Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    88724
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    39255
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20307
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33739
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/02/26 in all areas

  1. அர்ச்சுனாவுக்கும்... முதல் அமைச்சராகும் ஆசை உள்ளது. கடந்த தேர்தலில், அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினராக வந்ததே... சுமந்திரனின் எதிர்ப்பு வாக்குகள் தானே. கௌசல்யா எடுத்த வாக்குகளை கூட, சுமந்திரனால் எடுக்க முடியாமல் போய் விட்டது. வரும் மாகாணசபைத் தேர்தலில்.... சுமந்திரனும், அர்ச்சுனாவும் வாக்குகளை பிரிக்க... அனுரா கட்சி, வடமாகாண சபையை கைப்பற்றி, முதல்வராக வருவார்கள். தேசியக் கட்சியையும், அர்ச்சுனாவையும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தது சுமந்திரனின்... லூசுத்தனமான வேலைகள் மட்டுமே. இப்போ... தனக்கு ஒரு இடமும் இல்லாமல், தனது கட்சிக்குள்ளேயே குழிபறிப்பு செய்து, நிலைமையை இன்னும் மோசமாக்கிக் கொண்டு இருக்கின்றது, சுமந்திரன் என்ற வெங்காயம்.
  2. யாழ்கள சுமந்திரன் லவ்வர்ஸ்சின் இப்போதைய நிலை👇 (சு)மந்திரம் இது.. (சு)மந்திரம் தினம் தோறும்.. மனம் மோதும்ம்ம்ம்.. (பா)ஆவி நீ எமில்.. துரோகி நீ இதை... கேட்டு வர வேண்டும்ம்ம்ம்ம்.. (சு)மந்திரம் இது (சு)மந்திரம் தினம் தோறும்... மனம் மோதும்.. மந்திரம் இது.. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பிகு எம்பி இல்லாவிட்டாலும் தமிழ் தேசிய அரசியலில் சவுண்டு பார்ட்டியாக இன்னமும் சுமன் உள்ளார் என்பதை இந்த திரியே காட்டுகிறது.
  3. புலவர் இனிப் போய் விடுவார்! வேறெங்காவது மீண்டும் வருவார், கேள்வி கேட்டால் மீண்டும் போய் விடுவார்😎! "சிவப்பு, பச்சை, நாவல்" என்று கலர் அடித்து விளையாடும் "முதிர்ந்தும் வளராத" பெரிசுகளுக்குரியவை தான் இது போன்ற திரிகள்😂! உண்மையா, திரிப்பா என்று உரசிப் பார்த்து வாசகர்களுக்கு தகவல் தெளிவை உருவாக்கும் பதிவர்களுக்குரியவையல்ல!
  4. தேவையற்ற விவகாரங்களில் தமிழர்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. --- --- --- *1970 களில் விடுதலை இயக்கங்களை உருவாக்கிய காரணங்கள், 2009 இற்குப் பின்னர், எவ்வித தடைகளும் இன்றி, அரசாங்கத்தால் தொடரப்படுகிறதே! பண்டாரநாயக்கா, ஜேஆர் - இன்றைய அநுர வரை... *புவிசார் அரசியல் போட்டிகளை நன்கு பயன்படுத்தும் இலங்கை.. *இந்திய நிதியுதவி எங்கு பயன்படுத்தப்படும்? --- --- --- இலங்கை அரசாங்கம் குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மிகவும் நுட்பமாக காய்நகர்த்தி, பொருளாதாரத்தை முன்னேற்ற பல திட்டங்களை வகுத்துள்ளது. சமகால புவிசார் அரசியல் போட்டிகளை கன கச்சிதமாக பயன்படுத்தி இந்தியாவிடம் இருந்து பெருமளவு நிதிகளையும் - நன்கொடைகளையும், அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இலங்கை பெறுகிறது. வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. ஏன், அமெரிக்கா - சீனா ஆகிய நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாக இலங்கைக்குப் பெருமளவு நிதிகளை அள்ளி வழங்கக் கூடிய சந்தர்ப்பங்களை, சமகால புவிசார் அரசியல் சூழல் உருவாக்கி வருகிறது... 