Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாளை தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாளை தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார் என மின்னஞ்சல் செய்தி கிடைத்திருக்கிறது.

The public meeting will be held at theRegbyrne Community Centre, Darcy Road, WentworthvilleWhen : Saturday, 14th April 2012Time : 3.45pm for 4.00pm start.

முடிந்தால் உறவுகள் சென்று சந்தியுங்கள்.

என்னிடம் உள்ள ஒரு கேள்விகள்:

- சிங்களம் ஏமாற்றி வரும் நிலையில், ஏன் கூட்டமைப்பு ஒரு தீர்வை சர்வதேசத்தின் முன் வைக்கக்கூடாது?

- நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை திட்டங்களை ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றா விட்டால் கூட்டமைப்பு என்ன செய்ய உத்தேசித்துள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தமிழ்மக்களிடம் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு சரவதேசத்திடம் கூட்டமைப்பு கோரவில்லை?

சுமந்திரனை யாழுக்கு கூட்டியரேலாதோ ;)

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை யாழுக்கு கூட்டியரேலாதோ ;)

கூட்டிவந்தாலும் உள்ளத்தில் உள்ளதுகளை கேட்டால் தனிமனிததாக்குதல் ....... களவிதி மீறல் என்று கூறி நீக்கினாலும் நீக்கிடுவார்கள். :lol::D

சிட்னியில் இருக்கும் எமது உறவுகளான கந்தப்பு புங்கையூரான் சுண்டல் உடையார் போன்றோர் எமது சார்பில் அவரிடம் கேட்க்கவேண்டிய கேள்விக்கணைகளை தொடுக்கலாம் :)

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்

எதுக்கு இப்ப வந்து வாங்கிக்கட்டப்போறார்?

ஆனாலும் அவரது இந்த நிலைப்பாட்டுக்கான விளக்கங்களுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் அவர்கள் மெல்பேர்ணில் பல அமைப்புக்களை(தீவிர சிங்கள இனவாதிகள் உட்பட) சந்தித்து தனது நிலைப்பாட்டினை விளங்கப்படுத்தினார்.

நேற்று மெல்பேர்ணில் தமிழர்களை சந்தித்தார். இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை) அவரை ஒய்வு எடுக்கும் வைத்தியர் சொன்னதினால் அவரின் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பல தமிழர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். இதனால் ஆகூதாவின் கேள்விகள் கேட்க முடியவில்லை.

கேள்வி

நாம் அறிந்தவரை எந்தவொரு நாட்டிலும் பேச்சுவார்த்தை குழுவினர் இறுதியில் கூட்டாகவோ அல்லது தனியாகவோ அன்றைய பேச்சுவார்த்தை முடிவுகளை அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். ஸ்ரீ லங்கா அரசோ தமிழ் கூட்டமைப்போ ஏன் இவ்வாறான அறிக்கை எதனையும் விடுவதில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் அவர்கள் மெல்பேர்ணில் பல அமைப்புக்களை(தீவிர சிங்கள இனவாதிகள் உட்பட) சந்தித்து தனது நிலைப்பாட்டினை விளங்கப்படுத்தினார்.

நேற்று மெல்பேர்ணில் தமிழர்களை சந்தித்தார். இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை) அவரை ஒய்வு எடுக்கும் வைத்தியர் சொன்னதினால் அவரின் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பல தமிழர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். இதனால் ஆகூதாவின் கேள்விகள் கேட்க முடியவில்லை.

அவருக்கு உண்மையாகவே உடம்புக்கு சுகமில்லையா அல்லது உங்கள் கேள்விகளை எதிர் கொள்ள திரணியில்லையா?

கேள்வி:

நாம் அறிந்தவரை எந்தவொரு நாட்டிலும் பேச்சுவார்த்தை குழுவினர் இறுதியில் கூட்டாகவோ அல்லது தனியாகவோ அன்றைய பேச்சுவார்த்தை முடிவுகளை அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். ஸ்ரீ லங்கா அரசோ தமிழ் கூட்டமைப்போ ஏன் இவ்வாறான அறிக்கை எதனையும் விடுவதில்லை?

