Everything posted by யாயினி
-
இன்றைய ஆசிரியர்கள் அறிந்திருக்கவேண்டிய உத்திகள் சரண்யா ஜெய்குமார் யாழ்ப்பாணம் செயலூக்க உரை
- வாசலும் வீடும்
கரப்பான் பூச்சித் தொல்லைக்கு பூச்சிப் போளை வாங்கிப் போடுங்கள் இனிமேல் வர மாட்டார்கள்.. ஏன் அதிகம் எலி மற்றும் பூச்சிகள் எல்லாம் வரக் காரணம் என்ன.....? சரி அதை விடுங்கள்...சில வாடகைக் குடியிருப்புக்களில் இவர்களின் தொல்லை அதிகம் தான்...நான் ஒண்டைக் கண்டாலே வீட்டில் ஆங்காங்கே போட்டு விடுவேன்..இப்போ பூச்சி தொல்லை இல்லை..✍️- கனடா விசிட் விசா
இந்தப் பெண் பிள்ளை ஒலிபரப்பாளராக(செய்தி வாசிப்பாளராக) இருக்க வேண்டும்..இவரது தகவல்கள் எப்போதும் இப்படித் தான் ஏற்ற இறங்கம் நிறைந்ததாகவே இருக்கும்.இதை நான் குறையாக சொல்ல வர இல்லை.அவரது இயற்கையான பாணியே இது தான்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
· புங்கையண்ணா.🖐️ என்ன உங்கள் பிறந்த நாளுக்கு ஒரு சனத்தையும் காணம்...😀இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.✍️- யாழில் விமானப்படையின் கண்காட்சி
சுயமா உழைக்கும் காசு என்றால் இப்படி எல்லாம் ஊதாரித்தனம் செய்ய முடியாது இது உலகம் பூரா இருக்கும் வயசு போனவர்கள் கஸ்ரபட்டு உழைக்கிறவர்களும் சேர்ந்து பின் பலத்தில் நிற்பதனால் தான் இப்படிச் செய்கிறார்கள்..நான் கடந்த சில நாட்களுக்கு பின் இப்படியான இடங்களில் எழுதக் கூடாது என்று நினைத்து விட்டேன்.இப்படியானவற்றைக் கண்டால் நம்மையறியாமலே செய்யக் கூடாத என்ற தப்பை செய்ய வைக்கிறார்கள்.🖐️- நான் கண்ட யாழ்ப்பாணம்!!
நல்லது தொடருங்கள்.........🖐️- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
என் தகுதிக்கு மீறியவற்றுக்கு என் அகராதியிலயே இடம் இருக்காது..அது பிள்ளையா இருந்தா என்ன...குட்டியா இருந்தா என்ன..🖐️😒- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
எனக்கு அந்தப் பிள்ளைகளோடு எந்தப் பிரச்சனையும் இல்லை.நானும் களத்தில் பல ஆண்டுகளாக உலாவி வருகிறேன் அந்த விதத்தில், பிடித்தது பிடிக்காதவற்றுக்கு என் என் கருத்தை முன் வைப்பதில் எந்த தப்பும் இல்லை என்று நினைக்கிறேன்..நீங்கள் கேட்கும் விதம் ஒரு விதமாக இருக்கிறது..என்னைப் பொருத்த மட்டில் ஒரு இடத்தில் பல தடவைகள் கருத்தை பகிர விரும்புவதில்லை..எழுத வெளிக்கிட்டால் நிறைய எழுதலாம்..உதாரணத்திற்கு சொல்லப் போனால் இனி வர இருக்கும் ஊர் அழைப்புக்கள் என் பிள்ளை கெலியில் போய் என்ஜோய் பண்ண வசதியற்று இருக்கிறது..பணம் அனுப்புங்கள் என்றும் வரும்..அனாவசிய செலவுகளுக்கு பணம் கேட்டு அழைப்பவர்களும் இருக்கிறார்கள்..இதே மக்கள் துரத்துப் பட்டு ஓடும் போது குடைக்குள் மழைத் தண்ணீர் ஏந்திக் குடித்ததை மறந்திட்டு தான் இவ்வளவு கும்மியும் அடிக்கினம்.🥵- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை விட மேலும் 7 பேர் காயப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..😒- வடக்கில் மாணவர்கள் வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு
அக்கா இவர்களாவது சின்னப் பிள்ளைகள் பறவா இல்லை..வேறு சில வேலையில்லாத கூட்டமும் போய் வீடியோ எடுத்து போட்டு இருக்கிறார்கள்..அவர்களை என்னவென்று சொல்வது......?- இந்தின் இளம்பிறை