2009 இல் இருந்த புவிசார் அரசியல் சூழலைப் பயன்படுத்தி எவ்வாறு ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதோ, அதேபோன்ற ஒரு புவிசார் அரசியல் போட்டி 2026 இல் உருவாகியுள்ளது. இதனை நன்கு பயன்படுத்தி இலங்கையின் பொருளாதார பலவினங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, தமிழர்களின் அரசியல் விடுதலை விவகரமும். வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்ற போர்வைக்குள் மூழ்கும் ஆபத்துகள் நெருங்கியுள்ளன... குறிப்பாக ---- தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் கிவுல் ஓயாத் திட்டம் போன்ற பல திட்டங்களை செயற்படுத்தி, அதற்குரிய நிதிகள். தொழில்நுட்ப உதவிகளைக் கூட பெறுவதற்குரிய ஏற்பாடுகள் உண்டு. பெருமளவு நிதி வழங்குகின்ற இந்தியா, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று மாத்திரமே கேட்கும். மாகாண சபைத் தேர்தல்களை நடத்துங்கள் எனவும் இந்தியா அழுத்தம் கொடுக்கும்.. அதற்கு இணக்கம் தெரிவித்துப் பின்னர், அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று அநுர அரசாங்கம் வேறு கதைகளைக் கூறிச் சமாளிக்கும். 13 ஆவது திருத்தம் நிரந்தர அரசியல் தீர்வு அல்ல என்பது வேறு.. தமிழர்கள் அதிகமானோர், ஏற்கவில்லை என்பதும் வேறு... ஆனால் -- 13 ஐ கூட நடைமுறைப்படுத்த அநுர மாத்திரமல்ல, வேறெந்த ஒரு சிங்களத் தலைவர்களுக்கும் விருப்பம் இல்லை என்பதே உண்மை... 2009 இற்குப் பின்னர், 13 கூட தமிழர்களுக்குத் தேவையில்லை என்பதே சிங்கள பெளத்த தேசிய நிலைப்பாடு... ஆனால் -- 1949 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லோய குடியேற்றத் திட்டச் சிந்தனை, 2009 இற்குப் பின்னரான சூழலில் வடக்கு கிழக்கில் நிறைவேற்றப்படுகிறது. அதுவும் வெளிநாடுகளின் நிதியுதவியில்.... குறிப்பாக --- A) நில அபகரிப்புகள் B) வடக்கு கிழக்கு நிலத் தொடர்புகளைத் துண்டிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்.. C) புத்த சிலை வைத்தல் - விகாரை அமைத்தல்.. கிவுல் ஓயா போன்ற நீர்ப்பாசணத் திட்டங்கள்.. இதனை விளக்கமாகச் சொல்வதானால் -- 1970 களில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுத இயககங்கள் உருவாவதற்கான காரண காரியங்கள், 2009 இற்குப் பின்னர் எந்தவிதமான தடகளும் இன்றி தொடருகின்றன என்று கற்பிதம் செய்ய முடியும்... அதற்கு வசதியாக தமிழ்த்தரப்பின் கவனத்தை திசை திருப்ப, 2009 இற்குப் பின்னர் பல சதித் திட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தமிழ்த்தரப்பும் அதற்குப் பலியாகித் தமக்குள்ளேயே அடிப்பட்டுக் குத்துப்பட்டுத் தம்மைத் தாமே தரம் தாழ்த்தி வருகின்றன. குறிப்பாக, அநுரவின் ஆட்சிக் காலத்தில் .... 1) மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் நாகரிகமற்ற வாக்குவாதங்கள். 2) தமிழர்களிடம் நிர்வாகத் திறன் இல்லை என்று காணிக்கும் நடைமுறைகள். 3) சிங்கள தலைவர்கள் - சிங்கள அரச அதிகாரிகள் நல்லவர்கள் என்று கண்பிக்கும் உத்திகள்... 4) சுமந்திரன் - சிறீதரன் மோதல். தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தும் கருத்து வெளிப்பாடுகள்... 5) மாவை சேனாதிராஜா மாமனிதர் என்ற விவகாரம்.. 6) சுமந்திரன் - கஜேந்திரகுமார் தரப்பு மாறி மாறி வசைபாடுதல். 7) நல்லூர் ஆலயச் சூழலில் உலகக் கிண்ணக் கோப்பையை கொண்டு வந்த விவகாரம்... போன்றவை பற்றிய வாதங்கள், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடுதலை தொடர்பான சிந்தனைகளைத் திட்டமிட்டு திசை திருப்புகின்றன. இச் செயற்பாடுகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சில தமிழ் உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துடையோர் உடந்தையாக உள்ளனர் என்பது பட்டவர்த்தனம். ஆகவே -- 16 வருடங்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு