Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு எதிராக பேசுவதற்காக ஜெனீவா போகவில்லை: அமைச்சர் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்று தற்போது இருக்கும் இழிநிலையில் இருந்து முன்னேற வழியைப் பார்க்கவேண்டும். ஆனால் நாம் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்!

வட அயர்லாந்தில் கத்தோலிக்கர்களுக்கும் புரடஸ்தாந்தினருக்கும் பல ஆண்டுகளாக நிலவிய பிரச்சினை ஓரளவு சுமுகமாகத் தீர்க்கப்பட்டதற்கு இரு பகுதியினரும் பழைய விடயங்களை முன்னிறுத்தாமல் புரிந்துணர்வுடன் செயற்படமுன்வந்ததே காரணம். அந்த நிலை தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வராதவரை தாயகத்தில் அரசியல் முன்னேற்றம் ஏற்படமாட்டாது. தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் ரீதியாக சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்கு வேலை செய்வதைத் தடுக்க சிங்கள அரசு இயலுமானவரை பிரித்தாளும் தந்திரத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.!

எனவே புலம்பெயர்ந்த தமிழர்களுடன் மாத்திரமே எம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் அரசியல் செயற்பாடுகள் முஸ்லிம்களிடம் இருந்து அந்நியப்படுத்தலைத் தவிர்க்கவேண்டும். ஆனால் தமிழர்களின் வலது சாரிச் சிந்தனைமுறையும், முஸ்லிம்களின் மதவாதச் சிந்தனை முறையும் இலகுவில் ஒரு புள்ளியில் ஒருங்கமாட்டா என்ற சவாலும் உள்ளது!

  • Replies 56
  • Views 4k
  • Created
  • Last Reply

எவ்வாறு டக்கிளசை,தமறாவை வைத்து எல்லா தமிழரையும் இனம் காண முடியாதோ அவ்வாறே ஹகிமை வைத்து எல்லா இசுலாமியத் தமிழரையும் இனம் காண முடியாது. டக்கிளசைப் போல் தான் ஹகிமூம் , தமது அமைச்சுப் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் சொல்வார்கள்.இசுலாமிய , தமிழ் மக்களிடையேயான உறவு மக்கள் மத்தியிலேயே கட்டி எழுப்பப் பட முடியும்.ஹகீமை வாழ்த்துவதாலோ அவரின் செயற்பாடுகளை விமர்சிக்காமல் இருப்பதாலோ ஏற்படாது.

ஹகீமின் பிழைகளை மனிதாபிமான ரீதியில் விமர்சிக்க வேண்டும்.அவரின் சந்தர்ப்பவாதா அரசியல் எவ்வாறு இசுலாமியத் தமிழர்களுக்கு தீங்கு இழைக்கிறது , எவ்வாறு சிங்களப் பாசிச அரசின் ஊதுகுழலாக அவர் வேலை செய்கிறார் ,இதனால் அவர் இசுலாமியத் தமிழரின் எதிர்காலத்தை கேள்விக் உள்லாக்கிறார் என்பதாகவே எமது விமரிசனம் இருக்க வேண்டும்.இசுலாமியத் தமிழருக்கு எதிராக இருக்கக் கூடாது.

செயபாலனின் கருதுக்கள் வழக்கம் போல் தனக்கு ஹகிமைத் தெரியும் அவர் நண்பர் என்பதாக இருக்கிறது.இதனையே அவர் கேபி தொடர்பாகவும் முன்னர் கருத்து முன்வைதிருந்தார். நண்பர்கள் செய்வதெல்லாம் சரியாக அவருக்குப் படுகிறது.இது அவர்களிடம் தாம் உதவிகளை ஒர் காலத்தில் பெறாலம் என்னும் அவரின் சுயம் சார்ந்த கருத்து, தமிழரின் அரசியல் சார்ந்த விடுதலை சார்ந்த கருத்து அல்ல.செயபாலனின் நடவடிககளை அவதானிப்பவர்களுக்கு அவரின் அரசியற் செயற்பாடானது தன்னை முன் நிறுத்தி தனது சுய நலங்களை வெளிப்படுத்தும் செயற்பாடகாவே பாக்கப் படும்.அவர் அவ்வாறு தான் இருப்பார்.அவருக்காக நாங்கள் தெளிவில்லாமல் பேச முடியாது.

இசுலாமியத் தமிழரையும் ஹகீமையும் வேறு வேறாகப் பார்க்க வேண்டும்.

,

1985 கிழக்கு மாகாணத்தின் க்ரிய ஆண்டு. மருதமுனையில் இருந்து பொத்துவில் நீங்கலாக அம்பாறை மாவட்டம் முழுவதும் தமிழர்கள் முஸ்லிம் கடும்போக்காளர்களால் தாக்கப் பட்டார்கள் தென்கிழக்கு கிழக்கு மாகாணம் சுடுகாடானது. கல்முனையில் இருந்து மருதமுனைவரைக்கும் எரியூட்டப் பட்டு தமிழ் மக்கள் அகதிகளாகிய கொடுமையைப் பார்த்து மனமொடிந்த தோழர் அஸ்ரப் முஸ்லிம் என்று சொல்லவே வெட்க்கப் படுகிறேன் என மிகப் பிரபலமான அறிக்கையை வெளியிட்டுவிட்டு அரசியலை துறந்து கொழும்பில்போய் இருந்தார். முஸ்லிம் தலைவர்கள் மன்னிப்புக் கோரியதில்லை என எப்படி கேட்கிறீங்க?

பொயட்,

கல்முனை கலவரம் நடந்தது 86 ஆம் ஆண்டு.

85 இல் காரைதீவிலிருந்து ஏறாவூர் மட்டும் நடந்த கலவரத்தின் சூத்திரதாரி அஸ்ரப். தமிழர்களுடன் நன்றாகப் பழகிக் கொண்டு, விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் முஸ்லிம்களைக் கொண்டு (கொழும்பில் இருந்தும் முஸ்லிம்களை கொண்டு வந்திருந்தார்) தமிழ்க் கிராமங்களின் மீது தாக்குதல் நடாத்தப்பன்னினார். இது ஜே ஆர், ரவி ஜெயவர்த்தன ஆகியோரின் மிகப் பெரிய ஆசியுடன் நடத்தப்பட்டது. அவரொன்றும் அரசியலைத் துறந்து கொண்டு கொழும்பில் போய் இருக்கவில்லை. அவர்தான் அந்தக் கலவரத்தின் சூத்திரதாரி என்று வெளியில் தெரிந்ததுமே அம்பாறையை விட்டு ஓடினார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்த சிறு சிறு பிரச்சனைகளை பாவித்து பெரிய பிளவை உண்டாக்கியவர் அஸ்ரப். அம்பாறையில் அவர் மூட்டிய தீயே பின்னாளில் வீரமுனைப் படுகொலை, கல்முனைப் படுகொலை, காத்தான்குடிப் படுகொலை, யாழில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றம் ....... எனத் தொடர்ந்து தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் பெரிய பிளவை ஏற்படுத்தியது.