அண்மைய காலங்களில் நானும் அவதானித்த விடையம்....ரிக்ரொக்கில் அடிக்கடி தமிழ் பாடல்களை போட்டு விட்டு அதற்கு ஏற்ப ஆடுகிறார்கள் மற்றும் புது வானம் வாங்கியவர்களுக்கு வாகன பூசை கூட செய்து குடுக்கிறார்கள்.தமிழ் பக்கம் போன்றே இவர்களது பக்கமும் காணக் கூடியதாக இருக்கும்.🖐️கரிபீயனைச் சேர்ந்தவர்களா இல்லை அவுஸ்சை சேர்ந்தவர்களா என்று அறியும் ஆவல் இருந்தாலும் பார்ப்பதோடு வந்து விடுவேன்..- யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள்
புறோ..இப்போ நீங்கள் எழுதும் தமிழை வேறு நாட்டவரிடம் கடன் வாங்கிறீர்களா என்று தெரியாமல் இருக்கிறது..புரிந்து கொள்ள கஸ்ரமாக இருக்கிறது. (ஏன்னா)எந்த ஊர் தமிழ்...? அனேக இடங்களில் உங்களின் எழுத்தை இப்படித் தான் காணக் கூடியதாக இருக்கிறது..இப்படியே போனால் நாங்களே எங்கள் மொழியை காணாமல் ஆக்கி விடுவோம்..கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் புறோ....- சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
🙏🙏- (தீ) சுவடு
ஏன் போறீங்கள்...என்னாச்சு..யாரும் ஒன்றும் சொல்லவும் இல்லை சண்டை போடவும் இல்லயே..போறதுக்கு ஒரு காரணம் தெரியத் தானே வேணும்.சொல்லக் கூடாது மற்றும் சொல்ல முடியாத விடையம் என்றால் விடுங்கள்.✍️- மயிலம்மா.
- சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?"..[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]
சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?" காவியா தனது ஸ்கூட்டரில் அரசடி சந்தியால் திரும்பி, வைமன் வீதியால், அத்தியடி புது வீதியூடாக, யாழ் போதனா வைத்திய சாலைக்கு வேலைக்கு காலை புறப்பட்டாள். அவள் ஒரு இளம் செவிலியாக அண்மையில் தான் பணிக்கு சேர்ந்தவள். அவள் முகத்தில் புன்னகையைக் காணவில்லை. எதோ ஏக்கம் துக்கம் அவளை வாட்டுவது அப்படியே தெரிகிறது. அதை அவளால் மூடி மறைக்க முடியவில்லை. அத்தியடி புதுவீதியால் போகும் பொழுது, அந்த வீட்டில் பலர் கூடியிருப்பதைக் கண்டு, செவிலி தானே, என்ன ஏது என்று தன்னை யறியாமலே விசாரித்தாள். தானே தற்கொலை செய்து, வாழ்வை முடிக்க திட்டமிட்டவளுக்கு, இப்ப அது உண்மையில் தேவையில்லாத ஒன்றுதான். தன் வேலையிடத்தில், தான் பார்க்கும் நோயாளிகளை முறையாக இன்னும் ஒரு செவிலியிடம் பாரம் கொடுத்து விட்டு, தற்கொலையை எனோ ஒரு தீர்வாக எடுத்து, இரவு இந்த உலகை விட்டு போக வேண்டும் என்பதே அவளின் இறுதி முடிவாக இருந்தது. அதற்கிடையில் இது! ரமேஷ் மீதான அவளுடைய காதல் ஆழமாக இருந்தாலும், காலத்தையும் சமூக எல்லைகளையும் தாண்டிய ஒரு பந்தம் இருவருக்கும் இடையில் இருந்தாலும், அவர்களின் காதல் சமூகத்தின் கடுமையான மரபுகளுடன் மோதியதால், காவியா விரக்தியின் தவிர்க்க முடியாத வலையில் சிக்கிக் கொண்டாள். சமூக எதிர்பார்ப்புகளின் கனமும், அவளது காதலுக்கும் வேரூன்றிய மரபுகளுக்கும் இடையிலான மோதலும், ரமேஷ் இல்லாத எதிர்காலத்தைப் பற்றிய பயமும் காவியாவிற்குள் ஒரு நம்பிக்கையற்ற உணர்வை உருவாக்கியது. தான் ஆழமாக நேசித்த ஒருவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து போக வேண்டும் என்ற எண்ணமும், அவர்களின் காதல் செழிக்கக் கூடிய