இலங்கை அரசு எதற்கும் இதுவரையில் உடன் படவில்லை. அதை கூட்டமைப்பு வெளியில் சொல்லியிருக்கிறது.

அதற்கு மேல் கூட்டமைப்பு எதையாவது வெளியில் சொல்வதாயின் அது இரகசிய பேச்சுவார்த்தைகள் அல்லாமல் பகிரங்க சவால்களாகத்தான் போய் முடியும்.

பகிரங்க சவால்கள், தமிழர் தரப்பிலிருந்து இன்னொரு ஆயுதப்போராட்டத்திற்கு தயாரான பின்பே விடப்படவேண்டும். ஆயுதப் போராட்டமா அல்லது ஐ.நா வாக்கெடுப்பா என்பதை தமிழர் பொறுத்திருந்து முடிவு எடுக்க வேண்டும்.

கூட்டமைப்பு 65 வருடங்களில் சாத்தியமாகாத பேச்சுவார்த்தையின் மூலமான தீர்வை செய்து முடிக்கும் என்று எதிர்பார்ப்பது கனவு மட்டுமே. அரசாங்கம் சங்கட சூழ்நிலையைக்கண்டால் உடன் படிக்கை ஒன்றை எழுதிவிட்டு இனக்கலவரத்தை தூண்டி அதை அழித்துவிடும். இதையேதான் அரசு சென்றமாத ஐ.நா. பிரேரணையின் போதும் முயற்சித்தது. எனவே கூட்டமைப்பின் தீர்வு எந்த விதத்திலும் நிரந்தர தீர்வாக முடியாது. கூட்டமைப்பு இரகசியங்களை வெளியில் சொல்லி, தான் தான் பேச்சுவார்த்தைகளை குழப்பியதாக பழியை வாங்குவதால் ஒரு முன்னேற்றமும் வராது.

இதை பேச்சுவார்த்தைக்கு அனுசரனையான நாடுகள் விரும்பமாட்டா. அனுசரனை நாடுகளுக்கு உள்ளே கிடைக்கும் முன்னேற்றங்கள் பற்றி நன்கு தெரியும். அமெரிக்கா நடைமுறைப்படுத்தபடப் போவதில்லை என்ற பிரேரணையை நிறைவேற்றிவிட்டு காவல் இருக்கிறது. அமெரிக்காவின் அடுத்த படி நடவடிக்கைகள் கூட தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அம்சங்களை கொண்டிருக்குமா அல்லது இப்படி ஏகாந்தத்தில் தான் சஞ்சரிக்குமா என்பது தெரியாது.

அமெரிக்கா "ஒற்றைநாட்டு" தீர்வை மனதில் வைத்து, இலங்கை அரசை விழுத்தி, தீர்வை கொண்டுவர காய்களை நகர்த்துகிறது என்று வைத்தால், அது பர்மிய அர்சாங்கத்தில் அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றியை இலங்கையிலும் சோதித்து பார்க்கிறது என்று கொள்ளலாம். ஆனால் இங்கே நிலமை வேறு.

இலங்கையின் சர்வாதிகாரம் இலங்கை மக்கள் விளிப்பாக இருந்து தங்களால் தமக்கு ஏற்படுத்தி கொள்ளப்பட்ட பாதுகாப்புக் கவசம். அதாவது சர்வாதிகாரம் அவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது. சிங்கள மக்களின் பரம விரோதிகளான தமிழரை எதிர்த்துப் போராட அவர்களால் அரசுக்கு திரும்பத் திரும்ப வழங்கப்பட்டஆணை (mandate)தான் இலங்கையின் சர்வாதிகார சூழ்நிலை . இதையேதான் D.S. சோல்பரியிடம் வாதாடி கேட்டு வெற்றி பெற்றார். இதை பண்டாரநாயக்கா, டட்லி, சிறிமா, J.R., பிறேமதாசா, சந்திரிக்கா, மகிந்தா வரை படிப்படியாக, அதிகாரங்கள் தேவையானபோது, மக்களிடம் சென்று, கேட்டுப்பெற்று அரசை பலப்படுத்தினார்கள். இங்கே இராணுவப் புரட்சியால் சர்வாதிக்காரம் திணிக்கப் படவில்லை. இந்த ஜனநாயக சர்வாதிகாரத்தை J.V.P எதிர்த்து பலதவைகள், ஆயுதத்தாலும் வாக்கெடுப்பாலும், தோல்வி கண்டது. அதாவது இலங்கை என்ற அரசியல் அமைப்புக்குள், சிங்கள மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அரசு கடமைப் பட்டிருக்கிறது.

