தொடக்கத்தில் மிக மோசமாக விளையாடிய போது அவர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த விளையாட்டைப் பார்த்து அணி வெற்றி பெறும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் கேப்டனாக அவர் அணியை முன்னின்று வழிநடத்தினார், மேலும் ரஞ்சி டிராபி பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தார். மும்பை அணியுடன் 17 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பிறகு, அவர் 2009-இல் அசாம் அணிக்காக விளையாடினார். பின்னர் ஆந்திரப் பிரதேச அணியுடன் இணைந்தார். அவர் 2014 இல் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பயிற்சியாளராக ஒரு புதிய அவதாரம் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் பயிற்சியாளராக தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அணிகளுக்குப் பயிற்சி அளித்தார், மேலும் மும்பை அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி குழுவிலும் இருந்துள்ளார். அக்டோபர் 2023 இல், அமோல் மஜும்தார் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2024 ஆம் ஆண்டில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அமோல் மஜும்தார் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர். இந்த உலகக் கோப்பையில் நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டியில் தோல்வியடைந்தது, இதனால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு குறைவாக இருந்தது. இந்தூரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் தோல்விக்குப் பிறகு, இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ஒரு சம்பவம் நடந்தது. இந்தியா ஆஸ்திரேலியாவை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்தபோது, ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் இந்தத் தகவல் கிடைத்தது. அதில், இந்திய அணி தொடர்ந்து மூன்று தோல்விகளுக்குப் பிறகு எப்படி மீண்டு வர முடிந்தது என்று கேப்டன் ஹர்மன்பிரீத்திடம் கேட்கப்பட்டது? ஹர்மன்பிரீத் தனது அருகில் நின்று கொண்டிருந்த பயிற்சியாளர் அமோலைக் கை காட்டி, "இங்கிலாந்திடம் தோற்ற பிறகு நான் டிரஸ்ஸிங் ரூமில் எதுவும் சொல்லவில்லை. அவர்தான் எல்லாவற்றையும் பேசினார். 'நீங்கள் இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும்' என்று அவர் கத்தினார்" என்று கூறினார். அவர் அருகில் நின்று கொண்டிருந்த அமோல், "ஆமாம், நான் டிரஸ்ஸிங் ரூமில் சில விஷயங்களைப் பேசினேன். ஆனால் நான் இவை அனைத்தையும் அணியின் நலனுக்காக மட்டுமே கூறினேன்" என்று உடனடியாகக் கூறினார். பின்னர் ஹர்மன்பிரீத் புன்னகையுடன், "அன்று சார் (அமோல் மஜும்தார்) கொஞ்சம் கோபமாகப் பேசினார். ஆனால் அனைவரும் அந்த வார்த்தைகளை நேர்மறையாக எடுத்துக் கொண்டார்கள். ஏனென்றால் அவர் அணியின் நலனைப் பற்றி மட்டுமே பேசுகிறார். எங்களுக்கு அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் நேர்மையாகப் பேசுவார்" என்று கூறினார். "எங்களிடம் இருந்து சார் என்ன எதிர்பார்க்கிறார் என்று எங்களுக்குத் தெரியும். இந்த நாட்டிற்கு எங்கள் செயல்திறன் இப்படி இருக்கக் கூடாது. எல்லா வீரர்களும் அந்தக் கருத்தை நேர்மறையாக எடுத்துக் கொண்டார்கள். எங்கள் செயல்திறனிலிருந்து நீங்கள் அதைப் புரிந்து கொள்ளலாம்." கேப்டன் ஹர்மன்பிரீத் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டிக்குப் பிறகு ஊடகங்களிடம், "சார் பயிற்சியாளரான பிறகு விஷயங்கள் முற்றிலும் மாறிவிட்டன. இதற்கு முன்பு பயிற்சியாளர்கள் வந்து சென்றார்கள். ஒரு நிலையான பயிற்சியாளர் வந்தது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது" என்று கூறினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்திய அணியின் ஜெர்சியை அணியாத அமோல் மஜும்தார், இப்போது ஒரு பயிற்சியாளராகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அவருடைய அணி உலக சாம்பியன் ஆகிவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04gv21d304o
  26. 2008/2009 பிரச்சினைக்கு கடன்பட்டவர்கள் மாதாந்தத் தொகையைச் செலுத்தாமை காரணமல்ல என்கிறீர்களா? "ஒப்புவிக்கக் கூடாது" என்று நேத்தி வைத்திருப்பதால், முகட்டைப் பார்த்து யோசிக்கும் போது உங்களுக்கு வெளிப்பதை எல்லாம் எழுதி ஏன் ஐயா களத்தைத் தவறான தகவல்களால் நிரப்புகிறீர்கள்😂 ? ஆர்வமுள்ள வாசகர்களுக்காக: தன் வருமானத்திற்கு மீறிய மாதாந்தக் கட்டணத்தைக் கொண்ட வீட்டுக் கடன்களை நிரந்தரமாகத் தொழில் இல்லாத பலர் எடுக்க மேல் வியாபாரி போன்ற ஊழல் நிறுவனங்கள் அனுமதித்தன. அந்த றிஸ்க் கொண்ட sub-prime கடன்களை, ஏனைய நம்பிக்கையான கடன்களோடு சேர்த்து மொத்தமாக காப்புறுதி செய்தனர். இந்தக் றிஸ்க் கொண்ட கடன்களை ஊழல் வழிகளில் பெற்றவர்கள் கட்ட முடியாமல் (default) வீட்டுச் சாவியை தங்கள் தபால் பெட்டியில் போட்டு விட்டு தலை மறைவாயினர். காப்புறுதி நிறுவனம், ஒரே சமயத்தில் நிகழ்ந்த எல்லா இழப்புகளையும் ஈடு செய்ய இயலாமல் வங்குரோத்தானது. ஒபாமா பதவிக்கு வந்தவுடன் "Troubled Asset Recovery Program" என்ற முறையை சட்டமாக்கி மக்களின் வரிப்பணத்தை வைத்து இந்த $700 billion ஓட்டையை அடைக்க வேண்டியிருந்தது. மக்கெயின் பதவிக்கு வந்திருந்தால் அதையும் செய்யாமல் இன்னும் மக்களை அல்லாட விட்டிருப்பார்.