எதிர்காலத்தை கற்பனை செய்ய முடியாத இயலாமையும் சேர்ந்து, அத்தகைய சோகமான தீர்வை யோசிக்க வைத்தது அவளுக்கு. எல்லாத் தற்கொலைகளும் மூடத்தனமானதுதானா? தன் உயிருக்கு மேலாகத் தான் நம்பும் ஒன்றை நிறுவ உயிரை மாய்க்கும் சமூக விழுமியத்தை நாம் தக்கவைக்க வேண்டாமா? தற்கொலைகளில் தியாகமாக? ஒரு மானுட உச்சமா? அவளால் சிந்தித்து பார்க்கும் நிலையில் அவள் இப்ப இல்லை. வில்லியம் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் அவரது கதாபாத்திரங்கள் தற்கொலையால் இறக்கின்றன. ரோமியோ ஜூலியட்டின் இறுதிக் காட்சியில், இளம் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அது கதைக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்து இருக்கலாம்? மற்றும் படி அது எந்த தீர்வையும் தரவில்லை என்பதே உண்மை! இலங்கையின் யாழ்ப்பாணத்தின் பரபரப்பான தெருக்களில், யாழ்ப்பாணத்துக்கே உரிய மசாலா வாசனை, பாரம்பரியத்தில் ஊறிய கலாச்சாரத்தினையும் சேர்த்து ஆழமாக எதிரொலிக்க, பாலச்சந்திரன் குடும்பம் அங்கு பெருமையுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தது. பாலச்சந்திரனுக்கு ரமேஷ் என்ற ஒரு மகனும் மூன்று மகளும் இருந்தனர். அதில் ஒருவளுடன் சிறு வயது முதல் நண்பியாக இருப்பவள் தான் காவியா. அதனால் ரமேஸுடனும் தோழியாக, சிறுவயதில் நெருக்கமாக இருந்ததால். பிற்காலத்தில் அது காதலாக மாறி, ஒருவருக்கொருவர் சகவாசத்தில் ஆறுதல் கண்டனர். என்றாலும் அவர்களின் காதல் இரகசியமாகவே மலர்ந்தது. ஏனென்றால் அவர்களுக்கிடையில் சமூக ஏற்றத் தாழ்வுகள், அவர்களின் இணைப்புக்கு குறுக்காக நின்றது. ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும் அழகிய விழியும் [அழகாகத் திலகம் இட்ட அழகிய ஒளி பொருந்திய நெற்றியும், அழகிய கண்களும்] மட்டும் அல்ல, "அறம்திகழ் தவமும் அகிலமும் இதனால் அழியுமென் றயன்படைத் திலனோ சிறந்தவேல் விழியை முன்படைத்தயர்ந்து செங்கரம் சோர்ந்ததோ திகைத்து மறந்ததோ கரந்து வைத்ததோ களப வனமுலைப் பொறைசுமந் துருகி இறந்ததோ உளதோ இல்லையோ இனிமேல் எய்துமோ அறியொணா திடையே." அறநெறி விளங்கும் வீட்டு நெறியும் உலகியல் நெறியும் இடையினால் அழியும் என்று எண்ணி இடையினைப் படைக்கவில்லையோ? சிறந்த வேல் போன்ற கண்களை முதலில் படைத்து இளைத்துச் சிவந்த கைகள் தளர்ந்தனவோ? செய்வதறியாது மதிமயங்கி மறந்துபோனினனோ? அல்லது அவள் வடிவில் மறைத்து வைத்திருக்கிறானோ? சந்தனக் குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச் சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ? இடை இருக்கிறதோ இல்லையோ அல்லது இனி மேல்தான் உண்டாகுமோ? இடை இருப்பதாகவே அவளிடம் தெரியவில்லை. அப்படி ஒரு அழகு அவள். அவள் தான் காவியா! அவள் தனது பிரகாசமான புன்னகையுடனும் உறுதியுடனும், காதல் அனைத்தையும் வெல்லும் எதிர்காலத்தை கனவு கண்டாள். ரமேஷ், சமமான உற்சாகத்துடன், ஆனால் குடும்பப் பொறுப்புகளின் சுமைகளை சுமந்து கொண்டு, தனது இதயத்தின் ஆசைகள் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட கடமைகளுக்கு இடையே, தவிர்க்க முடியாத மோதலுடன் போராடினான். தன்னால் இரண்டையும் சமாளிக்க முடியும் என்ற தெம்பு அவனிடம் இருந்தது. ரமேஷ், யாழ்ப்பாணத்தில் உள்ள