வடிவங்களில் தமக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் சதிகள் பற்றிப் புரிந்துகொள்ளாமல், தமிழ்ச் சமூகம் ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து செல்கிறது? ஆகவே, தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கடந்து. பொது அமைப்புகள் - சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.... குறிப்பாக--- ஜேஆர் காலத்தில் இருந்து, ஏன் பண்டாரநாய்கா. சேனநாயக்கா காலத்தில் இருந்து இன்றைய அநுர வரையும், தமிழர் விவகாரத்தில் சிங்கள தலைவர்கள் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டோடு தான் செயற்பட்டு வருகின்றனர் என்பதை, வரலாறு காட்டி நிற்கிறது... இது தமிழர்களுக்கான இலகுவான அரசியல் விஞ்ஞான விளக்கம்... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid032RqM5BgwgzJeZzVRtvoh1HxopvY7K6zX1KVng39WXUqh9kPdEa9vTAqwCyrTFQcfl&id=1457391262
  5. CAN,52. SCOT,67. WI and 73. PAK உங்கடை கூகிள் சீற் தான் சொதப்பிப்போட்டுது
  6. ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! உதாரணமா பார்த்தீங்க என்றால், * ஒரு மாடு 3 கன்று குட்டி போட்டால் * டிராகன் ஃப்ரூட்டில் ஜூஸ் அடித்து விற்றால் * எங்கேயாவது புதிய சாப்பாடு கடை புடவை கடை திறந்தால் * கனடா அண்ணா கனவு மாளிகை கட்டினால் * கோவில் திருவிழாவுக்கு யானை வந்தால் *யாழ்ப்பாணம் ஏர்போர்ட்டுக்கு பாட்டுக்காரர்கள் வந்தால் தனித்தீவில் ஒரு ஐயா வசித்து வந்தால் செக்கில எண்ணெயை ஆட்டினால் *செம்மறி ஆட்ட தெருவில கொண்டு போனா * அனுர அரைக்காச்சட்டையோட அளவெட்டியில நடந்து போனா என்று நிம்மதியே இல்லாமல் ஓடி திரிந்து வீடியோ எடுத்து போட்டு உழைக்கணும் !! இதைவிட மேலாக, பிள்ளைகளை வைத்து வீடியோ எடுத்து அதுகளையும் சாப்பிட விடாமல் 10 டேக் படம் எடுத்து, பாடா படுத்தி தாங்களும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுகளை விடவா உங்களுக்கு மன அழுத்தவும் கஷ்டமும் இருந்து விடப் போகிறது!! ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!! #அழகியதொருவாழ்வு முகநூலில் பிரதி பண்ணப்பட்டது...நன்றி KB Jeyanthan ·....
  7. இன்னும் ஐந்து நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் உங்கள் பதில்களைத் தாருங்கள்.. @நியாயம் , @வீரப் பையன்26 , @suvy ஐயா, @தமிழ் சிறி ஐயா, @குமாரசாமி ஐயா, @நிலாமதி அக்கா, @ரசோதரன் , @நந்தன் , @Eppothum Thamizhan , @கந்தப்பு , @நீர்வேலியான் , @Ahasthiyan , @goshan_che , @பிரபா , @theeya
  8. இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 13 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்! செம்பாட்டான் ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 சுவி
  9. பெயரைக் குறிப்பிடுங்கள் @வீரப் பையன்26 @வாதவூரான் , உங்கள் கணிப்புக்களின்படி இந்தியாவும் சிறிலங்காவும் இறுதிப் போட்டியில் விளையாடும். ஆனால் வெல்லுவது பாகிஸ்தான் என்று தந்துள்ளீர்கள். ஏதாவது மாற்ற விரும்பினால் சொல்லுங்கள் 😄
  10. அந்தக் கால காதல் கடிதங்களில் இந்த பாட்டு கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
  11. Sri Lanka: Dasun Shanaka (c), Pathum Nissanka, Kamil Mishara, Kusal Mendis, Kamindu Mendis, Kusal Janith Perera, Charith Asalanka, Janith Liyanage, Pavan Rathnayake, Wanindu Hasaranga, Dunith Wellalage, Maheesh Theekshana, Dushmantha Chameera, Matheesha Pathirana, Eshan Malinga தமிழர்கள் இல்லாத இலங்கை அணி. ஒருவேளை மண்டதீவு மைதானம் திறந்த பின்னர் ஏதாவது நடக்குமா?