  27. இதற்காக தான் இழுத்தடிப்பு என்பது எப்பவோ தெரிந்ததே!
  28. யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு! செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞானந்த தேரர் தெரிவித்தார். கடந்த 01.11.2025 அன்று யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து செயல்படுகிறது எனவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறிய இந்த ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த பின்னரும் கூட பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவில்லை. தற்போது புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் அந்த குழியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்பு கூடுகள் வெளிவந்த படங்களை பார்த்தேன். செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களை புலிகள் புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைக்க திட்டம் தீட்டுகிறது. அதேபோல் தெற்கில் பட்டலந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துக்காக ஆரம்பித்தவர்கள் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். இந்த அரசாங்கமும் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் எதனையும் செய்யாது ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது எனக்கூறி இவ்வாறே ஐந்து வருடங்களையும் கடத்த போகிறார்கள். ஆகவே செம்மணி விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் நீதியானதும் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ளாது என அவர் மேலும் கருத்து தெரிவித்தார். செம்மணியில் சிறுவர்களை புலிகள் புதைக்கவில்லை - சன்னி ஞானந்ததேரர் தெரிவிப்பு!
  29. போட்டியில் வெற்றிபெற்ற அகஸ்தியனுக்கும் தொடர்ந்து அல்வாயான், செம்பாட்டான் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவர்க்கும் வாழ்த்துகள். போட்டியைக் கலகலப்பாக வைத்திருந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் கந்தப்பு அண்ணைக்கு விசேஷமான நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் 👍🙏
  30. 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? இந்தியா 8 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 75 புள்ளிகள் 2) ஏராளன் - 70 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 70 புள்ளிகள் 4) சுவி - 70 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 70 புள்ளிகள் 6) வாதவூரான் - 66 புள்ளிகள் 7) வீரப்பையன் - 65 புள்ளிகள் 8) கிருபன் - 64 புள்ளிகள் 9) புலவர் - 61 புள்ளிகள் 10) ரசோதரன் - 61 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 60 புள்ளிகள் 12) கறுப்பி - 56 புள்ளிகள் 13) வசி - 55 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 52 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 42, 44 - 47 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 98).
  31. 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா ( Alana King - 7 விக்கெட்டுகள்) 8 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 65 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 65 புள்ளிகள் 4) சுவி - 65 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 65 புள்ளிகள் 6) புலவர் - 61 புள்ளிகள் 7) வாதவூரான் - 61 புள்ளிகள் 8) ரசோதரன் - 61 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 60 புள்ளிகள் 10)வீரப்பையன் - 60 புள்ளிகள் 11) கிருபன் - 59 புள்ளிகள் 12) கறுப்பி - 56 புள்ளிகள் 13) வசி - 55 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 52 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35 - 42, 44 - 47 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 93).
  32. 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா ( Deepti Sharma - 22 விக்கேற்றுகள்) சரியாக பதில் அளித்தவர்கள் - சுவி, செம்பாட்டன், வாதவூரான் 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 65 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 65 புள்ளிகள் 4) சுவி - 65 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 63 புள்ளிகள் 6) வாதவூரான் - 61 புள்ளிகள் 7) கிருபன் - 59 புள்ளிகள் 8) புலவர் - 59 புள்ளிகள் 9) ரசோதரன் - 59 புள்ளிகள் 10) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 11) வீரப்பையன் - 58 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 50 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35 - 42, 44, 46, 47 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 91).
