Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • Replies 346
  • Views 27.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 29: மூலையில் முடக்கப்பட்ட புலி

கூட்டம் ஆரம்பமானது. நல்ல நட்புணர்வுடன் ஆரம்பித்த கூட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெம்மை பரவ ஆரம்பித்தது. உப தலைவர் இயந்திரவியல் தொழில்நுட்ப டிப்ளோமா படித்தவர் (Mechanical Technologist). அவர் எனக்கு கட்டடவியலில் பாடம் எடுக்க ஆரம்பித்தார்.. :D என்னுடைய வடிவமைப்பு சந்தேகத்திற்கு இடமானது என்றார். விழுந்துவிடும்போல் இருக்கிறது என்றார். எளிதில் கட்டமுடியாது என்றார். unsure.gif

எனது குணாதிசயங்களில் ஒன்று.. எனக்கு எடுத்தவுடன் கோபம் வராது.. :D அடுத்த நாள் யோசித்துப் பார்த்த பிறகுதான் கோபம் தலைக்கேறும்.. இதை நீங்கள் ரியூப் லைற் என்றும் அழைப்பீர்கள்.. :lol:

நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.. பிறகு ஒவ்வொரு முடிவும் ஏன் எடுக்கப்பட்டது; கட்டுமான இடத்தில் உள்ள பிரச்சினைகள் எவை என்பதை ஒவ்வொன்றாக விளக்கிக்கொண்டு வந்தேன். unsure.gif

கூட்டம் முடிவுக்கு வந்தது. சிக்கலான ஒரு வேலைத்திட்டத்தில் நல்ல முடிவுகளை எடுத்திருக்கிறீர்கள் என்று இறுதியில் பாராட்டிவிட்டுப் போய்விட்டார் உப தலைவர். சில சக ஊழியர்கள் என் பொறுமையைப் பாராட்டினார்கள்.. :D

அன்று இரவு யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த நாள் கடுப்பாகிவிட்டேன்.. :D போட்டுக் குடுத்து இந்தக் கூட்டத்திற்கு காரணமாக இருந்த நாதாரி புதிதாக வந்த வரையும் ஆள். இவரை ஓரங்கட்டுவதே இனி என் கடன்.. :wub:

கட்டுமானம் தொடங்கிவிட்டது. நான் அடிக்கடி வேலைத்தளத்திற்குச் சென்று மேற்பார்வையிட்டுத் திரும்புவேன். இவர்கள் கட்ட முடியாது என்று சொன்ன பகுதியைக் கட்டுவதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகின.. unsure.gif

ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் திட்டமிட்டு வேலையை ஆரம்பித்தார்கள். திங்கள்கிழமை வேலையை முடித்துவிட்டார்கள்.. அடுத்தடுத்த மாதங்களில் ஏனைய வேலைகளும் பூர்த்தியாகி கட்டடத்தை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். வழக்கமாக இவ்வகையான கட்டடங்களில் ஏற்படும் சிறு அசைவுகூட இல்லை. எல்லாம் சுபம். :D

அலுவலகத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம் பம்மிக்கொண்டு திரிய ஆரம்பித்தார்கள். :D சிலர் அந்த வெற்றிக்குத் தாமே காரணம் என்பது மாதிரி சொல்லிக்கொண்டார்கள். பலர் கொடுப்புக்குள் சிரித்தார்கள். :D

மேலாளர்களுக்கு எனது வருகையை அப்போது உறுதியாகச் சொல்லிவிட்டிருந்தேன்..unsure.gif

(தொடரும்.)

  • கருத்துக்கள உறவுகள்

அலுவலகத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம் பம்மிக்கொண்டு திரிய ஆரம்பித்தார்கள். :D சிலர் அந்த வெற்றிக்குத் தாமே காரணம் என்பது மாதிரி சொல்லிக்கொண்டார்கள். பலர் கொடுப்புக்குள் சிரித்தார்கள். :D

சரியான தருணத்தில் வந்துள்ள இசையின் பதிவு.. :) கடந்த சில நாட்களாக (சனி, ஞாயிறு உட்பட) பலரை அசைத்து ஏற்கமுடியாது என்று கைவிடப்பட்ட விடயம் ஒன்றை திரும்பவும் ஏற்கச் செய்துவிட, அதற்குத் தாமே காரணம் என்று ஒரு சிலர் எதிர்பார்த்தமாதிரி சொல்லித் திரிகின்றனர். என்றாலும் எனது மேலாளரும், அவரது மேலாளரும் உண்மையை அறிந்தவர்கள் என்பதால் சில்லறைகளைக் கண்டுகொள்ளவில்லை! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்புலி முடங்காது என அவர்களுக்குப் புரியவில்லை.