  12. அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் . .......! 😍
  13. பாக்கிஸ்தானின் சுழ‌ல் ப‌ந்து வீச்சு இப்போது ந‌ல்ல‌ நிலையில் இருக்கு..............சிறந்த‌ வீர‌ர்க‌ளை பாக்கிஸ்தான் தேர்வுக்குழு தெரிவு செய்து இருக்கின‌ம்................
  14. இது என்ன‌ கொடுமை லொள் நான் பாக்கிஸ்தான் கோப்பை வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கிறேன்........... இந்த‌ முறை ஜ‌க்க‌ம்மாவை கைவிட்டு அல்லா அக்ப‌ட் சொல்ல‌ வேண்டிய‌து தான் ஹா ஹா😁........................
  15. அவுஸ்ரேலியாவுக்கு இது ஒரு நல்ல பாடம். அவர்கள், அதிலிருந்து கற்று வருவார்கள். இந்த T20 போட்டிகளில் ஒருவரையும் முன்னணி அணி என்று கூறமுடியாது. யாரும் யாருக்கும் அடிக்கலாம். பாகிஸ்தானுக்கு எதிரி உள்ளேயே எப்போதும் இருப்பார். அவர்களுக்கே தெரியாது, எப்போ அடிப்பினம் எப்போ அடிக்கமாட்டினம் என்று 😁
  16. அண்மையில் நடந்த போட்டித்தொடரில் பாகிஸ்தான் அவுஸ்ரேலிய அணியினை ஊதித்தள்ளியுள்ளார்கள், இந்திய இலங்கை போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது, ஒப்பீட்டளவில் இலங்கை ஆடுகளம் இந்திய மைதானங்கள் போல பந்து முட்டுக்காலுக்கீழாகவும் திரும்பாத செத்த பிட்சாக இருக்காது, இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமிடையே ஒரு சமநிலையான போட்டியாக இருக்க வாய்ப்பாக இருக்கும் (விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய வீரர்களே சுழல் பந்து வீச்சினை சமாளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்).
  17. அவர் Enter The Dragon படத்தில புருஸ்லி வந்த மாதிரி வருமாக்கும் என்று நினைத்திருப்பாரோ😁
  18. சுமந்திரனுக்கு.... இப்போ ஒரு பதவியும் இல்லாததால்.... ஏற்பட்ட அவமானத்தை மறைக்க... நானும் "ரவுடி" தான் என்ற நினைப்பில் செய்கின்ற வேலைகளை எல்லாம்... அவருக்கு எதிராகவே திரும்புகின்றது. ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த களமிறங்கிய அரியநேந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டு, தனது பதவிக்காக சங்கோடு புதிய உறவை ஆரம்பித்திருக்கிறார் சுமந்திரன்.
  19. ஸ்கொட்லாந்து அணியைப் போடவும் கிருபன் ........! VARRUN......! நன்றி பையா .........! 71 வது கேள்விக்கு இந்தியா என்றும் , 72 வது கேள்விக்கு இங்கிலாந்து என்றும் எழுதியுள்ளேன் கந்தப்பு . ......!
  20. @suvy ஐயா, பங்களாதேஷ் விளையாடமாட்டேன் என்று விலகியதால் ஸ்கொட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. உங்கள் பதில்களில் பங்களாதேஷுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணியைப் போடவா அல்லது கீழே உள்ள புதுப்பித்த கேள்விக்கொத்தைப் பாவித்து பதில்களைத் தரமுடியுமா?
  21. அரையிறுதிப் போட்டிகளின் scenarios எல்லாம் தெளிவாக இல்லை. எனினும் இப்போதுள்ள புரிதல்களின்படி தெரிவுகளை மேற்கொண்டால் போதும். மைதானங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் புள்ளிகளை இழக்கவேண்டி வராது🙂
  22. மோகன் அண்ணா மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாருக்கு கண்ணீரஞ்சலி.