அறிக்கைகளை யாரும் எப்படியும் விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தமிழ் இனவாதியாக காட்டுவது கிடையாது, அதற்க்கு மாறாக அவர்கள் இஸ்லாமிய மதவாதியாகவே வாழ்கின்றார்கள்.

எமக்குத்தான் இதில் தெளிவில்லை தமிழ் ஈழ போராட்டத்தை அழிக்க இவர்களும் துனைகுளுக்களாக இருந்திருக்கின்றார்கள்.

Monday, June 20, 2011

<a href="http://rishanshareef.blogspot.co.uk/2011/06/blog-post_20.html">யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்

sri-lanka-war-zone-ltte-leadership-massacred-150x150.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த யுத்த வெற்றி மனப்பான்மையை மக்கள் மத்தியிலும் இராணுவத்தினர் மத்தியிலும் நிலை நிறுத்துவதற்காக பல விதமான விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. அதனடிப்படையில் இன்றும் கூட அது போன்ற விழாக்கள் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கெனில் இன்றைய தினமானது 'பலகாரம், பாற்சோறு சாப்பிட்டு'க் கொண்டாடப்பட வேண்டிய தினமென்பது உண்மை. ஏனெனில் ராஜபக்ஷ பரம்பரைக்குக் கிடைத்த 'அதிர்ஷ்டம்' இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அந்த யுத்த வெற்றியே. ராஜபக்ஷ குடும்பத்தின் கூட்டுச் சகோதர்கள் உள்ளிட்ட ஏழேழு பரம்பரைக்கும் வேண்டிய சொத்துக்களைப் பெற்றுத் தந்த 'புதையல்' அது. எனினும் அந் நிலை உருவானது ராஜபக்ஷ குழுவினருக்கு மட்டுமே.

உண்மையாகவே அரசாங்கமானது மக்களுக்காக இயங்கியிருந்தால் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு யுத்தம் முடிவடைந்ததானது, இந் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய எல்லா மக்களுக்கும் ஏதேனுமொரு வெற்றியையோ, சுதந்திரத்தையோ உருவாக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும். எனினும் கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்தவைகள் அதன்படியல்ல. அரசாங்கத்தின் ஊடகக் கண்காட்சிகளில் இரு விழிகளும் மயங்காத எவர்க்கும், சற்றுக் கூர்ந்து நோக்குகையில் இந் நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.

deep10.jpg மேலே குறிப்பிட்ட படி ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குடும்ப ஆட்சியை நீண்ட காலத்துக்கு நிலை நிறுத்திக் கொள்வதற்கு வழியமைத்த, கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வரம்கொடுத்த, நினைத்த விதத்தில் சட்டங்களைக் கூட பலவந்தமாக மாற்றியமைத்து தனக்கு வேண்டிய விதத்தில் ஆட்சியைக் கொண்டு செல்லும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்த யுத்த வெற்றி கிடைத்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

எனினும் வடக்கு தமிழ் மக்களுக்கென்றால், தமது வீடுகளைக் கை விட்டுவிட்டு, அகதி முகாம்களெனும் சிறைகளுக்குள் வர நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். குடும்பத்தின் உயிர்களைக் காப்பாற்றவென செய்து கொண்டிருந்த தொழில்களைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்தின் முட்கம்பிகளுக்குள் சிறைப்பட்டு 'வெறுமனே' பார்த்திருக்க நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். பாடுபட்டு உழைத்த பணத்தைக் கொண்டு, சுடச் சுட சமைத்து உண்ணும் புதிய உணவுகளுக்குப் பதிலாக பூஞ்சனம் பிடித்த சோற்றையும் பருப்பையும் விழுங்கி உள்ளே தள்ள நேர்ந்து, இன்றோடு இன்றோடு இரண்டு வருடங்கள்.

பிள்ளைகளின் பாடசாலைகள் இராணுவ முகாம்களுக்கென கைப்பற்றப்பட்டதால் பிள்ளைகளின் கல்விப் பயணம் நிறுத்தப்பட்டு இன்றோடு இரண்டு வருடங்கள். இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைகளாகி இன்றோடு இரண்டு வருடங்கள்.

tamil_mothers.jpg அது மட்டுமல்லாது, குறைந்தபட்சம் தமக்கெதிராக முறைப்பாடொன்று கூட அற்ற தமிழ் இளைஞர்கள், தமது கறுத்த தோல் நிறத்தினாலும், தமிழ் மொழியைப் பேசுவதன் காரணத்தினாலும் சிறைச்சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, இன்றோடு இரண்டு வருடங்கள். தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போன தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களைத் தேடி பல துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக்கு ஆளான படி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

ஆகவே இந்த 'இரண்டு வருடக் கொண்டாட்டம்' ஆனது, வெற்றியின் இரண்டு வருடங்களல்ல. துயரங்களினதும் கட்டுப்பாடுகளினதும் இரண்டு வருடங்கள். வன்முறையினதும் ஏகாதிபத்தியத்தினதும் இரண்டு வருடங்கள். வரப் போகும் இருபது வருடங்களையும் கூட, கடந்த இரண்டு வருடங்களைப் போல இலகுவாகக் கழித்துவிட ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருகிறது. அந் நிலையை மாற்ற வேண்டும். யுத்தம் முடிவுற்ற மூன்றாம் வருடத்தை நாம் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறோம். நாம் எல்லோரும் இவ் வருடத்திலாவது இந் நிலையை மாற்றத் தீர்மானிக்க வேண்டும். உண்மையான தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் கூடிய, சகோதர தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வன்முறையை அகற்றுதலுக்கும், அதற்காகப் போராடுதலுக்குமான வருடமாக இவ் வருடத்தை ஆக்கிக் கொள்வோமாக.

- உதுல் ப்ரேமரத்ன

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

நன்றி

# உயிர்மை

# இனியொரு

# திண்ணை

http://rishanshareef.blogspot.co.uk/2011/06/blog-post_20.html

இந்தக் கட்டுரையை எழுதியவர் மாவனலையில் வசிக்கும் இணையத்தில் எழுதும் ரிசான் என்னும் இசுலாமையத் தமிழர். இவரைப் போன்ற இசுலாமையத் தமிழர்களும் இருகிறார்கள் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