அதைப் புரிய வைக்க நீங்கள் மிகவும் கடினப்பட்டிருக்கின்றீர்கள் :D

உங்கள் நிறுவனமும் பெருசுபோலை.. :rolleyes: கருத்துக்கு நன்றிகள் கிருபன்.. :D

இந்தப்புலி முடங்காது என அவர்களுக்குப் புரியவில்லை.

அதைப் புரிய வைக்க நீங்கள் மிகவும் கடினப்பட்டிருக்கின்றீர்கள் :D

சும்மா இருந்தால் பழம் கிடைக்குமா வாத்தியார்?? :D ஏதையாவது உருட்டிப் பிரட்டினால்தான் உய்யமுடியும்.. :lol:

ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் திட்டமிட்டு வேலையை ஆரம்பித்தார்கள். திங்கள்கிழமை வேலையை முடித்துவிட்டார்கள்.. அடுத்தடுத்த மாதங்களில் ஏனைய வேலைகளும் பூர்த்தியாகி கட்டடத்தை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். வழக்கமாக இவ்வகையான கட்டடங்களில் ஏற்படும் சிறு அசைவுகூட இல்லை. எல்லாம் சுபம். :D
இதை எவ்வாறு உறுதிப்படுத்துவது ?

கட்டுமானம் தொடங்கிவிட்டது. நான் அடிக்கடி வேலைத்தளத்திற்குச் சென்று மேற்பார்வையிட்டுத் திரும்புவேன். இவர்கள் கட்ட முடியாது என்று சொன்ன பகுதியைக் கட்டுவதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகின.. unsure.gif
இந்த பிரயாணத்திற்கு யார் பணம் செலுத்துவது?
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை எவ்வாறு உறுதிப்படுத்துவது ?

நிலக்கீழ் சுரங்கங்களில் இருந்து பாறைகளை எடுத்து இந்தக் கட்டடங்களில் உள்ள புனல்களில் (Chutes) கொட்டுவார்கள்.. அப்போது இரும்புக் கட்டடங்கள் நடுங்குவது வழமை.. :D

இந்த பிரயாணத்திற்கு யார் பணம் செலுத்துவது?

கனிமவளத்தை எடுக்கப்போகும் முதலாளிகள் சாப்பாடு, வாகனம், நேரம், வேண்டுமானால் தங்குமிட வாடகை, தண்ணி எல்லாவற்றுக்கும் காசு கொடுப்பார்கள்.. :D

Edited by இசைக்கலைஞன்

நிலக்கீழ் சுரங்கங்களில் இருந்து பாறைகளை எடுத்து இந்தக் கட்டடங்களில் உள்ள புனல்களில் (Chutes) கொட்டுவார்கள்.. அப்போது இரும்புக் கட்டடங்கள் நடுங்குவது வழமை.. :D

அடுக்குமாடி தொடர்களில் வசிப்போர் குப்பை கொட்டுவதும் இந்த புனல்கள் ஊடாகவே. அதுவும் கீழே போய் விழும்பொழுது 'டும்' என பெரிய சத்தம் கேட்கும் :D

அண்மையில் ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டபொழுது அந்த புனலின் கதவு இறுகபூட்டப்படாமல் இருந்த காரணத்தால் ஒக்சிசன் வாயு வந்து தீயை பெரிதாக்கிவிட்டது எனக்கூறினார்கள் :(

சில பொறியியலாளர்கள் இலங்கையில் CIMA வும் படிக்கிறவர்கள் அது எந்த வகையில் பொறியியலாளர் களுக்கு உதவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில பொறியியலாளர்கள் இலங்கையில் CIMA வும் படிக்கிறவர்கள் அது எந்த வகையில் பொறியியலாளர் களுக்கு உதவும்