  23. இந்தியா, இலங்கை எல்லாம் வெறும் லேபிள்தான், உரிமைகள்தான் முக்கியம். பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருபதனை விட ட்ரம்பிடம் காசு வாங்கிக்கொண்டு அமெரிக்காவுடன் சேர்ந்தால் (கிறீன்லாந்து பேரம்) நல்ல தனிமனித உரிமை, பொருளாதார சுதந்திரம் எல்லாம் இருக்கும் (இந்தியா என லோக்கலா சிந்திக்காமல் இன்ரனெசனாலா போகலாமே), பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் இருக்கிறதையும் பிடுங்கி விடுவார்கள்🤣. 20. இந்தியாவின் அரசியல், பொருளாதார பங்களிப்புகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன? இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது. இந்தியா என்றைக்குமே உலக வல்லரசாக முடியாது என்பதே தற்போதய யதார்த்தம் .
  24. ஏதோ நமக்கு நல்லாய் பொழுதுபோகுது. பல விடயங்களையும் அறியக்கூடியதாய் உள்ளது. அதற்கொரு பெரிய நன்றி இலங்கை யூரியூப்பர்களுக்கு சொல்லத்தான் வேண்டும்.
  25. முட்டாள்தனமாக ஆதவன் செய்திக்கு தலையங்கம் கொடுத்துள்ளது. தலையங்கத்தை மட்டும் மேய்ந்து விட்டு கச்சேரி வேறு களை கட்டுகிறது😂. இதுதான் செய்தி. இதை ஏலவே எக்ஸ் செய்கிறது. எக்ஸுக்கு சந்தா கட்டினால் சில சலுகைகள், ஏ ஐ கருவியான கொரொக்கின் முழு பாவிப்பு கிடைக்கும். இல்லை எண்டால் அடிப்படை சேவை இலவசம்.
  26. கட்டயாம் கலந்து கொள்கிறேன்.
  27. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED எதிர் PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCOT எதிர் WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND எதிர் USA 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT எதிர் ITA 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA எதிர் ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN எதிர் SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ எதிர் UAE 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK எதிர் USA 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG எதிர் SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS எதிர் IRE 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG எதிர் WI 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL எதிர் OMA 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA எதிர் NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND எதிர் NAM 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS எதிர் ZIM 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN எதிர் UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED எதிர் USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE எதிர் OMA 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து SCOT எதிர் ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ எதிர் SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP எதிர் WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM எதிர் USA 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK இர‌ண்டு அணிக‌ளும் விளையாட‌ வில்லை................ 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG எதிர் UAE 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG எதிர் ITA 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS எதிர் SL 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN எதிர் NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE எதிர் ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA எதிர் UAE 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM எதிர் PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND எதிர் NED 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? USA ?? NED ?? NAM ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? NAM முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SL ?? IRE ?? ZIM ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) WI?? ENG ?? SCOT ?? NEP ?? ITA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) WI குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) ENG 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ?? SA ?? AFG ?? CAN ?? UAE ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? UAF சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. X1 IND USA NED NAM X2 AUS IRE ZIM OMA X3 WI SCOT NEP ITA X4 SA AFG CAN UAE Y1 ENG BAN NEP ITA Y2 NZ AFG CAN UAE Y3 PAK USA NED NAM Y4 SL IRE ZIM OMA 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) NZ எதிர் PAK 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, WI எதிர் SL 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத் IND எதிர் X SA 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, AUS எதிர் WI 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல ENG எதிர் PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) NZ எதிர் SL 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத் WI எதிர் X4 SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, IND எதிர் AUS 