பல மேல் மட்ட தமிழ் மக்களைப் போலவே, பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு இறுக்கமான சமூகத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயதிலிருந்தே, குடும்ப மரியாதை, கடமை, பெரியவர்களுக்கு மரியாதை போன்ற மதிப்புகளை ஊட்டி வளர்க்கப் பட்டவன். அதிலும் மூன்று தங்கைகளுடன் பிறந்தவன் என்பதால் பொறுப்பும் அதிகம் இருந்தது. இந்த கலாச்சார, கடமை நெறிமுறைகள் அவனது தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் ஆசைகளுடன் மோதின. ரமேஷின் போராட்டத்தின் அடிப்படையானது காவியா மீதான அவனது இதயப்பூர்வமான பாசத்திற்கும் அவனது குடும்பம் அமைத்துள்ள, முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதைக்கும் இடையிலான மோதலாகும். பாரம்பரிய நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியிருந்த அவனது குடும்பம், ஸ்திரத்தன்மை, சமூக அந்தஸ்து மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய அவர்களின் கருத்துக்களுடன் இணங்கக்கூடிய இன்னும் ஒரு ஒத்த குடும்பத்தில் அவனுக்கு ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்யத் தொடங்கினர். இருந்தாலும் ரமேஷின் இதயம் காவியாவுக்கே ஏங்கியது. குழந்தைப் பருவத்தில் உருவான அவர்களின் பிணைப்பு, காலப்போக்கில் வலுப்பெற்று, எல்லைகளைத் தாண்டிய காதலுக்குச் சான்றாக இருந்தது. அவன் தனது இதயத்தின் கட்டளைகளைப் பின்பற்றவும், அன்பே வழிகாட்டும் சக்தியாக இருக்கும் எதிர்காலத்தைத் தழுவவும் விரும்பினான். இதனால், தன் தங்கையினூடாக தன் காதலை பெற்றோரிடம் தெரியப்படுத்தினான். தான் காவியாவை திருமணம் செய்தாலும், கட்டாயம் மூன்று தங்கையின் வாழ்வை தீர்மானிப்பேன், நான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன். ஆகவே பயம் தேவையில்லை என்று உறுதிமொழியும் கொடுத்தான். என்றாலும் அவனது தந்தை பாலச்சந்திரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தாயும் கூட தந்தையின் பக்கமே நின்றாள். இதனால் ஏற்பட்ட தவறான புரிதல்களும் குடும்ப அழுத்தங்களும் காவியா, ரமேஷ் இடையே கடக்க முடியாத சுவர்களை எழுப்பின. ஏங்கித் தவிக்கும் இரு இதயங்களுக்கும் ரமேஷ் குடும்பத்தின் தவிர்க்க முடியாத கோரிக்கைகளுக்கும் இடையில் அகப்பட்ட காதலர்கள் இருவரும், வாழ்வில் ஒரு பள்ளத்தை எதிர்கொண்டனர். தங்கள் காதலுக்கு, தாங்கள் சேர்ந்த உலகில் ஒருபோதும் இடம் கிடைக்காது என்ற மனவருத்தம் தரும் உணர்வு அவர்களை கடுமையான நடவடிக்கைகளைச் சிந்திக்கத் தள்ளியது. என்றாலும் ரமேஷ் தான் இன்னும் பெற்றோருடன் கதைத்து பேசி நல்ல முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். ஆனால், குடும்ப எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டிய அழுத்தம், சமூகத்தின் தீர்ப்பு பற்றிய பயம் மற்றும் அவர்களின் இக்கட்டான நிலைக்கு சாத்தியமான தீர்வு கிடைக்காது என்ற விரக்தி ஆகியவை காவியாவின் தோள்களில் தாங்க முடியாத பாரமாக மாறியது. இது அவளுடைய தனிப்பட்ட ஆசைகளைப் பற்றியது மட்டுமல்ல, அவர்களின் அன்பைத் தடுக்கும் சமூகத் தடைகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியின் வழியில் நிற்கும் கடக்க