எனக்குத் தெரிந்து ஜேவிபி பிரச்சினையால் இரண்டு வருடங்கள் பல்கலைக்கழகப் படிப்பு தடைப்பட்டபோது CIMA படித்தார்கள்.. :D இப்ப அது ஒரு வழமையாகப் போய்விட்டது போலை.. :rolleyes:

நன்மை என்று பார்த்தால், கனடா போன்ற நாடுகளுக்கு பொறியியலாளராக வந்து வேலை கிடைக்காவிட்டால் கணக்காளர் ஆகிடலாம்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 30: கடின உழைப்பு; கைமேல் பலன்

அதே வேலைத்திட்டத்தில் கொங்கிரீட் வடிவமைப்பு. ஒன்ராரியோவில் உயரமான கனிமவளம் சம்பந்தமான கட்டடமாக வரும். unsure.gif

இது ஆரம்பித்த கட்டத்தில் வேலைத்திட்டம் நகரவே இல்லை.. ஒரு ஆறு மாதங்கள் ஒரே இடத்தில் நின்று சுற்றிக்கொண்டிருந்தார்கள். என்னால் ஒன்றும் செய்யமுடியாத நிலை. ஏனென்றால் வரைபவர்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை.. unsure.gif

இந்தச் சமயத்தில் ஒரு அரசியல் வேலை செய்தேன். பில் எதற்கெடுத்தாலும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஒரே பந்தா விட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு கொங்கிரீட் வடிவமைப்பு ஒன்றும் தெரியாது என்பது எனக்குத் தெரியும். :rolleyes:

அவரிடம் ஒரு நாள் இந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன்.. :D ஆள் மேலும் கீழும் பார்த்தார். உங்களால்தான் இது முடியும் என்று பெரிய ஒரு ஐஸாக வைத்து விட்டு வந்துவிட்டேன்.. :D

ஒரு மேலாளர் என்னிடம் வந்தார்..

"இது ஒரு பெருமைக்குரிய வேலைத்திட்டம் அல்லவா? ஏன் அவரிடம் கொடுத்துவிட்டீர்கள்?" :huh:

"இதைச் செய்தால் அது எனக்கு 33 ஆவது கட்டடம். அதனால் எனக்கென்ன பெருமை?" unsure.gif

மேலாளர் போய்விட்டார். :wub:

ஒரு மாதம் கழிந்தது. பில் அதை திறந்தும் பார்க்கவில்லை. unsure.gif சென்று என்ன மாதிரி என்று கேட்டேன்.. தனக்கு நேரமில்லை என்று கையை விரித்துவிட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று, சரி நானே செய்கிறேன் என்று சொல்லி எடுத்து வந்துவிட்டேன். :D

நான் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேன் என்பதாக இருக்க வேண்டும் என்பதே என் திட்டம். பின்னாளில் பிரச்சினை வர விடக்கூடாது.. :wub:

வடிவமைப்பில் பல உதிய முறைகளைப் புகுத்தினேன். அவை உண்மையில் புதியவை அல்ல.. பல இடங்களிலும் செய்யப்படுபவைதான். இவர்களுக்குத்தான் புதியது.

நான் மாற்றங்களைக் கொண்டுவந்தபோது என்னோடு மல்லுக்கு நின்றார்கள். எல்லாவற்றையும் ஒருவழியாகச் சமாளித்து இப்போது கட்டுமானம் முக்கிய மைல்கற்களைத் தாண்டிவிட்டது. இன்னுமொரு நான்கு மாதங்களில் முடிவடையும்.

இவற்றுக்கிடையில் அமெரிக்காவில், கனடாவில் பிற மாநிலங்களில் என்று பல வேலைகள் செய்தாகிவிட்டது. சற்று அலுப்பும் தட்டுகிறது. unsure.gif

இப்போது எனது பிரிவில் என்னைக் கேட்காமல் எதையும் செய்யமாட்டார்கள். :D உப தலைவரும் என்மேல் அதீத மதிப்பு கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். :wub: அதற்காக இங்கேயே இருப்பதாகவும் உத்தேசம் இல்லை.. :rolleyes:

(தொடரும்.)

நீங்கள் பதிவுக்கு வைக்கும் தலைப்புக்கள் எல்லாம் நல்ல catchy இருக்கு.