நான் 1988 இலிருந்து 1990 வரை மட்டக்களப்பில் கல்விகற்றேன். புலிகளுக்கும் பிரேமதாசவிற்குமிடையிலான பேச்சுக்கள் முறிவடைந்து போர் ஆரம்பித்த காலமது, 1990 ஏப்ரில் அல்லது மே என்று நினைக்கிறேன், மட்டக்களப்பைச் சுற்றியுள்ள முஸ்லீம் கிராமங்களிலிருந்து முஸ்லீம் வன்முறைக்கும்பல்கள் தமிழ்க் கிராமங்கள் மீது அரச் ஆதரவுடன் தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். புனித்அ மிக்கே கல்லூயிலிருந்த அமெரிக்கப் பாதிரி ஒருவர் தனது தமிழ் மாணவன் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவனது வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போனார். முஸ்லீம் கிராமத்தைக் கடக்க எத்தனித்த அவரையும் அந்த மானணவரையும் உயிருடன் எரித்துக்கொன்றார்கள் முஸ்லீம்கள். இதேபோன்று மட்டுநகரிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற பஸ்ஸிற்கு தீவைக்கப்பட்டு பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதே காலப்பகுதியில் காரைதீவுக் கிராமத்தைச் சுற்றிவளைத்த அதிரடிப்படையும் முஸ்லீம் ஊர்காவல்ப்படையும் படித்த மாணவர்களையும் அதிகாரிகளையும் தேடித்தேடி கொன்றார்கள். இவ்வாறு அன்று கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டும். அவ்வாறே வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்திலிருந்த தமிழ் மக்களின் அகதி முகாம் இராணுவத்தாலும் முஸ்லீம் ஊர்காவல்ப் படையாலும் சுற்றிவளைகப்பட்டது. விசாரணைக்கென்று 157 தமிழ் இளைஞர்கள் அன்று இழுத்துச் செல்லப்பட்டனர். இன்றுவரை அவர்களிப் புதைத்த இடமும் இல்லை, தடமும் இல்லை. இறுதிவரை எங்களுடனிருந்து பின்னர் தனது தாய் தந்தையரை அகதிமுகாமில் பார்க்கச் சென்ற எமது உதவி ஆசிரியர் ஒருவரும் அடையாளம் தெரியாமல் மாண்டுபோனார். இதே காலப்பகுதியில் மட்டக்களைப்பசி சுற்றியிருந்த பல தமிழ்க் கிராமங்கள் இராணுவத்தாலும், முஸ்லீம் ஊர்காவல் படையாலும் அழிக்கப்பட்டன. பல இடங்களில் இராணுவம் பார்த்திருக்க முஸ்லீம் ஊர்காவல்ப் படையே அட்டூழியங்களைச் செய்தது.

இந்த முஸ்லீம் ஊர்காவல்ப்படை அஷ்ரப்பின் ஆலோசனைப்படி பிரேமதாசவினால் உருவாக்கப்பட்டது. காரைதீவுக் கிராமத்தின் அழிவில் அஷ்ரப்பே பெரும்பங்கு ஆற்றியிருந்தார். இதிலந்தமிழ்க் கிராமங்களின் குடிநீர்க் கிணறுகளுக்குள் விஷம் கலந்த செயற்பாடுகளும் அடங்கும். அஷ்ரப்பினால் வளர்க்கப்பட்டவர்தான் ஹக்கீமும், ரிசாத் பதியுதினும். அவர்கள் செயபாலனின் நண்பர்களென்றால் நாம் என்னதான் செய்ய முடியும்???

செயபாலன் ஹக்கீமை ஆதரிப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்?? சிலவேளை பிரபலங்களைத் தெரியும் என்று கூறுவதால் தன்னையும் பிரபலபடுத்துகிறாரா அல்லது இந்தத் திரியை ஹக்கீமும் பதியுதீனும் நிச்சயம் படிப்பார்கள், அப்படிப் படித்தால் தனது விசுவாசம் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று நினைத்து எழுதுகிறாரா?? அவருக்கே வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

Monday, June 20, 2011

<a href="http://rishanshareef.blogspot.co.uk/2011/06/blog-post_20.html">யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்

sri-lanka-war-zone-ltte-leadership-massacred-150x150.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த யுத்த வெற்றி மனப்பான்மையை மக்கள் மத்தியிலும் இராணுவத்தினர் மத்தியிலும் நிலை நிறுத்துவதற்காக பல விதமான விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. அதனடிப்படையில் இன்றும் கூட அது போன்ற விழாக்கள் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கெனில் இன்றைய தினமானது 'பலகாரம், பாற்சோறு சாப்பிட்டு'க் கொண்டாடப்பட வேண்டிய தினமென்பது உண்மை. ஏனெனில் ராஜபக்ஷ பரம்பரைக்குக் கிடைத்த 'அதிர்ஷ்டம்' இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அந்த யுத்த வெற்றியே. ராஜபக்ஷ குடும்பத்தின் கூட்டுச் சகோதர்கள் உள்ளிட்ட ஏழேழு பரம்பரைக்கும் வேண்டிய சொத்துக்களைப் பெற்றுத் தந்த 'புதையல்' அது. எனினும் அந் நிலை உருவானது ராஜபக்ஷ குழுவினருக்கு மட்டுமே.

உண்மையாகவே அரசாங்கமானது மக்களுக்காக இயங்கியிருந்தால் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு யுத்தம் முடிவடைந்ததானது, இந் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய எல்லா மக்களுக்கும் ஏதேனுமொரு வெற்றியையோ, சுதந்திரத்தையோ உருவாக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும். எனினும் கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்தவைகள் அதன்படியல்ல. அரசாங்கத்தின் ஊடகக் கண்காட்சிகளில் இரு விழிகளும் மயங்காத எவர்க்கும், சற்றுக் கூர்ந்து நோக்குகையில் இந் நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.

deep10.jpg மேலே குறிப்பிட்ட படி ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குடும்ப ஆட்சியை நீண்ட காலத்துக்கு நிலை நிறுத்திக் கொள்வதற்கு வழியமைத்த, கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வரம்கொடுத்த, நினைத்த விதத்தில் சட்டங்களைக் கூட பலவந்தமாக மாற்றியமைத்து தனக்கு வேண்டிய விதத்தில் ஆட்சியைக் கொண்டு செல்லும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்த யுத்த வெற்றி கிடைத்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

எனினும் வடக்கு தமிழ் மக்களுக்கென்றால், தமது வீடுகளைக் கை விட்டுவிட்டு, அகதி முகாம்களெனும் சிறைகளுக்குள் வர நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். குடும்பத்தின் உயிர்களைக் காப்பாற்றவென செய்து கொண்டிருந்த தொழில்களைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்தின் முட்கம்பிகளுக்குள் சிறைப்பட்டு 'வெறுமனே' பார்த்திருக்க நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். பாடுபட்டு உழைத்த பணத்தைக் கொண்டு, சுடச் சுட சமைத்து உண்ணும் புதிய உணவுகளுக்குப் பதிலாக பூஞ்சனம் பிடித்த சோற்றையும் பருப்பையும் விழுங்கி உள்ளே தள்ள நேர்ந்து, இன்றோடு இன்றோடு இரண்டு வருடங்கள்.