  33. ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார். வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுடனும் கணிசமான பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பார்கள் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் கதை. இந்த 35 ஆண்டுகால முஸ்லீம்களின் யாழிலிருந்து வெளியேற்றம் எனும் வன்ம பரப்புரையில் தங்கத்திற்காகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற கதை இதுவரை வெளியேறிய முஸ்லீம்களாலேயே சொல்லப்பட்டதில்லை, ஆனால் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். காலம் காலமாக வடக்கிலிருந்து 72 ஆயிரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அவர்கள் வாயாலேயே அடிக்கடி சொல்லப்பட்டதுண்டு, இப்போது ஒரு லட்சமாகி நிற்கிறது, அந்த எக்ஸ்ட்ரா 28 ஆயிரமும் தங்கம் ஆய்வுபோல ஒரு ஆய்வா? உலகம் முழுவதும் குண்டு,கத்திகுத்து, வாகனமோதல், துப்பாக்கிச்சுடு என்று வகை வகையாக கொலை செய்யும் இந்த இனம் என்றாவது உண்மையை பேசியதுண்டா? தாமும் தவறு செய்தோம் என்று ஒத்துக்கொண்டதுண்டா? வேண்டுமென்றால் அடுத்த இனம்மீதும், நாட்டுக்காரன் மீதும் பழிபோடும். பழிபோடுதல் அவர்கள் மார்க்க கடமைகளிலொன்றா யாமறியோம். முஸ்லீம்களை வெளியேற்றியது தவறென்று புலிகளும் ஒத்துக்கொண்டனர் தமிழனும் ஒத்துக்கொண்டான், அதன் பின்பும் ஆறிய காயங்களை சுரண்டி சுரண்டி இனங்களுக்கிடையே தீமூட்டுகிறது இந்த இனம். போர் காலத்தில் வியாபாரம் அழிந்தது சொத்து அழிந்தது என்று கதறும் இனம், திருமலை மட்டக்களப்பு என தமிழர்களுக்கு மட்டும் இவர்களால் அந்த நிலமை ஏற்பட்டதில்லையென்று ஒரு ஆய்வு செய்து சொல்லுமா? முடிந்தவற்றை முடிந்தவையாக பார்த்து முறுகலின்றி வாழ முற்படுகிறது எம் இனம். இன்று புலிகள் இருந்தாலாவது ஆற்றாமையில் பேசுகிறார்கள் என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் யாருமே இல்லாத நிலையில் இன்றும் விஷம் கக்குகிறார்கள் என்றால் தமிழர்களை எதிரிகளாகவே எப்போதும் கருதவேண்டுமென்று அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்க்கிறார்கள் என்பதைதவிர அடுத்தொரு கருத்து கிடையாது. இன்று நல்லூர் திருவிழாவிலிருந்து முற்றவெளி உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலும் தமிழர்விழா காலங்களில் வியாபாரம் பணம் அள்ளல் என்று 90% முஸ்லீம்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன, அந்த மண்ணும் மக்களும் அவர்களை வேறொருவராக பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் எங்களை காசு தேவையை தவிர்த்து விரும்ப தகாதவர்களாகவே பார்க்கிறார்கள் என்பதற்கு அப்பப்போ வரும் அவர்களின் அறிக்கைகளே சாட்சி. ஆனாலும் காசுக்கு மட்டுமே தமிழன் வேண்டும், மற்றும்படி கருநாகம்போல் எம்மை போட்டு தள்ளி சந்தர்ப்பம் பாத்து காத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம், அதன் வெளிப்பாடே எண்ணெய் ஊற்றி ஊற்றி வக்கிர புத்திகொண்டு வெறிகொண்டு நிற்கிறது. இவர்கள் குணம் அறிந்தே மாறி மாறி வரும் அரசுகளுக்கு தாளம் போட்டு அரச உயர்பதவிகளை பெற்று அதனை தமது மதமும் இனமும் வளர்க்க பயன்படுத்தும் இவர்களுக்கு எந்த அரச உச்ச பதவியும் தராமல் தூரத்தே வைத்திருக்கும் அநுர அரசை இதற்காக என்றாலும் பாராட்டலாம்.
  34. காட்டு யானை ரோலக்ஸ் பிடிக்கப்பட்டது https://www.youtube.com/shorts/-VRiCxiCoNw ராமில் அடிபடாது காப்பாற்றிய காவலர் யால தேசியப்பூங்காவில் சிறுத்தையிடம் இருந்து மானைக் காத்த முதலை!!
  35. இவர் ரணிலின் மற்றும் மகிந்தவின் ஆதரவாளராக காட்டிக் கொண்டார் என்றும், அதனால் தான் அரசியல் ரீதியில் பழிவாங்கபட்டார் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மையான காரணம் எதுவென அறிய முடியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.