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS) ENG எதிர் NZ 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, PAK எதிர் SL 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM டெல்லி, AUS எதிர் SA 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ் IND எதிர் WI சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) X1 IND X2 AUS X3 WI X4 SA 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) AUS 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? SA சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) Y1 ?? PAK Y2 ?? NZ Y3 ?? ENG Y4 ?? SL 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) PAK சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அணி? SL அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NZ அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் PAK * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் * பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தெரிவானால் அரையிறுதிப் போட்டி 1 இல் விளையாடும். எனவே, இந்தத் தெரிவைக் கவனமாகப் பதியுங்கள் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) PAK அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? PAK 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? OMA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? abhishek sharma 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? bumrah 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Quinton de Kock 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? bumrah 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? IND 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
  28. அரசியல் சுதந்திரம்: 2014-ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், 2009 மே மாதத்திற்குப் பிறகு (யுத்தம் முடிவுக்கு வந்த பின்) அரசும் சரி, எதிர்க்கட்சியினரும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி, இன்று சுதந்திரமாகச் செயல்பட முடிவதற்குக் காரணம் "விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று இல்லாததுதான்" என்று அவர் தெரிவித்தார். கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை: தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) கூட விடுதலைப் புலிகளின் பிடியில் (clutches of the LTTE) இருந்து தற்போது சுதந்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த நேர்காணலில் ஒப்புக்கொண்டார். முரண்பட்ட கருத்துக்கள்: அதே சமயம், மற்றொரு தருணத்தில் புலிகள் "மனித உரிமைகளை ஒருபோதும் மதிக்கவில்லை" ("never observed human rights") என்றும், அதுவே அவர்களின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது
  29. தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியும் நாங்கள், பேரம்பேசும் சக்தியும் நாங்களே என்று தெனாவெட்டாக எழுபத்தாறு ஆண்டுகள் வீணானதே. அதுதான் தென்னிலங்கை கட்சிகள் தமிழரிடம் காட்சிகள் அரங்கேற்ற காரணம். மக்களை பொன்சேகாவிற்கு வாக்களியுங்கள், மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்று வழி காட்டியவர்களும் இவர்களே. அதன்மூலம் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப முடிந்ததா இவர்களால்? சும்மா மக்களை குற்றம் சொல்வது இவர்களின் வழமை. இவர்களும் தவறானவர்களை தெரிந்தெடுக்க மக்களை தூண்டியிருக்கிறார்களல்லவா? இந்த முறை மட்டுமே மக்கள் இவர்களின் தெரிவுக்கு செவிசாய்க்கவில்லை, மற்றைய தெரிவுகளுக்கு இவர்களும் பொறுப்பே. இவற்றின்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னை தெரிந்தெடுத்த மக்களுக்கு இவர் சாதித்தது என்ன? ஒன்றாக இருந்த கட்சியை சிதைத்ததை தவிர. இருந்த இடத்திலிருந்து, இன்று தையிட்டிவரை முன்னேறியிருக்கிறது இவரின் சட்டத்துறை நிபுணத்துவம் சாதித்தது என்ன?
  30. ஈழப் போராட்டத்தை... வல்லரசு நாடுகள் நசுக்கும் போதும், கொத்துக் குண்டுகளை வீசும் போதும்... நேரடியாக ஐ.நா. தனது பிரத்தியேக சற்றலைட் மூலம் பார்த்துக் கொண்டு இருந்ததை "நியூயோர்க் ரைம்ஸ்" அம்பலப் படுத்திய பின்பும்... பாதிக்கப் பட்ட அந்தத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க முன் வராத ஐ.நா. அமைப்பு உலகத்திற்கே தேவையில்லாத கையாலாகாத அமைப்பு. இருப்பதை... விட தொலைந்து போவதே மேல். 🤬 ஐ.நா. இதுவரை... புடுங்கின ஆணியே போதும். 😂 இனி... ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். மூடிட்டு கிளம்புங்க. நீங்கள் "மிக்சர்" சாப்பிடுவதற்கு ஒரு சபை தேவையில்லை.
  31. உண்மையில் இந்த விமான நிலையத்தை யார் வைத்pருக்கிறார்கள்.இந்தியா அல்லது இலங்கை.
  32. அன்னாருக்கு அஞ்சலிகள் , உறவை பிரிந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  33. மனைவியின் மறைவுக்கு கருத்துக்களத்திலும் தனி மடல்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஆறுதலளித்த அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றி.
  34. நீங்கள் செலுத்தும் அஞ்சலியில் பங்கு கொள்கிறோம், ஐயா !
  35. புதன் கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு இறுதிச் சடங்கு மலர் கொத்து ஒன்று யாழ் கள உறவுகள் சார்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.