பிள்ளைகளின் பாடசாலைகள் இராணுவ முகாம்களுக்கென கைப்பற்றப்பட்டதால் பிள்ளைகளின் கல்விப் பயணம் நிறுத்தப்பட்டு இன்றோடு இரண்டு வருடங்கள். இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைகளாகி இன்றோடு இரண்டு வருடங்கள்.

tamil_mothers.jpg அது மட்டுமல்லாது, குறைந்தபட்சம் தமக்கெதிராக முறைப்பாடொன்று கூட அற்ற தமிழ் இளைஞர்கள், தமது கறுத்த தோல் நிறத்தினாலும், தமிழ் மொழியைப் பேசுவதன் காரணத்தினாலும் சிறைச்சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, இன்றோடு இரண்டு வருடங்கள். தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போன தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களைத் தேடி பல துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக்கு ஆளான படி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

ஆகவே இந்த 'இரண்டு வருடக் கொண்டாட்டம்' ஆனது, வெற்றியின் இரண்டு வருடங்களல்ல. துயரங்களினதும் கட்டுப்பாடுகளினதும் இரண்டு வருடங்கள். வன்முறையினதும் ஏகாதிபத்தியத்தினதும் இரண்டு வருடங்கள். வரப் போகும் இருபது வருடங்களையும் கூட, கடந்த இரண்டு வருடங்களைப் போல இலகுவாகக் கழித்துவிட ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருகிறது. அந் நிலையை மாற்ற வேண்டும். யுத்தம் முடிவுற்ற மூன்றாம் வருடத்தை நாம் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறோம். நாம் எல்லோரும் இவ் வருடத்திலாவது இந் நிலையை மாற்றத் தீர்மானிக்க வேண்டும். உண்மையான தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் கூடிய, சகோதர தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வன்முறையை அகற்றுதலுக்கும், அதற்காகப் போராடுதலுக்குமான வருடமாக இவ் வருடத்தை ஆக்கிக் கொள்வோமாக.

- உதுல் ப்ரேமரத்ன

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

நன்றி

# உயிர்மை

# இனியொரு

# திண்ணை

http://rishanshareef...og-post_20.html

இந்தக் கட்டுரையை எழுதியவர் மாவனலையில் வசிக்கும் இணையத்தில் எழுதும் ரிசான் என்னும் இசுலாமையத் தமிழர். இவரைப் போன்ற இசுலாமையத் தமிழர்களும் இருகிறார்கள் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மன்னிக்க வேண்டும். இந்த ஆக்கத்தை எழுதியவர் உபுல் பிரேமரத்ன எனும் சிங்களவர். அதன் மொழிபெயர்ப்பே முஸ்லீம் ஒருவரால் செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டதற்கும், ஆக்கம் எழுதப்பட்ட நோக்கத்திற்குமிடையே வேறுபாடு இருக்கலாம். ஆக்கத்தை எழுதியவரின் நோக்கத்தில் சந்தேகமில்லை. தமிழரின் வலி புரிந்து எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பு அப்படி இருக்க வேண்டுமென்பதில்லை. சிலவேளை ஆதரவாகவும் இருக்கலாம், நடுநிலைவாதியாகவும் இருக்கலாம்.

நிச்சயம் மொழிபெயர்ப்பின் நோக்கம் தமிழர் வலிபற்றி அறியத் தருவதுதான் என்றால் மகிழ்ச்சியே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞன் அவர்களே! நான் உங்களை நோக்கி எழுதியதாக இருக்கும் இரு வசனங்களில் ஒன்றுமே உங்களை குறிவைக்கவில்லை!

ஒன்று. கக்கீமை நோக்கியது, இன்னொன்று அர்யுனை நோக்கியது.

எமது பலம் முஸ்லிம்களையும் உள்வாங்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் பழுதில்லாதது. ஆனால் அது நடைமுறையில் விளங்கக்கூடிய செயலா என்பதே எமது கேள்வி?

முள்ளிவாய்க்கால் மனித அவலத்திற்கு சிங்கள மக்களிடையே இருந்து வந்திருக்க வேண்டிய நியாயமான பதில் வராமைக்கு என்ன காரணம்? செய்திகள் இருட்டடிக்கப்பட்டன என்பது காரணமே அல்ல. தமிழனின் இரத்தத்திற்கு அங்கே இருக்கின்ற மதிப்பு அவளவுதான். இந்த நிலைக்கு இன்னும் ஒருபடி பின்னாலேயே முஸ்லிம்களும் நிற்கின்றார்கள் என்பதே உண்மை! ஆக ஒரு சிலரை உதாரணம் காட்டி பெரும்பான்மையின் நிலைப்பாட்டை மறைக்க முடியாது. சிங்களவர்களிலும் மனிதாபிமானத்துடன் விளங்குபவர் பலர் இருக்கின்றார்கள் ஆனால் பெரும்பான்மையின் நிலைப்பாட்டை அது எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தது.

முள்ளிவாய்காலில் பல ஆயிரங்களாய் மனிதம் செத்துக் கொண்டிருக்கின்றது, அதேகாலப் பகுதியில் பூமிப் பந்தின் பல கோடிகளின் நிகழ்ந்த உரிமை மீறல்களுக்கு கொடி பிடித்து கூட்டம் போட்டார்கள் முஸ்லீம்கள். உன் அடுத்த வீட்டில் தமிழனின் பிணம் வீழ்ந்து கிடக்கின்றது, நீயோ ஈராக்கில் செத்தவனுக்கு கூட்டம் போட்டு கொடிபிடிக்கின்றாய். அவனும் முஸ்லிம் என்பதால் உனக்கு அண்ணனா? அவனைக் கொன்றவனும் ஒரு முஸ்லிம்தானே அவனும் உனக்கு தம்பி ஆகவல்லவா வேணும்? நாமும் எம்வீட்டு வாசலில் இவன் செத்துக் கிடக்கும் போது குயறாத்தில் செத்துக் கிடக்கும் இந்துவுக்கா அழுகின்றோம்.

"முஸ்லிம் நாடொன்றில் விபச்சாரக் குற்றத்திற்காய் ஒரு பெண் சுற்றத்தா கல்லால் என்றிந்து அவளைக் கொன்றார்கள்-" என்ற செய்தியை பிறமதத்தைச் சேர்ந்த ஒரு நூறு பேரிடம் நியாயம் கேளுங்கள். அவர்களில் ஒருவன் கூட இது காட்டுமிராண்டித்தனம் என்றே சொல்ல மறுக்க மாட்டான். ஆனால் நூறு முஸ்லிம்களிடம் கேட்டுப்பாருங்கள்; ஒருவன் கூட இதை பிழை என்றே கூறமாட்டான்.

இந்த நிலையில் இருக்கும் தவறை நீங்கள் பழுதுபார்க எண்ணுவதை விட சிங்களவர் குணத்தை பழுதுபார்க விளைவது பலமடங்கு மேலானது!

ரகுனாதன் ரிசான் செரிப் இன் கருத்துக்களை அவரின் தளதிற்க்குச் சென்று பார்க்கலாம்.அவர் சொந்தக் கவிதைகளை ஆனந்தவிகடன் முதல் காலச்சுவடு வரை வெளியிட்டு இருக்கிறது.சிங்கள மொழில் வரும் தமிழர் சார்பான கட்டுரைகளை அவர் மொழி பெயர்த்து இருக்கிறார்.இவற்றை எல்லாம் செய்வது எதற்காக என்று நினைக்கிறீர்கள்? இவற்றை அவர் இலவசமாகவே இணையத்தில் செய்து வருகிறார்.இதனால் அவர் எந்த சொந்த்தப் பயனையும் அடைவதாக நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரகுனாதன் ரிசான் செரிப் இன் கருத்துக்களை அவரின் தளதிற்க்குச் சென்று பார்க்கலாம்.அவர் சொந்தக் கவிதைகளை ஆனந்தவிகடன் முதல் காலச்சுவடு வரை வெளியிட்டு இருக்கிறது.சிங்கள மொழில் வரும் தமிழர் சார்பான கட்டுரைகளை அவர் மொழி பெயர்த்து இருக்கிறார்.இவற்றை எல்லாம் செய்வது எதற்காக என்று நினைக்கிறீர்கள்? இவற்றை அவர் இலவசமாகவே இணையத்தில் செய்து வருகிறார்.இதனால் அவர் எந்த சொந்த்தப் பயனையும் அடைவதாக நான் நினைக்கவில்லை.