சோல்பரி அரசியல் அமைப்பிலிருந்த சிறப்பம்சம் இங்கிலாந்து சுபிறீம் கோடு இலங்கை அரசியல் அமைப்பின் மீது எப்போதும் தான் தீர்வு வழங்கத்தக்க பலத்தை தன்னிடம் கையடக்க படுத்தியிருந்தது. அப்படி ஒரு பாதுகாப்பு இனி எந்த சட்டத்திலும் வரப்போவதில்லை. இருந்தும் அதுவே நமக்கு பாதுகாப்பு வழங்க தவ்றிவிட்டது.

எனவே ஒற்றை நாடென்ற பேச்சு வார்த்தைகளிலிருந்து வரும் தீர்வு 65 வருடங்களிலிருந்து வந்த தீர்வை விட மாறுதலாக இருக்க முடியாது. ஒற்றை நாட்டுக்கு மேல் எந்த பேச்சுவார்த்தையின் தீர்வும் சிங்கள அரசாங்கங்களிடம் இருந்து வராது. ஆபிரகாம் லிங்கன் சிங்கள மக்களிடம் பிறக்க முடியாது.

எப்படி இதை சோல்பரி விளங்கத்தவறினாரோ அதே போல்த்தான் அமெரிக்காவின் தற்போதைய கொள்கைகளுக்கு வழி வகுத்த பிரபல ராஜதந்திரி ரொபேட் பிளேக்கும் இதை விளங்கத்தவறி, அமெரிக்காவின் இலங்கை சம்பந்தமான கொள்கைகளை நெறிப்படுத்திவிட்டார். இதனால் ஏற்பட்ட நிலைமைகளை வைத்து நாம் அமெரிக்காவும், மேற்குநாடுகளும் கூட்டமைப்பை தூண்டி பேச்சு வார்த்தைகளை நடத்தி தீர்வைக்கொண்டுவரும் என்று எதிர் பார்க்கிறோம். இந்த எதிர் பார்ப்பிலிருந்து கூட்டமைப்பின் மீது சரமாரியான கேள்விகள் எழும். இவை பேச்சுவார்த்தையின் பல படிகளிலும் பல கோணங்களிலுமிருந்து வரும். ஆனால் கூட்டு மொத்தமாக இவைகளின் பொருள் ஒன்றுதான்; அதாவது மலடியைப் பிடித்து பிள்ளை பெறு என்று துன்புறுத்துவதுதான்.(யாழ் நிர்வாகம் இந்த சொல்வடையை வெட்டாது என்று நம்புகிறேன்)

தீர்வு பேச்சுவார்த்தைகள் மூலம் வரும் என்று நம்பாத தாயக மக்கள் நீதியைக் கோரியே கூட்டமைப்புக்கு வாக்களித்தார். அதாவது கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்கள் சர்வதேசத்திடம் போர்குற்ற விசாரணையைக் கேட்டார்கள்

கூட்டமைப்பை சாராமல் புலம்பெயர் தமிழர் செய்யத்தக்கது போர்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வைப்பது. இதை இந்தியா விரும்பாவிட்டாலும் அமெரிக்கா(ஒபாமா அரசு) ஆதரிக்கிற சந்தர்ப்பம் இருக்கிறது. சர்வதேச ரீதியில் நடத்தப்பட்டால், இது ஒரு தீர்வுக்கு வழி வகுக்கும்.