நீங்கள் ப்யங்கர கில்லாடியென ஒவ்வொரு பதிவும் சொல்லுது ;)

ஒவ்வுரு பதிவையும்,நான் assignment கொடுத்த மாதிரி எழுதுரியள் (விடயத்தயில்ல format ர சொல்லுறன்) ஒரு 10 வரி எழுதிப்போட்டு ,2 வரி இடைவெளிவிட்டு இடைக்கிடை சிமைலியும் போட்டு ஒரு மாதிரி ஒரு பக்கத்துக்குகொண்டுவந்திடுறுயள் :). இன்னும் நிறய எழுதுங்க அண்ணே :).

எனக்கும் இப்ப வேல அலுப்புத்தட்டுது :). ஆன அலுவலகம் மாற விருப்பம் இல்ல? எப்படி என்னுடைய ஆர்வத்த தக்கவைத்துக்கொள்ளுறது?

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 30: கடின உழைப்பு; கைமேல் பலன்

இந்தச் சமயத்தில் ஒரு அரசியல் வேலை செய்தேன். பில் எதற்கெடுத்தாலும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஒரே பந்தா விட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு கொங்கிரீட் வடிவமைப்பு ஒன்றும் தெரியாது என்பது எனக்குத் தெரியும். :rolleyes:

அவரிடம் ஒரு நாள் இந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன்.. :Dஆள் மேலும் கீழும் பார்த்தார். உங்களால்தான் இது முடியும் என்று பெரிய ஒரு ஐஸாக வைத்து விட்டு வந்துவிட்டேன்.. :D

-----

வடிவமைப்பில் பல உதிய முறைகளைப் புகுத்தினேன். அவை உண்மையில் புதியவை அல்ல.. பல இடங்களிலும் செய்யப்படுபவைதான். இவர்களுக்குத்தான் புதியது.

-----

இப்போது எனது பிரிவில் என்னைக் கேட்காமல் எதையும் செய்யமாட்டார்கள். :D உப தலைவரும் என்மேல் அதீத மதிப்பு கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். :wub: அதற்காக இங்கேயே இருப்பதாகவும் உத்தேசம் இல்லை.. :rolleyes:

(தொடரும்.)

பில்லை மடக்கினதில், டங்குவார் ஒரிஜினல் தமிழன் என்பதை நிரூபித்துவிட்டார் :D .

எல்லாரையும்... வழிக்கு கொண்டு வந்த பின், அங்கு தொடர்ந்து இருக்க விருப்பமில்லை என்றால் என்ன அர்த்தம்.

மற்றவர்கள், உள்குத்து வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று.... இசை அச்சப்படுகின்றாரா? :rolleyes:

இசைக்கு அந்த அலுவலகத்தில் போட்டியே இல்லை...ஒரே தொழில் ரீதியான வெற்றியைப் பார்த்துப்,பார்த்து அலுத்துப் போயிருக்கும் :lol::D:rolleyes:

ஒரே இடத்திலேயே தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தால் பலவிதமான அனுபவங்களைப் பெற முடியாது. ஓடிக் கொண்டிருந்தால்தான் ஆறு, தேங்கி நின்றால் குட்டையாகி விடுவோம்.

அத்துடன், எல்லா நேரமும் காற்று எமக்கு சாதகமாக வீசாது என்பதையும்... கவனத்தில் எடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பதிவுக்கு வைக்கும் தலைப்புக்கள் எல்லாம் நல்ல catchy இருக்கு.

நீங்கள் ப்யங்கர கில்லாடியென ஒவ்வொரு பதிவும் சொல்லுது ;)

ஒவ்வுரு பதிவையும்,நான் assignment கொடுத்த மாதிரி எழுதுரியள் (விடயத்தயில்ல format ர சொல்லுறன்) ஒரு 10 வரி எழுதிப்போட்டு ,2 வரி இடைவெளிவிட்டு இடைக்கிடை சிமைலியும் போட்டு ஒரு மாதிரி ஒரு பக்கத்துக்குகொண்டுவந்திடுறுயள் :). இன்னும் நிறய எழுதுங்க அண்ணே :).

எனக்கும் இப்ப வேல அலுப்புத்தட்டுது :). ஆன அலுவலகம் மாற விருப்பம் இல்ல? எப்படி என்னுடைய ஆர்வத்த தக்கவைத்துக்கொள்ளுறது?