சரி, நான் அவற்றைச் சென்று பார்க்கிறேன், நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போயற் எனக்கு தெரிந்து கிழக்கில் தமிழனை கொடுமைப்படுத்தியதில் சிங்களவனை விட முன்னிற்பவர்கள் முஸ்லிம்களே.

கிழக்கில் இராணுவம் பெண்களை கொடுமைப்படுத்தியதை விட முஸ்லிம்மெனும் தமிழையே தாய் மொழியாஇ பேசும் மிருகங்கள் செய்த கொடுமைகள் கணக்கிட முடியாதது.

அது சரி அஸ்ரப் எப்ப தமிழருக்காக பதவி திறந்தவர், புதுகதையெல்லாம் கதைக்கிறீர்கள்.

கிழக்கில் தமிழரின் சொத்துகளை பறித்து தமிழரிற்கு என ஒதுக்கிய சிறு நிதிகளையும் தமிழனுக்கு என்று முஸ்லிம் ஊர்களுக்கு மாற்றிக்கொடுத்த கயவர்கள் இவர்கள். குப்பைகளை புனிதர்களாக்க முயற்சிக்காதீர்கள்.

Edited by paandiyan

  • கருத்துக்கள உறவுகள்

எமது பலம் முஸ்லிம்களையும் உள்வாங்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் பழுதில்லாதது. ஆனால் அது நடைமுறையில் விளங்கக்கூடிய செயலா என்பதே எமது கேள்வி? - தேவன்

அன்புக்குரிய தேவன் நீங்கள் சொல்வது சரி. ஆனால் ஒரு விடயம் இந்த விடயம் அவசியம் ஆனால் நடைமுறையில் கஸ்ட்டம் என்று அமைவகிறதுதானே விடுதலைப் போராட்டங்களின் சவால்களாக இருந்துள்ளது. அத்தகைய விடயங்களை சாத்தியமாக்கிய இனங்கள் தானே வரலாற்றில் வெற்றி பெற்று விடுதலை அடைந்துள்ளன. பொது எதிரியை தனிமைப்படுத்தும் அடிப்படையில் மட்டுமன்றி முஸ்லிம்கள் ஈழத்தின் பங்காளிகள் என்கிற வகையிலும் நாம் எதிர்நோக்கும் மேற்படி சவால்களை வென்றாகவேண்டும் எனெனில் முதால்வதாக நாம் விடுதலை அடைவது முக்கியம். இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் நாம் விடுதலை அடைவது மட்டுமே முக்கியம்.

2

நீங்கள் இனித் தமிழ் மக்களின் விடுதலை பற்றிப் பேச வேண்டாம். ஏனென்றால் அதுக்கான அருகதை உங்களுக்கிருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. முடிந்தால் ரவூப் ஹக்கீமுடனும், ரிஷாத் பதியுதீனுடனும் சேர்ந்து கொள்ளும், குறைந்தது அவர்களாவது உமது நிலைப்பாட்டிற்காக உம்மை தங்களுடன் இணைத்துக்கொள்ளட்டும். -ரகுநந்தன்

திரு ரகுநந்தன் அவர்களே என்னைப்பார்த்து “தமிழ் மக்களின் விடுதலை பற்றிப் பேச வேண்டாம்” என்று சொல்ல நீங்கள் யார்? என்று நான் கேட்க்கப் போவதில்லை. நாளைக்கு ஒருவேழை உங்களோடும் நெடுக்ஸோடும் இணைந்து வேலை செய்ய நேரலாம். அத்தகைய வரலாற்று அவசியம் ஏற்பட்டால் உங்களோடு வேலைசெய்ய நான் தயங்கவும் போவதில்லை. ஆனால் ஜெயபாலனைப் பார்த்து நீ தமிழரின் விடுதலைபற்றி பேசவேண்டாம் என்றோமே அப்படிக் கேட்க்க நான் யார் என்று நீங்களே உங்களிடம் கேட்பது சிறந்தது அல்லவா?

நிச்சயமாக எனக்கு உத்தரவிட சொல்ல தகுதி உள்ள ஒரே ஒரு சக்தியான கழத்தில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் உங்களைவிட எனக்கு அதிக ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். யாழில் எழுதவேண்டாம் என்று என்னைப் பார்த்துச் சொல்ல ஒருவேழை உமக்கு அதிகாரமிருந்தால் அதைச் சொல்ங்கள். .

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கமும் நோக்கமும் புரிகிறது தோழர்

ஆனால் தமிழன்தான் தொடர்ந்து குனிந்தாலும் அவர்கள் எம்முடன் சேர்ந்து நிற்கப்போவதில்லை என்பது ஏற்கனவே பட்டு தெளிந்த பாடம்.

மீண்டும் மீண்டும்.....???? :( :(

ஒரே ஒரு கேள்வி

இந்த திரிப்படி அவர் சொன்னது எவ்வளவு உண்மை???

Edited by விசுகு

பொயட்,

இராசதந்திர ரீதியாக பிரச்சனைகளை அணுக வேண்டும் என்ற உங்கள் கொள்கையை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஒரு பக்கச் சார்பாக கதைப்பதை ஏற்க முடியவில்லை. இன்று காத்தான்குடி படுகொலை, யாழில் இருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி பேசுபவர்கள் அம்பாறை மாவட்டத்திலிருந்து திராய்க்கேணி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, வீரமுனை, நிந்தவூர், இன்ஸ்பெக்டர் ஏற்றம், சாகாமம், இறக்காமம் .............. அடித்துத் துரத்தப்பட்ட தமிழர்களின் வரலாறுகளை ஏன் பேசுவதில்லை.