போர்க்குற்ற விசாரணையில் அரசுகள் கடைசியிலும், NGOக்கல் தான் முதலிலும் பங்கு பற்றும். (அத்தாவது ஊரில் இருக்கும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மாதிரி - ஆரம்பத்தில் சிறிதளவு பெற்ரோல் தெளித்து "ஸ்ராட்" போட்டால், இயங்கத்தொடங்கியவுடன் மண்ணெண்னெயில் தொடர்ந்து ஒடி காரியத்தை முடிக்கும் - ஆரம்பத்திற்கு NGOக்கள் வேண்டும்) இதை விளங்கி தமிழர்கள் எல்லோரும் இந்த தொண்டு நிறுவனகளுடன் தொடர்பு வைத்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் அவர்கள் மெல்பேர்ணில் பல அமைப்புக்களை(தீவிர சிங்கள இனவாதிகள் உட்பட) சந்தித்து தனது நிலைப்பாட்டினை விளங்கப்படுத்தினார்.

நேற்று மெல்பேர்ணில் தமிழர்களை சந்தித்தார். இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை) அவரை ஒய்வு எடுக்கும் வைத்தியர் சொன்னதினால் அவரின் நிகழ்ச்சி நடைபெறவில்லை. பல தமிழர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். இதனால் ஆகூதாவின் கேள்விகள் கேட்க முடியவில்லை.

மெல்பேர்னில் எங்கட ஆட்கள் கேட்ட கேள்வியிலேயே வைத்த கலக்க தொடங்கி இருக்கும், சிட்னிக்கு வந்து சந்திப்பு நடத்தினால் ....... அசிங்கமாக போய்விடும் அதனாலேயே வரவில்லை என்று நினைக்கின்றேன். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை 4 மணிக்கு சிட்னி சந்திப்புக்கு சென்றேன். அவருக்கு எதிர்ப்பாராத உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (கிட்னியில் எதோ பிரச்சனை)

recipe-chutney-bengal-gram-coconut-chutney.jpg

தோழர் சிக்கல் கிட்னியிலா.. அல்லது தேங்காய் சட்னியிலா... என தெளிவாக விசாரித்தீர்களா..?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு உண்மையாகவே உடம்புக்கு சுகமில்லையா அல்லது உங்கள் கேள்விகளை எதிர் கொள்ள திரணியில்லையா?

உண்மையில் சுகமில்லை. அவரைப் பரிசோதித்த வைத்தியரை எல்லோருக்கும் தெரியும்.

Reference : http://www.padalay.com/

அவுஸ்ரெலியா மெல்பேணில் நடந்த கூட்டமைப்பு எம்.பி சுமந்திரனுடன் நேரடி சந்திப்பு! பற்றிய பதிவு.

Edited by யோக்கர்

  • கருத்துக்கள உறவுகள்

Super.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@யோக்கர் அவர்களே,

என் பதிவுகளை பகிரும்போது தயவு செய்து ஒரு மடல் அனுப்பி அனுமதி கேட்டால் நன்றாக இருக்கும். இதை நானே முறையாக யாழ் களத்தில் பகிர்வதாக இருந்தேன். பரவாயில்லை.

நன்றி,

ஜேகே

மன்னிக்கவும் ஜேகே அவர்களே, ஒரு ஆர்வக்கோளரில இங்க பதிந்துவிட்டேன் !!!

உங்கள் பதிவுக்கு தொடுப்பாக மாற்றிவிடுகிறேன்.

உங்கள் பதிவுக்கு காப்புரிமையபோடுங்கோ !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரவாயில்லை ... பகிர்வதில் பிரச்சனையில்லை .. ஆனால் எனக்கு தெரியாமல் போனால், விமர்சனங்களுக்கு பதிலளிக்கமுடியாது இல்லையா? அதனால் தான்.

ஜேகே,

உங்களது வலைப்பதிவில் காப்புரிமை பற்றி எதுவும் இல்லை. உங்களது பதிவுகளை ஏனைய இணையத் தளங்களில் வெளியாகும் பதிவுகள் போலவே யாழ் உறுப்பினர்களால் யாழில் பதிய முடியும். உங்களது வலைப்பதிவில் வெளியாகும்போது உடனடியாக இங்கு இணைத்து விட்டீர்களானால் இந்தப் பிரச்சனை வராது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இணையவன் ... காப்புரிமை பற்றி குறிப்பிடுகிறேன். தகவலுக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.