முடியாத தடைகள் பற்றியதாகவும் விரிந்தது. தன் இறப்பு மூலம் தன் வேதனைக்கு, மனச் சஞ்சலத்துக்கு முடிவு கட்டலாம் என்பதுடன் இது பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து, பிள்ளைகளின் கருத்தையும் அலசும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்று எண்ணினாள். காதல் வெற்றி பெற முடியாததால், அவள் இதயம் வேதனைப் பட்டபோது, அவளுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணம் ஒரு தீர்வாக அவளுக்கு தோன்றியிருக்கலாம்? இது ஒரு பகுத்தறிவு முடிவு அல்ல, மாறாக அவளது வேதனையின் ஆழத்தின் பிரதிபலிப்பு, அவளுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் அவள் மூழ்கடிக்கப் பட்ட போது தன்னை இழந்த நிலையில், ஏற்பட்ட ஒரு உணர்வு. அவள் தன் உணர்வுகளை சமாளித்துக் கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால், அது பிந்திவிட்டது. பக்கத்து வீட்டாரின் துணை பெற்று, கதவு உடைத்து திறக்க நேரம் கடந்து விட்டது. தந்தையின் எதிர்பாராத திடீர் விபத்து மரணத்தால், மனம் உடைந்த இளம் உயர் வகுப்பு மாணவன் தாயின் சீலையில் கழுத்தில் தூக்கு போட்டு அங்கு சடலமாக தொங்கிக் கொண்டு இருந்தான். அவன் விட்டு சென்றது தாயும், தங்கையும், தந்தை இல்லா நேரம் ஒரு வலுவான துணையாக இருந்து பொறுப்புகளை சுமக்க வேண்டிய ஒருவன், தன்னை மரித்து அதில் இருந்து தப்பிவிட்டான் என்று தான் சொல்லவேண்டும் என்று அவளுக்கு, காவியாவுக்கு தோன்றியது. அப்படி என்றால் ? அவள் சிந்திக்க தொடங்கினாள்! ரமேஷ் மீதான அவளது காதலுக்கு இடையூறுகள் தோன்றி, கடக்க முடியாத தடைகளை எதிர்கொண்டபோது, அவள் அனுபவித்த தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்து, தற்கொலை என்ற இந்த கடுமையான நடவடிக்கை பற்றிய அவளது சிந்தனை தோன்றியது என்னவோ உண்மையே. ஆனால் இப்ப இந்த தொங்கும் சடலத்தையும், வெம்பி வெம்பி அழுது புலம்பிக் கொண்டு இருக்கும் அவனின் தாயையும் தங்கையையும் பார்த்த பின், அவள் மனதில் ஒரு ஞானம், ஒரு தெம்பு பிறந்தது. தான் சாவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை, தன்னை விரும்பியவர்களுக்கு, தன் குடும்பத்துக்கு கவலை மற்றும் துன்பத்தையே அது கொடுத்து, அவர்களின் வாழ்வைக் கூட அது சிதைக்கலாம் என்ற ஞானமே அது! அவள் அன்று வேலை முடிய நேராக ரமேஷ் வீட்டுக்கு போனாள். முன்பு எத்தனையோ தடவை ரமேஷின் தங்கையுடன் அங்கு போனவள் தான். அவனின் பெற்றோர்களை சந்தித்தவள் தான். ஆனால் இந்த சூழ்நிலை வேறு. "தற்கொலை தீர்வாகுமா?" என்ற மனதில் ஏற்பட்ட போராட்டத்துக்கு ஒரு மறுமொழியாக அங்கு போகிறாள். வலது கால் எடுத்து மங்கள வாத்தியம் ஒலிக்க ரமேஷின் குடும்பத்துடன் இணைவதற்கு, தானே அவர்களுடன் கதைத்து, விளங்கப்படுத்தி உறுதிகொடுக்க போகிறாள். அது தான் வேறுபாடு. காவியாவுடன் ரமேஸும் இணைய, இருவரின் உணர்ச்சிபூர்வமான நேர்மையும் ஆர்வமும் நிறைந்த வேண்டுகோள், ரமேஷின் பெற்றோர்களுக்கு எதையோ தூண்டியது. மெதுவாக, பாரம்பரியத்தின் விறைப்பு தணிந்து, புரிதல் மற்றும் பச்சாதாபத்தின் ஒரு மினுமினுப்புக்கு வழிவகுத்து, பெற்றோர்களின் மன மாற்றத்திற்கான வாய்ப்பு அடிவானத்தில் மின்னியது. பாலச்சந்திரன் குடும்பம், காவியா