அம்பாறை (அம்பாறை = அம் - அழகிய , பாறை) பூமியில் பெரும்பான்மைகாக வாழ்ந்த தமிழர்கள் இன்று சிறுபான்மை இனமாக்கப்பட்டுள்ளார்கள். அதைபற்றி ஏன் ஒருவரும் எழுதுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய தப்பிலி அவர்களே. வரலாற்றில் இருபக்கத்திலும் நிறையப் தவறுகள் இடம் பெற்றுள்ளன. நான் முஸ்லிம்களின் நியாயத்துக்காக தமிழருடன் மோதும் அதே ஆக்கிரோசத்துடன் தமிழர் நியாயங்களுக்காக முஸ்லிம்களோடு போராடுகிறவன் அதை எனது முஸ்லிம் நண்பர்கள் அறிவார்கள். உங்களுக்கு எனது ஒருபக்கம்தான் தெரியும். நண்பர் எழுத்தாளர் உமாவரதராஜன் போன்ற சிலருக்கு என்னுடைய நிலைபாடு தெரியும். ஒரு விவாதத்தின்போது காத்தான்குடிக்குள் வந்து நீங்கள் மட்டும்தான் இப்படி பேச முடியும் என்று சொன்னார்கள். பல கொலை முயற்ச்சிகளின்பின்னர் எனது நிலைபாடு சரியானது என்பதை உணர்வதாக வன்னியில் பாலகுமாரனூடாக என்னிடம் சொல்லப்பட்டது. மருதமுனையில் நான் ஒரு முஸ்லிம் தீவிரவாதியுடன் மோதியிருக்கிறேன். ஒரு நெருக்கடியான தருணத்தில் திடீரென மூதூர் சென்றபோது இரவு முஸ்லிம் தீவிரவாதிகள் என்னை சந்திப்பதாக இருந்தது. நான் எப்பவும் பணியமாட்டேன் என்பதால் எனக்குச் சிக்கல் வரலாம் என அஞ்சி மூதூரில் என் முஸ்லிம் நண்பர்கள் என்னை பாதுகாப்புக்காக தமிழ்ப் பிரிவு கத்தோலிக்க தேவாலயத்தில் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோர்வீஜிய தூதரகத்தில் ஆலோசகராக இருந்தபோது முஸ்லிம்கள் மத்தியில் தொண்டு நிறுவனங்கள் இல்லாததை சுட்டிக்காட்டி அதற்கான முயற்சியில் மட்டக்கலப்பில் தங்கி இருந்தபோது. நிதிப் பொறுப்பாளர் டேவிடால் கடத்தப்பட்டு கொல்லப் படுவதற்க்காக தடுத்து வைதிருந்தபோதும் என்பக்க நியாயங்களை நான் விட்டுக்கொடுக்கவில்லை. கருணா வந்து பார்த்தபோது வடகிழக்கில் வந்து ஆய்வுகள் மேற்கொள்ளுமாறும் இராணுவ புவியியல் தொடர்பாக அறிக்கைகள் தருமாறும் தலைமை புதுவை ஊடாக என்னிடம் கோரி இருப்பதைச் சுட்டிக்காட்டி வடக்கிற்க்கு அறிவிக்காமல் முடிவு எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். கருணா சம்மதிதார். அதன்பின் மண்வெட்டியுடன் கிரன் சுடலைக்கு எடுத்துச் சென்றார்கள். பின் வடகிற்க்கு அனுப்பும்படி புலநாய்வு அறிவிதிருப்பதாக கூறி செம்மலைக்கு படகுமூலம் அனுப்பினார்கள். கிழக்கில் விடுவிப்பது பாதுகாப்பில்லை என என்னை வடக்கிற்க்கு அழைத்து விடுவித்தார்கள். எந்த சந்தர்பத்திலும் எந்த தரப்போடும் நான் உயிருக்குப் பயந்தோ ஆதரவு நாடியோ என் கருத்துக்களை விட்டுக் கொடுத்ததில்லை.

பின்னர் 1996ல் நான் ஏறாவூரில் தோழன் பசீர் ஓட்டமாவடியில் எழுத்தாளர் எஸ்.எல்.எம்.கனீபா போன்றவர்கள் உதவியுடன் முஸ்லிம் மக்கள் காணி வர்த்தக பிரச்சினைகளைத் தொகுத்து அதுபற்றி பேச படுவான்கரை போனபோது நீங்கள் சந்தேகத்துக்கு அப்பால் பட்டுவிட்டீர்கள் நீங்கள் எங்களை எப்படியும் விமர்சிக்கலாம். இராணுவ புவியியலில் அறிக்கைகள் தாருங்கள் என்று யாழ்வேந்தனூடாக தலைமை எனக்கு தெரிவித்தது.

எனக்கு தமிழரும் முஸ்லிம் மக்களும் இரண்டு கண்கள்போல. விடுதலை என் உயிர்போல.

  • தொடங்கியவர்

பலத்தையும் பலவீனத்தையும் வைத்தே தனிநபர் என்றாலும் தனிநாடு என்றாலும் கொள்கைகளை வகுக்கின்றன. இதற்கு மணியத்தாரும் ஒபாமாவும் இல்லை அமெரிக்காவும் தமிழீழமும் விலக்கல்ல.

எமது இன்றை நிலையில் நாம் பல்லைக்கடித்துக்கொண்டு சிங்களவர்களிடம் இருந்து ஒரு நியாயமான தீர்வை பெறவேண்டும். இதற்கு பலவீனங்களை குறைக்கவேண்டும், பலத்தை கூட்டவேண்டும்.

பொயட் உங்கள் பதிலுக்கு நன்றி. உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்காக துயருறுகிறேன் .

முஸ்லிம் தலைமைகளிடமிருந்து ஒரு பக்கச்சார்பான, சுய தேவைகேற்ப திருபுபடுத்தப்பட்ட தகவல்கள்தான் வருகின்றன. அதையே புத்திஜீவி தமிழர் தரப்புகளும் தூக்கிப் பிடித்துக் கொண்டு சொந்தத் தமிழர் தலைகளில் மண்ணள்ளிப் போடுவதை ஏற்க முடியவில்லை.

அம்பாறை, மன்னம்பிட்டி, மன்னார், திருக்கிணாமலை(திருமலை) பகுதிகளில் இருந்து பல தசாப்பதங்களுக்கு முன்பாக துரத்தியடிக்கப்பட்ட தமிழர்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் யாராவது உரிமைக் குரல் எழுப்புவார்களா? இங்கு நெடுகாலாலபோவானும் ரகுநாதனும் எழுதிய தரவுகள் முற்றிலும் உண்மையானவை.

சரி பழையதை விடுவோம். இன்று கண்ணுக்கு முன்னாள் வன்னி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், தீவுப் பகுதிகள், நாவற்குழி பகுதிகளில் தமிழர்களின் நிலங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டு சிங்களவர்கள் குடி ஏற்றப்படுகிறார்கள். அதனைப் பற்றி யாராவது கேட்கிறார்களா?

மூன்று வருடங்களிற்கு முன்னாள் அழிந்து போன புலிகளை வைத்தே இவர்களும் தொடர்ச்சியாக அரசியல் செய்கிறார்கள்.

காத்தான்குடி படுகொலை, யாழில் இருந்து முஸ்லிகள் துரத்தியடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ரவூப் ஹக்கீம் கேள்வி கேட்க வேண்டியது நாலு கதிரை தள்ளி உட்கார்ந்திருக்கும் சக அமைச்சர் கருணாவையே அன்றி புலத் தமிழர்களை அல்ல . அதனை அவர் பாராளுமன்றத்திலேயே கேட்கலாம்.

பழைய கசப்புக்களை மறந்து தமிழர்களும் முஸ்லிகளும் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது.

(அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள், அரச கொலக்கொட்டியா (பச்சைப் புலிகள்) மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும் சயனைற் கத்தியால் குத்தியும் கட்டிடங்களிற்குள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களின் வெளிப்பாடே உமா வரதராஜனின் 'அரசனின் வருகை' கதை.)