யோக்கர்.. பத்து, பதினஞ்சு நிமிசத்துக்குள்ளை எழுதிறது.. அவ்வளவுதான் வருது.. :lol: கனக்க எழுதினாலும் போரடிக்கும்.. எல்லாருக்கும் ஆர்வம் இருக்காதுதானே.. :huh:

வேலையில் அலுப்புத் தட்டினால் நீங்கள் புதிதாக கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் குறைவாக இருப்பதாகவும் இருக்கலாம். :blink: சிங்கப்பூரில் இருக்கும்போது நான் மேலாளரிடம் சென்று பேசி சில வித்தியாசமான வேலைகளை எடுத்துச் செய்திருக்கிறேன். கேட்காவிட்டால் தங்களுக்குள்ளேயே மங்காத்தா ஆடிவிடுவார்கள்..! :D

அதுவும் சரிப்படாவிட்டால், நானாக இருந்தால் வேலையை மாத்திவிடுவேன்.. :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பில்லை மடக்கினதில், டங்குவார் ஒரிஜினல் தமிழன் என்பதை நிரூபித்துவிட்டார் :D .

எல்லாரையும்... வழிக்கு கொண்டு வந்த பின், அங்கு தொடர்ந்து இருக்க விருப்பமில்லை என்றால் என்ன அர்த்தம்.

மற்றவர்கள், உள்குத்து வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று.... இசை அச்சப்படுகின்றாரா? :rolleyes:

இந்தமுறை வேலை மாறுவது இப்போதைக்கு பெரிசா பிடிக்கவில்லை.. :unsure: வீட்டில் சென்ரிமென்ற் ஆயிட்டன்.. :D பின்னாலை நல்ல வளவு.. அருவி.. சனம் பிரச்சினையில்லை.. என்று பல நல்ல வசதிகள்.. :unsure: ரொராண்டோ போனால் எலிவளைதான்.. :blink:

ஆனால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேணும்.. கனிமவளத்துறையில் நாங்கள் செய்வது 30 வீதமான வேலைகள்தான். மீதி 70 வீத வடிவமைப்பு செய்வதற்கு வேறு நிறுவனங்கள் உள்ளன. அப்படி ஒரு நிறுவனத்திடம் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறேன்.. :wub: தனி அலகு கேட்கும் யாருக்கும் பேச்சுவார்த்தையில் இடம் கிடையாது.. :lol:

அந்த மற்ற வேலைகளையும் அறிந்துகொண்டு இந்த நிறுவனத்திற்கு மறுபடியும் வந்தால் இன்னும் செல்வாக்கா இருக்கலாம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே இடத்திலேயே தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தால் பலவிதமான அனுபவங்களைப் பெற முடியாது. ஓடிக் கொண்டிருந்தால்தான் ஆறு, தேங்கி நின்றால் குட்டையாகி விடுவோம்.

அதேதான்.. வேலை செய்யும் இடத்தில் அலுப்புத் தட்டினால் அதைமாதிரி கொடுமை வேறை இல்லை.. :unsure: அதுவும் எங்கடை சிவில் துறை பாலைவனம் மாதிரி.. :D கண்ணுக்குக் குளிர்ச்சியாவும் இருக்காது.. :lol:

ஆனால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேணும்.. கனிமவளத்துறையில் நாங்கள் செய்வது 30 வீதமான வேலைகள்தான். மீதி 70 வீத வடிவமைப்பு செய்வதற்கு வேறு நிறுவனங்கள் உள்ளன. அப்படி ஒரு நிறுவனத்திடம் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறேன்.. :wub: தனி அலகு கேட்கும் யாருக்கும் பேச்சுவார்த்தையில் இடம் கிடையாது.. :lol:

நேரம் கிடைக்கும்பொழுது இந்த கனிமவளத்துறையை பற்றி கொஞ்சம் ஆழமாக விபரியுங்கள் :D

கனடா வில் என்ன வகையான கனிமங்கள் தோண்டி எடுக்கிறார்கள் அவை ஏற்றுமதி செய்ய படுகின்றனவா ?கனடாவில் தொழில் துறைக்கு பயன்படுகின்றதா ?