ரமேஷின் நேர்மையால் நகர்ந்து, அது உணர்த்திய ஞானத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்தனர். இதனால் காவியாவும் ரமேஷும் நம்பிக்கையுடன் மீண்டும் உற்சாகமடைந்தனர், அவர்கள் கைகோர்த்து நின்றனர், இது ஒரு உடனடி புரட்சி அல்ல, ஆனால் மாற்றத்தின் விதை விதைக்கப் பட்டு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் புரிந்துகொள்வதற்கான பயணத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தியது. "தற்கொலை தீர்வாகுமா?" என்றால் கட்டாயம் இல்லை. காவியா அதைத்தான் அந்த கடைசி நிமிடத்தில் மனம் மாறி தெம்பு பெற்று, ரமேஸுடன் சேர்ந்து செய்தாள். அந்த இளம் உயர் வகுப்பு மாணவனின் தற்கொலை எந்த தீர்வையும் தந்ததா? என்ற காவியாவின் கேள்வி, அவளுக்கும் ஒரு வாழ்வு சமைக்க வழிவகுக்கிறது என்று நம்புவோம். பாலச்சந்திரனும் அதற்கு எந்த தடையும் இல்லாமல் ஒத்துழைக்கட்டும்! "தற்கொலை தீர்வா? இல்லை வாழ்க்கை ஒரு பாடல்! ஒவ்வொரு இசைச்சுரமும் இடைநிறுத்தமும் வளர ஒரு வாய்ப்பு! வலி கடந்து போகும் காயங்கள் காய்ந்து குணமாகும்! ஆறுதல் ஒன்று தேடுங்கள் அன்பில், நண்பரில் உங்களில்!" "பொறுமையுடன் வாழ்நாள் இருந்தால் பல பெருமைக்கு ஆளாவாயே! துணிந்து நின்றால் துர்க்கையையும் நீ வதம் செய்திடுவாயே! சரித்திரத்தில் இடம் பெற்று சாதிக்க பிறந்த மனிதா! நிற்காமல் ஓடு மானிடா தற்கொலை உனக்கு எதற்கடா?" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]- சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024
கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய செய்திகள் பகுதியில் நானும் இந்தக் கடிதத்தை இணைத்திருந்தேன்..எனிவே..உரியவர்களுக்கு ஏதாவது விடிவு கிடைத்தால் மிக்க சந்தோசம்.🖐️- (தீ) சுவடு
நான் ஏற்கனவே தேடி கண்டு பிடிச்சுட்டு எதற்கும் தனி வந்து எழுதட்டுமே என்று காத்துக் கொண்டு இருந்தேன்.தகவலுக்கு நன்றி தனி.இங்கு குடினீர் பைக்கற் என்று சொல்கிறார்கள்.✍️- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடும் தனிக்கு இனிய லீப் இயர் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.✍️🖐️- வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
சொல்லப் போனால் இப்படி எழுதும் உங்களைப் போன்றவர்களை விட தேசம்,தேசமாக வாழும் நாங்கள் ஊருக்கு மிக கூடுதலாக தான் செய்து கொண்டு இருக்கிறோம்..இதுக்கு மேல வாயைத் திறக்காதீர்கள்..நிர்வாகம் எனக்கு தண்டடனை தந்தாலும் பறவாயில்லை ஏற்றுக் கொண்டு போகிறேன்.- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
ஆழ்ந்த அஞ்சலிகள் அய்யா.🙏- பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
நல்லது தொடருங்கள்.மற்றவர்களும் வந்து வாசிக்கட்டுமே,கருத்துக்களை பகிரட்டுமே என்பதற்காகவே சில ஆக்கங்களுக்கு அடிக்கோடு இடுவது போல் ஏதாவது எழுதுவது வழமை.✍️- தமிழர் பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய IBMS
இணைப்பிற்கு மிகவும் நன்றி.🖐️- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சிறியண்ண..🖐️- கொஞ்சம் சிரிக்க ....
Parking security.😆 - வாசலும் வீடும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.