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

"நாட்டிலே சமாதானம் ஏற்பட, நல்லிணக்கம் ஏற்பட மற்றும் நிலையான தீர்வு ஆகியன கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது உள்நாட்டிலே தான் தோற்றமெடுக்க முடியும். தவிர வெளிநாட்டு தலையீடுகளினால் ஒரு போதுமே சாத்தியமாகப் போவதில்லை.

தமிழர் ஏதாவது போராட்டம் நடத்தி வெளியார் தலையிட்டு சமாதானம் பேச வந்தால் மட்டும் எங்களுக்கும் தனியலகு தேவை என்று குட்டையைக் குழப்புறவர் இப்ப உள்நாட்டுக்குள் தீர்வு வேணும் எண்டுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களைச் சேர்க்க வேண்டும் என்கிற உங்களின் அவா புரிகிறது, ஆனால் முஸ்லீம்களைப் பிரதிநிதிப் படுத்தும் எந்த அரசியல்வாதியும் தமிழர்க்கு நியாயமான உரிமைகள் கிடைக்கவேண்டும் என்று கோருவதில்லை. அவர்கள் செய்துவருவதெல்லாம் சிங்களத்துடன் சேர்ந்து தமிழின அழிப்பைச் செய்வதும் இனவழிப்பைச் சிங்களத்துக்கு நிகராக நியாயப்படுத்துவதும்தான்.

தமிழினத்திலிருந்து முஸ்லீம்களுக்காக ஒலிக்கும் உங்கள் குரல்கள் போல முஸ்லீம் சமூகத்தில் தமிழர்க்குச் சார்பான குரல்கள் ஒலிப்பதில்லை. அது உங்களுக்கும் தெரியும். மேலே ஹக்கீமினால் சொல்லப்பட்ட விடயங்களைப்பற்றி நீங்கள் என்ன நினக்கிறீர்கள் என்று இதுவரை சொல்லவில்லை. ஆனால் ஹக்கீம் ஒரு திரமையான பேச்சாளர், எனது நண்பர் என்று கூறிவிட்டு, உடனேயே முஸ்லீம்களுக்குத் தமிழர்கள் துரோகம் இழைத்தார்கள், இப்போது குறுந்தேசியவாதம் பேசுகிறார்கள் என்றெல்லாம் கவலைப் படுகிறீர்கள்.

இவையெல்லாவற்றையும் விடுங்கள். விடயத்திற்கு வருவோம். மேலே ஹக்கீம் கூறிய விடயங்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பதை மட்டும் சொல்லுங்கள். மேற்கொண்டு உங்களுடன் மற்றைய விடயங்கள் பற்றி விவாதிக்கிறோம்.

நீங்கள் சொல்லிய முஸ்லீம்களுக்கெதிரான செயல்களை நாங்கள் யாரும் மறுக்கவில்லையே??? பின், ஏன் மீண்டும் மீண்டும் அதே விடயங்களைக் கிளறுகிறீர்கள்?? இன்னும் எத்தனை வருடங்களுக்கு இதையே பேசிக்கொண்டிருக்கப்போகிறீர்கள்?? அப்படி வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறிவிட்டார்கள் என்கிற செய்தியை யாரும் உங்களிடத்தில் சொல்லவில்லையா இன்னும்? அதை விட முல்லைத்தீவிலும், மன்னாரிலும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலமையில் மிகச் சிறப்பாக முஸ்லீம் மீள்குடியேற்றம் நடைபெறுவதும் உங்களுக்குத் தெரியாதா??? அவர்கள் இப்போது நன்றாகத்தானே இருக்கிறார்கள்??

இப்போது யாருக்குப் பிரச்சினை? முஸ்லீம்களுக்கா அல்லது தமிழருக்கா?? முள்ளிவாய்க்காளில் நரவேட்டையாடப்பட்டது தமிழினம் மட்டும்தானே?? அப்போது சிங்களத்துடன் சேர்ந்து வெற்றிவிழாக் கொண்டாடியது யார்??

முஸ்லீம்கள் வஞ்சிக்கப்பட்டார்கள், இப்போது மீண்டும் குடியேறித் தங்கள் பழைய வாழ்க்கைய வாழ்கிறார்கள். அவர்களைப் பார்த்துக்கொள்ள முஸ்லீம் அமைச்சர்களும், மந்திரிகளும் இருக்கிறார்கள். ஆனால் உதவி தேவைப்படுவது தமிழருக்குத்தான். இன்னும் சிங்கள ஆக்கிரமிப்பிலும், அடக்குமுறையில் வாழ்வது தமிழினம்தான். ஆகவே முஸ்லீம்களுக்காக ஒலிக்கும் உங்கள் குரல் தமிழருக்காகவும் ஒலிக்கட்டும்.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முஸ்லீம்கள் தமிழருடன் ஒரு ஆளுகையின் கீழ் இருக்கப்போவதில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது என்ன நடந்ததோ அது நிச்சயம் நடக்கும். சிங்களம் விரும்புகிறதோ இல்லையோ, நிச்சயம் தமிழருடன் சேர்ந்திருக்க முஸ்லீம்கள் விரும்பப்போவதில்லை. முஸ்லீம்களுக்கான தனியலகுக் கோரிக்கையை முஸ்ல்;ஈம் காங்கிரஸ் முன்வைத்ததும், அதற்குப் பெருவாரியான முஸ்லீம்கள் வாக்களித்ததும் நாம் யாவரும் அறிந்ததுதான்.

ஆகவே முஸ்லீம்களுடன் சேர்ந்தே திர்வென்பதை அவர்களே ஏற்றுக்கொள்ளப்பபோவதில்லை. உங்களாலும் அது முடியப்போவதில்லை.

ஆகவே முஸ்லீம்களுக்கு நடந்த அக்கிரமங்கள் என்று தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்காமல் தமிழர் விடிவுக்கு என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.

தமிழர் உரிமை பற்றிப் பேச வேண்டாம் என்று சொல்லியது ஆத்திரத்தில். மேலே ஹக்கீம் கூறிய விடயங்களைப் பார்த்த பின்னரும் நீங்கள் அவரை ஆதரித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி உங்களைக் கோருவதற்கு நான் யார்?? நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள், ஆனால் யதார்த்தை புரிந்துகொள்ளுங்கள்.

இறுதியாக, பிரித்தாளும் தந்திரத்தால் தமிழர்களை வஞ்சிக்க முஸ்லீம்களைச் சிங்களம் பயன்படுத்துகிறது. இது முஸ்லீம்களுக்குத் தெரியாதது அல்ல. ஆனால் அவர்கள் இதுபற்றிக் கவலைப்படபோவதில்லை. அது அவர்களுக்குத் தேவையுமல்ல. இன்னும் சொல்லப்போனால் தமிழருடன் சேர்ந்து போராடி உள்ளதையும் கெடுப்பதை விட சிங்களத்துடன் ஒட்டியிருந்து கிடைப்பதை பெற்றுக்கொண்டு வாழலாம் என்று அவர்கள் வாழத் தொடங்கிப் பலவருடங்களாகிவிட்டது. நாங்கள்தான் இன்னும் கிணற்றுத் தவளைகளாக அவர்கள் வருவார்கள், வந்து எம்முடன் சேர்ந்து விடுதலைக்குப் போராடுவார்கள் என்று இலவு காக்கிறோம்.