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா வில் என்ன வகையான கனிமங்கள் தோண்டி எடுக்கிறார்கள் அவை ஏற்றுமதி செய்ய படுகின்றனவா ?கனடாவில் தொழில் துறைக்கு பயன்படுகின்றதா ?

உங்களின் கேள்வி வேறு சில ஞாபகங்களையும் கிளறி விட்டுவிட்டது.. :D

அண்மையில் ஒரு மதிய உணவும் படித்தலும் (Lunch n' Learn) எங்கள் நிறுவனத்தில் செய்தார்கள். பெயர் Mining 101 (அதாவது கனிமத்துறை அரிவரி). நடத்தியவர் எங்கள் நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவின் உப தலைவர். இது அலுவலகத்தில் கனமத்துறை பற்றி அதிகம் அறியாதவர்களுக்கான வகுப்பு. :unsure:

என்னைக் கண்டதும் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று சிரித்துக்கொண்டே கேட்டார். :D நான் சாப்பாட்டிற்காக வந்தேன் என்று சொன்னன். :lol: பிறகு அவரிடம், ஏதாவது ஒரு வகையில் எனக்கும் பிரியோசனப்படும் என்று சொன்னேன்.

அந்த வகுப்பில் அறிந்துகொள்ல சில விடயங்கள் இருந்தன. அதாவது, உலகில் இருக்கும் பொருட்களில், பயிராக வளர்ந்தவை, நிலத்தில் இருந்து இறைத்து எடுத்தவை தவிர மீதி எல்லாம் கனிமவளத்துறையால் எடுக்கப்பட்டவையாம். :unsure:

அதன் அடிப்படையில், எங்கள் ஈழத்து எம்ஜிஆர் மணல் எடுப்பதும் கனிமவளத்துறை சம்பந்தப்பட்டதே.. :D அவருக்கு யார் feasibility study செய்து கொடுத்தார்களோ தெரியாது.. :lol:

கனடாவில் பலவிதமானவற்றை எடுக்கிறார்கள்.. எனக்குத் தெரிந்தவைகளை பட்டியல் இடுகிறேன்.

  • நிக்கல்
  • செம்பு
  • தங்கம்
  • வெள்ளி
  • பிளாற்றினம்
  • பலேடியம்
  • மொலிப்டினம்
  • பொட்டாஷ்
  • உப்பு (NaCl)
  • இரும்பு
  • சுண்ணாம்புக்கல்
  • மணல் :D
  • யுரேனியம்

இவற்றில் பெரும்பான்மையானவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதெல்லாம் கூகிளில் தேடிப் பார்க்கலாமே தமிழ் பண்டிதர் குண்டாவைப் போல!!!

இப்பிடியே எடுத்துகொண்டு இருத்தால் , கனியவளம் முடியாதோ? யார் அதை உருவாக்குவது?

(நாங்கள் எடுக்கிறதயும் திருப்பிபோடத்தானே வேணும்)

யோக்கர்.. பத்து, பதினஞ்சு நிமிசத்துக்குள்ளை எழுதிறது.. அவ்வளவுதான் வருது.. :lol: கனக்க எழுதினாலும் போரடிக்கும்.. எல்லாருக்கும் ஆர்வம் இருக்காதுதானே.. :huh:

வேலையில் அலுப்புத் தட்டினால் நீங்கள் புதிதாக கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் குறைவாக இருப்பதாகவும் இருக்கலாம். :blink: சிங்கப்பூரில் இருக்கும்போது நான் மேலாளரிடம் சென்று பேசி சில வித்தியாசமான வேலைகளை எடுத்துச் செய்திருக்கிறேன். கேட்காவிட்டால் தங்களுக்குள்ளேயே மங்காத்தா ஆடிவிடுவார்கள்..! :D

அதுவும் சரிப்படாவிட்டால், நானாக இருந்தால் வேலையை மாத்திவிடுவேன்.. :unsure:

இந்த இடத்தில சரியான் comfortable ஆயிடன் :). இனி இன்னொரு இடத்துக்கு மாறி அவ்னுக்கு proof பண்ண அலுப்பாயிருக்கு?

எதவது ஓண்ட இங்கயே கண்டுபிடிக்ணும் :rolleyes: பாப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.