நீங்களெல்லாம் எப்படிக் கத்தினாலும் பொயட் விடுதலைப் பூச்சாண்டிதான் காட்டுவார்.

ஒரு பிரதேசத்தில் வாழ்ந்தும் ஒரே மொழியைப் பேசியும் சகோதரத்துவம், நண்பர்களென்று பழகியும் முஸ்லிம்கள் தமிழீழ விடுதலையின்பால் அக்கறை கொள்ளவில்லை. நாரதர் இங்கு கூறுவதுபோல் ஒரு சில முஸ்லிம் எழுத்தாளர்கள் அவ்வாறான கருத்தியலைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்த அளவில் முஸ்லிம்கள் தமிழீழ விடுதலை நோக்கம் கொண்டவர்களாக இருக்கவில்லை.

ஆரம்ப காலங்களில் சில முஸ்லிம்கள் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்தான். அவர்கள் ஆயுதப் பயிற்சியும் பெற்றவர்கள்தான். அவர்களாலேயே அனர்த்தங்கள் தமிழர்களுக்கு நேர்ந்ததுண்டு.

தமிழன் துரோகியானபோது அவன் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் போராட்ட நியாயங்களுக்கு எதிராகவும் செயற்பட்டார்கள். முஸ்லிம்கள் சாதாரண தமிழ் அப்பாவிப் பொதுமக்களுக்கெதிராக அராஜகம் புரிந்த இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்டார்கள் என்பதைப் புரியாமல் கருத்துக்களை முன்வைக்கின்றார் பொயட்.

தமிழர் விடுலை அடைந்தாலும் அடையாவிட்டாலும் தமிழர்களும் முஸ்லிம்களும் அந்தப் பிரதேசங்களிலேயே வாழ்ந்தாக வேண்டும். ஆனால் தமிழர் விடுதலைப் போராட்டங்களிலோ அதன் செயற்பாடுகளிலோ ஒன்றிணைவார்கள் என்பது நடக்கமுடியாத ஒன்று. அதனால் முஸ்லிம்களைக் கருத்திலெடுக்குமாப்போல் காரியங்களை நடத்தலாம். தவிர அவர்களை நம்பிப் பயனில்லை.

அவர்கள் எப்போதும் பேரினவாதத்தையே சார்ந்து நிற்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இலங்கையின் இஸ்லாமிய சமூகம் அப்படிப்பட்டதுதான். இதற்கு விதிவிலக்கானவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய சிறு தொகையினர்தான்.

தமிழர் பிரச்சனைகளில் தீர்வு ஏற்படும் காலங்களிலெல்லாம் குறுக்கிட்டுக் குழறுபடிகள் செய்வதற்கு பேரினவாதம் இந்த முஸ்லிம்களைத்தான் நம்பியிருக்கிறது. இதை அறிந்துதான் இஸ்லாமியத் தரப்பு அரசியல் நடத்துகிறது.

இந்த அரசியல் மயப்படுத்தல்தான் முஸ்லிம்களில் நினு;று தமிழர்களை அந்நியப்படுத்துகிறது. பேரினவாதம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்றவகையில் சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும். அந்த ஒன்றுபடுதலுக்குள் முஸ்லிம்கள் வருவதற்கு நினைக்கவில்லை என்ற வெளிப்படையான உண்மை பொயட் இற்குத் தெரியவில்லை என்பது பூச்சாண்டி வித்தைதான்.

.

மதிப்பிற்குரிய பொயட்,

தமிழர் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ்வதை விட தமிழர் சிங்களவருடன் சேர்ந்து வாழ்வது இலகுவானது.

நூறு சிங்களவரை எடுத்தால் அதில் எத்தனை சிங்களவர் இனத்துவேசதுடன் இருப்பார்கள். அது போல் நூறு முஸ்லீம்களை எடுத்தால் அதில் எத்தனை முஸ்லீம்கள் மத வெறியுடன் இருப்பார்கள்.

இது அடிப்படை நடைமுறைக் கேள்வி பொயட்.

முஸ்லீம்கள் எமக்காக சிங்களவருடன் பகைக்க அவர்கள் என்ன மடையர்களா ?

சிங்களவருடன் இணைந்து தமிழரை வதைப்பதில் அவர்களுக்கு நன்மை இருப்பதாலேயே அதைச் செய்கிறார்கள்; மேலும் செய்வார்கள்.

தமிழர் தம்முடைய தாயகத்தில் சிங்களவராலும் முஸ்லீம்களினாலும் இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ளார்கள். தமிழர்களுக்கு சிங்களவரிடமும் முஸ்லீம்களிடமும் இருந்து பாதுகாப்பாக வாழுகின்ற ஒரு தீர்வு வேண்டும்.

சம்பந்தன் ஐயா அவர்களோ அல்லது வேறு எந்த தமிழர் பிரதிநிதிகளோ இந்த கோணத்தில் தான் எம் பிரச்சனைகளை தீர்வு மேசையில் ஆராய வேண்டும்.

மாறாக முஸ்லீம்களுக்கும் பிரச்சனைகள் உள்ளன என்று அவர்களை எம்முடன் சேர்த்து கொள்வது முஸ்லீம்களினால் இனப்படுகொலைக்கு ஆளான எம் கிழக்கு மாகாண தமிழர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய துரோகம். அது மட்டுமல்ல எம் நிலங்களையும் பறி கொடுப்போம்.

  • தொடங்கியவர்

இலங்கையில் நடப்பது இனப்பிரச்சனை, ஆனால் முஸ்லீம் சமூகம் தன்னை தமிழினத்தின் ஓரங்கமாக காட்டியது வெகு அருமை. அவர்களை பொறுத்தவரையில் சிங்களம் இனம் தமிழர்களை அழிப்பதில் அதிகளவு பலன் பெறுதலையே நோக்கமாக கொண்டு கடந்த வருடங்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் நடப்பது இனப்பிரச்சனை, ஆனால் முஸ்லீம் சமூகம் தன்னை தமிழினத்தின் ஓரங்கமாக காட்டியது வெகு அருமை. அவர்களை பொறுத்தவரையில் சிங்களம் இனம் தமிழர்களை அழிப்பதில் அதிகளவு பலன் பெறுதலையே நோக்கமாக கொண்டு கடந்த வருடங்களாக செயல்பட்டு வருகின்றனர்.

முஸ்லீம்களின் "இனம்" என்னும் அடையாளத்தின் பெரும்பகுதி அவர்களின் "மார்க்கத்தில்" இருந்து வருகிறது.

தமிழரை அழித்தோ அப்புறப்படுத்தியோ சிற்பான்மையாக்கியோ தமிழரின் நிலத்தை அபகரிப்பது தான் நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் இடையே இருப்பது இனப்பிரச்சனை.முஸ்லிம் என்பது ஒரு மதம்.முஸ்லிம்களும் தமிழ் மக்களே என்பதை பொய்ட் இலகவாக மறந்துவிடுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.